Monday, May 27, 2019

இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம் !!!

தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்கள் !

மிகச்சிறந்த வாய்ப்புக்கள் அனைத்தும், பிரச்சனைகளால் போர்த்தப்பட்டவைதான். முள் நிறைந்த கடினமான தோலை உரித்துப் பார்க்கிறவர்களால் மட்டும்தான் வாய்ப்புக்கள் என்ற பலாச்சுளைகளை ருசி பார்க்க முடியும். பிரச்சினை என்னவென்றால், பெரும்பாலானவர்கள் பிரச்சனை என்ற தோலைப் பார்த்தவுடன் மலைப்புடன் நின்று விடுகிறார்கள் என்பதுதான்.

சாதனையாளர்கள் பிரச்சனையை தாண்டிச் செல்கிறார்கள். எத்தனை தோல்விகள் வந்தாலும் அவற்றை ஆய்வு செய்து, அனுபவப்படிக்கட்டாக மாற்றிக் கொண்டு வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறார்கள்.மின்சார விளக்கை கண்டு பிடிப்பதற்கு முன்பதாக தோமஸ் அல்வா எடிசன் 10.000 தோல்விகளை சந்தித்தார். 

இரப்பரை கண்டு பிடிக்கும் முன்பாக அவர் 17.000 தோல்விகளை சந்திக்க நேர்ந்தது.இந்தத் தோல்விகளை எல்லாம் எடிசன் தோல்விகளாகவே ஒப்புக் கொள்ளவில்லை. 

ஒரு பொருளை எப்படிச் செய்யக் கூடாது என்பதற்கு தோல்விகளே சிறந்த பாடம் என்று அவர் வர்ணித்தார். பத்து நாட்களுக்கு ஒரு தடவை ஒரு சிறிய கண்டு பிடிப்பு, ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை மகத்தான கண்டு பிடிப்பு என்று இலக்கு வகுத்துக் கொண்டு உழைத்த உலகின் மாபெரும் கண்டு பிடிப்பாளரின் வெற்றியின் இரகசியம் இதுதான். தோல்விகள் வெற்றியின் படிக்கட்டுக்கட்டுக்கள் என்ற கண்ணோட்டத்துடன் இலக்கை நோக்கி வெறியுடன் உழைப்பதே இவர்களின் நோக்கம்.

பூலோகசுவர்க்கம் என்ற டிஸ்னி வேல்ட்டை உருவாக்கிய வால்ட் டிஸ்னி தனது திட்டத்திற்கு நிதி திரட்டுவதற்காக முயற்சி எடுத்து 302 தடவைகள் தோல்வியடைந்தார். 

302 படிக்கட்டில் தோல்வியடைந்த வால்ட் டிஸ்னி 303 வது தடவை வெற்றி பெற்றார்.ஐ.பி.எம் நிறுவனர் தாமஸ் ஜே. வாட்சனிடம் விரைவாக வெற்றி பெறுவது எப்படி என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டார். தாமஸ் ஜே. வாட்சனின் பதிலில் அவரது அனுபவச் செல்வம் பளிச்சிட்டது. நீங்கள் வேகமாக வெற்றிபெற விரும்பினால் உங்களது தோல்விகளின் அளவை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும், வெற்றி என்பது தோல்வியின் மறுபக்கத்தில்தான் இருக்கிறது என்றார்.

இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம் ?

01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி.

02. 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி.

03. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி.

04. 1835 ல் அவரது காதலி மரணம்.

05. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது.

06. 1838 ல் தேர்தலில் தோல்வி.

07. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.

08. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.

09. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி.

10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.

11. 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி.

12. 1861 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க ஜனாதிபதியானார்.இத்தனை தோல்விகளையும் சந்தித்தவர் வேறுயாருமில்லை.

உலகம் அறிந்த மிகவும் பிரபலமான அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்தான். அதிக தோல்விகள், அதிக பாடங்கள், இவையே வெற்றியின் இரகசியம். தோல்விகளை வெற்றிகளாக்கிய மனிதர்களின் வரிசையில் அடுத்த வாரம் வருகிறார் ஜப்பானியரான கோண்டா

தோல்வி உங்களைத் துரத்துகிறதா?

தோல்வி என்னும சொல்லே தேவையில்லை. தோல்வி என்பது வெற்றிக்கு வழிவகுக்கும் ஒரு நண்பனே! ஆனால் அதை விரோதி என்று தவறாக அடையாளம் காண்கிறீர்கள்.

முதலில் தோல்வி என்பது என்ன என்று சிந்தியுங்கள். இலக்கை நோக்கி நீங்கள் செய்யும் முயற்சியில் தடையோ, தாமதமோ ஏற்பட்டால் அதைத் தோல்வி என்கிறீர்கள்.

தோல்வி வந்தவுடன் இனி முடியாது என்று எதிர்மறையாகச் சிந்திப்பவர்களே முயற்சியை நிறுத்திவிடுகிறார்கள். அது தோல்வியாக மாறிவிடுகிறது.

தடையோ, தாமதமோ ஏற்படும்போது, மேலும் முயல்வேன் என்று முடிவு செய்து உழைப்பவர்கள் ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்கிறார்கள். வெற்றி பெறுகிறார்கள்.

தோல்வி என்பது வெற்றிக்கான பயிற்சியே என்று நீங்கள் உணர வேண்டும். பெரிய இலக்குகளுக்கு மட்டுமல்ல. சாதாரண செயல்களுக்கும் கூட பயிற்சிதான் முழுமையை அல்லது வெற்றியைத் தந்திருக்கிறது.

நீங்கள் பிறந்த பிறகு ஒரே நாளில் ஓடிப் பழகிவிடவில்லை. எழ முயன்றபோது விழுந்தீர்கள். எழுந்து நின்ற பிறகும் பல முறை விழுந்தீர்கள். பலமுற விழுந்தும், எழுந்தும் பயிற்சி செய்தமையால்தான் இன்று செம்மையாக நடக்கிறீர்கள்.

நீங்கள் உணவு உண்ணத் தொடங்கியதை மீண்டும் நினைவுகூர்ந்து பாருங்கள். உணவை விரல்களால் அள்ளியபோது சிதறியது. வாயில் போடுவதற்குள் சிந்தியது. மீண்டும மீண்டும் போடுவதற்குள் சிந்தியது. மீண்டும் மீண்டும் சிந்திச் சிதறி முயன்றதனால் இன்று உணவு உண்பதில் தேர்ந்தவராகி விட்டீர்கள்.

முதல் வகுப்பில் சேர்ந்த பிறகு பள்ளியில் எழுத்த்துங்கியநிகழ்ச்சியை நினைத்துப்பாருங்கள். விரலகளுக்கிடையே பென்சிலைப் பிடிக்க இயலவில்லை. பிடித்தாலம் எழுத இயலவில்லை. எழுதினாலும சரியாக வரவில்லை. ஆனால் இன்று உங்கள் எழுத்து முத்து முத்தாக கண்ணைக் கவர்கிறது.

ஆகவே, நடத்தல், உண்ணல், எழுதுதல் போன்ற செயல்களுக்கும் தடையும், தாமதமும் வரவே செய்தன. ஆனால் தடையைக் கண்டு அஞ்சாமல் மீண்டும் மீண்டும் முயன்றதனால்தான் இன்று உங்களால் நடக்கவும், உண்ணவும், எழுதவும் முடிந்திருக்கிறது.

தடையைத் தாண்டி உங்களால் எப்படி வெற்றிபெற முடிந்தது. மீண்டும் மீண்டும் செய்கிற செயல் பயிற்சியாகிறது. பயிற்சிதான் வெற்றியைத் தருகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

தோல்வி என்பது வெற்றியின் படிக்கட்டு என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். என்ன பொருளில் அப்படிச் சொல்லப்படுகிறது?

இளம்பெண் ஒருத்தி நீளந்தாண்டல் போட்டியில் இரண்டு மீட்டர் தாண்டி தங்கப்பதகம் பெற்றதாகப் பத்திரிகையில் படிக்கறீர்கள்.

தங்கப்பதக்கம் பெற வேண்டும் என்று விரும்பியன்றே அவள் இரண்டு மீட்டர் தாண்டிவிடவில்லை. உயர்நிலைப் பள்ளியில் ஒரு மீட்டர் தாண்டினாள். மேல்நிலை வகுப்பில் மேலும் அதிகம் தாண்டினாள். தேசியப் போட்டியில் ஒன்றரை மீட்டர் தாண்டினாள். பல தடவை தோற்ற பின்னும், தடைகளைக் கண்டு சோர்ந்து போகாமல் மீண்டும் மீண்டும் முயன்றதனால் ஒலிம்பிக்கில் இரண்டுமீட்டர் தாண்டவும், தங்கப்பதக்கம் பெறவும் முடிந்தது. பதக்கம் பெறும் வரை முயற்சியை நிறுத்தவில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

இராபர்ட் புரூஸ் கதையில் வரும் சிலந்திப்பூச்சி பன்னிரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றதாக படித்திருப்பீர்கள். பத்தாவது அல்லது பதினோராவது முயற்சியோடு அது பின் வாங்கியிருந்தால் வெற்றி பெற்றிருக்காது.

இந்தியாவின் மீது படையெடுக்க கஜினி முகமது பதினெட்டாவது தடவை வெற்றி பெற்றதாகப் படித்திருப்பீர்கள். பதினாறாவது அல்லது பதினேழாவது தடவைக்குப் பின் தன் முயற்சியை நிறுத்தியிருந்தால் அவனுக்கு வெற்றி கிடைத்திருக்காது.

மின்சார பல்பை உருவாக்கும் முயற்சியில் லேடக்ஸ் என்னும்பொருளைக் கண்டுபிடிக்க எடிசன் பதினாறாயிரம் தாவரங்களைப் பரிசீலித்து வெறி கண்ட செய்தி உங்களுக்குத் தெரியுமா? பதினைந்தாயிரத்து தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பதாவது முயற்சிக்குப்பிறகு சோர்ந்திருப்பாரானால் அவரால் மகத்தான வெற்றி பெற்றிருக்க முடியுமா?

ஆகவே, தோல்விக்கும், வெற்றிக்கும் உள்ள இடைத்தூரம் மேலும் ஒரு முயற்சி மட்டுமே.

நீங்கள் உயர்ந்த நிலைக்கு ஆசைப்படுகிறீர்கள். கனவு காண்கிறீர்கள். உற்சாகத்துடன் உழைக்கத் தொடங்குகிறீர்கள். தடையையும்,தோல்வியையும் கண்டு சோர்ந்து போகிறீர்கள் . முயற்சியை நிறுத்தி விடுகிறீர்கள்.

ஒரு முயற்சி நிறுத்தப்படும் போது தோல்வியாகிறது. தொடரப்படும்போது வெற்றியாகிறது. முடிந்தவரை முயற்சிபது வெற்றி தராது. முடிவு வரை முயற்சிப்பதே வெற்றியைத் தரும்.

நீங்கள் ஒரு தொழிலை அல்லது வணிகத்தை செய்கிறீர்கள். சில முயற்சிகளி வெற்றி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். எதிர்ப்பார்க்கிறீர்கள். தடை வரம்போது கைவிட்டுவிடலாமா என்று யோசிக்கிறீர்கள். இங்குதான் தோவி ஆரம்பம் ஆகிறது.

தடை தோல்வியின் அறிகுறி அல்ல. மேலும முயல வேண்டும் என்பதன் அறிகுறியே. தடை வரும்போதெல்லாம் மேலும் முயல்பவரிடம் தோல்வி மண்டியிடுகிறது.

ஆகவே, இத்தனை முறை முயன்று பார்த்துவிட்டு கைவிடலாம் என்று நினைத்தால் தோல்வியே கிடைக்கும். வெற்றி பெறும்வரை முயன்று கொண்டே இருந்தால் மகத்தான வெற்றி கிடைக்கும்.

இந்த வயதுவரை நீங்கள் பல தொழில்களில், வணிகத்தில் மாறி மாறி உழைத்திருப்பீர்கள். எல்லாவற்றிலும் தடைகள் வந்திருந்தால் நமக்கு எதுவுமே ராசியில்லை என்னும் தோல்வி மனப்பான்மை உங்களிடம் நிலை கொண்டுவிடும்.

புதிதாக வரும் வாய்ப்புகள் ஒருபுறம் உங்கள் ஆர்வத்தை மனப்பான்மை மறுபுறம் நின்று வேண்டாம். மாட்டிக்கொள்ளாதே என்று பயமுறுத்தும்.

நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்றால் அடுத்த முயற்சி. அடுத்த முயற்சி என்று துடிக்க வேண்டும். எத்தனை தடவை தான் முயற்சிப்பது! என்று எண்ணினால் வாழ்க்கையே தோல்வியில் முடியும்.

உங்களுக்குத் தெரிந்த வெற்றியாளர்களைக் கூர்ந்து கவனித்தால் அவர்களுடைய விடாமுயற்சிதான் அவர்களுக்கு வெற்றி தந்தது என்பதை நீங்கள் அறிய முடியும்.

விடாமுயற்சியும் தொடர் முயற்சியாக இருப்பன் உங்கள் வெற்றி உறுதிப்பட்டு விடும்.

நீங்கள் விடா முயற்சியையும் தொடர் முயற்சியையும் கைக்கொள்ள வேண்டும் என்றால் இயற்கைச் சட்டம் (Law of Natue) பற்றி அறிந்திருக்க வேண்டும்.

மனிதனாகப் பிறந்த எவருமே உயர வேண்டும். முன்னேற வேண்டும், வளர வேண்டும் என்பது இயற்கைச் சட்டம். இயற்கைச் சட்டத்தின்படி ஊக்கத்துடன் உழைக்கும் மனிதனின் கரம், இயற்கையின் கரத்துடன் இணைந்து விடுகிறது. இனையும் போது இயற்கையின் தரத்தில் இருக்கும். வெற்றி உங்கள் கைக்கு வந்துவிடுகிறது.

இயற்கையாகவே உங்கள் வெற்றித்தேர் முன்னோக்கி நகர்து கொண்டுள்ளது. இயலாது,முடியாது, கிடைக்காது. நடக்காது போன்ற எதிர் மறைத் தடைக்கட்டைகளை இட்டு நீங்கள்தான் அதன் ஓட்டத்தைத் தடை செய்துவிட்டீர்கள்.

முடியும், இயலும், நடக்கும், கிடைக்கும் என்று எப்போதும் எண்ணத்தொடங்கிவிட்டால் அடுத்த முயற்சி, அடுத்த தொழில் என்று தொடங்குவீர்கள், விடாமுயற்யும், தொடர் முயற்சியும் உங்கள் இயல்பாக மாறிவிடும்.

தோல்வி நிரந்தரமானதல்ல, அதைத்துரத்தி விட முடியும் என்னும் ஞானம் உங்களுக்கு வந்துவிடும்.

தோல்வி உங்களைத் துரத்தும் நிலை மாறி, நீங்கள் தோல்வியைத் துரத்தி அடித்து விடுவீர்கள்.

அதன்பின், உங்களுக்கு வெற்றிமேல் வெற்றி வந்து சேரும்

24 நிமிட நேர நிர்வாகமே வாழ்க்கை நிர்வாகம்.

வாழ்க்கை நிர்வாகம்: நேர நிர்வாகமே, வாழ்க்கை நிர்வாகம்
Time management is Life management

தனி ஒரு மனிதனின் நேர நிர்வாகமே, அவனுடைய வாழ்க்கை நிர்வாகத்திற்கு அடிப்படையாக அமைகிறது.

ஒரு நாளை நான்கு நிலைகளில், ஒரு இளைஞன் முறையான நேர நிர்வாகத்தைக் கொண்டு செலவு செய்யலாம்.

ஒரு நாளை மகிழ்ச்சியாகவோ அல்லது சோகமாகவோ அல்லது அமைதியாகவோ அல்லது பேரானந்தமாகவோ ஒரு இளைஞன் செலவு செய்யலாம்.

நேர நிர்வாகம் என்பது ஒரு நாளை இன்ப, துன்ப்ங்களுக்கு செலவு செய்யாமல், அந்த நிலையை தாண்டி வாழ்க்கையை இனிமையாக, அமைத்துக் கொள்ள திட்டமிட்டு, செயல்படுத்துவது... பிறகு பேரின்ப நிலைக்கு திட்டமிடுவது.

எவ்வளவு நேரம் மகிழ்ச்சிக்கு ?
எவ்வளவு நேரம் சோகத்திற்கு ?
எவ்வளவு நேரம் அமைதிக்கு ?
எவ்வளவு நேரம் பேரான்ந்தத்திற்கு ?

என்ற அளவு விகிதம், தனிமனிதனின் நேர நிர்வாகத்தை கொண்டு அமைகிறது.

ஒரு இளைஞன், மகிழ்ச்சியான நிலை, சோகமான நிலை, அமைதியான நிலை, பேரான்ந்தமான நிலை என்ற நான்கு நிலைகளில் ஒரு நாளை செலவு செய்யலாம்.

இன்றைய நவ நாகரீகமனிதர்களில் நூற்றுக்கு 99 பேர், மகிழ்ச்சியாக அல்லது சோகமாக தான் ஒரு நாளை செலவு செய்கிறார்கள்.

பணம் என்ற மாய வலையில் சிக்கிய இன்றைய இளைஞனுக்கு அமைதி மற்றும் பேரான்ந்தத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லை.

அவ்வாறு தெரிந்து கொணட அல்லது விழிப்பு உணர்வு கொணட ஒரு சதவீத இளைஞனும், விளக்கத்தின் வழி பழக்கத்தை கொண்டு செல்ல முடியாமல் தடுமாறுகிறான்.

உலகப் புகழ் பெற்ற மூளை நிபுணர் பி. இராம மூர்த்தி சொன்னார் "இந்தியர்கள் முட்டாள்கள், யோகக் கலை என்ற தங்க சுரங்கத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு சிறிது தங்கத்திற்காக வாழ்நாள் முழுவதும் அலையும் முட்டாள்கள்.

இக்கணத தேவை இந்திய இளைஞர்கள் தன்னை உணர உள் நோக்கு பயணம் (தவம்) செய்து, தற்சோதனை செய்து இந்திய பாரம்பரிய சொத்தான அமைதி மற்றும் பேரின்பத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு அந்த நிலையில் வாழ்க்கையை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

"Indians are fools, sitting on the gold mine of yoga" - B. Ramamurthi, famous neuro surgeon

ஆனந்த வாழ்க்கை

தினசரி நேர நிர்வாகமே, மனித வாழ்க்கை நிர்வாகம்;

தினசரி மனித மன நிர்வாகமே, தினசரி நேர நிர்வாகம்;

தினசரி உணவு நிர்வாகமே, தினசரி மனித மன நிர்வாகம்;

தினசரி நாக்கு நிர்வாகமே, தினசரி மனித உணவு நிர்வாகம்;

தினசரி குடல் நிர்வாகமே, தினசரி மனித நாக்கு நிர்வாகம்;

தினசரி நிதானமாக முடிவு எடுக்கும் நிர்வாகமே,
தினசரி மனித குடல் நிர்வாகம்;

தினசரி சக்தி நிர்வாகமே, தினசரி மனிதனின் நிதானமாக முடிவு எடுக்கும் மனோபாவ நிர்வாகம்;

சக்தி நிர்வாகம்

தினசரி மனித உடல் சக்தி நிர்வாகமே, தினசரி திறம்பட செயல்கள் வேலை செய்யத் தேவையான சக்தி நிர்வாகம்;

தினசரி மன சக்தி நிர்வாகமே, தினசரி மனித உடல் சக்தி நிர்வாகம்;

தினசரி உணர்ச்சி நிர்வாகமே, தினசரி மனித மன சக்தி நிர்வாகம்;

தினசரி ஜீவகாந்த சக்தி நிர்வாகமே, தினசரி மனித உணர்ச்சி நிர்வாகம்;

தினசரி உயிர் சக்தி நிர்வாகமே, தினசரி மனித ஜீவகாந்த சக்தி நிர்வாகம்;

தினசரி ஆன்மீக சக்தி நிர்வாகமே, தினசரி மனித உயிர் சக்தி நிர்வாகம்;

சமச்சீர் வாழ்ககை நிர்வாகமே, தினசரி மனித ஆன்மீக சக்தி நிர்வாகம்;

ஆரோக்கிய வாழ்க்கை நிர்வாக்மே, மனித சமச்சீர் வாழ்க்கை நிர்வாகம்.

வெற்றி.... வெற்றி..... 

இளைஞனே ... வெற்றி வேண்டுமா?
வாழ்க்கையில் வெற்றி வேண்டுமா?
வெற்றி என்பது மாங்கு .... மாங்கு
என்று வேலை செய்வதில் மட்டும் இல்லை.....
வெற்றி என்பது சிந்தனை செய்து,
24 நிமிட நேரத்தை சரியாக திட்டமிட்டு,
சிந்தனை வழியில் மாங்கு .... மாங்கு
என்று வேலையைத் திறம்பட செய்து,
சாதனை படைப்பதில்தான் உள்ளது.
வெற்றி வேண்டுமா? 
போட்டுப் பாரடா எதி நீச்சல்...
24 நிமிட நேர நிர்வாகத்தோடு !

வெற்றி வேண்டுமா? 
போட்டுப் பாரடா எதி நீச்சல்...
24 நிமிட நேர நிர்வாகத்தோடு !!

மிகப் பெரிய வெற்றி ....

இளைஞனே ... மிகப பெரிய வெற்றி வேண்டுமா?
வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டுமா?
மிகப் பெரிய வெற்றி என்பது, 24 நிமிட நேரத்தில்
தெளிவாக மற்றும் துல்லியமாக திட்டமிட்டு,
சிந்தனை வழி, சரியான துல்லியமாக
திட்டத்தை செயல்படுத்தி உலக அளவில்
சாதனை படைப்பதில் தான் உள்ளது.

புத்துணர்ச்சி

முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்

முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் - ஐ பார்த்து ஒரு பத்திரிக்கை நிருபர் கேட்டார், எப்படி உங்கள் ஒய்வு நேரத்தை செலவிடுவீர்கள்?

அதற்கு, ரூஸ்வெல்ட் புத்தகங்களோடு தான் எனக்கு கிடைக்கும் ஒய்வு நேரத்தை செலவு செய்வேன் என்றார்.

பத்திரிக்கை நிரூபர் மேலும் கேட்டார், "உங்களுக்கு கிடைக்கும் மிக அரிதான காலத்தை ஏன் புத்தகங்களோடு செலவு செய்கிறீர்கள்? என்றார்.

மேலும், ரூஸ்வெல்ட் சொன்னார், புத்தகங்களைப் படிக்கும் போது எனக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

பத்திரிக்கை நிருபர், மீண்டும் ரூஸ்வெல்ட் - ஐ பார்த்து கேட்டார். அதாவது, "நீங்கள் எப்படி, படிப்பதற்கான புத்தகங்களைத் தேர்வு செய்வீர்கள்."

புத்தகங்களைப் படிக்கும் போது எனக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது. - ரூஸ்வெல்ட்

காலத்தால் அழியாத புத்தகங்கள்

முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்

ரூஸ்வெல்ட் தெளிவாக சொன்னார், "நூற்றாண்டின் சிறந்த புத்தகத்தை முதலில் தேர்ந்து எடுத்து படிப்பேன். வார, சஞ்சிகையையோ, மலிவான நாவல்களையோ படிக்க மாட்டேன். சில சமயம், நான்கு நூற்றாண்டு பாரம்பரிய, புத்தகங்களான 'பழமொழிகள்' (Proverb) அடங்கிய புத்தகத்தைத் தேர்ந்து எடுத்து முதலில் படிப்பேன்."

ரூஸ்வெல்ட் மேலும் சொன்னார்,

"காலமும் மற்றும் மனமும் இயற்கையின் மிகப் பெரிய பொக்கிஷ்ம், அதை மிக மிகக் கவனமாக ஒருவன் கையாள வேண்டும். ஆகையால், என்னுடைய ஒவ்வொரு கணத்தையும் வாழ்க்கையின் மிக மிக சிறந்தவைகளுக்காக செலவு செய்வேன்" என்றார்.

"காலமும் மற்றும் மனமும் இயற்கையின் மிகப் பெரிய பொக்கிஷ்ம்" - ரூஸ்வெல்ட்

காலத்தின் அருமை

முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்

ரூஸ்வெல்ட்டின் "என்னுடைய ஒவ்வொரு கணத்தையும் வாழ்க்கையின் மிக மிக சிறந்தவைகளுக்காக செலவு செய்வேன்" என்ற இந்த தெளிவான கூற்றைவிட காலத்தின் அருமையை ஒருவர் உணர வைக்க முடியாது.

இந்திய இளைஞனே காலத்தின் அருமையை முதலில் உணர். பிறகு உனது நேரத்திற்கு நீயே மதிப்பு கொடு !!

பிறகு உனது மனதின் அருமையை மற்றும் உள்ளத்தின் அருமையை உணர முயல். உனது திறமையை உணர்.

செயற்கரிய செயல்களை திட்டமிட்டு செய். உலகம் உன் காலடியில். கிடைத்தற்கு அரிய இந்த வாழ்க்கையை வாழ்வங்கு வாழ முற்படுவோம்.

"Time and mind are too precious to waste to spend on anything but the best" - Theodore Roosevelt, Former US president.

நீர்க்குமிழியாம் வாழ்க்கை

சராசரி இந்தியனின் வாழ்க்கை 65 ஆண்டுகள் கண்மூடி கண் திறப்பதற்குள் முடிகின்ற மிக குறுகிய கால வாழ்க்கை.

"LIFE IS SHORT, MAKE IT SWEET AND PURPOSEFUL"

ஆகையால் தான் சொல்கிறேன், நேர நிர்வாகம் என்பது வாழ்க்கை நிர்வாகம்.

"TIME MANAGEMENT IS LIFE MANAGEMENT"

நேரத்தைத் தொலைத்தவன் வாழ்க்கையைத தொலைக்கிறான்.

6 வயது முதல் 60 வயது வரை நேர நிர்வாகம் கட்டாயம் தேவை, அதுவே வாழ்க்கை நிர்வாகம் !

தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க ...

1,ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.

2,செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.

3,வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

4,இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.

5,எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.

6,,வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.

7,அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.
துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.
உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.

8,உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது. சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.

9,,ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

10,வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.

11,சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.

12,தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.

13,பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.

14,செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.

15,சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.

16,காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்

17 தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.

18 ,விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.

19,விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். சரியா?

20,வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.
மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.
ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.

21எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.

22,எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.

23,வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.

24,எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

25எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.
சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.

26,தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.

27,குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.

28,அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.

29,பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.
அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது
வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.
இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.
வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.
பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.
மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.
விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.
விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.

30,கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம். துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.

31,பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.

32 ,சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது. அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது. அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது 
நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும். பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது. சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும். ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது. பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.

33 தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.
பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது

34,செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.

35,செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.

36,நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்.

37,ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் இல்லை;மாட்டேன்; இதுமாதிரியான அவச்சொல்லை எப்போதுமே பேசக்கூடாது.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 5மணி முதல் 7 மணி வரை இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவது முற்றிலும் தவறு.

38,வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும்.அலசியபின்னர், நமது வீட்டுப்பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும். ஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால்,எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான்.

39,குளிக்கும்போதும், தூங்கும் போதும் நிர்வாணமாக இருக்கக் கூடாது;அப்படி நிர்வாணமாக இருந்தாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.ஆணோ,பெண்ணோ சுய இன்பம் செய்யாமலிருப்பதும் அவசியம்.அடிக்கடி சுய இன்பம் செய்பவர்களின் வீடுகளிலிருந்து செல்வச் செழிப்பு தரும் கடவுளாகிய மகாலட்சுமி,புவனேஸ்வரி வெளியேறிவிட்டு,அவளின் மூத்த சகோதரியான மூதேவி வந்துவிடுவாள்.

40,எக்காரணம் கொண்டும் தம்பதியர் இரவில் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அப்படி செய்தால்,யாராவது ஒருவரை சூட்சும சக்திகள் பிடிக்கும்.அதன் விளைவாக இருவரில் யாராவது ஒருவர் அளவற்ற காம வெறியை அடைந்துவிடுவர்.குடும்பங்கள் நாசமடைவதற்கான முதல் காரணம் இதுதான்.

41,கரடு முரடான ராக் இசை முதலான மேற்கத்திய இசையை வீட்டில் அதிகமான அலறலுடன் ஒலிக்க வைப்பதாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.மெல்லிய இசை(சினிமா பாட்டாக இருந்தாலும் சரி;கர்னாடக இசையாக இருந்தாலும் சரி;மனோதத்துவ இசையாக இருந்தாலும் சரி)யை அடிக்கடி ஒலிக்கச் செய்வதன் மூலமாக செல்வ வளம் நம்மைத் தேடி வரும்.

42,மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் குப்பையை சேர்த்து வைத்தாலும் பண வரவு குறைந்துவிடும். ஒரு ஆடையை இரண்டு தடவைக்கு மேல் அல்லது இரண்டு நாளுக்கு மேல் அடிக்கடி அணிந்தாலும் பண வரவு குறைந்துவிடும்

43,தினமும் வீட்டில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து,பின் வருமாறு வழிபாடு செய்து வருவதால் நமது நீண்டகால கடன்கள் தீர்ந்துவிடும்;வராக்கடன் வசூலாகும்.பணம் மிச்சமாகும்.அதே சமயம்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு கைவிட வேண்டும்.

44,தினமும் காலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு,ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக அவரது மூலமந்திரத்தை 33 தடவை ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிக்கும்போது சந்தன பத்தியை அவர் முன்பாக கொளுத்தியிருக்க வேண்டும். பசு நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு ஒரு மண்டலம் செய்தால்,பண ரீதியான சிக்கல்கள் தீரத்துவங்கும்.ஓராண்டு வரை வழிபட்டு வந்தால்,நமது வருமானம் நான்கு மடங்கு அதிகரிக்கும்;பண வரவும் நான்கு முதல் எட்டு மடங்கு அதிகரிக்கும்;ஓராண்டுக்கு மேலாக ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால்,ஒவ்வொரு ஆண்டும் நமது வருமானம் ,நான்கு மடங்கு முதல் எட்டு மடங்கு வரை அதிகரித்துக்கொண்டே செல்லும்.ஐந்தாண்டுக்கும் மேலாக ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால், ஆறாம் ஆண்டிலிருந்து தங்கம் நம்மிடம் சேரத் துவங்கும்.

45,தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள். இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள். அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். அன்னை திருமகளை வேண்டுகிறேன்

வாழ்வில் வெற்றி பெற முத்தான வழிகள்

இந்த உலகத்தில் வெற்றி, தோல்வி என்கிற வார்த்தை எப்போது தோன்றியதோ, அப்போதுதான் குழப்பம் என்ற வார்த்தையும் தோன்றியிருக்க வேண்டும். வெற்றி, தோல்வி பற்றிய கண்ணோட்டம் தான், பல பிரச்சினைகளுக்கே அடிப்படையாக உள்ளது.

‘வெற்றியடைவது எப்படி? வெற்றி பெற பத்து கட்டளைகள்’ என பல புத்தகங்களும், ‘தோல்வியை கண்டு துவளாதீர்கள்’ என ஆறுதல், தரும் புத்தகங்களும் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் வழிமுறைகளைப் பற்றி சொன்னாலும், ‘இதுதான் வெற்றி, இதுதான் தோல்வி’ என தீர்மானிக்கும் விதம் வேறுபடுகிறது.

அதுவும் இந்த வேறுபாடு நாட்டுக்கு நாடு, மதத்திற்கு மதம், ஏன் ஆண்களுக்கு ஒரு மாதிரி பெண்களுக்கு ஒரு மாதிரியாகவும் கூட வேறுபடுகிறது.

பணம் நிறைய சம்பாதிப்பதை வெற்றி என்று எடுத்துக் கொண்டால், கோடீஸ்வரர்கள், மனநோயாளிகளாகவோ, தற்கொலை செய்து கொள்பவர்களாகவோ இருந்திருக்க கூடாதல்லவா? காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்வதை வெற்றி என்று எடுத்துக்கொண்டால், காதல் தம்பதிகள் விவாகரத்து செய்யக் கூடாதல்லவா? தோல்வி பற்றிய கண்ணோட்டம் என்பது சமூக சூழ்நிலைகளினாலும் பெருவாரியான மக்கள் ஆதரிக்கும் கருத்துக்களாலும் நிலை பெறுகிறது.

இந்த கருத்துக்கள் தான் குடும்பம், அரசியல், ஆன்மிகம், கலைத்துறை, கல்வித்துறை என்று பல்வேறு துறைகளிலும் ஆட்சி செய்து, வெற்றி பெறுகிறவர்களுக்கு சந்தோஷத்தையும் தோல்வி பெறுகிறவர்களுக்கு துக்கத்தையும் தருகிறது. ஒரு தலைமுறையினர், இன்னொரு தலைமுறையினருக்கு சொல்லும் கருத்துக்களில், முக்கால்வாசி இந்த வெற்றி, தோல்வி பற்றிய கண்ணோட்டம் தான் இருக்கிறது.
ஒரு தலைமுறையினர் மிகப்பெரிய வெற்றி என்று நினைத்தது, அடுத்த தலைமுறையினருக்கு சாதாரண விஷயமாகி விடுகிறது. ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் அந்த காலகட்டத்தில் சொல்லப்படும் வெற்றி, தோல்வி பற்றிய கருத்துக்களுக்கு இடையே அல்லல்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது.

வெற்றி, தோல்வி பற்றிய தெளிவு இல்லாவிட்டால் அது தேவையில்லாத மன அழுத்தத்தையும், சோர்வையும், சக்தியற்ற நிலைமையையும் உருவாக்கி விடும். ஒரு வகையினர் வெற்றியை ஆர்ப்பாட்டமாக கொண்டாடுகிறார்கள், இன்னொரு வகையினர், அமைதியாக இருப்பதே பெரிய வெற்றி என்று கூறுகிறார்கள்.

ஆனால் இரு வகையினருமே, வெற்றி என்ற வார்த்தைக்குள் தான் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். வெற்றி என்பது ஒரு அடையாளமா? அல்லது இயல்பாகவே ஒரு சக்திமிக்க உணர்வா? என்று கேட்டால், அதை ஒரு அடையாளம் என்று தான் எடுத்துக் கொள்ள முடியும்.

இந்த அடையாளம் தான் சிறந்த மாணவன், சிறந்த வியபாரி , சிறந்த அரசியல்வாதி , சிறந்த மருத்து வர் என்று பல் வேறு முத்திரைகளைப் பெறுகிறது. சில நேரங்களில் இந்த முத்திரை மாறிக் கொண்டு இருக்கும். டிவி நிகழ்ச்சிகளில் தோல்வி அடைந்தவர்கள் கண் கலங்குவதும், அதைப்பார்த்து பெற்றோர்கள் தாரை தாரையாக கண்ணீர் விடுவதும், வெற்றி பெற்று விட்டால், அலப்பறை பண்ணுவதும் இரண்டுமே தவறான அணுகுமுறைகள்.

காரணம், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கக்கூடிய திறமை, அறிவு என்பது வேறு வேறு. கொஞ்ச விகிதத்தில் மாறி மாறி இருக்கும். அதை உன்னிப்பாக கவனிக்காமல், சிறந்த ஓவியம் வரையக்கூடிய மாணவன் சரியாக பாடவில்லையே என்று நினைப்பதும், நன்றாக பாடக்கூடிய மாணவி நன்றாக ஆடவில்லையே என்று நினைப்பதும் பல்வேறு மன உளைச்சல்களைத்தான் உருவாக்கும்.

ஒரு மயில், சிங்கத்தை போல கர்ஜனை செய்ய முடியவில்லையே என்று நினைக்கவே நினைக்காது. அதே போல், ஒரு சிங்கம் மயிலைப் போல் ஆட முடியவில்லையே என்று நினைக்காது. அவைகள், தங்களின் இயல்புக்கேற்ப முழுமையாக இருக்கின்றன.

ஆனால், சிங்கத்தையும், மயிலையும் கூண்டில் அடைக்கத் தெரிந்த மனிதர்களாகிய நாம்- புலம்பல் என்ற ஒரு பெரிய கூண்டை உருவாக்கி அதில் நாமே மாட்டிக் கொண்டிருக்கிறோம். சரி இந்த கூண்டிலிருந்து எப்படி வெளியேறுவது? கூண்டிலிருந்து வெளியேற வேண்டுமென்றால் முதலில் நாம் கூண்டிற்குள் தான் அடைபட்டுக் கிடக்கிறோம் என்ற விழிப்புணர்வு முக்கியம்.

அடைபட்டுக் கிடப்பது என்பது ஒருவிதமான மனநோய், அதன் அறிகுறியை தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்தவரை பார்த்து இப்படி ஆகிவிட வேண்டும், அப்படி வாழ வேண்டும் என்ற நினைப்பு தான் அது. ஆனால் வெற்றி பெற்றவர்களைப் பார்த்து அதே போல் ஆக வேண்டும் என்று நினைப்பது ஒரு ஆரோக்கியமான சிந்தனை தானே, அது எப்படி மனநோயாக இருக்க முடியும் என கேட்கலாம்.

எந்த ஒரு விஷயமும் சுயமாக ஆராய்ந்து, முடிவு எடுக்காமல், பிறரைப் பார்த்து எடுப்பது என்பது நிச்சயம் ஒரு சமயத்தில் குழப்பத்தை தந்து காலை வாரிவிட்டு விடும். இன்னொரு பக்கம், உங்களுக்கே உரித்தான, நீங்கள் மட்டுமே செய்யக்கூடிய காரியத்தையும், நீங்கள் மட்டுமே அடையக் கூடிய அந்த அனுபவத்தையும் நிச்சயமாகத் தவற விடுவீர்கள்.

இந்த வெற்றி, தோல்வி கண்ணோட்டம் பள்ளிப் பருவத்திலிருந்தே உருவாகி, ஓய்வு பெறும் வயது வரை உங்களை பாடாய்ப்படுத்துகிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். எது எது சந்தோஷம் தருகின்றதோ, அவைகளுக்கு வெற்றி என்று பெயர் சூட்டியும், எது எது துக்கம் தருகின்றதோ, அவைகளுக்கு தோல்வி என்று பெயர் சூட்டியும் பழகி விட்டோம்.

இதற்கு ஆரம்ப வித்து பள்ளியில் இருந்தே முளைவிடத் தொடங்கியது. ‘கிளாஸ் பர்ஸ்ட், ஸ்கூல் பர்ஸ்ட், ஸ்டேட் பர்ஸ்ட் வரணும்” ”ஒரு என்ஜினீயராகவோ, டாக்டராகவோ ஆயிரணும்” ஓ.கே. இந்த விதிமுறைகள் ஒன்றும் தப்பில்லை ‘பாசிட்டிவ்’ சிந்தனைகள் தான். ஆனால், பொதுவான ஒரு விதிமுறையை நாம் கவனிப்பது இல்லை.

அனைவரும் நன்றாக படித்து சென்டம் வாங்கினால் யார் கிளாஸ் பர்ஸ்ட்? அப்படி ஒரு சம்பவம் எப்பொழுதும் நடப்பதில்லை. மாணவர்களைச் சுற்றி ‘மெஷின் கன்’னை வைத்து கொண்டு மிரட்டி படிக்க சொன்னால் கூட, உயிருக்கு பயந்து கூட அனைவரும் ‘முதல் ரேங்க்’ எடுக்க மாட்டார்கள். எடுக்கவும் முடியாது.

ஆக, பொது விதிமுறை அனைவராலும் ‘முதல் ரேங்க்’ எடுக்க முடியாது என்பது தான்… இன்னொரு பொதுவிதிமுறை, படிப்பில் 25-வது ரேங்க் எடுப்பவன், விளையாட்டில் முதலிடம் வரலாம். வகுப்பில் கடைசி ரேங்க் எடுப்பவன் பாட்டு போட்டிகளில், நன்றாக பாடி லட்சங்களில் பரிசை அள்ளலாம்.

ஆக எவருமே சாதாரண நபர்களில்லை, ஒரே மாதிரி நபர்களுமில்லை… ஒரு மனிதனோட கட்டைவிரல் ரேகை மாதிரி, இன்னொரு மனிதனுக்கு இருக்காது. 700 கோடி கட்டை விரல் ரேகைகளும் வேறு தான்… இயற்கையே இவ்வளவு ‘சிம்பிள்’ஆக சொல்லி விட்ட பிறகும் கூட நாம் தான் முதல் இடம், இரண்டாம் இடம் என்று அடித்துக் கொண்டிருக்கிறோம்.

சிந்தனையை ஒருமுகமாக்கி எடுத்துக் கொண்ட செயல்களில் முழுமையாக நம்மை ஒப்படைக்கும்போது நாம் முயற்சிக்கும் எந்தவொரு செயலுக்கும் எப்படியும் வெற்றி வந்தே தீரும்.

அதனால் முதல் இடமே லட்சியம் என்ற சிந்தனையை தோளில் தூக்கி சுமந்து திரியாமல் காரியமாற்றினால் அப்போது அதுவாகவே தேடிவரும். அந்தநே ரத்தில் அந்த வெற்றி உங்களுக்கு சாதாரணமாகவே படும் என்பது தான் ஆச்சரியம். பக்குவப்பட்ட வெற்றி எப்போதுமே அகந்தை தராது என்பது இதில் உணரவேண்டிய உண்மை

பொன்மொழிகள்

வற்றி போனால்தான், கிணற்றின் அருமை தெரியும். —பிராங்க்ளின்.
தொழில் இல்லாத கல்வி, நீரின்றி வாடும் தாவரத்தைப் போன்றது. —போவீ. 
வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதேபோல வாழ்வில், உயர்வும் ஒரே நாளில் கிட்டி விடாது. —அரிஸ்டாட்டில். 
நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்! தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!- நெப்பொலியன் ஹில் 
தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.- கன்ஃப்யூஷியன்
மாபெரும் செயல்களைச் செயல் வகையில் செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால், உங்களுக்கு இன்றியமையாத முதல் மூலப் பொருளான, வெற்றிக்குத் தேவையான முதல் கூறான தன்னம்பிக்கை நெஞ்சில் பொங்கி வழிய வேண்டும். தடைகளையும், அவமதிப்புகளையும், தன்னம்பிக்கைதான் சமாளித்து அடித்துத் துரத்தி பொன்னாக நம்மை உருவாக்கும். நேர் வழி பாதுக்காப்பானது என்பதை உணர்த்தும். தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள் அனைத்தையும் துணிச்சல்தான் சாதிக்கும்.- டாக்டர்ஜான்சன் 
உடைமையில் உரிமை கோருவது அல்ல அன்பு. உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு கொள்வதன் பொருளாகும்- ஸ்ரீ அன்னை. 
கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!- சுபாஷ் சந்திரபோஸ்.
நீ என்ன நினைக்கிறாயோ அது உன்னால் இயலாமல் போகும்போது உன் ரத்தத்தில் ஜனித்த ஜீவன் அதைச் சாதித்துக் காட்டிவிடும்- கிரந்தம்.
பிறர் பாரத்தை தாங்க கை கொடுத்தால் நம் பாரத்தின் கனம் தானே குறைந்துவிடும் -அவ்பரி. 
கவலை நம் சவப்பெட்டிக்கு ஓர் ஆணி சேர்க்கிறது. கலகலவெனும் சிரிப்பு ஓர் ஆணியை கழற்றுகிறது -பீட்டர். 

வாழ்வில் உன் தோல்வியைக் கண்டு மகிழும் ஒருவரையேனும் நீ பெற்றிருப்பின், உன் வாழ்வின் பெரிய முதல் தோல்வி அதுவாகவே இருக்கும். 
உன் விதியை நீயே நிர்ணயம் செய் இல்லையென்றால் மற்றவர்கள் நிர்ணயித்து விடுவார்கள்.
மரியாதை பெறும் ஒரே வழி அதனை முதலில் கொடுப்பதாகும். 
திருப்தியும் பேரின்பமும் எம்முள் இருப்பின் நாம் மற்றவர்களால் விரும்பப்படுவோம். 
எல்லா சந்தர்ப்பத்திலும் சமநிலையுடன் இருப்பதுதான் மகிழ்ச்சி.
நிரந்தரமற்றதின் மீது அன்பு செலுத்துவது உன் தோல்வியின் முதல்படியாக அமையும். 
பிடிவாதமும் கோபமும் உன் இயலாமையின் வெளிப்பாடாகும். 
நிஸப்தத்தை நாடுபவன் வாழ்வின் உண்மை நிலையை உணர்ந்துள்ளான். 
வாழ்வின் அறநெறியை தேடுபவன் தன் வாழ்வின் அன்பு நெறியை உணர்ந்திருத்தல் அவசியம். 
பொறுமையால் பெற்றவரும் உண்டு வாழ்வை இழந்தவரும் உண்டு.
அன்பை விலைக்கு வாங்குவது சுயநலமொன்றே, ஆகவே எச்சரிக்கையாய் இரு உன் அன்பர்களிடம்.
நீ உன் உரிமையை இழப்பின் உன் உணர்வையும் இழப்பாய். 
தொடங்கிய இடத்தை தெரிந்துகொள் அப்போதுதான் முடிக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம். 
அன்பு என்றும் உன் உள்ளத்திலிருந்தால் அறிவு என்றும் உன்னை விட்டகலாது. 
உன் சோம்பேறித்தனம் உன் வாழ்வின் தடைக்கல்லாய் அமையலாம்.
உன் அவசரப் பேச்சு உன்னை அனாதரவாக்காமல் பார்த்துக்கொள். 
ஒரு தவறை திரும்பத் திரும்பச் செய்வது மடமை, மடமையை திரும்பத் திரும்பச் செய்பவன் எப்படி முழு மனிதனாக முடியும்? .
பிறர் முன் பேசும் வார்த்தையிலும் செய்யும் செயலிலும் எச்சரிக்கையாய் இரு,உன்னை பிறர் எடை போட்டுக் கூறுபவை அவையே !
எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம். 
சிந்திப்பதும் அதை வெளிப்படுத்துவதும் நாமெல்லாம் மனிதர்கள் என்பதன் அடையாளம். சிந்திப்பதை வெளிப்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டால் சிறிது காலத்தில் சிந்திப்பதே மறந்து விடும். 
அநியாத்திற்கு ஆயிரம் வக்கீல்கள் தேவை ஆனால், நியாயத்திற்கு கடவுளின் கருணை மட்டும் போதும். 
கடவுளை அடைய ஒரேயொரு வழிதான் உண்டு. அது அவர் செய்வதை நாமும் செய்வது படைப்பது.
வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி அழகான பசி ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

நட்பு பற்றிய பொன்மொழிகள்

*நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம். 

*பு‌த்தக‌ங்க‌ள்தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள். 

*எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை. 

*உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே. 

*வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன். 

*உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது. 

*உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன். 

*பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன். 

*நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள். 

*வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான். 

*ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள். 

*சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும். 

*உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன். 

*ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள். 

*நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர். 

*புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரு‌ம் வரை காத்திருக்க வேண்டும். 

*புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம். 

*ஒரே சிந்தனையுடன் இருக்கும் இரண்டு உடல்கள் தான் நட்பு. 

*நட்பு என்றும் தோல்வி அடைவதில்லை, தவறு செய்வதும் இல்லை. 

*உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் சிறந்த பரிசுதான் நட்பு. 

*உங்களை சரியான வழியில் எடுத்துச் செல்ல வந்திருக்கும் இறைத் தூதுவன்தான் நண்பன். 

*பிரச்சினைகளே இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் உலகத்தில் நண்பர்கள் இல்லாமல் இருக்க முடியாது. 

*சிறந்த நண்பன்தான் நமது நெருங்கிய உறவினன். 

*புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும். 

*காதலுக்கு கண் இல்லை. அந்த கண்களை திறந்து வைப்பது நட்புதான். 

*நண்பர்களைக் கொண்டு இரு. நண்பனாக இரு. 

*நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது பலரை அறிவாய், துக்கத்தில் மட்டுமே நண்பர்களை அறிவாய். 

*நீ கவலையில் இருக்கும்போது, முத்தம், கடிதம், அணைத்தல் என எதுவும் தராத ஒரு நிம்மதியை உன் நண்பனது அமைதி தரும். 

*நண்பர்களுக்குள் மன்னிப்புக்கும், நன்றிக்கும் இடமில்லை. 

*உன் மனதிற்குள் இருக்கும் பாடலை அறிந்தவனே நண்பன். எப்போது நீ ஒரு சில வார்த்தைகளை மறக்கிறாயோ அப்போது உன் நண்பன் அந்த வார்த்தையை எடுத்துக் கொடுப்பான். 

*எனக்கு முன்னாடி நடந்து செல்லாதே, உன்னை பின்பற்றி வர நான் விரும்பவில்லை, என் பின்னாடி நடந்து வராதே, உனக்கு முன்னோடியாக இருக்க விரும்பவில்லை, என்னுடனே நடந்து வா என் நண்பனாக. 

*புதிதாக இருக்கும் நட்பு கரும்பு போன்றது. அதுவே உண்மையான நட்பாகும்போது சர்க்கரையாக இனிக்கிறது ஆனால் உனக்கொன்று தெரியுமா? அதுவே நீயாகும்போது நட்பு எனக்கு தேனாகிறது. 

*உண்மையான நண்பனை அறிவது மிகக் கடினம். உனக்கு சாமர்த்தியம் அதிகம்... நீ என்னை அறிந்துள்ளாய். 

*நட்பு நீ நிற்கும் போது உன்னை உற்சாகப்படுத்தி இயக்க வைக்கும், தனிமையை இனிமையாக்கும், தேடும்போது வழிகாட்டியாகும், கவலையை போக்கி சிரிக்க வைக்கும், சந்தோஷத்தில் பா‌ட்டு‌ப் பாடும்.