Friday, January 23, 2015

தோல்வி என்றால் என்ன?

தோல்வி என்றால் என்ன?

ஏதாவது செயலைச் செய்ய எண்ணும்போது, அந்தச் செயலின் விளைவாக ஏற்படுகின்ற நலத்தைப் பற்றியே மிகுதியாக எண்ணுகிறோம். இந்த எண்ணத்தினாலேயே அதை மேற்கொண்டு செய்கின்றேம்.

அந்தச் செயலின் விளைவுகள் நாம் எதிர்பார்த்த படியாகவே அமைந்துவிட்டால் அதை வெற்றி என்று நினைத்து மகிழ்ச்சி அடைகின்றோம். எதிர்பார்த்த அளவுக்கு மேலான நன்மைகள் ஏற்பதுமானால் அதை எதிர்பாராத வெற்றி என்கின்றோம். எதிர்பார்த்ததைவிடப் பயன்கள் குறையுமானால், அது சாதாரண வெற்றி என்று நினைத்து ஆறுதல் அடைகின்றோம்.

எதிர்பார்த்தபடி பயன் கிடைப்பதற்குச் சற்றும் வழியில்லாமல் போய்விடும்போது அதற்காக நாம் உழைத்த உழைப்பும், செலவிட்ட மூலதனமு, செலவிட்ட காலமும் விரயமாகின்றன. நாம் நினைத்துச் செய்வதற்கு மாறான விளைவுகளை நாம் அடைய நேர்கின்றது. அகவே இதைத் தோல்வி என்று எண்ணி வருந்துகின்றோம்.

ஒரு பாலத்துச் சுவரின் மேல் அமர்ந்து ஒருவன் அழுது புலம்பிக் கொண்டிருந்தான். பத்து லட்சம் போச்சு என்று புலம்பிக் கொண்டிருந்தான். அவனுடைய புலம்பலைக் கொண்டு இரக்கங்கொண்ட பெரியவர் ஒருவர் அவன் அருகே சென்றார்.

"பத்து லட்சம் பெரிய இழப்பாச்சே? எப்படி அப்பா இவ்வளவு பெரிய இழப்பு உனக்கு உண்டாயிற்று?" என்று அநுதாபத்தோடு கேட்டார்.

"பத்து லட்ச ரூபா முதற் பரிசுள்ள பரிசுச் சீட்டில் ஒன்றை இரண்டு ரூபாவுக்கு வாங்கினேன். இரண்டே எண்கள் வித்தியாசத்தில், பரிசு இன்னொருவனுக்குப் போய்விட்டது. அதுதான் வேதனை தாளமாட்டாமல் புலம்புகிறேன்" என்றான்.

பெரியவருக்குச் சிரிப்பும் கோபமும் வந்தது. 'நான் என்னவோ ஏதோ என்று நினைத்தல்லவா இரக்கப்பட்டேன் இதற்காகவா இப்படிப் புலம்புகின்றாய்? போய் உழைத்து வாழ்வதற்கு முயற்சி செய். உழைக்காமல் சோம்பிக் கிடந்து வீணாக்காதே' என்று சொல்லிச் சென்றார்.

இப்படிப் பலர் இருக்கின்றார்கள், நூலைக் கட்டி மலையை இழுக்க நினைப்பவர்கள். இவர்கள் எப்படி வெற்றி அடைய முடியும்? இவர்கள் தோல்வி அடைந்ததாகப் புலம்புவது எல்லாம் பொருத்தம் அற்றவையே!

ஆகவே, தோல்வி என்பது இவைபோல் அல்ல இவை போன்றவற்றைத் "தோல்வி" என்று நினைப்பதும் தவறு. இவற்றை வெற்றிகளாக மற்றவும் இயலாது.

No comments:

Post a Comment