Tuesday, June 27, 2017

”இசைஞானி. இளையராஜா : இசைஞானி. இளையராஜா. 74வது பிறந்த தினவிழா

இசைஞானி இளையராஜா .பற்றிய சில குறிப்புகள்

1. இயற்பெயர் : டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன்.

2. பிறந்த தேதி : 2.6.1943

3. தந்தை : டேனியல் ராமசாமி 

4. தாய் : சின்னத்தாய் 

5. சொந்த ஊர் : பண்ணைபுரம், தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

6. கல்வி : எட்டாம் வகுப்பு

7. மனைவி : ஜீவா ( சொந்த சகோதரியின் மகள் )

8. குழந்தைகள் : கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா, பவதாரணி

9. சகோதரர்கள் : பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் (கங்கை அமரன்)

10. இளையராஜாவின் தந்தை தேயிலை தோட்டத்தில் கங்காணியராக பணியாற்றியவர். அவருக்கு 25 
ஏக்கர் பரப்பு உள்ள எஸ்டேட் சொந்தமாக இருந்தது

11. 1958-ல் திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாவலர் வரதராஜனின் உடல்நிலை சரியில்லாததால் 
அம்மா சின்னத்தாய், இளையராஜாவை வேண்டுமானால் அழைத்துக் கொண்டு போ, இடையிடையே 
ஒரு பாடலை அவன் பாடினால் உனக்குக் கொஞ்சம் ஓய்வாக இருக்குமே என்று கூறியிருக்கிறார்.

“என் அன்னையின் திருவாக்கில்தான் என் கலை வாழ்க்கை ஆரம்பமானது. அன்று பொன் 
மலையிலும், திருவெரும்பூரிலும் நடந்த அந்த இசை நிகழ்ச்சிகளில் என் பாட்டுக்கு அவ்வளவு பெரிய 
வரவேற்பு கிடைத்ததாக இளையராஜா அடிக்கடி நினைவு கூறுவார்.

12. ஹார்மோனியத்தை தலையில் சுமந்தபடி பாவலர் வரதராஜன் போன பாதையில் 
தென்னிந்தியாவின் பல்வேறு கிராமங்களுக்கு கால்நடையாகவும், மாட்டு வண்டிகளிலும்,
பயணம் செய்து வாசித்துப்பாடி மிக இளம் வயதிலேயே லட்சோப லட்சம் மக்களை சந்தித்து 
இசையின் நாடித்துடிப்பை அறிந்தவர்.

13. கம்யூனிஸ்ட் கட்சிப் பிராச்சார பாடகராக அண்ணன் பாவலர் வரதராஜனுடன் இளையராஜா
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். இன்றும் 
கம்யூனிஸ்ட் தலைவர்கள் இவர்களது பாடல்கள் கம்யூனிஸ்ட் கட்சி வளர்வதற்கு உதவியாய் 
இருந்ததை அன்போடு சொல்லிக் கொண்டிருக்கிரார்கள்.

14. ஆரம்ப காலங்களில் இளையராஜா பெண்குரலில் மட்டுமே பாடி வந்திருக்கிறார்.

15. வானுயுர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் நானிருந்து வாடுகின்றேன் நா வறண்டு 
பாடுகின்றேன் என்று சொத்து பத்துக்களை நாடகம் போட்டு இழந்திருந்தாலும் லட்சியத்தை இழக்காத 
அண்ணனின் பாதையில் நடந்தது ஒரு பாடமாக மட்டுமில்லாமல் ஒரு தவமாக பரிணமித்திருக்கிறது 
என்று கூறியிருக்கிறார் இளையராஜா.

16. பாட்டு கேட்பதற்காக வாங்கியிருந்த ரேடியோவை விற்றுவிட்டு இளையராஜா தன் சகோதரர்கள் 
ஆர்.டி.பாஸ்கர், கங்கை அமரன் ஆகியோரோடு இசையமைப்பாளராக வேண்டும் என்று சென்னைக்கு 
ரயில் ஏறினார்.

17. மேற்கத்திய இசைக்கு இளையராஜாவின் குருநாதர் மாஸ்டர் தன்ராஜ்

18. வருமானம் குறைவாக இருந்த இளையராஜாவிடம் பணமே வாங்காமல் இசையின் அடிப்படை 
நுணுக்கங்களைக் கற்றுத் தந்தார் தன்ராஜ் மாஸ்டர்.

19. பியானோ கற்று கொள்வதற்காக சென்ற இளையராஜாவின் ஆர்வத்தைப் பார்த்து அதைக் 
கற்றுக்கொள், இதைக் கற்றுக்கொள் என்று கொஞ்சம் கொஞ்மாக எல்லாவற்றையும் கற்றுக் 
கொடுத்தார் தன்ராஜ் மாஸ்டர்.

20. வாரத்தின் இரண்டுநாள் இரண்டு மணிநேரம் பயிற்சி பெற்று வந்த இளையராஜா தினமும் 
அங்கேயே பயிற்சி பெறலானார்.

21. ஹார்மோனியம், கிட்டார், பியானோ, கீபோர்ட், புல்லாங்குழல் என்று பல்வேறு இசைக்கருவிகளை 
வாசிப்பதில் தேர்ந்தவர்.

22 .க்ளாசிக்கல் கிட்டார் இசையில் லண்டன் ட்ரினிட்டி இசைக்கல்லூரியின் பாடத்திட்டத்தில் 8வது 
கிரேட் வரை முடித்து அதில் தங்கப்பதக்கம் பெற்றவர்.

23. திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன் மேடை நாடகங்களுக்கு இசையமைத்து வந்தார். அதாவது 
1961 ஆம் ஆண்டில் தனது சகோதரர்களுடன் நாடகக்குழுவில் சேர்ந்து, இந்தியாவில் உள்ள பல 
இடங்களுக்கு சென்று சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட  கச்சேரிகளிலும், நாடகங்களிலும் கலந்து 
கொண்டார்.

24. சகோதரர்கள் மூவரும் இணைந்து ”பாவலர் பிரதர்ஸ்” என்ற இசைக்குழுவும் நடத்தி 
வந்துள்ளார்கள்.

25. இசையமைப்பதற்கு இசையை முறையாக கற்க வேண்டும் என்பதால் தங்களிடம் இருந்த 
ஆம்ப்ளிஃபயரை அடகு வைத்து வெஸ்டர்ன் க்ளாசிக்கல் இசை பயின்றார் இளையராஜா. ஆனால் 
அந்த ஆம்ப்ளிஃபயரை திரும்ப மீட்டெடுக்க சென்றபொழுது அந்த இடத்தில் வேறொரு கடை 
இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டார்.

26. ஆரம்ப காலங்களில் தான் பணியாற்றும் இசையமைப்பாளர் தயாரிப்பாளருடனும், 
இயக்குனருடனும் உட்கார்ந்து மெட்டு அமைக்கும்போது மெட்டுக்களை நோட்ஸ் எடுக்கும் கம்போசிங் 
அசிஸ்டென்ட்டாக இளையராஜா பணியாற்றினார்.

27. 1970 களில் பகுதிநேர வாத்தியக்கலைஞராக இசையமைப்பாளர் ”சலீல் சௌத்ரி”யிடம் பணியில் 
சேர்ந்தார்.

28. சலீல் சௌத்ரிக்கு பின்னர், கன்னட இசையமைப்பாளரான ஜி. கே. வெங்கடேஷ் அவர்களின் 
உதவியாளராக சேர்ந்த அவர், அவரது இசைக்குழுவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்தார்.

29.. முதல் படம் “அன்னக்கிளி” 
தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் 
பஞ்சு அருணாச்சலத்தால் 1976 ல் அறிமுகம் செய்யப்பட்டார்.

30. அன்னக்கிளி படத்திற்காக அவர் தேர்வானபொழுது சற்றே புருவம் உயர்த்திய  அனைவருக்கும் 
பதிலடி தர இயக்குனர் பஞ்சு அருணாசலம் அன்னக்கிளி படப்பாடல்களை இசையமைத்துக் காட்டு 
எனக்கூற, அங்கிருந்த திருமண மண்டபத்திலேயே அத்தனை பாடல்களுக்கும் இசையமைத்துத் தனது 
திறமையை நிரூபித்தார் இளையராஜா.

31. இசைக்கருவி இல்லாமல் தாளம் போட்டு வாய்ப்பு பெற்ற ராசையாவினை என்ன பெயரில் 
அறிமுகம் செய்யலாம் எனக்கேட்க ”பாவலர் பிரதர்ஸ்” என்றார் இசைஞானி.. இது சற்று பழையதாய் 
உள்ளது என்று யோசித்த இயக்குனர் பஞ்சு அருணாச்சலம் வைத்த பெயரே ”இளையராஜா”.

32. சினிமாவிற்கு பின் ராசையா இளையராஜா ஆனது அனைவரும் அறிந்தது.ஆனால் சினிமாவில் 
சேருவதற்கு முன் டேனியல் ராசைய்யா என்றே அழைக்கப்பட்டார்.

33. கதை கவிதை கட்டுரை எழுதுவதும் , பென்சில் ட்ராயிங் வரைவதும், தான் எடுத்த 
புகைப்படங்களை ப்ரேம் செய்து தன் வீட்டில் மாட்டுவதும் இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த 
பொழுதுபோக்கு.

34. சிபாரிசு சுத்தமாக பிடிக்காது.ஆனால் ஒரே முறை சிபாரிசு கருதி நடிகர் சங்கிலிமுருகனுக்கு 
கால்ஷீட் தந்தார். சிபாரிசு செய்தவர் இளையராஜாவின் தாயார் சின்னத்தாய் அம்மாள்.

35. அன்னையின் மீது அவர் பாசம் அதிகம். சின்னத்தாய் அம்மாள் சென்னை வந்தால் ராசய்யாவின் 
வீட்டிலே தான் தங்குவார். காரணம் கேட்டதற்கு "ராஜா இன்னும் குழந்தையாவே இருக்கான். அவன் 
காலையிலேயே வேலைக்குப் போகும்போது நான் போய் டாட்டா காட்டணும். சாயங்காலம் அவன் 
வரும்போது நான் இங்க இருக்கனும்" என நெகிழ்ச்சியாய் சொன்னார்.

36. எத்தனை பட்டங்கள் பெற்றாலும் எத்தனை விருதுகள் பெற்றாலும் மேஸ்ட்ரோ, இசைஞானி என்று 
புனைப்பெயரிட்டு அழைத்தாலும் பண்ணைபுரத்துக்காரர் என்பதே எனக்கு பெருமை என்பார்.  

37. கொஞ்சம் பரபரப்பு குறைந்திருந்த தாய் வழிப்பாட்டு பாடல்கள் இளையராஜா காலத்தில் தான் 
புத்துயிர் பெற்றன.

38. கவிஞர் கண்ணதாசனால் திரையுலகத்தில் இசையமைக்கத் தொடங்கிய இளையராஜா தான் 
கண்ணதாசன் அவர்களின் கடைசி பாடலுக்கும் இசையமைத்தார். 

39. பண்ணைபுரத்தில் ஒரு இடம் வாங்கி அதில் அவர் சின்னத்தாய் அம்மாளின் இறப்பிற்கு பிறகு 
அங்கு ஒரு கோவில் எழுப்பினார். அங்கு அமர்ந்து தியானம் செய்வது அவருக்கு மிகவும் பிடித்தமான 
ஒன்று.

40. பின்னணி இசை சேர்ப்பின்போது இளையராஜா காட்சியை ஒருமுறை பார்த்ததுமே, தாளில் 
இசைக்குறிப்புகளை எழுதிக் கொடுத்து உடனடியாகவே ஒலிப்பதிவுக்குச் சென்றுவிடுவார் என்பதை 
ஒரு ஐதீகக்கதைப்போல சொல்லிக் கொள்கிறார்கள்.

வாத்தியத்தில் வாசித்துப்பார்ப்பதோ இசைவரிசையை காதால்கேட்டு சரிசெய்வதோ இல்லை. 
இசைக்குழு அந்த இசைக்குறிப்புகளை வாசிக்கும்போது அவை மிகக் கச்சிதமாக இணைந்து ஒரே 
இசையோட்டமாக சிறப்பாக வெளிப்படும். 
ஒத்திசைவிலும் காலக்கணக்கிலும் அவை கச்சிதமாக இருக்கும். பின்னணி இசை எங்கே தொடங்க 
வேண்டுமோ அங்கே தொடங்கி அக்காட்சிக்கு இசை எங்கே முடியவேண்டுமோ அங்கே கச்சிதமாக 
முடிந்துவிடும்.

சரிபார்த்துக் கொள்வதற்காக ஒருமுறைகூட அவர் வாத்தியங்களை தொட்டுப்பார்க்கவேண்டியதில்லை. 
அனைத்துமே அவரது மனதில் மிகச்சரியாக உருக்கொண்டிருக்கும்.

41.காட்சியை ஒருமுறை பார்க்கும் போதே மனதிற்குள் இசைவடிவத்தை யோசித்து, அடுத்த விநாடியே 
கைகளால் இசைக்குறிப்பை வாசித்துப் பார்க்காமல் எழுதி முடித்து, மற்றவர்களை வாசிக்கச் செய்வார். 
மிகத்துல்லியமாக வரும் அந்த இசை பார்ப்போரை வியக்க வைப்பதோடு கற்பனாசக்தியின் உச்சம் 
என்று பிரமித்து அவரது நண்பர் இயக்குநர் பாரதிராஜா அடிக்கடி சொல்வார்.

42. பஞ்சமுகி என்ற கர்நாடக செவ்வியலிசை ராகத்தினை இளையராஜா உருவாக்கினார்.

43. ஆதி சங்கரர் எழுதிய “மீனாக்ஷி ஸ்தோத்திரம்” என்ற பக்திப்பாடலுக்கு இசையமைத்தார்.

44. 2010 ல் இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷண்’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

45. 2012 ல்‘சங்கீத நாடக அகாடமி விருது’ வென்றார்

46. இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை ஐந்து முறை பெற்றுள்ளார். 
1985  - சாகர சங்கமம் (தெலுங்கு)
1987  - சிந்து பைரவி (தமிழ்)
1989  - ருத்ர வீணை (தெலுங்கு)
2009  - பழஸிராஜா (மலையாளம்)
2016 - தாரை தப்பட்டை (பின்னணி இசை) (தமிழ்)

47. லண்டன் ராயல் ஃபில் ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவினைக் கொண்டு, அவர் ‘சிம்பொனி’ 
ஒன்றை இசையமைத்தார். அந்த ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்களை “மேஸ்ட்ரோ” என்று 
அழைப்பர். அந்த சாதனையை முதலில் நிகழ்த்தியுள்ள ஆசியக் கலைஞர் இவரே.

48. மகாத்மா காந்திஜி எழுதிய கவிதையை  ‘ஆதித்ய பிர்லா’ நிறுவனத்தினர்  ‘இளையராஜா 
இசையில்’ பாடலாக்க திட்டமிட்டனர். பண்டிட் பீம்ஸென் ஜோஷி, 
பண்டிட் அஜய் சக்ரவர்த்தி, பேகம் பர்வீன் சுல்தானா ஆகிய மேதைகளைப் பாட வைத்து 
அப்பாடலை உருவாக்கினார். இந்திய இசை மேதை  ‘நவ்ஷத்’ அப்பாடலை மிகவும் 
பாராட்டிப் பேசினார்.

49. கோவையில்தான் எனது ஹார்மோனியத்தை 85 ரூபாய்க்கு இங்குள்ள சுப்பையா ஆசாரியாரிடம் 
வாங்கினேன்.அந்த ஹார்மோனியம்தான் இன்றும் என்னிடம் உள்ளது 
என்று அடிக்கடி சொல்வார்.

50. கமல்ஹாசன் குரலில் இருக்கும்  ‘பிட்ச்’ அபூர்வமானது.ஒரே நாளில் இரண்டு பாடல் கம்போஸ் 
செய்து அவரை பாட வைத்துள்ளார் ஒன்று... ‘சிகப்பு ரோஜாக்களில்’ வரும் ‘நினைவோ ஒரு 
பறவை’மற்றொன்று...அவள் அப்படித்தான் படத்தில் வரும் 
‘பன்னீர் புஷ்பங்களே...ராகம் பாடுங்கள்’ என்ற பாடல்.

51. நான் இசையமைப்பாளராக இருந்து எனக்கு போட்டியாளராக இளையராஜா இருந்திருந்தால்
பொறாமையால் என்ன செய்திருப்பேன் என்று எனக்கே தெரியாது என கமல்ஹாசன் குமுதம் புத்தக 
வெளியீட்டு விழாவில் பேசினார். அப்படி ஒரு திறமை படைத்தவர் இளையராஜா அவரைப் பார்க்கும் 
போதெல்லாம் அவர் திறமையின் உயரம் கண்டு பிரமிக்கிறேன் என்று பெருமை கொள்வார்.

52."How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை 
ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்த இந்த இசைத் தொகுப்பினை இசை 
மும்மூர்த்திகளில் ஒருவரான ”
தியாகராஜ சுவாமிகள்” மற்றும் மேற்கத்திய இசைமேதை ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் 
காணிக்கையாக்கினார்.

53. "Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் 
ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.

54. "ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். 
இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.

55. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசையுடன் கூடிய சிம்பொனி வடிவில் 
இசையமைத்து வெளியிட்டுள்ளார்.

56. 1994ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினாலும், 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர் 
பல்கலைக்கழகத்தினாலும் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டவர் இளையராஜா.

57. இளையராஜா புகைப்படக்கலையில் மிகத்திறமை படைத்தவர்,

58. பாரதிராஜா போன்ற நெருங்கிய இயக்குனர்களுக்கு புதிய ட்யூன்களைக்கொடுத்து இதற்கு 
காட்சியமைப்பை உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என்று சொல்லி பல பாடல்களை ஹிட்டாகக் 
கொடுத்திருக்கிறார்.

59.  பாடலாசிரியர் வைரமுத்து இளையராஜாவைப் பற்றி பேசும் போது இசையின் காட்டாற்று 
வெள்ளம் என்று வர்ணிப்பார்.

60.அரசியல் தலைவர்கள் முதல் அன்றாடக் கூலிதொழிலாளி வரை சமுதாயத்தின் எல்லா 
மட்டத்திலும் அவரின் ரசிகர்கள் பரந்து விரிந்து கிடக்கிறார்கள்.

61. இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்தில் இருந்த போது, அதனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் கூட 
தமிழகத்தில் ஹிந்தி பாடல்களின் ஆதிக்கம் மறையவில்லை. ஹிந்தி பாடல்களை கேட்பதையும் 
பாடுவதையும் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் அந்த அலையை ஓய வைத்து 
தமிழ் பாடல்களை தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தவரும் விரும்பிக் கேட்கும்படியான 
சாதனையை செய்தவர் இளையராஜா.

62. முதல் படம் இசையமைக்கும் போது இளையராஜாவின் வயது 33.

63. பெல்பாட்டம், விதவிதமான கலர் சட்டைகள், கருப்பு கண்னாடிகள் என்றெல்லாம் இருந்த 
இளையராஜா திரையுலகமே தன் பக்கம் திரும்பிய போது எளிமையான தோற்றத்திற்கு மாறிவிட்டார்.

64. இளையராஜாவின் இசைக்குறிப்புகள் இன்னும் சில ஆண்டுகளில் இசைக்கல்லூரிகளின் பாடப் 
புத்தகங்களில் இடம்பெறும் என்று பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் கூறியுள்ளார்.

65. ஒரே ஆண்டில் இளையராஜா 56 படங்களுக்கு பாடல்கள், பின்னணி இசை உட்பட இசையமைத்து
சாதனை படைதுள்ளார்.

66. ஆழ்ந்த ஞானம், நேரம் தவறாமை, இசைமேல் கொண்ட பற்று, கடின உழைப்பு, கவனம் சிதறாமை
என்று பல்வேறு உயர் எண்ணங்களால் பல கோடி இதயங்களைக் கவர்ந்துள்ளார்.

67. திரையிசையில் இதுவரை தன்னுடைய இசையமைப்பு மற்றும் பிற இசையமைப்பளர்களின் 
இசையிலும் சேர்த்து 450 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

68. திரைப்படம் தவிர பல்வேறு ஆல்பங்களில் 100 பாடல்களுக்கு மேல் இசையமைத்துப் பாடியுள்ளார்.

69. இசைஞானி என்ற பட்டம் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது.

70. உலகின் தலைசிறந்த 25 இசையமைப்பளர்களை வரிசைப்படுத்திய மிகப் புகழ்பெற்ற அமெரிக்க 
இணையதளம் இளையராஜாவுக்கு 9 வது இடம் அளித்துள்ளது. அதே இணையதளம் 
இளையராஜாவை முதல் இடத்திற்கும் அவரே என்று அறிவிக்கும் நாள் வெகு சமீபத்திலிருக்கிறது.

71. சில வருடங்களுக்கு முன் லண்டன் பிபிசி வானொலி நடத்திய கருத்துக்கணிப்பில் கடந்த 75 
ஆண்டுகளில் மிகச்சிறந்த பாடலாக இளையராஜா இசையமைத்த ’தளபதி’ திரைப்படத்தின் 
“ராக்கம்மா கையத்தட்டு”ப் பாடலை மிக சிறந்த பாடலாக அறிவித்துள்ளது.

72. இளையராஜா எழுதிய புத்தகங்கள் :

1. சங்கீதக் கனவுகள் (ஐரோப்பா பயண குறிப்புகள்)
2. வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது (புதுக்கவிதைகள் தொகுப்பு)
3. வழித்துணை
4. துளி கடல்
5. ஞான கங்கா
6. பால் நிலாப்பாதை
7. உண்மைக்குத் திரை ஏது?
8.யாருக்கு யார் எழுதுவது?
9. என் நரம்பு வீணை
10. நாத வெளியினிலே (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை, 
இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு)
11. பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்
12. இளையராஜாவின் சிந்தனைகள்.

73. 1000 படங்களைத்தாண்டி தன் இசைப்பயணத்தை தொடரும் பெருமைக்குரிய இந்திய 
இசையமைப்பாளராக உலகை வலம் வரும் இமாலய மனிதர் ”இசைஞானி இளையராஜா”

74 வது பிறந்த நாளை இன்று கொண்டாடும் ”இசைஞானி. இளையராஜா”.அவர்கள் நூறாண்டு 
வாழ்ந்து இன்னும் be ஆயிரம் படங்களுக்கு இசையமைக்க இறைவன் அருள் வேண்டி வாழ்த்தி வணங்குகின்றேன்

தோல்வியை தாங்குவது எப்படி?

வெற்றியெனும் ஆல மரத்துக்கு விதையாவது தோல்வியின் அனுபவங்களே
    
மரணத்துக்கு பிறகும் வாழ்வு உண்டா என்பது நமக்கு தெரியாது ஆனால் நிச்சயம் தோல்விக்கு பிறகும் வாழ்வு உண்டு என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.
    
வாழ்வு என்பது ஒரு எண்ணெய் தடவிய வழக்கு மரம் சாண் ஏறினால் முழம் சருக்குகிறது.வாழ்வு என்பது ஒரு சுழலும் சக்கரம் எந்த இடத்தில் புறப்பட்டதோ திரும்ப அங்கு வந்து நிற்கிறது.
      
ஆனால் முயன்றவருக்கு வாழ்வு என்பது ஒரு பரமபத விளையாட்டு ஒவ்வொரு காலடியிலும் ஒரு சிறிய அல்லது ஒரு பெரிய பாம்பு கொத்துகிறது.
     
அஞ்சாமல் அடுத்த அடி எடுத்து வைத்தால் அங்கே ஒரு சிறிய அல்லது ஒரு பெரிய ஏணி அதிட்ட தேவதையாக நமக்காக காத்திருக்கிறது.எத்தனை அற்புதமான விளையாட்டு இந்த வாழ்க்கை சுவையான திருப்பங்கள் சோகமான வீழ்ச்சிகள் சுழன்றடிக்கும் காற்று.
    
வெற்றி திருமகள் ஒரு மோசமான விலைமகள் யாரிடமும் நிரந்தரமாக நிலைப்பதில்லை நிற்பதில்லை அடிக்கடி மாலை மாற்றி கொள்கிறாள் ஆளை மாற்றி கொள்கிறாள்.
    
இல்லாத மேடையொன்றில் எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் நாம் எல்லோரும் நாமே பார்க்கின்றோம்.
    
இந்த நாடகத்திற்கு கதை வசனம் எழுதி தானே இயக்குபவன் இறைவன் அவன் சுயவிருப்பத்திற்காக காரணமே இன்றி காட்சியை மாற்றுவான்.
    
நாடகம் சுவையாக இருக்க வேண்டுமானால் கதாபாத்திரங்களையும் தன் விருப்படி மாற்றுவான் கொன்று கூட விடுவான்.
    
இவையேல்லாம் பல கவிஞர் அறிஞர்  சொன்ன கற்பனைகள் மட்டுமல்ல ஆழமாக அர்த்தமுள்ளதாக நாம் தோல்வியை தாங்கும் மனவலிமை பெறுவதற்காக ஊட்ட பட்ட ஊக்க சத்துக்கள் ஊட்ட மருந்துகள்.ஆனால் சிலருக்கு தூக்க மாத்திரைகளாக போகிறது.
     
விதி என்றோ வினை என்றோ போதித்தது தாங்குவதற்காகத்தானே  தவிர, தூங்குவதற்காக அல்ல  

கடந்தது நதி நடந்தது விதி இறந்தது பினி இனி நடப்பதை நினை எழுந்து நில் தொடர்ந்து செல்ஆண்டாண்டு அழுதாழும் மாண்டவர் வருவதில்லை ஆற்றிலே போன நீர் திரும்புவதில்லை
      
புதுமழை வரும் புது நீர் வரும் புது உயிர்கள் பிறக்கும் புது வாழ்வு மலரும் புதிது புதிதாக தொடர் தொடராக வாழ்வு நீண்ட தொலை காட்சி தொடராக தொடரத்தானே போகிறது.
     
உடல்தானேமுற்றுகிறது அது ஒரு சிறுகதை உலகம் என்றும் முற்றுவதில்லை முடிவதில்லை அது ஒரு முடியாத முழ நீள தொடர்கதை தொடரும் தொடர்ந்து கொண்டே இருக்கும் கருவறை தொடங்கி கல்லறை வரை எத்தனை எத்தனை இழப்புகள்  நாம் அடைந்த கணக்கை விட இழந்த கணக்கு அதிகம்.
    வெற்றி இழப்பு,
    பொருள் இழப்பு,
    பணம்  இழப்பு,
    மானம் இழப்பு,
    உறுப்பு இழப்பு,
    உயிர்  இழப்பு,
      
இழப்புகளுக்கு கணக்கேயில்லே தோல்விகளுக்கு முடிவேயில்லை.
      
ஆனால் நீ எதை இழந்தாய் நீ எதையாவது கொன்டு வந்தாயோ?இங்கிருந்து தானே எடுத்து கொண்டாய் ஆசை பட்டாய் அனுபவித்தாய் விட்டு விட்டு கிளம்ப வேண்டியதுதானே என்று கேட்கிறானே நியாயம்தானே.
        
சொல்வது சுலபம் வயிற்றுவலி நமக்கென்று வரும் போது சிரிப்பது கடினம் ஆனால் உடற் பயிற்சி போல இது மன பயிற்சி செங்கல்லில் அடித்து அடித்து கையை பலப்படுத்துவது போல சுயமாக தானே சொல்லிக் கொன்டு வந்தால் தன்னை தானே தயார் படுத்தி வைத்து கொண்டால் துயரம் கொஞ்சம் குறையும் இதுவே மனதை வலுபடுத்தும் பயிற்சி
         
தோல்வியை தாங்குவது என்பது வேறு அதை ஏற்று கொள்வது என்பது வேறு. விரக்தியை தாங்கும்   மனபக்குவம் வேண்டும் இது ஒரு நீர் அணைக்கட்டு போல பலரது கொள்கலன் சில அடி மட்டம் ஆனால் சிலரது தாங்கும் கொள்கலன் பல நூறு அடி உயரம் இதையே கொள்கிறன் தாங்கும் சக்தி என்கிறோம்

நமது சகிப்பு திறனும் விரக்தி குறைவும் நமது மனதினுடைய பலத்தை வலுப்படுத்துகிறது   ஆனால் சிலர் சுலபமாக தோல்வியை இயல்பாக ஏற்று கொள்கிறார்கள் நான் தோற்கத்தானே பிறந்தேன் என்று வேதனையாக விட்டு விடுவார்கள் இது தோல்வியை தாக்குவதல்ல.சாண் போனாலன்ன முழம் போனாலன்ன என்ற விரக்தி சோகம் இதில் எந்த பயனுமில்லை
     
அதே போல் தோல்விக்கு தயாராக இருப்பது என்பது வேறு தோல்விக்கு அச்சபடுவது என்பது வேறு
   
தயார் நிலை என்பது தீப்பிடித்தால் அணைப்பதற்கு எச்சரிக்கையாக இருப்பது போல எதிர் மறையாக நிச்சயம் நான் தோற்று விடுவேன் என விரக்தியாக பேசுவது ஒடுகிற நீரில் தானே குதித்து தற்கொலை செய்வதற்கு ஒப்பாகும்
      
எனவே நிச்சயம் வெல்வோம் ஒருவேளை தோற்றுவிட்டால் அது ஒரு வருத்தமில்லை மீண்டும் முனைப்பும் போராடி வெல்வோம் இது போன்ற எண்ண ஒட்டங்கள்தேவை. சிறு வயதிலே இருந்து இந்த பயிற்சியும் முயற்சியும் நமது இயல்பான சுபாவமாக அமைந்து விடுவது மிக சிறப்பானது.    

தோல்வி மனப்பான்மையும்,தன்னை தானே தோற்கடித்து கொள்வதும் ,எதிர்மறையான சிந்தனைகளும்,தோல்வி பற்றிய அச்சமும் தோல்விக்கு பிறகு அவமான உணர்வும்மனசோர்வும்,தாழ்வுமனபான்மையும் தன்னம்பிக்கை குறைவும்,தற்கொலை முயல்வும் போன்ற பல மன நல பாதிப்புகள் ஆபத்தானவை.
       
ஒருவரது திறமையையும்,செயல் திறனையும் முடக்க கூடியது.கல்வி,வேலை, நட்புறவு,உடலுறவு போன்ற பல அத்யாவசய தினசரி நடவடிக்கைகளையும் பாதிக்ககூடியது.
     
எனவே தோல்வி என்பதும் இழப்பு என்பதும் தவிர்க்க முடியாதது ஆனால் தாங்க கூடியது என்பது தெளிவாக உணரப்பட வேண்டும்.
      
அதே போல் தோல்வியும்,இழப்பும் நிலையானதும் நிரந்தரமானதும் அல்ல அது ஒரு சுழற்சி மீண்டும் லாபமும் வெற்றியும் உறவும் அன்பும்,பதவியும்,பொருளும் ஏதாவதொரு மாற்று வழியாக நாம் வெல்வோம் என்ற நம்பிக்கையும் முயற்சியும் தொடர வேண்டும்.
      
உலக இயல்பும்,வரலாறுகளும்,ஆழ்ந்த சுய அனுபவங்களும் பெற்றவரதுஆலோசனைகளும் அறிவுரைகளும் வாழ்வின் நுட்பமான நுணுக்கமான செய்திகளை நமக்கு உணர்த்துகின்றன.
      
ஆனால் பெரும்பாலோனோர்களுக்கு வெளுத்ததெல்லாம் பால் போல ஒரு வெகுளித்தனமான அறியாமை தொடர்கிறது.தோல்வி என்பதையே இயற்கைக்கு புறம்பானது என்பது போல‌ எண்ணத்தில் இருப்பார்கள்.தான் இது வரை தோற்றதில்லை என இருமாந்திருப்பார்கள் தோல்வியை தாங்க மாட்டேன் என்று சொல்லி தனக்கு தானே இறுக்கமான வலை பின்னி கொள்வார்கள்.
              
நாம் ஒரு செய்தியை நுனுக்கமாக புரிந்து கொள்ள வேண்டும் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் உலகம் பல ஆயிரம் விதமான நுட்பமான திறமைகளை எதிர்பார்க்கிறது எல்லா திறன்களும் எல்லா
மனிதரிடமும் இருக்க வாய்ப்பில்லை.
              
உதாரணமாக உலோகங்கள் மற்றும் அதன் கலவைகளிடம் நாம் பல இயல்பியல் குணங்களை எதிர்பார்க்கிறோம் சில குணங்கள் சில உபயோகங்கள் உள்ளது ஆனால் அதுவே சில இடங்களுக்கு உபயோகமில்லாது போய் விடுகிறது உதாரணமாக வன்மையான இரும்பும்மென்மையான தங்கமும்
வெவ்வேறு விதமான குணாதிசயங்களை உடையவை அவற்றின் உபயோகத்துக்கு தகுந்த மாதிரியும் புகழும் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது.
இதே மாதிரியாக மனிதன் பழக்கப்படுத்தும் விலங்குகளும் அமைகின்றது.பூனையும் ஆனையும் அதன் புகழும் விலையும் குணத்துக்கு தகுந்த மாதிரி அமைகிறது.
                  
இது இயல்பான மனித சமுதாய அமைப்பிலும் காணப்படுகிறது உடல் உழைபாளிகளை விட அறிவு ஜீவிகள் புகழும் பணமும் அடைகிறார்கள் ஆனால் இயற்கையின் படைப்பை நாம் குறை கூற முடியாது.  


                                
உடலின் ஒவ்வொரு அங்கமும் போல யாவரும் அத்யாவசயமானவர்கள்.இதயக் குழாயாகட்டும் மலக்குடலாகட்டும் இரண்டுமே முக்யமானவை புகழும் இக‌ழும் தற்கலிகமானவை.
                    
தோல் மருத்துவரை விட இதய மருத்துவர் புகழடைவது இயல்பு ஆனால் எவரும் தாழ்ந்தவரில்லை.
         
தெரு கூட்டுபவர் முதல் தேசிய கொடி நாட்டுபவர் வரை கொள்கையளவில் சமமே ஆனால் புகழிலும் பொருளிலும் சிலர் உயர்வடைவது உலக இயல்பு.மெல்ல மெல்ல இந்த இடைவெளி குறைந்து சமதர்ம சமுதாயம் மலரும்.
எனவே வெற்றி தோல்வி என்பது நம்மை தாண்டி பல நூறு நுட்பமான பிண்ணனி உண்டு என உணர வேண்டும்.அதை பயின்று மென்மேலும் உயர முயல வேண்டும்.தன்னைத்தானே நொந்து கொள்வது தவறு.அதற்காக இல்லாத ஒரு காரணத்தை சொல்லி தன்னை ஏமாற்றி கொள்வதும் தவறு.
                 
நமது தெளிவான சிந்தனைகளால் எதிர்பாராத ஏமாற்றத்திற்கும் தயாராக வேண்டும் எமாற்றத்தை ஏற்று எதிர்த்துபோராடவும் தயாராக வேண்டும்.
                
தோல்விக்கு பின் தோல்வி மனப்பான்மை தாழ்வு மனப்பான்மை துயரம் சோர்வு தளர்வு விரக்தி சுய பச்சாதாபம் குற்ற உண்ர்வு தன்னம்பிக்கை குறைவு ஏற்படுவது இயல்பு உடல் காயத்தை விட மனக்காயத்தின் வலி அதிகம். ஆனால் வீரர்கள் தமது முயற்சியால் சுய பயிற்சியால் இரு விதமான காயங்களையும் தாங்கும் வலிமையை வளரித்து கொள்கிறார்கள்.

                              தோற்றவர் கூட வெல்லலாம்
                               துவண்டவர் என்றும் வெல்லமுடியாது
                               மாண்டவர் கூட மீளலாம்
                               சோர்ந்தவர் என்றும் எழ முடியாது
         
நாளை நமதே வெற்றி நமதே என்ற ஜெய ஜெய கோஷங்கள் உற்சாகமூட்டும் பானங்கள்.
தன்னம்பிக்கையுள்ள தலைவர்கள் ஊக்க மருந்துகள்  
       

          
ஊக்கமூட்டும் எழுத்துக்கள் பேச்சுக்கள்,கவிதைகள் காவ்யங்கள் யாவும் அற்புதமான மருந்துகள்.
             
பெற்றோர் உற்றோர் ஆசிரியர் நண்பர் யாவரும் ஊட்டும் நம்பிக்கை வார்த்தைகள் மனம் என்ற
 மரம் செழித்து வளர போடப்படும் உரங்கள்.
           
மாறாக வதைகளும் வசைகளும் குறை கூறலும் குற்றம் சாட்டுதலும் இழிவுபடுத்தலும் அழிவு தரும் வழி முறைகளாகும் இந்த முறைகளை ஆசிரியர் பெற்றோர் உற்றார் அயலார் அனைவரும் கை விடுவது மிக ந்ல்லது.
        
எனவே தோல்வியை விட பிறரது விமர்சனங்களுக்கு வேதனைப்படுவதே ஆபத்தானது ஆகவே மற்றவர் யாவரும் எதிர்மறையான விமர்சனங்களை தவிர்த்து ஆக்கபூர்வமான மற்றும் ஊக்கமளிக்கும் உற்சாக
வார்த்தைகளை கூறுவது நல்லது.
                              
வென்றவரை கை தட்டி பாராட்டுவோம் தோற்றவரை கை தூக்கி ஆற்றுபடுத்துவோம்.வென்றவரை தோள் தட்டி ஊக்கபடுத்துவோம் பிறகு தோற்றவரை தோள் நிமிர்த்த பாடுபடுவோம்.
               
எனவே தோல்வியை தாங்கும் மனபக்குவம் மிக அவசியம் மேலும் பிறரது தவறான விமர்சனங்களை மறப்பதும் மிக மிக அவசியம்.
           
இறந்த பின் post martum செய்வது போல தோல்விக்கு பின் தெளிவான சுய ஆலோசனை சுய பரிசோதனை செய்வது அவசியம்.
                
நடு நிலையான ஆராய்வில் ந‌மது மீது குறைகள் தவறுகள் இருந்தால் முழுமனதோடு ஏற்று கொண்டு அதை மாற்ற முயல்வோம்.
             
அல்லது நம்மை மீறிய இடம்,காலம், நேரம்,சூழல்,அதிட்டம்,போன்றவை காரணமாக இருந்தால் மீண்டும் முழு உத்வேகத்துடன் மறு முயற்சி செய்வோம்.
                      

பல நேரங்களில் நமக்கு நம்பிக்கையான ந்ண்பர் உறவினர் கற்றோர் மற்றோரிடம் ஆலோசனை கேட்பது தவறோ,பலவீனமோ அல்ல. நமக்கு புலப்படாத ஒரு பெரிய விஷயம் அவர்களுக்கு தெரியலாம்.
           
தேவையானால்அடிப்படையானநல்லகுணங்களையோ,கொள்கைகளையோ மாற்றாமல் சில புதிய பாதைகளில் புதிய அணுகு முறைகளில் முயற்ச்சித்தால் மீண்டும் வெற்றி பெறலாம்.

நேரத்தை பராமரிப்பது எப்படி?

நிகழ்காலத்தில் வாழ்பவரே நேரம் என்ற வார்த்தையை சொல்வார் எதிர்காலத்தை சிந்திப்பவர் காலம் என்றே பேசுவார்.

காலன் என்றே நமது மொழி போற்றுகிறது  நம் தலைக்கு மேல் தொங்கும் கத்தி போல காலனும்,காலமும் நேரமும் நம்மை துரத்துகிறார்கள்.
       
நவீன நூற்றாண்டுகளில் பூமி அதே வேகத்தில் தான் சுற்றுகிறது.

ஆனால் பூமியில் வாழும் மனித மனத்துன் சுழற்சி வேகம் அவனது வாழ்வினது எண்ண ஓட்டத்தின் வேகம் செயலாக்கத்தின் ஓட்ட வேகம் அதிகரித்து வருகிறது.
       
அயந்து நாட்கள் நடத்த கிரிக்கெட் போட்டி அய்ந்து மணி நேர வேகத்தில் நடக்கிறது.வாகனங்களின் வேகம் பல நூறு கிலோ மீட்டரை தாண்டி விட்டது.
        
இந்த காலகட்டத்தில் ஆமை வேக மனிதன் அரையடி நடக்கும் முன் நவீன மனிதன் பல நூறடி சென்று விடுகிறான்.
       
வளரும் நாடுகள் என்றால் வளராத நாடுகள் என்றே உள் அர்த்தம் வளர்ந்த நாடுகளின் வெற்றிக்கு மனித வளத்தின் மிக முக்யமான ” நேரம்” என்ற இயற்கை தந்த அருள் கொடையைசரியாக பயன்படுத்துவதே என்று சொன்னால் அது மிகையாகாது.
      
மனித வளத்தில் மூன்று முக்யமான பேச்சாற்றால், எழுத்தாற்றால், செயலாற்றல் என்பதுடன் நேரத்தை பயன்படுத்தும் ஆற்றலும் மிக அத்யாவசயமானது.
      
நேரத்தை பயன்படுத்துவது எப்படி என்று படிப்பதற்கு முன் நேரத்தை வீணடிக்காமல் இருப்பது எப்படி என்று பழகுவது தான் மிக சிறப்பானது.
      
பிறவிப் பெருங்கடலில் மூழ்கி முத்தெடுத்த  உன்னத வெற்றியாளர்களின் மிகப்பெரிய ஆற்றல் அது பலர் கரையை தேடி அலையோடு மிதந்து கொண்டிருக்க,ஆற்றல் உள்ள சிலர் கிடைக்கும் அந்த நேரத்தில் மூழ்கி முத்து எடுத்து வரலாற்றின் பக்கங்களில் தன்னை பதிவு செய்து கொள்கிறார்.
     
இவர் மிகவும் இளம் பருவத்திலேயே நிலம், நீர்,தங்கம்,போல நேரம் என்பது ஒரு செல்வம்  அது ஒரு சொத்து என்பதை புரிந்து கொண்டவர்கள், தோற்றதில்லை இவர்கள்.
       
இறைவன் நமக்கு தந்த அங்கங்களை விட புலன்களை விட அதற்கு தந்த ஆயுளே அற்புத கொடையாகும்.
      
20 ஓவர் கிரிக்கெட்டில் ஒவ்வொரு பந்தும் ஒவ்வொரு ஓட்டமும் அதி முக்யமானவை அது போலவெற்றியாளனுக்கு ஒவ்வொரு நொடியும் ஒரு கோடி கிலோ தங்கம் போல.
      
மனித வள முன்னேற்றத்திற்கு வள்ளுவம் போல ஒரு நல்ல வேதம் வேறொன்றுமில்லை.
     
நேரம்,காலம் இந்த இரண்டு பொருள்களும் தனிமனிதனுக்கு மட்டுமல்ல சமுதாய முன்னேற்ற்த்துக்கே ஆதாரமானவை.
     
பஞ்ச பூதங்களில் ஆற்றல் மிக்க இந்தக்காலம் அற்புத வாய்ந்த ஆறாவது பூதம்.
      
ஏனென்றால் இந்த பஞ்சபூதங்களின் ஆற்றலின் காலங்களுக்கு எல்லை கிடையாது.
      
ஆனால் ஒரு தனிமனிதனுக்கு இவற்றின் ஆற்றலை உபயோகிக்கும் காலம் என்பது வாழும் நாள் என்ற ஆயுட்காலத்திற்கு மட்டுமே குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது.
     
இந்த குத்தகை காலம் என்பது சில பத்து வருடங்களே அதிலும் சிலருக்கு துரதிட்ட வசமாக இன்னும் குறைந்த ஆண்டுகளே.
     
ஆகவே நேரம் காலம் என்பதின் மதிப்பு மதீப்பீடு செய்ய முடியாதது.மனிதர்களில் இதை
              அறிந்தவர் குறைவு.
              புரிந்தவர் மிகக்குறைவு
              உணர்ந்தவர் சிலர் ஆனால்
              உணர்ந்தபின் அதை உபயாகித்தவர் மிகச்சிலரே

மனிதரின் சில வகைகளாகப் பார்க்கலாம்
1. நேரத்தை மதிக்காதவர்கள்,
2. நேரத்தை வீனாக்குபவர்கள்,
3. நேரத்தை கொல்பவர்கள்,
4. நேரத்தை காசாக்கியவர்கள்,
5. நேரத்தை சேர்த்தவர்கள்,
6. நேரத்தை உபயோகிப்பவர்கள்,
7. நேரத்தை உயர்த்தியவர்கள்,
8. நேரத்தைபுகழாக்கியவர்கள்,
9. நேரத்தை இல்லாதவர்கள்,
10. நேரத்தை வியாதியாக்கியவர்கள்.
    
நேரம் காலம் என்பது நாம் பிறந்ததும் உடனே இறைவன் நம் கையில் கொடுத்தனுப்பிய சொத்து நம்முடன் ஆயுள் வரை வரும் ஆருயிர் நட்பு,துணைவி பலரும் நம்மிடம் இப்படி ஒரு ஆயுதம்,ஒரு செல்வம்,ஒரு நண்பன்,ஒரு மனைவி உடனேயே ஒட்டியிருப்பது தெரியாமலே குருடராக இருப்பார்.
   
சோம்பலிலும் மடியிலும்  உண்டு உறங்கி ஓய்ந்து கிடப்பார்.மற்றும் ஒருவர் வீணான விரயமான பொழுது போக்குகளில் பொன்னான நேரங்களை புண்ணாக்கி அழிகிறான் கிடைப்பதறகரிய “பொழுதுகளை”போக்குவதற்கு படாதபாடு படுகிறார்.
    
தேங்காயை உடைத்து உண்ணத் தெரியாத நரிபோல உருட்டிக் கொண்டிருக்கிற பலனில்லாத கிரைம் நாவல்களில் உழல்பவர் சின்னத்திரை,பெரியதிரை,சீரியல்,மசாலாக்களை ருசித்து ஆயுளெனும் அற்புத பொக்கிஷங்களை அரிக்க விடுபவர் பலர் தான் விளையாடுவதை விட்டு விட்டு அடுத்தவர் ஆடுவதை மகிழ்பவர் பலர் அடுத்த குழு இன்னும் ஆபத்தானது,
     
பொழுது போக்குகிறேன் என்று திட திரவ வாயுப் பொருட்களில் நீச்சலடித்து தன் பொழுதை மட்டுமல்ல உயிரையும் கொல்பவர்கள் பலர்.
    
இப்படி ஒவ்வொரு குழுவும் போட்டி போட்டு பொழுது போக்குவதில் யார் தேவலை என்று சொல்ல முடியாத அளவில் வாழ்கிறார்கள்.
    
இதில் நவீன காலங்களில் வினோதமான கட்சி ஒன்று உண்டு இவர்களை WORKAHOLIC என்பார்கள்.ஆல்ககாலுக்கு அடிமையாவதை ஒரு கொள்கைதத்துவமெனும் இஸமாக கொண்டவர்கள் போல வேலை என்பதை உடும்பாக பிடித்துக் கொண்டு உடலையும் நேரத்தையும் அபயோகம் செய்பவர் சிலர்  வேலையொன்றுமில்லை ஆனால் நிற்க நேரமில்லை என்பார்கள்.
கையுலும் காலும் மூக்கும் நாக்கும்அமைதியில்லாத வீண் பரபரப்பில்தானும் அல்லலுற்று அடுத்தவரையும் அவஸ்தைப் படுத்துகிறது இவர் கொள்கை
சரி இதுவரை கால நேரத்தை கற்பழிப்பவரைப்பார்த்தோம் ஆனால் அதை எப்படி சரிவர பராமரிப்பது?

  தனிமனிதனுக்கும்
  குடும்பத்துக்கும்
  சமுதாயத்துக்கும்
  தேசத்துக்கும் ஏன் உலகத்துக்குமே
உருப்படும்படியான பொருளாக மாற்ற என்ன செய்ய வேண்டும்?

இந்த ஆறாவது பூதமான
நேரம் என்ற ஆற்றலை கையில் பிடித்து
நிரந்தரமான பயனுள்ள பொருளாக மாற்ற மனிதரால் முடியும்
எங்கு தொடங்குவது? எப்படி தொடங்குவது?

இதற்கு எறும்பு செய்யும் உபதேசம் சிறந்தது
அது எதுவும் சொல்வதில்லை தானே செய்து காட்டுகிறது
நேரம் என்பது ஒரு செல்வம்,பொன் போன்றது
நேரம் என்பது ஒரு ஆயுதம்,சக்திவாய்ந்த ஆற்றலுள்ளது
நேரம் என்பது ஒரு ஞானம்,மதிப்பீடு இல்லாத அரிய அறிவு
சிறிய வயதிலிருந்து இந்த செய்திகள் யாவும் நம் உடலோடு உயிரோடு வளர்ச்சியோடு பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்த செல்வத்தை,ஆற்றலை,ஞானத்தை சிரைத்து சீரழிக்கும் சில வியாதிகள் அவை தவிர்க்கப்பட வேண்டும்.
1.வீணாக்கி விரயமாக்குவது.
2.திட்டமில்லாது மனம் போன போக்கில் செயல்படுவது
3.வாய்ப்பு,சந்தர்ப்பம், நேரம்வரும்போது தவறவிடுவது
4.தாமதம் எனும் இழிவான பழக்கத்தில் வீழ்வது
5.காலம் நேரம் மீனம் மேசம் பார்ப்பது
6. நாளை,அபுறம் என்று தள்ளிப்போடுவது
7.அர்த்தமில்லாத பரபரப்பில் நேரத்தை சித்ரவதை செய்வது
8.உண்டு உறங்கி சோம்பிக்கிடப்பது
9.பலனில்லாத பயனில்லாதஅற்பச் செயல்களில் பொழுது போக்குவது
10.தீய பழக்கங்களில் நேரத்தையும் வாழ்வையும் அழிப்பது.
இந்தக் “காத்திருப்பது” என்பது ஒரு துருபிடித்த வியாதி

நேரம் பார்ப்பது
தள்ளிப்போடுவது
தாமதப்படுவது அது பெற்ற பிள்ளைகள்

நீ வான வில்லுக்காக காத்திருக்கலாம்
அது உனக்க்காக காத்திருக்காது

நாம் என்னும் படுக்கையை விட்டு எழவில்லை என்று
சுற்றும் சூர்யனும் பூமியும் நின்று கொண்டிருக்காது

காலம் உனக்காகக் காத்திருக்காது உன்
காலடிச் சுவடுகள் கூட வராது என்பார் கவிஞர்

நல்ல காலத்தை எதிர்பார்த்து காத்திருப்பவரால் ஒரு
நல்ல கார்யமும் நடக்காது

காலம் போனால் திரும்புவதில்லை
காசுகள் நம் உயிரைக் காப்பதில்லை

காலன் என்ற கொடுங்கோலன் அவன்
கனப் பொழுதும் காத்திருப்பதில்லை

ஆன்றோர் அறிஞர் அனைவரும்
காத்திருப்பது தாமதப்படுத்துவது 
தவிர்க்கப்பட வேண்டியது என கோபத்துடன் எச்சரிக்கை செய்கிறார்கள்.

நினைவுக்கு வரும் நல்ல யோசனை கூட
ஈ பறக்கும் நொடியில் மறந்து விடுகிறதே

சரியான செயல் செய்ய
எல்லா நேரமும் சரியான நேரம் தானே

எந்நாளை விடவும் இன்னாள் நன்னாள் தானே
நன்றே செய்,இன்றே செய்

உடனே இப்போதே என துரிதப்படுத்துகிறார்
ஏன்?
தள்ளிப்போடுவது,தாமதப்படுத்துவது
நேரம் பார்ப்பது,காத்திருப்பது,
தாமதம்,என்ற கிளைகள் யாவும்
சோம்பல்,அச்சம், நம்பிக்கையின்மை என்ற‌
பெற்றோர் பெற்றெடுத்த பிள்ளைகள்.

தள்ளிப்போடுவதும்,தவிர்ப்பதும் பிரச்னையை தீவிரப்படுத்தும்
நாளை பார்க்கலாம் என்ற மனோபாவமே
அனைத்து பிரச்னைகளின் பிறப்பிடமாகிறது
தள்ளிப்போடும் ஒரு சிறிய செயல் கூட‌
நாளை நம‌க்கு தொல்லை தரும் நோயாகக் கூடும்

வெயில் வரும் போது கூரையைப் பழுது பார்த்து விடு என்பார்

இப்பொழுது இல்லையென்றால் 
எப்பொழுதும் இல்லையென்று எச்சரிக்கின்றார்

பகலில் விளக்கு போல‌
காலம் தவறிய கார்யம் பயன்படாது

பருவத்துக்கு முன்பு நட்டாலும்
           பின்பு நட்டாலும் பயன் தராது

ஒரு நிமிடம் தாமதமாக போய் தோற்று தவிர்பதை விட‌
ஒரு மணி நேரம் முன்னால் போவது அவமானமாகாது

தாமதம் என்ற வியாதிக்கு அடுத்தது
நேரத்தை விரயமாக்குவது
மற்றும் சோம்பல் என்ற தொற்று வியாதிகள்
ஒரு நொடி நேரத்தை உபயோகம் இல்லாது
வீணடிப்பவன் வாழ்வின் மதிப்பீடு அறியாதவன்
அன்று காலத்தை நான் வீணாக்கினேன்
இன்று காலம் என்னை வீணாக்கிவிட்டது எனப்புலம்புப‌வர்பல‌ர்
நேரம் என்பது ஒரு நல்ல ஆசிரியராக நமக்கு கற்பிக்கிறது
ஆனால் கற்கத்தவறுபவர்களை இரக்கமின்றி கொன்றுவிடுகிறது
நமது அரிய நேரம்  பறவை போல் இறக்கை கட்டி பறக்கிறது
பயனின்றி விரயமாக்கும் ஒவ்வொரு நொடியும்
மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாக வரலாறு பதிவு செய்யும்
நமது நேரத்தை வீணாக்குவது விட‌
அடுத்தவர் நேரத்தை வீணாக்குவது அதை விடக் குற்றமாகும்
சிலர் அறைக்குள் வந்தால் பயனுள்ளது
பலர் அறையை விட்டுச் சென்றால் அதை விட நல்லது
தாமதம், நேரத்தை விரயம் செய்வது
போன்ற தீமைகளுக்கு ஆதாரமாக இருப்பது
நேரத்தின் அருமை அதன் பயன் பற்றிய அறியாமையே
காலம் பொன் போன்றது என்று பல்லாயிரம் பேர்
திருப்பி திருப்பி சொன்னாலும் எவரும் அதை கண்ணாக மதிப்பில்லை
நமது பெரிய பொக்கிஷங்களிலேயே
விலை மதிப்பில்லாத அரிய செல்வம் நமது நேரமே
நேரம் என்பதை பலரும்
காலில் கட்டிய விலங்கு என பரிதவிக்கிறார்
அதை கையில் கிடைத்த ஆயுதமென பயிற்சி எடுத்தால்
தோல்வி கிடையாது

உண்மையில் சரியான படி திட்டமிட்டு விரயமில்லாது உபயோகமாக‌ பயன்படுத்தினால் நமது தேவைக்கு அதிகமாகவே நேரம் கிடைக்கிறது நேரத்தை திறமையாக உபயோகித்தவர்  எவரும் தோற்றுப் போனதில்லை

ஒவ்வொரு நொடியும் நமது இறுதி நேரம் என்பது போல முக்யம் கொடுத்து செயல்பட வேண்டும் மனோவியாதிகளில் மிகவும் தீவிரமானது சோம்பல் எனும் நோயே

சூர்யன் எழுந்த பின்னும் எழாதவன் வாழ்வும் விடியாமலே போகிறது முப்பொழுதும் உண்டு உறங்கி முடமாகி மீடமாக சாவதற்கா பிறந்தோம்

சோம்பேறி சுகமும் ஏமாறும் மனமும் அறிவிழந்து அழியும் உறக்கத்துக்கும் சோம்பலுக்கும் இன்பமென‌ அடிமையானவன் உருப்படுவதில்லையே அதிர்கின்ற வீனையின் நரம்புகளில் தூசி உட்காருவதில்லை உழைக்கின்ற மனிதன் நரம்புகளிலே நோயும் வருவதில்லை நீந்தத் தெரியாதவன் நீரிலே மூழ்குவதென‌ வாழத் தெரியாதவன் துயரிலே மூழ்குவான் காலத்தை காலண்டரில் கிழிக்காதீர்கள்

ஒவ்வொரு நொடியும் விழிப்போடு செயல்படுவோம் அதுவே இறுதிவார்த்தை