Thursday, January 21, 2016

நட்புறவுகளை சமாளிப்பது எப்படி?

ஒருவர் பொறை இருவர் நட்பு இந்த வள்ளுவரின் கோட்பாடு நட்புறவின் நுட்பத்தை மிக தெளிவாகபடம் பிடிக்கிறது.
   
உண்மையில் நமது மனித குல பரிணாம வளர்ச்சியில் எல்லா மிருகங்களை விட இவன் உயர்ந்து நிற்பதன் இரகசியம் நட்புறவு என்பதில் சந்தேகமில்லை.
 
மனிதன் ஒருவனே சிறந்த சமூக மிருகம் சில பாலூட்டிகள் பல பூச்சியினங்களில் குடும்பம்,சமூக வளர்ச்சிகள் சில காணப்படுகிறது.
 
ஆனாலும் இவ்வளவு சிறந்த சமூக கலாச்சார உயர் அந்தஸ்து மனித குலம் அடைந்தது இருவரது நட்புறவு என்பதின் மீது கட்டப்பட்டது என்றால் மிகையாகாது.
 
இருவரது நட்புறவு தொடர் சங்கிலி போல நீண்டு கணவன் மனைவி,குழந்தைகள்,உறவினர், நண்பர்,ஊரார் மற்றும் சாதி,இனம்,மதம்,தேசம்,என பரந்து விரிந்து இன்று மனித குலம் அனைத்தும் ஓரினமாக மனித நேயம் சிறக்க அடிப்படையாக இருப்பது இந்த நட்புறவு என்பது மறுக்க முடியாத உண்மை.

 
நடைமுறையில் இயல்பான தன்னலமான மிருக உணர்ச்சிகள் இதற்கு எதிரானது இயற்கையான உடல் உந்துதல்களும்,மன தேவைகளும் இருவருக்கும் வேறுபடுவதும் ஒன்றோடொன்று முரண்படுவதும் தவிர்க்க இயலாதது.இதனால் எங்கும் எப்போதும் இந்த இருவரது மோதல்களும் தொடர்ந்து கொண்டே வருகிறது.மிக தீவிரமான பிரிவுகள் குடும்ப,சமூக,இன,மத,தேசபிரிவினைவாதங்களுக்கும்,
சண்டைகளுக்கும்,போர்களுக்கும் காரணமாகிறது.
   
அன்றாடம் மனிதன் குடும்பம்,வேலையிடம்,சமூகம் என்ற மூன்று வேடங்களை ஏற்க நேரிடுகிறது.கணவன் மனைவி பெற்றோர் குழந்தைகள் உறவினர் என்ற வட்டத்தில் ஒருவரொருக்கொருவர் உள்ள தொடர்பின் உறுதி மிக அத்யவசயமானது.
 
அடுத்தது கல்வி,வேலையிடம் என்ற பெரிய வட்டத்தில் ஆசிரியர்,மாணவர்கள், நண்பர்கள்,முதலாளி,மேலாளர்,தொழிலாளி,சக ஊழியர்கள்,என்ற தொடர்பு முக்யமானது.
   
இதையடுத்து அயலார் ,ஊரார்,என்ற சமூக சூழலில் பல நண்பர்களுடன் சுமூகமான தொடர்பு அவசியமாகிறது.மிக பெரியதான சாதி,இன,மத தேசிய சமுதாய வட்டத்தில் மிக நுட்பமான நட்புறவுகள் தேவையாகிறது.
   
இவை அனைத்திற்கும் இருவரது சுமூகமான நட்பும்,உறவும்  சிறப்பாக அடித்தளம் அமைக்கும் என்பதில் ஜயமில்லை.
   
இதில் பலவித நுட்பமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.அடிப்படையாக அனுசரித்தல்,புரிந்துகொள்ளுதல் என்ற இரண்டு முயற்சிகள் இந்த நட்பு உறுதியாக இருக்கிறது.
   
புரிந்துகொள்வது என்பதை இரும்பாலான கம்பிகள் போலவும் அனுசரிப்பது என்பதை இறுகி ஓட்டும் சிமெண்ட் போலவும் கற்பனை செய்தால் இந்த நட்புறவு காண்கிரீட் போல வலிமை பெறும்.மாறாக புரிந்து கொள்ளாமை,கண்மூடித்தனமாக,பிடிவாதமான வறட்டு கருத்துக்கள் துருபிடித்து  இத்துபோன தகரமாகவும் அனுசரித்து  போகாத வறட்டு கெளவரங்கள்,வாதங்கள்,விவாதங்கள் விலகி ஓடும் மணல் போலவும் உறவு என்பது மணல் வீடு போல மழையில் கரைந்து காணாமல்போகும்.
   
சிலருக்கு இயல்பாக வரும் இணக்கம் பலருக்கும் ஏன் மாறான பிணக்கமாகிறது?இந்த கேள்விக்கு பதிலை புரிந்து கொண்டால் நட்பு சிறப்பாகும்.
 
அடிப்படையாக நாம் எல்லோரும் மறந்து போகும் ஒரு விஷயம் எல்லோருக்கும் தெரிந்தது தான் என்றாலும் நாம் அதை புரியாமல் விட்டு விட்டோம்.உலகில் உள்ள அணைத்தும் வேறு வேறு
ஒன்று போல இன்னோன்று இதுவரை படைக்கபடவில்லை
அது நாம் அனைவரும் அறிந்ததே.
   
ஆனாலும் நாம் எதிர்ப்பார்க்கிறோம் . நம்மை போலவே மற்றவரும் சிந்திக்க வேண்டும்,செயல்பட வேண்டும் என்று இந்த எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகின்றன.ஏமாற்றங்கள் துன்பம் தருகிறது.துயரம் கோபமாகிறது.கோபம் நெருப்பாகிறது அது வெறுப்புடன் வெளிபட்டு உறவு என்ற நூல் தொடர்பை எரித்து விடுகிறது.
     
      மணைவி காத்திருக்கிறாள் மாலையில் உலா போக,
      கணவன் வரவில்லை,கண்ணீர் தான் வரவானது.
     கணவன் காத்திருக்கிறான் பஞ்சனையில் உறவு கொள்ள
     மணைவி வரவில்லை மலரும் தான் வாடிபோனது.
     அம்மா எதிர்பார்த்தாள் மரியாதையாய் வாழ்ந்து விட
     மருமளும் விடவில்லை தனிவீடு போய்விட்டாள்
    மருமளும் வந்து நின்றாள் மகிழ்ச்சியாய் வாழ்ந்து விட
    மாமியாரும் விடவில்லை மனம் தான் ஒடிந்துவிட்டாள்
     
    குழந்தையாய் ஒடிவந்தான் கொஞ்சி முத்தமிட
    அம்மா தரவில்லை அடிதான் பரிசானது
    அப்பாவும் எதிர்பார்த்தார் தேர்வுதன் முடிவுகளை
    தப்பாமல் மகனவனும் தோற்றுதான் போய் விட்டான்
   ஆசிரியர் எதிர்பார்த்தார் அமைதியான மாணவனை
   மாணவர் கேட்க நினைத்தார் தெளிவான போதனையை
 
   மேலாளர் கேட்க விரும்பியதோ அயராத உழைப்பாளியை
   தொழிலாளர் விரும்பியதோ குறையாத ஊதியத்தை
எல்லோரும் வாங்க விரும்பினார்கள்
ஆனால் யாரும் விலையை கொடுக்க விரும்பவில்லை.
 
    விலை தராத வியாபாரம் எப்படி நடக்கும்?
   கரம் நீட்டாத உறவு எப்படி தொடரும்?
 
உறவுகள் முறிய உணர்வுகளே காரணம்.
யார் முதலில் கரம் நீட்டுவது?

முதலில் வருவது வெற்றி
                                           
முதலில் சிரிப்பது அவமானம் என நினைக்கிறோம்
                                           
முதலில் கரம் கொடுப்பது தரகுறைவு என நினைக்கிறோம்
   
விட்டு கொடுத்தால் வீழ்ந்து விட்டோம் என்கிறோம்
   
அனுசரித்தால் அவமதித்து விட்டார்கள் என்கிறோம்
 
    ஊடலில் தோற்றார் காதலை வென்றார்
   வாதத்தில் தோற்றவர் உறவை வென்றார்

வாதம்,விவாதம்,விதண்டா வாதம் என்று கருத்து மோதல்கள் நீளும்.அதனால் தான் கை,கால்கள் விளங்காமல் போனால் மருத்துவம் அதை வாதம் என்றுஇயக்கமின்மையை சொல்கிறது.
   
நட்புறவில் வாதம் வந்தால் அது இயங்காமல் போகும்,முறிந்து போகும்,முற்று பெறும்.

      இருவர் பிரிந்தால் இரு குடும்பங்கள் பிரியும்
      இருவர் வெறுத்தால் இரு ஊர்களும் பிரியும்
      இருவர் யுத்தமிட்டால் இரு மதங்களும் மோதும்
      இருவர் மோதினால் இரு தேசங்களும் அழியும்

இந்த ஒருவருக்கொருவர் நட்பு சங்கிலியை தொடரும் மாறாக பிரிவும்,முறிவும் ஒட்டாத தனிமனிதர்களை உருவாக்கும் தனிமனிதன் மிருக குணம் கொள்வான் தீவிரவாதியாக மிருகமாக காட்டுக்குள் போனால்,அது நாட்டுக்கும் நல்லதா.உறவில்லாத திருமணம் நட்பில்லாத குழந்தைகளை உருவாக்கும்.
   
அடிப்படையாக பெற்றோரிடம் இருந்த,கிடைத்த நம்பிக்கைக்குரிய நட்பும்,தொடர்பும்,பிற்காலத்தில் பெரியவரானதும் மற்றவரையும் அதே போன்ற நம்பகமான நட்புறவு கொள்ள ஆதாரமாகிறது.
   
வெறுக்கபடுதல் ,புறக்கணிக்கப்படுதல்,உதாசீனபடுத்தபடுதல் இவை எதிர்காலத்தில் சந்தேகமும்,தாழ்வு மனப்பான்மையுடனான தொடர்புகளை ஏற்படுத்துகிறது,அவை தோல்வியில் முடிகிறது.
   
நம்பிக்கை என்பதும், நன்மையானது என்பதும், நட்பு என்பதன் ஆதாரமான ஒலிகளாகும். நட்பு உள்ள மனிதன் நண்பானதும் அதன் ஆதார ஸ்ருதியாகும்.
   
அவ நம்பிக்கையும்,தீமை என்ற உணர்வும் தேவையில்லாத அச்சத்தையும்,பதட்டத்தையும் தோற்றுவிக்கும்.
   
தோற்றுவிடுவோம்,எதையோ இழந்து விட்டோம்,என்ற குழப்பத்தில் போரை துவக்கி மகிழ்ச்சியை துயரமாக்கும் செயல்தான் வாதம்.
 
நட்புறவில் வாதம்,சந்தேகம்,பிடிவாதம்,கோபம் என்ற பல உணர்வுகள் கசப்பான அனுபவங்களை ஏற்படுத்துகிறது.
   
ஒருவரது கோபம் நிதானத்தை தாக்கி கோபமூட்டுகிறது.
   
ஒருவர் துவக்கும் வாதம் பதிலுக்கு  விவாதமாகி விதண்டாவாதமாகிறது.
   
ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் சந்தேகம் பிளவை அதிகரிக்கிறது
   
ஒருவர் பிடிவாதம் மற்றவரையும் பிடிவாதம் பிடிக்க தூண்டுகிறது
 
ஆனால் அனுசரித்தல்,புரிந்து கொள்ளுதல்,விட்டு கொடுத்தல் சமாதானம் செய்வது,விளக்கமளிப்பது,ஏற்றுகொள்ளுதல் போன்ற சிறப்பான அணுகுமுறைகள் நல்ல பலன்களை தரும்.
 
இந்த அத்தனை அணுகுமுறைகளுக்கும் ஆதாரமாக இருப்பது பொறுமை, நிதானம்,அமைதி,சிந்தித்து செயல்படுகிறது என்பது ஒன்று.
    இதையே வள்ளுவர் பொறை என்றார்.
   
இருவர் பொறுமை என்றால் யார் பொறுப்பது என்ற கேள்வியோடு யுத்தம் துவங்கும்  என்று யோசித்தார் போல தோன்றுகிறது.
 
அதனால்தான் ஒருவர் பொறை என்று யாராவது ஒருவர் விட்டு கொடுங்கள்,பொறுத்து போங்கள் என்று
கெஞ்சுகின்ற குரலில் வேண்டுகோள் விடுகின்றார்.
 
மூன்றாவர் தணிவாக பணிவாக கேட்டால் நிச்சயம் பகைகுறையும் நட்பு மலரும்,நன்மை சிறக்கும்.
 
சில நண்பர்கள்,பெற்றோர்கள்,குழந்தைகள்,தம்பதிகள்,சக ஊழியர்கள், நிறுவனங்கள்,மதங்கள்,இனங்கள்,தேசங்கள் எல்லாம் இயல்பாக ஒற்றுமையாக சிறப்பான நட்புடன் இருப்பது ஏன்?
 
மாறாக பல,இதற்கு நேர் எதிராக சண்டையிட்டு,பகை கொள்வது ஏன்?
 
சிந்தித்தால் இவர்கள் யாவரும் கல்வி அறிவிலோ,பண்பிலோ,அன்பிலோ சிறிதும் குறையில்லாத சிறந்த‌
மனிதர்கள்தான்.இன்னும் சொல்ல போனால் பலர் வேறு நட்புறவுகளில் மிக வெற்றிகரமாக நடந்து கொள்கிறார்.

     அம்மா விற்கு சிறந்த மகனாய் இருந்தவர் நல்ல கணவனாயில்லை.
     பிறந்த வீட்டில் நல்ல மகளாய் வளர்ந்தவர் நல்ல மருமகளாயில்லை
     வீட்டில் நல்ல தலைவரானவர் நாட்டில் நல்ல தலைவனாயில்லை
     பள்ளியில் நல்ல மாணவனாய் சிறந்தவர்
     வீட்டில் நல்ல மகனாயில்லை

ஏன் இந்த உருமாற்றங்கள் ஓரிடத்தின் இயல்பு எப்படி மற்றோரிடத்தில் மாறுபடுகிறது.
   
மனித இயல்பு என்பது பெளதீக குணங்கள் போல படுக்கப்பட்டுள்ளது.
இவை வேத காலத்துலிருந்து நீர், நெருப்பு போல சாந்தம் ருத்ரம் என்று வகைப்படுத்தப்பட்டது.அமைதியும்,ஆக்ரோசமும் நேர் எதிரான பண்புகளாக பலரிடம் உள்ளது.
   
ஆனால் நடைமுறையில் இடைப்பட்ட மனிதர்களையே அதிகம் காண்கிறோம்.இருவேறு  குணங்களை இருவேறு இடங்களில் வெளிப்படுத்தபடுவது உண்மை.
   
பொருள்களை போல மனித சுபாவங்களும் இராசயன குணங்களையும்,மாற்றங்களையும் அடைவது தெளிவான உண்மையாகும்.
   
இதை interpersonal relations என்ற இருவரது தொடர்பில் உருவாகும் இராசாயண கலப்பின் வினை போல புரிந்து கொள்ளலாம்.
   
இயல்பான சுபாவங்கள் வேதிவினை புரிகின்றன.சாத்வீகமான அமைதியான இருவரது நட்பும்,உறவும் சிகரத்தையோ,வெற்றியோ இல்லாவிட்டாலும் இசை போல இனிமையாக கடலை நோக்கி நடந்து கொண்டிருக்கிறது.
   
இரண்டாவதாக யாராவது ஒருவரது குணமானது பொறுமையாக சமாதானபடுத்தும் நீர் போல நெருப்பை தணிக்கும்,குளிரூட்டும் நட்புறவு குடும்பம்,தொழிற்சாலை,பள்ளிகள், நிறுவனங்கள்,அரசு சமூகம் எங்கும் பரவலாக காணப்படுகிறது.
   
மூன்றாவது பிறிவிலேயே முரட்டுதனாமாக ஆக்ரோசமான இருமனிதர்கள் விடாபிடியாக மோதுவது நெருப்புகள் உரசுவது போல பல தீமைகளை உருவாக்குகிறது. நட்பு முறிகிறது,பகை வளர்கிறது.திருமன பிரிவு ஏற்படுகிறது.பள்ளி,கல்லூரி,தொழில் நிறுவனங்களில் சச்சரவுகள்,வேலை நிறுத்தம் உருவாகிறது.சமூக,சமுதாய மோதல்கள் இன,மத கலவர‌ங்களாக வெடிக்கிறது.தேசங்களில் வாதங்கள் யுத்தங்களாக மாறுகிறது.
   
தனிப்பட்ட ஒரு செங்கல்லோ ஒரு கருங்கல்லோ பயன்படுவதில்லை.
ஒரு சிமெண்ட் கலவையால் அது பிணைக்கப்படும் பொழுது உலகப்புகழ் பெறும் ஆலயங்களாக அழகு பெறுகிறது.புகழ் பெறுகிறது.ஒரு தனிப்பட்ட சிறு இரும்பு வளையம் பல ஒரு சங்கிலியாக இணைக்கப்படும் பொழுது அடங்காத ஆனையையும் கட்டி விடுகிறது.ஒன்றுவிட்டால் உண்டு வாழ்வு கூட்டுறவே நாட்டுயர்வு என்றார்.
   
ஒரு தனிமனிதன் குடும்பம் என்ற பசையால் பிணைக்கப்படுகிறான்.
குடும்பங்கள் பல இனம் என்ற கலவையால் இணைக்கப்படுகின்றன.பல இனங்கள் பக்தி எனும் சிமெண்டால் உறுதியாகி தேசங்கள் உருவாகின்றன தேசங்களின் நட்பால் மனித நேயம் ஒளிர்கிறது.
   
இன்று மனிதன் பல சாதனைகளை ப‌டைத்திருக்கிறான் என்றால் அது இரு தனி மனிதரிடையே ஏற்பட்ட நட்பால் அன்பால் உறவால் என்றால் அது மிகையாகாது.
   
ஆனால் அந்த இரு உயிர்களின் நட்பின் போது பல விதமான இடையூறுகளும் மனவருத்தங்களும் ஏற்படுகிறது.அதை அன்பு என்ற அமிலம் கரைத்து விடுகிறது. ந‌ட்பு என்ற நீரால் கோபம் விரக்தி துன்பம் துயர் போன்ற ப்ல வித் அழுக்குகள் கழுவப்படும் பொறுமை,விட்டு கொடுத்தல்,தியாகம் ஒத்துழைப்பு,பணிவு போன்ற பலவிதமான நல்ல பண்புகளால் நட்புற‌வுகள் வலுபடுத்தபடுகின்றன.
   
எங்கேயாவது எப்போதாவது இரு தனிமனித உற‌வில் நட்பில் விரிசல் ஏற்படும்போதுமூன்றாவதுஇருக்கும்நண்பரோ,சகோதரரோ,உறவினரோ அயலாரோ அல்லது அரசே கூட அந்த பிரிவை தடுக்க வேண்டியது அவசியமாகும்.
   
இல்லையென்றால் ஒரு அணையில் ஒரு கல் உடைந்தால் அது எவ்வ‌ளவு பெரிய விரிசலை நாசத்தைஉண்டாக்குமோ அது போல வளரும்,குடும்பம்,சாதி,மத,இன,தேசயுத்தங்களுக்கு காரணமாகும்.  

No comments:

Post a Comment