Friday, June 28, 2013

ஆர்வம் வெற்றியின் ஆரம்பம்

எவ்வளவோ விசயங்கள் மனதில் வைத்திருந்தேன்; ஆனாலும் ஒன்றிலும் அல்லது அதிகப்பட்ச வெற்றி பெற முடியவில்லை என்ற வருத்தமோ ஆதங்கமோ உங்களுக்குள் உள்ளது என்றால் இந்த கீழ்க் கண்ட கேள்வியை உங்களை நோக்கி கேட்கத் தகுதிபெற்று இருக்கிறீர்கள் அல்லது கேள்வி கேட்கப்பட வேண்டிய அவசியத்தில் இருக்கிறீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

‘நான் ஆர்வத்துடன் என் எண்ணங்களை செயல்படுத்தினேன் அல்லது செயல்படுத்துகிறேன் என்பது உண்மையா?

கேள்விக்கு முன்னே உள்ள வரிகள் அனுபவமாக இருந்தால் நிச்சயம் கேள்விக்கு பதில் ‘இல்லை’ என்றுதான் இருக்கும். மனதில் ஆர்வம் ஆழமாக வேரூன்றினால் நிச்சயமாக ‘வெற்றி’ விசுவரூபமாகத்தான் வெளிப்படும். நன்றாக ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். ஆர்வக்கோளாறு ஒரு போதும் வெற்றியின் ஆரம்பத்தை அசைப்பதுவுமில்லை தடை போடுவதுமில்லை; ஆர்வமின்மைதான் வெற்றியின் ஆரம்பத்தை அழித்துவிடுகிறது. ஆதி இல்லாமல் அந்தம் ஏது? சில உண்மை நனவுகளை நினைவு கொள்ளுங்கள். ஆர்வம் எப்படி வெற்றியின் ஆரம்ப ஆதாரமாக இருந்திருக்கிறது என்பது தெளிவாக புரியும்.

மனிதனாகப் பிறந்தேன் வாழத்தேவையான அடிப்படை வசதிகள் கிடைத்தது. கோடிக்கணக் கான மனிதர்களை போல நானும் வாழ்க்கை பயணத்தை கடத்துவேன் என்ற எண்ண மில்லாமல் என்னை ஏற்றுக்கொண்ட இந்த உலகத்திற்கு எதையாவது செய்வேன் என்றுகூட நினைக்காமல் இதை கண்டுபிடிப்பேன் என்றஆழ்ந்த ஆர்வத்துடன் ஒருவர் செயல்படுத்த முனைந்தார். வெற்றியும் பெற்றார் தாமஸ் ஆல்வா எடிசன். அவர்களின் ஆர்வம் எத்தனை கண்டுபிடிப்புகளுக்கு ஆரம்பமாக இருந்து இன்றும் பிகாசித்துக்கொண்டு இருக்கின்றன.

எனக்கு எதற்கு இந்த வேண்டாத முயற்சி என்று நினைக்காமல் ஒருவர் நடந்தார்… ஏறினார்… ஏறினார்… பூமியின் உச்ச உயரத்திற்கே. ஆமாம், நண்பர்களே! பீட்டர் ஹேப்பர் என்ற ஆஸ்திரேலியர் முதன் முதலில் ஆக்சிஜன் குடுவை இல்லாமலே எவரெஸ்ட் சிகரம் ஏறினார் என்றால், அந்த வெற்றி அவரின் ஆர்வத்தினால் விளைந்தது தானே.

தத்தி தத்தி இந்த உலகில் நடக்க முயற்சி செய்த ஒரு குழந்தை மனிதனாக வளர்ந்த பிறகு மனிதனின் மகத்தான காலடி இதுதான் என்று நிலவில் முதன்முதலில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் என்பவரின் ஆர்வத்தில் உருவானதுதான் மாபெரும் சரித்திர விஞ்ஞான சாதனை.

நான் இதைச் செய்வேன் என்று வீட்டை விட்டு ஒரு பெண்மணி போக லாமா? முடியுமா? என்ற விவாதம் இப்போது கூட இருக்கத்தான் செய்கிறது. ஆர்வம் ஒரு பெண்மணியைத் தூண்டியது. கடைக்குச் சென்று கத்தரிக்காய் வாங்க அல்ல கடல்மார்க்கமாக தன்னந்தனியாக உலகைச் சுற்றிப் பயணித்தார் என்பது ஆர்வத்தின் வலிமை தானே.

போர் என்றால் பலவகை படைகள், வீரர்கள், கத்தி, கூர்வேள், துப்பாக்கி, பீரங்கி போன்ற ஆயுதங்களுடன் மட்டுந்தான் வெற்றி பெற முடியும் என்றகருத்தை தூள்தூளாக்கினார் ஒருவர். அந்த மனிதனின் அறப்போர் ஆர்வம் உலகை வியக்கத்தில் ஆழ்த்தியது. வெற்றி பெற்றார். அவர் மகாத்மா ஆவார். ஆமாம், அறப்போரில் நாம் சுதந்திரம் பெறமுடிந்தது.

பார்க்கவே முடியாத ஒருவரால் இயற்கை அழகை பார்க்க முடிந்த, நம்மை ரசிக்க தூண்டும் வகையில் கவிதையில் தன் கற்பனையில் விவரிக்க முடிந்தது கவிஞர் டென்னிஸ் அவர்களின் ஆர்வந்தானே அடிப்படைக் காரணமாக இருந்திருக்கிறது.

காது கேட்காத இயல்பு கொண்ட ஒருவர் நம் காதுகளுக்கு இனிய இசை வழங்கினார். ஒரு மனிதனின் இசை ஆர்வம் தன் இசை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பெறமுடிந்தது என்றால் அது மைக்கேல் #பீத்தாவோன் என்ற இசை அறிஞரின் ஆர்வம் என்பதில் சந்தேகம் என்ன?!

பார்க்கத்தான் கண்கள், ஆனால் அதன நோக்கமிழந்த கண்களுடனும் கேட்காத காதுகளுடனும் ஒருவர் பிறந்தார். பின் பார்வையற்றமனித இனத்திற்கே கண்களாக மாறிப்போன ஹெலன் ஹெல்லரின் ஆர்வம் தான் அவரது தன்னம்பிக்கையை வளர்த்து வெற்றிபெறவைத்தது என்பதில் ஆர்வத்தின் அவசியம் தெளிவாகிறது.

படிக்கவே தெரியாத ஒரு நடிகர் பக்கம் பக்கமாக வசனங்களை தனக்கென்ற தனிப் பானியில் உச்சரித்தப் பேசி இன்றுங்கூட எத்தனை நடிகர்களும் மற்றவர்களும் அவரை பின்பற்றி தொழில்புரிகிறார்கள் என்றால் அது நடிகவேல் எம்.ஆர். ராதா தன் நடிப்பின்பால் இருந்த ஆர்வம் தானே.

நண்பர்களே, இப்படி நிறைய உதாரணங்கள் இந்த உலகில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆர்வத்தின் சக்தியை திரு. மயில்சாமி அண்ணாதுரை, திரு. ஏ.ஆர். ரஹ்மான் என நம் கண்முன் நிதர்சனமாக காணமுடியும்.

ஒரு சுயசோதனை : நீங்கள் ஆர்வம் இல்லாமல் இருப்பவரா?

1.எதற்கெடுத்தாலும் வேண்டாம் (வேண்டாம் வேண்டாம் என்பதல்ல) என்று சொல்லுபவரா?

2. ஏதாவது, எப்போதாவது, எப்படியாவது போன்றவார்த்தைகளை அதிக அளவில் பயன் படுத்துபவரா?

‘ஆம்’ என்பது உங்களது பதிலாக இருக்கிறது என்றால் ஆர்வமின்மை உங்களை தாக்குகிறது அல்லது தாக்கப் போகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். எனவே மேற்கண்ட வார்த்தைகளை முடிந்தவரை தவிர்த்து ஒன்றை குறிப்பிட்டு அது வேண்டாம் இது வேண்டாம் என்றோ ஒரு குறிப்பிடும் நேரத்தை குறிப்பிட்டு சொல்லி பழகியோ இந்த வழியில்/ வகையில் என்பது போன்ற வார்த்தை களை மாற்றாக பயன்படுத்தினால் மனதில் ஆர்வம் தொடங்கும். இது ஒரு சின்ன உதாரணம் தான். ஆக மொத்தத்தில் எல்லா வெற்றிகளும் ஆர்வத்தில்தான் ஆரம்பிக்கின்றன என்கிறபோது அந்த ஆர்வத்தை வளர்க்கும் விதத்தில் நாம் ஏன் நம் வெற்றியை ஆரம்பிக்கக்கூடாது? ஆர்வத்துடன் ஆரம்பிப்போம் 

நம் எண்ணங்கள் அழகானால்

உலகம் இயற்கையின் படைப்பு. இவ்வுலகத்தில் எல்லாப் பொருட்களும் நம் கண்களுக்கு அழகாகத்தான் இருக்கின்றன. எல்லா உயிரினங்களும் தன்னளவில் முழுமையாகவே உருவாக்கப்பட்டு அழகாகவே திகழ்கின்றன.

எதுவெல்லாம் படைக்கப்பட்டிருக்கின்றதோ அதுவெல்லாம் ஒரு குறைபாடும் இல்லாமல் முழுமையாகவே உருவம் பெற்றிருக்கின்றது. எனவே, முழுமையே அழகு. இதுவே படைப்பின் இலக்கணம். இதுவே வாழ்க்கையைப்பற்றி நம் முன்னோர்களின் பார்வையும்கூட.

இந்த அற்புதப் பார்வையைக் கொண்டு நாம் பார்க்கும்பொழுது உலகத்தில் எல்லாமே அழகாகத்தான் இருக்கின்றன. யாவும் முறையாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

மனிதன் மட்டும் அழகில் ஏற்றத்தாழ்வு கண்டு அசிங்கம் என்ற வார்த்தையைக் கண்டுப்பிடித்திருக்கின்றான். சிலரைக் குரூபி என்று குறைப்படுத்துகின்றான்.

இந்த அழகு மானவுணர்ச்சி மிருகங்களிடையே கிடையாது. ஓர் அழகான, கூர்மையான கொம்புடைய மாடு, ஒரு வளைந்த கொம்புடைய மாட்டைப் பார்த்து முகம் சுளிக்காது. ஒரு சிவப்பு நாய், ஒரு கறுப்பு நாயைப் பார்த்து அவமானப்படுத்தாது. அதனோடு கொஞ்சிக் குலாவுவதை நாம் கண்ணால் பார்த்திருக்கிறோம்.

இந்த அழகு உணர்ச்சியில் அமிழ்ந்து போய்த் தன் இனத்தையே இகழ்ந்த பார்வையோடு பார்ப்பவன் மனிதன் மட்டுமே. சிலர் சிவப்பு அழகு என்று இறுமாந்து இருப்பது, மல்லாந்து படுத்துக்கொண்டு தன் மேலே உமிழ்ந்து கொள்ளும் அவச் செயலுக்குச் சமமாகும். புற அழகை மட்டும் பார்க்கின்ற சில மூடர்கள் இந்தத் தோலை அழகு படுத்துவதுதான் தங்கள் சுயமதிப்பை உயர்த்திக்கொள்ளும் சாதனம் என்று நினைக்கிறார்கள்.

சிந்தனை, சொல், செயல் அழகே மனிதனுக்குப் பேரழகு என்று நமது பெரியோர்கள் சிந்திக்கின்றனர். எண்ணங்கள் அழகானால் வார்த்தைகள் கனிவாகும். வார்த்தைகள் கனிவாக வந்தால் செயல்கள் சீராக அமையும். அன்பையும் அறிவையும் அணியத் தெரியாதவர்கள்தாம் அணிகலன்களை அணிந்து தங்கள் அசிங்க ஓட்டைகளை அடைக்கப் பார்க்கிறார்கள்.

சமுதாயம் உடல் அழகு உள்ளவர்களை மட்டும் மதிப்பதில்லை. அவர்கள் நடத்தை நேராக இருக்கிறதா? சொற்கள் பணிவாக வருகிறதா? செயல்கள் சீராக இருக்கிறதா? என்று பார்த்துத்தான் ஒரு மனிதனை எடை போடுகிறது. உடல் அழகு மட்டும் நமக்கு உயர்வைத் தருவதில்லை. மன அழகே மாதவம்.

வார்த்தை ஜாலங்கள் புரிபவர்களை யாரும் இரசிப்பதில்லை. வார்த்தைகளால் கொட்டுபவர்களையும் யாரும் விரும்புவதில்லை. வண்ணங்கள் அழகானால் மண்ணுலகம் அழகாகும். எண்ணங்கள் அழகானால் விண்ணுலகம் வியந்து நிற்கும். வார்த்தைகள் அழகானால் வாழ்க்கையும் அழகாகும். இது புரியாதவர்கள் மேல் தோலுக்கு என்னதான் சாயம் பூசினாலும் அவர்கள் வெளுக்கமாட்டார்கள். "மனம் வெளுக்க மார்க்கம் மன ஒழுக்கம்" என்கிறார் பாரதியார்.

பணிவுடையன் இன்சொலன் ஆதற் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற குறள் 95

"இனிமையான வார்த்தைகளும் பணிவான நடத்தையுமே ஒருவனுக்கு சிறந்த அணிகலன்கள். அவன் உபயோகிக்கும் அழகுச் சாதனங்கள் அல்ல, " என்கிறார் திருவள்ளுவர். முகத்துக்குச் சாயம் பூசும் மனிதனுக்குச் சில சமயங்களில் மனத்திற்கு வெள்ளை அடிக்கத் தெரிவதில்லை.

அழகு என்பது மன உணர்ச்சி. இதை அழகுச் சாதனங்களால் மெருகு படுத்தமுடியாது. அழகு என்பது எது சதா மனதுக்கு மகிழ்ச்சியை ஊட்டுவதோ, அது என்கிறான் ஒரு ஆங்கிலக் கவிஞன். கீழான உள்ளக் கிளர்ச்சியோ உடல் தினவோ அல்ல அழகு. கண்ணதாசன் அழகு என்பது உடல்களின் தாளம் அல்ல, ஆத்மாவின் இராகம் என்கிறார்.

இந்த உலகத்தைப் பற்றி நமது ரிஷிகளின் பார்வையோ விசித்திரமாக இருக்கின்றது. இந்த விநோதமான பார்வையைக்கொண்டு இந்த உலகத்தைப் பார்க்கும்பொழுது இங்கு நம்மைவிட அழகானவர்கள் யாருமே கிடையாது. இந்த உலகத்தைவிட அழகான இடம் எங்குமே இருக்க முடியாது என்ற எண்ணம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் நம்மை அறியாமலேயே ஆழமாகப் பதிந்திருக்கின்றது.

அனைத்தும் அழகு. நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இவ்வுலகம் அழகு. நமக்குக் கிடைத்திருக்கின்ற இந்த வாழ்வும் அழகு. நமக்கு ஏற்பட்டிருக்கின்ற உறவுகள் அனைத்தும் அழகு. அழகு! அழகு! அழகைத் தவிர்த்து வேறேதும் இங்கு இல்லை. அனைத்திலும் அழகைப் பார்க்கின்றனர்; பார்த்து ரிஷிகள் கோஷமிடுகிறார்கள். அவர்கள் பார்க்கின்ற அழகு மேலோட்டமான சிவப்பழகு மட்டுமல்ல. கண்களில் படுகின்ற அழகு அனைத்தையும் தாண்டி அதற்குப் பின்னால் ஒளிந்துக்கொண்டிருக்கின்ற கறுப்பழகைக் கண்டனர். இந்த அழகில் கண்ணனைத் தரிசித்தனர். இறைவனே ஒவ்வோர் உயிரிலும் சிரித்துக்கொண்டிருப்பதைக் கண்டனர். மனம் மலர்ந்து ஆராதனை செய்தனர்.

நம்முடைய அனுபவம் மட்டும் என்னவாம்? சற்றே சிந்தித்துப் பாருங்கள். இயற்கையைப் பார்த்தாலே நம்முள் இனம் புரியாத மலர்ச்சி.

ஒரு மரத்தைப் பாருங்கள்...
அது பூத்துக் குலுங்கும்போது நம் உள்ளமும் கூத்தாடவில்லையா?

ஒரு செடியைப் பாருங்கள்...
அது இளம் தளிர்களைத் துளிர்விடும்பொழுது அந்தப் பச்சை வர்ணம் நம்முள் ஒரு பேரமைதியை மலர வைக்கவில்லையா?

ஓர் ஆற்றைப் பாருங்கள்..
அது மிக வேகமாக ஓடிக்கொண்டிருப்பது எதையோ தேடி எந்த ஓய்வும் இன்றி மகிழ்ச்சியாய்ப் போய்க்கொண்டிருப்பதாகப் படவில்லையா?

இயற்கை அன்னை தினமும் நமக்குப் பாடம் நடத்துகிறாள். நாம்தான் செயற்கையை அள்ளி முகத்தில் அப்பிக்கொண்டு தட்டுத்தடுமாறி நிற்கின்றோம். அப்பியது கண்களில் என்று தெரியாமலா? அல்லது தெரிந்தும் தெரியாமலா?

சுய முன்னேற்றம்

மனித வாழ்வு என்பது இன்பம் மற்றும் துன்பம் இணைந்தே காணப்படும் இயல்பு கொண்டது. இத்தகைய அற்புத பிறவியில் சிறப்பாகச் செயல்பட்டு அழியா புகழை நிலை நிறுத்த வேண்டுமானால் நிலையான மகிழ்ச்சி மனநிலையில் செயல்பட வேண்டும் என்பது உளவியல் வல்லுனர்களின் கூற்று மட்டுமல்ல. வெற்றியாளர்களின் வாழ்க்கை வரலாறுகளில் இருந்து அறிந்து கொள்ளக் கூடிய செய்தியும் அதுவே தான். ஆகவே வெற்றிகளை அடைய வேண்டுமானால், சாதனை சரித்திரத்தை உருவாக்க வேண்டுமானால், நாம் எத்தகைய சூழலிலும், அதாவது சாதக சூழலிலும், துன்ப அல்லது பாதக சூழலிலும், மகிழ்ச்சி யுடனும், முழு மனதுடனும் செயலாற்றுவது அடிப் படை அவசியம். எனவே வாழ்வில் சந்தோஷத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட என்னுள் சந்தோஷம் என்ன விலை? சந்தோஷம் எங்கு கிடைக்கும்? சந்தோஷத்தை எப்படி அடைய லாம்? என எண்ணற்ற கேள்விகள் அலை மோதிக் கொண்டிருந்தன. அந்த கேள்விகளுக்கான விடை கண்டு தன்னம்பிக்கை வாசகர்களின் சந்தோஷத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற முடிவின் பலனே இந்த கட்டுரை.

போட்டிகள் நிறைந்த இயந்திரத் தனமான வாழ்க்கை முறை மிகுந்த உலக ளாவிய சமூக பொருளாதார சூழலில் சந்தோஷம் என்ன விலை? என்று கேட்கும் நிலைக்கு மனித வாழ்க்கை முறை மாறி வருவது கண்கூடு.
ஆனால் சந்தோஷம் என்பது மனிதன் உயிர் வாழத் தேவையான அடிப்படை காரணி களில் ஒன்று என்பது உளவியல் வல்லுனர்களின் ஆணித்தரமான நம்பிக்கை.

இன்று நடைபெறுகின்ற பல்வேறு கொலை, கொள்ளை, தற்கொலை, மணமுறிவு, மனநல பாதிப்பு, சண்டை சச்சரவுகளுக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்ப்போ மானால், மேற்கண்ட தீமைகள் மூலம் ஒருவர் சந்தோஷத்தை தேட முயல்கின்றனர் அல்லது மேற்கண்ட பிரச்சனைகள் மூலம் ஒருவர் தான் இழந்த சந்தோஷத்தை மற்றவர்களிடமிருந்தும் எடுத்துவிட வேண்டும் என்று செயல்படு கின்றார்.

தன்னம்பிக்கை மற்றும் துணிவு இல்லாத மூன்றாவது வகை மனிதர்கள் தங்கள் சந்தோஷம் போய்விட்டதை எண்ணியோ, அடுத்தவர் சந்தோஷமாக வாழ்கின்றதை நினைத்தோ, தங்களால் சந்தோஷத்தை அடைய முடிய வில்லையே என்ற இயலாமையினாலோ, சந்தோஷத்தை தேடி புறப்படுவதற்குப் பதில், தங்கள் இயலாமையைத் துயரங்களாக மாற்றி, அபார சக்தி கொண்ட மனித மனத்தையே அடக்கி, ஒடுக்கி மனஅழுத்தம், மனநோய், தற்கொலை என தங்களைத் தாங்களே வருத்தி அழித்துக் கொள்கின்றனர்.

சந்தோஷம் முக்கியமா?

மனித சமுதாயம் செழிப்புடன், வளர்ச்சிப் பாதையை நோக்கி வீறுநடை போடுவது நமக்கெல்லாம் நன்மை பயக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் மனிதகுலம் மகத்தான சாதனைகள் நிகழ்த்த வேண்டுமானால், நிச்சயமாக மனித சமுதாயத்தின் மனங்கள் மகிழ்ச்சிப் பெருக்கோடு குதூகுலம் கொண்டு இருக்க வேண்டியது அவசியம்.

இன்று வரையிலும் மனிதகுலம் செய்த சாதனைகள், அனைத்திற்கும் காரணம் என்ன என்று தேடிப் பார்ப்போமானால், அந்த சாதனை களை நிகழ்த்தியவர்கள், அத்தகைய சாதனை களை நிகழ்த்துவதற்காக அனுபவித்த துன்பங்கள், தியாகங்கள், வலிகளை சந்தோஷத்தின் ஊற்றுக் களாக ஏற்றுக் கொண்டதே காரணம் ஆகும்.

வரலாற்றை புரட்டிப் பார்ப்போமானால், அமெரிக்க தேசத்தை அடையாளம் காட்டிய கொலம்பஸ், தன் வாழ்நாள் குறிக்கோளுக்காக தன் தாய், தந்தை, மனைவியை இழந்ததுடன் தன் அன்பு மகன் டீக்கோவை அனாதை இல்லத்தில், பெரும் சோகம், வருத்தம், துக்கம் மற்றும் மனவலியுடன் ஒப்படைத்து விட்டு செயல்பட புறப்பட்டார் என்பதைக் காணமுடிகிறது.

கொலம்பஸ் மேற்கண்ட துன்பங்களில் மகிழ்ச்சியை காணும் மனவலிமை மற்றும் மனநிலையில் தான் அமெரிக்க தேசத்தை அடை யாளம் காட்டிய சாதனைக்காக இன்றளவும் மக்கள் மனதில் புகழோடு நிலைபெற்றிருக்கின்றார்.

அதே போன்று தான் ஒரு தாய், பத்து மாதம் கருவை வயிற்றில் சுமந்து, பல்வேறு துன்பங்களை ஏற்று, தன் உயிரினும் மேலான மழலைச் செல்வத்தை பெற்றெடுக்க காரணம் துன்பத்திலும் இன்பம், துயரத்திலும் சந்தோஷம் என்ற மனநிலையே.

உலகில் எந்த ஒரு சாதனையையோ, அற்புதத்தையோ, நல்ல செயல்களையோ, நிகழ்த்த வேண்டுமானால் துன்பங்களை இன்ப அனுபவங்களாய் ஏற்றே தீர வேண்டும். யார் ஒருவர், துன்பத்தில் இன்பம் காண முடியுமோ? துயரங்களில் சந்தோஷம காண முடியுமோ? அவர்களாலேயே சாதனைகளை உருவாக்க முடியும். வெற்றிகளை குவிக்க முடியும். அற்புதங்களை நிகழ்த்த முடியும்.

ஆகவே இன்று மனித குலத்தின் மகத்துவ மான வாழ்விற்கு வழிவகுத்த விமானம், கணிப்பொறி, விண்வெளி தொழில் நுட்பம் போன்ற அனைத்து முன்னேற்றங்களுக்கும் காரணம், பல்வேறு மனிதர்கள் துன்பங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுத் துணிவுடன், மகிழ்வுடன் தடைகளைத் தாண்டி செயல்பட்ட மகிழ்வு மனநிலையே. மட்டுமின்றி, எத்தகைய சூழலிலும் சந்தோஷ மனநிலையில் செயல்படுபவரால் அல்லது சந்தோஷ மனநிலையை உருவாக்க முடிப வரால் உழைப்பு, ஊக்கம் விடாமுயற்சி, உறவு, நட்பு, தன்னம்பிக்கை, உதவிகள், துணிவு, மன நிறைவு, அமைதி உடல்நலம் போன்ற பல்வேறு நேர்மறை விளைவுகளை அடைய முடிகின்றது.

ஆகவே இவ்வளவு அற்புதமான நன்மை களையும், வெற்றிகளையும் வழங்கும் மகிழ்வு மன நிலையை உருவாக்க உதவும் உன்னத வழிமுறை களை இக்கட்டுரை வாயிலாக பார்ப்போம்.

மகிழ்ச்சிக்கான வழிமுறைகள்

சந்தோஷத்தின் வழிமுறைகளை வரிசைப் படுத்தும் முன் உங்களுடன் சந்தோஷம் சார்ந்த மூன்று கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுவது நன்மை பயக்கும் என்று கருதுகிறேன்.

1. சந்தோஷம் என்பது ஒரு மனநிலை மட்டுமே
இது நம் வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகள், கிடைக்கும் அனுபவங்கள், காணப் படும் சூழல்கள், நம்முடைய மனோபாவம் போன்ற பல்வேறு காரணிகளை அடிப்படை யாகக் கொண்டது. இதை விலைகொடுத்தோ, கடனாகவோ, நன்கொடையாகவோ நாம் அடைய இயலாது இது நம் உள்ளிருந்து வெளியே வரும் ஒரு உணர்வே ஆகும்.

2. சந்தோஷம் என்பது நிலையான ஒரு காரணி அல்ல:
ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போன்று, வாழ்வில் சந்தோஷ மனநிலையும் சந்தோஷமற்ற மனநிலையும் மாறி மாறி காணப்படுவது இயற்கை. துன்பமும், (அல்லது) சந்தோஷமும் மட்டுமே நிலையாக இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது.

3. சந்தோஷத்திற்கு அடிப்படையான, வெற்றி, சாதனை, பாராட்டு போன்றவற்றிக்கு அடிப்படை பிரச்சனைகள், தோல்விகள், அவமானங்கள், தடைகள் தாண்டிய முன்னேற்றமே :

இத்தகைய தடைகள் தாண்டிய வெற்றிப் பயணத்தை பயணிக்கும் போது நிச்சயம் பல்வேறு துன்பங்கள் ஏற்படுவது உறுதி. ஆனால் அத்தகைய துன்பங்களை எதிர் கொண்டு முன்னேறுபவர்களே வெற்றிக் கனியைப் பறிக்க முடியும். எனவே வெற்றி பெற வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டவர் களுக்குத் துன்பமும் இன்பமே. ஆகவே துன்பங்கள் இருந்தாலும், அவற்றை மீறி சந்தோஷ மனநிலையில் செயல்படுபவர்களே வெற்றிகளைக் குவித்து மேலும் மேலும் மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்ள முடியும்.

மேற்கண்ட கருத்துக்கள் உலகில் எல்லோர் வாழ்விலும் நிச்சயம் துன்பங்கள் மற்றும் இன்பங்கள் இணைந்து காணப்படுவதை உணர்த்துகின்றன. ஆகவே வாழ்க்கையில், துன்பங்களை முழுமையாக மாற்றி விட முடியாது என்பது அனுபவ பூர்வமான உண்மை. எனவே இந்தக் கட்டுரையில் சந்தோஷத்திற்கான மூன்று விதமான வழிமுறைகளை ஆராய்வோமா.

ஒன்று : துன்பங்கள் வரும் வாய்ப்பினை குறைப்பதற்கான வழிமுறைகள்

இரண்டு : துன்பங்களின் தாக்கத்தை குறைக்க உதவும் உத்திகள்.

மூன்று : ஏற்படும் துன்பங்களை மகிழ்ச்சி மனநிலைகளில் செயல்பட்டு, எதிர்கொண்டு, வெற்றி கொண்டு சந்தோச மனநிலைக்குள் பிரவேசிக்க உதவும் செயல்கள்.

இத்தகைய சந்தோஷம் தரும் 50 வழிமுறைகள் (அ) உத்திகள் (அ) செயல்கள் குறித்து இக்கட்டுரையில் ஆராயப்பட்டிருந் தாலும், நாம் சூழலுக்கு ஏற்ப, பிரச்சனைகளின் தாக்கத்திற்கு ஏற்ப, ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட சந்தோஷ வழிமுறைகளை பயன் படுத்தி நம் சந்தோஷத்தை உருவாக்கவோ அல்லது பெருக்கவோ செய்யலாம்.

தற்பொழுது சந்தோஷத்திற்கான 50 வழிமுறை கள் குறித்து ஆராய்வோமாக.

1. குறிக்கோள் கொள்க

மனித வாழ்வில் பிரச்சனைகள், மற்றும் துன்பங்கள் ஏற்படுவது இயற்கையான செயல். ஆனால் உறுதியான குறிக்கோள்களுடன் செயல் படுபவர்கள், அத்தகைய கடினமான சூழல் களிலும், மகிழ்ச்சியுடனும், இன்முகத்துடனும் தங்கள் இலக்கு நோக்கி உத்வேகத்துடன் செயலாற்றுகின்றனர். இவர்களால்,

(அ) எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ முடிகின்றது.
(ஆ) மற்றவர்களிடம் சிறப்பான உறவு (Relationship) பாராட்ட முடிகின்றது.
(இ) உறவினர், நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிவோரின் அன்பு மற்றும் ஆதர வுடன் வெற்றிகரமாக செயல்பட முடி கின்றது.
(ஈ) உறுதியான குறிக்கோளுடன் செயல் படுவதனால், லட்சியவாதிகளின் திட்ட மிட்ட, சிறந்த செயல்பாடுகளினால்:

1. தெளிவான, உறுதியான மனநிலையுடன் செயல்பட முடிகின்றது.
2. திட்டத்தின் அடிப்படையில், அடுத் தடுத்த உறுதியான செயல்களை சிறப்பாக செயல்படுத்த முடிகின்றது.
3. உறுதியான, சிறந்த செயல்பாடுகளினால், சாதனையை நோக்கிய பயணத்தில் பல்வேறு சிறிய சிறிய வெற்றிகள் வசப்படுகின்றன.

உறுதியான செயல்திட்டம், திட்டமிட்ட வழிமுறைகள் மற்றும் தெளிவான மனநிலை யுடன் செயல்படும் லட்சிய புருஷர்களுக்கு எந்த சூழல்களிலும் (வெற்றியோ, தோல்வியோ, இன்பமோ, துன்பமோ) உத்வேகத்துடன், உற்சாகத்துடன் மகிழ்ச்சியோடு தங்கள் குறிக்கோளை நோக்கி செயல்படமுடிகின்றது.

ஆகவே சந்தோஷத்தோடு செயல்பட்டு, வெற்றிகளை ஈட்டி சாதனை சரித்திரத்தை உருவாக்கி மக்கள் மனதில் வாழ வேண்டு மானால், உடனடியாக ஒரு உயரிய குறிக்கோளை ஏற்று, அந்த லட்சியத்தை நோக்கி வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ளுங்கள். உறுதியான குறிக்கோளுடன் செயல்படுபவர்கள், எத்தகைய இடர்கள், தோல்விகள், துன்பங்கள், அவமானங்கள் அவர்கள் லட்சிய பயணத்தில் குறுக்கிட்டாலும், சிறிதளவேனும் மனவருத்தம் கொள்ளாமல், மேலும் உற்சாகத்துடன், உத்வேகத்துடன் செயல் பட்டு, அனுபவப் பாடத்துடன் தங்கள் உயரிய இலக்கை நோக்கி பயணிக்கின்றனர். ஆகவே லட்சிய வாழ்க்கை வாழ்வோம். சந்தோஷத்தை நிலையாதாக்கி கொள்வோம்

7 தலைமுறைகள் !

ஜீன்களை ' சுக்ல தாது ' என்பார்கள் . சுக்ல தாதுவில் 84 அம்சங்கள் இருக்கின்றன . அவற்றுள் 28 அம்சங்கள் தந்தை, தாய் ஆகியோர் உட்கொள்ளும் உணவால் உருவாகக் கூடியவை . மற்ற 56 அம்சங்கள் முன்னோர்களால் கிடைக்கக் கூடியது .
தந்தையிடமிருந்து 21 அம்சங்கள்; பாட்டனிடமிருந்து 15 அம்சங்கள்; முப்பாட்டனிடமிருந்து 10 அம்சங்கள் -- ஆக 46 அம்சங்கள் கிடைக்கின்றன . பாக்கி உள்ள பத்து அம்சங்கள் முன்னோர்களிடமிருந்து கிடைப்பவை . நான்காவது மூதாதையிடமிருந்து 6 அம்சங்களும்; ஐந்தாவது மூதாதையிடமிருந்து 3 அம்சங்களும்; ஆறாவது மூதாதையிடமிருந்து ஒரு அம்சம் ஆக 10 அம்சங்கள் கிடைக்கின்றன . எனவே, ஒரு குழந்தையிடம் அதன் தந்தையுடன் சேர்த்து ஏழு தலைமுறையினரின் சுக்ல தாதுக்களின் பங்குகள் இடம்பெருகின்றன . எனவே தான் தலைமுறை ஏழு என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது .
நெருங்கிய தொடர்பு கொண்ட தந்தை , பாட்டன் , முப்பாட்டன் -- இவர்கள் மூவருக்கும் திவசத்தில் தில தர்ப்பணம் கொடுப்பதற்கு இதுவே காரணம் 

எந்த யோகத்தில் என்ன செய்யலாம் ?

அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம் என்பவை யோகத்தின் வகைகள் 
. பஞ்சாங்கத்தில் இன்று என்ன யோகம் என்று இருக்கும் . 

யோகங்கள் 27 . இவற்றுக்கு தனித்தனி பலன் உண்டு .

விஷ்கம்பம், அதிகண்டம், சூலம், கண்டம், வியாகாதம், வஞ்ரம், வியதீபாதம், பரிகம், வைதீருதி என்பவை தவிர்க்க வேண்டிய யோக நாட்கள் . யோகத்தின் பெயர்களும், அவற்றிற்குரிய பலன்களும் பின்வருமாறு :

விஷ்கம்பம் -- மனநடுக்கம்; ப்ரீதி -- பிரியம் ; ஆயுஷ்மான் -- வாழ்நாள்; சவுபாக்கியம் -- புண்ணியம்; சோபனம் -- நலம்; அதிகண்டம் -- பெரிய கண்டங்கள்; சுகர்மம் -- அறம்; திருதி -- துணை; சூலம் -- சில திசைப் பயண இடையூறுகள்; கண்டம் -- ஆபத்துக்கள்; விருத்தி -- ஆக்கம்; துருவம் -- ஸ்திரத்தன்மை பெறுதல்; வியாகாதம் -- பாம்பு முதலானவற்றால் ஆபத்து; அரிசனம் -- மகிழ்ச்சி; வச்சிரம் -- ஆயுதங்களால் தொல்லை; சித்தி -- வல்லமை; வியதீபாதம் -- கொலை; வரியான் -- காயம்; பரிகம் -- தாழ்வு; சிவம் -- காட்சி; சித்தம் -- திறம்; சாத்தியம் -- புகழ்; சுபம் -- காவல்; சுப்பிரம் -- தெளிவு; பிராம்மம் -- பிரமை; மாஹேத்திரம் -- இந்திரனைப் பற்றிய அறிவு; வைத்திருதி -- பேய்களால் தொல்லை .

தர்ப்பணம்

தர்ப்பணம் : சில குறிப்புகள்..

* முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது .

* முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும்போது, தாம்பாளத்தில் கூர்ச்சம் வைத்து பித்ருக்களை ஆவாஹனம் செய்தபிறகு கூர்ச்சம் இருக்கும் தாம்பாளத்தை வேறுஇடத்துக்கு நகர்த்தக்கூடாது .

* குழந்தை பிறந்த தீட்டு அல்லது உறவினர் இறந்த தீட்டு ஆகியவற்றை அனுஷ்டிக்கும்போது நடுவில் அமாவாசை மாதப்பிறப்பு போன்ற தர்ப்பணம் செய்யவேண்டிய நாட்கள் வந்தால், அன்று தர்ப்பணம் செய்யக்கூடாது .

* சிரார்த்த சமையலில் மிளகாய் சேர்க்கக் கூடாது . அதற்குப் பதிலாக மிளகு சேர்க்கலாம் .

* தர்ப்பணம் செய்பவர், சிரார்த்தம் செய்வதற்கு முன்பாக அதே பட்சத்தில் எண்ணை தேய்த்துக் கொள்வதோ, சவரம் செய்துகொள்வதோ கூடாது .

* அமாவாசை போன்ற நாட்களில் தர்ப்பணம் செய்யும்போது எள்ளை மடியில் வைத்துக் கொண்டு தர்ப்பணம் செய்யக்கூடாது .

* தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிடக்கூடாது .

* பூஜைகள், ஹோமங்கள், தர்ப்பணம், சிரார்த்தம் ஆகியவை நடைபெறும் காலங்களில் புதிய வேஷ்டியாக இருந்தாலும் கரையில்லாத வேஷ்டியை கட்டிக்கொள்ளக்கூடாது . அப்படிப்பட்ட வேஷ்டியை மற்றவர்க்கும் தானம் செய்யக்கூடாது .

* நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது ; அதுபோல், கரையில் இருந்துகொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது .

ஆன்மிக முன்னேற்றத்திற்கான தர்ம வழிகளில் நான்கு

ஆன்மிக முன்னேற்றத்திற்கான தர்ம வழிகளில் நான்கு வகைகள் !

முதல் வகையின் பெயர், ' சாமானிய தர்மம் '. அதாவது மாதா, பிதா, குடும்பத்தினர், சக மனிதர்கள், குரு ஆகியோரிடம் மதிப்பு மரியாதையோடு நடந்து கொள்ளுதல் . இதைத் தனது வாழ்க்கையால் அறிவுறுத்தினார், ஸ்ரீராமர் !

2 -வது வகையின் பெயர், ' சேஷ தர்மம் '. அதாவது, ' பூலோக உறவுகள் நிலையானவை அல்ல; தெய்வீக நெருக்கமே நிலையானது ' என்ற ஞானப் பக்குவத்துடன், தெய்வத்தின் பாதங்களைச் சரணடைதல்... வாழ்க்கை முழுவதும் ஸ்ரீராமரை நிழல் போலத் தொடர்ந்து, இந்த தர்மத்திற்கு உதாரண புருஷரானார் லட்சுமணன் !

3 - வது வகையின் பெயர், ' விசேஷ தர்மம் ' அதாவது, எப்போதும் தெய்வீக சிந்தனையோடு இருத்தல் ... ஸ்ரீராமரை விட்டு பிரிந்திருந்த வேளையிலும் மனம் முழுக்க அவரையே நிறைத்து, இந்த தர்மத்திற்கு உதாரண புருஷரானார் பரதன் !

4 -வது வகையின் பெயர், ' விசேஷர தர்மம் '. அதாவது, இறையடியார்க்குத் தொண்டு புரிவதற்கே வாழ்க்கையை அர்ப்பணித்தல்.. ஸ்ரீராமரின் பூரண பக்தரான பரதனை நிழல் போலத் தொடர்ந்து, அவருக்குத் தொண்டு செய்வதையே . வாழ்க்கை நோக்கமாகக் கொண்டு, இந்த தர்மத்திற்கு உதாரண புருஷரானார் சத்ருக்கனன் !

நான்கு வகை தர்மங்களும் சிறப்பானவையே ; இருப்பினும், சரணாகதி தர்மமான ' சேஷ தர்ம ' முறை மிக மிகச் சிறப்பு .

யார் பிராமணன்?

யார் பிராமணன்?

பாண்டவர்கள் வனவாசம் செய்துகொண்டிருந்த சமயம். ஒருநாள் பீமசேனன் வனத்தின் அழகை ரசித்துக்கொண்டு உலாவிக்கொண்டிருந்தான். திடீரென்று ஒரு பெரிய மலைப்பாம்பு அவனை பிடித்து சுற்றிக்கொண்டது. அசாத்தியமான பலம் கொண்ட பீமனால் எத்தனை முயற்சித்தும் அந்த பாம்பிடமிருந்து மீள முடியவில்லை.

கொஞ்ச நேரத்தில், யுதிஷ்டிரர் தமயனை... தேடி அங்கு வந்தார். பீமனின் நிலையை பார்த்து பயந்துபோனார். பாம்பிடம் பீமனை விட்டுவிடும்படி பிரார்த்தித்தார். வேறு ஏதாவது இறை கொடுத்துவிடுகிறேன் என்றார். ஆனால், அந்த சர்ப்பம் அதற்கு இணங்கவில்லை.

ஆச்சரியமாக, அந்த பாம்பு பேச ஆரம்பித்தது. 

அந்த பாம்பு வேறு யாருமல்ல, பாண்டவர்களின் மூதாதயர். பூர்வீக பிறவிகளில் அந்த பாம்பு நஹூஷன் என்ற அரசன். பணமும், அதிகாரமும் சேர்ந்த செருக்கால் அந்த அரசன் பிராமணர்களை அவமதிக்கவே அகஸ்தியரின் சாபத்தால் பாம்பாக பிறந்திருந்தான்.அந்த பாம்பு யுதிஷ்டிரரிடம் சில கேள்விகளுக்கு சரியான விடை சொன்னால் பீமனை விட்டுவிடுவதாக சொன்னது.

நஹூஷனுக்கும் யுதிஷ்டிரருக்கும் நடந்த உரையாடல் வருமாறு..

ந : எவன் பிராமணன்? எது அறியத்தகுந்தது?

யு : சத்யம், தயை, பொறுமை, நல்ல நடத்தை, பூர்ணமாக ஹிம்ஸையை விலக்குதல், புலனடக்கம், கருணை என்ற குணங்கள் கொண்டவனே பிராமணன். சுக துக்கங்களைக் கடந்த பிரம்மமே அறியத்தக்கது. அதை அறிவதால் ஒருவன் பூர்ணத்துவம் பெறுகிறான்.

ந : இந்த குணங்கள் ஒரு சூத்திரனிடம் இருந்தால் அவன் பிராமணனா? பிரம்மம் என்பது சுகதுக்கங்கள் இல்லாதது என்றால், சுகதுக்கங்களை கடந்த நிலை இருக்கும் என்று தோன்றவில்லையே!

யு : சத்தியம் முதலான நான் சொன்ன குணங்கள் ஒரு சூத்திரனிடம் இருக்குமானால் அவன் சூத்திரன் அல்லன். இந்த குணங்கள் ஒரு பிராமணரிடம் இல்லையென்றால் அவன் பிராமணன் அல்லன். ஓ, சர்ப்பமே, இந்த குணங்கள் கொண்டிருக்கும் மனிதன் பிராமணன் என்றே ஆகிறான். இக்குணங்கள் இல்லாமல் இருப்பவன் சூத்திரனே.

சுகதுக்கங்கள் இல்லாத நிலை இல்லை என்று சொல்வது கர்மத்தால் விளைந்த அனைத்துக்கும் பொருந்தும். நீர் எப்படி இயற்கையில் உஷ்ணமாகாதோ, நெருப்பு எப்படி இயற்கையில் குளிர்ந்திருக்காதோ அப்படியே அறியாமை அகன்ற சத்தியத்தில் சுகதுக்கங்கள் இல்லை.

ந : குணங்களே பிராமணனை தீர்மானிக்குமானால், இக்குணங்கள் இல்லா பிராமணின் பிறப்பு முக்கியமற்று போகிறதே.

யு : பல குணங்கள் கலந்துவிட்ட இக்காலத்தில் பிறப்பால் பிராமணனை காண்பது கஷ்டம். எல்லாரும் பிறப்பில் சூத்திரர்களே. சில சம்ஸ்காரங்களாலும், வேதம் படிப்பதாலும் பிராமண குணங்கள் கிடைத்து பிராமணனாகிறான். ஸ்வாயம்புவ மனு சொல்வதும் இப்படியே. எல்லா சம்ஸ்காரங்களும் செய்தும், வேதம் படித்தும் அவனுக்கு இக்குணங்கள் கொள்ளாவிட்டால் அவன் பல குணங்கள் கலந்தவன் என்று அறிந்துகொள். சாத்திரங்களின் முடிவான தீர்மானம் இது. தன் சம்ஸ்காரங்களால் நற்குணங்கள் மேலெழும்பி இருப்பவனே பிராமணன்.

யுதிஷ்டிரனின் இந்த பதில்களால் சந்தோஷப்பட்ட நகுஷன் பீமசேனனை விடுவிக்கிறான்.

- மகாபாரத இதிஹாஸம். தத்வலோகா பத்திரிக்கையில் 1993

வாஸ்து முறையில் வீடு அமைக்க

வாழ்நாளில் உடல் சுத்தமாக இருந்தால் நீண்ட நாட்கள் பூமியில் வசிக்கலாம். உள்ளம் சுத்தமாக இருந்தால் மகிழ்ச்சியை அதிகப்படுத்திக் கொண்டு கவலை இல்லாமல் வாழலாம். நாம் வாழும் வீடு சுத்தமாகவும் வாஸ்து சாஸ்திரப்படியும் துல்லியமாக அமைந்து விட்டால் எல்லா வகையான பேறுகளையும் பெற்று வாழ முடியும்.

இந்த வாஸ்து சாஸ்திரம் என்கிற மெய்ஞானத்தைப் பற்றி இன்று பல நூல்கள் வந்து விட்டாலும் மனை அடி சாஸ்திரத்தைப் பற்றித் தெளிவாக எடுத்துரைக்கும் ஆதிகால நூல் சர்வார்த்த சிற்ப சிந்தாமணியே. சிற்ப சாஸ்திரம் என்பது மிகச் சிறிய சிலைகளை வடிக்கும் நுட்பங்களைக் கூறுவது.

சிலா சாஸ்திரம் என்பது மிகப்பெரிய ஆலயங்கள், விண்முட்டும் கோபுரங்கள் ஸ்தூபிகள் அமைப்பதைப் பற்றி கூறுவதாகும். வீட்டைக் கட்டுபவர் மேஸ்திரி என்றும் என்ஜினீயர் என்றும் ஆலயம் கட்டுபவர்கள் ஸ்தபதி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

மனையடி சாஸ்திரத்தின்படி வீடு கட்டுபவர்கள், வீடு கட்டப்படுகிற நிலப்பரப்பின் நீளம் மற்றும் அகல அளவுகளை அடிகள் கணக்கீட்டால் அளந்து பார்க்கப்பட்டு வீடு அமைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

உத்தமமான மனையின் நீள அகல அளவு 16 அடிகளுக்கு மேலும், மத்தியமான மனையின் நீள அகல அளவு ஒரு குறிப்பிட்ட அளவும், தீயதான (அதமமான) மனையின் நீள அகல அளவுகள் தற்செயலாக அமைந்து விட்டால் அதைச் சரி செய்து விட வேண்டும் என்றும் மனை அடி சாஸ்திரம் விதிகள் கூறுகிறது.

ஒரு வீட்டைக் கட்டுவதில் குழப்பமில்லாத மனநிலை இருக்க வேண்டும். தரம் கொண்ட தகுதியான நிலப்பரப்பிலும், விதியோடு கூடிய நீள அகல உயர அடிகள் அளவிலும் அமைத்து நல்ல நாள் நேரம் பார்த்து வீடு கட்ட ஆரம்பிப்பதும் சுபநாளில் வேதமுறைப்படி கிரகபிரவேசம் செய்வதும் நம் வாழ்வில் நிம்மதியான தருணங்களை உருவாக்கும்.

உங்கள் வீடு லட்சுமி கரமாயத் திகழ்கிறது என்று மற்றவர்களால் பாராட்டப்படவும் வாழ்த்துப் பெறவும் பொறுமையாகச் செய்யப்பட்டு யோகமான வீட்டைக் கட்டுங்கள்.

1. கிழக்கு வடக்கு திசைகளில் அதிகமான காலி இடம் விட வேண்டும். 

2. கடைக்கால் வெட்டல் (வாணம் தோண்டல்) வடகிழக்காகிய ஈசான மூலையிலிருந்து தொடங்க வேண்டும். 

3. உங்கள் வீட்டு தனப்பகுதிக்கு உரிய கிழக்கு வடக்கு ஈசானிய திசைகள் பள்ளமாக இருக்கும்படி சரி செய்ய வேண்டும். 

4. மேற்கு, தெற்கு, தென்மேற்கு கன்னி மூலை மேடாக அமைக்க. 

5. கிழக்கு, வடக்கு ஈசான்யம் தவிர மற்ற திசைகளில் கிணறு குழி, பள்ளம், இருந்தால் அதை மண் மூடி புதைத்து விடுதல். 

6. ஈசான்யத்தில் கிணறு அல்லது குழி வெட்டி நீர் தேக்கி. அந்த நீரை வீடுகட்ட பயன்படுத்துதல் வேண்டும். 

7. வீடுகட்ட கொண்டு வரும் கற்கள் மற்றும் பொருட்களை செங்கல், மரச்சாமான்கள், உபகரணங்கள் உட்பட கிழக்கு வடக்கு திசைகளில் வைக்காமல் தெற்கு மேற்கு திசைகளில் வைக்க வேண்டும். 

8. வீடு கட்ட நீங்கள் தேர்வு செய்யும் நிலப்பகுதி சதுரமாகவோ நீள் சதுர வடிவிலோ இருக்கலாம். 

9. அந்த திசையின் கோணமும் வெட்டுப்பட்ட நிலையில், பின்னமாக, முக்கியமாக ஈசான்யம் மட்டும் குறைந்த நிலையில் இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

10. வாசற்படி, ஜன்னல், அலமாரி, கதவுகளை ஒன்றுக்கு ஒன்று எதிராக வைத்தல் நல்லது. 

11. வாசலில் முழுமையாக சுவர் அமைத்து (4 அங்குலம் வரை) அதன் பிறகு அமைத்தல் நல்லது. 

12. வாஸ்து நேரத்தைப் பயன்படுத்தும் போது நேரத்தை விட்டுவிடாது வழிபட்டு தொடங்க வேண்டும்.

Tuesday, June 25, 2013

பெண் மூலம் நிர்மூலமா?

ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்! ஆண்டாண்டு காலமாக மக்கள் மத்தியில் நிலவிவரும் தவறான நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. 'மூல நட்சத்திரப் பெண்ணா? வேண்டவே வேண்டாம்!’ என்று நட்சத்திரத்தைப் பார்த்ததுமே அவர்களின் ஜாதகத்தை ஒதுக்கித் தள்ளும் வேதனையான வழக்கம் இன்றும் தொடர்கிறது.

இது தவறு எனில், இப்படியான நம்பிக்கை ஏற்படக் காரணம் என்ன? நெருப்பில்லாமல் புகையாதே?!

இதற்கான பதிலை மிக நுணுக்கமாக ஆய்ந்தறிய வேண்டும்.

ஜோதிட சாஸ்திரத்தில் மிதுன ராசியில் சூரியன் இருக்கும் மாதமே ஆனி மாதம். மிதுனம் ஆண் ராசி. இந்த மாதத்தில் வரும் மூல நட்சத்திரம் பெரும்பாலும் பௌர்ணமி திதியை ஒட்டியே வரும். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் மாதம் புரட்டாசி. கன்னி- பெண் ராசியாகும். இந்த மாதத்தில் வரும் மூலநட்சத்திரம் பெரும்பாலும் அஷ்டமி திதியுடன் சேர்ந்து வரும்.

எப்போதுமே நல்ல காரியங்களுக்கு பௌர்ணமி திதியே ஏற்றதாகக் கொள்ளப்படும்; அஷ்டமி திதியை பெரும்பாலும் தவிர்த்துவிடுவார்கள். ஆக, பௌர்ணமி திதியை ஒட்டி ஆனி மாதம் மிதுன (ஆண்) ராசியில் சூரியன் இருக்கும்போது வரும் மூல நட்சத்திரம் சுப திதியில் வருவதால், ஆனி மூலத்தை ஏற்றனர். அதுவே ஆண் மூலம் எனப்பட்டது. பௌர்ணமி என்பது யோக திதி என்பதால், இன்னும் திரிபு ஏற்பட்டு 'ஆண் மூலம் அரசாளும்’ என்றாகிவிட்டது.

அதேபோன்று, கன்னி மாதமாகிய புரட்டாசியில், மூல நட்சத்திரம் அஷ்டமியோடு சேர்ந்து வருவதால், அந்த நாளில் சுப காரியங்கள் தவிர்க்கப்பட்டது. அன்று துவங்கும் நற்காரியங்கள் விருத்தியாகாது எனும் பொருள்படும்படி 'கன்னி மூலம் நிர்மூலம்’ எனச் சொல்லி வைத்தார்கள். இதில் கன்னி ராசி மறக்கப்பட்டு, கன்னிப் பெண்கள் எனத் தவறாகப் பொருள் கொண்டு 'பெண் மூலம் நிர்மூலம்’ என்றாகிவிட்டது.

எனவே, மூல நட்சத்திரம் என்பது இருபாலருக்கும் பெருமை சேர்க்கும் நட்சத்திரமே! அதேபோன்று, மூல நட்சத்திரக்காரர்களைத் திருமணம் செய்தால் மாமனார்- மாமியாருக்கு ஆகாது 

ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?

ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அதுவே திரும்பத் திரும்ப ஒலி/ஒளிப்பதிவுகளாக நம் உள்ளத்தில் திரும்பத் திரும்ப வந்து நம்மைப் பாடாகப் படுத்துவதுண்டு. அப்படி நம் மனதில் ஆறாத காயமாகி, நாம் மறக்க நினைக்கும் விஷயங்களில் முதலிடம் பெற்று நிற்பது நமக்கு இழைக்கப்படும் அநீதிகள் தான்.

ஒரு முறை ஹைதராபாத்தில் நடைபெற்ற சுவாமி சுகபோதானந்தாவின் வாழ்வியல் பயிற்சி முகாமில் பங்கு பெற்றவர்களிடம் சுகபோதானந்தா ஒரு கேள்வியைக் கேட்டார். “உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் காயம் என்ன?”

பலரும் தங்கள் மனதில் இருந்த ஆறாத காயங்களைப் பற்றி சொன்னார்கள். கிட்டத்தட்ட எல்லாமே அடுத்தவர்கள் இழைத்த அநியாயங்களாகத் தான் இருந்தன. ஒருவர் தன் அரசாங்க வேலையில் இருந்து ராஜினாமா செய்து தன் சேமிப்பையும், மனைவி குழந்தைகள் நகைகளை விற்று வந்த தொகையையும் முதலாகப் போட்டு நண்பருடன் செய்த வியாபாரத்தைப் பற்றி சொன்னார். நண்பரை நம்பி வியாபாரத்தின் எல்லா உரிமைகளையும் நண்பர் பெயரிலேயே வைத்திருந்ததால் வெற்றிகரமாக நடந்து வந்த வியாபாரத்தில் ஒரு கட்டத்தில் ’உனக்கு இனி சம்பளம் மட்டும் தான்’ என்று சொல்லி நண்பர் ஏமாற்றி வெளியேற்றிய அநியாயத்தைச் சொல்லி அழுதார். இன்னொரு பெண்மணி தன் புகுந்த வீட்டில் தனக்கிழைத்த நியாயமற்ற கொடுமைகளைச் சொல்லி மனம் குமுறினார். 

இப்படி பலரும் பல காயங்களைச் சொல்ல அதைக் கேட்டுக் கொண்ட சுவாமி சுகபோதானந்தா அடுத்தபடியாக அவர்களிடம் “உங்களுக்குப் பிடிக்காத போர் அடிக்கும் சினிமா ஒன்றின் பெயர் சொல்லுங்களேன்” என்றார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சினிமாவின் பெயரைச் சொன்னார்கள். 

“சரி. அந்த சினிமாவின் வீடியோ காஸெட்டை (சி.டி, டி.வி.டி எல்லாம் வர ஆரம்பிக்காத காலகட்டம் அது) தேடிப் பிடித்து வாங்கி, வருகிற ஞாயிற்றுக் கிழமை காலையிலிருந்து இரவு வரை திரும்பத் திரும்ப போட்டுப் பாருங்கள்” என்றார்.

ஒரு முறை பார்த்தே வாழ்க்கை வெறுத்தவர்களுக்கு அதை விடப் பெரிய கொடுமை என்ன இருக்க முடியும்? அவர்கள் “ஐயையோ...முடியவே முடியாது. முடிகிற காரியமாக வேறு எதையாவது சொல்லுங்கள்” என்றார்கள்.

“நண்பன் உங்களுக்குச் செய்த துரோகமும், மாமியார் செய்த கொடுமைகளும் கூட உங்களுக்குப் பிடிக்காத காட்சிகள் தான். பிறகு ஏன் அதை உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்க்கிறீர்கள்? பிடிக்காத சினிமாவைப் பார்க்க மறுக்கும் நீங்கள், விரும்பாத அந்த உண்மைக் காட்சிகளை ஏன் உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட விட்டுப் பார்க்கிறீர்கள். அதை மறந்து விடுங்கள். காயம் தானாகவே காய்ந்து உதிர்ந்து விடும்” என்றார் சுகபோதானந்தா.

அவருடைய அழகிய வார்த்தைகளில் “கடந்த காலம் நமக்குப் பாடமாக இருக்க வேண்டுமேயொழிய பாரமாக இருக்க ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது”

இது அறிவுபூர்வமாக எல்லோருக்கும் புரியக் கூடிய நல்ல விஷயம். ஆனால் மனம் அறிவின் படியா நடக்கிறது? எதை நினைக்கக் கூடாது என்று கட்டளை இடுகிறோமோ அதைப் பற்றியே அல்லவா மனம் பிடிவாதமாக நினைக்கிறது. இந்த காயங்கள் ஒவ்வொரு முறை நினைக்கும் போது புதிய காயம் போலல்லவா வலிக்கிறது. இந்த காயங்களை ஆற வைப்பதெப்படி? மறப்பதெப்படி?

இது சாத்தியமாக வேண்டுமானால் இரண்டு மாபெரும் உண்மைகளை நினைவில் இருத்த வேண்டும். 

ஒன்று எந்த அநியாயமும் தண்டிக்கப் படாமல் போவதில்லை. சில தண்டனைகள் உடனடியாகக் கிடைக்காமல் போகலாம். ஆனால் கர்மபலன் என்பது காலம் கழிந்தாவது வட்டியும் முதலுமாகக் கிடைக்கக் கூடியதே. அது சில சமயங்களில் நம் கண்ணிற்குப் படாமல் இருக்கலாம், கருத்திற்கு எட்டாமல் இருக்கலாம். ஆனால் வினை விதைத்தவன் வினை அறுக்காமல் போனதாக சரித்திரம் இல்லை. ஹிந்தியில் ஒரு அழகான பழமொழி உண்டு. ’இறைவனின் பிரம்படியில் சத்தம் கேட்பதில்லை’. இது நூற்றுக்கு நூறு உண்மை. வெளியே தெரியாமல் தனக்குள்ளேயே புழுங்கும்படியான எத்தனையோ வேதனைகள் உண்டு. எனவே வெளித் தோற்றத்தை வைத்து எதையும் எடை போடுவது சரியானதாக இருக்காது. 

எனக்குத் தெரிந்த ஒரு பெரிய செல்வந்தர் பல அப்பாவி ஏழை ஊழியர்களை ஏமாற்றி, அவர்களுக்கு சேரவிருந்த பணத்தைத் தராமல் ஏமாற்றியவர். அவருக்குப் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உண்டு. அவர் அப்படி ஏமாற்றியவர் என்றாலும் அவருடைய செல்வச் செழிப்பில் ஒரு குறையும் கடைசி வரை இருக்கவில்லை. அவர் கடைசியாக விற்ற சொத்து ஒன்று எதிர்பாராத நல்ல விலைக்குப் போய் அவர் இலாபத்தை பல மடங்கு ஈட்டித் தந்தது. இதையெல்லாம் பார்க்கையில் ’ஏமாற்றிய ஆள் நன்றாகத் தானே இருக்கிறார். அவருக்குப் பணம் சேர்ந்து கொண்டே தானே இருக்கிறது’ என்று யாருக்குமே தோன்றுவது இயற்கை.

ஆனால் அந்த மனிதரின் பங்களாவையும், சொத்து மதிப்பையும் பார்ப்பதை விட்டு விட்டு அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால் உண்மை விளங்கும். அந்த மனிதர் வீட்டில் குடும்பத்தினருக்கு அவர் மீது சிறிதும் மதிப்பில்லை, பாசமுமில்லை. அவருடைய மனைவி மற்றவர்கள் முன்னிலையிலேயே அவரை இழிவாகப் பேசுவதுண்டு. அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் அவரிடமிருந்து அதிகமான சொத்தை அவர் இருக்கும் போதே எழுதி வாங்கி விட வேண்டும் என்று சதா அவரை நச்சரிப்பதும், சண்டை போடுவதும் வாடிக்கை. அந்த மனிதர் வாய் விட்டுச் சிரித்தோ, நிம்மதியாக சில மணி நேரமாவது இருந்தோ யாரும் பார்த்ததில்லை. வயதான காலத்தில் இதை விடப் பெரிய தண்டனை வேறென்ன இருக்க முடியும் சொல்லுங்கள்.

’அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப தவறிழைத்தவர் தண்டனை பெறாமல் தப்புவதில்லை என்றறிந்து தெளியும் போது காயத்தின் தீவிரம் குறையும்.

இரண்டாவது உண்மை நமக்கு ஏற்படும் கசப்பான அனுபவங்கள் எதுவுமே காரணம் இல்லாமல் வருவதில்லை. அவை நாம் நம் முந்தைய செயல்களால் சம்பாதித்தவையாக இருக்கலாம், நம்முடைய குறைபாடுகளால் நாம் வரவழைத்தவையாக இருக்கலாம், அல்லது நாம் புடம் போட்ட தங்கமாக மாறத் தேவையான அனுபவங்களாக இருக்கலாம். இதை ஒத்துக் கொள்ள நமக்கு சிறிது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இது மாபெரும் உண்மை. 
இதற்கு நாமே காரணம், அல்லது நம் பக்குவத்தினை அதிகப்படுத்த கிடைத்த பாடம் இது என்று உணரும் போது ஒரு அனுபவத்தின் கசப்புத் தன்மை குறைகிறது. தெளிதலும், மறந்து முன்னேறுவதும் சாத்தியமாகிறது. 

இந்த உண்மைகளை மனதில் இருத்திக் கொண்டு சுவாமி சுகபோதானந்தா சொன்னதையும் சிந்தித்துப் பாருங்கள். நமது ஆறாத காயங்களின் வலியும், நமது பொருமல்களும் நம்மைக் காயப்படுத்தியவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடுவதில்லை. மாறாக நம் மகிழ்ச்சியைத் தான் குலைத்து விடுகிறது என்பதையும் மறந்து விடாதீர்கள். உண்மையாகவே இதெல்லாம் புரியும் போது அது வரை ஆறாத காயங்களும் ஆற ஆரம்பிக்கும்

மௌனம் ஒரு மகாசக்தி

ஒரு எந்திரம் மிக நன்றாக வேலை செய்யும் நிலையில் இருக்கும் போது சத்தம் மிகக் குறைவாகவே இருக்கும். அதன் வேலை செய்யும் திறன் பழுதுபடும் போது தான் சத்தம் அதிகரிக்கத் துவங்கும். இது எந்திரத்திற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். நிறைய சாதித்தவர்கள், மனித சமுதாயத்தில் தங்கள் காலடித் தடங்களைப் பதித்து விட்டுப் போனவர்கள் வாழ்க்கையை ஆராய்ந்தோமானால் அவர்கள் ஓயாமல் பேசுபவர்களாக இருப்பதில்லை. 'நான் இப்படி செய்யப் போகிறேன்', 'நான் அப்படி சாதிக்கப் போகிறேன்' என்றெல்லாம் வாய் கிழிய சொல்லிக் கொண்டு இருப்பதில்லை. வம்பு பேசுபவர்களாகவோ அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அலசுபவர்களாகவோ, விமரிசித்து மகிழ்பவர்களாகவோ இருப்பதில்லை. அவர்களுக்கென்று வாழ்க்கையில் குறிக்கோள் இருக்கிறது. அதில் தான் அவர்களுக்கு முழுக்கவனமும், உற்சாகமும் இருக்கிறது. அவர்களிடம் தேவையற்ற பேச்சுகளுக்கு நேரமோ மனமோ இருப்பதில்லை. 

அமைதியாக இருக்கும் போது தான் தெளிவாக சிந்திக்க முடிகிறது. தெளிவாக சிந்தனைக்குப் பின் பிறக்கும் செயல்களே சிறப்புறுகின்றன. எதிலும் நமது முழுத் திறமையும் வெளிப்பட வேண்டுமானால் மனதை ஒழுங்குபடுத்தி, அனைத்து சக்திகளையும் நாம் ஒருமுகப்படுத்த வேண்டும். இது பேசிக் கொண்டே இருக்கும் சந்தர்ப்பங்களில் சாத்தியமாவதில்லை. மௌனம் நமது சக்திகளை விரயமாக்காமல் சேமிக்க உதவுகிறது. ஓயாமல் பேசிக் கொண்டிருக்கையில் நமது நேரத்தையும், சக்திகளையும் விரயமாக்குவதுடன், அடுத்தவர்களைத் தொந்தரவும் செய்கிறோம். சொல்ல வேண்டி இருக்காத, பின்னால் நம்மை வருந்த வைக்கிற எத்தனையோ விஷயங்களைச் சொல்லியும் விடுகிறோம். 

நிறுத்தாமல் பேசுபவர்கள் மற்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ஒரு முறை வின்ஸ்டன் சர்ச்சிலை ஒரு விருந்தில் சந்தித்த ஒரு மூதாட்டி சொன்னார். "நான் என் பேரனைப் பற்றி உங்களிடம் சொன்னதில்லை என்று நினைக்கிறேன்". வின்ஸ்டன் சர்ச்சில் "தாங்கள் சொன்னதில்லை. அதற்காக நான் தங்களுக்கு நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்" என்று சொல்லி அங்கிருந்து வேகமாக நகர்ந்து விட்டார். மற்றவர்களுக்குத் தேவையில்லாதையும், விருப்பமில்லாததையும் சொல்லாமல் நாமும் மற்றவர்களின் நன்றிக்குரியவர்களாவோமாக. 

ஒரு கிரேக்க ஞானி சொன்னதைப் போல் "உங்கள் பேச்சு மௌனத்தை விடச் சிறப்பாக இருக்குமானால் மட்டுமே பேசுங்கள். இல்லையேல் மௌனமே நல்லது". உண்மையில் மேற்போக்காக நாம் வாழும் போது தான் அதிகமாய் வாக்குவாதங்களில் ஈடுபடுகிறோம்; அடுத்தவர்களை விமரிசிக்கிறோம்; சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகிறோம். சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்கிறோம். ஆனால் வாழ்க்கையில் ஆழமான நிலைகளை அடையும் போது இயல்பாகவே பேச்சு குறைந்து விடுகிறது. 

நாம் பேசிக் கொண்டிருக்கும் போதும், மற்றவர்களின் இரைச்சலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் நமக்குள்ளே இருந்து மெலிதாகக் கேட்கும் ஒரு குரலைக் கேட்க முடிவதில்லை. அந்தக் குரலைக் கேட்கவும் அதன் படி நடக்கவும் முடிந்தால் மட்டுமே ஒவ்வொருவனும் தன் தனித்தன்மையை அறிய முடியும். தன் தனித்தன்மையை அறிய முடியாதவன் அடுத்தவர்களின் கருத்துகளின் படி வாழவும் செயல்படவும் முற்படுகிறான். அப்படி வாழப்படும் வாழ்க்கை இரண்டாம்தர மூன்றாம்தர வாழ்க்கையாகவே இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆகவே எதிலும் முத்திரை பதிக்க விரும்புபவர் யாராயினும் முதலில் பேச்சைக் குறைத்து தங்கள் உள்ளே ஒலிக்கும் குரலைக் கவனிக்க ஆரம்பிப்பது அவசியம்.

எனவே முதலில் நமக்கும் மற்றவர்களுக்கும் பயன் தராத தேவையில்லாத பேச்சுகளை குறைத்துக் கொள்வோம். இதன் மூலம் அடுத்தவர்களும் இத்தகைய பேச்சுகளை நம்மிடம் தாங்களாகக் குறைத்துக் கொள்வார்கள். ஏனென்றால் ஒரு கை ஓசை இருக்க முடியாதல்லவா? இது பல பிரச்சினைகளை தவிர்க்கவும், நம்மைச் சுற்றி ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கவும் பெரிதும் உதவும். 

பலரும் மௌனம் என்று குறிப்பிடுவது வாய் மூடியிருப்பதையே என்றாலும் மௌனத்தையே என்றாலும் இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இதைக் காட்டிலும் உயர்ந்த மௌனம் இன்னொன்று உள்ளது. அது உள்ளே நிகழும் மௌனம். மனமும் அமைதியடையும் போதே அந்த மௌனம் சாத்தியமாகிறது. வாய் மூடி இருந்தாலும் மனம் ஓயாமல் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால் வெளிப்புற மௌனத்தால் பெரிய அளவு பலன்களை நாம் எதிர்பார்க்க முடியாது. உட்புறமும் மௌனத்தை அனுசரிக்க முடிந்தால் அதனால் கிடைக்கும் பலன்கள் அளவில்லாதவை. இந்த உள்புற மௌனத்தை அடைய தியானம், ஆத்மவிசாரம் ஆகியவை உதவுகின்றன.

ஒவ்வொரு முக்கியமான செயலைச் செய்யும் முன்னும் ஓரிரு நிமிடங்கள் மௌனமாய் இருப்பது சிதறும் சக்திகளைச் சேர்த்து ஒழுங்குபடுத்த உதவுகிறது. இப்படி ஒழுங்குபடுத்தப்பட்ட சக்திகளை முறையாகப் பயன்படுத்தி ஒரு செயலைச் செய்யும் போது அது மிகச் சிறப்பாக அமைவதில் ஆச்சரியமில்லை. மேலும் எல்லா புதிய பரிமாணங்களும், ஆழமான அர்த்தங்களும் நமக்குப் புலனாவது நாம் இப்படி மௌனமாக இருக்கும் போது தான். நம் உண்மையான தேவை என்ன, அதற்கு என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கு குழப்பமில்லாமல் தெளிவாக விடை காண்பது இந்த ஆழமான மௌனத்தின் போது எளிதாகிறது. அதற்கான பெரும் சக்தியும் இந்த மௌனத்தில் நம்முள் பிறக்கிறது. ஒரு பெரும் சூறாவளியின் சகல சக்திகளுக்கும் மூலம் அதன் அமைதியான மையத்தில் இருப்பது போல எல்லா சாதனைகளையும் புரியத் தேவையான மகா சக்தியை நம்முள்ளே பிறக்கும் அந்த மௌனத்தில் நாம் காண முடியும்.

பிரதானப்படுத்துவதையே பெறுகிறீர்கள்!

மனிதன் தன் வாழ்வில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறானோ அதையே அதிகம் காண்கிறான், அதுவே அவன் வாழ்வில் அதிகம் பெருகுகிறது என்று ஞானிகள் சொல்கிறார்கள். எதில் ஈடுபாடு அதிகமாகிறதோ, எதை அவன் மிக முக்கியம் என்று நினைக்கிறானோ அது குறித்த அவன் எண்ணங்களும், உணர்வுகளும் சக்தி வாய்ந்தவைகளாகின்றன. தன்னைச் சுற்றிலும் அதை ஈர்க்கும் ஒரு காந்த மண்டலத்தை அவன் உருவாக்கிக் கொள்கிறான். அது சம்பந்தமான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் அவன் தன்னிடத்தே ஈர்த்துக் கொள்கிறான். 

ஒவ்வொரு துறையிலும் நிறைய சாதனை புரிந்தவர்களைக் கேளுங்கள். அந்தந்த துறையில் அவர்களுக்கு மகத்தான ஈடுபாடு இருந்திருக்கிறதென்று அவர்கள் சொல்வார்கள். அவர்கள் எண்ணமெல்லாம் அதுவாக இருந்திருக்கிறதென்றும், அது மற்ற எல்லாவற்றையும் விட அதிக முக்கியத்துவத்தில் இருந்திருக்கிறதென்றும், அதற்காக மற்ற எத்தனையோ விஷயங்களை அவர்கள் தியாகம் செய்திருக்கிறார்கள் என்றும் சொல்வார்கள். 

பல விஷயங்கள் நமக்கு அதிகம் கிடைப்பதில்லை என்பதற்குக் காரணமே அவற்றிற்கு நாம் நம் வாழ்வில் பிரதான இடத்தை அளிப்பதில்லை என்பது தான். அல்லது அதற்கு எதிர்மாறான ஒன்றிற்கு நாம் அதை விட அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது கூடக் காரணமாக இருக்கலாம். 

பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன் ஆனால் அது ஒன்றும் என்னிடம் அதிகம் இல்லை என்று சொன்ன இருவரை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். அவர்களை ஆராய்ந்ததில் ஒருவர் பணத்தை விட அதிகமாக சும்மா சோம்பி இருப்பதை விரும்புபவர் என்பதையும், இன்னொருவர் பணத்தை விட அதிகமாக அதை சூதாட்டத்தில் வைப்பதில் விருப்பமுள்ளவர் என்பதையும் நான் காண நேர்ந்தது. அந்த இரண்டுமே பணம் சேரத் தடையாக இருக்கும் பழக்கங்கள். எனவே பணம் நிறைய வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு நிறைய இருந்தாலும், பணத்துக்கு அவர்கள் மிக அதிக முக்கியத்துவத்தை தருபவர்கள் என்ற போதிலும் அதற்கு எதிர்மறையான ஒன்றிற்கு அதை விட அதிக முக்கியத்துவம் தந்ததால் அவர்கள் கடனாளியாகவே இருக்கிறார்கள்.

எனவே நீங்கள் மிக முக்கியம் என ஒன்றை நினைப்பதாக நம்பி இருந்தும் அது அதிகம் உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் முக்கியத்துவம் அளிக்கும் விஷயங்களின் பட்டியலை மீண்டும் ஒரு முறை ஆராயுங்கள். அந்தப் பட்டியலில் அந்த முக்கியமான விஷயத்திற்கும் அதிகமாக அதற்கு இசைவில்லாத, அல்லது எதிராக உள்ள விஷயம் ஒன்றிற்கு உங்களை அறியாமல் பிரதானத்துவம் நீங்கள் தந்து கொண்டு இருக்கலாம். 

ஆராய்ச்சியாளர்கள் நீங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக வேண்டும் என்று நினைப்பதைக் கூட எதிர்மறை வாக்கியங்களில் நினைக்காமல் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். உதாரணத்திற்கு, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்கும், நோயில்லாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுவதற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாகச் சொல்கிறார்கள். இரண்டாவதான அந்த எதிர்மறை வாக்கியத்தை ஆழ்மனதில் எண்ணும் போது நோய் என்ற வார்த்தையே பிரதானமாகிறது என்றும் அதையே அதிகம் நாம் நம் வாழ்வில் வரவழைக்கிறோம் என்றும் சொல்கிறார்கள். 

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி ஆரோக்கியத்திற்கு மிக முக்கியத்துவம் தருபவர். அவருக்கு கவனமாக இல்லாவிட்டால் எதிலிருந்தும் சீக்கிரம் "infection" ஆகி விடும் என்ற பயம் அதிகம். எங்கு சென்றாலும் infection ஆகி விடக் கூடாது என்று சர்வ ஜாக்கிரதையாக இருக்கும் அவர் எனக்குத் தெரிந்து அடிக்கடி நோய்க்கிருமிகளால் தாக்கப்பட்டு சிகிச்சை பெறுவதைப் பல முறை கண்டிருக்கிறேன். ஆக ஆரோக்கியம் என்ற எண்ணத்தை விட "infection" என்ற எண்ணமே ஆழமாகப் பதிந்து முக்கியத்துவம் பெற்றதன் விளைவே அது என்பது தான் சரியாகத் தோன்றுகிறது.

எனவே அப்படி இருக்கக்கூடாது, இப்படி செய்யக் கூடாது, இது வேண்டாம் என்று எதிர்மறை வாக்கியங்களால் ஒன்றிற்கு முக்கியத்துவம் தருவதை நிறுத்தி விட்டு அப்படி இருக்க வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும், இது வேண்டும் என்று ஆழமாக நினைப்பது தான் அதை நம் வாழ்வில் வரவழைப்பதற்கு நல்ல வழி.

ஒன்று உங்களுக்கு மிக முக்கியம் என்றால், அதைத் தவிர வேறு எதுவும் அவ்வளவு முக்கியம் இல்லை என்றால் அதைக் காந்தமாக உங்களிடம் ஈர்க்கத் தேவையான சக்திகள் உங்களிடம் கண்டிப்பாக உருவாகும். அதை நிறைவேற்றத் தேவையான சூழ்நிலைகளும், மனிதர்களும் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் வருவார்கள். இதில் நம்பிக்கை மிக முக்கியம். நம்பிக்கை இல்லாமல் சந்தேகமே பிரதானமாக இருந்தால் அதை உறுதிப்படுத்துகிற மாதிரியான நிஜங்களே நடக்கும். 

எனவே உங்களுக்கு வேண்டியதையே பிரதானப்படுத்துங்கள். அதற்கே முதலிடம் கொடுங்கள். அதைக் கண்டிப்பாகப் பெறுவீர்கள் அல்லது அடைவீர்கள். 

Sunday, June 23, 2013

இல்லறத்தில் ஆன்மீகம்

இறையுணர்வு என்பதே அன்புவுணர்வுதான். அன்பு சுரக்கும் இடத்தில்தான் அருள் சுரக்கும்.அன்பு என்பது கடவுளிடம் மட்டும் அன்றி கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் அன்பு செய்ய வேண்டும். அருள் நெறி என்பது அன்பு நெறியின் நீடிய தோன்றமாகும்.

எனவேதான் அருள் என்னும் அன்பு ஈன்று குழுவி என்கிறார் வள்ளுவர். உலக உயிர்களிடத்தில் அன்பு செலுத்துது இறைவனுக்கு ஆற்றும் தொண்டிற்கு சமமாகும். உயிர்களின் இதயக் கோயிலே இறைவன் வாழும் கலைக்கோயிலாகும். அருள் நெறி என்று உயிர்களுக்கு அன்பு செய்ய சமய வாழ்வு வாழ்கிறோம் எனில் அது சமுதாய வாழ்வுடன் இணைந்ததாக அமையவேண்டும். இந்த வகையில் இல்லறத்தில் என்றும் இறைவனை அடையலாம் என்பதை இந்து சமயம் காட்டுகிறது.

இல்லறத்தை நல்லறமாக மாற்றி வாழ வேண்டும். இல்லறமல்லது நல்லறமன்று.

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை- என்கிறார் வள்ளுவர்

இல்வாழ்க்கையின் பண்பு அன்புடமை. பயன் அறனுடையமையாகும். மனைவி சுற்றம் என்று வி¡¢யும் அன்பிலே வாழும் ஒருவன் உலகனைத்தின் பாலும் வி¡¢ந்த அன்பு பூணும் மனப்பக்குவம் அடைகிறான். மனைவியும் அதே அன்புசால் மனப்பக்குவம் அடைகிறாள்.உலகனைத்தையும் அன்புக்கண்களிலே காணும் இந்த வி¡¢ந்த மனோபக்குவம் அடைய இல்லறம் வழிகாட்டுகிறது. அன்பும், அறனும் இல்வாழ்க்கையினை சிறப்பாக்குகிறது.வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் -வள்ளுவர். இல்லறம் நடத்தியே இறைவனை அடைந்தாகச் சொல்லப்படும் நாயன்மார்களுடைய கதைகளிலும், ழ்வார் கதைகளிலும் தனை நாம் அறியலாம்.

"காடே திரிந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தை சுற்றிஓடே எடுத்தென்ன? உள்ளன்பில்லாதவர் ஓங்கு செல்லநாடேயிடை மருதீசர்க்கு மெய்யன்பர் நாரியர் பால்வீடேயிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுமே"

இங்கு இல்லறத்தானும் வீடுபேறு பெறமுடியுமென கூறப்படுகிறது.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்ததை ஒழித்துவிடின் -

இதைதான் சமயம் கூறுகிறது. உனக்கிட்ட கடமைகளை ஒழுங்காக செய். அதுவே உன்னை உயர்நிலையை அடையும் தகுதியை வளர்த்துக் கொடுக்கும்.
இந்து தர்மத்தின் முக்கிய நூலாக போற்றப்படுவது பகவத்கீதை. இந்த கீதையை உபதேசித்தவனும் கேட்டவனும் சந்யாசிகள் அல்லர். குடும்பவாழ்விலிருந்தோர்,மன்னாளும் மன்னர்கள்.

கீதையிலே பரமாத்மா கிருஷ்ணன் சொல்கிறான் :

"அர்சுனா, மூன்று உலகங்களிலும் இனி மிஞ்சிற்கும் செயல்,செய்கை ஒன்றும் எனக்குக் கிடையாது. அடையத்தக்கது, அடையப்படாது என ஒரு பேறுமில்லை.எனினும் நான் தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறேன். நான் தொழில்செய்யாது வாளாவிருப்பின், உலகத்தில் எல்லா உயிர்களும், என் வழியையே பின் பற்றும்.அதனால் இந்த உலகம் அழிவு எய்தும். அந்த அழிவுக்கு நான் காரணமாகாமல் தொழில் செய்துகொண்டிருக்கிறேன். ஓயாமல் தொழில் செய்பவன் சிறந்த கர்மயோகி. அவன் ஜிவாத்மாவை இடைவிடாது துதிக்கிறான். சம்சாரத்தை நேசிக்கிறான். குடும்பத்தை காக்கிறான். மனைவி, மக்களை காக்கிறான்.சுற்றதாத்தாரை, அயலவரை போற்றுகிறான். எல்லாவற்றையும் துறந்து சென்றால் அவன் முத்திக்கு தகுதியுடைவனாக மாட்டான். எல்லாவற்றையும் துறந்து செல்கிறவன் கடவுளுடைய இயற்கை விதிகளை துறந்து செல்பவனாகிறான்...

இவ்வாறு நாம் பாக்கும் போது இல்வாழ்க்கையில் முற்று முழுதாக விடின் இறைவனை அடையலாமா? என்ற கேள்வி எழும். வாழ்வில் பற்றை விலக்க வேண்டுமே ஒழிய வேண்டியதில்லை. 'படகு தண்ணீரில் இருக்கலாம். தண்ணீர் படகினுள் இருக்ககூடாது'என்று அருமையாக வழிகாட்டுகிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.

இல்லறத்துறவை காட்டிலும், உள்ளத்துறவு சதகோடி மடங்கு அகத்திருக்க இல்லாததது ஒன்றில்லை. கற்புடைய மனைவியைகாதலுற்று, அறம்பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கைகையாகும்.கடவுள் அனைத்து உயிர்களிலும் இருக்கிறார். இல்வாழ்க்கையில் இருந்து கொண்டு உற்றார்,உறவினர், உலகத்தாருக்கும் உபசாரம் செய்து கொண்டு அறவழியில் இன்பங்களை அனுபவித்து ஆண்டவனை தொழுது அதனால் மனிதத் துன்பங்களில் இருந்து விடுபட்டு மேன்மையான வாழ்க்கை வாழ்வது மேலான வழியாகும். இதனை வள்ளுவப் பெருந்தகை அன்புடைமை, வாழ்க்கை துணைநலம், புதல்வரைப் பெறுதல், விருந்தோம்பல், இனியவை கூறல் என்ற அதிகாரங்களில் வாழ்வின் ஆன்மீக வழிகாட்டியில் காணலாம். "அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்போ ஓய்ப் பெறுவதெவன் " இல்லறத்தினை ஒழுங்காக நடத்துபவன் துறவறத்திற்கு போய் பயன் ஒன்றுமில்லை.இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் முயல்வாருள் எல்லாம் தலை" இல்லறத்தை சாரியாக நடத்துகிறவன் புலன்களை அடக்கி முயல்கிற எல்லாரினும் தலை சிறந்தவன்."அற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து" சாரியான முறையில் இல்லறம் நடத்துகிறவன் , துறவறத்தானை விட பொறுப்புகளும் சகிப்புகளும் உள்ளவன். இல்லறத்தான் பிறருக்குக்குற்ற துன்பங்களையும் தனக்கு வந்தது போல் எண்ணி அதை நோக்கும் பொறுப்புடையவனாகிறான்.

"அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அ•தும்பிறன் பழிப்ப தில்லாயின் நன்று"
மனிதனுக்கு அறம் என்று நூல்களால் தீர்மானிக்கப்பட்டதே இல்லறம் ஆகவே, இல்லறத்தை சாரியாக நடாத்துகிறவன் வானுறையும் தெய்வதுள்வைக்கப்படுவான். எதனைத்தைப் பற்றி ஆராய்ச்சி இல்லாமலே கர்ம ஒழுக்கங்ளினால்இல்லறத்தில் நின்று வீடுபேறு அடைய முடியும். இல்லறம் பொறுப்புகளும்,சகிப்புத் தன்மையும் உடையது. இல்லறத்தை நாம் கர்மயோகமாக கருதினால் அதுவே சமுதாயத்துக்கு பயனுள்ளது.

பொரியபுராண வரலாறு மூலம் "அடியார்கள் இல்லறத்தை நடத்தி இறைவனை அடைந்ததைக் காணலாம்."இல்லதென் இல்லவன் மாண்பானால் உள்ளதென்இல்லவள் மாணக் கடை" என்பதற்கேற்ப நன் மனைவியைப் பெற்ற இளையான் குடிமாற நாயனார், இல்லறத்தில் அன்று வறுமை வந்துற்றபோதும் , காரைக்காலம்மையால் வரலாறும் இல்லறத்தில் நின்று கொண்டே ஆன்மீகத்தில் உயர்ந்து போ¢ன்ப பெருவாழ்வு பெற்றதை அறியலாம்.இல்லற வாழ்விலே தர்மத் தளத்தில் நின்று செய்யும் கடமைகள் ஆன்மீக உணர்விற்குவழிவகுக்கும் என்பதை அறியலாம்.

ஆன்மீக வாழ்வு வாழ்கிறோம் எனில் அது மக்கள் வாழ்க்கை நலத்துடன் இணைந்ததா¡க இருக்க வேண்டும். அவ்வாறு அமைவதற்கு இல்லறம் சிறந்த வழியாகும். இந்துமத தத்துவக் கருத்துக்கள் மூலமும் இவற்றை நாம் உய்த்துணரலாம்.

Friday, June 21, 2013

வெற்றியின் ரகசியம் - எறும்பைப் போல் துறு துறுவென்று இரு.

நாம் எப்பொழுதும் நம்மைவிட புகழிலும் செல்வத்திலும் உயர் நிலையில் இருப்பவர்களைப் பார்த்து, நாம் உயர்வதற்கு உண்டான வழிமுறைகளை கற்றுக் கொள்ள முயல்கிறோம். சில சமயங்களில் நமக்குக் கீழே இருப்பவர்களின் முயற்சியையும், சுறுசுறுப்பையும் கவனிக்கத் தவறிவிடுகிறோம். சில நேரங்களில் நம் வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள சாமான்ய மக்களிடமிருந்தும், சாதாரண நிகழ்வுகளிலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்கிறோம், கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆசான் ஜிம் ரோன் (Motivational Guru Jim Rohn) வாழ்வில் முன்னேற ஊக்கமளிக்கும் 'எறும்புகள் தத்துவம்' (Ants philosophy) என்று நான்கு செய்திகளை பாடங்களாக எடுத்துச் சொல்கிறார்.

1. முயற்சியை விட்டு விடாதே: எறும்புகளைப் பாருங்கள். எப்பொழுதாவது முயற்சியை விட்டு விடுகின்றனவா? அவைகள் செல்லும் வழியில் தடங்கலை ஏற்படுத்திப் பாருங்கள். முட்டி, மோதி தடம் மாறி மேலே செல்ல முயற்சிக்கும். முயற்சியைக் கைவிடுவதில்லை. திகைத்து நின்று திரும்பிப் போவதுமில்லை. இதுபோல நம் வாழ்விலும் பல நேரங்களில் நினைத்த காரியங்கள் நினைத்தவுடன் நடக்காமல் தடங்கல் ஏற்படலாம். துவளாமல் அவற்றை சவாலாக எடுத்து, மாற்று வழியை ஆராய்ந்து முயற்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம். முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும் இதையே, 'விடாதே, விடாதே, விட்டு விடாதே' என்று தாரக மந்திரமாகச் சொன்னார்.  

2. துணிந்து செல்: எறும்புக்கும் வெட்டுக் கிளிக்கும் இடையே நடந்த ஒரு சுவாரஸ்யமான கதையை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். எறும்புகள் எதிர் வரும் குளிர் காலத்தை மனதில் வைத்து, கோடை காலத்தில் சுறு சுறுப்பாக தானியங்களை சேமிக்கின்றன. ஆனால் வெட்டுக் கிளிகள் சோம்பேறியாக துள்ளித் திரிகின்றன. கோடை காலம் வெகு நாட்களுக்கு நீடிக்காது என்று எறும்புகளுக்குத் தெரியும். நாம் நன்றாய் செல்வாக்காக இருக்கும் பொழுது, எதிர் காலத்தில் இடர் வராது என்று இறுமாப்பாய் இருக்காதே. எல்லோரிடமும் அன்பாய் இரு. சில சந்தர்ப்பங்களில் நேரம் சரியில்லாவிட்டாலும், நல்ல நண்பர்கள் துன்பம் வரும் நேரத்தில் கைகொடுப்பார்கள்.

3. நம்பிக்கை வை: எறும்புகள் தாங்க முடியாத குளிர் காலத்தில், எதிர் வரும் கோடை காலத்தை மனதில் வைத்து பொறுமையாகக் காத்திருக்கும். கோடை காலம் வந்ததும் மீண்டும் சுறு சுறுப்பாக வெளிக் கிளம்பி, தானியங்கள் சேகரிக்க ஆரம்பித்து விடும். அது போல துன்பம் வரும் வேளையில் துவண்டு விடாமல் பொறுத்திரு. காத்திரு. தீராத பிரச்னை என்று எதுவுமில்லை. அதற்கு பிறர்க்கு தீங்கு நினையாத நல்ல மனம் வேண்டும். நல்லது நடக்கும் என்று நம்பி, காத்திருந்து முயற்சித்தால் எதிர் காலம் வளமாக அமையும். 

4. உன்னால் முடிந்ததெல்லாம் செய்: ஒவ்வொரு எறும்பும் எவ்வளவு தானியத்தை சேமித்து விட முடியும்? எறும்புகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதில்லை. மற்ற எறும்புகள் சமமாக உழைக்க வில்லையே! நான் மட்டும் ஏன் தொடர்ந்து உழைத்து சேகரிக்க வேண்டும் என்று சோம்பி இருப்பதில்லை. உழைப்பதற்கு கூலி குறைவென்றும் சலித்துக் கொள்வதுமில்லை. எனவே உன்னால் முடிந்ததெல்லாம் செய். நூற்றுக்கு நூறு சதம் நல்ல மனதுடன் உழைத்தால் மகிழ்ச்சியும், வெற்றியும் நிச்சயம். 

ஒன்று தெரியுமா? எறும்புகள் தன் எடையைப் போல 20 மடங்கு கனமான பொருட்களை துக்கிச் செல்ல முடியும். எனவே அடுத்த முறை நம்மால் முடியாது என்று நினைக்கும் போது, மிரண்டு விடாதே, சிறிய எறும்புகளை நினைத்துப் பார். உன் தோள்களின் சுமை எளிதாகும்.

Thursday, June 20, 2013

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.

புகழ் என்பதொரு உச்சாணிக் கொம்பின் தேன் மாதிரி. எட்டியெடுக்க தேனடை விட்டு உதிரும் ஈக்கள் வந்து மனிதரைச் சுற்றிக் கொள்வதைப் போலவே; புகழ் கொண்டோரைச் சுற்றி தலைகொத்தும் மனிதர்கள் ஏராளமாய் திரிகின்றனர். தான் வென்றதைக்காட்டிலும் பிறர் தோற்ற வலி ஆழமான வடுவைக் கொண்டதென புரியாதோர் தலைகொத்தும் ஈக்களை தானே தேடிக்கொள்கின்றனர்.

தேடித் தேடிக் கொணர்ந்து சிறுகச் சிறுகச் சேகரித்த தேனியின் உழைப்பைப் போலவே தனது லட்சியத்தை வெல்லப் போராடும் மனிதர்களின் உழைப்பும் கவனத்தில் கொள்ளத்தக்கது. ஒரு வெற்றி என்பது பலரின் தோல்வி எனும் நடுநிலையிலா தராசையறுத்து தனது வெற்றியை பிறருக்கும் புரிய அல்லது பிறரும் மகிழத்தக்க அமைத்துக் கொள்வதென்பது ஒரு கலை. தான் வளரும்போதே தன்னோடுள்ளவர்களையும் வளர்க்க நினைப்பவர்களுக்கே அந்தக் கலை கைகூடுகிறது.

ஓட்டப்பந்தயத்திற்கென ஓடும் தெருவில் உடன் நிகராக ஓடுபவன் வீழ்ந்துவிடுகையில் சிரிக்கமுடியாத மன நிலையைக் கொண்டவருக்கு அந்தக் கலையும் புரியும். ஒரு சக மனிதரை எதிரியாகப் பார்க்காததொரு உணர்வு மட்டுமே மனிதத்தையும் வளர்க்கப் பதைக்கும். வெற்றி ஒரு போதை, புகழுக்கான பாடு பொருள். ஆனால் நிலைத்தல் என்பது வாழ்தல். நாட்களை வருடங்களைக் கடந்து வாழ்தலே நிலைத்தல் ஆகும். நிலைப்பதற்கு வெற்றி வெறுமனே போதுமானதல்ல, உடனிருப்போரின் உணர்வை மதித்தலும் நிலைப்பின் பாடுபொருளாகும்.

சிந்தித்துப் பாருங்கள். வெற்றி நிலைப்புத் தன்மைக் கொண்டதல்ல; அது இடம் மாறிக் கொண்டேயிருக்கும். ஆனால் மனிதம் நிலைக்கும். மனிதமுடையோரின் புகழ் வான்கடந்து நிற்கும். காலத்தைக் கடந்தும் பேசப்படும். மனிதம் நிலைப்பின் பாடுபொருள்.

எனவே வெற்றியை எண்ணுங்கள். தனது வெற்றியை மட்டுமே எண்ணாதீர்கள். தேன் என்பது இனிப்பு மட்டுமல்ல, அது இன்னொரு உயிரின் உழைப்பும். எனவே உழைப்பைக் களவாடி இன்பம் கொள்வதைக் காட்டிலும் இனிப்பை வேறெங்கேனும் தேடுங்கள். கடைசியில் அது மனிதம் புரியுமிடத்தில் கிடைப்பதை உணர்வீர்கள்.

வெற்றி புகழைத் தரும், புகழ் சுயநலப் போதையை ஏற்படுத்தும். தேன் கூட போதை கொண்டது. சுயநல போதையை அதிகமாகக் கொண்டது தேன். எனவே தேன் வேண்டாம். வெற்றி வேண்டாம். வெறுமனே புகழ் மீதான ஆசை மட்டும் வேண்டாம். மனிதர் மீதான ஈரம் அந்த வெற்றியைக் காட்டிலும் அடர்த்தியானது. புகழை திரியாக்கி பிறருக்கு வெளிச்சம் தரும் விளக்காய் தன்னை மாற்றிக்கொள்ள முடிபவர்களுக்கு புகழ் எனும் தேனைவிடவும், அதைச் சுற்றியிருக்கும் தேனீக்களின் பசி இன்றியமையாத ஒன்றென்பது புரியும்..

உங்களை நம்புங்கள்

தன்னம்பிக்கை என்பது தன்னை நம்புதலாகும். கடின உழைப்பு, விடா முயற்சி, திட்டமிடல் என்றெல்லாம் சொல்லுகிறோம். இவைகளையெல்லாம் சும்மா வெறுமனே பின்பற்ற முடியாது.

தன்னம்பிக்கை இருந்தால்தான் அவைகளெல்லாம் கைகூடும்.

எனவே எல்லாவற்றிர்க்கும் அடிப்படை தன்னை நம்புதலாகும்.

ஒரு வாகனத்தை, ஒரு இரயில் வண்டியை ஏதோ ஒரு இயந்திர சக்தி உந்தி தள்ளி விடுகிறதல்லவா.

அது போல தன்னம்பிக்கை என்னும் மனித சக்தி நம்மில் நிறைந்திருந்தால்தான் அது முன்னேற்ற பாதையை நோக்கி நம்மை உந்திச் செல்லும்

சிறிதளவேனும் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது.

பிச்சைக்காரன் கூட நான் பிச்சையெடுத்தால் இவ்வளவு சம்பாதிப்பேன் என்ற தன்மீதுள்ள நம்பிக்கையில்தான் களத்தில் இறங்குகிறான்.

இயற்கையிலே நாம் நம்மீது நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறோம்.

ஆனால்,

அது போதுமான அளவு இருப்பதில்லை அதை வளர்த்துக் கொள்வதே நம் வளச்சிக்கான சரியான வழியாகும்.

சிறிதளவே நம்பிக்கையை வைத்துக்கொண்டு செயலில் இறங்கினால் இறுதியில் சோர்ந்து, துவண்டு போய் விடுவோம். முழுவதுமாக நிரம்பப்பெற்ற நம்பிக்கையே வெற்றியின் உச்சியில் நம்மை கொண்டுசெல்லும்.

உங்கள் பலகீனங்களை விட பலத்தை அதிகப்படுத்துங்கள்.

சோம்பல்களை விட உற்சாகத்தை அதிகப்படுத்துங்கள்.

அறியாமையை விட அறிவை அதிகப்படுத்துங்கள்.

எதிர்மறை சிந்தனைகளை விட நேர்மறை சிந்தனைகளை அதிகப்படுத்துங்கள்.

இப்படி உங்களிடமுள்ள அழிவு சக்திகளை விட ஆக்க சக்திகளை அதிகரிக்கச் செய்யும்போது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

அப்படி ஏற்படும் நம்பிக்கையை குறைக்கவிடாமல் தினந்தோறும் அவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும். நேற்றைவிட இன்று வளர்சியடைந்துள்ளேன், இன்றை விட நாளை வளர்ச்சியடைவேன் என்பதில் உறுதியாயிருங்கள்..

தன்னம்பிக்கைக்கும் ஆழ்மனதிற்கும் நெருங்கிய தொடர்புண்டு.

ஆழ் மனதின் வல்லமையை தட்டி எழுப்ப நம்பிக்கை தருகின்ற விஷயங்களை, வார்த்தைகளை அதற்கு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

எத்தனை தோல்விகளை நீங்கள் சந்தித்திருந்தாலும் 'வீழ்வது இழிவல்ல வீழ்ந்தே கிடப்பதுதான் இழிவு' எனவே விழித்துக்கொள், வெற்றியை நோக்கி விரைந்திடு சற்றும் தாமதியாதே என்று ஆழ்மனதில் பதித்துக்கொள்ளுங்கள்.

உங்கள் லட்சியத்தையும் பெரிதாக வைத்துக்கொள்ளுங்கள்

வெறுமனே ஒரு மொபைல் போன் வாங்குவதையோ,

டிவி வாங்குவதையோ,

கம்ப்யூட்டர், பைக், கார், அழகான வீடு போன்றவற்றை வாங்குவதையோ லட்சியமாக கொள்ளாதீர்கள்.

அவைகள் லட்சியத்தின் சிறு பகுதியாகவே இருக்கட்டும். ,

நீங்கள் இதைவிடவும் பெரிய லட்சியத்தை கொண்டிருங்கள்.

ஏனைனில்,

பெரும்பாலும் கார், பங்ளா போன்ற இவைகளெல்லாம் தன்னம்பிக்கையினால் கிடைப்பதாக இருக்காது.

அளவுகடந்த ஆசையின் வேகத்தினாலே கிடைப்பதாகவே இருக்கும்.

எனவே ,

தன்னம்பிக்கை என்னும் உந்து சக்தியை உயர்ந்த குறிக்கோளை நோக்கி வைங்கள்.

இவனா..!

இவனுக்கு என்ன தெரியும்,

இவனுக்கு ஒன்றுமே தெரியாது,

இவனிடம் அப்படி ஒன்றுமில்லை

இப்படி உங்களைப் பற்றி பேசுகிறவர்களுக்கு ,

நீங்கள் நிரூபிக்க வேண்டியது உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறது என்பதைதான்.

நீங்கள் யாராகவும் இருக்கலாம்.

படிக்காதவர்களாக இருக்கலாம், பரவாயில்லை.

தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.

உங்கள் ஆர்வத்தை, திறமையை சற்று கண்ணோட்டமிடுங்கள்.

அடுத்த கணமே களத்தில் இறங்குங்கள்.

எதையாவது சாதியுங்கள்.

திரும்பி பார்க்க வேண்டாம்.

உங்கள் கண்முன்னே தெரிவதெல்லாம் வெற்றி படிக்கட்டுகளாக இருக்கட்டும்.

வெற்றி படிகளில் பயணியுங்கள்.

மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணியாகுங்கள்.

இனி நாளை காலம் என்றும் நம்மோடுதான்..

விரைவில் வெற்றிப் பெற...

இன்றைய காலகட்டத்தில்

தன்னம்பிக்கை குறைவால் இன்றும் பல இளைஞர்கள் வெற்றிப் பயணத்தை தொடங்காமலே இருக்கின்றனர். தன்னம்பிக்கை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் வெற்றிப்பெறுவது எப்படி எனப்பார்ப்போம்.

தன்னம்பிக்கை என்றால் என்ன?(What is confidence?)

தன்னம்பிக்கை என்பது தான் நம்புவது.. தன்னால் ஒரு செயலைச் செய்து அதில் வெற்றி பெற முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையே(Deep faith) தன்னம்பிக்கை. குறிப்பாக சொல்லப்போனால் ஒரு செயலை செய்ய, தாம் எண்ணிய குறிக்கோளை அடைய விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றிப் பெறுவதே தன்னம்பிக்கை.

கால அளவு (Time scale)

குறிக்கோள்கள், லட்சியங்கள் அவரவர் எண்ணங்களுக்கு தக்க மாறும். இதில் கால அளவு முக்கியமானது. ஒரு செயலைச் செய்ய எத்தனை நாட்களாகும், எத்தனை வருடங்களாகும், என்பதைத் தீர்மானித்து அந்த கால அளவிற்கு அதைச் செய்ய முனைவது வெற்றிப் பெற சிறந்ததொரு வழியாகும்.

ஒரு தன்னம்பிக்கை கதை

அமெரிக்க விஞ்ஞானி John Bardeen (ஜான் பார்ட்டீன்). டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மாமேதை. இந்தக் கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

குடும்பத்துடன் விழாவில் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கபட்டது. தன்னுடைய மகன்கள் இருவர் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தார்கள். படித்துக்கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்ய இவர் விரும்பவில்லை. அதனால் மூன்றாவது மகனை மட்டும் நோபல் பரிசு பெற விழாவுக்கு அழைத்து சென்றார்.

விழாவிற்கு தன்னுடைய ஒரு மகனை மட்டும் அழைத்து வந்ததால், "குடும்பத்துடன் வரவில்லையா?" என சுவீடன் நாட்டு மன்னர் குவோஸ்டா ஜான்பார்டினை அன்பாக கடிந்துகொண்டார்.

"அடுத்த முறை விழாவுக்கு வரும்போது நிச்சயம் அவர்களை அழைத்துவருகிறேன். இப்போது அவர்கள் படித்துக்கொண்டிருப்பதால் தொந்தரவு செய்ய வேண்டாம் என அழைத்துவரவில்லை" என்றார் ஜான்பார்டீன்.

மன்னருக்கோ ஆச்சர்யம்.. ஒரு முறை நோபல் பரிசு பெறுவதே மிகப்பெரிய சாதனை.. கடினமாக உழைக்க வேண்டும். இவர் மீண்டும் வருகிறேன் என்கிறாரே.. என்று ஆச்சர்யப்பட்டார்.

1972 ம் வருடம். மீண்டும் அதே நோபல் பரிசு கொடுக்கும் விழா.. ஜான்பார்டன் தனது மகன்களுடன் விழாவில் கலந்துகொண்டார்.. நோபல் பரிசு வழங்கப்பட்டது.. யாருக்கு? நம் ஜான்பார்டன் விஞ்ஞானிக்குத்தான். இரண்டாம் முறை மீண்டும் நோபல் பரிசு பெறுகிறார். எதற்கு? மின்சாரக் கடத்திகளைப் பற்றிய உண்மைகளை இவர் கண்டுப்பிடித்திருந்தார். விழாவில் மன்னர் திக்குமுக்காடிப் போனார்.

சொன்ன சொல்லை நிறைவேற்றுவதற்கு அவர் எடுத்துக்கொண்ட காலம் பதினைந்து வருடங்கள். எப்படி இது சாத்தியமாகியது..? தளராத தன்னம்பிக்கை. மன உறுதி.. எடுத்துக்கொண்ட செயலில் முழு கவனம். வெற்றிப் பெற்றே தீருவேன் என்ற உறுதி..இந்த மக்களுக்கு தன்னால் ஏதேனும் நன்மையை செய்துவிட்டுப் போக வேண்டும் என்ற தனியாத சமூக நோக்கம்.. வெற்றிப்பெற வேண்டும் என்ற வேட்கை.. வெறி.. மற்றவர்களைப் பாதிக்காதவாறு நடந்துகொண்ட விதம்.. இவற்றால் தான் இவரால் சாதிக்க முடிந்து. நோபல் பரிசு பெற முடிந்தது.. ஒரு முறையல்ல.. இரண்டுமுறை..

பொதுவாக ஒவ்வொரு மனிதனும் தான் நினைத்ததை சாதிக்கவே விரும்புகிறான். அதில் ஒரு சிலர் மட்டுமே வெற்றிப் பெறுகிறார்கள். மற்றவர்கள் பின்தங்கி விடுகிறார்கள். காரணம் என்ன? தன்னம்பிக்கை இன்மை(Lack of confidence). ஒரு சிறு இடைஞ்சல், இடையூறு ஏற்பட்டாலும் மனதால் இவர்கள் சோர்ந்துவிடுகிறார்கள். தோல்வி இவர்களை பாதித்து விடுகிறது. இனி ஏதும் வழியில்லை.. இனிமேல் முயற்சித்தாலும் நமக்கு வெற்றிக் கிடைக்காது என்று எண்ணி விடுகிறார்கள். அந்த எண்ணமே நாளாக நாளாக இவர்கள் அடி மனதில் பதிந்துவிடுகிறது.

எதிர்மறை எண்ணங்களின் தாக்கம்-The impact of negative thoughts-

இப்படிப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் இவர்கள் அளவுக்கு அதிகமாக தாக்கி, ஒரு வைரஸ், பாக்டீரியாப்(Viral, bacterial) போல காலமுழுவதும் இவர்களுடனேயே தங்கி விடுகிறது. அதனால் இவர்கள் தன்னம்பிக்கை இழந்த நோயாளிகளாகவே காலம் முழுக்கவும் இருந்துவிடுகிறார்கள்.

மருந்து

இந்த நோய்க்கு மருந்து இல்லையா? தன்னம்பிக்கையின்மை நோய்க்கு நிச்சயம் மருந்து இருக்கிறது. உயிர்க்கொல்லி நோய்(Aids)களுக்கே மருந்து இருக்கும்போது, சாதாரண இந்நோய்க்கு மருந்து கிடைக்காதா என்ன? இதற்கும் எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் இருக்கிறார். இவரைப்பற்றி விரைவில் பதிவிடுகிறேன். தற்போதைக்கு கைவைத்தியமாக(Hands on treatment) நம்மிடமே இந்த நோய்க்கு மருந்து உள்ளது. இவ்வாறு தோல்வியால் துவளும்போது ஏற்படும் எண்ணங்களை விரட்டக் கற்றுக்கொள்ளுங்கள்.

எதிர்மறை எண்ணங்களை விரட்டுதல்- Virattutal negative thoughts

மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை எவ்வாறு விரட்டுவது. முதலில் தோல்வி கண்ட மனம் துவளவே செய்கிறது. ஒரு நல்ல வெற்றியாளர் நிச்சயம் பல தோல்விகளைச் சந்தித்து இருப்பார். அதன் தாக்கத்தால்தான் மீண்டும் மீண்டும் முயற்சி(Try again) செய்து வெற்றிப் பெற்றிருப்பார். எனவே தோல்வி என்பது யாருக்கும் நிகழக்கூடியதுதான். தோல்வியைச் சந்திக்காத எவருமே இல்லை என்பதை மனதில் நிறுத்த வேண்டும். நம்மைவிட பின்தங்கியவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்களே என்று எண்ணித் நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டும்.

உடலில் குறைபாடுள்ளவர்கள் கூட இன்று தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வாழ்க்கையில் வெற்றியை ருசிக்கிறார்கள். அவ்வாறிருக்க முழு உடல் தகுதியுடன் இருக்கும் உன்னால் வெற்றி பெற முடியாதா என்ன? பேருந்து நிலையத்தில், பெரிய பெரிய கடைகளில், இதுபோன்ற தன்னம்பிக்கையாளர்களை நான் சந்தித்திருக்கிறோம். கண்ணொளி குறைபாடுள்ளவர்கள் செய்யும் வியாபாரத்தைப் பார்த்திருக்கிறேன். இத்தகையவர்களை கண்டு, அவர்களுடன் பேசி, அவர்களின் அனுபவங்களை அறிந்துகொண்டிருக்கிறேன். எத்தனையோ இடர்பாடுகளைச் சந்தித்தாலும் தினம், தினம் இவர்கள் தன்னம்பிக்கை குறையாமல் மீண்டும் மீண்டும் அவர்களின் வியாபாரத்தை கவனிக்க கிளம்பிவிடுகிறார்கள்.

தன்னம்பிக்கையின்மையின் வெளிப்பாடு-Of self expression

தன்னம்பிக்கை இல்லாதவர்கள் இப்படிதான் இருப்பார்கள். சோம்பேறியாக, மற்றவர்களின் வெற்றியை கண்டு வெதும்புபவராக, தொடங்கும் முயற்சியின் மீது நம்பிக்கை இன்மை. தோற்றுவிடுவோமோ என்ற பயம்(Fear of failure Fear), உடலைப் பற்றி கவலைப்படுதல்..சுற்றி இருப்பவர்களுடன் கலகலப்பாக பேசிப் பழகாமல் இருத்தல்.

நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுதல்-(Improve positive feelings)

தோல்வியால் துவண்டாலும் அடுத்த முறை என்னால் நிச்சயம் வெற்றி பெற முடியும். இதோ அதற்கான பயிற்சிகளை எடுத்துக்கொள்கிறேன். முன்னை விட இன்னும் கூடுதல் பயிற்சிகளை எடுத்துக்கொண்டு, அனுபவங்களையும் சேர்த்துக்கொண்டு நிச்சயம் வெற்றிப் பெற்றே தீருவேன் என்று உறுதி(Determined) எடுத்துக்கொள்ள வேண்டும். நம்மைவிட உடல் உறுப்புகளில் குறைபாடுகள் உள்ளவர்களே இன்று இமாலய சாதனைகளை, உலகளாவிய சாதனைகள் செய்துகொண்டிருக்கிறார்கள். அதனால் வாழ்க்கையில் வெற்றிப்பெற, சாதிக்க உடல் குறைபாடுகள் ஒரு காரணமல்ல. இதற்கு முன்பே நமது தங்கம்பழனி வலைத்தளத்தில் வெளியான "வீழ்ச்சிகளை வாய்ப்புகளாக மாற்றிய சிறுவன்" என்ற இப்பதிவைப் படித்துப் பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு தன்னம்பிக்கைப் பிறக்கும்.

எண்ணங்களை நிறைவேற்றல்(Realization of ideas)

எடுத்த முடிவுகளை உடனே செயல்படுத்த ஆரம்பித்துவிட வேண்டும். நீங்கள் ஓட்டப் பந்தய வீரர்(Athlete) என்றால் அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். காலையில் மாலையில் என நன்றாக தேர்ந்த பயிற்சியாளரின் வழிகாட்டுதலில் உங்கள் பயிற்சிகளை அனுதினமும் மேற்கொள்ள வேண்டும். கடினமான உழைப்புக்கு என்றுமே தோல்வி(There is always not a defeat for hard work ) கிடையாது.. இவ்வாறு நீங்கள் விரும்பும் துறை எதுவாயினும் அதற்குத் தேவையான, முறையான முயற்சி, பயிற்சி மற்றும் செயல்படுத்துதல் ஆகிய இம்மூன்றும் தேவை. இவைகளை தொடர்ச்சியாக பின்பற்றும்போது நிச்சயம் உங்கள் குறிக்கோளில் வெற்றிப்பெறுவது திண்ணம். நீங்கள் நினைப்பது எதுவாக இருப்பினும் உங்களை வெற்றி தேடிவரும்.

தவறுகளை ஒப்புக் கொள்ளுவோம் ..

மனிதனாக பிறந்தவர் எவருமே தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் அல்ல.

ஆனால் தவறு என்று உணர்ந்த பின்,

அந்த தவற்றை ஒப்புகொள்ளத் தயாராக இருக்கிறின்றோமோ என்பது தான், நம்மை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தும்.

செய்தது தவறா, தவறில்லையா என்பது கூட பிரச்சனையல்ல..

அதை ஒப்புக்கொள்கிற அகங்கார நினைப்புதான் நமக்கு பிரச்னை!

குழந்தையாக இருந்தபோது எவ்வளவு வளைந்து கொடுத்தோம்?

நம்மை அடித்தவரிடமே கூட எந்த வன்மமும் இல்லாமல் திரும்ப அவர்களிடம் சென்றோம்...

அப்போது அந்த சந்தோசம் எப்படி இருந்தது..?

ஆனால் இப்போது வளர, வளர உடல் அளவிலும், மனதளவிலும் நாம் இருகி விட்டோம்.

சமூகத்தில் நமக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு விட்டோம்.

அதனால் தான் நாம் நமது தவறுகளை ஏற்றுக்கொள்ளும் அடிப்படை குணத்தைக் கூட இழந்துவிட்டோம்..!

தவறை உணர்ந்த பின்னும், வெளிப்படையாக ஏற்கத் துணிவில்லாமல்,

மேலும் அதை நியாயப்படுத்திகொண்டு இருப்பது தான் தவறு.

நாம் செய்த தவறை மற்றவர்கள் கையும்கள‌வுமாகப் பிடிபட்டாலும்,

நம் தவற்றை ஒப்புக்கொள்ளாமல் அதை நியாயப்படுத்த மேலும் மேலும் வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போகின்றோம் நம்மில் சிலர்.

இந்த மனப்பான்மை மிகவும் அபாயகரமானது!

என்ன தவறு செய்தாலும் அதை நேர்மையாக ஒப்புக் கொள்ளுவோம்.

அது நம்மைப் பற்றிய நன்மதிப்பைத் தான் கூட்டும்.

ஒருவரின் காலை தெரிந்தோ,தெரியாமலோ

மிதித்து விடுகின்றோம்.

மன்னிப்புக் கேட்பதை விடுத்து,

"வேண்டுமென்றா நான் மிதித்தேன்?" என்று விவாதிப்பது எப்படி நியாயமாகும்...?

"மன்னித்துவிடு!

தெரியாமல் நடந்துவிட்டது,

அறியாமல் செய்துவிட்டேன்! என்று பணிந்து சொல்வதால், நாம் என்ன குறைந்தா போய்விடுவோம்.

சிலர் நம் தவறுகளை பூதக் கண்ணாடியால் பார்க்கக்கூடும்,

பார்த்துவிட்டு தான் போகட்டுமே!

நாம் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால், நம் யுத்தம் அங்கேயே முடிந்து,

நம் மீது குற்றம் சுமத்தியவர் அல்லவா குற்ற உணர்வை சுமப்பார்?

புரிந்துகொள்ளுங்கள்..

இது விட்டுக் கொடுப்பதோ,

தோற்றுப் போவதோ அல்ல!

நம் மனம் பக்குவப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்....

வியாபாரம் செய்தாலும்,

விளையாட்டாக இருந்தாலும்,

தவறுகளை எற்றுக்கொள்ளவதைப் பொறுத்து்த்தான் வாழ்க்கையில் வெற்றி அமைகிறது.

தவற்றை ஒப்புக்கொள்ளாதவரை,

மனதிற்க்குள் சிலுவை போல் நம் குற்ற உணர்வைத் தேவையின்றி சுமக்க நேரிடும்.

நமது அலட்சியமான குணத்தினால் அதைப் பற்றி அப்போது (தவறிழைக்கும் போது) உணர்ந்தாலும்,

கவலைப்படாமல், செயல்பட்டாலும்,

காலம் வரும்போது அந்தக் குற்றஉணர்வு நம்மை துரத்தும்.

தவறுகளை ஒப்புக்கொள்வது என்பது,

எதிரிகளையும் நண்பர்களாக்கித் தரும் பலம்.

எதிர்த்து வீழ்த்த முடியாத பலம்.

வாழ்க்கையில் நம்மை அடுத்த படிக்கு அழைத்துச் செல்லும் பலம்!

அதுபோலவே,

*மற்றவர்களின் தவறுகளை மன்னித்து விடுவோம்.

*மற்றவர்களைப் பற்றி குறை சொல்வதை நிறுத்துவோம்..

*எல்லோரிடமும் பேதம் பார்க்காமல் பழகுவோம்..

*புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொள்ளுவோம்.

விளையாட்டும் வாழ்க்கையும் ஒன்றுதான்

ஒரு விஷயத்தில் வெற்றிதான் இலக்கு. விளையாட்டைப் போலவே வாழ்க்கையிலும் இலக்கு நிர்ணயம், பயிற்சி, புத்திசாலித்தனமான உழைப்பு என எல்லாம் தேவை. எனவே,கிரிக்கெட்  விளையாட்டிலிருந்து நம் வாழ்க்கைக்கு தேவையான வெற்றிப் பாடங்களை இங்கே படிக்கப் போகிறோம்.

வெற்றியை மட்டும் பாருங்கள்

வாழ்க்கையில் எந்த ஒரு முயற்சியை துவங்குகையிலும் முதலில் தோல்வியைப் பற்றியே சிந்திக்கிறோம். கவனித்திருக்கிறீர்களா? இந்த தோல்வி சிந்தனையை மாற்றினால்தான் வெற்றியே.

கிரிக்கெட்டில், ‘பவுலர் எதற்காக பவுலிங் செய்கிறார்?’ ‘விக்கெட் எடுப்பதற்காக’. பேட்ஸ்மேன் அந்த பால் தன்னை அவுட் ஆக்குவதற்காகத் தான் வருகிறது என்று நினைத்தால் அவர் நிச்சயம் ஆட்டம் இழக்க வேண்டி வரும். பேட்ஸ்மேன் பந்தை பார்க்கும்போது அந்த பாலை நான்கு ரன்னாக மாற்றுவதா அல்லது ஆறு ரன்னாக மாற்றுவதா என்றுதான் யோசிப்பார். அதனால்தான் அவரால் விளையாட்டில் ரன்கள் எடுக்க முடிகிறது. இப்படி உங்கள் வாழ்விலும் வெற்றி பற்றி மட்டுமே சிந்தியுங்கள். பிறகு வெற்றியை மட்டுமே வாழ்வில் சந்திப்பீர்கள்.

வாய்ப்பு அல்ல, அதை சரியாக பயன்படுத்துவதுதான் வெற்றி

கிரிக்கெட்டில் பூவா? தலையா? பார்த்து பின்னர் ஆடத்துவங்குகிறார்கள். டாஸில் வெற்றி பெறுவதன் மூலம் தங்கள் ஆட்டத்தை அவர்களே நிர்ணயம் செய்து கொள்ள முடியும் என்கிற ஓர் அற்புத வாய்ப்பு. ஆனால் டாஸில் வெற்றி பெற்றாலே விளையாட்டிலும் வெற்றி பெற்றுவிடுவோம் என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது. வாழ்க்கையில் அப்படித்தான். வாய்ப்பு கிடைத்துவிட்டாலே வெற்றி என்று அர்த்தம் இல்லை. அந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தி இறுதியில் அடைவதே வெற்றி. உதாரணத்திற்கு மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைப்பதே வெற்றி அல்ல, அதை சிறப்பாகப் பயன்படுத்தி சிறந்த மருத்துவராக வெளியில் வருவதே வெற்றி.

உங்கள் இடத்தை நீங்கள்தான் முடிவு செய்கிறீர்கள்

கிரிக்கெட்டில் ஆட்ட நேர இறுதியில் கூட முடிவுகள் மாறும். அணியில் உள்ள கடைசி நபர் வரை நம்பிக்கையோடு நன்கு விளையாட வேண்டும். இவர்தான் சிறந்த விளையாட்டு வீரர் என்ற முன் முடிவுகளை எல்லாம் தள்ளிவிட்டு கடைசியாக களம் இறங்கிய வீரர் மிகச் சிறப்பாக ரன்களை குவித்து விளையாட்டின் போக்கையே மாற்றிய நிகழ்வுகள் நிறைய உண்டு. ஆட்ட வரிசையில் கடைசியில் இருப்பவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் அவர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாகிவிடுவார். வாழ்க்கையிலும் அப்படித்தான் உங்கள் செயல்பாடுகளால் உங்கள் இடத்தை நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள்.

உற்சாகம் இலக்குகளில் இருக்கிறது

டெஸ்ட் மேட்ச், ஒரு நாள் போட்டி எது அதிக உற்சாகமாக இருக்கிறது? ஒரு நாள் அல்லது இருபது இருபது. காரணம் என்ன? 20 ஓவர் என்ற நேர இலக்குக்குள் வெற்றி பெற வேண்டும் என்பதால்தான் அந்த உற்சாகம். வாழ்க்கையில் இப்படி நேர எல்லையுடன் இலக்குகளை அமையுங்கள். உங்கள் வாழ்க்கையின் உற்சாகம் உங்கள் இலக்குகளை பொறுத்தே இருக்கிறது.

கற்பதில் அல்ல கடைப்பிடிப்பதில் உள்ளது வெற்றியின் ரகசியம்

கிரிக்கெட் விளையாடுவது எப்படி? என்று புத்தகம் படித்து கற்றுக்கொள்வதனாலோ அல்லது எப்போதும் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக்கொண்டிருப்பதனாலோ சிறந்த கிரிக்கெட்டராக வர முடியாது. கற்றதை தினமும் பயிற்சி செய்து பார்க்க வேண்டும். வெற்றியோ தோல்வியோ விளையாடிக்கொண்டே இருக்க வேண்டும்.

வாழ்க்கையிலும் அப்படித்தான். எனவே இங்கே கற்ற பாடங்களை கடைப்பிடியுங்கள். வெற்றி பெறுங்கள்.

சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்

மனதினுள்ளே ஏற்றுங்கள்..... வரட்டுமே வாழ்வில் மாற்றங்கள்...... 

1.உழைப்பு உடலை வலிமையாக்கும். கஷ்டம் மனதை வலிமையாக்கும் -செனகா.
2.கடினமான உழைப்பே சிறந்த அதிர்ஷ்டமாகும் -டெம்பஸ்
3.நம்பிக்கை இல்லாத இடத்தில் அன்பு இருக்காது.
4.திறமைதான் ஏழையின் மூலதனம் -எமர்சன்
5.பசியுடையவனின் புன்னகை, செயற்கையாயிருக்கும்.

6.பெரிய பெரிய சாதனைகளனைத்தும் செய்து
முடிக்கப்படுவது ஆழ்ந்த மௌனத்தினால்தான் -மேலை நாட்டறிஞர்
7.மன அமைதியோடு இருப்பவனுக்கு என்றும் ஆபத்து இல்லை -லாவோட் ஸே
8.அறிவாளி, ஒருபோதும் சோம்பேறிகளுடன் நேரத்தை வீணடிக்க மாட்டான்.
9.அரிய செயலைச் செய்து முடிப்பது வலிமையால்
அல்ல; விடாமுயற்சியால்தான் -ஜேம்ஸ் ஆலன்
10.கீழ்த்தரமான தந்திரத்தால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்து விட முடியாது -விவேகானந்தர்

11.நேரப்படி வேலையைச் செய்கிறவர்கள் முறையான சிந்தனை வளத்தைப் பெற்றவர்கள் - பிட்டின்
12.துணிவுமிக்கவர்களின் அருகிலேயே எப்போதும் அதிர்ஷ்டம் நிற்கிறது. - வெர்ஜில்
13.கண்ணைக் குருடாக்கி, காதைச் செவிடாக்கி, மூளையை மழுங்கச் செய்கிறது ஆசை!
14.எழுத்துப் பயிற்சி மூலம் கையெழுத்தைத் திருத்துவது போல, உண்மை பேசும் பழக்கமும் பயிற்சியினால்தான் வரும் -ஜான் ரஸ்கின்
15.அளவுக்கு மீறிய சுதந்திரம் ஆபத்தானது.

16.ஒவ்வொரு நிமிடமும் நிமிடமும் நல்ல பண்புடன்
வாழ்வதில் அக்கறையுடன் இருந்தாலே,
இவ்வுலகில் எந்நேரமும் மகிழ்ச்சியுடன் வாழலாம் - பிராங்கிளின்


17.எப்போதும் மனம் தூய்மையாக இருந்தால், முகம் புத்துணர்ச்சியுடன் பிரகாசிக்கும் - எமர்சன்
18.நாளை நான் வாழ்வேன் என்கிறான் மூடன். இன்று என்பதும் காலம் கடந்ததே. அறிவாளிகள் நேற்றே வாழ்ந்து விட்டனர். -மார்ஷியல்
19.அறிவு தலைக்கு கிரீடம்! அடக்கம் காலுக்கு செருப்பு!
20.அடக்கம் என்பது ஓர் அணிகலன் மட்டுமல்ல; அது ஒழுக்கத்தின் பாதுகாப்பும் ஆகும் -அடிசன்

21.நமது மனதில் உள்ளவையே கருத்துக்களாய் வெளிப்படும்.
22.நாம் வாழும் வீடு மட்டுமல்ல, அந்த வீட்டில் வாழும் உறவுகளுக்குள் கூட விரிசல் விழக்கூடாது .
23.சேமிப்பை அலட்சியப்படுத்திவிட்டு, வளமையை கொண்டுவர முடியாது.
24.செய்யும் செயலை உறுதியுடன் செய்தால், வெற்றி நிச்சயம்.
25.நோயைக் கண்டுபிடித்தலே, ஆரோக்கியத்தின் ஆரம்பம்.

26.முக்கிய பிரச்சினையில் முடிவு எடுக்குமபோது உணர்ச்சிவசப்பட்டால் புதிதாய் ஒரு பிரச்சினை உருவாகிவிடும்.

27.வர்த்தகத்தில் கால்பதித்து பிறகு ஆட்சியைப் பிடிக்கும் அன்னிய ஆளுமைகள் இந்தியாவிற்கு புதிதல்ல.
28.பயத்தைத் தவிர்த்து துன்பத்தை எதிர்கொள்வது மனதை வலுவாக்கும்.
29. கனவில் காணும் உணவு, பசியை போக்காது. உழைத்தால் மட்டுமே உணவு.
30.கொடுக்கிற சம்பளத்திறகு குறையில்லாமல் 8 மணி நேரம் வேலை செய்துவிட்டு வருபவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் பாணம் காஃபிதான்.

31.வஞ்சனையில்லாமல் வேலை செய்தால் மனதில் கலக்கம் இல்லாமல் நிம்மதியாகச் சாப்பிடலாம்.
32.பகலுக்கு விழிகள் உண்டு; இரவுக்கு செவிகள் உண்டு.
33.மௌனம், வியக்கத்தக்க பல அரிய செயல்களை சுலபமாக செய்திடும். பேச்சுக்கலால், சிக்கல் அதிகமாகும்.
34.துயரம் எந்த கடனையும் தீர்த்து வைக்காது. கடன் வரும்முன் சேமிப்போம்.
35.செலவழிக்கும் முன் சம்பாதிப்பவனே அறிவாளி!

36.கடன் வாங்குகிறவர்கள் கவலையையும் சேர்த்தே வாங்குகிறார்கள்.
37.எந்தச் சொத்தை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது; நம்பிக்கையே பெரிய சொத்து.
38.உழைப்பதே உடலின் பயனாகும் -ஜான்சன்
39.இனபத்தின் ரகசியம் உழைப்பேயாகும் -பரோஸ்
40.உழைப்பில்லாதவன் சந்தோஷமாக இருக்க முடியாது -பிஸ்மார்க்