Monday, August 7, 2017

உங்க உயிர் நண்பனும் இப்படித்தானா? க்ராஸ் செக் பண்ணிக்கோங்க !!!

நாம ஆயிரம் பேர்கூட பழகினாலும், நமக்கு நெருக்கமான நண்பர்கள்னு சொல்லிக்க ஒண்ணு ரெண்டு பேர்தான் இருப்பாங்க. அவங்களும், அவங்களுக்கும் நமக்கும் இடையே உள்ள நட்பும் எப்படி இருக்கும்னு சொல்றேன். கேட்டு க்ராஸ் செக் பண்ணிக்கோங்க மை ப்ரெண்ட்ஸ்... 

நண்பர்கள்

'அவன் பழக்கவழக்கத்தை நிறுத்துற வரைக்கும் நீ உருப்பட மாட்ட' என உங்கள் அம்மாவோ, மனைவியோ கையில் சப்பாத்திக்கட்டையையும், துடைப்பக்கட்டையையும் வைத்துக்கொண்டு உங்கள் ஜிகிடி தோஸ்த்தின் பெயரைச் சொல்லித்தான் உங்களை மிரட்டி சத்தம் போடுவார்கள். 

நீங்க `காமெடி'னு பேப்பர்ல எழுதிக் கொடுத்தாலே, அதை படிச்சுட்டு அல்லையில் பிடிச்சுக்கிற அளவுக்கு விழுந்து விழுந்து சிரிப்பாங்க. கொஞ்ச நேரத்தில் ‘கொலை கேஸ்ல உள்ள போயிடுவோமோ?’ என, உங்களை நினைக்க வைத்து கிலி கிளப்புவார்கள். அவர்கள் ஏன் சிரிக்குறீங்க, எதுக்கு சிரிக்குறீங்கனு உங்களைச் சுற்றி உள்ள யாருக்குமே தெரியாது. ஏன், உங்களுக்கே சரியா தெரியாதுன்னா பார்த்துக்கோங்களேன்.

உங்களுக்கு போர் அடிக்கும்போதெல்லாம், அவரைத்தான் குனிய வெச்சு முதுகுல கும்மு கும்முனு கும்மி டைம்பாஸ் பண்ணலாம்னு தோணும். அவங்க தோளைப் பிடிச்சு இழுத்து, சங்கை கடிக்கிறது நமக்கு சந்தோஷத்தைத் தரும். மல்லாக்க படுக்கப்போட்டு வயித்துலேயே வங்கு வங்குனு மிதிக்கிறது ஒருவித மகிழ்ச்சியைத் தரும்.

நீங்கள் ஆஸ்பத்திரியில் முடியாமல் கிடக்கும்போது உங்களுக்கு ஒரே ஒரு எலுமிச்சைப்பழத்தை வாங்கிக் கொடுத்துவிட்டு, நீங்கள் வாங்கி வைத்திருக்கும் நாலைந்து சாத்துக்குடிகளை ஜூஸ் போட்டுக் குடித்துவிட்டு ‘வரேன்டா’ எனக் கிளம்புவார்கள். அந்த எலுமிச்சம்பழத்தையும் ஏதாவது கோயிலில் இருந்து ஆட்டையைப் போட்டிருப்பார்கள். தொட்டுப்பார்த்தால் டேபிள் டென்னிஸ் பந்து போல் அவ்வளவு கனமாக இருக்கும்.

அவர்கள் நன்றாக இருந்தால் உங்களுக்கு வயிறு கபகபனு எரிந்து வாய் வழியாக புகை வரும். அதே அவர்கள் கஷ்டப்படுறதைப் பார்க்கும்போது, நமது கண்கள் கலங்கி, நாடி நரம்பு தெறித்து, நாக்குபூச்சி வெளியே வரும். நட்புடா... நண்பேன்டா...

உங்கள் குடும்பத்தை அவரும், அவர் குடும்பத்தை நீங்களும் மாறி மாறி ஃப்ளோவில் ஏழெட்டு தலைமுறையை தோண்டி எடுத்து கிழி கிழி என கிழிப்பீர்கள். ஆனால், அவர்களை நேரில் பார்க்கும்போது ‘அங்கிள்... ஆன்ட்டி...’ என மரியாதையோடு மட்டையாய் மடங்குவீர்கள். அது நடிப்பு இல்ல, நிஜம். 

ஒருவருக்கு ஒருவர் என்ன நினைக்கிறீர்கள் என்பதை மூஞ்சியைப் பார்த்தே புரிந்துகொள்வீர்கள். அதிலும் நீங்கள் பேசுவது பல சமயங்களில் உங்களுக்கு மட்டுமே புரியும், மற்றவர்கள் தலையைப் பிய்த்துகொண்டு விட்டத்தைப் பார்த்து உட்கார்ந்துவிடுவார்கள். அடிக்கடி இருவர் மட்டும் கூட்டத்தில் இருந்து கழன்று போய் சொந்த கதை, சோகக் கதை எல்லாம் பேசி கண்ணீர் மல்க கதறிக் கொண்டிருப்பீர்கள்

நீங்கள் உங்கள் நண்பரையும், உங்கள் நண்பர் உங்களையும் வெறித்தனமாய் கலாய்த்து கதறவிடுவீர்கள். பெரும்பாலும், உங்களுக்கு உங்கள் நண்பர்தான் பட்டப்பெயர் வைத்திருப்பார். ஆனால், வேறு யாராவது உங்களை கலாய்த்தால், கலாய்ப்பவருக்கு கும்பாபிஷேகம் உறுதி. 

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

கண்ணன் - குசேலன் முதல் ரஜினி கமல் வரை நட்புக்கு இலக்கணமான ஐந்து ஜோடிகள்! #HappyFriendshipDay
நட்புக்கு இலக்கணமான பல்வேறு நபர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்டவர்கள் சதாப்தங்களாக நட்பை மனநிறைவுடன் போற்றி வருகிறார்கள். அவர்களுள் சிலர்... Friendship Day Special Article
நீங்க ஒண்ணுமண்ணா கட்டிப்பிடிச்சு பாசமழை பொழிவதைப் பார்த்து இந்தச் சமுதாயம் ‘அவிய்ங்களா நீங்க?, நீங்க தோஸ்தா இல்லை தோஸ்தானாவா?’ என எக்குத்தப்பாய் சந்தேகப்படும். இது வெறும் நட்புதான் என சூடம் அடித்து சத்தியம் செய்தாலும் சில பக்கிகள் நம்பாது. நம்புங்கய்யா... நட்புய்யா... நேத்தே நண்பர்கள் தினம் முடிஞ்சுட்டாலும் இன்னைக்கும் `நண்பர்கள் தினம் வாழ்த்துகள்' அனுப்புற குழந்தைய்யா அவங்க...

No comments:

Post a Comment