Thursday, August 1, 2013

இனிய இல்லற வாழ்விற்கு அகத்தியர் கூறும் வழி முறைகள்!

  • காலையில் எழுந்ததும் சிவ சக்ரத்தை மனதில் நினையுங்கள்.
  • பல் தேய்க்கும் போது ஆள் காட்டி விரல் உபயோகிக்காதீர்கள்.
  • ஓம் ஸ்ரீ கோமதி சங்கர நாராயணா என்று மூன்று முறை கூறுங்கள்.
  • குளித்தபின் உணவு உண்ணுங்கள்.  பைரவர், காகம், பசு இவைகளுக்கு முடிந்த அளவுக்கு உணவு இடுங்கள்.
  • பணத்தை எப்போதும் இடது மார்பின் பையில் வையுங்கள்.
  • வாரம் இரண்டு முறை எண்ணை ஸ்நானம் செய்யுங்கள்.  ஆண்கள் - புதன், சனி; பெண்கள் - செவ்வாய், வெள்ளி.
  • ஞாயிறு, செவ்வாய், வெள்ளி தினங்களில் சவரம் செய்வது, நகம் வெட்டுவது கூடாது.
  • மாசி, ஆனி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் - தலை முடி வெட்டுவது கூடாது.
  • பூசை மற்றும் அன்றாட தேவைக்கு மணமுள்ள மலர்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.  கனகாம்பரம் போன்ற பூக்களை தவிர்க்கவேண்டும்.
  • கோயில் கோமுகத்தை - சுத்தம் செய்து, சந்தானம், குங்குமம் இட்டு தீபாராதனை செய்யுங்கள்.
  • மகம் நட்சத்திரம் அன்று எருமை மாடுகளுக்கு அகத்திக் கீரை கொடுத்து வந்தால் மரண பயம் விலகும்.
  • பூசை விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் - ஞாயிறு, வியாழன், சனி
  • வருடம் ஒருமுறையேனும் கண்டிப்பாக குலதெய்வ பூசை/வழிபாடு செய்யவேண்டும்.
  • லுங்கி, கைலி அணியாதீர்கள்.  வறுமை வாட்டும்.  வேஷ்டியே நல்லது.  நள மகாராஜா தமயந்தியின் பாதி சேலையை அணிந்த நிகழ்ச்சியே கைலியாக மாறியது.
  • வெளியே போகும்போது டாட்டா காட்டாதீர்கள்.  இறைநாமம் சொல்லி செல்லுங்கள்.
  • புது ஆடைகளை குங்குமமிட்டு, வெண் தாமரை வைத்து பூசை செய்தபின் அணியுங்கள்.
  • அருந்த சுரைக்குடுவை, மூங்கில் அல்லது வெள்ளி டம்பளர் உபயோகிக்கவும்.
  • மருதாணியை முடிந்த மட்டும் அதிகமாக உபயோகிக்கவும்.
  • குழந்தைகளை அடிக்காதீர்கள் - வியாதி, கடன், சுமை அதிகரிக்கும்.

சித்தன் அருள் - அரிய விஷயங்கள்!

ஐம்பத்தி ஒன்று அத்யாயத்திலிருந்து என்னை கவர்ந்த அறிய விஷயங்களை உங்கள் பார்வைக்கு தருகிறேன்! படித்து பயன் பெறுங்கள்! 

சித்தர்களின் பெருந்தன்மை - (மனிதன் திருந்தமாட்டான் என்று தெரிந்தும்)

ஒரு சமயம் சித்தர்கள் அனைவரும் இறைவனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள்.  "யாரெல்லாம் தங்களை நாடி, பிரச்சினைகளை சொல்லி, சரணடைந்து விடுகிறார்களோ, அவர்கள் முற்பிறவியில் எவ்வளவு கொடுமைகாரர்களாக இருந்தாலும், அவர்கள் இப்பிறவியில் தண்டனை அடையாமல் காப்பாற்றி அருள வேண்டும்." இறைவனும் சித்தர்களது வேண்டுகோளை ஏற்றார்.  அடுத்த வினாடியே தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஓலை சுவடி மூலம் பாவத்தை தீர்க்க, கஷ்டங்களை போக்க, வியாதி கொடுமைகளை போக்க, குடும்பத்தில் காணப்படும் பிரமஹத்தி தோஷம் போக்க வழிமுறைகளை செந்தமிழ் பாட்டில் எழுதி வைத்து விட்டார்கள். 

பழனி நவபாஷாண சிலையின் மகத்துவம்!

"அகத்தியனை முழு அளவில் நம்பி இங்கு வந்ததால், அவன் குடித்த விஷத்தை நவபாஷான முருக பெருமானுடைய விபூதியும் சந்தனமும் முறியடித்துவிட்டது.இந்த விஷத்தை அருந்தினானே, அதுவே நவபாஷான விபுதியோடும், சந்தனத்தோடும் கலந்து நீண்ட காலமாக இருந்து வந்த அவன் நோய்க்கு நல்லதொரு மாமருந்தாக மாறிவிட்டது" என்றார்.

கண் பார்வைக்கு கொல்லிமலை மூலிகை:-

"நேத்திர தோஷ நிவர்த்தி புஷ்பம்" என்று ஒன்று மூணு வருஷத்துக்கு ஒரு முறை கொல்லி மலை காட்டில் விளையும்.  அந்த புஷ்பத்தை எடுத்து அதன் சாற்றை பிழிந்து தினமும் ஒரு சொட்டு கண்ணில் விடவும்.  தலையிலும் தேய்க்கணும்.  இதோடு வேறு சில மூலிகைச் சாற்றையும் அந்த கொல்லிமலைச் சித்த வைத்தியர் கொடுப்பார்.

இந்த வைத்தியத்தை சரியா தொண்ணூறு நாட்கள் செய்து வந்தால் போதும், கண் பார்வை துல்லியமாக தெரியும்.  கடைசிவரை ஆபரேஷன் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது.

அதர்வண வேதத்தை பற்றி:

அதர்வண வேதம் என்பது துஷ்ட தேவதைகளை கட்டுபடுத்தும் மந்திரங்கள் கொண்டது.  மேலும், மந்திர சக்தியால் நல்ல தேவதைகளை வரவழைத்து நல்ல காரியங்களை செய்வதாகும்.

ஒருவரை கெடுக்க நினைத்து செய்யப்படும் "பிரயோகம்" முதலில் எதிராளிக்கு வேகமாகச் செயல்பட்டாலும், அந்த குறுப்பிட்ட காலம் முடிந்தது, யார் இதை ஏவி விட்டார்களோ அவர்களை நூறு மடங்கு வேகத்தில் தாக்கும்.  இந்த தாக்குதல் படு பயங்கரமாக இருக்கும்.  இதற்க்கு மனோ பலம் வேண்டும்.  பயம் இருக்க கூடாது.  அதோடு யாருக்காக எந்த காரியத்தையும் செய்ய ஆரம்பித்தாலும், முதலில் தன்னை சுற்றி ஒரு வட்டம் போட்டு கொள்ள வேண்டும்.  இதை செய்ய தவறினால், அவர்களுக்கு பெரும் பதிப்பு ஏற்படும்.  

நட்டு சர்க்கரையில் அகத்தியரின் பரி பூரண அருள்:-

நாட்டுச் சர்க்கரையை கொஞ்சம் வாங்கி வரச்சொல்லி தன் மேஜையில் இருந்த டிராயரை திறந்து ஒரு மெல்லிய செப்புத்தகட்டில் ஒரு ஊசியை வைத்து இப்படியும் அப்படியுமாக கோடு போட்டார்.  பின்னர் அந்த நாட்டுச் சர்க்கரையை ஒரு இலை மீது வைத்து ஏதோ சொல்லி மந்திரித்து அதனை அந்த பெண்ணின் வாயில் போட்டு சிறிதளவு சாப்பிட சொன்னார்.

"நாட்டு சக்கரைக்கு அத்தனை விசேஷமா?"

 "ஆமாம்.  அதில் அகத்தியரின் ஜீவ மந்திரம் கலந்திருக்கிறதே.  அது தான் முக்கிய காரணம்".

அகத்தியர் அருளின் ஒரு பகுதி:-

"இன்றைக்கு அவர் பிறப்பிலே இஸ்லாம் மதத்திலே பிறந்திருந்தாலும், முன் ஜென்மத்தில் கொல்லி மலையில் சித்த வைத்தியனாக பல காலம் வாழ்ந்தவன்.  அப்போது அவனுக்கு கண்ணப்பன் என்று பெயர்.  அகத்தியனான எனக்கு கொல்லி மலையில் சிலை எழுப்பி பால் அபிஷேகம் செய்து மகிழ்ந்தான்.  கடைசிவரை சித்தனாக வாழ வேண்டும் என்று நினைத்தான்.  முடியவில்லை.

முன் ஜென்மத்தில் தன்னிடம் வைத்தியம் பார்க்க வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததால் அவனது பெயர் கெட்டது.  தொழிலும் கெட்டது.  கடைசியில் அவன் மரிக்கும் பொழுது அகத்தியனை நோக்கி வணங்கியதால் இந்த ஜென்மத்தில் மறுபடியும் பிறந்தான்.

சாகும் முன்பு "அடுத்த ஜென்மத்திலாவது அகத்தியன் கருணையோடு சித்த வைத்தியம், அதர்வண வேதம் சூட்சுமம் படித்து மக்களுக்கு உதவ வேண்டும்" என்று கேட்டான்.  அதற்கு அகத்தியனும் மனமிரங்கினோம்.  அதன் விளைவு தான் இன்றைக்கு எண்பத்தைந்து வயதிலேயும் இளம்காளை போல்துடிப்புடன் செயல் படுகிறான்.  அவனைபோன்ற குருபக்தி இருப்பவர்களுக்கு மட்டுமே நாலாயிரத்து பதினெட்டு வகை சூட்ச்சுமங்களை அகத்தியன் வழங்குவான்" என்று முடித்தார் அகத்தியர்.

எல்லோருக்கும் ஒரு தெளிவான எச்சரிக்கை:-

பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே.  அவனுக்கு பகவான் எந்தச் சமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது.  சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்".

சிதார் மாயம்:-

அது சரி, அப்புறமா அந்த கொல்லிமலை சித்தர்கிட்டே போனாயா?" என்றேன்.

"ஒரு தடவை போய் வந்தேனுங்க.  அதுல பாருங்க ஒரு ஆச்சரியம்.  நான் எங்கே அவரைப் பார்த்தேனோ, அந்த இடத்துல இப்ப குடிசையும் இல்லை - சித்த வைத்தியரும் இல்லை.  அக்கம் பக்கத்லே விசாரிச்சதிலே இதுவரை அங்கு குடிசை போட்டு எந்த வைத்தியரும் குடி இருக்கலைன்னு சொல்றாங்க.


போகரை காண்பதெப்படி

அன்றைக்கு மாடசாமியின் முன் தோன்றி மருந்து கொடுத்த அந்த சித்த மருத்துவர் யார்? என்ற கேள்வியை அகத்தியரிடம் பின்பு ஒரு நாள் கேட்டேன்.

"என் அருமை சீடன் போகன்தான் அவன்.  அகத்தியனின் வேண்டுகோளுக்கு இணங்க அவனே நேரில் வந்து கொடுத்த மருந்துதான் அது.  இது அவர்கள் செய்த புண்ணியம்" என்றார் அகத்தியர்.

அப்படி என்றால் எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்குமா?

"கிடைக்கும்.  போகன் இன்றும் கொல்லிமலையில் உலாவிக் கொண்டிருக்கிறான்.  உண்மையில் போகனை வணங்கிக்கொண்டு போனால் ஏதாவது வைத்தியர் வேடத்தில் போகன் வந்து மருந்து கொடுத்து அவர்களது உயிரைக் காப்பாற்றுவான்".

"அப்படி என்றால், எப்படி போகரை அடையாளம் கண்டு கொள்வது.  எல்லா வைத்தியர்களும் போகரைப் போன்றே காணப்படுவார்களே!  யார் உண்மையான வைத்தியன்? விளக்க வேண்டும்" என்றேன்.

"கண்களில் ஒளிவட்டம் பளிச்சென்று தென்படும்.  துளசி மணம் யாரிடத்தில் தோன்றுகிறதோ அல்லது ஜவ்வாது கலந்த விபூதியின் வாசனை யாரிடத்தில் தோன்றுகிறதோ அவன் தான் போகன்"

மற்ற வைத்தியர்கள் எல்லாம்?

"போகனின் சிஷ்யர்களாக இருந்து, இளம் வயது முதல் சித்த வைத்தியத்தில் கரை கண்டவர்கள்.  அவர்கள் தினமும் போகனை வணங்கியே வைத்தியம் செய்வதால், அந்த சித்த வைத்தியர்களுடைய மருத்துவமும் பலிக்கும்" என்றார் அகத்தியர்.


ராமர் தரிசனம்:-

"ராம பக்தர் ராமதாஸ் பற்றி அறிந்து இருப்பாய்.  அரசாங்க கஜானாவைக் கொள்ளைஅடித்து ராமபிரானுக்கு, ராமதாஸ் கட்டிய கோவில் இது.  இதனால் ராமதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அவர் செய்தது தவறு என்பதால் அதற்குரிய தண்டனையைப் பெற்றாலும், அவர், தன் மீது கொண்ட பக்தியைக் கண்டு மெச்சினார் ராமர்.  ராமதாஸ் இருந்த சிறைக்கு ராமர் வந்து மங்களகரமாக காட்சி கொடுத்த நாள் இன்று தான்."

ராமார் காட்சி கொடுத்த அந்த புனித நாளன்றும் கோதாவரியில் வெள்ளம் வெகுண்டோடியது.  அதே போல் இன்றும் எதிர்பாராத விதமாக வெள்ளம் ஓடுகிறது.  ராமதாசுக்கு காட்சி கொடுத்த பின்னர், சீதா, லட்சுமணன், அனுமன் சகிதம் அவர் இந்தக் கோவிலுக்கு வந்ததும் இதே தினத்தில் தான்.  அந்த புனிதமான நாளன்று உனக்கும் அந்த பாக்கியம் கிடைக்கட்டும் என்று தான் இங்கு வரவழைத்தேன்."

 இன்னும் ஒன்றை நாழிகையில் இங்குள்ள கர்ப்ப கிரகத்திற்குள் ராமார் அரூபமாக வருவதால், கண்ணை மூடிக் கொண்டு த்யானம் செய்.  எந்த விதக் காரணம் கொண்டும் கண்ணைத் திறக்காமல் ராமரையே நினைத்திரு.  உன் நினைவலையில் ராமார் வருவதைக் காணலாம்.

ஒரு நாழிகையே அவரது தரிசனம் இங்கு கிடைக்கும், பின்பு, படி வழியாக இறங்கும் ராமர், கோதாவரி தாய்க்கு பூக்களால் நமஸ்காரம் செய்வார்.  தீப ஆரத்தியும் கட்டுவார்.  அதையும் உன் த்யானத்தில் பார்க்கலாம்.  அந்த தீப வழிபாடு முடிந்த பின்னர், கோதாவரி அன்னையின் ஆவேசம் தணியும்.  நான்கு மணி நேரத்தில் வெள்ளமும் வடியும்.  பிறகு, நீ இறங்கிச் செல்லலாம்" என்று அகத்தியர் அருள் வாக்கு அருளினார்.

அகத்தியருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, ராமரை நோக்கி த்யானத்தில் ஆழ்ந்தேன்.

அகத்தியர் ஜீவா நாடியில் கூறியது போல், சரியாக ஒன்னரை நாழிகை ஆனதும் பூட்டியிருந்த கார்ப கிரகம் திறக்கப்பட்டது.  யாரோ உள்ளே செல்வது போல் தோன்றியது.  அபூர்வமான மலர்களின் வாசனை மூக்கை துளைத்தது.  வாசனை திரவியங்களுக்கு நடுவே வேத மந்திர கோஷம் மங்களமாக காதில் விழுந்தது.

ஆஜானுபாகுவான உருவம் மெல்ல, கருவறையிலிருந்து வெளியே வர, அதனை தொடர்ந்து மூன்று உருவங்கள் சட்டென்று வெளியேறியது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது.

கண்ணை மிக நன்றாக மூடிக் கொள்ள, ராம மந்திரம் தானாக என் நாவிலிருந்து வெளியே வந்தது.  பரவசமுடன் த்யானத்தை தொடர்ந்தேன்.

கோவில் கருவறையில் இருந்து வெளியே வந்த அந்த நான்கு பெரும் கோதாவரி நதிக்கரையில் நிற்பது போலவும், கோதாவரி அன்னைக்கு மங்கள ஆரத்தி கட்டுவது போலவும் என் மனக்கண்ணில் தோன்றியது.  சில வினாடிகள் கழித்து, அந்த காட்சி கண்ணிலிருந்து மறைந்தது, மெல்ல கண்ணைத் திறந்தேன்.

அகத்தியரின் அறிவுரை:-

நம்பிக்கையோடு செய்கின்ற காரியங்கள் அத்தனையும் வெற்றி பெரும்.  தீட்டு கலந்த பக்தி, தெய்வ நம்பிக்கை இல்லாத பக்தி; முழுமையான மனதோடு அன்னதானம் செய்யாமை; நடந்ததற்கும், நடந்து கொண்டிருப்பதற்கும், இனி நடக்கப்போவதற்கும் எல்லாமே இறைவன் என்ற எண்ணம் இல்லாமல் பேசுவது, செயல்படுவது போன்ற எண்ணங்களை, செயல்பாடுகளை எவனொருவன் விட்டு விடுகிறானோ அன்று முதல் அவன் அதிஷ்டசாலியாகிறான்.

அகத்தியர் அருளிய தண்டனை:-

இன்று முதல் இன்னும் இருபத்தேழு நாட்கள் நான் உன் கண்ணில் தோன்றி யாருக்கும் அருள்வாக்கு தரமாட்டேன். அதோடு மட்டுமின்றி அறுபடை வீடு தன்னை சுற்றிவந்து அங்கிருக்கும் எம்மை நோக்கி நூற்றி எட்டு தடவை விழுந்து நமஸ்கரிக்க வேண்டும். இப்படிச் செய்யாவிடில் இனி அகத்தியன் உன்னிடம் இருக்க மாட்டான் என்று சாட்டையடி அடித்தார்.
வேறு வழியின்றி நானும் அறுபடைவீடு சென்று விட்டு நூற்றி எட்டு தடவை ஒவ்வொரு கோவிலில் காணப்படும்  அகத்தியரை வணங்கி விட்டு வந்தபின்பு தான் அகத்தியர் என்னிடம் மீண்டும் வந்தார்.
அகத்தியர் உபதேசம்:-
யார் எந்த வீடிற்கு குடி போனாலும் முதலில் யாகம் செய்து விட்டுப் போவது தான் நல்லது.  இது எல்லோருக்கும் உகந்தது.  அதோடு மற்ற மதத்தினர் அவரவர் நம்பிக்கைகேர்ப்ப பிரார்த்தனை செய்வது உத்தமம் என்றார்.

பொதுவாக அகத்தியன் யாம், இப்படி பட்ட அதர்வண விஷயங்களை சொல்வதில்லை.  எமக்கும் அதில் பூரண நம்பிக்கையும் இல்லை.  ஏனெனில் பிரார்த்தனையை விட சக்தி எதுவுமில்லை.  அதர்வண வேதம் தான் உலகளாவிய சக்தி என்றால் கோவில், மசூதி, தேவாலயம் எதற்கு?  தேவையே இல்லை.  பெரும்பாலோரே இந்த மாதிரியான செய்வினை செய்வதில்லை.  அப்படி மீறிச் செய்பவர்களது குடும்பத்தினர் உருப்படியாக வாழ்வதில்லை, என்று சொன்னார்.

மேலும் அதர்வண வேதத்தைப் பற்றியும் அந்த யந்திரத் தகடு பற்றியும் தகவல் சொன்னதால் நாற்ப்பத்தைந்து நாட்களுக்கு தீட்டு வந்து விட்டது.  எனவே, நாற்ப்பத்தைந்து நாட்கள் தீட்டு முடியும் வரை யாருக்கும் எந்த விதப் பலனும் சொல்லப் போவதில்லை என்றார்.

நாற்ப்பத்தைந்து நாட்கள் ஓலைச்சுவடியை சோட்டனிக்கரை பகவதி ஆலயத்தில் கொண்டு வைக்குமாறும் எனக்கு ஆணை இட்டார்.  இதனைக் கேட்ட பிறகு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

அகத்தியரின் உதவி:-

"அன்னிக்கு நான் உங்க கிட்ட வந்த போது என் மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டு துடிச்சு போயிருக்க.  அப்போ யாரோ ஒரு சன்யாசியும், அவரது மனைவிய்ம் வீட்டுப் பக்கம் வந்திருக்காங்க.  என் குழந்தைகளை தள்ளி போகச் சொல்லி, அந்த சந்நியாசி மனைவி என் பெண்டாட்டிக்கு பிரசவம் பார்த்திருக்காக.  அந்த அம்மா கையைக் தொட்டதும் என் மனைவிக்கு பிரசவ வலி தெரியவில்லை.  எந்த விதமானக் குறையும் இல்லாம ஒரு பிள்ளைக் குழந்தை பிறந்திடிச்சு.  என் மனைவி உயிருக்கும் ஆபத்தில்லை.

இன்னொரு அதிசயத்தை கேளுங்க.

வாசலில் உட்கார்ந்து ஜெபம் பண்ணின அந்த சந்நியாசி சில பிரசவ மருந்துகளைப் பொட்டலம் பொட்டலமாகக் கட்டி கொடுத்திருக்காரு.  பிரசவம் முடிஞ்சதும் அந்த அம்மாவும், சந்நியாசியும் எந்த வித பிரதி உபகாரமும் வாங்காம போயிட்டாங்களாம்.  இப்போ சொல்லுங்க வந்தவங்க அகத்தியரும், லோப முத்திரையும் தானுங்களே" என்றான் மிக்க சந்தோஷத்துடன்.
தவறு செய்தவர்களுக்கும் திருந்தியதால்அருளும் அகத்தியர்:-
அந்தப் பெண்மணி பதினான்கு ஆண்டு காலம் சிறைத்தண்டனை பெற்று அதை அனுபவித்து விட்டு இப்போது தான் செய்த தவறுக்குப் புண்ணியம் தேடிக் கொள்ள அடிக்கடி அகத்தியரிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டு முதியவர்களுக்காக, அநாதைகளுக்காக ஆஸ்ரமம் நடத்துகிறார்.

300 வயது வாழ அகத்தியர் கூறும் வழிமுறை!!

நவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமல்ல என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று.இருந்தாலும் சித்தர்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயதுவரை வாழலாம் என்கிறார் அகத்தியர். எனினும் நீண்ட ஆயுளைத் தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடல் ...

அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக 
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே 

பொருள்: அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டுமாம். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும் என்கிறார். இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.

ஆன்மீகம் பொறாமை கூடாது

பகவான், மனிதர்களுக்கு மனதைக் கொடுத்தான். அதிலே எண்ணங்களை எழச் செய்தான். எண்ணங்களில் ஆசைகளைத் தோன்றச் செய்தான். ஆசையின் காரணமாக பாவங்களைச் செய்கின்றனர். பாவத்தின் காரணமாக பிறவி ஏற்படுகிறது. பிறப்பதும், பாவம் செய்வதும், மீண்டும் பிறப்பதுமே தான் தொழிலா? இதற்கு ஒரு முற்றுப்புள்ளி கிடையாதா? ஆசைகளை விட்டால் விடுதலை கிடைக்கும் என்று சொன்னார்கள். இதற்கு ஆசார்யர்களும், மகான்களும் தான் வழி காட்ட வேண்டும். அவர்களை அண்டினால் வழி பிறக்கும். ஆசை என்பது மட்டுமல்ல, பொறாமை என்பதும் கூடாது. இதை, “மாச்சர்யம்’ என்பர்.

“அவன் ஏதோ சவுக்கியமாக இருக்கிறான். அவன் செய்த புண்ணியம்…’ என்று நினைக்க வேண்டும். “அதுபோல் நமக்கு கிடைக்கவில்லையே…’ என்று மனம் வேதனைப்படக் கூடாது! நாம் முன்னுக்கு வர நல்ல வழியில் முயற்சி செய்ய வேண்டுமே அல்லாது பிறரைப் பார்த்து பொறாமைப் படுவதால் என்ன பயன்? அவர்களைப் போல் நாமும் இருக்க வேண்டும் என்று எண்ணி, தீய வழிகளில் ஈடுபட்டு, பணம், பொருள் சம்பாதித்தால், முடிவில் வேதனை தான் மிஞ்சும். “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து!’ இந்த மருந்து சிலருக்குப் பிடிக்காது; சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. என்ன செய்வது? காரணமின்றி ஒரு துவேஷம்! இது, இவனையே அழித்து விடும். யட்சப்ரச்னத்தில் துவேஷம் என்பதைப் பற்றி யட்சஸ் கேள்வி கேட்கும் போது, துரியோதனன் ஞாபகம் வருகிறது. துரியோதனனைப் பற்றி தர்மபுத்திரர் குறைவாகப் பேசுவார் என்று எதிர்பார்க்கிறது. அதனால், “மாச்சர்யம் உள்ளவன் யார்?’ என்று கேட்கிறது. தர்மபுத்திரரின் மனதில் துரியோதனனைப் பற்றிய ஞாபகமே வரவில்லை. துரியோதனனால் தான் தனக்கு இப்படி காட்டுக்கு வர நேர்ந்தது என்பதும் சொல்லவில்லை. “என் விதி வசத்தால் கானகம் வந்தேன்…’ என்றார். இது மகான்களின் நிலை, அடுத்து, “எது அகங்காரம்?’ என்று கேட்கிறது. தான், தனது என்ற எண்ணமே அகங்காரம் என்கிறார் தர்மர். “தானுள்ளது குழம்பு; தானற்றது ரசம்…’ என்கின்றனர். சமையலில், “தான்’ என்ற காய் இருந்தால் அது குழம்பு. அந்த தான் என்ற காய் இல்லாதது ரசம்!

“தான், தனது’ என்ற அகம்பாவம் உள்ளவரையில் ஒரு வித பற்றுதலும், ஆசையும் இருக்கும். இந்த இரண்டும் இருந்து விட்டால் மன அமைதி கெடும். மன அமைதி இல்லையேல் ஒரே குழப்பம்தான். மனம் குழம்பி விடுகிறதல்லவா? அதனால், “தான்’ இருந்தால் குழம்பு என்கின்றனர். இந்த “தான், தனது’ என்ற அகங்காரம் இல்லாவிடில், எதிலும் ஆசையோ, பற்றுதலோ இராது!

“நான், என்னுடையது என்று உலகில் என்ன சார் இருக்கிறது! ஏதோ அவன் கொடுத்தான்! வைத்துக் கொண்டிருக்கிறேன். அவன் எடுத்துக் கொள்வதானால் கொடுத்து விட வேண்டியது தானே…’ இப்படி ஒரு எண்ணம் இருந்து விட்டால் வாழ்க்கையே ரசமாக இருக்கும். பரமானந்தம் பெறலாம். அதனால், “தான்’ அற்றது ரசம் என்கின்றனர். குழப்பம் வேண்டாம். மனத் தெளிவு இருந்தாலே போதும்.

சஞ்சல மனதுடன் இருப்பவன் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? சதா சஞ்சலமும், குழப்பமும் இருந்தால் வாழ்க்கையை எப்படி ரசிக்க முடியும்? அதனால், “தான், தனது’ என்பது தான் அகங்காரம் என்பது தர்மரின் பதில். இதையெல்லாம் நாம் விவேகத்தோடு படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்! ஏனோதானோ என்று இருக்கலாமா? வாழ்நாள் என்பது ஒரு குறிப்பிட்ட குறுகிய காலம் தானே! நல்ல விஷயங்களில் மனதைச் செலுத்தி நல்ல பயன் பெற வேண்டாமா? இந்த ஜென்மாவில் இல்லாவிட்டாலும், ஏதாவது ஒரு ஜென்மாவில் ஞானம் பெற்று விடுதலை பெற வேண்டாமா? அதற்கு இதெல்லாம் அஸ்திவாரமாக அமையுமே! வீண் பொழுது போக்கினால் என்ன பயன்? யோசிக்க வேண்டும்! ***

ஆட்டிச குழந்தைகளுக்கு அருமையான சிகிச்சை!

ஆஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சரவணன், ஆனந்தி என இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. மற்ற குழந்தைகளைப்போல அல்லாமல் இந்தக் குழந்தைகள் பேசாமல், கூப்பிட்ட குரலுக்கு செவிமடுக்காமல் அமைதியாக இருந்தனர். குழந்தைகளுக்கு கேட்கும் திறனிலும் எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெரிந்தது. கடைசியில்தான் அந்தக் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு இருந்தது தெரிந்தது. ஆட்டிசத்துக்கு இதுவரை சிகிச்சை இல்லை. இந்தப் பாதிப்பு உள்ள குழந்தைகளை மேலை நாடுகளில், உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்த்துவிடும்படி அரசே பரிந்துரைக்கும்.

ஆனால், தன்னுடைய குழந்தைகளை அப்படி விட்டுவிட மனமில்லாமல், குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்க ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்கினார் சுப்பிரமணியன். வாழ்க்கையே வெறுத்த நிலையில், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குச் சென்றார். அந்த நேரத்தில்தான், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு, சென்னையில் ஹோலிஸ்டிக் தெரப்பி எனப்படும் பல்வேறு மருத்துவ முறைகள் மூலம் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படுவதைக் கேள்விப்பட்டார்.

உடனே தன்னுடைய வேலையை உதறிவிட்டு, குடும்பத்துடன் சென்னை வந்தார். இரண்டு குழந்தைகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. 3 ஆண்டு பயிற்சிக்குப் பிறகு குழந்தைகளுக்கு நல்ல முன்னேற்றம். தற்போது சுப்பிரமணியன் குடும்பத்துடன் ஆஸ்திரேலியா சென்றுவிட்டார். குழந்தைகள் சாதாரண பள்ளியில் சேர்ந்து படித்துவருகின்றனர். அங்கு நடத்தப்படும் போட்டிகளில் மற்ற குழந்தைகளுடன் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளனர்.

ஆட்டிசம் குழந்தைகளுக்கு ஹோலிஸ்டிக் முறையில் பயிற்சி அளித்து வரும் சென்னை அண்ணாநகரில் உள்ள டாக்டரின் ஓரியன்டட் ஆர்ட் ஆஃப் சிம்பயாடிக் ட்ரீட்மென்ட் அமைப்பின் (DOAST) இயக்குநர் டாக்டர் கார்த்திகேயனிடம் பேசினோம்.

'ஆட்டிசம் ஒரு குறைபாடுதான். இது மனநல நோய் இல்லை. இந்தக் குழந்தைகள் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி, அமைதியாக இருப்பார்கள். தன்னிலை மறந்து கோபத்தோடு தன்னையும், பிறரையும் தாக்கும்போது அந்தக் குழந்தையின் பெற்றோர் செய்வதறியாது திக்குமுக்காடிப் போய்விடுகின்றனர். இந்தப் பேச்சுத்திறன் மற்றும் நடவடிக்கைக் குறைபாட்டுக்கு 'மதி இறுக்கம்’ அல்லது ஆட்டிசம் என்று சொல்வோம். இயல்பில் இருந்து விலகிய நிலை என்று இதைச் சொல்லலாம்.

அமெரிக்காவின் கணக்குப்படி 125-ல் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளது. இந்தியாவிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான். ஆனால், விழிப்பு உணர்வு இல்லாததால், இந்தக் குழந்தைகள் அப்படியே விடப்படுகின்றனர். பெரியவர்கள் ஆகும்போது இவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம்.

ஆட்டிசம் குழந்தைகளுக்கு சமூகத்துடன் ஒட்டி வாழ்வதற்கான குணாதிசயத்தில் பாதிப்பு இருக்கும். பேச மாட்டார்கள், மற்றவர்களோடு கண் அசைவு போன்ற சைகை தொடர்பும் இருக்காது. கற்பனை உலகத்தில் இருப்பது போல விநோதமாக நடந்துகொள்வார்கள். அம்மாவின் கண்ணைப் பார்த்துக்கூடப் பேசமாட்டார்கள். கட்டி அணைக்கும் போது அதை விரும்பாமல் முதுகைத் திருப்புவார்கள். ஒரு குமிழிக்குள் இருப்பது போல தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு உலகத்தைவிட்டு விலகியே இருப்பார்கள்.

இதுதவிர, தங்களின் சுற்றுப்புறம், பொருட்கள் ஒரே மாதிரியாக இருக்க விரும்புவர். அதில் மாற்றம் ஏற்படுத்தினால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தேவைகளை வெளிப்படுத்தத் தெரியாது. சாதாரண பேச்சு வழக்கில் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வார்கள். காரணம் இல்லாமல் அழுவது, சிரிப்பது, வெறுப்பை வெளிப்படுத்துவது என்று இருப்பார்கள். அதிக துறுதுறுப்பாகவோ அல்லது அதிமந்தமாகவோ இருப்பார்கள்.

உங்கள் குழந்தைக்கு இதில் ஏதேனும் ஒரு பிரச்னை இருந்தால் உடனே 'நம்ம குழந்தைக்கும் ஆட்டிசம் பாதிப்பு இருக்குமோ’ என்று பயப்படத் தேவையில்லை. இத்தகைய குணாதிசயம் கொண்ட குழந்தைகளை டாக்டர்கள் பரிசோதித்து, மதிப்பீடு செய்த பிறகே முடிவு செய்ய முடியும். குழந்தைக்குப் பிரச்னை இருப்பதை ஒன்றரை, இரண்டு வயதிலேயே கண்டறிய முடியும். இந்தக் குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே தகுந்த பயிற்சிகள் அளித்து மற்ற குழந்தைகளைப்போல இவர்களையும் மாற்ற முடியும். ஆட்டிசத்துக்கு இதுதான் சிகிச்சை முறை என்று எதுவும் இல்லை. இதனால், எங்கே செல்வது என்று தெரியாமல் பெற்றோர் அவதிப்படுகின்றனர்.
1940-ல் இந்த நிலை கண்டறியப்பட் டது முதல் இதுவரை தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு சிகிச்சை முறைகள் பின்பற்றப்பட்டன. ஆனால், அவை எல்லாம் பெரும் பலனை அளிக்கவில்லை என்பதால், மாற்று மருத்துவ ஆராய்ச்சி தொடங்கப்பட்டது.

இந்தக் குழந்தைகளுக்கு மரபணுவில் இருக்கக்கூடிய செயல்பாடு குறைபாட் டால் (Genetic susceptibility) சுற்றுப்புற சூழலில் உள்ள மாசுக்கள் உணவுப் பாதையிலும், அதைத் தொடர்ந்து மூளையின் திசுக்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்னைகளைத் தூண்டும் காரணிகளைக் கட்டுப்படுத்தினால் பாதிப்பைக் குறைக்க முடியும் என்று கண்டறிந்தோம். 2004-ம் ஆண்டு முதல் இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவ முறைகளைப் பின்பற்றி சிகிச்சை அளிக்கிறோம்.
இந்தக் குழந்தைகளுக்கு உணவுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இவர்களுக்கு விலங்கிடமிருந்து பெறப்படும் பால், முட்டை என எதுவும் கொடுக்கக்கூடாது. அசைவம், கோதுமை உணவு உள்ளிட்டவற்றைத் தவிர்த்து விடுவோம். இதன்பிறகு உடலில் உள்ள நச்சுக்கள் ஆயுர்வேத முறைப்படி வெளியேற்றப்படுகிறது.  இதன்மூலம் திசுக்களுக்குப் புத்துணர்வு கிடைத்து புதுப்பித்துக்கொள்கின்றன. தினமும் ஆயுர்வேத சிகிச்சையுடன், சித்த மருந்துகள் அளிக்கப்படுகின்றன. மேலும், ஆக்குபேஷனல் தெரப்பி, பேச்சுப் பயிற்சி, குணங்களை மாற்றிப் பழக்கும் முறை போன்ற பயிற்சிகளை அளிக்கி றோம். இதன்மூலம் மூளைத் திசுக்கள் குணமாகி நல்ல பலனை அளிக்கிறது. சிகிச்சை தொடங்கிய சில வாரத்திலேயே மாற்றத்தைக் காண முடியும்.

ஆட்டிசம் குழந்தைகளின் பெற்றோர் அனைவருக்கும் 'நமக்குப் பிறகு நம் குழந்தையை யார் பார்த்துக்கொள்வார்கள்’ என்ற கவலை இருக்கும். ஆரம்ப நிலையிலேயே இந்தக் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம், குறைந்தது 18 வயதிலாவது அவர்கள் சுயமாக தங்கள் வேலையைச் செய்துகொள்ளும் அளவுக்கு நிலையை உருவாக்க முடியும். மற்ற குழந்தைகளைப் போல பள்ளிக்குச் சென்று படிக்க முடியும். இப்படி, அவர்களின் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் அனுபவித்து அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும்'' என்றார்.

 செய்ய வேண்டியவை
 ஆரம்பநிலையிலேயே கண்டறியுங்கள்.
 பிரச்னையை ஏற்று, ஆட்டிசக் குழந்தைகளுக்கு உரிய பயிற்சி அளிக்கவேண்டும்.
 இதற்கென உள்ள தனி பயிற்சி மையங்களை கண்டறிந்து சேர்க்கவேண்டும்.
 குழந்தையுடன் பெற்றோர் கூட்டு முயற்சியாக இணைந்து பிரச்னையை எதிர்கொள்ளவெண்டும்.

செய்யக்கூடாதவை
 குழந்தையின் பெற்றோர் ஒருவரை மற்றொருவர் குற்றம் சொல்லாதீர்கள்
 மற்றவர்களைப் பற்றி துளி கூட கவலைப்படாதீர்கள்
 புதிதாக மருந்து வந்துள்ளது என்று யாரோ சொல்வதைக் கேட்டு தேடி ஓடாதீர்கள்.
 உடனடியாக குணமாகும் என்று நம்பி ஏமாறாதீர்கள்.    

திருமண வாழ்க்கை சிறக்க

திருமணம் என்பதை ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள், காரணம் தலைமுறை தலைமுறையாய் சொந்த பந்தங்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத் தான்.

மேலும் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்ற பழமொழியும் உண்டு. இந்த வரத்தை கடைசி வரைக்கும் காப்பற்றுவதற்கும் ஆண்களுக்கு பொறுப்பும் உண்டு.

ஆனால் சில திருமணங்கள், காதல் திருமணமோ அல்லது பெற்றோர் மற்றும் சொந்தங்கள் முன் நின்று நடத்திய திருமணங்கள் கூட சில சமயத்தில் சரியான புரிதலும், அனுசரனையும், விட்டு கொடுத்தலும் இல்லாத காரணத்தால் நீதிமன்றம் வாயிலில் நிற்கின்றனர்.

பிரச்சினைகள் பெரும்பாலும் ஆண்கள் வழியாகவே வருகின்றது. கணவனது குடிப்பழக்கம், வேலையின்மை, வருமானமின்மை, கணவரின் தாய், தங்கை மற்றும் இதர பிரச்னைகள் போன்றவை அப்பெண்ணிற்கு வெறுப்பை உருவாக்குகிறது.

மேலும் திருமணத்திற்கு முன்பு கணவர் வீட்டார் கூறும் பொய்களும் விவாகரத்துக்கு மிக முக்கிய காரணியாக இருக்கின்றன.

இதே‌போல குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு ஒ‌த்து வராத பெ‌ண், குடு‌ம்ப சூ‌ழ்‌நிலை‌க்கு ஏ‌ற்ப மா‌ற்‌றி அமை‌த்து‌க் கொ‌ள்ளாத பெ‌ண், ஊதா‌‌ரி‌த்தன‌ம், பல ஆ‌ண்க‌ளி‌ன் சகவாச‌ம், குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு அட‌ங்காத பெ‌ண் போ‌ன்றவை ஆ‌ணி‌ன் மு‌ன் ‌நி‌ற்கு‌ம் ‌முக்கிய காரணியாக இருக்கின்றன.

பிரச்சினைகளை சாவல்களாக்குங்கள்: பிரச்சினை எதுவாக இருந்தாலும் முதலில் கோபப்படமாலும், பதட்டபடாமலும் இருந்து இருவரும் ஒன்றே நின்று சமாளிக்க வேண்டும்.

இதைதவிர்த்து அப்பிரச்சினைக்காக உங்களுக்குள்ளே(கணவன்-மனைவி) மோதிகொண்டால் பிரச்சினை இன்னும் பெரிதாகுமே தவிர பிரச்சினை தீராது. எனவே பிரச்சினைகளை ஆரம்பத்திலயே இருவரும் மனம் விட்டு பேசி தீர்த்தால் இல்லறம் என்றும் சந்தோஷம்தான்.

விட்டு கொடுங்கள்: இன்றைய காலக்கட்டத்தில் விட்டுகொடுத்து போவது என்பது இல்லை, இதனாலேயே பல ஜோடிகள் விவாகரத்து கேட்கின்றனர். விட்டு கொடுங்கள், ஒருவர் கோபமாக இருக்கும் போது மற்றொருவர் அமைதியாக இருங்கள், அச்சமயம் வார்த்தைகள் நீள்வதும் குறையும், பிரச்சினையும் குறையும்.

இதற்கு மாறாக இருவரும் ஒரே சமயம் கோபப்பட்டால் அது வளர்ந்து விவாகரத்து வரைக்கும் போகும். நிதிமன்றத்தில் விவாகரத்து இன்று கேட்டவுடன் நாளை கொடுத்து விடுவதில்லை, நீதிமன்றமும் ஜோடிகளை சேர்த்து வைக்க சில முயற்சிகளை எடுக்கும், சில பல ஆலோசனைகள் மூலமாக. ஆனால் சிலர் விவாகரத்து வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தால் நீதிமன்றம் விவாகரத்து வழங்குகிறது.

ஆனால் வாழ்க்கையில் விட்டு கொடுத்து வாழ்வதில் இருக்கும் சந்தோஷம் வேறு எங்கும் இல்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

அன்பு/ அரவணைப்பு: ஒரு நாளைக்கு ஒரு முறையாவது I LOVE YOU சொல்லுங்கள். தவறு செய்தால் ஒத்துக் கொள்ளுங்கள், அதற்காக மன்னிப்பும் கேளுங்கள். நடந்த தவறுகளை சுட்டி காட்டாதீர்கள். அன்புடன் விமர்சியுங்கள் மற்றும் மேலும் சில ரொமான்ஸ்களை செய்யுங்கள்.

அன்பு, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல், மனம் விட்டு பேசுதல் இவற்றை பின்பற்றி பாருங்கள். இல்லறம் என்றும் சந்தோஷம்தான்.

மூளையைத் தூங்க விடாதீர்கள்!

மூளையைத் தூங்க விடாதீர்கள்!
**********************************

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்

இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.

ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.

இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.

இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.

ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.