Friday, February 24, 2017

அலுவலகத்தில் இப்படியெல்லாம் இருந்தா... நீங்க ஸ்மார்ட் ஸ்டாஃப்!

காலேஜ் கிளாஸ்ல போன் பயன்படுத்துற பழக்க தோஷத்துல வேலை செய்ற இடத்துலயும் மீட்டிங்ல போன் யூஸ் பண்றீங்களா? ஃபர்ஸ்ட் ஹவர்க்கு லேட்டா போனது மாதிரி தினமும் ஆபீஸ்-க்கும் லேட்டா போறீங்களா? இல்ல, உங்க மேனேஜர ‘இம்ப்ரெஸ்’ பண்ணணும்னு உடம்பு சரி இல்லைனாலும் ஆபீஸ் போயிட்டு, அப்பறம் முடியாம உங்க டேபிள்லயே தூங்கிடுறீங்களா? இதுல ஏதாவது உங்களுக்கு சம்பந்தப்பட்டதா இருக்கா? உங்களுக்காகத்தான் இந்த தொகுப்பு.

ஆபீஸ்ல கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை பழக்க வழக்கங்கள் இருக்கு. வேலை செய்யும் இடத்துல ‘ஸ்ட்ரெஸ்’ இல்லாம இருக்குறதுக்கும், வேலையைப் பிடிச்சு செய்றதுக்கும் இதெல்லாம் ரொம்ப முக்கியம். ஃபாலோ பண்ணிங்கன்னா, வொர்க் லைஃப் அப்டியே ஸ்மூத்தா போகும்.

வேலை

லாஸ் ஆப்ஃ பே, அட்டென்டன்ஸ் என்று யோசிக்காமல் உடம்பு சரியில்லை என்றால் விடுப்பு எடுத்துக்கொண்டு உடம்பைக் கவனியுங்கள்.

வேலைக்கு, அதுவும் முக்கியமாக சந்திப்புகளுக்கு சரியான நேரத்துக்கு செல்லுங்கள். தாமதமாக செல்வது உங்கள் வழக்கம் ஆகிவிட்டது என்றால், நீங்கள் செல்ல வேண்டிய நேரம் முப்பது நிமிடங்கள் முன்னாலேயே என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு மணி நேர சந்திப்பு என்று கூறிவிட்டு மூன்று நான்கு மணி நேர சந்திப்பாக மாற்றாதீர்கள். நிறைய நேரம் தேவைப்படும் என்றால் முன்னரே அனைவருக்கும் கூறுவது அவசியம்.

 சந்திப்புகளின்போது போனை ஆஃப் செய்வது நல்லது. போனில்தான் தொழில் செய்கிறீர்கள் என்றால் ‘வைப்ரேட் மோடில்’  வைத்து அழைப்பு வரும் போது மட்டும், வெளியே சென்று பேசிவிட்டு வரவும்.

சந்திப்புகளில் நீங்கள் பேசி முடித்துவிட்டால் கூட, அடுத்த நபர் பேசுவதை தெளிவாகக் கேட்க வேண்டும். மற்றவர் பேசும் போது இ -மெயில் பார்ப்பது, போன் பேசுவது எல்லாம் செய்யவே கூடாது. 

வேலை

நீங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தில் சந்திப்புகளை வைத்து அருகில் இருப்பவருக்கு சிரமம் ஏற்படுத்த வேண்டாம். சந்திப்புகளை தனி அறையில் நடத்துங்கள்.


உங்கள் டெஸ்கில் உணவு உண்பதைத் தவிர்த்து விடுங்கள்.

வேலை செய்யும் இடத்தில் போன் பேசும் போது மெதுவாக பேசுங்கள். முடிந்தவரை பெர்சனல் கால் பேசாமல் இருப்பது நலம்.

வேலைக்கு செய்யும் போது பெர்ஃப்யூம் அதிகமாக பயன்படுத்த வேண்டாம். நல்ல உணர்வை அது தராது.

வேலைக்கு ஏற்றார்போல உடை அணியுங்கள். அந்நியமான உடை வேலை செய்யும் எண்ணத்தைக் கெடுக்கும்.

மற்றவரின் பொருள், ஒரு பேனாவாக இருந்தால் கூட கேட்காமல் எடுக்க வேண்டாம்.

யாரையும் பார்த்து உரக்கப் பேச வேண்டாம். மெதுவாகப் பேசி புரிய வைப்பதே சிறந்தது.

இதெல்லாம் சரி, மத்தவங்க வெறுப்பேத்தினா என்ன பண்றது?

தவறான பழக்க வழக்கங்களுக்கு மதிப்புக் கொடுத்து நீங்களும் அதைத் திரும்ப செய்யாதீர்கள்.

அமைதியாக இருந்து, தவறான பழக்கத்தைக் கொண்டிருப்பவரை மாற்ற முயற்சி செய்யுங்கள். ஒரு நல்ல வார்த்தை அவர்களின் மனதை மாற்றும்.

தனியாக அழைத்துச் சென்று, தீயபழக்கங்கள் குறித்து எடுத்துக் கூறி, அதை மாற்றுவதற்கு உதவுங்கள்.

இதையெல்லாம் தாண்டி ஒருவர் சிரமம் ஏற்படுத்தினால் மட்டும் அலுவலகத்தில் புகார் செய்யுங்கள். அதுவும் அந்த நபருக்கு களங்கம் ஏற்படாமல்.

Tuesday, February 21, 2017

எதிர்மறை எண்ணங்களைத் தகர்த்தெறிய சில வழிகள் ...

ஒவ்வொரு செயலுக்கும் இன்னொரு எதிர்வினை இருக்கும். அது நல்லதாகவும் இருக்கலாம்; கெட்டதாகவும் இருக்கலாம். இப்ப நியூட்டன் நியாபகத்துல வராரா? ''For every action there is an equal and opposite reaction'' என்று ஒன்பதாம் வகுப்பில் படித்திருக்கிறோமே, அதுதாங்க. ஒவ்வொரு செயலைச் செய்யும் பொழுதும், அதைச் செய்யலாமா வேண்டாமானு குழப்பமாக இருக்கும். ''லவ் பண்ணலாமா, வேண்டாமா?'' என்பது போல தான் இதுவும். இந்த ‘வேண்டாம்’ என்று சொல்லும் எதிர்மறை எண்ணம் இருக்கு பார்த்தீங்களா, அதை எப்படி அகற்றலாம்னு நாம யோசிப்போம். அப்படி அகற்றணும்னு நீங்க யோசனை செய்தவர்களாக இருந்தால், இதைப் படிச்சாலே போதும்… முதல் படியைத் தொட்ட மாதிரி....   

•    எப்பொழுதுமே நல்ல செயல்கள் நடந்து கொண்டிருக்கிறதென்றால், அதை அதன் பாட்டிற்கு விட்டுவிட வேண்டும். அப்படி விடும்பொழுது, நம்முடைய உள்மனதில் ஒரு குரல் ஒலித்து கொண்டே இருக்கும். அது என்ன சொல்லும்னு, என்னைவிட உங்களுக்கே தெரியும். நல்லதைக் கெடுப்பதற்கென்றே அது பேசும். அப்படி அது பேசுவதை எல்லாம் நாம் காது கொடுத்து கேட்காமல், நமக்கு நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் செயல்பட்டு வருகிறோம் என்றாலே கொஞ்சம் பெட்டராக இருக்கும். 

•    அந்த உள்மனம் பேசுகின்ற எதிர்மறை சொற்களுக்கு எதிராக, நீங்க எதையாவது செய்து பாருங்களேன். அது தானாகவே... கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிவிடும். 

•    ஒரு குறிப்பிட்ட சொற்களை நீங்கள் அதிகம் பேசுவீர்கள். அதைக் கொஞ்சம் உல்டாவாக்கிப் பாருங்கள். அதாவது என்னால் முடியாது, மாட்டேன், நடக்காது, வேண்டாம்; இப்படிப் பேசுவதையெல்லாம் கொஞ்சம் பாசிட்டிவாக மாற்றிப் பாருங்களேன். அந்த எதிர் சொற்கள் எல்லாம் காணாமல் போய்விடும். 

•    எதையும் பிளான் செய்து செயல்படுத்த வேண்டும். நாம் ஒரு பிளான் இல்லாமல் ஒரு செயலைச் செய்தால், இந்த எதிர்மறை எண்ணம் இருக்குப் பாருங்க... அது போதும் விட்டு விடு என்று முட்டுக்கட்டை போடும்; அப்புறம் நாம அதை ஃபாலோ செய்ய நேரிடும். அதனால் எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருந்தால், அதைத் தொடர்ந்து நடக்கும் செயல்களும் சிறப்பாக முடிவடையும். அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியில் நீங்கள் மூழ்கிப் போவீர்கள் என்பதே நிதர்சனம். 

•    சத்தமாகப் பேசப் பழகிக் கொள்ளுங்கள். அதற்காக நடு ராத்திரியில் எழுந்து கத்தக் கூடாது; வெளியில் ஒரு சிலவற்றை சத்தமாகப் பேசினாலே, நமக்குள்ளே சன்னமாகப் பேசுகின்ற அந்த எதிர்மறைக் குரல் காணாமல் போய்விடும்.  பாசிட்டிவ் எண்ணத்தைக் கொண்டு, நெகட்டிவ் எண்ணத்தை நீங்களே சுயமாக முறியடிக்க முடியும். அதற்கு ஒரு தூண்டுகோலாக உங்கள் கான்ஃபிடெண்டான பேச்சு இருக்கும்.

•    உங்க எண்ணம், முழுமையான நீங்களில்லை; அது உங்களது வெற்றிக்கான ஒரு தூண்டுகோல் தான்; எனவே அதனை நல்லதாக வைத்துக் கொள்ளுங்கள். பிறரது எண்ணங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பது போல, நம்முடைய எண்ணத்தையும் பிறரால் கட்டுப்படுத்த முடியாது. அதனால் நம்மை, நம் எண்ணங்களை நாம்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்; எனவே உங்க எதிர்மறைகளை, மனசுக்கு ஆதரவு தரும்படி மாற்றினால், உங்களுக்கு அதைவிட பெஸ்ட் ஃபிரெண்ட் யாராகவும் இருக்க முடியாது.

ரொம்ப சிம்பிள்தான்... வெற்றிக்கான வழிகள் எல்லாமே சிம்பிளாதான் இருக்கும் பாஸ்! 

பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.


1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.
2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.
3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.
4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்.
5. புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்.
6. உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம்

1.#பிறந்தன_இறக்கும்; #இறந்தன_பிறக்கும்
உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.

2. #தோன்றின_மறையும்; #மறைந்தன
தோன்றும். உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.

3. #பெருத்தன_சிறுக்கும்; #சிறுத்தன. #பெருக்கும்.
சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.

4.#உணர்ந்தன_மறக்கும்; #மறந்தன_உணரும்
மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.

5.#புணர்ந்தன_பிரியும், #பிரிந்தன_புணரும்
ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.

6. #உவப்பன_வெறுப்பாம், #வெறுப்பன
உவப்பபாம் விரும்பிப் போனால் விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். மனம் உணருமா?

Monday, February 20, 2017

பெண்களின் #எதிர்பார்ப்புகள்…!!

♥இவ்வுலகில் உள்ள பெரும்பாலோர் , கணவனும் , மனைவியாய் இணைந்த பின் பல வருடங்களாக குடும்பம் நடத்தி இருந்தாலும், அநேக கணவர்மார்களுக்கு தெரிவதில்லை, தன் மனைவிக்கு என்ன தேவை?என்று. அவள் தன்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறாள்? என்பதையும், அவர்கள் ஒரு காலமும் புரிந்து கொள்வது இல்லை.

♥அவர்கள் மனதில் எண்ணுவதெல்லாம், தன் மனைவியுடன் உடல் ரீதியான உறவை வைத்துக்கொண்டால் மட்டும் போதும் ., மற்றபடி மனைவிகள், நம்மிடம் வேறு எதை பெரிய அளவில் எதிர்பார்த்து விடப்போகிறார்கள்? என்று, அவர்கள் தப்பான கணக்கு போட்டு விடுகிறார்கள். ஆனால் , கணவர்மார்களே! பெண்களின் தேடுதலும், அவர்களது எண்ணங்களும் வித்தியாசமானவைகள்.

♥எப்படியென்றால், கணவன்மார்கள் எல்லோரும், தங்கள் மனைவியின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருக்கும் வரை, உங்களுக்கு மட்டுமே வேலைக்காரியாக இருக்கும் வரை, நீங்களும் சேர்ந்து குடும்ப பிரச்சினைகளை தாங்கும் வரை, நீங்களும் சேர்ந்து குழந்தைகளை வளர்க்கும் வரை, உங்களின் விருப்பங்களை உங்கள் மனைவியின் மேல் திணிக்காத வரை, ஒவ்வொரு பெண்ணும் தனது கணவருக்கு அன்பான மனைவியாகத்தான் இருப்பாள். ஆனால், இதற்கு நேர்மாறாக, கணவரானவர் தனது மனைவியிடம் நடந்து கொண்டால், அவளது மனம் மிகவும் வேதனைப்படும்.

♥குடும்ப நிம்மதி மொத்தமாக குலைந்து விடும். எனவே, ஒரு குடும்பத்தில் கணவன் நிம்மதியை இழந்தால், அவன் மட்டுமே பல காரியங்களை இழப்பான். ஆனால், ஒரு மனைவியானவள் குடும்பத்தில் நிம்மதியை இழந்தால், அந்த குடும்பமே , நிம்மதியை இழக்க நேரிடும். எனவே, எல்லா கணவன்மார்களும், இனியாவது தன் மனைவி,தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதை உணர்ந்து செயல்பட்டால், குடும்பமானது இன்பமாக இருக்கும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும், கணவனிடம் மனைவிமார் என்ன எதிர்பார்க்கிறார்கள்? என்பதை, சற்று விளக்கமாக பார்ப்போம்..

♥தங்கள் மனம் கவர்ந்த கணவரிடம் இருந்து, ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பது, வெறும் உடல் ரீதியான உறவை மட்டுமல்ல., அவர்களது மன ரீதியான உறவையும் விரும்புகிறார்கள். எந்த பெண்ணும், உறவுடன் தொடர்பை முடித்துக்கொள்ள விரும்புவது இல்லை. அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது.

♥அந்த தேடுதல், உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது. இதை நிறைய பேர் புரிந்து கொள்வதில்லை. கணவன்மார்களே! மனைவியை புரிந்து கொண்டால் மட்டுமே உறவுகள் வலுப்படும்., அங்கு இனிமையும் கூடும். பொதுவாக, நிறையப் பெண்களுக்கு பேசுவது என்றால், மிகவும் பிடிக்கும். அதுவும், தன் அன்பான கணவரிடம் இருந்து வரும் ஆறுதலான பேச்சை நிறையவே எதிர்பார்ப்பார்கள், பெண்கள். ஆனால், ஆண்களோ, அதை புரிந்து கொள்வது இல்லை. தன் மனைவியிடம் அதிகம் பேசுவதும் இல்லை.

♥அடுத்ததாக மனைவிகள் விரும்புவது, பேசிக்கொண்டே நடப்பது. ஏனென்றால்,. இந்த பேச்சின் மூலம்தான், அன்பை, நட்பை பகிர்ந்து கொள்ள முடியும் என்று ஒவ்வொரு பெண்ணும் எண்ணுகிறாள். எனவே, அது அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. இப்படி அவர்கள் விரும்புவது போல, நீண்ட தூரம் நடந்த படி பேசுவது என்பது, இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இது இருவருக்கும் ஒரு அருமையான அனுபவமும் கூட. மேலும், நாம் ஒருவரை ஒருவர் எந்த அளவுக்கு நேசிக்கிறோம் என்பதை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த பேச்சு நடை உதவும். அடுத்ததாக, சில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை அதிகமாக இருக்கிறது.

♥ஏனென்றால், தங்களது கணவர், நம்மை விரும்புவாரா? விரும்ப மாட்டாரா? என்ற கவலை அவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். எனவேதான், ஒவ்வொரு பெண்ணும், தங்களை கூடுதலாக அழகாக்கிக் கொள்ள விரும்புவார்கள்., அதற்காக கூடுதலாக முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். ஆனால் பெண்கள், தன் கணவரை நேசிக்க தொடங்கி விட்டால், அவரின் புறத்தோற்றம் பற்றி பெண்கள் கவலை படுவது இல்லை., இது ஒரு நிதர்சன உண்மை. ஆனால், தன்னுடைய புறத்தோற்றத்துக்காக, பெண்கள் அதிகம் கவலைப்படுவார்கள்., தன் கணவர் எப்போதும் தன்னை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

♥எனவே, இதை ஆண்களும் புரிந்து கொண்டு அவர்களது கவலையைப் போக்க முயல வேண்டும். மேலும், உங்கள் மனைவி ஒரு வேளை அழகில்லாமல்இருநதால், அவர்கள் அதற்காக கவலைப்படாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மனைவியிடம் பேசும் போது, “உன் அழகு உருவத்தில் இல்லை, மனதில்தான் இருக்கிறது, உனது பேச்சுதான் உனக்கு அழகு, உனது சிரிப்புதான் உனக்கு அழகு” என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பேச வேண்டும்.

♥அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், கணவர்கள் கட்டாயம் நடந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண்களுக்கு ஏற்ற துணைவர்களாக இருக்க முடியும். கணவன்மார்களே, இதுதான், ஒவ்வொரு பெண்ணும், உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பதாகும். எனவே, அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, உங்கள் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும்., உங்கள் எதிர்பார்ப்புக்களும், எதிர்பார்ப்பது போலவே இருக்கும்..!!!.

Saturday, February 18, 2017

வெற்றிக்கு கைகொடுக்கும் லீடர்ஷிப்!

“இந்த உலகில் 97% பேர் மற்றவர்களின் கட்டளைக்குக் கீழ்ப்படிபவர்களாக அல்லது பின் தொடர்பவர்களாக இருக்கிறார்கள். ஒன்று முதல் மூன்று சதவிகிதம் பேர் மட்டுமே வழிநடத்துபவர்களாக இருக்கிறார்கள். வழிநடத்துபவர்களுக்கும், பின்தொடர்பவர்களுக்குமான இடைவெளி மிகப் பெரியதாக இருக்கிறது. 

இப்படி இருப்பது ஒரு சமூக அநீதி. பொதுவாக, நிறுவனங்களில் 20% பேர் மட்டுமே உற்பத்தியில் முழுத் திறனையும் செலுத்துபவராக இருக்கிறார்கள். 80% பேர் ஓரளவுக்கு திறனைச் செலுத்துபவராகவும், பணியில் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பில் இருப்பவராகவும் இருக்கிறார்கள். இந்த இடைவெளியை விடப் பெரிய அளவில் வழிநடத்துபவர்களுக்கும் பின்தொடர்பவர்களுக்குமான இடைவெளி இருக்கிறது. 

இந்த இடைவெளியில் இருந்து வெளியே வருவதற்கான தூண்டுதலும் உத்தியும் இருந்தால், நீங்களும் மிகப் பெரிய லீடராகவும், தொழிலில் மிகப் பெரிய வெற்றியும் பெறலாம்” என்கிறார்கள் பெர்சோனா லீடர்ஷிப் கன்சல்டிங் நிறுவனத்தின் தலைவர் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் துணைத் தலைவர் சலீன் அமாண்டா லூயிஸ். 

“ஒரு நிறுவனத்தின் தனிநபர் திறனையும் தகுந்த முறையில் மேம்படுத்துவதன் மூலம், பணியாளர்களைத் தலைவர்களாக்கி, முதலிடமும் பெறமுடியும்” என்றவர்கள், அதற்கான வழிமுறைகளையும்  சொன்னார்கள்.  

 கிடைமட்டத் தலைமையும் செங்குத்துத் தலைமையும்!

‘‘செங்குத்துத் தலைமை (Vertical Leadership) முறைதான் நீண்ட காலமாக வழக்கத்தில் இருந்து வந்தது. இப்போது கிடைமட்டத் தலைமை (Horizontal Leadership) முறை நடைமுறைக்கு வந்திருக்கிறது. முதலிடம் பெற நினைப்பவர்கள் கிடைமட்ட முறையின் மூலம் மிகப் பெரிய அளவில் முன்னுக்கு வரமுடியும். இதற்கு நீங்கள் தெளிவான முறையில் உத்திகளை வகுக்கவேண்டும். உத்திகளை மேம்படுத்துவது (Strategy), பயிற்சி (Coaching), பிராண்டிங் (Branding), மார்க்கெட்டிங் (Marketing) என்ற நான்கு படிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். 

இதில் உத்திகளை வகுப்பதுதான் முதன்மையானது. உத்திகளை வகுக்காமல் வெறுமனே மார்க்கெட்டிங் செய்தாலும் பயனளிக்காது. உத்திகளை வகுப்பது, அந்த உத்திகளைச் செயல்படுத்துவதற்கான பயிற்சியை மேற்கொள்வது, பிராண்டிங் செய்வது, அதன்பின்பு மார்க்கெட்டிங் செய்வது அவசியம்.  

 மாறிவரும் தலைமை!

தலைவர் பணி என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருகிறது. இன்றைக்கும் தலைமை என்பது எல்லா நிலைகளிலும் இருக்கவே செய்கிறது. தற்போது ஒருவரின் அதிகாரம் என்பது அவருடைய வருமானத்தை வைத்து முடிவெடுக்கப் படுகிறது. ஒரு காலத்தில் குடும்ப அளவில் கணவர் என்பவர் உழைத்துப் பணம் ஈட்டுபவராக இருப்பார். அவர்தான் குடும்பத்தை வழிநடத்துபவராகவும் இருப்பார். ஆனால், இன்றைக்குக் கணவருக்கு இணையாக மனைவியும் சம்பாதிக்கிறார். குடும்பத்தில் உள்ள பிள்ளைகளும் சம்பாதிக்கிறார்கள். இதனால் குடும்ப அளவில் வழிநடத்துபவரின் பண்பு மாறி வருகிறது. 

 கீழிருந்து மேலே வரும் தலைமை 

நிறுவனங்களில் காலம் காலமாக வழிநடத்தும் லீடர் என்பவர் மிகவும் உயர்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டு நிர்வாகம் செய்வார். அவர் உத்தர விடுபவராகவும், தேவையைச் சொல்பவராகவும், பணியாளர்களைக் கட்டுப்படுத்துபவராகவும் இருப்பார்.அவர் பொருளாதார அளவில் உயர்ந்த நிலையில் இருப்பார். 

இந்தத் தலைமைப் பதவிக்கு வருபவர்கள் சின்ன சின்னத் தடைகளைத் தாண்டி வரவேண்டும். அதாவது, சிறிய வேலையில் இருந்து படிப்படியாக உயர்ந்து பெரிய பதவிக்கு வருபவராக இருக்க வேண்டும் என்கிற நடைமுறை பல காலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது, எல்லோரும் மேலே வரத் தான் ஓடிக்கொண்டும், சுழன்று கொண்டும் இருக்கிறார்கள். ஏற்கெனவே தலைமைப் பதவியில் இருப்பவர்களும், பெரிய அளவில் வளர்ந்தவர்களும் தங்களுடைய வளர்ச்சியையும்  பதவியையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவே தங்களுடைய முழு பலத்தையும் பயன்படுத்துவார்கள்.  

 புதிய பாணி

 இந்தப் போராட்டங்களுக்கு மத்தியில் நிறுவனங்களும், தனிநபர்களும் கிடைமட்ட முறையில் அதிரடி முடிவுகளை எடுத்து உலகத்தின் பார்வையை தன்மேல் விழவைத்து இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, ரிலையன்ஸின் ஜியோ அறிவிப்பு. ஒரே சமயத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து இந்திய தொலைத் தொடர்புத் துறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார் முகேஷ் அம்பானி. சரியான முறையில் உத்தியையும், பிராண்டையும் உருவாக்கி வியாபாரத்தில் தனித்து நிற்கிறார். இதன் மூலம் ஜியோ ஒரு லீடராக மாறி இருக்கிறது. 

இதைப் போலவே, 2015-ம் ஆண்டு வரை யாருக்குமே தெரியாமல் இருந்தவர் ட்ரம்ப். அமெரிக்கத் தேர்தலில் அதிரடியாகக் களம் இறங்கி வெற்றி பெற்று இருக்கிறார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் திடீரென அரசியலில் களம் இறங்கி வெற்றி பெற்றிருக்கிறார். 

சரியான உத்திகளைக் கையாண்டு அதிரடியாகக் களம் இறங்கினால், வெற்றி பெறலாம் என்பதற்கு இவை எல்லாம் முன்னுதாரணங்கள். இவர்களைப் போல் நீங்களும் அதிரடியாகக் களம் இறங்கினால், நீங்கள் செயல்படும் துறையைக் கதி கலங்கவைக்க முடியும். 

 கடைப்பிடிக்கப்பட வேண்டியவை

1. உங்களுடைய கனவையும், குறிக்கோளையும் வரையறை செய்யுங்கள். 

2. உங்களுடைய திறனையும், என்ன செய்தால் உங்கள் வளர்ச்சியின் கிராப் மேல் நோக்கிச் செல்லும் என்பதையும் அடையாளம் காணுங்கள். 

3. உங்களுக்கு என்ன தேவை என்பதைப் பாருங்கள்.

4. உங்களை அடையாளப்படுத் துங்கள்; உங்களுடைய பிராண்டை செய்தியாக்குங்கள். 

5. உங்களுடைய பிராண்டை விற்பனையாக்குங்கள்; உங்களுடைய அங்கீகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். 

அங்கீகாரம் கொடுக்கும்போதுதான் நீங்கள் வெற்றி அடைகிறீர்கள். இரைச்சலும் குழப்பமுமான சூழ்நிலைகளுக்கு இடையே நீங்கள் தனித்து தெரியும்போதும், அடையாளம் காணப்படும் போதும் நீங்கள் தலைவராக உருவாகிறீர்கள். 
 தூண்டுதல் அவசியம்

உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவேண்டியும், பிராண்ட் நிலைக்கு உயர்வதற்கும் உங்களுடைய தூண்டுதலை வெளிக்கொணர வேண்டும். உங்களுடைய தூண்டுதலை வெளிக்கொண்டு வரும்போதுதான் உங்களுடைய போட்டியாளர் களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டவும் முடியும். இதன் மூலம் உங்களுக்குத் தேவையான அங்கீகாரத்துக்கு நீங்கள் பங்களிக்க முடியும். 

இதைப் போலவே, நிறுவனத்தை முன்னுக்குக் கொண்டுவர, புதுமையும், மாற்றத்தை இயக்கு வதற்கான திறமையும் வேண்டும். எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ளாத, இலக்கை அடையக்கூடிய பரிமாணமுள்ள தூண்டுதல் வேண்டும். ஒரு தனிமனிதர் அல்லது நிறுவனத்தின் புகழ் மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவந்துவிடாது. மாறாக, பெரிய அளவில் தற்காலத்திலும், எதிர்காலத்திலும் இடர்பாட்டைச் சமாளிக்கும் வகையிலும் தூண்டுதல் இருக்க வேண்டும். 

 வழிகாட்டுதல் அவசியம்

 ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்ய வழிகாட்டுதல் அவசியம். இந்த வழிகாட்டுதல் மூலம் நிறுவனமும், தனிநபரும் சரியான அடையாளமும், என்ன புகழை அடைய விருப்பப் படுகிறார்களோ, அதனைப் பெறவும், அடைந்த புகழை நிலைநிறுத்தி, தனித்துவமிக்க தலைவர்களாக இருக்கவும் முடியும். 

 வெற்றிப்படியின் முதல்படி  

நிறுவனங்கள் முதலில் ஸ்டார்ட் அப் நிறுவனமாக வளர வேண்டும். அதன்பின்பு நடுநிலை நிறுவனமாக வளரவேண்டும். அதன் பின்பு பெரிய நிறுவனமாக உருவெடுக்க வேண்டும். அதன்பின்பு நீண்ட காலம் தாக்குப் பிடிக்கவேண்டும். இப்படி வளரும் போதுதான் எந்தவொரு நிறுவனத்தையும் ஒரு பிராண்டாக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதனை மேம்படுத்தி ஒரு புராடக்ட்டாக அங்கீகாரம் தருவார்கள். இதுகூட வெறுமனே ஒரு புராடக்ட்டாக இருந்தால் மட்டும் போதாது. இதனைக் கட்டிக்காக்க உன்னதமான தலைமைப் பண்பும் இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் நிறையவே மெனக்கெட வேண்டும். இப்படி இருந்த நிலைமைகள் எல்லாம் மாறி, இன்றைக்கு மிகப் பெரிய திட்டமிடல் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனமே உலகத்தில் உள்ள எல்லா நிறுவனங் களையும் கிடைமட்ட அணுகுமுறை மூலம் திரும்பிப் பார்க்க வைக்க முடியும்.

இன்றைக்குக் கிடைமட்டத் தலைமை அணுகு முறையைப் பயன்படுத்தி, பல திசைகளில்  இருந்தும் பல புதிய உத்திகளை மேற்கொண்டு சிறப்பாக முன்னேறி வருகிறார்கள். இந்த முறையின் மூலம் யார் வேண்டுமானாலும் எளிதாகச் சாதனை செய்ய முடியும். எனவே, இனி நீங்கள் இந்த கிடைமட்டத் தலைமை அணுகுமுறையின்படி யோசித்துப் பாருங்கள். நிச்சயம் ஒரு தலைவராக மாறுவீர்கள்’’ என்கிறார்கள் ஜான் ஆரோக்கிய சாமி மற்றும் சலீன் அமாண்டா லூயிஸ். 

இவர்கள் சொல்வது புதுமையாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறதல்லவா? 

Friday, February 17, 2017

வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை

'பதறிய காரியம் சிதறிப்போகும்' என்பார்கள். எந்தக் காரியத்திலும் ஈடுபடும்போது மனதில் பயம், பதற்றம் என்ற ஒன்று இருந்தால், அங்கு வெற்றி என்பது எட்டாக்கனி. 

பதற்றம் 

‘உயர் அதிகாரி சொல்லிவிட்டாரே... வேலையைச் செய்து முடிக்க வேண்டிய நேரம் முடியப்போகிறதே... ‘இப்படியெல்லாம் நினைத்து பயத்துடன் ஒரு வேலையைச் செய்வார்கள் சிலர். அப்படி அந்த வேலையைச் செய்தால் கிடைக்கவேண்டிய ‘அவுட்புட்’  கண்டிப்பாகக் கிடைக்காது. மாறாக, கூடுதல் டென்ஷனும், ஓர் அச்ச உணர்வும்தான் தொற்றிக்கொள்ளும்.

காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கிற இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழல், நம்மை எந்நேரமும் பயத்திலும் பதற்றத்திலும் ஆழ்த்திவிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 

தென்கச்சி கோ. சுவாமிநாதன்இந்த இடத்தில் தென்கச்சி கோ. சுவாமிநாதன் சொன்ன ஒரு குட்டிக்கதை... 

கணித ஆசிரியர் ஒருவர் இருந்தார். மாணவர்களுக்கு அவர் ஒரு சிம்ம சொப்பனம். அவர் வகுப்பறைக்குள் நுழைந்தாலே போதும்... மாணவர்களிடம் பயம் தொற்றிக்கொள்ளும். `இன்று என்ன கேள்வி கேட்பாரோ... யாரைக் கேட்கப் போகிறாரோ...’ என்று பதைபதைப்போடு காத்திருப்பார்கள். இதை அந்த ஆசிரியரும் உணர்ந்துதான் இருந்தார். இந்தப் போக்கை மாற்ற வேண்டும் என முடிவெடுத்தார். 

அன்றைக்கு வகுப்பறைக்குள் நுழைந்தவர், நேராகக் கரும்பலகையின் அருகே சென்றார். ஒரு சாக்பீஸால், ‘9-18-36’ என எண்களை எழுதினார். பிறகு மாணவர்களைப் பார்த்தார். 

“இதற்கு விடை என்ன?” என்று கேட்டார். அதோடு, "இதை நன்றாகப் புரிந்துகொண்டு பிறகு பதிலைச் சொல்லுங்கள். சந்தேகம் ஏதாவது இருந்தால் என்னிடம் விளக்கம் கேட்டுவிட்டுக்கூட பதில் சொல்லலாம்’’ என்றார்.

அவசரக் குடுக்கையாக ஒரு மாணவன் எழுந்தான். "இந்த எண்களை எல்லாம் கூட்டினால் 63 வருகிறது சார்...’’ என்றான். 

“தவறு.’’ 

“அப்படியென்றால், விடை 45 சார். 36 + 18 - 9 = 45” என்றான் மற்றொரு மாணவன். 

“இரண்டுமே தவறு. வேறு யாராவது பதில் சொல்கிறீர்களா?’’ 

மாணவர்கள் மத்தியில் சலசலப்பில்லை.

“இது என்னுடைய தொலைப்பேசி எண்ணின் முதல் பாதி, என்னுடைய தொலைபேசி எண்ணை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா என்று சோதிப்பதற்காகவே நான் அப்படிக் கேட்டேன்’’ என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“நான் கணக்கு வாத்தியார் என்றாலே, கணக்குதான் சொல்லித்தர வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்துவிட்டீர்கள். அதனால்தான் உங்கள் பதில் கணிதத்தைச் சுற்றியே இருந்தது. எதற்காகக் கேட்கிறேன் என்பதைப் புரிந்துகொள்வதற்குக்கூட நீங்கள் தயாராக இல்லை. இதற்கு அடிப்படைக் காரணம் பதற்றம். ஆக, எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், உடனே முடிவெடுக்காதீர்கள். அது என்ன, எப்படி, ஏன் என்பதையெல்லாம் நன்றாக உள்வாங்கிக்கொண்டு, சந்தேகம் இருந்தால் தெளிவாகக் கேட்டுத் தெரிந்த பிறகு முடிவெடுங்கள்’’ என்றார்.
இந்தச் சிறிய நிகழ்விலிருந்து இரண்டு விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

டென்ஷன் பயம்

ஒன்று, அவசரப்படுவதால் நமக்குக் கிடைக்கவேண்டிய பெரிய அங்கீகாரம்கூட சில நேரங்களில் நம் கையைவிட்டு நழுவிப்போகலாம்.

மற்றொன்று, ஒருவரைப் பற்றி, முழுமையான புரிதல் இன்றி, முந்திக்கொண்டு அவர் குறித்து முடிவெடுக்காதீர்கள். அது நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், நாம் அவர்களைப் புரிந்துகொள்ளாதபோது, அவர்களை மட்டுமல்ல... அவர்களின் நல்லுறவையும் அவர்களின் மூலம் கிடைக்கும் நற்பயன்களையும் சேர்த்தே நாம் இழக்க நேரிடும்.

இதைத்தான் ஆன்மிகப் பெரியோர்கள் ‘வாழ்க்கையில் சில விஷயங்களைப் பெறுவதற்கு, இறைவனின் அருள் கிடைக்கும் வரை நாம் பொறுமையோடு இருந்தாக வேண்டும்’ என்கிறார்கள். 

இந்த அறிவுரை மாணவர்களுக்கு மட்டுமல்ல... எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். எனவேதான் எந்தச் செயலில் ஈடுபடும்போதும் மனதைத் திடமாக வைத்துக்கொள்ள வேண்டும்; பிரச்னையை தெளிவாகப் புரிந்துகொண்டு வேலையைப் பதற்றம் இல்லாமல் செய்ய வேண்டும். அப்போதுதான் வெற்றி இலக்கை அடையவேண்டிய நேரத்துக்கு முன்னதாகவே அடைய முடியும். பதற்றத்தைத் தவிர்ப்போம்; எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்போம்..!

Thursday, February 9, 2017

நல்ல‍ காரியத்தின் புண்ணியம் எத்த‍னை தலைமுறைக்கு ?

நம் செய்யும் ஒவ்வொரு நல்ல‍ காரியத்தின் புண்ணியம் எத்த‍னை தலைமுறைக்கு சென்று சேரும் சேரும் என்பது குறித்து பெரியவர்கள் சொல்லி கேட்ட வரையில் :

பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தல் …….. 5 தலைமுறைக்கு.

புனித‌நதிகளில் நீராடுதல்===> 3 தலைமுறைக்கு

திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல்==> 5 தலைமுறைக்கு.

அன்னதானம் செய்தல் =====> 3 தலைமுறைக்கு.

ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்வித்தல் =====> 5 தலைமுறைக்கு.

பித்ரு கைங்கர்யங்களுக்கு உதவுவது =====> 6 தலைமுறைக்கு.

திருக்கோயில் புனர்நிர்மாணம் =====> 7 தலைமுறைக்கு.

அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திம கிரியை செய்தல்=====> 9 தலைமுறைக்கு.

பசுவின் உயிரைக் காப்பாற்றுவது =====> 14 தலைமுறைக்கு.

முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில் பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் =====> 21 தலைமுறைக்கு.

நாமும் முடிந்தவரை நல்ல‍ காரியங்கள் செய்து நமக்கும் நமது வருங்கால தலைமுறைக்கும் புண்ணியம் சேர்ப்போம்

நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும்.

நல்ல‍ காரியங்கள் செய்யும்போது அதற்கான புண்ணியம் எப்ப‍டி நமது தலை முறையினருக்கு சென்று சேருகிறதோ அதேபோல் நாம்செய்யும் தீய செயல்களுக்கான பாவங்களும் நமது தலைமுறையினருக்கு சென்று சேரும் என்பதை மறக்காதீர்.

வாழ்க்கையில் எப்போதும் வெற்றிபெற 25 டிப்ஸ்..!

வாழ்க்கையில் எப்போதும் வெற்றிபெற  25 டிப்ஸ்..!

1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.

5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.

7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.

8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.

11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.

12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.

13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.

14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.

15. மற்றவர்களின் தவறுகளை மன்னியுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.

16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.

17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.

19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.

20.உங்கள் நேரத் திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.

21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.

22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிரா தீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.

23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.

24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவது தான் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்.

25. உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் பழக்கங் களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்

பின்பற்றுங்கள்…வெற்றிபெறுங்கள்…

கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை,முயற்சிகளே!

☕ கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை,முயற்சிகளே!

☕ விடாமுயற்சி மட்டுமே நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கும்.

☕ நம் கனவுகள் நிஜமாவதும், நிழற்படமாவதும் நம் முயற்சியில் அடங்கியுள்ளது.

☕ முயற்சிகள் தவறலாம், முயற்சிக்க தவறலாமா?

☕ உழைத்துச் சிந்திடும் வியர்வை, நிச்சயம் தந்திடும் உயர்வை.

☕ உங்கள் உழைப்பை உறுதியுடன் செய்யுங்கள், வெற்றிஅருகில்தான் உள்ளது.

☕ மண்ணில் விழுவது தப்பில்லை, ஆனால் விதையாக விழுந்துமரமாக எழு.

☕ உயர்ந்து நிற்கும் மரமெல்லாம் என்றோ ஓர் நாள் விதைகளாக மண்ணில் விழுந்தவையே.

☕ வெற்றி எனும் மரம் வளர வியர்வை எனும் நீர் ஊற்றிதான் ஆகவேண்டும்.

வெற்றி : சுழன்றிடும் வெற்றி :

4 வயதில், உறங்கும் போது அறியாமல் உடையில் சிறுநீரை கழிக்காமல் இருந்தால், அது வெற்றி ! 

8 வயதில், தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !

12 வயதில், நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !

18 வயதில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !

22 வயதில், பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !

25 வயதில், நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !

30 வயதில், தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !

35 வயதில், போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !

45 வயதில், இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி !

50 வயதில், தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !

55 வயதில், நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !

60 வயதில், ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !

65 வயதில், நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி ! 

70 வயதில், மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !

75 வயதில், பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி ! 

80 வயதில், மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !

85 வயதில், உறங்கும் போது அறியாமல் உடையில் சிறுநீரை கழிக்காமல் இருந்தால், அது வெற்றி ! 

இப்படி சுழன்றுகொண்டேயிருக்கும் நிலையற்ற தன்மையுடைய வெற்றியை மட்டுமே துரத்திக்கொண்டு அறியாமையில் வாழ்தலைக்காட்டிலும், எல்லோருக்கும் நன்மையே நினைத்து, அனைவரும் சமமென எண்ணி, அந்தந்த வயதில் செய்ய வேண்டிய கடமைகளை யாருக்கும் துன்பமளிக்காமல் செய்து, மகிழ்ந்து கடந்து வாழ்தலே அர்த்தம் நிறைந்த வாழ்க்கை !!!

ரத்த அழுத்தம் என்றால் என்ன?

இந்த காலக்கட்டத்தில் இளம் வயதிலேயே, அதிலும் 20-25 வயதிலேயே நூற்றில் பத்து பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வுகள் சொளிகின்றன. இளைஞர்களின் உடல் உழைப்பில்லா, பரப்பான வாழ்க்கை முறையில் இவையெல்லாம் இயல்பாகிப்போனது. அதனால் ஏற்படும் விளைவுகளோ பயங்கரம்!

high-blood-pressure-and-life-insurance

ரத்த அழுத்தம் என்றால் என்ன?

ரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தேவையை விட மிக உயர்ந்திருப்பதை ரத்த அழுத்த நோய அல்லது ரத்தக் கொதிப்பு என்று கூறுகிறோம். இதைக் கண்டுபிடித்து குணப்படுத்தாவிட்டால் இது ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாக இந்நோய் வெளியே தெரியாது. சில வேளைகளில் மிகப்பெரிய பாதிப்பை அல்லது உயிருக்கு ஆபத்தஹி ஏற்படுத்திய பின் கண்டுபிடிக்கப்படும். எனவே இதனை சைலன்ட் கில்லர் என்றும் கூறுவர்.

இந்நோய் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

1732ல் ஸ்டீபன் ஹேல்ஸ் என்பவர் ஒரு குதிரையின் ரத்த அழுத்தத்தை சாதாரண மானோ மீட்டர் என்ற கருவியை வைத்து அளந்தார். 1896ல் சிவரோசி என்பவர் நாம் இப்போது பயன்படுத்தும் ஸ்பிக்மோ மானோ மீட்டரி கண்டுபிடித்தார். 1905ல் தான் ரத்த அழுத்தம் அதிக அளவு நோயை ஏற்படுத்துகிறது என்றும், பலர் இறந்து போகின்றனர் என்பதையும் ஒரு ஆயுள் காப்பீட்டு கழகம் தான் கண்டுபிடித்தது. அதன் பின் அனைவரது கவனமும் இதன் மீது திரும்பியது.

உயர் ரத்த அழுத்தத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?

மருத்துவம் பயின்ற இவரும் ரத்த அழுத்தக் கருவியின் மூலம் ரத்த அழுத்தத்தைக் கண்டு பிடித்து விடலாம். மேல் அளவு 140க்கு மேலேயோ அல்லது கீழ் அளவு 90க்கு மேலேயோ இருந்தால் அந்த நோயாளியை மேற்கொண்டு பரிசோதிக்க வேண்டும். ஒரே ஒரு முறை மட்டும் அதிகமாயிருந்தால் ரத்த அழுத்த நோய் உள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.வேறு வேறு சமயங்களில் மூன்று முறை பரிசோதித்த பிறகு ரத்த அழுத்தம் இருந்தால் அவரை ரத்த நோயாளி எனக் கூறலாம்.

ரத்த அழுத்த நோயை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:

1) கீழ் ரத்த அழுத்த அளவு 91 முதல் 105வரை.

2) 106 முதல் 115 வரை.

3) 115க்கு மேல் இருப்பது. இவர்களுக்கு கண்களின் விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

எதனால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது?

1) காரணம் ஏதுமின்றி வரும் ரத்த அழுத்தம் 90சதம் பேரை பாதிக்கிறது. இதற்கான காரணம் துல்லியமாகக் கண்டுபிடிக்கப்படவில்லை.

2) மீதமுள்ள 10 சதவீதம் பேர் சிறுநீரகங்கங்களில் பாதிப்பு, நாளமில்லாச் சுரப்பிகளினாலும் மற்ற காரணங்களினாலும் ரத்த கொதிப்பு நோய்க்கு ஆளாகிறார்கள்.

இரண்டாவது வகையைச் சார்ந்த 10 சதவீதம் பேரை முழுமையாக குணப்படுத்த வாய்ப்புள்ளது. அதன் காரணத்தைக் கண்டுபிடித்து அதை அகற்ற முடிந்தால் ரத்த அழுத்தம் சாதாரண நிலையை அடையும். முழுமையான உடற்பரிசோதனை மற்றும் ரத்த சோதனைகளை செய்வதன் மூலம் இந்நோய்க்கான காரணங்களைக் கண்டறியலாம். இதனால் இதய வீக்கம், இதய ரத்த ஓட்டம் குறைதல், மாரடைப்பு நோய், கை, கால் இயங்காமை சிறுநீரகங்கள் பழுதடைதல் போன்றவை ஏற்படும்.

ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படும். இதில் சீருநீரகங்கள் பழுதடைந்துள்ளனவா என்பதை ஓரளவு அறியலாம். இரண்டாவதாக ரத்தத்தில் சர்க்கரை நோயும், ரத்த அழுத்தமும் சேர்ந்து இருந்தால் மாரடைப்பும், மேற்சொன்ன நோய்களும் வரும் வாய்ப்புகள் அதிகம். ‘ஈ.சி.ஜி’ என்பது இதயம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய உதவும் பரிசோதனையாகும். இதயம் பலவீனமாக உள்ளதா என்பதை அறிய எக்ஸ்ரே பரிசோதனை உதவும். ‘எக்கோ’, ‘ஆஞ்சியோகிராம்’ போன்ற பரிசொதனைக்ளைக்கூட செய்து பார்க்கலாம்.

கர்ப்பிணிகளுக்கும் மற்றவர்களுக்கும் வரும் ரத்த அழுத்தத்திற்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?

கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒரு வகை ரத்த அழுத்த நோய் ‘பிரி-எக்லாம்சியா’ என்பதாகும். இது முதன்முறையாக கர்ப்பமடைபவருக்கே 95 சதவீதம் வரும். பல குழந்தைகள் பெற்றவர்களை விட முதல் முறையாக கர்ப்பமடைந்த பெண்களுக்கு 6 முதல் 8 மடங்கு இந்நோய் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது. பல குழந்தைகளை வயிற்றில் சுமந்தவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம். இந்நோயின் மற்ற அறிகுறிகளாக கால்வீக்கம், ரத்தகொதிப்பு, சிறுநீரில் புரதசத்து வெளியேறுதல் ஆகியவை உண்டாகும். இதை மருத்துவத்தின் மூலம் சரி செய்யாவிடில் வலிப்பு நோய் மற்றும் உணர்விழந்து போகுதல் ஆகிய பாதிப்புகள் ஏற்படும். பெண்களின் கர்ப்ப காலம் முடிந்தவுடன் இந்நோய் உடனடியாக மறைந்துவிடும். இதனை கர்ப்பகால ரத்த அழுத்தம் என்கிறார்கள்.

ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு அறிவுரை:

நீங்கள் ரத்த அழுத்த நோயாளி எனில், இந்நோய் பற்றி விரிவாக அறிந்து கொள்ளுங்கள். இந்நோயைக் கடுபடுத்தாவிட்டால் இது மாரடைப்பு, மூளை பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும். மருத்துவரின் ஆலோசனைப்படி செயலாற்றுங்கள். உப்பு அதிகமுள்ள ஊறுகாய், கருவாடு, அப்பளம், சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.உப்பு, உடலில் நீரைத் தங்கச் சுத்து இதயத்தை பலமிழக்கச் செய்யும். கால், கைகளை வீங்க வைக்கும். ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். வெண்ணெய், நெய், எண்ணெய் கலந்த உணவுப்பொருட்களை சாப்பிடாதீர்கள்.

கொழுப்பு சத்து ரத்த குழாய்களை அடைத்துக்கொண்டு மேற்சொன்ன வியாதிகளை உண்டு பண்ணக்கூடும். தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யுங்கள். ஒரு நாளைக்கு ஒரு மணிநேரமாவது வேகமாக நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இது உடலில் கொழுப்பு சத்து சேர்வதை தவிர்த்து விடுவதுடன் அழுத்தத்தையும் குறைக்கும். புகை பிடிப்பவராக இருந்தால் உடனேயே அதை நிறுத்துங்கள்.

புகை பிடிப்பவர்கள் ரத்த அழுத்த நோயினால் அவதிப்படுவதோடு மாரடைப்பு நோயினால் அவதிப்படுவதோடு அல்லாமல் மாரடைப்பு நோயினாலும் உயிரிழக்க நேரிடும். மருத்துவரின் ஆலோசனையின்றி அவர் சிபாரிசு செய்யும் மருந்துகளின் அளவை நீங்களாகவே குறைக்கவோ, அதிகரிக்கவோ கூடாது. உடல் எடையை குறையுங்கள்.

உங்களுடைய ரத்த அழுத்தத்தின் அளவை முறையாக பரிசோதித்து கொள்ளுங்கள். முக்கியமாக ஒரு முறை எழுதிக்கொடுத்த மருந்தை வாழ்நாள் முழுதும் உபயோகிக்கக்கூடாது. அடிக்கடி மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று தேவைக்கு ஏற்ப மருந்துகளை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்ய வேண்டும்.

பி.பி என்றால் என்ன? ஏன் வந்தது? என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

உங்களுக்கு பிபி இருக்கா? கட்டுப்படுத்த என்ன செய்யலாம்

உங்களுக்கு பிபி இருக்கா? ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்! டென்ஷன் ஆகக் கூடாது, நேரம் தவறாம மாத்திரை சாப்பிடணும் என்றெல்லாம் பலரும் அறிவுரை கூறுவார்கள்.

முதலில் பி.பி என்றால் என்ன? ஏன் வந்தது? என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

இதற்கு மருத்துவம் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உடலை நன்கு அறிந்தவர் நீங்கள்தான்.
ரத்த அழுத்தம் என்றால் என்ன?

இதயம் நம் உடலில் இருக்கும் ரத்தத்தை பம்ப் செய்துதான் மற்ற உடல் உறுப்புகளுக்கு அனுப்புகிறது.

அப்போது இதயம் சுருங்கி விரிவதைத்தான் ரத்த அழுத்தம் என்கிறோம். இதயத் தசைகள் சுருங்கும்போது அழுத்தம் கூடுதலாக இருக்கும்.

ஒரு மனிதனுக்கு 120/80 என்ற மில்லிமீட்டர் பாதரச அளவு இருந்தால் அவர் நார்மல்.

உயர் ரத்த அழுத்தம் என்பது எது?

120/80 என்ற நிலையைத் தாண்டி 139/89 வரை கூட போகலாம்

அதை உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முந்தைய நிலை என்பர். இந்த எல்லையையும் தாண்டி, அதாவது 140/90 தாண்டி விட்டால் அதுதான் உயர் ரத்த அழுத்தம்.

இதனை உடனே கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாக வேண்டும். இல்லாவிட்டால், ஹார்ட் அட்டாக், கிட்னி ஃபெயிலியர், சர்க்கரை நோய், கண், மூளை பாதிப்பு என்று சகல நோய்க்கும் வழிவகுத்து விடும்.

பி.பி.யைக் கட்டுப்படுத்தும் வழிகள்

உப்பு குறைப்பு

உப்பு தான் பி.பி.யின முதல் எதிரி. உப்பு அதிகம் உள்ள எந்தப் பொருளையும் தொடக்கூடாது.

இடுப்பின் அளவு

இடுப்பின் சுற்றளவை அடிக்கடி அளவிட வேண்டும். அளவுக்கு அதிகமான எடையை, சதையை இடுப்பில் வைத்திருந்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சுருக்கமாக தொப்பை போடாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

உடல் எடை


தொப்பை மட்டுமல்ல, உடல் எடை கூடினாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். பி.பி. உள்ளவர்கள் 50 சதவீதம் பேர் அளவுக்கு மீறி உடல்எடை உள்ளவர்கள். அதனால் உடல் எடையில் கவனம் வேண்டும்.

மன அழுத்தம்

கவலை, பதற்றம், பயம், மன அழுத்தம், மன இறுக்ம் இருந்தால் கண்டிப்பாக பி.பி. எகிறும். யோகா, தியானம், மூச்சு உள்வாங்கி வெளியிடுதல் போன்ற பயிற்சியின் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கப் பார்க்க வேண்டும்.

புகை பிடித்தல் கூடாது

புகை பிடிப்பது பி.பி.யின் இன்னொரு பெரிய எதிரி. ஒரு சிகரெட் புகைத்தாலே 10 மி.மீ. வரை ரத்த அழுத்தம் உயரும்.

மது

மதுவால் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. ஒரு நாளைக்கு ஒரு பெக் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் கணிசமான அளவு குறைகிறது என்கிறார்கள். ஆனால் அதுவே அளவை மீறினால் உயிருக்கே ஆபத்துதான்.

உடற்பயிற்சி

அதிகாலை நடைப்பயிற்சி (45 நிமிடம் முதல் 60 நிமிடம் வரை), சிறிது உடற்பயிற்சி செய்துவர வேண்டும்.

யோகாசனம் செய்வது மிகவும் சிறந்தது. இது மன அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது.

நாள்தோறும் உடற்பயிற்சி செய்தால் சுமார் 10 மி.மி. அளவு உயர் இரத்த அழுத்தம் குறையும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

நடைப்பயிற்சி மூச்சு இறைக்க இறைக்க நடக்கக்கூடாது. நடக்கும்பாது நடையில் மட்டும்தான் கவனம் வைக்க வேண்டும்.

நடக்கும்பொழுது பாதம் முழுவதும் ஒரே சீராக அழுத்தப்பட வேண்டும். காலை வெயிலுக்கு முன்பு நடப்பது நல்லது.

மேல்தட்டு மக்களிடம் கற்க வேண்டியவை!

செல்வம் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களை பார்த்து, பொறாமைபடத் தெரிந்த அளவிற்கு,  அவர்களது வெற்றி ரகசியங்களை அறிந்து கொள்ளத் தெரியவில்லை நம்மவர்களுக்கு!

'எவ்வளவு தேறும் இவருக்கு...' என்று கேட்கத் தெரிந்த அளவிற்கு, 'இவர்களைப் போல நாமும் வர வேண்டாமா...' என்று உந்து சக்தியாக பயன்படுத்திக் கொள்ளத் தெரிவது இல்லை.

சிலருடைய அபார வளர்ச்சிகளை பார்க்கும்போது, வெற்றியின் காரணங்கள் பிடிபடுவதில்லை. 

'எப்படித்தான் இந்நிலைக்கு வந்தனரோ...' என்று, நம்மை ரொம்பவே யோசிக்க வைக்கின்றனர்.

'சிபாரிசுக்கும், பொருளாதார உதவிக்கும், இவர்கள் எந்த அளவுக்கு நமக்கு பயன்படுவர்...' என்று தான் இவர்களை சுற்றியிருப்போர் கணக்கு போடுகின்றனரே தவிர.. 

எத்தகைய தனித்திறமைகளால், 
தங்கள் நிலைகளை தக்க வைத்தோ, உயர்த்திக்கொண்டோ செல்கின்றனர் என்கிற ஆராய்ச்சியில், இறங்குவது இல்லை.

நன்கு வளர்ந்தவர்களைப் பொறாமைக் கோணத்துடன் பார்ப்பது வயிற்றில் வைக்கப்படும் நெருப்பை போன்றது. 

இது வயிறெரியத்தான் பயன்படுமே தவிர, வேறு பயன் இல்லை.

'என்னோட தான் படிச்சான்; 
எப்பவும் கடைசி பெஞ்சுல தான் உட்காருவான்.

இன்னைக்கு என்னடான்னா, 
எங்கேயோ போயிட்டான். வயிறு பத்திக்கிட்டு எரியுது...' என்று பள்ளித் தோழர் ஒருவர், காதில் புகை வெளிவரும்படி எட்டி நின்று பேசினால், அவர் இன்னும் கீழே போகப் போகிறார் என்று தான் பொருள்.

மாறாக, நெருப்பை நெஞ்சில் வைத்து, அந்த நெருப்பை, நம் வாழ்க்கை நிலை எனும் வாகனத்தை, முன்னோக்கி தள்ளும் எரிசக்தியாகப் பயன்படுத்த வேண்டும்.

'வாடா நண்பா... நல்லா வந்துட்டே... 
உன் கூட படிச்சேன்னு சொல்லிக்கவே பெருமையா இருக்கு.

எனக்கும் வாழ்க்கையில் எப்படி ஜெயிக்கிறது, உன்னைப் போல எப்படி முன்னுக்கு வர்றதுன்னு சொல்லித் தரக் கூடாதா...' என்று அண்டிச்சென்று கேட்கிற அணுகுமுறை, எத்தனை பேருக்கு இருக்கிறது?

இப்படி கேட்டே விட்டார் ஒருவர்... உடனே, இதை பாராட்டாகவும், பூரிப்பாகவும் எடுத்து கொண்ட 
பால்ய நண்பர், 
'நல்ல நேரத்தில் வந்தே... கர்நாடகத்துல ஒரு கிளை திறக்கலாம்ன்னு முடிவு செய்து, யாரை போடலாம்ன்னு யோசிச்சிக்கிட்டிருந்தேன்.

நீதான் என், 'மேனேஜிங் பார்ட்னர்' ஓ.கே. வா?'' என்று கேட்க, திக்கு முக்காடி போனார் நம்மவர்.

இந்தளவிற்கு எல்லாராலும் நிர்வாக பங்குதாரராக முடியாவிட்டாலும், நெருங்கி பழகவாவது இடம் கொடுக்க, இந்த வாய்ப்பை கொண்டே, இவரது வெற்றி சூத்திரங்களை தெரிந்து கொண்டு விடலாம். 

பின் என்ன... புழுவாகக் கிடந்தவர்களின் உடலில், புலியின் ரத்தம் ஏறிய கதைதான்.

'நம்மை பார்த்து பொறாமைப் படும் கூட்டத்தில், இதோ என்னை கதாநாயகன் போல எண்ணி வியக்க ஒருவன் இருக்கிறான்; இவனுக்கு, நம் இதயத்தில் இனி நல்லிடம் தான்...' என்று வளர்ந்தவர்கள் இடம் கொடுக்க,
வியந்து பேசியவர் வாழ்க்கையில், புது அத்தியாயம் ஆரம்பிப்பது உறுதிதான்.

'அதெல்லாம் முடியாது... இவன் கிட்டப்போய் எவன் நிப்பான்; நான் மானஸ்தன், தன்மானம் கொண்டவன்...' என்கிற வீராப்பு மனநிலை இருக்குமானால், எட்டி நின்று இவரது வளர்ச்சிகளை வியந்து நோக்கலாம்.

மேல்தட்டு மக்களிடம், நான் பார்த்து வியந்த விஷயங்களை உங்களிடம் கூறுகிறேன்... 

இவை உங்களுக்கு பயன்படுமானால் மகிழ்ச்சி.

நன்கு வளர்ந்தவர்கள் அனைவருமே.. 

வெகு சீக்கிரம் எழுகின்றனர்.. 

நீண்ட நேரம் உழைக்கின்றனர்.. 

எப்போதும் வளர்ச்சி வளர்ச்சி என்று அடங்காமல் வலம் வருகின்றனர்.. 

எந்நேரமும், தொழில் சார்ந்த சிந்தனையாகவே இருக்கின்றனர்... 

குறைந்த உழைப்பால், நிறைந்த பலன் கிடைப்பதில் மட்டும் அதிக கவனம் செலுத்துகின்றனர்... 

மிகக் குறைவாகவே பேசுகின்றனர்... 

வார்த்தைகளை மிக நளினமாக கையாள்கின்றனர்... 

பிடிக்காவிடில், பகைத்து கொள்ளாமல், ஒதுங்கி கொள்கின்றனர்... 

எது ஒன்றையும், மனம் புண்படாதபடி மறுக்கின்றனர்.

மேல்தட்டு மக்களை வியப்பதை பொறுத்தவரை, 
ஒரே ஒரு நிபந்தனை உண்டு. 

சிலர், நியாயத்திற்கு புறம்பான வளர்ச்சிகளை அடைந்திருக்கின்றனர் அல்லவா? இவர்களை மட்டும், கரும்புள்ளி வைத்து ஓரங்கட்டி விடுங்கள் போதும்!

வீழ்வதற்கல்ல வாழ்க்கை

அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வோம்❗

🌹 வாழ்வின் எதார்த்தம் 🌹

🌴நாம் இறந்த அடுத்த நொடியே நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறி வெளியே நின்றபடி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும்.

🌴கொஞ்ச நேரத்தில் எப்படியாவது நாம் இறந்த செய்தி நம் வீட்டுக்கு போய்விடும்,  எல்லோரும் கதறியழுது காத்திருப்பார்கள்,

🌴நம்மை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு நிற்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உடனே தகவல் சென்றுவிடும்,

🌴இவ்வளவு நாள் நேராக வீட்டுக்குள் சென்ற நம்மை இன்று வாசலிலேயே வைத்துவிடுவார்கள்,

🌴இத்தனைக்கும் அந்த வீட்டை நாம்தான் பார்த்து பார்த்து கட்டியிருப்போம், 
எல்லாம் நேரம்!

🌴ஆளுக்கொரு பக்கம் மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள், வருகின்ற நண்பர்களையும் உறவினர்களையும்கூட கட்டிக்கொண்டு அழுவார்கள், நமக்கு ஒன்றுமே புரியாது, 

🌴அவர்கள் அழுவதை பார்த்து கஷ்டமாக இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்கும் நம்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களே என்று! 

🌴உங்களைவிட்டு எங்கும் போகமாட்டேன் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஆறுதல் சொல்லி கண்ணீரை துடைக்கவேண்டும் என்று துடியாய் துடிப்போம்.

🌴ஆனால் எதுவுமே முடியாது. அதுதான் மரணத்தின் மிகமோசமான துயரம்! 

🌴பாவம் எல்லோரும்  tired ஆகி tired ஆகி அழுதுகொண்டே இருக்கிறார்கள் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது! 

🌴இதோ நாம் எதிர்பார்த்த
அந்த freezer box வந்துவிட்டது, கோடைவெயிலுக்கு சும்மா குளுகுளு என்று இருக்கும்.

🌴ஆனால் நம்மால் தான் உணரமுடியாது, ஒருவழியாக உள்ளே தள்ளி அடைத்துவிட்டார்கள், இருட்டிக்கொண்டதால் வெளியே campfire ம் போட்டுவிட்டார்கள்.

🌴விடியவிடிய விழித்திருந்து உறங்கலாம் என்று நினைக்கும்போது தாரைதப்பட்டையுடன் ஒரு குரூப் வந்துவிட்டது,

🌴சொந்தபந்தங்கள் எல்லாம் வரத்தொடங்கிவிட்டன பாவிமக்கள் இந்த பாசத்தையெல்லாம் எங்கு வைத்திருந்தார்களோ தெரியவில்லை 

🌴அழுதுகொண்டே ஓடிவருகிறார்கள், இவ்வளவு நேரத்திற்கு பிறகு தமிழில் நமக்கு பிடிக்காத அந்த வார்த்தையை ஒருவன் சொன்னான், 
'பொணத்தை ' கொஞ்சம் தள்ளிவைங்க பந்தல்போடனும், 

🌴நம்ம அப்பா எவ்வளவு அழகா பெயர் வச்சிருந்தாலும் செத்தபின்னாடி பத்துகாசுக்கு தேறாது! 

🌴கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது, நம் பகையாளிகள் கூட நம்மை ரொம்ப நல்லவன் என்று certificate தருகிறார்கள், 

🌴ஒருபக்கம் தாரை தப்பட்டை
இன்னொரு பக்கம் 
மக்கள் வெள்ளத்தில் மாலை மரியாதைகள் இன்னொரு பக்கம் பட்டாசுசத்தம், எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம்!? 

🌴அத்தனைபேரு முன்னாடி அரைகுறை dress சோட நம்மை குளிக்கவச்சி மானத்தை வாங்கிட்டாங்களே!! 

🌴என்ன பண்றது 
பொணமா பொறந்தாலே இப்படிதான்! 
ஒருவழியாக எரிப்பதற்கோ புதைப்பதற்கோ எடுத்துசெல்கிறார்கள்

🌴இவ்வளவு நாள் நாம் போட்ட ஆட்டத்தையெல்லாம் சேர்த்து நாலுபேர் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்! 
கடைசியில் நம்மை எரித்தேவிட்டார்கள்! 

🌴இனி எங்காவது நாய் ஊளையிட்டால் கூட நாம்தான் வந்திருக்கிறோம் என்று புலுக ஆரம்பித்துவிடுவார்கள்!

🌴அடுத்த நாள் வீட்டுக்கு சென்று பார்த்தால்
அழுகை குறைந்து விசும்பலாகிவிட்டிருக்கும் 
அதற்கு அடுத்த நாள் விசும்பலும் குறைந்திருக்கும்.

🌴இப்படி நாளாக நாளாக நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள்! 

🌴இதில் இன்னொரு சிறப்பு செய்தி என்னன்னா நாம் இறந்ததை யாரோ
Facebook ல் போட மொத்தம்  4000 likes(விருப்பங்கள்)  அடப்பாவிகளா, 
அப்போ அத்தனைபேரும் எப்போ போவான்னு wait பண்ணிட்டே இருந்தீங்களா?! 

🌴ஒவ்வொரு இறப்பின் போதும் எத்தனையோ கனவுகளும் ஆசைகளும்  சேர்ந்தே புதைந்து போகின்றன! 

🌴இப்படி ஒவ்வொரு நாளும் சராசரியா உலகம் முழுவதும் 70,000 பேர் உயிர்துறக்கிறார்கள்! 

🌴நாளைய விடியல் நமக்கானது என்கின்ற  எந்த உத்திரவாதமும் இல்லாதபோது நாம் ஏன் பொய்யோடும், பொறாமையோடும், பகையோடும், பாவத்தோடும் நம் வாழ்க்கையை வாழவேண்டும்?

🌴அர்த்தமுள்ள  வாழ்க்கையை வாழ்வோம்❗

நிரூபியுங்கள் நீங்கள் யார் என்று ?

தாயிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.

தந்தையிடம் நிரூபியுங்கள் - கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.

மனைவியிடம் நிரூபியுங்கள் - கடைசி வரை என் காதல் உனக்கானது மட்டும் என்று.

சகோதரனிடம் நிரூபியுங்கள்- கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று.

சகோதரியிடம் நிரூபியுங்கள் - கடைசி வரை உனக்கு செய்யும் சீர் ஒரு சுமையே இல்லை என்று

மகனிடம் நிரூபியுங்கள் -கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று

மகளிடம் நிரூபியுங்கள் - கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று

வேறு எவருக்கு நீங்கள் எதை நிரூபித்தாலும் அது கடலில் கொட்டிய பெருங்காயமே. —

வாழ்க்கை போதனை

அற்புதமான வாழ்க்கை போதனை.....
இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,
சீன அறிஞர் எழுதியது,அது தமிழாக்கத்தில்.......!!!

வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!

தேவைக்கு செலவிடு........

அனுபவிக்க தகுந்தன அனுபவி......

இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்......

இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......

போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......

ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .

மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...

உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....

சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.

உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......

உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....

உன் குழந்தைகளை பேணு......

அவர்களிடம் அன்பாய் இரு.......

அவ்வப்போது பரிசுகள் அளி......

அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........

அடிமையாகவும் ஆகாதே.........

பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட
பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க
இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!

அதைப்போல

பெற்றோரை மதிக்காத குழந்தைகள்

உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......

உன் சொத்தை தான் அனுபவிக்க,
நீ சீக்கிரம் சாக வேண்டுமென,
வேண்டிக் கொள்ளலாம்
பொறுத்து கொள்.

அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,
கடமை ,அன்பை அறியார்

அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.

இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,

ஆனால்......
நிலைமையை அறிந்து
அளவோடு கொடு

எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின்
கை ஏந்தாதே,

எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி
வைத்திராதே

நீ
எப்போது இறப்பாய் என-எதிர்பார்த்து
காத்திருப்பர்.

எனவே கொடுப்பதை கொடுத்து விடு,
தரவேண்டியதை பிறகு கொடு.

மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,

மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.....!!!

அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......

பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..

நண்பர்களிடம் அளவளாவு.

நல்ல உணவு உண்டு.....

நடை பயிற்சி செய்து.....

உடல் நலம் பேணி......

குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ் இன்னும்......

இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...!!

வாழ்வை கண்டு களி...!!
ரசனையோடு வாழ்.....!!

வாழ்க்கை வாழ்வதற்கே,....!!

Monday, February 6, 2017

வாழ்கை தத்துவம்

தற்போதுள்ள மனித அறிவின் படி ஒரே ஒரு தடவைதான் எமது வாழ்கையாகும்.இவ்வாழ்க்கையானது ஒரு குறுகிய காலப்பகுதியை வரையறையாக கொண்டுள்ளது.(ஒவ்வொரு மனிதனுக்குமான இக்கால அவகாசம் சமமாக இருப்பதில்லை) இக்கால இடைவெளிக்குள் ,

வாழ்க்கை என்றால் என்ன?
ஏன் வாழவேண்டும்?
ஏன் உறவுகளை மதிக்க வேண்டும்.?
ஏன் உண்மையாக இருக்கவேண்டும்?
யாரை முழுமையாக நம்புவது?
ஏன் கோபம் வருகிறது? ஏன் சிந்திக்கின்றோம்?
எதுவும் சில காலம் தான் எனத் தெரிந்தும் பொறாமைப்படுகிறோம்?
எப்படியோ ஒரு நாள் உடலை மண்ணுக்கு கொடுக்க இருக்கிறோம், ஏன்?
இப்படியாக பல கேள்விகள் வாழ்க்கை சம்பந்தமாக எழுகின்றன?

வாழ்கை சம்பந்தமான கேள்விகளுக் விடையை பார்ப்போமானால் மனம் இதன் பிரதிபலிப்பே வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலைக்கும் நேரடியாகவே அல்லது மறைமுகமாகவே இருந்துள்ளதென்பதை அறியமுடிகிறது.

இவ்வுலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் வெற்றியை நேக்கியே தங்களுடைய அன்றாடபொழுதைக்கழிக்கிறார்கள்.

ஆனால் பல சோதனைகளுக்கூடாக வெற்றியும் தோல்வியும் மாறி மாறி  வருவதை நன்றாக அவதானிக்கமுடிகிறது. இதில் மனத்தின் வேலை என்ன? 
வாழ்கையில் வரும் சோதனைகளை மனம் கையாளுகிற விதத்தைப்பொறுத்து  வெற்றியே தோல்வியே அமைகிறது. எப்படி என்றால்?
எந்தவொரு சோதனைக்கும் மனம் முதலில் எதிர்மறையான முடிவையே எடுப்பதே காரணமாகும்.இதனால் நிச்சயமாக வாழ்கையில் முன்னேறமுடியாது

மனமானது நேர்மறையாக வரும் சோதனைகளை சிந்தித்தால் எந்தவொரு சோதனையையும் துனிந்து செய்யலாம்.இதனால் வெற்றியடைவது நிச்சயமாகும்

சில வேளைகளில் நமக்கும் விதிக்கும் நடக்கும் விளையாட்டே வாழ்க்கை எனப்படுகிறது.

ஆகவே மற்றவர்கள் ஊக்கபடுத்தவேண்டும் என்ற சிந்தனையை அகற்றிவிட்டு. மனதில் எழும் பிரச்சனைகளை ஆராய்ந்து நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக்கொண்டால் ,நமது மனம் எப்பொழுதும் வெற்றிப்பாதைக்கு நல்ல வழிகாட்டியாகவிருக்கும்.

வாழ்க்கை வாழ்ந்ததுக்கான அர்த்தம் இருக்க வேண்டு மெனில், வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்

மனிதர்கள் பல வண்ணங்களில் படைக்கப்பட்டாலும், அவர்களில் நல்ல எண்ணங்களை படைத்தவர்களே அழகானவர்கள்...... 

வண்ணங்கள் இல்லை வாழ்க்கை  மன எண்ணங்கள்தான் உண்மையான வாழ்க்கையாகும்.

இறுதியாக மனத்தின் செயல்பாடுகளினாலேதான் வாழ்கை தத்துவம் தங்கியுள்ளது.ஆகவே மனத்தினை அடக்கி ஆரோக்கிமாக வைத்திருக்கப் பழகிக்கொண்டால் வாழ்கையின் தத்துவம் நன்றாக விளங்கும்.

வாழ்க்கையில் இந்த மூன்று பேரை மட்டும் எந்நாளும் மறக்காதீர்கள்.

1. கஷ்டமான சமயங்களில் உதவியவர்.

2. கஷ்டமான சமயத்தில் விட்டு சென்றவர்.

3. கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளியவர்..!

வாழ்க்கை தத்துவத்தின் பொன்மொழிகள்
"வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதே.... உன் நிழல் கூட வெளிச்சம்  உள்ளவரைக்கும் தான்  துணைக்கு வரும்"

வேலை - வாழ்க்கை... இரண்டையும் சமச்சீராக கொண்டாட 4 ரகசியங்கள்!

கட்டுரையை படிப்பதற்கு முன்பு ஒரு பேப்பரையும், பேனாவையும் எடுத்துக்கொண்டு அமர்ந்து விடுங்கள். வாட்ச்சை பார்க்காதீர்கள். அதிகபட்சம் இரண்டு மூன்று நிமிடங்களில் கட்டுரையும் ஆக்டிவிட்டியும் முடிந்துவிடும். என்ன பேப்பர் எடுத்தாச்சா பாஸ்?

சரி, நாம் ஏன் வேலை செய்கிறோம்  என என்றாவது நீங்கள் உங்கள் மனதுக்குள் கேட்டதுண்டா? உணவு, உடை, குடும்பத் தேவைகள், உறக்கம், பாதுகாப்பாக  தங்குவதற்கு தேவையான இடம், போக்குவரத்து, தொலைத்தொடர்புகள், ஆகியவை தான்  நமக்கான அடிப்படைத் தேவைகள். இந்த தேவைகளுக்கு பணம் வேண்டும் அதற்கு நாம் எதோ ஒரு வேலையை தேர்ந்தெடுத்தது உழைத்துச் சம்பாதிக்கிறோம். அப்படி உழைத்த பின்பும் நிம்மதியில்லை என ஏன் நாம் புலம்புகிறோம்?  அதற்கு காரணம் நாம் தான். 

இந்த கார்ப்பரேட் யுகத்தில் பிடித்தோ, பிடிக்காமலோ ஒரு இயந்திரம் போல நாம் வேலை செய்ய பழகிவிட்டோம். 
 குழந்தையாக இருந்தால் சுட்டித்தனம் பண்ணிக்கொண்டு வீட்டில் இருக்கக்கூடாது சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னரானால்தான் நல்ல குழந்தை என எண்ணுமளவுக்கு வாழ ஆரம்பித்திருக்கிறோம். பேஸ்புக்கில் நம் போட்டோவுக்கு எவ்வளவு லைக்ஸ் வருகிறது என்பதை பார்த்து தான் நம் அழகை பற்றி நாம் சுயமதிப்பீடு செய்கிறோம். ஆக இந்த கார்ப்பரேட் கலாச்சாரத்தில் நம்மை இயக்குவது நாம் கிடையாது.

இப்படிப்பட்ட வேலையையும், குடும்ப சூழலையும் எப்படி கையாளுவது என்பதே பலருக்கு புரியாத புதிராக உள்ளது. வேலையையும், வாழ்க்கையையும் ஒரே சமநிலையில் வைத்திருக்க இந்த நான்கு மந்திரங்கள் உங்களுக்கு கைகொடுக்கும். இவை உங்களின் செக் லிஸ்டில் இருந்தால் நீங்கள் மிஸ்டர் ஃபர்பெக்ட் பாஸ்! 

1. பிடித்த வேலையைத் தான் செய்வேன்!

உங்கள் வேலையை நீங்கள்  சிறப்பாக செய்யவேண்டுமெனில் நீங்கள் உங்களுக்கு பிடித்த வேலையை தேர்ந்தெடுப்பது தான் ஒரே வழி என்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ். நமக்கு பிடித்த வேலை எவ்வளவு உயரமானதாக, சாத்தியம் குறைந்ததாக இருந்தாலும் அதை எட்டிப்பிடிக்கவேண்டியது நாம் தான். நமக்கு பிடித்த வேலையை நாம் செய்யவில்லை என்றால் நாம்  வாழ்க்கையில் சரியான பாதையில் பயணிக்கவில்லை என்று பொருள். வெற்றிக்கு ஒரே வழி கடினமாக உழை என சிறுவயதில் ஆசிரியர்கள் சொல்வார்கள்.ஆனால்  கடினமான உழைப்பை விட புத்திசாலித்தனமான உழைப்பு தான் ஒருவனுக்கு உயர்வை தரும். புத்திசாலித்தனமாக வேலை செய்யும் ஒருவனால் மட்டுமே எந்தவொரு வேலையையும் குறித்த நேரத்துக்குள் முடிக்க இயலும். நமக்கு பிடித்த விஷயத்தை மட்டுமே இயல்பாக நாம் புத்திசாலித்தனமாக யோசித்தது செயல்படுவோம். எனவே உங்களுக்கு எந்த வேலை பிடிக்குமோ அதை தேர்ந்தெடுத்தாலே பாதி ஸ்ட்ரெஸ் காலி. 

2. நேர மேலாண்மை 

வேலை செய்வது என்பது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்குத்தான். ஆனால் அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்யக்கூட நேரமில்லாமல் உழைப்பதில் எந்த பயனும் இல்லை. அம்மாவிடம் நலம் விசாரிக்கவோ, குழந்தைக்கு ஆசை முத்தம் தரவோ கூட நேரமில்லாமல் உழைத்து என்ன பிரயோசனம். எனவே ஒரு நாளில் உங்களது வேலையை பொறுத்தது இவ்வளவு நேரம் தான் வேலைக்கு செலவழிப்பேன் என உறுதியெடுங்கள். ஒரு மெஷின் போல உழைத்தால் உங்களை  ஒரு இயந்திரமாக மட்டுமே அலுவலகமும், வீட்டில் இருப்பவர்களும் கருதுவார்கள் எனவே வேலைக்கும், குடும்பத்துக்கும் எப்போதும் துரோகம் செய்யாமல் நேர்மையாக இருங்கள். வாழ்வு வளமாகும்.

3. குடும்பம் முக்கியம் 

வீட்டில் இருக்கும் உறவுகளுக்கு எப்போதும் போதிய முக்கியத்துவம் கொடுக்க தயங்காதீர்கள். குறிப்பாக அம்மா- அப்பா,  உங்கள் பார்ட்னர், குழந்தைகள் ஆகியோருக்கு  முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் மேல் அக்கறை கொண்ட குடும்பத்தினர் மேல்  நீங்களும் அக்கறை உள்ளவராக மாறுங்கள். ஒவ்வொரு மாதமம் சராசரியாக நான்கு நாட்களாவது  குடும்பத்தோடு செயல்படுங்கள். வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் வாட்ஸ் அப், பேஸ்புக், மெயில் போன்றவற்றுக்கு அதிக முக்கியதத்துவம் கொடுக்காதீர்கள். அலுவலக உறவுகளை அலுவலகத்தோடு முடித்துக்கொள்ளுங்கள்.அலுவலக வேலையை எக்காரணம் கொண்டும் வீட்டில் செய்யாதீர்கள்.சமூக வலைதள நண்பர்களுடன் அதிகபட்சம் ஒரு மணிநேரத்துக்கு மேல் செலவிடாதீர்கள்.இணையத்துக்கு முடிந்தவரை  வீட்டில் தடை போடுங்கள். குடும்பத்தோடு ஒன்றாக இணைந்து சாப்பிடுங்கள். சுகமோ, துக்கமோ மனம் விட்டு வீட்டில் உள்ளவர்களிடம் பேசுங்கள். பெரும்பாலான விவாகரத்துக்கு காரணமே கணவன் மனைவியை மதிக்காததும், மனைவி கணவனை மதிக்காததும் தான். எனவே விட்டுக்கொடுத்து புரிதலோடு வாழுங்கள். குழந்தைகள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். கேண்டிகிரஷ்ஷுக்கு பதிலாக உங்கள் குழந்தைகளோடு விளையாடுங்கள். ஒருவர் வீட்டில் சந்தோஷமாக இருந்தால் அலுவலகத்தில் வேலையை திறம்படச்செய்ய முடியும் என்பது சைக்காலஜி ரகசியம். 

4. உங்களை மீட்டெடுங்கள்

உங்கள் பயணம் எதை நோக்கியது?  உங்களுக்கு பிடித்தது எது? உங்களுக்கு பிடிக்காதது எது? என உங்களை பற்றி முதலில் நீங்களே ஒரு தாளில் நேர்மையாக எழுதுங்கள். இப்போது உங்களை எப்படி வடிவமைக்க வேண்டுமோ அப்படி வடிவமையுங்கள். உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் தான் கதை, திரைக்கதை, இயக்கம் எல்லாம் செய்ய வேண்டும். உங்களுக்கு உங்களை பிடிக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். உங்களுக்கு  உலக சினிமா பார்க்கும் விருப்பம்  இருந்தாலும் சரி, பிரியாணி செய்ய வேண்டுமென ஆசை இருந்தாலும் சரி, எது ஆரோக்கியமான விஷயமோ அதை நிச்சயம் செய்யுங்கள். தினமும் உங்களுக்கென தனி நேரம் ஒதுக்குங்கள். அந்த நேரத்தை உங்கள் கேரியர் வளர்ச்சிக்கோ, பொழுதுபோக்குக்கோ  எதுவாக வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அது உங்கள் விருப்பம்.

தமிழ்நதியின் பார்த்தீனியம் - ரத்த வரலாற்றின் சிறுதுண்டு!

எப்போதுமே ஈழத்துப் படைப்புகளுக்குத் தமிழ் இலக்கியத்தில் தனி இடமுண்டு. அவ்வளவாக நெருக்கடிகளைச் சந்திக்காத தமிழ்நாட்டுப் படைப்பாளிகள் எழுதும் எழுத்துக்கும் கணந்தோறும் நெருக்கடிகளைச் சந்திக்கும் ஈழத்தின் படைப்புகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உண்டு. ஈழத்துப் படைப்பாளிகளில் முக்கியமானவர் தமிழ்நதி. கவிதைத் தொகுப்புகளும் சிறுகதைத் தொகுப்பும் கட்டுரைகளும் குறுநாவலும் எழுதியுள்ள தமிழ்நதியின், ஈழத்துப் போர்ச்சூழலை அடிப்படையாகக் கொண்ட முதல் நாவல் 'பார்த்தீனியம்'. 

பார்த்தீனியம், தமிழ்நதி, புத்தக விமர்சனம்

எண்பதுகளின் தொடக்கத்தில் இருந்து எண்பதுகளின் இறுதியில் முடியும் ஈழத்துச் சூழலை அடிப்படையாகக் கொண்ட இந்த நாவல் அமைதிப்படை என்ற பெயரில் ஈழத்தில் நிலைகொண்ட இந்திய ராணுவத்தின் அத்துமீறல்களைப் பதிவு செய்யும் ஆவண இலக்கியமும்கூட. ஆனால் அதோடு இந்த நாவல் நின்றுவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்திய ராணுவத்தின் நுழைவு என்பது நாவலின் பிற்பகுதியில்தான் இடம்பெறுகிறது.

வானதியும் வசந்தனும் பள்ளிப்பருவத்துக் காதலர்கள். சிங்களப் பேரினவாத அரசின் இனவழிப்பு நடவடிக்கைகளால் கோபமுற்றுப் போராளி இயக்கத்தில் இணைந்த லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களைப் போல பரணி என்னும் இயக்கப்பெயரோடு விடுதலைப்புலி ஆன வசந்தனுக்கும் வானதிக்குமான உறவு என்பது நாவலின் அடிப்படை. விடுதலைப் புலிப் போராளிகளின் அர்ப்பணிப்புமிக்க தியாகங்கள், இயக்கங்களின் உள்முரண்கள், போராளி இயக்கங்களுக்கு இடையிலான சகோதரப் போர்கள், சொந்த நாட்டிலேயே அகதிகள் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் அவலம், ஒரு கொடூரமான இனவாதத்தைச் சந்தித்தபோதும் பிரதேசவாதத்தையும் சாதியத்தையும் கைவிடாத தமிழ்மக்களின் அவலமான மனநிலை, இந்திய ராணுவத்தால் சிதைக்கப்பட்ட தமிழ்ப்பெண்கள் என்று பல விஷயங்களை விரிவாகப் பதிவு செய்யும் தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' பலவகையில் முக்கியமான நாவல்.

பொதுவாக ஈழத்து இலக்கியங்களில் நாவல்களுக்கு முக்கியமான இடமுண்டு. 'புதியதோர் உலகம்' கோவிந்தன், டானியல், ஷோபாசக்தி, குணா கவியழகன், சர்மிளா செய்யத் என்று வெவ்வேறு காலகட்டங்களில் ஈழத்துப் படைப்பாளிகளால் எழுதப்பட்ட நாவல்கள் வெவ்வேறுவிதமான களங்களையும் அரசியல் சார்பையும் கொண்டவை. ஈழத்து இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள் முக்கியமான பங்களிப்பினை வழங்கியிருக்கிறார்கள் என்றாலும் பெரும்பாலும் கவிதைகளை எழுதிய அளவுக்குப் பெண்களிடமிருந்து நாவல்கள் வந்ததில்லை. அந்தவகையில் ஈழத்துப் போர்ச்சூழலைக் கொண்டு பெண் படைப்பாளியால் எழுதப்பட்ட முதல் நாவல் 'பார்த்தீனியம்' என்று சொல்லலாம்.

இந்த நாவலை எழுதியுள்ள தமிழ்நதி வெளிப்படையான விடுதலைப்புலிகள் ஆதரவாளர். இறுதிப்போருக்குப் பின் ஈழப்போராட்டம் குறித்து ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக போராட்ட இயக்கங்களுக்கு இடையிலான சகோதரப் படுகொலைகள், ஜனநாயகமற்ற தன்மை, வன்முறை, ஈழத்தமிழர் வாழ்வின் உள்ளும் வெளியிலும் ஏற்படுத்திய பாதிப்புகள் என ஏராளமான உரையாடல்கள் நிகழ்ந்தன. இத்தகைய விமர்சனங்களை முன்வைத்தவர்களில் கணிசமானவர்கள் ஏதேனும் ஒருவகையில் போராட்ட இயக்கங்களோடு நேரடித் தொடர்பில் இருந்தவர்கள்.

தமிழ்நதி விடுதலைப்புலிகளின் வரலாற்றுப் பாத்திரத்தை அங்கீகரிக்கவேண்டும் என்று கருதுபவராக இருந்தாலும் இந்த நாவலில் ஈழப்போராட்ட வரலாற்றில் ஏற்பட்ட சறுக்கல்களையும் உள்முரண்களையும் அதனால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களது வாழ்க்கையையும் பதிவு செய்ததன் மூலம் அரசியல் நேர்மையுள்ள படைப்பாக மிளிர்கிறது 'பார்த்தீனியம்'. 

இந்த நாவலின் குறுக்கும் நெடுக்கும் வலம் வரும் விதவிதமான மனிதர்கள் முப்பதாண்டுகால ஈழ வரலாற்றின் சாட்சித் துண்டுகள். முதன்மைப் பாத்திரமான பரணி அர்ப்பணிப்பும் கீழ்ப்படிதலும் உள்ள போராளியாக இருந்தாலும் மாத்தையாவின் அதிகார நடவடிக்கைகளும் தனது இயக்கம் மாற்று இயக்கங்களின் மீது நிகழ்த்தும் வன்முறையும் போரால் சிதைந்த தம் சொந்த மக்களின் வாழ்க்கையும் அவனை அலைக்கழிக்கின்றன. இறுதியில் துண்டு கொடுத்துவிட்டு இயக்கத்தை விட்டு வெளியேறுகின்றான். 

தமிழ்நதி

தனஞ்செயனும் ஜீவானந்தமும் விமர்சனபூர்வமான முக்கியமான குரல்கள். யாழ் பல்கலைக்கழக மாணவரான தனஞ்செயனின் அண்ணன் சீராளன், டெலோ இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் நடுவீதியில் விடுதலைப் புலிகளால் கொல்லப்படுகிறார். தொடர்ச்சியாக வன்முறைகளைப் பார்த்துப் பார்த்து விரக்தியும் குழம்பிய மனநிலையும் கொண்டவனாகத் தனஞ்செயன் மாறிப்போனாலும் அவனால் 'போராட்டத்தின் முக்கியமான கட்டத்தில்' பரணி புலிகள் இயக்கத்தை விட்டு விலகியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேபோல் ஆழமான வாசிப்பு உடைய ஜீவானந்தம் இயக்கங்களின்மீது விமர்சனங்கள் உடையவராக இருந்தாலும் அவர் புலிகளால் பேணப்படுபவராக இருக்கிறார்.

வானதியின் அப்பா அருமைநாயகம் ஒரு வேடிக்கை மனிதர். 'கடமையறியோம் தொழிலறியோம்' என்று சொகுசு வாழ்க்கைக்கு விரும்புபவர். ஆனால் போர்ச்சூழல் அவரையும் குலைக்கிறது. 'இந்திய ராணுவம் இலங்கைக்கு வரப்போகிறது' என்றவுடன் ஆரவாரத்துடன் வரவேற்கிறார். ஆனால் அதே ராணுவம் தமிழர்கள் மீது அத்துமீறல்களை நிகழ்த்தும்போது 'உடுப்புகள் வேறே தவிர, இலங்கை ராணுவமும் இந்திய ராணுவமும் ஒன்றுதான்' என்பதைப் புரிந்துகொள்கிறார். இன்னமும் 'இந்தியா ஈழத்தமிழர்கள் பிரச்னையைத் தீர்க்கும்' என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள் படிக்க வேண்டியது அருமைநாயகத்தின் வாழ்க்கையை. 

இந்திய அமைதிப்படையால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சுபத்திரா ரத்த வரலாற்றின் ஒரு சிறுதுண்டு. நாவல்களின் பக்கங்களில் சுபத்திரா போன்ற பெண்களின் அலறல்கள் கேட்டுக்கொண்டேயிருக்கின்றன. முற்றுமுழுதாக யாரையும் எதிர்நிலையில் நிறுத்தாமல் அவரவர்களின் மனவுணர்வுகளை அவரவர் நியாயங்களூடன் பதிவு செய்துள்ளது இந்த நாவலின் சிறப்பு. 'இத்தனை வன்முறை, இத்தனை இழப்புகளுக்குப் பிறகு நாம் சாதித்தது என்ன?' என்று யோசிக்கும் இந்திய ராணுவத்தின் கர்னல் தயாள்சிங் ஓர் உதாரணம். 

தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்ததாலேயே நிராகரிப்புக்கு உள்ளாகி இந்திய அமைதிப்படையாலும் ஈ.பி.ஆர்.எல்.எஃப்பாலும் உருவாக்கப்பட்ட பொம்மை ராணுவமான 'தமிழ்த்தேசிய ராணுவத்'தில் 'சேர்த்துக்கொள்ளப்பட்டு' மடிந்துபோகும் சீலனின் மரணத்தைப் படிக்கும்போதே நமக்குக் கண்ணீர் துளிர்க்கிறது. 'எளியசாதிக்காரன்' என்று இகழப்படும் சீலனின் கதை மட்டுமே ஓர் அருமையான சிறுகதையாக உருவாகும் சாத்தியம் கொண்டது. 

தமிழகத்தில் புலிகள் பயிற்சி பெறும் முறை, வீரச்சாவடைந்த போராளிகளின் வீடுகளுக்கு மரணச் செய்தியைச் சொல்லப்போகும்போது ஒவ்வொருமுறையும் பரணி சந்திக்கும் அவஸ்தை அனுபவங்கள், யாழ்ப்பாண மாணவர் போராட்டம் என்று நாவலின் பல பகுதிகள் குறிப்பிடத்தக்கவை. வரலாற்றுத் தகவல்களைத் தேடித் தொகுத்திருக்கும் தமிழ்நதியின் உழைப்பு பாராட்டத்தக்கது. அதை வெறுமனே தகவல்களாகப் பதிவு செய்யாமல் ஒரு நல்ல இலக்கியமாக மாற்றியிருப்பதற்குத் தமிழ்நதியின் எழுத்தாளுமைதான் காரணம். 

மாத்தையா குறித்த நாவலின் சித்தரிப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தாலும் மாத்தையா பக்க நியாயங்கள் பதியப்படவில்லையோ என்று தோன்றுகிறது. அதேபோல் ஒரு பெண்ணெழுத்தாளரிடமிருந்து வரக்கூடிய நாவலில் பெண் போராளிகளின் வாழ்க்கை இன்னமும் அழுத்தமாகவும் விரிவாகவும் பதியப்பட்டிருக்கலாம். தமிழ்நாட்டில் புலிகளின் இயங்குமுறை விளக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கே புலிகளுக்கு உதவியவர்கள், ஆதரவுக்களம் அமைத்துக் கொடுத்த அரசியல் இயக்கங்கள் குறித்த பதிவுகள் இல்லை. குறிப்பாகப் புலிகளுக்கு உதவியதற்காகப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தவர்கள் பெரியாரியக்கங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால் அதுகுறித்த பதிவுகள் அவர்களாலேயே எழுதப்படவில்லை. இவையெல்லாம் 'பார்த்தீனியம்' நாவலின் குறைகள் என்றோ விடுபடல்கள் என்றோ சொல்லமுடியாது. வாசக எதிர்பார்ப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம்.

எல்லாவற்றையும் விட முக்கியமானது, இந்த நாவலில் முழுக்க விரவியிருக்கும் பெண் பார்வை. வன்முறை மேலெழும் எல்லாச் சூழல்களிலும் அதிகம் பாதிக்கப்படுபவர்களாகப் பெண்களே இருக்கிறார்கள். சிங்களப் பேரினவாதமாக இருந்தாலும் சரி, இந்திய ராணுவத்தின் அட்டூழியங்களாக இருந்தாலும் சரி, பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்ப்பெண்களே. குழந்தைகள் மரணம், நிர்க்கதியான நிலை, உடைமைகள் அழிப்பு, ஓடிக்கொண்டேயிருக்கும் அவலம், மானத்துக்கு ஏற்படும் இழுக்கு, குடும்ப உறவுகளின் இழப்புகள் என்று எல்லாவற்றாலும் அதிகம் சிதைவது பெண்களின் வாழ்க்கைதான். அதிகாரத்துக்கும் வன்முறைக்கும் எதிராக எழும் போராட்டத்தின் விளைவாக உருவாகும் வன்முறைச் சூழலிலும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பள்ளிப் பருவத்திலிருந்து சிங்களப் பேரினவாதத்தைச் சந்தித்தாலும் பரணியை இயக்கத்தை விட்டு வெளியேறச் சொல்லி வானதி நிர்ப்பந்திப்பதையும் இறுதியில் பரணியை அவள் நிராகரிப்பதையும் அப்படித்தான் புரிந்துகொள்ளமுடியும்.

அதேபோல் போலியான கலாசாரத் தூய்மைவாதமும் வானதியிடம் இல்லை. அவள் பரணியை நேசித்தாலும் அவனோடு வாழ விரும்பினாலும் குட்டியும் தனஞ்செயனும் அவளை விட்டுவிட்டுப் போகும்போது அவள் தன்னளவில் ஏமாற்றமடைகிறாள். இதை நேர்மையாகப் பதிவுசெய்யும் தமிழ்நதி பாராட்டப்பட வேண்டியவர்.

ஒரு வரலாற்றை எந்தளவுக்கு நேர்மையாகவும் படைப்புத்திறனுடனும் எழுதமுடியும் என்பதற்கு 'பார்த்தீனியம்' உதாரணம்.

உன்னால் முடியும்: அமெரிக்க கனவு அவசியமில்லை

எம்எஸ்இ ஐடி படித்துவிட்டு அமெரிக் கவுக்கோ, ஐடி நிறுவன வேலை களுக்கோ கனவு காணும் இளைஞர்களுக்கு மத்தியில் சொந்த ஊரில் காகித அட்டை தயாரிக்கும் தொழிலை மேற்கொண்டு வருகிறார் பிரேம். பொள்ளாச்சி அருகில் உள்ள மடத்துகுளம் கிராமத்தில் இவரது ஆலை உள்ளது.

ஒரு இடத்தை ஒத்திக்கு எடுத்து, சிறிய அளவில் சாதாரண காகித அட்டை தயாரிக்கும் தொழிலில் இறங்கியவர், இன்று சொந்த இடத்தில் 20-க்கும் மேற்பட்ட காகித அட்டைகளை தயாரித்து வருகிறார். 33 வயதுக்குள் இவருடைய அசராத உழைப்பு இவரை 20 பேருக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கும் தொழில் முனைவராக உருவாக்கியுள்ளது. இவரது அனுபவத்தை இந்த வாரம் நமது வணிக வீதி வாசகர்களுக்காக..

எனது அண்ணன் அப்போது வேறொரு கம்பெனியில் இந்த வேலையை செய்து கொண்டிருந்தார். எனக்கு வேலை தெரியாது என்றாலும் அண்ணனுக்கு உள்ள அனுபவம் எனக்கு உள்ள ஆர்வம் ரெண்டையும் கணக்கிலெடுத்து நிறுவனத்தை தொடங்கலாம் என்கிற நம்பிக்கை வந்தது.

நானும் இந்த வேலைகளில் உள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்ள திட்டமிட்டு எங்கள் பகுதியில் உள்ள சில கம்பெனியில் வேலைக்கு செல்ல தொடங்கினேன்.

பொதுவாக இந்த தொழிலுக்கான மூலப் பொருள், மார்கெட்டிங் என எல்லா வேலைகளும் அண்ணனுக்கு தெரியும் என்றாலும், நானும் தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்பதால் அதுவும் எனது பயிற்சியாக இருந்தது.

மடத்துகுளம் ஏரியாவில் பல காகித அட்டை நிறுவனங்கள் உள்ளன. இவர் களோடு போட்டி போட வேண்டும் என்றால் ஏதாவது ஒரு விஷயத்தில் தனியாக தெரிய வேண்டும்.

ஆனால் எங்களிடம் பெரிய முதலீடுகள் கிடையாது. சிறிய அளவில்தான் தொடங்குகிறோம். ஒரே ஒரு வகையிலான போர்டு தயாரிக்கும் அளவுக்குத்தான் இயந்திர திறன் இருந்தது. இப்படி பல சவால்கள் இருந்தன.

முதலில் ஆரம்ப தரத்திலான போர்டு தான் தயாரிக்கத் தொடங்கினோம். மூலப் பொருள் தேவைக்கும், தொடர்ச்சியாகக் கிடைப்பதற்கும் பல ஊர்களுக்குச் அலைந்திருக்கிறேன்.

கொடைக்கானலில் இருந்து தொடர்ச்சி யாக மூலப் பொருள் கிடைப்பதுபோல ஏற்பாடு செய்து கொண்டேன். சந்தைையப் பொறுத்தவரை தரத்துக்குத் தான் முக்கியத்துவம் தருவார்கள். மதுரை, சென்னை, சிவகாசி, பெங்களூரு என முக்கிய நகரங்களில் உள்ள நோட்டு தயாரிப்பவர்களிடம் ஆர்டர் வாங்கினால் இந்த சவால்களை சமாளிக்கலாம் என்பதால் இதற்காக அலையத் தொடங்கினேன்.

மதுரையில் சில நிறுவனங்களிலிருந்து ஆர்டர் கிடைத்தது. அவர்களது தேவைக்கு தரமாக கொடுக்க கொடுக்க மேலும் ஆர்டர் கிடைத்தது. அதைக் கொண்டு அடுத்த அடுத்த ஜிஎஸ்எம் அட்டைகள் தயாரிக்கத் தொடங்கினோம்.

இப்படியே ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்டர் கிடைக்க கிடைக்க தயாரிக்க தொடங்கி இந்த மூன்று வருடத்தில் தற்போது பதினைந்துக்கும் மேற்பட்ட தரத்திலான அட்டைகளை தயாரித்து வருகிறோம்.

இதற்கிடையே எங்களது வேலை களுக்கு பொருத்தமான இடம் கிடைக்க அந்த இடத்தையும் வாங்கியிருக்கிறோம். குத்தகை இடத்திலிருந்து சொந்த இடத்துக்கு மாறியதுகூட எங்களை பொறுத்தவரை பெரிய வளர்ச்சியாகவே கருதுகிறேன்.

தவிர இந்த தொழிலில் ஈடுபட் டிருப்பவர்கள் எல்லோருமே பழுத்த அனுபவசாலிகளாக இருக்க 32 வயதில் இந்த தொழிலில் ஈடுபட்டு போட்டி போடுவதும்,பெரிய நிறுவனங் களிலிருந்து ஆர்டர் வாங்குவதும் சவாலானதுதான்.

ஐடி படித்ததால் அமெரிக்க கனவு காண வேண்டும் என்கிற அவசியமில்லை. காகித அட்டை தயாரிப்பாளராக உள்ளூரிலேயே பிசினஸ் செய்து வெற்றியாளராக வலம் வர முடியும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் பிரேம்.