Thursday, April 17, 2014

பொது அறிவு, ....

பொது அறிவு, ....

* லெபனான் நாட்டில் ஒரு விவசாயி 11 கிலோ எடையுள்ள உருளைக்கிழங்கை அறுவடை செய்திருக்கிறார்.

* சில டைனோசர்களுக்கு சுமார் ஆயிரம் பற்கள் வரை இருந்தன.

* தேனீக்கள் பச்சை அல்லது நீலம் அல்லது சிவப்பு வண்ணத்திலும் இருக்கும்.

* சில வகை காளான்கள் இருளில் ஒளிரும்.

* பூனைகள் பிறக்கும்போது நீலக்கண்களையே கொண்டிருக்கின்றன.

* பெரியவர்களுக்கு ஓராண்டில் சராசரியாக 1,500 கனவுகள் ஏற்படுகின்றன.

* சூரியனிலிருந்து பூமிக்கு ஒளி வந்து சேர 8 நிமிடங்கள் 19 வினாடிகள் ஆகின்றன.

* உருகி வழிவது போன்ற தோற்றத்தில் இத்தாலியில் ஒரு கட்டிடம் உள்ளது.

* சில பன்றிகள் மண்ணைப் பார்த்து பயப்படும்.

* கால்களில் வியர்வை அல்லது ஏதேனும் வாசனை உடையவர்களைக் கடிக்க கொசுக்கள் விரும்புகின்றன.

Wednesday, April 16, 2014

மருந்தில்லா மருத்துவம் ! ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் :-

மருந்தில்லா மருத்துவம் ! ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் :-

அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

குடல்புண்

மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்

செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

தேமல்

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

மூலம்

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

தீப்புண்

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வரட்டு இருமல்

எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

சோர்வு நீங்க

வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.

சளிக் காய்ச்சல்

புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

இருமல், தொண்டை கரகரப்பு

பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

சளி

பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

டான்சில்

வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

வயிற்றுப் போக்கு

சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.

வாயுக் கோளாறு

மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் 
நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
மஞ்சள் பாலின் திகைக்க வைக்கும் 15 நன்மைகள்:-

மஞ்சள் உலகின் மிகச் சக்தி வாய்ந்த மற்றும் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்துள்ள பொருட்களில் ஒன்றாகும். குறிப்பாக, மஞ்சளானது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவு மற்றும் அழற்சி குறைபாடுகள் (அதாவது கீல் வாதம்) சிகிச்சையில் பயன்ப டுத்தப்படுகிறது. 

ஆனால் அத்தோடு அதன் நன்மை நின்று விடுவதில்லை. மேலும் மஞ்சள் மற்றும் பால் இயற்கையான ஆன்டிபயாடிக் பண்புகளை கொண்டுள்ளன. உங்களுடைய அன்றாட உணவில் இந்த இரண்டு இயற்கை பொருட்களையும் சேர்த்துக் கொள்வதால், பல்வேறு நோய்கள் மற்றும் நோய்த் தொற்றுகளைத் தடுக்கலாம். 

அதிலும் மஞ்சள் தூளை சற்றே சூடான பாலுடன் கலக்கப்படும் போது, எண்ணிலடங்கா பலவித சுகாதார பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இது சுற்றுச் சூழலிலுள்ள அபாயகரமான நச்சுகள் மற்றும் தீங்கு விளை விக்கும் நுண்ணுயிரிகளுடன் போராட ஒரு பயனுள்ள தீர் வாகவும் உள்ளது. 

மஞ்சள் பால் செய்முறை: 

1 அங்குல மஞ்சள் துண்டை எடுத்துக் கொள்ளவும். அதை பாலில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின் பாலை வடிகட்டி மஞ்சளை எடுத்துவிடவும். பின்பு குளிர வைத்து, இந்த பாலைக் குடிக்கவும். இப்போது இயற்கை நமக்கு தந்த இந்த அற்புதமான அன்பளிப்பின் முக்கியமான 15 நன்மைகளைப் பார்ப்போம். 

1.சுவாசக் கோளாறு : 

மஞ்சள் பால், பாக்டீரியா நோய்த்தொற்றுகள் மற்றும் நச்சுயிரி சார்ந்த நோய்த் தொற்றுகளைத் தாக்கும் நுண்ணுயிர் ஆகும். இந்த மசாலாப் பொருள் உடலை வெப்பப்படுத்தும் என்பதால் நுரையீரலின் சளித் தேக்கம் மற்றும் சைனஸ் பிரச்சனைக்கு விரைவான நிவாரணம் வழங்குகிறது. அதுமட்டுமின்றி சுவாச அமைப்பு தொடர்பான நோய்களான ஆஸ்துமா மற்றும் மூச்சு குழாய் அழற்சி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாகவும் இருக்கிறது. 

2.புற்றுநோய் : 

மஞ்சள் பால் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகளைக் கொண்டுள்ளதால், இது மார்பகம், சரும, நுரையீரல், புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்று நோயின் வளர்ச்சியை தடுக்கிறது மற்றும் நிறுத்தவும் செய்கிறது. 

3.தூக்கமின்மை : 

வெதுவெதுப்பான மஞ்சள் பால் அமினோ அமிலம், டிரிப்தோபன் போன்றவற்றை உற்பத்தி செய்து அமைதியான மற்றும் பேரின்ப தூக்கத்தைத் தூண்டும் என்று கூறப்படுகிறது. 

4.ஜலதோஷம் மற்றும் இருமல்: 

மஞ்சள் பால் ஜலதோஷம் மற்றும் இருமலுக்கு ஒரு சிறந்த தீர்வாக கருதப்படக் காரணம், அதன் நச்சுயிரிக்கு எதிரான குணமும் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் ஆகும். இது தொண்டைப் புண், இருமல் மற்றும் சளிக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது. 

5.கீல்வாதம் : 

மஞ்சள் பால், கீல்வாதத்தை குணப்படுத்த மற்றும் நாள்பட்ட மூட்டு வலிகளின் காரணமாக ஏற்படும் வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது வலியை குறைத்து நெகிழ்தன்மையுள்ள மூட்டுக்கள் மற்றும் தசைகள் உருவாக்க உதவுகிறது. 

6.வேதனை மற்றும் வலிகள்:

மஞ்சள் தூள் கலந்த பொன்னான பால், வேதனை மற்றும் வலிகளிலிருந்து சிறந்த நிவாரணம் அளிக்கிறது. இதனால் உடலில் உள்ள முதுகெலும்பு மற்றும் மூட்டுகளையும் வலுப்படுத்த முடியும். 

7.ஆன்டிஆக்ஸிடன்ட்: 

மஞ்சள் பால் ஒரு தடையற்ற முழுமையான எதிர் ஆக்ஸிகரணிகளுக்கு ஒரு சிறந்த ஆதாரமாக உள்ளது. இதனால் பல வியாதிகளை குணப்படுத்தவும் முடியும். 

8.ரத்தத்தை சுத்தப்படுத்தும்: 

மஞ்சள் பால் ஆயுர்வேத பாரம்பரியத்தில் ரத்தத்தை தூய்மைப்படுத்தும் ஒரு சிறந்த பொருளாகவும் மற்றும் சுத்தப்படுத்தியாகவும் கருதப்படுகிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்திற்கு உயிர்ப் பூட்டு பொருளாகவும் மற்றும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யவும் உதவுகிறது. மேலும் இது நிணநீர் அமைப்பு மற்றும் இரத்த குழாய்களில் இருக்கும் அனைத்து நச்சுக்களையும் நீக்கி, ரத்த மெலிவூட்டியாக வேலை செய்கிறது 

9.கல்லீரல் நச்சு நீக்கி: 

மஞ்சள் பால் ஒரு இயற்கையான கல்லீரல் நச்சு நீக்கியாக விளங்குகிறது. இது ரத்தத்தை தூய்மைப்படுத்தி, இதனால் கல்லீரல் நன்றாக செயல்பட உதவும் ஒரு ஊக்கியாகவும் இருக்கிறது. இதன் தூய்மைப்படுத்தும் குணத்தினால், இது கல்லீரலுக்கு ஆதரவாகவும் மற்றும் நிணநீர் மண்டலத்தையும் சுத்தமாக்குகிறது. 

10.எலும்பு சுகாதாரம்: 

மஞ்சள் பாலில் கால்சியம் நிறைந்து காணப்படுவதால், அவை எலும்புகள் ஆரோக்கியமாக மற்றும் வலுவாக வைத்திருக்கவும் உதவுகிறது. இந்தியாவில் தலைச்சிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், நல்ல ஆரோக்கியமான எலும்பைப் பெற, இந்த மஞ்சள் பாலை தினசரி குடிக்கிறார். மஞ்சள் பால் எலும்பு தேய்மானத்தையும் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸையும் குறைக்கிறது. 

11.செரிமான நலம்: 

இது ஒரு சக்தி வாய்ந்த கிருமி நாசினியாக இருப்பதால், குடல் சுகாதாரத்தை ஊக்கு விக்கிறது. மேலும் வயிற்று புண்களையும் மற்றும் பெருங்குடல் அழற்சியையும் கட்டுப்படுத்துகிறது. அது மட்டுமின்றி இது சிறந்த செரிமான சுகாதாரத்திற்கும் மற்றும் வயிற்றுப்புண்கள், வயிற்றுப் போக்கு மற்றும் அஜீரணத்தையும் தடுக்கிறது. 

12.மாதவிடாய் தசைப் பிடிப்புகள்: 

இது வலிப்பு நோயைக் குறைக்கும் மருந்தாக இருப்பதால், மாதவிடாய் காலத்தில் உண்டாகும் தசைப்பிடிப்புகள் மற்றும் வலியையும் போக்குகின்றது. கர்ப்பிணிப் பெண்களுக்கு எளிதாக பிரசவம் நடைப்பெற, குழந்தைப் பேற்றுக்குப் பின் நலம் பெற, அதிகமான தாய்ப்பால் சுரத்தலுக்கு மற்றும் கருப்பைகள் வேகமாக சுருங்குதலுக்கும் மஞ்சள் தூள் கலந்த பொன்னான பாலை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். 

13.சொறி மற்றும் சருமம் சிவத்தல்: 

கிளியோபாட்ரா, மென்மையான மிருதுவான மற்றும் ஒளிரும் சருமத்தைப் பெற மஞ்சள் பாலில் குளித்தார். இதே போல், ஒளிரும் சருமத்தைப் பெற வேண்டுமானால் மஞ்சள் பாலை குடிக்க வேண்டும். 

மேலும் சருமம் சிவத்தல் மற்றும் கரும்புள்ளிகளின் தோற்றத்தைக் குறைக்க, ஒரு பஞ்சுருண்டையை மஞ்சள் பாலில் ஊற வைத்து, பின் அந்த பாலில் நனைத்த பஞ்சினைக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனால் சருமமானது முன்பை விட இன்னும் பிரகாசமாகவும் மற்றும் ஜொலிக்கவும் செய்யும். 

14.எடை குறைப்பு: 

மஞ்சள் பால் உணவில் இருக்கும் கொழுப்பை முறிக்க உதவுகிறது. இதனால் இது உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கிறது. 

15.எக்ஸிமா/சிரங்கு எக்ஸிமா (கை, கால்களில் தோல் உறிதல்):

சிகிச்சைக்கு தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் பால் குடிக்க வேண்டும். இதனால் நாளடைவில் அந்த பிரச்சினை குணமாகும். அதிநவீன மருத்துவம் ஆயிரமாயிரம் வந்துவிட்டாலும் மஞ்சளுக்கு உள்ள மகிமையை எவ்வளவு எடுத்துக்கூறினால் மிகையாகாது. 

ஆன்மிகத்திலும் மஞ்சளின் பெருமை போற்றப்படும் வகையில் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது போல மஞ்சள் இல்லா மனித சரீரம் மாசு படிந்தே காணப்படும் எனலாம். 

அந்த அளவுக்கு நச்சுத்தன்மையை வேறோடு அறுக்கும் மஞ்சளை நாமும் நமது பயன்பாட்டில் அதிகமாகவே எடுத்துக்கொண்டு மேற்கூறிய நோய்கள் இன்றி வாழ்வோம்

ஆரோக்கியத்திற்கு பால் கலக்காத இயற்கை பானம்:-

ஆரோக்கியத்திற்கு பால் கலக்காத இயற்கை பானம்:-

பால் கலக்காத பானம் தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம். இதோ சில ஆலோசனைகள். துளசி இலை டீ: சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

ஆவாரம்பூ டீ:

காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.

செம்பருத்திப்பூ டீ:

ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம்.

கொத்தமல்லி டீ:

கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும்.

புதினா இலை டீ:

புதினா இலைகளை நீரிகில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

கொய்யா இலை டீ:

கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும். 

முருங்கைக் கீரை டீ:

முருங்கை இலை, எலுமிச்சை இலை இரண்டையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்தால் மணமிக்க முருங்கைக் கீரை டீ ரெடி.

குறிப்பு:

டீ வாசம் வேண்டும் என்றால் சிறிது டீத்துளை சேர்த்துக் கொள்ளலாம். பனைவெல்லம், நாட்டுச்சக்கரை சேர்ப்பது தான் மிக நல்லது.

பொது அறிவு...

பொது அறிவு...

* உலகிலேயே மிகப்பெரிய பாறை ஆஸ்திரேலியாவில் உள்ளது. ‘உலுறு’ என்ற இப்பிரமாண்ட பாறை 114 மாடிக் கட்டிடத்தை விடவும் உயரமானது.

* சில மேகங்களின் உயரம் 16 கிலோமீட்டரை விடவும் அதிகம்!

* வாளை மீன்கள் வாயு வெளிப்படுத்துவதன் மூலமாக தகவல் பரிமாறிக் கொள்கின்றன.

* குதிரைகளால் ஒரே நாளில் 160 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும்.

* கைரேகையைப் போலவே நாக்கின் ரேகைகளும் தனித்துவம் மிக்கவை.

* ஈபிள் டவரின் 1665 படிகளில் ஒருவர் ஒருமுறை சைக்கிள் ஓட்டிச் சென்றிருக்கிறார்.

* வெண் சுறாக்கள் 15 கொரில்லாக்கள் அளவு எடை கொண்டவை.

* 30 கோடி ஆண்டுகளுக்கு முன் 6 அடி நீளமுள்ள மரவட்டை பூச்சிகள் உலகில் சுற்றிக் கொண்டிருந்தன.

* கடலில் இதுவரை பொங்கிய அலைகளில் மிகப்பெரியது எம்பயர் ஸ்டேட் பில்டிங்கை விட உயரமானதாக இருந்தது.

* விண்கலத்தில் உருளைக்கிழங்குச் செடி வளர்த்து சோதனை செய்திருக்கின்றனர் விண்வெளி விஞ்ஞானிகள்.

* கிரிஸ்லி வகை கரடியால் குதிரைக்கு இணையான வேகத்தில் ஓட முடியும்.

Tuesday, April 15, 2014

பொது அறிவு

பொது அறிவு

• முதன் முதலில் தமிழில் தந்தி அனுப்பும் முறை ஈரோட்டில் அறிமுகமானது.

• தமிழ்ப் பத்திரிகைகளில் முதன் முதலில் கார்ட்டூன்களை வெளியிட்டவர் மகாகவி பாரதியார்.

• ஜப்பானியர்களுக்கு 3 என்ற எண் பிடிக்காது.

• ஒரு குண்டூசியின் தலைப் பரப்பில் பத்தாயிரம் பாக்டீரியாக்களை அடுக்க முடியும்.

• இமய மலையில் வசிக்கும் யாக் எருமையின் பால் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

• டி.வி.ஆன்டெனா, சமயங்களில் இடிதாங்கியாகவும் செயல்படும்.

• டிப்பர் என்ற பறவை நீரின் அடி ஆழத்திற்குச் சென்று, இரையைப் பிடிக்கும்.

• ஆழ்கடலைப் பற்றி ஆராயக்கூடிய இயலுக்கு ஓஷனோகிராஃபி என்று பெயர்.

• இந்தியாவில் 22,000-க்கும் மேற்பட்ட ரெயில்வே லெவல் கிராஸிங்குகளுக்கு மூடுகதவே (கேட்) கிடையாது.

• இந்தியாவில் முதன் முதலாக மின்சார வசதியைப் பெற்றது கல்கத்தா நகரம்.

• முதன் முதலில் மருத்துவமனை அமைக்கப்பட்ட நாடு இத்தாலி.

• நீர்யானை மனிதனைவிட வேகமாக ஓடும்.

• ஆஸ்திரேலியாவில் மனிதர்களைவிட ஆடுகளே அதிகம்.

• உலகில் 26 நாடுகளில் கடற்கரை கிடையாது.

• பூமிக்கு மிக அருகிலுள்ள நட்சத்திரமே 4,02,32,500 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளதாம்.

• விரல்களின் 40 சதவீத பலம் கட்டை விரலில்தான் இருக்கின்றது.

• ஏப்ரல் முதல் தேதியை முட்டாள்கள் தினமாக முதழி முதலில் கொண்டாடிய நாடு இங்கிலாந்து.

• யானை தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமே பிற மிருகங்களுடன் சண்டையிடும்.

• விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் இரண்டு முறை எம்.பி.ஆக இருந்தவர்.

• ஒரு சிலந்தி வலையிலுள்ள நூல் முமுவதையும் இழுத்துப் பார்த்தால் 2000 மைல்கள் நீளம் கூட இருக்கும்

ஒரு பெண், திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது குத்து விளக்கை ஏற்றச்சொல்வது ஏன் ?

ஒரு பெண், திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது குத்து விளக்கை ஏற்றச்சொல்வது ஏன் ?

ஒரு பெண்ணுக்கு இருக்க‍ வேண்டிய ஐந்து நற்குணங்கள், 

இந்த குத்துவிளக்கில் உள்ள‍ ஐந்து முகங்ககளை ஏற்றுவதன் மூலம் உறுதி அளிப்ப‍தாக அர்த்த‍ம்!

என்ன‍ இது, குத்துவிளக்குக்கும் பெண்ணுக்கும் என்ன‍ சம்பந்தம் என்று தானே யோசிக்கிறீர்கள். 

இதற்கு விளக்கம் உண்டு முத லில் 

இந்த குத்துவிளக்கின் பாகங்களைப்பற்றி பார்ப்போம்.
குத்துவிளக்கின் தாமரைப்போன்ற பீடம் – பிரம்மாவையும்
குத்துவிளக்கின் நடுத்தண்டு – விஷ்ணுவையும்
நெய் எறியும் அகல் – சிவனையும்
திரி – தியாகம்
தீபம் – திருமகளையும்
சுடர் – கலைமகளையும் குறிக்கிறது

குத்துவிளக்கில் உள்ள‍ ஐந்து முகங்களும், பெண்ணுக்கு வேண் டிய 
அன்பு, 
அறிவு, 
உறுதி, 
நிதானம், 
பொறுமை போன்ற ஐந்து நற்குணங்களை குறிப்பதாகும்.

அதனால்தான் ஒரு பெண் திருமணமாகி முதல் முறையாக தனது கணவன் வீட்டிற்கு அதாவது புகுந்த வீட்டிற்கு வரும்போது முதல் வேலையாக அப்பெண்ணைக் குத்துவிளக்கை ஏற்றச் சொல்லி, அந்த குத்து விளக்கில் ஏற்ற‍ப்பட்ட‍  தீபம் மூலமாக வீடுமுழுக்க‍ ஒளிபரவச் செய்கின்றனர்.

அவசர கால முதலுதவி முறைகள்...!

அவசர கால முதலுதவி முறைகள்...!

வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால் :

உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்கு முதல் உதவி செய்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை. உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் மசாஜ் செய்யுங்கள்.

வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன்.

தலைவலி :

கை கட்டை விரல் நகத்திற்கு நேர் கீழ் உள் பக்கம் (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம்.

வயிற்றுப் பிரச்னைகள் :

தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.

கால் கட்டை விரலிலிருந்து மூன்றாவது விரலுக்கும் (நடுவிரல்) இரண்டாவது விரலுக்கும் இடைப்பட்ட சவ்வுப் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்.

வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல் போட்டது போன்றிருத்தல், உடம்பு வலி ஆகியவைகள் பறந்து போகும். இது போன்ற அக்குபஞ்சர் முறையிலான முதலுதவி முறைகளை தெரிந்துக் கொள்வதன் மூலம் கையில் முதலுதவி பெட்டி இல்லாத போதும் நம்மால் முதலுதவி செய்ய இயலும்.

கொழுப்புகளை குறைக்கும் உணவுகள் :-

கொழுப்புகளை குறைக்கும் உணவுகள் :-

உடல் எடையை அதிகரித்து விட்டு, அதை குறைக்க முடியாமல் ஜிம், தினமும் உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது போன்றவற்றை பின்பற்றி வருபவர்கள் ஏராளம். ஆனால் அவ்வாறு சரியாக உண்ணாமல் இருப்பதால் பல நோய்கள் வருகின்றன.

ஏனெனில் தினமும் உடலில் இனிப்பு, உப்பு, புளிப்பு போன்றவற்றை சேர்க்க வேண்டும். மேலும் உடலில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க, சரியாக உணவு உண்டு வந்தாலே அதிக உடல் எடையானது குறைந்து விடுவதோடு ஆரோக்கியமாக வாழலாம்.

மஞ்சள்: மஞ்சளானது ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, அதிக இரத்த அழுத்தம் எற்படாமல், இரத்த சுழற்சியானது நன்கு நடைபெற்று, இதய நோய் ஏற்படாமலும் இருக்கும்.

ஏலக்காய்: இது ஒரு சிறந்த உணவுப் பொருள். அதை உண்டால் உடலில் உள்ள மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் இது ஒரு சிறந்த செரிமானப் பொருள். ஆகவே எந்த உணவு உண்டாலும், அதை நன்றாக செரித்துவிடும். ஆகவே அதனை தினமும் உணவுப் பொருட்களில் சேர்த்தால், உடல் எடை குறையும்.

மிளகாய்: உணவில் சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. மேலும் இதில் உள்ள கேப்சைசின்(capsaicin) உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும். கேப்சைசின் என்பது வெப்ப ஊட்ட பொருள். அது இருக்கும் உணவுப்பொருளை உண்பதால், 20 நிமிடங்களில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும்.

கறிவேப்பிலை: அதை தினமும் உண்பதால் எடையானது எளிதாக குறையும். ஏனெனில் இந்த இலை உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் டாக்ஸின் போன்றவற்றை உடலில் தங்கவிடாமல் வெளியேற்றும். மேலும் அதிக எடை இருப்பவர்கள், தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் உண்டால் நல்லது. இல்லையென்றால், அதனை அரைத்து தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும்.

பூண்டு: இது ஒரு சிறந்த கொழுப்பை கரைக்கும் பொருள். ஏனெனில் இதில் சல்பர் இருக்கிறது. இது கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டி-பாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை விரைவில் ஸ்லிம் ஆக மாற்றும்.

கடுகு எண்ணெய்: இதில் மற்ற எண்ணெயை விட குறைந்த அளவு கொழுப்புகள் உள்ளது. மேலும் இதில் ஃபேட்டி ஆசிட்(fatty acid), இரூசிக் ஆசிட்(erucic acid) மற்றும் லினோலிக் ஆசிட்(linoleic acid) போன்றவை இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் ஆன்டி ஆக்ஸிடன்ட், தேவையான வைட்டமின் மற்றும் தேவையற்ற கொழுப்புகளை அகற்றும், அதனால் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

முட்டைக்கோஸ்: அதனை சமைத்தும் உண்ணலாம் அல்லது பச்சையாகவே சாப்பிடலாம். அது உடலில் சேரும் கொழுப்புகளை வேறு விதமாக மாற்றி மற்ற உடலில் நடைபெறும் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும். இதனால் உடலானது பருமனடையாமல் இருக்கும்.

தேன்: இது உடலைக் குறைக்க ஒரு சிறந்த வீட்டு மருந்து. இதனை உண்டால் உடலில் சேரும் கொழுப்புகளை சாதாரணமாக உடலில் நடைபெறும் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும். ஆகவே தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை சூடான தண்ணீரில் கலந்து, விடியற்காலையில் குடிக்க வேண்டும்.

மோர்: பால் பொருளில் கொழுப்புகள் அதிகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் பாலில் 8.9 கிராம் கொழுப்பும், 157 கலோரியும் உள்ளது. ஆனால் அத்தகைய பால் பொருளில் ஆன மோரில் 2.2 கிராம் கொழுப்பும், 99 கலோரியும் மட்டுமே உள்ளது.

ஆகவே அதனை உண்பதால் உடலுக்கு தேவையான அளவு ஊட்டசத்துக்கள் கிடைப்பதோடு, கொழுப்பு மற்றும் கலோரியானது அதிகமாக சேராமல் எடையும் சரியான அளவு இருக்கும். ஆகவே மேற்கூறிய இத்தகைய உணவுகளை உண்டாலே, உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, உடலிலும் எடை கூடாமல் அழகாக இருக்கலாம்...

முத்திரைத்தாளில் என்னென்ன குறிப்பிடப்பட வேண்டும்?

முத்திரைத்தாளில் என்னென்ன குறிப்பிடப்பட வேண்டும்?

முத்திரைத்தாளில் சொத்து சம்பந்தப்பட்ட விவரங்கள் அனைத்தும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.

சொத்தை வாங்குபவர் பெயர், தந்தை பெயர், முகவரி, சொத்தை விற்பனை செய்பவரின் பெயர், அவருடைய தந்தை பெயர், முகவரி, சொத்து தொடர்பான விவரங்கள், அதை விற்பனை செய்ய அவருக்குண்டான அதிகாரம், விற்க சம்மதித்த விவரம், சொத்து விற்பனைக்கு பரிமாறிக்கொண்ட தொகை, சாட்சிகள் பெயர், அவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.

வாங்குகிற இடத்தின் அளவு, அது இருக்கும் திசை, அதைச் சூழ்ந்துள்ள விவரக்குறிப்புகள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

கட்டணம் எவ்வளவு?

நிலம், கட்டிடம் ஆகிய சொத்துக்களை விலை கொடுத்து வாங்கினாலோ அல்லது குத்தகைக்கு ஒப்பந்தம் செய்தாலோ முறைப்படி பத்திரப்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

பத்திரப்பதிவின்போது சொத்தின் மதிப்பு, அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பு இரண்டையும் ஒப்பிட்டு அதன்படி முத்திரைத்தாளில் எழுதவேண்டும். வாங்கும் சொத்து மதிப்புக்கேற்ப முத்திரைத்தாள் பயன்படுத்தப்பட வேண்டும்.

சொத்து மதிப்பில் இருந்து எட்டு சதவீதத்தை முத்திரைத்தாள் கட்டணமாக செலுத்த வேண்டும் (நிலத்தின் சந்தை மதிப்பில் ஏழு சதவீதத் தொகைக்கு முத்திரைத்தாள் கட்டணமாகவும், ஒரு சதவீதம் சந்தை மதிப்புத் தொகை பதிவுக்கட்டணமாகவும் பெறப்படும்.)

சொத்து வாங்குவதாகவும் விற்பதாகவும் சிலர் ஒப்பந்தம் செய்து கொள்வதுண்டு. இதற்கு ஒப்பந்தம் செய்ய 20 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணமும், ஒப்பந்தத்தை ரத்து செய்ய 50 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணமும் செலுத்த வேண்டும். பதிவுக்கட்டணமாக 50 ரூபாய் செலுத்த வேண்டும்.

சொத்தின் உரிமையாளர் பல்வேறு காரணங்களால் தனது சொத்துக்களின் மீதான உரிமையை விற்பதற்கோ, அடமானம் வைப்பதற்கோ, பராமரிப்பதற்கோ பவர் ஆஃப் அட்டர்னியாக ஒருவரை நியமிப்பதுண்டு. இத்தகைய அதிகாரம் வழங்கினால் இதற்கான முத்திரைத்தாள் கட்டணமாக அசையா சொத்துக்கு 100 ரூபாயும், பதிவுக்கட்டணம் பத்தாயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும். இதுவே அசையும் சொத்துக்கு (நகை போன்றவற்றிற்கு) முத்திரைத்தாள் கட்டணம் 100 ரூபாயும், பதிவுக் கட்டணமாக 50 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும்.

பத்திரப்பதிவின்போது கவனிக்க வேண்டியவை:

*ஒருவர், தான் வாங்குகிற இடத்தின் மீது எந்த வில்லங்கமும் இல்லை என்பதை வில்லங்கச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் சரிபார்த்த பிறகே இடத்தின் விலையைப் பேசி முடிவு செய்ய வேண்டும். அதையும் வழிகாட்டி மதிப்பின்படியே பத்திரப்பதிவு செய்ய வேண்டும்.

*எந்தப் பகுதியில் இடம் அமைந்துள்ளதோ அந்த எல்லைக்குட்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்துக்குச் சென்று, அந்த இடத்துக்கான வழிகாட்டி மதிப்பு எவ்வளவு என்பதைத் தெரிந்துகொண்டு அந்த மதிப்புக்கேற்ப முத்திரைத்தாள் வாங்கப்பட வேண்டும்.

*பின்னர் பத்திரப்பதிவு அலுவலரிடம் சென்று, பத்திரப்பதிவுக்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். பத்திரத்தில் சேர்க்கப்பட வேண்டிய விவரங்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டு இருக்கிறதா? ஏதேனும் விடுபட்டிருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

*முதலிலேயே முத்திரைத்தாளில் எழுதிவிடாமல் ஒரு பேப்பரில் எழுதிப் பார்த்து, விவரங்கள் ஏதேனும் சேர்க்கவோ, நீக்கவோ வேண்டுமெனில் அதனைத் திருத்தம் செய்துகொண்டு இரண்டு மூன்று முறை படித்துப் பார்த்து எல்லாம் சரியாக இருக்கும்பட்சத்தில் முத்திரைத்தாளில் எழுதப்பட வேண்டும்.

*முன்தொகை போக, மீதமுள்ள தொகையை பத்திரப்பதிவு செய்யும் நாளில் கொடுக்க வேண்டும். பத்திரப்பதிவு செய்யுமுன் மொத்தப் பணத்தையும் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

*பத்திரப்பதிவு செய்யும் சிலமணி நேரத்திற்கு முன்பாகவே சொத்தை வாங்குபவர், விற்பவர், சாட்சிகள் உள்பட சம்பந்தப்பட்ட அனைவரும் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்று விட வேண்டும்.

* பத்திரப்பதிவு முடிந்ததும் அதற்குரிய ரசீதைக் கேட்டு வாங்க வேண்டும். பின்னர் அந்த ரசீதை சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்து, பத்திரத்தை வாங்கிவிட வேண்டும். அதை வாங்குவதற்கு தாமதம் செய்யக்கூடாது. அதுபோல் பத்திரம் வாங்கியதும் பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பித்து விட வேண்டும்.

கரும்புள்ளிகள் மறைய

கரும்புள்ளிகள் மறைய

 ஒரு சிலருக்கு முகத்தில் பருக்கள் பெறியளவில் தோன்றி சில நாட்கள் அல்லது ஒரு வாரம் வரை இருக்கும் இதுபோன்ற பருக்களால் முகத்தில் கரும்புள்ளி ஏற்படும். இதனைப் போக்க....

பயிற்றம்மா மஞ்சள் தூள் தயிர் ஆகியவற்றை குழைத்து கரும்புள்ளிகள் மேல் தடவி குளிர்ந்து தண்ணீரினால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்

நன்கு பழுத்த தக்காளியை வெட்டி முகத்தில் பூசி சிறிது நேரத்தின் பின் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

முட்டை வெள்ளைக்கருவுடன் தேசிக்காய்ச்சாறு, தேன் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்களின் பின்னர் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும். தயிருடன் கடலைமா கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்களின் பின்னர் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

ஒரு ஸ்பூன் தயிருடன், பாதி தக்காளிப் பழத்தை நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் ஊற விட்டுக் கழுவினால் நாளடைவில் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவு பெறும்.

எலுமிச்சை, வெள்ளரிக்காய் சாறு எடுத்து முகத்தில் தடவி காய்ந்ததும் முகத்தை கழுவலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் படிப்படியாக குறையு
 \ 
முட்டை சருமத்திற்கு மிகவும் சிறந்த பொருள். அதனை சருமத்திற்கு பயன்படுத்தினால் சருமம் பொலிவு பெறுவதுடன், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளும் போய்விடும்.

அதற்கு முட்டையின் மஞ்சள் கருவுடன், ஜெலட்டின் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பாலை சேர்த்து, 1 நிமிடம் சூடேற்றவும். பின் அதனை நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதனை முகத்திற்கு தடவி, 5-10 நிமிடம் காய வைக்க வேண்டும். பிறகு அதனை முகத்தில் இருந்து விரல்களால், உரித்து எடுக்கவும். பின் முகத்தை குளிர்ந்த நீரால் தடவவும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, சருமமும் இறுக்கமடையும்.

எலுமிச்சை சாற்றில் இருக்கும் ஆல்பா ஹைட்ராக்ஸி ஆசிட் சருமத்தில் இருக்கும் பாக்டீரியா, கிருமிகள் போன்றவற்றை அழிப்பதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள், கரும்புள்ளிகளை எளிதில் நீக்கிவிடும்.

மேலும் எலுமிச்சை சாற்றை முட்டையின் வெள்ளை கருவோடு கலந்து பேஸ்ட் செய்து முகத்திற்கு தடவி, 10 நிமிடம் கழித்து, அதனை முகத்தில் இருந்து உரித்துவிட வேண்டும். பின் அதனை மைல்டு ஃபேஸ் வாஷால் கழுவி விட வேண்டும். இதனால் அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய்கள் நீங்கிவிடும்.

ஆரஞ்சு பழத்தின் தோலை காய வைத்து, பொடி செய்து, பாலுடன் கலந்து பேஸ்ட் போல் செய்து முகத்திற்கு தடவ வேண்டும். வேண்டுமென்றால் அதில் சிறிது எலுமிச்சை சாற்றையும் சேர்த்து கலந்து தடவலாம்.

அவ்வாறு அதனை தடவி 10-15 நிமிடம் காய வைத்து, பின் அதனை நீக்கிவிட்டு, வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவவும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க பெரும்பாலோனோர் இந்த முறையையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

மேற்கூறியவற்றையெல்லாம் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, மற்ற பிரச்சனைகளும் வராமல் இருக்கும்.

முக்கியமாக முகத்தை கழுவியப் பின், முகத்தில் அரிப்புகள் எதுவும் ஏற்படாமல் இருக்க கிளின்சரை வைத்து ஒருமுறை கழுவி விட வேண்டும். இதனால் முகமானது நன்கு பொலிவோடு, மிருதுவான சருமத்தோடு அழகாக இருக்கும்.

ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்:-

ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்:-

முகத்தில் திடீரென ஏதேனும் பிம்பிள் அதாவது பரு எட்டிப் பார்த்துவிட்டால் போதும், உடனே டென்சன் ஏற்பட்டு, இதனை விரைவில் போக்க வேண்டும் என்று நிறைய அழகுப் பொருட்களை பயன்படுத்துவோம். ஆகவே அவ்வாறு பயன்படுத்தினால், பிம்பிள் போவதற்கு 2-3 நாட்கள் ஆகும். அதிலும் பிம்பிளை போக்குவதற்கு பயன்படுத்தும் கெமிக்கல் கலந்த பொருட்கள் சிலவற்றால் பிம்பிள்கள் கரும்புள்ளிகள் போன்று தோன்றும். ஆகவே அவை ஏற்படாமல் இருக்க வீட்டில் உள்ள பொருட்களான கடுகு, கிராம்பு, சந்தனக்கட்டை அல்லது மூல்தானி மெட்டி ஆகியவற்றை பயன்படுத்தினால், அந்த பிம்பிள்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் போய்விடும். ஆனால் அதுவே ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தினால், ஒரே நாளில் அவை குறைந்துவிடும்.

அத்தகைய ஐஸ் கட்டியை பயன்படுத்தும் முன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பார்ப்போமா!!!

ஸ்டெப் 1- முதலில் முகத்தை ஃபேஸ் வாஷ் வைத்து நன்கு கழுவ வேண்டும். ஆனால் முகத்தில் இருக்கும் பிம்பிளை மட்டும் தேய்த்துவிட வேண்டாம். ஏனெனில் அவ்வாறு தேய்க்கும் போது, அதில் உள்ள சீல் முகத்தில் பரவி, நிறைய பிம்பிள் வந்துவிடும். ஆகவே முகத்தை வெதுவெதுப்பான நீரால், ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி லேசாக கழுவ வேண்டும். ஸ்டெப் 2- மூல்தானி மெட்டியை, சந்தனப்பவுடருடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்திற்கு தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும். வேண்டுமென்றால் பிம்பிள்கள் மீது மட்டும் தடவலாம். இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும் முகத்தில் உள்ள பிம்பிளையும் குறைத்துவிடும்.

ஸ்டெப் 3- இந்த ஃபேஸ் பேக் போட்டு கழுவியவுடன், 5 நிமிடத்திற்கு ஐஸ் கட்டிகளை வைத்து, பிம்பிள் உள்ள இடத்தின் மீது தேய்க்கவும். இல்லையென்றால், ஐஸ் கட்டிகளை எந்த ஒரு ஃபேஸ் பேக் இல்லாமலும், தேய்க்கலாம். அதிலும் ஐஸ் கட்டிகளை வைத்து, தேய்க்கும் போது, குறைந்தது 2 ஐஸ் கட்டிகளையாவது பயன்படுத்த வேண்டும். ஏனெனில் ஐஸ் கட்டியில் உள்ள குளிர்ச்சி பிம்பிளில் உள்ள அனைத்தையும் ஒரே நாளில் உருக்கிவிடும். வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு இரண்டு முறை, இவ்வாறு தேய்த்தால், பிம்பிள் முற்றிலும் போய்விடும்.

ஸ்டெப் 4- ஐஸ் மசாஜ் செய்தப் பின்னர், சுத்தமான துணியை வைத்து துடைத்துவிட வேண்டும். அதனால் பிம்பிளில் உள்ள சீல் முற்றிலும் துணியில் வந்துவிடும். பிறகு கண்ணாடியைப் பாருங்கள், பிம்பிள் குறைந்து முகம் அழகாக இருக்கும். குறிப்பு: பிம்பிள் வராமல் இருக்க வேண்டுமென்றால் நிறைய தண்ணீரை குடிக்க வேண்டும். ஆனால் இது யாருக்கும் தெரியாது. வறட்சியின் காரணமாகத் தான் முகத்தில் பிம்பிள், முகப்பரு ஏற்படுகின்றன. அதிலும் காப்பியை அதிகம் குடிக்கக் கூடாது. ஏனெனில் காப்பியில் உள்ள காப்பைன் உடலில் உள்ள நீர்வறட்சியை ஏற்படுத்தும்.

நீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம்:-

நீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம்:-

உடலிருந்து சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்க் குழாய் வீக்கமடைந்து எரிச்சலுக்கு ஆளாவதால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது.

காரணங்கள்:-

சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண் இருப்பது, அதிகம் தண்ணீர் அருந்தாது, பால்வினை நோய்கள், அடிபடுதல், கருத்தடைச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் போன்றவற்றால் நீர்க்கடுப்பு ஏற்படலாம்.

அறிகுறிகள்

* ஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, சிறுநீர் மற்றும் விந்துடன் ரத்தம் கலந்து வெளியேறும்.

* அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.

* பெண்களுக்கு வயிற்றுவலி, சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, குளிர் மற்றும் காய்ச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, பிறப்புறுப்புக் கசிவு போன்றவை காணப்படும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:-

* கைப்பிடி உளுந்தை நீரில் ஊறவைத்து, மறுநாள் அதிகாலை நீரை வடித்து, அந்த நீரை அரை டம்ளர் அருந்தலாம்.

* கற்பாசியை அரைத்து இடுப்புப் பகுதியிலும், அடிவயிற்றிலும் பூசலாம்.

* சிறு துண்டு கற்றாழையை நன்றாகக் கழுவி, வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத்தூள் சேர்த்து உண்ணலாம்.

* கால் டம்ளர் பருப்புக் கீரையின் சாற்றை இரண்டு வேளை அருந்தலாம்.

* அரை ஸ்பூன் முள்ளிக்கீரை வேர்ப்பொடியை நீர் கலந்து அருந்தலாம்.

* சரக்கொன்றை புளியுடன் கடுகுரோகிணி, சுக்கு, வாய்விடங்கம், பெருங்காயம், படிகாரம், பொட்டிலுப்பு கூகைநீறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து அடிவயிற்றில் பற்றுப் போடலாம்

* செண்பகப் பூவுடன் பத்து மடங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி, அதில் அரை டம்ளர் அருந்தலாம்.

* கைப்பிடியளவு சுரைக்கொடியை தண்ணீர் விட்டுக் காய்ச்சி, வடித்து வெண்ணெய் கலந்து அருந்தலாம்.

* சதாவேரிக் கிழங்கின் பொடி அரைஸ்பூன் வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

* துத்தி வேர்ப்பொடியை அரை ஸ்பூனை திராட்சைப் பழச்சாற்றில் கலந்து சாப்பிடலாம்.

* அரை ஸ்பூன் தேற்றான் விதைப்பொடி எடுத்து எலுமிச்சைச் சாறு, நீர் சேர்த்து உண்ணலாம்.

சேர்க்கவேண்டியவை:-
திராட்சை, எலுமிச்சை, அன்னாசி, வெங்காயம், உருளைக்கிழங்கு முள்ளங்கி, பூசணி, வெள்ளரி.

தவிர்க்க வேண்டியவை:- 
துவர்ப்பு மற்றும் கார உணவுகள்.

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

நமது முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்கு இருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே!

அருகம்புல் : மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்

ஓரிதழ் தாமரை : வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்

ஆடா தோடை : இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு

தூதுவளை : சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு

நில ஆவாரை : மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்

நில வேம்பு : சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்

முடக்கத்தான் : மூட்டுப்பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்

வல்லாரை : ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை, மலச்சிக்கல்

அஸ்வகந்தி : கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்

வில்வம் : பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்

நெல்லிக்காய் : பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்

நாவல் கொட்டை : சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்

சுக்கு : வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்

திப்பிலி : சளி, காசம், பீனிசம், வாயு

அதிமதுரம் : இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்

சித்தரத்தை : இருமல், சனி, பீனிசம், கோழைக்கட்டு

ஜாதிக்காய் : விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்

வெந்தயம் : பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்

வசம்பு : வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்

ஆவாரம்பூ : அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்

செம்பரத்தம்பூ : தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்

ரோஜாப்பூ : இருதயம், ஈரல், நுரையீரல், கிட்னி நோய்கள் நீங்கும்
முல்தானி மிட்டி : முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)

திருபலாசூரணம் : வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்

திரி கடுகு சூரணம் : பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்

வசம்பு : வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்

கரிசலாங்கண்ணி : மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்

கண்டங்கத்திரி : சளி, இருமல், ஆஸ்துமா, ஈசிலோபீலியா, பீனிசம்

கருந்துளசி : இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்

கறிவேப்பிலை : பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்

காசினி கீரை : ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்

கீழாநெல்லி : மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்
இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்...

மாதுளை: மாதுளைச் சாறு இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை மேலேறச் செய்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ராலைக் குறைத்து, கட்டற்ற மூலக்கூறுகளோடு போராடி, ஆபத்து விளைவிக்கக்கூடிய இரத்த உறைவுகளில் இருந்து காத்து, அருஞ்சேவை புரிகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவுகளை இவை அதிகப்படுத்துகின்றன.

நன்னாரி வேர்: மூலிகைகளில் ஒன்றான நன்னாரி வேர், உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறந்தது. அதிலும் இந்த வேரில் அதிகமான ஆன்டி-செப்டிக் பொருள் இருக்கிறது. இது இரத்ததில் இருக்கும் கிருமிகளை அழித்து, சுத்தமாக வைக்கிறது.

கற்றாழை: கற்றாழையில் இரத்தத்தில் ஏற்படும் அழற்சியை தடுக்கும் பொருள் அதிக அளவு உள்ளது. ஆகவே இவற்றை சாப்பிட்டாலும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கீரைகள்: காய்கறிகளான பசலைக் கீரை, ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், டர்னிப், காலிஃபிளவர், கீரை மற்றும் இனிப்பு உருளைக்கிழங்குகள் ஆகிய அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமானவை. மேலும் இவை அனைத்தும் உடல் எடையை கட்டுபடுத்துவதுடன், உடலில் இரத்த அணுக்களையும் அதிகரிக்கும். அதிலும் கீரைகள் செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்யும்.

இரும்புச்சத்து: இது உடலுக்கு மிகவும் தேவையான கனிமச்சத்து. இந்த சத்து எலும்புகளை மட்டும் வலுவாக்குவதில்லை, உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை விநியோகிக்கிறது. இந்த சத்து குறைவாக இருந்தால் அனீமியா நோயானது வரும். ஆகவே அந்த இரும்புச்சத்துக்கள் இறைச்சி, வெந்தயம், அஸ்பாரகஸ், பேரிச்சம் பழம், உருளைக்கிழங்கு, உலர்ந்த அத்திப்பழம், உலர் திராட்சை போன்றவற்றில் இருக்கும்.
பாதாம்: இரும்புச்சத்து மற்ற உணவுப் பொருட்களை விட பாதாம் பருப்பில் அதிகம் இருக்கிறது. ஒரு நாளைக்கு 1 அவுண்ஸ் பாதாம் பருப்பை சாப்பிட்டால், உடலுக்கு 6% இரும்புச்சத்தானது கிடைக்கும்.

பழங்கள்: அனீமியாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடச் சொல்வார்கள். இவற்றை உண்பதால் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடலில் உள்ள இரத்த அணுக்களின் அளவும் அதிகரிக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த பழங்களில் தர்பூசணி, ஆப்பிள், திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும்.

கிவி பழம்அல்லது பசலிப்பழம் :இரத்தத்தில் குருதிச் சிறுதட்டுகள் குறைவாக காணப்படுவோ கிவி பழங்களை சாப்பிட்டால் அதன் உற்பத்தி அடிகரிக்கும் என பரிந்துரைக்கப்பட்டுளது.பசலிப்பழத்தில் உள்ள நார்ச் சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதால் டயபடீஸ் குணமாகும். ரத்த அழுத்தத்துக்கு காரணமான கொலஸ்ட்ராலைக் குறைக்கும். குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சிழுப்பு, சளி ஆகியவை இருந்தால் கிவி ப்ரூட் குணப்படுத்தும் என்றார். முக்கிய பழச் சந்தைகள், மார்க்கெட்களில் கிடைக்கும் கிவி பழத்தை வாங்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முழு ஆரோக்கியம் பெறலாம்.

பங்குனி உத்திரம் என்றால் என்ன?


பங்குனி உத்திரம் என்றால் என்ன?

பங்குனி மாத்த்தில் உத்திர நட்சத்திரம் வரும் நாள் பங்குனி உத்திரம் – இது நம் அனைவருக்கும் தெரிந்ததே.

பங்குனி உத்திரம் நட்சத்திரம் சாதாரணமாக சிவ-பார்வதி, ராமன்- சீதா, முருகன்-வள்ளி, தெய்வானை திருமண நாளாகவும், வள்ளி பிறந்த தினமாகவும், தேவேந்திர-இந்திராணி திருமண நாளாகவும், ப்ரம்மா-சரஸ்வதி திருமண தினமாகவும், வைணவர்களைப் பொறுத்தவரை ஆண்டாள் திருமணமாகவும் காஞ்சி போன்ற க்ஷேத்திரங்களில் தாயார் திருமண உத்சவங்களாகவும் – பெரும்பாலும் அனைத்து ஆலயங்களிலும் திருமண நிகழ்ச்சியாகக் கொண்டாடப் படுகிறது.

பங்குனி உத்திரநாளன்று அனுஷ்டிக்கும் விரதத்தை, திருமண விரதம் என்பர். இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம். திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.

பங்குனி உத்திரவிரதம் மேற்கொள்வோர் 48 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று விரதநூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இவ்விரதத்தால் அடுத்தபிறவி தெய்வப்பிறவியாக அமையும். அதன் மூலம் ஜனன, மரணச் சக்கரத்தில் இருந்து உயிர் விடுபட்டு முக்தி பெறும் என்பது ஐதீகம்.

பங்குனி உத்திரம் அன்று நாம் நம் குலதெய்வங்களை வழிபட உகந்த நாளாக அமைகின்றது. இந்நாளில் நமது குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது நம் குலம் சிறக்க உதவுகின்றது. நாம் நம்குல தெய்வங்களை இந்த நாளில் சென்று வழிபாடு செய்தால் நமது மூதாதையரின் பரிபூரண ஆசிகள் நமக்கு கிடைக்கின்றது.இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்கு வதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள்.

பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை

* மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.

* பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.

* தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது.

* சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம்.

பங்குனி உத்திரம் நாளன்று என்ன செய்யவேண்டும்?

. அன்று காலை எழுந்து அத்யாவசிய பணிகள் முடிந்து குலதெய்வம் கோயிலுக்கு சென்ற வாருங்கள் நஞ்சென வந்த துன்பங்கள் பஞ்சென பறந்திடும். புண்ணியம் வேண்டுமா?

நல்ல மணவாழ்க்கை வேண்டுவோர் இந்நாளில் சிவபார்வதியை வேண்டி விரதம் மேற்கொள்ளவேண்டும். ஓம் சிவாயநம, ஓம் பராசக்திநம என்ற நாமத்தை 108 முறை ஜெபிக்கவேண்டும். மதியம் ஒருவேளை உணவு உண்ணலாம். இயலாதவர்கள் காலை, இரவு பால் பழம் சாப்பிடலாம். இவ்விரதத்தினை முருகப்பெருமானை வேண்டியும் மேற்கொள்ளலாம். மாலை கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும்.

பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து வழிபடுவது நல்லது. இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்வது மிகவும் விசேஷம் என்று கூறப்பட்டுள்ளது. ஜாதகத்தில் பல்வேறு தோஷங்கள் ஏற்பட்டு திருமண தடை ஏற்படுபவர்கள், குறிப்பாக செவ்வாய் தோஷம் காரணமாக தொடர்ந்து கல்யாண தடங்கலை சந்திப்பவர்கள் பங்குனி உத்திரத்தன்று முருகப் பெருமானை மனதார வணங்கி வழிபட்டால் எல்லா தடைகள், தடங்கல்கள், இடையூறுகளும் நீங்கி சுபயோக சுபவாழ்வு அமையும் என்பது ஐதீகம். முருகனை வழிபட்டு சகல நலன்களும் பெறுவோமாக.

சிந்தனை துளிகள்:-

சிந்தனை துளிகள்:-

* மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.

* உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.

* வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.

* பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும்.

* ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.

* எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.

* மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.

* கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.

* அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.

இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை


* மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள். கொஞ்சம் வளைந்து கொடுங்கள். வாழ்க்கை, லகுவாய் இருக்கும்.

* இங்கு விஷமற்ற பாம்பு கூட தன்னை விஷமுள்ள பாம்பு போல காட்டிக்கொள்ள வேண்டுமாக்கும்.

* உன் இரகசியங்களை எவரிடம் பகிர்ந்து கொள்ளாதே. அது உன்னை அழித்து விடும். இது தான் மிகப்பெரிய குரு மந்திரம்.

* ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது. சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே.

* ஒரு வேலையை செய்யத்தொடங்கும் முன் இந்த மூன்று கேள்விகளையும் கேட்டுக்கொள். ஏன் இதை செய்கின்றேன்? இதன் முடிவு என்னவாக இருக்கும்? இதில் நான் வெற்றிபெறுவேனா இல்லையா? என ஆழமாக யோசித்து அதில் நல்ல விடைகள் கிடைத்தால் மட்டுமே அந்த பணியை செய்யத் தொடங்கு.

* பயம் உன்னை நெருங்கத் தொடங்கும் போதே அதை தாக்கி அழித்து விடு.

* ஒரு பணியைச் செய்யத்தொடங்கியப் பின் தோல்வியைகுறித்து பயம் கொள்ளாதே. அப்பணியை நிறுத்தவும் செய்யாதே. தன் பணியை செவ்வனே செய்பவர்களே மிக மகிழ்ச்சியான மனிதர்கள்.

* மலர்களின் வாசம் காற்று வீசும் திசையில் மட்டுமே போகும்.ஆனால் ஒருவர் செய்யும் தர்மமோ நாலாதிசையும் செல்லும்.

* ஒருவன் தான் செய்யும் செயல்களாலேயே மகானாகின்றான். பிறப்பினால் அல்ல.

* உன் குழந்தையை முதல் ஐந்து வருடங்கள் செல்லமாக வைத்துக்கொள்.
அடுத்த ஐந்து வருடங்களும் திட்டி தீர்த்துக்கொள்.பதினாறு வயதை எட்டும் போது உன் நண்பனைப் போல நடத்து. தலைக்கு மேல் வளர்ந்துவிட்ட உன் பிள்ளைகள் தான் உனக்கு உற்ற நண்பர்கள்.

* குருடர்களுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி எப்படி உதவாதோ அப்படியே முட்டாள்களுக்கும் புத்தகங்கள் உதவாது.

* கல்வியே சிறந்த நண்பன். நன்கு கற்றவனுக்கு செல்லும் இடமெல்லாம் மரியாதை உண்டு. கல்வியானது இளமையையும் அழகையும் வீழ்த்திவிடும்

Thursday, April 10, 2014

ராமாயணம் காட்டும் நல்வழிப்பாதை

ராமாயணம் காட்டும் நல்வழிப்பாதை

கௌசல்யைசீதா தேவிராமர்ராமாயணம்
பக்தியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வெளிப்படுத்துகிறோம். நிறைய பணம் செலவழித்து, அபிஷேகங்கள் செய்து இறைவனை வழிபட்டால்தான் நமக்கு அருள் கிடைக்கும் என்பதில்லை. பக்தியுடன், தன் வீட்டிலேயே பூஜைக்குரிய மலரை அர்ப்பணித்து, தன் இஷ்ட தெய்வத்தை அர்ச்சித்தலே மிகச்சிறந்ததாகும்.

ஒரு நாளே வாழ்ந்து, வாடிடும் மலரை இறைவனுக்கு ஒரு வேளை அர்ச்சித்தால்போதும். வாழ்நாள் முழுவதும் நம்மை வாடாமல் வைத்திருப்பான் பேரன்புடைய இறைவன். ஓர் ஆண் எத்தனை புண்ணியங்கள் செய்தாலும், தன் பத்தினியை வருந்தச் செய்தால், அப்புண்ணியங்கள் எல்லாமே வீண்தான். வயதான பிறகும்கூட ஆண்கள் தனக்கு மட்டும் வயதாகிவிட்டது. ஆனால் மனைவி வழக்கம்போல் தனக்கு எல்லா பணிவிடைகளுமே செய்ய வேண்டும் என்று கருதாமல், மனைவிக்கும் வயதாகிறது என்று நினைவில் கொண்டு, மனைவியைக் கஷ்டப்படுத்தக்கூடாது.

நிதி மற்றும் நாணயம் பற்றிய நுணுக்கங்களை, இரண்டாயிரம் ஸ்லோகங்களில் கூறும் “அர்த்த சாஸ்திரம்’ நூல் கூட, மன அமைதிக்கும், சுகத்துக்கும் வழி சொல்லவில்லை. பெரியவர்களும், அறநூல்களும் கூறியுள்ள தர்மங்களைக் கடைப்பிடித்து மட்டுமே அவற்றைப் பெறலாம் என்று சொல்கிறது.

மனிதர்கள் வாயில்லா ஜீவன்களை வதைத்து, தாயிடமிருந்து பிரித்துக் கொடுமைப்படுத்துவது பெரும்பாவச் செயலாகும். ராமர் காட்டிற்கு செல்லும்போது, அவரைப் பிரிந்து வாடிய தசரதர், “நான் முற்பிறவியில் பிராணிகளையும், பறவைகளையும், மனிதர்களையும் அவரவர் தாயிடமிருந்து பிரித்துப் பாவம் செய்ததால்தான், இப்பிறவியில் என் மகனைப் பிரிந்து வாடுகிறேன்’ எனக் கதறி கண்ணீர் விடுகிறார்.

ஒருவர் புதியதாய் வீடு கட்டியபோது, விளையாட்டாய் தோட்டத்தில் பதித்த தென்னங்கன்று, அவருடைய உழைப்பும், கவனிப்பும் இல்லாமலேயே தானே வளர்ந்து தென்னை மரமாக இளநீரையும், தேங்காயையும் கொடுத்து, அவருக்கு நல்ல பலனை அளிக்கிறது. அதுபோலவே நாம் செய்யும் நல்ல செயல்கள் தொடர்ந்து மறுபிறப்பிலும் வந்து பெரிய பலன்களை எந்த முயற்சியும் இல்லாமலே கொடுக்கிறது.

கெளசல்யை ராமனுடன் காட்டுக்குச் செல்லும் சீதையிடம், ராமன் காட்டில் துன்பப்படும்போது, உடனிருந்து அவன் எந்தவிதத்திலும் அவமானப்படாதபடி நன்கு கவனித்துக்கொள்ளல் வேண்டும் என்று அறிவுரை சொன்னாள். அதற்கு சீதை,”"ஒரு பெண்னுக்கு கணவன்தான் பெருமையளிப்பவன். என்னதான் தங்கத்தால் வீணை செய்தாலும், அதிலிருக்கும் செப்புக் கம்பிதான் நல்ல நாதத்துக்கு அஸ்திவாரம் ஆகிறது. எவ்வளவு அழகு செய்யப்பட்டாலும் தேருக்கு அதன் மரச்சக்கரமே மிக முக்கியமாகிறது. ஆகவே என் கணவரை நான் தெய்வமாகக் கொண்டாடுவேன்” என்கிறாள். இதைக் கேட்ட கெளசல்யை மனம் நெகிழ்ந்து போகிறாள். இந்தச் சம்பவத்தை வால்மீகி மிக அழகாக வர்ணித்துள்ளார்.

ஸ்ரீராமநவமி சிறப்புக் கட்டுரை: சரணாகதியின் பொருள் உரைத்தவன்!

ஸ்ரீராமநவமி சிறப்புக் கட்டுரை: சரணாகதியின் பொருள் உரைத்தவன்!

அஷ்டமி, நவமி திதிகள் என்றால் எந்தக் கார்யத்திலும் இறங்காமல் வெறுமனே அமர்ந்திருக்கும் மக்களைப் பார்க்கும்போது எனக்கு இந்த விஷயம்தான் தோன்றும். இந்தத் திதிகளை மக்கள் ஒதுக்கவே, அவை இறைவனிடம் சென்று, “மக்கள் எங்களை ஒதுக்குகின்றனரே” என்று வருந்தினவாம். அதற்கு இறைவன் “உங்களுக்கு ஏற்றம் தருகிறேன். மக்கள் உங்கள் இருவரையும் கொண்டாடச் செய்கிறேன்” என்று வாக்களித்தாராம். பகவான் உறுதியளித்தபடி, நவமி திதியில் ராமனாகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணனாகவும் அவதரித்து, மக்கள் அவ்விரு திதிகளையும் கொண்டாடச் செய்தாராம்.

ஸ்ரீகிருஷ்ணர் நடு இரவில் சிறைக் கதவுகளுக்குப் பின்னே பிறந்தாரென்றால், ஸ்ரீராமனோ நடுப்பகலில் அரண்மனையில் சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம் 4 – ஆம் பாதத்தில் அவதரித்தார். ஸ்ரீராமர் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதுதான் ஸ்ரீராம ஜன்மோத்ஸவம் – ஸ்ரீராமநவமி என்று நாட்டு மக்களால் விமரிசையாகக் கொண்டாடப்படும் திருநாள்.

ஸ்ரீராமர் பிறந்ததே அனல் கொளுத்தும் வெய்யில் காலத்தில். அவர் பால பருவத்தில் விஸ்வாமித்திரருடன் கானகம் சென்றதும், வனவாசத்திற்காகப் பதினான்கு ஆண்டுகள் கானகத்தில் அலைந்ததும் நல்ல வெய்யிலில் தான். எனவேதான் ஸ்ரீராமநவமியன்று பானகம், நீர்மோர், வடைபருப்பு, விசிறி போன்றவற்றைத் தானமாகக் கொடுப்பதுண்டு. ஸ்ரீராமர் பிறந்ததை தசரதர் அரண்மனையில் கோலாகலமாகக் கொண்டாடினார். “மக்களுக்கு நிறைய தான தர்மங்கள் செய்தார். அதை மனதில் கொண்டு இன்றும் கிராமங்களில் பல வீடுகளில் நெல் மணிகளும் பணமும் வைத்து தானமளிப்பது வழக்கமாக உள்ளது.

இராமரைப் பற்றி எத்தனையோ பக்தகவிகள் பாடி இருக்கிறார்கள். புரந்தரதாஸர், தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர் என்ற மும்மூர்த்திகளைப் போல பல்வேறு புகழ்பெற்ற கீர்த்தனைகளைக் கொடுத்தவர் திருவாங்கூர் மகாராஜா. அவர் பிறந்தது கி.பி.1813 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 – ஆம் தேதி. 18 ஆண்டுகள் அவர் சமஸ்தானத்தைப் பரிபாலித்தார். ஸம்ஸ்க்ருதம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் 300 -க்கும் மேற்பட்ட கிருதிகளை இயற்றியுள்ளார். அவரது பட்டாபிஷேக கீர்த்தனையான “பாவயமி ரகுராமம் பவ்ய ஸுகுணா ராமம்” என்ற கீர்த்தனை. இன்றும் இந்தக் கீர்த்தனையைக் கேட்டு அதில் லயிக்காதவர் யாருளர்?

ஸ்ரீராமர் என்று சொன்னாலே சரணாகதித் தத்துவம் தான் அனைவர் நினைவுக்கும் வரும். தஞ்சமென்று வந்தவரைத் தன் சரண கமலத்தில் வைத்து அபயம் அளித்தவர் ஸ்ரீராமபிரான். பாலகாண்டத்தில் இராவணனால் அல்லலுற்ற தேவர்கள் பரமனடியே பரிகாரம் என்று சரணடைந்தனர். அயோத்யா காண்டத்தில் பரதன், ஸ்ரீராமபிரானைச் சரணடைந்து அவர் அடித்தலம் இரண்டையும் அழுத கண்களோடு பற்றினவனாய்த் தன் முடித்தலத்திற்கு இவையே கிரீடம் என்று சூட்டிக் கொண்டான். ஆரண்ய காண்டத்தில் தண்டகவனத்து ரிஷிகள் எல்லாரும் அரக்கர்களின் தாங்கவொண்ணாக் கொடுமைக்கு அஞ்சி சக்ரவர்த்தித் திருமகனைச் சரணடைந்தனர். கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்ரீவன் ஸ்ரீராமபிரானைச் சரணடைந்தான். சுந்தரகாண்டத்திலும் சரணாகதிக் கதை வருகிறது. சீதை அசோகவனத்தில் சிறையிருந்தபோது, ஸ்ரீராமபிரானுடனான தம் இளமைக்கால நிகழ்வுகளை மனதில் அசைபோட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது காகாசுரன் கதை வருகிறது. ராமபாணத்துக்கு அஞ்சி உலகெல்லாம் சுற்றிவிட்டு இறுதியில் ஸ்ரீராமபிரானது திருவடிகளையே தஞ்சம் என்று சரணடைந்தான் காகாசுரன்.

அடைக்கலம் என்று வந்தவர்க்கு “அஞ்சேல்” என்று அபயம் அளித்த ஸ்ரீராமபிரான் சரணாகதிச் சிறப்பிற்கு விபீஷண சரணாகதியைச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்.

சரணாகதியை விளக்குவதை சரம ஸ்லோகம் என்பார்கள்.  இராமாயணத்தில் வரும் சரண கட்டம் விபீக்ஷண சரணாகதி.

ஸக்ருதவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே

அபயம் ஸர்வ பூதேப்ய: ததாம் யேதத் வ்ரதம் மம

ஆநாயைநம் ஹரிச்ரேஷ்ட தத்தமஸ்யாபயம் மயா

விபிஷணோ வா ஸுக்ரீவ யதி வா ராவண ஸ்வயம்

பகைவனுக்கும் அருளும் பண்பாளன் அல்லவா ஸ்ரீராமபிரான். அதை சரணாகதியின் உச்சத்தை விளக்கும் இந்த ஸ்லோகத்தில் அறிந்து கொள்ளலாம்.

விபீஷணனை ஏற்றுக்கொள்ள சுக்ரீவன் உள்ளிட்டோர் தயக்கம் காட்டியபோது ஸ்ரீராமபிரான் கூறுகிறார்…

“நான் உன்னுடையவன், என்னைக் காப்பாற்று” என்று கூறிச் சரணடைந்தவனுக்கும், அனைத்து பிராணிகளுக்கும் நான் அபயம் அளிக்கிறேன். இது என் விரதம். ஆகையால் சுக்ரீவா இவனை அழைத்துவா. இவன் விபீஷணனாக இருக்கட்டும் அல்லது அந்த இராவணனாகவேதான் இருக்கட்டும்… இவனுக்கு அபயம் அளிக்கப்பட்டுவிட்டது” என்று திருவாய் மலர்ந்தருளுகிறார் ஸ்ரீராமபிரான்.

இராமாயணம் படித்தால் சகல நலன்களும் வந்து சேரும் என்ற நம்பிக்கை நம்நாட்டில் உண்டு. மணமாகாத கன்னியர் சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்தால் உடனே மணமாகும் என்பர். வேறு சில பரிகாரங்களுக்கும் சுந்தர காண்டத்தைப் படிக்கச் சொல்வதுண்டு. இராமாயணத்தைப் பாராயணம் செய்து தசமி அன்று பட்டாபிஷேகத்தைப் படித்து முடிப்பது ஒரு வகை. ஸ்ரீராமர் பிறந்த இந்த நவமியிலிருந்து பத்து தினங்களுக்குப் பாராயணம் செய்து பட்டாபிஷேகத்தைப் படித்து முடிப்போரும் உண்டு. இராமனின் கதையைக் கேட்டாலும் படித்தாலும் புண்ணியம் சேரும் என்பது ஆன்றோர் கருத்து.

ஸ்ரீராமபிரானை எண்ணும்போது நம் நினைவில் உடனே வருபவர் குலசேகராழ்வார். சேரமான் பெருமாளாக மன்னர் குலத்தில் ஸ்ரீராமபிரான் பிறந்த அதே புனர்பூச நட்சத்திரத்தில் உதித்தார் குலசேகராழ்வார். மன்னராயினும் ஸ்ரீராமபிரானிடம் அளவற்ற பக்தி அவருக்கு. இராமாயணத்தைக் கேட்பதில் தனி ஆனந்தம். ஒரு முறை வைணவப் பெரியார் ஒருவர், குலசேகரருக்கு வால்மீகி ராமாயணத்தைச் சொல்லிக் கொண்டு வந்தார். இவரும் கண்களில் ஆனந்தக் கண்ணீர் கங்கையெனப் பொங்கும் வண்ணம் மனம் லயித்துக் கேட்டு வந்தார். ஒருநாள் இராமபிரான் அரக்கர்களோடு போர்புரிந்த நிகழ்ச்சியை விவரித்தார் அந்த வைணவப் பெரியார்.

இலக்குமணன் வில்லேந்திக் கவசம் தரித்து இராமனிடம் வந்து, அரக்கர்களுடன் போர் புரிய விடை கேட்டான். ஸ்ரீராமரோ, நீ சீதையைக் காத்துக் கொண்டிரு, நான் போய் அரக்கர்களை அழித்து வருகிறேன் என்று கூறிப் பர்ண சாலையினின்றும் வெளிக் கிளம்பி விட்டார். அதுகண்ட சூர்ப்பணகை, இவனே அரக்கர் குலத்தின் பகைவன் என்று கத்தினாள். அம்மொழிகேட்ட அரக்கர்கள் நாலாத்திசைகளிலிருந்தும் இராமபிரானைத் தாக்கினார்கள். அவர்களின் படைக்கலன்கள் இராமபிரானின் மீது பட்டு விழுந்தன” என்று கதை கூறிக் கொண்டிருந்தார் அவர்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த குலசேகரரோ அந்தக் கட்டத்தில் மனம் லயித்து, “ஆ! அரக்கர்கள் மாயப் போர் புரிவதில் வல்லவர்களாயிற்றே. கரன், தூஷணன், திரிசரன் போன்ற அரக்கர்கள் மாயத்தந்திரங்களால் தனியராய் இருக்கும் ஸ்ரீராமபிரானைத் தாக்குகிறார்களே! இப்பெரும் படையை தனி ஆளாய் இருக்கும் ஸ்ரீராமபிரான் எப்படி சமாளிக்கப் போகிறாரோ!” என்று எண்ணி, தம் படையைப் போருக்கு ஆயத்தமாகுமாறு படைத் தளபதிகளுக்குக் கட்டளையிட்டார்.

படைத்தளபதிகளோ, ஆச்சர்யம் அடைந்தனர். நம்மை எதிர்த்த சோழ, பாண்டியர்கள் மூலையில் முடங்கிக் கிடக்கிறார்கள். எதிரிகளே நமக்கில்லையே. பின் யார் மீது போர்? என்று குழம்பித் தவித்தனர். ஆனால் அரச கட்டளையாயிற்றே! அவர்கள் பெரும் படையத் திரட்டித் தயாராயினர். குலசேகரரும் போர்க்கோலம் பூண்டு நிற்கையில், காரணம் அறிந்த அமைச்சர் இராமாயணக் கதை சொல்லிக் கொண்டிருந்த அப்பெரியாரை அழைத்து, இச்சூழ்நிலையைச் சமாளிக்க வேண்டினர்.

அப்பெரியவரும், “ஸ்ரீராபிரான் தனியொருவராக நின்று, மாயங்கள் புரிந்த அரக்கர்களை அழித்து வெற்றி வாகைசூடி, பர்ணசாலையடைந்தார். சீதாதேவி எம்பெருமானின் மார்பில் பட்ட புண்களுக்கெல்லாம் மருந்தாக அவரைத் தழுவி மகிழ்ந்தாள்” என்று கதையைச் சொல்லி ஸ்ரீராம பட்டாபிஷேகம் வரை, சொல்லி முடித்த பிறகே குலசேகரர் தெளிவு பெற்றார். தம் படையை மீண்டும் தத்தம் இடம் திரும்புமாறு கட்டளையிட்டு அரண்மனை திரும்பினார்.

ஸ்ரீராமாயணக் கதை கேட்டாலும் மனம் லயித்துக் கேட்டால் தான் அதன் அருமையும் பலனும் நமக்குக் கிடைக்கும். எங்கெல்லாம் ஸ்ரீராமாயணம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயரும் அமர்ந்து கதை கேட்பார் என்பது பெரியோர் வாக்கு. வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அரக்கனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில் (பாணம்). ஒரே சொல். ஒரே இல். (மனைவி) என்று வாழ்ந்துகாட்டிய ஸ்ரீராமபிரானின் வழியில் சிந்தித்து சுகம் பெறுவோமே!

சிவபுராணம் பற்றிய முழுமையான விளக்கம்

சிவபுராணம் பற்றிய முழுமையான விளக்கம்

சிவபுராணம் என்று பெயர் கொண்ட இப்பதிகம் சீவபுராணமல்லவா பேசுகின்றது? ஏன் சிவபுராணம் எனப் பெயர் பெற்றது? மாணிக்கவாசகப் பெருமான் பரம்பொருளாகிய சிவபெருமானைப் பலவாறெல்லாம் போற்றி அவர் பூவார் திருவடிகளுக்குத் தம்முடைய உளமார்ந்த வணக்கங்களைக் கூறித் துவங்குகிறார்.

ஜீவனான உயிர் மும்மலச் சேற்றில் அகப்பட்டுத் திகைத்து நிற்கும் காலமும், அச்ஜீவனுக்கு சிவபெருமான் திருவருளால் ஏற்படும் மேம்பாடுகளையும் கூறி இறுதியாக அச்சிவபெருமானின் திருவடிக்குச் செல்லும் பெருநிலையை நமக்குக் காட்டுகின்றார். ஜீவன் மலச்சுழியில் சிக்குண்டு இருக்கும் தாழ்நிலையிலிருந்து, சிவனார் பெருங்கருணையால் சிவகதி அடையும் தன்னிகரற்ற பெருநிலை பற்றிக் கூறுவதால் இது சிவபுராணமே.

திருவாசகம் பெரிதும் எளிய நடையைக் கொண்டதாக இருப்பது காரணமாக உரையின் துணையின்றியே அன்பர்கள் படித்துப் பயன்பெறுவது. எனினும் சந்தி பிரித்து தினமும் பேசும் மொழியில் வழக்கத்தில் இப்போது இல்லாத சில சொற்களுக்குப் பொருளும், அங்கங்கே தொடர்புடைய சில கருத்துக்கள் குறிப்பதுவும் அன்பர்களுக்கு பயன்படக்கூடும் என்ற கருத்துடன் இவ்வுரை வரையப்பட்டுள்ளது. நேயத்தே நின்ற நிர்மலனார் பிழைகளை மன்னித்தும் தவிர்த்தும் அருள அவர்தம் செம்மலரடிகளுக்குப் போற்றுதல்கள்.

தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக அமைந்த சிறப்புப் பெற்றது. திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும் இப்பதிகம் அடியார் தொழுகையில் சிறப்பிடம் பெற்றது இதன் பெருமையைப் பறை சாற்றும் அறுபத்துமூன்று நாயன்மாரில் மூவர் பெண்கள்.

கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மாரில் காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும். மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற அறியப்படுகிறார். அவர் மனைவி மங்கையர்க்கரசியார் என்பவர் நாயன்மாரில் மற்றொரு பெண் ஆவார். திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயனாரின் மனைவி இசைஞானியார் மூன்றாவது பெண் நாயனார் ஆவார். இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மாரில் ஒருவரும் ஆவார்.

நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல. சுவாமிமலைக்குப் படி 60. ஆண்டுகள் 60. மனிதனுக்கு விழா செய்வதும் 60வது ஆண்டு. ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு மணிக்கு நிமிடம் 60. ஒரு நிமிடத்துக்கு வினாடி 60. இப்படி 60 என்று தான் கணக்கு வரும். 63 என்று வராது. சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான். சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார். அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்

arubathumoovarநமையாளும் நாயன்மார்கள் அறுபத்திமூவர்

தில்லைவாழ் அந்தணர்: சித்திரை-முதல்நாள்-தில்லையில் வாழும் தீட்சதர்கள். தொகையடியார்களின் ஒன்பதுபேரில் முதலாவதாக வணங்கப்படுபவர்கள்.

1. திருநீலகண்ட நாயனார்:தை-விசாகம். குயவர்-சோழநாடு, சிதம்பரம். அயலறியா வண்ணிம் மனைவியின் சபதத்திற்கு உடன்படடு அவளைத் தீண்டாது, இளமையிலும் முதுமையிலும் இல்லறம் நடத்தி இறைவன் திருவருளால் இளமை பெற்றார்.

2. இயற்பகை நாயனார்:மார்கழி-உத்திரம். வணிகர்-சோழநாடு- காவிரிப்பூம்பட்டினம். சிவனடியார்க்குத் தம் மனைவியிடமே தானமாகக் கொடுத்தவர்.

3. இளையான் குடிமாற நாயனார்:ஆவணி-பூசம். வேளாளர் இளையான்குடி. விதைத்த நெல் எடுத்து அலங்கெரித்து அடியார்க்கு அமுது அளித்தல்.

4. மெய்ப்பொருள் நாயனார்:கார்த்திகை-உத்திரம் குறுநில மன்னர்-நடுநாடு, திருக்கோவலூர். வஞ்சித்துத் தம்மைக் கொல்லும் சிவவேடதாரியைக் காப்பாற்றித் தம் உயிரைவிட்டவர்.

5. விறன்மீண்ட நாயனார்:சித்திரை-திருவாதிரை. வேளாளர்-மலைநாடு, செங்குன்றூர். சுந்திர மூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை பாடுதற்குக் காரணமாய் இருந்தவர்.

6. அமர்நீதி நாயனார்:ஆனி-பூரம். வணிகர்-சோழநாடு, பழையாறை, கோவணத்திற்கு நிறையாக மனைவி, மக்கள், சொத்துக்களுடன் தன்மையும் சிவனடியார்க்குத் தந்தவர்.

7. எறிபத்த நாயனார்-மாசி-அஸ்தம். சோழநாடு, கருவூர். பூக்குடலையைச் சிவனடியாரிடமிருந்து பிடித்திழுத்துச் சிதறவைத்த பட்டத்து யானையை வெட்டியவர்.

8. ஏனாதினாத நாயனார்-புரட்டாசி-உத்திராடம். சான்றோர்-சோழநாடு, எயினனூர். போர் புரியும் பகைவன் நெற்றியில் திருநீற்றைக் கண்டதும் அவனார் கொல்லப்படும்படி நடந்து கொண்வர்.

9. கண்ணப்ப நாயனார்:தை-மிருகசீரிடம். வேடர்-தொண்டை நாடு-உடுப்பூர். ஆறே நாளில் அளவுகடந்த பக்திசெய்து காளத்தியப்பருக்குத் தம் கண்ணை அப்பியவர்

10. குங்கிலியக் கலய நாயனார்:ஆவணி-மூலம். அந்தணர்-சோழநாடு, திருக்கடவூர். மனைவியின் மாங்கல்யத்தை விற்றும் குங்கிலியம் வாங்கியவர். சாய்ந்த லிங்கத்தைக் கழுத்தில் பூமாலை கொண்டு நிமிர்த்தியவர்.

11. மானக்கஞ்சாற நாயனார்:மார்கழி-சுவாதி, வேளாளர்-கஞ்சாறூர்-திருமணம் தொடங்கும்போது திருமணப் பெண்ணாகிய தமது மகளின் தலைமயிரை அறுத்துச் சிவனடியாருக்குத் தந்தவர்.

12. அரிவட்டாய நாயனார்-தை-திருவாதிரை. வேளாளர்-சோழநாடு, கணமங்கலம். சிவ நிவேதனத்துக்குரிய பொருள் கீழே சிந்தியதற்காகத் தமது கழுத்தை அரித்து கொண்டவர்.

13. ஆனாய நாயனார்:கார்த்திகை-அஸ்தம். இடையர்-மழநாடு, மங்களவூர், பசு மேய்க்கும் போது, ஜந்தெழுத்தைப் புல்லாங்குழலில் அமைத்துவாசித்தவர்.

14. மூர்த்திநாயனார்-ஆடி-கிருத்திகை. வணிகர்-பாண்டியநாடு, மதுரை. சந்தனம் தருகின்ற திருப்பணியில் முட்டுப்பாடு நேரவே, முழங்கையை அரைத்தவர். திருநீறு, உத்திராட்சம், சடைமுடி ஆகிய மூம்மையால் உலகாண்டவர்.

15. முருக நாயனார்:வைகாசி-மூலம். அந்தணர்-சோழநாடு, திருப்புகலூர். மலர்த்தொண்டு செய்து திருஞான சம்பந்தர் திருமணத்தில் முக்தி பெற்றவர்.

16. உருத்திர பசுபதி நாயனார்:புரட்டாசி-அஸ்வினி. அந்தனர்-சோழநாடு. திருத்தலையூர். இரவும் பகலும் திருக்குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று ஸ்ரீ ருத்ர மந்த்ரம் ஜபித்தவர்.

17.திருநாளைப்போவார் நாயனார்: புரட்டாசி-ரோகினி (நந்தனார்) புளையர்- சோழநாடு. ஆத்தனூர். தில்லை நடராஜப் பெருமானைப் காணவிரும்பித் தீப் புகுந்து முனிவராய் எழுந்து சிற்றம்பலவன் திருமுன்பு மறைந்தவர்.

18. திருக்குறிப்புதொண்ட நாயனார்:சித்திரை-சுவாதி. ஏகாலீயர்-தொண்டைநாடு காஞ்சீபுரம். சிவனடியார்க்கு வாக்களித்தபடி மழையின் காரணமாக உடையை துவைத்து உலர்த்தித்தர முடியாமல் போனதால் தமது தலையை கல்லின்மீது மோதிக் கொண்டவர் .
அறுபத்து மூவரையும் தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் தொடர்ந்து !

1lord-shiva9. சண்டேஸ்வர நாயனார்:தை-உத்திரம். அந்தணர்-சோழநாடு, திருச்சேயஞ்ஞலூர் அபிஷேகப்பாற்குடத்தை இடரியை தந்தையின் காலை வெட்டித் தொண்டர்க்கு தலைவனாக (சண்ணிப் சப்பதம்) இருக்கும் அருள் பெற்றவர்.

20. திருநாவுக்கரச நாயனார்:சித்திரை-சதயம், வேளாளர்-நடுநாடு, திருவாமூர், ஐந்தெழுத்து ஒதி கருங் கல்லின்மேல் கடலில் மிதந்து கரையேரிப் பல தேவாரப்பாடல்கள் பாடி கைத்தொண்டு செய்து முக்தி பெற்றவர்.

21. குளச்சிறை நாயனார்:ஆவணி-அனுஷம், பாண்டிய நாடு-மனமேற்குடி, அரசன் சமணனாய் இருந்தபோதும் தாம் சிவனடியாரை வழிபட்டார். திருஞானசம்பந்தரை அழைத்துவந்து அரசனையும் நாட்டினையும் சைவ மாக்கியவர்.

22. பெருமிழலைக் குரும்ப நாயனார்:ஆடி-சித்திரை, பெருமிழலையூர் சுந்திர மூர்த்தி ஸ்வாமிகளை வழிபட்டு, அவர் கயிலை செல்வதையறிந்து யோகத்தால் தானும் கயிலை சென்றவர்.

23. காரைக்கால் அம்மையார்:பங்குனி-ஸ்வாதி (பேயார்) , வணிகர்-சோழநாடு. காரைக்கால், சிவபெருமானை வேண்டி மாம்பழம் பெற்றவர். பேய் வடிவம் பெற்றவர். ஆலங்காட்டில் ஈசனாடலையும் பெற்றவர்.

24. அப்புதியடிகள் நாயனார்:தை-சதயம். அந்தணர்-சோழநாடு. திங்களூர். பிள்ளை இறந்ததையும் மறைத்து திருநாவுக்கரசு ஸ்வாமிகளுக்கு அமுது அளித்தவர்.

25. திருநீலநக்க நாயனார். வைகாசி-மூலம்:அந்தணர்-சோழநாடு. சாத்தமங்கை. அன்போடு சிவலிங்கத்தின் மீதிருந்த சிலந்தியை ஊதியதால் எச்சில் பட்டதென்று மனைவியை விட்டுச்சென்றவர். பாணர்க்கு வேதிகையில் இடம் தந்தவர். திருஞானசம்பந்தர் திருமணத்தை நடத்தி முக்தி பெற்றவர்.

26. நமிநந்தி அடிகள் நாயனார்:வைகாசி-பூசம். அந்தணர்-சோழநாடு. ஏமப்பேறூர். தண்ணீரால் விளக்கெரித்தவர். திருவாரூர்ப் பிறந்தாரை எல்லாம் சிவசாரூப்பியராகக் கண்டவர்.

27. திருஞானசம்பந்த நாயனார்:வைகாசி-மூலம். அந்தணர்-சோழநாடு. சீகாழி. உமாதேவியாரால் ஞானப்பால் ஊட்டப்பெற்றவர். தேவாரம்பாடி எலும்பைப் பொன்னாக்கியவர். பல அற்புதங்கள் செய்த இவர் தமது திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் முக்தி தந்தவர்.

28. ஏயகோன் கலிக்காம நாயனார்:ஆனி-ரேவதி. வேளாளர் சோழநாடு திருப்பெரும் மங்களம். சிவபெருமானைப் தூதராகவிடுத்த வண்றொண்டரை இகழ்ந்து பின்பு திருவருள் விளையாட்டால் அவருடைய நண்பரானவர்.

29, திருமூல நாயனார். ஐப்பசி-அசுவினி:இடையர்-சோழநாடு, சாத்தனூர். மூலன் உடலில் தாம் புகுந்து, மூவாயிரம் ஆண்டிருந்து, திருமந்திரம் அருளிச் செய்தவர்.

30. தண்டியடிகள் நாயனார்-பங்குனி-சதயம். சோழநாடு-திருவாரூர். பிரவிக் குருடாக இருந்தும் திருவாரூர் குளத்தை, கரையில் குச்சி கட்டி, இடையே கயிறு கட்டி திருக்குளப்பணி செய்து குருடு நீங்கிச் சமணரை வென்றவர்.

31. மூர்க்க நாயனார்-கார்த்திகை, மூலம். வேளாளர், தொண்டைநாடு, திருவேர்க்காடு. சூதாட்டத்தில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்தவர்.

32. சோமாச்சிமாற நாயனார்-வைகாசி-ஆயில்யம். அந்தணர். சோழநாடு. திரு அம்பர். வேத வேள்வி செய்து, சாதிமத பேதமின்றி, பஞ்சாட்சரவிதிப்படி அடியயார்களுக்கு அன்னதானம் செய்தவர்.

33. சாக்கிய நாயனார்:மார்கழி-பூராடம். வேளாளர்-திருச்சங்கமங்கை. சமணக் கோலமாயினும் மனதார சிவபூசை செய்தவர். மனதில் மலராக எண்ணி இறைவ மீது இட்டகற்களை இறைவன் மீது இட்டகற்களை இறைவன் மலராக ஏற்று அருள் பெற்றவர்.

34. சிறப்புலி நாயனார்-கார்த்திகை-பூராடம். அந்தணர்-சோழநாடு. திரு ஆக்கூர். குல ஆசாரவிதிப்படி, வேதம் ஒதியும், ஒதுவித்தும், சிவனடியைச் சிந்தித்தும் அடியார்கட்கு, அமுதும் பொருளும் தந்தவர்.

35. சிருத்தொண்ட நாயனார்-சித்திரை-பரணி. மாமாத்திரப் பிராமணர்-சோழநாடு, திருச்செங்காட்டாங்குடி வாதாவியைப் போரில் வென்றவர். சிவனடியார்க்குத் தமது ஒரே பிள்ளையைக் கறியாகச் சமைத்து வைத்தவர்.Lord-Shiv

36. சோமான் பெருமாள் நாயனார்-ஆடி, சுவாதி (கழறிற்றறிவார் நாயனார்) அரசர், மலைநாடு, கொடுங்கோளூர். நடராஜர் பாதச் சிலம்பொலி கேட்கக் காலம் தகுந்தமையால் சுந்திர மூர்த்தி ஸ்வாமிகள் தோழமை பெற்றவர். சிவ பெருமானுடையதிருமுகப் பாசுரம் பெற்றவர். கயிலை சென்று ஞானவுலா பாடியவர்.

37. கணநாத நாயனார்-ஆடி-திருவாதிரை. அந்தணர், சோழநாடு, சீர்காழி. சிவனடியாரைப் போற்றுவதோடு, சிவநெறிப் பணிகள் செய்பவருக்கு பயிற்சி அளித்தவர். திருஞான சம்பந்தரை வழிபட்டவர்.

38. கூற்றுவ நாயனார்-ஆடி-திருவாதிரை. குறுநில மன்னர், திருக்களத்தை. தில்லைவாழ் அந்தணர் தமக்கு முடிசூட்ட மறுக்கவே, தில்லையம்பலவன் திருவடிகளையே முடியாகச் சூடப்பெற்றவர்.

39. புகழ்ச்சோழ நாயனார்:ஆடி-கிருத்திகை. அரசர் சோழநாடு. உறையூர். பகைவனது அறுபட்ட தலையில் சிவ சின்னமாகிய சடையிருப்பதைக் கண்டு அஞ்சி உயிர்விட்டவர்.

40. நரைசிங்க முனையரைய நாயனார்-புரட்டாசி-சதயம். குருநில மன்னர்-நடுநாடு. சுந்தரமூர்த்தி சுவாமிகளை வளர்த்தவர். திருவாதிரை தோறும் சிவனடியார்களுக்கு அன்னமிடுவதுடன் 100 பொற்காசுகள் வழங்குவார். சிவவேடம் பூண்ட காமக்குறி மலர்ந்த தூதர்களையும் வணங்கியவர்.

41. அதிபந்த நாயனார்-ஆவணி-ஆயில்யம். நுளையர் (மீன் பிடிப்பவர்) சோழநாடு-நாகப்பட்டினம். நவரத்தினம் இழைத்த பொன்மீனைத்தாமே வைத்துக் கொள்ளாமல் சிவார்பணம் செய்தவர்.

42. கலிக்கம்ப நாயனார்-தை-ரேவதி. வணிகர்-நடுநாடு. பெண்ணாடகம். தமது பழைய வேலையாள் சிவனடியாராக வந்தபோது, தாம் அவனை வழிபட்டு, வழிபடாத தமது மனைவி கையை வெட்டியவர்.

43. கலிய நாயனார்:ஆடி-கேட்டை. செக்கர்- (எண்ணெய் வியாபாரி) தொண்டைநாடு-திருவெற்றியூர். திருவிளக்கு ஏற்ற எண்ணெய் இல்லாததால் தமது இரத்தத்தைக் கொண்டு எரிக்க முயன்றவர்

44. சக்தி நாயனார்-ஐப்பசி-பூசம். வேளாளர்-சோழநாடு. வரிஞ்சியூர். சிவனடியாளர்களைக் குறை கூறுபவர்களின் நாக்கை அறுத்தவர்.

45. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்-ஐப்பசி-மூலம். குறுநில மன்னர்- தொண்டைநாடு. காஞ்சிபுரம். பதவியை வெறுத்துத் ஸ்தல யாத்திரை செய்தவர். க்ஷேத்திர வெண்பாவால் நிலையாமையைக் கூறியவர்

46. கணம்புல்ல நாயனார்-கார்த்திகை-கிருத்திகை. இருக்குவேளூர். புல்விற்று நெய்கொண்டு திருவிளக்கெரித்தவர். நெய்யின்மையால் திருப்புலீஸ்வர சிவன் சன்னதியில் தமது தலைமயிரை விளக்காக எரித்தவர்.

47. காரிநாயனார்-மாசி-பூராடம்.. சோழநாடு. திருக்கடவூர். கோவைப்பாடி பொருள்பெற்று, ஆலயப்பணி செய்தவர்.

48. நின்றசீர் நெடுமாற நாயனார்-ஐப்பசி-பரணி. அரசர்-பான்டிய நாடு. மதுரை. திருஞானசம்பந்தர் தந்த திருநீற்றால் சுரம் நீக்கியவர். அவர் திருவாக்கால், கூன் நிமிரப்பெற்று சைவரானவர்.

49. வாயிலார் நாயனார்-மார்கழி-ரேsivan_par_jpg1வதி. வேளாளர், தொண்டைநாடு-மயிலாப்பூர். மானசீகமான ஞானபூஜை செய்தவர்.

50. முனையடுவார் நாயனார்-பங்குனி-பூசம். வேளாளர், சோழநாடு, திருநீடூர். கூலிக்குப் போர் செய்து அக்கூலிகொண்டு சிவனடியாரை வழிபட்டவர்.

51. கழற்சிங்க நாயனார்-வைகாசி-பரணி. குறுகிய மன்னர்-சிவபூஜைக்குறிய பூவை முகர்ந்ததற்காகத் தமது மனைவியின் மூக்கை ஒரு சிவனடியார் அறுத்த தண்டனை போதாது என்று, அவள் கைகளையும் வெட்டியவர்.

52. இடங்கழி நாயனார்-ஐப்பசி-கார்த்திகை. அரசன்-கோனாடு, கொடும்பாளூர். அடியார் வழிபாடு செய்ய நெய் நெல் திருடினவர்க்கு மேலும் பொருளும் நெல்லும் தந்தவர்.

53. செருத்துணை நாயனார்-ஆவணி-பூசம். வேளாளர், சோழநாடு, தஞ்சாவூர். கழற்சிங்க நாயனாருடைய மனைவி, பூஜைக்குறிய பூவை முகர்ந்ததற்காகத் அவர் மூக்கை அரித்தவர்.

54. புகழ்த்துணை நாயனார்-ஆவணி-ஆயில்யம். ஆதிசைவர். செருவிலிபுத்தூர். சிவபூஜைக்கு உதவியாக அரிசிற்கரைப்புத்தூர் சிவபெருமானால் பஞ்சகாலத்தில் காசு அளிக்கப்பெற்று தொண்டு செய்தவர்

55. கோட்புலி நாயனார்-ஆடி -கேட்டை. வேளாளர். சோழநாடு. திருநாட்டியத்தான்குடி. சிங்கடி, வனப்பகை என்ற இரண்டு புதல்வியரைத் சுந்தர மூர்த்தி ஸ்வாமிக்கு அரிப்பணம் செய்தவர். சிவபூஜைக்குரிய நெல்லையுன்ட சுற்றத்தார் அனைவரையும், குழந்தை உட்பட அனைவரையும் கொன்றவர்.

56. பூசலார் நாயனார்-ஐப்பசி-அனுஷம். அந்தணர். தொண்டைநாடு. திருநின்றவூர். மனத்தினாலேயே கோயில்கட்டிச் சிவ வழிபாடு செய்தவர்.

57. மங்கையர்க்கரசியார்-சித்திரை-ரோகினி. (மாணியார்) அரசியார், பாண்டியநாடு, திருஞானசம்பந்தரை வரவழைத்துத் தமது கணவரையும், பாண்டிய நாட்டையும் சைவமாக்கியவர்.

58. நேச நாயனார்-பங்குனி-ரோகிணி. சாலியர்-கம்பீரநகரம் சிவனடியார்களுக்கு உடையும் கோவணமும் செய்து கொடுக்கும் பணியைச் செய்தவர்.

59. கோச்செங்கட்சோழ நாயனார்:மாசி-சதயம். அரசர் சோழநாடு. எழுபது சிவாலயங்கள் கட்டியவர். முப்பிறவியில் சிலந்தியாகப் பூஜை செய்தவர்.

60. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்-வைகாசி-மூலம். பாணர், நடுநாடு- திருஎருக்கத்தம்புலியூர், திருஞானசம்பந்தருடன் சென்று, யாழ்த்தொண்டு புரிந்தவர்.

61. சடைய நாயனார்-மார்கழி-திருவாதிரை. ஆதிசைவர், நடுநாடு, திருநாவலூர். சுந்திரமூர்த்தி சுவாமிகளைப் பிள்ளைகளாகப் பெற்றவர். அவருக்குச் சடங்கவி சிவாச்சாரியார் புதல்வியைத் திருமணம் செய்விக்க முயற்சித்தவர்.

62. இசைஞானியர்-சித்திரை-சித்திரை. ஆதிசைவர், நடுநாடு, திருநாவலூர், சுந்திர மூர்த்தி ஸ்வாமிகளைப் பிள்ளையாகப் பெற்று வளர்த்த பெண்மணியார்.

63. சுந்தரமூர்த்தி நாயனார்-ஆடி-சுவாதி. ஆதிசைவர், நடுநாடு-திருநாவலூர். திருத்தொண்டர் தொகைபாடியவர். இறைவனைத் தூது அனுப்பியவர். முதலையுண்ட மகனா வருவித்தவர்.