Friday, January 15, 2016

இதே வாழ்வை தான் வாழ்வீர்களா...?

வணக்கம் நண்பர்களே... வாழ்க்கை சுவாரஸ்யமாகவே இல்லை... என்ன வாழ்க்கைடா இது...? திவா கி திவா... என்ன இது உளறல்...? வாருங்கள் என்னவென்று பார்ப்போம்...

புலம்பலை பலரிடம் விசாரித்தால்... கேள்வி : இது வரை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை எப்படி...? மீண்டும் உங்களுக்கு ஒரு வாழ்க்கை ஆரம்பத்திலிருந்து வாழுங்கள் என்று கொடுக்கப்பட்டால், எதை எதைத் திருத்திக் கொள்வீர்கள்...? எதை எதைச் செழுமைப்படுத்திக் கொள்வீர்கள்...? அல்லது இதே வாழ்வை தான் வாழ்வீர்களா...?

1. நன்றாகப் படிக்காமல் விட்டு விட்டு விட்டேன்... திரும்ப வாழ்க்கை கிடைத்தால், திருத்தி வாழ்வேன் (இது தான் திவா கி திவா...)

2. நல்ல வேலைக்கு முயற்சிக்காமல் விட்டு விட்டேன்... திவா கி திவா...

3. நல்ல வாழ்க்கை துணை கிடைக்கவில்லை... திவா கி திவா...

4. நல்ல பிள்ளைகள் அமையவில்லை... திவா கி திவா...

5. நல்ல லட்சியங்களை எட்ட முடியவில்லை... திவா கி திவா...

இப்படி அவரவருக்கு நேர்ந்த தவறுகளை, அவரவர் செய்த பிழைகளை, அவரவர் இழந்த வாய்ப்புகளை எண்ணி, திவா கி திவா என ஆசைப்படுவோம்... தவறு செய்வது மனித இயல்பு... அதைத் திருப்பித் திருப்பிச் செய்தால் தானே முழுமை ஏற்படும்... அது எப்படி தப்பாகும்...?

முதலில் நாம் சொல்வது, பார்ப்பது, கேட்பது... மற்ற எல்லாவற்றையும் இரண்டாவது முறை செய்தால் தப்பா என்ன...? வாழ்க்கையில் பல பேர் இந்த இரண்டாவது முறையே நம்புவதால் தான், அவர்களால் முதலாவதாக எப்போதும் வர முடிவதில்லை... முதல் சொல்லை தொடங்கும் போதே, செயலில் முதல் அடியை எடுத்து வைக்கும் போதே, முறையான முழுப் பயிற்சியுடன், நம்பிக்கையுடன், தெளிவாகத் தீர்மானமாகச் செயல்பட்டால் தான், இரண்டாவது என்கிற நினைப்பிற்கே இடமிருக்காது... 'தவறு வரும்-திருத்திக்கலாம்' என்கிற அரைகுறை மனதோடு இருந்தால் குழப்பம் தான் மிஞ்சுமே தவிர, வெற்றிக்கான இலக்கை அடைய முடியாது.

வாழ்க்கை தவறுகளாலும் நிறைந்தது தான்... ஆனால் செயல்படும் ஒவ்வொரு நொடியும் கவனமாகச் செயல்பட்டால் தவறுகள் குறைந்து நிறைகளே ஏற்பட வாய்ப்புகள் பெருகும்.
தவறு என்பது தவறிச் செய்வது... தப்பு என்பது தெரிந்து செய்வது... தவறு செய்தவன்-திருந்தப் பார்க்கணும்... தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்...

அமெரிக்க அறிவியலாளர், எழுத்தாளர், அரசியலாளர், மிகப் பெரிய சிந்தனையாளர், பெஞ்சமின் பிராங்க்ளின் - 87 வயது வரை வாழ்ந்தவர்... மேலே உள்ள கேள்வி அவருக்கும்... அவரின் பதில் இதோ :

"இதுவரை நான் வாழ்ந்த வாழ்கையில் எந்த வருத்தமும் எனக்கில்லை... நான் நன்றாகவே வாழ்ந்திருப்பதாகவே கருதுகிறேன்... மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தால், இதே வாழ்க்கையே வாழ்வதாக ஆசைப்படுகிறேன்"

நண்பர்களே... தவற விட்டதை நினைத்து வருந்துவதா வாழ்க்கை...? நேர்ந்து விட்ட தவறுக்களுக்காக ஏங்குவதா வாழ்க்கை...? ஒவ்வொரு நொடியையும் தவறே நேராமல் விழிப்புணர்வோடு வாழ்வதே வாழ்க்கை... வாழும் போதே வாழ்க்கையை வசப்படுத்தி வாழ்வது, வருத்தமில்லா வாழ்க்கையாக வடிவமைத்துக் கொள்வது போன்றவற்றில் கவனம் செலுத்தினால் திருத்தமில்லாத வாழ்க்கையை அர்த்தத்தோடு வாழலாம் அல்லவா...?

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. (குறள் எண் 27)
பொருள் : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படுகின்ற ஐந்தின் வகைகளையும் தெரிந்து நடப்பவனிடமே உலகம் உள்ளது...

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. (குறள் எண் 43)
பொருள் : தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன் குடும்பம் என்னும் ஐந்திடத்தும் பேணுதல் இல்வாழ்பவனுக்குச் சிறப்பாகும்.

இரு குறளிலும் உள்ள ஐந்தையும் ஒப்பிட்டும் சிந்திக்கலாம்... தவறில்லை... மேலும் தினமும் வாழ்க்கையை இனிமையாக்க :


No comments:

Post a Comment