Thursday, January 2, 2014

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்(பேச்சுக்கலை) - 3

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்(பேச்சுக்கலை)

1.பேச்சுக்கலையைப்        பயில      உங்களுக்குக்             கிடைக்கும்     மேடை    வாய்ப்புகளை சரியாகசரியான நேரத்தில்பயன்படுத்துங்கள் .எப்போதும்  எந்த   இடத்திலும்  எப்பொது           வேண்டுமானாலும் நீங்கள் பேச அழைக்கப்படலாம்   அல்லது    பேச   ஆசைப்படலாம் அதனால்    இந்தச்சூழ்நிலையை     எதிர் கொள்வதற்கு ,         எல்லா  சூழ்நிலைகளிலும்      மேடையில்     பேசுவதற்கு       பொருத்தமாகப் பொருந்தும்    சி ல    பேச்சுக்களை    எப்போதும்    உங்களது மனதில் தயாராக    வைத்திருங்கள்.

"சிறந்த பேச்சு என்பது அழகாக வடிவமைக்கப்பட்ட ஆடையைப்போல் ஆபாசங்களை மறைக்கும் அளவிற்கு நீளமாகவும் கவர்ச்சியாய் இருக்குமளவிற்கு குட்டையாகவும் இருக்க வேண்டும்."

2.பேச்சுக்கலையின் மிக முக்கியமான சுவாரசியமான விசயம் என்னவென்றால் பேசும் கருத்து எப்படிப்பட்டது என்பது முக்கியமானது தான் ,அந்தக் கருத்து  எந்த வகையில் உங்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே அளவில் தான் அதனைக் கேட்பவர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை  உணருங்கள்.

3.நீங்கள் பேசப்போகும் கருத்தை நீங்கள் முடிவு செய்யும் போது நீங்கள் எந்த மனநிலையில் இருக்கின்றீர்களோ அந்த மன நிலையை நமது மனது பதிவு செய்து வைத்திருக்கும் ,நீங்கள் மேடையில் பேசும் போது அதே உணர்வு உங்களை அறியாமல் உங்கள் பேச்சோடு சேர்ந்து வெளியேறி கேட்பவர்களைப் பாதிக்கும்.
                              
4.நீங்கள் எந்த அளவிற்கு கூட்டத்தை உணர்ச்சிவசப் பட வைக்க வேண்டும் ,எந்த அளவிற்கு உங்கள் வசம் ஈர்க்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மாணிக்கின்றோம்.நாம் பேசப் போகும் தலைப்பில் நாம் என்ன பேசப் போகின்றோம் என்பதை தீர்மாணம் செய்யும் போதே அந்தக் கருத்தின் மீது  முதலில் நாம் உணர்ச்சி வசப்பட்டும் ,நம் பால் நாமே ஈர்க்கப்பட்டும் , நாமே ரசிக்கும் படி இருக்க வேண்டும்.அதனால் பேச்சுக்கான கருத்துக்களை தயார் செய்யும் போது இந்த விசயங்களில் கவணம் செலுத்த வேண்டும்.

4. நமது பேச்சைத் கூட்டத்திற்கு முன்பே நாம் தயார் செய்யும் போது   நாம் அந்தக் கருத்தால் பாதிக்கப்பட்டு  ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பு  நமது   மனதில் ஏற்பட வேண்டும்.அதன் பின்பே அந்தக் கருத்தைக்  கூட்டத்தில்பேசும் போது  தகுந்த இடத்தில் அதனை நாம் பிரயோகம் செய்யும் போது அது நாம் மனதில் எந்த உணர்வுடன் இருந்தோமோ அதே  விளைவை பார்வையாளர்களிடம்  ஏற்படுத்தும்.

5.நாம் ஒரு கூட்டத்திற்கு பேசப்போகின்றோம் என்றால் அதற்கு முன்பாக செய்ய வேண்டிய சில முன்னேற்பாடுகளைப் பற்றிப் பார்ப்போம் ,முதலில் என்ன நோக்கத்திற்க்காக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,யாரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,கூட்டம் நடைபெறும் அந்தக்  குறிப்பிட்ட இடம் அல்லது ஊர் பற்றிய சிறப்புகள்,கூட்டத்தின் நோக்கத்தைப் பொறுத்த அணைத்து தகவல்கள்,கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடிய நபர்கள் அவர்களுடைய கல்வி ,பொருளாதாரம் கலாச்சார தகுதிகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

6..நீங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் சமயம் அந்தக் கால கட்டத்தில் சமூகத்தில்நீங்கள் பேச இருக்கும் கருத்து பற்றிய கண்ணோட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் கூட்டத்தில் பேசப் போகும்சிறப்புப் பேச்சாளராக   இல்லாவிட்டால் நீங்கள் எத்தனையாவது நபராக பேச இருக்கின்றீர்கள்.உங்களுக்கு முன் யாரெல்லாம் பேசப் போகின்றார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

7.ஊடகத்துறையின் பங்களிப்பு அந்தக் கூட்டத்தில் எந்த அளவில் இருக்கின்றது.கூட்டத்திற்கு நேரடியான அல்லது மறைமுகமான எதிர்ப்புகள் ஏதும்  இருக்கின்றதா?.உங்களை கூட்டத்தில் பேச அழைத்த நபரிடம் நீங்கள் மேலே சொல்லப்பட்ட விசயங்களைக் கேட்டறிந்து  உங்களது வியூகத்தை அமைக்க வேண்டும்.

8.கூட்டத்தில் கலந்து கொள்ளப் போகும் வேறு சிறப்புப் பேச்சார்களின் தொனி,திறமை அவர்களது குறை ஆகியவை பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.மற்ற பேச்சாளர்களில் நகைச்சுவை பேச்சாளர் எவரும் உள்ளாரா?உணர்ச்சியூட்டும்  பேச்சாளர் யாரும் இருக்கின்றார்களா?என்பதையும் நாம் யாருக்கு அடுத்து பேசப் போகின்றோம் என்பதையும் கணக்கிட வேண்டும் .

9.நீங்கள் ஒரு நகைச்சுவை பேச்சாளராக இருந்து உங்களுக்கு முன்பாக ஒரு உணர்ச்சிப் பேச்சாளர் பேசி விட்டு சென்றிருக்கும் பட்சத்தில் பார்வையாளர்களை அந்த உணர்ச்சி குறையாமல் இருப்பார்கள்  அவர்களை  உடனடியாக உங்களது ஆளுகைக்குள்  கொண்டு வரமுடியாது,அவர்களது முழு கவணத்தையும் உங்கள் பால் ஈர்க்க சாதாரண நகைச்சுவை பேச்சுக்களும்  கருத்துக்களும்  போதாது .

10.உங்களது கருத்துக்கள் அது நகைச்சுவையாக இருந்தாலும் சரி உணர்வு பூர்வமாக இருந்தாலும் சரி ஆழமாகவும் ஏற்கனவே தாக்கத்தை ஏற்படுத்திய பேச்சாளரின் மீதான பார்வையாளரின்  உள்முகமான பாராட்டுதலையும்   மீறியதாக இருக்க வேண்டும்.

11.அதே போல உங்களுக்கு முன்பு சிறந்த நகைச்சுவை பேச்சாளர் பேசி நகைச்சுவை உணர்வை கூட்டத்தில் ஏற்றி வைத்து விட்டுப் போயுள்ள நிலையில் நீங்கள் அதனை விட மேலாக கூட்டத்தினரைக் கவர  உணர்ச்சிகரமான  பேச்சுக்களை அதிகம் பயன்  படுத்தியும்  அதன் பின்பு பார்வையாளர்களிடம் உங்களது நகைச்சுவை பேச்சுக்களை அவிழ்த்து விடுங்கள்.

12.சிறந்த பேச்சாளர் என்பவர் தான்  தயார் செய்த பேச்சை  பேச நினைத்த தொனியில் அப்படியே பேசி முடித்து விட்டு திரும்புவார்.ஆரம்பக் கட்டத்தில் உள்ளவர்கள் பேசத் தயார் செய்த கருத்துக்களை அப்படியே பேசாமல்  விட்டு விட்டு வேறு கருத்துக்களை  வேறு தொனியில் பேசித் திரும்புவார்கள் ,இது ஏன்?

No comments:

Post a Comment