Showing posts with label பொது அறிவு. Show all posts
Showing posts with label பொது அறிவு. Show all posts

Monday, October 16, 2017

அறியாதவையும், தெரியாதவையும் புரிந்துகொள்வோம்.

👉தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்
👉ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி.
👉துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.
👉பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி.
👉ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.
👉சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.
👉ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
👉குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.
👉சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.
👉சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர் . அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.
👉பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.
👉நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.
👉நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க…
ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.
👉தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.
👉காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும்.
👉மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம்.
👉“லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.
👉தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம்.
👉இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம்.
👉காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.
👉குளிர் காலத்தில் குயில் கூவாது.
👉எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.
👉லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
👉கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.
👉கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.
👉யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.
👉கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம்
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.
👉1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.
👉ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ஈரிதழ்சிட்டு.
👉வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
👉ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
👉பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.
👉ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.
👉தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான்
கராத்தே வீரர் ஆனார் – புருஸ்லீ.
👉சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.
👉விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
👉சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
👉யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
👉நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
👉டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்
👉புழுக்களுக்கு தூக்கம கிடையாது.
👉நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

இழந்தது எல்லாம் திரும்பத் தா இறைவா!

இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்..

இழந்தது எவை என இறைவன் கேட்டான்..

பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்..

பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்?

கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்..

கோலம் மாறி அழகையும் இழந்தேன்..

வயதாக ஆக உடல் நலம் இழந்தேன்..

எதை என்று சொல்வேன் நான்..

இறைவன் கேட்கையில்?

எதையெல்லாம் இழந்தேனோ

அதையெல்லாம் மீண்டும் தா என்றேன்.

அழகாகச் சிரித்தான் இறைவன்.

”கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய்"..

"உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்"..

"உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்"..

"நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்"..

சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல..

தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்..

திகைத்தேன்!

இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்..

வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்..

இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்..

இறைவன் மறைந்தான்..

Monday, August 7, 2017

உங்க உயிர் நண்பனும் இப்படித்தானா? க்ராஸ் செக் பண்ணிக்கோங்க !!!

நாம ஆயிரம் பேர்கூட பழகினாலும், நமக்கு நெருக்கமான நண்பர்கள்னு சொல்லிக்க ஒண்ணு ரெண்டு பேர்தான் இருப்பாங்க. அவங்களும், அவங்களுக்கும் நமக்கும் இடையே உள்ள நட்பும் எப்படி இருக்கும்னு சொல்றேன். கேட்டு க்ராஸ் செக் பண்ணிக்கோங்க மை ப்ரெண்ட்ஸ்... 

நண்பர்கள்

'அவன் பழக்கவழக்கத்தை நிறுத்துற வரைக்கும் நீ உருப்பட மாட்ட' என உங்கள் அம்மாவோ, மனைவியோ கையில் சப்பாத்திக்கட்டையையும், துடைப்பக்கட்டையையும் வைத்துக்கொண்டு உங்கள் ஜிகிடி தோஸ்த்தின் பெயரைச் சொல்லித்தான் உங்களை மிரட்டி சத்தம் போடுவார்கள். 

நீங்க `காமெடி'னு பேப்பர்ல எழுதிக் கொடுத்தாலே, அதை படிச்சுட்டு அல்லையில் பிடிச்சுக்கிற அளவுக்கு விழுந்து விழுந்து சிரிப்பாங்க. கொஞ்ச நேரத்தில் ‘கொலை கேஸ்ல உள்ள போயிடுவோமோ?’ என, உங்களை நினைக்க வைத்து கிலி கிளப்புவார்கள். அவர்கள் ஏன் சிரிக்குறீங்க, எதுக்கு சிரிக்குறீங்கனு உங்களைச் சுற்றி உள்ள யாருக்குமே தெரியாது. ஏன், உங்களுக்கே சரியா தெரியாதுன்னா பார்த்துக்கோங்களேன்.

உங்களுக்கு போர் அடிக்கும்போதெல்லாம், அவரைத்தான் குனிய வெச்சு முதுகுல கும்மு கும்முனு கும்மி டைம்பாஸ் பண்ணலாம்னு தோணும். அவங்க தோளைப் பிடிச்சு இழுத்து, சங்கை கடிக்கிறது நமக்கு சந்தோஷத்தைத் தரும். மல்லாக்க படுக்கப்போட்டு வயித்துலேயே வங்கு வங்குனு மிதிக்கிறது ஒருவித மகிழ்ச்சியைத் தரும்.

நீங்கள் ஆஸ்பத்திரியில் முடியாமல் கிடக்கும்போது உங்களுக்கு ஒரே ஒரு எலுமிச்சைப்பழத்தை வாங்கிக் கொடுத்துவிட்டு, நீங்கள் வாங்கி வைத்திருக்கும் நாலைந்து சாத்துக்குடிகளை ஜூஸ் போட்டுக் குடித்துவிட்டு ‘வரேன்டா’ எனக் கிளம்புவார்கள். அந்த எலுமிச்சம்பழத்தையும் ஏதாவது கோயிலில் இருந்து ஆட்டையைப் போட்டிருப்பார்கள். தொட்டுப்பார்த்தால் டேபிள் டென்னிஸ் பந்து போல் அவ்வளவு கனமாக இருக்கும்.

அவர்கள் நன்றாக இருந்தால் உங்களுக்கு வயிறு கபகபனு எரிந்து வாய் வழியாக புகை வரும். அதே அவர்கள் கஷ்டப்படுறதைப் பார்க்கும்போது, நமது கண்கள் கலங்கி, நாடி நரம்பு தெறித்து, நாக்குபூச்சி வெளியே வரும். நட்புடா... நண்பேன்டா...

உங்கள் குடும்பத்தை அவரும், அவர் குடும்பத்தை நீங்களும் மாறி மாறி ஃப்ளோவில் ஏழெட்டு தலைமுறையை தோண்டி எடுத்து கிழி கிழி என கிழிப்பீர்கள். ஆனால், அவர்களை நேரில் பார்க்கும்போது ‘அங்கிள்... ஆன்ட்டி...’ என மரியாதையோடு மட்டையாய் மடங்குவீர்கள். அது நடிப்பு இல்ல, நிஜம். 

ஒருவருக்கு ஒருவர் என்ன நினைக்கிறீர்கள் என்பதை மூஞ்சியைப் பார்த்தே புரிந்துகொள்வீர்கள். அதிலும் நீங்கள் பேசுவது பல சமயங்களில் உங்களுக்கு மட்டுமே புரியும், மற்றவர்கள் தலையைப் பிய்த்துகொண்டு விட்டத்தைப் பார்த்து உட்கார்ந்துவிடுவார்கள். அடிக்கடி இருவர் மட்டும் கூட்டத்தில் இருந்து கழன்று போய் சொந்த கதை, சோகக் கதை எல்லாம் பேசி கண்ணீர் மல்க கதறிக் கொண்டிருப்பீர்கள்

நீங்கள் உங்கள் நண்பரையும், உங்கள் நண்பர் உங்களையும் வெறித்தனமாய் கலாய்த்து கதறவிடுவீர்கள். பெரும்பாலும், உங்களுக்கு உங்கள் நண்பர்தான் பட்டப்பெயர் வைத்திருப்பார். ஆனால், வேறு யாராவது உங்களை கலாய்த்தால், கலாய்ப்பவருக்கு கும்பாபிஷேகம் உறுதி. 

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

கண்ணன் - குசேலன் முதல் ரஜினி கமல் வரை நட்புக்கு இலக்கணமான ஐந்து ஜோடிகள்! #HappyFriendshipDay
நட்புக்கு இலக்கணமான பல்வேறு நபர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்டவர்கள் சதாப்தங்களாக நட்பை மனநிறைவுடன் போற்றி வருகிறார்கள். அவர்களுள் சிலர்... Friendship Day Special Article
நீங்க ஒண்ணுமண்ணா கட்டிப்பிடிச்சு பாசமழை பொழிவதைப் பார்த்து இந்தச் சமுதாயம் ‘அவிய்ங்களா நீங்க?, நீங்க தோஸ்தா இல்லை தோஸ்தானாவா?’ என எக்குத்தப்பாய் சந்தேகப்படும். இது வெறும் நட்புதான் என சூடம் அடித்து சத்தியம் செய்தாலும் சில பக்கிகள் நம்பாது. நம்புங்கய்யா... நட்புய்யா... நேத்தே நண்பர்கள் தினம் முடிஞ்சுட்டாலும் இன்னைக்கும் `நண்பர்கள் தினம் வாழ்த்துகள்' அனுப்புற குழந்தைய்யா அவங்க...

Wednesday, July 12, 2017

உடல் எடையை குறைக்க

இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சனை. அதனை கட்டுப்படுத்த பல கடுமையான டயட்டுக்களில் பலர் ஈடுபடுகின்றனர். ஏனெனில் கடுமையான டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் தான் காரணம்.

அவ்வாறு கடுமையான டயட்டை மேற்கொள்ளும் போது, பசியுடன் பல உணவுகளை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அதனால் என்ன பயன்? காலப்போக்கில் மெதுவாக உடல் எடை மறுபடியும் கூடி விடும். ஆகவே உடல் எடையை மெதுவாக குறைக்க முயல வேண்டும்.

மேலும் வல்லுனர்களும் கடுமையான டயட் முறையை கையாளாமல், எளிய முறைகளின் மூலம் உடல் எடையை குறைக்க முயலுமாறு கூறுகின்றனர். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது தான்.

சரி, இப்போது உடல் எடையை குறைக்க கடுமையான டயட்டை பின்பற்றுவதை விட, கீழ்கூறிய எளிய வலியில்லா வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

  தினமும் காலை உணவை உண்ணுங்கள்:-

காலை உணவை தவிர்த்தால் கலோரிகளை எரிக்கலாம் என்று பலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு தவிர்க்கும் போது ஏற்படும் பசியானது, மற்ற வேளைகளில் அதிகமாக உண்ணத் தூண்டும். காலை உணவை தவிர்ப்பவர்களை விட அதனை உண்ணுபவர்களுக்கே பி.எம்.ஐ குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. மேலும் பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ அவர்களால் தான் நன்றாக வேலை செய்ய முடியும். ஆகவே ஒரு கிண்ணம் நிறைய ஓட்ஸை நிறைத்து, அதில் பழங்கள் மற்றும் குறைவான கொழுப்பினை கொண்ட பால் பொருட்களை சேர்த்து காலையில் உண்டால் ஆரோக்கியமான நாள் தொடங்கும்.

உணவை நன்றாக மென்று உண்ணுங்கள்:-

சாப்பிடுவதற்கு 20 நிமிடம் என்று ஒரு நேரத்தை ஒதுக்கி மெதுவாக உண்ணுங்கள். இது டயட் மூலம் இல்லாமல் உடல் எடையை குறைக்க முதன்மையான வழியாகும். ஒவ்வொரு வாய் உணவையும் நிதானமாக மென்று உண்ணுங்கள்.

அதிகமாக தூங்கி எடையை குறையுங்கள்:-

தினமும் இரவு ஒரு மணிநேரம் கூடுதலாக தூங்கினால், ஒரு வருடத்தில் 7 கிலோ வரை உடல் எடை குறையும் என்று மிஷிகன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். இவரின் ஆராய்ச்சி படி, தூங்கும் போது உடல் எந்த வேளையில் ஈடுபடாமல் இருப்பதால், சுலபமாக 6 சதவீதம் வரை கலோரிகளை எரிக்கலாம்.

அதிக அளவில் காய்கறிகளை உண்ணுங்கள்:-

ஒவ்வொரு நாள் இரவும் ஒரே ஒரு காய்கறியை மட்டும் உண்ணுவதற்கு பதில் மூன்று காய்கறிகளை கலந்து உண்ணுங்கள். அதிக வகை இருந்தால் அதிகமாக உண்ணத் தூண்டும். அதனால் அதிகமான பழங்களையும், காய்கறிகளையும் உண்டு உடல் எடையை குறைக்கலாம்.

சூப் உள்ளே வரும் போது, உடல் எடை வெளியேறும்:-

ஒவ்வொரு உணவிற்கு முன்பும் சூப் குடியுங்கள். இது பசியை ஆற்றி குறைவாக உண்ண வைக்கும். கெட்டியான சூப்பை தவிர்க்கவும். ஏனெனில் அதில் அதிக கொழுப்பும், கலோரிகளும் அடங்கியிருக்கும்.

அளவு சிறியதாக உள்ள பழைய ஆடைகளின் மீது பார்வையை பதியுங்கள்:-

உங்களுக்கு பிடித்த சிறிய அளவை கொண்ட பழைய ஆடைகளை கண் பார்வையில் படும் படி மாட்டி வைத்து, அதனை தினமும் பாருங்கள். இவ்வாறு சிறிய அளவுள்ள ஆடையை மனதில் வைத்து பாடுபட்டால், அதை அணியும் அளவிற்கு எடையை குறைக்கலாம்.

பிட்சா உண்டாலும் ஆரோக்கியம் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்:-

பிட்சா சாப்பிடும் போது மாமிசத்திற்கு பதில் காய்கறிகளை தேர்வு செய்யுங்கள். இதனாலும் கூட 100 கலோரிகளை எரிக்க முடியும்.

சர்க்கரை பயன்பாட்டை குறைக்கவும்:-

சோடா போன்ற சர்க்கரை கலந்த பானங்களை பருகுவதற்கு பதிலாக, தண்ணீர் அல்லது கலோரிகளற்ற பழச்சாறுகளை பருகுங்கள். இதனால் ஒரு 10 டீஸ்பூன் அளவிலான சர்க்கரையை தவிர்க்கலாம்.

நீளமான மெல்லிய டம்ளரை பயன்படுத்துங்கள்:-

குட்டையான அகலமான டம்ளரை பயன்படுத்துவதற்கு பதிலாக, நீளமான மெல்லிய டம்ளரை பயன்படுத்துங்கள். இது டயட் இருக்காமல், உங்கள் கலோரிகளை குறைக்க துணை புரியும். இதனை பின்பற்றினால் ஜூஸ், சோடா, ஒயின் அல்லது மற்ற பானங்கள் பருகும் அளவை 25%-30% வரை குறைக்கலாம்.

மதுபானம் குடிப்பதை குறைக்கவும்:

மதுபானத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தை விட, கலோரிகள் தான் அதிகமாக உள்ளது. அது ஒருவரது சுய கட்டுப்பாட்டை இழக்க வைப்பதால் சிப்ஸ், நட்ஸ் மற்றும் இதர நொறுக்குத் தீனியை அதிக அளவில் உட்கொள்ள வைக்கும்.

க்ரீன் டீ பருகுங்கள்:-

தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ பருகுவதால் கூட உடல் எடை குறையும்.

யோகாவை தேர்ந்தெடுங்கள்:-

யோகா செய்யும் பெண்கள், மற்றவர்களை விட குறைந்த எடையுடன் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. உடல் எடை குறைவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லையா? சீரான முறையில் யோகா செய்பவர்களுக்கு சாப்பிடுவதில் ஒரு மன கட்டுப்பாடு ஏற்படும். உதாரணத்திற்கு, அதிக உணவு இருக்கும் ஒரு உணவகத்திற்கு சென்றாலும் கூட, அளவாக தான் உண்ணுவார்கள். ஏனெனில் யோகாவால் கிடைக்கும் அமைதி, உணவு உண்ணுவதில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும்.

வீட்டில் உண்ணுங்கள்:-

வாரம் ஐந்து முறையாவது வீட்டில் சமைத்து உண்ணுங்கள். நல்லபடியாக உடல் எடை குறைப்பவர்களின் இரகசியத்தில் இதுவும் ஒன்று என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதை பற்றி யோசிப்பதை விட சமைப்பதே சுலபம்.

உண்ணும் போது சிறிய இடைவேளை தேவை:-

சிலர் இயற்கையாகவே ஒரு வாய் உணவிற்கும் அடுத்த வாய் உணவிற்கும் சிறிய இடைவேளை விடாமல் சாப்பிடுவார்கள். இந்த இடைவேளையில் பொறுமையாக இருங்கள், வேகமாக அடுத்த வாய் உணவை திணிக்காதீர்கள். பேசி கொண்டே பொறுமையாக தட்டை காலி செய்யுங்கள். இது வயிற்றை அடைக்காமல் பசியை போக்கும். பலர் இதை தவறவிடுவார்கள்.

வீரியமிக்க புதினா சூயிங் கம்மை மெல்லுங்கள்:-

நொறுக்குத் தீனி உண்ண தூண்டும் போது, சர்க்கரை இல்லாத வீரியம் அதிகமுள்ள சூயிங் கம்மை மெல்லுங்கள். வேலை முடிந்த நேரம், பார்ட்டிக்கு செல்லும் நேரம், தொலைகாட்சி பார்க்கும் நேரம் அல்லது இணையதளத்தில் உலாவும் நேரம் போன்றவைகள் எல்லாம் கணக்கில்லாமல் நொறுக்குத் தீனியை உண்ணத் தூண்டும் நேரமாகும். அதிலும் பிடித்த சுவையுள்ள சூயிங் கம்மை உண்ணுவதால் மற்ற நொறுக்குத் தீனிகளை மறப்பீர்கள்.

உணவு தட்டின் அளவை குறைக்கவும்:-

உணவு தட்டை 12 இன்ச்-க்கு பதிலாக 10 இன்ச்சாக மாற்றுங்கள். தானாகவே குறைத்து உண்ண ஆரம்பித்து விடுவீர்கள். தட்டின் அளவு கூட கூட உண்ணும் உணவின் அளவும் அதிகரிக்கும் என்று கார்னெல் ப்ரையன் வான்சிக் கூறியுள்ளார்.

உண்ணும் அளவை சற்று குறைக்கவும்:-

வேறு ஒன்றுமே செய்ய தோன்றவில்லையா? பேசாமல் நீங்கள் உண்ணும் அளவை 10%-20% வரை குறையுங்கள், உடல் எடையும் குறையும். வீட்டிலும் சரி, உணவகத்திலும் சரி நம் தேவைக்கு அதிகமாகவே பரிமாறப்படுகிறது. ஆகவே உண்ணும் உணவின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க அளந்து உண்ணுங்கள்.

உணவை அதிகமாக சமைக்காதீர்கள்:-

உணவை நீண்ட நேரம் சமைத்தால், அதிலுள்ள ஊட்டச்சத்து அனைத்தும் வெளியேறிவிடும். போதுமான ஊட்டச்சத்து இல்லாத போது, உண்ட திருப்தி உங்களுக்கு ஏற்படாது. அதனால் மீண்டும் உண்ணத் தூண்டும். ஆகவே முடிந்த வரை பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்களை உண்ணுங்கள். அவித்த வேக வைத்த காய்கறிகள் மற்றும் மாமிசங்களை உட்கொள்ளுங்கள். குறிப்பாக மைக்ரோ ஓவனில் சமைப்பதை தவிர்க்கவும்.

உணவிற்கு முன் பழங்கள்:-

உணவை உண்ணுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு பழங்களை உண்ணுங்கள். இதனால் பழங்கள் வேகமாக செரிமானம் ஆகும். வெறும் வயிற்றில் பழங்களை உண்டால், உடலின் நச்சுத்தன்மை நீங்கி, அதிக ஆற்றல் கிடைத்து உடல் எடை குறையும்.

தக்காளி சாஸை பயன்படுத்துங்கள்:-

கொழுப்புச்சத்து உள்ள மற்ற சாஸ்களை விட, தக்காளி சாஸில் கலோரிகளின் அளவு குறைவாக உள்ளது. இருப்பினும் அதனை அளவாக பயன்படுத்துங்கள்.

மாமிசத்தை குறைக்கவும்:

அதிக அளவில் சைவ உணவை உட்கொண்டால், அது உடல் எடை குறைய உதவி புரியும். அசைவ உணவை உண்ணுபவர்களை விட, சைவ உணவை உண்ணுபவர்கள் தான் வேகமாக ஒல்லியாவார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பயறு வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு காரணம் அதில் அடங்கியுள்ள நார்ச்சத்து.

100 கலோரிகளை எரிக்கவும்:-

தினமும் 100 கலோரிகளை எரித்தால், எந்தவித டயட் முறையை பின்பற்றாமல் ஒரு வருடத்தில் 5 கிலோ வரை குறைக்கலாம். இந்த நடவடிக்கைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றுங்கள்: 20 நிமிடங்களுக்கு 1 மைல் தூர நடை, 20 நிமிடங்களுக்கு தோட்டத்தில் களை எடுத்தல் அல்லது செடிகள் நடுதல், 20 நிமிடங்களுக்கு புல் தரையை ஒழுங்குபடுத்துதல், 20 நிமிடங்களுக்கு வீட்டை சுத்தப்படுத்துதல் அல்லது 10 நிமிடங்களுக்கு ஓடுதல்.

இரவு 8 மணிக்கு மேல் உண்ணாதீர்கள்:-

இரவு உணவை 8 மணிக்கு முன்பே உண்ணுங்கள். அதனால் உணவு நேரத்திற்கு முன்பு நொறுக்குத் தீனியை நொறுக்கமாட்டீர்கள். இதனை பின்பற்ற கஷ்டமாக இருந்தால், இரவு உணவை முடித்ததும் மூலிகை தேநீர் பருகுங்கள் அல்லது பற்களை துலக்குங்கள். இது கண்டதை உண்ண தூண்டாது.

உணவு ஏடு தயார் செய்துக் கொள்ளுங்கள்:-

தினமும் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை நேர்மையாக எழுத ஆரம்பியுங்கள். இது தினமும் எவ்வளவு உண்ணுகிறீர்கள் என்பதை தெளிவாக எடுத்துரைக்கும். நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களில் இதுவும் ஒன்று. இதை பலர் செய்வதற்கு அலுத்து கொள்வதும் உண்டு. அதற்கு காரணம் இதனை அவர்கள் ஒரு கடினமான வேலையாக பார்ப்பதால் தான். ஆனால் இதற்கு சில நிமிடங்களே ஆகும்.

கொண்டாட்டம்:-

சோடா குடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டீர்களா? அதிகமாக உண்ணும் பழக்கத்தை கைவிட்டு விட்டீர்களா? உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். இதனால் உடல் எடையை குறைக்கும் பணியில் வெற்றிப் பெற போவது உறுதி.

புத்திசாலித்தனம்

ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தார்.அவரிடம் இருந்த ஒரு பெரிய கப்பல் பழுதாகி விட்டது.ஊரில் உள்ள பெரிய பெரிய மெக்கானிக் எல்லாம் வரவழைத்து கப்பலின் இஞ்சினை சரி செய்ய சொன்னார் ஆனால் யாராலும் இஞ்சினில் என்ன பழுது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு வயதான மெக்கானிக் தான் அதை பழுது பார்த்து தருவதாக சொன்னார்.சரி என்று அவரும் ஒப்புக் கொண்டார்.மெக்கானிக் பெரிய பையில் பழுது பார்க்கும் பொருட்கள் எல்லாம் வைத்து இருந்தார்.கப்பல் வியாபாரிக்கு இவர் மேல் நம்பிக்கை வந்து விட்டது.

அந்த வயதான மெக்கானிக் இஞ்சினை நன்றாக நாலா பக்கமும் சுற்றி வந்து பார்த்தார் .பிறகு தன் பையில் இருந்து சுத்தியை எடுத்து ஒரு இடத்தில் ஓங்கி அடித்தார்.இஞ்சினை ஸ்டார்ட் பண்ணி பார்த்தார் அதுவும் வேளை செய்ய ஆரம்பித்துவிட்டது.

கப்பல் வியாபரியிடம் அந்த மெக்கானிக் நாளை என் கடையில் வேலை செய்யும் பையனிடம் பில் கொடுத்து அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

அடுத்தநாள் ஒரு பையன் பில் எடுத்து வந்து நீட்டினான்.அதை பார்த்த கப்பல் வியாபாரி அதிர்ச்சி அடைந்தார்.அதில் 1 லட்சம் ரூபாய் என்று போட்டு இருந்தது, அவர் அந்த பையனிடம் தெளிவாக பில் போட்டு கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அடுத்த நாள் வேறு ஒரு பில்லுடன் வந்து இருந்தான்,அதில்

1-சுத்தியலால் அடித்ததற்கு 5 ரூபாய்.
2-எங்கு அடிக்க வேண்டும் என்று கண்டுபிடித்தற்கு 99,995 ரூபாய்

என்று எழுதி இருந்தது.

மண்டையில மூளை இருந்தா மட்டும் போதாதுங்க அதை எப்படி பயன்படுத்தனும்னு தெரிஞ்சிருக்கனும்…

நல்ல குடும்பத்திற்கு வேண்டிய 10 லட்சணங்கள் :

1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.

2. கணவன் – மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியை குலைக்கும்.

5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது, பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம், சிலர் குறைவாக சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.

6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம்தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் அங்கே தெய்வீக உறவு இருக்காது.

7. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகிய மூன்றையும் கடைப்பிடித்து வர வேண்டும்.

8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிவகுக்கும்.

9. தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும்.

மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை!!!

அந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.

இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.
வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது.

எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.

ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.

அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது..

காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன. அவரிடம் குருவி வழி கேட்டது.

“எனக்கு முழு விபரம் தெரியாது. தெரிந்த வரை சொல்கிறேன்.
அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர்.

ஒரேயோரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது. குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது.

குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,
அந்த வழியே ஒரு பாம்பு வந்தது. பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது.

பாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன்.

பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய். உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது.

இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது.

பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.

இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது.

அவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள்.

குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.

முடிவாக, அதோ….கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.

வந்து விட்டோம்…..வந்தே விட்டோம்……இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.

குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

ஆனால், இதென்ன….ஏன் என்னால் பறக்க முடியவில்லை. ஐயோ, என் உடம்பெல்லாம் கனக்கிறதே. கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று கதறியது.

மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது. பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.

குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம்.

ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன்.
அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது. அந்தக் குருவி.

இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது.

“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.

குடும்பத்துடன் வெளியே செல்வது, பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது, பிடித்த புத்தகம் படிப்பது, பிடித்த படம் பார்ப்பது, பிடித்த கோவிலுக்கு போவது, பிடித்த உடை உடுத்துவது, பிடித்த உணவு உண்பது என்று எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.

கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது.

எல்லா துக்கங்களும் முடிவுக்கு வரும்

சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ”மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது” என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.

அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.
காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.

மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. ‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை.

சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான். கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.

‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ”நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார். இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான்.

‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.

கடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான், நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் தீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார்.

Friday, March 10, 2017

ருசியாக இருக்கும்


1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்

* 2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.

* 3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்

. * 4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.

* 5. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது

. * 6. தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.

* 7. பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.

* 8. வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.

* 9. அடைக்க அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.

* 10. இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ”D” யும் கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.

* 11. பழய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.

*12. மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.

*13. சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.

* 14. பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.

* 15. உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.

* 16. ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.

* 17. துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.

* 18. நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்

. * 19. தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.

*20. ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.

* 21. நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்

. * 22. மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.

* 23. பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.

* 24. நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி

. * 25. தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.

* 26. மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்

. * 27. பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.

* 28. மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்

. * 29. நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்

. * 30. குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.

* 31. நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.

* 32. தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.

*33. எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

* 34. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.

* 35. அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம் காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.

* 36. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.

* 37. தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.

* 38. வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்

. * 39. பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்

. * 40. அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும்

. * 41. இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.

* 42. பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி – தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

* 43. மைதாவை நீர் விட்டுப் பிசையாது அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, சுவைக்கேற்ப உப்பும், நெய்யும் கூட்டிப் பிசைந்து முறுக்குப் பிழியலாம். கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

* 44. எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.

* 45. ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.

* 46. பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம்.

* 47. கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.

*48. காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.

* 49. மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.

* 50. அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும். 

Friday, February 3, 2017

#வேலைக்கு_போகும்_பெண்ணா? #நீங்க! அப்ப‍ இத கண்டிப்பா படிக்க‍ணும் நீங்க !♥

♥இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப் பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்ச னைகள் வராமல் இருக்க வேண்டுமெனில் அவர்களிடம் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பழக்கத்தின் எல்லை எது வரை இருக்கலாம்??
இதோ உங்களுக்கு உதவ சில பயனுள்ள #ஆலோசனைகள்!
♥ நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வுகளைத் தூண்டாமல் இருப்பது நல்லது. மாடர்ன் ஆக உடுத்தினாலும் நேர்த்தியாக உடுத்துங்கள்.
♥முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம்முடைய பர்சனல் விஷயங்களை பங்கு போடாதீர்கள். அங்கேதான் ஆரம்பிக்கிறது பல பிரச்சனைகள்.
♥சொந்த குடும்ப விஷய்ங்களுக்கு உடன் வேலைபார்க்கும் ஆண்களிடம் ஐடியாக்களைக் கேட்காதீர்கள், அட்வாண்டேஜ் எடுக்கமுன் வருவார்கள்!
♥உடன் வேலை செய்தாலும் பர்சனல் செல் நம்பர்களை யாருக்கும் தராதீர்கள். நம்பிக்கைக்குரிய நபர்களை தவிர.
சில நேரங்களில் உயர் அதிகாரிகளே தொல்லைகள் தருவார்கள்.
♥ஆண் நண்பர்களிடம் கை குலுக்குவது தவறல்ல, அதற்காக எல்லா வற்றுக்கும் கைக்கொடுப்பது , தொட்டுப் பேசுவது கூடாது.
♥உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.
அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே, மற்ற உங்களது தனிப்பட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சனைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.
♥நட்பு ரீதியாக புன்னகைக்கலாம், ஆனால் காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.
♥ஒரு ஆணிடம் கை குலுக்குதல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லுதல் இவையெல்லாம் நம் அக்கம் பக்கத்தினரால் கூர்மையாக கண்காணிக்கப்படும் விஷயங்கள் என்பதை மனசில் வைத்துக்கொள்ளுங்கள்!
♥ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு , மனமெச்சூரிட்டி போன்றவற்றை பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம்.
♥உடன் வேலை பார்க்கும் ஆண் தவறாக நடக்க முயற்சிக்கும்போது பெண்கள் கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இல்லை யெனில் அதுவே ஆண்களுக்கு மிகப்பெரிய பலம் ஆகிவிடும்.
‘நாம எது செஞ்சாலும் வெளில கமிச்சுக்காம அமைதியாத்தேன் இருக்காங்க ! மத்த விஷயத்தி லேயும் நமக்கு ஒத்துழைப்பாங்க!’ என்று சம்பத்தப்பட்ட ஆண் நினைத்து விடுவான்.
இதனால் பிரச்சனை பூதாகரமாகும்போது பெண்கள் வேலைக்கு போகும் உரிமையை வீட்டில் இழக்கிறார்கள்.
♥பெண்களுக்கு சாதகமாக இப்போது நிறைய சட்டங்கள் உள்ளன. பெண்கள் அவற்றை தெரிந்து கொள்வது அவர்க ளுக்கு அதிக பாதுகாப்பு ஏற்படுத்தித் தரும்!.
♥தன்னிடம் அன்பாக பேசக் கூடியவர்கள் எல்லோருமே தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றப் போகிறவர்க்ள் என்ற எண்ணம் பெண்களுக்கு கூடாது.
♥வேலை செய்யும் இடத்தில் ஆண் பெண் உடல்ரீதி யான ஈர்ப்புகளுக்கு ஆளானால் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் நிஜமாகவே விபிரீதமாக இருக்கும்.
♥ஆபீஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலில் பேசாதீர்கள். இது கேட்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.
♥ஜல் ஜல் என்று அதிக மணியோசை கொண்ட கொலுசை தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடும் கண்ணாடி வளையல்களும் வேண்டாமே!
♥உங்கள் ஆடை பற்றி (அ) உங்களுக்கு உள்ள திறமை பற்றி பாராட்டும் போது ‘நன்றி’ என்று ஸ்டிரெய்ட்டாக சொல்லுங்கள். தேவையில்லாமல் வெட்கப்படுவதை தவிருங்கள்.
யாரிடம் பேசினாலும் கண்ணைப்பார்த்துப் பேசுங்கள், அவர்களையும் அப்படியே பேச அனுமதியுங்கள்.
♥அரட்டையில் , ஜோக்ஸ் என்ற பேரில் விரச பேச்சுகளை அனுமதிக்காதீர்கள்.
எதற்காகவும் எந்த பிரச்சனைக்காகவும் அழாதீர்கள், அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பி விடுகிறார்கள்.
♥தேவையே இல்லாமல் எதற்கெடுத் தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள்.
♥விழா, விசேஷம் தவிர உடன்வேலை பார்க்கும் ஆணை தேவையில்லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள், நீங்களும் செல்லாதீர்கள்.
♥ஆண்கள் தனது மனைவியை உங்களோடு ஒப்பீட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.
♥ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும் கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
♥அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணுடம் பழகும் போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறை ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
♥ஆணோ பெண்ணோ நீங்கள் எல்லோரும் நல்லவர்களே. ஆனால் சந்தர்பபம் சில நேரங்களில் நமக்குத்தெரியாமலேயே தவறு நடக்க காரணமாகிவிடுகிது.

Thursday, February 2, 2017

அம்மா....#பெண்....!!

#அம்மா....♥
♥நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.
என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன்.
கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் திறந்து பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.
♥என் வயிற்றில் இருந்து ஏதோ கயிறு போல் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றில் தொங்கியபடி நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்.
இங்கே எந்த சப்தமும் கேட்கவில்லை. நீண்ட காலமாக ஒரே ஒரு சப்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.
அது இதயத்துடிப்பு.
♥அவ்வப்பொழுது என்னை யாரோ தொடுவது போலவும் என்னுடன் பேசுவது போலவும் உணர்கிறேன்.
அந்தத் தொடுதலும் பேச்சும் மிக மென்மையாக இதமாக இருக்கிறது.
அதற்கு பதில் பேசும் விதமாக நிறைய முறை கை கால்களை அசைத்திருக்கிறேன்.
கூடவே அவ்வப்பொழுது இன்னொரு குரலும் கேட்கும். ஆனால் அது கொஞ்சம் கரடு முரடாக இருக்கிறது.
♥எத்தனை விதமான சப்தங்கள் கேட்டாலும் எப்போதும் மாறாதிருப்பது அந்த இதயத்துடிப்பின் சப்தம் தான்.
அதுயாரிடம் இருந்து வருகிறது என்பதை நிச்சயம் ஒருநாள் பார்த்து விட வேண்டும்.
♥என்னவோ தெரியவில்லை... இரண்டு மூன்று நாட்களாக இங்கிருந்து வெளியே சென்று விட வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. கை கால்களை உதைத்து எவ்வளவோ முயற்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.
இறுதியாக ஒரு நாள் நான் இருந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாறி
எங்கோ நகரத் தொடங்கியது.
நான் தலை கீழாக மாறிவிட்டேன்.
♥அந்த இதயத்துடிப்பின் சத்தம் மெல்ல மெல்லக் குறைகிறது.
இந்த உலகத்தை விட்டு வேறெங்கோ செல்கிறேனோ என்று பயமாக இருக்கிறது.
எனக்கு மென்மையாகக் கேட்ட அந்தக் குரல் இப்போது வலியில் கதறுகிறது.
ஏனோ எனக்கு கஷ்டமாக இருக்கிறது. எல்லாம் என்னால் வந்தது. நான் தான் கை கால்களை உதைத்து ஏதோ செய்துவிட்டேன்.
♥திடீரென நான் இருந்த தண்ணீர் தொட்டியில் ஓட்டை விழுந்து விட்டது.
சோதனைக்கு மேல் சோதனை. தண்ணீரோடு அடித்துக்கொண்டு எங்கோ செல்கிறேன்.
இடையில் எங்கோ சிக்கிக்கொள்கிறேன்.
யாரோ என் தலையைப் பிடித்து இழுக்கிறார்கள்.
அதே நேரத்தில் அந்தக் குரலும் உயிர் போவதுபோல் கதறுகிறது. எனக்கும் வலிக்கிறது.
♥ஒரு வழியாக வெளியே வந்து விட்டேன். எனக்கும் அந்த உலகத்துக்கும் இருந்த கடைசித் தொடர்பான அந்தக் கயிறையும் வெட்டி விட்டார்கள்.
இவ்வளவு நாளும் நான் கேட்டு வந்த இதயத்துடிப்பும் முற்றிலும் நின்றுவிட்டது.
கதறிய அந்த குரலும் கேட்கவில்லை. அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
♥முதன் முறையாக வாய்விட்டு அழுகிறேன்.
ஆனால் என்னைச் சுற்றி எல்லோரும் சிரிக்கிறார்கள்.
அப்போதே தெரிந்து விட்டது இது ஒரு மானங்கெட்ட உலகம் என்று.
♥தண்ணீரில் குளிக்க வைக்கிறார்கள். ஆனாலும் அழுகிறேன். ஏதோ துணியில் சுற்றி எல்லோருக்கும் என்னைக் காட்டுகிறார்கள்.
என் இடுப்புக்கு கீழ் எதையோ பார்த்துச் சிரிக்கிறார்கள். எனக்குக் கோபமாய் வருகிறது. ஆனாலும் அழுகிறேன். அவர்கள் மட்டும் என்னைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து ஈ... என்று இளிக்கிறார்கள்.
♥அந்த இதயத்துடிப்பும் மென்மையான பேச்சும் எனக்குக் கேட்கவில்லை.
அதனால் இந்த உலகம் எனக்கு பிடிக்கவில்லை.
என்னைக் கொண்டு சென்று யார் பக்கத்திலோ படுக்க வைத்தார்கள்.
நான் அழுவதை நிறுத்தி விட்டேன். காரணம் அந்த இதயத்துடிப்பு இப்போது கேட்க ஆரம்பித்துவிட்டது.
♥கைகளால் என்னைத் தடவினார்கள். ஆம் என் உலகத்தில் இருந்தபோது உணர்ந்த அதே தொடுதல்.
அவர் மாதிரியே இருக்கான் இல்ல... என்று பேசிய போது அந்த குரலின் அதே மென்மையை உணர்ந்தேன்.
அது யாரென்று பார்த்து விடவேண்டும் என்று துடிக்கிறேன்.
♥ஆனால் கை கால்களை மட்டுமே அசைக்க முடிகிறது. திரும்ப முடியவில்லை.
எப்படியாவது பார்க்க வேண்டும் என்று நினைக்கும் போது இரண்டு கைகள்
என்னைத் தூக்குகிறது.
தன் முகத்துக்கு நேராய்க் கொண்டு போய் வைக்கிறது,.
♥மரணம் வரை சென்று வந்த துயரத்திற்கு நடுவே மகிழ்ச்சி நிறைந்த புன்னகை அந்த முகத்தில்.
அந்த முகத்தைப் பார்த்த போது எனக்குள் ஏற்பட்ட சந்தோஷத்தை, பரவசத்தை விவரிக்க எந்த மொழியிலும் வார்த்தைகளில்லை.
அது என் தாய் என்பதை உணர்ந்து கொண்டேன்.
♥ஆனாலும் ஏனோ அழுது கொண்டே இருக்கிறேன்.
நான் அழுத போதும் அம்மா மட்டும் சிரித்துக் கொண்டே இருக்கிறாள்.
எனக்குக் கோபமாய் வந்தது. அப்போது எனக்குத் தெரிய வில்லை...
என் மொத்த வாழ் நாளில் நான் அழுவதைப் பார்த்து என் அம்மா சிரிக்கும் ஒரே ஒரு நாள் அது தான் என்று....

♥அழகிய ஆடை உடுத்தி, தலைமுழுதும் பூக்கள் சூடி, சிறு வெட்கம் கொண்டு புன்னகை பூக்கும் போது அழகாய் தெரிவாள்...
♥அறவே பேசாமல் அமைதி காக்கும் போதும் அழகாய் தெரிகிறாள்...
♥தன்னை பற்றி பேசும் போது மண்ணை பார்க்கும் போது அழகாய் தெரிகிறாள்...
♥பேசி பழகிய பின் பாசம் கொள்ளும் போது அழகாய் தெரிகிறாள்..
♥சிறு கோவம், சிறு முனகல் கொள்ளும் போது அழகாய் தெரிகிறாள்..
♥அவள் மணமுடிக்கும் போது தாயை பார்த்து சிறு கண்ணிர் துளிவிடும் போது அழகாய் தெரிகிறாள்.....
♥பார்ப்பதற்கு நம் அன்னை போல தெரியும் போது அழகாய் தெரிகிறாள்..
♥அவள் அன்னையாகும் போது இன்னும் அழகாய் தெரிகிறாள்..
♥குழந்தையை ஏந்தி பாசம் காண்பிக்கும் போது அழகாய் தெரிகிறாள்..
♥குழந்தைக்கும் மணம் முடித்து, குழந்தையை வேறு வீட்டுக்கு அனுப்பும் போது ஏனோ அழுகிறாள்...
♥அவள் அவளின் குழந்தையை கண்டு சிரித்து மகிழ்கிறாள்.....
♥பெண்மையை போற்றுவோம்... பெண்ணின் தாய்மையை வாழ்த்துவோம்...

#மகிழ்ச்சியைக் #கொடுக்கும் #மச்சங்கள்!

💁 ♥இறைவனின் படைப்புகளில் மிகப்பெரிய அற்புதமாக கருதபடுவது, மனிதர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமான அங்க லட்சணத்தில் படைத்திருப்பது ஆகும்.
💁♥ வித விதமான மனிதர்களை படைப்பவர் பிரம்மா ஆவார். மனிதர்களின் எதிர்காலப் பலன்களை அவர்கள் பிறந்த நேரத்தின் அடிப்படையில் ஜாதகங்கள் கணிக்கப்பட்டு அதன் படி அவர்களின் பலன்கள் விவரிக்கப்படிகிறது.
💁♥ பிரம்மா படைக்கும் மனிதர்களின் குணங்களை காட்டுவது அவர்களின் உடம்பில் இருக்கும் மச்சங்கள் ஆகும். அவ்வாறு இருக்கும் மச்சங்கள் ஒரு சிலருக்கு ராஜயோகங்களை கொடுக்கும். ஒரு சிலருக்கு போராட்டமான வாழ்க்கையைக் கொடுக்கும்.
💁 ♥உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது. அவற்றை எடுத்துரைக்க ஜோதிட சாஸ்திரம், எண்கலை, சாமுத்திரிகா லட்சணம், மச்ச சாஸ்திரம் என்றெல்லாம் பலவகை சாஸ்திரங்களை முன்னோர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.
💁♥ படைப்புத் தெய்வம் மனித உடல் உறுப்புகளில் வைக்கப்படும் புள்ளி 'மச்சம்" என்று கருதப்படுகின்றது. மச்சங்கள் கருப்புநிற மச்சங்கள், பழுப்புநிற மச்சங்கள், சிவப்புநிற மச்சங்கள் என்று சிறிய வடிவிலோ, பெரிய வடிவிலோ இருக்கும்.
💁 ♥முகத்தில் மச்சம் இல்லாதவர்கள் முன்னேற்றத்தின் முதல் படியில் நிற்பர். இதேபோல உடலில் எல்லா இடங்களிலும் இருக்கும் மச்சங்களுக்கும் உரிய பலன்களை மச்ச சாஸ்திரம் தௌpவாக எடுத்துரைக்கின்றது.
💁 ♥ஆண்கள் மற்றும் பெண்கள் அவர்களது உடலில் வலது, இடது பக்கத்தில் எத்தனை மச்சங்கள் உள்ளது என்பதை அறிந்து கொள்வது நல்லது. ஆண்களுக்கு வலது பக்கத்திலும், பெண்களுக்கு இடது பாகத்திலும் மச்சம் இருப்பதும் யோகம் தரும்.
#ஆண்கள் :
#வலது புறம்
👨 ஆண்களுக்கு வலது கன்னத்தில் மச்சமிருந்தால் உழைப்பால் உயர்ந்தவர் என்ற பட்டத்தைப் பெறுவர்.
👨 நெற்றியில் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால் பணவரவு திருப்தி தரும்.
#இடது புறம்
👨 இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் இனிமையாகப் பழகுவர். வம்பு, வழக்குகளுக்கு போகமாட்டார்.
👨 இடது பக்கத்தில் மச்சம் இருந்தால் எந்தக் காரியத்தையும் பொறுமையாகச் செய்து முடிப்பர்.
#பெண்கள் :
#வலதுபுறம்
👩 வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை அமையும்.
👩 பெண்களுக்கு வலது நெற்றியில் மச்சம் இருந்தால் கணவரின் அன்பிற்கு பாத்திரமாக விளங்குவர்.
#இடதுபுறம்
👩 இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் சமயத்திற்கு ஏற்றாற் போல சாமர்த்தியமாகப் பேசுவர்.
👩 இடது பக்கம் மச்சமிருந்தால் எதையும் யோசித்துச் செய்வதன் மூலமே நிம்மதியைப் பெற முடியும்.
💁♥ இங்ஙனம் மச்ச சாஸ்திரம் நம் உடல் முழுவதிலும் உள்ள மச்சங்களை விவரித்துக் கொண்டே போகிறது. சில இடங்களில் உள்ள மச்சங்கள் சோகங்களை உருவாக்கும். அங்ஙனம் சோகங்களைக் குறிக்கும் இடத்தில் உள்ள மச்சங்களின் பலனை அறிந்து அதற்கேற்ற கிரகத்திற்குரிய பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.

#ஜோதிடத்தை #நம்பலாமா?


♥🌠 ஜோதிடத்தை மட்டுமே நம்பிய காலம் உண்டு, எனினும் ஜோதிடம் உண்மையா? ஜோதிடத்தை நம்பலாமா? என்ற கேள்வி இங்கே எழுந்ததிற்கான காரணம் ஜோதிடம் என்கிற விஷயத்தை இங்கு பலர் தவறாக பயன்படுத்துவதால் மட்டுமே. பல விஷயங்களை தவறாக பயன்படுத்துகிறார்கள், கெட்டு போகாத விஷயங்கள் உலகத்தில் ஏதும் இல்லை. அவ்வாறு சிலர் தவறாக பயன்படுத்துவதால் ஜோதிடம் தவறானது அல்ல, மிக சரியானது, மிக தௌpவானது.
♥🌠 கடவுளை நம்பலாமா என்ற கேள்விக்கு உங்கள் மனது என்ன பதிலை தீர்மானமாக அளிக்கிறதோ, அந்த பதிலை இந்த கேள்விக்கான பதிலாக வைத்து கொள்ளுங்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே எத்தனை கிரகங்கள் உள்ளது என்றும், அவை எப்படி சுழல்கிறது என்றும் எழுத்தில் வடித்துள்ளனர் நம் முன்னோர்கள். இன்றும் நாம் நமது பஞ்சாங்கங்களின் மூலம் கிரகணங்களை அறிந்துகொள்ள கூடிய அளவுக்கு ஒரு அறிவியலை தரும் மெய்யறிவு பெற்ற நமது முன்னோர்கள்.
♥🌠 இல்லாத ஒரு விஷயத்திற்காக இத்தனை கோவில்களும் இத்தனை நியமங்களும் செய்திருக்க மாட்டார்கள். ஜோதிடம் நம் முன்னோர்கள் நமக்கு அருளிய வழிகாட்டி. செயல்களில் எவை எல்லாம் நல்லவைகள்... எவை எல்லாம் பாவங்கள்.. அதன் விளைவுகள் என்ன என்பதை ஜோதிட சாஸ்திரத்தை விடவும் மிகவும் தீர்க்கமாக, தௌpவாக நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். நம் செயல்களின் விளைவுதான் நம் வாழ்க்கை. நாம் அனுபவிக்கும் இன்பங்களும், துன்பங்களும் சரியாக ஜோதிடத்தை பயன்படுத்தியறிந்து நல்ல செயல்களை அதிகபடுத்தி, இறைவனின் அன்பை பெற்றால் நாம் நமக்கு விதிக்கப்பட்ட இன்ப, துன்பங்களை தாங்கும் வலிமையை பெறலாம்.
♥🌠 ஒருவன் வெற்றியை தழுவ காரணமாய் இருப்பவை எவை, அவனது கடின உழைப்பே, அவ்வாறு கடினமாய் உழைப்பதற்கு காரணமாய் இருப்பது அவன் மனதின் உற்சாகமே. மனதின் உற்சாகத்தை தூண்டுவது ஒரு விதமான நம்பிக்கையே. அப்படி பட்ட நம்பிக்கையை தர கூடியது ஜோதிடம்.

1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!

♥1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!
♥தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்
♥எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
♥கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
♥புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.
♥சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.
♥பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.
♥நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.
♥தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
♥ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
♥அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
♥காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
♥சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
♥உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.
♥எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்
♥எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல
♥அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
♥உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
♥எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.
♥எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
♥வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.
♥எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.
♥உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை
♥இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்

#புது #மணப்பெண்ணை தானியத்தை உதைத்து வீட்டிற்குள் வரவழைப்பது ஏன்?

♥❋ வீட்டிற்கு வரும் புது மணப்பெண்ணை மகாலட்சுமியாகப் பார்க்கிறார்கள். அந்தக் காலத்தில் மருமகள் என்று எதற்கு சொன்னார்கள் என்றால், மகாலட்சுமியே வீட்டிற்கு வந்து வாசம் செய்கிறாள், இன்று முதல் மகாலட்சுமி குடியேறுகிறாள் என்பதால் தான்.
♥❋ இன்றைக்கும் சில ஊர்களில் திருமணம் முடிந்து நேராக மணமகன் வீட்டிற்கு அழைத்து வந்து அங்கு விளக்கேற்றச் சொல்வார்கள். புதுப்பெண்ணிற்கு ஒரு காமாட்சி அம்மன் விளக்கு கொடுத்து அதனை ஏற்றச் சொல்வார்கள். அவர்கள் நுழையும் போது லட்சுமியோடு உள்ளே வருகிறார்கள் என்று அர்த்தம்.
♥❋ தானியங்கள் தான் குறிப்பாக லட்சுமியினுடைய அம்சம். அதன்பிறகு தான் வெள்ளி, தங்கம் எல்லாம். அந்தத் தானியத்திலும் பச்சரிசி, நெல் முதலியவற்றில் லட்சுமி முழுமையாக வாசம் செய்வதாக ஐதீகம்.
♥❋ அதனால்தான் அதுபோன்று காலால் உதைக்கச் சொல்கிறார்கள். அதை அவர்கள் உதைக்கவில்லை, லட்சுமியே உதைத்து உள்ளே கொண்டு வருகிறாள். அந்தப் பெண் காலடி வைக்கும் நேரத்தில் இருந்து லட்சுமி கடாட்சம் சூழ்ந்து வரும். அதனால்தான் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்வது என்பது ஐதீகம்.
♥❋ அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மண மேடையில் அவர்கள் ஒரு புனித நிலையை அடைகிறார்கள். நாம் வைத்திருக்கும் சம்பிரதாயங்கள், சடங்குகளில் ஒரு பெண் புனித நிலையை அடைகிறார்கள். அந்த நேரத்தில் அவளுடைய மனநிலை ஒரு தெய்வ நிலையில் இருக்கிறது. அந்த நேரத்தில் அவளுக்கு கூடுதல் சக்தி கிடைப்பதாக ஐதீகம். அதனால்தான் அந்தப் பெண்ணை மகாலட்சுமியாக கருத்தில் கொண்டு தானியத்தை உதைத்து வீட்டிற்குள் லட்சுமி கடாட்சத்தை வரவழைப்பதாக ஐதீகம்.

Monday, January 23, 2017

குழந்தைகள் விரும்பும் பெற்றோராக, செய்ய வேண்டியவை! #GoodParenting

பெற்றோர்களின் அரவணைப்பில் குழந்தைகள்

*  குழந்தைகளின் நல்ல செயல்கள் ஒவ்வொன்றையும் பாராட்டுங்கள். 'வாவ் என் தங்கமா இவளோ சூப்பரா செஞ்சிருக்கு.. கங்கிராட்ஸ்" என்று குழந்தைகள் மகிழ ஆச்சர்யப்படுங்கள்.  

* பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பாடமாக எடுப்பதைவிட, வெளியிடங்களுக்கு அழைத்து செல்லுங்கள். அங்கே அவர்கள் என்ன தவறு செய்தார்கள், அதை எப்படி செய்திருக்க வேண்டும் என்பதை விளக்கி சொல்லுங்கள்.  

* எலெக்ட்ரானிக் சாதனங்கள் என்பது இக்காலக்கட்டத்தில் குழந்தைகள் தெரிந்திருக்க வேண்டிய ஒன்றுதான். அதற்காக அவர்கள் அதிலேயே மூழ்கிவிட பெற்றோர்களான நீங்கள் காரணமாக இருக்க வேண்டாம். ஒன்றை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்தும் நமக்கு, அச்சாதனங்களை அவர்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்லி கட்டுப்படுத்தவும் செய்ய வேண்டும்.

* ஒரு வயதில் இருந்து குழந்தைகளுக்கு புத்தகங்களை வாசித்து காண்பியுங்கள். தினமும் இரவு படுக்கசெல்லும் முன் சில பக்கங்களையாவது வாசித்து காண்பிப்பதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். புத்தகம் விசாலமான அறிவை பெறச் செய்யும் என்பதை அவர்கள் உணர வையுங்கள்.

*  தினமும் ஒரு புது வார்த்தை கற்றுக் கொடுங்கள். அவர்களுடைய வேலைகளை அவர்களாக செய்ய பழக்குங்கள். இதில் ஆண்-பெண் பேதம் தேவையில்லை. பள்ளி முடிந்து வந்தவுடன் டிபன்பாக்ஸை எடுத்து சிங்கில் போடுவது, ஷூக்களை கழட்டி உரிய இடங்களில் வைப்பது, சாப்பிடும் முன் அதற்கான பொருட்களை பெற்றோர்களுடன் சேர்ந்து எடுத்து வைப்பது போன்ற வேலைகளை பகிர்ந்து கொள்ள பழக்குங்கள். 

* உறவுகளை அறிமுகப்படுத்துங்கள். சித்தி, சித்தப்பா, மாமா என்று உங்கள் குடும்பத்தில் இருக்கும் உறவுகளை குழந்தைகளுக்கு பழக்கப்படுத்துங்கள். நேரில் பார்ப்பது, போனில் பேசுவது என எது சாத்தியமோ அதை செய்ய வையுங்கள். அப்போதுதான் குழந்தைகளின் வானம் விரிவடையும். 

* குழந்தைகள் முன் உபயோகிக்கும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். அவை ஃபேஷனாக, இதுவரை நீங்கள் உபயோகித்து வந்த அர்த்தமில்லாத வார்த்தைகளாக இருக்கலாம். உடனே சுதாரியுங்கள். இல்லையெனில் அவை நம் குழந்தைகள் மூலமாக வெளிப்படும்போது அவர்களை மட்டுமல்லாது அவை நம்மையும் சேர்த்தே பாதிக்கும் என்பதை உணருங்கள். 

* குழந்தைகளிடம் பெற்றோர்கள் எந்த சூழலிலும்  கடுமையான மனப்பாங்குடன் நடந்துகொள்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் தெரிந்தோ, தெரியாமலோ ஏதேனும் ஒரு தவறை செய்தாலும்கூட, அந்த தவறை இனி அடுத்த முறை குழந்தைகள் செய்யாத வகையில் பக்குவமாக எடுத்துக்கூற வேண்டும். 

* மற்றொரு மாணவரை உதாரணத்துக்கு எடுத்துச் சொல்லலாம் தவிர, இன்னொரு மாணவருடன் உங்கள் குழந்தைகளை ஒப்பீடு செய்து, குற்றம் சாட்டுவது மிகவும் தவறு.

* குழந்தைகளின் கெப்பாசிட்டியை தெரிந்து கொள்ளுங்கள். அதை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளுங்கள். அதற்குபதில் கடல் தாண்ட சொல்லாதீர்கள். அப்போதுதான் அவர்களால் வெற்றியை அடைய முடியும்.

Thursday, January 12, 2017

கௌரவமான பண்பு நலன்களை உருவாக்கிக்கொள்ள

 01. நீங்;கள் உண்மையாகவே நம்பத்தகுந்தவர் நேர்மையின் இருப்பிடம் என்ற சமூக முத்திரையை பெற வேண்டும், அதற்காக பாடுபடுங்கள். கெட்டவர் என்று பெயரெடுக்க ஒரு நாள் போதும், நல்லவர் என்று பெயரெடுக்க வாழ்நாளே போதாது.

02. ஏமாற்றாதீர்கள்.

03. திருடாதீர்கள், பிறரின் பொருட்களை ஒருபோதும் கேட்காமல் எடுக்காதீர்கள். அனுமதி பெறாமல் இரவல் எடுத்துச் செல்வதும்கூட ஒருவகையில் திருட்டுத்தான்.

04. நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கையாக இருங்கள். எவரை நண்பராகக் கொண்டிருக்கிறீர்கள் என்பது மட்டுமல்ல, எவருடைய நட்பை தவிர்க்கிறீர்கள் என்பதும் உங்கள் பண்பு நலனை வெளிப்படுத்தும்.

05. நட்பை விலை கொடுத்து வாங்காதீர்கள், அப்படிச் செய்வோரிடம் இருந்து விலகியே இருங்கள். நட்பு என்பது விற்பனைச் சரக்கல்ல.

06. உன்னதப் பண்புகள் கொண்ட மனிதர்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.

07. நியாயமான காரணங்களை தேர்வு செய்யுங்கள், நியாயமானதை மட்டும் செய்யுங்கள், நன்நெறியை பயிலுங்கள் அதுதான் செய்வதற்குரிய செயல்.

08. எதிர்பார்க்கப்படுவதை விட அதிகமாக தருவது என்ற கொள்கையில் வாழுங்கள். உதவுவதில் மற்றவருக்கு முன்னோடியாக செல்லுங்கள், அதுபோல உங்களுக்கு மற்றவர் தருவதைவிட நீங்கள் அதிகமாகவே திருப்பிக் கொடுங்கள்.

09. கொடுத்தவாக்கை நிறைவேற்றுங்கள் பிறரை ஒருபோதும் ஏமாற்றத்திற்கு ஆளாக்க வேண்டாம்.

10. அதிகாரத்தை அல்ல பொறுப்பை கேட்டுப் பெறுங்கள்.

11. பிறருக்கு உதவி செய்வதில் மகிழ்வடையுங்கள், எவருக்காவது ஏதோ ஒருவகையில் உதவி செய்ய முன் செல்லுங்கள்.

12. இரகசியம் காப்பதை கற்றுக்கொள்ளுங்கள் உங்களிடம் இரகசியமாக கூறப்பட்ட எதையும் வெளியிடாதீர்கள்.

13. மற்றவர்களைப் பற்றி இழிவாக பேசாதீர்கள் அது இழிந்த பண்பாகும்.

14. உங்கள் மனச்சாட்சியை எப்போதும் உயிர்ப்பாக வைத்திருங்கள்.

15. மனிதர்களைப்பற்றி முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டாம், எல்லா உண்மைகளையும் திரட்டிய பின்பே முடிவு செய்யுங்கள். நாம் தோற்றத்தைக் கொண்டு மற்றவர்களை ஏற்கிறோம், நிராகரிக்கிறோம் வெளித்தோற்றமே போலியாக இருக்கலாம்.

16. நீங்கள் நீங்களாகவே இருங்கள் நடிக்காதீர்கள், போலியாகக் காட்டிக்கொள்ளாதீர்கள். இதற்கு உங்கள் மறுபக்கத்தையும் காட்ட வேண்டும் என்பது பொருள் அல்ல. உங்கள் குறைகளைப் பற்றி பெருமைப்படாதீர்கள், முன்னேற முயற்சி செய்யுங்கள், ஆனால் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

17. மற்றவர்களுக்கு உதவுங்கள், மற்றவர் தோல்வி கண்டால்தான் நீங்கள் வெற்றிபெற முடியும் என்று எண்ணாதீர்கள். உதவி என்றால் தானாகவே முன்சென்று உதவுவது, எதிர்ப்படும்போது செய்வதல்ல. உதவுதல் என்பது பிரதிபலன் கருதாத செயல். நட்பில் தவிர்க்க முடியாதது, பயிற்சி செய்ய வேண்டிய செயல்.

18. ஒரு தவறு செய்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்க தவறவேண்டாம். மற்றவர் தவறு செய்தால் பொறுமையை வெளிப்படுத்துங்கள். மற்றவர் செய்த அதே தவறுகளை பின்னர் நீங்களும் செய்யாதீர்கள். மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு நீங்கள் தவறு செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். தவறுகள் இயற்கைதான், ஆனால் துன்பத்தைத் தரும்.

19. பெற்றோருக்கு பெருமை தேடித்தாருங்கள் அவர்கள் உங்களை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு செய்த அனைத்துக்கும் நன்றியுடையவர்களாக இருங்கள். நேர்மையான பெற்றோர் அமைவது மகத்தான பெருமை. நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு அவ்வாறே இருங்கள்.

20. எப்போதும் இனிய சொற்களையும் குறைந்த விவாதங்களையும் பயன்படுத்துங்கள்.

21. தயவுசெய்து, நன்றி இந்தச் சொற்களை உளப்பூர்வமாக பயன்படுத்துங்கள். அர்த்தமற்ற பகட்டு வெளிப்பாடுகளில் இருந்து வெளிப்பட்டுக் கொள்ளுங்கள்.

22. பிறர் பேசக்கேட்பதை பழகிக் கொள்ளுங்கள், மற்றவர் பேசும்போது இடைமறிக்காதீர்கள். அவர் சொல்ல வந்ததை நீங்கள் முடித்துவைக்க முயலாதீர்கள்.

23. மென்மையானவராக இருங்கள் அது வலிமையின் வெளிப்பாடு. உள்ளே பலவீனம் இருப்பவர்தான் முரட்டுத்தனம் காட்டுவார்.

24. உங்களிடமுள்ள பொருட் செல்வம் எவ்வளவு என்பதைவிட உங்கள் மதிப்பு எவ்வளவு என்பதே முக்கியமானது.

25. வதந்திகள் பரப்புவோர், வம்பளக்கும் நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உரையாடும்போது உங்கள் பேச்சில் பொறாமையோ, இகழ்ச்சியோ தொனிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். வெட்டிப்பேச்சு வீண் விதண்டாவாதங்களில் இருந்து விலகியிருங்கள். மற்றவர்களுக்கு நேர்ந்த துரதிருஷ்டத்தை பேசி சிரிக்காதீர்கள், அதில் மகிழ்ச்சியடையாதீர்கள், எந்தச் சந்தர்ப்பத்திலும் மற்றவர்களை கேலி பேசாதீர்கள்.

26. சுறுசுறுப்பாக இருங்கள் செயற்பட்டுக்கொண்டே இருங்கள். அனைவருக்கும் நன்மை தரக்கூடிய சமுதாயத்தை உருவாக்குங்கள். ஒரு பொழுதுபோக்கு அல்லது சேவையை தேர்வு செய்யுங்கள் அது நின்மதி தரும்.

27. வாரத்திற்கு ஒரு நல்ல புத்தகம் படியுங்கள். அது உங்கள் ஆன்மாவை செழுமைப்படுத்தும்.

Friday, August 12, 2016

மூன்றே நாளில் தொப்பையை குறைக்க!!!

இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள்.

ஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது. உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தால், தொப்பையின் அளவு குறைவதை நன்கு காணலாம்.

சரி, இப்போது மூன்றே நாளில் தொப்பையைக் குறைக்க உதவும் அந்த ஜூஸ் என்னவென்றும், அந்த ஜூஸில் சேர்க்கப்படும் பொருட்களில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றியும் பார்ப்போமா!!!

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருளும் கூட.

எலுமிச்சை, எலுமிச்சங்காய்
எலுமிச்சை மற்றும் எலுமிச்சங்காயில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். மேலும் இவை உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.

புதினா
புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.

இஞ்சி
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள மனித ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டவர்கள், குடிக்கும் பானங்களில் இஞ்சியை சேர்த்துக் கொண்டு வந்தனர். அப்படி இஞ்சியை சேர்த்ததால், அவர்கள் வயிறு நிறைந்தது போன்று உணர்ந்ததோடு, குறைவான அளவிலேயே உணவை உட்கொண்டனர். இதனால் இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்ததாம்.

தண்ணீர்
தண்ணீர் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது தசை மற்றும் மூட்டுகளில் தோய்வு ஏற்படாமல் தடுக்கும். மேலும் நீரை அதிக அளவில் தொடர்ந்து குடித்து வந்தால், அது உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும்.

குறிப்பு
மேற்கூறிய பொருட்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, தினமும் குடித்து வந்தால், 3 நாட்களில் தொப்பை குறைவதை நன்கு காணலாம். அதற்காக மூன்றே நாட்களில் தொப்பை முற்றிலும் குறையாது. தினமும் குடித்து வந்தால், தொப்பை குறைந்து கொண்டே வருவதை காண முடியும்.

ஜூஸ் செய்யும் முறை
1 வெள்ளரிக்காய்
5 எலுமிச்சை
1 எலுமிச்சங்காய்
15 புதினா இலைகள்
2 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி
2.5 லிட்டர் தண்ணீர்

வெள்ளரிக்காய், 1 எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வட்ட வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் மீதமுள்ள 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் புதினாவை நறுக்கி போட்டு, அதில் 1.5 லிட்டர் நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி, அத்துடன் வெள்ளரிக்காய், எலுமிச்சங்காய் மற்றும் எலுமிச்சையை போட்டு நன்கு கிளறி, 24 மணிநேரம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும்.

இப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம். வேண்டுமெனில் இந்த செயலை ஒரு வாரம் கழித்து மீண்டும் 3 நாட்கள் தொடரலாம்.

Friday, August 5, 2016

கனவு காணுங்கள் - கலாமின் தன்னம்பிக்கை வரிகள்

முடியாது என்பது நோய்

"கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத்திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. சி.சுப்பிரமணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியில் வெற்றி அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியாது. முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது.  எனவே, நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்டு எந்த செயலையும் தொடங்குங்கள். "முடியும்' என்ற நம்பிக்கை முதலில் ஓவ்வொரு இந்தியனுக்கும் வேண்டும்"

மனித நாகரிகம் வளர காரணம் வீரம்

மனித நாகரிகம் வளர்ந்ததற்குக் காரணமாக நான் நினைப்பதே வீரத்தினால்தான். மனிதன் எடுத்து வைத்த ஒவ்வொரு காலடிக்கும் வீரம் தேவைப்பட்டது என்பதுதான் வரலாறு. தன்னுடைய பிரதேசத்தைக் காத்துக் கொள்ள வீரம் தேவைப்பட்டது. புதிய வாசல்களைத் திறக்க, புதிய இடங்களைத் தேடிச்செல்ல வீரம் தேவைப்பட்டது. பழமையை மீறவும் புதியவற்றைக் கண்டுபிடித்து புதுமைகள் செய்யவும் வீரம் தேவைப்பட்டது. சகமனிதனின் கண்ணீரைத் துடைத்து புரட்சிகளை உருவாக்க வீரம் தேவைப்பட்டது. மனிதநேயம் என்கிற பேனாவில் வீரம் என்னும் மையினால் எழுதப்பட்டது தான் நீண்ட நெடிய மனிதனின் வரலாறு என்பது என் எண்ணம்.

உறுதியும், நம்பிக்கையும்

உறுதியும், நம்பிக்கையும் தலைமைப்பண்பும் கொண்ட நம்முடைய இளம் ஆண்களும், பெண்களும் ராணுவப்படைகளில் ஆர்வமுடன் சேர முன்வர வேண்டும் என்பது என் ஆசை. இன்றைய வேகமான அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக ராணுவத்தின் எத்தனையோ சவாலான, சுவாரஸ்யமான வேலைகள் உருவாகி வருகின்றன. இளைஞர்களுக்கு அவை பெரும் சாகசங்களாகத் திகழும்.

சிந்தனை செய்

இந்தியாவுக்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்.

இந்தியாவை மேம்படுத்த வேண்டியவற்றைச் சிந்தனை செய்,

அமெரிக்கா, மற்ற மேலை நாடுகள் அடைந்துள்ள மேன்மைப்பாடுகளை நாமும் பெற வேண்டுமானால்!

“புலப்படாத எதிர்காலத்துக்கு மட்டும் ஒருவர் வாழ்ந்து வருவது ஆழமற்ற மேலொட்டிய செயலாகும்.”

ஆற்றல்களின் வேறுபாடுகளைத் தெளிவாக தெரிந்து கொள்

”என்னால் மாற்ற முடியாதவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன். வாழ்க்கையில் உன்னை வரவேற்கும் சக்திகளும், அறவே எதிர்க்கும் சக்திகளும் இருக்கத்தான் செய்யும். பலனளிக்கும் ஆற்றல்கள், பயனற்ற ஆற்றல்களின் வேறுபாடுகளைத் தெளிவாகத் தெரிந்து, அவற்றுக்கு இடைப்பட்ட முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.”

கனவு காண்

“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி.  ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.

ஒரே சிந்தனை

“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங்கனவு எங்களுக்கு அறவே இல்லை! ஆனால் சமூக மனிதப் பிரச்னைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்! தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”

மன உறுதி

இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடைவதாயினும் சரி, மேலே ஏறிச் செல்ல ஒருவருக்கு மிக்க மன உறுதி தேவைப்படுகிறது.

தொடர்ந்து முயற்சி செய், வெற்றி நிச்சயம்

மாணவப் பருவத்தில் பல்வேறு தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகள் எதிர்பார்த்தவாறு அமையாவிட்டால், அதற்காக மாணவர்கள் மனம் சோர்ந்துவிட வேண்டியதில்லை. தேர்வு முடிவுகள்தான் வாழ்க்கையில் இறுதியானது எனக் கருத வேண்டாம். கடவுள் நம்முடன் இருப்பாரானால், ஒருவரும் உங்களுக்கு எதிராகச் செயல்பட முடியாது. எனவே, தொடர்ந்து முயற்சி செய்தால், நிச்சயம் வெற்றி கிட்டும். தாற்காலிகமாக ஏற்படும் பின்னடைவுக்காக மனம் சோர்ந்து போய்விட வேண்டாம்.

துணிவுடன் எதிர்கொள்

வெற்றி எப்பொழுதுமே மகிழ்ச்சியைத் தரும். ஆனால், பல காரணங்களால் சில சமயம் தேர்வில் நாம் பின்னடைவைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதையும் நாம் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் நாம் சில எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் பிரச்னைகள் நம்மை மேலாதிக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது.​ நாம்தான் பிரச்னைகளை மேலாதிக்கம் செய்ய வேண்டும்.​ பிரச்னைகளை தோல்வியுறச் செய்து, வெற்றி காண வேண்டும்

நீ நட்சத்திரமாக ஜொலிக்க விரும்பினால்

நீ யார் என்பது முக்கியமல்ல;

உனது மனது எதை விரும்புகிறதோ,​​

அது நிச்சயம் உன்னை வந்து சேரும்.”

எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொண்டு அதில் வெற்றி பெறுவதுதான் இளைஞர்களின் தனித்தன்மையாகும்.

Monday, July 18, 2016

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்...

தெய்­வ­நி­லைக்கு உய­ருங்­கள்
* மற்­ற­வர்­க­ளுக்கு நன்மை ஏற்­ப­டு­மா­னால் நர­கத்­திற்­குக் கூட செல்­வ­தற்­குத் தயா­ராய் இருங்­கள். மர­ணம் வரு­வது உறு­தி­யாக இருக்­கும்­போது ஒரு நல்ல காரி­யத்­திற்­காக உயிரை விடு­வது மேல்.
* உல­கில் நல்­ல­வர்­கள் பெரிய தியா­கங்­க­ளைச் செய்­கி­றார்­கள். அதன் விளை­வாக வரும் நன்­மை­களை மனி­த­கு­லம் முழு­வ­தும் அனு­ப­விக்­கி­றது.
* உல­க­வாழ்­வில் இருந்து தப்பி ஓட முயற்சி செய்ய வேண்­டாம். வெற்­றியோ தோல்­வியோ போரா­டுங்­கள்.
* பாம­ரன் பண்­புள்­ள­வ­னா­க­வும், பண்­புள்­ள­வன் தெய்­வ­மா­க­வும் உய­ர­வேண்­டும். இதுவே ஆன்­மி­கத்­தின் பயன்.
* தெய்­வீ­கத்­தன்மை இல்­லா­மல் பெறும் மித­மிஞ்­சிய அறி­வும், ஆற்­ற­லும் மனி­தர்­களை மிரு­கங்­க­ளாக்கி கீழ்­நி­லைக்­குத் தள்­ளி­வி­டும்.
* சுய­ந­லம், சுய­ந­ல­மின்மை இந்த இரண்­டை­யும் தவிர கட­வு­ளுக்­கும் சாத்­தா­னுக்­கும் வேறு­எந்­த­வி­த­மான வேறு­பா­டும் கிடை­யாது.
மின்­னல் வேக மாற்­றம்
* ஆன்­மிக வாழ்­வில் பேரின்­பம் கிடைக்­கா­மல் போனால் அதற்­கா­கப் புல­னின்ப வாழ்­வில் திருப்தி கொள்­ளக்­கூ­டாது. இது அமு­தம் கிடைக்­கா­விட்­டால்­சாக்­க­டை­நீரை நாடிச் செல்­வ­தற்கு சமம்.
* மாபெ­ரும் வீரனே! உறக்­கம் உனக்­குப் பொருந்­தாது. துணி­வு­டன் எழுந்து நில்.
* உன்னை நீயே பல­வீ­னன் என்று நினைப்­பது உனக்கு பொருந்­தாது. "நான் ஒரு வெற்றி வீரன்' என்று எப்­போ­தும் உனக்­குள்­ளேயே சொல்­லிக்­கொள். மின்­னல் வேகத்­தில் உனக்­குள் புதிய மாற்­றம் ஏற்­ப­டு­வ­தைக் காண்­பாய்.
* கீழ்த்­த­ர­மான தந்­திர முறை­க­ளால் இந்த உல­கத்­தில் மகத்­தான காரி­யம் எதை­யும் சாதித்­து­விட முடி­யாது.
* அதிர்ஷ்­ட­தே­வதை உனக்கு அருள்­பு­ரி­யட்­டும் அல்­லது புரி­யா­மல் போகட்­டும். ஆனால் நீ, உண்மை என்­னும் பாதை­யில் இருந்து அணு­வ­ள­வும் பிறழ்ந்து போகா­மல் இருப்­ப­தில் கவ­ன­மாக இரு.