Friday, May 29, 2015

உங்களை நம்புங்கள்

உங்களை நம்புங்கள்

இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன் என்று சான்றோர்கள் கூறுவார்கள். நாம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி பயணப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

பலமுறை தோல்விகளை தழுவக்கூடும். காரணம் என்ன... நாம் நம்முடைய இலக்கை நோக்கி செல்வதில்லை. அடுத்தவரின் வழிகாட்டுதல் அல்லது தூண்டுதலின் படி செல்கிறோம். பெரும்பாலானோர் தங்களுடைய இலக்கை நிர்ணயிப்பதில்லை. நம்மைப் பற்றிய எண்ணமும், தன்னம்பிக்கை குறைவுமே அதற்கு காரணங்கள். இவற்றை போக்குவதற்கு சில வழிகள்.

உங்கள் உள்ளாற்றலை அறியுங்கள்
தன்னம்பிக்கையை வளருங்கள். மற்றவரிடம் இல்லாத தனித்திறமை உங்களிடம் உண்டு. அந்த திறமையை கண்டறிந்து சிறப்பாக செயல்படுங்கள்.

உங்கள் வாழ்க்கையை சிறப்பாக்குங்கள்:
உங்களுடைய செயல்திறனை அறியுங்கள். அதன் மூலம் செய்யும் காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

வருத்தம் கொள்ளாதீர்கள்
உங்களுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து வருத்தம் கொள்ளாதீர்கள்.

கனவு காணுங்கள்
எத்தகைய முயற்சிகள் மேற்கொண்டால் உங்களுடைய இலக்கை அடையலாம் என்று கனவு காணுங்கள்.

திட்டமிடுங்கள்
மேற்கொள்ளும் செயலில் வெற்றி காண தேவையான திட்டத்தை தீட்டுங்கள். அதை நடைமுறைப்படுத்துங்கள்.

உங்களை நம்புங்கள்
உங்கள் மீது அதிக நம்பிக்கை வையுங்கள். அதன் மூலமாக தான் தன்னம்பிக்கையும், மனதைரியமும் பெருகும்.

முயற்சியை கைவிடாதீர்கள்
ஒரு செயலை செய்யும் போது தோல்வி ஏற்பட்டால் அதனை கைவிடாமல் தொடர்ந்து போராடுங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும். இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டால் உங்களுடைய இலக்கை மிகவும் எளிதாக அடையலாம்.

உங்களை நம்புங்கள்! நினைத்த காரியம் வெற்றிபெறும்!!

உங்களை நம்புங்கள்! நினைத்த காரியம் வெற்றிபெறும்!!

கல்வியிலோ,தொழிலிலோ நினைத்த இலக்கை,இலட்சியத்தை அடைவதற்கு ஆயிரம் வழிகள் உள்ளன.ஆனால் இன்றைய இளைஞர், யுவதிகள் எது தமது இலட்சியத்தை அடைவதற்கான மிகப் பொருத்தமான வழியென்று தெரியாது தடுமாறுகின்றனர்.

இதற்கு என்ன காரணம்? சிறந்த தலைமைத்துவம், வழிகாட்டல் இன்மையே. இலட்சியத்தை அடைய முயற்சிக்கின்றீர்களா? உங்கள் மீது நீங்களே நம்பிக்கை வையுங்கள். உங்களின் மீதும் உங்கள் திறமைகளின் மீதும் உங்களுக்கு உள்ள ஆழமான நம்பிக்கைதான் உங்கள் கனவுகளை நிறைவேற்றும் மாபெரும் சக்தி. ஏனெனி்ல்,இளமையும் ,சக்தியும், நம்பிக்கையும் இருக்கும் காலத்தில் உங்கள் எதிர்கால இலட்சியத்தை நீங்கள் முடிவு செய்ய முடியும்.

அதுமட்டுமல்ல, உங்கள் கனவை நிஜமாக்குவதற்கு வார்த்தைகளில் உயிர்த்துடிப்பு இருப்பது மிகவும் அவசியம். உங்களின் ஆர்வம் கேட்போரின் மனதைத் தொடவேண்டும். உங்கள் கனவு எதுவாக இருந்தாலும் அதை சாத்தியமில்லாதது என நினைப்பதைத் தவிர்த்து எதுவுமே சாத்தியம் என நினைத்தால் நிச்சயம் வெற்றிதான்.

வீட்டில் யன்னலருகே வைக்கப்பட்டுள்ள செடியானது வெளிச்சம் தேடி வெளியே வளைந்து செல்வதைப் பொலவே விடாமுயற்சியுடையவர்கள் தமக்கான புதிய பாதைகளைத் தேடிக்கொண்டு தொடர்ந்து செல்லவேண்டும்.

வெற்றி பெற்றவர்கள் அனைவரும் மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது தாங்கள் மட்டும் விழித்திருந்து உழைத்தவர்கள். சலிப்பு என்ற சொல்லுக்கே இடமளிக்காமல் கடும் உழைப்பை உணவாக உட்கொண்டவர்கள்.

Goal-Setting-The-Key-to-Successசாதிக்க வேண்டும் என்ற துடிப்புடைய சிறு குழுவினரிடம் பன்முக நுண்மதி, பொதுஅறிவு மிருதுநிலைத் திறன், சிந்தனைத்திறன் என்பவற்றுடன் செயற்படும் ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்பு என்பன காணப்படுமாயின், இந்த உலகையே மாற்றியமைக்க முடியும்.

எல்லோரும் நடந்த பாதையில் செல்லாமல் மாறாக பாதைகளே இல்லாத இடத்தில் நடக்க முயன்றால், உங்களது காலடித் தடங்கள் மற்றவர்களுக்கு புதிய பாதையாக அமையும். இப்பாதையூடாக உங்களுடைய கற்கைநெறிகளை தெரிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை பிரகாசமடையும். இதன்போது உங்களைப் பின் தொடர்பவர்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாகத் திகழ்வீர்கள்.

மாற்றமடையும்போது கற்கின்றோம். கற்கும்போதே மாற்றமடைகின்றோம். மாற்றம் ஒன்றே தொழில் வாழ்க்கைக்கும் உயர்கல்விக்கும் சிறந்த வழிகாட்டியாகும். அதற்காக எல்லோரும் மாற்றங்களுக்கான தேவையை இனங்கண்டறிவது மட்டுமன்றி, அறிந்துகொண்ட தேவையை பூர்த்தி செய்வதற்கான புதிய நடைமுறைகளையும் கண்டுபிடிக்க வேண்டும்.இதன்மூலம்,உயர்கல்வி,தொழிற்கல்வி என்பவற்றைக் கற்பதற்கான வாய்ப்பை பெறமுடியும்.

ஒரு விதையை நிலத்தில் போட்டு அதன் வளர்ச்சிக்குத் தேவையான பசளை, தண்ணீர் ஆகியவற்றை அளிக்கிறோம். அந்த விதை, தனது வளர்ச்சிக்காக இடப்பட்ட எருவாகவோ, தண்ணீராகவோ மாறாமல் தன் இயல்பிலேயே எடுத்துக்கொண்டு பிரமாண்ட மரமாக வளர்கிறது. அதேபோல், இளம் சமுதாயத்தினர் பரந்து கிடக்கும் வாய்ப்புக்களில் தமக்கு பொருத்தமானதை மட்டும் எடுத்துக்கொண்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

Thursday, May 28, 2015

ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய அருமையான கடிதம்.

ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய அருமையான கடிதம்.

அன்புள்ள மகனுக்கு,

வாழ்வும் தாழ்வும் சில காலம்.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை ,
மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?

மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்.

1. வாழ்க்கை, அதிர்ஷ்டம், நல்ல வாய்ப்பு, இடையூறுகள் ஆகிய அனைத்தும் முன் மதிப்பிட்டு அறிய(கணிக்க) முடியாதவை.

தாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று எவரும் அறிவதில்லை.

சில கருத்துக்களை அறிவுரைகளை சரியான நேரத்தில்(முன் கூட்டியே) கூறி விடுவது நல்லது.

2. நான் உன்னுடைய தந்தை. நான் உனக்கு இதனை கூறாவிடில் உனக்கு இதனை யாரும் கூறப்போவதில்லை.

3. நான் உனக்கு எழுதுவது யாதெனின், எனக்கேற்பட்ட சிறு அளவிலான சொந்த அனுபவங்களேயாகும்.

இது ஒரு வேளை தேவையற்ற அதிகப்படியான இதய வலிகளிலிருந்து உன்னைக் காக்க இயலும்.

கீழ்க் கண்டவற்றை நீ உன் வாழ்க்கை முழுவதும் கவனத்தில் கொள்ள வேண்டும்:

1. உன்னிடத்தில் நல்லவர்களாக நடந்து கொள்ளாதவரிடம் நீ உன் வன்மத்தை, பொல்லாங்கை காட்டாதே.

உன் அம்மாவையும் என்னையும் தவிர உன்னை நல்ல விதமாக நடத்தி செல்லும் பொறுப்பு எவருக்குமில்லை.

உனக்கு யாராவது நல்லவர்களாக இருப்பின் அது உனக்கு கிடைத்த புதையல், பொக்கிஷம் போன்றதாகும்.

அவர்களுக்கு நீ நன்றி உடையவனாக இரு.

மேலும் நீ அவர்களிடத்தில் கவனமாக நடந்து கொள்ளுதல் அவசியம்.

ஏன் எனில், ஒவ்வொருவரின் அணுகு முறையும் ஏதேனும் ஒரு நோக்கத்துடனேயே இருக்கிறது.

உன்னிடத்தில் ஒரு மனிதன் நல்லவனாக நடந்து கொள்கிறான் என்றால், உன்னை அவன் உண்மையாக நேசிக்கிறான் என்று அர்த்தம் இல்லை.

நீ விழிப்புடன் இருக்க வேண்டும்.

அவனை நீ ஆய்ந்தறியாமல், மதிப்பிடாமல் உண்மையான் நண்பன் என்று கொள்ளாதே.

2. இந்த உலகில் இன்றியமையாதது என்று ஒன்று இல்லை.

உனக்கு உடமையானது என்று எதுவும் இந்த உலகில் இல்லை.

இந்த கூற்றினை நீ புரிந்து கொண்டாய் என்றால், உன்னை சுற்றி மனிதர்கள் சூழ்ந்திருந்தாலும், எவரும் தேவை இல்லை என்றாலும் அல்லது நீ அதிகமாக விரும்பிய ஒன்றையோ/ ஒருவரையோ நீ இழக்க நேர்ந்தாலும் உன் வாழ்க்கையை நீ எளிதில் வழி நடத்திச் செல்ல இயலும்.

3. வாழ்கை என்பது மிகவும் குறுகிய காலத்திற்கு உட்பட்டது.

இன்றைய வாழ்க்கையை நீ வீணடித்தாய் என்றால் உன் வாழ்க்கை உன்னை விட்டு சென்று விட்டதை நாளை நீ கண்டு கொள்வாய்.

வாழ்க்கையின் மதிப்பினை நீ எவ்வளவு விரைவில் உணர்ந்து கொள்கிறாயோ ஓரளவாகிலும் நீ வாழ்வினை அனுபவிப்பாய்.

4. அன்பு தான் என்றாலும் அது உறுதியற்ற ஒரு உணர்வே ஆகும்.

காலத்தை பொருத்தும் ஒருவரின் மனநிலையை பொருத்தும் இந்த உணர்வு மங்கி குறைந்து விடுகிறது.

உன்னை மிகவும் நேசித்தவர் உன்னை விட்டு விலகிச் செல்லும் பொழுது நீ அமைதியாக இரு.

காலம் உன் வலிகளையும் கவலைகளையும் துடைத்தழித்துக் கொண்டு போய்விடும்.

இனிமையான அன்பையும், அழகையும் நீ மிகையாக எண்ணாதே.

அன்பில்லாமல் போகின்ற தருணத்தில் ஏற்படும் கவலைகளையும் நீ பெரிதாகக் கொள்ளாதே.

5. வெற்றி பெற்ற நிறைய மனிதர்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்கள் இல்லை.

நீ சிரமப்பட்டு கல்வி பயிலாவிடினும் வெற்றி பெற இயலும் என்பது இதன் பொருள் இல்லை.

என்னென்ன அறிவுத்திறனை நீ பெற்றிருக்கின்றாயோ அது வாழ்க்கையில் உனக்கான ஆயுதங்களாகும்.

ஒரு சிலர் வாழ்க்கையில் உயர்கின்ற தருணத்தில் இன்னல்களை அனுபவிக்கின்றனர்.

ஒரு சிலர் துவக்கத்திலேயே இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.

6. என்னுடைய வயதான காலத்தில், உன்னுடைய வருமானத்தை சார்ந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை.

அதே போன்று உன்னுடைய வாழ்க்கை முழுவதும் நான் உனக்கு நிதி ஆதாரங்களை அளிக்க இயலாது.

உன்னை வளர்த்து ஆளாக்கும் வரையில் தான் என்னுடைய ஆதரவும் பொறுப்பும்.

நீ வளர்ந்து விட்ட பிறகு இந்த பொறுப்பு முடிவடைந்து விடுகிறது. அதன் பிறகு நீ தான் முடிவு செய்ய வேண்டும்.

நீ பயணிக்கப் போவது பொது போக்குவரத்திலா அல்லது உன் சொந்த வாகனத்திலா, ரதத்திலா வசதி படைத்தவனாகவா அல்லது ஏழையாகவா என்று.

7. நீ கூறும் வார்த்தைகளுக்கு நீ மதிப்பளிக்க வேண்டும். ஆனால் பிறர் அவ்வாறு இருத்தல் வேண்டும் என்று நீ எதிர்பார்க்கக் கூடாது.

நீ அனைவருக்கும் நல்லவனாக இரு.

ஆனால் உனக்கு அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பாராதே.

நீ இதனை புரிந்து கொள்ளாமல் போனால் உன் வாழ்க்கை தேவையற்ற பிரச்சினைகளில் உழல வேண்டி இருக்கும்.

8. நான் பல வருடங்களாக பரிசு சீட்டுகளை வாங்கி இருக்கிறேன். 
ஆனால் எந்த பரிசும் எனக்கு அடித்ததில்லை / கிடைக்கவில்லை.

நீ வசதி படைத்தவனாக வேண்டுமென்றால் நீ கடினமாக உழைக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

இலவசமாக உணவு கிடைக்காது.

9. நான் உன்னுடன் எவ்வளவு அதிகப்படியான நேரம் இருக்கிறேன் என்பது ஒரு பொருட்டல்ல.

நாம் ஒன்றாக இணைந்திருக்கும் அந்த நேரத்தை பெரும் பாக்கியமாகக் (பொக்கிஷம்) கருதுவோம்.

நமக்கு தெரியாது நாம் மறுபடியும் நம்முடைய அடுத்த பிறவியில் சந்திப்போம் என்று.

அன்புடன் ,
உன் அப்பா.

இக் கடிதம் புகழ் பெற்ற ஹாங்காங் தொலைக் காட்சி ஒளிபரப்பாளர், குழந்தை உளவியல் நிபுணரால் அவருடைய மகனுக்கு எழுதப்பட்டது.

இக் கடிதத்தில் உள்ள வார்த்தைகள், கருத்துக்கள் உண்மையிலேயே நம் அனைவருக்கும் பயனளிப்பதாகும்.

இளமையானவர்கள், முதியவர்கள், குழந்தைகள் அல்லது பெற்றோர்கள் அனைவருக்கும் இது பயனளிக்கும்.

அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு இதனை படிப்பினையாக கற்பிக்கலாம்.

Monday, May 18, 2015

குழந்தையர் வளர்ப்பு

குழந்தையர் வளர்ப்பு :-

* அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.

* கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.

* குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.

* அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது.

* பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.

* ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.

* புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது.

* நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.

* நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது.

* * 4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்.

** தினமும் அரை மணி நேரமாவது தந்தை, குழந்தைகளிடம் நண்பனைப்போல் உரையாடுங்கள்.

Thursday, May 14, 2015

வெற்றி பெற முடியும் என்று நம்புங்கள்

வெற்றி பெற முடியும் என்று நம்புங்கள் 
        
இந்த உலகில் மிக மிக முக்கியமான மந்திர வார்த்தை முடியும் என்றால் முடியும் என்ற வார்த்தைதான். இந்த உலகில் தனி மனிதர்களால் சாதிக்கப்பட்ட சாதனைகள் அனைத்திற்கும் அடித்தளமாக இருந்து எலுச்சி ஊட்டி, செயற்பட வைத்தும் இந்த ‘முடியும் என்றால் முடியும்’ என்ற வார்த்தைதான்.  தனிமனிதர்கள் நம்பிக்கயுடன் சாதித்தால் அந்த நாடே பெறுமை பெறுகிறது. இதற்கு உதாரனமாக, கிரிக்கெட்டையே எடுத்துக்கொள்ளுன்கள். 1999 ம் ஆண்டு உலகக்கோப்பையின் போது சச்சின் டெண்டுல்கர் பெரிய அளவில் சாதிப்பார். அவரால் இந்தியா கோப்பையை வெல்லும் என்று இதியாவே எதிர்பார்த்தது. 

ஏன் எப்படி? 1996 ஆம் ஆண்டு வரை நடந்த ஆறு உலகக்கோப்பைகளிலும் ரன் குவித்தலில் இவரே முதலிடம் பெற்றிருந்தார். அதாவது ஓர் உல்லகக்கோப்பையின் ஒரே தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் டெண்டுல்கர்தான். 

1996 ம் ஆண்டு உலகக்கோப்பையில் டெண்டுல்கர் ஏலு இன்னிங்ஸ்களில் விளையாடி மொத்தம் 523 ரன்கள் எடுத்திருந்தார். இதில் இரண்டு சதங்களும் அடங்கும்.

ஆனால் 1999 ம் ஆண்டு உலகக்கோபையில் சூழ் நிலை மாறிவிட்டது. முதல் இரு ஆட்டங்களில் டெண்டுல்கர் விளையாடவில்லை. அவர் தந்தை 

இறந்த்தால்  இரண்டாவது லீக் போட்டியில் விளையாடாமல் மும்பைய்க்குத் திரும்பினார்.இறுதிச்சடங்கு முடிந்த மறு நாளே இங்கிலாந்து வந்து ஒரு நாள் பயிற்சியிலும் ஈடுபட்டார். பிறகுகென்யாவுடன் நடந்த போட்டியில் 140 ரன்கள் எடுத்தார். 

‘அவுட்டாக்வில்லை. இந்தியாவும் ஜெய்த்தது’. ‘என் தந்தைக்கு நான் செய்த உன்னமயான மரியாதை இதுதான்’.அவரது ஆன்மா இபோது சாந்தியடையும் என்றார். இவரால் எப்படி முடிந்தது?         தந்தை இறந்த சோகத்தை  ஏற்றுக்கொண்டு மனதை   வலிமையக்கிகிக் கொண்டு விளையாடினார்.இந்திய நாடே தன்மீது  வைதிருக்கும் நம்பிக்கயைக் காப்பாற்ற வேண்டும். நமது சொந்த சோகம் நாட்டின் பஙளிப்புக்கு கேடு வரும் வகையில் இருக்கக்கூடாது என்ற அக்கறையால்தன் சாதிட்ததார். பிறகு மற்ற ஆட்டங்களில் சரியாக ஆடாத போதிலும் இந்த ஏழாவது உலகக் கோப்பையில்தான் மிக வேகமாக 1000 ரன்கள் எடுத்த  முதல் வீரர் என்ற பெறுமையை டெண்டுல்கர் எடுத்தார்.

டெண்டுல்கர் கொடுத்த உற்சாகத்தால் திராவிட் அடுத்தடுத்து இரண்டு சதங்கள் எடுத்தார். 1999ம் வருட உலகக்கோப்பையில் அதிக ர்ன்கள் எடுத்த வீரர் என்ற சிறப்பையும் ராகுல் திராவிட் பெற்றார்.இவர் எடுத்த மொத்த ர்ன்கள் 461. இலங்கயுடன் ராகுல் திராவிட்டும், கங்குலியும் ஜோடி சேர்ந்து விளையடினார்கள். திராவிட் 4ம் 6ம் ஆக ரன்கள் எடுத்தை பார்த்த கங்குலியும் தொடர்ந்து உற்சாகத்துடன் விளையாடி உலகக் கோப்பையில் 182 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார்.

கிரிக்கெட் வ்ளையாட்டிலேயே ஒருவரை பார்த்து ஒருவர் உற்சாகம் அடைந்தும் நானும் சாதிப்பேன் என்ற தீவிர நம்பிக்கயுடன் விளையடும்போது எவ்வளவு நல்ல பலன்கள் ஏற்படுகின்றன் என்று பாருங்கள். வெளி நாட்டில் சர்வதேச மேட்ச் விளையாடும் போது அந்த திடலின் பிட்ச் நமக்கு நன்றாக இருக்கவேண்டும். அந்த நாட்டின் பருவ சூழ் நிலை, பந்து வீசுபவரின் திறமை இவற்றை எல்லாம் சமாளித்து ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் முடிவெடுத்து பந்தை அடிக்க வேண்டும். 

நம் மனதில் ‘ நன்றாக ஆடுவேன்’, ‘ஜெய்ப்பேன்’ என்ற உறுதி தீவிரமாக இருந்தால்தான் பதற்றமின்றி, அமைதியாக,மிகுந்த ஆற்றலுடன் ஆடி அதிக ரன்கள் எடுக்க முடியும்.

உலகக் கோப்பையை வெல்லவேண்டும் என்ற துடிப்பு, மனவலிமை,அனியின் ஒற்றுமை ஆஸ்ரேலிய அணியிடம் அதிகம் இருந்தது. அதனால்தான் தென்னாபிரிக்காவுடன் அரை இறுதியில் மோதும்போது கடைசி வினாடி வரை ஆஸ்திரேலிய அணி வீரர்கள் நம்பிக்கை இழக்கமல் விளையாடி வென்றார்கள். கிரிக்கெட் போட்டி ஒன்றப்பற்றி மட்டும் இவ்வலவு தூரம் விரிவாக எழுதியதற்கு என்ன காரண்ம்? 

உலகம் முழுவதும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் என்றார்கள். அரை இறுதியின் போது பாக்கிஸ்தான் வெல்லும் என்று காப்டன் வாஸிஅக்ரம் கூறினார்.உலகமே இதை எதிர்பார்த்தது. ஆஸ்திரியாஅணியே ‘சிறப்பாக விளையடுவோம்.கோப்பையை வெல்லுவோம்’ அன்று கூறினார்கள்.          முடிவில், பாகிஸ்தான் போல் திமிருடன் பேசாமல், வெற்றியைய் பற்றிய முழுமையான 

உங்களை நம்புங்கள்

உங்களை நம்புங்கள் 

தன்னம்பிக்கை என்பது தன்னை நம்புதலாகும், கடின உழைப்பு, விடா முயற்சி, திட்டமிடல் என்றெல்லாம் சொல்லுகிறோம் இவைகளையெல்லாம் சும்மா வெறுமனே பின்பற்ற முடியாது, தன்னம்பிக்கை இருந்தால்தான் அவைகளெல்லாம் கைகூடும். எனவே எல்லாவற்றிர்க்கும் அடிப்படை தன்னை நம்புதலாகும். ஒரு வாகனத்தை, ஒரு இரயில் வண்டியை ஏதோ ஒரு இயந்திர சக்தி உந்தி தள்ளி விடுகிறதல்லவா, அது போல தன்னம்பிக்கை என்னும் மனித க்தி நம்மில் நிறைந்திருந்தால்தான் அது முன்னேற்ற பாதையை நோக்கி நம்மை உந்திச் செல்லும்

சிறிதளவேனும் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது, பிச்சைக்காரன் கூட நான் பிச்சையெடுத்தால் இவ்வளவு சம்பாதிப்பேன் என்ற தன்மீதுள்ள நம்பிக்கையில்தான் களத்தில் இறங்குகிறான், இயற்கையிலே நாம் நம்மீது நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறோம், ஆனால் அது போதுமான அளவு இருப்பதில்லை அதை வளர்த்துக் கொள்வதே நம் வளச்சிக்கான சரியான வழியாகும். சிறிதளவே நம்பிக்கையை வைத்துக்கொண்டு செயலில் இறங்கினால் இறுதியில் சோர்ந்து, துவண்டு போய் விடுவோம், முழுவதுமாக நிரம்பப்பெற்ற நம்பிக்கையே வெற்றியின் உச்சியில் நம்மை கொண்டுசெல்லும்.

உங்கள் பலகீனங்களை விட பலத்தை அதிகப்படுத்துங்கள், சோம்பல்களை விட உற்சாகத்தை அதிகப்படுத்துங்கள், அறியாமையை விட அறிவை அதிகப்படுத்துங்கள், எதிர்மறை சிந்தனைகளை விட நேர்மறை சிந்தனைகளை அதிகப்படுத்துங்கள் இப்படி உங்களிடமுள்ள அழிவு சக்திகளை விட ஆக்க சக்திகளை அதிகரிக்கச் செய்யும்போது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அப்படி ஏற்படும் நம்பிக்கையை குறைக்கவிடாமல் தினந்தோறும் அவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும். நேற்றைவிட இன்று வளர்சியடைந்துள்ளேன், இன்றை விட நாளை வளர்ச்சியடைவேன் என்பதில் உறுதியாயிருங்கள்

தன்னம்பிக்கைக்கும் ஆழ்மனதிற்கும் நெருங்கிய தொடர்புண்டு, ஆழ் மனதின் வல்லமையை தட்டி எழுப்ப நம்பிக்கை தருகின்ற விஷயங்களை, வார்த்தைகளை அதற்கு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். எத்தனை தோல்விகளை நீங்கள் சந்தித்திருந்தாலும் 'வீழ்வது இழிவல்ல வீழ்ந்தே கிடப்பதுதான் இழிவு' எனவே விழித்துக்கொள், வெற்றியை நோக்கி விரைந்திடு சற்றும் தாமதியாதே என்று ஆழ்மனதில் பதித்துக்கொள்ளுங்கள், உங்கள் லட்சியத்தையும் பெரிதாக வைத்துக்கொள்ளுங்கள்

வெறுமனே ஒரு மொபைல் போன் வாங்குவதையோ, டிவி வாங்குவதையோ, கம்ப்யூட்டர், பைக், கார், அழகான வீடு போன்றவற்றை வாங்குவதையோ லட்சியமாக கொள்ளாதீர்கள் அவைகள் லட்சியத்தின் சிறு பகுதியாகவே இருக்கட்டும். , நீங்கள் இதைவிடவும் பெரிய லட்சியத்தை கொண்டிருங்கள், ஏனைனில் பெரும்பாலும் கார், பங்ளா போன்ற இவைகளெல்லாம் தன்னம்பிக்கையினால் கிடைப்பதாக இருக்காது அளவுகடந்த ஆசையின் வேகத்தினாலே கிடைப்பதாகவே இருக்கும், எனவே தன்னம்பிக்கை என்னும் உந்து சக்தியை உயர்ந்த குறிக்கோளை நோக்கி வைங்கள்.

இவனா! இவனுக்கு என்ன தெரியும், இவனுக்கு ஒன்றுமே தெரியாது, இவனிடம் அப்படி ஒன்றுமில்லை இப்படி உங்களைப் பற்றி பேசுகிறவர்களுக்கு நீங்கள் நிரூபிக்க வேண்டியது உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறது என்பதைதான். நீங்கள் யாராகவும் இருக்கலாம், படிக்காதவர்களாக இருக்கலாம் பரவாயில்லை தன்னம்பிக்கை கொள்ளுங்கள், உங்கள் ஆர்வத்தை, திறமையை சற்று கண்ணோட்டமிடுங்கள் அடுத்த கணமே களத்தில் இறங்குங்கள் எதையாவது சாதியுங்கள், திரும்பி பார்க்க வேண்டாம் உங்கள் கண்முன்னே தெரிவதெல்லாம் வெற்றி படிக்கட்டுகளாக இருக்கட்டும், வெற்றி படிகளில் பயணியுங்கள் மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணியாகுங்கள் இனி நாளை காலம் என்றும் நம்மோடுதான்.

Wednesday, May 13, 2015

பிறரை நாம் எப்படி மதிப்பிடுவது?

பிறரை நாம் எப்படி மதிப்பிடுவது?

‘அவன் அப்படி, இவள் இப்படி’ என்று பிறரைப் பற்றிய நம் மதிப்பீடுகள், நம் சிந்தனையின் தரத்தையே பிரதிபலிக்கின்றன என்றும், சூழ்நிலைகளைத் தான் நாம் மதிப்பீடு செய்யவேண்டுமே அன்றி, மனிதர்களை அல்ல என்றும் இதில் விவரிக்கிறார் சத்குரு… கேள்வி சில நேரங்களில் மனிதர்களை நான் நன்றாக மதிப்பீடு செய்வதாக எனக்குத் தோன்றுகிறது. மற்ற நேரங்களிலோ அது என் அகங்காரம் எடுக்கும் முடிவுகள் என்றும் தோன்றுகிறது. இவ்விரண்டிற்குமான வித்தியாசத்தை நான் எப்படி அறிவது? அப்படியே அந்த வித்தியாசத்தை நான் அறிந்தாலும், இந்த மதிப்பீடுகளை நான் உபயோகிக்கலாமா? 

சத்குரு: ‘திறமையாய்’ செயல்படுவதைப் பற்றி பலரும் தவறாகவே புரிந்து கொண்டிருக்கின்றனர். பிறரை நன்கு அறிந்தால், சூழ்நிலைகளைத் திறம்படக் கையாளலாம் என்பது பொதுப்படையான கருத்து. ஆனால் இது நிஜமல்ல. இக்கணத்தில் ‘நான்’ என்று நீங்கள் கருதும் உங்களை நீங்கள் நன்றாக அறிந்திருந்தால் மட்டுமே, இவ்வுலகில் நீங்கள் திறம்பட செயல்பட முடியும். ஏதோ ஒன்றை சரியாய் மதிப்பீடு செய்ய முனைந்தால், சிலநேரங்களில் நீங்கள் அதை சரியாகவும் செய்யலாம். மதிப்பீடு செய்வதற்குத் தேவையான மனம் தான் உங்களிடம் இருக்கிறதே! ஆனால் இந்த மதிப்பீடுகளை வைத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? இன்று பரவலாய் இருக்கும் மனப்பான்மையில், எதைப் பார்த்தாலும், அது கல்லோ, மரமோ, தண்ணீரோ அல்லது எதுவாக இருந்தாலும், அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்றே மனம் போகிறது. ஏதோ ஒன்றை சும்மா பார்த்துவிட்டு, அதை அப்படியே அங்கேயே விட்டுச் செல்லும் மனம் இல்லை. பொருட்கள் நம் உபயோகத்திற்கும், மனிதர்கள் நம் அன்பிற்கும் பாத்திரமாக இருக்க வேண்டியவர்கள். அப்படித்தான் அவை உருவாக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் இன்று, பலரும் பொருட்களை நேசித்து, மனிதர்களை உபயோகப் படுத்துகிறார்கள். இது பொருட்களோடு நின்றிடும் எண்ணமல்ல, இது மனிதர்களுக்கும் நீள்கிறது. இது போன்ற மனநிலையில், யாரைப் பார்த்தாலும் அவரை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்ற எண்ணமே மேலோங்குகிறது. இது மிகத் தவறான ஒரு கண்ணோட்டம். ஏனெனில், பொருட்கள் நம் உபயோகத்திற்கும், மனிதர்கள் நம் அன்பிற்கும் பாத்திரமாக இருக்க வேண்டியவர்கள். அப்படித்தான் அவை உருவாக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் இன்று, பலரும் பொருட்களை நேசித்து, மனிதர்களை உபயோகப் படுத்துகிறார்கள். மனிதர்கள் தங்கள் கணவனையோ, மனைவியையோ விவாகரத்து செய்வதைக் கண்டிருப்பீர்கள். ஆனால் யாரேனும் அவர்களின் பணம், நகை, செல்வங்களை விவாகரத்து செய்து பார்த்திருக்கிறீர்களா? ஒருவரின் உடலைப் பார்த்த அடுத்த நொடி, அவர் அழகாக இருக்கிறார், அசிங்கமாக இருக்கிறார், வயதானவர் அல்லது இளமையானவர் என்ற மதிப்பீடுகள் உங்கள் மனதில் கணநேரத்தில் தோன்றிடும். பிறகு அவரின் பேச்சு, நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து இன்னும் பலவாறான முடிவுகளை எடுத்திடுவீர்கள். எனக்கு அவரை பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை, அவரைப் பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது, அவரிடம் எனக்கு பாசம் மேலோங்குகிறது இன்னும் எவ்வளவோ. அதனால் ஒருவரைப் பார்க்கும் போது, அவரின் உடலாலோ, மனத்தாலோ, உணர்வுகளாலோ அவரை அடையாளம் காண எண்ணாதீர்கள். முதலில் அவரது மிக ஆழமான அம்சத்தை நோக்கிடுங்கள். அவருள் இருக்கும் வாழ்வின் ஆதாரத்தை வணங்குங்கள். வாழ்வின் ஆதாரத்தை தானே கடவுள் என்கிறீர்கள்? அது நம் ஒவ்வொருவருக்குள்ளும் செயல்படும் ஒன்றல்லவா? அதனால் முதலில் அதை வணங்குங்கள். உங்களுடைய முதல் ஈடுபாடு இதனுடன் தான் இருக்கவேண்டும். அதற்குப் பின்தான் ஒரு மனிதனின் பிற அம்சங்களை நீங்கள் நோக்கவேண்டும். அவரின் உடலோ, மனமோ உங்களுக்குப் பிடிக்கவில்லை. அவர் உங்கள் கலாச்சாரத்தை சேர்ந்தவர் அல்ல. இன்னும் அவரிடம் வேறு என்னென்ன உங்களுக்கு பிரச்சனையாக இருந்தாலும், அது இனி ஒரு பிரச்சனையாக இராது. ஏனெனில், அவருள் இருக்கும் வாழ்வின் அடிப்படை அம்சத்தை நீங்கள் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்துவிட்டீர்கள். இது மதிப்பீடு அல்ல, புரிந்துகொள்வதும் அல்ல. இது வாழ்வின் ஆழமான பரிமாணத்தை உணர்ந்திருப்பதால் நீங்கள் செய்வது. அதனால் தான் நம் கலாச்சாரத்தில், முதலில் ஒருவரைப் பார்க்கும் போது, அவருள் இருக்கும் வாழ்வின் ஆதாரத்தை வணங்கிடுவோம். இப்படி செய்துவிட்டால், அதன் பின் மதிப்பீடுகளோ, மன இறுக்கமோ நிகழாது. எந்த மனிதருமே எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. இன்று ஒருவர் உங்களுக்குப் பிடிக்காதது போல் நடந்து கொள்ளலாம். ஆனால் நாளையே அவர் மிக அற்புதமானவராக ஆகிடலாம். என்றாலும், நீங்கள் அவரைப் பற்றி ஏற்கெனவே முடிவு செய்துவிட்டதால், இன்று அவர் இருக்கும் நிலையை நீங்கள் தவற விட்டுவிடுவீர்கள். ஒருமுறை இதில் இறங்கிவிட்டால், அந்த வலையில் சிக்கிக் கொள்வீர்கள். உங்கள் மதிப்பீடுகள் பிறரைப் பற்றியது அல்ல. அது உங்கள் சிந்தனையின் தரத்தையே பிரதிபலிக்கின்றன. நில்லாது தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் உங்கள் மனம், எல்லோரைப் பற்றியும், எல்லாவற்றைப் பற்றியும் அசராது மதிப்பீடுகள் செய்துகொண்டே இருக்கும். அதற்கு எவ்வித முக்கியத்துவத்தையும் அளிக்காதீர்கள். மதிப்பீடுகள் செய்யத் துவங்கிவிட்டால், அடிப்படையில் இரண்டு பிரிவுகளே உள்ளன – இது நல்லது, அது கெட்டது என்பன. எதுவெல்லாம் நல்லது என்று எண்ணுகிறீர்களோ, அவை எல்லாம் உங்களை ஈர்க்க, நீங்கள் அவற்றோடு பிணைக்கப்படுவீர்கள். எவையெல்லாம் கெட்டது என்றெண்ணுகிறீர்களோ, அவற்றருகே செல்லமுடியாமல் காழ்ப்புணர்ச்சி தடுக்க, எதிர்மறை உணர்வுகள் உங்களில் மேலோங்கும். அதனால் பிறரை நீங்கள் மதிப்பீட்டிற்கு ஆட்படுத்தத் தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால், நீங்கள் சூழ்நிலைகளைத் தான் மதிப்பீடு செய்யவேண்டுமே அன்றி, மனிதர்களை அல்ல. எல்லா விதமான மனக்குமுறலும், பொறுமலும், மனக்கசப்பும் நமக்குத் தோன்றுவதற்குக் காரணம், நம் கட்டுப்பாடுகளும், நம் செயல்திறன் குறைபாடும் தானே அன்றி, சூழ்நிலைகள் அல்ல. இதைப் புரிந்து கொண்டால், மனப்பக்குவம் தானாய் மிளிரும். எல்லோருமே மதிப்பீடுகள் செய்யமுடியும். ஆனால் வளரவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள், அடுத்தவரை மதிப்பீடு செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில், நீங்கள் முன்வைக்கும் ஒவ்வொரு அடிக்கும், 100 அடி பின்னோக்கிப் போவீர்கள். இதை நீங்கள் உடனேயே உணரமாட்டீர்கள், ஆனால் சில நாட்களோ, மாதங்களோ ஆன பின்னர், இதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள். அதனால் மாம்பழமோ, ஆப்பிளோ, மனிதனோ, மரமோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும், அவற்றை மதிப்பீடு செய்யாமல், அவை எப்படி இருக்கின்றனவோ, அவ்வாறே அவற்றை உணருங்கள். இது உங்களுள் மிக ஆழமான ஒரு அனுபவத்தைத் தோற்றுவிக்கும். அப்போது ‘வாழ்வை’ அதன் முழுமையில் நீங்கள் உணர்வீர்கள்.

Monday, May 11, 2015

குழந்தைகளுக்கான 8 திறமைகள்

குழந்தைகளுக்கான 8 திறமைகள்

1. தனித்து திறம்படும் திறமை / Self-Managing Skills: 
எதையும் தனித்து, யோசித்து, தன்னம்பிக்கையுடன் செயல்படும் திறமை.

2. மனதை ஒருமை படுத்தும் திறமை Mind Control Skills: 
மனதை ஒருமைப்படுத்தி, எடுத்த லட்சியத்தை அடைவதில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் திறமை 

3. சாமர்த்தியாக படிக்கும் திறமை Smart Study Skills: 
பாடங்களை எப்படி படிப்பது, குறிப்பாக விரைவாக படிப்பது எப்படி, படித்ததை மறவாமல் இருப்பது எப்படி, தேர்வில் அதிக மார்க் எடுப்பது போன்ற திறமைகள்.

4. கூர்மையான மூளைத்திறமை Sharp Mental Skills: 
எடுத்த வேலையில் முழுகவனம் செலுத்துவது, சட்டென கிரகிப்பது, புரிநது கொள்வது, காரணங்களை கண்டு அலசி ஆராயும் திறமை, மூளையை முழுவதுமாக பயன்படுத்தும் திறமை.

5. ஏற்ற வேலையை தேர்வு செய்யும் திறமை Career Choosing Skills:
தனக்கு என்னென்ன திறமை உள்ளன, ஆர்வம் எதில் அதிகம், எதைப்படிக்கமுடியும், என நன்கு ஆராய்ந்து பார்த்து அதில் திறமை காட்டுவது. சிறந்த வாழ்க்கை வாழ தனக்கு எந்தத்துறை ஒத்துவரும் என்று அறியும் திறமை,

6. மற்றவர்களிடம் பழகும் திறமை Personality Development Skills: 
மற்றவர்களை கவர்வது எப்படி? மற்றவர்களிடம் எப்படி தனது தேவைகளை பூர்த்திசெய்துக்கொள்வது. மற்றவர்களோடு எப்படி பழகுவது. மற்றுவர்களோடு எப்போதும் நட்புறவுடன் வாழும் திறமை 

7. வித்யாசமாக யோசிக்கும் திறமை Creative Skills: 
புதியவற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வம், புதிய யுக்திகளை கையாளும் திறமை, பிரச்சனைகளுக்கு எளிய தீர்வு காணும் திறமை. போட்டிமிகுந்த வாழ்வில் சாதானை படைக்க இத்திறமை மிக அவசியம், 

8. நலம் காக்கும் திறமை Health Skills: நல்ல சுவர் இருந்தால் தானே சித்தரம் வரையமுடியம். குழந்தைகளுக்கு பலதிறமைகள் ஒளிந்து கிடந்தாலும், உடல் நலம்நன்றாக இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும். உடல் நலம், மற்றும் மனநலம் காக்கும் திறமையும் முக்கியம்

உங்கள் குழந்தைகளை எப்போதும் உற்சாகப்படுத்தி, ஊக்கிவித்து வந்தால் LITTLE SUPER STAR குழந்தைகளாக மாறிவிடுவார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

திறமை இருந்தும் ஏன் வெற்றி பெற முடிவது இல்லை?

திறமை இருந்தும் ஏன் வெற்றி பெற முடிவது இல்லை?

நிறைய பேருக்கு திறமை இருக்கின்றது. ஆனால் திறமை இருந்தும் அவர்களால் வெற்றி பெற முடிவது இல்லை.

காரணம் அவர்கள் திறமை மீது அவர்களுக்கே  நம்பிக்கை இல்லாமல் இருப்பதுதான். உங்களுடைய திறமையை வைத்து நிச்சயமாக வெற்றி அடையலாம் என்று நீங்கள் நினைத்தால் நிச்சயமாக உங்களால் வெற்றியடைய முடியும்.

நம்பிக்கையை உங்களுக்குள் வளர செய்வதிற்கு பெரும் பங்கு உங்கள் மனதுதான். விரக்திகள் சில நேரத்தில் உங்கள் வெற்றி இலக்கை அடைய தடை செய்யும். அவற்றை பொருட் படுத்தவே கூடாது. 

தன்னம்பிக்கை என்ற ஆயுதத்தின் மூலமாக மிக சுலபமாக விரக்தியை விரட்டி விடலாம். நம்மாலும் நம் திறமையினாலும் வாழ்க்கையில் வெற்றி அடைய முடியும் என தீவிரமாக நினைக்க வேண்டும்.

எந்த துறையில் திறமை அதிகம் உள்ளது என்றது நீங்கள் என்று நினைக்கிறீர்களோ அந்த துறையில் நிச்சயமாக உங்களால் வெற்றி அடைய முடியும். எல்லா துறைக்குமே இந்த உலகில் வெற்றியடைய வாய்ப்பு உண்டு.  

உங்களையும் உங்கள் மனதையும் தயார் படுத்தி கொண்டால் நிச்சயமாக உங்கள் திறமையை வைத்து உங்களால் வெற்றி அடைய முடியும்.

தன்னம்பிக்கை ஒருவரது மனதில் தழைக்க தியானம் பெரிதும் உதவும். தியானம் பழகும்போது மனதில் உள்ள எதிர் மறையான சிந்தனைகள்(Negative  thinkings)  களையப்பட்டு ஆக்க பூர்வமான (Positive thinkings) சிந்தனைகள் விதைக்க படுகின்றன. 

நம்மாலும் வெற்றியடைய முடியும் நம்மால் வெற்றி அடைய முடிய வில்லை என்றால் வேறு யாரால் வெற்றி பெற முடியும் என்ற ஆக்க பூர்வமான சிந்தனைகளை (Positive thinkings) தியானம் விதைக்கின்றது. 
   
உங்களையும் உங்கள் மனதையும் தயார் படுத்த தியானம் நிச்சயமாக உதவும்.

ஆர்வம் வேறு... திறமை வேறு... வெற்றி ரகசியம்!

ஆர்வம் வேறு... திறமை வேறு... வெற்றி ரகசியம்!

ஆர்வத்துக்கும் திறமைக்கும் முரண்பாடு வந்தால் என்ன செய்வது என்னும் கேள்வியோடு சென்ற வாரம் முடித்திருந்தோம். இன்று பலருக்கும் உள்ள பிரச்சினை இதுதான் என்பது போகிறபோக்கில் மாணவர்கள் சிலரைக் கேட்டுப் பார்த்தாலே தெரிந்துவிடும்.

உங்களுக்கு எது ரொம்பப் பிடிக்கும்?

உங்களுக்கு எது நன்றாக வரும்?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதிலைச் சொல்பவர்கள் அதிகம் பேர் இருக்க மாட்டார்கள். எனக்குப் பாடப் பிடிக்கும், ஆனால் குரல் சரியில்லை, எனக்கு கிரிக்கெட் பிடிக்கும், ஆனால் சீக்கிரமே அவுட் ஆகிவிடுவேன், எனக்கு அறிவியல் பிடிக்கும், ஆனால் சமன்பாடுகளைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது…

பிடித்தது கையில் சிக்க மாட்டேன் என்கிறது. இது ஒரு ரகம்.

இன்னொரு ரகம் இருக்கிறது. எதில் திறமை இருக்கிறதோ அது அவ்வளவாகப் பிடிக்க மாட்டேன் என்கிறது என்பவர்கள் இந்த ரகம். நன்றாக ஓவியம் வரையத் தெரியும், ஆனால் ஓவியத்தில் பெரிய ஆர்வம் இல்லை. நன்றாக ஓடுவேன் ஆனால் அதெலெடிக்ஸில் ஈடுபாடு கிடையாது, நிகழ்ச்சிகளை நடத்தச் சொன்னால் கலக்கிவிடுவேன் ஆனால் அதெல்லாம் தேவையில்லாத தொல்லை…

உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆர்வமும் திறமையும் பரஸ்பரம் இணைந்து போகாத நிலைதான் தொழில் வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான பிரச்சினை. இப்படிப்பட்ட சிக்கல் வரும்போது என்ன செய்வது?

ஆர்வத்துக்கு முதலிடம்

ஆர்வத்துக்கு முதலிடம் தர வேண்டும் என்றுதான் தொழில் ஆலோசகர்கள் சொல்கிறார்கள். எதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் திறமையை வளர்த்துக்கொள்வது ஒப்பீட்டளவில் எளிது. ஆர்வம் ஆழமாக இருந்தால் திறமையை வளர்த்துக்கொள்வதற்கான ஊக்கத்தையும் அந்த ஆர்வமே தந்துவிடும். பாட்டு, விளையாட்டு, அறிவியல் என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். எனக்குப் பிடித்திருக்கிறது, ஆகவே நான் இதைச் செய்கிறேன் என்னும் எண்ணம் ஒருவரது முனைப்பையும் முயற்சியையும் பெருமளவில் பெருக்கிவிடும். எனவே ஆழமான ஆர்வம் உள்ள துறையில் திறமை வந்துவிடும்.

அப்படி வந்துவிட்டால் பிரச்சினை இல்லை. ஆனால் சில விஷயங்களில் ஆர்வம் எத்தனை தீவிரமாக இருந்தாலும் திறமையை ஒரு மட்டத்துக்கு மேல் வளர்த்துக்கொண்டு செல்ல முடியாது. உதாரணம் வாய்ப்பாட்டு. ஒருவர் எவ்வளவுதான் முயன்றாலும் அடிப்படையாக ஓரளவேனும் நல்ல குரல் அமையாவிட்டால் ஒரு அளவுக்கு மேல் திறமையை வளர்த்துக்கொள்ள முடியாது. விளையாட்டிலும் அப்படித்தான். கிரிக்கெட்டின் மேல் வெறியாக இருக்கலாம். வெறித்தனமாக உழைக்கலாம். ஆனால் இயல்பாகவே கிரிக்கெட் திறன் இல்லாவிட்டால், அதில் ஒரு மட்டத்துக்கு மேல் போக முடியாது. அப்படிப் போக முடியும் என்றால் இன்று இந்தியாவில் ஆயிரம் சச்சின் டெண்டுல்கர்களும் இரண்டாயிரம் கும்ப்ளேகளும் உருவாகியிருக்க வேண்டும். ஏன் உருவாகவில்லை? ஆர்வம் மட்டும் போதாது என்பதுதான் காரணம்.

ஆர்வத்தை மட்டும் பின்தொடர்வதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. விளையாட்டு, ராணுவம் போன்ற சில துறைகளுக்கு உடல் வலுவும் திறனும் அவசியம். இவை இரண்டும் இல்லாதவர்கள், ஏதேனும் காரணத்தால் உடலில் குறைபாடு உள்ளவர்கள், எவ்வளவு முயன்றாலும் அந்தத் துறையில் பிரகாசிப்பதற்கான திறமையை வளர்த்துக்கொள்ள முடியாது. எனவே, ஆர்வம் என்பதைக் கண்மூடித்தனமாகப் பின்தொரட முடியாது.

சிலர் இயல்பாகவே அமைந்த சிறப்பான திறமையால் மிளிர்வார்கள். சிலர் உழைத்துத் தன் திறமையை மேம்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இருவருக்குமே அடிப்படையான திறன்கள் இயல்பில் ஓரளவேனும் அமைந்திருக்க வேண்டும். அல்லது சிறு வயதிலேயே அது வசப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் எவ்வளவு முயன்றாலும் சிறப்பான திறமையை வளர்த்துக்கொள்ள இயலாது. சிறப்பான திறமை இல்லாதபட்சத்தில், போட்டிகள் நிறைந்த உலகில் அதிக மதிப்பு இருக்காது.

உங்கள் பாதை உங்கள் பயணம்

திறமை இருந்தால்…

ஒரு விஷயத்தில் ஒருவருக்கு இயல்பான திறமை அதிகமாக இருந்தால், அவருக்கு அதில் அவ்வளவாக ஆர்வம் இல்லாவிட்டாலும் அவர் அந்தத் துறையில் நுழையலாம். சிறப்பான திறமை இயல்பாக அமைந்திருக்கும் ஒரு விஷயத்தில், ஆர்வம் அதிகமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதில் ஆர்வமே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. உதாரணமாக, மிக அருமையான குரல் உள்ள ஒரு பையனுக்கு இசையைத் தொழிலாக எடுத்துக்கொள்ளும் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பாட்டே அவனுக்குப் பிடிக்காது என்று சொல்ல முடியாது. பிடிக்காமல் இருந்தால் அவனால் வாயைத் திறந்து பாடவே முடியாது. இப்படிப்பட்டவர்கள் அபரிமிதமான திறமை, ஓரளவு ஆர்வம் ஆகியவற்றை வைத்துக்கொண்டே அந்தத் துறையில் பிரகாசிக்கலாம்.

அதற்காக ஆர்வத்துக்கு அணை போட்டு இயல்பான ஆசையை அடக்கிக்கொள்ள வேண்டியது இல்லை. மனதுக்கு அதிகமாகப் பிடித்த ஒரு விஷயத்தைப் பொழுதுபோக்காகவோ மாற்றுத் துறையாகவோ வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, பாட்டைப் பிரதானத் துறையாகக் கொண்டவர் எழுத்திலும் பிரகாசிக்கலாம். திறமையின் அடிப்படையில் ஆசிரியராக இருக்கும் ஒருவர், ஆர்வத்தின் அடிப்படையில் ஓவியம் அல்லது கைவினைத் தொழிலில் நேரம் கிடைக்கும்போது ஈடுபடலாம். ஆர்வத்துக்கும் தீனி, வருமானத்துக்கும் வழி.

இதுவரை பார்த்த விஷயங்களைத் தொகுத்துக்கொள்வோமா?

தனக்கான துறையைத் தேர்ந்தெடுப்பதில் ஒருவரின் ஆர்வம்தான் அடிப்படை. ஆனால் ஆர்வம் இருக்கிறது என்பதாலேயே திறமை வந்துவிடாது. எனவே திறமையில் சறுக்கும் பட்சத்தில் உஷாராக ஆர்வத்துக்குச் சற்றே அணைபோட்டுவிட வேண்டும். திறமை எதில் இருக்கிறதோ, அதில் ஏற்கனவே இருக்கக்கூடிய சிறிதளவு ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு அதைப் பிரதானத் துறையாக வைத்துக்கொள்ளலாம். ஆர்வம் அதிகமாக உள்ள விஷயத்தை இழந்துவிடாமல் பொழுதுபோக்காகவோ இரண்டாவது துறையாகவோ வைத்துக்கொள்ளலாம்.

ஆர்வம் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் திறமை அப்படி அல்ல. தவிர, திறமையைத் தொடர்ந்து பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். எனவே அதற்கு அதிக முயற்சி தேவைப்படும். எனவே திறமையைக் கண்டுகொண்டு, அதில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு அதில் சிறப்பாக வருவதே சிறந்த வழியாக இருக்க முடியும்.

பொருத்தமான உதாரணத்துடன் இந்தக் கட்டுரையை முடிக்கலாம். ஒரு பையன் கிரிக்கெட் பயிற்சி மையத்துக்குச் சென்றான். வேகப் பந்து வீச்சைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவனுக்கு ஆசை. சில மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டு ஆர்வத்துடன் தன் திறமையை வளர்த்துக்கொண்டான்.

பந்துவீச்சுப் பயிற்சியின்போது சில சமயம் மட்டை வீச்சிலும் ஈடுபட வேண்டுமல்லவா? அப்படி அவன் ஆடும்போது தலைமைப் பயிற்சியாளர் அவனைக் கவனித்தார். அவனது மட்டை பேசும் விதத்தைக் கண்டு அசந்துபோனார். அவனைக் கூப்பிட்டு, “உனக்குப் பந்து வீச்சு சரிப்பட்டு வராது, நீ போய் பேட்டிங் பயிற்சி செய்” என்று சொல்லி அனுப்பிவிட்டார். அந்தப் பையன் ஏமாற்றத்துடன் திரும்பினான். ஆனால் பேட்டிங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். பின்னாளில் உலகிலேயே சிறந்த மட்டையாளர் எனப் பெயர் வாங்கினான். அவன் செய்த சில சாதனைகளை யாராலும் நெருங்கக்கூட முடியாது என்னும் அளவுக்குச் சாதனைகள் புரிந்தான்.

அவன் பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்குமே? சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்.

அடி சிறிது, ஏற்றம் பெரிது

அடி சிறிது, ஏற்றம் பெரிது

நீங்கள் உங்கள் அலுவலகத்தில் ஒரு பெரிய அதிகாரியாக இருந்தாலும் சரி, ஒரு பொது அமைப்பில் பெரிய பொறுப்பில் உள்ளவராக இருந்தாலும் சரி, அல்லது சமூகத்தில் பெரிய மனிதராக மதிக்கப் பட்டாலும் சரி, சில அடிப்படை நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக அவசியம். இவைகள் உங்களுக்கு மிக “ஸில்லி”யாகத் தோன்றலாம். ஆனால் நாம் அற்பமாக எண்ணும் இத்தகைய அடிப்படை விஷயங்கள்தான் சில முக்கிய தருணங்களில் நம்மைக் கவிழ்த்து விடுகின்றன. ஆகையால் இவற்றின்பால் நாம் குறிப்பாகக் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் நாம் ஒரு முழு நிறைவான நன்மதிப்பைப் பெறமுடியும். Trifles make perfection என்கிறது ஒரு பொன்மொழி.

சரி, இப்போது இவ்வகை “சின்னச் சின்ன செய்திகள்” என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

ஒரு இடத்தில் போய் “நான் இன்னார்” என்று சுய அறிமுகம் செய்து கொண்டு எதேனும் உதவியையோ, சிறப்புச் சலுகையையோ கேட்டுப் பெறுவதைவிட, உங்கள் உதவியாளரை விட்டு கேட்கச் சொல்வது சிறப்பானது. நீங்களே கேட்டால் ஒரு மாற்று கம்மிதான். அப்படி சில இடங்களில் நீங்களே போகவேண்டிய கட்டாயமாக இருந்தால், நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்பதை இன்னொருவரை விட்டு அறிவிக்கச் சொல்லுங்கள். இவ்வாறு செய்தால் உங்கள் செல்வாக்கு தன்னையறியாமல் கேட்பவர் மனதில் பதியும். காவல்துறை மற்றும் அரசு சார்ந்த முக்கிய அதிகாரிகள் இத்தகைய நடைமுறையைக் கையாள்வதை நீங்கள் காணலாம். “ஐயா வர்றார்” என்று கட்டியம் கூறப்படுவதை கண்டிருப்பீர்கள். இது நிச்சயமாக ஒரு effect ஏற்படுத்துகிறது.  இவ்வுலகம் பெரிய மனிதர்களை அதற்குள்ள பந்தாவுடன் இருந்தால்தான் மதிக்கிறது. என்பது மறுக்க முடியாத உண்மை.
அலுவலகத்திலோ அல்லது எந்தப் பொது இடத்திலோ, வராண்டாவில் நடந்துவரும்போதும், ஒப்பனை அறையிலும் யாருடனும் பேச்சுக் கொடுக்காதீர்கள் - முக்கியமாக உங்கள்கீழ் பணியாற்றுபவர்கள், வாடிக்கையாளர்கள், உக்களைக் காண வந்திருப்பவர்கள் போன்றவர்களுடன். அவர்களை உங்கள் அறைக்கு அழைத்துப் பேசுங்கள். இது உங்களைப் பற்றிய அவர்களின் கணிப்பை மேம்படுத்தும்.
உங்கள் அறையில் உங்கள்கீழ் பணியாற்றும் நபர்கள் குழுமியிருக்கும் நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. என்ன செய்வீர்கள்? அவர்கள் பாட்டுக்கு இருக்கட்டும். நாம் பாட்டுக்கு பேசுவோம் என்று உரையாடுவீர்களா? அதுபோல் ஒருபோதும் செய்யாதீர்கள். ஏதாவது மிக முக்கியமான செய்தியை பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும். அது எல்லோருக்கும் தெரியவேண்டியதில்லை. ஆகையால் அவர்களை, “தயவுசெய்து கொஞ்சம் வெளியிலிருங்கள்’ என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை. இத்தகைய நடைமுறையை பலர் கையாண்டு நான் பார்த்திருக்கிறேன். ஏனென்றால் நீங்கள் இன்னொருவருடன் பேசுவது அலுவலக புல்லடினில் பிரசுரம் ஆகவேண்டுமா! விருந்தினர்களோ, நீங்கள் “வெளியே போ” என்று சொல்லமுடியாத ஆசாமிகளோ உள்ளிருந்தால், ஃபோனில் பேசுபவர்களை “அப்புறம் பேசலாம்” என்று சொல்லி சமாளித்துவிடுங்கள். கொசு அளவு மூளையிருந்தால்கூட அடுத்த முனையில் உள்ளவர் நிலைமையைப் புரிந்து கொள்வார்!
முக்கிய விஷயங்களை - குறிப்பாக அலுவலக அரசியல் சார்ந்த விஷயங்களை காரிலோ, வேனிலோ - இதுபோன்று பிரயாணம் செய்யும்போது யாருடனும் விவாதிக்காதீர்கள். Gossip mill-க்குத் தீனி போடுவது போல ஆகும். Sensitive விஷயங்கள் - மாறுதல், பதவி உயர்வு, உங்கள் வணிக சம்பந்தமான ரகசியங்கள் முதலியவை உங்களையறியாமல் இத்தகைய உரையாடல்களின் மூலம் வெளிப்பட்டால், உங்களுக்கு பெரிய இழப்பு வர வாய்ப்புள்ளது. Information is power.
ஒப்பனை அறை (Toilet) ஒன்றில் வெளியேறும் வாயிலின் மேல் “X Y Z” என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்ததை பார்த்தேன். அதற்கு என்ன பொருள் என்று விசாரித்தபோது “Examine Your Zip” என்றார்கள். நீங்களே சொல்லுங்கள், இது சின்ன விஷயமா? பாத்ரூமிலிருந்து வெளியே வரும் முன்னால் “அந்த இடத்தை” ஒரு முறை “செக்” செய்து கொள்வது மிக முக்கியம். இதில் கவனம் செலுத்தாமல் பல பொது நிகழ்ச்சிகளில் பெரிய மனிதர்கள் சிலர் வழிந்த்தை நான் பார்த்திருக்கிறேன்! மேலும் சட்டை, பேண்ட் - பெண்களானால் அவர்களின் மேலாடை முதலியவற்றின் மேல் தண்ணீர் சிந்தியிருந்தால் அதோடு பலர் முன்னால் போகாதீர்கள். அது காயும்வரை காத்திருந்து போங்கள். நம்மை பல கண்கள் கவனிக்கின்றன என்பதை எப்போதும் மனதில் கொள்ளவேண்டும்.
எப்போதும் உங்கள் நடை, உடை பாவனைகளில் ஒரு “ஸ்டைலை”க் கடைப் பிடியுங்கள். இது நீங்கள் பல முறை ஒத்திகை பார்த்து செம்மைப் படுத்தப் படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.  உங்கள் இமேஜை அது மேம்படுத்தவல்லதாக அமைய வேண்டும். உலகம் அதை தலைவர்களிடம் எதிர்பார்க்கிறது.
உங்களை எளிதில் எனையோர் “கணக்குப் போட்டு” வைக்க அனுமதிக்காதீர்கள். திடீரென்று வேறு விதமான கேள்விகளைக் கேளுங்கள், சற்றே மறுபட்ட கோணங்களில் அணுகுங்கள்.  எதிர்வினைகளை மாற்றுங்கள். கொஞ்சம் uncertainty இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நம்மை மேய்த்துவிடுவார்கள்.
எப்போதும் மலர்ச்சியுடனும், இலமையான தோற்றத்துடனும், தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்த முகத்தோற்றதுடனும் இருங்கள். “என்னையா, எனக்கோ வயசாயிடிச்சு, இளமைத் தோற்றத்துக்கு எங்கே போவது? யயாதி கதையெல்லாம் இப்போது எடுபடாது” என்கிறீர்களா? சொற்ப வயதுள்ள பலரே ஈரமான சாக்ஸ் போல முக மலர்ச்சி.யில்லாமல் வயோதிகத் தோற்றத்துடன் “போங்கு” போல இருப்பதைப் பார்க்கலாம். அதே நேரத்தில் வயதான பலர் “விண்’ணென்ற தோற்றத்துடன் இருப்பதையும் காணலாம்!
கூடியவரையில் உங்களுடைய சொந்த வாழ்க்கை பற்றிய உள்விவரங்கள், வங்கிக் கணக்கு மற்றும் சொத்து பற்றிய விவரங்கள் முதலியவை பொதுவில் அறியப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்த ஒரு பெரிய அதிகாரி வங்கிக்கு எந்த உதவியாளரையும் அனுப்ப மாட்டார். தானேதான் போவார். அதுபோல் இல்லாவிட்டாலும் முக்கிய விவரங்களை public domain-ஆக வைக்காமலிருப்பது நல்லது. நீங்கள் ஒரு enigma போன்று, “இன்னும் முழுதும் வாசிக்கப்படாத புத்தகமாக” தோற்றமளிக்க வேண்டும். அப்போதுதான் பிறர் மனத்தில் உயர்வான மதிப்பு இருக்கும். சலிப்புக்கு இடமில்லாமல் “இவரிடம் இன்னும் ஆசாமி ஒளிந்திருக்கிறார்” என்ற உணர்வு எப்போதும் கனன்று கொண்டிருக்க வேண்டும்.
உங்களிடம் ஒட்டுப்புல் போல் “பச்சக்”கென்று ஃபெவிகால் போடுபவர்களை “கறகற”வென்று வெட்டிவிடுங்கள். உங்களுக்கு கேடு வர வேண்டுமென்றால் இவர்களால்தான் வரும். நேர்மையானவர்களை உங்களிடம் அண்டவிடாமல் இவர்கள் விரட்டி விடுவார்கள். சரியான செய்திகள் உங்களை எட்டாமல் ஃபில்டர் செய்து விடுவார்கள். உங்களை “ராடார்” போல் கண்காணிப்பில் வைத்துக் கொள்வதால் அவர்களை நீங்கள் ஏதும் கேள்வி கேட்க இடம் கொடுக்காமல் இருப்பதுதான் அவர்களின் திட்டம். ஜாக்கிறதை!

உட்பகை நீக்கின் எப்படை வெல்லும்!

உட்பகை நீக்கின் எப்படை வெல்லும்!

"நீ நீயாக இரு" என்று பல அறிஞர்கள் சொல்கிறார்களே, ஆனால் நீங்கள் பிறருக்காக உங்களை மாற்றிக் கொள்ளச் சொல்கிறீர்களே என்கிற அடிப்படைக் கேள்வியை பலர் எழுப்புகிறார்கள். உண்மையில் நான் அடிக்கோடிட்டுச் சொல்வதும் "நீயாகவே இரு" என்பதுதான். ஆனால் அதில் ஒரு caveat (மாறுபட்ட புரிதல் கொள்ளக் கூடும் என்ற எச்சரிக்கை) உள்ளது. "நீ" என்பது சரி. ஆனால் எந்த "நீ" என்பதுதான் பிரச்னையே. ஏனென்றால் நீ உண்மையில் யார் என்பதை நீ முழுதும் அறிந்து கொண்டாயா என்ற கேள்விக்கு விடை காண முற்படும்போது தான் நீ உன்னை அறிவது எவ்வளவு கடினம் என்பது புரியும். அதனால்தான் இந்த கட்டுரைத் தொடருக்கு மிகவும் பொருத்தமாக "உன்னையறிந்தால்.." என்ற தலைப்பை நண்பர் கனேஷ் சந்திரா இட்டபோது மிகவும் மகிழ்ந்தேன்.

உண்மையில் தன்னிச்சையாக நிகழும் நம் எண்ணப் போக்கு, செயல்படும் விதம் எல்லாமே நம் மரபணுக்களில் பதிவு செய்யப்பட்ட அமைப்பின் உந்துதலால் விளைவது. இதனால்தான் பல நேரம் நம் அறிவுசார்ந்த முடிவுகளுக்கு எதிராக நம் எண்ணமும் செயலும் நிகழ்ந்து விடுகிறது. நம் ஆழ்மனதை நம் ஆளுமைக்குள் கொண்டுவருவதற்கு கடுமையான ஆழ்நிலைத் தியானமும், தொடர்ந்த பயிற்சியும், இன்னும் சிறப்பான மனவியல் சார்ந்த செயல்பாடுகளும் (self-hypnosis) தேவையாக இருக்கிறது.

அதனால்தான் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால், உங்கள் எண்ணம், சொல், செயல் மூன்றையுமே உங்கள் மனக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து, அவற்றின் செயல்பாட்டில் உங்களைச் சுற்றியுள்ள இந்த உலகத்தின் இயல்புக்கேற்ப சிறிது மாற்றங்கள் செய்துகொண்டு (behavioural modification), சிறப்புற வாழ வேண்டும் என்பதுதான். அத்தகையான மனப் பயிற்சிக்கு அடிப்படையே உங்களை நீங்கள் நன்கு அறிந்து, உங்களையே (சிறிதளவாவது) உங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதுதான். இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதன் நோக்கம், இதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காண்பிக்க மட்டுமல்லாது, இது எவ்வளவு கடினம் என்பதை உங்கள் மனதில் பதிக்கவேண்டும் என்பதால்தான்.

உங்களுடைய வலிமைகளை மட்டுமல்லாமல்,. பலவீனங்களையும் முழுமையாக அறிதல் மிக அவசியம். உங்களைவிட உங்களுடைய எதிரிகள் உங்களின் பலவீனங்களை சரியாக அடையாளம் கண்டுகொண்டு, அவற்றை அவர்களின் சுயநல இலாபத்திற்கேற்ப எவ்வாறு கைக்கொள்வது என்று ஒரு  திட்டம் வகுத்திருப்பார்கள். நம்மைவிட நம் எதிரிகள் சுறுசுறுப்புடன் செயல்படுகிறார்கள் என்பதை எப்போதும் மனதில் இருத்திக் கொள்ளவேண்டும். எப்போது நீங்கள் வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைக்கிறீர்களோ, அப்போதே எதிரிகள் என்கிற காளான் துளிர்விடத் தொடங்குவதை ஆண்டவனேயானாலும் தடுக்க இயலாது. ஏனென்றால் ஆண்டவனுக்கே எதிரிகள் பஞ்சமில்லாமல் இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம்!

நம்முடைய உண்மையான மதிப்பீட்டை அறியவேண்டுமானால், நம் எதிரிகளைக் கேட்டாலே தெரியும். ஏனென்றால் அவர்கள் மிக நுணுக்கமாக நம் பலம் மற்றும் பலவீனங்களை ஆராய்ந்து அவற்றைப் பட்டியலிட்டிருப்பார்கள். உண்மையில் நீங்கள்தான் அதனைச் செய்திருத்தல் வேண்டும். ஆனால் அது உங்கள் மனதின்பால் தைக்காது. ஏனெனில் நீங்கள்தான் உங்கள் வலிமையின் சிறு வெளிப்பாட்டின்பால் கிட்டிய வெற்றியின் மிதப்பில் கிடக்கிறீர்களே - அப்போது பலவீனத்தைப் பற்றிய எண்ணம் மனதினுள் புக வாய்ப்பேது? ஆனால் இந்தத் தருணம்தான் எதிரிகளின் மைதானம் -புகுந்து விளையாடிவிடுவார்கள்! அவ்வப்போது நிகழும் சிறு வெற்றிகள் தரும் போதை உங்களைப் பற்றிய ஒரு மிகுதியான இமேஜை உங்கள் மனதில் உருவாக்கிவிடும்(megalomaniac). அதனால் உண்மைநிலை மறைக்கப் பட்டுவிடும். அப்போது உங்களைச் சுற்றி ஒரு "வேப்பிலை கோஷ்டி" உங்கள் அனுமதியில்லாமலேயே உண்டாகிவிடும். அவர்கள் உங்களையறியாமல் மனதில் புகுந்து, உங்கள் எண்ணப்போக்கை தன் ஆளுமைக்குள் கொண்டுவந்து விடுவார்கள். பிறகென்ன, உங்கள் மனம் இன்னொருவர் கைகளில் களிமண் உருண்டைபோல் இருக்கும் (putty). அவர்கள் உங்களை அவர்கள் தேவைக்கேற்ற உருவமாக மாற்றிவிடுவார்கள். உங்கள் தீர்மானங்கள், மதிப்பீடுகள், நம்பிக்கைகள், செயல் திட்டங்கள் இவை எல்லாமே பிறருடைய ஆளுமைக்குள் அடிமையாகிப் போகும் அபாயம் உள்ளது. ஆனால் அதுபற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஏதோ நீங்கள் உங்களுடைய சிறப்பியல்களினால் வெற்றி கொண்டிருப்பதாக நம்ப வைக்கப் படுவீர்கள்.

ஆங்கிலத்தில் Murphy's Law என்ற நகைச்சுவை கலந்து இந்த உலக உணமைகளை அப்பட்டமாக உரைக்கும் வாக்கியங்கள் உண்டு. அவற்றில் இரெண்டை மட்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்:

If you believe that everything is going on well, it means you do not know what the hell is going on.

Be careful when things are going on well, because that is the time when things start going wrong.

மேற்கண்ட இரு மூதுரைகளும் நிர்வாகம், மேலாண்மை பற்றிய வாசகங்கள். அவற்றை இந்த context-ல் ஏன் கொணர்ந்தேன் என்றால், அங்கு குறிப்பிட்டிருக்கும் நிலைகளை உங்கள் சுற்றுப்புரம் அடைவதற்குக் காரணமே நீங்கள் உங்கள்தம் ஆளுமைக்குள் முழுமையாக இல்லை என்பதுதான்.

பல பெரிய மனிதர்கள், பேரசர்கள் வீழ்ந்ததற்குக் காரணமே அவர்கள் தங்களைத் தன் கட்டுப்பாட்டிற்குல் வைத்திராமல், அவர்களறியாமல் ஒரு "chamcha", "லோட்டா" சுயநலக் கும்பலின் கைப்பாவையாக ஆனதினால்தான் என்பதற்கு சரித்திரத்தில் பல எடுத்துக் காட்டுக்கள் கானக்கிடைக்கின்றன. மீண்டும் சொல்கிறேன், நீங்கள் வாழ்வில் சாதனைகள் புரியத் தொடங்கி வெற்றிகளை ஈட்டத் தொடங்கும்போது உங்களைச் சுற்றி வந்து சேர்பவர்கள்பால் மிகக் கவனத்துடன் இருக்க வேண்டும். உங்கள் மெயின் சுவிச்சை இன்னொருவர் கையில் உங்களையறியாமல் "தாராந்துடக்"கூடாது! பலர் உங்களை subtle-ஆக புகழ்ந்து அப்படியே pulp போல் ஆக்கிவிடுவார்கள். The Emperor's New Clothes என்கிற கதையை நீங்கள் வாசித்திருப்பீர்கள்.

உங்களுக்கு இயல்பாக அமைந்த குறிப்பறிதல் போன்ற துடிப்பான வலிமைகள் இருக்கும்போது இன்னொருவர் எவ்வாறு உங்களைத் தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்கிற கேள்வி எழுவது நியாயம். ஆனால் அதுபோல் நீங்கள் ஆளப்படுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்தால்தானே! நீங்களே சுயமாகச் சிந்தித்து செயல்படுவது போன்ற தோற்றத்தை (facade) உங்கள் மனத்தில் தோற்றுவித்து உங்களை பொம்மலாட்டம் ஆட்டிவிடுவார்கள் சண்டாளர்கள்! வெளிப்படையான எதிரிகளிடமிருந்து உங்கலைக் காப்பாற்றிக் கொள்வது மிகச்சுலபம். ஆனால் உங்களைச் சுற்றியிருக்கும் கோஷ்டிகளிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய ஆயுதங்கள் ஏதும் உங்களிடம் கிடையாது. அதனால் எப்போதும் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும். வெற்றி என்ற ஏணியில் ஏறும் ஒவ்வொரு படியிலும் உங்களுடன் தொற்றிக் கொண்டிருப்பவர் யார்யார் என்பதில் மிகக் கவனத்துடன் இருக்க வேண்டும்.

கூட இருந்தே கவிழ்த்து விட்டான்" என்று பலர் புலம்புவதைக் கேட்டிருப்பீர்கள். கூட இருப்பவர்கள்தானே கவிழ்க்க முடியும், எட்ட இருப்பவர்களாலா முடியும்! Betrayal என்பதை அவர்கள்தான் செய்வார்கள். கிரேக்கர்கள் ட்ராய் நாட்டை ஒரு மரத்தினாலான குதிரைக்குள் படைவீரர்களை மறைத்துச் சென்று வீழ்த்தினார்கள் என்பதை அனைவரும் படித்திருப்பீர்கள். இதனால்தான் வஞ்சகமாகச் செயல்படுவதை Trojan Horse என்ற பெயர் கொண்டு அழைக்கிறார்கள். நம் கணினியுள்கூட பல ட்ரோஜன்கள் நம்மையறியாமல் உட்புகுந்து அதனைத் தம் கைக்குள் கொணர்ந்து அதன் இஷ்டத்திற்கேற்ப பல தவறான செயல்களுக்கு உட்படுத்துகின்றன. சாதாரண வைரஸ் எதிர்ப்புச் செயலிகள் (Anti-virus programs) இவற்றை அடையாளம் கண்டுகொள்ள இயலாத வகையில் அவைகள் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்து செயல்படுவதைக் காண்கிறோம்.

இதையேதான் வள்ளுவர் "உட்பகை" என்னும் அதிகாரத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்.

 வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
 கேள்போல் பகைவர் தொடர்பு.

"கேள்போல் பகைவர்"களின் "தொடர்பு" அஞ்சப்பட வேண்டுமென்கிறார். இதில் "தொடர்பு" என்னும் சொல் மிக முக்கியமானது. ஏனெனில் உறுவிய வாள் போன்ற வெளிப்பகை உங்களுடன் "தொடர்பு" கொண்டிருக்காது. அதனால் அதன் செயல்பாடுகள் வெளிப்படையாகத் தெரியும். ஆனால் உட்பகையோ உங்களுடன் தொடர்பு கொண்டது. உங்கள் அருகாமையில், உங்களிடம் ஊடுருவக்கூடிய தன்மையுடன் ஒழுகுவது. அத்தகைய access கொண்ட நபர்களிடம், அவர்களை நீங்கள் இனம் கண்டு கொள்ளும்வரை எதிர்ப்பு சக்தியே உங்களிடம் இருக்க வாய்ப்பு இல்லை! You are defenceless against those that are too close to you. பிரித்தாளும் தந்திரத்தை செயல்படுத்த முயல்வோரும், தவறு செய்பவர்களைப் பிடிக்கத் திட்டமிடும் புலனாய்வுத்துறையினரும், மனமுறிவு கொண்டு ஆனால் பிரிந்துபோகாமல் ஒட்டிக் கொண்டிருக்கும் முன்னாள் நண்பர்களைக் கொண்டுதான் திட்டம் தீட்டுவார்கள் என்று படித்திருக்கிறோம். இதனை வள்ளுவர்,

 ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
 பொன்றாமை ஒன்றல் அரிது.

என்கிறார்.

என் நண்பரொருவர் வாழ்க்கையில் அடுத்தவரை முழுமையாக நம்பியே கெட்டார். எப்போது கண்டாலும், "அவன் கழுத்தறுத்தாண்டா" என்று புலம்புவார். எப்படிய்யா அறுத்தான் என்று கேட்டால், "குயவர் மண்பானை செய்து முடித்தபின், எப்போ, எதைவைத்து கட் பண்ணினார் என்பது தெரியாது; ஆனால், அவர் அதை எடுக்கும்போது, "சக்"கென்று வெளியே வரும். அதுபோல், அசந்திருந்த நேரத்தில, நூல் போட்டு அறுத்துட்டான்யா" என்பார். இந்த உவமையை வள்ளுவர் கையாண்டிருக்கிறார் பாருங்கள்:

 உட்பகை அஞ்சித் தற்காக்க உலைவிடத்து
 மட்பகையின் மாணத் தெறும்.

Asterix comics-ல் ஒரு ரோமானிய ஒற்றன் தன்னைச் சுற்றியிருப்பவர்களைடையே பகையை மூட்டிவிட்டு தப்பித்துவிடுவான். அவனை சீஸர், சர்க்கஸில் இட்டு சிங்களை விட்டு அழைக்க முயற்சி செய்வார். ஆனால் அந்த ஒற்றனோ சிங்கங்களையே ஒன்றோடு ஒன்றை மோதவிட்டு, தான் ஒடிப்போய்விடுவான்!

திருவள்ளுவர் "நட்பு" என்று ஒரு அதிகாரமும், ஆனால் "தீ நட்பு", "கூடா நட்பு" என்று இரு அதிகாரங்களையும் எழுதியுள்ளார்.

 சீரிடம் காணின் எரிதற்குப் பட்டடை
 நேரா நிரந்தவர் நட்பு

வஞ்சிக்கத் தக்கதொரு வாய்ப்பினை எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் பகைவர் உங்கள் நண்பராக நடித்துக் கொண்டிருப்பர். அவர்தம் செயல்பாடு சம்மட்டி அடி விழும்வரை தான் தாங்கிக் கொண்டிருப்பதுபோல் தோற்றம் தரும் பட்டறைக் கல் போன்றது என்கிறார். ஆனால் அடியோ உங்கள் மேல்தான் விழும். நீங்கள் கடைசியில் அடிபட்டு விழும்போது அத்தகைய "நண்பர்கள்" காணக் கிடைக்க மாட்டார்கள். உங்கள் வீழ்ச்சியைக் கண்டு கைகொட்டிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.

 சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
 தீங்கு குறித்தமையான்.

 தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
 அழுத கண்ணீரும் அனைத்து.

"ஐயா, நீங்கள்தான் என் கண்கண்ட தெய்வம். உங்களால்தான் ஒரு வயிற்றுக் கஞ்சி குடிக்கறேன்" என்று காலில் விழுந்து வணங்கி நம் மனதை நெகிழ்ச்சியுறச் செய்துவிடுவார்கள். ஆனால் அந்தக் கும்பிடும் கைகளினுள் கூரிய கொடுவாள் மறைந்திருக்கும். கண்ணீருக்குள் கயமை கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும். வில்லில் பூட்டி நாணேற்றி, உங்கள்மேல் எய்யக் காத்திருக்கும் கூரிய அம்பு போன்றவை அந்த கூழைக் கும்பிடுகள் என்கிறார் வள்ளுவர்.

தற்புகழ்ச்சி தவறு என்பது தெரியாதவரில்லை. பிறர் முகத்துதியிலும், பொய்ப் புகழ்ச்சியிலும் ஈடுபடுகிறார்கள், அதனை நம்புதல் தவறு என்று என்னதான் நம் அறிவு நமக்கு இடித்துரைத்தாலும், இந்தப் பாழும் மனம் அவற்றை விரும்புகிறதே ஐயா, என்ன செய்வது! இதனைப் பற்றிய விளக்கத்தை Sigmund Freud தான் அளிக்க வேண்டும்! மீண்டும் சொல்கிறேன்: Human beings are creatures of emotion, not of logic!

"மன்ற அடுத்திருந்து மாணாத செய்"வோரை அண்ட விடாமல் உங்கள் அகத்தினைக் காப்பீர்!

இங்கிதம் உடையர் எங்கிலும் உயர்வர்

இங்கிதம் உடையர் எங்கிலும் உயர்வர்

பொது இடங்களில் நாம் எப்படி நம்மை அடையாளம் காட்டுகிறோம் என்பதும், ஒரு அலுவலகத்திலோ, நிறுவனத்திலோ, வேறொரு பொது அமைப்பிலோ, குழுவிலோ நாம் எப்படி இங்கிதத்தைக் கடைப்பிடிக்கிறோம் என்பதை வைத்துத்தான் நம் personality பிறரால் அறியப்படுகிறது. இது போன்ற பயிற்சி உங்களுக்கு ஏற்பட வேண்டுமென்றால் நீங்கள் ஏதாவது ஒரு பொது அமைப்பிலோ, துறையிலோ, தொண்டு நிறுவனங்களிலோ பங்களிக்க வேண்டும்.அப்போதுதான் பலவகை மனிதர்களிடம் எப்படிப் பழகி வேலைகளை நடத்திச் செல்லவேண்டும் என்பது புரியும். கிணத்துத் தவளையாக இருந்து கொண்டு, நம்மையே நம்பியிருக்கும் மனைவியையும் குழந்தைகளையும் (மட்டும்) விரட்டிக்கொண்டு, அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் "சலாம்" போட்டு "குலாம்" ஆகிக் கொண்டோ, அல்லது அசட்டுத் துணிச்சலுடன் ஏதாவது ஏடாகூடமாக செய்து விட்டு "என்ன நடக்குமோ" என்ற பயத்தில் வீட்டில் இருப்பவர்களிடம் "சள்புள்" என்று விழுந்து கொண்டோ கிடக்காமல், ஒரு 3600 அணுகுமுறையைக் கைக்கொள்ள வேண்டும்.

"இங்கிதம்" என்ற சொல்லுக்குத் தகுந்த பொருளாக திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள், "பாஞ்சாலி சபதம்" காவியத்திற்கு அவர் எழுதியுள்ள உரையில் குறிப்பிடுவது என்ன என்று பார்ப்போம்:-

 1) குறிப்பு (Hint, sign, indication of feeling by gesture)
 2) கருத்து (purpose, object)
 3) இனிமை,
 4) சமயோசிதம் உடைமை (good manners).

இந்த "சமயோசிதம் உடைமை" என்பதை "இன்னதுதான்" என்று வரையறுத்துச் சொல்ல முடியாது. அது அதன் அடிப்படையின்படி "சமயத்"திற்கு ஏற்றாற்போல் மாறுபடும். ஒரு குறிப்பிட்ட நிகழ்வின்போது, அதன் கால, தேச, வர்த்தமானத்தில் (set of circumstances) சரியாக இருக்கும் ஒரு செயல்பாடு, இன்னொரு கால கட்டத்தில் தவறாக அமையும். ஆனால் எக்காலத்திற்கும் பொதுவான சில கோட்பாடுகள் இருக்கின்றன - செயல்முறைகள், ஏற்க வேண்டியவை, தவிற்க வேண்டியவை என்று சில உள்ளன. அவை சின்னஞ்சிறு விஷயங்களாக இருக்கலாம், ஆனால், அவை மனித மனத்தின் ஓட்டங்களைத் திசை திருப்பும் வல்லமை படைத்தவை என்பதால், அவற்றைக் கடைப்பிடித்தல் மிக அவசியமாகிறது. அவற்றில் சிலவற்றை இந்த வாரக் கட்டுரையில் அணுகுவோம்.

முதலில் ஒரு silly விஷயத்தைக் கவனிப்போம். ஷூவை நன்றாக பாலிஷ் செய்து போட்டுக் கொள்வது மட்டும் முக்கியமல்ல. அதன் உள்ளுறைகளையும் (socks) நன்கு துவைத்துச் சுத்தமாக அணிதல் வேண்டும். நம்மில் பலருக்கு "சாக்ஸை" சுத்தம் செய்தல் என்பது மட்டும் கைவராது. ஷூவைக் கழற்றும்போது சாக்ஸை அப்படியே உருவிச் சுருட்டி ஷூவுக்குள் திணித்து விட்டுச் செல்வோமேயன்றி, கையோடு அவற்றை துவைக்கப் போடமாட்டோம். அசுத்தமான உள்ளுறைகளால் நம்மைச் சுற்றி ஒரு துர்நாற்றம் வீசிக் கொண்டேயிருக்கும். உங்கள் "கப்பு" உங்களுக்கு முன்னால் கட்டியம் கூறிக்கொண்டே செல்லும். மேலும் உள்ளுறைகளில் "தொண்டி" இல்லாமலிருந்தால் நலம். ஏனென்றால், நாலு பேருக்கு முன்னால் ஷூவைக் கழட்ட வேண்டிய நிலை வரும்போது மானம் போகாமலிருக்கும்!

உங்களுக்கு "அணில் மார்க்" சுருட்டு மேலும் ("சுருட்டுவதிலும்" என்றா சொன்னேன், இல்லையே!), "தனா பீனா சொக்கலால் ராம்சேட் பீடி" மேலும் காதல் இருக்கலாம். அதற்காக அவற்றை ஒரு "தம்" வலித்து விட்டு, நேர்காணலுக்கோ, மேலதிகாரிகளை மற்றும் வேறு முக்கிய நபர்களைச் சந்திக்கவோ செல்லாதீர்கள். அதிலும் பெண்மணிகள் பெரும்பாலும் இந்த விஷயத்தில் நிறையவே sensitive-ஆக இருப்பார்கள் என்பதை எப்போதும் மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.

பெண்கள் பெரும்பாலும் தங்களுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்று பட்டியலிட்டுக் கொண்டே இருப்பார்கள். எனவே பெண்களிடம் வேலை ஆகவேண்டியிருந்தால், அவர்களுக்கு (உங்களுக்கு இல்லை!) என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதையெல்லாம் திருப்பி சொல்லிக் கொண்டேயிருங்கள்! சலிக்காமல் கேட்டுக் கொண்டேயிருப்பார்கள்!

லேசாகப் "பூசின மாதிரி" இருக்கும் ("பூசணி மாதிரி" என்றா சொன்னேன்? ஏதாவது வம்பில மாட்டி விடறதிலேயே குறியா இருக்கீங்களே!) பெண்மணிகளிடம் "லேசாக இளைச்ச மாதிரி இருக்கே", என்று சொல்லுங்கள். புது டிரெஸ் என்று சொன்னால், "it is a bit slimming" என்று கூசாமல் (சிரிக்காமல்) சொல்லுங்கள். பெரும்பாலும் பெண்கள் தன் உடல் பருமன் விஷயத்தில் ஏதாவது குறைப்பட்ட வண்ணம் இருப்பார்கள். இது போல் யாராவது சொல்ல மாட்டர்களா என்று அவர்கள் மனத்தில் எதிர்பார்ப்புக்கள் இருக்கும்.

பெரிய மனிதர்கள் பலர் தன் குரலைத் தானே கேட்டுக் கொண்டு சந்தோஷப்படும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பர் (People who love to hear the sound of their own voice). "I this, I that" என்று அளந்து கொண்டிருப்பார்கள். அதுவும் நீங்கள் அவருக்கு அடங்கியவராகவோ, அல்லது ஏதாவது உதவி கேட்டு வந்தவராகவோ இருந்தால், நீங்கள் ஒரு captive audience ஆகிவிடுவீர்கள். உங்களுக்குக் கொட்டாவியாக வந்துகொண்டிருக்கும். ஆனால் அதை வெளிக்காண்பிக்கக் கூடாது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்ள வேண்டும். லேசாக தலையைத் திருப்பி அல்லது அதை செருமலுடன் கலந்து - இது மாதிரி ஏதாவதொரு வழியில் நம் சலிப்பை மறைக்க வேண்டும். என்ன செய்வது அய்யா, இந்தப் பாழும் உலகத்தில் பிறரிடம் பலவித வேலைகள் ஆக வேண்டியிருக்கிறதே!

இதுபோல் எந்தவித உடல் உபாதையையும் பொது இடங்களில் வெளிக்காண்பித்து அவமானப்படாமல் (to avoid such embarrassing situations), மறைத்து விட்டால் நல்லது. Fart file என்ற கோப்பில் சொல்லியிருப்பது போல "அபான வாயு" தன்னையறியாமல் escape ஆக முற்பட்டால், லேசாக இருமி அதை மறைக்க வேண்டும். இதெல்லாம் விவரமாகவா சொல்லிக் கொடுக்க முடியும்? சமயம் பார்த்து புத்திசாலித்தனமாகச் செய்ய வேண்டியதுதான்!

ஒருவரிடம் ஏதாவது உதவி கேட்பதற்காகச் செல்லும் போது, அவரைத் தனியாக இருக்கும்போது சந்தியுங்கள். யாரும் உடனிருக்கும்போது போகாதீர்கள். அவர்கள் ஏடாகூடமாக ஏதாவது குறுக்கு சால் ஓட்டி காரியத்தைக் கெடுத்து விடுவார்கள். "சார், டிரான்ஸ்ஃபர் ஆர்டரை கேன்சல் செய்யுங்க சார். பிள்ளைங்க படிப்பு கெட்டுப் போயிடும் சார்" என்று நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் போது, உங்கள் மேலதிகாரி அப்போ தான் "என்னடா இது, இவனை ரொம்ப கஷ்டப் படுத்தி விட்டோமோ" என்று கொஞ்சம் கழிவிரக்கம் கொள்ள ஆரம்பித்திருப்பார். அப்போது, அங்கே கூட இருக்கும் நபர் "ஏன், நீங்கள் போகும் இடத்தில்கூட நல்ல ஸ்கூலெல்லாம் இருக்கே" என்பார். போச்சுடா! என்ன ஆகும்? நல்ல வாய்ப்பு கைநழுவிப் போய்விடும். அந்த அதிகாரிக்கு இதுபோல் ஒரு escape route கிடைத்தால், விடுவாரா! அந்த "கூட இருந்த பிரகிருதி" உங்களுக்கு எதிரியோ, அல்லது அவர் பிறருக்குக் கெடுதல் செய்ய வேண்டும் என்கிற கெட்ட எண்ணம் கொண்டவரோ இல்லை. சில பேரால் வாய் என்னும் ஓட்டையை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. அவ்வளவதுதான். அதனால்தான் சொல்கிறேன். உதவி கேட்கும் போது தனியாகப் பிடியுங்கள் என்று. சில சமயம் இன்னொருவருடன் (as a strategy) பேசி வைத்துக் கொண்டு "நான் அங்கே இருக்கும்போது நீ அங்கே வா, நான் சிபாரிசு செய்து அவர் மனதை மாற்றுகிறேன்" என்ற set up - உடன் செயல் படுவது என்பது வேறு விஷயம்!

குறிப்பறிந்து பேசுங்கள். ஆனால் குறுக்கே பேசாதீர்கள். பெரிய மனிதர்களுக்கு, தான் பெசிக்கொண்டிருக்கும்போது குறுக்கே புகுந்து ("மதுரைப் பக்கம் "ஊடாயில" என்பார்கள்) "கட்" பண்ணி பேச முற்பட்டல் ரொம்பக் கோபம் வந்துவிடும். அவர்கள் ஈகோவை நீங்கள் மிதித்து விட்டது போல் துள்ளுவார்கள். அவர்கள் பேசிக்கொண்டே யிருக்கும்போது ஏதாவது கொஞ்சம் gap கொடுத்தால் இதுதான் சாக்கு என்று நீங்கள் பேச ஆரம்பித்து விடாதீர்கள். அந்த இடைவெளியில் ஏதாவது தன் மேதாவிலாசத்தைக் காண்பிக்க என்ன சொல்லலாம் என்று மூளையைக் கசக்கிக் கொண்டிருப்பார். இது தெரியாமல் நீங்கள் குறுக்கே புகுந்தால் அவர் எண்ணச் சங்கிலி தடைப்பட்டு கோபத்தை உண்டாக்கும். இது ஒரு subtle ஆன விஷயம்; ஆனால் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டியது ஆகும்.

முக்கிய நபரை சந்திக்கச் செல்லும்போது வெறுங்கையுடன் செல்லாதீர்கள். "அவர்களிடம் இல்லாததா, நான் என்ன கொண்டு போக முடியும்" என்று எண்ணாதீர்கள். யாராவது வந்தால் அவர்கள் கையில் என்ன இருக்கிறது என்று பார்ப்பது மனித இயற்கை. "இதெல்லாம் என்ன கெட்ட பழக்கம். எனக்குப் பிடிக்காது" என்றுதான் சொல்வார்கள். சிலர், "வேண்டவே வேண்டாம்" என்று மறுத்து விடுவார்கள். பரவாயில்லை. நீங்கள் கொண்டு போனதாக இருக்கட்டும். அவர் ஏற்காததாகவே இருக்கட்டூம். அதற்காக நீங்கள் கொண்டு போகாமல் இருக்காதீர்கள். இது என்ன நாடகம் என்று கேட்கிறீர்களா? இதுதானய்யா மனித இயற்கை! ஒருவர் வீட்டுக்குச் செல்வதற்கு முன்னால் அவருடன் யார் யார் வசிக்கிறார்கள் என்று விசாரித்து அதற்கேற்றாற்போன்ற பொருளுடன் செல்ல வேண்டும். வேலை, பணம், எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் - இதுபோன்ற முக்கிய சந்திப்புக்களின் போது, நல்ல பழங்களாகக் கொண்டு செல்லுங்கள். ஏதாவது சாலையோரத் தள்ளு வண்டியில் கிடைக்கும் அழுகல், அவிசல், வெம்பல் இதெல்லாம் வாங்கிச் செல்லாதீர்கள். வாங்கிய பொருட்களின் விலைச் சீட்டை கவனமாகப் பிய்த்து விடுங்கள். ஆனால் சில நேரங்களில் நிறைய விலை கொடுத்து வாங்கிய பொருள் என்று தெரிவிப்பது அவசியமாக இருக்கலாம். ஏனென்றால் அதேபோல் தோற்றமளிக்கும் மலிவு "மாலு"ம் கிடைக்கலாம் அல்லவா! இங்குதான் உங்கள் "சமையோசிதம்" வேலை செய்யவேண்டும்!

ரொம்பப் பெரிய மனிதர்கள் வீட்டிலெல்லாம் பெரும்பாலும் காப்பி, டீ முதலியவை அவ்வளவு நன்றாக இருக்காது. ஏனெனில் அங்கு யாராவது வேலைக்காரர்கள்தான் அவற்றைத் தயார் செய்வார்கள். "இதுகளுக்கெல்லாம் காப்பி போட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறதே" என்ற சலிப்புடன் போட்ட காப்பி, பின் எப்படி இருக்கும்! ஆனால் அந்தப் பெரிய மனிதரோ, "எங்க வீட்டுக் காப்பி மாதிரி எங்கேயும் கிடைக்காது. நேத்தைக்குக் கூட ஹைகோர்ட் ஜட்ஜு வந்து, 'உங்க காப்பி குடிக்கணும்னுதான் டில்லியிலேர்ந்து வந்தேன்' என்று ரெண்டு கப் கேட்டு வாங்கி சாப்பிட்டு விட்டுப் போனார்" என்று பட்டம் விடுவார். நீங்கள் அப்போதுதான் அந்த விளெக்கெண்ணையை முழுங்கிக் கொண்டிருப்பீர்கள். கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் அதை முழுவதும் விழுங்கி விட்டு, அந்த ஜட்ஜை விட ஒரு படி மேலே போய் பொய்மூட்டையை அவிழ்த்து விட்டு, "நானும் இன்னொரு கப் கேட்டிருப்பேன். ஆனால் இந்தப் பாழும் ஆயுர்வேத மருந்து சாப்பிடறேனா, காப்பி சாப்பிட்டாலே ஒத்துக்க மாட்டெனென்கிறது. எங்கேயும் ஒரு சொட்டு கூட செல்லாது, உங்கள் வீட்டுக் காப்பியாயிற்றே என்று ஒரு கப் சாப்பிட்டென்" இந்த மாதிரி முக மலர்ச்சியுடன் convincing - ஆக உங்களால் சொல்ல முடிந்தால், நீங்கள் ஒரு Managing Director material!

சரி இதோடு விட்டுவிடுமா, இதற்கு மேலும் டார்ச்சர் காத்துக் கொண்டிருக்கும். அவர்கள் வீட்டு "மேம் சாஹிப்" பெயிண்ட் பண்ணியிருப்பார்கள். அதையெல்லாம் நீங்கள் பார்வையிட்டு, கண்களை அகல விரித்து, வாயைப் பிளந்து, "ரவி வர்மா, ஹுசைன்" என்று உங்களுக்குத் தெரிந்த பெரிய ஓவியர்களின் கலைவண்ணங்களை "விஞ்சும் வகையில் இருக்கிறது" என்று சொல்ல வேண்டும். இந்த மாதிரிப் புகழ்ச்சியில் ஈடுபடுவதிலும் ஒரு கலை நுணுக்கத்துடன் செய்ய வேண்டும். நேரடியாக உப்புத்தாள் கொண்டு தேய்க்கக் கூடாது. இதிலும் ஒரு நிபுணத்துவம் வேண்டும். subtle and suggestive ஆகச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கிண்டல் செய்கிறீர்கள் என்று எண்ணிவிடுவார்கள். "இன்னும் கொஞ்சம் நேரம் செலவழித்து இதில் இன்னும் ஈடுபட்டால் பெரிய ஓவியர்களை மிஞ்சி விடுவீர்கள்" ("ஜல்ல்ல்ல்ல்'!) என்றொரு பல்லவியைப் போடவேண்டும். உடனே அந்த அம்மாள், "எனக்கு எங்கே நேரமிருக்கிறது இதெற்கெல்லாம்" என்று ஆரம்பிப்பார். அவ்வளவுதானே, அதற்கேற்றாற்போல் சரணம் பாடிவிடவேண்டியதுதான்!

இன்னும் சிலரது வீட்டில் குட்டிப் பிசாசுகள் பாட்டுப் பாடிப் படுத்தும். "என் பெண் கர்நாடக சங்கீதம் கத்துக்கிறாள். சுதா கூட முந்தா நாள் கேட்டுவிட்டு 'உங்கள் பெண்ணுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு' என்று ஆசீர்வாதம் செய்து விட்டுப் போனார்" என்று சொல்லி அந்தப் பெண்ணை அழைத்து, "அம்மா சின்னக் குட்டி, இவருக்கு ரெண்டு உருப்படி பாடிக் காண்பி" என்பார். உடனே அந்த சின்னக் குட்டி (என்னக் குட்டி?) "எனக்கு தொண்டை என்னமோ செய்யறது. இப்போ போய் பாடச் சொல்றீங்களே, இன்னொரு நாள் பார்க்கலாம்" என்பார். இதே கதையை இதுவரை 100 தடவையாவது கேட்டிருக்கிறேன். இந்த பதிலுக்கு என்ன பொருள் தெரியுமா? இது ஒரு cue தான். உடனே நீங்கள், "பரவாயில்லை அம்மா. ஒரு வர்ணமாவது பாடுங்கள். நீங்கள் நன்றாகப் பாடுகிறீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்" என்று பிடிவாதம் பிடிக்க வேண்டும். ரொம்ப கிராக்கி பண்ணி, ஒரு மாதிரியாக "ஸா பா ஸா"வுடன் ஆரம்பிப்பார்கள். அவ்வளவுதான். நீங்கள் பாவம்! உங்களுக்கு Cacophonix, the bard நினைவுக்கு வருவார்! இந்த டெஸ்டில் பாஸ் செய்து விட்டீர்களானால் இந்த உலகில் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

"சும்மா ஷூவோடவே உள்ளே வாங்க, பரவாயில்லை" என்று சொன்னாலும், ஷூவைக் கழட்டி விட்டு இன்னொருவர் வீட்டுக்குள் செல்லுங்கள். உங்களைப் பற்றிய மதிப்புக் கூடும். நமக்கும் சில value systems இருக்கின்றன என்பதைக் காண்பிப்பதும் ரொம்ப முக்கியம். நம்மிடம் பழக்கம் வைத்துக் கொள்வதை அவர்கள் தமக்கு ஒவ்வாத ஒன்றாக நினைக்கக் கூடாது.

எந்த நேரத்திலும் தம் நிலை மறக்காத மனப்பாங்கு வேண்டும். We must know our bearings. நெருங்கிப் பேசுகிறார்களே என்று பெரிய மனிதர்களிடம் ரொம்பவும் ஈஷிக்கொள்ளக் கூடாது. "இதென்னடா இது, 'தோ தோ' என்றால் மூஞ்சியை நக்குகிறதே" என்று அவர்கள் ஒரு நேரமில்லாவிடாலும் ஒரு நேரம் வெறுப்படையக் கூடும்.

இதெல்லாம் ஒரு deception அல்லவா - இது போல் ஏமாற்று வேலையெல்லாம் எதற்கு என்கிறீர்களா? இதெல்லாம் ஒருவகை மேனேஜ்மெண்ட் டெக்னிக் தான் நண்பர்களே. நம் சுற்றுப்புறத்தை மேனேஜ் பண்ணுவது நம் வேலை தானே. மற்றவர்கள் குண விசேஷத்திற்குத் தகுந்தாற்போல், சிறிய மாறுதல்கள் செய்துகொண்டு raw-வாக இல்லாமல், ஒரு ருசியாக சமைத்த உணவாக நம் personality - ஐ பிறருக்கு அளிக்கிறோம். அவ்வளவுதான்!

தலைமை ஒரு திறமை

தலைமை ஒரு திறமை

ஒவ்வொரு மனிதனும் எந்த நிலையிலும் தன் தனித்தன்மையை நிலைநாட்டவே முனைப்பாக இருக்கிறான். தனக்கென்று ஒரு பெயர், ஒரு identity, ஒரு அங்கீகரிப்பு இருக்கவேண்டும் என்ற விழைவு அவனுடைய வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல்லாயிரம் மனிதத் தலைகளில் என்னுடையதும் ஒன்று என்றில்லாமல், “அதோ, அங்கே புள்ளிபோல் தெரிகிறது பார். அதுதான் நான்" என்று அடையாளம் காட்ட ஏங்குகிறது நம் மனம். டிவி கேமரா நம் பக்கம் திரும்பும் போதெல்லாம் யாராவது பார்க்க மாட்டார்களா என்று கையை ஆட்டுகிறோமே அதுவும் இத்தகைய உந்துதலால் தான். ஏதாவது ஒரு வகையில் தன் சிறப்பை, தன் individuality-ஐ பிறர் அறிய வெளிக்காண்பிக்க வேண்டும் என்ற முனைப்பு உயிருள்ளவரை தொடரும். அந்த ஈகோ வெளிப்பாடு நின்றுவிட்டது என்றால் அவன்மனம் தற்கொலைக்குத் தூண்டும் நிலை ஏற்பட்டுவிடும்.

இதுபோல் நம்மை தனியாக வட்டம் போட்டுக் காண்பிக்க வேண்டும்; நம் மேல் ஒளிக்கற்றைகள் தொடர்ந்து பாய்ந்த வண்ணம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமே, அது நிகழ்வது எப்படி? எதைச் செய்தால் அது சாத்தியமாகும்? அதற்கு முதல்படியாக நீங்கள் ஏதாவதொரு  துறையில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். சரி. அது போதுமா? இல்லை. நீங்கள் வெற்றிபெற்றவர் என்பதை உங்களைச் சுற்றியுள்ள உலகம் அறிந்திருக்க வேண்டும். அதுதான் மிக முக்கியம்.

இத்தகைய சிறப்பான தனிநிலை அடைவதற்கு முதல் இன்றியமையாத தேவை சுய மதிப்பு (self-esteem) தான். இதைப்பற்றி கீதையிலிருந்து மேற்கோள்காட்டி முன்னமையே எழுதியிருக்கிறேன். தன்னம்பிக்கை, தன் மேன்மையைப் பற்றிய அவதானிப்பு எல்லாம் தெளிவாக இருந்தால்தான் அதனை அடிப்படையாகக் கொண்டு பிறர்மேல் நாம் ஆளுமை செலுத்தமுடியும். நாம் நம்மைப் பற்றி எவ்வலவு தூரம் ஆழமாக அறிந்திருக்கிறோமோ அந்த அளவுக்குத்தான் வெளி உலகத்தையும் கட்டி ஆளமுடியும். இந்த உண்மையை இப்போது பலர் உணரத் தொடங்கியிருகிறார்கள். Enneagram போன்ற முறைகள் மூலம் பலர், "தான் எத்தகையவர்" என்று தோண்டி ஆறாய ஆரம்பித்துள்ளார்கள்.

“Basic self-knowledge” என்ற நூலில் Harry Benjamin என்பவர் கூறுவதைப் பாருங்கள்: 

“What we think we have discovered about ourselves is very superficial at first, so that real self-knowledge only comes after years of patient effort. But such effort is immensely worthwhile in every particular, because it not only transforms us, it transforms our whole life for us; because as our level of being changes, so does our life change, too. We become different people inside, and this is reflected by the way life treats us outside.”

“Self-change is the basic pre-requisite for external change. And self-change can only come about as a result of self-knowledge and work on oneself."

நாம் நம்மை மாற்றிக் கொள்வதன் மூலம் வெளி உலகம் நம்மை அணுகும் முறையை மாற்றி நாம் சாதனை புரியலாம். இத்தகைய செயல்பாடுகளை முழுதும் அறிந்த பலர் தம் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நேரு, எம்ஜியார் போன்றவர்கள் மக்கள் மனதைத் தங்கள்பால் திருப்பவும், என்றைக்கும் தன் பர்ஸனாலிடிக்கு சிறிதும் பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் இதுபோன்ற technique களைத்தான் முழுமையாகக் கையாண்டிருக்கிறார்கள்.

மக்களால் கொண்டாடப்படும் பெரிய மனிதர்கள் பலர் எல்லோரும் சுலபமாக அணுக முடியாதபடி, எட்டாத தூரத்தில் தங்களை வைத்துக் கொண்டிருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். இது தன்னிச்சையாக நிகழ்வதல்ல. அது போல் ஒரு "தொலைவு" வைத்துக் கொள்வது மிக முக்கியம். Familiarity breeds contempt – இந்தப் பழமொழியை மறக்கக் கூடாது. தூரத்துப் பச்சையாகவே இருக்க வேண்டும். “Playing hard to get” என்பது ஒரு டெக்னிக். அதாவது "நான் உங்களை விடச் சிறந்தவன். என்னை நெருங்குவது எல்லோருக்கும் சுலபத்தில் கிட்டாது"

என்ற செய்தி அடுத்தவருக்கு உணர்த்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் பிறர் மனத்தில் ஒரு சலிப்புத் தோன்றிவிடும். “ஒகோ..., அவரா" என்பார்கள்! எல்லோரையும் உங்கள் வீட்டு அடுக்களைக்கோ, படுக்கையறைக்கோ அனுமதிக்க முடியுமா? சிலரை வாசலிலேயெ பேசி அனுப்பிவிட வேண்டும். சிலரை வரவேற்பறையில் (drawing room, foyer) அமர வைத்து தாகத்திற்கு தண்ணீர் கொடுத்து, சில வார்த்தைகள் சம்பிதாயமாகப் பேசி அனுப்புகிறோம். வெகு சிலரையே நம் வீட்டுக் கூடத்துக்குள் (living room) அழைக்கிறோம். அதுபோல் தரம் பார்த்து, தகுதி பார்த்து, ஒரு குறிப்பிட்ட தூரத்திலேயெ ஒவ்வொருவரையும் நிறுத்த வேண்டும். உங்களைச் சுற்றியுள்ளவர் மனங்களில், “யார் இங்கு ஆளுமை செலுத்துபவர்" (who is in-charge) என்பது ஐயத்துக்கு இடமின்றி உணரப்பட வேண்டும். நீங்களாக முடிவு செய்து குறிப்பிட்ட நபரை அணைக்கவோ, வெட்டவோ செய்ய வேண்டுமேயன்றி, அடுத்தவர் உங்கள்மேல் உரிமை எடுத்துக் கொண்டு தங்கள் முடிவுகளை உங்கள் மேல் திணிக்க இடம் கொடுக்கக் கூடாது.

நீங்கள் பணியாற்றும் நிறுவனத்திலோ, பங்கெடுக்கும் பொது அமைப்பிலோ நீங்கள் ஒரு மேளாண்மை பதவியில் இருந்தால், உங்கள் ஒவ்வொரு அசைவும், உங்கள் வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் கவனமாகக் கண்காணிக்கப் படுகிறது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் தரம் குறைந்தாலும் உங்களைப் பற்றிய இமேஜ் கீழே சரிந்துவிடும்.

பெரிய பதவியை அடைவதால் மட்டும் ஆளுமை வந்துவிடாது. தன்கீழ் பணியாற்றுபவர்களைக் கட்டுப் படுத்தமுடியாத, மேலாண்மை செலுத்தமுடியாத பல மேலதிகாரிகளை நாம் கண்டிருக்கிறோம். தன்னம்பிக்கையில்லாமலும், பிறர் மனத்தை அடக்கி, அதனைத் தம் ஆளுமைக்குள் கொண்டுவர இயலாதவர்களாகவும் பல பெரிய பதவிகளை வகிப்பவர்கள் இருக்கிறார்கள். ஊன்றிப் பார்த்தால் இவர்களுடைய "மெயின் சுவிட்ச்" இன்னொருவர் கையில் இருக்கும். பதவிக்கேற்ற ஆதிக்கத்தை இவர்கள் செலுத்தவில்லையென்றால், இவர்கள்மேல்

இன்னொருவர் ஆதிக்கம் செலுத்த முற்படுவது திண்ணம்.

நம்மில் பலர் "கித்தாய்ப்பாகப்" பேச ஆரம்பிப்பார்கள். “இப்போது பார். இவனை எப்படி விரட்டறேன் பார். நான் போடற போட்டிலே அவன் கதறிக்கொண்டு ஓடிவருகிறான் பார்" என்று வீராய்ப்பாக டெலிஃபோனை எடுத்து சுழற்றுவார்கள். ஆனால், “தொண்டையிலே 'கீச் கீச்'” விளம்பரத்தில் வரும் MGM சிங்கம் "ம்க்ம்ம்ம்--ர்ர்ர்" என்ற கர்ஜனையுடன் ஆரம்பித்து "மியாவ்" என்று முடிப்பதுபோல "நீங்க பார்த்து செய்யுங்க. ஹி...ஹி" என்று சொணங்கிவிடுவார்கள். இதுபோல் இல்லாமல் நீங்கள் தலைமை வகிக்கும் எந்த நிகழ்விலும் உங்கள் கை ஓங்கியிருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தன் பலம், எதிராளியின் பலம், அவர்தம் பின்புலம் எல்லாவற்றையும் துல்லியமாக எடைபோட்டு, நாம் தொடங்கிய விறைப்பிலேயே கடைசிவரை தொடர வேண்டும்.

ஃபோனில் பேசும்போது "வெட்டு ஒன்று, துண்டு இரண்டு" என்றிருக்க வேண்டும். “வழவழா கொழகொழா" என்று நையக்கூடாது. “இவன் என்ன சொல்லப் போகிறானோ" என்ரு எதிராளி கவனத்துடன் கேட்டுக் கொள்ள வேண்டும்.

இன்னொரு முக்கியமான விஷயம்: தலைமையேற்கும் நிலையில் உள்ள உங்கள் சொல்தான் கடைசியாக இருக்க வேண்டும். "தட்டையான அமைப்புமுறை" (flat organization) கொண்ட நிறுவனங்களில்கூட தலைமை என்று ஒருவர் உண்டு. இது எல்லா உரினங்களிலும் உள்ள இயற்கை.

நீங்கள் ஒரு உத்தரவு பிறப்பித்தால், அதனை முழுமையும் பிறர் புரிந்துகொள்ளும்படி உரைக்க வேண்டும். உங்கள் முடிவு இன்னதுதான் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றிக் கூறி நிறுத்திவிட வேண்டும். No vacillation, no ambiguity, no hemming and hawing. (ஆனால், உங்கள் முடிவு இன்னதுதான் என்பதை கடைசியில்தான் வெளிப்படுத்த வேண்டும்!)

இதெல்லாம் ஆளுமையின் அடையாளங்கள். நம் வார்த்தைகளில் "குழைவு" வந்துவிடக் கூடாது. இது ஒரு பலவீனத்தின் வெளிப்பாடு. உங்கள் பலவீனங்கள் பிறரால் கணிக்கப்பட்டால் ஆளுமை அவர்கள் கையில் சேர்ந்துவிடும்! So, when you are the chief, play that part!

பதறாமல், உதறாமல், வெளிப்படையாக உணர்ச்சிகளைக் கொட்டாமல், நிதானமான, ஆழமான குரலுடன் உங்கள் கருத்துக்களையும் முடிவுகளையும் எடுத்துக் கூறினால், அதன் தாக்கம் ஏற்றமுள்ளதாக அமையும். உத்தரவுகள் "தொங்கும்" சொற்களாக இருக்கக் கூடாது. உறுதியாக இருக்கவேண்டும். Spoken with deep resonant voice and a measured tone; words delivered with appropriate pause. எந்த உத்தரவு பிறப்பித்தாலும், அது நிறைவேற்றப் பட்டதா -  என்பதைக் கண்காணிக்கவேண்டும். இல்லையெனில் உங்கள் மேல் அசட்டையாக இருக்கத் தொடங்கி விடுவர். “அவர் அப்படித்தான் ஏதாவது சொல்லுவார். ஆனால், செய்யல்லைன்னா கண்டுக்க மாட்டார். பேசாம விடு" என்பார்கள். சொற்கள் தன்னிச்சையாக வந்து விழக்கூடாது. நம் முழு ஆளுமையுடன் வரவேண்டும். ROM-ன் ஆதிக்கமில்லாமல், நம் அறிவுசால் RAM-ன் கட்டுப் பாட்டில் வரவேண்டும்!

பொது இடங்களுச்சென்றால் நீங்கள் நாலுபேர் முன்னால் மதிக்கப்பட விரும்புகிறீர்கள். பிரபலமான கொயில்களுக்குச் சென்றால், முண்டியடித்து, நெட்டித்தள்ளி தரிசனம் செய்யாமல், தனியாக கர்ப்பக் கிரகத்துக்கு அழைத்துச் செல்லப் படுவதை விரும்புகிறீர்கள். எங்கு சென்றாலும் உங்களை சிறப்பாக கவனிக்க வேண்டும் என்று ஆவல்படுகிறீர்கள். இவ்வகை சிறப்பு மரியாதைகள் நீங்கள் பெறவேண்டுமானால், வாழ்க்கையில் வெற்றி பெற்றவராக, ஒரு தலைவனாக, சிறப்பு வாய்ந்தவனாக பிறரால் உணரப்பட வேண்டும். வெற்றி பெற்றால் மட்டும் போதாது. அந்த வெற்றி எட்டுத் திக்கும்  எட்டும்படி முரசு கொட்டப்பட வேண்டும்!

Nothing succeeds like success in this world !

திறமையை வளர்த்துக் கொள்ள….

திறமையை வளர்த்துக் கொள்ள….

வளர்ச்சிக்கு அறிவு – பயிற்சி பாரம்பரியம் மூன்றும் அடிப்படைகளாக அமைகின்றன. சிறந்த சூழ்நிலை வளர்ச்சிக்குத் துணையாகிறது. அறிவும் பயிற்சியும் ஒவ்வொரு துறையிலும் தேவைப்படுகிறது. பாரம்பரியம் தந்தை தாய்வழியே வருவதாகும். சிறந்த பாரம்பரியம் – அறிவு – பயிற்சி ஒருவனை திறமை மிக்கவனாக உருவாக்கும். திறமை ஒன்றே வளர்ச்சியின் அளவு கோல்.

திறமையின்றி ஒருவன் வளர நினைப்பது, புகழைக் கௌவ நினைப்பது – ஒரு கனவு காண்பதைப் போன்றதாகும். கணித்தத்தில் திறமை பெற்றதால் இராமானஜம், கவிதையில் திறமை பெற்றதால் தான் பாரதியார், அரசியலில் திறமை பெற்றதால் இந்திரா – பேச்சில் திறமை பெற்றதால் அண்ணா. எழுத்தில் திறமை பெற்றதால் டாக்டர். மு.வ. இப்படி திறமை பெற்றவர்களின் பெயர் வரிசைப் பட்டியலை நீட்டிக் கொண்டே செல்லலாம்

அவன் வளர்ந்துள்ளான். “எப்படியோ” வளர்ந்துவிட்டான் என்று எண்ணுவதை விட அவன் வளர்வத்கு உறுதுணையாக நின்ற அவன் திறமை என்ன என்பதை மட்டும் கூர்ந்து கவனியுங்கள். வளர நினைப்பவர்கள், செழிக்க நினைப்பவர்கள் பிறரைக் காட்டிலும் ஏதேனும் ஒரு துறையிலாவது நல்ல அறிவும் பயிற்சியும் பெற்று திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அறிவும் பயிற்சியும் பெற்று ஒன்றை ஒழுங்கு செய்யும் நன்மையை திறமையென்று கொள்ளலாம்.

உங்கள் திறைமையை எந்த துறையில் பெருக்கிக் கொள்ளலாம் என்பதை நீங்கள் அமைதியாக சிந்தித்து முழுமையாகத் தீர்மானியுங்கள். எந்தத் துறையைத் தேர்ந்து எடுக்கிறீர்கள். அந்தத் துறை நூல்களைப் படியுங்கள். குறிப்பெடுங்கள். கருத்துக்களை ஜீரணிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அதைப்பற்றி கேள்விகளை எழுப்புங்கள். பதில்களைப் பல முறைகளிலும் பெற முயலுங்கள். செய்தித்தாள் , வானொலி, தொலைக்காட்சி இன்னபிற வழிகளில் அறிவைப் பெருக்குங்கள். பயணம் செய்யுங்கள். பார்த்து – கேட்டு அறிவைப் பெருக்குங்கள்.

பயிற்சி – ஒழுங்குற செய்வதாகும். பயிற்சி பெறப் பெற – அறிவு – பொலிவு பெறும். பயிற்சி படிப்பதிலும், எழுதுவதிலும், எண்ணுவதிலும், செய்வதிலும், ஒழுங்குற அமைய வேண்டும். பயிற்சியில் நேரமும் வேண்டும். நேரத்தை ஒழுங்குறப் பயன்படுத்தி பயிற்சியைத் தொடரும்பது அறிவு தெளிவு பெறும். திறமை பிறக்கும். திறமை வெறியைத் தேடித்தரும் திறமைக்குத் திறவுகோல் அறிவு – பயிற்சி, பாரம்பரியம் எனவே – திறமை பெற முயல்வீர்…

Wednesday, May 6, 2015

நேரத்தில் சில விந்தைகள்!

நேரத்தில் சில விந்தைகள்!

ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்கள் அடங்கியுள்ளன. ஒரு நிமிடத்தில் 60 வினாடிகள் அடங்கியுள்ளன. இம்மியளவு நேரமான வினாடியை நாம் அலட்சியம் செய்கிறோம். அதை நாம் பொருட்படுத்துவதில்லை. வீணாக்குகிறோம். 

ஆனால் வினாடி, உயிர்த்துடிப்பு நிறைந்தது. வினாடிப் பொழுதில் உலகில் எத்தனையோ அதிசயங்கள் நடந்துவிடுகின்றன. 

அந்த வினாடியையும் தற்போது விஞ்ஞானிகள் எத்தனையோ ஆயிரம் பிரிவுகளாகப் பிரித்திருக்கின்றனர். கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்குதான் தெரிந்திருந்தது. 

நிமிடங்களையும், வினாடிகளையும் ஒரு பொருட்டாகக் கருதாத நாம், ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்குக்கு மதிப்புக் கொடுப்போமா? இருந்தபோதும், வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதைத் தெரிந்துகொள்வோம். 

ஆகாய விமானங்களும், மோட்டார்களும், ரெயில் களும், செல்போனும் இல்லாத காலத்துக்கு நாம் கற்பனை ரதத்தில் பயணம் செய்து பார்ப்போம். 

இந்தக் காலத்தில் நேரம் போவது தெரியவில்லை. அவ்வளவு வேகமாக வாழ்க்கை சுழல்கிறது. ஆனால் அந்தக் காலத்தில் நேரம் போவது ஒரு யுகமாகத் தோன்றியது. பண்டைய நாட்களில் நேரத்தைத் துல்லியமாகத் தெரிந்துகொள்வதற்கான அவசியம் இல்லை. அலுவல கம் அல்லது பள்ளிக்குச் செல்வதற்கு நேரமாகிவிட்டது என்று எச்சரிக்கை செய்வதற்குக் கடிகாரங்கள் பிறக்கவில்லை. 

பண்டைக் காலத்து மக்கள் நேரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்காவிட்டாலும், நேரத்தை அறிந்துகொள்ள விரும்பினர். அவர்கள் நேரத்தை அறிவதற்குச் சில உபாயங்களையும், சாதனங்களையும் உபயோகப்படுத்தினர். சூரியக் கடிகாரங்கள், மணல் கடிகாரங்கள் போன்றவை அந்தக் காலத்து மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தன.

எனினும் இந்த இயற்கைக் கடிகாரங்கள், நிமிடங்களையோ, அவற்றின் பிரிவுகளாகிய வினாடிகளையோ தெரிவிக்கவில்லை. அவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டிய தேவையும் பண்டைக் காலத்து மக்களுக்கு ஏற்படவில்லை. நிமிட முள் 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், வினாடி முள் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பும்தான் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீப காலத்தில் நாம் தெரிந்துகொண்ட, வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்தின் நுட்பங்களை அறிவோம். இவ்வளவு சிறிது நேரத்தில் என்ன நிகழ முடியும் என்ற அலட்சியமான எண்ணம் நமக்கு ஏற்படுவது இயற்கைதான். ஆனால் இந்த நுண்ணிய நேரத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடைபெறும். சில உதாரணங்களைப் பார்ப்போம். 

வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு என்ற இம்மி நேரத்தில் ஒரு ரெயில் சுமார் 2 செ.மீ. தூரம் செல்லும். அதே நேரத்தில் ஒலி சுமார் 34 செ.மீ. தூரமும், விமானம் ஒன்றரை அடியும் செல்லும். சூரியனைப் பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது அல்லவா? அது தனது சுழலும் பாதையில் சுமார் 40 அடி பயணம் செய்திருக்கும். ஒளியைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அதன் வேகம் மிக அதிகம் என்பது நமக்குத் தெரியும். வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்தில் அது 300 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்திருக்கும். 

இன்னும் ஓர் உதாரணத்தை பார்க்கலாம். நம்மைச் சுற்றிலும் எண்ணற்ற உயிர்கள் உள்ளன. அவற்றுக்குச் சிந்திக்கும் திறன் இல்லை. எனினும் வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு அவற்றுக்கு முக்கியமாக இருக்கிறது. உதாரணமாக கொசுக்கள் இந்த நேரத்தில் 6 லட்சம் தடவை தமது சிறகுகளை அடித்துக்கொள்கின்றனவாம். 

நாம் பொதுவாக அறிந்த துரிதமான நேரம், `கண்ணிமைக்கும் நேரம்’ என்பதுதான். இது உண்மையில் ஒரு வினாடியில் ஆயிரத்தில் 400 பங்குதான்!

பதில் இல்லாத கேள்வி

பதில் இல்லாத கேள்வி

சிறு வயதில் குருகுல வாசத்தை விட்டு நான் வெளியிலே வந்த போது, கோழிக்குஞ்சு முட்டையில் இருந்து வெளிவந்தது போல் தான் இருந்தேன். 

`நான் யார்’ என்பதே எனக்கு தெரியாது. விபரம் தெரியாத நிலை; பக்குவமற்ற சூழ்நிலை. 

காபி ஓட்டல்களையும், தியேட்டர்களையும் கூட ஆச்சரியமாகப் பார்க்கின்ற சூழ்நிலை. 

குருகுலம், நல்ல பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் கற்பித்தது என்றாலும், வெளி உலகத்தைக் காண விடாமல் வைத்திருந்தது. 

ஆகவே, தெளிந்த இதயத்தோடும் உலக அனுபவம் அற்ற நிலையிலும் நான் வெளியே வந்தேன். 

வந்ததிலும் தவறில்லை; நான் வாழ்ந்ததிலும் தவறில்லை; ஆனால், ஒரு முக்கியமான கேள்விக்கு விடை காண முடியாமல் தவித்தேன். 

அந்தக் கேள்வி என்ன? 

"நான் யார்?” என்பதே அது.  நான் யார்? 

அண்ட சராசரங்கள் அனைத்துமே அதைத்தான் கேட்டுக் கொள்கின்றனவாம்!

மனிதன் அறிய வேண்டிய அறிவுகளில் எல்லாம் முக்கியமான அறிவு, தன்னை அறிதலே. 

ஒவ்வொரு விலங்கும், ஓரளவுக்குத் தன்னை அறிகின்றது. 

பருந்து பாய்ந்து வந்தால், கோழி ஆத்திரப்படுகின்றது. 

நாயை கண்டதும், முயல் ஓடுகிறது. 

புலியைக் கண்டதும், மான் ஓடுகிறது. 

உயிரின் மீது உள்ள இந்த நாட்டம், ஓரளவுக்குத் தன்னைப் பற்றிய உணர்வே ஆகும். 

ஆனால், இந்த உணர்வு வேறு; தான் யார் என்று அறிந்து கொள்ளும் அறிவு வேறு. 

தாயினாலும், தகப்பனாலும் நாம் இந்த பூமிக்கு வந்து விட்டோம். ஆனால், ஏன் வந்தோம்; நம் வருகைக்கான நோக்கம் என்ன என்பது எத்தனை பேருக்கு தெரியும்? 

வந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் என்று பல பேர் மடிந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் வரவு- செலவு பார்த்திருக்கிறார்கள். 

சிலர் காதலித்து, வெற்றி காண முடியாமல் மாண்டிருக்கிறார்கள். 

சிலர் மணம் முடித்து, மக்களைப் பெற்று அவதிப்பட்டு இறந்திருக்கிறார்கள். 

சிலர், `பதவி பதவி’ என்று அலைந்து செத்து இருக்கிறார்கள். 
சிலர், `உதவி உதவி’ என்று ஓடி, ஆடி உயிரை விட்டிருக்கிறார்கள். 

இவர்களிலே, `தான் யார்’ என்பதைக் கண்டு கொண்டு உலகிற்குச் சொல்லிவிட்டு, மறைந்த ஞானிகள் எத்தனை பேர்? 

அவர்கள் பெரும் கூட்டமாக இல்லை; விரல் விட்டு எண்ணக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.

நான் யார்? 

சினிமாப் பாட்டு எழுதுகிறானே, அந்தக் கண்ணதாசன் தானா நான்? 
தொடர்கதை எழுதுகிறானே, அந்தக் கண்ணதாசன் தானா நான்? 
மதுவிலும் சிற்றின்பத்திலும் மயங்கிக் கிடப்பவன் தானா நான்? 
அரசியல் வாண வேடிக்கையில் அடிக்கடி பங்கு கொள்கிறவன் தானா நான்? 
நல்லது கெட்டது பாராமல் நடக்கும், ஒரு முரட்டு மாடுதானா நான்? 
இன்றைக்கு ஐம்பத்திரண்டு தீபாவளிகளைக் கொண்டாடி, அடுத்தது என்ன என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நான் யார்? 

நான் ஏன் பிறந்தேன்? 

நான் விரும்பிப் பிறக்கவில்லை என்றாலும், இதுவும் ஒரு நியாயமான கேள்விதான். 

இயற்கையின் நியதியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக் கும் நோக்கம் இருக்கும்போது, என் பிறப்புக்கும் ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும். 

அது எனக்குப் புரியவில்லையே தவிர, ஏதோ ஒரு லட்சியத்துக்காகவே நான் சிருஷ்டிக்கப்பட்டு இருக்கிறேன் என்பது உண்மை. 

ஒவ்வொரு ஜீவனும், ஒவ்வொரு லட்சியத்திற்காகவே படைக்கப்பட்டு இருக்கின்றன. 

ஜீவனற்ற அஃறிணைப் பொருளும் அவ்வாறே. 

தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவும், வயல்களை வளப்படுத்தவும், உணவுப் பொருள்களுக்கு உரமாகவும் படைக்கப்பட்டு இருக்கிறது. 

அந்தத் தண்ணீரில் வாழும் மீன் அழுக்கைத் தின்று நீரைச் சுத்தப்படுத்தவும், மனிதனுக்கும், பறவைகளுக்கும் ஆகாரமாகவும் படைக்கப்பட்டு இருக்கிறது. 

ஒரு காக்கையின் பிறப்புக்கு கூட ஒரு சிறிய காரணம் இருக்கிறது. 

அப்படி என்றால், என் பிறப்புக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டுமே? 

காலையில் இட்லி, தோசை; மத்தியானம் சாப்பாடு; ராத்திரியில் மீண்டும் பலகாரம்; இதற்காகவா நான் படைக்கப்பட்டேன்? 

தமிழில் எல்லாச் சொல்லுக்கும் பொருள் உண்டு என்று சூத்திரம் சொல்கிறது. அது போலவே எல்லா ஜீவனுக்கும் காரணம் உண்டு. 

நான் முன்பே சொன்ன சனத்குமாரர்- நாரதர் கதை தான். 
எல்லாம் தெரிகிறது எனக்கு; என்னைத் தெரியவில்லை. 
கண்ணாடியில் முகம் தெரிகிறது; மனம் தெரியவில்லை. 

யோசித்துப் பார்த்தால் மனம் தெரிகிறது. ஆனால் அது ஏன் படைக்கப்பட்டது என்பது தெரியவில்லை. 

ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாகப் பற்றிக் கொண்டே போனாலும் கூட, நான் படைக்கப்பட்டதன் மூலக் காரணத்தை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. 

`இப்படித்தான் இருக்கும், இதற்காகத்தான் இருக்கும்’ என்று ஒரு காரணத்தை நானே வகுத்துக் கொண்டு, என்னை நானே அறிய முற்படுகிறேன்.

இந்த ஒரு ஆன்மா, ஒரு லட்சம் ஆன்மாக்களுக்காவது வழிகாட்ட வேண்டும் என்பதற்காகவே, நான் படைக்கப்பட்டு இருக்கிறேன். 

நன்மை- தீமை புரியாமல், நியாய அநியாயம் தெரியாமல் தடுமாறும் மானிட ஜாதிக்கு, ஒரு அரிக்கேன் விளக்கையாவது ஏற்றி நான் வழிகாட்டியாக வேண்டும். 

நீதி சொல்வதில், நான் வள்ளுவனாக முடியாது. ஏன்? இன்னொரு வள்ளுவன் பிறக்கவே முடியாது. 

ஆனால், என் அனுபவம் சுட்டிக் காட்டுகிற நீதிகளில் வள்ளுவன் சொல்லாததும் இருக்கக்கூடும். 

தர்மோபதேசம் செய்வதில் நான் வடலூர் வள்ளலாராக முடியாது. ஏன், இன்னொரு வள்ளலார் இந்தத் தலைமுறையில் பிறக்கப் போவதும் கிடையாது. 

ஆனால், என் உடலில் பட்ட காயங்களில் வள்ளலார் காணாத காட்சிகளும் இருக்கக்கூடும். 

நான் நீண்ட தூரப் பிரயாணி. 

மலைச் சரிவுகளிலும் பயணம் செய்து இருக்கின்றேன். சமவெளிகளிலும் பயணம் செய்திருக்கின்றேன். 

நான் யார் என்பது தெரியாத பிரக்ஞையற்ற நிலையிலேயே, அனுபவங்களைச் சேகரித்து இருக்கிறேன். 

இந்த உலகத்தை ஓரளவு எனக்குத் தெரியும். 

நான் எழுத்தாளனாக இருக்கிறேன்; ஆகவே, வறுமையை அறிவேன். 
அரசியலில் இருந்திருக்கிறேன்; ஆகவே, அயோக்கியத்தனம் என்ன என்பது புரியும். 

கலைத்துறையில் இருந்திருக்கிறேன்; ஆகவே, ஏற்ற இறக்கங்களை அறிவேன். 

எப்படி எல்லாம் வாழக்கூடாதோ, அப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறேன். 

ஆகவே, இப்படித்தான் வாழ வேண்டும் என்று புத்தி சொல்லக்கூடிய யோக்கியதை எனக்கு உண்டு. 

முதன் முதலில் நான் நாத்திகனாக இருந்த காலங்களை எடுத்துக் கொள்கிறேன். 

இப்போது நான் நாத்திகன். 

`கடவுள் இல்லை’ என்று மிகவும் அழுத்தம் திருத்தமாக நாக்கு வலிக்கச் சொல்லும் ஒரு நாத்திகன். 
என் பின்னால் வாருங்கள்.