தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்கள் !
மிகச்சிறந்த வாய்ப்புக்கள் அனைத்தும், பிரச்சனைகளால் போர்த்தப்பட்டவைதான். முள் நிறைந்த கடினமான தோலை உரித்துப் பார்க்கிறவர்களால் மட்டும்தான் வாய்ப்புக்கள் என்ற பலாச்சுளைகளை ருசி பார்க்க முடியும். பிரச்சினை என்னவென்றால், பெரும்பாலானவர்கள் பிரச்சனை என்ற தோலைப் பார்த்தவுடன் மலைப்புடன் நின்று விடுகிறார்கள் என்பதுதான்.
சாதனையாளர்கள் பிரச்சனையை தாண்டிச் செல்கிறார்கள். எத்தனை தோல்விகள் வந்தாலும் அவற்றை ஆய்வு செய்து, அனுபவப்படிக்கட்டாக மாற்றிக் கொண்டு வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறார்கள்.மின்சார விளக்கை கண்டு பிடிப்பதற்கு முன்பதாக தோமஸ் அல்வா எடிசன் 10.000 தோல்விகளை சந்தித்தார்.
இரப்பரை கண்டு பிடிக்கும் முன்பாக அவர் 17.000 தோல்விகளை சந்திக்க நேர்ந்தது.இந்தத் தோல்விகளை எல்லாம் எடிசன் தோல்விகளாகவே ஒப்புக் கொள்ளவில்லை.
ஒரு பொருளை எப்படிச் செய்யக் கூடாது என்பதற்கு தோல்விகளே சிறந்த பாடம் என்று அவர் வர்ணித்தார். பத்து நாட்களுக்கு ஒரு தடவை ஒரு சிறிய கண்டு பிடிப்பு, ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை மகத்தான கண்டு பிடிப்பு என்று இலக்கு வகுத்துக் கொண்டு உழைத்த உலகின் மாபெரும் கண்டு பிடிப்பாளரின் வெற்றியின் இரகசியம் இதுதான். தோல்விகள் வெற்றியின் படிக்கட்டுக்கட்டுக்கள் என்ற கண்ணோட்டத்துடன் இலக்கை நோக்கி வெறியுடன் உழைப்பதே இவர்களின் நோக்கம்.
பூலோகசுவர்க்கம் என்ற டிஸ்னி வேல்ட்டை உருவாக்கிய வால்ட் டிஸ்னி தனது திட்டத்திற்கு நிதி திரட்டுவதற்காக முயற்சி எடுத்து 302 தடவைகள் தோல்வியடைந்தார்.
302 படிக்கட்டில் தோல்வியடைந்த வால்ட் டிஸ்னி 303 வது தடவை வெற்றி பெற்றார்.ஐ.பி.எம் நிறுவனர் தாமஸ் ஜே. வாட்சனிடம் விரைவாக வெற்றி பெறுவது எப்படி என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டார். தாமஸ் ஜே. வாட்சனின் பதிலில் அவரது அனுபவச் செல்வம் பளிச்சிட்டது. நீங்கள் வேகமாக வெற்றிபெற விரும்பினால் உங்களது தோல்விகளின் அளவை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும், வெற்றி என்பது தோல்வியின் மறுபக்கத்தில்தான் இருக்கிறது என்றார்.
இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம் ?
01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி.
02. 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி.
03. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி.
04. 1835 ல் அவரது காதலி மரணம்.
05. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது.
06. 1838 ல் தேர்தலில் தோல்வி.
07. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.
08. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.
09. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி.
10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.
11. 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி.
12. 1861 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க ஜனாதிபதியானார்.இத்தனை தோல்விகளையும் சந்தித்தவர் வேறுயாருமில்லை.
உலகம் அறிந்த மிகவும் பிரபலமான அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்தான். அதிக தோல்விகள், அதிக பாடங்கள், இவையே வெற்றியின் இரகசியம். தோல்விகளை வெற்றிகளாக்கிய மனிதர்களின் வரிசையில் அடுத்த வாரம் வருகிறார் ஜப்பானியரான கோண்டா
No comments:
Post a Comment