Friday, November 9, 2018

வெற்றி தரும் எண்ணங்கள்

வெற்றி தரும் எண்ணங்களைபற்றி அறிஞர்களின் கருத்து


"வெற்றியினைச் சிந்தியுங்கள் வெற்றியை உருவகப்படுத்திப் பாருங்கள்.வெற்றியை உருவாக்கத் தேவையான சக்தி உங்களிடம் செயல்படத் தொடங்கும். மனப்படம் அல்லது மனப்பான்மை மிக வலிமையுடன் நிலைபெறுகிறபோது அது சூழ்நிலைகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது. இதற்கும் மனக்கட்டுப்பாடுதான் அவசியமாகிறது"     -  வின்சென்ட் பீல்(மதப்போதகரும் மனோதத்துவ நிபுணரும்)
"நம்பிகைதான் நிகழ்ச்களை உருவாக்குகிறது "   -    வில்லியம் ஜேம்ஸ் 
"எண்ணம் எவ்வளவு வன்மையுடன் உடலை ஆட்சி செய்கின்றது என்பதை எண்ணிப்பர்கும் பொழுது எனக்கு பெரும் வியப்பேற்படுகிறது "- கவிஞன் கதே 
"தொழிலில் வெற்றியும் தோல்வியும் மனதின் திறமையால் நிர்ணயிக்கப்படுவதில்லை ,மனப்பன்மையினல்தான் நிர்ணயிக்கப்படுகிறது "- டாக்டர்  வால்டர் ஸ்கட் 
"நாம் என்ன  நினைக்கிறோமோ ,அதுவாகத்தான் நாம் இருக்கிறோம் .நாம் இனி என்ன ஆகப்போகிறோம் என்பதையும் அதுதான் நிர்ணயிக்கிறது "-  டாக்டர் எம்.ஆர். காப்மேயர் 
"ஒருவன் எதை நினைக்கிறானோ ,அதுவாகவே இருக்கிறான் "-பைபிள் 
"நாம்  இப்போது எப்படி இருக்கிறோமோ என்பது இதற்கு முன் நாம் என்ன சிந்தித்தோம் என்பதைப் பொறுத்தது "-புத்தர் 

இதுவும் கடந்து போகும் - வாழ்க்கை தத்துவம்

இதுவும் கடந்து போகும்.
நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். 

எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.

வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா? 

வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?

எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? 

வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?

இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானதல்ல. அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.

*வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். - கர்வம் தலை தூக்காது.

*தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். - சோர்ந்து விட மாட்டீர்கள்.

*நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது - அவர்களை கௌரவிப்பீர்கள்.அவர்கள் விலகும் போது பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.

*தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். - தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.

*நெற்றி சுருங்கும் போதெல்லாம் "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள்.- சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள். 

நினைவில் கொள்ளும் அவசியமே இல்லாமல் வாழ்க்கையின் ஜீவநாதமாக அந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விட்டால் அந்தப் புன்னகை நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்.

வாழ்க்கையின் இரகசியம்


இரகசியம் இரகசியமாக இருக்கவேண்டியதொன்றாகும்.இரகசியம் எது என்றே தெரியாதவர்களும் இச் சமூகத்திலுள்ளனர். இப்படிப்பட்டவர்களிடம் சற்று அவதானத்துடன் நடந்துகொள்ளவேண்டும் இவர்களை அனுபவரீதீயாகத்தான் கண்டுகொள்ளவியலும்.
அது இருக்கட்டும் ,
எனக்கு வேண்டியது வாழ்க்கையின் இரகசியம்?
உண்மையில் வாழ்க்கையின் இரகசியத்தை அறிந்தால் என்ன நடக்கும்?
வாழ்க்கையின் இரகசியத்தை அறிந்தவர்கள் உள்ளனரா? ஆம் எனின் யார் அவர்கள்?(ரிஷிகள்?,முனிவர்கள்?,மகான்கள்?.....................???)
மதங்கள் போதிப்பதென்ன?
இயற்கை போதிப்பது என்ன? எவ்வாறு வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டுள்ளது?
கடவுள் இருப்பது உண்மையா?
ஏன் ஒரே ஒரு கடவுளை உலகத்திலுள்ளவர்களினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.?
போர் நடப்பதன் காரணம்யாது?(மதத்தின் பேரால்,நாட்டுக்கு நாடு,சாதிக்கு சாதி)
சில கண்டுபிடிப்புக்கள் நடைபொறுவது எதனால்?
இப்படியாக எமது வாழ்க்கையில் பல இரகசியங்கள் மறைக்கபட்ட வண்ணமாகவேயுள்ளது.

என்னைப்பொறுத்தவரை வாழ்க்கையின் இரகசியத்தை மனிதனால் நிச்சயமாக அறியலாம் எப்ப என்றால் மூடநம்பிக்கையை முற்றுமுழுதாக இவ்வுலகத்திலிருந்து அகற்றும் வரை. 

ஏன் என்றால் வாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றையும் நிகழ்காலத்தில் முழுநிறைவாக அனுபவிக்கும் மனிதர்களின் வாழ்க்கைப்பயணத்தைப் பார்போமானால் அவர்கள் எல்லோரும் மூடநம்பிக்கைக்கு எதிரானவர்கலாகும்.

அதேநேரத்தில் மூடநம்பிக்கையை மற்றவர்களுக்கு புகட்டி வாழ்க்கையின் இரகசியத்தை இவர்கள் இரகசியமாக வைத்துள்ளனர்.

வாழ்க்கையின் இரகசியத்தை அறியவேண்டுமெனில் -ஏதோவொரு விருப்பமான துறையில் முழுக்கவனத்தையும் செலுத்தினால் நிச்சயமாக வாழ்க்கையின் இரகசியம் என்னவென்று தெரியும் அதே நேரத்தில் இயற்கையானது முழு உதவிகளை வழங்கும் என்பது மிக மிக உண்மையானதாகும்.

தயவு செய்து உங்கள் கருத்துக்களை comments boxன் ஊடாக  பகிர்வதன் மூலம்  அறியாத நிறைய விடயங்களை அறியலாம்.

நம்பிக்கை இழக்காதே


சிறு கதை மூலம் நம்பிக்கை இழத்தல் பற்றி விளக்கம்

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......
வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.
ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.
ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.

எது அந்த தவளையை கொன்றது...?

பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள். 

ஆனால், உண்மை என்னவென்றால்

 "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......

நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.

ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மன ரீதியாக,
உடல் ரீதியாக, 
பண ரீதியாக
 மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.

உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.
*
"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...



👉விழுந்தால் அழாதே . . .எழுந்திரு 👈
           🗣
👉தோற்றால் புலம்பாதே . . .போராடு 👈
             🗣
👉 கிண்டலடித்தால் கலங்காதே . . .மன்னித்துவிடு 👈
              🗣
👉தள்ளினால் தளராதே . . .துள்ளியெழு 👈
               🗣
👉நஷ்டப்பட்டால் நடுங்காதே . .நிதானமாய் யோசி👈
                🗣
👉ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .எதிர்த்து நில் 👈
           🗣
👉நோய் வந்தால் நொந்துபோகாதே . .நம்பிக்கை வை 👈
              🗣
👉கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .கலங்காமலிரு 👈
              🗣
👉  உதாசீனப்படுத்தினால் உளறாதே . .உயர்ந்து காட்டு 👈
           🗣
👉 கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .அடைந்து காட்டு 👈
           🗣
👉மொத்தத்தில் நீ பலமாவாய் 👈
              🗣
👉சித்தத்தில் நீ பக்குவமாவாய் 👈


உன்னால் முடியும் 
உயர முடியும் . . .
உதவ முடியும் . . .
உனக்கு உதவ நீ தான் உண்டு


👉உன்னை உயர்த்த நீ தான் 👈. . . ⚜நம்பு⚜ . .

👉 உன்னை மாற்ற நீ தான் 👈. . .👉 முடிவெடு👈 . . .
               
👉நீயே பாறை👈👉.நீயே உளி . 👈. .
            
👉நீயே சிற்பி . . .நீயே செதுக்கு 👈. . .
                
👉நீயே விதை . . .நீயே விதைப்பாய் 👈. . .
                    
👉நீயே வளர்வாய் 👈. 👉நீயே அனுபவிப்பாய் 👈. . .
                 
👉நீயே நதி👈 . . .👉 நீயே ஓடு👈 . . .
                  
👉நீயே வழி👈 . . .👉 நீயே பயணி👈 . . .
                 
👉நீயே பலம் 👈. . . 👉நீயே சக்தி 👈. . .
                   
நீயே ஜெயிப்பாய் 
எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே

முன்னால் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் தத்துவ சிந்தனைகள்

முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாமின் சில முக்கியமான தத்துவ சிந்தனைகளை உங்களிடம் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

அழகைப்பற்றி கனவு காணாதீர்கள், அது உங்களின் கடமையை பாழாக்கிவிடும்- கடமையைப்பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
முட்டாள் தனது முட்டாள் தனத்தை விளங்கிக்கொள்வதால் புத்திசாலியாகிறான்- புத்திசாலி தனது புத்தியை விளங்கிக்கொள்வதால் முட்டாளாகிறான்
கஷ்டம் வரும்போது கண்ணைமூடாதே அது உன்னை கொன்றுவிடும்-கண்ணை திறந்துபார் அதை நீ வென்றுவிடலாம்.
நாம் அனைவரும் ஒரே மாதிரி திறமையில்லாதவர்களாக இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரியான வாய்ப்புகள் உள்ளன.
சிக்கல்களை எதிர்கொள்ளும்போதே சில திறமைகள் வெளிப்படுகின்றன.
வாய்ப்புக்காக காத்திராதே...... வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்........
கனவு என்பது தூங்கும் போது வருவதல்ல, உன்னை தூங்கவிடாமல் பண்ணுவதேயாகும்.
ஒரு நிஜமான தலைவன் தோல்வி காணும்போது அத்தோல்வியை தன்னுடையதாக கருதுவான். வெற்றி எனும்போது அது தன்னுடைய குழுவின் வெற்றியாக கொண்டாடுவான்.
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார்முன்னேயும்,எப்பேதுமே மண்டியிடுவதில்லை.
சிந்திக்கத் தெரிந்தவனக்கு ஆலோசனை தேவையில்லை,துன்பங்களை சந்திக்கத்தெரிந்தவனக்கு தேல்வியேயில்லை.
நேர்மை மற்றும் உண்மை இருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் 
முடியாது என்ற நோய் முற்றாக மறந்துவிட வேண்டும் இல்லாவிடில் முடியுமானவற்றை அடைந்திருக்க முடியாது. 
மனிதன் எடுத்து வைத்த ஒவ்வொரு காலடிக்கும் வீரம் தேவை 
சிந்தனை செய், தெளிவான முடிவை எடு 
 அப்துல் கலாமின் சிந்தனைகள்

"நீ நட்சத்திரமாக ஜொலிக்க விரும்பினால்
நீ யார் என்பது முக்கியமல்ல,
உனது மனது எதை விரும்புகிறதோ
அது நிச்சயம் உன்னை வந்து சேரும்"


அப்துல் கலாமின் கவிதை
ஒரு முறை வந்தால் 
அது கனவு.
இருமுறை வந்தால்
அது ஆசை.
பல முறை வந்தால்
அது இலட்சியம்.

- அப்துல் கலாம்

1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!!

1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!!

1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.

♥1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது…

♥காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.

♥வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.

♥ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்…

♥ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…

♥பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…

♥விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது…

♥மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்…

♥உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்…

♥மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்…

♥வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்…

♥அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்…

♥ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்…

♥அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது…

♥ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்…

♥ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது…

♥ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது…

♥உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்…

♥தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்… அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்…

♥ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது… அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்…

♥பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்…

♥10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்…

♥யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்…

♥நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்…

♥பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்…

♥10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது…

♥போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்…

♥வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது…

♥வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்…

♥ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்…

♥10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது…

♥10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது…

♥பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்…
♥கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது…
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது…
அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது…

♥பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்…

♥தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்… பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை…

♥12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது…

♥இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்…

♥உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை… பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை… அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்…

எண்ணங்களும் உணர்வுகளும் ( By Dr M.S.Uthayakumar )

நமது செயல்களின் ஆரம்பம் நமது எண்ணங்கள்,நமது எண்ணங்களின் பிறப்பிடம் நமது மனம்.

ஆகவே நமது மனத்தை நம் வசத்தில் வைத்திருக்க வேண்டும் அதன் உள்ளே புகும் எண்ணங்களையும் ஆசைகளையும் பற்றி நாம் சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

நம் மனதில் நல்லெண்ணங்களை,ஆரோக்கியமான எண்ணங்கள்,பொறாமை நிறைந்த எண்ணங்களையும்,கெட்ட எண்ணங்களையும் நம் முள்ளே விடுவதன் மூலம் நமக்கு நாமே தண்டனை கொடுத்துக் கொள்கிறோம்.


வாழ்வில் துயர்,துன்பம் இல்லை என்று சொல்லிவிடமுடியாது
புத்திசாலித்தனம் என்பது வாழ்க்கையை சந்தோசமாக அமைத்துக்கொள்வது.
மனப்பழக்கம்- ஒவ்வொரு முறையும் நடக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் அறிவு பூர்வமாக ஆராய்ந்து 'ஏன்?','எப்படி?' என்று கேட்டுப் புரிந்து கொள்ளும்போது நமது மன இயக்கத்தை நம் கைக்கு கொண்டு வருகிறேம்.

"திருத்தக் கூடியவற்றை திருத்தும் தைரியம்"
 "திருத்த முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம்"
இப்படியாக  நமது எண்ணங்களையும் உணர்வுகளையும் பக்குவப்படுத்திக்கொள்ளலாம்

"குறை சொல்லுவது தன்னம்பிக்கையில்லாதவர்களின் கடைசிப்புகலிடம்"