Tuesday, December 18, 2018

சாதனை படைப்பது எப்படி? இயற்கையை வெற்றி கொள்!

* உள்ளக்கதவைத் திறந்து வையுங்கள். நாலாபுறத்திலும் இருந்து நல்ல விஷயங்கள் அதற்குள் நுழைய அனுமதி அளியுங்கள்.
* எல்லாப் பூக்களில் இருந்தும் தேனைப் பெற்றுக் கொள்ளுங்கள். யாரிடமும் பகை பாராட்ட வேண்டாம். நட்புணர்வுடன் பழகுங்கள். ஆனால், உங்கள் சொந்தக்கருத்தை விடாப்பிடியாகப் பற்றுங்கள். 
* மனிதன் பிறந்திருப்பது இயற்கையை வெற்றி கொள்ளத் தானே தவிர, அதற்கு ஒருபோதும் பணிந்து போவதற்கு அல்ல.
* பாமர மக்களுக்கு உயர்வான எண்ணங்களைப் பரப்புவதற்காகவே புராணங்கள் எழுதப்பட்டன.
* கடவுளை வணங்கும் போது, அவரை நமது தாய் தந்தையாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், மற்றவர்களை சகோதர சகோதரிகளாக நேசிக்க மறந்து விடுகிறோம்.
* நாலுபேர் அறிய நல்லவனாக காட்டிக் கொண்டு, பிறர் அறியாதவகையில் தீய செயல்களில் ஈடுபடுவது இழிவான செயல்.
* ஒழுக்கம் நிறைந்த மனிதனே நிஜமான கல்விமான். 
* தன்னம்பிக்கையை இழப்பது தெய்வ நம்பிக்கையை இழப்பதற்குச் சமம்.
* குற்றம் காண்பதை விட குணத்தைக் காண்பது தான் உயர்ந்த குணம்.
* பெற்றுக் கொள்பவன் அல்ல. கொடுப்பவனே பேறு பெற்றவன்.
* தன்னலத்தை ஒழிப்பதில் தான் மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது. உன்னைத் தவிர வேறு யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.
* தன்னை மறந்து பணியாற்றும்போது தான் கடமையில் சாதனை படைக்க முடியும்.
* கோபப்படும் மனிதனால் சிறப்பாக பணியில் ஈடுபட முடியாது. மன்னிக்கும் மனோபாவம் கொண்டவனே, தனது பணியில் தீவிரமாக செயல்பட முடியும்.
* எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பம் தரும் பொருள் உலகத்தில் இல்லவே இல்லை.
* கருணை நிறைந்தவர்களாக மாறுங்கள். ஏனெனில், கருணையே இனிய சொர்க்கம்.
* எல்லாவற்றையும் ஆராய்ந்து பாருங்கள். ஆனால், உங்கள் கருத்தில் உறுதியாக இருங்கள்.
* வாழ்வில் ஒரு நன்மையாவது செய்யுங்கள். அதனால், பாவம் அனைத்தும் தீர்ந்து விடும். 
* பிறவிப்பிணி நீங்க வேண்டுமானால், ஆசையின் சாயலே அற்றுப் போய் விட வேண்டும். வேறெந்த முயற்சியும் வீணானவை தான்.
* யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டுஇருக்கட்டும். எதைச் சரி என்று நினைக்கிறீர்களோ அதை கடவுளின் வழியில் செய்து கொண்டிருங்கள்.
* பெண்ணுக்கு நாணமே ஆபரணம். அது இல்லாத பெண்ணைப் பெண் என்றே சொல்ல முடியாது. 
* ஆசையை யாராலும் விலக்க முடியாது. உடம்பு என்ற ஒன்று இருக்கும்வரை அதுவும் இருந்தே தீரும். ஆனால், அதை கட்டுக்குள் வைக்க வேண்டும். 
* "கடவுள் என்னுடையவர்' என்ற சிந்தனையை விதைப்பதற்கு ஏற்றது குழந்தைப் பருவமே. பக்தியை குழந்தைப் பருவத்திலேயே கற்றுக் கொடுங்கள். 
* தாயும் தந்தையும் மகிழ்ச்சி அடைந்தால், கடவுளும் மகிழ்ச்சி அடைகிறார்.
* நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பொருட்டு மனம், இதயம், ஆன்மா இந்த மூன்றையும் அர்ப்பணித்து விடுங்கள்.
* உயர்ந்த லட்சியம் கொண்டவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.
* நாம் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் கொண்டவர்கள். மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண்டவன் நம்மைப் படைத்து இருக்கிறான். அவற்றை நாம் விரைந்து செய்து முடிப்போம்.
* நல்ல எண்ணங்களின் கருவிகளாக்கிக் கொள்ளும் முயற்சியில் மனதை எப்போதும் ஈடுபடுத்துங்கள். 
* சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காக்கும். இறுதியில் நம்மை விடுதலை பெறச் செய்யும். 
* தூய உள்ளம் படைத்தவர்கள் அதிகமானால், இந்த உலகமும் தூய்மை பெற்றதாக மாறி விடும்.
* இதயம் விரிவடைந்தால் தான் உண்மை ஞானம் உதிக்கும். உண்மை ஞானம் மலர்ந்தால் மனதில் நம்பிக்கை நிலைக்கும்.
* பொன், பொருளில் ஆசை கொண்டு அற்ப வாழ்க்கை நடத்துபவர்கள் பொருட்படுத்தக் கூடியவர்கள் அல்ல.
* யாருடைய நெஞ்சம் ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ அவரே மகாத்மா.
* கோழைகளே பாவச் செயல்களைச் செய்வர். தைரியம் கொண்ட மனிதர்கள் ஒருக்காலும் பாவம் புரிய நேர்வதில்லை. 
* வஞ்சனையால் பெரிய விஷயம் எதையும் வாழ்வில் சாதித்து விட முடியாது. 
* அறிவைப் பலவீனப்படுத்தும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை விஷம் எனக் கருதி ஒதுக்குங்கள்.
* உண்மை உங்களை எங்கே இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். ஒருபோதும் கோழையாகவோ, கபடதாரியாகவோ இருக்காதீர்கள்.
* நிச்சயமாக நன்மை விளையும் என்று உணர்ந்தால் மட்டுமே மனதில் இருப்பதை வெளிப்படுத்துங்கள்.
* திண்ணையில் உட்கார்ந்திருப்பவன் கீழே விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ அல்லது சுளுக்கு ஏற்படுவதோடோ போய்விடும். ஆனால், பணக்காரன், பதவிக்காரன் மாடி மீது இருக்கிறான். அவன் கீழே விழுந்தால் எலும்பு முறிந்துவிடும், ஏன்...உயிருக்கே ஆபத்து உண்டாகும்.
* உலகத்தில் பிறந்த ஒவ்வொருவனும், "தான் ஒருவனே மகா கெட்டிக்காரன், மகா யோக்கியன், ரொம்ப அழகுள்ளவன்' என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். அதுபோலவே, துன்பப்படுபவனும் "தான் ஒருவன் மட்டுமே உலகிலேயே அதிகத் துன்பப்படுபவன்' என்று எண்ணிக் கொள்கிறான். ஆனால், இரண்டுமே உண்மையல்ல. சுகமும் துக்கமும் இரட்டைப்பிறவிகள். சுகம் இருக்கும் இடத்தில் துன்பமும் இருக்கும். இன்பமும் துன்பமும் ஒன்றைவிட்டு ஒன்று விலகுவதில்லை. எனவே, இன்பம் துன்பம் இரண்டையும் விட்டாலன்றி நிம்மதிக்கு வேறு வழியில்லை.
* காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை மனதில் நினைத்து வழிபடுங்கள்.
* "இன்றைய நாள் முழுவதும் நல்ல பொழுதாக அமைய வேண்டும்' என்று தினமும் வேண்டிக் கொள்ளுங்கள்.
* புண்ணிய நதிகள், பசு, சிரஞ்சீவிகள், சப்தகன்னியர்களை குறைந்தது ஒரு நிமிடமாவது சிந்தியுங்கள்.
* வாரம் ஒருமுறையாவது கோயில் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
* அண்டைவீட்டாரையும், மற்ற மனிதர்களையும் அன்புடன் நேசித்து வாழுங்கள்.
* சாப்பிடும் முன் மிருகம், பறவைகளுக்கு உணவு அளித்த பின்னரே சாப்பிடுங்கள்.
* அன்றாடம் அவரவர் சக்திக்கேற்ப தர்மம் செய்து வருவது நன்மை அளிக்கும்.
* நீராடிய பின் நெற்றியில் தவறாமல் திருநீறு, குங்குமம் வைத்துக் கொள்வது அவசியம்.
* உறங்கும் முன் அன்றைய நாளில் நடந்த நல்லது, கெட்டதை எண்ணிப் பார்ப்பது நம்மைத் திருத்திக் கொள்ள வழிவகுக்கும்.
* பாவிகளை நாம் வெறுப்பதாலும், அவர்களை கோபிப்பதாலும் பயனில்லை. அவர்களுடைய மனசும் நல்ல வழியில் திரும்பவேண்டும் என்று பிரார்த்திப்பது ஒன்றே நாம் செய்ய வேண்டியது.
* நம் நாட்டில் முற்காலத்தில் கல்வியின் முதல் நோக்கம் அமைதியை அடைவதே ஆகும். ஆத்ம ஞானத்தை அளிக்கும் கல்வியைப் 'பரவித்யை' எனவும், மற்றவற்றை 'அபரவித்யை' எனவும் கூறுவர்.
* பாவத்திற்கு மூலம் கெட்ட காரியம். கெட்ட செயலுக்கு மூலம் ஆசை. ஆகையால், நம் கஷ்டம் அனைத்திற்கும் மூலகாரணமாகிய ஆசையை நிவர்த்தி பண்ணினால், நிரந்தரமான துக்க நிவர்த்தி உண்டாகும்.
* கடவுள் ஒன்று என்று சொல்வதோடு மற்ற மதங்கள் இருந்துவிடுகின்றன. ஆனால், இந்துமதமோ ஒரே கடவுளை அவரவர் மனோபாவப்படி அன்போடு வழிபட பலப்பல தெய்வ வடிவங்களை நமக்குக் காட்டுகிறது.
* தர்ம மார்க்கத்தில் ஒருவன் இருந்தால் பிராணிகள் கூட அவனை ஆதரிக்கும். அதர்மத்தில் விழுந்தால் உடன் பிறந்தவனும் எதிரியாகி விடுவான்.
* அக்னியில் நெய்யை விட்டால் அது அணைந்தா போகிறது? மேலும் பெரிதாக வளர்கிறது. இப்படியே ஓர் ஆசை பூர்த்தியானவுடன் இன்னொரு ஆசை மூள்கிறது.
* கஷ்டங்களைச் சொல்லிக் கொள்ளாமல் யாராலும் இருக்க முடியாது. வெளிப்படச் சொன்னாலே அதில் ஒரு நிம்மதி பிறக்கிறது.
* தமிழ்நாடு ஒரு குளிர்சாதன பெட்டி போல எல்லா பாஷைகளையும், எல்லா நாகரீகங்களையும் கெடாமல் குளிர்ச்சியுடன் காத்துத்தந்து வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் நிறைந்திருப்பது எது? வேதம் நிறைந்த தமிழ்நாடு என்று பாரதியார் பாடியது உண்மையாகும்.

வெற்றி வாழ்வின் ரகசியம் - தைரியமாக இருங்கள்

* மனிதன் வாழ்வில் எந்த அளவுக்கு உயர்கிறானோ அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளைக் கடந்தாக வேண்டும்.
* தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட, போர்க்களத்தில் மாய்வது மேலானது.
* திட்டம் எதுவும் தேவையில்லை. அதனால், ஆகப்போவது எதுவுமில்லை. கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள். அது போதும்.
* கோழை தான் வாழ்வில் பாவம் செய்கிறான். தைரியசாலியோ ஒருபோதும் பாவம் செய்வதில்லை.
* மக்களிடம் உண்மையான சமத்துவம் எப்போதும் இருந்ததில்லை. இனி இருக்கப் போவதுமில்லை.
* சுயநலம், சுயநலமின்மை என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
* மற்றவர்களுக்கு நன்மை செய்யும் முயற்சியில், இந்த உடல் அழிந்து போனால் அதுவே மேலானது.
* சுதந்திரமானவர்களாக இருங்கள். யாரிடமும் எதையும் எதிர்பாராதீர்கள்.
* பிரதிபலன் பாராமல் நன்மை செய்யுங்கள்.

வெற்றி வாழ்வின் ரகசியம்

* நன்மை செய்யவும், நல்லவர்களாக வாழவும் விரும்புபவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
* உண்மை எதற்கும் தலை வணங்கத் தேவையில்லை. மனித சமூகம் தான் உண்மைக்குத் தலை வணங்க வேண்டும். 
* எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது. அதை விழித்து எழச் செய்வதே நல்லாசிரியரின் கடமை.
* இன்றைய கல்வித்திட்டம் மனிதனை இயந்திரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒழுக்கம், மனவலிமை, பரந்த அறிவு இவற்றை புகட்டுவதாக கல்வித்திட்டம் மாற வேண்டும்.
* மனிதர்கள் விலங்குகளை விட அதிக ஒழுக்கமானவர்களாக இல்லை. சமுதாயக் கட்டுப்பாடு என்ற சாட்டையால் மனிதன் அடக்கி வைக்கப்பட்டிருக்கிறான். 
* கற்புநெறியில் இருந்து பிறழும் போது, மனித சமூகம் முடிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகும்.
* நாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்வை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றி வாழ்வுக்கான ரகசியம்.

உண்மையைப் பின்பற்றுங்கள்!

* இதயம் விரிவடைந்தால் தான் உண்மை ஞானம் உதிக்கும். உண்மை ஞானம் மலர்ந்தால் மனதில் நம்பிக்கை நிலைக்கும்.
* பொன், பொருளில் ஆசை கொண்டு அற்ப வாழ்க்கை நடத்துபவர்கள் பொருட்படுத்தக் கூடியவர்கள் அல்ல.
* யாருடைய நெஞ்சம் ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ அவரே மகாத்மா.
* கோழைகளே பாவச் செயல்களைச் செய்வர். தைரியம் கொண்ட மனிதர்கள் ஒருக்காலும் பாவம் புரிய நேர்வதில்லை. 
* வஞ்சனையால் பெரிய விஷயம் எதையும் வாழ்வில் சாதித்து விட முடியாது. 
* அறிவைப் பலவீனப்படுத்தும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை விஷம் எனக் கருதி ஒதுக்குங்கள்.
* உண்மை உங்களை எங்கே இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். ஒருபோதும் கோழையாகவோ, கபடதாரியாகவோ இருக்காதீர்கள்.
* நிச்சயமாக நன்மை விளையும் என்று உணர்ந்தால் மட்டுமே மனதில் இருப்பதை வெளிப்படுத்துங்கள்.

நம்மால் சாதிக்க முடியும்!

* நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பொருட்டு மனம், இதயம், ஆன்மா இந்த மூன்றையும் அர்ப்பணித்து விடுங்கள்.
* உயர்ந்த லட்சியம் கொண்டவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.
* நாம் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் கொண்டவர்கள். மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண்டவன் நம்மைப் படைத்து இருக்கிறான். அவற்றை நாம் விரைந்து செய்து முடிப்போம்.
* நல்ல எண்ணங்களின் கருவிகளாக்கிக் கொள்ளும் முயற்சியில் மனதை எப்போதும் ஈடுபடுத்துங்கள். 
* சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காக்கும். இறுதியில் நம்மை விடுதலை பெறச் செய்யும். 
* தூய உள்ளம் படைத்தவர்கள் அதிகமானால், இந்த உலகமும் தூய்மை பெற்றதாக மாறி விடும்

உலகத்துக்காக தியாகம் செய்!

* நல்லவர்கள் மற்றவர்களுடைய நன்மைக்காக மட்டுமே வாழ்கிறார்கள்.
* ஒருவருக்கொருவர் நன்மை செய்வதன் மூலமாகத் தான், நற்பலன்களை அடைய முடியும்.
* மற்றவர்களுக்கு முக்தியை வாங்கிக் கொடுப்பதற்காக நீ நரகத்திற்கே செல்லவும் தயாராக இருக்கவேண்டும். மரணம் ஒருநாள் உறுதி என்னும்போது நல்ல செயலுக்காக உயிரை விடுவது மேலானது.
* பெரியவர்கள் பலர் செய்த தியாகத்தின் பயனையே இன்று மனிதகுலம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையை உலகம் முழுவதிலும் காணமுடியும்.
* உன் சொந்த முக்திக்காக நீ உலகத்தைத் துறந்து விட விரும்பினால் அது ஒன்றும் பாராட்டத்தக்கது அல்ல. ஆனால், உலக நன்மைக்காக உன்னை நீயே தியாகம் செய்ய முடியுமானால் கடவுளாகி விடுவாய்.
* உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல. இங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்காதே. வெற்றி, தோல்வி என்று கவனித்துக் கொண்டிருக்காதே. உடனடியாக, தியாக உள்ளத்துடன் சேவையில் ஈடுபடு.

உழைத்து வாழ வேண்டும்ஜனவரி 10,2013,14:01  IST
* தைரியமாயிருங்கள். பலமுடையவர் ஆகுங்கள். உங்கள் மீதே முழுப் பொறுப்பு களையும் சுமத்திக் கொண்டு செயல்படுங்கள். 
* உங்கள் விதியை நிர்ணயிப்பவர் நீங்களே. உங்களுக்கு வேண்டிய பலமும், துணையும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன.
* கொழுந்து விட்டெரியும் அன்பும், தன்னலமில்லாத பண்பும், ஒழுக்கமும் கொண்ட நல்லவர்களையே இந்த மண்ணுலகம் வேண்டி நிற்கிறது.
* உழைத்து வாழுங்கள். இவ்வுலக வாழ்வு எத்தனை நாள் என்பது நமக்குத் தெரியாது. உலகில் தோன்றியதன் அறிகுறியாக ஏதேனும் நல்லதைச் செய்ய முயலுங்கள்.
* உங்களுக்குள் இருக்கும் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்துங்கள். அதன் பின் உங்களைச் சுற்றி இருக்கும் ஒவ்வொன்றும் சீராகி ஒழுங்காகி விடும். 
* வாழ்வில் நன்மை பெற வேண்டுமானால், மனிதர்களுக்கு முதலில் தொண்டு செய்யுங்கள்.
விவேகானந்தர்
(இன்று விவேகானந்தர் பிறந்ததினம்) 


இயற்கையை வெற்றி கொள்!

* உள்ளக்கதவைத் திறந்து வையுங்கள். நாலாபுறத்திலும் இருந்து நல்ல விஷயங்கள் அதற்குள் நுழைய அனுமதி அளியுங்கள்.
* எல்லாப் பூக்களில் இருந்தும் தேனைப் பெற்றுக் கொள்ளுங்கள். யாரிடமும் பகை பாராட்ட வேண்டாம். நட்புணர்வுடன் பழகுங்கள். ஆனால், உங்கள் சொந்தக்கருத்தை விடாப்பிடியாகப் பற்றுங்கள். 
* மனிதன் பிறந்திருப்பது இயற்கையை வெற்றி கொள்ளத் தானே தவிர, அதற்கு ஒருபோதும் பணிந்து போவதற்கு அல்ல.
* பாமர மக்களுக்கு உயர்வான எண்ணங்களைப் பரப்புவதற்காகவே புராணங்கள் எழுதப்பட்டன.
* கடவுளை வணங்கும் போது, அவரை நமது தாய் தந்தையாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், மற்றவர்களை சகோதர சகோதரிகளாக நேசிக்க மறந்து விடுகிறோம்.
* நாலுபேர் அறிய நல்லவனாக காட்டிக் கொண்டு, பிறர் அறியாதவகையில் தீய செயல்களில் ஈடுபடுவது இழிவான செயல்.

உள்ளத்தை ஒழுங்குபடுத்து!

* உங்களுக்கு வருகிற துன்பம் எதுவென்றாலும் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
* உலகத்தில் உள்ள தீமைகளைப் பற்றி வருந்த வேண்டாம். உங்கள் உள்ளத்தில் இருக்கும் தீமையைப் போக்க வழிகாணுங்கள்.
* உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால், எல்லா இடத்திலும் கடவுளைக் காண்பீர்கள்.
* பாவ எண்ணமும், பாவச் செயலும் ஒன்று தான். அதனால், தீய எண்ணமும் கூட ஒருவனுக்கு கேடு விளைவிக்கும் என்பதை மறவாதீர்கள்.
* சுதந்திரம் இல்லாத வரையில் ஒரு மனிதனிடம் அன்பு தோன்றுவதில்லை. அடிமையாகி விட்டால் உண்மையான அன்புக்கு இடமே இல்லை.
* உயிர் போகும் வேளையில் கூட, ஒருவருக்கு உதவி செய்வது தான் கர்மயோகம். 
* தன்னை அடக்கக் கற்றுக் கொண்டவன் தரணியையே அடக்கும் வலிமை பெறுகிறான்.
* நேர்மை, அக்கறை உணர்வுடன் ஈடுபடும் எந்த விஷயத்திலும் சாதனை நிகழ்த்த முடியும்.

தவறுகளைத் திருத்திக்கொள்!

* ஒழுக்கத்தை அதிகம் வலியுறுத்தியதோடு, அதை கடைபிடித்தவர்களில் புத்தருக்கு இணையான ஒருவரை உலகம் இதுவரை காணமுடியவில்லை.
* ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம் நல்ல ஒழுக்கத்தை உறுதியாகப் பின்பற்றி நடக்க முடியும். 
* ஆன்மிகம் என்பது அனுபவித்து அறியும் விஷயமே தவிர, வெறும் பேச்சன்று.
* இரும்பைப் போன்ற மன உறுதியும், மலைகளைத் துளைத்துச் செல்லும் வலிமையும் வந்து விட்டால் கடலையும் கடக்க முடியும்.
* அறிவு வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிமுறை தான் இருக்கின்றது. அது தான் நம்முடைய மனதை ஒருமுகப்படுத்துவதாகும்.
* அன்பில்லாதவன் பெற்ற உலகியல் அறிவும், ஆன்மிக ஞானமும் பயனற்றது. அவனால் கடவுளை ஒருபோதும் அடைய முடியாது.
* "நான் கெட்ட செயலை செய்து விட்டேன்' என்று வருந்துவதைக் காட்டிலும் அதை திருத்திக் கொள்வதே மேலானசெயல்.

விருப்பத்துடன் வேலை செய்

* பகை, பொறாமை போன்ற தீய எண்ணங்களை வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் தோன்றிய இடத்திற்கே திரும்பி வந்து விடும்.
* நன்மை செய்வதே சமயவாழ்வின் சாரம்.
* எல்லாவற்றையும் செவி சாய்த்துக் கேளுங்கள். ஆனால், உங்களுக்கு எது நல்லதென்று தோன்றுகிறதோ அதை மட்டும் உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.
* உண்மை எங்கே இழுத்துச் சென்றாலும் அஞ்ச வேண்டாம். அதையே துணிச்சலுடன் பின்பற்றுங்கள். ஒருபோதும் கோழையாக இருக்காதீர்கள்.
* தன்னை அடக்கிப் பழகியவன் வேறு எதற்கும் வசப்பட மாட்டான். அத்தகையவனே உலகில் நன்றாக வாழும் தகுதி பெற்றவன்.
* எந்த வேலையாக இருந்தாலும், அதை தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றிக் கொள்பவனே அறிவாளி.
* அன்புடைய மனிதனே வாழ்கிறான். சுயநலம் கொண்டு மற்றவர்கள் மீது வெறுப்பு கொள்பவன் செத்துக் கொண்டிருக்கிறான் என்பது பொருள்.

ஒரே எண்ணம் வாழ்வில் வெற்றி தரும்

* ஒருவன் எவ்வளவு பாவியாக இருந்தாலும், ""நான் பாவியாக இருக்கிறேனே! எப்படி கடைத்தேறப் போகிறேன்!'' என்று அழுது கொண்டிருப்பதனால் பயன் சிறிதும் இல்லை.
* வெறும் வருத்தத்தினாலும், புலம்பலினாலும் நேரத்தை வீணாக்காமல் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து ஊக்கத்தோடு நம் கடமைகளைச் செய்தால் நிச்சயம் உருப்படலாம்.
* மனங்களில் நல்லமனம் என்றும், கெட்டமனம் என்றும் இருவேறு மனங்கள் இல்லை . மனம் என்பது ஒன்று தான் இருக்கிறது.
* நாம் அனுபவிக்கும் இன்பத்தை அறியாமையால் புறவுலகத்தில் இருந்து பெறுவதாக எண்ணுகிறோம். ஆனால், உண்மையில் இன்பம் நமக்குள்ளே தான் இருக்கிறது.
* கடவுளின் பேரால் எவ்வளவு பாரத்தைக் கொடுத்தாலும் அவ்வளவையும் அவரே ஏற்றுக்கொள்வார். ஆனால், நாம் நம் மனதில் சுமைகளை சுமப்பதால் துன்பத்திற்கு ஆளாகித் தவிக்கிறோம். 
* உழைப்பும் சமூகசேவையும் உலகத்திற்கு நன்மை செய்வனவாகும். உழைப்பின் மீதும், நம்மால் முடிந்த சேவைகளையும், பிறருக்கு உதவி செய்வதையும் உங்கள் அடிப்படைக் கடமையாகக் கொள்ளுங்கள்.

சிலர் எடுத்த எடுப்பிலேயே ஞானியாக விளங்க விரும்புகிறார்களே தவிர, அதற்கான பயிற்சிகளைக் கடைபிடிப்பதில்லை. பயிற்சிகளை மேற்கொள்வதில் முயற்சி முக்கியமாகும்.
அருளின் மிக உயர்ந்த வடிவம் மவுனமாகும். அதுவே உயர்ந்த உபதேசமாகும்.
இதயத்தில் அகந்தை உருகி மறைதலே சரணாகதி என்பதாகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால் ஏமாந்து விடுவதில்லை. அவரது நோக்கமெல்லாம், அகந்தை இன்னும் எந்த அளவுக்கு இருக்கிறது, அதை எப்படி போக்குவது என்பதுதான்.
மயக்கம், அதிகமான மகிழ்ச்சி அல்லது அதிகமான துக்கம், அச்சம் போன்றவற்றால் எண்ணங்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பெறும்போது மனம் தன் மூலமாகிய இதயத்திற்குச் செல்கிறது.
மனம் அலையும்போது சக்தி சிதறிப்போய் பலவீனம் அடைந்துவிடுகிறது. மனம் அலையாமல் ஒரே எண்ணத்துடன் இருக்கும்போது, சக்தி சேமிக்கப்படுகிறது. இதன் காரணமாக மனம் வலிமை பெறுகிறது.
அகந்தை இருக்கும் வரைதான் தியானம் தேவை. அகந்தையின் மூலகாரணத்தைத் தேடும்போது அதன்மீது வெறுப்பு தோன்றி மறைகிறது. எஞ்சி நிற்பது ஆத்மா மட்டுமேயாகும்.
மனத்தை உள்நோக்கிச் செலுத்துவதில் வெற்றி பெறுவதென்பது பயிற்சியாலும் வைராக்கியத்தாலும் கிட்டுவதாகும். அது படிப்படியாக வெற்றி தரும்.
நம் மனம் யாரிடம் வசமாகிறதோ அவரே நமக்கு சரியான குரு ஆவார். அவரிடம் சாந்தி, பொறுமை, மன்னிக்கும் பாங்கு போன்ற நற்குணங்களும் அமைந்திருக்க வேண்டும்.
உடல் ஜடம்; ஆத்மா ஞான மயம். இவ்விரண்டின் சேர்க்கையானது புத்தியால் ஊகித்து அறியப்படுவதாகும்.

* முற்பிறவியில் புண்ணியவினைகளைச் செய்தவன் வாழ்வில் இன்பத்தை நுகர்ந்து மகிழ்கிறான். பாவவினைகளை செய்தவன் துன்பத்தில் உழல்கிறான்.
* விதிப்படி தான் வாழ்க்கை நடக்கிறது. வாழ்க்கை என்பது திட்டமிட்ட கணக்கு போலத்தான். பாலன்ஸ் ஷீட் என்று சொல்வார்களே அதைப் போன்றது. இதை மாற்றினால் கணக்கு சரிப்பட்டுவராது. ஆண்டவனும் தான் ஏற்படுத்திய நியதியை யாருக்காகவும், எப்போதும் மாற்ற முன் வருவதில்லை.
* விதிப்படி வகுத்திருக்கும் வாழ்க்கையில், நன்மைகளைப் பெற்றால் ஆர்ப்பரிக்காமல் அமைதியோடு இருப்பதற்காகவும், தீமை வந்தால் ஒரேயடியாகத் துவண்டு போய் வருந்தாமலும், இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் காணும் மனநிலையை ஆன்மிகம் நமக்கு கற்றுத் தருகிறது.
* பக்தியால் பக்குவம் பெற்றவர்கள் மனதில் சுகமோ, கவலையோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதோடு வரவிருக்கும் அடுத்தடுத்த பிறவிகளுக்கு வினைச்சுமைகளை சேர்த்துக்கொள்ளாமல் காப்பாற்றுவதற்கும் பக்தி துணையாக அமைகிறது. உண்மையான பக்தி தீமைகளில் இருந்து மனிதனைக் காப்பாற்றுகிறது