Friday, February 26, 2016

எப்படி எப்படி எப்படி


சரி அடுத்தபடியான “புரிந்துகொள்ளுதல் எப்படி? ” என்கிறீர்களா?  பிறர் மூலம் அல்லது பிறரின் மூலம் அறிந்து கொண்டதை அப்படியே விட்டுவிட்டால் அதனால் எந்தப் பயனும் விளையாது.  ஏனென்றால் அறிந்து கொண்ட ஒன்றை அரைகுறையாகவே பிறரிடமும் பகிர்ந்து கொள்வதிலேயே தற்பெருமை அடைந்துவிடுகிறோம். மாறாக… நாம் அறிந்து கொண்ட ஒரு விஷயம் குறித்து எடுத்துக்காட்டாக கணிப்பொறியைப் பற்றி யாரோ பேசக்கேட்டு அறிந்து கொண்டபின் நாம் நமக்குள் தனிமையில் அமர்ந்து யோசிக்க  கணிப்பொறி பற்றிய யோசனையில் மூழ்க வேண்டும். இந்தக் கணிப்பொறியால் நமக்கு என்ன பயன்?  கணிப்பொறியின் அளப்பறிய நினைவாற்றலால் அதன் கொள்ளளவால் நமக்கென்ன பயன்? ஒரு கணிப்பொறியை வாங்குவதற்கு கிட்டதட்ட ரூ. 25 ஆயிரம் தேவை எனில் அவ்வளவு செலவு செய்து வாங்கி வைப்பதன் மூலம்  நமக்கென்ன பயன் வரும்?  -  போன்ற சிந்தனைகள் தோன்றுமென்றால் – அந்த ஐயப்பாடுகளை வல்லுநர்களிடம் விசாரித்து விடை பெறுவதையே நான் “புரிதல்” என்கிறேன். இதுவே தெளிவடைதலின் இரண்டாம் நிலை ஆகும்.

அடுத்து முனைறாம் நிலையாகிய “உணர்தல்” என்றால் என்னவென்று பார்ப்போம்?  எப்போது உணரமுடியும் தெரியுமா?  நாமே ஒன்றைச் செய்து அதனை நமது அனுபவமாக சொந்தமாக்கிக் கொள்வதே “உணர்தல்” எனப்படும்.  உதாரணமாக, உங்களிம் ஒருவர் “லட்டு” எப்படியிருக்கும்?  எனக் கேட்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள்?, “இனிப்பாய் இருக்கும்” என்பீர்களல்லவா?  அவர் உடனே “இனிப்பு” எப்படியிருக்கும்? எனக்கேட்டால்என்ன செய்வீர்கள் நீங்கள், இனிப்பை எப்படி விளக்குவது என்னும் யோசனையில் மூழ்கிக் கொடுத்து “தின்றுப் பாருங்கள் தெரியும்” என்பீர்கள் அல்லவா… அந்த அனுபவம் தான் உணர்வாகும்.

“தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்” என்பார்களல்லவா?   – இதுதான் உணர்தலைக் குறிப்பதாகும். ஏற்கனவே நீங்கள் கணிப்பொறியைப் பற்றி பிறர் மூலம் “அறிந்து” கொண்டீர்கள்;  பிறகு நீங்கள் கணிப்பொறியைப் பற்றி ஆழமாக உங்களுக்குள்ளேயே சிந்தித்தும் – விஷயமறிந்த வல்லுநர்களிடம் விசாரித்தும் “புரிந்து”  கொண்டீர்கள். இனி என்ன செய்ய வேண்டும் தெரியுமா?  ஒரு கணிப்பொறியை இயங்கி அதன் கூறுகளை, அதனுள் பொதிந்திருக்கும் தொழில் நுட்பத்தை, மென்பொருள் மற்றும் வன்பொருள் குறித்த நுணுக்கங்களை அனுபவமாக ஆக்கிக்கொள்ளும் செயலையே “உணர்தல்”என்று கூறுகிறேன்.

இனி வருவது நாம் எட்ட விரும்பிய நான்காவது படியாகும்.  அது தான் தெளிவடைவது, ஒரே ஒருமுறை அனுபவம் பெற்று உணர்ந்தால் மட்டும்  போதாது.  தொடர்ந்து பலமுறை அந்த கணிப்பொறி அனுபவத்தைப் பெற்று மீண்டும் மீண்டும் அதன் நுணுக்கங்களில் தேர்ச்சி பெற்றால் ஐயம் தெளிவடைந்து விடும்.  இது கணிப்பொறி விஷயத்தில் மட்டுமல்ல;  எந்தத்துறை குறித்த அறிவானாலும் சரி.. அது மருத்துவமானாலும் சரி,  பொறியியலானாலும் சரி, சமையலானாலும் சரி, அரசியலானாலும் சரி, மேலாண்மையானாலும் சரி, பயிலப் பயில, பழகப் பழகப் பெறுகிற தொடர் உணர்வே தெளிவை நோக்கி இட்டுச் செல்லும் மார்க்கமாகும்.

அப்படிப்பட்டத் தெளிவைப் பெற்றுவிடுகிறபோது, அந்தத் துறை குறித்த எந்த ஐயத்தையும் சிக்கலையும் – எங்கிருந்தபோதும், எந்த நேரமானாலும் தீர்த்துவைத்துவிட முடியும்.  ஒரு விமானத்திலிருந்தபடியே தன் அலுவலகத்திலிருக்கும் கணிப்பொறியில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்களுக்கான தீர்வை கம்பில்லாத தொலைபேசி மூலம் தீர்த்து வைக்கும் வல்லமை கைவந்துவிடும்.

இத்தகையத் தெளிவையே “ஞானம்” என்கிறார்கள் நம் முன்னோர்கள்.  இவையே அறியாமையிலிருந்து ஞானத்தை (To Wisdom) அடையும் பயணத்தின் படிகளாகும். (“Knowing) (அறிதல்), (Understanding) (புரிதல்), Feeling of Experiencing (உணர்தல்), Becoming Clear (தெளிதல்).

என்ன நண்பர்களே.. “தெளிதல்” பற்றிய தெளிவைப்பெற முடிந்ததா?

3

வாழக்கையே ஒரு தேடல் திருவிழா தான். அந்தத் தேடல் தொடரில் முதலாவதாக, “தெளிதல் எப்படி” என்பதை அறிந்தோம். இந்த இதழில் நாம் காணவிருப்பது “கவனித்தல் எப்படி?” என்பதை!

“கவனிப்பது எப்படி”

“கவனிப்பது எப்படியா?” – இதென்ன விந்தையான கேள்வி என்று தோன்றுகிறதா?  “கவனித்தல்” என்னும் செயல் வெகு எளிதானதென்று நாம் எண்ணிக்கொள்கிறோம் என்றாலும் நடைமுறையில் அது முழுமையாக நிகழ்கிறதா? என்றால் “இல்லை” என்பதே பலரின் பதிலாக அமைந்திருக்கிறது.

“நில் கவனி!, புறப்படு” (Stop, listen and proceed) – என்னும் எச்சரிக்கை வாசகத்தை நாம் பயணத்தினூடே காண நேருகிறதல்லவா? அந்த மூன்று வார்த்தைகளுள் நடுவில் நாயகமாய் அமர்ந்திருக்கும் “கவனி” என்னும் சொல்லைக் கொஞ்சம் உற்று கவனியுங்கள்.  அது என்ன பொருளை நமக்கு வழங்குகிறதென்று இப்போது பார்ப்போம்.

“கவனித்தல்” – என்னும் ஒரு சொல் மூன்று பொருள்களை உள்ளடக்கியதாக பவனி வருகிறது. முதலாவது “பார்த்தல்”, இரண்டாவது “கேட்டல்”; மூன்றாவது “மனம் வைத்தல்” – என மூன்று பரிமாணகளை உள்ளடக்கிச் சுழலும் ஒரு சொல்லாக “கவனித்தல்” திகழ்கிறது.

சரி.. எப்படி கவனிப்பது?  அன்றாடம் எத்தனையோ விஷயங்களைக் கவனித்துக் கொண்டுதானே இருக்கிறோம்.


வாழ்க்கை சுமையல்ல

எழுந்து நில் இளைஞனே
எழுச்சி மிகக் கொண்டு
எழுந்து நில்!

விழிப்புடன்
வாழ்பவனுக்கு
வீழ்ச்சி என்றும் இல்லை!

இலட்சியம்
உள்ளவனுக்கு
தடைகள் பெரிதல்ல!

வாழத் தெரிந்தவனுக்கு
வாழ்க்கை சுமையல்ல
எழுந்தி நில் இளைஞனே
எழுந்து நில்!

No comments:

Post a Comment