Monday, January 11, 2016

படித்தால் அறிவு வருமா ?

விளக்கம் ;

படித்தால் அறிவு வராது ?ஏன் ?வரும் என்றால்,வந்தது ஒரு நாளைக்குப் போகும் என்பது "சித்தாந்தம்"அறிவு என்பது ஏரி ஜலம்போல் எங்காவதுதேங்கியிருக்கின்றதா?அல்லது கடைகளில் விற்கின்றதா ?அறிவு விற்பதாயின் தனவந்தர்கள் (பணக்காரர்)ஒரு கிலோ ஆயிரம் (லட்சம்)ரூபாய் ஆனாலும் வாங்கித் தன் பிள்ளைகளுக்குக் கொடுத்து விடுவார்களே !ஆகவே ,அறிவு விளைகின்றபொருளுமன்று ;ஒரு புறமிருந்து மற்றொரு புறம் வருகின்ற பொருளுமன்று .

கற்கண்டில் தித்திப்பு இருப்பது போலவும் மலரில் மணம் இருப்பது போலவும் ஆன்மாவில் அறிவு இருக்கின்றது.ஆன்மாவே அறிவிப் பொருள்தான்.

"பாராதி பூதம்நீ அல்லை உன்னிப் 
பார்இந் திரியம் கரணம்நீ அல்லை 
ஆராயும் உணர்வுநீ என்றான் -ஐயன் 
அன்பாய் உரைத்தசொல் ஆனந்தம் தோழி."
-தாயுமானார்.
கற்கண்டில் வேப்பெண்ணெய் தடவி விட்டால் அதன் இனிப்பை வேப்பெண்ணெய் தடுத்து நிற்கும்.
எலெக்ட்ரிக் பல்பின் மீது தார் பூசிவிட்டால் அதன் ஒளியைத் தார் தடுத்து நிற்கும்.அதுபோல் ஆன்மாவின் அறிவுப் பிரகாசத்தை அறியாமையாகிய ஒன்று தடுத்து மறைத்திருக்கின்றது.அவ்வாறு மறைத்திருக்கின்ற அறியாமை படிப்பதனால் விலகுகின்றது.துணியில் உள்ள வெண்மையாகிய உண்மையை அழுக்கு மறைத்திருக்கின்றது.
சவுக்காரமிட்டுத் (சோப்பு)துணியைத் துவைப்பதானால் அழுக்கு நீங்கியவுடன் அதன் இயற்கையாகிய வெண்மையைத் துணி அடைகின்றது.
மறைந்திருக்கின்ற மணலை எடுத்தவுடன் "" நீர் "" ஊற்றெடுத்து வெளிப்படுவதுபோல் மறைத்திருக்கின்ற அறியாமை நீங்கியவுடன் ""அறிவு""வெளிப்பட்டுத் தோன்றுகின்றது.

'இல்லது தோன்றாது,உள்ளது சிதையாது ;என்பது சத்காரியவாதம்.
ஆகவே,ஆன்மாவில் இல்லாத,அறிவு நூதனமாகத் தோன்றுவதில்லை.
எனவே ,படித்தால் அறிவு வராது என்பது முடிந்த முடிவு.படித்தால் அறியாமை தேயும் ;உள்ள அறிவு வெளிப்படும் 
அகவே ஆன்மீக புத்தகம் படியிங்கள் 
படித்ததில் பிடித்ததை பகிருங்கள் தெளிவு கிடைக்கும் 
"தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத்து ஊறும் அறிவு.
- குறள்.
விளக்கம் ;தெய்வத்திரு வாரியார் சுவாமிகள்.

No comments:

Post a Comment