Wednesday, June 17, 2015

வெற்றிக்களை அள்ளித்தரும் 14 மந்திரங்கள்!!!

வெற்றிக்களை அள்ளித்தரும் 14 மந்திரங்கள்!!!

மந்திரங்கள் சில நேரங்களில் தந்திரங்களாக இருப்ப து அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் புத்தமதம் மற்றும் இந்துமதத்தினை சேர்ந்தவர்கள் தியானம் போன்ற செயல்களில் ஈடுபடும் போது மந்திரம் போன்ற சில வார்த்தைகளை உச்சரிப் பதை அநேக இடங்களில் பார்த்திருக் கிறோம். இது ஆன்மீக ரீதியாகவோ அல்லது விஞ்ஞானரீதியாகவோ அணுகுவோருக்கு வெவ்வேறு பார்வையில் தோன்று ம். தியானம் செய்யும்போது இவர்கள் உச்சரிக்கும் வார் த்தைகள் பார்ப்பவர்களின் மனதிற்கு மந்திரங்களாக த் தோன்றுகின்றன. உண் மையில் இவர்கள் ஏன் இ ப்படி செய்கிறார்கள் என்று பலமுறை நினைத்ததுண்டு. அதன்காரணம் என்னவெ ன்றால் அவர்கள்தங்களது தியானத்தில் கவனம் செலு த்த ஏதாவது ஒன்றை கூறிக் கொண்டே இருக்க வேண்டும் அவ்வளவு தான். இப்படி ஒவ் வொருவரும் ஒவ்வொரு மாதிரியான மந்திரங்களை பயன்படுத்துவ துண்டு. இதே போல்தான் நாமும், நாம் நினைத்த காரியத்தில் நமது கவனத்தினை வைக்க 14 மந்திரங்கள் உள்ளது. அவை கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

1. பொறுமையே வெற்றிக்கான வழி
இந்த மந்திரத்தினை புரியும்படி சொன்னால் “ஒரேநா ளில் ஒபாமா” ஆக முடியாது என்பதுதான். வெற்றி ஒரே நாளில் கிடைத்திடாது, அதற் கு முக்கியமாக பொறுமை, விடாமுயற்சி, கடினஉழைப்பு என்றமூன்றும் அவசியம். இ த்துடன் அனுபவமும் ஒன்றுசேர்ந்துவிட்டால் வெற்றி கிடைப்பதை எவராலும் தடுக்க முடியாது. நாம் திட்ட மிட்டபடி நமது திட்டம் நடைபெறா தபோது கோபம், எரிச்சல் போன்ற தேவையில்லாத எண்ணங்கள் வரும், ஆனால் அதையெல்லாம் தாண்டி பொறுமையுடன் இருந் தால் மட்டுமே வெற்றிக்கனியி னை ருசிக்க முடியும்.

2. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
வாய்ப்புகள் எப்போதாவதுதான் கிடைக்கும், அப்போது நாம் அதை பயன்படுத்தா விட்டால் அந்த வாய்ப்பை நழுவவிட்டதை எண்ணி வாழ்நாள் முழுவதும் கஷ்ட ப்பட வேண்டியிருக்கும். வாய்ப்புசரியாக அமைந்தது என்றால் எவ்வளவு பெரிய ஆபத்தாக இருந்தாலும் முயற்சி செய்யுங்கள்.

3. முன்னோக்கி முன்னேறுங்கள்
ஏற்கனவே செய்ததவறுகளை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் அடுத்த நிலைக்கு ஒரு நாளும் செல்ல முடியாது. வாழ்க் கையில் ஒருஉச்சநிலைக்கு வரும்வரை நடந்தது என்ன வென்று பின்னோக்கி பார்க்க க்கூடாது, எத்தனை தோல்வி கள் வந்தாலும் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இரு க்க வேண்டும். தோல்வியில் இருந்து பாடம் கற்காவிட்டால் அதுதான் உண் மையான தோல்வி, அதனால் தோல்வி யை வெற்றிக்கு படிக்கல்லாக்கி அடுத்த நிலைக்கு தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருங்கள்.

4. உங்களை விட்டுக்கொடுக்காதீர்கள்!
வாழ்க்கை எளிது என்றுஎவருமே, ஒருநாளும் கூறிய தில்லை. வெற்றியாளர்கள் ஒரு நாளும் தங்களை தங் கள் பாதையிலிருந்து விலக் கிக்கொண்டதில்லை. தோல் விகளிடம் ஒருபோதும் உங் களை விட்டுக்கொடுக்காதீர் கள்!

5. என்னால் முடியும்….
மற்றவர்கள் உங்களைப் பார்த்து “உங்களால் முடியும், நீங்கள் செய்தால் நன்றாக இருக் கும்” என்று கூறும் முன்னரே நீங்க ளாகவே முன்வந்து அச்செயலி னை செய்யத் தொட ங்கவேண்டும். ஒவ்வொரு முறை உங்கள் திறமை யினைப்பற்றிய சந்தேகம்உங்களுக் கு வரும்போதும்“என்னால் முடியும் ”என்ற மந்திரம் கண்டிப்பாக உதவு ம்.

6. யானையின் பலம் தும்பிக்கை, மனிதனின் பலம் நம்பிக்கை
உலகில்பல புத்திசாலிகள் இருக் கின்றனர். ஆனால் அனைவராலு ம் தலைவராக முடிவதில்லை. ஏனெனில் அவர்களின்மீது அவர்க ளுக்கே நம்பிக்கை வருவதில்லை . “என்னால் இந்த செயலை முன்னி ன்று நடத்த முடியும்” என்ற நம்பிக் கை எப்போது வருகிறதோ அப்போ து நாம் இந்த மந்திரத்தில் கைதேர் ந்தவராகிறோம்.

7. உழைப்பில்லையேல் ஊதியமில்லை!
நமதனைத்து திறமைகளையு ம் நமது மனதுக்குள்ளே வை த்துக்கொண்டால் வெளியுல கிற்கு எப்படித்தெரியும். அதை வெளிக்கொணர நம்மிடம் இ ருக்கும் மந்திரம்தான் “உழை ப்பு”. உழைத்தால் மட்டுமே நமது கனவினை நனவாக்க முடியும்.
வெற்றிக்கான மந்திரங்கள்!!!

8. கவலை ஏதுமில்லை….
நமது ஒவ்வொரு முயற்சிக் கும் தடையாக இருப்பது நமது பயம், கூச்சம் மற்றும் கவலை கள்தான். இவை மட்டும் நமக் கு இருந்தால் நமது எதிரிகள் தனியாக செய்வினை வைக்க வேண்டாம், ஏனென்றால் இவை இருக்கும்வரை நம் மால் முன்னேறவே முடியாது. அதற்கான மந்திரம்தான் இது “ கவலை ஏதுமில்லை, தொல் லைஇல்லை. நடக்கும் செயல் களை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும்போது நமது கவ லைகள் கடன் வாங்கியாவது அடுத்த நாட்டிற்குச் சென்றுவிடும்.

9. சக்திகள் அதிகரிக்கும்போது, பொறுப்புகளும் அதிக ரிக்கும்.
இது நீங்கள் அடிக்கடி பார் த்து வியந்த “ஸ்பைடர்மே ன்” படத்தில் இருந்து வந்தது. நமக்கு என்ன திற மை என்ப து நாம் மட்டும் அறிந்தஒன்று, அதைநாம் பயன்படுத்தினால்தான் சிறப்புற செ யலாற்ற முடியும். உங்கள் திறமை யின்மீது நம்பிக்கை வைத்து அதை செயல்படுத்துங்கள் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.

10. இறுதியில் எல்லாம் சரியாகிவிடும்….
நமது வெற்றிக்கான பாதை எப்போதும் சமமாக இருக் கும் என சொல்ல முடியாது. மேடு பள்ளங்களுடன் தான் இருக்கும். அதை சகித்துக்கொள்ளும் மனப் பக்குவமும், சுயக்கட்டுப்பாடும் நம க்கு வேண்டும். இறுதியில் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணம் இரு ந்தால் கடைசிவரை வெற்றி நம் கையில்.

11. முடியாதது ஒன்றுமில்லை
இன்று வெற்றியாளர்களாக நாம் பார்க்கும் பலர் ஒரு நாள் அவர்கள் இப்போதிருக்கும் உயர த்தினை கனவாகக்கண்டவர்களாகத் தான் இருப்பார்கள். உங்கள் கனவினை நீங்கள் நிறைவேற்றாவிட்டால் யார் நிறைவேற்றுவார் என்ற எண்ணம் மன திற்குள் இருக்கவேண்டும். அப்போதுதா ன் ‘நம்மால் முடியாது’ என்ற எண்ணமே வராது.

12.உங்களால் மற்றவர்களை மாற்ற முடி யாது. உங்களால் உங்களை மட்டுமே மாற்ற முடியும்.
இந்த உலகத்தில் உங்களால் மாற்றக் கூடிய ஒரே உயிர் நீங்கள் மட்டுமே அத னால் உங்களை நீங்களே கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் இ ந்த மந்திரத்தினை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

13. விழி எழு பற ….
வாழ்க்கையில் ஏதாவது ஒரு இலக்கு நமக்கு கண் டிப் பாக வேண்டும். அந்த இலக்கினை அடைவதற்கு தொடர்ந்து மூச்சுக்காற்று போல முயற்சி செய்ய வே ண்டும். அப்போதுதான் அதை சாதிக்க முடியும்.

14. சிறந்ததையே செய்யுங்கள்
ஒருஆசிரியர் மாணவர்களிடம், தேர்ச்சிஅடைந்தால் மட்டும் போதும் என்று கூறுவதில் லை. அனைவரும் 100% மதிப்பெண் எடுக்கவேண்டும் என்றுதான் கூறுவார். அதைப் போல த்தான் இதுவேபோதும் என்ற எண்ணம் வந்துவிட்டால் நம்மா ல் எவ்வளவு முடியும் என்பது நமக்கே தெரியாமல் போய்விடும். அதனால் எப்போ தும் உங்களால் முடிந்த வரை சிறப்பாகச்செயல்படுங்கள்
இதில் ஒரு சில மந்திரங்களை கடைபிடிக்கத் தவறினாலும், இவற்றை கடைபிடிக்கும் முய ற்சியில் ஈடுபட்டாலே விரைவில் வெற்றி கிடைத்துவி டும்.

சாதனை படைக்க‍ நமக்குத் தேவையான அவசியமான விசேஷ குணங்கள்

சாதனை படைக்க‍ நமக்குத் தேவையான அவசியமான விசேஷ குணங்கள்

சாதனை படைக்க‍ நமக்குத் தேவையான அவசியமான விசேஷ குணங்கள் – சாதனையாளர்களிடம் காணப்ப டும் சிறப்பு குணங்களும் கூட‌ ஒருமனிதன் வெற்றியடையத் துணைபுரிவது அவனது குணங்களே என்று சொல்லப்படுகிறது. சாதனையா ளர்களின் குணங்கள் மற்றவர்க ளைவிட சற்று வேறுபட்டே இரு க்கின்றதுஎன்பதுதான் உண்மை. அப்படி இருக்கையில் வெற்றி மனிதர்களிடம் காணப்படும் விசேஷ குணங்கள்தான் என்ன என்பதைச் சற்று ஆராய்ந்துப் பார்ப்போம்.

சாதனையாளர்கள் உணர்வுக்குக் கட்டுப்பட்டவர்கள்
உணர்வுக்குக் கட்டுப்படும் இவர்களது முதல் குணமே மற்றவர்களை விட இவர்க ள் வேறுப்பட்டிருக்கக் கார ணமாய் உள்ளது. அவர்க ளைப் பொருத்த வரை ஒரு காரியத்தில் ஈடுபட அதனை உணர்வுப்பூர்வமாக அணு குவது, அறிவுப்பூர்வமாக அணுகுவதைவிட முக்கிய மானது. இதனால்,வெற்றி மனிதர் கள் ஒருகாரியத்தில் ஈடுபடுகை யில் அதை முழுமையாக விரும் பிச் செய்வார்கள். சால்ஸ் டார்வி ன், ஆல்பெர்ட் என்ஸ்டைன்போன் ற பல சாதனை மனிதர்கள் அவர்க ளது இளமை பருவத்தில் படிப்பில் பின் தங்கியவர்க ளாகவே இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

சாதனையாளர்கள் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ப்பற்றிக்கவலை கொள்வதில்லை சாதனையாளர்கள் எப்பொழுதுமே தங்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள உறவின் எல்லையை நன்கு அறி ந்தவர்களாக இருப்பர். அவர்கள் மற்றவர்களின் கருத்தைக் கேட்பார்களேத் தவிர, மற்றவர்களை முடி வெடுக்கவிட மாட்டார்கள். தாங்கள் விரும்பும் தொழிலி ன் முன்னேற்றத்திலேயே அ வர்களது கவனம் இருக்கும். மற்றவர்களின் தேவையில் லா விமர்சனத்தில் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள்.

சாதனையாளர்கள் தங்கள் செயல் திறனை வளர்த்துக் கொண்டே இருப்பார்கள் ஒருமனிதன் தன் வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள, அவன து படைப்பாற்றல், செயல்திற ன் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டே இருத்தல் அவசியம். இதைத்தான் சாதனை மனிதர்க ள் செய்கின்றனர். அவர்கள் சற்று சோர்ந்து போகும் போதெல்லாம் தங்கள் ஆற்றலை மேம்படுத்தும் பலவித நடவடிக் கைகளில் ஈடுபடுகின்றனர். அது அவர்களின் தொழில் சம்பந்தப்ப ட்டதாக இருக்க வேண்டிய அவசி யம் இல்லை. ஆனால், அவர்களு க்குப் பிடித்ததாய் இருத்தலே அவசியம்.

சாதனையாளர்களுக்குத் தங்களின் தனியுரிமையைத் தற்காத்துக் கொள்ள முடியும் இந்நவீன காலக்கட்டத்தில் கை தொலைப்பேசியின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே இருக்கி ன்றது. நமக்குஉதவியாக இரு க்  கவேண்டிய இத்தொலைப்பே சி, நமக்குச் சில சமயங்களில் அதிகத் தொல்லைத் தரும் ஒன்றாக அமைந்து, நம் வேலையையும் பாதிக்கின்றது. இதனால்தான், சாத னைமனிதர்கள் பலர்வேலை நேரங்களின்போது தங்களது தொலைப்பேசியை அடைத்து விடுகின்றனர். இவர்களில் சிலர் ஸ்மார்ட்போன் போன்ற நவீனக் கைத்தொலைப் பேசி யைப் பயன்படுத்துவதில்லை . இருப்பினும், அவர்களுக்கும் வெளியுலகத் தொடர் புக்கும் எப்பொழுதுமே துண்டிப்பு வந்ததில்லை.

சாதனையாளர்கள் கவனம் சிதறா மல் இருப்பார்கள்
சாதனை மனிதர்கள் எப்பொழுதும் எதையாவது செய்துக் கொண்டே இருப்பார்கள். இதற்கு அவர்களது கவனம் முகவும் முக்கியப் பங்களி க்கிறது. தங்களது கவனம் சிதறா மளிருக்க, தனி அறையில் வேலைசெய்தல், தியானித் தல் போன்ற பல வழிகளைப் பின்பற்றுவர். எதற்குமே அதிகம் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள். அவர்களின் எண்ணம் முழுக்கத் தாங் கள் ஈடுப்படும் தொழிலைப் பற்றியே இருக்கும்.

சாதனையாளர்கள் தங்கள் முதல் வெற் றியில் நிலை த்திருக்க மாட்டார்கள்

சாதனையாளர்கள் ஒவ்வொரு நாளும் சாதித்திக் கொ ண்டே இருப்பார்கள். அவர்கள் தங்கள் முதல் வெற்றி க்குப்பிறகு ஓய்ந்துவிட மாட்டா ர்கள். வெற்றிப் பாதையை நோ க்கி ஓடிக் கொண்டேயிருக்கும் இவர்கள், புதுப்புது காரியங்களி லும் ஈடுப்படுவார்கள். இதற்கும் மேலாக, அவர்கள் வெற்றிக்கா க எந்தவித சவாலையும் எதிர்க் கொள்ளத் தயாராக இருப்பார்கள்.

மேற்கூறிய குணங்கள் உங்களிடமும் உள்ளதா? அப்படியென்றால் நீங்களும் ஒரு வெற்றியாளர்தான்!!

உங்களது அடையாளமே உங்க ஆளுமைதான்! – உணர வேண்டிய உன்ன‍த வரிகள்!

உங்களது அடையாளமே உங்க ஆளுமைதான்! – உணர வேண்டிய உன்ன‍த வரிகள்!

ஆளுமை தரும் அடையாளம்! ஆளுமை… நாம் நம்மி டையே காண்பது சுயதோற்றம். பிறர் நம்மிடையே பார்ப்பதுதான் ஆளுமை. பெர்சனாலிட்டி (personality) என்ற ஆங்கிலச் சொல்லை அடிக்கடி இன்று கேட்கின் றோம். யாரை எப்படி எப்படிக் கையாளுவது என்பதில்தான் ஆளுமைஅடங்கியிருக்கின்றது உங்களிடம் வெளிப்படும் சிந்த னை, செயல், எண்ணம், மொழி, மனம், ஒழுக்கம், சமூக உறவு போன்றவைதான்உங்களுடை ய ஆளுமைப் பண்புகளையும் வெளிப்படுத்தும். பிறருக்கு உங்களை அடையாளப்படு த்தும்!

1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள் ளாதீர்கள். அது உங்களை பல வீனமானவராக காட்டும்.
2.மற்றவரின் கண்களை நேரா கப் பார்த்து பேசவும். அது உங் களை நேர்மையானவராகக் காட்டும்.
3.நீங்கள்பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.
4. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.
5. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப்படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பி க்கையற்றவராகக் காட்டும்.
6. நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடி ப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்த வராக காட் டக்கூடும்.
7. நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வ தை கேட்க விரும்பாதவரையும் கேட்க வைக்கும்.
8.உங்கள் பேச்சைவிளக்குவதற்கு, உங்க ள் கைகளையும் பயன்படுத்தவும். சைகை கள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக் கும். 

முன்னேற்றத்தின் மூல மந்திரங்கள் – சுகி சிவம்

முன்னேற்றத்தின் மூல மந்திரங்கள் – சுகி சிவம்

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் ஒரு முறை ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

”ரிலேட்டிவிட்டி தியரி என்கிற உங்கள் அரிய விஞ்ஞான உண்மையை நீங்கள் கண்டு பிடிக்காமல் விட்டிருந்தா ல் இந்த உலகம் என்னவா கி இருக்கும் ?”

ஐன்ஸ்டீன் சிரித்தபடி, ” ஒன்றும் குடிமுழுகிப்போ ய் இருக்காது… வேறு ஒரு வர் அதைக் கண்டறிந்து வெளிப்படுத்தி இருப்பார்” என்றார்.
அதிர்ச்சி அடைந்த கேள்வியாளர், “இன்னொருவர் கண்டறிந்து வெளிப்படுத்த பல ஆண்டுகள் ஆகி விடும் அல்லவா ?” என்று இழுத்தார்.

சிறிது யோசித்த ஐன்ஸ்டீன்… ”அதிகபட்சம் இன்னும் ஒரு மூன்று வாரங்கள் வேண்டுமா னால் தள்ளிப் போயிருக்கும். அவ் வளவுதான்”என்றார். ஆம்… இது உண்மை. உலகில் ஒரே ஒரு ஆல்ப ர்ட் ஐன்ஸ்டீன்தான் இதைக்கண்டறி ய முடியும் என்பதில்லை. காரணம் அதே கால கட்டத்தில் பல விஞ்ஞா னிகள் பல பகுதிகளில் அத்தகைய சிந்தனைத் தாக்கத்துடன் அதே கோட்பாடுகளைப் பற் றி ஆய்வு செய்து கொண்டிருந் தனர். யார் முந்தப் போ கிறார்கள் என்பதற்குத்தான் உலகம் காத்திருந்தது. ஒரு பந்தயம் போல… வேறு ஜெர்மானிய விஞ்ஞானி யும் ரிலேட்டிவிட்டி தியரியின் பல கூறுகளை ஆய்வு செய்திருந்தார்.

கிட்டத்தட்ட முடிவையும் கண்டறிந்து விட்டார். ஆனா ல், வகுத்து, தொகுத்து, ஆராய்ச்சிக் கட்டுரையாக்க தா மதம் செய்து விட்டார். எழுத்தில் வடிப்பதில் கொஞ்ச ம் சோம்பேறித்தனமாக இ ருந்துவிட்டதால் புகழ்முழு வதையும், ஐன்ஸ்டீன் அள்ளிக் கொண்டார். ஐன்ஸ்டீன் அவரையும் அவரது ஆராய்ச்சியையும் மனதில் வைத் துக் கொண்டுதான் அதிகபட்சம் மூன்று வாரங்கள் என்று பதில் கூறியதாகக் கருதுகிறார்கள்.

பலர் இப்படித்தான் பெரும்புகழையும், பொருளையும் சின்னச் சின்ன சோம்பேறித்தனத்தால் இழந்து போய் விட்டார்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம். பின்னர் செ ய்து முடிக்கலாம் என்று கொஞ்சம் தள்ளி வைத்த வர்களை உலகம் மொத்த மாகத்தள்ளி வைத்துவிடு கிற து. காரணம் இது ஒரு ஓடுகளம்,இங்கே தயங்கி நிற்பவர்கள் தள்ளப்படு வார்கள்.

ஒரு சின்ன தகவல் படித்தேன். கடிதங்கள் எழுதுவதி ல் தபால் அட்டைகளை அதிகம் பயன்படுத்துகிறவர்க ள் கொஞ்சம் கூடுதல் சுறுசுறுப்புள்ளவர்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறதாம். தவத்திரு குன்றக்குடி அடிக ளார், திருமுருக கிருபானந்த வாரியார், திரு கி. ஆ.பெ. விசுவநாதன், திரு கி.வா. ஜக ன்னாதன் போன்ற பெரியவர் களோடு நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். இவர்கள் எவ்வளவு வேலைகள், பயண ங்களுக்கிடையிலும் கிடுகிடு வென்று தபால்களுக்குப் பதி ல் எழுத அஞ்சல் அட்டைகளை உபயோகிப்பார்கள். உ டனுக்கு டன் தபால் பெட்டியில் சேர்த்தும் விடுவார்கள்.

ஒருமுறை ஒரு விழாவில் பேசி விட்டு திரு கி.வா.ஜ. அவர்களும் நானும் ரயிலில் ஒன்றாக வந்து கொண்டி ருந்தோம். காலையில் ரயி ல் சென்னை வந்து அடையு ம் முன்பு எழுந்து நான்கை ந்து தபால் அட்டைகளில் கடிதம் எழுதிக் கொண்டிருந் தார்கள். ரயில் நிலையத் தில் இறங்கியதும் நிலையத் தில் இருந்த தபால் பெட்டியில் தம் கைப்பட சேர்த்து விட்டு வீட்டுக்குப் புறப்பட்டார்கள். “இவ்வளவு அதிகா லையில் தபால்எழுதி உடனே பெட்டியிலும் சேர்க்கி றீர்களே… ஏதும் அவசரமா ?” என் றேன்.

“நேற்றுவிழா நடத்தி நம் மை ரயிலில் கொண்டு வந்து பொறுப்புடன் சேர் த்த நண்பர்களுக் குத்தான் நன்றி தெரிவித்து, பத்திர மாக வந்து சேர்ந்த விவர த்தையும் எழுதினேன். அப் புறம் எழுதிக்கொள்ளலாம் என்று விட்டு விட்டால் அப்படியே போய்விடும்” என் றார்.
”நலமுடன் சென்னை வந்து சேர்ந்தேன். அன்புடன் உப சரித்தமைக்கு நன்றி” என்று ஊர் சேருமுன்பே தபா ல் எழுதி நேரத் தை மிச்சப்படுத்தி உடனுக்குடன் செய லை முடிக்கும் அவரைப் பார்த்து ஆச்சர்யம் அடைந் தேன்.

அப்போது அவர் சொன்னார். “இது ராஜாஜி அவர்களி டமிருந்து நான் அறிந்து பின்பற்றும் வழக்கம்” என்றா ர். இப்போது தான் செல்ஃபோன் வந்து விட்டதே… இது ஏன் என்று நீங்கள் நினைக்க லாம். தபால் அட்டை எழுதுங் கள் என்பது என் செய்தி அல்ல. வேலைகளைத் தள்ளிப்போடா து உடனுக்குடன் முடியுங்கள்… விரை வாகச் செயல்படுங்கள்… தாமதம் தலைவனாகிறவனுக் குத் தடை என்று உணருங்கள் என்பதே என் செய்தி.

கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு வரும் வெங்காய லாரிகளை, உருளைக் கிழங்கு லாரிகளை நீங்கள் எப்போதாவது கவனித்தது உண்டா? சந்தைக்குலாரி யை க் கொண்டு வரும் ஓட் டுனர்கள் புயல்வேகத்தில் வருவார்கள். ஒரே காரணம். முதலில் வரும் லாரியில் உள்ள காய்களுக்குக் கிடை க்கும் விலை அடுத்தடுத்த லாரியின் காய்களுக்குக் கி டைக்காது. அசுர வேகம் ஆபத்து என்பதை ஒப்புக்கொ ள்கிறேன்.

அதையும் உணரவேண்டும். அதே சமயம் தாமதமாக லாரிக் குக் கணிசமாக விலை கிடை க்காது என்பதையு ம் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். முன் னேறுகிறவ ர்கள் முந்திக் கொ ள்ள வேண்டும்.

“பரபரப்பு வேறு. சுறுசுறுப்பு வேறு. பரபரப்பு ஆபத்தின் அன்னை. சுறுசுறுப்பு வெற்றியின் செல்லப்பிள்ளை.

சமய உலகில் மனிதனுடைய குணங் களை எல்லாம் நன்கு ஆராய்ந்து மூன்று பிரிவுகளில் அடக்கினார்கள். சத்வம், ரஜஸ், தமஸ் என்பார்கள். தமஸ் என்கிற தாமத இயல்பு கடவு ளை அடையப் பெருந்தடை என்கிறா ர்கள்.

மகிஷாசுர மர்த்தினி என்று துர்க்கைக்குப் பெயர். அவ ள் எருமைத் தலையை மிதித்தபடி நிற்பாள். துர்க்கை என்றால் மன உறுதி… இங்கு தமோ குணத்தை எருமையா கச் சித்தரித்து சொல்கிற புரா ணக் கதை அது. எருமைகள் எவ்வளவு மந்தமாக இயங் கும் என்பதைக் கவனித்தால் நாம் வெட்கப்படுவோம். வழி யை அடை த்துக் கொண்டு படுத்திருக்கும் எருமைகளை முன்பு எல்லாம் வாலை முறுக்கி வலியேற்படுத்தி எழுப்பி விடுவார்கள். அப் போதும் சில எருமைகள் எழாது. எழுந்தாலும் மறுபடி யும் படுத்துக் கொள்ளும்.

தமோ குணம் உள்ளவர்கள் எந்தச் செயலிலும் இறங்க மாட்டார்கள். இறங்கினாலும் வேலை செய்ய மாட்டா ர்கள். அதனால் அவர்கள் எருமைகள்.

சமய உலகில், இறைவனுக்குப் பூசைக்குப்பயன்படுத்தும் பூவை மலரும்முன் பறித்துவிடவேண் டும் என்று ஒரு நியதி உண்டு. அதை இலக்கியங்கள் “வண்டு தொடாமலர்” என்றுஎழுதும். வண்டு மொய்த் த மலர்களைக் கடவுளுக்கு இடுவது பாவம் என்று ஒரு கருத்து உண்டு.
இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். வண்டு என்ன கடவுளுக்கு எதிரியா ? கருஞ்சட்டை போட்டிருப்ப தால் கடவுள் எதிர்ப்புக் கழக உறுப்பினரா? ஏன் வண்டு தொட்ட மலரைக் கடவுளுக்குச் சூட்டக்கூடாது ?

சிலர் முட்டாள்தனமாக வண்டு மலரில் வாய் வைத் தால் மலர் எச்சிலாகும். எச்சிலான பொருளைக் கடவு ள் ஏற்க மாட்டார் என்று நீட்டி முழக்குவார்கள். அட அசடுகளே ! எச்சில் கடவுளுக்கு ஆகாது என்றால் தேனை எப்படி அபி ஷேகம் செய்ய முடியும் ? தேன் கலந்த பஞ்சாமிர்தத்தை எப்படி படைக்க முடியும் ? கடவுளு க்கு எச்சில் ஆகாது என்பது வீண் புளுகு. தேனுக்கு “வண் டெச்சில்” என்றே திருப்புகழில் பாட்டு உண்டு.

வண்டு தொடாமலர் என்பதற்கு ஒரே காரணம், காலை அதிசீக்கிரம் எழுந்து மலர்களை மொய்ப்பது வண்டு அது தொடா மலர்தான் கடவுளுக்கு உரியது என்று விட்டால் வண்டுக்கு முன்பாக மனிதன் எழுந்தால் தான் அப்படிப்பட்ட பூவைப் பறி க்கமுடியும். தாமதகுணம் நீங்கி அதிகாலை எழுந்து சுறுசுறுப்பு டன்செயல்பட மனிதனைத் தயா ரிக்கவே சமயவாதிகள் வண்டு தொடா மலரே கடவு ளுக்கு உகந்தது என்று கதை சொன்னார்கள்.

அதிகாலை எழுவது… சுறுசுறுப்புடன் செயல்படுவது ஒத்திப்போடாமல்வேலை செய்வது… தாமதத்தை ஜெயிப்பது உடனு க்குடன் தொழில்படுவது என்பவை எல் லாம் முன்னேற்ற மனிதர்களின் மூல மந்திரங்கள்…

இலக்கை நிர்ணயிப்பது எப்படி? அதை அடைவது எப்படி? – பயன்தரும் பதிவு

இலக்கை நிர்ணயிப்பது எப்படி? அதை அடைவது எப்படி? – பயன்தரும் பதிவு

Goal Post’ இல்லாத கால்பந்து விளையாட்டு; செல்லுமிடம் தெரியாத கடற்பயணம்– இவைகளைக்கற்பனை செய்துபாருங்கள். முன்னது அர்த்த மற்ற நேரவிரயம்; பின்னது ஆபத்தான நிலைகுலைய வைக்கும் செயல்பாடு; இலக்கில்லா வாழ்க்கையும் இந்த வகையையே சாரும். நமது ஒவ்வொரு எண்ணமும் ஒரு செயலைக் குறிக்கும். ஒவ்வொரு செயலும் ஓர் இலக்கைக் குறிக்கும். ஒவ் வொரு இலக்கும் ஒரு வெற்றியைக் குறிக்கும். ஒவ் வொரு வெற்றியும் நம் சாதனைப் பட்டியலில் இடம் பெறும். சாதனைப் பட்டியல் நாம் வாழ்வாங்கு வாழ்ந்தோம் என்பதற்கா ன பகிரங்க அடையாளம். சுருங்கச் சொல்லின் இலக்கில்லா வாழ்க்கை என்பது அச்சாணி இல்லாத வண்டிக்குச் சமம்.

அதுபோகவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேராது. இத் தகைய இலக்கை நிர்ணயிப்பது எப்படி? அதை அடைவ து எப்படி? – பார்ப்போம்!

இலக்கு என்றால் என்ன?
“நமக்குவேண்டியது என்ன என்பதை விஞ்ஞானரீதியில் நிர்ணயித்து, அதை முறையாக திட்டமிட்டுக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அடைவதே ‘இலக்கு’ எனப்படும்.”

இலக்கின் வகைகள்
1. குறுகிய கால இலக்கு : 6 மாதம் – 1 வருடம்
2. மத்திய கால இலக்கு : 1 வருடம் – 3 வருடம்
3. நீண்ட கால இலக்கு : 3 வருடம் – 5 வருடம்
இலக்கை நிர்ணயித்தல் எப்படி? (How to Set your Goal) – Wiseman

Why this Goal – ஏன் இந்த இலக்கு?
ஏன் இக்குறிப்பிட்ட இலக்கை நிர்ணயிக்கின்றோம் – மிகவும் முக்கியமா, விருப்பமா, தேவையா, அவசரமா நமது வளர்ச்சி க்குத்தேவையான மிகவும்முக்கிய அவசரமாக (குறுகிய கால இலக்கு) முடிக்க வேண்டிய இக்குறிப்பிட்ட இலக்கு நிர்ணயிக் கப்பட்டிருக்கிற Is it realistic/possible? சாத்தியமான இலக்கு தானா?

நடைமுறைக்குச் சாத்தியமான, அடையக் கூடிய இலக்கை நிர்ணயித்தல் வேண்டும். “ஆறுமாதத்திற்குள் அமெரிக்க ஜனாதிபதி ஆவேன்” – போன்ற கற்பனைகளைத் தவிர்க்க வேண் டும். மற்றவர்களைப் பார்த்துக் காப்பி அடித்து வீம்புக் கு இலக்கை நிர்ணயித்தல் முறையாகாது.

Select your goal – இலக்கைத் தேர்ந்தெடுத்தல்
இலக்கை நிர்ணயிக்கும்போது அது யாரைச் சார்ந்து இருக்கிறது என்பதை அவதானிக்க வேண்டியது அவசியம். தனி ப்பட்ட குறிக்கோள், குடும்பம் சார்ந்த குறி க்கோள், சமூகம் சம்பந்தப்பட்ட குறிக்கோ ள்–இவற்றில் தேர்ந்தெடுக்கும் இலக்கு எவ்வளவு நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். சமூகம் சார்ந்த இலக்கினை நிர்ணயிக்கும்போது சற்றுமுன் யோசனையுடனும் கலந்து ஆலோசித்தும் எடுத்தல் நலம் தரும். குடும்பம் சார்ந்த இலக்கில், குடும்பத்தார் அனை வரும் இணைந்து பணியாற்றுதல் சிறப்பு.

Eleminating deficiencies – குறைகளை தவிர்த்தல்
இலக்கை நிர்ணயித்தபின், நமது முயற்சிகள் நீர்த்துப் போகாவண்ணம் இலக்கின் மீது விடாப்பிடியான பற்றுட ன் இருத்தல் வேண்டும். இலக்கை நிர்ணயித்தபின் பாதி முயற்சியில் திடீரென்று வேறு இலக்கிற்கு தாவுதல் கூடாது.

இலக்கை நிர்ணயிப்பதில் முனைப்பின்றி (Lack of Seriousness) இருத்தல் வெற்றி தராது.

எழுத்தில் வடிக்காத இலக்கு எழுச்சி பெறாது. ஏற்றம் பெறாது. ஊக்கம் தராது.  நினைவில் இராது.

Matching the factors of Goal – இலக்கின் பாகுபாடுகளைப் பொருத்துதல்
Most important – A – மிகவும் முக்கியம்
Most urgent – B – மிகவும் அவரசம்
Most desired – C – மிகவும் விரும்புவது
Skill oriented – X – திறன் சார்ந்தது
Knowledge oriented – Y – அறிவு சார்ந்தது
Physical work oriented – Z – உடலுழைப்பு சார்ந்தது

உதாரணமாக நீங்கள் ஓர் ஓட்டப்பந்தய வீரராக வேண் டும் என்ற இலக்கானது “CZ” எனப் பாகுபடுத்தப்படும். ஓர் ‘IAS’ ஆகவேண்டும் என்றால் ‘AY’என்ற பாகுபாட் டின் கீழ் வகைப்படுத்தலாம். இலக்கை விஞ்ஞான பூர்வ மாக நிர்ணயிப்பதற்கு இப்பாகுபாடு உதவுகிறது.

Analysis Your Potential– உங்கள் தகுதிசார் திறனை ஆராய்ந்து பார்க்கவும்
Ambition – குறிக்கோள் (கனவு)
Strength – பலம்
Taste – விருப்பம் (ரசனை)
Money – பணம்
உங்கள் இலக்கானது மேற்குறிப்பிட்ட தகுதிசார் திறன்க ளை ஆராய்ந்து, அதன் அடைப்படையில் நிர்ணயிக்கப் பட வேண்டும்.

Never Underestimate
உங்களையோ அல்லது உங்கள் இலக்கையோ ஒரு போ தும் குறைத்து மதிப்பிடாதீர்கள். “என்னால் இது முடியு மா” என்ற எண்ணம் வேண்டாம். உங்களால் முடியும் என்ற உறுதிப்பாட்டில் உங்கள் இலக்கினை நிர்ணயுங்க ள்.

Achieving the Goal – இலக்கை அடைதல்
விஞ்ஞான பூர்வமாய் நிர்ணயிக்கப்பட் இலக்கை உங்கள் முயற்சியினால் சுலபமாக அடையமுடியும். ஒருபோதும் மனந்தளரவேண்டாம். கடினமான இலக்கை சிறுசிறு பிரி வுகளாக மாற்றிச் செயல்படுத்தலாம். அதீத ஈடுபாடோ அல்லது மெத்தனமோ வேண்டாம். இலக்கை அடைந்த விட்டதாக மனக்கண்ணில் காட்சிகளை ஓடவிட்டுக் காணு ங்கள். (visualisation)

இவ்வாறு சிறிது முயற்சியும், சிறித நேரமும் சீரிய முறை யில் செலவழிக்கப்பட்டு, சிக்கலின்றி இலக்கை நிர்ணயி த்து சிறப்பாக அதை அடைந்தால், சரித்திரமும், சந்ததியும் உங்களை “சாதனையாளன்” என வாழ்த்தும். இது உறுதி!

வாழ்வில் தொடர்வெற்றி பெற‌, நீங்கள் இந்த 19 படிகள் படி ந‌டந்தாலே போதும்! – வாழ்வியல் விதைகள்

வாழ்வில் தொடர்வெற்றி பெற‌, நீங்கள் இந்த 19 படிகள் படி ந‌டந்தாலே போதும்! – வாழ்வியல் விதைகள்

வாழ்வில் தொடர்வெற்றி பெற‌, நீங்கள் இந்த 19 படிகள் படி ந‌டந்தாலே போதும்! – வாழ்வியல் விதைகள்

1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

3. உங்களுக்கு என்ன வயதானா லும் பரவாயில்லை. விருப்பமா ன துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளி ல் பங்கெடுங்கள்.

4. வருமானத்திற்கான வழி மிகவும்முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள் ளாதீர்கள்.

5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செ லவுகளை நிறுத்தி விடுங்கள்.

6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.

7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லா மலே சர்க்கரை, உப்பு ஆகிய வற்றை கணிசமாகக் குறை த்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.

8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க் காதீர்கள்.

9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசு கையில் கண் களைப் பார்த்துப் பேசுங்கள்.

10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல் புகளாகவே இருக்கட்டும்.

11.வாரம் மூன்று முறையாவது உடற்பயிற் சி செய்யு ங்கள். முடிந்தவரை நடந்து செல்லுங்கள்.

12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம்செலுத்துங்கள்.

13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்க ளையே பேசுங்கள்.

14.அரட்டைப்பேச்சுக்களையும் அபவா தங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.

15. மற்றவர்களின் தவறுகளை மன்னி யுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.

16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங் கள் முடிந்தவரை குறைவாகவே இரு க்கட்டும்.

17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகு திகளையும் தவறுகளையும் பட்டியல் இடு ங்கள்.

19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்க ள்மேல் உங்களுக்குஇருக்கும் அக்கறை யை உணர்த்துங்கள்.

எது யாருக்கும் தெரியக் கூடாது? – சிந்திக்க சில வரிகள்!

எது யாருக்கும் தெரியக் கூடாது? – சிந்திக்க சில வரிகள்!

மனிதர்களுக்கு சாணக்கியர் சொன்ன பல விஷயங்களில் முக்கிய மந்திரமாகக் கூறப்படுவது…ரகசியத்தை யாருக்கும் சொல்லாதே! என்பதே! ஆம், உன்னுடைய‌ மிக முக்கியமான ரகசியங்களை, நீ யாருடனும் பகிர்ந்து கொள்ளாதே. உன்னுடைய ரகசியத்தை உன்னால் பாதுகாக்க முடி யாதபோது, வேறு யாரால் பாதுகாக்க முடியும் என்பதை நினைத்துக் கொள் என்பதாகும்.

எனவே, நமக்கு முக்கியமான ரகசியங்களை நாமே பாதுகாக்காமல் நமது நண்பரிடம் கூறும் போது, அவரும், அதனை அவரது நண்பரிடம் கூற மாட்டார் என்பதில் என்ன உறுதி இருக்கிறது. எது யாருக்கும் தெரியக் கூடாது என்று நினைக்கிறோமோ அது யாருக்கு மே தெரியப் படுத்தக் கூடாது என்பதை நினைவில் கொள்வோம்.

சாணக்கியர் கூறிய மேலும் சில பொன்மொழிகள்..

மனிதனுக்குத் துணிச்சலைப் போல உலகில் உண்மையான நண்பன் வேறு யாருமில்லை.

கோபம் அன்பை அழிக்கிறது. செருக்கு அடக்கத்தை அழிக்கிறது.

மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந் தாலும் அது தீ ஆகாது.

மிகவும் நேர்மையாக இருக்காதே. நேராக வளர்ந்த நெடிய மரங்கள் தான் முதலில் வெட்டுக்கு இறையாகும். நேர்மை யாளர்களும் அப்படித் தான் வெட்டப்படுவார்கள்.

அவமானங்களை வெகுமானங்களாக மாற்றிய ஆப்ரஹாம் லிங்கன் – உண்மைச் சம்பவம்

அவமானங்களை வெகுமானங்களாக மாற்றிய ஆப்ரஹாம் லிங்கன் – உண்மைச் சம்பவம்

அமெரிக்க பாராளுமன்றத்தில், அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் உரை நிகழ்த்தும்போது, அவரை மட்டம் தட்டும் நோக்கில் எதிர் தரப்பு பிரமுகர் ஒருவர் எழுந்து,

ஆப்ரஹாம் … உங்கள் தந்தை தைத்துக்கொடுத்த செருப்பு இன்னும் என் காலை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது என்றாரா ம்  ….அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் சொன்னாராம்,

” நண்பரே என் தந்தை இறந்து பலவருடங்கள் ஆகி விட்டது, இருப்பினும் அவர் தைத்துக் கொடுத்த செருப்பு உங்களின் காலை இன்னும் அலங்கரித்துக் கொண்டு இருக்கிறதென்றால், அது அந்த அளவுக்கு நேர்த்தியாக தைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் தைத்த இடத்தில் ஏதேனும் பழுது எர்ப்பட்டிருந்தால் அதை என்னிடம் கொடுங்கள் நான் அதை உங்களுக்கு சரி செய்து தருகிறேன். எனக்கு செருப்பு தைக்கவும்தெரியும்… நாட்டை ஆளவும்தெரியும் என்று பதிலுரை த்தாராம் … … !!!

தன்னம்பிக்கை விடாமுயற்சி இவைகளில் இருந் து பெற்ற ஏழ்மையின் அனுபவ அறிவுக்கு நிகராக வேறெதுவும் போட்டியிட முடியாது பதவியில் இருக்கும் போதும் அவமானப்படுத்திய நபர் மீது கோபம் கொள்ளாமல், தன் அதிகாரத்தையும் காட்டாமல் புத்திசாலிதனமாக பணிவோடு பதில் அளித்தே அவமானப் படுத்தியவரின் மூக்கை உடைத்திருக்கிறார் லிங்கன். இந்த பக்குவமான மனதாலும் விடா முயற் சியாலும் தான் பல தோல்விகளுக்குப் பின்னர் அமெரிக்காவின் ஜனாதி பதி யாகி அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுத்தார்.

இதைத்தான் கண்ணதாசனும் “நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்” என்றார். இன்றும் பல உயிர்கள் வணங்கு கின்றன லிங்கனை…

சிரிப்பு சம்பந்தமான தத்துவ சிந்தனைகள்

சிரிப்பு சம்பந்தமான தத்துவ சிந்தனைகள்

சிரிப்பு என்பது மனிதனுக்குரிய சிறப்பம்சங்களில்  ,மனித உணர்வின் விஷேடமானதொரு வெளிப்பாடாகும் இச் சிரிப்பானது மூன்று மாத குழந்தைப்பருவத்திலே இருந்தே ஆரம்பிக்கிறது (குழந்தையின் மழலை சிரிப்பில் மகிழாதவர்களுண்டோ?)

சிரிப்பு என்பது இதழ்கலாள் மறைக்கபட்ட சொர்க்கம்.
சிரித்தால்,உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும். அழுதால் நீங்கள் ஒருவரே அழுது கொண்டிருப்பீர்கள் - சிரிப்பின் தத்துவமாகும்.

சிரிப்புக்கும் மனதிற்கும் நேரடித்தொடர்புள்ளது இதன் காரணமாக
  • சிரிப்பு அலைகள் நம்மிடம் பிறரை ஈர்க்கும்
  • கவலை அலைகள் பிறரை நம்மிடமிருந்து விரட்டும். 
  • சந்தோஷ அலைகள் நம்மை சுற்றி நேர் மறையான (Positive) எண்ணங்களை பரப்பும். 
  • சோக அலைகள் நம்மைச்சுற்றி எதிர் மறையான (Negative) எண்ணங்களை பரப்பும். 

ஆகவே உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நீங்கள் நல்ல மனதோடு இருக்கிறீர்கள் என்று பொருள்

அதே நேரத்தில் இறுக்கமான இதயத்தின் திறவுகோலாகவும் சிரிப்பு உள்ளது. 

சிரிக்கும்போது விஞ்ஞான ‌அறிவியல் 

"என்டோர்பின்ஸ்' என்னும் திரவப்பொருள் நம் மூளையில் உருவாகி ஒருவகையான இயற்கைப் போதையை ஊட்டுகிறது.
இதனால் நம் உடலுக்குப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

சிரிப்பைபற்றி மேலும், 

  • சிரிப்பானது பல்வேறு சந்தர்ப்பங்களில் இயல்பாகவே அல்லது செயற்கையாகவே வெளிப்படக்கூடியதாகும்.
  • வைத்தியதுறையினரின் ஆராய்ச்சியால் உடலில் 300 வகையான தசைகள் சிரிக்கும்போது அசைகின்றன என்பதனையும்  மனமும் தேகாமும் சிரிக்கும் சந்தர்ப்பங்களில் புத்துணர்ச்சியும் , ஆரோக்கியமும்  பெறுகின்ற என்பதனையும் கண்டறிந்துள்ளனர்.
  • ஆய்வென்றின் படி ஓரு நாளைக்கு சராசரி மனிதன் 15 தடவைகளும் குழந்தைகள் கிட்டத்தட்ட 400 தடவைகளும் சிரிக்கின்றன.இதிலிருந்து மனிதனுடைய வயதிற்கேற்றவாறு சிரிப்பு குறைந்து கொண்டு போவதை அவதானிக்கமுடிகிறது.
  • சில மேற்குலக நாடுகளில் சிரிப்பதை ஒரு பயிற்சியாக மேற்கொள்கின்றனர் ( தமிழ் திரைப்படம்- "வசூல் ராஜா MBBS"  இல் மிக அழகாக சொல்லப்பட்டுள்ளது)
  • சிரிப்பு என்பது சிநேகத்திற்கான முதல் தூதுவாகவும்.
  • மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பகிரங்க அடையாளமாகவும்.
  • இறுக்கமான சூழ்நிலையை இணக்கமாக்க உதவுவதுமாக சிரிப்பு உள்ளது சிரிப்பு.
  • அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்

சிரிப்பின் வகைகள்
  • அசட்டு சிரிப்பு
  • ஆணவ  சிரிப்பு
  • ஏளனச்  சிரிப்பு
  • சாககச்  சிரிப்பு
  • நையாண்டி  சிரிப்பு
  • புன்  சிரிப்பு (மனத்தின் மகிழ்ச்சி)
  • மழலை  சிரிப்பு
  • நகைச்சுவை  சிரிப்பு
  • அச்சிதல்  சிரிப்பு
  • தெய்வீகச் சிரிப்பு 
  • புருவச் சிரிப்பு
  • காதல் சிரிப்பு
  • வில்லங்க சிரிப்பு
  • ஏழையின் சிரிப்பு

சிரிப்பை தெரிவிக்கும் விதங்கள்
  • உதட்டின் மூலமாக சிரித்தல்
  • பற்கள் தெரியும்படியாக சிரித்தல்
  • பற்கள்,நாக்கு என்பன தெரியும்படியாக சத்தமாக  சிரித்தல்
சிரிப்பினால் வெளிப்படுத்தும் தகவல்கள்
  • அன்பு
  • மகிழ்ச்சி
  • அகம்பாவம்
  • செருக்கு
  • இறுமாப்பு
  • தற்பெருமை
  • அவமதிப்பு
  • புறக்கனிப்பு
  • வெறுப்பு

சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்
  • வெற்றியில் சிரிப்பவன் வீரன்.
  • கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்.
  • துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.
  • மகிமையில் சிரிப்பவன் மன்னன்.
  • விளையாமல் சிரிப்பவன் வீணன்.
  • இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்.
  • மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்.
  • மோகத்தில் சிரிப்பவன் வெறியன்.
  • கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்.
  • ஓடவிட்டு சிரிப்பவன் நயவஞ்சகன்.
  • தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்.
  • நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்.
  • ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்.
  • கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்.
  • கொடுக்கும்பொழுது சிரிப்பவன் சூழ்ச்சியாளன்.
  • இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி.
  • நினைவோடு சிரிப்பவன் அறிவாளி.
  • தெரியாமல் சிரிப்பவன் பசப்பாளி.
  • இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி.
  • குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி.
  • நிலைகண்டு சிரிப்பவன் காரியவாதி.
  • அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி.
  • தற்பெருமையில் சிரிப்பவன் கோழை
  • சண்டையில் சிரிப்பவன் வன்முறையாளன்.
  • நிலை மறந்து சிரிப்பவள் காதலி.
  • காதலால் சிரிப்பவள் மனைவி.
  • அன்பால் சிரிப்பவள் அன்னை.

சிரிப்பு என்பது மனம் சம்பந்தபட்டதாகும்,
மனம் என்பது ஒரு விசுவாசமான சிறந்த வேலைக்காரன் என்றும் மோசமான எஜமானன் என்றும் சொல்வார்கள்.
எனவே  சிரிப்பின் போது மிகக் கவனமாக இருக்கவேண்டும் விசயம் தெரிந்தவர்கள் சிரிப்பை வைத்தே எடைபோட்டுவிடுவார்கள்.

சிரிப்பைப்பற்றி தமிழ் அறிஞ்ஞர்களின் கருத்து
  • திருவள்ளுவர்- துன்பம் வரும் வேளையிலே சிரிங்க. 
  • பொதுவுடைமைக் கவிஞர்-சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவா மனித ஜாதி
  • கவியரசு கண்ணதாசன்-சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே.

சிரிப்பு பொன்மொழிகள்,பழமொழிகள் 
  • சிரிப்பு என்பதே மனிதரோடு மனிதரை  இழுத்துச் சேர்க்கும் ஒரு காந்தக் கல்!   -சேப்டஸ்பரி
  • ஆயிரம் வருத்தங்களின் பாரத்தை நீக்கக்கூடியது  ஒரே ஒரு இதயச் சிரிப்பாகும்.  இதற்கீடான பொருள் உலகத்தின்  எந்தச் சந்தையிலும் இல்லை. -லேம்ப்
  • சிரிப்பும்- அழுகையும் இரு மனைவியர்கள். ஒருத்தி  கொஞ்சிப் பேசினால் மற்றொருத்தி விலகி ஓடுவாள். -லீஹண்ட்
  • வாய் விட்டுச்  சிரிப்பது மட்டும்  நகைச்சுவையல்ல.  உள்ளம் கிழ்விக்கும் புன்முறுவல்  ஒரு கோடி தடவை  சிரிப்பதைவிட  உயர்ந்ததாகும். - ஸ்டர்னே
  • மனிதனுடைய இதயத்தைத் திறப்பது எது? அவனை அறியாமல் எழும் சிரிப்புத்தான் -கார்லைல்
  • மனிதன் சிரிக்கக்கூடிய நிலையில் இருக்கும் வரை அவன் ஏழையாக மாட்டான்.
  • Always laugh when you can.Its cheap medicine - Lord Byron
  • வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் 
  • " நகைச்சுவை உணர்வு எனக்கு இல்லாதிருந்தால், நான் நீண்ட நாட்களுக்கு முன்பே தற்கொலை செய்துகொண்டிருப்பேன்" -மகாத்மா காந்தி

உலக சிரிப்பு தினம்
ஆச்சரியப்படும் விடயம் என்னவென்றால் சிரிப்புக்கென்றே  ஒரு தினம் இருப்பதுதான்.'உலக சிரிப்பு தினம்' ஆண்டுதோறும் மே மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. சிரிப்பின் வாயிலாக உலகில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த தினத்தின் நோக்கம்.

அதை விட உலகளவில் 65 நாடுகளல் சுமார் 6000 சிரிப்பு மன்றங்கள் இயங்கி வருகின்றன.

ஏழையின் சிரிப்பு

சிரிப்பு
சிரித்து வாழவேண்டும் (சிரிப்பு) பாடல்
திரைப்படம்: ஆண்டவன் கட்டளை 
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன் 
====================================================
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது

திரைப்படம்: உலகம் சுற்றும் வாலிபன் (1973)
இசை: M.S. விசுவநாதன்
பாடலாசிரியர்: புலமைபித்தன்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
====================================================
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

நிம்மதியான வாழ்க்கை

நிம்மதியான வாழ்க்கை

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி

அகம் என்பது மனதை குறிப்பிடுவதாகும் ஆகவே மனதை நிம்மதியடையச் செய்தால் எந்நாழும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம் என்பது தெட்டத்தெளிவான உண்மை.

எப்படி சாத்தியப்படும்? மனம் ஒரு குரங்கு எந் நேரமும் ஏதோ ஒன்றை தேடிக்கொண்டிருக்கையில் எப்படி மனதை கட்டுப்படுத்துவது அல்லது நிம்மதியடையச் செய்வது?

ஏதோ ஒன்றை செய்யப்போய் ஆப்பிழுத்த குரங்கின் கதையாகிவிட்டால்?
ஆம் மிக இலகுவான வழி இருக்க ஏன் பயம்?

கண்டிப்பாக செய்யக்கூடாத மூன்று விடயங்கள் 
  • மகிழ்ச்சியான வேளையில் வாக்குறுதி கொடுத்தல்
  • கோபநேரத்தில் இடும் சாபம்
  • நம்மிக்கை துரோகம்

நீங்கள் செய்ய வேண்டியது மூன்றே மூன்று செய்கைகள்தான் அவையாவன
  • புன்னகையுங்கள் அமைதியாக
  • புன்னகையை ஆயுதமாகக்கொண்டு பிரச்சனையை தீருங்கள்.
  • பிரச்சனைகள் ஏற்படும்போது பெரும்பாலும் அமைதியை கடைப்பிடித்தல்

ஆகவே புன்னகை ,அமைதி இவற்றின் மூலம் மிக வலிமையான 
மன நிம்மதியை பெறலாலம்,

முயன்று பாருங்கள் பலன் தெரியும்......

எண்ணங்களும் உணர்வுகளும்

எண்ணங்களும் உணர்வுகளும்

நமது செயல்களின் ஆரம்பம் நமது எண்ணங்கள்,நமது எண்ணங்களின் பிறப்பிடம் நமது மனம்.

ஆகவே நமது மனத்தை நம் வசத்தில் வைத்திருக்க வேண்டும் அதன் உள்ளே புகும் எண்ணங்களையும் ஆசைகளையும் பற்றி நாம் சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

நம் மனதில் நல்லெண்ணங்களை,ஆரோக்கியமான எண்ணங்கள்,பொறாமை நிறைந்த எண்ணங்களையும்,கெட்ட எண்ணங்களையும் நம் முள்ளே விடுவதன் மூலம் நமக்கு நாமே தண்டனை கொடுத்துக் கொள்கிறோம்.
  • வாழ்வில் துயர்,துன்பம் இல்லை என்று சொல்லிவிடமுடியாது
  • புத்திசாலித்தனம் என்பது வாழ்க்கையை சந்தோசமாக அமைத்துக்கொள்வது.

மனப்பழக்கம்- ஒவ்வொரு முறையும் நடக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் அறிவு பூர்வமாக ஆராய்ந்து 'ஏன்?','எப்படி?' என்று கேட்டுப் புரிந்து கொள்ளும்போது நமது மன இயக்கத்தை நம் கைக்கு கொண்டு வருகிறேம்.

  • "திருத்தக் கூடியவற்றை திருத்தும் தைரியம்"
  •  "திருத்த முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம்"

இப்படியாக  நமது எண்ணங்களையும் உணர்வுகளையும் பக்குவப்படுத்திக்கொள்ளலாம்

"குறை சொல்லுவது தன்னம்பிக்கையில்லாதவர்களின் கடைசிப்புகலிடம்"

முன்னால் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் தத்துவ சிந்தனைகள்

முன்னால் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் தத்துவ சிந்தனைகள்

முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாமின் சில முக்கியமான தத்துவ சிந்தனைகளை உங்களிடம் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

  • அழகைப்பற்றி கனவு காணாதீர்கள், அது உங்களின் கடமையை பாழாக்கிவிடும்- கடமையைப்பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
  • முட்டாள் தனது முட்டாள் தனத்தை விளங்கிக்கொள்வதால் புத்திசாலியாகிறான்- புத்திசாலி தனது புத்தியை விளங்கிக்கொள்வதால் முட்டாளாகிறான்
  • கஷ்டம் வரும்போது கண்ணைமூடாதே அது உன்னை கொன்றுவிடும்-கண்ணை திறந்துபார் அதை நீ வென்றுவிடலாம்.
  • நாம் அனைவரும் ஒரே மாதிரி திறமையில்லாதவர்களாக இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரியான வாய்ப்புகள் உள்ளன.
  • சிக்கல்களை எதிர்கொள்ளும்போதே சில திறமைகள் வெளிப்படுகின்றன.
  • வாய்ப்புக்காக காத்திராதே...... வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்........
  • கனவு என்பது தூங்கும் போது வருவதல்ல, உன்னை தூங்கவிடாமல் பண்ணுவதேயாகும்.
  • ஒரு நிஜமான தலைவன் தோல்வி காணும்போது அத்தோல்வியை தன்னுடையதாக கருதுவான். வெற்றி எனும்போது அது தன்னுடைய குழுவின் வெற்றியாக கொண்டாடுவான்.
  • நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார்முன்னேயும்,எப்பேதுமே மண்டியிடுவதில்லை.
  • சிந்திக்கத் தெரிந்தவனக்கு ஆலோசனை தேவையில்லை,துன்பங்களை சந்திக்கத்தெரிந்தவனக்கு தேல்வியேயில்லை.
  • நேர்மை மற்றும் உண்மை இருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் 
  • முடியாது என்ற நோய் முற்றாக மறந்துவிட வேண்டும் இல்லாவிடில் முடியுமானவற்றை அடைந்திருக்க முடியாது. 
  • மனிதன் எடுத்து வைத்த ஒவ்வொரு காலடிக்கும் வீரம் தேவை 

  1. சிந்தனை செய், தெளிவான முடிவை எடு 

 அப்துல் கலாமின் சிந்தனைகள்

"நீ நட்சத்திரமாக ஜொலிக்க விரும்பினால்
நீ யார் என்பது முக்கியமல்ல,
உனது மனது எதை விரும்புகிறதோ
அது நிச்சயம் உன்னை வந்து சேரும்

பொறாமை

பொறாமை

ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரையிலான காலகட்டத்தில் பொறாமைப்படாமல் வாழ்ந்திருந்தால் அவன் கடவுளாவான் ஆனால் அதர்க்கு சந்தர்ப்பமே அமைவதில்லை ஏன் எனில் அவனின் மனத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாமையினாலும் மற்றும் மிருகத் தன்மைக்கு இடங்கொடுப்பதுமே காரணமாக இருக்கிறது.

உலகம் உருவான காலத்திலிருந்தே பொறாமை என்னும் உணர்வின் காரணமாக எவ்வளவோ அட்டூழியங்கள் அழிவுகள் நடந்துள்ளதென்பதை வரலாறுகள் கூறுகின்றன.

ஏன் பொறாமையின் நிமிர்த்தம் திருவள்ளுவரின் வரலாறு கூட எமக்கு இல்லை காரணம் மக்களுக்கு அறியாமையை விளக்கினதால், அக்காலத்தல் ஆட்சிசெய்த மன்னர்களுக்கு எதிரான விளைவுகள் மக்களால் வைக்கப்படும் என்ற காரணத்தினால் அவை அழிக்கப்பட்டுள்ளதாக அன்மையில் பத்திரிகையென்றில் வாசித்த ஞாபகம் உள்ளது.

ஏன் இராமாயணமும் ,மகாபாரதமும் உருவாவதற்கு அடிப்படை காரணமே பொறாமையாகும் இப்படியாக பொறாமையை வளர்த்துக் கொண்டு செல்லாம்

பொறாமை என்னவென்று அலசி ஆராய்ந்துபாருங்கள், பொறாமைக்கு அடைக்களம் கொடுத்தவரை அது எப்படி சித்திரவதைசெய்து படுகுழிக்குள் தள்ளிவிடுவதை.

ஆகவே பொறாமை என்னும் உணர்வாணது மனித பிறப்பிலிருந்தே இறப்பு வரைக்கும் வரும் உணர்வாகும் ,இவ் பொறாமை உணர்வினால் ஏற்படுபவை

  1. பிறரை நோகடித்தல்,எதிரியாக பார்த்தல்
  2. நினைத்ததை செய்து முடிக்காமை
  3. உறவுகளை மதியாமை,உறவை நாசமக்கிவிடுதல்
  4. தன்னை தானே பெரிதாக எண்ணுதல்
  5. அவநம்பிக்கை ஏற்படுதல்
  6. பொறாமையால் கோபம் வருதல்
  7. தாழ்வுமனப்பான்மை
  8. பந்தம் என்பதன் விளக்கமின்மை
  9. வாழ்க்கைக் காலத்தை கணிப்பிடாமை
  10. நோய்நொடிகள் உருவாதல் (நீரழிவு,உயர் குருதி அமுக்கம், இரத்தத்தில் நஞ்சு ,கொழுப்புக்கள் சேருதல்)

பொறாமைக்கான முக்கிய காரணம்
  1. பணம்
  2. அழகு
  3. அறிவு
  4. புகழ்

என்பன நான்குமே மிகமுக்கியமானதாகும்

இரு முறை தத்துவம் -Two Times

இரு முறை தத்துவம் -Two Times
இரு முறை தத்துவம் என்பது அன்றாட வாழ்வில் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டியவையாகும் .

உதாரணமாக
  • வினாக்களுக்கு அளித்த விடைகள் சரியாக உள்ளதா என்று இரு முறை பார்த்தல்.
  • பணம் பரிமாறும் இடங்களான வங்கி ,கடைகள் என்பவற்றில் கூட பணம் இரு முறை எண்ணிப்பார்க்கப்படுகிறது
  • நோயளிக்கு மருந்து கொடுக்கும் போது.
  • காய்கறி வாங்கும் போது இரு முறை பார்த்த பின் தான் வாங்கப்படுகிறது.
  • துணிக்கடைகளில் உடுப்பு வாங்கும் போதும்
  • விமான நிலையத்தில்.
  • தொழிற்சாலைகளிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் கூட இரு முறை பரிசோதித்த பின்  தான் விற்பனைக்கு அனுமதிக்கிறார்கள்.
  • ஏன் உணவு வகைகளில் கூட முதலில் ருசி,மணம்,நிறம் பார்த்த பின் தான் வாங்குவதோ, சாப்பிடுவதோ உண்டு

இப்படி அன்றாட வாழ்க்கையில் பல விடயங்களில் இரு முறை ஆராய்ந்து தீர்மாணம் எடுக்கப்படுகிறது. ஏன் என்றால்?
  • ஏமாத்தப்படுவேம் என்ற உள்ளென்னம்
  • செயல்களில் உறுதி .
  • மன நிம்மதி
  • தரத்தை உறுதிப்படுத்தல் ஆகும் 

இவைகள் அனைத்தும் அன்றாட வாழ்வில் நடைபெறுபவை .

ஆனால் தமிழ் மருத்துவ முறைப்படியும்,சித்தர்களின் வாக்குப்படியும் இரு முறை என்பது காலத்துடன் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கியுள்ளார்கள் ,அவற்றில் எனக்கு கிடைத்தவை,

தினம் இரு முறை
  • பல் துலக்குதல்
  •  மலம் கழித்தல் 
  • குளித்தல்
வாரம் இரு முறை
  • புதன் , சனிக்கிழமைகளில் தலைக்கு எண்ணை தோய்த்து முழுகுதல்
  • வீடு வாசல் கழுவுதல்
மாதம் இரு முறை
  • மனைவியுடன் கலவியில்  (உடலுறவு) ஈடுபடல் 
  • ஓய்வு எடுத்தல்.
  • வருமானம், செலவு என்பவற்றை மீட்டல்
  • பல் துலக்கியை மாற்றவேண்டும்
வருடம் இரு முறை
  • பேதி போக வைக்க வேண்டும்
  • வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களை அழிக்க மாத்திரை எடுக்கவேண்டும்
  • புது இடங்களுக்கு பயனித்தல்
  • முக்கிய இரத்தப்பரிசோதனைகள் (நீரழிவு,கொலஸ்ரோல்,....)

வாழ்க்கையின் தத்துவங்கள் ஏழு

வாழ்க்கையின் தத்துவங்கள் ஏழு

ஏழு என்பதற்கும் வாழும் வாழ்க்கைக்கும் நிறைய சம்பந்தமுண்டு.

சூரியனே மிகப்பெரிய சக்தியாக உள்ளது இச் சூரிய ஒளியில் மறைந்திருக்கும் நிறங்கள் ஏழு  ,

இந்த ஏழு நிறங்களும் ஒன்றேடுடன் இணைந்து  (இறைவனுக்கு மாத்திரம் தெரிந்த தொழிநுட்பத்தில்) வெள்ளெளியாக பூமி‌யை மிக சக்திவாய்ந்த ஒளிக்கதிர்களாக வந்தடைகிறது.

ஆகவே ஏழுக்கு ஒருவித சக்தியுள்ளது என்பது வெளிப்படையாகிறது,இதனை கருத்திற் கொண்டு எமது முன்னோர் வாழ்க்கைக்கு மிக முக்கிய பக்கபலமாக இருப்பவற்றை ஏழு  விதமாக பிரித்துள்ளனர் அவையாவன.

கவனிக்க ஏழு விடயங்கள்
  1. கவனி உன் வார்த்தைகளை
  2. கவனி உன் செயல்களை
  3. கவனி உன் எண்ணங்களை
  4. கவனி உன் நடத்தையை
  5. கவனி உன் இதயத்தை
  6. கவனி உன் முதுகை (பின்னாலுள்ளவர்கள்)
  7. கவனி உன் வாழ்க்கையை

வழிகாட்டும் ஏழு விடயங்கள்
  1. சிந்தித்து பேசவேண்டும்
  2. உண்மையே பேசவேண்டும்
  3. அன்பாக பேசவேண்டும்.
  4. மெதுவாக பேசவேண்டும்
  5. சமயம் அறிந்து பேசவேண்டும்
  6. இனிமையாக பேசவேண்டும்
  7. பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விடயங்கள்
  1. மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
  2. பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
  3. பிறருக்கு உதவுங்கள்
  4. யாரையும் வெறுக்காதீர்கள்
  5. சுறுசுறுப்பாக இருங்கள்
  6. தினமும் உற்சாகமாக வரவேற்க தயாராகுங்கள்
  7. மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

நன்மை தரும் ஏழு விடயங்கள்
  1. ஏழ்மையிலும் நேர்மை
  2. கோபத்திலும் பொறுமை
  3. தோல்வியிலும் விடாமுயற்ச்சி
  4. வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
  5. துன்பத்திலும் துணிவு
  6. செல்வத்திலும் எளிமை
  7. பதவியிலும் பணிவு

மனித வாழ்வில் இருந்தும் பயனற்றவை ஏழு
  1. தன்னுடைய குறையை மறைத்து மற்றவர்களின் குறை,குற்றங்களை ஆராய்தல்
  2. கணவனின் வரவு - செலவு அறிந்து வாழ்க்கையை நடத்தத் தெரியாத மனைவி
  3. கோபத்தைக் கட்டுப்படுத்த தெரியாத அரசர்
  4. பாடம் போதித்த ஆசிரியரின் உபதேச வழி நிற்காத சீடன்
  5. தாக விடாயைத் தீர்க்க இயலாது நிற்கும் தண்ணீர்
  6.  நல்ல பசி வேளையில் உண்ண முடியாதிருக்கும் உணவு
  7. வயதான காலத்தில் பெற்றோருக்கு உதவாத பிள்ளை

தீமை தரும் ஏழு விடயங்கள்
  1. பேராசை
  2. முதியோரை மதியாமை
  3. மண்,பொன்,‌பெண் ,போதை என்பவற்றின் பக்கவிளைவுகளை சிந்திக்காமை
  4. நம்பிக்கை துரேகம்
  5. நேரத்தினை வீணடித்தல்
  6. அதிக நித்திரை
  7. வதந்தியை நம்புதல்

வெற்றியின் இரகசியம்

வெற்றியின் இரகசியம்

வெற்றியின் இரகசியம் என்ன என்பதை எனக்கு புரியவைத்தார் எனது நண்பன். அன்மையில் எனது நண்பரெருவரை சந்திக்கும் வாய்ப்புகிடைத்தது ,அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடியபின் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் அது எதுவெனில் வெற்றியின் இரகசியம் என்ன? என்பதாகும்

எனக்கு தெரிந்தமட்டில் நான் கூறிய விடையாதெனில்
  1. அதிர்ஷ்டம்
  2. கடவுளின் துணை
  3. முகம் கொடுத்த தோல்விகள்
  4. விடாமுயர்ச்சி என நிறைய சொன்னேன்
  5. புன்னகை

நண்பர் சிரித்துக்கொண்டே சொன்னார், ஒரு கதை சொல்லுகிறேன் விடையை சரியாக கூறவேண்டும் என்றார்,நானும் சரி என்று சொல்ல கதையை சொல்ல ஆரம்பித்தார்.

மிக பிரசித்திபெற்ற கோவிலின் மூலஸ்தானத்தில் இருக்கும் விக்கிரமும் மூலஸ்தான வாசலில் இருக்கும் படிக்கலும் வாக்குவாதம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.
அது யாதெனில் படிக்கல் விக்கிரகத்திடம் கேட்டது நாம் இருவரும் ஒரே கல்லிருந்து செதுக்கப்பட்டவர்கள்.
இருக்கும் இடம்மாத்திரமே வித்தியாசமானது, பக்தர்கள் உன்னை தரிசிக்க வரும்போது சிலர் என்னைத் தாண்டியும் , சிலர் மிதித்தும்  உன்னிடமே வருகிறார்கள், ஏன்? இவர்கள் முட்டாள்களாக உள்ளனர் இருவரும் ஒரே கல்லுதானே?

அதற்கு விக்கிரகம் என்ன பதில் சொல்லியிருக்கும் இதான் கேள்வி எனக்கு சரியான விடையை கூறவேண்டும், விடைதெரியாவிடில் இன்றைய மதிய உணவுக்கான முழுச்செலவையும் பொறுப்பேற்கவேண்டும் இதுதான் நண்பனின் கடைசி வேண்டுகொள்.

நான் மேற்கூறிய வெற்றியின் இரகசியத்துக்கான விடைகளைக் கூறினேன் .நண்பன் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை .சரி இன்றைய மதிய உணவுக்கான செலவை ஏற்கிறேன் என்ற பின் மிகச்சரியான விடையை கூறினார்.
விக்கிரகம் சொல்லிச்சி நாம் இருவரும் ஒரே கல்லிருந்துதான், ஒரே நோக்கத்திற்காக செதுக்கப்பட்டோம் ,நீ உளியின் சில அடிகளை தாங்கமுடியாமல் உடைந்தாய், பின் உன்னை படிக்கல்லாக மாற்றினார் சிற்பி.ஆனால் நான்  உளியின் அடிகள் அனைத்தையும் தாங்கியதால் என்னை விக்கிரகமாக மாற்றினார் சிற்பி. 
இப்போது உங்களுக்கும் புரிந்திருக்கும் வெற்றியின் இரகசியம்.

நீங்கள் எதுவாக இருக்கவிரும்புகிறீர்கள் படிக்கல்லாகவா? விக்கிரமாகவா?

வெற்றியின் இரகசியம் சில
  1. எப்படிப் பட்ட சிந்தனையும் ,மனோபாவமும் இருந்தால் ஒருவன் நினைத்ததை சாதிக்க முடியும்.?
  2. தோல்வியைப் பற்றிய பயம் இருக்கக்கூடாது.
  3. மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற தயக்கம் இருக்கக் கூடாது. 
  4. எந்த ஒரு செயலையும் மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு செய்ய வேண்டும்
  5. யாரிடமும் எதையும் இரகசியமாக சொன்னால் எளிதாக நம்பிவிடுகிறார்கள்...! ஆகவே ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் குறிப்பாக பெண்கள் மத்தியில் இச்செயற்பாடானது அதிகம் உள்ளது.


திருக்குறள் அதிசயங்கள்

திருக்குறள் அதிசயங்கள்

திருக்குறளை இயற்றியவர் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கும் கி.பி 5ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் திருவள்ளுவர் ஆவர்.

திருக்குறளின் வயது
இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது 

திருக்குறள் பற்றி அதிகம் கூறத் தேவையில்லை ஏனெனில் திருக்குறள் பற்றிய நிறைய விடயங்கள் புத்தகங்களிலும்,பல வலைத்தளங்களிலும் மிக இலகுவாக கிடைக்கின்றன. ஆனால் எத்தனை போர்தான் அதன் உண்மையான அர்த்தத்தினை விளங்கி அதனை தமது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கிறார்கள்?

திருக்குறள் பற்றிய சில முக்கிய அதிசயங்கள், சிந்தனைகள் சில

திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் மறு பெயர்கள்   
  1. வள்ளுவன்
  2.  செந்நாப் போதார்
  3.  தெய்வப் புலவர்
  4.  நாயனார்

திருக்குறளின் வேறு பெயர்கள் 
  •  முப்பால்
  • பொதுமறை
  • தமிழ்மறை
  • உலகப் பொதுமறை
  • உத்தரவேதம்
  • தெய்வநூல்
  • பொய்யாமொழி
  • வாயுறை வாழ்த்து
  • திருவள்ளுவம்

திருவள்ளுவர் நினைவகங்னள் 
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
திருவள்ளுவர் இரட்டைப் பாலம்
வள்ளுவர் கோட்டம்.

திருக்குறள் விளக்கம்
'இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்' 

 திருக்குறள் கலை (திருக்குறளின் மறுவடிவம்) 
  • குறள் பீடம் விருது
  • திருவள்ளுவர் சிலை
  • திருவள்ளுவர் விருது
  • திருவள்ளுவர் (திரைப்படம்)
  • திருவள்ளுவர் (இதழ்)
  • திருக்குறள் கலைக்காட்சி
  • திருக்குறள் நெறிபரப்பு நிறுவனம்

திருக்குறள் சிந்தனைகள்   
  • திருக்குறளில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன. 
  • திருக்குறளில் 'தமிழ்' என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
  • திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
  • திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
  • திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
  • திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
  • திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
  • திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
  • திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
  • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
  • ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது.
  • திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
  • திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
  • திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
  • திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
  • திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
  • திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
  • திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
  • திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
  • திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
  • திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
  • திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
  • திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
  • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்
  • திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
  • திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு.போப் (Rev. Dr. G. U. Pope)
  • திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
  • திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது (9)
  • திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
  • எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
  • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
  • திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
  • திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
  • திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

வெற்றி தரும் எண்ணங்கள்

வெற்றி தரும் எண்ணங்கள்
வெற்றி தரும் எண்ணங்களைபற்றி அறிஞர்களின் கருத்து

  • "வெற்றியினைச் சிந்தியுங்கள் வெற்றியை உருவகப்படுத்திப் பாருங்கள்.வெற்றியை உருவாக்கத் தேவையான சக்தி உங்களிடம் செயல்படத் தொடங்கும். மனப்படம் அல்லது மனப்பான்மை மிக வலிமையுடன் நிலைபெறுகிறபோது அது சூழ்நிலைகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது. இதற்கும் மனக்கட்டுப்பாடுதான் அவசியமாகிறது"     -  வின்சென்ட் பீல்(மதப்போதகரும் மனோதத்துவ நிபுணரும்)
  • "நம்பிகைதான் நிகழ்ச்களை உருவாக்குகிறது "   -    வில்லியம் ஜேம்ஸ் 
  • "எண்ணம் எவ்வளவு வன்மையுடன் உடலை ஆட்சி செய்கின்றது என்பதை எண்ணிப்பர்கும் பொழுது எனக்கு பெரும் வியப்பேற்படுகிறது "- கவிஞன் கதே 
  • "தொழிலில் வெற்றியும் தோல்வியும் மனதின் திறமையால் நிர்ணயிக்கப்படுவதில்லை ,மனப்பன்மையினல்தான் நிர்ணயிக்கப்படுகிறது "- டாக்டர்  வால்டர் ஸ்கட் 
  • "நாம் என்ன  நினைக்கிறோமோ ,அதுவாகத்தான் நாம் இருக்கிறோம் .நாம் இனி என்ன ஆகப்போகிறோம் என்பதையும் அதுதான் நிர்ணயிக்கிறது "-  டாக்டர் எம்.ஆர். காப்மேயர் 
  • "ஒருவன் எதை நினைக்கிறானோ ,அதுவாகவே இருக்கிறான் "-பைபிள் 
  • "நாம்  இப்போது எப்படி இருக்கிறோமோ என்பது இதற்கு முன் நாம் என்ன சிந்தித்தோம் என்பதைப் பொறுத்தது "-புத்தர் 

சுப்பிரமணிய பாரதி-தத்துவ சிந்தனைகள்

சுப்பிரமணிய பாரதி-தத்துவ சிந்தனைகள்

இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார்.இவர் வாழ்ந்தகாலம் 11 திசம்பர்1882 தொடக்கம் 11 செப்டம்பர் 1921வரையாகும்.அக்காலத்தில் தமிழகத்தில் பெண்ணுரிமை பற்றி பேசிய முதல் ஆள் இவராகத்தான் இருக்கமுடியும் என பல நூல்களில் எழுதப்பட்டுள்ளது,அது மட்டுமல்லாமல் இவரின் இருபத்தி மூன்று படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அதே நேரத்தில் சுப்பிரமணிய பாரதி இந்திய விடுதலைக்கா மிக வலிமையாக போரிட்டவர் ,போராட்ட காலத்தில் பல விடுதலை போராட்ட கவிதைகளையும்,பாட்டுக்களையும் இயற்றியவர். இவர் தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர்.இதன் காரணமாக இன்றும் இவரது படைப்புகளுக்கு தனிமரியாதையும் உண்டு.

சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கையானது நினைத்துப்பார்க்க முடியாதளவு மிக மிக வறுமையானது. எப்படி இருந்தும் தமிழ் தாய்க்கு வார்த்தையால் சொல்லமுடியாதளவுக்கு தனது வாழ் நாளையே அர்பனித்து சேவைசெய்தவர்.

சுப்பிரமணிய பாரதியின் சிந்தனைகள் ...
  • மற்றவர்களின் உள்ளத்தில் உங்களைப் பற்றிய பொய்யான மதிப்பை உண்டாக்க முயற்சிக்காதீர்கள்.இதனால் பல இடங்களில் அவமானப்படலாம்.
  •  கேட்டவுடன் உலகில் எதுவும் கிடைப்பதில்லை. பக்திக்கும் இது பொருந்தும். பக்குவமடைந்த பிறகே கேட்ட வரம் கிடைக்கும். இதற்கு பல காலம் பொறுக்கவேண்டும்
  • பக்தி அதிகரிக்க அதிகரிக்க மனோபலம் அதிகரிக்கும். அப்படிப்பட்டவன் இந்த பிறப்பிலேயே தெய்வ நிலைக்கு உயர்ந்து விடுவான். கலி உலகக் கோட்பாடு
  • வீட்டில் தெய்வத்தைக் காணும் திறமை இல்லாதவன், மலைச்சிகரத்திற்குச் சென்று குகையில் அமர்ந்து தவம் செய்தாலும் கடவுள் தரிசனத்தைப் பெற முடியாது.
  • தனிமையை விரும்பியோ, மந்திரம் ஜெபித்தோ, யோகபயிற்சியில் ஈடுபட்டோ உலகத்தை விட்டு விலக முயற்சிக்க வேண்டாம். உலக விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டே மனதை ஒருநிலைப் படுத்துவதே பயனுடைய செயல்.
  • துன்பம் நேரும்போது துணிச்சல் என்னும் கடிவாளத்தால் கட்டி மனக்குதிரையைப் பிடித்து நிறுத்த வேண்டும். இதுவே சரியான யோகப்பயிற்சி.

Anger in Tamil - கோபம்

 Anger in Tamil - கோபம்

ஆங்கிலத்தில் கோபத்தின் விளைவை  DANGER என்பார்கள் எப்படி என்றால்
ANGER என்றால் கோபத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகும் அதன் D முன்னால் சேர்ப்பதன்மூலம் விளைவை எதிர்பாக்கலாம்.

கோபம் என்னும் ஆபத்தான உணர்வானது வயது வித்தியாசமின்றி சிறுவர்களுக்கும் பெரியோர்களுக்கும் பொதுவானதொன்றாகவுள்ளது.

பொதுவாக கோப உணர்வானது ஐம்புலன்களுடன் மிக ஐக்கியமான தொடர்புடையது. இவ் ஐம்புலனூடாக உருவேற்றப்படும் கோபமானது கொலைகூட செய்யும் 

நன்றாக அவதானித்துப்பார்த்தால் கோபத்தின் ஆயுள் காலம் ஓரிரு செக்கனில் முடிந்துவிடும் ஆனால் கோபத்தை அன்றாடவாழ்வில் உருவேற்றிக்கொண்டிருந்தால்
  1. பகைவர்களின் எண்ணிக்கை கூடும்
  2. ஆயுள் குறையும்
  3. மன நிம்மதி தொலைந்துவிடும்
  4. உருவ அமைப்பு சிதைந்துபோய்விடும்
  5. ஒவ்வொரு விநாடியும் நரகத்தை விட மிக மோசமானதாகவிருக்கும்
  6. பகுத்தறியும் தன்மையை இழத்தல்
  7. நன்றி மறத்தல்
  8. உறவறுத்தல்
  9. கேள்விப்படாத நோய்நொடிகளுக்கு ஆளாதல் (இரத்தக் கொதிப்பு,நீரழிவு)

போன்ற பாரதூரமான மீட்கப்பட முடியாத பக்கவிளைவுகளை இக் கோபமானது விளைவிக்கும். 

ஆனால் சில நேரங்களில் கோபத்தினால் நன்மையும் ஏற்படும்
  • எதிர்மறையான சிந்தனை மூலம் ஆக்கற் திறனை வளர்த்துக்கொள்ளலாம்
  • சில வீடுகளில் அப்பாமார்களின் கோபத்தினால் அக்குடும்பம் சீரழியாமல் இருத்தல்

கோபத்தின் மறுபெயர்கள்
  • சினம் 
  • ஆத்திரம்
  • சீற்றம்
  • எரிச்சல் 
  • கடுவெறுப்பு
  • கடுப்பு
  • கோபத்தால் பாதிப்படைபவை
  • அறிவை பாதிக்க கூடியது
  • உடலை பாதிக்ககூடியது
  •  நடத்தையை பாதிக்கக்கூடியது


இரு வரி வாழ்க்கை தத்துவங்கள்

இரு வரி வாழ்க்கை தத்துவங்கள்

  1. வருவதும் போவதும் - இன்பம்,துன்பம்
  2. வந்தால் போகாதது - புகழ்,பழி
  3. போனால் வராதது - மானம்,உயிர்
  4. தானாக வருவது - இளமை,மூப்பு
  5. நம்முடன் வருவது - பாவம்,புண்ணியம்
  6. அடக்க முடியாதது - துக்கம்,ஆசை
  7. தவிர்க்க முடியாதது - பசி ,தாகம்
  8. நம்மால் பிரிக்க முடியாதது - பந்தம்,பாசம்
  9. அழிவைத் தருவது- பொறாமை,கோபம்
  10. எல்லோருக்கும் சமனானது- பிறப்பு , இறப்பு

திரு.கிருபாணந்த வாரியாரின் பொன்மொழிகளிருந்து

துன்பம் வரக்காரணங்கள்.

துன்பம் வரக்காரணங்கள்.

துன்பம் இல்லாமல் எப்படி வாழலாம் என்பதற்கு வீட்டுப்பிராணி பூனையே மிகச்சரியான முன்னுதாரனமாகும்.அதனுடைய செயற்பாடுகளை நன்கு அவதானித்துப்பார்த்தால் எப்படி ஒழுக்கமாகவும் நிம்மதியாகவும் வாழுது என்பது நன்றாக விளங்கும்.(நண்பனின் அநுபவம்)

மனிதனுக்கு ஏற்படும் துன்பத்துக்கு காரணங்கள் பல உள்ளன. அவற்றில் சில முக்கியமானவைகள் ...
  1. ஆசையே துன்பத்திற்கான அடிப்படைக் காரணம் - கௌதம புத்தர் ஆசையினை கையாளும் முறைகளை அநுபவரீதியாக உலகிற்கு வழங்கியுள்ளார்.
  2. மூடநம்பிக்கை - அன்றாட வாழ்வில் அநுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
  3. முடிவெடுப்பதில் அவசரம்- சற்று பொறுமையாக ஆராய்ந்து முடிவெடுத்தல்.
  4. நம்பிக்கை- எந்தவொரு விடயத்தையும் நம்ப முதல் 'ஏன்?','எப்படி?' என்ற கேள்விகளை மனதினுல் கேட்டு தெளிவடைதல்.

நபரெருவதோடு கதைக்கும் போது மிக மிக கவணமாக வார்த்தைப் பிரயோகத்தை கையாளவேண்டும்,ஏனெனில் சில முக்கியமான பிரச்சனைகளுக்கு நாமே காரணியாக இருப்பதனால்.

நம்பிக்கை

நம்பிக்கை

இது ஒருவித மனநிலை சார்ந்த விடயமாகும்,

அதாவது ஒருவர் மீது அல்லது ஏதோ ஒன்றின் மீது வைக்கும் அதிதீவிர ஆசையை உண்மை என நம்புகையில் நம்பிக்கை எனும் உணர்வு மனித மனங்களில் உதயமாகிறது.
சில வேளைகளில் இவ் நம்பிக்கை உண்மையாகவே அல்லது பொய்யாகவே இருக்கலாம்.
ஆகவே நம்பிக்கையானது விஞ்ஞான முறைப்படி ஏற்றுக்கொள்ளபடவேண்டுமென்பதில்லை. இது ஓவ்வொருவருக்கும் வித்தியாசமாகவிருக்கும்.

இதனால் எது சரி எது பிழை என எமக்கு மிகநெருக்கமானவர்கள் எடுத்துக்கூறும்போது  நாம் அவர்களிடம் கோபப்படுவதுண்டு அல்லது அதனை பகுர்த்துபாக்கும் மனநிலையையும் இழந்துவிடுகிறேம்.

படிப்பறிவால் கற்றுத்தெளிந்து அதன் மூலம் பகுத்து அறிவதே சரியென நம்பும் கொள்கையும் ஒரு நம்பிக்கையே ஆகும்.

இதற்கான காரணங்கள் யாதெனில்

1.   அவரவர் பிறக்கும்,வளரும், வாழும், சூழல் மற்றும் சமூகம்
2.   சந்தர்ப்ப சூழ்நிலை
3.   பகுத்தறியும் தன்மை அற்றநிலை
4.   ஏன் நமது நம்பிக்கைகள் மற்றவர்களுக்கு மூடநம்பிக்கையாயிருத்தல்
5.   மதம் சார்ந்த நம்பிக்கைகள்
6.   ஆழ்மன பதிவின் வெளிப்பாடாதிருத்தல்

நம்பிக்கை சம்பந்தமான தத்துவ சிந்தனைகள்
·         உன்மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுள் நேரில் வந்தாலும் பயனில்லை- சுவாமி விவேகானந்தர்
·         எல்லோரையும் நம்புவது பயங்கரமானது ,எல்லோரையும் நம்பாமலிருப்பது அதிபயங்கரமானது- முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்
·         என்னிடம் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள் -நான் வெற்றியடைய என் நம்பிக்கை மட்டும் போதும்-மாவீரன் நெப்போலியன்
·         விட்டுவிடுங்கள் என உலகமே சொல்லும் போது 'நம்பிக்கை' மெதுவாக உச்சரிக்கும் இன்னுமொரு முறை முயற்ச்சித்து பார்
·         பொய் சொல்பவரை நம்பாதீர்கள் ஆனால் உங்களிடம் நம்பிக்கை வைத்திருப்பவரை ஒருபோதும் ஏமாற்றாதீர்கள்

தந்திரோபாயம் - தத்துவங்கள் (Tricks in Tamil)

தந்திரோபாயம் - தத்துவங்கள் (Tricks in Tamil)

தந்திரோபாயம்  என்பது ஏதோ ஒருவிதத்தில் இன்னெருவரை ஏமாற்றுதல்,நம்பிக்கை துரோகம்,பழிவாங்குதல் போன்ற செயல்களுக்கு தன்னில் எந்தவெரு குற்றமும் நேரடியாக தாக்காத வண்ணம் (கு‌ழந்தைத் தனமாக,மொக்குத் தனமாக ) இருக்கதக்கதாக செயல்படும் செயல் முறையாகும்.

வாழ்க்கையில் தந்திரோபாயம் இடம்பெறும் சந்தர்ப்பங்கள்
  1. அரசியல்-நாம் கண்கூடாக ஒவ்வொரு நாளும் பார்த்து தேர்தல் காலத்தில் பலியிடல்
  2. சினிமா-வியக்கவைக்கும் காட்சிகள்
  3. வியாபாரம்-விளம்பரங்கள்,கண்ணைக்கவரும் விதத்தில் பொருட்களை உற்பத்தி செய்தல்
  4. சமூக வலைத்தளங்கள்-நேரத்தை வீணடித்தல், வியாபார நோக்கம் (எமக்கில்லை வலைதளத்தின் சொந்தக்காரருக்கு)
  5. மந்திர ஜாலம் , மாஜா ஜாலம் -குறுகிய நோரத்திற்குள் எம்மை ஏமாற்றுத் வித்தை
  6. கணினி-சில மென்பொருட்களின் உதவியால் செய்யப்படுகிறது
  7. கணிதம்-சில சிக்கலான வற்றை கணீத சமன்பாடுகள் மூலம் தீர்வுகாணல்
  8. இயல்,இசை,நாடகம்-சில அசைவுகள் ,சத்தங்களை அடிப்படையாகக் கொண்டவை
  9. விளையாட்டு-வெற்றியை தனதாக்கி கொள்ள செயல்படும் குறுக்கு வழிகள்
  10. மருத்துவம்-மருந்துகள்,வேதியல் முறை மூலம் நோயை குணப்பபடுத்துதல்
  11. புகைப்படத்துறை-சொல்லத்தேவையில்லை அன்றாடம் கேள்விப்படும் விடயம்

இராமாயனத்தில் தந்திரோபாயம்
இராமாயனப் போர் முடிவுற்று சில காலங்களின் பின் சீதை தனது கற்பை நிரூபிப்பதற்கு  தீ குளித்தால் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இதற்கு யாரின்  பழிவாங்கும் தந்திரோபாயமாக இருக்கலாம்.
உங்களுக்கு விடை தெரியுமா?

எனக்குத் தெரிந்த விடை என்னவெனில் 
இராமாயணப் போரில் இராவணன் வீர மரணம் அடைந்த பிற்பாடு இராவணனின் தங்கை சூர்ப்பனகை முடிவெடுத்தால் சீதையை எப்ப‌டியும் பழிவாங்க வேண்டும் மென்று.அவள் போட்ட நாடகத்தில் (தந்திரோபாயம்) சீதை பலியானால் எப்படி என்றால்?.

ஒரு நாள் அழகிய நங்கையாக உருமாற்றம் பெற்று சீதையின்  நட்பும் ,நம்பிக்கையும் நெடுநாட்களாக பெற்றுக்கொண்ட பிற்பாடு.

ஒரு மாறுவேடத்திலுள்ள சூர்ப்பனகை சீதையிடம் கேட்டால் எனக்கு இராவணணின் உருவத்தை வரைந்து தரும்ப‌‌டி (சீதை ஓவியம் வரைவதில் நிகரானவள்) சீதை அதை மறுத்தாள்  ,பின் சூர்ப்பனகை  தனது சுயரூபத்தை காண்பித்துக்கேட்டால் நான் கேட்பது எனது அண்ணணின் உருவத்தை ,இவ்வுலகில் இராவணன் தனது சுயரூபத்தை  உனக்கு மட்டுமே காண்பித்தான் அதைவிட நீ நல்ல ஓவியக்காரி எனக்கு தயவு செய்து அண்ணனின் உருவத்தை வரைந்து தரும்படியும் இல்லாவிடில் இவ்விடத்தில் தற்‌கொலை செய்வதாகவும் ‌சொன்னால்,பின் சீதை இராவணனின் உருவ‌த்தை வரையத் தொடங்கினாள்.

வரைந்து கொண்டிருக்கையில் இராமன் சீதையை கூப்பிட்டார் ,சீதை தான் வரைந்து கொண்டிருந்த இராவணனின் ஓவியத்தை தனது தலையணையின் கீழே வைத்து விட்டு இராமர் நோக்கிச் சென்றால். இதற்கிடையில் சூர்ப்பனகை போட்டுவாங்கிவிட்டல் .

இராமரின் கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காமல் தான் வரைந்து கொண்டிருந்த இராவணனின் ஓவியம் தனது தலையணையின் கீழ் உள்ளதை ஒப்புக்கொண்டாள்,

இராமன் தன் கற்பின் மீது சந்தேக்ப்பட்ட காரணத்தினால்
சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக தீ குளித்தால் என்றும் அவள் மீண்டும் தனது தாயுடன் அக்கியமானால் என்றும் ‌இராமாயணக்கதை ஒன்று உள்ளது.

இதில் இருந்து தனது தந்ரோபாயத்தினால் சீதையின் நட்புக்கு ,நம்பிக்கைக்கு சூர்ப்பனகை குற்றம் இ‌ழைத்தாள்

ஏன் பாரதக் கதையிலும் கூட பல தந்திரோபாயங்கள் இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது

கோச்சடையான் திரைப்படத்தில் கூட தந்திரோபாயத்தினால் தான் கோச்சடைன் ரணதீரன் இலட்சியத்தை நிறைவேற்றயதை அறியலாம்

மருத்துவம்- Medicine in Tamil

மருத்துவம்- Medicine in Tamil

மருத்துவம் என்பது ஓர் அபூர்வ அறிவுசார்ந்த எல்லா மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கலையாகும்.

இப் பூலோகத்தில் உள்ள பிறந்த உயிரினங்கள் அனைத்தினதும் வாழ்நாட்கள் ஒவ்வொரு வினாடியும் குறைந்து கொண்டு வருகிறது ,இக்காலகட்டத்தில் இவ்வுயிரினங்களுக்கு சில நோய் நொடிகள் ஏற்படுகின்றன.

அவற்றுக்கான காரணம்
  1. கிருமிதொற்றுக்களாலும்,
  2. பரம்பரையாகவும்,
  3. உணவுப்பழக்கங்களாலும்,
  4. உடற்பயிற்சியின்மையாலும்,
  5. நோய் எதிர்ப்புச்சக்தி குறைபாடு,
  6. பௌதீகவியாலும் ( சூரிய ஒளி,கதிர் வீச்சு.....)

ஆனால் மருத்துவத்தை பொறுத்தவரை நோய்களுக்கு மாத்திரமன்றி விபத்துக்களினால் ஏற்படும் காயங்கள்,எலும்பு முறிவுகளை குணப்படுத்தவும்,மகப்பேற்று சிகிச்சையினால் தாயையும் சேயையும் காத்தல் போன்றவைகளுக்கு மருத்துவம் உதவியாக இருக்கிறது.

மருத்துவத்தில் நோயைக் குணமாக்கும் முறைகள்
  1. மருந்து மாத்திரைகள்
  2. அறுவைச்சிகிச்சை
  3. கதிரியல் முறை
  4. உளவியல் முறை
  5. இயன் மருத்துவ முறை

மருத்துவத்தின் வகைள்
  1.  ஆயுர்வேத மருத்துவம்
  2. ஆங்கில மருத்துவம்
  3. மரபுவழிச் சீன மருத்துவம்
  4. கிரேக்க மருத்துவம்  
  5. பண்டைய எகிப்திய மருத்துவம்
  6. கோமியோபதி மருத்துவம் 
  7. யுனானி மருத்துவம்
  8.  பாட்டி வைத்தியம்

மருத்துவத்தின் இரகசியங்களை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் முறைகள்
  1.  ஆன்மவாதம்
  2. ஆன்மீகவாதம்
  3. ஆவித்தொடர்பு
  4. குறிசொல்லல்
  5. சாத்திரம்
  6. பேய் ஓட்டுதல்

இவ் நவீன காலத்தில் எல்லாவிதமான நோய்களுக்குமான மருத்துவம் நவீனமடைந்துள்ளது பொரும்பாலும் ஆதி காலத்தைக்காட்டிலும் நவீன இயந்திர சாதனங்கள் மூலம் மிகத் துள்ளியமான நோய் நிர்ணயத்தையும் அதற்கான மருத்துவத்தையும் குற்றமற்ற முறையில் வழங்கக் கூடிய நிலையில் மருத்துவம் வளர்ந்துள்ளது 

"மருத்துவத்தால் செய்யமுடியாதது உயிர் போனால் அவ் உடலை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது"

மருத்துவம்  செய்பவர்களுக்கு வழங்கப்படும் பெயர்கள்
  1. வைத்தியர்
  2. டாக்டர்
  3. பரிசாரியார் 
  4. வெதமாத்தயா 
  5. மருத்துவம்

ஆதி காலத்தில் ஒரு சிலராலே மாத்திரம் மருத்துவம் பார்க்கப்பட்டது ஆனால் தற்காலத்தில் எங்கு பார்த்தாலும் மருத்துவமனைகளும் அதற்கேற்றாற்போல் நோயாளிகளின் எண்ணிக்கையும்  அதிகமாகவுள்ளது

ஏன் என்று தெரியவில்லை உங்களுக்கு தெரியுமாயின்  Comment Box ஊடாக அறியத்தரவும்

விடாமுயற்சி தத்துவங்கள்

விடாமுயற்சி தத்துவங்கள்

விடாமுயற்சி எனும் செயலின் இறுதிவடிவம் வெற்றியாகும்.இவ் வெற்றிக்கனியை அடைவதற்கு இலட்சியம் எனும் ஒளி எவ்வித தடையுமின்றி பிரகாசமாக இருத்தல் மிக மிக அவசியமானதாகும்.

ஆனால் விடாமுயற்சியானது இவ்வுலகில் வாழும் உயிருள்ள அனைத்திற்கும் பொதுவானதாகும்.(சில உயிரற்றவற்றுக்கும் பொருந்தும்)
இதற்கு சில உதாரணங்கள் சில

  1. தேனீகளின் தேன் சேகரிக்கும் விடாமுயற்சி
  2. கடலலையின் விடாமுயற்சி
  3. தாவித் தாவி வளரும் கொடிவகைகள்(வெற்றிலை,பாகற்கொடி.....)
  4. புற்று கட்டுவதில் கறையானின் விடாமுயற்சி.
  5. அறிவாற்றலை பெருக்குவதை விடாமுயற்சியாகக்கொண்டு பல கண்டுபிடிப்புக்களை உலகிற்கு வழங்கியவர்கள்(தோமஸ் அல்வா எடிசன், ஜன்ஸ்டைன்....)
  6. மனதை கூர்மையாக்குவதை விடாமுயற்சியாக மேற்கொண்டு பல சூட்மங்களுக்கு விடை கண்டுபிடிக்கப்பட்டமை (யோகா)

இப்படியாக இறந்தகாலத்தில் நடந்தவற்றை உதாரணமாகக் கொண்டு விடாமுயற்சிக்கு விளக்கங்கள் கொடுக்கலாம் இதனால் என்ன பயன் இருக்கிறது,? 

உதாரணமாக மனிதனை எடுத்துக்கொண்டால் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான  இலட்சியங்கள் உள்ளன ஒரு சிலரே மாத்திரம் இலட்சியத்தை விடாமுயற்சி மூலம் வெற்றியடைகின்றனர் மற்றவர்கள் தோல்வியை சந்திக்கின்றனர். ஒரு கேள்வி ஏன்? இவர்களும் விடாமுயற்சியினால் வெற்றியடையலாமே?

தேடிப்பார்த்ததில் சில காரணங்கள் தெளிவாகப்பட்டது அவை.....
  1. ஒருவருடைய ஜாதகப்பலன்-கிரகமாற்றங்களின் விளைவுகள் (விஞ்ஞானத்தில் எடுபடாதவை)
  2. அனுபவம் இல்லாமை
  3. வறுமை
  4. தோல்வி மனப்பான்மை.
  5. சேம்பேறித்தனமான உழைப்பு.
  6. இலட்சிய ஒளி பிரகாசிக்காமை.
  7. திறமையான ஆசிரியர்கள் வளம் இல்லாமை.
  8. சூழ்நிலைகள்
  9. நேரத்தின் வலிமை தெரியாமை
  10. புகழ்ச்சிக்கு அடிமையாதல்

இப்படியாக பல காரணங்கள் உள்ளன .

விடாமுயற்சியின் கணித சமன்பாடு
பயிற்சி+விடாமுயற்சி =வெற்றி

எப்படி இருப்பினும் விடாமுயற்சியினால் அனைவரும் வெற்றியடைந்தால் ????? 

விடாமுயற்சி
விடாமுயற்சியும் உடலுறுதியும் உறுதியாக இருந்தால் ஏணியில் ஏறுவதும் இறங்குவதும் இலகுவாகும்

அதிர்ஷ்டம் - தத்துவம்

அதிர்ஷ்டம் - தத்துவம்

அதிர்ஷ்டம் என்று குறிப்பிடுவது - எண்ணங்களுக்கே அல்லது ஏதேனும் முயற்ச்சிக்கோ உரமிடும் வகையில் கிடைக்கும் சக்தியை (உதவிகள்,பணம்,புகழ் ......) அதிர்ஷ்டம் எனலாம் இது நேரடியாகவே மறைமுகமாகவே கிடைக்கும்.

அதிர்ஷ்டம் சம்பந்தமான கருத்துக்கள்
  • ஒருவருக்கு நல்லநேரம் பிறந்து விட்டால் அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும்.
  • சுக்கிரன் பார்த்து விட்டான்
  • இலட்சுமி கடாச்சம் உள்ளவர்
  • செல்வதேவதை பார்த்துவிட்டாள்.

இப்படியாக அதிர்ஷ்டத்தை பணம் மூலமாக கணக்கிடுகின்றனர்.

அதிர்ஷ்டத்தை அடையும் வழிமுறைகள்
01. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா ஊக்கம் உடையான் உழை'- திருக்குறள்
02.வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு - திருக்குறள்
03.'எதுவுமே சுலபமாவதற்கு முன் கடினமாக இருக்கிறது' - ஷிவ்கரோ
04.'பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்' என்பது பழமொழி
05.'வாழ்வு வருங்கால் வராது கண் தூக்கம்' என்பது பழமொழி
06.'முயலும் வரை முயல்வதல்ல முயற்சி முடியும் வரை இடைவிடாமல் முயல்வதே முயற்சி' - எங்கோ கேட்டது

.எங்கே இந்த விடா முயற்சி இருக்கிறதோ, அங்கே அதிர்ஷ்ட வாசல் திறந்து கொள்கிறது

எங்கே ஊக்கமும் அதன் பலனான விடாமுயற்சியும் இருக்கிறதோஇ அங்கே செல்வம்,அதிர்ஷ்டம் வழி கேட்டுக்கொண்டு வரும்.

மகிழ்ச்சியான மனநிலை வரும்போது அதிர்ஷ்டத்தின் கதவு திறந்துகொள்கிறது.

ஒளியை நோக்கிச் சென்றால் நிழல் நம் பின்னால் தானாக பின்தொடர்ந்து வரும்.

மனம் தளராமல் மீண்டும் முயற்சிக்கும்போது வெற்றிக்கனி அதாவது அதிர்ஷ்டத்தை நம் கைக்கு எட்டவைக்கலாம்.

தீய பழக்கங்களில் இருந்து வெளியே வரும்போது அதிர்ஷ்டத்தின் கதவு நமக்கு திறந்துகொள்கிறது.

ஆனால் ஒரு சிலருக்கு மாத்திரமே இவ் அதிர்ஷ்டமானது சொந்தமாகவுள்ளது .ஏன்? எப்படி? என்றுபார்போமானால் ,அவர்கள்
  1. தாய் தந்தையரின் செல்வாக்கு,அரவணைப்பு.
  2.  வாழும்மிடம் (வாஸ்து).
  3.  ஜாதக அமைப்பு ("நந்தி வாக்கியம்" என்ற ஞானநூலின் செய்யுள் ).
  4. உழைப்பும், தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும், இன்முகப் பேச்சும் இருத்தல்.
  5. செல்வாக்கு.

அதிர்ஷ்டத்தை குறைக்கும் செயல்முறைகள்
  1. சில தீய பழக்கங்கள்.
  2. விழிப்புணர்வு இன்மை.
  3. இக்கரைக்கு அக்கரை பச்சை.
  4. ஒரு செயலைச் செய்யும் முன் நன்றாக திட்டமிடாமை.
  5. செயல் இன்றி பலன் இல்லை என்பதை உணரவேண்டும்
  6. மகிழ்ச்சியற்ற மனநிலை
  7. வெற்றி மனப்பான்மையின்மை.
  8. உள்ளத்தில் உயர்வு உள்ளல்லல்
  9. பொறுத்திருக்க வேண்டும் என்ற உணர்வற்ற நிலை
  10. தோல்வியைக் கண்டு பயந்து பின்வாங்குதல்

அதிர்ஷ்டம்! நம் இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா?
அது இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா?

கலாச்சாரம்- பண்பாடு தத்துவ சிந்தனைகள்

கலாச்சாரம்- பண்பாடு தத்துவ சிந்தனைகள்

கலாச்சாரம் என்பது குற்றமற்ற , விஞ்ஞான பூர்வமான காரணத்தை நேரடியாகவேஅல்லது மறைமுகமாகவே கொண்ட வாழ்க்கை முறை அல்லது வாழ்வு முறையாகும் (ஒருவித ஸ்டைல்)
இது மனிதனின் இயல்புகளில் முக்கியமானதாகும்.

கலாச்சாரம் மாறுபடும் விதங்கள்
  1. மனிதனுக்கு மனிதன் (இந்தியன்,ஜப்பான்.....)
  2. வாழும் இடத்தினை பொறுத்து (புவியியல் அடிப்படையிலுள்ள நிலப்பகுதி)
  3. மதங்கள் (நம்பிக்கை)
  4. காலநிலை
  5. தொழில் வர்க்கம் (தச்சன்,சலவைத்தொழில்)
  6. பாலினம்
  7. இனம்

கலாச்சாரத்தினால் வளர்ச்சியடையும் ,நன்மை பெறும் துறைகள்
  1. இசை
  2. மொழி
  3. ஓவியம்
  4. நாடகம்
  5. இலக்கியம்
  6. வணிகம்
  7. கட்டடத்துறை
  8. தொழிநுட்பம்
  9. விளையாட்டு
  10. சமையல்

கலாச்சாரம் என்ற சொல்லுக்கு பண்பாடு,பாரம்பரியம் போன்ற ஒத்த கருத்துள்ள சொற்கள் உள்ளன.  இதனை ஆங்கிலத்தில் கல்ச்சர் என்பர்.

இன்றைய கால கட்டத்தில் இணையத்தின் வளர்ச்சியாலும் ,தகவல் பரிமாற்ற வளர்ச்சியாலும் கலாச்சாரம் ,பண்பாடு என்பன சீரழிந்து கொண்டுவருகிறது.

இது ஒவ்வெரு கலாச்சாரதிற்கும் சாவு மணி அடிப்பதுபோலுல்லது
 இக் கலாச்சாரமற்றத்தினால் நன்மையைக் காட்டிலும் தீமையே
அதிகமாகவுள்ளது  

உதாரணமாக
தமிழருக்குரிய காலாச்சாரத்தை எடுத்துக்கொண்டால் உணவு,உடை,உறையுள்,உறவு 
என்பவற்றில் அக்காலத்திற்கும் இக்காலத்திற்கும் நிறைய மாற்றங்கள் உள்ளன
 அவையாவன

  1.  உணவு- பீட்சா,நூடில்ஸ்,பாண்,மது    
  2. பக்கவிளைவு- ஆரோக்கியம் கெடுதல்
  3.  உடை- உடல்லமைப்பனை கச்சிதமாக வெளிப்படுத்தும் பருத்தி அற்ற ஆடைகள்  
  4. பக்கவிளைவு-வியர்வை வெளியேறாமையினால் ஏற்படும் தோல்வியாதிகள்,பாலியல் உணர்வு தூண்டப்படுதல்
  5.  உறையுள்- காற்றோட்டமற்ற கட்டமைப்பு,இயற்கை அனர்தங்களுக்கு தாக்கு பிடிக்காமை 
  6. பக்கவிளைவு- உயிரிளப்பு,ஆரோக்கியம் பாதிக்கப்படல்
  7. உறவு- மேற்கத்திய ஆண்,பெண் உறவு   
  8. பக்கவிளைவு-இளம்பராயத்தில் காலத்தின் அருமையை வீணடித்தல்
  9. இசை-மேற்கத்திய இசைக்கருவிகள் 
  10. பக்கவிளைவு-மனதிற்கு துன்பத்தையும் உடலுக்கு இன்பத்தை தருதல்.
  11. நடனம்- மேற்கத்திய நடன முறை
  12. பக்கவிளைவு பார்வைக்கு நன்று ஆனால் உடல் உறுப்புகளுக்கு காலம் கடந்த பாதிப்பு/உபாதைகள்  (உடல் மனம்- பரத நாட்டியம்)

வாழ்க்கையின் இரகசியம்

வாழ்க்கையின் இரகசியம்

இரகசியம் இரகசியமாக இருக்கவேண்டியதொன்றாகும்.இரகசியம் எது என்றே தெரியாதவர்களும் இச் சமூகத்திலுள்ளனர். இப்படிப்பட்டவர்களிடம் சற்று அவதானத்துடன் நடந்துகொள்ளவேண்டும் இவர்களை அனுபவரீதீயாகத்தான் கண்டுகொள்ளவியலும்.

அது இருக்கட்டும் ,
  1. எனக்கு வேண்டியது வாழ்க்கையின் இரகசியம்?
  2. உண்மையில் வாழ்க்கையின் இரகசியத்தை அறிந்தால் என்ன நடக்கும்?
  3. வாழ்க்கையின் இரகசியத்தை அறிந்தவர்கள் உள்ளனரா? ஆம் எனின் யார் அவர்கள்?(ரிஷிகள்?,முனிவர்கள்?,மகான்கள்?.....................???)
  4. மதங்கள் போதிப்பதென்ன?
  5. இயற்கை போதிப்பது என்ன? எவ்வாறு வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டுள்ளது?
  6. கடவுள் இருப்பது உண்மையா?
  7. ஏன் ஒரே ஒரு கடவுளை உலகத்திலுள்ளவர்களினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.?
  8. போர் நடப்பதன் காரணம்யாது?(மதத்தின் பேரால்,நாட்டுக்கு நாடு,சாதிக்கு சாதி)
  9. சில கண்டுபிடிப்புக்கள் நடைபொறுவது எதனால்?

இப்படியாக எமது வாழ்க்கையில் பல இரகசியங்கள் மறைக்கபட்ட வண்ணமாகவேயுள்ளது.

என்னைப்பொறுத்தவரை வாழ்க்கையின் இரகசியத்தை மனிதனால் நிச்சயமாக அறியலாம் எப்ப என்றால் மூடநம்பிக்கையை முற்றுமுழுதாக இவ்வுலகத்திலிருந்து அகற்றும் வரை. 

ஏன் என்றால் வாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றையும் நிகழ்காலத்தில் முழுநிறைவாக அனுபவிக்கும் மனிதர்களின் வாழ்க்கைப்பயணத்தைப் பார்போமானால் அவர்கள் எல்லோரும் மூடநம்பிக்கைக்கு எதிரானவர்கலாகும்.

அதேநேரத்தில் மூடநம்பிக்கையை மற்றவர்களுக்கு புகட்டி வாழ்க்கையின் இரகசியத்தை இவர்கள் இரகசியமாக வைத்துள்ளனர்.

வாழ்க்கையின் இரகசியத்தை அறியவேண்டுமெனில் -ஏதோவொரு விருப்பமான துறையில் முழுக்கவனத்தையும் செலுத்தினால் நிச்சயமாக வாழ்க்கையின் இரகசியம் என்னவென்று தெரியும் அதே நேரத்தில் இயற்கையானது முழு உதவிகளை வழங்கும் என்பது மிக மிக உண்மையானதாகும்.

தயவு செய்து உங்கள் கருத்துக்களை comments boxன் ஊடாக  பகிர்வதன் மூலம்  அறியாத நிறைய விடயங்களை அறியலாம்.