Sunday, February 23, 2014

வெற்றியின் ரகசியம்

வெற்றியின் ரகசியம்: 

வெற்றியின் ரகசியத்தை அறிந்து கொள்வதற்கு முன், உங்களின் உள் மனதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். உங்களைப் பொறுத்தவரையில்,

"வாழ்க்கையில் வெற்றி என்பதற்கு என்ன அர்த்தம்?
யார் வெற்றி பெற்றதாக நீங்கள் கருதுகிறீர்கள்?'
என்ற கேள்விகளுக்கு, தெளிவான பதில் இருக்க வேண்டும்.

நீங்கள் வெற்றி பெறுவதற்கு தேவை,
கல்வியா, பணமா, பதவியா, புகழா, அந்தஸ்தா,
மகிழ்ச்சியான உறவா அல்லது எல்லாம் கலந்த கலவையா?
எல்லாம் தேவையென்றால் எது எந்த அளவுக்கு முக்கியம்?
இதில் குழப்பம் என்றால் உங்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

"உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்...'

என்ற திரைப்படப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். வெற்றிப் பாதையில் நாம் கடக்க வேண்டிய முதற்படி, நம்மை நாமே புரிந்து கொள்வது. ஏனென்றால், நம்மைப் பற்றி, நம் மனதில் வரைந்து வைத்துள்ள சுயசித்திரம்தான், ஒரு நாள் நிஜமாக போகிறது.

மனித மனம், ஒரு நிலையில் இல்லாத குரங்கு போன்றது. அதை ஒரு நிலைப்படுத்தி, "நாம் எப்படிப்பட்ட மனிதர்? நம் வாழ்க்கையில் என்னவெல்லாம் சாதிக்க வேண்டும்?' என்ற கேள்விகளுக்கு நம்மிடத்தில் தெளிவான பதில் இருக்க வேண்டும்.

நம்மைப் பற்றி புரிந்து கொள்வதற்கு அடிப்படைத் தேவை, நாம், நம்மை முழுமையாக நேசிக்க வேண்டும்; முதலில் நமக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும்.

அடிப்படை குணங்கள், விருப்பு, வெறுப்பு, எதிர்பார்ப்புகள், தேவைகள் பற்றிய தெளிவு இருக்க வேண்டும். நம் வாழ்க்கை லட்சியம் என்ன,

அதை அடைய எதை இழக்கத் தயாராக இருக்கிறோம் என்ற கேள்விகளுக்கு, நம்மிடத்தில் பதில் தயாராக இருக்க வேண்டும்.

மனதை ஒரு நிலைப்படுத்த, ஒரு அமைதியான இடத்தில் நம்மைத் தனிமைப்படுத்தி, கண்களை மூடி மெதுவாகவும், சீராகவும் நீண்ட மூச்சை எடுத்து, உடலையும், மனதையும் தளர்த்திக் கொள்ள வேண்டும்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், இறைவனை வழிபடலாம் அல்லது தியானம் செய்யலாம். பின், கீழ்க்கண்ட கேள்விகளுக்கு நம் அடிமனதிலிருந்து வரும் உண்மையான பதிலை, மனதில் பதிவு செய்ய வேண்டும்.

* நான் அடிப்படையில் எப்படிப்பட்ட மனிதர்?
* எது நிரந்தர மகிழ்ச்சியையும், துக்கத்தையும் கொடுக்கும்?

* மிகவும் பிடித்தது மற்றும் பிடிக்காதது என்ன?
* வாழ்க்கையில் வெற்றியடைய என்னவெல்லாம் சாதிக்க வேண்டும்?

* என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன அபிப்ராயம் வைத்திருக்க வேண்டும்?
* என்னுடைய பலம் எது, பலவீனம் எது?

* என்னுடைய முன்மாதிரி மனிதர்கள் யார்; எதனால்?
* வருங்காலத்தில் யாரைப் போல் ஆக வேண்டுமென்று விரும்புகிறேன்?

மேற்கண்ட கேள்விகளுக்கு பதில்களை ஆராய்ந்து பார்த்து, முரண்பாடான விஷயங்களையும், நடைமுறைக்கு ஒத்து வராத யோசனைகளையும், தவிர்த்து விடவேண்டும்.

அதையே எழுதி வைத்தால், நம்மைப் பற்றியும், நாம் சாதிக்க நினைப்பதைப் பற்றியும், அதற்காக செய்ய வேண்டிய தியாகத்தைப் பற்றியும், தெளிவும், மன வலிமையும் கிடைக்கும். இப்படி எழுதி வைத்ததைப் பத்திரப்படுத்தி வைத்தால், வாழ்க்கையில் குழப்பம், சலிப்பு மற்றும் சோர்வு ஏற்படும் போது அதை எடுத்துப் படித்தால், நிச்சயமாக புத்துணர்வு கிடைக்கும்; மன உறுதியும், தெளிவும் பிறக்கும்.

வாழ்க்கையில் என்ன வேண்டுமென்பதில் தெளிவு இருந்தால் மட்டும் போதாது, என்ன தேவையில்லை என்பதிலும் தெளிவு வேண்டும். சிலருக்கு, வருடா வருடம் வாழ்க்கையின் லட்சியங்கள் மாறிக் கொண்டேயிருக்கும். இதற்கு முக்கியக் காரணம், இவர்களுக்கு எந்த லட்சியத்திலும் தீவிரமான பற்று இருப்பதில்லை. மேலும், வெற்றியடைந்த யாரைப் பார்த்தாலும், அவர்களைப் போல வர வேண்டும் என்று, திடீர் ஆர்வம் காட்டுவர்.

குறிக்கோளை நிர்ணயம் செய்யுமுன், நம்மை நம்பியுள்ள குடும்பத்தினரைக் கலந்து ஆலோசிப்பது அவசியம். அவர்களுடைய ஆதரவு இல்லாதபோது, நம்முடைய லட்சியப் பாதையில் சறுக்கல் வரலாம். தேவைப்பட்டால் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களிடத்தில் கருத்து கேட்கலாம்.

ஒவ்வொரு நிகழ்வும், இந்த உலகத்தில் இருமுறை நிகழ்வதாகக் கூறுகின்றனர். ஒன்று மனத்திரையில்; இன்னொன்று நிஜத்தில். அதனால், ஒவ்வொரு நாளும் நம் அன்றாட வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன், நாம் என்னவாக வேண்டும் என்பதை மனத்திரையில், பதிவு செய்ய வேண்டும்.

நாம் எந்த நிலையை அடைய வேண்டுமென்று, மனதில் ஆழமாகப் பதிவு செய்கிறோமோ, அந்த நிலையை விரைவில் அடைவது உறுதி.

நமது மனக்குழப்பமே

நமது மனக்குழப்பமே
  
நமது மாயா தத்துவம் வினோதமானது

  அதை  negative thinking என இகழ்பவர் ஒரு கோஸ்டி
  அதை  POSITIVE THINKING என பாராட்டுபவர் ஒரு கோடி

பாரதி மட்டும் சரியான பார்வையில் பார்த்தார்

ஆழ்ந்த பொருள் இல்லையோ? என எதிர் கேள்வி கேட்டு உண்டு என புரிய வைத்தார்
    
எல்லாம் மாயை என்று அழுவதற்கோ அரட்டுவதற்கோ தூங்குவதற்கோ இந்த தத்துவம் சொல்லபடவில்லை.

பந்தமில்லாமல் பழகி பாசமில்லாமல் அனுபவித்து துயரமில்லாமல் வாழப்பழகுவதற்கு பயிற்றுவிக்கபட்ட தத்துவம்தான் மாயா அதை குழப்பி கொண்டு விரக்தியடைவது நமது மனக்குழப்பமே   

புரியாத புதிர்கள்,இந்த இரண்டுங்கெட்டான் குழந்தைகள்

புரியாத புதிர்கள்,இந்த இரண்டுங்கெட்டான் குழந்தைகள்

ஒரு இளைஞனை சமாளிக்க எல்லையற்ற‌ பொறுமை வேண்டும் என்பார்கள்

நிச்சயமாக, தேசத்தின் தந்தை கூட‌ ஒரு வழிமாறிய வாலிப மகனை சமாளிக்க திணறியதுண்டு சத்ய சோதனையில் வென்றவர் கூட‌ மகனின் வாலிப சோதனையில் தோற்று விட்டார்கள்

ஆங்கிலம் மேனேஜ்மென்ட் என்று சொல்வதை   நாம் மேய்ப்பது என்று சலித்து கொண்டு சொல்கிறோம்

வழி நடத்துவதில் இரண்டு விதம் ஒன்று வாத்துகளை போல கோல் கொண்டு பின்னால் இருந்து ஓட்டி கொண்டு போவது மற்றது வீரர்களை நடத்துவது போல‌ தளபதியாய் முன் நின்று கம்பீரமாக செல்வது

இந்த இரண்டு மேனேஜ்மென்டும் தோற்றுபோகுமிடம் பெற்றோர் பிள்ளைகள் உறவுதானே?

இரு கைபிடித்து கூட்டிச் செல்லும் குழந்தை போல‌ தோளை அனைத்து நடத்திச் செல்லும் நண்பன் போல‌ நுட்பமான நுணுக்கமான அனுகுமுறைதான் ஆபத்தில்லாதது

முன்னால் போனால் காணாமல் போகிறார்கள் பின்னால் போனால் போக்கு காட்டுகிறார்கள் புரியாத புதிர்கள்,இந்த இரண்டுங்கெட்டான் குழந்தைகள்

Friday, February 21, 2014

கருனை

கருனை

அறிவும் கருணையும் ஓரிடத்தில் வசிப்பது என்பது அபூர்வம் xxx லாங்பெல்லோ

அறிவை விட கருணையே மிக அத்யாவசயமானது xxx இராதாகிருஷ்ணன்

அன்பெனும் விளக்கில்லாவிட்டால்
 பிரபஞ்ச இருளில் நாம் குருடர்களே xxx மாதவையா

இருளை இகழ்வதை நிறுத்தி விட்டு
 ஒரு சிறு விளக்கை ஏற்றிவை xxx UNKNOWN

உங்களுக்கு தொழிலிங்கே அன்பு செய்வது xxx பாரதியார்

ஒரு பழக்கத்துக்கு அடிமையாவது என்பது
கண்கட்டி நடப்பது போன்றது xxx எமர்சன்

கண்ணீர் இதயத்தை சுத்தம் செய்கிறது xxx கிப்ரன்

கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் xxx நல்லாதானார்

கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழம் இல்லம் xxx கண்ணதாசன்

கருணையே கனியாகக் காய்த்து
உலக உயிர்க்கெல்லாம் துயர்துடைப்பாயே xxx மசுபிள்ளை.

கல்வியில்லை என்றால் நமது கனவுகள் எதுவும் நனவாகாது xxx புக்கர் வாஷிங்டன்

கல்வியின் வெற்றி இரகசியம்
 மாணவருக்கு  தரப்படும் மரியாதையே xxx எமர்சன்

கலையெல்லாம் கற்றவர்க்கழகு கருணையே xxx நீதிவெண்பா

கள்ளம் கபடம் ஆகாதப்பா கருணை பெருக வேண்டுமப்பா xxx கவிமணி

குத்தினால் ரத்தம் வரத்தான் செய்யும்
பாவம் செய்தால் பழிவாங்கப்படுவீர் xxx சேக்ஸ்பியர்.

நெஞ்சில் ஈரமும் கண்ணில் கருணையும்
உள்ளவனுக்கு முன்னேற்றம் நிச்சுயம் xxx விவேகானந்தர்

பக்கத்திருப்பவர் துன்பம் பார்க்கபொறாதவன்
புண்ணிய மூர்த்தி xxx பாரதி

வாழ்வென்பது ஒரு அறிவியல் அல்ல அது ஒரு அழகுக்கலை xxx சாமுவேல் பட்லர்

வாழ்வெனும் நதியினிலே உருளும் போது
மனித சுபாவம் உருவாகிறது

கடமை

கடமை

அச்ச உணர்வினால் கடமையை
கற்றுத்தர முடியாது ………. சிசரோ

அடையவில்லை என்ற
அயர்வு நீ ஒழி நெஞ்சே ………. திருஞானசம்பந்தர்

அதீத கடமையுணர்வு உபயோகமானது
சில நேரங்களில் நட்புறவுகளை பாதிக்கும் ………. ரஸ்ஸல்

அன்புக்கு ஆற்றல் அதிகம் கடமைக்கு
அதை விட பயன் அதிகம் ………. கதே

இயறக்கையில் எல்லாமே சிறியவையாகத்தானே ஆரம்பிக்கின்றன ………. பிசிகணேசன்

உள்ளத் துணியும் முயற்சியும் கொண்ட உத்தமர் வாழ்வு மலரும் ………. கண்ணதாசன்

உனது கடமையை செய்யும் போது நீ வெளிப்படுவதைதானே உணர்வாய் ………. கதே

உன்னை நீ அறிய வேண்டுமானால் சிந்திப்பதை விட்டுவிட்டு செயல்படு புரியும் ………. கதே

ஒத்துழையாமை என்பது
மனிதருக்கு எதிரானது அல்ல ………. மகாத்மா

கடவுள் பெயரை உச்சரிப்பது
ஒரு வெற்று பழக்கமாகிவிட்டது ………. குருசேவ்

கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டுமே தவிர பிச்சை கேட்க கூடாது ………. பெர்னாட்ஸா

கடவுளிடம் பொறுமை காப்பதே
 பக்தி எனப்படும் ………. பெஸ்ட்வோராஸ்

கடவுளின்  அருள் பெற்றவரே
கருணை உடைவராயிருப்பார் ………. தாவோ

கடவுளை அடைவதற்கு நிறைய
கதவுகளை அமைத்திருகிறார் ………. கலீல்கிப்ரன்

கதிரோளி வாங்கித்தரும் கண்ணாடி போல புத்தகங்கள் அறிவொளி  தரும் ………. கிப்பன்

தனது அடிபடை கடமைகளை சிறப்பாக முடித்தவனுக்கு
மரணமென்பது மகிழ்வான ஓய்வுறக்கம் ………. சந்தயானா

தீமையோடு ஒத்துழைக்காமல் இருப்பதே நமது முதல் கடமை ………. காந்தி

தெளிவான சரியான சுருக்கமான
 பதில் என்பது செயலே ………. ஹெமிங்வே

நம்பிக்கை இல்லாமல் தன் கடமையைச்  செய்ய இயலாது ………. டிஸ்ரேலி

நம்பிக்கையில்லாத இடத்தில்கடமையில்லை
கடமையில்லாது வேலையில்லை ………. பெர்னாட்ஷா

நம்பிக்கையில்லாத இடத்தில்
கடமையுணர்வு காலூன்றாது ………. டிஸ்ரேலி

நரிமா கிழித்த அம்பின் தீதோ
அரிமா பிழைத்த கோல் ………. பதுமனார்

நாம் மூழ்கிய இடத்தில் முத்து கிடைக்கவில்லை
என்றால் முத்து இல்லையென்று சொல்லி விட முடியாது ………. இராமகிருஷ்ணர்

பரபரப்பில்லாது பொறுமையுடன் விடாமுயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் ………. விவேகானந்தர்

புகழ் எனும் கோபுரத்துக்கு
கடமை என்பதே பிரதானை சாலை ………. டெனிசன்

பெரு நெருப்புக்கு ஈரமில்லை ………. பிச்சமூர்த்தி

போன நாள் வீனாய் புதிய நாள் கெடாது ஞானநாள் இதுவென்று நாடு ………. கணபதி சித்தர்

மனசாட்சி விழிப்புடன் இருக்கும் போதுதான் நாம் தயராக இருப்போம் ………. மாண்டெய்ன்

முட்டை கொண்டு திட்டை ஏறும்
எறும்புகள் அல்ல எழுத்துகள் ………. அப்ரல் ரகுமான்

முடிந்த கதை கிடையாது இருந்தால்
உலகம் எப்பவோ முடிந்திருக்கும் ………. லாசரா

Thursday, February 20, 2014

சிந்திக்க சில வரிகள்—>படித்ததில் பிடித்தது

சிந்திக்க சில வரிகள்—>படித்ததில் பிடித்தது

1 பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரிய‌ர் அல்ல்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10 ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

11 எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

12. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

13. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் . இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

14. யார் சொல்வது சரி என்பதல்ல , எது சரி என்பதே முக்கியம்

15. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

16. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்

17. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

18. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும.

19. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25 அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

26 வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

27. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

28. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

29. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

30. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

31 சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

32 ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது

33ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்; ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை

34.மாற்றம் என்பது மானிடத் தத்துவம்,மாறாதிருக்க நான் வனவிலஙகு அல்ல‌

35முயற்சி திருவினையாக்கும், முயன்றால் முடியும்,முயன்றால் மட்டுமே முடியும

படித்ததில் பிடித்த தத்துவங்கள் & நகைச்சுவைகள்

படித்ததில் பிடித்த தத்துவங்கள் & நகைச்சுவைகள்

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.

வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!

ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.

நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,
ஒரு நல்ல நண்பனின் மவுனம்
இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.

நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. - பில் கேட்ஸ்

சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!

மேலாளர்: உன் தகுதி என்ன?
சர்தார்: நான் Ph.D
மேலாளர்: Ph.Dன்னா என்ன?
சர்தார்: Passed high school with Difficulty.

நானும் சரி ஒரு ரவுண்டுதானேன்னு இன்டர்வியூக்குப் போனேன்.
அங்கே 5பேரும்மா.
மாத்தி மாத்தி கேள்வி கேட்டாங்க.
என்னால முடிஞ்ச வரைக்கும் பதில் சொன்னேன்.
திடீர்னு ஒருத்தன் HRக்கு போன் போட்டு
மச்சான் ஃபிரீயா இருந்தா வாடா.
ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான்.

சரின்னு நானும் 4ஆவது மாடிக்குப் போனேன்.
அங்கே 8 பேரும்மா.
அவங்களால எவ்வளவு முடியுமோ
அவ்வளவு கேள்வி கேட்டாங்க.
நானும் எவ்வளவு நேரம் பதில் தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது?
அதுல ஒருத்தன் சொன்னான்
இவன் எவ்வளவு கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்டா
இவன் ரொம்ப அறிவாளின்னு சொல்லிட்டாம்மா.

(தேர்வு அறையில்)

ஆசிரியர்: டேய் என்னடா... கையில் ஃபார்முலா எழுதியிருக்கே?
மாணவன்: எங்க கணக்கு வாத்தியார்தான் ஃபார்முலா எல்லாம் விரல் நுனியில்இருக்கணும்னு சொன்னார்.

விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.

அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும்கேளுங்கள்.

ஏன்னா அறிவு......

சரி விடு. இல்லாததைப் பத்திப் பேச வேண்டாம்.

ஒண்ணு + ஒண்ணு = ரெண்டு
நீதான் எனக்கு ஃபிரெண்டு.

ரெண்டு + ரெண்டு = நாலு
நீ ரொம்ப வாலு.

மூணு + மூணு = ஆறு
நீ இல்லாம போரு.

நாலு + நாலு = எட்டு
எஸ்எம்எஸ் அனுப்பலன்னா குட்டு.

நட்பு எனும் கலையானது, 
ஒரு நல்ல இசைக் கருவியை வாசிப்பது போன்றது. 
முதலில் விதிகளின்படி இந்தக் கருவியை வாசிக்கத் தொடங்க வேண்டும். 
பிறகு விதிகளை மறந்துவிட்டு இதயத்திலிருந்து வாசிக்க வேண்டும். 

கடவுள், 
நகைச்சுவையுடன் எழுதக்கூடிய ஒரு சிறந்த எழுத்தாளர். 
ஆனால் அவர், நகைச்சுவையுடன் நடிக்கத் தெரியாத 
மோசமான நடிகர்கள் பலரைக் கொண்டு தன் நாடகத்தை நடத்துகிறார்.

30 மாநிலங்கள்
1618 மொழிகள்
6400 சாதிகள்
6 மதங்கள்
6 இனங்கள்
29 பெரிய பண்டிகைகள்
ஒரு நாடு!
இந்தியனாக இருப்பதற்காகப் பெருமைப்படுங்கள்!

உயிரின் சுவாசம் மூச்சு
கண்களின் சுவாசம் கனவு
இதயத்தின் சுவாசம் துடிப்பு
நாக்கின் சுவாசம் பேச்சு
என் நட்பின் சுவாசம் நீ

எனக்கு இட்லியைப் பிடிக்காது
தோசையைத்தான் பிடிக்கும்.
ஏன்னா, இட்லி கூட்டமா வேகும்.
தோசை சிங்கிளாத்தான் வேகும்.
கூல்... 

உதவும் கரங்கள் 
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
- அன்னை தெரஸா.

வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
அதனால்,
வெற்றிக்குப் பிறகு
தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;
தோல்விக்குப் பிறகு
தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!

எல்லாம் சில காலமே - ரமண மகரிஷி

கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.

கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!

தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!

துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!

கையில் 10 ரோஜாக்களோடு
கண்ணாடி முன் நில்லுங்கள்!
இப்போது நீங்கள் 11 ரோஜாக்களைக் காண்பீர்கள்!
அந்த 11ஆவது ரோஜா,
உங்கள் புன்னகை!
நீங்ள் இப்போது புன்னைப்பதை நான் அறிவேன்!

வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;
தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.

உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்சினைகள் வரும்போது அல்ல;
பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்
பயந்து விலகும்போது. - பாரதியார்

எவையெல்லாம் அழகாக இருக்கின்றனவோ
எவையெல்லாம் அர்த்தத்துடன் இருக்கின்றனவோ
எவையெல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமோ
அவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கட்டும்!
இன்றும் நாளையும் என்றும்.

இதை மெதுவாகப் படியுங்கள்:

LIFEISNOWHERE
இதை எப்படிப் படித்தீர்கள்?
LIFE IS NO WHERE என்றா?
LIFE IS NOW HERE என்றா?
நாம் பார்க்கிற விதத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த ஒற்றை வரிஉணர்த்திவிடுகிறது!

மின்தடை ஏற்படும்போதுதான்
நமக்கு மெழுதுவர்த்தி ஞாபகம் வருகிறது.
அப்படித்தான் பிரச்சினைகளின் போது
ஒரு நண்பர், தீர்வு என்னும் விளக்கேந்தி வருகிறார்.
நான் உனக்கொரு மெழுகுவர்த்தியாக இருப்பேன்
என்ற நம்பிக்கை எனக்குண்டு.

நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!

ஒரு நாள், கடவுள் என்னைக் கேட்டார்:

"இந்த நண்பர் இன்னும் எவ்வளவு காலம்
உன்னுடன் இருக்க வேண்டும்?"

நான் கண்ணீர் உகுத்தேன்.
என் கண்ணீர்த் துளி
ஒரு பெருங்கடலில் விழுந்தது.

நான் இப்போது கடவுளிடம் சொன்னேன்:

"இந்தத் துளியை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை."

நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்
பிறந்திருக்கிறாய்.
ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறாய்?
இந்த உலகம்
உன் வெற்றிக் கதையைப் படிக்கக்
காத்துக்கொண்டிருக்கிறது.

பிறக்கும்போது தாயை அழவைக்கிறோம்
இறக்கும்போது எல்லோரையுமே அழவைக்கிறோம்
வாழும்போதாவது
எல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம்.

2 சொட்டு போட்டா அது போலியோ.
4 சொட்டு போட்டா அது உஜாலா
2880 சொட்டு போட்டா அது குவாட்டர்
இதுதான் இன்னிக்கு மேட்டர்.

வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும்
உப்பாக இருக்கலாம்.
ஆனால்,
அவைதான்
வாழ்வை இனிமையாக மாற்றும்.

ஒவ்வொரு மாநிலப் பெண்களிடமும்
ஒவ்வொரு சிறப்பு உண்டு.

கேரளா: நீண்ட கூந்தல்.
ஆந்திரா: கூரிய மூக்கு
மும்பை: செழுமையான கன்னங்கள்
பஞ்சாப்: பளிச் என்ற நிறம்
தமிழ்நாடு: ஒன்னுமே இல்லேன்னாலும் ஓவரா சீன் போடறது

நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை
ஆனால்,
நம் திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.
- அப்துல்கலாம்.

ஓர் உண்மை:
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,
நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

நீ துயரத்தில் இருக்கும்போது,
உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

ஒரு சிறிய கையசைப்பு, நம்மை அழவைக்கலாம்!
ஒரு சிறிய நகைச்சுவை, நம்மைச் சிரிக்கவைக்கலாம்!
ஒரு சிறிய அக்கறை, நம்மைக் காதலில் விழவைக்கலாம்!
ஒரு சிறிய தொடுதல், நம் உணர்வைக் கூர்மைப்படுத்தலாம்!
நானும் நம்புகிறேன்
என் சிறிய குறுஞ்செய்தி,
உனக்கு என்னை நினைவுபடுத்தலாம்!

உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி
உங்கள் ஆன்மாவில் புத்துணர்வு
உங்கள் வாழ்வில் வெற்றி
உங்கள் முகத்தில் புன்னகை
உங்கள் இல்லத்தில் அன்பின் நறுமணம்
இவை அனைத்தும் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்!

அன்பு தமிழ் நெஞ்சங்களே!
உங்கள் கருத்தை வெளிப்படையாக கூறுங்கள்.
- பிரவின்குமார்

மனதைத் தொட்ட வரிகள் !!!

மனதைத் தொட்ட வரிகள் !!!

Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் - ஸ்காட்லாந்து பொன்மொழி 

Ø துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும். -கவியரசு கண்ணதாசன் 

Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.
- வால்டேர் 

Ø அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல் -நெப்போலியன் 

Ø ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். - ஆஸ்கார் ஒயில்ட் 

Ø பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் -பெர்னாட்ஷா 

Ø அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. - ஹாபர்ட். 

Ø பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! - பாலஸ்தீனப் பழமொழி 

Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. -ப்ரெட்ரிக் நீட்சே 

Ø நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள். - வின்ஸ்டர் லூயிஸ் 

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான் 

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும் 

Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான் 

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல் 

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் 

இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது. 

Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே! 

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே! 

Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை 

Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை! 

Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது. 

Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை. 

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம் .

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற

சுவாமி விவேகானந்தர்:

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

வில்லியம் ஷேக்ஸ்பியர்:

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

அடால்ஃப் ஹிட்லர்:

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.

ஆலன் ஸ்டிரைக்:

இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

அன்னை தெரசா:

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.

நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.

பான்னி ப்ளேயர்:

வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.

லியோ டால்ஸ்டாய்:

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

அப்ரஹாம் லிங்கன்:

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.

ஐன்ஸ்டைன்:

எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

சார்லஸ்:

ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.

நமது வாழ்வை சிறப்பாக்கும் வழிகள்

நமது வாழ்வை சிறப்பாக்கும் வழிகள்

நம்பிக்கை! விழித்து எழு!

வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கை உன்னுள்ளே பிறக்கட்டும் உன்னுடைய உடம்பின் ஒவ்வொரு அணிவிலும் இந்த நம்பிக்கைப் பரவட்டும். அப்படிச் செய்தால்தான் உன்னால் எதையும் சாதிக்க முடியம்.

நீ ஆயிரம் மருந்துகளை உன்னுடைய வியாதிகளின் பொருட்டுச்சாப்பிடலாம். ஆனாலும் நோயில் இருந்து மீண்டுவிட வேண்டும் என்ற தளராத நம்பிக்கை உனக்கு இல்லாமல் போய்விட்டால் நீ குணம் அடைவது முடியாத ஒரு விஷயம் தான்.

பொறுமை!

நீ ஒரு போதும் உணர்ச்சி வசப்படாதே! உணர்ச்சி வசப்படுவதால் பரபரப்பு ஏற்படுகிறது. அதற்கு இடம் தராதே!

உன்னுடைய பொறுமையை இழக்காதே!

எரிச்சல் அடையாதே!

உனக்கு எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்ப்பட்டாலும் நிர்ச்சலனமாக இருக்கப் பழகிக்கொள்.

கோபம்

மற்றவர்கள் உன்னை எப்படி நடத்தினாலும் நீ கோபத்துக்கு மட்டும் இடம் தரக்கூடாது.

சோர்விலே எச்சரிக்கை

நீங்கள் மிகவும் சோர்ந்து போய் இருக்கும் போது ஒருபோதும் தூங்கச் செல்லவேண்டாம். இடையிடையே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் உங்களால் முடிந்த மிக எளிமையான உடல் பயிற்சிகளைச செய்யுங்கள். உங்களுக்கு மீண்டும் புத்துணர்ச்சியைத் தரக்கூடிய உங்களுக்குப் பிடித்தமான எதையாவது படியுங்கள்.

உங்களுக்கு மிகவும் பிடித்த இசையைக் கேளுங்கள். சுடச்சுட ஒரு கோப்பைப் பால் அருந்துங்கள்.

உதவியும் இன்பமும்!

உன்னிடம் உள்ள கடவுள் உணர்வு ஒன்றுதான் உனக்குக் கிடைக்கும் உணைமையான ஒரே உதவி. அது ஒன்றுதான் உண்மையான மகிழ்ச்சி.

சுயநலம்

மனிதர்கள் அந்தக் கடவுளுடைய சக்தியைக் கொண்டு தான் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவற்றைத் தங்களுடைய சொந்த நோக்கங்களுக்காகவும் சுயநலமான திட்டங்களுக்காகவும் தான் பயன்படுத்துகிறார்கள்.

இறை உணர்வு

நீ தியானம் செய்வதன் பொருட்டுத தனிமையான இடத்தில் அமர்ந்தாலும் சரி, ஏதாவது ஒரு வேலையை மேற்கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தாலும் சரி. உனக்குத் தேவையான ஒரே விஷயம் இறைவனைப்பற்றிய இடைவிடாத உணர்வுதான்.

இறைவனுக்கே காணிக்கை

நீ பகுத்தறிவு சம்பந்தப்பட்ட முயற்சிகளைச் செய்தாலும் சரி

செயலாற்றக் கூடிய திட்டங்களை சம்பந்தப்பட்ட முயற்சிகளாக இருந்தாலும் சரி. அல்லது வேறு எவ்வகைப்பட்ட முயற்சிகளாக இருந்தாலும் சரி.

அவற்றை எல்லாம் மறக்காமல் இறைவனுக்கு அர்பணிக்கவேண்டும் என்பதை உன் குறிக்கோளாக வை.

நீ செய்யக்கூடியவை அத்தனையும் இது இறைவனுக்கே காணிக்கை என்ற உணர்வுடன் செய்.

இதுவே உனக்கு மிகச்சிறந்த ஒழுக்கத்துக்குறிய முறை. இதுமட்டுமல்லாமல், பலப்பல முட்டாள்தனமான வீணான செயல்களைச் செய்வதிலிருந்து அது உன்னைத் தடுத்து விடும்.

மௌனம்!

மனிதர்கள் பேசாமல் இருக்கக் கற்றுக்கொண்டால், எத்தனை எத்தனையோ தொல்லைகளைத் தவிர்த்துவிடலாம். எப்போதும் அமைதியாக இருந்து வலிமையைத் திரட்டுவாயாக!

இவ்வாறு செய்தால் அது வேலை செய்வதற்கு மட்டுமல்ல, உருமாற்றம் அடையவும் உதவும்.

தன்னம்பிக்கை

ஒரு மனிதனுக்குத் தன்னிடத்திலே அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் இருந்தது என்றால் , அவனால் எல்லாவித்த் துன்பங்களையும், என்ன விதமான சூழ்நிலைத் துயரங்களையும், மிகமிக மோசமானவை என்று கருதப்படுபவன்ற்றையும் எதிர்த்து நிற்க முடியும்.

இதற்குத் அவனுக்குத் தேவை ஊக்கமும், மனம் உடையாத மனோநிலைமையும் கூடத்தான்!

யோகத்தில் அடியெடுத்து வைக்க…

ஒருவன் யோக மார்க்கத்தில் அடியெடுத்து வைக்க வேண்டுமென்றால் அவனுக்கு ஒரு சில விஷயங்கள் எப்போதும் கவனத்தில் இருக்க வேண்டும்.

1. விடியற்காலையில் எழு.
2. அந்த நாளை இறைவனுக்கு அற்பணி.
3. நீ நினைப்பதையும், நீ செய்ய இருப்பதையும் அவனிடம் ஒப்படை.
4. இரவில் படுக்கைக்குப் போகும் முன், அன்றையத் தினத்தைப் பற்றி முழுமையாக எண்ணு.
5. என்னென்னவெல்லாம் செய்தாய் என்று நினைத்துப்பார்.

முதலில் உன் குறையை நீக்கு!

பிறமனிதர்கள் விஷயத்தில் நீ எதையாவது செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதை முதலில் உன் விஷயத்தில் கடைப்பிடிக்க வேண்டும்.

மற்றவர்களுக்கு ஒரு நல்ல புத்திமதியை வழங்குவதற்கு முன்னால் அந்தப் புத்திமதியை உனக்கே நீ சொல்லிக் கொள்ள வேண்டும்.

அந்த புத்திமதிப்படி நீயே நடந்துகொள்ளவேண்டும். நேர்ந்தால் அதை நீக்கக்கூடிய மிகச் சிறந்த வழி முதலில் அவ்விதமான சிக்கலை உன்னிடமிருந்து நீ விலக்குவதுதான்.

மற்றவர்களிடத்தில் நாம் என்ன விதமான குறையினைக் காண்கிறோமோ அதே குறை நம்மிடம் இருக்கிறது. என்பதை நம் உணரவேண்டும். அதன் பிறகு நம்மிடம் இருப்பதை நீக்குவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

நம்மிடமிருந்து அது முற்றிலும் நீக்கப்பட்டபிறகு மற்றவருடைய குறையை மாற்றக்கூடிய வலிமையினை நாம் அடைந்துவிடுகின்றோம்!

கடவுள் உன்னுடன் இருக்க…

கடவுளை மட்டும் நீ நினை. கடவுள் உன்னுடனே இருப்பார்.

தவறு – தவறு தவறுக்கு மேல் தவறு!

ஒரு மனிதன் என்ன செய்கிறான் என்பதைப் பற்றி வெட்டிப் பேச்சு பேசுவது தவறு.

என்ன செய்யவில்லை என்பதைப் பற்றி வெட்டிப் பேச்சு பேசுவது தவறு.

அவ்வாறான வெட்டிப்பேச்சுகளுக்கு காது கொடுப்பது அதை விடத் தவறு.

அது உண்மைதானா என்று அறிய முயலுவது அதையும் விடத் தவறு.

தவறான வம்புகள் நிறைந்த ஒரு பேச்சுக்குப் பதிலுக்குப் பதில் பேசுவது தவறினும் தவறு.

உன்னை மாற்றிக்கொள்!

மற்றவர்களுடைய விஷயங்களில் எப்பொழுதும் தலையிடாமல் இருப்பது நல்லது. மனிதர்கள் மற்றவர்களின் விஷயங்களில் கண்டபடி தலையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

கேட்காவிட்டாலும் கூடத் தங்களுடைய அபிப்ராயத்தைச் சொல்லக்கூடிய பழக்கம் தான் இதற்கெல்லாம் காரணம்!

மனதில் உறுதி வேண்டும்

ஒரு காரியம் கடினமாக இருப்பதால் அதை எண்ணிப் பயந்துவிட்டு விடக்கூடாது. மாறாக அது எவ்வளவு கடினமாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு அதில் வெற்றி பெறுவதன் பொருட்டு நாம் அதிகமான உறுதியுடன் இருக்க வேண்டும்.

கடவுளே எல்லாம் செய்பவன்.

நீ தன்னந்தனியாக இருக்கவில்லை. என்பதை ஒரு போதும் மறக்காதே கடவுள் உன்னுடனேயே இருக்கிறான். உனக்கு உதவிக் கொண்டும், வழிக்காட்டிக்கொண்டும் இருக்கிறான்..

அவன்தான் எப்போதுமே கை விடாத துணைவன். தன்னுடைய அன்பினால் நமக்கு ஆறுதலை அளிக்கக்கூடிய வலிமையையூட்டக்கூடிய நல்ல நண்பன்
அவன் மீது நம்பிக்கையை வை! அவன் உனக்கு எல்லாவற்றையும் செய்வான்.!

இரக்கத்தின் சிறப்பு:

இப்போது இருக்கக்கூடிய உலகத்தில் தர்மத்தைச் செய்வதுதானம் அன்பிற்குச் சிறந்த அடையாளம் என்று கூறமுடியாது. ஆனால் ஏதாவது ஒரு பொருளைக் கொடுப்பதன் மூலமாகவோ, வேறு வகையிலோ நம்முடைய அன்பினை வெளியிடும் போது நம்முடைய அன்பானது மற்றவருடைய அன்பையும், நட்பையும் பெறுவதிலே உலகத்திலே மிகச்சிறந்த சக்தியாக வேலை செய்கின்றது.

பலமும்- பலஹீனமும்!

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி, அதை அமைதியான முறையில் எடுத்துச் சொல்லுவதே எப்போதும் வலிமைக்கு அடையாளம் ஆகும்.

கடுகடுவென்று வெடித்து விடுவது பலஹீனத்தின் அடையாளம் ஆகும்.

விலகி இருத்தல்

எப்பொழுதும் அமைதியுடன் இரு. அமைதி இழக்கும் படியான சோதனைகள் எல்லாம் வரக்கூடிய காலத்தில் எல்லாம் அதை எதிர்த்து நில்.

விலகி நிற்காமல் எதையும் முடிவு செய்ய வேண்டாம்.

தற்புகழ்ச்சி

தற்புகழ்ச்சி செய்து கொள்ளுதல் என்பது முன்னேற்றத்துக்குப் பெரும் தடைகளாக உள்ளவற்றுள் ஒன்று.

உண்மையான முன்னேற்றத்தின் மீது ஆர்வம் இருந்தால் இந்த முட்டால் தனத்தைக் கவனமாகத் தவிர்க்க வேண்டும்.

இரண்டு வழிகள்

யோகத்திலே இருக்கும் வழிகள் இரண்டே இரண்டுதான்.
1. தவம் செய்தல்
2. சரண் அடைதல்
மகிழ்ச்சி தரும் விஷயம்

எந்தவிதப் பற்றும் இல்லாத தூய பக்தியைப்பொல வேறு எதுவும் மகிழ்ச்சியை அளிக்காது.

அருள்

அருள் என்பது என்றுமே நம்மைக் கை விடுவது இல்லை. இந்த நம்பிக்கையை நம்முடைய உள்ளத்திலே எப்போதும் நாம் கொண்டிருக்கவேண்டும்.
அரும் மருந்து

ஒரு நோயாளியின் நம்பிக்கை ஒன்றுதான் அவனை நோயிலிருந்து குணமாக உதவக்கூடிய சக்தியைத் தரும் அரும் மருந்து.
குறைகள்!

எப்போதும் மற்றவர்களுடைய குறைகளைப் பற்றிப் பேசுவது என்பது தவறு எனபதிலே சிறிது கூடச் சந்தேகமே இல்லை.

எல்லாரிடமும் கறைகள இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பது மட்டும் அவற்றைப் போக்க நிச்சயமாக உதவாது.
மாபெரும் வலிமை!

ஒருவர் மௌனமாக இருக்கக்கூடிய திறனை மட்டும் வளர்த்துக் கொண்டாரேயானால் அதிலேயே பெரிய வலிமை இருக்கிறது.

பிரகாசமான எதிர்காலம் அமைய..

நீ எப்போதும் இரக்கத்தை உடையவனாய் இரு. உனக்குத துன்பமே நேராது. எபுபோதும் திருப்தியுடனும்,சந்தோஷத்துடனு​ம் இரு. கடுமையான விமர்சனத்தைத் தவிர்த்துவிடு. எல்லாற்றிலும் தீமையைக் காண்பதையும் தவிர்த்துவிடு. சாந்தியோடு கூடிய நம்பிக்கையும், பிரகாசமான எதிர்காலமும் அமையும்.

கடவுளின் உதவி வேண்டுமா?

கடவுளின் உதவியானது எப்போடுத் இருக்கிறது. நீ தான் உன்னுடைய ஏற்றுக் கொள்ளக்கூடிய திறனை உயிர்த்துடிப்புடன் வைத்துக் கொண்டு இருக்க வேண்டும். எந்த மனிதனாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதையும் விட மிக அதிக அளவிலே கடவுளின் உதவியானது இருக்கிறது.

சிறந்த மகிழ்ச்சி தேவையா?

இறைவனுக்குத் தொண்டு செய்யுங்கள். இதைவிட சிறந்த மகிழ்ச்சி வேறு இல்லை.

இறைவனிடம் விட்டு விடு!

இறைவனிடம் உனக்குத் தூய்மையான கலப்பு இல்லாத அன்பு இருப்பதால, மற்றவர்களுடைய மனத்தாங்கள், கெட்ட எண்ணங்களை ஆகியவற்றில் இருந்து உன்னை எப்படிக் காப்பது என்பதை அவனிடமே விட்டுவிடு.

அழகு இருக்க வேண்டும்!

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அழுக, ஒழுங்கு ஹார்மோனி என்று கூறப்படும். இசையை ஆகியவற்றின் அவசியத்தை உயர்வாக மதிக்க வேண்டும். உதாரணமாக நம்முடைய உடைகளை நல்ல முறையில் பராமரித்தல், நம்முடைய புத்தகங்களை அடுக்கி வைத்தல், நம்முடைய சமையல் பாத்திரங்கைப் பராமரித்தல், ஆகியவற்றிலும் கூட அழகும் ஒழுங்கும் இசைமையும் இருக்க வேண்டும்.

தவறை உணருங்கள்!

நீ ஒரு தவறைச் செய்துவிட்டாய் என்றால் அந்தத் தவறு தவறுதான் என்று உன்னால் உணரப்பட்டு அதற்காக நீ வருந்தினால் அந்தத் தவறானது கண்டிப்பாக மன்னிக்கப்பட்டு விடும்.

இன்பத்தைக் காண முடியாதவர்கள்!

முயற்சிதான் மகிழ்ச்சியை அளிக்கிறது. முயற்சியினை எவ்வாறு செய்வது என்பதை அறியாத மனிதன் தான எப்போதும் மகிழ்ச்சி இல்லாத மனிதனாக இருக்கிறான்.

ஒருவன் தன் வாழ்நாளின் துவக்கத்திலே இருந்தே சோம்பேறியாக இருப்பவர்களை ஒரு போதும் இன்பத்தைக் காணமாட்டார்கள்.

நோய்வாய்ப்பட கிருமிகள் காரணமல்ல!

சந்தேகம்.

மனம் சோர்வடைதல் தன்நம்பிக்கை இல்லாத தன்மை சுயநலத்துடன் தன்னையே கருத்தில் கொள்ளுதல் இவை எல்லாம் ஒரு மனிதனைத் தெய்வீக ஒளியில் இருந்தும், சக்தியில் இருந்தும் உன்னைத் துண்டித்து விடுகின்றன.

பகை சக்திகளின் தாக்குதலுக்குச் சாதகமாக இருக்கின்றன. நீ நோய்வாய்ப்படுவதற்குக் காரணம் கிருமிகள் அல்ல. இது தான் காரணம்.

சிற்றின்பத்தை நீக்கு

சிற்றின்பம் என்பது மனிதனை மயங்க வைக்க்கூடிய வக்கரித்த ஒரு வேஷம். இது நம்மை நம்முடைய இலக்கிலிருந்து விலகிச் செல்லச் செய்கின்றது.

நாம் உண்மையைக் காண்பதில் ஆவல் உள்ளவர்களக இருந்தால் , நாம் அதை நாடக்கூடாது.

பயப்படாதே!

நீ உன்னை நன்றாக கவனித்துப் பார்!

நீ பயத்தை உன்னிடம் அனுமதிக்கின்ற போது நீ எதைக் கண்டு பயப்படுகின்றாயோ அதை வரவேற்கும் ஆளாக மாறிவிடுகின்றாய்.

நீ நோயைக் கண்டு பயப்படும்போது நீ நோயை வருமாறு அழைக்கிறாய்! இதுதான் தினந்தோறும் நடைபெறக்கூடிய அனுபவமாகின்றது. இதைக் கொஞ்சம் சிந்தனை செய்தால் இது விளங்கும்.

நீ உனக்கு நீயே எதைக்கண்டும் பயப்படுவது மடமை என்று கூறிக்கொள்ள வேண்டும்.

உன் வாழ்க்கை அமைதியடைய….

இரக்கத்துடன் கூடிய புன் முறுவலுடம் எல்லாவற்றையும் பார்ப்பாயாக! உனக்கு எரிச்சலையூட்டக்கூடிய விஷயங்களை யெல்லாம் உனக்கு கிடைத்த பாடமாகக் கருது.

அப்போது உன்னுடைய வாழ்க்கையானது அதிக அமைதியுடையதாகவும், அதிக பயன் உடையதாகவும் இருக்கும்.

முன்னேறிச் செல்!

யோகப் பாதையில் நீ ஒரே தடவை அடியெடுத்து வைத்துவிட்டாய் என்றால், உன்னுடைய உறுதியானது எஃகைப் போல் இருக்க வேண்டும்.

எவ்வளவு துன்பங்கள் உனக்கு எதிரிடையாக வந்தாலும் நீ உன்னுடைய இலட்சியத்தை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும்.

துணிவு ஏற்பட…

நாம் கடவுளுடைய அருளின் மேலே முழுமையான ஒரு நம்பிக்கையை வைக்கும் போது நாம் திடமான , உறுதி வாய்ந்த ஒரு துணிவினைப் பெறுகின்றோம்

நேர்மையாய் இரு..

நேர்மையாக இருப்பதிலே ஒரு ஆதிதமான மகிழ்ச்சி உண்டாகின்றது. ஒவ்வொரு நேர்மையான செயலிலும் பரிசு உள்அடங்கியே இருக்கிறது.

தற்கொலை செய்யாதே!

உபயோகம் இல்லாத பேசப்படக்கூடிய ஒவ்வொரு சொல்லும் ஆபத்து நிரம்பிய வம்புப் பேச்சே! கெட்ட எண்ணங்களுடன் பேசக் கூடிய ஒவ்வொரு சொல்லும். ஒவ்வொரு அவதூறு நிரம்பிய பேச்சும் மட்டமான கீழ்த்தரமான மொழியிலே நாகரிகமில்லாத சொற்களில் சொல்லப்படும்போது அது உன்னையே நீயே தற்கொலை செய்து கொள்வதற்குச் சமமானது ஆகும்.

முயற்சிக்கும் பலன் உண்டு

எந்த முயற்சியை நீ செய்தாலும் அது ஒரு போதும் வீண் ஆவதில்லை. அதற்கு நிச்சயமாக்ப் பலன் கிடைத்தே தீரும். ஆனால் அந்த பலனை நம்மால் உணரமுடிவதில்லை.

வெற்றியடைய வழி!

இறைவனுடைய பணியிலே ஈடுபட்டிருப்பது தான் உன்வெற்றி அடைவதற்கு மிகவும் நிச்சயமான வழி.

குறிக்கோளை வைத்தே வாழ்க்கை!

குறிக்கோள் இல்லாத வாவு என்பதே பரிதாபமான ஒரு வாழ்வாகும். உங்களுடைய ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு குறிக்கோள் உண்டு.

ஆனால் மறந்துவிடாதீர்கள். உங்களுடைய குறிக்கோளின் தன்மையைச் சார்ந்து தான் உங்களுடைய வாழ்க்கையின் தன்மையும் அமையும்.

பகை தேவை!

ஒரு மனிதனுக்குப் பகை சக்திகள் இருப்பது தேவை என்று கூடச் சொல்ல்லாம். அவை உன்னுடைய மன உறுதியை வலுப்படுத்தப்படுகின்றன.

பணத்தைப்பற்றி…

பணம் எப்போதும் வழி தவறிப் போகின்றது ஏன் என்றால் அது பகைச் சக்திகளின் பிடியில் இருக்கிறது.

இறைவனின் அன்பு

இறைவனின் அன்பினிலே எல்லா ஆதரவினையும், எல்லா ஆறுதலையும் எப்போது காண்கிறோம்.

தியானம் ஏன் செய்ய வேண்டும்?

தெய்வீகச்சக்தி உன்னைத் திறப்பதற்காக நீ தியானம் செய்யலாம்.

பேசாதே!

எப்போதும் நீ சொல்லுவதையே செய்ய வேண்டும். ஆனால் செய்பவை எல்லாவற்றையும் பற்றிப் பேசுவது என்பது அறிவுடமை ஆகாது. நீ பேசும் போது எப்போதும் உணைமையே பேச வேண்டும். ஆனால் சில சமயங்களில் பேசாமல் இருப்பது தான் நல்லது.

பணிவுடம் இரு!

உண்மையான ஞானம் பெறுவதற்குரிய நிபந்தனை என்னவென்றால் ஆரோக்கியமான பணிவுதான்.

கடவுள் உன்னை தாங்குகிறார்

உன்னை பேணி வளர்க்கிறார்

உனக்கும் உதவுகிறார்.

உனக்கு அறிவூட்டுகிறார்

உனக்கு வழிகாட்டுகிறார். இவ்வாறெல்லாம் அவர்தான் செய்கின்றார் என்று நம்பி நீ பணிவுடன் இருக்க வேண்டும்.

பக்தி என்றால் என்ன?

பக்தி என்றால் தனதாக்கிக் கொள்ளுவது அல்ல. தன்னை அர்பணித்துக் கொள்ளுவது தான் பக்தி.

முன்னேற்றம் அடைய….

கடவுளின் அருளை நோக்கிச் செய்யப்படக்கூடிய ஆர்வமுடைய நேர்மையான பிரார்த்தனை எதுவும் வீணாவதே இல்லை. தொடர்ந்து ஆர்வத்துடன் இரு.

மிகச்சரியான முன்னேற்றம் வந்தே தீரும்.

குறைகூறுவதை நிறுத்த…

நீ உபயோகப்படுத்தும் வித்த்தில் பத்து நிமிடங்கள் பேச வேண்டும் என்று கருதினால் அதற்காகப் பத்து நாட்கள் மொனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

உன்னுடைய பேச்சிலே எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் வெளிப்படக்கூடிய குறை கூற்க்கூடிய பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்ய வேண்டுமானால் பின் வருவனவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.

1. அவ்வாறான உணர்வு நிலையில் இருக்கும் போது நீ ஒரு போதும் பேசாதே. தேவை என்றால் உடல் அளவில் பேசமுடியாதபடி ஆக்கிக்கொள்.

2. உன்னையே ஆராய்ந்து பார். மற்றவர்களிடத்தில் எவை எல்லாம் சிரிப்புக்கு இடமானவையாக உனக்குத் தோன்றுகிறதோ அவை எல்லாவற்றையும் உன்னிடத்தில் இருப்பதாக அறிந்து கொள்வாயாக!

3. உன்னுடைய இயற்கையிலே அதற்கு எதிரான எண்ணம் விலகி இருப்பதைக் கண்டறிந்து அந்தத் தவறான எண்ணம் விலகி, இந்த நல்ல குணம் வளர வற்புறுத்து.

இயற்கைக் குணம் கீழ் வருமாறு:-

1. நல்ல எண்ணம்.
2. பணிவு.
3. பிறருக்கு நல்லது செய்யும் விருப்பம்.

நேரத்தை வீணாக்காதே

எப்போதும் விழிப்புணர்ச்சியுடன் இருந்து முன்னேறுவதற்கு இன்னும் என்னென்ன வெல்லாம் செய்ய வேண்டும் என்பதைக் கவனி. நேரத்தை ஒரு கணமும் வீண்டிக்காதே!

தனி ஒருவன் செய்ய வேண்டியது என்ன?

ஒருவனுடைய கடந்த காலம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவன் எவ்வளவு வேண்டுமானாலும் தவறுகளைச் செய்திருக்கலாம்.

எவ்வளவு அஞ்ஞானத்தில் வேண்டுமானாலும் வாழலாம். அவனுடைய உள்ளத்தின் ஆழ்த்துக்குள்ளே ஒரு மிக உன்னதமான தூய்மை உள்ளது. அது அற்புதமான சித்தியாக மலர்ந்து வெளிப்பட முடியும்.

ஆள வேண்டியது!

இறைவனுடைய அன்பும், ஞானமும் தான் நம்முடைய சிந்தனைகளையும், செயல்களையும், எப்போதும் ஆள வேண்டும்.

தாங்க முடியும்!

மிகவும் கடுமையான உடல் வேதனை கூட அதை அமைதியடன் எதிர்கொள்ளும் போது கடுமை குறைந்து தாங்கக் கூடியதாக ஆகிவிடுகிறது.

கோபம்

கோபம் என்பது எப்போதுமே முட்டாள்தனமானவற்றைத்தான் பேசவைக்கும்.

பயம்!

பயம் என்பது ஒரு குற்றமாகும். அது குற்றங்களுக்குள் ஒன்று. இந்த உலகத்தில் கடவுளைடைய செயலானது நிறைவேற விடாமல் அதை அழித்துவிட விரும்பக்கூடிய கடவுள் விரோத சக்திகளிடமிருந்து நேரடியாக வருகின்றவற்றுள் ஒன்றுதான் பயம்.

கோபத்தை ஒழிக்கும் வழி!

யாராவது ஒருவர் உன் மீது கோப்ப்பட்டால், அவருடைய கோப அதிர்வுகளிலே நீ அகப்பட்டுக் கொள்ளாமல் விலகி நின்றுவிடு.

எவ்விதமான ஆதரவோ, பதிலோ கிடைக்காவிட்டால் அந்தக் கோபக்கார்ரின் கோபம் ஒழிந்துவிடும். நல்லவனாக இரு

நீ நல்லவனாக இரு!

மகிழ்ச்சி உடையவனாக இரு நீ வேறு எதையும் செய்ய வேண்டாம்!வேண்டும், வேண்டும்!

நம்முடைய சிந்தனைகள் இன்னமும் அறியாமையிலே தான் இருக்கின்றன. அவற்றை நாம் ஒளி பெறச்செய்ய வேண்டும்.

நம்முடைய ஆர்வமானது இன்னும் குறைபாடுடன்தான் இருக்கிறது. அது தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.

நம்முடைய செயல்கள் இன்னும் வலிமையற்றவையாகத்தான் இருக்கின்றன. இவை அதிக ஆற்றல் வாய்ந்தவையாக மாற வேண்டும்.

எல்லாவற்றிலும் சிறந்தது!

பேச்சைக் கட்டுப்படுத்துவது என்பது முழு மௌனத்தைவிடச் சிறந்தது, பயன் உள்ள ஒரு விஷயத்தைப்பற்றி மிகமிகத் துல்லியமாகவும் , உண்மையான முறையில்மு சொல்லக் கற்றுக் கொள்வதுதான் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்

நினைக்காதே!

என்னுடைய அறிவுதான் மிகமிக இறுதியானது. மற்ற எல்லாருடைய அறிவை விட உயர்ந்தது. ஆகவே மற்றவர்கள் சொல்வது தவறு என்று ஒரு போதும் நினைக்கவே கூடாது.

உணர முடியாதவர்கள்!

அன்பைச் செய்கின்றவனால் தான் அன்பு இருப்பதை உணர முடியும். உண்மையான அன்பினால் தங்களைக் கொடுக்க முடியாதவர்களினால் எங்குமே அன்பினை உணர முடியாது.

எந்த அளவுக்கு அன்பு தெய்வீகமாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு அதை அவர்கள் உணர்வதும் குறையும்.

அமைதி வேண்டும்!

மற்றவர்களுடைய குறைகளைப் பற்றி அதிகமாக நினைக்காதே! அது உதவியாக இருக்காது. உன்னுடைய மனப்பான்மையில் எப்போதும் அமைதியும், சாந்தியும் இருக்கட்டும்.
திரும்பி வரும்!

மற்றவர்களுக்கு தீமைகளையே நினைப்பவர்களுக்குச் சொல்.நீ வேண்டுமென்றே செய்த தீமை ஓர் உருவில் இல்லாவிட்டாலும் மற்றோர் உருவில் உன்னிடம் வந்தே தீரும்.
இறைத் தொண்டு

நாம் வேறு எந்தத் தொண்டிலும் ஈடுபட வேண்டியது இல்லை. இறைவனது தொண்டிலேயே ஈடுபட வேண்டும்.

மிகவும் கஷ்டம்!

ஏழையாக ஒருவன் இருக்கிறான். மற்றொருவன் பணக்காரனாக இருக்கிறான். இந்த ஏழை மனிதனைவிடப் பணக்காரனாக இருப்பவனால், நல்லவனாக – விவேகம் உள்ளவனாகவோ- புத்திசாலியாகவோ-

வள்ளல் குணம் கொண்டவனாகவோ – இருப்பது ஆயிரம் மடங்கு மிகவும் கஷ்டமானது.

இறைவன் உன்னோடு!

இறைவனின் பனிபூரண அருளானது வலிமையிலே சாந்தியையும், செயலிலே அமைதியும், எல்லாச் சூழ்நிலைகளிலும் மாறாத சுகத்தையும் தருகின்றது. எப்பொழுதும் கிடைக்கக்கூடியது இறைவனின் பதில் ஒன்றுதான். எப்பொழுதும் மாறாது இருக்கும் அன்பு இறைவனின் அன்பு ஒன்றுதான்!

இறைவன் ஒருவன் மீது மட்டும் நீ அன்பு செலுத்துவாயாக!
இறைவன் எப்போதும் உன்னோடே இருப்பான்.

HOW TO IMPROVE YOUR LIFE

HOW TO IMPROVE YOUR LIFE

This is amazing, Randy Pausch 47 yrs old, A computer Sc. lecturer from Mellon University. He died of pancreatic cancer in 2008, but wrote a book "The last lecture"� before then, one  of the bestsellers in 2007. What a legacy to leave behind

In a letter to his wife Jai and his children, Dylan, Logan, and Chloe, he wrote this beautiful "guide to a better life" for his wife and children to follow.
May you be blessed by his insight.

POINTS ON HOW TO IMPROVE YOUR LIFE

Personality:
1. Don't compare your life to others'. You have no idea what their journey is all about.
2. Don't have negative thoughts of things you cannot control. Instead invest your energy in the positive present moment
3. Don't over do; keep your limits
4. Don't take yourself so seriously; no one else does
5. Don't waste your precious energy on gossip
6. Dream more while you are awake
7. Envy is a waste of time. You already have all you need..
8. Forget issues of the past. Don't remind your partner of his/her mistakes of the past. That will ruin your present happiness.
9. Life is too short to waste time hating anyone. Don't hate others.
10. Make peace with your past so it won't spoil the present
11. No one is in charge of your happiness except you
12. Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will last a lifetime.
13. Smile and laugh more
14. You don't have to win every argument. Agree to disagree.

Community:
15. Call your family often
16. Each day give something good to others
17. Forgive everyone for everything
18. Spend time with people over the age of 70 & under the age of 6
19. Try to make at least three people smile each day
20. What other people think of you is none of your business
21. Your job will not take care of you when you are sick. Your family and friends will. Stay in touch.

Life:
22. Put GOD first in anything and everything that you think, say and do.
23. GOD heals everything
24. Do the right things
25. However good or bad a situation is, it will change
26. No matter how you feel, get up, dress up and show up
27. The best is yet to come
28. Get rid of anything that isn't useful, beautiful or joyful
29. When you awake alive in the morning, thank GOD for it
30. If you know GOD you will always be happy. So, be happy.

While you practice all of the above, share this knowledge with the people you love, people you school with, people you play with, people you work with and people you live with. Not only will it enrich YOUR life, but also that of those around you.


EIGHT WAYS FOR HAPPINESS

EIGHT WAYS FOR HAPPINESS

Having lived a reasonably contented life, I was musing over what a person should strive for to achieve happiness. I drew up a list of a few essentials which I put forward for the readers' appraisal.

1. First and foremost is GOOD HEALTH. If you do not enjoy good health you can never be happy. Any ailment, however trivial, will deduct from your happiness. 

2. Second, A HEALTHY BANK BALANCE. It need not run into crores but should be enough to provide for creature comforts and something to spare for recreation, like eating out, going to the pictures, travelling or going on holidays on the hills or by the sea. Shortage of money can be only demoralizing. Living on credit or borrowing is demeaning and lowers one in one's own eyes.

3. Third, A HOME OF YOUR OWN. Rented premises can never give you the snug feeling of a nest which is yours for keeps that a home provides: if it has a garden space, all the better. Plant your own trees and flowers, see them grow and blossom, cultivate a sense of kinship with them. 

4. Fourth, AN UNDERSTANDING COMPANION, be it your spouse or a friend. If there are too many misunderstandings, they will rob you of your peace of mind. It is better to be divorced than to bicker all the time. 

5. Fifth, LACK OF ENVY towards those who have done better than you in life; risen higher, made more money, or earned more fame. Envy can be very corroding; avoid comparing yourself with others.

6. Sixth, DO NOT ALLOW OTHER PEOPLE to descend on you for gup-shup. By the time you get rid of them, you will feel exhausted and poisoned by their gossip-mongering.

7. Seventh, CULTIVATE SOME HOBBIES which can bring you a sense of fulfilment, such as gardening, reading, writing, painting, playing or listening to music. Going to clubs or parties to get free drinks or to meet celebrities is criminal waste of time. 

8. Eighth, every morning and evening, devote 15 minutes to INTROSPECTION. In the morning, 10 minutes should be spent on stilling the mind and then five in listing things you have to do that day. In the evening, five minutes to still the mind again, and ten to go over what you had undertaken to do. 

பொன்மொழிகள்

பொன்மொழிகள்

குழந்தைகளின் எதிர்காலம் எப்போதும் தாயின் செயலில்தான் தங்கியிருக்கிறது.
- நெப்போலியன் போனபார்ட்.

மிகச் சிறந்த அல்லது மிக மோசமான விசயங்களே விலை போகின்றன.
- ஷோபா டே

அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம் அன்பு செலுத்த முடியாது.
- அரிஸ்டாட்டில்.

நட்புதான் சுகங்களில் மட்டுமில்லாமல் துக்கத்திலும் பங்கேற்கிறது.
- வைரமுத்து.

பிறர்க்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக் கொள்கிறான்.
 - ஜெனீக்கா.

வரவு அறிந்து செலவு செய்வது சிக்கனம். செலவு அறிந்து வரவு சேர்ப்பது நற்குணம்.
- கவிதாசன்.

அதிர்ஷ்டத்தை நம்பியிருக்க வேண்டாம்.ஒழுக்கத்தை நம்பியிருங்கள்
- பப்ளியஸ்ஸிரஸ்.

ஒருவனுடைய லட்சியம் இதுவென்று அறிந்து விட்டால் பின் அவனைப் பற்றி அறிதல் கடினமானதன்று.
- ஹோம்ஸ்.

உண்மை மனிதனுக்குச் சொந்தம். பிழை அவன் காலத்திற்குச் சொந்தம்.
- கதே.

நம்பிக்கை என்பது கண் விழித்திருக்கும் போதே காண்கிற கனவு.
- பிளினி.

வலிமை, துணிவு, உண்மை, தன்னடக்கம், மரியாதை உள்ளவனே உண்மை வீரன்.
-அன்னிபெசண்ட்.

தோல்வி என்பது தள்ளிப் போடப்பட்டிருக்கும் வெற்றி அவ்வளவுதான் அதில் உற்சாக இலக்கு ஒன்றுமில்லை.
- சுவாமி சுகபோதானாந்தா.

சோம்பல் என்பது இளைப்பாறுதல் அல்ல. அது வேலையை விட அதிகம் களைப்பைத் தரும்.
-புல்லர்.

கடவுள் குணமளிக்கிறார். மருத்துவர் பணம் பெறுகிறார்.
-பிராங்க்ளின்.

சிந்தனையும் செயலும் ஒன்றாகி விட்டால் வாழ்க்கையில் வெற்றியை எளிதில் பெற்று விடலாம்.
- ராமதாசர்.

வெற்றி பெறும் ஒவ்வொரு செயலும் ஒரு குறிக்கோளாகி விடுகிறது.
- ஹாப்பர்.

மிக அதிக உயரத்தை அடைய விரும்பினால் கீழ்மட்டத்திலிருந்து தொடங்கு.
- சைரஸ்.

மனிதனை மனிதனாக்குவது உதவிகளும், வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களும்தான்.
- மாத்யூஸ்.

சுறுசுறுப்புக்கு எல்லா வேலைகளும் எளிது. சோம்பலுக்கு எல்லாமே கடினம்.
- ஆரோன்புர்.

அறிவின்மை கேவலம். அதைவிடக் கேவலம் அதிக மனமின்மை.
- ஜேம்ஸ் ஆலன்.

உற்சாகமான உழைப்பு இல்லாமல் உயர்ந்த வெற்றி எதையுமே சாதிக்க முடியாது.
- எமர்சன்.

முன் கவனமுள்ள ஒரு நண்பனைப் போல் வாழ்க்கையில் வேறு பாக்கியம் இல்லை.
- யூரிபிடிஸ்.

விரைவிலே புகழ் பெற்றவன் பெயரை காப்பாற்றிக் கொள்வது பெரிய பாரம்தான்.
- வால்டேர்.

சிந்திக்காமல் படிப்பது வீண், படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது.
-கன்பூசியஸ்.

எளிமையும் தூய்மையும் ஒருவனை உயர்ந்த மனிதனாக உயர்த்துகின்றன.
- கெம்பில்.

அறிவாளிகள் காசுக்கு அடிமையாக இருப்பதால் நம் அறிவை விலை கூறுகின்றனர். 
சுவாமி விவேகானந்தர்:

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
வில்லியம் ஷேக்ஸ்பியர்:

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள் 

1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
அடால்ஃப் ஹிட்லர்: 

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.
ஆலன் ஸ்டிரைக்:

இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.
அன்னை தெரசா:

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.

நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.
பான்னி ப்ளேயர்:

வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.
லியோ டால்ஸ்டாய்:

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
அப்ரஹாம் லிங்கன்:

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.
ஐன்ஸ்டைன்:

எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
சார்லஸ்:

ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.