Friday, October 25, 2013

நண்பர்கள்

உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு.
ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.
*உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
*பெருமைக்காரன் கடவுளை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான்,  பொறாமைக்காரன் நண்பனை இழப்பான்.
*ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
* நட்பு என்றும் தோல்வி அடைவதில்லை, தவறு செய்வதும் இல்லை.
* பிரச்சினைகளே இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் உலகத்தில் நண்பர்கள் இல்லாமல் இருக்க முடியாது...

Wednesday, October 23, 2013

எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள்

01. ஒரு முட்டைக்குள் தங்கம் மறைந்திருக்கிறது என்று கற்பனை செய்யுங்கள். இனி ஒவ்வொரு பிரச்சனையையும் ஒரு முட்டையாகக் கற்பனை செய்யுங்கள். அதற்குள் ஒரு தங்கம் மறைந்திருக்கிறதாக நினையுங்கள், இதுவே பிரச்சனையை வெற்றியாக்கும் வழியாகும்.

02. ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதற்கு 20 வழிகள் இருக்கின்றன என்று கூறுகிறார்கள். முதலில் ஐந்து வழிகளை தேர்வு செய்யுங்கள், தேடலை ஆரம்பியுங்கள் அதிலிருந்து புதிதாக 20 வழிகள் பிறக்கக் காண்பீர்கள். இதுதான் படைப்பாற்றல் அதாவது படைப்பாற்றலின் தாயே புதிய சிந்தனைதான்.

03. ஒரு பிரச்சனையை வேதனை என்று கருதாதீர்கள் அப்படிக் கருதினால் அந்த வேதனையை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்துவிடுவீர்கள். பிரச்சனையை ஒரு முட்டையாகவும் அதில் தங்கம் மறைந்திருக்கிறது என்றும் நினைத்தால் நீங்களே அந்தப் பிரச்சனைக்கு தீர்வைக் காண்பீர்கள்.

04. உங்கள் மனதை சுறுசுறுப்பாக்க 20 வழிகளைக் காணுங்கள், அதுபோல சேம்பேறிகளாக இருக்கும் பிள்ளைகளின் மனதையும் உற்சாகமாகத் தூண்டி விடுங்கள்.

05. ஆர்வமும் துடிப்பும் உள்ள சக்தியை நீங்கள் உருவாக்கினால் உங்கள் குடும்பம் பயனுள்ள ஓர் இலட்சியத்தை அடையும்.

06. நீங்கள் வார்த்தைகளை கடுமையாக உச்சரித்தால் அன்பு என்ற மலர் கசங்கிவிடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

07. வெறுப்பு என்பது கூடாத செயல் அது நமது எண்ணத்தில் இருந்துதான் பிறக்கிறது, வெறுப்பு வரும்போதெல்லாம் உள்ளே கூடாத எண்ணம் ஒன்று ஓடுவதைக் கண்டு பிடியுங்கள்.

08. சுவர்க்கம் என்பது ஓர் இடமல்ல மன அழுத்தமில்லாத, இலேசாக, கனமில்லாத உணர்ச்சியை அனுபவிக்கும் நிலைதான் சுவர்க்கமாகும்.

09. நமது கையில் ஆண்டவன் தந்து புவிக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிவாயுதம் விலை மதிப்பற்றதாகும், அதைப் பயன்படுத்தாவிட்டால் கழுதை சந்தனக்கட்டையை சுமந்து சென்று அதன் வாசம் புரியாமலே ஒரு நாள் செத்தது போன்ற கதையாகிவிடும்.

10. ஓர் எண்ணத்தை நல்ல முறையிலும் தெரிவிக்கலாம் கூடாத முறையிலும் தெரிவிக்கலாம், நல்லது கெட்டது நாம் தெரிவிக்கும் முறையாலும் தீர்மானிக்கப்படுகிறது.

11. நமது தூய உணர்வின் தரத்தை உயர்த்திக் கொள்ளாததால்தான் மனம் திரும்பத் திரும்ப பேசுகிறது. ஒரு புலி இரையை உன்னிப்பாக நோக்குவது போல எண்ணங்களை அவதானித்து ஒன்று இரண்டு என்று இலக்கமிடுங்கள் ஒரு கட்டத்தில் அவை நின்று மனம் சாந்தியடையும்.

12. ஆணவத்தை விட்டு சரணடையும் போதுதான் ஆன்மீக உடல் வெளிப்படுகிறது. அப்போது இறைவன் அமுதக்கடலாக இருந்து உங்களுக்கு வழி காட்டிக் கொண்டிருப்பதைக் காண்பீர்கள்.

13. நாம் வாழ்க்கையின் கீழ் மட்டத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால் அதன் உயர்ந்த பரிமாணங்களைப் பற்றி பகுத்தறிந்து வாழும் ஆனந்தத்தை இழந்துவிடுகிறோம்.

14. நீங்கள் தொடர்ந்து நல்ல வழியில் சிந்தித்தால் நீங்கள் வெறுமனே உள்ளமும் உடலும் மட்டுமல்ல அதற்கும் அப்பாலும் உள்ளவர் என்பதைக் கண்டு கொள்வீர்கள்.

15. உள்மன நிலமைகளை விவேகத்துடன் கையாண்டு உங்களை அவமானப் படுத்தியதால் வரும் துன்பங்களை மறக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அதை மனதில் வைத்திருந்தால் நல்ல சிந்தனைகளின் வீச்சுக்கு தடையாகிவிடும்.

16. உள்மன நிலையை மாற்றிக் கொண்டால் அமைதியானவராகவும் அதிக சக்தி மிக்கவராகவும் நீங்கள் மாறிவிடுவீர்கள். வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களில் மாட்டுப்பட்டு தவிக்கமாட்டீர்கள்.

17. மூட் அவுட் என்று பலர் கூறுவார்கள், நீங்கள் அதற்கு ஆட்பட்டுவிடக்கூடாது மூட் என்பது ஓடும் மேகங்களைப் போன்றது, அவ்வப்போது வரும் போகும் அதைக் கழற்றிவிட்டு இயல்பாக வாழப் பழக வேண்டும்.

18. இந்தக் கணத்தை ஆனந்தமாகக் கழி… நேற்றைய கெட்ட தினத்தையே எண்ணிக் குமைந்து கொண்டிருக்காதே.

19. பிணம் நீரில் இலகுவாக மிதக்கும் ஆனால் மனிதன் நீரில் மூழ்கி இறந்துவிடுவான். மனிதன் நீரில் மூழ்கக் காரணம் அவன் நீருடன் சண்டை போடுகிறான். பிணம் நீருடன் சண்டையிடுவதில்லை ஆதலால் மிதக்கிறது. வாழ்க்கையை கடல் என்று கூறுவார்கள் அந்தக் கடலுடன் சண்டையிட்டு மூழ்காது பிணம் போல இலகுவாக மிதக்க வேண்டும்.

20. நீங்கள் டென்சனாக இருப்பதால்தான் சகல பிரச்சனைகளும் வருகிறது. பாம்மை டென்சனுடன் அணுகினால் தீண்டிவிடும், இயல்பாக இருந்தால் வந்த வழியே போய்விடும்.

21. எதிரியையும் அன்புடன் நேசித்தால் பகை தானாக விலகிவிடும். எந்தக் காரியம் செய்தாலும் அன்பின் சக்தியை பிரயோகியுங்கள்.

22. கோபமாக இருக்கும்போது மனம் பாரமாக இருக்கும் அன்பாக இருக்கும்போது காற்றில் மிதக்கும் இதுதான் இறைவனுடைய அருள் சுரக்கும் விதி.

23. புண்ணினால் ஆன காயம் ஆற சிறிது காலம் எடுப்பதைப் போல கஷ்டங்களின் காயம் ஆறவும் சிறிது காலம் எடுக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

24. உடல், உணர்ச்சி, அறிவு ஆகிய மூன்றையும் ஒன்றாக இணைத்து சமமாக ஓடவிட்டால் மாஜாஜாலம் போல பெரும் சக்தி உருவாகும். அப்போது இந்தப் பிரபஞ்சம் தேஜோமயமாக மாறி சொல்ல முடியாத ஆனந்தத்தை ஏற்படுத்தும்.

25. யோகாவின் முக்கிய அம்சமே உடலை டென்சன், படபடப்பு இல்லாமல் தளர்ச்சியாக வைத்துக் கொள்வதுதான். அப்படி இருந்தால் உங்கள் உடலில் ஆரோக்கியமான இரசாயனங்கள் சுரக்கும்.

கௌரவமான பண்பு நலன்களை உருவாக்கிக்கொள்ள

01. நீங்;கள் உண்மையாகவே நம்பத்தகுந்தவர் நேர்மையின் இருப்பிடம் என்ற சமூக முத்திரையை பெற வேண்டும், அதற்காக பாடுபடுங்கள். கெட்டவர் என்று பெயரெடுக்க ஒரு நாள் போதும், நல்லவர் என்று பெயரெடுக்க வாழ்நாளே போதாது.

02. ஏமாற்றாதீர்கள்.

03. திருடாதீர்கள், பிறரின் பொருட்களை ஒருபோதும் கேட்காமல் எடுக்காதீர்கள். அனுமதி பெறாமல் இரவல் எடுத்துச் செல்வதும்கூட ஒருவகையில் திருட்டுத்தான்.

04. நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கையாக இருங்கள். எவரை நண்பராகக் கொண்டிருக்கிறீர்கள் என்பது மட்டுமல்ல, எவருடைய நட்பை தவிர்க்கிறீர்கள் என்பதும் உங்கள் பண்பு நலனை வெளிப்படுத்தும்.

05. நட்பை விலை கொடுத்து வாங்காதீர்கள், அப்படிச் செய்வோரிடம் இருந்து விலகியே இருங்கள். நட்பு என்பது விற்பனைச் சரக்கல்ல.

06. உன்னதப் பண்புகள் கொண்ட மனிதர்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.

07. நியாயமான காரணங்களை தேர்வு செய்யுங்கள், நியாயமானதை மட்டும் செய்யுங்கள், நன்நெறியை பயிலுங்கள் அதுதான் செய்வதற்குரிய செயல்.

08. எதிர்பார்க்கப்படுவதை விட அதிகமாக தருவது என்ற கொள்கையில் வாழுங்கள். உதவுவதில் மற்றவருக்கு முன்னோடியாக செல்லுங்கள், அதுபோல உங்களுக்கு மற்றவர் தருவதைவிட நீங்கள் அதிகமாகவே திருப்பிக் கொடுங்கள்.

09. கொடுத்தவாக்கை நிறைவேற்றுங்கள் பிறரை ஒருபோதும் ஏமாற்றத்திற்கு ஆளாக்க வேண்டாம்.

10. அதிகாரத்தை அல்ல பொறுப்பை கேட்டுப் பெறுங்கள்.

11. பிறருக்கு உதவி செய்வதில் மகிழ்வடையுங்கள், எவருக்காவது ஏதோ ஒருவகையில் உதவி செய்ய முன் செல்லுங்கள்.

12. இரகசியம் காப்பதை கற்றுக்கொள்ளுங்கள் உங்களிடம் இரகசியமாக கூறப்பட்ட எதையும் வெளியிடாதீர்கள்.

13. மற்றவர்களைப் பற்றி இழிவாக பேசாதீர்கள் அது இழிந்த பண்பாகும்.

14. உங்கள் மனச்சாட்சியை எப்போதும் உயிர்ப்பாக வைத்திருங்கள்.

15. மனிதர்களைப்பற்றி முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டாம், எல்லா உண்மைகளையும் திரட்டிய பின்பே முடிவு செய்யுங்கள். நாம் தோற்றத்தைக் கொண்டு மற்றவர்களை ஏற்கிறோம், நிராகரிக்கிறோம் வெளித்தோற்றமே போலியாக இருக்கலாம்.

16. நீங்கள் நீங்களாகவே இருங்கள் நடிக்காதீர்கள், போலியாகக் காட்டிக்கொள்ளாதீர்கள். இதற்கு உங்கள் மறுபக்கத்தையும் காட்ட வேண்டும் என்பது பொருள் அல்ல. உங்கள் குறைகளைப் பற்றி பெருமைப்படாதீர்கள், முன்னேற முயற்சி செய்யுங்கள், ஆனால் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

17. மற்றவர்களுக்கு உதவுங்கள், மற்றவர் தோல்வி கண்டால்தான் நீங்கள் வெற்றிபெற முடியும் என்று எண்ணாதீர்கள். உதவி என்றால் தானாகவே முன்சென்று உதவுவது, எதிர்ப்படும்போது செய்வதல்ல. உதவுதல் என்பது பிரதிபலன் கருதாத செயல். நட்பில் தவிர்க்க முடியாதது, பயிற்சி செய்ய வேண்டிய செயல்.

18. ஒரு தவறு செய்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்க தவறவேண்டாம். மற்றவர் தவறு செய்தால் பொறுமையை வெளிப்படுத்துங்கள். மற்றவர் செய்த அதே தவறுகளை பின்னர் நீங்களும் செய்யாதீர்கள். மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு நீங்கள் தவறு செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். தவறுகள் இயற்கைதான், ஆனால் துன்பத்தைத் தரும்.

19. பெற்றோருக்கு பெருமை தேடித்தாருங்கள் அவர்கள் உங்களை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு செய்த அனைத்துக்கும் நன்றியுடையவர்களாக இருங்கள். நேர்மையான பெற்றோர் அமைவது மகத்தான பெருமை. நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு அவ்வாறே இருங்கள்.

20. எப்போதும் இனிய சொற்களையும் குறைந்த விவாதங்களையும் பயன்படுத்துங்கள்.

21. தயவுசெய்து, நன்றி இந்தச் சொற்களை உளப்பூர்வமாக பயன்படுத்துங்கள். அர்த்தமற்ற பகட்டு வெளிப்பாடுகளில் இருந்து வெளிப்பட்டுக் கொள்ளுங்கள்.

22. பிறர் பேசக்கேட்பதை பழகிக் கொள்ளுங்கள், மற்றவர் பேசும்போது இடைமறிக்காதீர்கள். அவர் சொல்ல வந்ததை நீங்கள் முடித்துவைக்க முயலாதீர்கள்.

23. மென்மையானவராக இருங்கள் அது வலிமையின் வெளிப்பாடு. உள்ளே பலவீனம் இருப்பவர்தான் முரட்டுத்தனம் காட்டுவார்.

24. உங்களிடமுள்ள பொருட் செல்வம் எவ்வளவு என்பதைவிட உங்கள் மதிப்பு எவ்வளவு என்பதே முக்கியமானது.

25. வதந்திகள் பரப்புவோர், வம்பளக்கும் நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உரையாடும்போது உங்கள் பேச்சில் பொறாமையோ, இகழ்ச்சியோ தொனிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். வெட்டிப்பேச்சு வீண் விதண்டாவாதங்களில் இருந்து விலகியிருங்கள். மற்றவர்களுக்கு நேர்ந்த துரதிருஷ்டத்தை பேசி சிரிக்காதீர்கள், அதில் மகிழ்ச்சியடையாதீர்கள், எந்தச் சந்தர்ப்பத்திலும் மற்றவர்களை கேலி பேசாதீர்கள்.

26. சுறுசுறுப்பாக இருங்கள் செயற்பட்டுக்கொண்டே இருங்கள். அனைவருக்கும் நன்மை தரக்கூடிய சமுதாயத்தை உருவாக்குங்கள். ஒரு பொழுதுபோக்கு அல்லது சேவையை தேர்வு செய்யுங்கள் அது நின்மதி தரும்.

27. வாரத்திற்கு ஒரு நல்ல புத்தகம் படியுங்கள். அது உங்கள் ஆன்மாவை செழுமைப்படுத்தும்.

ஆசை பற்றி கவியரசர்

கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து இந்துமதம் தொடரில்...........

"வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது? 
...
ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக் கொண்டிருக்கிறது. 

சராசரி மனிதனை ஆசை தான் இழுத்துச் செல்கிறது. அவன் தவறுக்கெல்லாம் அதுவே காரணமாகிறது
.
வேண்டும்’ என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை.

ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழிநெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக் கொண்டே போகிறான்.

ஒரு விஷயம் கைக்குக் கிடைத்து விட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக் கொள்கிறது.

ஆசை எந்தக் கட்டத்தில் நின்றுவிடுகிறதோ, அந்தக் கட்டத்தில் சுயதரிசனம் ஆரம்பமாகிறது.

சுயதரிசனம் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசனம் கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா?

லட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது ஒழிக்கும் மனப்பக்குவம் இருக்கிறது.

என் ஆசை எப்படி வளர்ந்ததென்று எனக்கே நன்றாகத் தெரிகிறது. சிறு வயதில் வேலையின்றி அலைந்தபோது “மாதம் இருபது ரூபாயாவது கிடைக்கக்கூடிய வேலை கிடைக்காதா? என்று ஏங்கினேன்.

கொஞ்ச நாளில் கிடைத்தது.மாதம் இருபத்தைந்து ரூபாய் சம்பளத்திலே ஒரு பத்திரிகையில் வேலை கிடைத்தது.

ஆறு மாதம்தான் அந்த நிம்மதி. “மாதம் ஐம்பது ரூபாய் கிடைக்காதா?” என்று மனம் ஏங்கிற்று. அதுவும் கிடைத்தது, வேறொரு பத்திரிகையில். பிறகு மாதம் நூறு ரூபாயை மனது அவாவிற்று. அதுவும் கிடைத்தது. மனது ஐநூறுக்குத் தாவிற்று. அது ஆயிரமாக வளர்ந்தது. ஈராயிரமாகப் பெருகிற்று. யாவும் கிடைத்தன. இப்பொழுது நோட்டடிக்கும் உரிமையையே மனது கேட்கும் போலிருக்கிறது!

எந்தக் கட்டத்திலும் ஆசை பூர்த்தியடையவில்லை. `இவ்வளவு போதும்’ என்று எண்ணுகிற நெஞ்சு, `அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறதே,ஏன்? 

அதுதான் இறைவன் லீலை!

ஆசைகள் அற்ற இடத்தில், குற்றங்கள் அற்றுப் போகின்றன.குற்றங்களும் பாபங்களும் அற்றுப்போய் விட்டால் மனிதனுக்கு அனுபவங்கள் இல்லாமல் போய்விடுகின்றன. அனுபவங்கள் இல்லையென்றால், நன்மை தீமைகளைக் கண்டுபிடிக்க முடியாது. ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, இறைவன்ஆசையைத் தூண்டி விடுகிறான்.

ஆசையை மூன்றுவிதமாகப் பிரிக்கிறது இந்து மதம். மண்ணாசை! பொன்னாசை! பெண்ணாசை!

மண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது. பொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது.

பெண்ணாசை வளர்ந்துவிட்டால், பாபம் நிகழ்கிறது. இந்த மூன்றில் ஒரு ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு. ஆகவேதான், பற்றற்ற வாழ்க்கையை இந்துமதம் போதித்தது.

பற்றற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல!

“இருப்பது போதும்; வருவது வரட்டும்; போவது போகட்டும்; மிஞ்சுவது மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட்படாமல் இருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.

ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாத வரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம்.

நான் சிறைச்சாலையில் இருந்தபோது கவனித்தேன். அங்கே இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலோர் ஆசைக் குற்றவாளிகளே.

மூன்று ஆசைகளில் ஒன்று அவனைக் குற்றவாளியாக்கி இருக்கிறது.
சிறைச்சாலையில் இருந்துகொண்டு, அவன் “முருகா, முருகா!” என்று கதறுகிறான். ஆம், அவன் அனுபவம் அவனுக்கு உண்மையை உணர்த்துகிறது.

அதனால்தான் “பரம்பொருள் மீது பற்று வை; நிலையற்ற பொருள்களின் மீது ஆசை வராது” என்கிறது இந்துமதம்.

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு” 

என்பது திருக்குறள்.

ஆசைகளை அறவே ஒழிக்க வேண்டியதில்லை. அப்படி ஒழித்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்?

அதனால்தான் `தாமரை இலைத் தண்ணீர் போல்’ என்று போதித்தது இந்து மதம்.

நேரிய வழியில் ஆசைகள் வளரலாம். ஆனால் அதில் லாபமும் குறைவு, பாபமும் குறைவு.

ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால் அந்த ஐநூறு உனக்குப் பணமாகத் தெரியாது.

இருநூறு எதிர்பார்த்து உனக்கு ஐநூறு கிடைத்தால், நிம்மதி வந்துவிடுகிறது.
“எதிர்பார்ப்பதைக் குறைத்துக் கொள்; வருவது மனதை நிறைய வைக்கிறது” என்பதே இந்துக்கள் தத்துவம்.

எவ்வளவு அழகான மனைவியைப் பெற்றவனும், இன்னொரு பெண்ணை ஆசையோடு பார்க்கிறானே, ஏன்?

லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களைப் பெற்றவன் மேலும் ஓர் ஆயிரம் ரூபாய் கிடைக்கிறதென்றால்ஓடுகிறானே, ஏன்?

அது ஆசை போட்ட சாலை. அவன் பயணம் அவன் கையிலில்லை; ஆசையின் கையில் இருக்கிறது.

போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான்; அப்போது அவனுக்குத் தெய்வ ஞாபகம் வருகிறது.

அனுபவங்கள் இல்லாமல், அறிவின் மூலமே தெய்வத்தைக் கண்டுகொள்ளும்படி போதிப்பது தான் இந்துமதத்தத்துவம்.

பொறாமை, கோபம்’ எல்லாமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள் தான்.

வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து, அந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய, அந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, உனது பயணத்தை ஒழுங்குபடுத்தும் வேலையை இந்துமதம் மேற்கொண்டிருக்கிறது.

இந்துமதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்ல. அது வாழ விரும்புகிறவர்கள், வாழ வேண்டியவர்களுக்குவழிகாட்டி.

வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல இந்து மதமும் நீதிகளையே போதிக்கிறது.

அந்த நீதிகள் உன்னை வாழவைப்பதற்கே அல்லாமல் தன்னை வளர்த்துக் கொள்வதற்காக அல்ல.

உலகத்தில் எங்கும் நிர்பந்தமாகத் திணிக்கப்படாத மதம், இந்து மதம்.

உன் உள்ளம் நிர்மலமாக, வெண்மையாக, தூய்மையாக இருக்கிறது என்பதற்கு அடையாளமாகவே அது `திருநீறு’பூசச் சொல்லுகிறது.

உன் உடம்பு, நோய் நொடியின்றி ரத்தம் சுத்தமாக இருக்கிறது என்பதற்காகவே, `குங்குமம்’ வைக்கச் சொல்கிறது.

இவள் திருமணமானவள்’ என்று கண்டுகொண்டு அவளை நீ ஆசையோடு பார்க்காமலிருக்கப் பெண்ணுக்கு அது`மாங்கல்யம்’ சூட்டுகிறது.

தன் கண்களால் ஆடவனுடைய ஆசையை ஒரு பெண் கிளறி விடக் கூடாது என்பதற்காவே, அவளைத் `தலைகுனிந்து’ நடக்கச் சொல்கிறது.

யாராவது ஆடவன் தன்னை உற்று நோக்குகிறான் என்பதைக் கண்டால், இந்தப் பெண்கள் மார்பகத்து ஆடையைஇழுத்து மூடிக் கொள்கிறார்களே, ஏன்?

ஏற்கெனவே திருத்தமாக உள்ள ஆடையை மேலும் திருத்துகிறார்களே, ஏன்?
எந்தவொரு `கவர்ச்சி’யும் ஆடவனுடைய ஆசையைத் தூண்டி விடக்கூடாது 
என்பதால்.

ஆம்; ஆடவன் மனது சலனங்களுக்கும், சபலங்களுக்கும் ஆட்பட்டது.
கோவிலிலே தெய்வ தரிசனம் செய்யும்போது கூட கண் கோதையர்பால் சாய்கிறது.

அதை மீட்க முடியாத பலவீனனுக்கு, அவள் சிரித்துவிட்டால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல்ஆகிறது.

“பொம்பளை சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு” என்பது இந்துக்கள் பழமொழி.

கூடுமானவரை மனிதனைக் குற்றங்களில் இருந்து மீட்பதற்கு தார்மீக வேலி போட்டு வளைக்கிறது இந்துமதம்.

அந்தக் குற்றங்களில் இருந்து விடுபட்டவனுக்கே நிம்மதி கிடைக்கிறது.
அந்த நிம்மதியை உனக்கு அளிக்கவே இந்துமதத் தத்துவங்கள் தோன்றின.

இன்றைய இளைஞனுக்கு ஷேக்ஸ்பியரைத் தெரியும்; ஷெல்லியைத் தெரியும்; ஜேம்ஸ்பாண்ட் தெரியும். கெட்டுப்போன பின்புதான், அவனுக்குப் பட்டினத்தாரைப் புரியும்.

ஓய்ந்த நேரத்திலாவது அவன் ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்களைப் படிப்பானானால், இந்துமதம் என்பதுவெறும் `சாமியார் மடம்’ என்ற எண்ணம் விலகிவிடும்.

நியாயமான நிம்மதியான வாழ்க்கையை நீ மேற்கொள்ள, உன் தாய் வடிவில் துணை வருவது இந்துமதம்.

ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்?

“ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன், அதனுள் விழுந்துவிடாமல் எப்போதும் ஜாக்கிரதையாகஇருப்பதைப்போல் உலக வாழ்க்கையை மேற்கொண்டவன் ஆசாபாசங்களில் அமிழ்ந்துவிடாமல் இருக்கவேண்டும்” என்கிறார்.
“அவிழ்த்து விடப்பட்ட யானை, மரங்களையும் செடி கொடிகளையும் வேரோடு பிடுங்கிப் போடுகிறது. ஆனால்அதன் பாகன் அங்குசத்தால் அதன் தலையில் குத்தியதும், அது சாந்தமாகி விடுகிறது.”

“அதுபோல, அடக்கியாளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகிறது.”
“விவேகம் என்ற அங்குசத்தால் அது வீழ்த்தப்பட்டதும் சாந்தமாகிவிடுகிறது” என்றார்.

அடக்கியாள்வதன் பெயரே வைராக்கியம்

கடமையை செய் பலனில் பற்றுவைக்காதே

பகவத்கீதா 2.47

வாழ்க்கையில் இது மிக முக்கியமாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பாடமாகும். நமக்கு பல கடமைகள் இருக்கின்றன.நாட்டிற்கு செய்யும் கடமை,தாய் தந்தையருக்கு செய்யும் கடமை,குழந்தைகளுக்கு செய்யும் கடமை என்று இந்த கடமையின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது....

இந்த கடமைகளை முறையாக செய்ய வேண்டியது நமது கடமை.இவற்றை செய்யாமல் இருப்பது தவறு.தனது குழந்தைகளுக்கு ஒரு தந்தை செய்யும் கடமையை செய்ய வேண்டும்.ஆனால் அதற்கு பதிலாக அந்த குழந்தை வளர்ந்தபின் தன்னை கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது.ஒரு வேளை அவ்வாறு எதிர்பார்த்து,தான் எதிர்பார்த்தது நடக்காவிட்டால் மிகவும் வேதனையை அனுபவிக்க வேண்டும்.ஆனால் பலனில் பற்றில்லாதவர்கள் இப்படிப்பட்ட வேதனைகளை அனுபவிப்பதில்லை.நமது கடமையை செய்துவிட வேண்டும்.பதிலுக்கு பிரதி பலனை எதிர்பார்க்க கூடாது. அதே நேரத்தில் நமது கடமையை செய்யாமலும் இருக்க கூடாது.

புதிதாக கர்ம பலன்களை உண்டு பண்ணாதே.ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பலன் உண்டு.நமக்கு தேவையில்லாத பல செயல்களை செய்யும் போல அதற்கு தகுந்த எதிர்விளைவு உண்டாகிறது.உதாரணமாக நேர்மையாக உழைக்காமல் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயற்சிக்கும் போது தேவையற்ற பல பிரச்சினைகள் எழுகிறது.இதனால் நமது கடமையை செய்ய முடியாத சூழ்நிலை உருவாகிறது

ஆனவே நமது கடமையை செய்ய வேண்டும்.அதன் பலனில் பற்றுவைக்க கூடாது.தேவையற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.வேலை செய்யாமல் சும்மா இருக்கவும் கூடாது.

கடமையை செய் பலனில் பற்றுவைக்காதே

வெற்றியின் குறுக்கே கோபம் – அனைவரும் படிக்க வேண்டிய தகவல்!!!

“கோபத்துக்குக் கொள்ளி வைப்போம் ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !”

‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ.

ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர் துருவங்களில் வேர்விட்டு அமர்ந்திருப்பதை அவருடைய வார்த்தைகள் சுட்டிக் காட்டுகின்றன.

‘எனக்குக் கோபமே வராதுங்க’ என்று யாராவது சொன்னால் அவர் பொய் சொல்பவராக இருக்க வேண்டும். அல்லது அதிசயப்பிறவியாய் இருக்க வேண்டும்.

கோபம் தும்மலைப் போன்றது. சாதி மத நிற பேதமில்லாமல் எல்லோருக்குமே வரும். சிலரிடம் ‘நீங்க அடிக்கடி கோபப்படுவீங்களாமே?’ என்று கேட்டால் கூட ‘எவண்டா அப்படிச் சொன்னது?’ என கோபப்பட ஆரம்பித்து விடுவார்கள்.

இதில் சமர்த்துக் கோபம் ஒன்று உண்டு. ‘வரையறுக்கப்பட்ட, கட்டுக்குள் இருக்கக் கூடிய, நிலை தடுமாற வைக்காத’ கோபத்தை அப்படி அழைக்கிறார்கள். உதாரணமாக உங்கள் குழந்தை கீழ்ப்படிதல் இல்லாமல் வளர்கிறது எனில் உங்களுக்குக் கோபம் எழும். அந்த கோபம் கத்தலாகவோ, சண்டையாகவோ இல்லாமல் வரையறுக்கப்பட்ட நிலையில் வெளிப்படும்போது வழிகாட்டும் அறிவுரையாய் மாறி விடுகிறது.

‘மேனேஜர் கோபப்படுறதுலயும் ஒரு நியாயம் இருக்குப்பா. இன்னிக்கு வேலையை முடிக்கலேன்னா சிக்கல் பெரிசாயிடும்’ என பேசிக்கொள்ளும் ஊழியர்கள் மேலதிகாரியின் நியாயமான கோபத்தைப் பேசுகிறார்கள்.

ஆனால் கண்கள் விரிய, கைகளை நீட்டி, குரலை உயர்த்தி ஆவேசமாய்ப் பேசும் கோபம் எந்த இடத்திலும், எந்தச் சூழலிலும் கொண்டாடப்படுவதில்லை என்பதே உண்மை.

கோபத்தை ஒரு மிகப்பெரிய கோடு கிழித்து இரண்டு பாகமாக பிரிக்கிறார்கள். ஒன்று வெளிப்படையான கோபம். `நீ… எப்படிய்யா என் மனைவியைப் பற்றி தப்பாப் பேசலாம்’ என நரம்புகள் புடைக்கக் கத்தும் கோபம். இதை `எக்ஸ்ப்ளோசிவ் ஆங்கர்’ என்பார்கள்.

இரண்டாவது உள்ளுக்குள் உடைந்து சிதறும் கோபம். இதே பிரச்சினையில் எதிராளி உயர் அதிகாரியாகவோ, அரசியல்வாதியாகவோ இருக்கும்போது கோபத்தை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே அடக்கி விடுகிறோம். அது ஒரு கண்ணி வெடிபோல உள்ளுக்குள் வெடித்துச் சிதறும். இதை `இம்ப்ளோசிவ் ஆங்கர்’ என்பார்கள்.

எந்த வகைக் கோபமாக இருந்தாலும் அது நமது உடலையும் மனதையும் ஒரு கை பார்க்காமல் விடாது என்பது தான் உண்மை. சண்டை, அடிதடி, பிரிவுகள், தோல்வி, உடல் பலவீனம் எல்லாவற்றுக்கும் அடிப்படையில் இந்த கோபமே பதுங்கிக் கிடக்கிறது.

மாரடைப்பு, மன அழுத்தம், தலைவலி, வயிற்று வலி, உயர் ரத்த அழுத்தம், தோல் வியாதிகள், வலிப்பு என பல நோய்களுக்கும் கோபமே அடிப்படையாய் இருப்பதாய் மருத்துவம் நீட்டும் பட்டியல் எச்சரிக்கிறது.

அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக்கழக ஆய்வு ஒன்று இன்னும் ஒரு படி மேலே போய், நோய்கள், காயங்கள் போன்றவை குணம் அடையாமல் இருப்பதன் காரணமும் கோபமே என்கிறது.

கோபத்தின் கொடுமையான விளைவுகளைச் சிறைக் கைதிகளின் கதைகள் துயரத்துடன் பேசுகின்றன. ஏதோ ஒரு ஆவேசத்தில் தன்னிலை மறந்து யாரையோ தாக்கிவிட்டோ, கொன்று விட்டோ, பழி தீர்ப்பதாய் நினைத்துக் கொண்டோ பலரும் சிறைச்சாலைக்கு வந்து விடுகிறார்கள். பின் தங்களுடைய கோபத்தின் மீதே கோபம் கொண்டு மிச்ச வாழ்க்கையைக் கண்ணீரின் கரைகளில் வாழ்ந்து முடிக்கிறார்கள்.

இருபத்து ஆறு ஆண்டுகள் சிறையில் வாடிவிட்டு வெளியே வந்தபோது நெல்சன் மண்டேலாவுக்கு சிறை அதிகாரிகளின் மீது கடுமையான கோபம் வந்தது. ஆனால் அடுத்த நிமிடமே அதை அழித்து விட்டு, `சிறையின் கோபங்கள் சிறையுடனே போகட்டும்’ என வெளிச்சத்தை நோக்கி நடை போட்டாராம். இதை அவருடைய சிறை அனுபவக் குறிப்புகள் பேசுகின்றன.

உறவுகளுக்கு இடையே வரும் பிளவுகளும் கோபத்தின் குழந்தைகளே. `கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்’ என்றோ, ‘கொஞ்சம் நிதானமாய் நடந்திருக்க வேண்டும்’ என்றோதான் விவாகரத்துகளின் சோகக் கதைகள் புலம்பித் திரிகின்றன.

கத்துவது, அவமானப்படுத்துவது, அடுத்தவரை குற்றவாளியாக்குவது, பழி சுமத்துவது, நான் சொல்வதே சரியென பிடிவாதம் செய்வது, நீ எப்பவுமே இப்படித்தான் என பாய்வது…. என மண முறிவுக்கான காரணங்கள் எக்கச்சக்கம்.

அலுவலகத்தில் வெற்றியைத் தட்டிப் பறிப்பதும், புரமோஷனைக் கெடுப்பதும் பல வேளைகளில் இந்த பாழாய்ப் போன கோபமேதான். `கொஞ்சம் கோபப்படாம இருந்திருக்கலாம்…’, `மெயில் அனுப்பித் தொலச்சுட்டேன்…’ என்பது போன்ற உரையாடல்கள் அலுவலக வராண்டாக்களில் உலவித் திரிவதை அடிக்கடிக் கேட்க முடியும்.

மொத்தத்தில் கோபம் எனும் ஒரு கொலைக் கருவி வெட்டிப் புதைத்த வாழ்க்கையின் கணக்குகள் எண்ணிலடங்காதவை.

கோபமும், மன்னிப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை. நான் செய்வதும் சொல்வதும் சரியானவை, மற்றவர்கள் செய்வது தவறு எனும் புள்ளியிலிருந்தே பெரும்பாலான கோபங்கள் புறப்படுகின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் எனில் சுயநலமே கோபத்தின் அடிப்படை. மன்னிக்கும் மனதை வளர்த்துக் கொண்டால் கோபத்தின் தளிர்கள் காய்ந்து விடும். இதையே எல்லா மதங்களும், மகான்களும் போதித்துச் செல்கின்றனர்.

‘அவரு ‘வள் வள்’ன்னு எரிஞ்சு விழறார். காலைல வீட்ல சண்டை போட்டுட்டு வந்திருப்பார் போல…’ என்பது சர்வ சாதாரணமான ஒரு பேச்சு. இது கோபத்தின் மிக முக்கியமான ஒரு பண்பை வெளிப்படுத்துகிறது. கோபம் என்பது எங்கோ ஒரு இடத்தில் உருவாகி அங்கேயே முடிந்து விடுவதில்லை. அடுத்தடுத்த இடங் களில் அது தொடர்ந்து, அந்த கோபம் மறையும் வரை நாம் செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் அதன் பாதிப்பு நேர்ந்து விடுகிறது என்பதே அது!

நான் ஒரு கோபக்காரன் என்பதைப் புரிந்து கொள்வது தான் கோபத்தை வெற்றி கொள்வதன் முதல் படி. எனக்கு நோயே இல்லை என்பவர்கள் குணமடைவதில்லை. கோபம் இருப்பதைப் புரிந்து கொண்டால், `இந்தக் கோபத்துக்குக் காரணம் நான் மட்டுமே. நான் நினைத்தால் இந்தக் கோபத்தை எப்படி வேண்டுமானாலும் கட்டுப்படுத்த முடியும்’ எனும் எண்ணத்தையும் மனதில் எழுதிக் கொள்ளுங்கள்.

கோபத்தைக் கட்டுப்படுத்த…

கோபத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு வழிகளை பலரும் பரிந்துரை செய்கின்றனர். வல்லுநர்களின் ஒருமித்த பார்வையின் அடிப்படையில் கிடைக்கும் சில பரிந்துரைகள் இவை…

1. யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளப் பழகுங்கள். எல்லாமே நம்முடைய விருப்பப்படியும், திட்டத்தின்படியும் நடக்கப் போவதில்லை. வாழ்க்கையின் இந்த உண்மை நிலையைப் புரிந்து கொள்வது தேவையற்ற கோபங்கள் எழுவதைத் தவிர்க்கும்.

2. கோபத்தை அன்பினால் நிரப்பப் பழகுங்கள். ‘இன்னா செய்தாரை ஒறுத்தலும், நன்னயம் செய்தலும்’ உறவுகளுக்கிடையே நீண்டகால பந்தத்தை உருவாக்கும். `அடுத்தவர்கள் என்ன செய்யவில்லை’ எனும் பார்வையிலிருந்து, `நான் என்ன செய்தேன்’ என பார்வையை மாற்றுவதே இதன் அடிப்படை.

3. கோபத்தை மூட்டை கட்டிக்கொண்டு திரியாதீர்கள். கோபம் உடனுக்குடன் கரைவதே நல்லது. அப்படியே நீடித்தாலும் ஒரு நாளின் கோபம் அடுத்த நாள் வரை போகவே கூடாது என்பதில் உறுதியாய் இருங்கள். இந்த நாள் புத்தம் புதுசு என்றே ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளுங்கள்.

4. கோபம் வந்தவுடன் அதை உணர்ந்து கொள்ளுங்கள். மூச்சுப் பயிற்சி, பார்வையை வேறு இடத்துக்கு மாற்றுவது, மகிழ்ச்சியான ஒரு பகல் கனவில் மூழ்குவது, நூறிலிருந்து ஒன்று வரை தலைகீழாய் எண்ணுவது என உங்கள் கவனத்தை மாற்றுங்கள். கோபம் தற்காலிகமாய் தள்ளி நிற்கும்.

5. பாசிடிவ் மனநிலையுள்ள மனிதர்களுடன் உங்களின் சகவாசத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கோபம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்.

6. நமக்குப் பிடிக்காதவர்களைப் பற்றிய சிந்தனைகளைக் கொஞ்சம் ஒதுக்கி விட்டு, நமக்குப் பிடித்த நண்பர்கள், உறவினர்கள், அவர்கள் செய்த நல்ல விஷயங்கள் இவற்றைப் பற்றியும் அடிக்கடி அசை போடுங்கள்.

7. சிரிக்கப் பழகுங்கள். நகைச்சுவை நூல்களை வாசியுங்கள். மற்றவர்களோடு சிரித்து மகிழ்ந்து இருப்பவர்களுடைய உடலில் கோபத்தைக் கிளறும் வேதியியல் பொருட்கள் அதிகமாய் சுரக்காது என்பது மருத்துவ உண்மை.

8. இப்போது கோபத்தைத் தூண்டிய இந்தச் செயல் சில ஆண்டுகள் கழித்தும் கோபம் கொள்ளச் செய்யுமா என யோசியுங்கள். டிராபிக்கில் கத்துவதும், வரிசையில் ஒருவர் புகுந்தால் எரிச்சலடைவதும் தேவையற்றவை என்பது புரியும்.

9. இந்தச் செயல் உங்கள் மீது திட்டமிட்டே செய்யப்பட்டதா? அடுத்த நபரின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? இதே தவறை நீங்கள் செய்தால் உங்கள் மீதே கோபம் கொள்வீர்களா என யோசியுங்கள். பெரும்பாலான கோபங்கள் காணாமல் போய்விடும்.

10. மனதார மன்னியுங்கள். இந்த ஒரே ஒரு பண்பு உங்களிடம் இருந்தால் கோபத்தை மிக எளிதாக வெல்லவும் முடியும், வெற்றியை ஆனந்தமாய் மெல்லவும் முடியும்பிளாஸ்டிக் எமன் விழிப்புணர்வு தகவல் !!!

Monday, October 21, 2013

லட்சியங்கள் நனவாக . . பயனுள்ள 20 டிப்ஸ்

நல்ல எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் ஏற்படுத்திக் கொண்டால் நிச்சயம் நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் விளங்கும்; லட்சி யங்கள் நனவாகும்.

அதற்கு என்ன செய்யலாம்?

பயனுள்ள 20 டிப்ஸ் :

1. நாம் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வது நம் மனம்தான். `நான் ஆனந்தமாக இருக்கிறேன்’ என்று நீங்கள் கருதினால் ஆனந்தமாக இருக்கிறீர்கள். இல்லை என்றால், ஆனந்தம் உங்களிடம் `மிஸ்’ ஆகிவிடும். அதனால், எப்போதும் ஆனந்தமாக இருங்கள்.

2. ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் இல்லாத மனிதர்களே கிடையாது. ஒவ்வொருவருக்குள்ளும் அவை புதைந்து கிடக்கின்றன. நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் அடுத்தவர்களுக்கு நிறைவேறுகிறதே; நமக்கு மட்டும் ஏன் நிறைவேறவில்லை என்று எண்ணாதீர்கள். முடியும் என்றால் எல்லாமே முடியும். அதே நேரம், முடியாது என்றால் எதுவுமே முடி யாமல் போய்விடும்.

3. பணம் எல்லோருக்கும் முக்கியம். அதற்காக பணமே வாழ்க்கை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அதுவும் தேவை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இருக்கும் பணமே திருதியெனக் கொண்டால் இல்லாத பணத்திற்காக ஏங்கும் மனநிலை வராது.

4. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுபோகும். அந்த பழமொழியை நீங்கள் தினமும் உங்கள் வீட்டில் செயல்படுத்தி வந்தால் உங்கள் இல்லம் ஆனந்தம் விளையாடும் வீடே!

5. ஜன்னலை திறந்து வைத்தால்தான் வீட்டிற்குள் தென்றல் காற்றின் இனிமையை உணர முடியும். அதுபோல், கவலைகள் சுமக்காத திறந்த மனதுதான் ஆனந்தமாக இருக்கும்.

6. ஆடை பாதி, ஆள் பாதி என்பார்கள். நீங்கள் எப்படிபட்டவர் என்பதை நீங்கள் அணியும் ஆடையும் தீர்மானிக்கிறது. நல்ல பழக்கவழக்கங்களோடு தூய்மையான-நேர்த்தியான ஆடையை தினமும் அணிவது, உங்கள் மீதான அடுத்தவர்களின் மரியாதையை அதிகபடுத்தும்.

7. சிலர் தோல்வியைக் கண்டால் அப்படியே துவண்டுபோய் விடுகிறார்கள். தோல்வியும், வெற்றிம் நிரந்தரமல்ல. குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சொந்தமும் அல்ல. சோர்ந்தாலும் எதிர்த்து போராடினால் நிச்சயம் வெற்றிக்கனி பறிக்கலாம்.

8. வாழ்க்கை என்பது பூக்களின் இதழ்கள் பரப்பபட்ட மென்மை யான பாதை அல்ல. அங்கே ரோஜா வும் இருக்கலாம், ரோஜாவின் முட்களும் இருக்கலாம். ரோஜா கிடைத்தால் சந் தோஷப் படலாம். அதன் முள் குத்தினால், அங்கே யே இருந்து விடக் கூடாது. அதை எறிந்து விட்டு லட்சியபாதையில் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

9. காலையில் எழுந்ததும் குறைந்தது 1/4 மணி நேரமாவது தியானம் செய்ங்கள். அது, உங்கள் மனதை அமைதிபடுத்தும். தெளிவான-உறுதியான முடிவுகள் எடுக்க உதவும்.

10. சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்றால் உற்சாகம் ஊற்றாக பெருக்கெடுத்து வரவேண்டும். அதற்கு, நம்மை சுற்றி ள்ள சூழ்நிலைகள் ஆரோக்கியமாக – மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும். அதற்கு, வாரத்தில் ஒருநாளையாவது குடும்பத்தோடு செலவிடுங்கள். அன்று, பார்க், பீச், தியேட்டர் என்று வெளியில் சென்று வருவது செலவை வைத்தாலும், அள்ள அள்ள குறையாத மகிழ்ச்சியை கொண்டு வரும்.

11. பிரச்சினை இல்லாத கணவன்-மனைவியே கிடையாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும், அவர்களே ஆற அமர்ந்து பேச ஆரம்பித்தால் அதற்கான தீர்வு எளிதில் கிடைக்கும். முன்றாவது நபரிடம் உங்கள் பிரச்சினை பற்றி எக்காரணம் கொண்டு சொல்லி விடாதீர்கள். மீறி சொன்னால், குரங்கு கையில் கொடுத்த பூமாலை ஆகிவிடும் உங்கள் மண வாழ்க்கை.

12. பிரிந்திருந்தால்தான் காதல் பலப்படும் என்று சொல்வார்கள். இதே பிரிவு கணவன் – மனைவியருக்குள் எக்காரணம் கொண்டும் , எந்த சூழ்நிலையிலும் ஏற்படக்கூடாது. மீறி பிரியும் சூழ்நிலை ஏற்பட்டால், வேறு வாழ்க்கைக்கு மனம் பழகிவிடும். அதனால் உஷார்…

13. வேலைக்கு செல்பவர்கள் வேலையே கதியென்று இருந்து விடக் கூடாது. குடும்பம் என்ற ஒன்று இருக்கிறது என்ற நினைப் பும் இருக்க வேண்டும். அப்படி வரும்போது, திருமணம் ஆன ஆண்கள் மனைவிக்கு மல்லிகைபூவையும், கூடவே ஸ்வீட்டைம் வாங்கி வந்து கொடுப்பது மனைவியை ஆனந்தத் தின் உச்சிக்கே கொண்டு போய் விடும்.

14. குழந்தைகளை லட்சியத்தோடு வளர்த்து ஆளாக்க வேண்டும். பாலின வேறுபாடு காட்டக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித திறமை உண்டு. அதை கண்டறிந்து ஊக்க படுத்தினால், அவர்களும் பிற்காலத்தில் ஸ்டார்களாக ஜொலிப் பார்கள்.

15. உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். அதனால், நீங்கள் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கட்டும். பாக்கெட்டுகளில் தயாரித்து விற்கபடும் உணவு வகைகளையும், பாஸ்ட் புட் அயிட்டங் களையும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இவற்றை நீங்கள் விரும்பி சாப்பிட ஆரம்பித்தால் உடல் எக்குத்தப்பாக சதை போட ஆரம்பித்துவிடும். இல்லாத நோய்களும் வந்து ஒட்டிக் கொள்ளும்.

16. வருடத்திற்கு ஒருமுறையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் என்று குடும்பத்தோடு இன்பச் சுற்றுலா சென்று வாருங்கள். இதுவும் உங்கள் உள்ளத்தை உற்சாகபடுத்தும்.

17. வரவிற்குள் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும். அதனால், மாதம்தோறும் பட்ஜெட் போடுவது சிறந்தது. அந்த பட்ஜெட்டில் சேமிபுக்கு என்றும், மருத்துவச் செலவுக்கு என்றும் தேவைபடும்போது மாத்திரம் எடுத்து பயன்படுத்தும் வகையில் ஒரு தொகையை ஒதுக்குவது ஆனந்த வாழ்வுக்கு வித்திடும்.

18. உங்கள் நட்பு வட்டாரம் பயனுள்ளதாக இருக்கட்டும். உங்களை உற்சாகபடுத்தும் நட்புக்கே முதலிடம் கொடுங்கள்.

19. அட்ஜஸ்ட் என்பது அளவோடு தான் இருக்க வேண்டும். வாழ்க்கையே அட்ஜஸ்ட் ஆகிவிட்டால், நீங்கள் வாழ்ந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

20. தம்பதியரின் ஆனந்த வாழ்க்கைக்கு தாம்பத்திய வாழ்க்கையும் ஒரு முக்கிய காரணம். அந்த வாழ்க்கை ஆனந்த மாக இருந்தால் உங்கள் ஒவ்வொரு செயலும் இனிக்கும். ஆனந்த வாழ்க்கை தானாகத் தேடி வரும்.

ஒருவரை கைது செய்யும்போது காவல்துறையினர் பின்பற்றவேண்டிய‌ 11 கட்டளை – உச்சநீதி மன்றம்

உச்சநீதி மன்றம் கடந்த 2009 ஆண்டு நடைபெற்ற ஒரு வழக்கில், காவல்துறையினர் ஒருவரை கைது செய்யும்போது  11 விதி களை  கடைபிடிக்குமாறு கட்டளை யிட்டுள்ளது.

1. கைது செய்யும் போலீஸ் அதிகாரி, அடையாள அட்டை பொருத் தியிருக்க வேண்டும்.
2. கைது செய்தவுடன், அங்கேயே “கைது குறிப்பு’ தயாரிக்க வேண்டும்.
3. கைது செய்யும் தகவலை, உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.
4. கைது செய்த விபரத்தை 12 மணி நேரத்திற்குள் உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிக்கும் உரிமை உண்டு, என்பதை கைதானவருக்கு தெரிவிக்க வேண்டும்.
6. காவலில் உள்ள இடத்தில், கைது விபரம், கைது குறித்த தகவல், அதி காரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட விபரம் மற்றும் எந்த அதிகாரி பொறுப்பில் உள்ளார் என்பதை பதி வேட்டில் குறிப்பிட வேண்டும்.
7. கைதானவரின் உடல் நிலையை பரிசோதிக்க வேண்டும்.
8. கைதானவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
9. கைது குறித்த ஆவணங்களை குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும்.
10. கைதானவரை விசாரிக்கும்போது வக்கீல் உடன் இருக்க வேண்டும்.
11. கைது பற்றிய தகவலை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
இவற்றில் ஏதேனும் ஒன்றை செய்யத்தவறும் பட்சத்தில் காவல் துறையின்ர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடுகிறது.

( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் )

மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

நம் நாட்டை  200 ஆண்டு காலம் ஆண்டு அடிமைபடுத்திய  பிரிட்டீஷ்காரர்களை  எதிர்த்து இராணுவ ரீதியாக போராடிய ஒப்பற்ற  இந்தியத்தலைவர் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

அடிமைதனத்தை ஒழிப்பதற்கு அஹிம்சை போராட்டம் எவ்வளவு தூரம் உதவியதோ அதேபோல் நம் நாட்டில் நேதாஜி அவர்களின் ஆயுதம் ஏந்திய ராணுவம் அமைத்து போராடியதும் நமக்கு உதவியது. இந்திய விடுதலைக்கு போரடிய மாபெரும் தலைவரின் பிறந்த நாளில் அவரின் நினைவுகளில் அவர் ஆற்றிய எழுச்சி உரைகள்  சில….. 
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்க பிப்ரவரி 4, 1944 ஆம் ஆண்டு புறப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு இடையே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய எழுச்சியுரை:

அதோ அந்த நதியின் கரைக்கு அப்பால், அந்த அடர்ந்த காடுகளு க்கும் பின்னால், நம் கண்களில் படும் அந்த மலைகளுக்கும் பின்னால் நமக்காக உறுதியளிக்கப்பட்ட அந்த பூமி உள்ளது-எந்த மண்ணில் இருந்து நாம் உயிர்பெற்றோமோ – அந்த பூமியை நோக்கி நாம் திரும்பு கிறோம். புறப்படுங்கள், இந்தியா அழைக்கிறது… ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது. கிளர்ந் தெழுங்கள், உங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நம்மை அடிமை க்கிய எதிரிகளின் படைகளை கிழித்துக் கொண்டு நமது பூமிக்கு பாதை அமைப்போம் அல்லது இறைவனின் சித்தம்வேறானால் வீரர்களுக் குரிய தியாக மரணத்தை தழுவுங்கள். நமது கடைசி மூச்சில் டெல்லிக்கு செல்லும் நமது பாதைக்கு முத்தமிட்டு விட்டுச் சாவோம். டெல்லிக்கு செல்லும் பாதை, விடுதலை நோக்கிய பாதை…. சலோ டெல்லி :”

மற்றொரு எழுச்சி உரை:”நமது சரித்திரத்தில் ஏற்பட்டுள்ள இந்த எதிர்பாராத சிக்கலான வேளையில் உங்களுக்கு ஒன்றை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் துவண்டுவிடாதீர்கள். உங்கள் உணர்வுகளை தளரவிடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் விதியில் கொண்டுள்ள நம்பிக்கையை இழக்காதீர்கள். இந்தியாவை அடிமைத் தளை யிலேயே வைத்திருக்கும் சக்தி இந்த உலகில் எதற்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல… விரைவில் இந்தியா விடுதலை பெறும். ஜெய்ஹிந்த்.”
ஈடுஇணையற்ற மாபெரும்  தலைவரின் இந்த பிறந்த நாளில் புது சபதம் ஏற்போம்.நாட்டை நல்வழிபடுத்த உறுதுணையாக இருப்போம் என்று……

(((((இணையத்தில் இருந்ததை உங்கள்  இதயத்தில் இணைக்கிறோம்))))

பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள பத்து கட்டளைகள்

நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற , பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள பத்து கட்டளைகள்

பத்து கட்டளைகள்

1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.
2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.
3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.
5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.
6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.
7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.
8. ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.
9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்
10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

(((( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ))))

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது


 1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
 2. காலையில் முன் எழுந்திரு த்தல்.
 3. எப்போதும் சிரித்த முகம்.
 4. நேரம் பாராது உபசரித்தல்.
 5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
 6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
 7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
 8. அதிகாரம் பணணக் கூடாது.
 9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
 10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
 11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
 12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
 13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
 14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
 15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
 16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
 17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
 18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
 19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
 20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலி ருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
 21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
 22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்து ழைக்க வேண்டும்.
 23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
 24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
 25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
 26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
 27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
 28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும் படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்த மான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
 31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
 32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.


(((( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ))))

க‌ணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது


 1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
 2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
 3. கோபப்படக்கூடாது.
 4. சாப்பாட்டில் குறைசொல்லக் கூடாது
 5. பலர் முன் திட்டக்கூடாது.
 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
 7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
 10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
 11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
 12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
 13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
 14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
 15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
 16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
 17. ஒளிவு மறைவு கூடாது.
 18. மனைவியை நம்ப வேண்டும்.
 19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
 20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
 21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
 22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
 23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
 24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
 25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
 26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
 27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
 28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
 29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
 30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
 31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
 32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
 33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
 34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
 35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
 36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
 37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.


(((( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ))))

ஒரு மனிதன் எப்போது தன் வாழ்க்கை நிறைவுசெய்கிறான் தெரியுமா?


 1. போதுமான‌ வருமானம்
 2. நண்பர்கள், உறவினர்களின் ஒத்துழைப்பு
 3. மனித நேயம்
 4. பொழுதுபோக்கு
 5. ரசனை
 6. ஆரோக்கியம்
 7. மனப்பக்குவம்
 8. சேமிப்பு
 9. கூட்டு முயற்சி
 10. குழந்தைகள்


இவை அனைத்தும் கிடைத்த மனிதன் எவனோ அவனே தனது வாழ்க்கையை முழுமையாக நிறைவுசெய்கிறான்.

(((( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ))))

Saturday, October 19, 2013

யாரிடம் எப்படி பேச வேண்டும் ?

தாயிடம் அன்பாகப் பேசுங்கள்; தந்தையிடம் பண்பாகப் பேசுங்கள்; துணைவியிடம் உண்மையைப் பேசுங்கள்; சகோதரியிடம் பாசமாகப் பேசுங்கள்; சகோதரனிடம் அளவாகப் பேசுங்கள்; குழந்தையிடம் செல்லமாகப் பேசுங்கள்; உறவினரிடம் பரிவாக பேசுங்கள்; நண்பர்களிடம் உரிமையோடு பேசுங்கள்; வியாபாரியிடம் கராராக பேசுங்கள்; வாடிக்கையாளரிடம் நேர்மையாக பேசுங்கள்; அரசியல் மட்டும் ஜாக்கிரதையாக பேசுங்கள். கடவுளிடம் மவுனமாக பேசுங்கள்! புரிந்து பேசுங்கள் புரியும்படி பேசுங்கள்! வாழ்வதற்காக பேசுங்கள்! வாழ்க்கையைப் பற்றி பேசுங்கள்! வாழவைக்க பேசுங்கள்! வாழும்போது பேசுங்கள்!

சாதம் பிரசாதம் ஆவது எப்படி...?

சாதம் பிரசாதம் ஆவது எப்படி...?

உறவினர் வீட்டுக்கு போனால் எங்கள் சொந்தகாரரை பார்த்துவிட்டு வருகிறோம் என்கிறார்கள்

ஆனால் ஆலயம் சென்று வந்தால் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருகிறோம் என்று சொல்கிறார்கள்...

அது எப்படி மனிதனை பார்த்தால் வெறும் பார்வை என்றும் சுவாமியை கண்டால் தரிசனம் என்றும் ஒரே செயலை இரு வார்த்தைகளில் அழைக்கிறோம்?

உண்மையில் தரிசனம் என்பது என்ன? கோபுரத்தையோ, கொடி மரத்தையோ அல்லது வேறு தெய்வீக பொருட்களையோ தூரத்திலிருந்து காண்பது கூட எப்படி தரிசனமாகும் என்று பலருக்கு குழப்பம் வரும்

அரிசியை கழுவி பாணையில் இட்டு வேக வைத்தால் அது சாதம் தான்.

அதில் என்ன புனிதத்தன்மை வந்து திடீர் என பிரசாதம் ஆகிவிடுகிறது?

கடவுளுக்கு மனபூர்வமாக அர்பணிக்கும் போது சாதாரண குழாங்கல் கூட சாளக்கிராம கல்லாகி விடுகிறது அது போல சாதாரண சாதமும் அன்போடு படைக்கும் போது பிரசாதமாகி விடுகிறது

ஒரு பொருளை வெறும் கண்ணால் பார்ப்பது திருஷ்டி மட்டும் தான். அதையே பக்திபூர்வமாக பார்ப்பது தரிசனமாகும்.

Tuesday, October 15, 2013

அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை!

புத்தர் தன்னம்பிக்கை கதைகள், முயற்சி திருவினையாக்கும்
"முயன்றால் முடியாதது ஏதும் இல்லை"
” முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள். பார்வையை விரிவுபடுத்துங்கள் “
முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.

மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர். ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.

ஓரு மகன் சொன்னான். “நான் இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்கு விற்றேன்” வியாபாரி கேட்டான். “எப்படி?”

“புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன். இரண்டு புத்த பிக்குகளுக்கு அது சரியென்றுபட்டது. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள் வாங்கினார்கள்:”

இன்னொரு மகன் சொன்னான். “நான் பத்து சீப்புகள் விற்பனை செய்தேன்”

வியாபாரி ஆச்சரியத்துடன் கேட்டான். “எப்படி?”

“வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள அந்தப் புத்த மடாலயத்திற்குப் போபவர்கள் தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது. அப்படிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த மடாலயத்தில் சொன்னேன். ஒரு பெரிய கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால் அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்து கொண்டு புத்தரை தரிசிக்க செல்வது ந்ன்றாக இருக்கும் என்ற ஆலோசனையும் சொன்னேன். ஒத்துக் கொண்டு பத்து சீப்புகள் வாங்கினார்கள்”

வியாபாரி அந்த மகனைப் பாராட்டினான்.

மூன்றாம் மகன் சொன்னான். “நான் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தேன்”

வியாபாரி ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றான். “எப்படி?”

“அந்த புத்த மடாலயத்திற்கு ஏராளமானோர் வந்து பொருளுதவி செய்கிறார்கள். அவர்கள் உதவியை மெச்சி புத்தரின் ஆசிகள் அவர்களை வழிநடத்தும் வண்ணம் அவர்களுக்கு ஏதாவது ஒரு நினைவுப் பரிசு வழங்கினால் அது மேலும் பலரும் புத்த மடாலயத்திற்கு உதவி செய்யத் தூண்ட உதவும் என்றேன். அந்த மடாலயத் தலைவர் என்ன நினைவுப் பரிசு தரலா என்று மடாலயத் தலைவர் கேட்டார்.

நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில சீப்புகளை நீட்டினேன். அந்த சீப்புகளை தினமும் உபயோகிக்கும் பக்தர்களுக்கு அந்த உபதேசங்களைத் தினமும் காணும் வாய்ப்பும் கிடைக்கும், அந்த உபதேசங்கள் அவர்களைத் தினமும் வழிநடத்துபவையாகவும் இருக்கும் என்று தெரிவித்தேன். அது நல்ல யோசனை என்று நினைத்த மடாலயத்தலைவர் உடனடியாக அப்படி புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம் சீப்புகள் வாங்க ஒப்புக் கொண்டார்”

அந்த வியாபாரி எந்த மகனிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்தார் என்று சொல்ல வேண்டியதில்லை.

மொட்டை பிக்குகளிடம் சீப்பு விற்கப் போவது கண்டிப்பாக ஆகாத வேலை என்று நினைப்பது தான் பொதுவாக நாம் காணக்கூடிய மனோபாவம். விதி சில சமயங்களில் நம்மைக் கொண்டு சேர்க்கும் சூழ்நிலையும் கிட்டத்தட்ட இதே போலத் தான் இருக்கும். அதிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லை என்று முதலில் தோன்றும். ஆனால் அதை ஒப்புக் கொண்டு முடங்கி நிற்போமானால் நாம் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டோம் என்பது பொருள்.

அந்த வியாபாரியின் மகன்கள் ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று தீர்மானித்தது புத்திசாலித்தனமான செயல். நாமும் நாம் இருக்கும் அந்த மோசமான சூழ்நிலைக்குத் தீர்வே இல்லை என்று ஆரம்பத்தில் தோன்றினாலும் ஏதாவது செய்து நல்ல தீர்வைக் காண வேண்டும் என்று தீர்மானிப்பதுவே அறிவு.

முயற்சிகளிலும் பல வகை உண்டு என்பதற்கு வியாபாரியின் மூன்று மகன்கள் முயற்சிகளே உதாரணம்.

ஒரு மகன் புத்த பிக்குகளிற்குத் தலை வார சீப்பு பயன்படா விட்டால் வேறெதற்காவது பயன்படுமா என்று யோசித்ததன் பலனாக இரண்டு சீப்புகள் அவனால் விற்க முடிந்தது. புத்த பிக்குகளுக்கு சீப்பு பயன்படாமல் போனாலும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு சீப்பு பயன்படுமா என்று இன்னொரு மகன் யோசித்ததால் அந்த புத்த மடாலயத்தின் முன்புறம் சில சீப்புகள் வைத்து பக்தர்கள் தலைமுடியை முறையாக வாரிக் கொண்டு உள்ளே நுழைய உதவியாக பத்து சீப்புகள் விற்க முடிந்தது.

ஆனால் இந்த இரண்டு மகன்களுடைய முயற்சியாலும் தொடர்ந்து அந்த புத்த மடாலயத்திற்கு சீப்பு விற்க வழியில்லை. அவர்களுடைய விற்பனை ஒரு முறையோடு முடிந்து போய் விட்டது.

மூன்றாம் மகன் கூட இரண்டாம் மகன் போலவே புத்த பிக்குகளுக்குப் பயனில்லா விட்டாலும் அவர்களுடன் சம்பந்தப்படும் மற்றவர்களுக்குப் பயன்படுமல்லவா என்கிற சிந்தனையைத் தான் செய்தான். அந்த வெறும் சீப்பை புத்தரின் உபதேசங்களைச் செதுக்கி அதை அவர்கள் விரும்பும் வண்ணம் உயர்த்தி அதை நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு புத்தரின் ஆசியாக மாற்றி விற்பனை செய்தான். அவனுடைய வித்தியாசமான சிந்தனை அதற்காக அவன் எடுத்துக் கொண்ட உழைப்பு எல்லாம் மற்றவர்களை மிஞ்சும் வண்ணம் வெற்றி பெற்றது. மேலும் மற்ற இருவரைப் போல் இவனுடைய விற்பனை ஒரு முறையோடு முடிகிற விற்பனை அல்ல. புத்த மடாலயத்திற்கு நன்கொடைகள் தருகிறவர்கள் அதிகரிக்க அதிகரிக்க இவன் விற்பனையும் அதிகரிக்கும்.

ஒரு சூழ்நிலையை ஒரே நேர்கோணத்தில் பார்ப்பது இரண்டு சீப்பு விற்ற மகனைப் போல அற்ப விளைவுகளையே ஏற்படுத்தும். பார்வையை சற்று விரிவுபடுத்தி வேறு கோணங்களிலும் சிந்தித்து செயல்படுவது பத்து சீப்பு விற்றவன் முயற்சி போல நல்ல விளைவுகளை அதிகரிக்கும். மேலும் பல கோணங்களிலும் சிந்தித்து, தன் திறமையையும் உழைப்பையும் சேர்த்து முயற்சி செய்பவன் அடையும் நன்மைகள் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தவன் முயற்சியைப் போல பலமடங்கு அதிகரிக்கும். ஆரம்பத்தில் வழியே இல்லை என்று தோன்றியது போய் புதிய பிரதேசங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் வாய்ப்பாக அமையும்.

எனவே எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் மனம் துவண்டு விடாதீர்கள். முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள். பார்வையை விரிவுபடுத்துங்கள். புதிய புதிய கோணங்களில் சிந்தியுங்கள். சில சிறிய மாற்றங்களால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியுமா என்று யோசியுங்கள். பொறுமையுடனும், நம்பிக்கையுடனும், துடிப்புடனும் முயன்றால் அந்தக் கடினமான சூழ்நிலையே நீங்கள் அடையப் போகும் அளப்பரிய வெற்றிகளுக்கு அஸ்திவாரமாக அமையக்கூடும்.

நீங்கள் அழகாக இருக்க‍ தேவை மனத் தெளிவும், அமைதியுமான உள்ளமும்தான்!

பெண்களைக் அழகை குறிவைத்து எண்ண ற்ற அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. உடை அல ங்காரத்திற்காகவும், முகஅழகுக்காகவும், சரும பாதுகாப்பிற்காகவும் விளம்பரப் படுத் தப்படுபவை ஏராளம்.

ஆனால் இவற்றை வாங்கி பயன்படுத்துவ தால் மட்டுமே அழகு அதிகரித்து விடுவதில் லை. உள ரீதியாக தன்னம்பிக்கை அதிகரித் தால் பெண்களின் அழகு கூடும் என்கின்ற னர் உளவியல் வல்லுநர்கள்.

தன்னம்பிக்கை

அழகு என்பது உடல் தொடர்புடையது மட்டு மல்ல அது உள்ளம் தொடர்புடையது. என்கின்றனர் வல்லுநர்கள். எங் கே தன்னம்பிக்கை அதிகரிக்கிறதோ அங்கே அழகு மிளிரும் என்பது அவர்களின் கூற்று. உள்ளத்தில் தன்ன ம்பிக்கை ஒளி உண்டானால் முகத்தில் பொலிவு கூடும் என்பது வல்லுநர்களி ன் கருத்து.

அழகாய் இருக்க வேண்டும். அழகான தோற்றம் பெற வேண்டும் என எந் தப் பெண்ணும் விரும்புவது சகஜம். நாம் நேசிக்கும் ஒருவர். அல்லது ஒரு பொ ருள், அல்லது வேறு ஏதாவதாக இருக் கலாம். அது நம்மை விட்டு போகும் போது, அல்லது இல்லாமல் போகும்போது, நாம் அதற்காக ஏங்கும் நிலை ஏற்படலாம். ஆனால் நாம் எதை இழந்தாலும் அழகு எப்போதும் நம்மை விட்டு அகல்வதேயில்லை. அது எப்போ தும் நம் மிடவே உள் ளது. ஆனால், நமக்குத்தான் வயதாகிவிட்டதே என எண்ணி அழகை, நாம் பேணாத காரணத்தால் தான் அழகிழந்தவர்களாக நாம் நம்மை கருதுகிறோம்.

நம்மை நாமே பாராட்டுவோம்

இழந்த அழகை பெற நாம் முதலில் நம்மீது நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். நம் மைப் பற்றி உயர்வாக எண்ண வேண்டும். நாம் அழகானவர், இனிமையானவர் என எண்ணிக் கொள்வது அழகின் முதல் படியாகும். இதுபோன்ற மெல்லிய உணர்வுக ள் கூட நமது முகத்தை அழகுபடுத்தும்.

ஆரோக்கியமான உடல்நிலை

உணர்வுகள் மட்டுமல்ல, நல்ல ஆரோக்கிய மான வாழ்க்கை முறை கூட அழகாய் இருப் பதற்கு தேவைப்படுகிறது. அழகான மென் உணர்வுகளைப் பெற நல்ல தேக ஆரோக்கி யம் மிக அவசியமாகும். நல்ல ஆரோக்கிய ம் என்பது திடகாத்திரமாக சுறுசுறுப்பானவ ர்களாக இயங்குவதேயாகும். இது சுறுசுறு ப்பு நல்ல சத்தான உணவை உட்கொள்வதன் மூலமே பெற முடியும். நல்ல ஆரோக்கியத் தைப்பெற முதலில் மன அமைதியைத் தேடி க்கொள்ளுங்கள்.

நிதானம் ஏற்படும்

அமைதியில்லாத உள்ளத்தில் அழகான மென்மையான எண்ணங்களுக் கிடமில்லை. எந்தப் பிரச்சினையையும் என்னால் எதிர்த்துப் போராட முடியும்” என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். அச்சம் வில கும் அந்த மனத்தைரியத்தில் ஒரு அமைதி மனதில் ஏற்படுவதை உங்க ளால் அறிந்துகொள்ள முடியும்.

மன அமைதி ஏற்படும் போது மிகுந்த நிதானத்துடன் அன்றாட வேலைக ளை திருப்தியுடன் செய்து முடிக்க முடியும். அமைதியாக உறங்கவும் சாப்பிடவும், நண்பர்கள் உறவினர்களுடன் இனிமை யாக பழகவும் முடி யும்.

தினமும் கவனியுங்கள்

திருமணத்திற்கோ, திருவிழாவிற்கோ செல்லும் போது மட்டுமே சில பெண்கள் அழகுபடுத்திக் கொள்ள முற்படுவார்கள். பிற நாட்களில் ஏனோ தானோவென நாட்களை கழித்து விடுவார்கள். இது தவறான முறையாகும். துடைக்கத் துடைக்கத்தான் கண்ணாடி பளப்பளப்பாகு ம். அதேபோல் பெண்கள் தங்களின் முகத்தை கை கால்களை அடிக்கடி நல்ல முறையில் பேணி வந்தால் நாளடைவில் சகல உறுப்புகளும் பொலிவு பெறும்.

இதேபோல் மனதையும் கவனித்து அமைதி இழக்காது பாதுகாப்பது அதைவிடச் சிறந்த தாகும். ஏனெனில் அமைதியில்லாத மனதி ல் முக அழகு ஏற்படாது. சோகமோ சந்தோ ஷமோ முகமானது மன அழகை பளிச்சென எடுத்துக்காட்டும். இந்த சக்தி கண்களுக்கும் உண்டு. உங்க ளைப் பற்றிய நம்பிக்கை, உடல்களைப் பற்றி ஓர் உயர்ந்த அபிப்பி ராயம், நல்ல நினைவுகள் இல்லாமல் போ கும்பட்சத்தில் அழகாக இருக்கிறோம் என்ற நினைப்பிற்கே இடமில்லை.

வாய்விட்டு பாடுங்கள்

பிரச்சினைகள் மனதை பாதித்து விடுவது இயற்கையே. பிரச்சினைகள் சகலருக்கும் உண்டு. பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டு ம். அது அவசி யமானது. பிரச்சினைகளுடன் வாழ்வது அதைத் தீர்க்க நடவடிக்கைக ளை மேற்கொள்ளாதிருப்பது உடலை மிகவும் பாதித்து விடும்.

மன இறுக்கத்தை ஏற்படுத்தி விடும். எனவே பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொண்டிராமல் அதனையிட்டு நெருங்கிய நண்பர்களுடன், அல்லது உங்களுக்கு மிக வேண்டியவர்களுடன் அப்பிரச்சினையை யிட்டு மனம் திறந்து பேச வேண்டும். பிரச்சி னை இருக்கிறதே என்று விட்டு விடாமல் மனத்தெளிவுடன் ஏனைய வீட்டு வேலைகளை மேற்கொள்ளலாம்.

அல்லது ஏதவாது கீர்த்தனைகள், சுலோகங்கள் தெரிந்திருந்தால் அவைகளை கொஞ்சம் சப்தத் துடன் பாடலாம். இதனால் மனம் இலேசாகும். இதனால் பிரச்சினைகள் மறக்கப்பட்டு மனப்பார ம் குறைந்து சாந்தமடை கிறது. முயற்சி செய்து பாருங்கள்.

மனத் தெளிவு தரும் யோகா

யோகாசனம்கூட மன அமைதியைக் கொடுக்கும். எல்லா யோகாசனங்களை செய்ய முடியாவிட்டா லும் ஓரிடத்தில் அமர்ந்து மூச்சை உள்வாங்கி மெல்ல வெளியே விடுங்கள். அதைத் தொடர்ந்து 15, 20 நிமிடம் வரை செய்து வாருங்கள். மன அமைதி கிடைக்கு ம். அலைபாயும் நினைவுகள் கட்டுக்கடங்கி முகம் அமைதியை வெளிக் கொணரும். பதற்றம் தணியும். உள்ளழகு பளிச்சென வெளிவரும். முக மும் உடலும் புத்துயிர் பெறும்.

சுடர்விடும் குத்துவிளக்கு

அழகான தோற்றம் கொண்ட ஒருவர் பிறரையும் சந்தோஷப்படுத்துகி றார். தன்னம்பிக்கை கொண்டவராக புன்ன கையுடன் அவர் வலம் வரும் போது பார்ப்பவர்கள் பரவசம் கொள்கிறார்க ள். அவரது உள்மன அழகை தெளிவா ன புன்னகை எடுத்துக்காட்டுகிறது.

மனதில் அமைதியும் அடக்கமும் இரு ந்தால், முகமும் உடலும் அழகு பெறும் அப்படியான முகத்திற்கு அலங் காரமே தேவையில்லை. சாதாரண முக அலங் காரம் போதுமானது. குத்து விளக்கு போன்ற அழ கு என்கிறார்களே அது போல அமைதியான முக த்தெளிவினை காட்டும் அழகைத் தான் அப்படி வர்ணிக்கிறார்கள்.

மனத் தெளிவும், அமைதியான உள்ளமும் அழகி ன் முதல்படியாகும். திருப்தியான உள்ளம் அமை தியை ஏற்படுத்தும். எனவே மன அமைதி யைத் தேட முயற்சி செய்யுங்கள். உங்களைப் பற்றி அழ கான எண்ணங் களை உருவாக்கிக் கொள்ளுங்க ள். நல்ல மென் உணர்வுகளை கொண்டிருங்கள். அதுவே உங்கள் முகத்திலும் உடலிலும் மாற்றங்களை ஏற்படு த்தும்.

இது பெண்களுக்கு மட்டுமல்ல‍ ஆண்களுக்கும் சேர்த்துதான்

அவ்வைக்கு, இத்தனை வாக்கு சக்தி எங்கேயிருந்து வந்தது?- மகா பெரியாவா

தமிழ்நாட்டில் எத்தனையோ மகாகவிக ள், பக்தர்கள் இருந்திருக்கிறார்க ள். ஆனால், அவர்கள் பாடியது முக்கியமா கப் பெரியவ ர்களுக்குத்தான். அவ்வை யாருக்கு அவர் களைவிட கவிதா சக்தியோ, பக்தியோ குறைச்சல் இல்லை. அவள் ரொம்பப் பெரி யவள்; ஞானி; யோக சாஸ்திரத்தில் கரை கண்டவள். ஆனாலும், அவள் குழந்தைக ளை நல்ல வர்களாக்க வேண்டும் என்பதில் முக்கி யமாகக் கவனம் வைத்து, அவர்க ளுக்கு நல்ல குணங்களையும், ஒழுக்கத் தையு ம், நீதியையும், தெய்வ பக்தியையு ம் போதனை செய்து பாடினாள்.

பேரக் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டுமே என்று கரிசனத்தோடு ஒரு பாட்டி நல்லது சொல் வது மாதிரி அவ்வைப் பாட்டி அத்தனை தமிழ்க் குழந்தைகளுக்கும் உபதேசம் செய்தாள். அவளு டைய அன்பின் விசேஷத்தால் அவளுக்கப்புறம் எத்தனையோ தலைமுறைகள் ஆனபிறகு, இப் போதும் நாம் குழந்தையாகப் படிக்க ஆரம்பிக்கி றபோதே, அவளுடைய ‘ஆத்திசூடி’தான் முதலில் வருகிறது. இத்தனை ஆயிரம் வருஷங்களாக அவளுடைய வார்த்தை எப்படி அழியாமல் தொட ர்ந்து வருகிறது என்றால் அதற்குக் காரணம் அவ ளுடைய வாக்கின் சக்திதான். பரமசத்தியமான ஒன்றை, நிறைந்த அன்போடு சொல்லிவிட்டால், அப்படிப்பட்ட சொல் ஆயிரம் காலமானாலும் அழியாமல் நிற்கிறது. அவ்வை இப்படி அன் போடு உண்மைகளை உபதேசித்தாள். நம்மில் கம்பர், புகழேந்தி, இளங் கோ போன்ற கவிகளைப் படிக்காதவர்கள் இருக்கலா ம். ஆனால், அவ்வை வாக்கு ஒன்றாவ து தெரியாதவர் இருக்க முடியாது. அவ் வையாரு க்கு இத்தனை வாக்கு சக்தி எங்கேயிருந்து வந்தது? வாக்குச் சக்தி மட்டும் இல்லை; அவளுக்கு ரொம்ப வும் தேக சக்தியும் இருந்திருக்கிறது. அதனால்தான் ‘ஐயோ, தமிழ்க் குழந்தை ஒன்றுக்குக் கூட நம் வாக்கு கிடைக்கா மல் போகக் கூடாதே! ஒவ்வொரு குழந் தைக்கும் நாம் இந்த உபதேசங்களைக் கொடுக்க வேண்டுமே!’ என்ற பரிவோடு அந்தப் பாட்டி ஒரு கிராமம் மிச் சம் இல்லாமல் ஓடி ஓடிப்போய், குழந்தைகளைத் தேடித் தேடி அவர்க ளுக்குத் தன் நூல்களைப் பரிந்து பரிந்து போதித்தாள்.

இந்த படிகளை கடந்தால், நீங்கள் வெற்றிக்கனியை பறிப்ப‍து நிச்ச‍யம்!

வெற்றிக்கான படிகள்

இலட்சியத்தில் வெற்றிபெறுவோம் என்ற உறுதிமட்டும் இருந்தால்போதும். உங்கள் பணிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து உழையுங்கள். தன்னம்பிக்கைதான் உங்கள் வாழ்க் கையைப் பாதுகாப்பான வாழ்க்கை யாக மாற்றித் தருகிறது என்பதை மறவாதீர்கள். வெற்றியைச் சந்திக் காமல் திரும்பமாட்டேன் என்ற உங் களது உறுதிஒன்றே எப்பொழுதும் கை விளக்காக இருக்க வேண்டும்.
“வெற்றிபெறவேண்டும்” என்னும் உங்களுடைய திடமான எண்ணம் தான் வேறு எந்தக் காரியத்தையும் விட மிக மிக முக்கியமானது. மிக இக்கட்டான சூழ்நிலைகளில், நான்தோற்று விடு வேனோ? என்று சிந்திக்காதிர் கள். நான் வெல்வேன் என்று நம்புங்கள்.
அப்போதுதான் பிரச்சினைகளை வெல்ல வழிபிறக்கும். வீட்டிலும், வேலையிலும், வெளியிலும் நான் வெற்றி பெறுவேன் என் கிற மன நிலையே உங்களை வெற்றி பெற ச் செய்துவிடும். எதையும் ஒரு திட்டத் தோடு மட்டும் தொடங்காதிர்கள். செயலோ டும் தொடங்குங்கள். சிந்தனை செய்யுங்க ள்; முடியும் என்ற மாறாத தன்னம்பிக்கை யுடனேயே உங்களுடைய சிந்தனை அமை ந்திருக்கட்டும். இந்த மனப்பான்மையிலி ருந்து மாறிவிடாமல் சிந்தித்தைச் செயலி ல் காட்ட மிகுந்த மகிழ்ச்சி யுடன் உழையுங்கள். வெற்றி மிக அருகில் இருப்பதை உணர்வீர்கள்.
தாழ்வுமனப்பான்மை வேண்டாம். அனைத்தை யும் வெல்ல முடியும். வெற்றியைப்பற்றிய சிந் தனையுடன் செயல் படுங்கள். தோல்வி, வெறு ப்பு, அவநம்பிக்கை ஆகியவற்றிற்கு இடமளிக் காமல் வெற்றியை மட்டு மே சிந்தித்து உயர் வடையுங்கள்.
உங்களுடைய கவனம் முழுவதும் உங்களின் இலட்சியத்தை நோக்கித் தான் இருக்க வேண் டும். தடைகள் எதிர்படும் பொழுதும் இலட்சிய த்தி லிருந்து உங்கள் மனத்தையும், செயலையு ம் பின்வாங்கவிடாதீர்கள். இவையெல்லாம் உங்கள் உறுதியை சோதி கக வந்தவை என்று கருதி அந்தத் தடைகளையும் தாண்டி உங்களுடைய உயர்ந்த இலட்சியத்தை அடை யுங்கள்.
வெற்றியைக் கற்பனையில் நம்பி க்கையுடன் பார்க்கும் திறன், என் னால் முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்ற செயல்வேகம், எது வேண்டும் என் றாலும் பொறுமை யுடன் விடாப் பிடியாக முயற்சி செய்யும் குண ம்,   இந்த நான்கும் உள் ளவரே தன்னம்பிக்கையுள்ள மனிதர்.
நம்முடைய வெற்றி, தோல்வி யைத் தீர்மானிப்பது மனவளர்ச் சியோ, மனவளர்ச்சி இன்மை யோ அல்ல.நல்லதே நடக்கும் எ ன்ற மனோ பாவ ம் தான்.எனவே எப்போதும் உண்மையான ஆர்வ த்துடன் வெற்றிக்காக உழையுங் கள். நம்முடைய உழைக்கும் நே ரம் நாள்தோறும் அதிகரிக்க வே ண்டும். அதற்கு ஏற்றபடி நமது சிந்தனை,செயல்வேகம் ஆகிய வை இருக்க வேண்டும். முயற்சியை எவனொருவன் எப்பொழுது கை விடுகிறானோ அப்பொழுதே அவனது சக்தி முழுவதும் அவனிடமிருந் து பறந்து போய்விடுகிறது.
அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமை யினால் அல்ல. விடாமுய ற்சியினால் தான் .வெற்றியின் இரகசியம் “கடின உழைப்பு” என்ற சொற் களில் தான் அடங்கி இருக்கிறது. நம்பிக்க&33016;யும் உற்சாகமும் மட் டும் இருந்தால் போதும். வெற்றி இலக்கை அடை ந்துவிடலாம். சிந்த னையைவிடச் செயல் தான் எல்லோரையும், எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும். முன்னேற்றத்தையும் தரும். எப்போதும் சிந்தித் துக் கொண்டே மட்டும் இருக்காமல் செயல்பட்டுக் கொண்டெ இருங்க ள்.
நீங்கள் பணிவுடன் பழகுபவர் என்றா ல் பலரை உங்கள் பக்கம் ஈர்த்து விடு வீர்கள். நேர்மை உள்ளம் கொண்டவ ர் என்றால் உங்களை எல்லோ ரும் நம்புவார்கள். விடாது முயற்சி செய் யு ம் அரிய குணத்தைப் பெற்றிருந்தா ல், எப்போதும் நீங்கள் வெற்றி வீரனாகத் திகழ்வீர்கள்.மனம் அமைதி யாக இருக்கவேண்டுமானால் எதிர்மறையான சிந்தனைகளை யும், பிற ரது திறமைகளை சிறுமைபடுத்து வதையும், கீழ்த்தரமான முறை யில் விமர்சிப்பதையும் நிறுத்துங் கள். உங்கள் மனதை சுத்தப்படுத் துங்கள். ஊக்கமான சிந்தனைக ளையே நிரப்புங்கள். எதிலேயும் நல்லதே நடக்கும் என்றே செயல் படுங்கள். இப்போது நீங்கள்தான் உலகிலேயே மிகவும் அமைதியா ன மனம் உடையவர்.
வெற்றி பெறுவோம்’ என்ற திட மான மன உறுதியில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தொடர்ந்து விடாது செயலாற்றிக் கொண்டேயிருந்தால் மிக எளிதாக வெற்றிக் கனி யைப் பறிக்கமுடியும். வாழ்க்கையில் உயர வேண்டும் என்று உங்கள் மனதிற் கு கட்டளையிடுங்கள்.
கட்டளையை முழு வேகத்துடனும் விரு ப்பத்துடனும் அடிக்கடி இட்டால் நீங்கள் உண்மையில் அதை அடைய செயலி லும் இறங்கிவிடுவீர்கள். தன்னம்பிக்கை யே உலகின் மிகச்சிறந்த ஆயுதம். இந்த ஆயுதம் இருந்தால் கஷ்டங் களைப் பொறுத்துக்கொண்டு அதற்கான காரணகாரியத்தை ஆராய்ந்து தீர்வு காணமுடியும். தன்னம்பிக் கையே நோய்களையும், உடல் வலி யையும், மனவேதனைகளையும் நீக்குகிறது. தன்னம் பிக்கையே நீடித்த நல்வாழ்க்கையை அமைத் துத் தருகிறது.
வெற்றி பெறுகிறவனின் ஒரே மந்தி ரச்சொல் “இப்பொழுது”. தோல்வி அடைகிறவனின் ஒரே சாபச்சொல் “பிறகு”. வெற்றி பெற்றே தீர வேண்டும். எனவே எதையும் தள்ளிப் போடாதிர்கள்.பிரச்னைகள்தாம் மிகப்பெரிய சாதனைகளையும், உறுதி மிக்க சாதனையாளர்களை யும் உரு வாக்குகின்றன. எனவே பிரச்னை களை விருப்பத்துடன் எதிர்கொள்ளு ங்கள்.
தோல்வி எனக்கு மனச்சோர்வை அளிப்பதில்லை. மாறாக அது என்னை மேலும் மேலும் ஊக்குவிக்கி றது. எவ்வளவுதான் கல்வியும், செல்வமும் இருந்தாலும் ஒருவனால் வெற்றி பெறமுடியாது. தோல்வி களைக் கண்டு அஞ்சாமல் தொட ர்ந்து முயற்சி செய்யும் ஊக்கம் அவனிடம் இருந்தால்தான் முன் னேற முடியும், வெற்றிபெற முடி யும். இந்த ஊக்கம் இருந்தால், கல்வியறிவு இல்லாதவனும், பொருள்வசதி இல் லாதவனும் கூட முன்னேறுவது உறுதி.
முன்னேற முயற்சியை, உழைப் பை, அறிவை, ஒழுக்கத்தை நம்புங்கள். இதைத்தவிர வேறு எதை நம்பினாலும் முன்னேற முடியாது. அறிவுக் கு இந்த உலகம் எப்போதும் வணங்கும். திறமைக்கு இருகரம் நீட்டி ஆத ரவு தரும். தூய்மையான உள்ளத்திற்கு மிகுந்த வரவேற்பு தரும் .வேதனையை மனோபல த்துடன் எதிர்கொள்ள முடிந்தா ல், எப்படிப்பட்ட துக்கத்தையும் தாங்கிக் கொ ள்ள முடியும்.
வாழ்க்கையை அதன்போக்கில் ஏற்றுக்கொண்டு முடிந்தவரை மகிழ்ச்சி யாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். பிரச்சனை யை பற்றியே சிந்தி த்துக் கொண் டிருக்காமல், அதை எதிர் கொள்வது எப்படி என்று நீங்கள் யோசிக்க ஆரம்பித்தாலே போதும். குழப்பநிலையிலிருந்து நீங்கள் வெளியில் வந்துவிட்டதாக அர்த்தம். இந் த நிலையில்தான் நீங்கள் சரி யான முடிவுகளை, சரியான நேரத்தில் எடுக்கவேண்டியுருக் கும். பிரச்சனை களுக்குத் தீர்வு காணும் முன்பு மனதை சமநி லைப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
மிகப்பெரிய எழுத்தாளராகத் தன்னைக் கற்பனை செய்துகொள்ளும்ஒருவன் தான் எழுதிக் கொண்டிருக்கும் படைப்பு ‘எப்படி முடிந்தால் சிறப்பாக இரு க்கும்’ என்பதை கற்பனையில் பார்த்து, அதற்கு ஏற்றபடி எழு தினால் நிகழ்காலத் தில் வெற்றி பெறமுடியும். ஆகவே நாம் செய்து முடிக்க எடுத்துக்கொண்டுள்ள காரியங்களும் அதை கற்பனையில் பார்த் தபடி உருவாக்கும் குணமும் நம் வாழ் வில் நிச்சயம் பலம் சேர்க்கும். எனவே ‘ முடிவு இப்படி இருக்க வேண்டும்’ என்று உறுதியாக கற்பனையில் படமாகப் பார்த்து முடிவு செய்துகொண்டு தீவிரமாக உழைத்து வெற்றி அடையுங்கள். இதைப் பழக்கத்தில் கொண் டு வந்து தொடர்ந்து சாதனை புரியுங்கள்.
செயல்படுங்கள். காரியத்தில் இறங்குங்கள். அறிவுடன் இருங்கள். கால த்தை வீண் அடிக்காதிர்கள். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி. உறுதியாக நின்று, நானும் ஓர் ‘வெற்றி வீரனே’ என்று காட்டுங்கள். வெற்றி வீரனாக செயல்படுங்கள்.
நிறைந்த முயற்சியை உடையவன், மலர்ந்த வாழ்வைப் பெறுவான். ஆபத்திலிருந்து காப்பாற்றும்படி பிரார்த்திக்க மாட்டேன். ஆபத்துகளை ச் சந்திக்க எனக்கு அஞ்சாமையைக் கொடு. நோய்களிலிருந்து காப்பாற் றும்படி யாசிக்க மாட்டேன். நோயைப் பொறுத்துக் கொ ண்டு வெற்றி கொள்ளும் மனதிடத்தை எனக்கு கொடு. வாழ்க்கை எனும் போரில் என க்கு துணை கேட்க மாட்டேன். வெற்றி யடைய சுயலாபத்தைக் கொடு.
எதிர்பார்ப்புகள் என்ன ஆகுமோ? என்ற பயத்திலிருந்து காப்பாற்றும்படி வேண்ட மாட்டேன். நம்பிக்கையுடன் இருந்து வெற்றியடைய பொறுமையைக் கொடு. தாகூர்.
நிகழ்வதை கொண்டு நிகழ்ச்சிகள் உறுதிப்படு கின்றன. அகமகிழ்வதும், தோல்வியில் வருந்துதலும் சூழல்நி மித்தம். முழுமை பெறுவதே அமைதி.-தொல்காப்பியர்
எந்தப் பணியை நாம் மேற்கொள்கிறோம் என்பது முக்கியமில்லை. அந் தப் பணியில் நம்முடைய ஆற்றலை எப்படி செயல்படுத்துகிறோம் என் பதுதான் முக்கியம். நமக்குள் இருக்கின்ற ஆற்றலை வெளிப்படுத்தி வளர்த்துக்கொள்வது நம்முடைய ஆர்வத்தையும் முயற்சிகளையும் பொறுத்தே அமைகிறது. விரும்பியது கிடைக்கவில்லையெனில், கிடை த்தை விரும்பக் கற்றுக் கொள்ள வேண்டும்.
பல்வேறு காரணங்களால் நமக்கு ள்ளே உருவாகும் தன்னம்பிக்கை யின்மை, தாழ்வு மனப்பான்மை, அச்சம், சந்தேகம், எதிர்காலத்தை ப் பற்றிய அவநம்பிக்கை ஆகிய வற்றறின் காரணமாக நம்மிடம் உள்ள ஆற்றல் செயல்பட முடியா மல் முடக்கி வைக்கப்பட்டு விடுகி றது. எல்லாவ ற்றுக்கும் மேலாக நம்மைப்பற்றி நமக்கென்று “ஒரு சுயமதிப்பீடு” இல் லாதபோது நம் முடைய ஆற்றலைப்பற்றிய உணர்வும் நமக்கில்லாமல் போய்விடுகிறது. என்னால் இது முடியுமா? என்று சந்தேகப்படுவதை விட்டுவிட்டு, என் னால் முடியும் என்கிற நம்பிக்கை யினைப் பெறுகிற போது ஆற்றலும் செயல்படத் தொடங்குகிறது.
ஆற்றல் ஒருவரிடம் ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும்தான் வெளிப் பட வேண்டும் என்கிற அவசியமில்லை. எத்தனைத் துறைகளில் ஈடுபட்டாலு ம் அத்தனைத் துறைகளிலும் நம்மு டைய ஆற்றலை நம்மால் வெளிப்ப டுத்த முடியும். ஆனால் அத்தனைத் துறைகளிலும் அக்கறை காட்டுகின்ற மனஉறுதி நமக்கிருப்பது அவசி யம்.முயற்சிகள் தொடரும் போது ஆற்றல் வெளிப்படத் தொடங்குகிற து. முயற்சி விடாமுயற்சி யாகும் போது ஆற்றல் வலிமை பெறுகிறது. ஆற்றல் வலிமை பெறுகி றபோது மனத்தளவில் ஏற்பட்ட தடைகள் தகர்ந்து போகின்றன.
நான் விரும்பிய துறை கிடைக்கவில் லை. ஆகவே என்னுடைய ஆற்றல் வெளிப்பட வழியில்லை என எண்ணு வது தவறு. அவ்வாறு எண்ணுகின்ற மனிதன் தன்னுடைய ஆற்றலுக்குத் தானே தடை விதித்துக் கொள்ளுகிற வன் என்று தான் கருத வேண்டு ம்.கதவைத் தட்டி வாய்ப்புகள் தங்க ளை அறிவித்துக் கொள்வதில்லை. நாம்தான் வாய்ப்பு களின் கதவைத் தட்டி , திறக்க வைத்து அதைப் பயன்ப டுத்திக் கொள்ள வேண் டும். வாய்ப்பு சிறிதாயினும், பெரிதாயினும் உங் களுடைய முழுத்திற மையைக் காட்டி செயல்படுங்கள். அப்போது உங் கள் ஆற்றல் வளர்ந்து கூர்மையடைவதை உணர லாம்.
தன் திறமையில் சந்தேகம், பயம், சோம்பல், வேண்டாத வீணான கற் பனை, கீழ்நிலையில் உள்ளவர்களின் துன்பத்தைப் பற்றியே தொடர்ந்து நினைத்துக் கொண்டிருப்பது, ஆரம்பத் திலேயே வெற்றியின் அறிகுறி யை எதிர்பார்ப்பது, சிறுதடை என்றாலும் மனமுடைந்துபோவது, இவை போன் ற பல காரணங்களால் ஒருவருக்குத் தோல்வி மனப் பான்மை ஏற்பட்டு விடுகிறது. மனஉறுதியென்பது நமக் கு நாமே உண் மையோடும், நம்பி க்கையோடும் உண்டாக்கிக் கொள்வதுதான். விழுவ தில் தவறில்லை. விழுந்தபின்பும் அமைதியாய் இருப்பதுதான் தவறு. விழுந்தபின்பு மீண்டும் எழுந்து நடப்பதில் தான், நமது வெற்றியின் ரகசி யமே உள்ளது என்பதை நினை வில் கொள்ளுங்கள்.
மூடிய கதவுகளை முறைத் து ப் பார்த்துக் கொண்டிருக்காதிர் கள். அதையே நினைத்து நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்காதிர்கள். திறந்தி ருக்கும் கதவுகளை தேட முயலுங்கள். ஒவ்வொரு வினாடியும் முன் னேற வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் மனிதனுடைய கால்க ளை முன்னோக்கி நடக்கும் விதத்தில் அமைத்திருக்கின்றார்.
பார்க்கின்ற பொருட்களில் மகிழ் ச்சியில்லை. அந்தப் பொருளை பார்க்கி ன்ற மன நிலையில்தான் மகிழ்ச்சி இருக்கின்றது. முயற்சி என்னும் விளைநிலத்தில் உழை ப்பு எனும் இரயில் வெற்றி அனு ம் இடத்தை அடைய வேண்டு மானால் உற்சாகம் என்னும் பச்சைவிளக்கு எப்பொ ழுதும் எரிந்துகொண்டே இருக்க வெண் டும்.தாமதிப்பதால் நம் ஒளியை வீணாக்குகிறோம்.அது பகலில் விளக்குகளை எரிப்பதற்குச் சமம். தாமதம் செய்து கொண்டிருப்பவர்களும், தடுமாறிக் கொண்டிருப்பவர்க ளும் ஒருபோதும் செயலில் துணி ந்து இறங்கமாட்டார்கள்.
ஒரு முக்கியமான காரியத்தை நாம் விரும்பி ஏற்றுக்கொண்டு விட்ட பின்பு, யாருடைய அபிப் பிராயத்துக்காகவும் காத்துக் கொ ண்டு இருக்கக் கூடாது. யாருடை ய பேச்சைக் கேட்டும் இடையில் காரியத்தை நிறுத்தி விடுவதும் சரியல்ல. நாம் மேற்கொள்ள வேண்டிய காரியங்களைப் பற்றி நாம் ஆலோசனை செய்து பார்க்க வேண்டிய சந்தர்ப்பங்களும் உண்டு. செயல் புரியாமல் சோம்பி இருப்பவர்கள் செத்துப்போன சவத் துக்கு ஒப்பானவர்கள்.
முன்னேற்றப்பாதைக்கு, அகத் தூண்டுதல் ஒரு சதவி கிதம். வியர்வை சிந்துதல் 99 சதவிகிதம் .-எடிசன் சுறுசுறு ப்பு என்பது ஒரு செயலை நோக்கி தேக்கமில்லாமல், மந்தமில்லாமல் அதே சமயத்தில் அமைதி யோடு முன்னேறும் (முன்னேற்றும்) உன்னத நிலையாகும். நாம் முன்னேற்ற மடைந்து உயர்வடைவதை நம்மைத்தவிர வேறு எவராலும் தடுத்து விட முடியாது.எந்தத் தொழி லும் வெற்றிபெறக் கூடியவர்கள் தங்களுடைய வேலை நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ள விரும்பு வார்கள்.-ஆண்ட்ரு கார்னீகிஊதியத்திற்கு மேற்பட்ட உழைப் பைச் செய்வதன் மூலம் நமக்கு நாமே பெரிய உதவி யை செய்து கொள்கி றோம்.ஒரு இட த்திற்குப் போய் சேரவேண்டுமானால், இருக்கின்ற இடத்தை விட்டுத்தா ன் செல்லவேண்டும். ஆக உயர்ந்த குறிக்கோளை அடைய வேண்டுமெனில் சில இன்பங்களை மறந்துதான் ஆகவேண்டு ம். ‘இன்று’ என்பது நம்மிடம் உள்ள ஒரு பணநோட்டு போன்றது.
அதனை எப்படி வேண்டுமானாலும் நம்மால் செலவு செய்ய குடியும். ‘நாளை’ என்பது பின்தேதியிட்ட காசோலை போன்றது. அந்தத் தேதி வரும்வரை நம்மால் அதனைக் காசாக்க முடியாது. இன்று அது வெறும் தாளுக்குச் சமம்.
தோல்வியை சந்திக்க நேரும்போ து அதிருப்தி ஏற்படுவது இயற்கை தான். ஆனால் அந்த அதிருப்தியானது உங்களை இயலாதவர்களாக, அவமானப்பட்ட வர்களாக உருமாற்றும் முன்பே அதை “பிடிவாதமாக”மாற்றிக் கொள்ளுங்கள். எதையோ சாதிப்பதற்காக நீங்கள் பிறந்திருக்கி றீர்கள். அது என்னவென்று தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களுடை ய வேதனைகளை நினை த்து வருத்தப்படாதீர்கள். அப்படி வருத்தப்பட்டாலும் அதை வெளியில் சொல்லாதீர்கள். முக்கி யமாக ‘சுய இரக்கம்’ என்பது கூடாது.உங்களை யாராவது விரும்பா விட்டால் அது அவர்களுடைய பிரச் சனை. அது பற்றி நீங்கள் வருத் தப்பட வேண் டிய தேவை இல்லை.
மற்றவர்கள் உங்களுடன் கழிக்கப் போ கும் நேரம் ரொம்பக் குறைவு தான். ஆனால் உங்களுடன் நீங்கள் 24 மணி நேரம் கழிக்க வேண்டியிருக்கும். உங் களுடைய கம்பெனி உங்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும் .விரும்பியதை யாராலும் பெறமுடியும்.முயன்றால் முடியா தது இல் லை.யாரையும் நம்மைவிட தாழ்ந்தவர்களாக எண்ணிவிடக் கூடாது. நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்க ளை மிகவும் முக்கியமான வராக, தவிர்க்க இயலாதவராக மாற்றிக் கொள்ளுங்கள். இனிமையான பேச் சுக்களின் மறுபதிப்பாக இருங்கள்.
ஒரு மனிதனுக்குத் தேவை தன்னம் பிக்கை மட்டுமே. தன்னம்பிக்கை யே அவனை முழுவேகத்தில் செய ல்படவைத்து தடைகளையும் தாண் டி வலிமையுடன் வெற்றியைச் சந்திக்க வைக்கிறது.எல்லாக் கவலைக ளையும் மறக்கவும்,கவலையே இல்லாமல் வாழவும் தன்னம்பிக்கை யுடன் சிந்தியுங்கள். வழிபிறக்கும்.
“தோல்வி உறுதி” என்கிற நிலையி லும் போராடத் துணிந்தவனே உண் மையான வீரன். “வெற்றி பெறு வோம்” என்று நம்புங்கள். இறுதி வரை போராடுங்கள். விடாமல் முயற்சி செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள்.-முசோலினி தன் மேஜை மீது வைத்திருந்த பொன்மொழி
மனதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இலட்சியத்தை அடையும் வரை, நமது மனமும் செயலும் இலட்சியத் தை நோக்கியே சென்று கொண்டிருக்க வேண்டு ம். முதலில் கடினமாகத் தோன் றினாலும் மனப்பழக்கத்தினால் நம்முடைய பணிகளை வெகு எளிதாக தொடர்ந்து செய்யமுடியும். கடினமான வேலையைச் செய்வ தில் மகிழ்ச்சியை காணும் மனநிலை கொண்டவர்கள் எப்போதும்வெற் றியையும் அதன்மூலம் புகழையு ம் பெறுகிறார்கள்.
மனம் சோர்ந்து போனால் நீங்கள் இதுவரை பெற்ற வெற்றிகளை நி னைத்துப் பாருங்கள். உங்கள் நண்பர்கள் உங்களைப் பாராட்டிய அம் சங்களை நினைவிற்குக் கொ ண்டு வாருங்கள். நாம் எழுந்து எழு ந்து உறுதியுடன் எடுத்து வைக்கு ம் முயற்சிகளில்தான் நம்பிக்கையும் வெற்றியும் உள்ளன.