மிகச் சுலபமாக இந்தக் கேள்வியை கேட்டு விட்டீர்கள்.ஆனால் இந்தக் கேள்வியின் ஆழமும், அர்த்தமும் பலகாலம் தவம் புரிந்த ஞானிகளாலும்,முனிவர்களாலும் கூட அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை கடவுளைப்பற்றி பலவிதமான விளக்கங்களும் கருத்துகளும் அநாதி காலம் தொட்டே கூறப்பட்டு வருகின்றன.ஆனால் அவற்றாலும் அல்லது வேறு எதனாலும் இறைவனைப்பற்றி முழுமையாகக் கூறமுடியாது. ஏனென்றால் கூறுதல், கேட்டல் என்பது “வார்த்தை” சம்பந்தப்பட்ட விஷயம்.இன்று உலக நடைமுறையில் இருக்கும் எல்லா வார்த்தைகளுமே எச்சில்படுத்தப்பட்டவை.எச்சில் படுத்தப்பட்ட எந்த வார்த்தையாலும் இறைவனை உணரமுடியாது. சொல்லப்படாத வார்த்தைகளே இறைவனை யார் என்று நமக்கு உணர்த்தும். ஏனென்றால் அவர் அனைத்திற்கும் ஆதாரமனாவர், மேலும் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர், அவரிடமிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன, அனைத்தும் வாழ்கின்றன. மடிகின்றன, அவரை நெருப்பு சுடாது. நீர் நனைக்காது. காற்று உலர்த்தாது. பஞ்சபூதங்களையும். ஐம்புலங்களையும் கடந்தே கடவுளை யார் எனக் காணலாம். ஆனாலும் காணலாமே தவிர, சொல்ல இயலாது.
கேள்வி : கடவுளை அடைய என்ன வழி?
அறிவு,உணர்ச்சி ஆகிய இரண்டும் வேறு வேறானவை என்று நாம் பொதுவாகக் கருதியிருக்கிறோம், ஆனால் நம் வாழ்க்கையில் இவை இரண்டுமே பின்னிப்பிணைந்து நம்மை வழிநடத்தி வருகின்றன, ஆயினும் உணர்ச்சி அலைகளே நம் வாழ்க்கைச் சமுத்திரத்தில் மேலோங்கி வீசுகிறது, அன்பு. ஆசை. கோபம். பயம். வெறுப்பு என்ற உணர்ச்சிகளே நம்மை ஆதிக்கம் செலுத்துகின்றன.
அறிவின் செயல்பாடு என்பது மிகக் குறைவாகவே நம்மிடம் உள்ளது, அதுவும் ஆன்மிகம். கடவுள். ஆன்மா போன்ற விஷயங்களில் நமக்கு அறிவு குறைவாகவே உள்ளது, (இன்றைய சூழலில்) அறிவையும். உணர்ச்சியையும் ஒருங்கிணைத்தால் கூட கடவுளைப் பற்றிய விஷய ஞானம் நமக்கு வந்துவிடாது.
பின்னர் கடவுளை அடைய என்ன செய்வது?
அறிவும், உணர்வும் உதாவதபோது கடவுளை அடைய நமக்கு எது உதவி செய்யும் என்று நீங்கள் கேட்கலாம். அறிவும், உணர்வும் தடமாறக் கூடியன.தடுமாற்றமே இல்லாத தீவிர நம்பிக்கைதான் கடவுளை அடைய ஒரே வழி, நம்பிக்கையுடன் தொடரும் இறைவேட்கையே இறைவனிடம் நம்மைக் கொண்டு சேர்க்கும் எனவே நம்புங்கள். இறைவனை அடையலாம்.
No comments:
Post a Comment