Thursday, January 21, 2016

நேரத்தை பராமரிப்பது எப்படி?

நிகழ்காலத்தில் வாழ்பவரே நேரம் என்ற வார்த்தையை சொல்வார் எதிர்காலத்தை சிந்திப்பவர் காலம் என்றே பேசுவார்.
       
காலன் என்றே நமது மொழி போற்றுகிறது 
நம் தலைக்கு மேல் தொங்கும் கத்தி போல காலனும்,காலமும் நேரமும் நம்மை துரத்துகிறார்கள்.
       
நவீன நூற்றாண்டுகளில் பூமி அதே வேகத்தில் தான் சுற்றுகிறது.
ஆனால் பூமியில் வாழும் மனித மனத்துன் சுழற்சி வேகம் அவனது வாழ்வினது எண்ண ஓட்டத்தின் வேகம் செயலாக்கத்தின் ஓட்ட வேகம் அதிகரித்து வருகிறது.
       
அயந்து நாட்கள் நடத்த கிரிக்கெட் போட்டி அய்ந்து மணி நேர வேகத்தில் நடக்கிறது.வாகனங்களின் வேகம் பல நூறு கிலோ மீட்டரை தாண்டி விட்டது.
        
இந்த காலகட்டத்தில் ஆமை வேக மனிதன் அரையடி நடக்கும் முன் நவீன மனிதன் பல நூறடி சென்று விடுகிறான்.
       
வளரும் நாடுகள் என்றால் வளராத நாடுகள் என்றே உள் அர்த்தம் வளர்ந்த நாடுகளின் வெற்றிக்கு மனித வளத்தின் மிக முக்யமான ” நேரம்” என்ற இயற்கை தந்த அருள் கொடையைசரியாக பயன்படுத்துவதே என்று சொன்னால் அது மிகையாகாது.
      
மனித வளத்தில் 
மூன்று முக்யமான 
பேச்சாற்றால்,எழுத்தாற்றால்,செயலாற்றல் என்பதுடன் நேரத்தை பயன்படுத்தும் ஆற்றலும் மிக அத்யாவசயமானது.


      
நேரத்தை பயன்படுத்துவது எப்படி என்று படிப்பதற்கு முன் நேரத்தை வீணடிக்காமல் இருப்பது எப்படி என்று பழகுவது தான் மிக சிறப்பானது.
      

பிறவிப் பெருங்கடலில் மூழ்கி முத்தெடுத்த 
உன்னத வெற்றியாளர்களின் மிகப்பெரிய ஆற்றல் அது பலர் கரையை தேடி அலையோடு மிதந்து கொண்டிருக்க,ஆற்றல் உள்ள சிலர் கிடைக்கும் அந்த நேரத்தில் மூழ்கி முத்து எடுத்து வரலாற்றின் பக்கங்களில் தன்னை பதிவு செய்து கொள்கிறார்.
     
இவர் மிகவும் இளம் பருவத்திலேயே நிலம், நீர்,தங்கம்,போல 
நேரம் என்பது ஒரு செல்வம் 
அது ஒரு சொத்து என்பதை புரிந்து கொண்டவர்கள்,
தோற்றதில்லை இவர்கள்.
       

இறைவன் நமக்கு தந்த அங்கங்களை விட புலன்களை விட அதற்கு தந்த ஆயுளே அற்புத கொடையாகும்.
      
20 ஓவர் கிரிக்கெட்டில் ஒவ்வொரு பந்தும் ஒவ்வொரு ஓட்டமும் அதி முக்யமானவை அது போலவெற்றியாளனுக்கு ஒவ்வொரு நொடியும் ஒரு கோடி கிலோ தங்கம் போல.
      
மனித வள முன்னேற்றத்திற்கு வள்ளுவம் போல ஒரு நல்ல வேதம் வேறொன்றுமில்லை.
     
நேரம்,காலம் இந்த இரண்டு பொருள்களும் தனிமனிதனுக்கு மட்டுமல்ல சமுதாய முன்னேற்ற்த்துக்கே ஆதாரமானவை.
     
பஞ்ச பூதங்களில் ஆற்றல் மிக்க இந்தக்காலம் அற்புத வாய்ந்த ஆறாவது பூதம்.
      
ஏனென்றால் இந்த பஞ்சபூதங்களின் ஆற்றலின் காலங்களுக்கு எல்லை கிடையாது.
      
ஆனால் ஒரு தனிமனிதனுக்கு இவற்றின் ஆற்றலை உபயோகிக்கும் காலம் என்பது வாழும் நாள் என்ற ஆயுட்காலத்திற்கு மட்டுமே குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது.
     
இந்த குத்தகை காலம் என்பது சில பத்து வருடங்களே அதிலும் சிலருக்கு துரதிட்ட வசமாக இன்னும் குறைந்த ஆண்டுகளே.
     
ஆகவே நேரம் காலம் என்பதின் மதிப்பு மதீப்பீடு செய்ய முடியாதது.மனிதர்களில் இதை
              அறிந்தவர் குறைவு.
              புரிந்தவர் மிகக்குறைவு
              உணர்ந்தவர் சிலர் ஆனால்
              உணர்ந்தபின் அதை உபயாகித்தவர் மிகச்சிலரே

மனிதரின் சில வகைகளாகப் பார்க்கலாம்
1. நேரத்தை மதிக்காதவர்கள்,
2. நேரத்தை வீனாக்குபவர்கள்,
3. நேரத்தை கொல்பவர்கள்,
4. நேரத்தை காசாக்கியவர்கள்,
5. நேரத்தை சேர்த்தவர்கள்,
6. நேரத்தை உபயோகிப்பவர்கள்,
7. நேரத்தை உயர்த்தியவர்கள்,
8. நேரத்தைபுகழாக்கியவர்கள்,
9. நேரத்தை இல்லாதவர்கள்,
10. நேரத்தை வியாதியாக்கியவர்கள்.
    
நேரம் காலம் என்பது நாம் பிறந்ததும் உடனே இறைவன் நம் கையில் கொடுத்தனுப்பிய சொத்து நம்முடன் ஆயுள் வரை வரும் ஆருயிர் நட்பு,துணைவி பலரும் நம்மிடம் இப்படி ஒரு ஆயுதம்,ஒரு செல்வம்,ஒரு நண்பன்,ஒரு மனைவி உடனேயே ஒட்டியிருப்பது தெரியாமலே குருடராக இருப்பார்.
   
சோம்பலிலும் மடியிலும்  உண்டு உறங்கி ஓய்ந்து கிடப்பார்.மற்றும் ஒருவர் வீணான விரயமான பொழுது போக்குகளில் பொன்னான நேரங்களை புண்ணாக்கி அழிகிறான் கிடைப்பதறகரிய “பொழுதுகளை”போக்குவதற்கு படாதபாடு படுகிறார்.
    
தேங்காயை உடைத்து உண்ணத் தெரியாத நரிபோல உருட்டிக் கொண்டிருக்கிற பலனில்லாத கிரைம் நாவல்களில் உழல்பவர் சின்னத்திரை,பெரியதிரை,சீரியல்,மசாலாக்களை ருசித்து ஆயுளெனும் அற்புத பொக்கிஷங்களை அரிக்க விடுபவர் பலர் தான் விளையாடுவதை விட்டு விட்டு அடுத்தவர் ஆடுவதை மகிழ்பவர் பலர் அடுத்த குழு இன்னும் ஆபத்தானது,
     
பொழுது போக்குகிறேன் என்று திட திரவ வாயுப் பொருட்களில் நீச்சலடித்து தன் பொழுதை மட்டுமல்ல உயிரையும் கொல்பவர்கள் பலர்.
    
இப்படி ஒவ்வொரு குழுவும் போட்டி போட்டு பொழுது போக்குவதில் யார் தேவலை என்று சொல்ல முடியாத அளவில் வாழ்கிறார்கள்.
    
இதில் நவீன காலங்களில் வினோதமான கட்சி ஒன்று உண்டு இவர்களை WORKAHOLIC என்பார்கள்.ஆல்ககாலுக்கு அடிமையாவதை ஒரு கொள்கைதத்துவமெனும் இஸமாக கொண்டவர்கள் போல வேலை என்பதை உடும்பாக பிடித்துக் கொண்டு உடலையும் நேரத்தையும் அபயோகம் செய்பவர் சிலர்
வேலையொன்றுமில்லை ஆனால்
நிற்க நேரமில்லை என்பார்கள்.
கையுலும் காலும் மூக்கும் நாக்கும்
அமைதியில்லாத வீண் பரபரப்பில்
தானும் அல்லலுற்று அடுத்தவரையும் அவஸ்தைப் படுத்துகிறது இவர் கொள்கை
சரி இதுவரை கால நேரத்தை கற்பழிப்பவரைப்பார்த்தோம்
ஆனால் அதை எப்படி சரிவர பராமரிப்பது?
  தனிமனிதனுக்கும்
  குடும்பத்துக்கும்
  சமுதாயத்துக்கும்
  தேசத்துக்கும் ஏன் உலகத்துக்குமே
உருப்படும்படியான பொருளாக மாற்ற என்ன செய்ய வேண்டும்?

இந்த ஆறாவது பூதமான
நேரம் என்ற ஆற்றலை கையில் பிடித்து
நிரந்தரமான பயனுள்ள பொருளாக மாற்ற மனிதரால் முடியும்
எங்கு தொடங்குவது? எப்படி தொடங்குவது?

இதற்கு எறும்பு செய்யும் உபதேசம் சிறந்தது
அது எதுவும் சொல்வதில்லை தானே செய்து காட்டுகிறது
நேரம் என்பது ஒரு செல்வம்,பொன் போன்றது
நேரம் என்பது ஒரு ஆயுதம்,சக்திவாய்ந்த ஆற்றலுள்ளது
நேரம் என்பது ஒரு ஞானம்,மதிப்பீடு இல்லாத அரிய அறிவு
சிறிய வயதிலிருந்து இந்த செய்திகள் யாவும் நம் உடலோடு உயிரோடு வளர்ச்சியோடு பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்த செல்வத்தை,ஆற்றலை,ஞானத்தை சிரைத்து சீரழிக்கும் சில வியாதிகள் அவை தவிர்க்கப்பட வேண்டும்.
1.வீணாக்கி விரயமாக்குவது.
2.திட்டமில்லாது மனம் போன போக்கில் செயல்படுவது
3.வாய்ப்பு,சந்தர்ப்பம், நேரம்வரும்போது தவறவிடுவது
4.தாமதம் எனும் இழிவான பழக்கத்தில் வீழ்வது
5.காலம் நேரம் மீனம் மேசம் பார்ப்பது
6. நாளை,அபுறம் என்று தள்ளிப்போடுவது
7.அர்த்தமில்லாத பரபரப்பில் நேரத்தை சித்ரவதை செய்வது
8.உண்டு உறங்கி சோம்பிக்கிடப்பது
9.பலனில்லாத பயனில்லாதஅற்பச் செயல்களில் பொழுது போக்குவது
10.தீய பழக்கங்களில் நேரத்தையும் வாழ்வையும் அழிப்பது.
இந்தக் “காத்திருப்பது” என்பது ஒரு துருபிடித்த வியாதி

நேரம் பார்ப்பது
தள்ளிப்போடுவது
தாமதப்படுவது அது பெற்ற பிள்ளைகள்

நீ வான வில்லுக்காக காத்திருக்கலாம்
அது உனக்க்காக காத்திருக்காது

நாம் என்னும் படுக்கையை விட்டு எழவில்லை என்று
சுற்றும் சூர்யனும் பூமியும் நின்று கொண்டிருக்காது

காலம் உனக்காகக் காத்திருக்காது உன்
காலடிச் சுவடுகள் கூட வராது என்பார் கவிஞர்

நல்ல காலத்தை எதிர்பார்த்து காத்திருப்பவரால் ஒரு
நல்ல கார்யமும் நடக்காது

காலம் போனால் திரும்புவதில்லை
காசுகள் நம் உயிரைக் காப்பதில்லை

காலன் என்ற கொடுங்கோலன் அவன்
கனப் பொழுதும் காத்திருப்பதில்லை

ஆன்றோர் அறிஞர் அனைவரும்
காத்திருப்பது தாமதப்படுத்துவது 
தவிர்க்கப்பட வேண்டியது என கோபத்துடன் எச்சரிக்கை செய்கிறார்கள்.

நினைவுக்கு வரும் நல்ல யோசனை கூட
ஈ பறக்கும் நொடியில் மறந்து விடுகிறதே

சரியான செயல் செய்ய
எல்லா நேரமும் சரியான நேரம் தானே

எந்நாளை விடவும் இன்னாள் நன்னாள் தானே
நன்றே செய்,இன்றே செய்

உடனே இப்போதே என துரிதப்படுத்துகிறார்
ஏன்?
தள்ளிப்போடுவது,தாமதப்படுத்துவது
நேரம் பார்ப்பது,காத்திருப்பது,
தாமதம்,என்ற கிளைகள் யாவும்
சோம்பல்,அச்சம், நம்பிக்கையின்மை என்ற‌
பெற்றோர் பெற்றெடுத்த பிள்ளைகள்.

தள்ளிப்போடுவதும்,தவிர்ப்பதும் பிரச்னையை தீவிரப்படுத்தும்
நாளை பார்க்கலாம் என்ற மனோபாவமே
அனைத்து பிரச்னைகளின் பிறப்பிடமாகிறது
தள்ளிப்போடும் ஒரு சிறிய செயல் கூட‌
நாளை நம‌க்கு தொல்லை தரும் நோயாகக் கூடும்

வெயில் வரும் போது கூரையைப் பழுது பார்த்து விடு என்பார்

இப்பொழுது இல்லையென்றால் 
எப்பொழுதும் இல்லையென்று எச்சரிக்கின்றார்

பகலில் விளக்கு போல‌
காலம் தவறிய கார்யம் பயன்படாது

பருவத்துக்கு முன்பு நட்டாலும்
           பின்பு நட்டாலும் பயன் தராது

ஒரு நிமிடம் தாமதமாக போய் தோற்று தவிர்பதை விட‌
ஒரு மணி நேரம் முன்னால் போவது அவமானமாகாது

தாமதம் என்ற வியாதிக்கு அடுத்தது
நேரத்தை விரயமாக்குவது
மற்றும் சோம்பல் என்ற தொற்று வியாதிகள்
ஒரு நொடி நேரத்தை உபயோகம் இல்லாது
வீணடிப்பவன் வாழ்வின் மதிப்பீடு அறியாதவன்
அன்று காலத்தை நான் வீணாக்கினேன்
இன்று காலம் என்னை வீணாக்கிவிட்டது எனப்புலம்புப‌வர்பல‌ர்
நேரம் என்பது ஒரு நல்ல ஆசிரியராக நமக்கு கற்பிக்கிறது
ஆனால் கற்கத்தவறுபவர்களை இரக்கமின்றி கொன்றுவிடுகிறது
நமது அரிய நேரம்  பறவை போல் இறக்கை கட்டி பறக்கிறது
பயனின்றி விரயமாக்கும் ஒவ்வொரு நொடியும்
மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாக வரலாறு பதிவு செய்யும்
நமது நேரத்தை வீணாக்குவது விட‌
அடுத்தவர் நேரத்தை வீணாக்குவது அதை விடக் குற்றமாகும்
சிலர் அறைக்குள் வந்தால் பயனுள்ளது
பலர் அறையை விட்டுச் சென்றால் அதை விட நல்லது
தாமதம், நேரத்தை விரயம் செய்வது
போன்ற தீமைகளுக்கு ஆதாரமாக இருப்பது
நேரத்தின் அருமை அதன் பயன் பற்றிய அறியாமையே
காலம் பொன் போன்றது என்று பல்லாயிரம் பேர்
திருப்பி திருப்பி சொன்னாலும் எவரும் அதை கண்ணாக மதிப்பில்லை
நமது பெரிய பொக்கிஷங்களிலேயே
விலை மதிப்பில்லாத அரிய செல்வம் நமது நேரமே
நேரம் என்பதை பலரும்
காலில் கட்டிய விலங்கு என பரிதவிக்கிறார்
அதை கையில் கிடைத்த ஆயுதமென பயிற்சி எடுத்தால்
தோல்வி கிடையாது

உண்மையில் சரியான படி திட்டமிட்டு
விரயமில்லாது உபயோகமாக‌
பயன்படுத்தினால் நமது தேவைக்கு அதிகமாகவே நேரம் கிடைக்கிறது
நேரத்தை திறமையாக உபயோகித்தவர் 
எவரும் தோற்றுப் போனதில்லை

ஒவ்வொரு நொடியும் நமது இறுதி நேரம்
என்பது போல முக்யம் கொடுத்து செயல்பட வேண்டும்
மனோவியாதிகளில் மிகவும் தீவிரமானது சோம்பல் எனும் நோயே

சூர்யன் எழுந்த பின்னும்
எழாதவன் வாழ்வும் விடியாமலே போகிறது

முப்பொழுதும் உண்டு உறங்கி முடமாகி மீடமாக சாவதற்கா பிறந்தோம்

சோம்பேறி சுகமும் ஏமாறும் மனமும் அறிவிழந்து அழியும்
உறக்கத்துக்கும் சோம்பலுக்கும் இன்பமென‌
அடிமையானவன் உருப்படுவதில்லையே
அதிர்கின்ற வீனையின் நரம்புகளில் தூசி உட்காருவதில்லை
உழைக்கின்ற மனிதன் நரம்புகளிலே நோயும் வருவதில்லை
நீந்தத் தெரியாதவன் நீரிலே மூழ்குவதென‌
வாழத் தெரியாதவன் துயரிலே மூழ்குவான்
காலத்தை காலண்டரில் கிழிக்காதீர்கள்

ஒவ்வொரு நொடியும் விழிப்போடு செயல்படுவோம் 
அதுவே இறுதிவார்த்தை

No comments:

Post a Comment