Friday, May 31, 2013

தவறுகளை உணர்ந்து கொள்வோம்

‘‘வானம் இறைவனின் மாட்சிமையை  வெளிப்படுத்துகிறது. வான்வெளி அவர் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. ஒவ்வொரு பகலும் அடுத்த   பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது. ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. அவற்றுக்குச் சொல்லுமில்லை,   பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. ஆயினும் அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உல கின்  கடையெல்லை வரை எட்டுகிறது. இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். மணவறையிலிருந்து புறப்படும் மணமகனைப் போல அது  வருகிறது; பந்தயத்தில் ஓடும் வீரரைப்போல் அது தன் பாதையில் ஓடுகின்றது. 

அது வானத்தின் ஒரு முனையிலிருந்து புறப்படுகின்றது;  அதன் பாதை மறுமுனை வரையிலும் செல்கின்றது. அதன் வெப்பத்திற்கு மறைவானது  ஒன்றுமில்லை. ஆண்டவரின் திருச்சட்டம்  நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம்  அளிக்கி றது; ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை  ஒளிர் விக்கின்றன. ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதி நெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும்   நீதியானவை. அவை பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலாக விலை மிக்கவை; தேனிலும் தேனடையினின்று சிந்தும் தெளிதேனிலும் இனிமையானவை. 

அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன். அவற்றைக் கடைப்பிடிப்போர்க்கு மிகுந்த பரிசுண்டு. தம் தவறுகளை உணர்ந்துகொள்பவர் யார்?  என் அறியாப்  பிழைக்காக என்னை மன்னியும். அப்பொழுது நான் மாசற்றிருப்பேன்; பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன். என் கற்பாறையும் மீட்ப ருமான ஆண்டவரே!  என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட் டும்’’ (திருப்பாடல்கள் 19: 1-14).  
நம் இதயத்தில் எழும் எண்ணங்களின் தரத்தைப் பொறுத்து எத்தகைய வார்த்தைகளை நாம் அண்டை அயலாரிடம் பயன்படுத்துகிறோமோ அவற்றைப் பொறுத்து  நம் வாழ்வை  நாம் யார் யாருடன் கழிக்க வேண்டுமென்று இறைவன் விதித்திருக்கிறாரோ அவர்களுடன் நாம் ஈடுபடும் ஒவ்வொரு செயலையும் பொறுத்தே,  தெய்வீக அளவுகோல்கள் நம்மை மதிப்பிடுகின்றன. 

எத்தனை முறை பிரார்த்தனை செய்யப்பட்டது, எத்தனை முறை ஜெப மாலை ஜெபிக்கப்பட்டது, எத்தனை முறை வாடா விளக்குகள் ஏற்றப்பட்டன, எத்தனை  முறை திருவிவிலிய வாசகங்கள் வாசிக்கப்பட்டன என்பனவற் றால் நம் மனங்களின் செயல்களை தெய்வீக அளவுகோல் மதிப்பிடுவதில்லை. ஜெபமாலை உருட்டுவதும் திருவிவிலிய வாசகங்கள் வாசிப்பதும் நம் கடமையாக இருக்கலாம். இவற்றைக் கடைப்பிடிக்கும் நாம் உண்மையிலேயே  பிறர்  சிநேகம் கொண்டவர்களாகவும் உறவு முறைகளோடு நல்லுறவை வளர்த்துக் கொள்பவராகவும் நம்மோடு ஒன்றி வாழும் நெஞ்சங்களை ஏற்றுக்  கொள்பவர்களாகவும் நம் மக்களை ரத்த உறவாக வாழ அனுமதிப்பவர்களாகவும் நாம் நம் மனத்தைத் திறந்து அனைவரோடும் ஒன்றிணைந்து வாழ   முயற்சித்திருக்கிறோமா? 

நம் பகை நம்மோடு. அதை ஏன் நம் மக்கள் முன் வெளிப்படுத்தி, அவர்களையும் உறவுகளோடு ஒட்டி உறவாட விடாமல்  வெட்டி விடுகிறோம்? நம் சுயநலம்  பெரிதா? நம் மறைவிற்குப் பின் நிகழும் உறவுகளின் விரிசல், ஒட்டுறவு இல்லாமை, குடும்பப் பின்னணி, பாசப்  பிணைப்பு, ரத்த பந்தம் இவை அறுந்துபோக  நாம் உந்துகோலாய் இருக்கக் காரணமாய் இருந்தோம் என்ற பழி நம்மீது சுமத்தப்பட அனுமதிக்க லாமா? ஆகவே, நாம் பிளவிற்கு வித்திடாமல், நமக்கு ஏற்பட்ட  கசப்பான அனுபவங்களை நம் பிள்ளைகளிடமும் வெளிப்படுத்தி, உறவுமுறைகளுக்கி டையே விரிசல்களை உண்டுபண்ணாதிருப்போம்.

நம் சந்ததிகளுக்கு உண்மையான, நேர்மையான வழிகளையே காட்டுவோம். அப்படிக் காட்ட முடியாவிடின் அவர்கள் செல்லும் பாதைக்கே விட்டு  விடுவோம்.  அவர்களும் சிந்திக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழி நல்லவையாகவும் சிறந்தவையாகும், முற்போக் குக்கு உரியவையாகவும்  இருக்கக்கூடும். நம் மிரட்டலுக்கும் அதட்டலுக்கும் பயந்தே அவர்கள் நல்ல முடிவெடுப்பதைத் தவிர்த்திருக்கலாம். எல்லாம்  நம் சுயநலத்தின் விளைவால்  ஏற்படுபவையே. இந்த சுயநலப் போக்கின் தன்மை எத்தனை காலம் நீடிக்கும் என்று  நாம் எண்ணுகிறோமா? நம்  காலத்தில் நாம் வல்லவர்கள்; நாம்  நினைத்ததை சாதிக்கக்கூடியவர்கள் என்ற இறுமாப்புடன் அலையலாம். நமக்கான  ஓதுவார்களை அமர்த்திக்  கொள்ளலாம். 

மடச்சாம்பிராணிகளை பக்கத்தில் வைத்து புகை மூட்டம் போட்டுக்கொண்டிருக்கலாம். அவர்கள் ஊதும் ஊதலில் புகை மண்டலம் வான்  மட்டும் எட்டலாம்!  ஆனாலும் நமக்குப் பின்னால் நின்று உதபுவர்களை, உதவியவர்களை உதறித் தள்ளி  உதாசீனப்படுத்தும் நம் மனப்போக்கு சரி யானதா, நேர்மையானதா  என்பதை நாம் சிந்திப்போம். மல்லாந்து படுத்திருக்கும் நாம் நம் எதிரியைக் காரி உமிழும்போது நம் எச்சில் நம்மீதே வி ழும் என்பதை மறந்துவிடாதிருப்போம்.
தன் ஆடுகளை கடலோரம் அமைந்திருந்த தோப்பில் விட்டு மேய்த்துக் கொண்டிருந்தான் அவன். கடலோ அமைதியாக இருந்தது. அப்பொறுமை மிகுந்த கடல்  மேல் சென்று பெரும் பொருள் ஈட்டக் கருதி ஆடுகளை விற்றான். கூடை கூடையாக பேரீச்சம்பழம் வாங்கிக் கப்பலில் ஏற்றிப்  பயணமானான். 

திடீரென்று சூறாவளி தோன்றியது. கப்பல் அலைக்கழிக்கப்பட்டது. பேரீச்சம் பழங்களை வாரிக் கடலுக்குள் வீசினான். காலிக் கப்ப லோடு கரை வந்து சேர்ந்தான்  ‘‘பொறுமை நடுவில் புயல் குடியிருக்கும்’’ என்பதைத் தெரிந்து கொண்டான். எந்த இயற்கை விளைவுக்கும் தான் தயா ராக இருந்தால்தான் தன் கடல்  பயணமும் அதைத் தொடர்ந்து தன் வணிகமும் சிறக்கும் என்பதை அவன் புரிந்துகொள்ளவில்லை. சில நாட்கள் சென்றன. அவன் கடலோரமாகக்  கூலிக்காரனாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். அன்று கடலில் என்றுமில்லாத அமைதி நிலவியது. எதிரே வந்தவரிடம் ‘‘இக்கடலுக்கு மறுபடியும்  பேரீச்சம்பழம் தேவை போலும்; ஆதலால்தான் அமைதியாகக் காட்சி அளிக்கிறது. 

ஆனால், கொடுப்ப தற்கு என்னிடம் ஒன்றும் இல்லை’’ என்று கடலைத் திட்டினான். ஆனால், கடலின் புயல்போன்ற தன் செய்கையால் தனக்குதான் நஷ்டம்  என்ப தையோ அதன் பொறுமை போன்ற நிதானம்தான் தனக்கு ஆதாயம் என்பதையோ அவன் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை. அனுபவத்தால் பெறும்  அறிவே உறுதி வாய்ந்தது. வாழ்க்கையில் நிகழ்ந்த ஏமாற்றங்கள் நல்ல அனுபவங்களாக மாறுவதுண்டு. இத்தகைய அனுபவம்  வாய்ந்தவரே வாழ்க்கையை  எளிதாக நடத்திச் செல்ல வல்லவராவார். பிறர் தொழில் மீது மோகம் ஏற்படுவது இயல்பு. தன் தொழில் மீதும் வெறுப்புத்  தோன்றுவதும் இயல்பே.

ராகு காலம்,எம கண்டத்தில் குழந்தை பிறக்கலாமா?

ஒவ்வொரு நாளும் பூமியில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்,மாயக்கிரகங்கள் என சொல்லக்கூடிய ராகு,கேதுவின் நிழல் தலா 3-3/4 நாளிகை,அதாவது ஒன்றரை மணி நேரம் விழுகிறது என்பது ஜோதிட சாஸ்திர நம்பிக்கையாகும்.ராகுவின் நிழல் விழும் காலம்,ராகு காலமாகும்,கேதுவின் நிழல் விழும் காலம்,எமகண்டம் ஆகும். 

அத்தியாவாசிய விசயங்களுக்கும்,அவசரமான காரியங்களுக்கும் நாம் ராகு&எமகண்டம் பார்க்கவேண்டியதில்லை.உதாரணமாக திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்களுக்கு அவசரசிகிச்சை செய்யவேண்டும் அப்பொழுது நேரம் ,காலம் பார்த்துகொண்டிருப்பது முட்டாள்தனமான செயலாகும். குழந்தை ராகு காலத்தில் பிரந்தாலும்,எமகண்டத்தில் பிறந்தாலும் கவலைபடவேண்டியதில்லை.குழந்தை சுகப்பிரசவமாக பிறப்பது,இயற்கையின் நியதியாலும்,இறைவனின் அருளாலும் நடக்கும் செயலாகும்.

நல்ல நட்சத்திரம்,ராசி,லக்கினம் அமைந்து விட்டால் போது.இந்த நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் 1 வயது வரை கொஞ்சம் சிரமங்களையும்,கஷ்டங்களையும் பெற்றோருக்கு கொடுக்கும் என்பது ஜோதிட விதியாகும்.ஆனால் இந்த நேரத்தில் பிறப்பதால்,குழந்தைக்கோ,நல்ல எதிர்காலத்திற்கோ எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. குழந்தை பிறப்பு,சுகப்பிரசவமாக இருப்பதே சிறப்பாகும்.தாய்க்கும்,குழந்தைக்கும் நல்ல ஆரோக்கியத்தையும்,நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும்.

சில பேர் குழந்தை நல்ல நட்சத்திரத்திலும்,ராசியும் பிறக்கவேண்டும் என்பதற்காக சிசேரியன் மூலம் குழந்தையை பிரசவிக்கின்றனர்.இது தாய்க்கும்,குழந்தைக்கும் தோசத்தையும்,ஆரோக்கிய குறைவையும் கொடுக்கும். பெரும்பாலான மருத்துவர்கள் தங்கள் தொழிலை சேவையாக எண்ணாமல்,பணத்திற்க்காகவும்,சுய நலத்திற்க்காகவும் சுயப்பிரசவம் மூலம் குழந்தை பிறக்கவிடாமல்,சிசேரியனே செய்கிறார்கள் என்பதே வேதனையான உண்மையாகும்.அப்படி சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பது உறுதியானால் அப்பொழுது நேரத்தையும்,காலத்தையும் பார்த்து சிசேரியன் செய்யலாம்,இது ஜோதிடர்களுக்கு தோஷத்தை கொடுத்தாலும்,சில நேரம் என்னாலும் தவிர்க்க முடிவதில்லை. 

தீர்மானித்தல்

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.

”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!

கிழமை பிரதோஷ வழிபாடு பலன்

ஞாயிறு பிரதோஷம் - சுப மங்களத்தை தரும்

திங்கள் சோம பிரதோஷம் - நல் எண்ணம், நல் அருள் தரும்

செவ்வாய் பிரதோஷம் - பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்

புதன் பிரதோஷம் - நல்ல குழந்தை பாக்கியம் தரும்

வியாழன் பிரதோஷம் - திருமணத் தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்.

வெள்ளி பிரதோஷம் - எதிரிகள், எதிர்ப்பு விலகும்

சனிப் பிரதோஷம் - அனைத்து துன்பமும் விலகும்.

தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும். ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவபூஜை செய்த பலன் உண்டாகும்.

மாத பிரதோஷ பிரசாதங்கள் பலன்கள்

* சித்திரை - தயிர் சாதம், நீர் மோர் - உடல்சூடு, எலும்புருக்கி நோய் விலகும்.

* வைகாசி - பால், சர்க்கரை பொங்கல் - எல்லாவித வயிற்றுக் கோளாறு நீக்கி சுகமடைதல்.

* ஆனி- தேன், தினை மாவு - மலட்டுதன்மை நீக்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

* ஆடி - வெண்ணை சர்க்கரை சேர்த்து - கொழும்பு சம்பந்தப் பட்ட நோய்கள் தீரும்.

* ஆவணி - தயிர் சாதம் - காரியத்தடை, நோய்களில் இருந்து விடுபடுதல்.

* புரட்டாசி - புளியோதரை, சர்க்கரை பொங்கல் - விஷகடி, தோல் சம்பந்தமான நோய்கள் விலகும்.

* ஐப்பசி - உளுந்தவடை, ஜிலேபி - சீதளமான நோய் விலகும்

* கார்த்திகை - தேங்காய் சாதம், எலுமிச்ச சாதம் - பெண்களுக்கு கர்ப்ப சம்பந்தமான நோய், அடி வயிறு நோய் தீரும்.

* மார்கழி - வெண் பொங்கல், சுண்டல் - மஞ்சள் காமாலை, ஆஸ்துமா போன்ற நோய்கள் விலகும்.

* தை - தயிர் ஏட்டில் தேன் சேர்த்து தானம் கொடுக்க - விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

* மாசி - நெய்யுடன் சர்க்கரை - சிறு நீரகக் கோளாறுகள், மந்தம், வயிறு உப்பிசம் போன்றவை விலகும்.

* பங்குனி - தக்காளி சாதம், தேங்காய் சாதம் - மனக்கிலேசம், மனக் காளாறுகள் பித்தம் போன்றவை விலகும்.

நவக்கிரகங்களை சுற்றுவது எப்படி?

நவக்கிரகங்களை ஒன்பது முறை சுற்றும்போது ஏழுமுறை வலமாகவும், இருமுறை இடமாகவும் பிரதட்சணம் செய்ய வேண்டும்.நவக்கிரகங்களை வழிபட்டு விட்டு சிவனையோ, விநாயகரையோ தரிசிக்கலாகாது. எல்லா தெய்வங்களையும், தரிசித்து கடைசியில் தான் நவக்கிரகங்களை தரிசித்தல் வேண்டும்.

சிவ மந்திரம்.......

சிவனை நாம் வணங்கும் போது, `ஓம் சிவாய நம' என்ற மந்திரத்தை ஓதி வணங்குகிறோம். இம்மந்திரம் பல பெரிய தத்துவங்களை உணர்த்துகிறது. இதில் உள்ள `சி' எனும் எழுத்து சிவனையும், `வா' எனும் எழுத்து அம்பாளையும், `ய' எனும் எழுத்து மனிதர்களையும், `நம' எனும் சொல் மும்மலங்களான, மாயை, ஆணவம் மற்றும் கர்வத்தைக் குறிக்கிறது. இம்மந்திரத்தை ஓதி இறைவனையும்,இறைவியையும், மனிதன் வேண்டும் போது நம்மைப் பிடித்திருக்கும் கர்வம், ஆணவம் மற்றும் உலக மாயையிலிருந்து விடுபடலாம்

விஷ்ணு கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?

விஷ்ணு கோயிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரமாண்டமாக தெரியும் கோபுரம் ராஜகோபுரம் எனப்படும். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோயிலுள் நுழைய வேண்டும். கோயிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும்.

எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும். இந்த கொடிக்கம்பத்தில் தான் கோயிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றி அதை ஊர் முழுவதும் தெரிவிப்பார்கள். அதற்கு அடுத்து பெருமாளின் வாகனமான கருடனின் மண்டபம் அமைந்துள்ளது. இவரை வணங்கிய பின் மூலஸ்தானத்தில் உள்ள பெருமாளை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும்.

அதன்பின் லட்சுமி, ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், சரஸ்வதி, ஆழ்வார்கள் ஆகியோரை தனித்தனியே வணங்க வேண்டும். கோயிலை விட்டு வெளியே வரும் போது சிறிது நேரம் உட்கார்ந்து, இறைவா! நான் எனது பிரார்த்தனையை உன்னிடம் கூறிவிட்டேன், இதில் எனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது உனக்கு தெரியும்.

அதன்படி வரம் கொடு என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின் மறுபடியும் கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படுமபடியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும் படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும்.

சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள்

"சரவணபவ' என்னும் ஆறெழுத்து மந்திரம்மிகவும் சிறப்பானதாகும். இதனை மனமுருகி சொல்பவர்கள் செல்வம், கல்வி, முக்தி (பிறப்பற்ற நிலை), எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயமின்றி இருத்தல் ஆகிய ஆறு பேறுகளையும் பெற்று மகிழ்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. 

முருகனும், வேங்கை மரமும்........ 

முருகன் கோவில்களில் பெரும்பாலும் வேங்கைமரம் தலவிருட்சமாக இருக்கும். முருகன் வள்ளி திருமணத்தில் வேங்க மரம் முக்கிய இடம் பெறுகிறது. இம்மரம் தனிச்சிறப்பு உடையது. தெய்வீக அருள்பெற்ற மரம். 

முருகனருள் பெற்ற மரமல்லவாப இம்மரத்துண்டுகளை நீரில் நனைய வைத்து அந்நீரை வெயிலில் காயவைத்து வெற்றிக்கு இடும் பொட்டு (திலகம்) செய்து வந்தார்கள் என்ற குறிப்பும் உண்டு. இது கெடுதல் விளைவிக்காது. இந்த நீரை குடித்தால் வலிமையான நோயற்ற உடல்நலம் உருவாகும். இம்மரம் பாதுகாப்பு கவசம் போன்றது. 

அறுபடை வீடுகளில் முருகனின் வடிவும், தன்மைகளும்........ 

திருப்பரங்குன்றம் -நல்துணை வடிவு -உல்லாசம் 
திருச்செந்தூர் - ஒளிவடிவு -மறுபிறப்பின்மை 
பழனி - பழம் (திருவடிவு) -யோகம் 
சுவாமிமலை -சொல்வடிவு -இவ்வுலக சுகம் 
திருத்தணி - கலசநீர் வடிவு -சல்லாபம் 
பழமுதிர்ச்சோலை -மர வடிவு -விநோதம்

கோதானத்தின் சிறப்பு

ஒரு பசுவை ஒரு ஒரு நல்லவரிடம் (சாதுவிடம்) தானமாகக் கொடுக்க வேண்டும். அந்த நல்லவர் அப் பசுவின் பாலை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்துதல் வேண்டும். நல்ல காரியங்களுக்கு அப்பசுவின் பால் பயன்படுத்தப்பட்டு வந்தால் அச்செயல் புண்ணியச் செயல் ஆகும். 

அந்த புண்ணியமானது தானம் கொடுத்தவனைச் சென்று சேருமாம். இந்தப் பசுவின் உடலில் எவ்வளவு உரோமம் (முடிகள்) இருக்கின்றனவோ அவ்வளவு புண்ணியம் கொடுக்குமாம். ஆகவே முடிந்தால் நல்லவரைத் தேர்ந்து எடுத்து கோதானம் செய்யலாம்.

சரஸ்வதிக்கு உகந்த நைவேத்யம்

சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி இருவருமே ஞானத்தை அருள்பவர்கள். இருவருமே ஜெப மாலை, ஏட்டுச்சுவடிகளை ஏந்தியுள்ளனர்.மனத்தூய்மை, சாந்தம், மெய்ஞானம் ஆகிய உயர் குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை, ஜடா மகுடம், சந்திரக்கலை ஆகியவற்றை இருவரும் கொண்டுள்ளனர்.

கொண்டைக் கடலை உயிர் காக்கும் சத்துக்களைக் கொண்டது. ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் இல்லையென்றால், அவரது உயிருக்கு பாதகம் வரலாம். எனவே, குரு பார்வை வேண்டி நவக்கிரகங்களில் குருவுக்கும், குருவின் அம்சமான தட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை படைத்து தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர்.

இறைவனுக்கு அணிவிக்க வேண்டிய வஸ்திரங்கள்..........

ஆடையை நாம் இறைவனுக்குச் சூட்டி வழிபடும்போது, அவனது திருவருள் கிடைக்கப் பெற்று பாவங்கள் நீங்கி மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம்.சிவன், திருமாலுக்குத் தூய வெண்மை நிறமுடைய பட்டாடை, அம்பாளுக்கு சிவப்பு, நீலம் மற்றும் பச்சை நிறப் புடவைகளைச் சூட்டி வழிபட்டால் சிறக்கலாம். நாட்டில் தவறாமல் மழை பெய்து, செழிப்பு ஏற்படவும் இறைவனுக்கு ஆடை அணிவிக்க வேண்டும்.

பூவும் நீரும் போதும்..........

ஏழை மக்களால் இறைவனுக்கு காணிக்கை ஏதும் படைக்க முடிய வில்லையே என்ற ஆதங்கம் இருக்கும். இந்த ஆதங்கத்தை மனதைவிட்டு முதலில் ஒழிக்க வேண்டும். இதை ஒழித்தாலே செல்வ வளம் பெருகி விடும் என்பது நம்பிக்கை. ஆண்டவனை வணங்க உதிரிப்பூவும், தண்ணீரும் போதும். 

இதைக் கோயிலில் கொண்டு கொடுத்தாலே இறைவனின் அருள் கிடைத்துவிடும். வீட்டில் சுவாமியை வணங்கும் போதும் மிகப்பெரிய படையலைப் படைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. படங்களில் பெரிய மாலைகளை மாட்ட வேண்டும் என எண்ண வேண்டாம். 

சிறிது பூவைத் தூவி, தண்ணீரை படத்தின் கீழே லேசாக தெளித்தாலே போதும். இறைவன் அன்பை மட்டுமே விரும்புகிறான். நமது பொருட்கள் அவனுக்குத் தேவைப்படுவதில்லை. பூவைக் கொண்டு சிவனுக்கு அர்ச்சனை செய்து,எமனையே வென்றவன் மார்க்கண்டேயன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்

ஆறுபடை முருகனை தரிசிப்பதன் பயன்

1. திருப்பரங்குன்றம் : இங்கு பரம்பொருளை வழிபட்டால் திருமணம் நடைபெறும். 

2. திருச்சரலைவாய் (திருச்செந்தூர்): இங்கு முருகப்பெருமானை கடலில் நீராடி பின் வழிபடுதல் நல்லது. விடயாதி, பகை ஆகியன நீங்கும். மனம் தெளிவு பெறும். 

3. திரு ஆவினன்குடி (பழனி): ஞானப்பழமாக இருக்கின்ற முருகப்பெருமானை (பழனிì ஆண்டவரை) வழிபட்டால் தெளிந்த ஞானம் கிடைக்கும். 

4. சுவாமிமலை (திருஏரகம்): தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானை இங்கு வழிபட்டால் ஞானம், சுகவாழ்வு, மகிழ்வு ஆகியன பெறலாம். 

5. திருத்தணிகை (குன்று தோராடல்): குன்றிலே குடியிருக்கின்ற திருத்தணிகை (செருத்தணி முருகன்) முருகனை வழிபட்டால் மனதிலிருக்கும் கோபம் (சினம்) முழுமையாக நீங்கும். 

6. பழமுதிர்ச்சோலை : இங்குள்ள முருகனை வழிபட்டால் பொன், பொருள், வருமானம் பெருகும். அங்குள்ள சுனை (சிறு அருவி)யில் நீராடுதல் மிகவும் சிறப்பு.
இடுகை

Thursday, May 30, 2013

எளிய பரிகாரங்களும், பலன்களும்!

பசுவிற்கு பசும்புல், அகத்திக்கீரை, பழம் தந்தால் பிள்ளை வரம் கிடைக்கும்.

* துளசிச் செடி நட்டாலோ அல்லது அதற்கு தண்ணீர் ஊற்றினால் பாவம் அகலும்.

* மலர்ச்செடிகள் நட்டு வைத்தால் மங்கலங்கள் பெருகும்.

* ஆலயங்களைச் சுத்தம் செய்து கோலமிட்டால் ஆண்டவனின் அருள் கிடைக்கும்.

* தொழு நோயாளிக்கு வயிராற விருந்து படைத்தால் கர்மம் அகலும்.

* பசியோடு வருபவரை உபசரித்தால் மோட்சம் கிட்டும்.

* தினசரி தியானம் செய்வதால் நிம்மதியும், ஞானமும் கூடிவரும்.

* காக்கைக்கு காலையில் உணவிட்டால் பித்ருக்களால் நன்மை உண்டாகும்.

* கோவில் திருப்பணிக்கு உதவி செய்தால் மேன்மை உண்டாகும்.

* உழவாரப் பணிகளை மேற்கொண்டால் பிறவிப் பயனை அடைய இயலும்

சுஜாதாவின் பத்து அறிவுரைகள்

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.

நீதிக்கதை

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.

”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!

ஓடி,ஓடி உழைத்து சொத்து சேர்த்தாலும், கடைசியில்....

அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்..!

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார்.

பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை.

சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து,

"என்னுடைய சாவு நெருங்கி விட்டது.

எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன.

அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.
...
அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக,

"என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது,

'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக,

"என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன.

என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து,

"அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம்.

ஆனால்,

இதற்கான காரணத்தை தாங்கள் எங்களுக்கு விளக்க வேண்டும்" என்று கேட்க,

அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள்.

மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது.

மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

மரணம் ஒரு நிதர்சனமான உண்மை .

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை யாரும் தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது.

அது சவக்குழி வரை மட்டும்தான்..!

மனிதர்கள் வீணாக சொத்துக்கள்,செல்வங்கள் போன்றவற்றின் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3. உலகையே வென்றவன் இந்த மாவீரன் அலெக்ஸாண்டர்,

சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக..

ஆம்.நண்பர்களே,

நாமும் அப்படித்தான் நம்ம வாழ்க்கையை தற்போது வாழ்ந்து வருகின்றோம்.

நம் வாழ்க்கையே எப்போதும் பணம்,பணம்,பணம்தான்.

சதா நாம் அனைவரும் அதன் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கின்றோம்.

எனக்கு நேற்று இந்த அலெக்சாண்டரின் கதையை படித்துக் கொண்டு இருந்த போது எனது மனதில் இதுதான் நிழலாடியது.

நம் கவியரசு.கண்ணதாசன் அவர்களின் ஒருதிரைப்பாடல்.

அதை மறைந்த டி.எம்.எஸ்.அவர்கள் உயிரோட்டமாக பாடிஇருப்பார்.

"வீடு வரை உறவு,

வீதி வரை மனைவி,

காடு வரை பிள்ளை,

கடைசி வரை யாரோ, என்று..

என்ன அருமை நண்பர்களே,உண்மைதானே..

Wednesday, May 29, 2013

நலம் தரும் நவக்கிரகங்கள்

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு) வெள்ளி (சுக்கிரன்), சனி, ராகு-கேது ஆகிய 9 கிரகங்களும் நவக்கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஒன்பது கிரகங்களும் மனிதர்களின் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் ஆற்றல் கொண்டவை. ஒவ்வொருவரது உடலையும் மனதையும் நவக்கிரகங்கள்தான் இயக்குகின்றன. 

சூரியன்நம் ஆத்மாவை இயக்குகிறது. சந்திரன் நம் மனதை செயல்படுத்துகிறது. செவ்வாயும், ராகுவும் நமக்கு பலம் தருகின்றன. புதன் கிரகத்தால் வாக்கு மேன்மை பெற முடியும். வியாழன் நமக்கு ஞானத்தை அள்ளித் தருகிறது. ஒருவரது காம இச்சைகளையும், இந்திரியங்களையும் வெள்ளிக் கிரகம் இயக்குகிறது. 

துக்கம், நரம்புத் தசை மற்றும் மரணத்தை சனி தீர்மானிக்கிறது. ஒருவருக்கு, இந்த கிரகங்களில் ஏதாவது ஒன்றில் தோஷம் ஏற்பட்டால், அந்த கிரகத்துக்குரிய பலன்கள் முழுமையாக கிடைக்காமல் போய் விடும். மேலும் கிரக சுழற்சி காரணமாக கெடுதல்கள்தான் நடக்கும். அதில் இருந்து தப்பி, நமது வாழ்க்கையை அமைதியாகவும், செழிப்பானதாகவும் மாற்றிக் கொள்ள வேண்டுமானால் அந்தந்த கிரகங்களை நாடிச் சென்று பரிகாரம் செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. 

சிவன் கோவில் களில் நவக்கிரக சன்னதி இருக்கும். அங்கு வழிபடுவது என்பது பொதுவான பரிகாரமாகத் தான் இருக்கும். எனவே ஒவ்வொரு கிரகமும் தனி சன்னதியில் இருந்து அருளாட்சி செய்யும் கோவில்களுக்கு சென்று பரிகார பூஜை செய்தால் உரிய பலன்களுடன் கூடுதல் பலன்கள் உடனே கிடைக்கும். 

தமிழ்நாட்டில் தஞ்சை மண்டலத்தில் நவக்கிரகங்களுக்கு தனித்தனி ஆலயங்கள் உள்ளன. தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் வட்டத்தில் திருமங் கலக்குடி அருகே சூரிய பகவானுக்கு சூரியனார் கோவில் உள்ளது. திருவையாறு தாலுகா திங்களூரில் சந்திரகிரகத்துக்கு தனிக்கோவில் உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு வைத்தீஸ்வரன் கோவிலில் தனி கோவில் உள்ளது. 

புதனுக்கு திருவென் காட்டிலும், வியாழன் (குரு) கிரகத்துக்கு ஆலங்குடியிலும், சுக்கிரனுக்கு (வெள்ளி) கஞ்சனூரிலும் சனி கிரகத்துக்கு திருநள்ளாறிலும், ராகுவுக்கு திருநாகேசுவரத்திலும், கேது பகவானுக்கு கீழப் பெரும் பள்ளத்திலும் கோவில்கள் அமைந்துள்ளன. உங்களுக்கு எந்த கிரகதோஷம் உள்ளதோ, அதற்கு உரிய கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்து கொண்டால் வாழ்க்கையில் பிரச்சினைகளை குறைக்கலாம்

நவராத்திரி: 9 நாள் வழி காட்டி

பராசக்தி நவராத்திரியை முன்னிட்டு மூன்று சக்திகளாக 9 நாட்களும் எந்தெந்த வடிவில் நமக்கு காட்சித் தருகிறார்கள்? அவர்களை எப்படி வணங்க வேண்டும்? என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்? அதனால் என்ன பலன் கிடைக்கும்? 

என்பன போன்றவற்றை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். "மாலைமலர்'' வாசகர்களுக்காகவே நவராத்திரி 9 நாட்கள் வழிபாட்டை தொகுத்து கொடுத்துள்ளோம். 9 நாட்களும் இதன்படி பூஜைகள் செய்தால் அளவற்ற பலன்களை பெறலாம். 

1-வது நாள்-  

வடிவம்: மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்) 
பூஜை : 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும். 
திதி : பிரதமை 
கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும். 
பூக்கள் : மல்லிகை, சிவப்பு நிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். 
நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை. 
ராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும். 
பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும். 

2-வது நாள் -

வடிவம் : ராஜராஜேஸ்வரி (மகிஷனை வதம் செய்ய புறப்படுபவள்) 
பூஜை : 3 வயது சிறுமியை கவுமாரி வடிவமாக வணங்க வேண்டும். 
திதி : துவிதியை 
பூக்கள் : முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக் களால் பூஜிக்க வேண்டும். 
நைவேத்தியம் : புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம். 
ராகம் : கல்யாணி ராகத்தில் கீர்த்தனைகள் பாடலாம். 
கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும். 
பலன் : நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும். 

3-வது நாள் 

வடிவம் : வாராகி (மகிஷனை அழித்தவள்) 
பூஜை : 4 வயது சிறுமியை கல்யாணி வேடத்தில் பூஜித்து வணங்க வேண்டும். 
திதி : திருதியை 
கோலம் : மலர் கோலம் போட வேண்டும். 
பூக்கள் : செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். நைவேத்தியம் : கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல். 
ராகம் : பாட வேண்டிய ராகம் காம்போதி. 
பலன் : தனதான்யம் பெருகும் வாழ்வு சிறப்பாக அமையும். 

4-வது நாள் 

வடிவம் : மகாலட்சுமி (சிங் காசனத்தில் வெற்றி திருக் கோலம்) 
பூஜை : 5 வயது சிறுமிக்கு ரோகிணி வேடத்தில் பூஜிக்க வேண்டும். 
திதி : சதுர்த்தி 
கோலம் : அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும். 
பூக்கள் : செந்தாமரை, ரோஜா பூக் களால் அர்ச்சிக்க வேண்டும். நைவேத்தியம் : தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, பட்டாணி சுண்டல். 
ராகம் : பைரவி ராகத்தில் பாடலாம். 
மாலை : கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம். 
பலன் : கடன் தொல்லை தீரும். 

5-வது நாள் 

வடிவம் : மோகினி (சும்ப நிசும்பனின் தூதர்கள் தூது போன நாள்) 
பூஜை : 6 வயது சிறுமியை வைஷ்ணவி வேடத்தில் பூஜிக்க வேண்டும். 
திதி : பஞ்சமி 
கோலம் : கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும். 
பூக்கள் : கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும். நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல். 
ராகம் : பஞ்சமாவரணை கீர்த்தனைகள் பாட வேண்டும். பந்துவராளி ராகமும் பாடலாம். 
பலன் : நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும். 

6-வது நாள் 

வடிவம் : சண்டிகாதேவி (சர்ப ராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலம்) பூஜை : 7 வயது சிறுமியை இந்திராணி, காளிகாவாக நினைத்து பூஜிக்க வேண் டும். 
திதி : சஷ்டி. 
கோலம் : கடலை மாவினால் தேவி நாமதத்தை கோலமிட வேண்டும். பூக்கள் : பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம். நைவேத்தியம் : தேங்காய் சாதம், தோங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம். 
ராகம் : நீலாம்பரி ராகத்தில் பாடலாம். 
பலன் : வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும். 

7-வது நாள் 

வடிவம் : சாம்பவித் துர்க்கை (பொற்பீடத்தில் ஒரு பாதம் தாமரை மலரில் இருக்க வீணை வாசிக்கும் தோற்றம்) 
பூஜை : 8 வயது சிறுமியை பிராக்மி மகா சரஸ்வதி, சுமங்கலியாக கருதி பூஜிக்க வேண்டும். 
திதி : சப்தமி. கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும். 
பூக்கள் : தாழம்பூ, தும்பை, மல்லிகை, முல்லை. 
நைவேத்தியம் : எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு. 
ராகம் : பிலஹரி ராகத்தில் பாடி பூஜிக்க வேண்டும். 
பலன் : வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும். 

8-வது நாள்

வடிவம் : நரசிம்ம தாரினி (கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்காரம் செய்த வடிவம்) 
பூஜை : 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும். 
திதி : அஷ்டமி 
கோலம் : பத்ம கோலம் 
பூக்கள் : மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி. நைவேத்தியம் : பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல். 
ராகம் : புன்னகை வராளி ராகத்தில் பாடி பூஜிக்கலாம். 
பலன் : நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும். 

9-வது நாள் 

வடிவம் : பரமேஸ்வரி, சுபத்ராதேவி (கையில் வில், பாணம், அங்குசம், சூலத்துடன் தோற்றம்) 
பூஜை : 10 வயது சிறுமியை சாமுண்டி வடிவில் வழிபட வேண்டும். 
திதி : நவமி 
கோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும். 
பூக்கள் : தாமரை, மருக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள். 
நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக் கடலை, எள் உருண்டை. 
ராகம் : வசந்த ராக கீர்த்தனம் பாடி தேவியை மகிழ்விக்க வேண்டும். 
பலன் : ஆயுள், ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சவுக்கிய மாக இருப்பார்கள். 

10-வது நாள் 

வடிவம் : அம்பிகை. இவளுக்கு விஜயா என்ற பெயரும் உண்டு (ஸ்தூல வடிவம்)
திதி : தசமி 
பலன் : புரட்டாசி மாதம் சுக்ல பட்சமியே விஜயதசமி. மூன்று சக்திகளும், தீய சக்தியை அழித்து, வெற்றி கொண்ட அனைவருக்கும் நன்மைகளை அள்ளித்தந்து அருள் பாலிக்கும் சுபநாள். இன்று தொடங்கும் எல்லா காரியங்களும் வெற்றி மீது வெற்றி பெறும். 
நைவேத்தியம் : பால் பாயாசம், காராமணி சுண்டல், இனிப்பு வகைகள். பூக்கள் : வாசனைப் பூக்கள். *

செல்வம் மூன்று வகைகளில் வரும்

செல்வம் மூன்று வகைகளில் வரும் அவை: 

1. லட்சுமி செல்வம், 
2. குபேர செல்வம், 
3. இந்திர செல்வம் எனப்படும். 

லட்சுமி செல்வம்...... 

பாற்கடலை, மந்தார மலையை மத்தாகவும் வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் வாலையும் அசுரர்கள் தலையையும் பிடித்துக் கடைய, சந்திரன், ஐராவதம், காமதேனு, தன்வந்திரி இவர்களுடன் மகாலட்சுமியும் வெளிப்பட்டாள். இந்த மகாலட்சுமிதான் இந்திரன் இழந்த செல்வத்தை மீண்டும் அவனுக்குக் கொடுத்தாள். 

மேலும் குபேரனை அளகாபுரிக்கு அதிபதியாக ஆக்கினாள். கிருஷ்ணனின் நண்பனான குசேலனுக்கு அளவற்ற நிதியைக் கொடுத்தாள். இவளின் கடைக்கண் பார்வை தன்மேல் விழாதா என ஏங்கித் தவிக்கும் உள்ளங்கள் பல. இந்த மகாலட்சுமியின் அருளைப் பெற்றவர்களுக்கு பதினாறு வகையான பேறுகளும் வந்து சேரும். 

லட்சுமி செல்வத்தைப் பெற்றவர்களுக்கு மதி மயக்கம் தோன்றாது. இந்தச் செல்வத்தைப் பெற்றவர்கள் மற்ற மனிதர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள். தர்ம வாழ்வை மேற்கொள்வார்கள். இந்த செல்வம் ஏழுதலை முறையையும் தாண்டி நிலைத்து நிற்கும். இந்த செல்வம் வளர்பிறை சந்திரனைப் போன்று ஓங்கி வளரும். இயல்பிலேயே கொடை உள்ளம் கொண்டவர்களின் மீதுதான் லட்சுமியின் கடைக்கண் பார்வை படும். 

குபேர செல்வம்........ 

குபேரனின் தகப்பனார் ஒரு ரிஷி. தாயாரோ அசுர குலத்தைச் சேர்ந்தவர். குபேரன் ராவணனுக்கு சகோதர முறை. அந்தச் சகோதரனாலேயே இவரது நகரம் கைப்பற்றப்பட்டு விட, லட்சுமியின் அருளால் தனி நகரத்தை ஏற்படுத்திக் கொண்டார். இவர் தவம் செய்து அந்தத் தவ பலத்தினால் சங்கநிதி, பதுமநிதி போன்ற நவநிதிகளுக்கும் அதிபதியானார். 

குபேரனை ஒருவர் மனமுருகிப் பிரார்த்தித்தால், குபேரன் வழங்கும் குபேர செல்வம் அந்த பக்தருக்கு திடீர் செல்வமாக வந்து சேரும். அதாவது லாட்டரி, அறக்கட்டளை களை ஏற்படுத்தி அடையும் சுய லாபம் போன்றவையே அச்செல்வங்கள். திடீரென இந்த செல்வம் எப்படி ஒருவருக்கு வந்ததோ அதைப் போன்றே விரைவில் மறைந்துவிடவும் செய்யும். 

எனவே இத்தகைய செல்வத்தை பெற்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு மரம் நடுதல், அன்னதானம், படிக்கும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குதல், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற பொதுக் காரியங்களுக்குச் செலவழிக்க வேண்டும். மூன்று தலை முறைகள் வரையிலாவது அந்த செல்வம் கீழிறங்காமல் நிலைத்திருக்கும். 

இந்திர செல்வம்......... 

போகி என்ற பண்டிகையை இந்திரனை முன் வைத்தே கொண்டாடுகிறோம். கிழக்கு திக்கின் அதிபதியாகத் திகழும் இந்திரன், தேவர்களின் தலைவனும் கூட, இந்திரனைப் பிரார்த்திப்பவர்கள் வெகு சிலரே. பசு, வீடு, அரச போகம் மற்றும் பொன் பொருள் சேர்க்கை போன்றவை இந்திர சம்பத்தின் அடையாளங்கள். 

இந்திரன் அருளால் அடையும் செல்வம் மூன்று தலைமுறைகள் வரை வருவது அரிதிலும் அரிது. சிலருக்கு ஒரே தலை முறையில் கூட மறைந்துவிடும். இந்தச் செல்வம் நிலைக்க விரும்புபவர்கள் கிரிவலம் வருதல், குல தெய்வத்தைப் பூஜித்தல் போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டால் நலம் விளையும்

சிவனை பிடித்த சனி

சனி பகவானை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரின் பிடியில் சிக்கி தவிக்காதவர்களும் இருக்க முடியாது. பொதுவாக ஒருவருக்கு எந்த துன்பம் வந்தாலும் சரி, அவர்கள் முதலில் வசைபாடுவது சனியைத்தான். சிவன், விஷ்ணு, முருகர், விநாயகர், அம்மன் போன்ற தெய்வங்களுக்கு ஒப்பாக சனி பகவானையும் பக்தர்கள் தரிசனம் செய்தும் அவர் மனிதர்களுக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் துன்பங்களை தருவது தவிர்க்க முடியாதது. 

அதற்கு காரணமும் இருக்கிறது. மேலும் மனிதர்கள் மட்டு மின்றி தெய்வங்களையும் பிடித்த சனி, ஒரு கட்டத்தில் சனி பகவானுக்கு அந்த ஆற்றலை அளித்த சிவபெருமானையே பிடித்தார். அது என்ன கதை பார்க்கலாம் வாருங்கள். 

தீவிர சிவ பக்தர்......... 

சனி ஒரு தீவிர சிவ பக்தர். நேர்மையானவர், திறன் மிக்கவர், அழுத்தமானவர் அதே நேரம் ஆற்றல் வாய்ந்தவர். அவர் சிவனை நோக்கி பல காலங்கள் தவமிருந்தார். சனியின் தவத்தை உணர்ந்த சிவபெருமானோ, அவருக்கு காட்சி அளிக்காமல், சோதிக்கும் பொருட்டு காலம் தாழ்த்தி வந்தார். 

ஆனால் சனியோ விட்டபாடில்லை. தனது தவத்தை பல யுகங்களாக தொடர்ந்தார். இந்த தவத்தின் வாயிலாக சிவபெருமானின் மாபெரும் சக்தி, உலகையாளும் நிலைகள் பற்றி சனியால் உணர முடிந்தது. அது சிவபெருமானை காணும் வகையில், சனியை மேலும் உந்தியது. சனியின் தொடர் தவம் சிவனை மிகவும் கவர்ந்தது. அவரது உறுதியை கண்டு இறுதியில் சனியின் முன்பாக ஈசன் காட்சி கொடுத்தார். 

மேலும் வேண்டிய வரத்தை தரவும் முன்வந்தார். ஆனால் சனி, எனக்கு எந்த வரமும் வேண்டாம் தங்களின் காட்சி கிடைத்ததே என் பாக்கியம் என்று கூறினார். அதே சமயம், இந்த உலகத்தை இயக்கி வரும் தங்களது நிர்வாக பொறுப்பில் என்னால் ஆன உதவியை செய்யும் பாக்கியத்தை மட்டும் தாருங்கள் என்று கோரிக்கை ஒன்றை சிவபெருமானிடம் வைத்தார். 

சனிக்கு பொறுப்பு வழங்குதல் சிவபெருமானால், சனியை முற்றிலும் உணர முடிந்தது. தனக்கென்று எதுவும் கேளாமல் உலகை நிர்வகிக்கும் பணியில் பங்கு எடுத்து உதவ வேண்டும் என்ற தூய்மையான பக்தி நிலையை அவர் மெச்சினார். அதன் பிறகுதான் கிரக அந்தஸ்த்தை சனிக்கு தந்தார் சிவன். அண்ட சராசரத்திலும், பூமியின் நிர்வாகத்திலும் மிக முக்கிய பொறுப்பான பணியையும், அதற்காக தனி சக்தியையும் சனிக்கு, சிவபெருமான் வழங்கினார். 

அன்று முதல் சனிக்கிரகம் பூமியை வழிநடத்தும் முக்கிய பொறுப்பில் ஒன்றானது. அது ஒருவர் தன் வாழ்வில் செய்த, அவரது முன்னோர்கள் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ற வகையில் பலாபலன்களை வழங்குவது. சனி பொறுப்பேற்ற சில காலங்களிலேயே தேவர்கள், மன்னர்கள், மக்கள் என அனைவரும் அவரை வசைபாட தொடங்கி விட்டனர். 

நான் நன்றாக நிம்மதியோடு வாழ்ந்து வந்தேன். இந்த பாவியால் இந்த நிலைக்கு ஆளாகிவிட்டேன். இந்த 71/2 தோஷத்தால் என் சந்தோஷம் அனைத்தும் பறிபோய்விட்டது என சனியை பழித்தார்கள். உத்தியோகத்தில், வியாபாரத்தில், வாழ்க்கை துணையால், பிள்ளைகளால் இன்னும் பல வழிகளில் பிரச்சினை வந்தது இந்த சனியால்தான். அவனது 71/2 காலத்தாலேதான் என்று வசைபாடினார்கள். 

முனிவர்கள் சாபம்......... 

இவ்வளவு ஏன் முற்றும் துறந்த முனிவர்கள் கூட தனது எதிர்கால வாழ்க்கையை ஞான திருஷ்டியால் உணரும்போது, எதிர்வரும் கால பிரச்சினைகள் எல்லாம் சனியால்தான் வரப்போகிறது என்பதை உணர்ந்து அவருக்கு சாபம் கொடுத்தனர். என்னதான் சனி ஆற்றல் மிகுந்தவராக, அழுத்தம் மிக்கவராக இருந்தாலும் முனிவர்கள் இட்ட சாபத்தால் அவர் மிகவும் மனமுடைந்தார். 

மக்களின் பேச்சுகளும், முனிவர்களின் சாபங்களும், படையெடுத்து சனியுடன் போரிட்டால் என்ன என்ற மன்னர்களின் எண்ணங்களும் சனிக்கு, தனது பணியை கவனிப்பதில் மிகவும் இடையூறை ஏற்படுத்தின. ஆயிரம் இருந்தாலும் முனிவர்கள் சாபம் பலிக்கும் என்பது சனியை நிலை குலைய செய்தது. 

ஒருவர் (ஆத்மா) முற்பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் அவருக்கு அதிஷ்டத்தை தருவதும், அதே வேளையில் அந்த ஆத்மா பாவங்களை செய்திருந்தால் அந்த அழுகுற்ற ஆத்மாவை துன்பம், கஷ்டம் இவைகள் வாயிலாக சுத்தப்படுத்தி நல்நிலைக்கு திருப்புவது என்று தனக்கு கொடுக்கப்பட்ட கடமையை, எந்த பிசிறும் இல்லாது தான் செய்து வரும்போது அதற்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் இப்படி சபிக்கின்றார்களே என எண்ணியபடி சனி மனம் நொந்தார். இதனால் அவரது பணி பின்னடைவை அடைந்தது. 

சிவனிடம் தஞ்சம்......... 

மன சோர்வால் கடமையில் இருந்து தவறி விடுவோமோ என்று பயந்த சனி பகவான், நேராக சிவனிடம் சென்று தனது கடமைகளின் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை எடுத்துரைத்தார். மக்களும், மன்னர்களும் கூட பரவாயில்லை. முனிவர்கள் கூட என்னை சபிக்கிறார்கள். இதனால் என் பணி தடைபட்டு விடுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன் என்று கூறினார். 

இதனை கேட்ட சிவபெருமான் சற்று அமைதியாக இருந்தார். பின்னர் புன்னகை தவழும் முகத்துடன் கூறலானார். இந்த வழியாக, இந்த காலத்தில், இத்தனை நாழிகை என்னை வந்து பிடி முன்ஜென்மம் எப்படி கணக்கிடப்பட்டு நமக்கு இந்த ஜென்ம வாழ்வு அளிக்கப்பட்டு உள்ளதோ, அதுபோல நமது இந்த ஜென்ம நடவடிக்கைகளும் மவுனமாக கணக்கிடப்படுகிறது என்பதும், அதன் நன்மை, தீமை நம்மை வந்து அடைந்தே தீரும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. 

சனியைப்போல் கெடுப்பவரும் இல்லை. சனியைப்போல் கொடுப்பவரும் இல்லை. எனவே நமது எப்பிறவியி லும் நன்மையே நடக்க, அனைவரும் பாவங்களை களைந்து, புண்ணிய பாதைக்கு திரும்புவதே உத்தமம். அப்படி செய்தால் சனீஸ்வரர் நமக்கு பகையாக தெரியமாட்டார். மாறாக, அனைத்து நலன்களையும் வாரி வழங்கும் ஈசனாகவே தென்படுவார். 

புண்ணியங்களைசேர்ப்போம் என்று சிவன் தெரிவித்தார். இதனை கேட்டதும் சனிக்கு ஒன்றும் புரியவில்லை. நம் வேலையில் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண வந்தால், இவர் மேலும் ஒரு புதிய வேலையை தருகிறாரே!. நமது குரலுக்கு செவிசாய்த்து உபாயம் கூறவில்லையே!. நம் பணி தடை பெற்றால் உலகத்தின் நிர்வாகம் தடைபடுமே. அதனால் நாம் சிவனின் கோபத்திற்கு அல்லவா ஆளாக நேரிடும் என்று பலவாறாக மனம் குழம்பி இருப்பிடம் திருப்பினார். 

சிவனை பிடித்த சனி...... 

சிவன் இட்ட கட்டளையை நிறைவேற்றும் காலம் வந்தது. சிவனின் ஆணைக்கு இணங்க அவர் கூறிய வழியாக அந்த குறிப்பிட்ட காலத்தில் சனி புறப்பட்டு சென்றார். அது என்ன வழி தெரியுமா?. தேவலோகத்தை கடந்து செல்லும் கைலாய வழி. அதா வது சனி தேவலோகத்தை நோக்கி வந்தார். இதை கண்ட தேவர்கள் அனைவரும், அய்யய்யோ! 

சனி அல்லவா நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். இன்று நம் கூட்டத்தில் யாரோ ஒருவர் கதை முடிந்தது என்று பதறியபடி கிடைத்த மறைவிடங்களில் பதுங்க ஆரம்பித்தனர். சிலர் தேவலோகத்தை காலி செய்து பல வேடங்களில் பூலோ கம், பாதாள லோகம் சென்று ஓடி ஒளிந்து கொண்டனர். ஆனால் சனியோ தேவலோகத்தை கடந்து சென்று கொண்டிருந்தார். 

இதனால் தேவர்கள் அனைவரும் மன நிம்மதி அடைந்து, அப்பாடா! தப்பித்தோம்டா சாமி! என்று பெருமூச்சு விட்டனர். பின்னர், சரி சனி எங்குதான் செல்கிறார் என்று தேவர்களுக்கு எண்ணம் தோன்றியது. அதனை பார்க்கும் ஆவலில் சனியை அனைவரும் பின் தொடர்ந்தனர். அப்போது நேராக கயிலாயத்தை அடைந்தார் சனி. அங்கு அமர்ந்திருந்த சிவபெருமானை பிடிக்க முயன்றார். அதனை கண்டதும் சிவபெருமான் ஓட தொடங்கினார். 

சனி ஈஸ்வரர் ஆனார்......... 

இதை கண்ட தேவர்கள் அனைவரும் உடல் நடுங்கிப் போனார்கள். அனைவரது புருவமும் மேல் நோக்கி வில்லாக வளைந்தது. இங்கு என்ன நடக்கிறது. சிவன் ஓடு கிறார், சனி அவரை துரத்திக் கொண்டு செல்கிறார். சனியிடம் இருந்து சிவன் தப்பிக்க, விஷ்ணுவும் சனி பார்வை படாத இடம் காண்பித்து உதவி புரிகிறார் என்று பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சனி பகவான் சிவ பெருமானை பிடித்து விட்டார். 

தேவர்களுக்கு மூர்ச்சையே ஏற்பட்டு விடும் போல் ஆகி விட்டது. ஏற்கனவே சனியின் பலம் அனைவரும் அறிந்ததுதான். இப்போது சிவனையே பிடித்து விட்டார். இனி சனியிடம் வைத்துக் கொண்டால் அவ்வளவுதான் என்று சனியிடம் தேவர்கள் அனைவரும் சரணாகதி அடைந்தனர். 

மேலும் சிவபெருமானை, சனி பிடித்த செய்தி அனைத்து லோகத்திற்கும் சென்று சேர்ந்தது. அதே சமயம், உன் கடமை தவறாமல், என்னையே பிடித்தமையால் உன் பொறுப்பை பாராட்டி என் பெயரையே உனக்கு பட்டமாக தருகிறேன். இனி நீ எல்லோராலும் சனி ஈஸ்வரர் என்று அழைக்கப்படுவாய் என்று சனியை வாழ்த்தி மறைந்தார் சிவபெருமான். 

வழிபட தொடங்கினர் இந்த செய்தி அறிந்த முனிவர்கள், மன்னர்கள், மக்கள் அனைவரும் தங்கள் தவறை உணர்ந்தார்கள். உண்மையில் நாம் படும் துன்பங்கள், கஷ்டங்கள் எல்லாம் சனியால் இல்லை. நமது முற்பிறவியில் நாம் நடந்து கொண்ட விதத்தினால்தான் என்ற உண்மை அறியப்பெற்றனர். 

அதுவரை சனியை பழித்தும், பாவி என்றும், தோஷம் என்றும் தூற்றி வந்தவர்கள், தங்கள் பாவங்களில் இருந்து விடுபடும் வழியை தேடி சனியை வணங்க தொடங்கினார்கள். சனிக்கு கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடக்க ஆரம்பித்தன. 

சிவனின் கட்டளையை நிறைவேற்றி தன் இருப்பிடம் திரும்பிய சனி பகவான், முனிவர்கள், மன்னர்கள், மக்கள் ஆகியோரின் மனமாற்றத்தை கண்டு வியந்தார். இந்த வழியாக, இந்த காலத்தில், இத்தனை நாழிகை என்னை பிடி என்று சிவன் கூறிய போது அதன் அர்த்தம் சனி பகவானுக்கு புரியவில்லை. 

ஆனால் தேவலோகம் வழியாக, தேவர்கள் அனைவரும் ஒன்றாக கூடி இருந்த காலகட்டத்தில் ஏன் இந்த திருவிளையாடல் சிவனால் நடத்தப்பட்டது என்பது பின்னர்தான் அவருக்கு விளங்கியது. அவர் மனம் பூரிப்பு கொண்டது. சிவபெருமானை மனமுருக வேண்டி நன்றி தெரிவித்தார்

சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க.....

சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஓரு சித்தர் எளிய பரிகாரம் ஒன்றை சொல்லியுள்ளார்.அந்த பரிகாரம் வருமாறு: பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு விநாகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும்.

அப்போது கையில் உள்ள அரிசியை போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கி செல்லும். அப்படி தூக்கி சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலனவை நம்மை விட்டு போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்ய வேண்டும்.

பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்துக்காக சேமித்து வைத்து கொள்ளூம். இரண்டரை  ஆண்டுகளுக்கு எறும்புக்கு அந்த உணவு போதும். இதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும்.

அப்போது பரிகாரம் வலுவிழந்து விடும். எனவே நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம். இதன் மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். 

ஒருவருக்கு சனி திசை வந்து விட்டால் கூடவே சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடுவார். யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அஷ்டமத்து சனி நேரடி சண்டையை உருவாக்காது. நம்மை சேர்ந்த உறவினர்கள் மூலம் பிரச்சினைகளை உருவாக்கி விடும். இதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் வருமாறு....

தேவை இல்லாமல் சந்தேகப்படக் கூடாது. உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும். சுவையான உணவுகளை தவிர்க்க வேண்டும். சகிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும். எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். சனிக்கிழமைகளில் எள் எண்ணை ஏற்ற வேண்டும். மன நலம் குன்றியவர்களுக்கு உதவ வேண்டும்.

பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது. சனி தசை நடக்கும் போது எந்த செயல் செய்தாலும் தாமதமாகும். அதற்காக கோபப்படக் கூடாது. பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். இப்படி நம்மை மாற்றிக் கொண்டால் சனி பாதிப்பில் இருந்து சற்று தப்பிக்கலாம். 

* தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

* சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்

* கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.

* வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.

* சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.

* சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.

* விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

* அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.

* ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.

* தேய்விறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.

* அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.

* கோமாதா பூஜை செய்யலாம்.

* ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.

* சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.

* அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.

* சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.

* உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.

* வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.

* பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை  கொடுத்து வணங்க வேண்டும்.

* தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். 

லக்னத்தில் சனி அமர்ந்து உடலில் அபரிமிதமாக ரோமங்கள் காணப்பட்டால் பணம் இல்லாமை, பணமுடை ஏற்படும். அதற்கு

* பரிகாரம்,சாதுக்கள் மற்றும் தானம் கேட்போருக்கு ஒரு இரும்பு ஸ்டவ் இனாமாக கொடுக்கலாம்.

* சனி இரண்டில் இருந்தால்- நெற்றியில் எள் எண்ணெய் தேய்த்தல் கூடாது.

* சனி மூன்றில் இருந்தால்-வீட்டு வாசல் கதவில் மூன்று இரும்பு ஆணி இருக்கச் செய்யவும்.

* சனி நான்கில் இருந்தால்- கறுப்பு ஆடைகள், கொள்ளு( தானியம்) தானம் செய்யலாம்.

* சனி ஐந்தில் இருந்தால்- வீட்டின் மேற்கு பாகத்தில், செம்பு, வெள்ளி, தங்க உலோகம் இருக்கச் செய்யவும்.

* சனி 6-ல் இருந்தால் 40-க்கும் மேல் 48 வாதிற்குள்ள  இடைகாலத்தில்  வீடுகட்டுதல் கூடாது.

* சனி7-ல் இருந்தால்- கருப்பு நிற பசுவுக்கு புல் தரலாம். மூங்கில் குழாயில் சர்க்கரையை நிரப்பி வீட்டு வாசலில் பூமியினுள் மூடி வைப்பதுவும் போதுமானது.

* சனி 8-ல் இருந்தால்- கல்லில் அல்லது மரப்பலகை நாற்காலியில் அமர்ந்து, தண்ணீரில் ஒரு  ஸ்பூன் பாலை கலந்து குளித்தல் சிறப்பானது.

* சனி 9-ல் இருந்தால்-வீட்டின் மொட்டை மாடியில் புல் வளர்த்தல் கூடாது.

* சனி 10-ல் இருந்தால்-10-பார்வையில்லாதோருக்கு தானம் செய்யலாம்.

* சனி11-ல் இருந்தால்- வீட்டை நீண்ட நாள் பூட்டி செல்லும் போது வீட்டு வாசலில், சிறு குடம் தண்ணீரை வைத்து செல்வது தீமையை அகற்றும்.

* சனி 12-ல் இருந்தால்-வீட்டின் கடைசி இருட்டறையில் 12-ம் பாதாம் பருப்பை கறுப்பு துணியில் முடித்து வைப்பது நன்மையூட்டும்.

சனியை முறையோடு வணங்கினால் தொல்லைகளை அகற்றிவிடுவார். 

ஏழரைச் சனி நீங்கும் போது அந்த ராசிக்காரர்கள் அன்றைய தினம் புண்ணிய நதிகள், சமுத்திரம், நீர்த்தடாகங்கள், குளம் போன்றவற்றில் நீராட வேண்டும். இயலாதவர்கள் வீட்டில் உள்ள கிணற்றில் குளிக்கலாம். சமுத்திர ஸ்நானம் செய்யாதவர்கள் நல்லெண்ணை தலையில் வைத்து குளிப்பது சிறப்பு.

குலதெய்வ வழிபாடு செய்த பின்பு சிவதரிசனம் செய்ய வேண்டும். இயன்றவர்கள் நவக்கிரக சூக்தம் ஜெபம் செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். பசுவிற்கு அகத்திக்கீரை உண்ணத் தருவது மிகவும் சிறப்பு.
சனி பகவான் நீதிமான். குற்றங்கள் புரிபவர்களையும் தெரிந்தே பாவங்கள் செய்பவர்களையும் அகந்தையுடனும், அகங்காரத்துடனும் நடப்பவர்களையும் அவர் தண்டிக்காமல் விடமாட்டார். சில சமயங்களில் ஒரு பாவமும் அறியாத நல்லவர்கள் கஷ்டப்படும் பொழுது, சனி என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டான் என்று புலம்புவது உண்டு.

அது போன ஜென்மத்து பாவங்களின் தொடர்ச்சியாகும். ஆகவே எப்பொழுதும் நன்மைகள் செய்ய சனியின் தாக்கம் குறையும் என்று அருளாளர்கள் கூறுவர். சனீஸ்வரர் எப்பொழுதும் கண்களைக் கட்டிக் கொண்டு தான் இருப்பார், அவரது நேரடிப்பார்வையின் உக்கிரத்தை யாராலும் தாங்க முடியாது என்பதால் தான் அவர் இப்படி கருப்புத் துணியால் கண்களைக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம்.

ஏழரை நாட்டுச் சனி, அஷ்டமச் சனி, ஜன்மச் சனி, ஜாதகத்தில் சனி திசை நடக்கும் போது நல்லதும், கெட்டதும் நடக்க வாய்ப்பு உண்டு. சனியின் பிடியில் சிக்கியிருப்பவர்கள் அவரின் தாக்கம் குறைய ஒவ்வொரு சனிக்கிழமையும் காகத்திற்கு சாதத்தில் எள் கலந்து உணவு வைக்க வேண்டும்.

உளுந்து வடையை காகங்களுக்குப் போடுவது நல்லது. ஒவ்வொரு சனி அன்றும் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமை இரவு படுக்கும் போது கொஞ்சம் எள்ளை ஈரத் துணியில் கட்டி தலைக்கு அடியிலோ, உடலுக்கு அடியிலோ, வைத்து விடிந்த பின் சாப்பிடுவதற்கு முன் அந்த எள்ளை சாதத்துடன் கலந்து காகத்திற்கு வைக்க வேண்டும். ச

னி பகவான் கால் ஊனமுற்றவர், ஆதலால், உடல் ஊனமுற்றவர்களுக்கும், முதியவர்களுக்கும், ஏழைகளுக்கும் முடிந்த உதவிகள் செய்யலாம். தயிர் அன்னம் அளிப்பது மிகவும் நல்லது. விநாயகப் பெருமானை வணங்கி அவருக்கு நல்லெண்ணெயில் தீபம் இடுதல் நல்ல பலனைக் கொடுக்கும். சனிக்கிழமை வரும் பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு சனியின் உக்கிரத்தைக் குறைக்கும். கரிநாளில் பைரவரை சிவப்பு மலர்களால் அர்ச்சித்தால் சனியின் தாக்கம் குறையும்.

வாதம் நீக்குபவர்........

இந்த சனி பிடித்தவன் சந்தைக்கு போனாலும், கந்தலும் அகப்படாது....

இந்த சனியின் பிறந்த நாளிலிருந்து குடும்பத்தை பாடாய்படுத்துகிறது. இப்படியாக சனியை பல கோணங்களில் வசை பாடினாலும் அவரின் மகத்துவம் சிறப்பானது. சனி ஒருவர் மட்டுமே பிற கிரகங்களை விட உலகத்து மக்களிடம் பிரபலமானவர்.

குரு கிரகத்திற்கு அடுத்த கிரகம் சனி, குறுக்களவு உத்தேசமாக 73,000 மைல். குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணு மாலையா கோவிலில் கற்சிலையாக தூணில் பெண் உருவில் காட்சி தருகிறார். நெல்லையை அடுத்த கருங்குளத்திலும் சனி பகவான் நீலாவுடன் அமர்ந்துள்ளார். மனித உடலில் தொடைகளுக்கு உடையவர்.

குடல் வாத நோய் இவரால் ஏற்படும். மேலும் முதுகு வலி,  முடக்கு வாதம், யானைக் கால், பேய் தொல்லை, மூலநோய், மன தளர்ச்சி இவையும் இவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்நோய் பாதித்தவர்கள் சனியை வணங்குவதால் நோயின் வேகம் வெகுவாக தணியும்

யாரால் நன்மை

ஒரு மடத்தில் ஜென் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் ஜாலியான குணமுடையவர். எப்போதுமே கோபப்படமாட்டார். அவரிடம் சீடர்கள் சிலர் கல்வி கற்று வந்தனர். அவரது சீடர்களுக்கு அந்த துறவி என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் அந்த துறவி தன் சீடர்களிம் பேசிக் கொண்டிருக்கையில், சீடர்கள் அவரிடம் "குருவே! உங்களுக்கு பிடித்த கதை என்ன?" கேட்டனர். அதற்கு அவர் "குதிரையும் ஆடும்" என்று சொன்னார். அதென்ன குதிரையும் ஆடும், அது எந்த மாதிரியான கதை, எங்களுக்கும் அந்த கதையை சொல்லுங்களேன் என்று வேண்டிக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குரு அந்த கதையை சொல்ல ஆரம்பித்தார்.
அதாவது "ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்கள். ஒரு நாள் அந்த குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால் அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான். மருத்துவர் அந்த குதிரையின் நிலையை பார்த்து, நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தை சாப்பிட்டு குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனை கொன்றுவிட வேண்டியது தான் என்று சொல்லி, அன்றைய மருந்தை கொடுத்துச் சென்றார். இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. மறுநாள், அந்த மருத்துவர் வந்து அன்றைய மருந்தைக் கொடுத்து சென்றார். பின் அங்கிருந்த ஆடு, அந்த குதிரையிடம் வந்து, "எழுந்து நட நண்பா, இல்லாவிட்டால் அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்" என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.

மூன்றாம் நாளும் வந்துவிட்டது, மருத்துவரும் வந்து குதிரைக்கு மருந்து கொடுத்துவிட்டு, அந்த விவசாயிடம் "நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனை கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கு பரவிவிடும்." என்று சொல்லிச் சென்றார். அந்த மருத்துவர் போனதும், ஆடு குதிரையிடம் வந்து, நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். உன்னால் முடியும், எழுந்திரு! எழுந்திரு! என்று சொல்லியது. அந்த குதிரையும் முயற்சி செய்து எழுந்து நடந்துவிட்டது. எதிர்பாராதவிதமாக அந்த குதிரையை விவசாயி பார்க்க வரும் போது, குதிரை ஓடியதைப் பார்த்து சந்தோஷமடைந்து, மருத்துவரை அழைத்து அவரிடம் "என்ன ஒரு ஆச்சரியம். என் குதிரை குணமடைந்துவிட்டது. இதற்கு நிச்சயம் உங்களுக்கு ஒரு விருந்து வைக்க வேண்டும். சரி, இந்த ஆட்டை வெட்டுவோமா!!!" என்று சொன்னார்" என்று கதையை சொல்லி முடித்தார். பின் அவர்களிடம் "பார்த்தீர்களா! இந்த கதையில் உண்மையில் குதிரை குணமடைந்ததற்கு அந்த ஆடு தான் காரணம். ஆனால் மருத்துவரின் மருந்தால் தான் குதிரை குணமடைந்தது என்று எண்ணி, கடைசியில் அந்த ஆட்டையே பலி கொடுக்க நினைக்கிறார்கள். ஆகவே இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்ததோ, அவர்களை விட, அந்த நன்மைக்கு அருகில் இருப்பவர்களுக்குத் தான் அதிக மரியாதை கிடைக்கும்." என்று இறுதியில் சொல்லி விடைபெற்றார்.
நிச்சயமான உண்மை .


Tuesday, May 28, 2013

எதையும் புரிந்து செய்ய வேண்டும்.....

ஒரு ஊர்ல ஒரு துறவி இருந்தார். அவர் ஒவ்வொரு கிராமத்துக்கும் போயி மக்களுக்கு நீதிக்கதைகள், போதனைகள் சொல்லி பணியாற்றி வந்தார்.

அவர் இப்படியே ஒருநாள் நல்லாம் பட்டி என்கின்ற ஊருக்கு வந்தார். அங்கு சுமார் ஒரு மாதம் வரை தங்கி விட்டு வேறு ஊருக்கு செல்ல தனது மாட்டு வண்டியை தயார் செஞ்சுட்டு இருந்தார்.

அப்போது அவர் பக்கதில் ஒருவன் வந்து, அவர் மீது மிகுந்த ஈடுபாடாகி அவருடனே ஊர் ஊராக தானும் வந்து விடுவதாக சொன்னான்.

இதைக் கேட்டதும் அவனைப்பற்றி அக்கம் பக்கம் விசாரித்த துறவி அவனை அனாதை என அறிந்து அவன் மேல் அனுதாபப்பட்டு அவனையும் சேர்த்துக் கொண்டும், பொருட்களைக் கட்டிக் கொண்டு அடுத்த ஊருக்கு அவர்கள் இருவரும் பயணமானார்.

துறவி வண்டியில் முன்னால் அமர்ந்திருந்தார்.

அவன் வண்டிக்கு பின்னால் அமர்ந்திருந்தான்.

துறவி அவனிடம்,

தம்பி பின்னாடி உட்கார்ந்திருக்க, பொருட்கள் ஏதாவது கீழ விழுகுதான்னு பார்த்துட்டே வா'ன்னு சொன்னார்.

கொஞ்ச தூரம் பயணம் செய்த பின் ஓரிடத்தில இளைப்பாற நிறுத்தினார்கள்.

அப்போது வண்டியின் பின் பக்கம் வந்த துறவி சில பொருட்களைக் காணாது விக்கித்து நின்றார்.

அவனிடம் பொருட்கள் எங்கே என கேட்க,

அவன் சில பொருட்கள் கீழ விழுந்திருச்சு என சொன்னான்.

இவர், கீழ விழுந்தா எடுத்து வைத்திருக்க வேண்டியது தானே என துறவி கேட்க,

அதற்கு அவன் நீங்க பொருட்கள் விழுகுதான்னு பாக்க தானே சொன்னிங்க என சொன்னான்.

ஆக,

அவன் அவர் சொன்னதை அப்படியே செய்ததாக சொன்னான்.

துறவி கீழ விழுந்தை பத்திரமாக எடுத்துட்டு வா என்பதை அவன் அப்படி குறுகிய மனப்பான்மையில் எடுத்துக் கொண்டான்.

அடுத்து அவர்கள் பயணத்தை தொடங்கினார்கள். இந்தத் தடவை துறவி அவனிடம் கீழ எது விழுந்தாலும் பிடிச்சு எடுத்து வை என்றார்.

சிறிது தூரம் சென்ற பின் ஒரு இடத்தில் இளைப்பாற மறுபடியும் வண்டி நின்றது..

துறவி வண்டியைவிட்டு இறங்கி வண்டிக்கு பின்னால் வந்து பார்த்தால் வண்டி பின்பக்கம் முழுதும் மாட்டு சாணமாக இருந்தது.

அவன் கையிலும் சாணம் இருந்தது.

துறவி, என்ன தம்பி வண்டியில இவ்ளோ சாணி இருக்கு, என்ன விஷயம் என கேட்க,

அதற்கு அவன், நீங்க தான ஐயா எது கீழ விழுந்தாலும் எடுத்து வைன்னு சொன்னிங்க அதான் எடுத்து வச்சுட்டு வரேன் என பதில் சொன்னான்.

அவன் பதில் கேட்டு துறவி அவன் அறியாமையை நினைத்து கவலைப்பட்டார்.

சொல்வதை அப்படியே அர்த்தம் எடுத்துக் கொள்கிறானே, கொஞ்சம் கூட பகுத்து ஆய்ந்து பொருள் விளங்கி சமயோசிதமாக செயல்பட மாட்டிங்கறானே என மிகவும் வருத்தமுற்றார்.

அவன் சிறுபிள்ளைத்தனமான புத்தியை மாற்றி அவனை நல்ல அறிவாளியாக மாற்ற வேண்டும் என அவர் தனக்குள் நினைத்துக் கொண்டு அருகிலிருக்கும் ஊரை நோக்கி பயணமானார் அவனையும் கூட்டிக் கொண்டு....

கற்றுக் கொள்வது:

•சொல்கிற சொல்லை அப்படியே அர்த்தம் கொள்ளாமல், அதனை பகுத்து உள் அர்த்தத்தை அறிந்து அதற்கேற்ப சமயோசிதமாக செயல்பட வேண்டும்.

•சொன்னதைத்தான் செய்தேன் என்கிற மனப்போக்கை தவிர்த்து,கொஞ்சம் நம்ம புத்தியையும் பயன்படுத்தினால் நாம் நிறைய செயல்களை சாதிக்கலாம்.

தலைமுடி பேண சித்தவைத்திய முறை...!

வழுக்கை தலையில் முடிவளர:

வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

முடி உதிர்வது மற்றும் நரை போக்க:

1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே
போதும் இளநரை மாயமாகிவிடும்.

4) சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.

Thursday, May 23, 2013

பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்


நீங்கள் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம் தரப்பட்டுள்ளது

அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான்,கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர்.
பரணி: நன்றிமிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர்.
கார்த்திகை: பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர்.
ரோகிணி: கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர்.
மிருகசீரிடம்: தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.
திருவாதிரை: எளிமை, சாமர்த்தியசாலி, திட்டமிட்டுப் பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.
புனர்பூசம்: கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம்.
பூசம்: பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர்.
ஆயில்யம்: செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர்.
மகம்: ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வியில் ஆர்வம், தர்மவான், பழக இனிமையானவர், நேர்மையாக நடக்க விரும்புபவர்.
பூரம்: ஒழுக்கமானவர், புத்திசாலி, விவசாயம், வியாபாரத்தில் ஆர்வம், உண்மையானவர், செல்வாக்கு, பேச்சுத்திறன் மிக்கவர்.
உத்திரம்: நாணயமானவர், பக்திமான், நட்புடன் பழகுபவர், நன்றி மறவாதவர், சுகபோகி, உறவினர்களை நேசிப்பவர்.
அஸ்தம்: ஆடை, ஆபரண பிரியர், கல்வியில் ஆர்வம், கலாரசிகர், நகைச்சுவையாகப் பேசுபவர், தாய்மீது பாசம் கொண்டவர், பழக இனியவர்.
சித்திரை: ஊர் சுற்றுவதில் ஆர்வம், கல்விமான், தைரியசாலி, எதிரிமீதும் இரக்கம், சாதிப்பதில் வல்லவர், பரந்த உள்ளம் கொண்டவர்.
சுவாதி: புத்திகூர்மையானவர், யோசித்து செயல்படுபவர், சுகபோகி, பழக இனியவர், நம்பகமானவர், யோகம் மிக்கவர்.
விசாகம்: வியாபார ஆர்வம், சாமர்த்தியசாலி, கலா ரசிகர், தர்மவான், சுறுசுறுப்பானவர், தற்பெருமை கொண்டவர்.
அனுஷம்: நேர்மையானவர், அந்தஸ்து மிக்கவர், அமைதியானவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம், அரசால் பாராட்டு பெறுபவர்.
கேட்டை: கல்வியில் ஆர்வம், துணிச்சலானவர், குறும்பு செய்வதில் வல்லவர், முன்கோபி, சாமர்த்தியசாலி, புகழ் மிக்கவர்.
மூலம்: சுறுசுறுப்பானவர், கல்வியாளர், உடல்பலம் மிக்கவர், நீதிமான், புகழ்விரும்பி, அடக்கமிக்கவர்.
பூராடம்: சுகபோகி, செல்வாக்குமிக்கவர், பிடிவாதக்காரர், வாக்குவாதத்தில் வல்லவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.
உத்திராடம்: தைரியசாலி, கலையில் ஆர்வம், பொறுமைசாலி, நினைத்ததை சாதிப்பவர், சாதுர்யமாகப் பேசுபவர்.
திருவோணம்: பக்திமான், சமூகசேவகர், சொத்துசுகம் கொண்டவர், பிறரை மதிப்பவர், உதவுவதில் வல்லவர். 
அவிட்டம்: கம்பீரமானவர், செல்வாக்கு மிக்கவர், தைரியசாலி, முன்கோபி, மனைவியை நேசிப்பவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.
சதயம்: வசீகரமானவர், செல்வந்தர், பொறுமைசாலி, முன்யோசனை கொண்டவர், திறமையாக செயல்படுபவர், ஒழுக்கமானவர்.
பூரட்டாதி: மன திடமானவர், பலசாலி, சுகபோகி, பழக இனியவர், தொழிலில் ஆர்வம் மிக்கவர், குடும்பத்தை நேசிப்பவர்.
உத்திரட்டாதி: கல்வியாளர், சாதுர்யமாகப் பேசுபவர், ஆபரணபிரியர், பக்திமான், கடமையில் ஆர்வம் மிக்கவர்.
ரேவதி: தைரியசாலி, நேர்மையானவர், எதிரியை வெல்பவர், சுகபோகத்தில் நாட்டம், தற்புகழ்ச்சி விரும்புபவர், பழக இனியவர்.

மூச்சுப் பயிற்சி


ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள். பிறகு மூன்று விநாடி கழித்து இழுத்த மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள். மூச்சு வெளியேறும்போது எந்தக் கை மேலே உயருகிறது? அடிவயிற்றில் உள்ள கைதானே? ஆழ்ந்து சுவாசித்தல் என்பது நுரையீரல்களில் சுவாசிப்பதுதான். இதுதான் உண்மையாக மூச்சை இழுத்துக்கொள்ளும் முறை.

எந்த வயதுக்காரரும் தரையில் தலையணை எதுவுமின்றி படுத்துக் கொண்டு இப்படி வயிற்றிலும் நெஞ்சிலும் கைகளை வைத்துக்கொண்டு சுவாசித்தால், நுரையீரல்களின் கீழ்ப்பகுதிக்கு நன்கு ஆக்சிஜன் கிடைக்கும்.இதனால் எல்லா உறுப்புகளும் வலுப்பெறும்.

ஆனால், 100க்கு 99 பேர் நெஞ்சினால்தான் சுவாசிக்கிறார்கள். குப்பை அள்ளும் லாரி போகும் போதும், வியர்வை நாற்றம், புகைப் பிடிப்பவர் விடும் மூச்சு நாற்றம் முதலியவற்றைக் தடுக்க மூச்சையும் மூக்கையும் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறோம் அல்லவா, அப்போது ஆக்ஸிஜன் நுரையீரல்களின் கீழ்ப்பகுதிகளுக்குச் செல்வதே இல்லை. உலகில் இப்படிச் சுவாசிப்பவர்களே அதிகம். நெஞ்சினால் சுவாசிப்பவர்கள் உலகில் 99 சதவிகிதம் பேர்களாம். ஆனால் இவர்கள் நலமுடன் வாழ்கிறார்களே! இது எப்படி? ஆனால் இவர்கள் மூச்சுவிடுதல் தொடர்பான நோய்களைப் பெற்றுக் கொண்டு வாழ்கிறார்கள். சரியாக மூச்சுவிடத் தெரியாதவர்களுக்குத் தான் உடம்பில் அங்கங்கே வலிகளும் காய்ச்சல் வகைகளும் எட்டிப் பார்க்கும்.

பிராணாயாமம் மற்றும் மூச்சுப்பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடங்கள் மாலையில் ஐந்து நிமிடங்கள் என தரையில் படுத்துக்கொண்டு ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும். எரிச்சல் வராது. பிறர் மேல் எரிந்து விழமாட்டீர்கள்.

அடுத்து ஆஸ்துமா, இதயநோய், ஒற்றைத்தலை வலி, காக்காய் வலிப்பு போன்ற நோய்கள் கட்டுப்படும். இந்த நான்கு நோய்களும் சரியாக மூச்சு விடத் தெரியாதவர்களுக்குத்தான் வருகின்றன என்கிறது கொலராடோவின் பெளல்டரில் உள்ள சர்வதேச மூச்சுப்பயிற்சி நிலையம்.

தரையில் படுத்துக்கொண்டு இப்படி ஆழ்ந்து சுவாசிக்கக் கற்றுக் கொண்டால் நுரையீரல்களின் கீழ்ப்பகுதிகளுக்கும் நன்கு ஆக்ஸிஜன் கிடைப்பதால் மனமும் உற்சாகமாக இருக்கும். நல்ல இரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் கிடைத்து விடுவதால் வாழ்நாளும் நீடிக்கிறது.

ஒரு நிமிடத்திற்கு எட்டு முதல் 14 முறையே சராசரி மனிதன் மூச்சுவிடுகிறான். ஆனால் நுரையீரல்களுக்கு நன்கு காற்று கிடைக்காதவர்கள் 20 தடவைக்கு மேல் சுவாசிக்கிறார்கள். இதேபோல் ஆண்கள் பெல்ட்டுகளை இறுக்கி அணிந்தாலும் பெண்கள் நாடாக்களை இறுக்கிக் கட்டினாலும் நன்கு மூச்சுவிட முடியாது. சேலை, வேட்டி, பேண்ட் என அனைத்தும் வயிற்றை அதிகம் அழுத்தாமல் இருக்குமாறு அணிய வேண்டும்.

மூச்சுவிடும் முறையை நன்கு கற்றுக்கொண்டால் மூளையையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். இரத்தத்தில் காடித் தன்மையும், காரத்தன்மையும் அதிகரிக்காமல் இருக்க வேண்டும். இதற்கு மூச்சுப் பயிற்சி உதவுகிறது.

முதல் பயிற்சி :
நேர்காணலுக்குச் செல்லும் போது இந்த முறையில் 5 நிமிடங்கள் சுவாசித்துவிட்டுப் புறப்பட்டால், நேர்காணலின் போது பதட்டம் ஏற்படாது. திடீர் இரத்தக்கொதிப்பு, ஸ்டிரோக் போன்றவற்றை இப்படி ஆழ்ந்து சுவாசிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

இரண்டாவது பயிற்சி :
சம்மணமிட்டு உட்காருங்கள். மூக்கினால் மூச்சை இழுத்துக் கொள்ளுங்கள். பிறகு வாயைத் திறந்து அதை வெளியேற்றுங்கள். அடுத்து மூச்சை இழுக்காமல் தொடர்ச்சியாக ஊ…ஊ… என்று காற்றை ஊதுங்கள். இதற்குப் பிறகு முன்பு செய்தது போல மூக்கினால் இழுத்து வாயினால் வெளியேற்றி கடைசியல் ஊ….ஊ…. என்று ஊதுங்கள். மூன்று முறை இது போல் செய்யுங்கள்.

மூன்றாவது பயிற்சி :
நன்கு நிமிர்ந்து நின்று கொண்டு இரண்டு கைகளையும் பக்கவாட்டில் தூக்கியபடியே மூச்சை உள்ளுக்குள் இழுங்கள். தலைக்குமேல் கும்பிடுவது போல் கைகளை வைத்ததும் அப்படியே மீண்டும் பழையபடி பக்கவாட்டில் மெதுவாக இறக்கவும். இப்படி கைகளை இறக்கும் போது இழுத்த மூச்சை மெதுவாக வெளியேற்றுங்கள். இந்தப் பயிற்சியை காலை உணவிற்கு முன்பு பத்துமுறை செய்துவிட்டு புறப்பட்டால் அந்த நாள் முழுவதும் படுசுறுசுறுப்பாக இருக்கும். மற்ற இரு மூச்சுப் பயிற்சிகளையும் நீங்கள் செய்திருந்தால் உங்களிடம் ஒற்றைத் தலைவலி, எரிச்சல் முதலியன வாலாட்ட முடியாது. ‘இனிமையாகப் பழகும் அரிய மனிதர்’ என்று பெயர் பெற்றுவிடுவீர்கள்.

ஆழ்ந்து சுவாசிக்கும் இந்த மூச்சுப் பயிற்சியை அமெரிக்க டாக்டர்கள் பலரும் இரு வேளைகள் செய்கிறார்கள். ரெய்கி மருத்துவத்தில் இந்த ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி முக்கியமான குணப்படுத்தும் உத்தியாக இடம் பெற்றுள்ளது

குரு அவசியம் தேவை தானா?


 குருவின் வழிகாட்டல் அவசியம் தேவை தானா?

மகான் ஒருவரிடம் வந்த பக்தன் ஒருவன் அவரிடம், "குருவின் துணையின்றி எதையும் சாதிக்க முடியாதா? குருவின் வழிகாட்டல் அவசியம் தேவை தானா? என்று கேட்டான்.

அதற்க்கு அந்த மகான் அவனிடம், "ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வா" என்றார். அந்த பக்தனும் ஒரு வாளிநிறைய தண்ணீரைக் கொண்டுவந்து மகான் முன் வைத்தான். மகான் பக்கத்தில் இருந்த இரும்புத்துண்டை எடுத்து வாளியில் போட்டார். இரும்புத்துண்டு நீரில் மூழ்கியது. வாளியில் மூழ்கிய இரும்புத் துண்டை எடுக்க சொன்னார். அவன் எடுத்ததும்,

பக்கத்திலிருந்த சிறு மரப்பலகை துண்டை எடுத்து வாளி நீரில் போட்டார். அது மிதந்தது. அதன் மேல் இரும்புத் துண்டை வைக்க சொன்னார். பக்தனும் மரத்துண்டின் மேல் இரும்புத்துண்டை வைத்தான். இப்போது மரப்பலகையானது இரும்புத்துண்டை தாங்கிக்கொண்டு மிதந்தது.

அப்போது பக்தனை நோக்கி மகான் சொன்னார், " இந்த வாளி நீர் தான் பிறவிக்கடல், அதை கடக்க விரும்புபவர்கள் இந்த இரும்புத்துண்டு, பிறவிக் கடலை கடக்க தானாக முயற்சி செய்பவர்கள் மூழ்கிவிடுவார்கள், ஒரு நல்ல குருவின், அருளும், வழிகாட்டலும் இந்த மரப்பலகை போன்றது, இதன் ஆதாரத்தில் பிறவிக்கடலை கடக்க முயல்பவர்கள் இலகுவாக கடந்து விடலாம்" என்றார்.

உண்மையை உணர்ந்த பக்தன் மாகானின் பாதங்களை வீழ்ந்து வணங்கி சரணடைந்தான்.

Wednesday, May 22, 2013

ஆணவமும்,அதிகார போதையும்


ஓர் அரசனுக்குஅரச போகங்கள் அலுத்துப் போனது.வாழ்வின் நிலையாமை,ஆன்ம விழிப்புனர்வு இவற்றைப் பற்றியெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.

யாராவது ஒரு குருவைத் தேடிக் கண்டுபிடித்து இதற்கான உபதேசம் பெற வேண்டும்,ஞானம் பெற வேண்டும் என்றெல்லாம் அவனது மனமானது அலைபாய்ந்தது.

அப்போது ஒரு ஜென் குருவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அரசன் அவரிடம் என்னிடம் எல்லாம் இருக்கிறது.

ஏவல் செய்வதற்கு ஆயிரம் பேர் உள்ளனர்.

மற்றும் நான் பல கலைகள் கற்று இருக்கிறேன்.எனக்கு தெரியாததது ஏதும் இல்லை.

ஆனாலும்,

மனதில் அமைதி இல்லை.

அதனால் நான் ஞானம் அடைய வேண்டும்.

அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்..? என்ற தன் உள்ளடக்கையை அவரிடம் அவன் வெளியிட்டான்.

ஆனால் அவரோ,

ஞானம் அடைவது கிடக்கட்டும்,முதலில் அதற்கு நீ உன்னைத் தகுதி உடையவனாக ஆக்கிக் கொள் என்றார்.

அரசனுக்கு அவர் சொன்னது விளங்கவில்லை.தனக்கு ஞானம் பெறுவதற்கான எல்லாத் தகுதிகளும் இருப்பதாக நினைத்தான் மன்னன்.

அவன் மனதில் ஓடிய எண்ணங்களை புரிந்து கொண்ட ஜென் குரு,

மன்னா,

ஒரு நிலத்தில் பயிர்கள் விளைவிக்க வேண்டும் என்றால் முதலில் அந்த நிலத்தை நன்கு உழுது பண்படுத்த வேண்டும்.அதுபோல் உன் மனமும் ஞான உபதேச பெறுவதற்கு தகுந்த வகையில் பண்படுத்தப்பட வேண்டும் என்றார்.

ஆனால் ,

குருவின் இந்த பதிலால் மன்னன் சமாதானம் அடையவில்லை.

அந்தச் சமயத்தில் ஒரு சீடன் ஒருவன் நின்று பேசிக்கொண்டு இருந்த இடத்தைப் பெருக்கிக் கொண்டு வந்தான்.

அதனால் அங்கு ஏற்ப்பட்ட புழுதிப் படலத்தில் இருந்து தூசுகள் பறந்து வந்து அங்கு நின்று இருந்த மன்னனின் அழகிய ஆடைகளின் மீது படிந்தன.

மன்னன் மிகுந்த கோபத்துடன் அதை குருவிடம் சுட்டிக் காட்டி,சீடனை கண்டித்து வையுங்கள் என்றான்.

குரு அதைப் பார்த்து சிரித்தபடி,

உன்னிடத்தில் நிறைய பாம்புகள் நிறையக் குடி கொண்டு உள்ளது.

நீ முதலில் அதை அப்புறப்படுத்திவிட்டு என்னிடம் வா.

இப்போது நீ போகலாம் என்றார்.

பாம்புகளா,என்னிடத்திலா என்ன சொல்கிறார் இந்த குரு என்று மன்னன் சிந்தித்தபடி அந்த இடத்தைவிட்டு சென்றான்.

சில ஆண்டுகள் கழித்து மீண்டும் குருவை பார்க்க வந்தான் அரசன்.

அப்போதும் அதே சீடன் பெருக்கிக் கொண்டு இருந்தான்.

இந்தத் தடவையும் குப்பை,கூளங்கள் அரசரின் ஆடையின் மீது ஒட்டிக் கொண்டன.

இந்த தடவை மன்னன் குருவிடம் செல்லாமல் நேராக சீடனிடம் சென்று,

நான் யார் என்று தெரியுமா..?

நான் இப்போது நினைத்தால் உன் தலையை சீவிவிடுவேன் என்று சீடனைப் பார்த்து கடுஞ்சொல்லால் திட்டினான்.

இப்போது குரு அரசனைப் பார்த்து,

உன்னிடம் நிறைய நாய்கள் உள்ளன.

அதை முதலில் விரட்டிவிட்டு என்னிடம் வா என்றார் குரு.

மன்னனுக்கு ஒன்றும் புரியவில்லை.

ஆனால் மன்னன் யோசித்தபடி அந்த இடத்தில் இருந்து நகர்ந்தான்.

இரண்டு ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்டன.

மீண்டும் மன்னன் குருவை தேடி வந்தான்.

இந்த முறையும் சீடன் அந்த மன்னனை விட்டுவைக்கவில்லை.

இந்த தடவை சீடன் ஒரு வாளியில் சாணக் கரைசல் கொண்டு தொளித்துக் கொண்டு இருந்தபோது சீடனின் கை தவறுதலாக மன்னன் மீது பட்டு சாணக் கரைசல் முழுவதும் அரசனின் ஆடை முழுவதும் சிந்திவிட்டது.

ஆனால்,

இந்தத் தடவை மன்னன் கோபமும் படாமல்,

சீடனை பார்த்து முக மலர்ச்சியுடன்,

நான்தான் தவறு இழைத்துவிட்டேன்,

நீங்கள் வேலை செய்யும்போது கவனிக்காமல் குறுக்கே வந்துவிட்டேன் என்றான் அமைதி தவழ..

இதையெல்லாம் தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டு இருந்த குரு மன்னன் இருக்கும் இடம் தேடி வந்து மன்னனைப் பார்த்து,

மன்னா,

நீ ஞானம் பெற இப்போது முழுத் தகுதியும் அடைந்துவிட்டாய் இந்த கணம் முதல்.

உனக்கு நான் சொல்லித் தருவதற்கு ஒன்றும் இல்லை என்றார் குரு.

அரசனும் குருவை வணங்கிவிட்டு,மனம் தெளிவு அடைந்தவராய் சென்றார்.

இந்த கதைமூலம் நாம் உணர்ந்து கொள்வது....

ஆரம்பத்தில் மன்னன் குறைவான அறிவை உடைய ஒரு புல்லனைப் போல் நடந்து கொண்டான்.

அரசன் குருவை சந்திக்க வந்த இரண்டு முறையும் அப்போது தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவம் இருந்தது.

பேச்சிலும் அதிகார திமிர் இருந்தது.

ஆனால்,

இவைகள் அனைத்தையும் அறிந்த குருவும்,சீடனும் அப்போது அமைதி காத்தார்கள்.

மூன்றாவது தடவை மன்னன் வந்தபோது மன்னனிடம் அறிவு குடி கொண்டு இருந்தது.

ஆணவமும்,அதிகாரமும் இல்லாமல் முகத்தில் அன்பு தழும்பியது.

ஒருவன் மிகுந்த செல்வாக்கு உடையவனாக இருந்தாலும்,

மிகுந்த புத்திக் கூர்மை உடையவனாக இருந்தாலும்,

ஆற்றல்,அதிகாரம் படைத்தவனாக இருந்தபோதிலும்,

நல்ல குணங்கள் மிகுதியாக இருந்தாலும்,

அவன் இடத்தில் அதிகார போதையும்,அகம்பாவமும்

தலைதூக்குமானால் அவன் மீது யாருக்கும் மதிப்பும்,மரியாதையும் ஏற்படாது.

மற்றும் எல்லா நற்பண்புகள் ஒருவனிடத்தில் இருந்தும்,

அகந்தை,கர்வம் தோன்றிவிட்டால் அவனது ஆற்றலும்,அறிவும் பயனற்று போய்விடும்.

என்ன நண்பர்களே,

சரிதானே..?