தன்னம்பிக்கை
- உன்னை அறிவில்லாதவன் என்று நீ எண்ணுவது தவறு
- உன்னை அறிவில்லாதவன் என்று பிறர் சொல்வதை நம்புவது பெரும் தவறு
- தன்னை நம்புபவர் அதிட்டத்தை நம்புவதில்லை
- தன்னையே நம்பாதவர் அதையும் நம்புவதில்லை
- விழவது நம் வாடிக்கை
- வெம்பி நீ அழவதுதான் வேடிக்கை
- தொழுவது நம் நம்பிக்கை
- நம்பி நீ எழுவதுதான் தன்னம்பிக்கை
- மூடனோ முடியாததை முடியும் என்று நினைந்து தோற்கிறான்
- முடவனோ முடிந்ததை முடியாது எனப் பயந்தே தோற்கிறான்
- கண்ணிலே நம்பிக்கை இருந்தால் கல்லீலே தெய்வம் உண்டு
- கையிலே நம்பிக்கை இருந்தால் வரலாற்றிலே பெயர் உண்டு
- வெற்றி நிச்சயம் என்ற எண்ணமே வெற்றிக்கு முதல் இரகசியம்
- தோல்வி நிச்சயம் என்ற அச்சமே தோல்விக்கு மூல காரணம்
- உங்களது சந்தேகங்களையே சந்தேகித்து விரட்டுங்கள்
- உங்களின் நம்பிக்கைகளின் மீதே நம்பிக்கை வையுங்கள்
- என்னாலும் செய்ய முடியும் என்பது நம்பிக்கை
- என்னால்தான் செய்யமுடியும் என்பது அகந்தை
- பறக்கத் துணிந்தவருக்கு இறகுகள் பாரமில்லை
- இறக்கத் துணிந்தவருக்கு மரணம் ஒரு பயமில்லை.
போராட்டம்
- விமர்சனம் என்பது கடல் பயணத்தின் தடை கல் விலகிச்செல்ல முடியும்
- வீண்பகை என்பது சாலை பயணத்தின் தடை கல் தகர்த்தே செல்ல முடியும்
- உரிமை மேல் ஆண்மை பாராட்டாதவர் சாந்தம்
- பெருமை இல்லாத பிணத்தில் பிறந்ததோர் சாந்தக்குளிரே
- உன் சுயசக்தியே உனது ஆயுதம் துஞ்சாமல் போராடு
- உன் சுயபுத்தியே உனது ஆசான் அஞ்சாமல் போராடு
- மயங்குபவர் மன்னராக முடிவதில்லை
- தயங்குபவர் தலைவராக இருப்பதில்லை
- கலங்குபவர் கலைகளில் சிறப்பதில்லை
- கசங்குபவர் முண்ணனியில் வருவதில்லை
- எடை இல்லாது விலையில்லை
- நடை இல்லாது நாட்டியமில்லை
- படை இல்லாது போருமில்லை
- தடை இல்லாது வெற்றியுமில்லை
- காவியினால் மட்டுமே வறுமைக்கு சாவி கிடைக்காது
- கருணையினால் மட்டுமே ஏழ்மைக்கு தீர்வு கிடைக்காது
- துடுப்பு இலொலாமல் தோனியில்லை
- துணை இல்லாமல் பயணமில்லை
- படி இல்லாமல் ஏணியில்லை
- அடி வாங்காது ஏற்றமில்லை
- கடல்கள் மையத்திலிருந்து பல புயல்கள் புறப்படுகின்றன
- இதயத்திலிருந்து பல புரட்சிகள் புறப்படுகின்றன,
மனோசக்தி
- தண்ணீரை வீணாக்காமல் சேமியுங்கள் நாளை இதை விட வறட்சி வரும்
- கண்ணீரை வீணாக்காமல் சேமியுங்கள் நாளை இதை விட துயரம் வரும்
- ஒரு நொடி அழும் போது மரணம் ஓரடி முன்னோறுகிறது
- ஒரு நொடி சிரிக்கும் போது மரணம் ஒரடி பின்னேறுகிறது
- கவ்விய கவலையும் துயரும் விட்டு விட்டால்
- உலகு எல்லாம் சேரினும் நம் முன் தீயிலிட்ட பங்சே
- சிதைந்த போதும் உரம் உடையோர் பதையார் சிறிதும்
- புதைப்படும் கணைக்கும் புறம் கொடாது யாணை
- அண்டத்தையே பிண்டமாக்கும் அழிவு சக்தி அனுவுக்குள்ளே
- பிண்டத்தையே அண்டமாக்கும் ஆக்க சக்தி ஆன்மாவுக்குள்ளே
- உள்ளத்திலே உறுதியிருந்தால் கை தொட்ட கல்லும் பொன்னாகும்
- உடலிலே உழைப்பிருந்தால் காலன் பயமும் மறைந்து போய்விடும்
- வீரமுள்ள மனிதனை கொல்ல முடியும் தோற்கடிக்க முடியாது
- விவேகமுள் அறிஞனை விரட்ட முடியும் வீழ்த்த முடியாது
- நல்ல தொழிலாளியிடம் கடின வேலை தருகிறார் முதலாளி
- நல்ல இருதயத்திடம் தனது வேலையைத்தருகிறான் இறைவன்
- தீராத பசியை விட ஒயாத உணவால் மாண்டவர் பலர்
- ஒயாத உழைப்பை விட தீராத உறக்கத்தில் அழிந்தவர் பலர்
- துயரத்தின் தீயில் இருந்தே பல மாமேதைகள் கருவானர்கள்
- துன்பத்தின் சாம்பலில் இருந்தே பல மாமனிதர்கள் உருவானர்கள்
மனோதிடம்
- குளிரிலும் கோடையிலும் சமமாக இருப்பது உடலின் வெப்பம்
- குறையிலும் நிறையினும் சமமாக வாழ்வது மனிதின் நுட்பம்
- துயரங்கள் சிலரை சுட்ட எஃகு போல உறுதியாக்குகிறது
- தோல்விகள் சிலரை சுட்ட கடுகு போல சிதைத்து விடுகிறது
- உடல் தளர்வது தோலில் ஏற்படும் காயம் போல
- உளம் தளர்வது எலும்பில் ஏற்படும் முறிவு போல
- பலமில்லாதவர்கள் பாதையின் கற்கள் தடைக்கற்கள்
- பலமுள்ளவர்கள் பாதையின் தடைகள் படிக்கற்கள்
- இத்தனி உலகிலே எத்தனை துயர் கண்டாலும் அத்தனையும்
- நம் அழுக்கையெரித்து நல் சுவர்ணமாக சோதிக்கத்தானே
- பிறவிக்குருடனின் பால் நிறம் கொக்கு போல என்றாணம் ஒரு மூடன்
- சற்றே பாதையாதிருந்து பாரும் எதிலும் பேரின்பமே திகழும்
- துயரென்பது நரி போல ஒடதுடத்துரத்தும் நின்றதும் நின்று விடும்
- துன்பமென்பது நிழழ்போல ஒட ஒடத் தொடரும் நின்றதும் நின்று விடும்
- கையகலமே அவன் கொடை
- கருணை மனத்தின் அகலமே மாண்பு
- கண்ண கலமே அவள் கல்வி
- கலங்காத இதயத்தின் அகலமே அவன் வாழ்வு
- திறமையான வாளுக்குத் தேவை உறுதியான கைப்பிடி
- வலிமையான கைகளுக்குத் தேவை உறுதியான இருதயம்
அஞ்சாமை
- தங்கத்தை தீயிட்டாலும் அதன் தரம் குணம் மாறுவதில்லை
- அங்கத்தை தீயிட்டாலும் ஆன்றோர் பொய் பேசுவதில்லை
- இழப்பு இல்லாமல் ஒரு லாபம் அடைய முடியாது
- ஆபத்து இல்லாமல் ஒரு வெற்றி அடைய முடியாது
- அஞ்சாமை என்பது தெளிந்த அறிவின் விளைவாகும்
- துஞ்சாமை என்பது துணிந்த துணிவின் விளைவாகும்
- அஞ்சாமையுடன் நெஞ்சிலிருந்து வீரத்திருமகள் கட்டியனைப்பான்
- துஞ்சாமையுன் விழியிலிருந்தால் வெற்றித்திருமகள் வீட்டிலிருப்பான்
- உழைப்பதற்கு முதுகு வளை
- எதிர்ப்பவர்க்கு முதுகு வளைக்காதே
- அறிஞருக்கு தலை வணங்கு
- அறிவானுக்கு தலை குணியாதே
- வளைந்து நெளிந்து குழைந்து தளர்ந்து வாழ்வது புழுவின் வாழ்க்கை
- நிமிர்ந்து துணிந்து பாய்ந்து வளர்ந்து வெல்வது புலியின் வாழ்க்கை
- கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாத கால்கள் ஊர் போய்ச் சேரும்
- வில்லுக்கும் சொல்லுக்கு அஞ்சாத காதுக்கு புகழ் வந்து சேரும்
- வளைந்து கொடுப்பவர் எந்தக் கதவுக்குள்ளும் நுழைந்து விடுவார்
- நிமிர்ந்து நடப்பவர் எந்தத் தடையையும் தாண்டிவிடுவார்
- அஞ்சாமை என்பது ஆண் முகத்தில் மீசை
- ஆணவம் என்பது பெண் முகத்தில் மீசை
கொள்கை
- பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கொள்கை வைக்கிறான்
- பிறக்கும் ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஒரு செய்தி அனுப்புகிறான்
- அற்புதமான இலட்சியத்திற்காக உதவியை உதறி விடு
- அற்பனுன இலட்சியத்துக்காக இலட்சியத்தை உதறி விடாதே
- அற்ப தூசுகள் காற்று வரும் போது பறக்கலாம் என காத்திருப்பார்கள்
- அற்ப மனிதரும் அதிட்டம் வரும் போது ஆடலாம் என காத்திருப்பார்கள்
- ஆடையை விட்டபின் கிடைத்தது வெற்றியுமல்ல
- கொள்கையை விட்ட பின் அடைந்தது கோட்டையுமல்ல
- கொள்கை என்பது பழமைக்கும் புதுமைக்கும் இடையே தடையாகக் கூடாது
- குறிக்கொள் என்பது பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக வேண்டும்
- துக்கத்துக்கு அழுவது முகம் துடைப்பது போல ஒரு பழக்கமாகி விட்டது
- கொள்கையை பேசுவது மூக்கு சிந்துவது போல ஒரு வழக்கமாகி விட்டது
- வெற்றி தொடர்ந்த போது பாதை மாறாதே
- தோல்வி தொடர்ந்த போதும் கொள்கை மாறாதே
- கொள்கை பிடிப்புள்ளவர் வாழ்வு நெடும் பயணத்தின் நீளம்
- குரங்கு பிடிப்புள்ளவர் வாழ்வு செக்கு மாட்டின் வட்டம்
- ஆடையை அவிழ்த்தவருக்கு பரிசு என்றால் யார் வெல்லுவார் தெரியாதா
- கொள்கையை விட்டவருக்கு பதவி என்றால் யார் வெல்லுவார் தெரியாதா
- இலக்கு இல்லாத கப்பல்கள் கரை சேர்வதில்லை
- இலட்சியம் இல்லாத மனிதர்கள் வெற்றி காண்பதில்லை