Friday, November 9, 2018

எண்ணங்களும் உணர்வுகளும் ( By Dr M.S.Uthayakumar )

நமது செயல்களின் ஆரம்பம் நமது எண்ணங்கள்,நமது எண்ணங்களின் பிறப்பிடம் நமது மனம்.

ஆகவே நமது மனத்தை நம் வசத்தில் வைத்திருக்க வேண்டும் அதன் உள்ளே புகும் எண்ணங்களையும் ஆசைகளையும் பற்றி நாம் சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

நம் மனதில் நல்லெண்ணங்களை,ஆரோக்கியமான எண்ணங்கள்,பொறாமை நிறைந்த எண்ணங்களையும்,கெட்ட எண்ணங்களையும் நம் முள்ளே விடுவதன் மூலம் நமக்கு நாமே தண்டனை கொடுத்துக் கொள்கிறோம்.


வாழ்வில் துயர்,துன்பம் இல்லை என்று சொல்லிவிடமுடியாது
புத்திசாலித்தனம் என்பது வாழ்க்கையை சந்தோசமாக அமைத்துக்கொள்வது.
மனப்பழக்கம்- ஒவ்வொரு முறையும் நடக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் அறிவு பூர்வமாக ஆராய்ந்து 'ஏன்?','எப்படி?' என்று கேட்டுப் புரிந்து கொள்ளும்போது நமது மன இயக்கத்தை நம் கைக்கு கொண்டு வருகிறேம்.

"திருத்தக் கூடியவற்றை திருத்தும் தைரியம்"
 "திருத்த முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம்"
இப்படியாக  நமது எண்ணங்களையும் உணர்வுகளையும் பக்குவப்படுத்திக்கொள்ளலாம்

"குறை சொல்லுவது தன்னம்பிக்கையில்லாதவர்களின் கடைசிப்புகலிடம்"

வெற்றியின் படிமுறைகள்


நமது வாழ்வில் அன்றாடம் எத்தனையோ பல விதமான பிரச்சனைகளை சந்திக்கின்றோம் அவற்றில் எத்தனை வீதமானவைனளுக்கு நிரந்தரமான தீர்வு பெறப்பட்டிருக்குமென்று பார்த்தால் பூச்சியமே விடையாகவிருக்கும்.

இது ஏன்? என்ன காரணத்தினால் ?.

அதீக நம்பிக்கை
சோம்பல்த்தனம்
அலட்ச்சியப்போக்கு


சரி எப்படி வெற்றியை தனதாக்கிக்கொளுவது என்று பார்ப்போம்.

மனதை சற்று தளர்வாக வைத்துக்கொள்ளவும் (உ-ம் தேநீர் அருந்துதல்)
பிரச்சனையை என்னவென்று அலசினால் கிட்டத்தட்ட 20 வீதத்தினை குறைக்கலாம்
மீதி 80 வீதத்தினையும் நிவர்த்தி செய்வதற்கு மிகத் தெளிவாக ஒரு தாளில் பிரச்சனைக்குரிய காரணம் ,தீர்க்கும் வழிமுறைகள் என தங்களுக்கேற்றவாறு அட்டவனை ஒன்றை போட்டுக்கொள்ளுங்கள்
இவ்வட்டவனையை மேலோட்டமாக இரண்டு மூன்று தரம் ஆராய்ந்து பார்த்தால் பிரச்சனைக்குரிய அடிப்படைக்காரணத்தை கட்டாயம் அறியலாம்
இப்பொழுது பிரச்சனை ஒரு நெல்லிக்காயளவு இருப்பதை உணர்வீர்கள்.இதனை தீர்க்கும் வழிமுறைகளைளும் தெளிவாக வடிவமைக்கப்பட்டுவிடும்
வெற்றியானது உங்களுக்கு இலவசமாகவும் நிரந்திரமாகவும் கிடைத்துவிடும் 
ஆகவே மேற்சொல்லப்பட்ட படி முறையானது அநுபவத்தில் இருந்துபெறப்பட்டதாகும்

நம்பிக்கை

நம்பிக்கை
இது ஒருவித மனநிலை சார்ந்த விடயமாகும்,

அதாவது ஒருவர் மீது அல்லது ஏதோ ஒன்றின் மீது வைக்கும் அதிதீவிர ஆசையை உண்மை என நம்புகையில் நம்பிக்கை எனும் உணர்வு மனித மனங்களில் உதயமாகிறது.
சில வேளைகளில் இவ் நம்பிக்கை உண்மையாகவே அல்லது பொய்யாகவே இருக்கலாம்.
ஆகவே நம்பிக்கையானது விஞ்ஞான முறைப்படி ஏற்றுக்கொள்ளபடவேண்டுமென்பதில்லை. இது ஓவ்வொருவருக்கும் வித்தியாசமாகவிருக்கும்.

இதனால் எது சரி எது பிழை என எமக்கு மிகநெருக்கமானவர்கள் எடுத்துக்கூறும்போது  நாம் அவர்களிடம் கோபப்படுவதுண்டு அல்லது அதனை பகுர்த்துபாக்கும் மனநிலையையும் இழந்துவிடுகிறேம்.

படிப்பறிவால் கற்றுத்தெளிந்து அதன் மூலம் பகுத்து அறிவதே சரியென நம்பும் கொள்கையும் ஒரு நம்பிக்கையே ஆகும்.

இதற்கான காரணங்கள் யாதெனில்

1.   அவரவர் பிறக்கும்,வளரும், வாழும், சூழல் மற்றும் சமூகம்
2.   சந்தர்ப்ப சூழ்நிலை
3.   பகுத்தறியும் தன்மை அற்றநிலை
4.   ஏன் நமது நம்பிக்கைகள் மற்றவர்களுக்கு மூடநம்பிக்கையாயிருத்தல்
5.   மதம் சார்ந்த நம்பிக்கைகள்
6.   ஆழ்மன பதிவின் வெளிப்பாடாதிருத்தல்

நம்பிக்கை சம்பந்தமான தத்துவ சிந்தனைகள்
·         உன்மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுள் நேரில் வந்தாலும் பயனில்லை- சுவாமி விவேகானந்தர்
·         எல்லோரையும் நம்புவது பயங்கரமானது ,எல்லோரையும் நம்பாமலிருப்பது அதிபயங்கரமானது- முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்
·         என்னிடம் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள் -நான் வெற்றியடைய என் நம்பிக்கை மட்டும் போதும்-மாவீரன் நெப்போலியன்
·         விட்டுவிடுங்கள் என உலகமே சொல்லும் போது 'நம்பிக்கை' மெதுவாக உச்சரிக்கும் இன்னுமொரு முறை முயற்ச்சித்து பார்
·         பொய் சொல்பவரை நம்பாதீர்கள் ஆனால் உங்களிடம் நம்பிக்கை வைத்திருப்பவரை ஒருபோதும் ஏமாற்றாதீர்கள்

வாழ்க்கை வாழ்வதற்க்கே

வாழ்க்கை வாழ்வதற்க்கே   என்பதை  சிறு உரையாடல் மூலமாக விளக்கப்பட்டுள்ளது

மகிழ்ச்சி + ஒழுக்கம் = வாழ்க்கை

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் திடீரென இறந்து போனான். அவன் அதை உணரும் போது, கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.

கடவுள்‬:
"வா மகனே.
நாம் கிளம்புவதற்கான
நேரம் வந்து விட்டது."

மனிதன்‬:
இப்பவேவா?
இவ்வளவு சீக்கிரமாகவா?
என்னுடைய திட்டங்கள்
என்ன ஆவது?

கடவுள்:
மன்னித்துவிடு மகனே.
உன்னைக் கொண்டு
செல்வதற்கான நேரம் இது.

மனிதன்:
அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?

கடவுள்:
உன்னுடைய உடைமைகள்.

மனிதன்:
என்னுடைய உடைமைகளா!
என்னுடைய பொருட்கள்,
உடைகள், பணம்,
எல்லாமே இதில் தான்
இருக்கின்றனவா?

கடவுள்:
நீ கூறியவை அனைத்தும்
உன்னுடையது அல்ல. அவைகள் பூமியில்
நீ வாழ்வதற்கு தேவையானது.

மனிதன்:
அப்படியானால்,
என்னுடைய நினைவுகளா?

கடவுள்:
அவை காலத்தின் கோலம்.

மனிதன்:
என்னுடைய திறமைகளா?

கடவுள்:
அவை உன் சூழ்நிலைகளுடன்
சம்பந்தப்பட்டது.

மனிதன்:
அப்படியென்றால் என்னுடைய
குடும்பமும் நண்பர்களுமா?

கடவுள்:
மன்னிக்கவும். குடும்பமும் நண்பர்களும்
நீ வாழ்வதற்கான வழிகள்.

மனிதன்:
அப்படி என்றால்
என் மனைவி மற்றும் மக்களா?

கடவுள்:
உன் மனைவியும் மக்களும்  உனக்கு சொந்தமானவர்கள் அல்ல, அவர்கள் உன் இதயத்துடன்
சம்பந்தப்பட்டவர்கள்.

மனிதன்:
என் உடலா?

கடவுள்:
அதுவும் உனக்கு
சொந்தமானதல்ல.
உடலும் குப்பையும் ஒன்று.

மனிதன்:
என் ஆன்மா?

கடவுள்:
அதுவும் உன்னுடையது அல்ல. அது என்னுடையது.

மிகுந்த பயத்துடன்
கடவுளிடமிருந்து
அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன்,
காலி பெட்டியைக் கண்டு
அதிர்ச்சியடைகிறான்.
கண்ணில் நீர் வழிய
கடவுளிடம்,
"என்னுடையது என்று
எதுவும் இல்லையா?
எனக் கேட்க,
கடவுள் சொல்கிறார்,
அதுதான் உண்மை. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே
உன்னுடையது.

*வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.*

ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய்.

எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே.

ஒவ்வொரு நொடியும் வாழ்.

உன்னுடைய வாழ்க்கையை வாழ்.

மகிழ்ச்சியாக வாழ்
அது மட்டுமே நிரந்தரம்.

உன் இறுதிக் காலத்தில்
நீ எதையும் உன்னுடன்
கொண்டு போக முடியாது.

*வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். அதே நேரம் ஒழுக்கத்துடன் வாழ்வோம்.*

விடாமுயற்சி தத்துவங்கள்


விடாமுயற்சி எனும் செயலின் இறுதிவடிவம் வெற்றியாகும்.இவ் வெற்றிக்கனியை அடைவதற்கு இலட்சியம் எனும் ஒளி எவ்வித தடையுமின்றி பிரகாசமாக இருத்தல் மிக மிக அவசியமானதாகும்.
ஆனால் விடாமுயற்சியானது இவ்வுலகில் வாழும் உயிருள்ள அனைத்திற்கும் பொதுவானதாகும்.(சில உயிரற்றவற்றுக்கும் பொருந்தும்)
இதற்கு சில உதாரணங்கள் சில

தேனீகளின் தேன் சேகரிக்கும் விடாமுயற்சி
கடலலையின் விடாமுயற்சி
தாவித் தாவி வளரும் கொடிவகைகள்(வெற்றிலை,பாகற்கொடி.....)
புற்று கட்டுவதில் கறையானின் விடாமுயற்சி.
அறிவாற்றலை பெருக்குவதை விடாமுயற்சியாகக்கொண்டு பல கண்டுபிடிப்புக்களை உலகிற்கு வழங்கியவர்கள்(தோமஸ் அல்வா எடிசன், ஜன்ஸ்டைன்....)
மனதை கூர்மையாக்குவதை விடாமுயற்சியாக மேற்கொண்டு பல சூட்மங்களுக்கு விடை கண்டுபிடிக்கப்பட்டமை (யோகா)
இப்படியாக இறந்தகாலத்தில் நடந்தவற்றை உதாரணமாகக் கொண்டு விடாமுயற்சிக்கு விளக்கங்கள் கொடுக்கலாம் இதனால் என்ன பயன் இருக்கிறது,? 

உதாரணமாக மனிதனை எடுத்துக்கொண்டால் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான  இலட்சியங்கள் உள்ளன ஒரு சிலரே மாத்திரம் இலட்சியத்தை விடாமுயற்சி மூலம் வெற்றியடைகின்றனர் மற்றவர்கள் தோல்வியை சந்திக்கின்றனர். ஒரு கேள்வி ஏன்? இவர்களும் விடாமுயற்சியினால் வெற்றியடையலாமே?

தேடிப்பார்த்ததில் சில காரணங்கள் தெளிவாகப்பட்டது அவை.....
ஒருவருடைய ஜாதகப்பலன்-கிரகமாற்றங்களின் விளைவுகள் (விஞ்ஞானத்தில் எடுபடாதவை)
அனுபவம் இல்லாமை
வறுமை
தோல்வி மனப்பான்மை.
சேம்பேறித்தனமான உழைப்பு.
இலட்சிய ஒளி பிரகாசிக்காமை.
திறமையான ஆசிரியர்கள் வளம் இல்லாமை.
சூழ்நிலைகள்
நேரத்தின் வலிமை தெரியாமை
புகழ்ச்சிக்கு அடிமையாதல்
இப்படியாக பல காரணங்கள் உள்ளன .

விடாமுயற்சியின் கணித சமன்பாடு
பயிற்சி+விடாமுயற்சி =வெற்றி

எப்படி இருப்பினும் விடாமுயற்சியினால் அனைவரும் வெற்றியடைந்தால் ????? 

விடாமுயற்சி விடாமுயற்சியும் உடலுறுதியும் உறுதியாக இருந்தால் ஏணியில் ஏறுவதும் இறங்குவதும் இலகுவாகும்

வாழ்க்கை தத்துவம் / வாழ்க்கை என்றால் என்ன?

வாழ்க்கை தத்துவம்
தற்போதுள்ள மனித அறிவின் படி ஒரே ஒரு தடவைதான் எமது வாழ்கையாகும்.இவ்வாழ்க்கையானது ஒரு குறுகிய காலப்பகுதியை வரையறையாக கொண்டுள்ளது.(ஒவ்வொரு மனிதனுக்குமான இக்கால அவகாசம் சமமாக இருப்பதில்லை) இக்கால இடைவெளிக்குள் ,

வாழ்க்கை என்றால் என்ன?

ஏன் வாழவேண்டும்?

ஏன் உறவுகளை மதிக்க வேண்டும்.?

ஏன் உண்மையாக இருக்கவேண்டும்?

யாரை முழுமையாக நம்புவது?

ஏன் கோபம் வருகிறது? ஏன் சிந்திக்கின்றோம்?

எதுவும் சில காலம் தான் எனத் தெரிந்தும் பொறாமைப்படுகிறோம்?

எப்படியோ ஒரு நாள் உடலை மண்ணுக்கு கொடுக்க இருக்கிறோம், ஏன்?

இப்படியாக பல கேள்விகள் வாழ்க்கை சம்பந்தமாக எழுகின்றன?

வாழ்கை சம்பந்தமான கேள்விகளுக் விடையை பார்ப்போமானால்மனம் இதன் பிரதிபலிப்பே வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலைக்கும் நேரடியாகவே அல்லது மறைமுகமாகவே இருந்துள்ளதென்பதை அறியமுடிகிறது. இவ்வுலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் வெற்றியை நேக்கியே தங்களுடைய அன்றாடபொழுதைக்கழிக்கிறார்கள். ஆனால் பல சோதனைகளுக்கூடாக வெற்றியும் தோல்வியும் மாறி மாறி  வருவதை நன்றாக அவதானிக்கமுடிகிறது. இதில் மனத்தின் வேலை என்ன?  வாழ்கையில் வரும் சோதனைகளை மனம் கையாளுகிற விதத்தைப்பொறுத்து  வெற்றியே தோல்வியே அமைகிறது. எப்படி என்றால்?
எந்தவொரு சோதனைக்கும் மனம் முதலில் எதிர்மறையான முடிவையே எடுப்பதே காரணமாகும்.இதனால் நிச்சயமாக வாழ்கையில் முன்னேறமுடியாது மனமானது நேர்மறையாக வரும் சோதனைகளை சிந்தித்தால் எந்தவொரு சோதனையையும் துனிந்து செய்யலாம்.இதனால் வெற்றியடைவது நிச்சயமாகும் சில வேளைகளில் நமக்கும் விதிக்கும் நடக்கும் விளையாட்டே வாழ்க்கை எனப்படுகிறது. ஆகவே மற்றவர்கள் ஊக்கபடுத்தவேண்டும் என்ற சிந்தனையை அகற்றிவிட்டு. மனதில் எழும் பிரச்சனைகளை ஆராய்ந்து நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக்கொண்டால் ,நமது மனம் எப்பொழுதும் வெற்றிப்பாதைக்கு நல்ல வழிகாட்டியாகவிருக்கும். வாழ்க்கை வாழ்ந்ததுக்கான அர்த்தம் இருக்க வேண்டு மெனில், வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்

மனிதர்கள் பல வண்ணங்களில் படைக்கப்பட்டாலும், அவர்களில் நல்ல எண்ணங்களை படைத்தவர்களே அழகானவர்கள்......

வண்ணங்கள் இல்லை வாழ்க்கை 
மன எண்ணங்கள்தான் 
உண்மையான வாழ்க்கையாகும்.

இறுதியாக மனத்தின் செயல்பாடுகளினாலேதான் வாழ்கை தத்துவம் தங்கியுள்ளது.ஆகவே மனத்தினை அடக்கி ஆரோக்கிமாக வைத்திருக்கப் பழகிக்கொண்டால் வாழ்கையின் தத்துவம் நன்றாக விளங்கும்.

வாழ்க்கையில் இந்த மூன்று பேரை மட்டும்
எந்நாளும் மறக்காதீர்கள்.

1. கஷ்டமான சமயங்களில் உதவியவர்.

2. கஷ்டமான சமயத்தில் விட்டு சென்றவர்.

3. கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளியவர்..!

வாழ்க்கை தத்துவத்தின் பொன்மொழிகள்
"வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதே.... உன் நிழல் கூட வெளிச்சம்  உள்ளவரைக்கும் தான்  துணைக்கு வரும்...

வாழ்க்கை தத்துவங்கள்....

அறிந்ததை உலகுக்கு சொல்வோம்!! அறியாததை அறிந்து சொல்வோம்!!

வாழ்க்கை தத்துவங்கள்....


புரியாத வார்த்தை இருந்தும் பயன் இல்லை! புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயன் இல்லை....

அழுது நீ கோழையாகாதே! உனக்கு நண்பன் நீயே! உன்னை காப்பற்ற வருபவர் எவர் உளர்? நீயே உன் காவலன்....ஆதலினால் யாரையும் எதற்கும் எதிர்பார்க்காதே!

உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்! ஆனால் எல்லைக்குள் ஒரு போதும் வாழ்க்கையை அமைத்து விடாதே....!

* இதுவரை ஆராய்ச்சிக்கு உட்ப்படுத்தாத ஒன்று எது தெரியுமா அன்பு. காரணம் அன்பென்றால் அகிலமும் அடங்கிவிடும் என்பதனால்.

*ஒருவனின் வார்த்தை தரும் வலியை விட அவன் செய்யும் செயலின் வலி அதிகம்.

* அன்பானவர்களிடம் உன் மனதை மறைத்து விடாதே. உன் மனதில் உள்ளதை மறைப்பதாயின் அன்பாய் இருப்பது போல் நடித்து வாழாதே.

* கற்பனையில் சித்திரத்தை வரைந்து விடலாம், ஆனால் ஒருவனின் மனதை புரிந்து கொள்ளாமல் நண்பன் ஆகி விட முடியாது.

* ஒரு மனிதனின் அதீத அன்பானது தாயிடம் மட்டுமே உள்ளது..

* ஒன்றை நாம் பார்க்கும் விதத்தில் அது சரி தப்பு என்று முடிவு எடுத்து விடுகிறோம். அதை நாம் எப்போது சரியா தவறா என்று ஆராய்ந்து பார்ப்பதில்லை அப்படி நாம் ஆராய்ந்து பார்த்து விட்டால் சந்தேகங்கள் மனிதர் இடையே தோன்றாது.

* ஆயிரம் தடவை உன் சந்தேகத்தை நேரே கேள் அது சிறிய கோபத்தை உருவாக்கும் ஆனால் பதில் கிடைத்து விடும், ஆனால் உன் சந்தேகத்தை நேரே கேட்க்காமல் உன்னுள் வைத்து மறை முகமாய் ஒருவனைக் காயப் படுத்தாதே அது உனக்கு எல்லையற்ற துன்பத்தை தந்துவிடும்...

* இழப்பு அல்லது பிரிவின்றி எவரும் ஒன்றின் அருமையை உணருவதில்லை.

* நான் என்று சொல்லும் போது எனது அகத்தில் இருப்பதையே கூறுகிறோம், எனது என்று சொல்லும் போது எனக்காக புறத்தில் இருப்பதை கூறுகிறோம். இதை எல்லாம் தாண்டி நாம் என்று கூறும் பொழுதே வெளியில் எமக்காக காத்திருக்கும் வாழ்க்கையைப் பெற்றுக் கொள்கிறோம்.

* மனிதனாய் பிறந்து மிருகத்தின் குணத்தைக் கொண்டிருப்பதை விட. மிருகமாய் பிறந்து அது தன் இனத்தின் மீது காட்டும் அன்பு போல் காட்டி வாழ்ந்து விடு மனிதா!

* நிஜங்கள் பலவற்றை கண்ணெதிரே தொலைத்து விட்டு இருளெனும் கனவில் தேடுகிறேன். நீண்ட நாட்களாக, பல மாதங்களாக, சில வருடங்களாக....

* கல்லைச் சலவை செய்யும் அருவியே இந்த மனிதனின் மனதையும் ஒரு முறை சலவை செய்து விட்டு செல்வாயா?.

* மனதில் பூக்கும் மல்லிகை பூ அன்பு. அதனைத் தூக்கி குப்பையில் போட்டால் கூட நறுமணம் வீசும்.

* ஆயிரம் தடவை யோசித்து முடிவெடுப்பதை விட எடுத்த முடிவில் நிரந்தாரமாய் இருப்பதே அழகு.நேரத்திற்கு தகுந்த மாதிரி செயற்ப்படாதே.

* திட்டமிடல் வாழ்கையில் அவசியாமாய் இருக்கிறது, ஆனால் திட்டமிட்டபடி வாழ்வு செல்லாவிடின் வெறுப்பு ஏற்படுகிறது. உங்கள் அத்தியாவசியத் தேவைக்கு திட்டமிடுங்கள் வாழ்க்கையை திட்டமிடாதீர்கள்.

* ஆயிரம் பேரின் கண்கள் உன்னை நோக்கினாலும் இரு கண்கள் மட்டுமே என்றும் உன்னை அன்பாக நோக்கும் உன்னைப் பெற்றவள், நீ அவதரிக்க காரணமாய் இருந்தவர்.

* கோபம் வருகின்ற பொழுது வார்த்தையின் அளவுகள் அதிகரிக்கின்றன. அன்பானவர்களைக்(அன்பானவரைக்) கூட எதிர்த்து விடுகின்றது..

* கெட்டவனாக இருந்து கொண்டு நல்ல பெயர் எடுப்பதைவிட.. நல்லவனாய் இருந்து கெட்ட பெயர் எடுப்பது எவ்வளவோ மேல்..

* கடற்கரையில் இருக்கும் கப்பலை விட கடலினுள் இருக்கும் படகின் பெறுமதி அதிகம். அது போல் மனிதா நீ உருவாக்கும் பொருள் உபயோகாமானால் சிறப்பு.

* பெருங் கடலுக்கு எல்லை சிறிய நிலப்பரப்பு..உனக்கு எல்லை உனது பெற்றோர்.

கடல் எல்லையைத் தாண்டினால் நிலம் அழிந்துவிடும். நீ எல்லையத் தாண்டினால் நீ அழிந்து விடுவாய்.

* தந்தையின் நம்பிக்கை இருக்கும் வரை தனயன்(மகன்) வழிதவறான்.

தாயின் அன்பு இல்லையானால் தனபதியாய்(குபேரன்) இருந்தும் பயன் இல்லை.

சகோதரர் துணையிருப்பின் ஒரு போதும் தனியன்(தனித்த ஆள்) ஆகான்.

இத்தனையும் என்னிடம் உண்டு... உன்னிடம் உண்டா??

* வாழ்ந்தவனுக்கு அனுபவம் பதில் சொல்லும்

வாழ்பவனுக்கு காலம் பதில் சொல்லும்

வாழப் போறவனுக்கு மனம் பதில் சொல்லும்.

* அன்பின் ஆழம் தெரியாத மனிதா.

நீ உன் தாயின் அரவணைப்பை அறிந்திருக்க மாட்டாய்.

நட்பின் ஆழம் தெரியாத மனிதா.

நீ உன் தந்தையின் பாசத்தை அறிந்திருக்க மாட்டாய்.

காலப் போக்கில் உன் வாழ்வே தெரியாது இருந்து விடுவாய்....

* கண்ணை மூடும் போது தூங்குகிறோம். கண்ணைத் திறக்கும் போது எழுகிறோம். அது போல் விழுகிற போது எழுந்துவிடு எழும் போது விழுவது சகஜம் அதற்காக விழுந்த படியே இருந்து விடாதே..

* குறை உடலில் இருந்தால் அதை நீ பொருட்ப்படுத்தாதே. உள்ளத்தில் உள்ளதா முதல் அதை நிவர்த்தி செய்து விடு நீ உன்னை நேசிப்பாய் பின் மற்றவர்கள் உன்னை நேசிப்பர்.

* கனவு இல்லம் கனவாகலாம்... ஆனால் இல்லம் ஒரு போதும் கனவாகி விடக்கூடாது..

* இமைகள் திறக்கின்றன நீ பார்ப்பதற்கு, இமைகள் மூடிவிட்டால் பார்வையை இழந்துவிடுவாய்

உதடுகள் திறக்கின்றன மனதில் இருப்பதை வெளியிட, உதடுகள் மூடிவிட்டால் உமையாகிவிடுவாய்.

பிரிவுகள் ஏற்படும்போதே நீ வெளிச்சத்தை சந்திக்கிறாய் வாழ்வில்.

* ஒருவன் எப்பொழுது தனக்கு ஏற்படும் தடைகளையும் துன்பங்களையும் கருத்திற்க் கொள்ளாமல் வாழ்கிறானோ அவனே வாழ்வில் நிறையத் தோல்விகளைச் சந்தித்தவனாவான். வெற்றி பெற்றவன் துன்பத்தையும் தடங்களையுமே வாழ்வில் கொண்டவனாக இருப்பான். பல தடவை தோற்றுவிடு நீ உன் வாழ்வை வென்று விடுவாய்.


* காற்றின்றி படகுகள் அசைவதில்லை

தாயே நீ இன்றி எனக்கு முன்னேற்றம் ஏது?

கடல் அலையே அசையாதிருக்கும் படகை மூழ்கடிக்காதே.

* உனக்கு ஒரு பொருள் பிடித்திருந்தால் உன் பெற்றோரைத் தானே முதல் கேட்க்கிறாய்.. என் நீ வளர்ந்த பிறகு அவர்களிடம் கேட்பதை விட்டு உன்வழி போகிறாய். நீயும் ஒரு நாள் பெற்றோர் ஆவாய் என்பதை மறந்து விட்டாயோ?...

* பெற்றோரின் பெறுமதி என்ன தெரியுமா? நீ வாழும் வரை அவர்களுக்கு துன்பம் கொடுக்காது அவர்களது மரியாதையை இழக்க விடாது காப்பது. இல்லையேல் உன் பெறுமதி உன்னை விட்டு சென்று விடும்...

* காதலிப்பதால் ஏற்படும் நன்மையை விட அக் குறுகிய காலத்தில் ஏற்றப்படும் தீமை அதிகம்...நான் காதலித்தவனும் அல்ல காதலிப்பவனும் அல்ல..

* கனவே உன் கடலில் என்னை முழ்கடித்து விடாதே எனக்கு நீந்த தெரியும். அவ்வாறு நான் நீந்தித் தப்பி விட்டால் நீ தோற்று விடுவாய்.

* நம்பிக்கை நற்கனவை நனவாக்கிவிடும். அவநம்பிக்கை உன் வாழ்க்கையையே கனவாக்கிவிடும்.....

* ஒருவரின் அன்பு பற்றி நீ அறிய வேண்டுமா.. ஒரு முறை பிரிவை சந்தித்து விடு...

* பொய்யை அறிந்து கொள்வதை விட உண்மையை அறிந்து கொள்வது இலகு.

* தோல்வி ஏற்ப்படின் தோற்று விட்டோமே என்று எண்ணாதே நீ ஒரு நாள் வென்று விடுவாய், ஆனால் நேரத்தை வீணாக்காதே அது உன் தோல்வியை பல மடங்கு அதிகரித்து விடும்.

* உனது பொறுமையே உன் வயதினை சித்தரிக்கும்..

* இரவில் கண்ணை முடிய போது கனவுகள் தோன்றுகிறது. உண்மையில் நடப்பது போன்று மனதில் தோன்றும். கண் விழித்த பிறகுதான் தெரிகிறது கண்டது கனவு என்று. அக் கனவு நிஜமாக வேண்டுமெனின் நம் முயற்சி பல மடங்காக வேண்டும்.

கனவு காண் அது நற்கனவாயின் நிகழ்த்தி முடி....

* தோல்வி உன்னை சந்திக்க சிந்திக்கிறதா? ஒரு கணம் நீ ஏன் தோற்றாய் என்று சிந்தி. அதன் பிறகு உன்னை தோல்வி சந்திக்க சிந்திக்கும்.

* அன்பு என்பது சிறந்த ஒன்று அது அழிவதற்கு நீங்கள் காரணம் ஆகி விடாதீர்கள்...

* புரியாத வாழ்க்கைப் பாதைகள்....... தொடரும் பயணங்கள் முடியும் இடம் தெரியாமல் தவிக்கும் உள்ளம்.......

* அழுவதற்கு எனக்கு மனம் இல்லை காரணம் நான் அழுதால் என் தாய் அழுது விடுவாளே என்று..

* உனக்கு அடுத்தவனை பிடிக்கவில்லையா ஒதுங்கிகொள். உன்னைப் பிடிக்கவில்லையா நீ தலை சிறந்தவன் என நிரூபித்து விடு. அதன் பின் அவர்கள் தாமே வருந்துவார்கள் உன்னை எண்ணி..

* வானம் பூமியைத் தொட்டால் அது அதிசயம் ஆனால் மனிதன் வானத்தை தொட்டால் அது

சாதனை. அதிசயத்தை பார்த்துக் கொண்டிருப்பதை விட வானத்தை தொட முயற்சிப்பவனாக

இருந்தால் அதுவே உன் வாழ்வை வெற்றி பயணத்தில் தொடக்கி வைக்கும்...

* வாழ்க்கையில எவ்வளவு தான் உச்சிக்கு போனாலும் கடைசில ஒரு பெட்டிக்க தான் முடியும்.

* படிப்பதற்காக எல்லா சந்தர்ப்பங்களையும்

இழக்கத் தயாராக இருங்கள்.

எந்த சந்தர்ப்பத்திற்காகவும் படிப்பை

இழக்கத் தயாராகி விடாதீர்கள்!

எனில்

நீங்கள் எங்கிருந்து வந்தாலும்

எங்கு வேண்டுமானாலும் போகலாம்...

* இன்பம் என்பது கானல் நீர் போன்றது ஒரு சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும் ஆனால் துன்பம் என்பது வாழ்க்கையில் மரம் போன்று வளர்ந்தே செல்லும்...கானல் நீரைக் கண்டால் எம் மனதில் பூரிப்பு தோன்றும் அது போன்று கிடைக்கும் இன்பத்தை நீ வீணாக்காதே...வாழ்வில் துன்பம் வருவது சகஜமே...அதைக் கண்டு துவண்டு விடாதே பிறகு அது உன்னை வாழ விடாது.......( கானல் நீர் குளிர் நாடுகளில் தெரிவதில்லை காரணம் குளிர் நாடு என்பதால்.)

* பொறுமை, விட்டு கொடுத்தல் இரண்டும் மிக முக்கியம் மனித வாழ்வில்... ஆனால் இவை இரண்டிற்கும் எல்லைகள் உண்டு.... அன்புக்கு மட்டும். என்றும் எல்லையும் இல்லை எதிரியும் இல்லை... மற்றவரின் பொறுமையை சோதிக்காதீர் அவ்வாறு சோதித்து பொறுமை இழந்தால் பிரச்சனை நமக்கு தான் அதிகம்..

* கலகலப்பாய் இருங்கள் வேண்டாம் என்று ஒரு போதும் உங்களுக்கு சொல்லவில்லை

ஆனால் மற்றவனை கலங்கப்படுத்தாது இருங்கள் ..அவ்வாறு இருப்பீர்கள் ஆனால்

நீங்கள் என்றுமே புன்னகை நிரம்பிய முகத்தோடு இருப்பீர்கள....

* நாம் எப்போதும் மேலே போகும் விமானத்தை அண்ணார்ந்து பார்த்து கழுத்தை நோக வைப்பதை விட நேரே பார்த்து எமது முன்னேற்றத்தை பார்த்திருந்தால் என்றோ வாழ்க்கையில் முன்னேறியிருப்போம். இது மேல் அண்ணார்ந்து பார்க்கும் விமானத்துக்கு மட்டும் அல்ல அடுத்தவனை பார்த்து செய்வதற்கும் பொருந்தும்...

* நல்ல நண்பன் உனக்கு வேண்டும் ஆனால் நீ நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது நீ உண்மையாகவும் இருக்கவேண்டும்..

( நீ உனது நண்பனை பற்றி கதைப்பதாக இருந்தால் அவன் உன்னருகே இருக்கும் போது கதை அவன் சென்ற பிறகு கதைக்காதே அவ்வாறு கதைப்பாயாக இருந்தால் நீ உனது நண்பனை இழந்து விடுவாய்)

* நட்பின் இலக்கணம் தெரிய வேண்டுமானால் உங்கள் நட்பை நேசியுங்கள் அதன் இலக்கணம் மட்டுமல்லாது அதன் ஆழத்தையும் புரிந்து கொள்ளவீர்கள்.

* எதையும் தூரத்தில் இருந்து பார்த்து நம்பாதீர்கள்.........அங்கே என்ன

நடக்குது என்ன நடந்தது என்று தெரியாமல் கதைக்காதீர்கள்.............

இதுக்கு தான் சொல்வார்கள் காதால் கேட்பதும் பொய் கண்ணால் பார்ப்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று..

* கடன் கொடுங்கள் அதை திரும்பப் பெற்று விடுவீர்கள் ஆனால் களவு கொடுத்து விடாதீர்கள் அதை திரும்பப் பெற முடியாது...

* கண்கள் எமது முதுகை பார்த்ததில்லை கால்த் தடங்கல் கூட மாறிப் பதிவதில்லை ஆனால் மனிதன் மட்டும் மாறுகிறான் காரணம் மட்டும் புரியவில்லை ஏனோ ..

* நட்பு என்பது என்றும் அழியாச் சொத்து குடும்பம் என்பது பெரிய சொத்து ஆசிரியர் என்பது கிடைத்த சொத்து இச் சொத்துக்களை இழந்து விடக் கூடாது.......