Wednesday, January 20, 2016

அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டயது- ஜோதிடத்தில் சித்தர்களின் முக்கிய பங்கு.

சோதிடம்என்பது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்படுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எதிர்வு கூறவும் விழையும் ஒரு துறையாகும். சோதிடத்துக்கு அறிவியல் அடிப்படை இல்லாதபோதும், மேற்கு கிழக்கு என்ற வேறுபாடின்றி உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் சோதிடத்தை நம்புகின்றனர். உலகின் பல பகுதிகளிலும் இருந்து வெளியாகும் செய்திப் பத்திரிகைகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான பத்திரிகைகள் சோதிட ரீதியான அன்றாட பலன்களைத் தாங்கிவருவதே இதற்குச் சான்று.கோள்களும், வான் வெளியில் அவற்றின் நகர்வுகளும் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் தாக்கத்தை உண்டாக்குகின்றன என்னும் கருத்துருவே சோதிட நூலின் அடிப்படையாகும்.

வானியல் அடிப்படை
                                      வேத காலத்திலிருந்து இந்த அறிவு விரிவாக்கம் பெற்று வளர்ச்சியடைந்த கால கட்டங்களில் முக்கியமான ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூன்று விஷயங்கள் பற்றிய சிந்தனை வளர்ச்சியை இந்தத் துறை உள்ளடக்கியது –


               1. வானியல் : வெளியில் தோன்றும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை இனம் கண்டு வகைப் படுத்துவது. அவற்றின் இயக்கம் மற்றும் சுழற்சி பற்றி அறிவது, தட்பவெப்ப நிலை மாற்றங்களில் வான் பொருட்களின் (celestial objects) தாக்கம், கிரகணங்கள், வால் நட்சத்திரங்கள் போன்றவற்றைப் புரிந்து கொள்ளுதல் முதலியவை.
                2. கணிதம் :வான் பொருட்களின் இடம் மற்றும் இயக்கம் பற்றிய அறிவை முன்னெடுத்துச் செல்ல அடிப்படை ஜியோமிதி மற்றும் முக்கோணவியல் (Trignometry) அத்தியாவசியமாயிற்று. ‘கணிதம்’ என்பதும் ஆறு வேத அங்கங்களில் ஒன்றாக அறியப்பட்டுத் தனித் துறையாக வளர்ந்து வந்தது. எனவே, ஜோதிடத்திலும் கணித அறிவின் பல கூறுகள் பயன்படுத்தப் பட்டன.
               3. கால அளவு முறைகள்: எல்லா பண்டைய நாகரீகங்களின் வளர்ச்சியிலும் காலக் கணக்கு முறைகள் இயற்கை நிகழ்வுகளின் அடிப்படையிலேயே உண்டாயின. பன்னிரண்டு ராசிகள், சந்திரனின் வளர்பிறை, தேய்பிறை சுழற்சியைக் கொண்டு நாட்களை அளவிடுதல் போன்றவை. பிறப்பு, இறப்பு நாட்கள், பருவங்கள், பண்டிகைகள் இவை அனைத்தும் இந்தக் கால அளவு முறையிலேயே குறித்து வைக்கப் பட்டன. ஆவணி மாதம் வளர்பிறையில் அஷ்டமியும் ரோகிணியும் கூடியிருந்த நாளில் கண்ணன் பிறந்தான் என்பது போல. பஞ்சாங்கம் என்பது அடிப்படையில் ஒரு காலக் கணக்குக் காட்டி என்பதாகவே உருவாயிற்று.

                            கோள்களும், விண்மீன் குழுக்களும் (constellation) வான்வெளியிலுள்ள பொருட்களே. அவை புவியீர்ப்பு விசையின் விதிகளுக்கு உட்பட்டே விளங்குகின்றன. வான்வெளியில் இவற்றின் இருப்பிடத்தை காலத்தின் அடிப்படையில் கணிக்கலாம். பண்டைக்காலச் சோதிட நூல்கள் 9 கோள்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள் 7 உண்மைக்கோள்களாகும் ஏனைய இரண்டும் நிழற்கோள்கள் எனப்படுகின்றன. அக்கோள்கள் பின்வருமாரு:

சூரியன் (ஞாயிறு Sun)
சந்திரன் (திங்கள் Moon)
செவ்வாய் (Mars)
புதன் (அறிவன் Mercury)
குரு (வியாழன் Jupiter)
சுக்கிரன் (வெள்ளி Venus)
சனி (காரி Saturn)
இராகு (நிழற்கோள்)
கேது (நிழற்கோள்)
                            கோள்களின் நிலைகளையும் நகர்வுகளையும் குறிப்பதற்கு, சோதிட நூல் புவியை மையமாகக் கொண்ட முறைமை ஒன்றையே பயன்படுத்துகின்றது. இது இராசிச் சக்கரம் (zodiac) எனப்படும். இது பூமிக்குச் சார்பாக அதனைச் சுற்றியுள்ளதாகக் காணப்படும் ஞாயிற்றின் தோற்றுப்பாதைக்கு (ecliptic) இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியாகும். இது கண்ணுக்கு புலப்படாத ஒரு கற்பனையான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள் பின்வருமாரு:

 1. மேடம் (மேஷம்)
 2. இடபம் (ரிஷபம்)
 3. மிதுனம்
 4. கர்க்கடகம் (கடகம்)
 5. சிங்கம் (சிம்மம்)
 6. கன்னி
 7. துலாம்
 8. விருச்சிகம்
 9. தனு (தனுசு)
 10. மகரம்
 11. கும்பம்
 12. மீனம் 
                            சோதிடத்தில் விண்மீன் குழுக்கள்  ஞாயிற்றின் தோற்றுப்பாதை (முழுவதுமாக 360 பாகை) 131⁄3 பாகை இடைவெளியில் 27 விண்மீன் குழுக்களாக கூர் செய்யப்பட்டுள்ளது. 'அசுவினி' ஞாயிற்றின் தோற்றுப்பாதையில் முதற் கூராகும், 'ரேவதி' கடைக்கூராகும். இதன்படி, ஒரு கோளின் நிலநிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன்குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம். ஒவ்வொரு விண்மீன் குழுவையும் மேலும் 31⁄3 பாகைகள் கொண்ட 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவு 'பாதம்' எனப்படும். ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் மீதுள்ள இராசி சக்கரமும் 30 பாகை இடைவெளியில் 12 இராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'மேடம்' இராசி சக்கரத்தில் முதற் கூராகும், 'மீனம்' கடைக்கூராகும். இராசி சக்கரத்தில் உள்ள 12 இராசிகளையும், 27 விண்மீன் குழுக்களையும், ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் பாகைகளையும் பின்வருமாறு இணைத்து பட்டியலிடலாம்: 
          1. அசுவினி முதலாம் பாதம் மேடம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம்
          2. பரணி முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம்
          3. கார்த்திகை முதலாம் பாதம் இரண்டாம் பாதம் இடபம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம்
4. ரோகிணி முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம்
 5. மிருகசீரிடம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் மிதுனம் நான்காம் பாதம் 
6. திருவாதிரை முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் 
7. புனர்பூசம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் கர்க்கடகம் 
8. பூசம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் 
9. ஆயிலியம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் 
10. மகம் முதலாம் பாதம் சிங்கம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் 
11. பூரம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் 
12. உத்தரம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் கன்னி மூன்றாம் பாதம் நான்காம் பாதம் 
13. அத்தம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் 
14. சித்திரை முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் துலாம் நான்காம் பாதம் 
15. சுவாதி முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் 
16. விசாகம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் விருச்சிகம் 
17. அனுஷம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் 
18. கேட்டை முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம்
19. மூலம் முதலாம் பாதம் தனு இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் 
20. பூராடம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் 
21. உத்திராடம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மகரம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் 
22. திருவோணம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் 
23. அவிட்டம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் கும்பம் நான்காம் பாதம் 
24. சதயம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் 
25. பூரட்டாதி முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் மீனம் 
26. உத்திரட்டாதி முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் 
27. ரேவதி முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் 

27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தெய்வங்கள் 
நட்சத்திரங்கள் -அதிஸ்டம் தரும் தெய்வங்கள் 
01. அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி 
02. பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) 
03. கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) 
04. ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்) 
05. மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்) 
06. திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான் 
07. புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்) 
08. பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்) 
09. ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) 
10. மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்) 
11. பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி 
12. உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி 
13. அத்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி 
14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார் 
15. சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி 
16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான். 
17. அனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர். 
18. கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) 
19. மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர் 
20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) 
21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான். 
22. திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்) 
23. அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்) 
24. சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்) 
25. பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்) 
26. உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்) 
27. ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன். 

மேலே குறிப்பிட்டள்ளது ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிஸ்டம் தரக் கூடிய தெய்வங்கள் ஆகும். மேலே தரப்பட்டுள்ள தெய்வங்களின் காயத்திரி மந்திரம், அஸ்டோத்திரம் ஜெபம், அவர்களின் திருக்கோவில் வழிபாடு, அவர்களின் உருவத் தியானம் ஆகியன செய்து வழிபடலாம். இருப்பினும் குல தெய்வ வழிபாடு மிக முக்கியமான வழிபாடாகும். குல தெய்வ வழிபாடிருந்தால் மட்டுமே மற்ற எந்த வழிபாடாயினும் சிறப்பைத் தரும். இதனைத் தவிர அவர்அவர்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கிரகமெதுவோ அந்த கிரகத்திற்குரிய அதிதேவதையான தெய்வத்தினையும் வழிபட்டு வாழ்வில் சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.

 நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம் 
1. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் - சிவன் 
2. ரோகிணி, அத்தம், திருவோணம் - சந்திரன் - சக்தி 
3. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன் 
4. திருவாதிரை, சுவாதி, சதையம் - ராகு - காளி, துரக்;கை 
5. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு - தட்சிணாமூர்த்தி 
6. பூசம், அனுசம், உத்திரட்டாதி - சனி - சாஸ்தா 
7. ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - விஷ்ணு 
8. மகம், மூலம், அசுவினி - கேது - வினாயகர் 
9. பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் - மகாலக்மி 

மேற்கூறிய வழிமுறை இல்வாழ்க்கைக் குறியது “பிறவிப் பெருங்கடல் நீத்துவர் நீத்தார் இறைவனடி சேராதவர்” என்ற திருவள்ளுவரின் வாக்குப்படி இறைவன் அடியினை சேர விரும்புபவர்கள் அதாவது இனியொரு பிறவி வேண்டாம் முத்தீ – மோட்சம் அடைய வேண்டும் என நினைப்பவர்கள் ஜோதிடப்படி 12ம் வீடு, அதற்குரிய கிரகம், அந்த கிரகம் இருக்கும் வீடு, அந்த வீட்டிற்குரிய கிரகம், 12ம் வீட்டினை பார்க்கும் கிரகம், 12ம் வீட்டில் உள்ள கிரகம், 12ம் வீட்டு கிரகத்துடன் சேர்ந்துள்ள கிரகங்கள், 12ம் வீட்டு கிரகத்தினைப் பார்க்கும் கிரகம் என பல தரப்பட்ட வழிகளிலும் ஆராய்ந்து தனக்குரிய வழிபாட்டு முறையினை தேர்ந்தெடுக்க வேண்டும்.
கிரஹங்கள்.
Picture
                      சூரிய குடும்பம் சார்ந்த பல கிரகங்கள் தங்களுக்குள் இரண்டாம் பட்சமாக சுயமுறைமை வைத்துக் கொண்டுள்ளது. கிரகத்தின் பொருள்களாகி வட்டப்பாதையில் வலம்வருவன இயற்கையான கோள்கள்அல்லது சந்திரன்கள் ஆகும். ஒருசில கிரகங்களை விட பெரிதாக உள்ளன. பலபெரிய இயற்கைக்கோள்கள் ஒத்த சுழற்சி,கொண்டு தனது பெற்றோர் கோளுடன் முகம்பார்த்துக் கொண்டே வட்டப் பாதையில் வலம் வருகின்றது. நான்கு பெரிய கிரகங்கள், வாயூ ராட்சதன்,இவைகளும் கிரக வளையங்கள் பெற்றுள்ளன.சிறுதுகள்களின் மெல்லிய கட்டுகள் ஒத்திசைவுடன் வட்டப்பாதையில் செலுத்துகின்றன. 
                      எல்லா கிரகங்களும் மற்றும் அவைசார்ந்த பிறபொருள்களும் சூரியனின் சுழற்சிக்கு ஏற்ப அமைந்துள்ள வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன கிரகங்களில் ஆறும், குள்ள கிரகங்களில் மூன்றும் இயற்கைத்துணைக்கோள்களின் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. அவைகள் 'சந்திரன்கள்' என அழைக்கப்படுகின்றன 'பூமியின் சந்திரன்' என்பதன் வெளிக்கிரகங்கள் ஒவ்வொன்றும் கிரக வளையத்தால் சூழப் பெற்றுள்ளது. அந்த கிரக வளையல்களில் தூசிப்படலம் மற்ற துகள்கள் படர்ந்துள்ளன.
                                      சூரியன் மின்காந்த நிறமாலையின் எக்ஸ் கதிர் பகுதியில் சூரியன் காணப்பட்ட விதம் சூரியன், அவன் குடும்பத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நட்சத்திரமாகும். அதன் முக்கியக் கூட்டமைப்பில் இருந்து மிகஅதிகத் தொலைவில் உள்ளது அதன் பரந்த பொருண்மை(332,900 பூமி பொருண்மைகள்)அதற்கு உள்ளார்ந்தஅடர்த்தியையும்,அணுக்கரு உருகி இளகும் நிலையைப்போதுமான அளவுக்குத் தாக்குப்பிடிக்கும் ஆற்றல் கொண்டுள்ளது ஏராளமான அளவில்எரிசக்தி வெளியேற்றும் சக்தி படைத்திருக்கும் சூரியன்பரந்த விண்வெளியில்கதிர்வீச்சை செலுத்துகின்றது. அக்கதிர்வீச்சு மின்சாரக் காந்த சுற்றெறிவாக400 முதல் 700 வரைக்கும் என் எம பாண்ட் எனும்அளவு அதனையும் தாண்டிப் போவதால் நாம்அதை கட்புலனாகும் ஒளி எனக்கூறுகின்றோம். சூரியன் ஆனவன் வகைப்பாட்டின்படி, மிதமான பெரியமஞ்சள் நிறத்து குள்ள விண்மீன்எனவும் அழைக்கப்படுவதுண்டு. ஆனால் இப்பெயர் தவறாக நெறிப்படுத்தலாம் ஆனாலும் பால்மண்டலத்தில் உள்ள பெரும் பான்மையான உடுக்களில் சூரியனே பெரியதும் மற்றும் வெளிச்சம் அதிகம் கெர்ண்டதுமாகும். உடுக்கள் யாவும் வகைப்பாடு செய்யப் பட்டுள்ளன. 'ஹெர்ட்ஸ்ப்ரங்- ரஸ்ஸல் வரைபடம்' மூலம் விளக்கப் பட்டுள்ளது. அது ஒரு குறிவரைகட்டப் படமாகும். அதில் உடுக்களின் வெளிச்சம் அதன் புறப்பரப்பின்உஷ்ணநிலைக்கு ஏற்ப எப்படிநிலவும் என்ற செய்தியை தனக்கு உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. பொதுவாக மிகுவெப்ப உடுக்கள் மிக வெளிச்சமாக இருக்கும். இப்படிப்பட்ட உடுக்களின் பாங்கு அதன்'முக்கிய நிரனிறை'என அழைக்கப் படுகின்றது. சூர்யனும் அதன் நடுமையத்தில் சற்று வலமிருக்கின்றது. எனினும் சூரியனைக் காட்டிலும் வெளிச்சம் மற்றும் வெப்பம் இரண்டிலும் மிகுதியாக உள்ள உடுக்கள் அபூர்வமாகவே உள்ளன. அதேசமயம் கணிசமான அளவில் மங்கலாகவும், மற்றும் குளிர்ந்திருக்கும் உடுக்கள்'சிகப்புக் குள்ள மீன்கள்'என்றழைக்கப்படுகின்றன.இத்தகையவையே பால்மண்டலத்தில் அல்லது வீதியில் பொதுப்படையாக 85 சதவீதம் காணப்படுகின்றன.முக்கிய நிரனிறையில் அமைந்துள்ள சூரியனின் மைய ஸ்தானம் ஒர் உடுவின் பிரதம வாழ்க்கைக்குரியதாக வைத்து இருக்கின்றது. அதன் அணுக்கரு உருகி இளகும்நிலை ஹைடிரஜன் இருப்பு அதிக பட்ச முள்ளதால் தீர்ந்து போகாவண்ணம் கொண்டுள்ளது. சூரியன் வெளிச்சத்தில் வளர்கின்ற முகமாகவே இருப்பதும் குறிப்பிடத் தக்க தாகும்.அதன் ஆரம்பகால வரலாற்றின்படி 70சதவீதம் வெளிச்சம் கொண்டிருந்த சூரியன் தற்போது அதைவிட அதிகம் கொண்டிருப்பது அதற்குப் பெருமை சேர்க்கும் இன்றியமையாத விஷயமாகும்.சூரியன் ஒரு 'வெகுஜன முதல் நட்சத்திரம் ' ஆகும். (முதலாம் தலைமுறை)பிரபஞ்சத்தின் படிப்படி வளர்ச்சியில் காலங்களில் பிற்பகுதியில் அது தோன்றி யுள்ளதாகக் கருதப்படுகின்றது. ஹைடிரஜன், மற்றும் ஹீலியம் (உலோகங்கள்) என அவை வானியல் பரிபாஷையில் அழைக்கப் படுகின்றன).காட்டிலும் பிற 'வெகுஜன உடுக்கள் இரண்டாவது' (இரண்டாம்தலைமுறை) அதிகம் கொண்டுள்ளது. ஹைடிரஜன், ஹீலியம் போன்றவற்றைக் காட்டிலும் கனத்த தனிமங்கள் உள் நடுவில் கொண்ட உடுக்கள் முதலாம் தலைமுறையிலேயே தோன்றி பழங்காலத்திலேயே வெடித்துச் சிதறிப் போயிருக்கக் கூடும் எனவே முதல்தலைமுறை உடுக்கள் மடிந்த பின்னரே பிரபஞ்சம் மற்ற அணுக்கூறுகளால் உருவாக்கம் செழுமையாகக் கண்டது. பழைய உடுக்கள் ஒருசில உலோகங்கள் கொண்டுள்ளன.பிறகு வந்த உடுக்கள் அதிகம் அவைகளை விடக்கொண்டிருந்தன.அப்படி உலோக மயமாக்கப்பட்ட தன்மையே சூரியனின் வளர்ச்சிக்கு இன்றியமையாத முக்கியத்துவம் கிரக முறைப்படி இரண்டாம் தலைமுறை உடுக்களுக்கு அளித்துள்ளது. ஏனென்றால் தாம் உலோகங்கள் திரளாக அடாந்துபெறும் வளர்ச்சிக்குப்பின் உருவாயின.  
                                        உள்ளார்ந்த கிரகங்கள் நான்கு உள்ளார்ந்த கிரகங்கள் அல்லது நிலம்சார்ந்த கிரகங்கள் அடர்ந்த பாறைப்படலங்களாக உள்ளன. ஒருசிலவற்றில் மட்டும் சந்திரன்கள் மற்றும் வளையமண்டலங்கள் கிடையாது. அவைகள் பெரும்பாலும் அதிகம் உயர் உருகுநிலை கொண்ட உலோகங்கள் அதாவது மணல்சத்து உப்பு கொண்டுள்ளன. அந்த உலோகங்கள் மேல்ஓடுகள் மற்றும் தண்டயப்பலகை(அடுப்பங்கரை)களாகவே காணக் கிடக்கின்றன. உலோகங்கள் என்றால் அவைகள் இரும்பும் நிக்கலுமேமையப்பகுதியில்உள்ளன.நான்கு கிரகங்களில் மூன்றான வீனஸ், பூமி, செவ்வாய் இவைகளில் கட்டுறுதி வன்மை படைத்திருக்கும் வளி மண்டலங்கள் சூழ்ந்திருக்கினறன. எல்லாவற்றிலும் அழுத்தமான எரிமலை முகடுகள்,கட்டுமானக் கலையுடன்நேர்த்தியாக மேல்பரப்பு அமைந்து கிடக்கின்றன. அதில்பிளவுண்டபள்ளத் தாக்குகள், அக்கினி மலைகள் உள்ளன. உட்புறகிரகம் என்ற பெயரால்தாழ்ந்த கிரகமோ என்ற குழப்பம் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. அப்பெயர் வழங்கப்பட்டதன் காரணம் யாதெனில் அவைகள் சூரியனுக்கு பூமியைக் காட்டிலும் அருகில் உள்ள மெர்க்குரி மற்றும் வீனஸ் இரண்டிற்கும் உரியதாகும்.
                                        மெர்குரி (புதன்) மெர்க்குரி(0.4ஏயூ) சூரியனுக்கு மிகஅருகில் உள்ள கிரகமாகும்.அது சிறிய கிரகமும் கூட!(0.055 புவிபொருண்மைகள்) அதற்கு இயற்கை விண்கலங்கள் கிடையாது. அதன் புவியமைப்பு அம்சங்களுக்காக பெயர் பெற்றதாகும். அழுத்தமான எரிமலைவாய்களில் தொங்கும் கூடல் வாய்கள் அமைந்துள்ளன. அவைகள் ஒருவேளை சரித்திர முதல்தோற்றக் காலத்தில் நிகழ்ந்த ஒடுக்கத்தால் உருவாகியிருக்கக்கூடும். மெர்க்குரி வளிமண்டலம் புறக்கணிப்பிற்குரியதாகும். அதில் அணுக்கள் மேற்பரப்பில் கதிரவன் காற்றால் தாக்குண்டு வெடிக்கும். அது மிகஅதிகம் நடுவிடத்தில் இரும்பு உலோகம் ஏராளமாக கொண்டிருக்கும். அதன் 'அடுப்பங்கரை தண்டயப்பலகை' '(மேண்டில்) பற்றிய விளக்கம் பெறப்படவில்லை. தாற்காலிக் கோட்பாடுகள்படி,அதன் வெளிப்பகுதி அடுக்குகள் ராட்சத பயன்விளைவால் முற்றிலும் களையப் பட்டுள்ளது.மேலும் இளம்சூரியனின் எரிசக்தி திரண்டு உருவாக்குவதைத் தடுத்து வந்துள்ளது. 
                                         வெள்ளி கிரகம் வீனஸ் கிரகம் தோற்றத்தில் பூமியை ஒத்திருக்கும். வானியல் அலகு 0.7 என்றஅளவில் இருக்கும். அது பூமியைப்போல் ஒருபருமனான மணல்சத்து (சிலிகேட்) இரும்பு மையத்தில் கொண்டுஉள்ளது. கணிசமான வளிமண்டலம் மற்றும் உள்ளிருக்கும் மண்ணியல் நடவடிக்கைகளுக்கு உகந்ததாக இருக்கும். அது பூமியைக்காட்டிலும் வறண்டிருக்கும். அதன் வளிமண்டலம் ஒன்பது மடங்குகள் அடர்ந்திருக்கும். அதற்கு இயற்கை விண்கலங்கள் கிடையாது. அது மிகமிக வெப்பம் கொண்ட கிரகமாகும். அதன்மேற்பரப்பு, 400 °சி சென்டி கிரேட் கொண்டுள்ளது. அதன் காரணம் வளிமண்டலத்தில் உள்ளகிரின்ஹவுஸ்-பசுமைக்கூட்டின் வாயுக்கள் ஏராளமாக இருப்பதேயாகும்.[38] நடப்பு மண்ணியல் நடவடிக்கைகள் நடைபெறுவதற்குரிய உறுதியான தடயங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. அதற்கு காந்தப்புலன் கிடையாததால் அதன் வளிமண்டலம் வெறுமையாக்கப்படாமல் தடுக்கப்படுகின்றது. எரிமலை வெளியேற்றங்கள் இருப்பினும் அத்தகு நடவடிக்கை நடக்காமல் காக்கப்படுகின்றது.
                                           புவி, பூமி பூமியானது(1 ஏயூ) உட்புற கிரகங்களில் மிகப்பெரியதும் மிக அடர்த்தியானதும் ஆன கிரகமாகும். அதுஒன்றில் மட்டும் நடப்பு மண்ணியல் நடவடிக்கைள் விட்டுவிடாமல் தொடர்ந்து நடைபெறுகின்றன. பிரபஞ்சத்தில் பூமி ஒன்றில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.UNIQ5023c0252cad7df5-nowiki-0000009A-QINU40UNIQ5023c0252cad7df5-nowiki-0000009B-QINU நிலம் சார்ந்த கிரகங்களில் அது ஒன்றுதான் திரவ நீர்மண்டலம் பெற்றுள்ளது. அத்தனிச்சிறப்பு அதற்கு மட்டுமே இருக்கின்றது. மேலும் பூமி கிரகத்தில் ஒன்று மட்டும் தான் 'கவசத்தகடு கட்டுமானம்' காணப்படுகின்றது புவி,பூமிஅதன் தனிச்சிறப்பை கூடுதலாக்குகின்றது. பூமியின் வளிமண்டலம் மற்ற கிரகங்களின் மண்டலங்களைக் காட்டிலும் வேறு பாடாக உள்ளது. உயிரினங்கள் வாழ்வதால் 21சதவீதம் பிராணவாயு கொண்டிருப்பதாலும் அத்தகு வேறுபாடுகள் தோன்றி யுள்ளன.[41] அதற்கு ஒரேஒரு இயற்கை விண்கலம் உண்டு அதுதான் சந்திரன் ஆகும். அச்சந்திரனே கதிரவன் மண்டலத்தில் அமைந்துள்ள ஒருபெரும் நிலம்சார் விண்கலம் எனப் பெயர் பெற்றுள்ளது.  
                                             செவ்வாய் கிரகம் செவ்வாய் கிரகம் (1.5ஏயூ) பூமி மற்றும வீனஸ் (0.107ஏ யூ பொருண்மைகள்) இரண்டினைக் காட்டிலும் சிறியகிரகமாக உள்ளது.அது கொண்டுள்ள வளிமண்டலத்தில் அதிகம்கரியமில வாயுவே உள்ளது. அதில் பரந்து காணக்கிடக்கும் எரிமலைகள் 'ஒலம்பஸ் மான்ஸ்' என்றழைக்கப்படுகின்றன. அங்குள்ள பிளந்த பள்ளத்தாக்குகள் 'வாலிஸ் மேரினாரிஸ்' என்று அழைக்கப் படுகின்றன. அவைகள் அதன் மண்ணியல் நடவடிக்கைகளை எடுததுக்காட்டுகின்றன. அதுவும் சமீப காலமாகத்தான் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.அதன் சிகப்புநிறம் அதில் உள்ள இரும்பு ஆக்ஸைடுகளால்(துரு)[43] ஏற்பட்ட தாகும். செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு சிறுகுறு இயற்கை விண்கலங்கள் உள்ளன. அவைகள் 'டைமோஸ்' மற்றும் 'போபோஸ்' என்றழைக்கப் பெறுகின்றன. அவைகளே கைப்பற்றப்பட்ட நட்சத்திர வடிவுக் கோள்கள் எனவும் கருதப்படுகின்றன.
                                            வெளிப்புற கிரகங்கள் நான்கு வெளிப்புற கிரகங்கள் அல்லது வாயு ராட்சதர்கள்(சில சமயங்களில் ஜோவியன் கிரகங்கள்' என அழைக்கப்படுகின்றன. மொத்தமாக 99 சதவீதம் பொருண்மையுடன் சூரியனின் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.  ஜூபிடர் மற்றம் சனி கிரகங்களில் அதிக பட்சமாக ஹைட்ரஜன், ஹீலியம் இருக்கின்றன. யுரேனஸ் மற்றும் நெப்டியூனில் அதிக பட்சம் பனிக்கட்டி உள்ளன. சில வானநூலார்கள் அவைகள் சொந்த வகைப்பாட்டிற்கே உரியன என்றும் 'பனி ராட்சதர்கள்' எனவும் கருதுகின்றனர்.நான்கு வாயு ராட்சதர்களுக்கும் வளையங்கள் உண்டு அதில் சனியின் வளையம் புவியிலிருந்து சுலபமாகக் காண இயலும். வெளிப்புற கிரகங்கள் என்னும் சொல் உயர்ந்த கிரகங்கள் என தவறாகக் கருதக்கூடாது. அவைகள் புவியின் வட்டப் பாதையைக் கடந்து உள்ளன.( வெளிப்புற கிரகங்கள்: செவ்வாய்) 
                                            சனிகிரகம்சனி(9.5ஏயூ) தனது வளையத்தால் தனிச்சிறப்பு பெற்ற தான கிரகமாகும் ஜூபிடர் போல் ஒத்த அம்சங்கள் உள்ளன. வளி மண்டலத்தில் காந்தப்புலத்தில் அத்தகு அம்சங்கள் உள்ளன. ஜூபிடரின் கொள்ளளவில் 60 சதவீதம் சனி கொண்டுள்ளது. ஆனால் பொருண்மையைப் பொறுத்த மட்டில் 95 என்றுள்ள எண்ணில் மூன்றாவ தாக உள்ளது. புவியின் பொருண்மைகள் அதனை குறைந்த அளவினில் அடர்த்தி கொண்டதாக சூரியன் குடும்பத்தில் ஆக்கியுள்ளது. 60 தெரிந்த விண்கலன்கள் இதில் உள்ளன. (3 இன்னும் உறுதி படுத்தப்படவில்லை) இரண்டு 'டைட்டான்' மற்றும் 'என்சடலாடஸ்' மண்ணியல் தொடர்பான செயல்பாடுகள் நடப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. அதிகம் பனிப்படலம் இருப்பினும்! [54] டைட்டான மெர்க்குரியை விடப்பெரியது.அது ஒன்றுதான் சூரியகுடும்பத்தில் கணிசமான வளிமண்டலம் படைத்துள்ளது. 
                                          யுரேனஸ் யுரேனஸ்(19.6 ஏயூ)14 புவிப்பொருண்மைகள் கொண்ட வெளிப்புற கிரகங்களுள் மிக இலேசானதாகும். தனிச்சிறப்பான அம்சமாக அமைவது, எல்லா கிரகங்களைக் காட்டிலும் சூரியனை அது அதன் வட்டப்பாதையில் அதன் பக்கமாகவே சுற்றிவலம் வருவதேயாகும்.ஞாயிறு செல்லும் மார்க்கத்தில்தொண்ணூறு டிகிரி ஊடுஅச்சில் சாய்வுநிலை- அதாவது ஒருக்கணித்துக் கொண்டு செல்வதேயாகும். பிற வாயு ராட்சதர்களைக் காட்டிலும் அது மிகக்குளிர்ந்த மையப்பகுதி கொண்டுள்ளது. அண்ட வெளியில் சுற்றெறியும் கதிர்வீச்சு வெப்பம் மிகக்குறைந்த பட்சமாகவே உள்ளது.[55] யுரேனஸ் தெரிந்த விவரத்தின்படி 27விண்கலங்கள் படைத்துள்ளது. அதில் பெரிதென விளங்குவது டைட்டானியா, ஒபேரான், அம்பிரியல், ஏரியல் ,மற்றும் மிராண்டா ஆகியனவாகும்.
                                         நெப்டியூன்  யுரேனஸ் காட்டிலும் சிறிதாக இருந்தாலும் நெப்டியூன் (30எயு)புவியை விட பதினேழு மடங்கு பொருண்மை கொண்டதால் அடர்த்திஅதிகம் உள்ளது. அதன் சுற்று எரியும் உள்வெப்ப வீச்சு ஜுபிடர் அல்லது சனியைப் போல் இல்லை.[56] நெப்டியூன் பதிமூன்று தெரிந்த விண்கலங்கள் கொண்டு உள்ளன.அதில் பெரிய 'ட்ரைடன்' மண்ணியல்பாக நடைமுறையில் உள்ளது.மேலும் வெந்நீர் ஊற்றுகள், திரவ நைட்ரஜன் கொண்டுள்ளன. ட்ரைடன் தன ஒரேஒரு பெரிய விண்கலன் ஆகும் அதன் வட்டப்பாதை பின்னோக்கிச்செல்லும் வண்ணம் இருக்கிறது.நெப்டியூன் அதன் வட்டப்பாதையில் ஏராளமான சிறுகிரகங்களை கொண்டுள்ளன. அவைகள் ட்ரோஜன் நெப்டியுன்|நெப்டியூன் ட்ரோஜன்கள்]] ஒன்றுக்கு ஒன்று விகிதத்தில் ஒலியலை அதிர்வுகள் கொண்டதாக உள்ளன.
                                         ஜூபிடர் ஜூபிடர்(5.2 ஏயு)318 புவியின் பொருண்மைகள் கொண்டுள்ளது. அது 2.5 மடங்குகள் பிறகிரகங்களின் மொத்த பொருண்மைகளைக் காட்டிலும் அதிகமான தாகும். அது ஹைடிரஜன் மற்றும் ஹீலியம் இரண்டாலும் இயன்றுள்ளது. அதன் வலிமையான உள்வெப்பம் பல நிரந்தர அம்சங்களை வளிமண்டலம், முகில்திரள்கள், 'பெரிய செந்நிற இடம்' என்று அறியப்படுத்தி யுள்ளன. ஜுபிடர் அறுபத்து மூன்று தெரிந்த விண்கலங்கள் கொண்டு உள்ளன. பிற மிகப்பெரிய கிரகங்களாவன: கேனிமிடே, காலிஸ்டோ, அயோ, மற்றும் யுரோப்பா நிலம்சார் கிரகங்களை ஒத்துள்ளன. எரிமலை உஷ்ணத் தன்மை, உள்ளிட வெப்பமூட்டல் இரண்டிலும் ஒத்திருக்கும் அம்சங்கள் காணலாம்.[53] 'கேனிமிடே' சூரிய குடும்பத்தில் மெர்க்குரியை விடமிகவும் பெரியதாகும்!
கிரகங்கள் சேர்க்கை பலன்கள்.
Picture
                    கிரக சேர்க்கை
1. சூரியனுக்கு: சந்திரன், செவ்வாய், குரு இம் மூன்றும் நட்புக் கிரகங்கள். சுக்கிரன், சனி, ராகு, கேது இந்த நான்கும் பகைக் கிரகங்கள் புதன் மட்டும் சமக் கிரகம் (Neutral Planet) 
2.சந்திரனுக்கு: சூரியனும் புதனும் நட்புக் கிரகங்கள் ராகுவும், கேதுவும் பகைக் கிரகங்கள்செவ்வாய், குரு, சுக்கிரன், சனி இந்நான்கும் சமக் கிரகங்கள் 
3. செவ்வாய்க்கு: சூரியன், சந்திரன், குரு இம் மூன்றும் நட்புக் கிரகங்கள். புதன், ராகு, கேது இம்மூன்றும் பகைக் கிரகங்கள் சுக்கிரனும், சனியும் சம்க் கிரகங்கள் 
4. புதனுக்கு: சூரியனும் சுக்கிரனும் நட்புக் கிரகங்கள் சந்திரன் மட்டுமே பகைக் கிரகம்செவ்வாய், குரு, சனி, ராகு, கேது இவ்வைந்தும் சமக் கிரகங்கள் 
5. குருவுக்கு: சூரியன், சந்திரன், செவ்வாய் இம் மூன்றும் நட்புக் கிரகங்கள். புதனும், சுக்கிரனும் பகைக் கிரகங்கள் சனி, ராகு, கேது இம்மூன்றும் சமக் கிரகங்கள் 
6. சுக்கிரனுக்கு: புதன், சனி, ராகு, கேது இந்த நான்கும் நட்புக் கிரகங்கள் சூரியனும், சந்திரனும் பகைக்கிரகங்கள் செவ்வாயும், குருவும் சமக் கிரகங்கள் 
7. சனிக்கு: புதன், சுக்கிரன், ராகு, கேது இந்நான்கும் நட்புக் கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய் இம்மூன்றும் பகைக் கிரகங்கள் குரு மட்டும் சமக் கிரகம் 
8. இராகுவுக்கும், கேதுவுக்கும்: சுக்கிரனும், சனியும் நட்புக் கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய் இம்மூன்றும் பகைக் கிரகங்கள் புதனும், குருவும் சமக் கிரகங்கள் 
                                        சுபக் கிரகங்களும், அசுபக் கிரகங்களும்!  Malefics and benefics: சில கிரகங்களை இயற்கையான சுபக்கிரகம் என்பார்கள்: அவைகள் முறையே சந்திரன், சுக்கிரன் & குரு சில கிரகங்களை இயற்கையான அசுபக்கிரகம் என்பார்கள்: அவைகள் முறையே சனி, ராகு, கேது & செவ்வாய் சூரியன் 50% + 50% (Mixed) புதன் நடுநிலை. சேர்க்கைகளை வைத்து அதன் தன்மை மாறும் புதன் சுபனோடு சேர்ந்தால் சுபன், அசுபனோடு சேர்ந்தால் அசுபன் ஒவ்வொரு லக்கினத்திற்கும் நன்மை தீமைகளைச் செய்யக்கூடிய கிரகங்களைப் பட்டியல் அடிப்படை வலிமை உச்சம் பெற்ற கிரகத்திற்கும், வர்கோத்தமம் பெற்ற கிரகத்திற்கும், மூலத்திரி கோணத்தில் இருக்கும் கிரகத்திற்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு? அந்த நிலைப்பாடுகளில் எது வலிமையானது? எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? முதலில் கிரகங்களின் அடிப்படை நிலைமையின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு, பிறகு மேலே உள்ள கேள்விக்கு வருவோம். 
1. இயற்கைத் தன்மை அல்லது இயற்கைக் குணம்: நன்மை செய்யக்கூடிய கிரகம் அல்லது தீமை செய்யக்கூடிய கிரகம் (நல்லவன் அல்லது கெட்டவன்) (benefic or malefic)
2. வலிமை: பலம் பொருந்தியவன் அல்லது பலமில்லாதவன். அல்லது இப்படி வைத்துக்கொள்ளுங்கள்: வலிமை உடையவன் அல்லது வலிமை இல்லாதவன் strength (strong or weak) கிரகங்களுக்கு இந்த நிலைப்பாடுகள் உண்டு. 
அதை உதாரணங்களுடன் விரிவு படுத்திப்பார்ப்போம்:
1 சுபக்கிரகம் அல்லது நன்மை செய்யக்கூடிய கிரகம்: ஜாதகத்தில் வலிமையான நிலையில்: பலன்: உங்களை விரும்பும் மாமனார். உங்களுக்காக உயிரையும் தரக்கூடியவர். அதோடு அவர் கோடிஸ்வரர்! 
1 -A சுபக்கிரகம் அல்லது நன்மை செய்யக்கூடிய கிரகம்: ஆனால் வலிமை குன்றிய நிலையில்: பலன்: தன் குழந்தைகளின் மேல் மாறாத அன்பும், பரிவும் கொண்ட தாய் - ஆனால் குழந்தைகளைக் கவனித்து, சீராட்டி வளர்ப்பதற்கு வேண்டிய பொருளாதாரம் இல்லாத நிலைமை. உங்கள் மொழியில் சொன்னால் தினமும் இரண்டு வேளை உணவிற்குக் கூட வழியில்லாத நிலைமையில் உள்ள தாய்!
2 தீய கிரகம் - ஆனால் வலிமை குன்றிய நிலையில்: பலன்: உங்களைக் கொல்ல விரும்பும் மனிதன். ஆனால் அவன் இருப்பதோ சிறையில் எனும் நிலைப்பாடு! 
2 -A தீய கிரகம் - ஜாதகத்தில் வலிமையான நிலையில்: பலன்: உங்களைக் கொல்ல விரும்பும் மனிதன். ஆனால் பார்க்கும் உத்தி யோகமோ காவல்துறையில் உயர் அதிகாரி! Deputy Commissioner of Police என்று வைத்துக் கொள்ளூங்கள்! சரி, இப்போது கேள்விக்கு வருவோம். உச்சம், வர்கோத்தமம், மூலத்திரிகோணம் என்று ஒரு கிரகம் கையில் என்ன ஆயுதத்தை வைத்திருந்தாலும், மேலே குறிப்பிட்டுள்ள 1, 1-A, 2, 2-A என்னும் கட்டுப்பாட்டுக்குள் ஒடுங்கிவிடும்! அல்லது ஒதுங்கிவிடும். உச்சத்திற்கும், மூலத்திரிகோணத்திற்கும் தனி மதிப்பு, மரியாதை உண்டு. முறையாகக் கல்லூரியில் படித்த பட்டதாரி என்று வைத்துக்கொள்ளுங்கள். வர்கோத்தமம், அவற்றிற்கு அடுத்தபடிதான். அஞ்சல் வழிக் கல்வியில் கற்ற பட்டதாரி என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படி முறையாகப் படித்த பட்டதாரிகளிலும், பிலானி, ஐ.ஐ.டி, களில் படித்த பட்டதாரிகளுக்கும் உப்புமா கல்லூரிகளில் படித்த பட்டதாரிகளுக்கும் வித்தியாசம் இருப்பதைப்போல, கிரகங்களுக்கும் படித்த விதத்திற்கான தனி மதிப்பு உண்டு. படிப்பை வைத்து உத்தியோகமும் சம்பளமும் கிடைப்பதைப் போல, கிரகங்கள் வாங்கிய மதிப்பெண்களை வைத்து ஜாதகனுக்குப் பலன்கள் கிடைக்கும்.பெற்ற மதிப்பெண்களையும், கிடைத்த வேலையையும் வைத்துத்தான் கிரகங்கள் ஜாதகத்தில் வேலை செய்யும்! கிரகங்களின் மதிப்பெண்கள்: 
தராதரம் என்று வைத்துக்கொள்ளுங்கள்: 
உச்சம் - 100% வலிமை 
மூலத்திரிகோணம் - 90% வலிமை 
சொந்த வீடு - 80% வலிமை 
நட்பு வீடுகள் - 60% வலிமை 
சம வீடுகள் - 50% வலிமை 
பகை வீடுகள் - 40% வலிமை 
நீச வீடுகள் - 10% வலிமை 
இந்த அளவுகள் எல்லாம் எடைபார்க்கும் இயந்திரத்தை வைத்துச் சொல்லப் பட்டதல்ல! அனுபவத்தில் பெற்ற உத்தேச அளவுகள். 40% வரை பாஸ். 40% ற்குக்கீழே ஃபெயில். ஒருவரின் ஜாதகத்தில் சனீஷ்வரன் துலா ராசியில் இருந்தால் அவன் உச்சம் பெற்று இருப்பான். உச்சம் பெற்று அவன் அங்கே வலிமையோடு இருந்தால், உங்களுக்கு அவன் மேலே குறிப்பிட்டுள்ளதைப்போல உங்களை விரும்பும் கோடீஸ்வர மாமனாராக இருப்பான். அல்லது அங்கே உச்சம் பெற்றும் வலிமை குன்றிய நிலையில் இருந்தால், உங்கள் மீது மாறாத அன்பும், பரிவும் கொண்ட தாயைப் போல இருப்பான். அதே சனீஷ்வரன் ஒருவரின் ஜாதகத்தில் மேஷ ராசியில் இருந்தால் நீசமாகி இருப்பான். நீசம் பெற்றவன் வலிமையின்றி இருந்தால் 2ஆம் எண்ணுள்ள பலனை எடுத்துக்கொள்ளுங்கள். வலிமையோடு இருந்தால் 2-A எண்ணுள்ள பலனை எடுத்துக்கொள்ளுங்கள். 
1. மனிதனின் வாழ்க்கையில் முதல் பத்துவருடங்கள் சந்திரனின் ஆதிக்கம்: ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருக்கும் ஜாதகனுக்குத்தான் நல்ல தாய் கிடைப்பாள். முழுமையான தாயன்பும்,அரவணைப்பும் அவனுக்குக் கிடைக்கும். குழந்தைப் பருவத்தில் இது முக்கியம்! 
2 பத்து முதல் இருபது வயதுவரை புதனின் ஆதிக்கம்: புதன் நன்றாக இருக்கும் ஜாதகன்தான், முழுமையாகக் கல்வி மற்றும் வித்தைகளில் தேர்ச்சி பெறுவான். அதற்கான அஸ்திவாரம் அமையப் பெறும் காலம் இது 
3 இருபது முதல் முப்பது வயது வரை சுக்கிரனின் ஆதிக்கம் காதல் மற்றும் மெல்லிய உணர்வுகள் நிறைந்த காலம். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், அவள் அழகாகத் தோற்றமளிக்கும் காலம். எதிலும் அழகைக் காணும் காலம். காதல் மற்றும் திருமணத்திற்கு உரிய காலம். சுக்கிரன் நன்றாக அமையப்பெற்ற ஜாதகனுக்கு அது கூடி வரும். தேடி வரும்! 
4 முப்பது முதல் நாற்பதுவயது வரை செவ்வாயின் ஆதிக்கம்: முக்கியமான காலம். மனிதன் தன் திறமைகளை, ஆற்றல்களை வெளிப்படுத்தி, வேலை அல்லது தொழிலில் உயர்ச்சி பெறும் காலம். ஜாதகத்தில் நன்றாக இருக்கும் செவ்வாய் வாழ்க்கையில் உயர்வதற்கு உதவி செய்வான். 
5 நாற்பது வயதுவரை சூரியனின் ஆதிக்கம்: பெயரும், புகழும் பெறுவதற்கு உரிய காலம். ஜாதகத்தில் நன்றாக இருக்கும் சூரியன் அவற்றைக் தேடிப் பிடித்துக் கொண்டுவந்து சேர்ப்பார். இதற்குப் பிறகுதான் - அதாவது 50 வயதிற்குப் பிறகுதான் மனிதன் பெட்டியைத் தூக்கும் காலம். என்ன பெட்டி என்று கேட்காதீர்கள். உணருகிறவர்கள் உணர்ந்து கொள்ளுங்கள். உணராதவர்களுக்குக் காலம் உணர்த்தட்டும் 
6. 50 to 60 வயது வரை சனியின் ஆதிக்கம்: தன் கணக்கைக் கூட்டிக் கழித்து லாப நஷ்டங்களை, ஐந்தொகையை (balance sheetஐ) மனிதன் பார்க்கும் காலம். பிள்ளைகளின் கல்விக்கடன், மகளின் திருமணச் செலவு, மனைவின் நச்சரிப்பால் வாங்கிய வீட்டுக் கடன் (housing loan) வாகனக் கடன் (car loan) சிலருக்கு இதய அறுவை சிகிச்சை போன்ற அறுவைக் கடன் என்று பல கடன்கள் வந்து பயமுறுத்தும் காலம். சனி வலுவாக இல்லையெனில் இந்தப் பத்து வருட காலமும் அவதியாகவே இருக்கும். கடனிலும், கவலையிலுமே கழியும்! 
7. 60 to 70 5 வயது வரை ராகுவின் ஆதிக்கம்: ஏமாற்றங்கள், துரோகங்கள், ரோகங்கள் இருக்கும் காலம். தான் இதுவரை பாடுப்பட்ட மனைவி, மக்கள், உற்றார் உறவினர் என்று பலரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே, நமக்கு உரிய மதிப்பும், மரியாதையும் இல்லையே - பலரும் உதாசீனப்படுத்துகிறார்களே எனும் சிந்தனைகள் வலுக்கக்கூடிய காலம். இவர்களுக்கா பாடுபட்டோம் என்று அலுப்புத் தட்டக்கூடியகாலம். அதோடு பல்விதமான உடல் உபாதைகள் (மூட்டு வலிகள் போன்றவை) நோய்கள் வந்து நட்புக் கொள்ளும் காலம். பலமான ஆறாம் வீடும், பலமான ராகுவும் அமைந்த ஜாதகர்கள் மட்டும் ராகுவின் தொல்லையில் இருந்து தப்பி விடுவார்கள் அல்லது விதிவிலக்குப் பெறுவார்கள் 
8 70ற்குப் பிறகு கேதுவின் ஆதிக்கம்: மனிதன் ஞானம் பெறும் காலம். குரு , சுக்கிரன் , வளர்பிறை சந்திரன் , நல்ல சேர்க்கையுடன் கூடிய புதன் இவர்கள் சுபக்கிரகங்கள் ஆவார் . சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது , தேய்பிறை சந்திரன் கெட்ட சேர்க்கையுடன் கூடிய புதன் இவர்கள் பாபகிரகங்கள். இது பொதுவான விதி. ஆனால் எந்த ஒரு பாபகிரகம் ஒரு குறிபிட்ட லக்னத்திற்கு ஆதிபத்தியம் மூலம் 5 மற்றும் 9 வீடுகளுக்கு அதிபதியானால் அவர்கள் சுபக்கிரகங்கள் போல் நன்மை செய்கின்றன. 
கிரகங்கள் சேர்க்கை பலன்கள் 
*    லக்னத்திற்கு 4,7 ஆகிய கேந்திரங்களில் சுபக் கிரகங்கள் சேர்ந்து நிற்கப் பிறந்த ஜாதகன் பொன் பொருள் மற்றும் கோடி ரூபாய் சம்பாதிக்கும் திறம் பெற்று சிறப்புடன் வாழ்வான். பலவித வாகனம் பெற்று பெருமை அடைவான்.  
*    லக்னத்திற்கு 4ம் இடம் சர ராசியாக அமைய அதில் ஒரு கிரகம் நின்றால் அந்த ஜாதகன் அரசனுக்குரிய ஆடம்பர வாழ்க்கை பெற்று யோகவானாக விளங்குவான். பெரியவர்களின் தொடர்பு பெற்று அரசாங்கத்தால் விருது மற்றும் பொருள் பெறுவான். இனிய மனைவி அமைந்து சுக ஜீவனம் செய்வான்.  
*    செவ்வாய், சனி, ராகு இவர்கள் ஒரே வீட்டில் கூடி நின்றால் பெண்களால் தன லாபம் உண்டாகும். வீடு கட்டை சுகத்துடன் வாழ்வான். எனினும் தீய தசைகள் நடக்கும் போது இந்த சேர்க்கையினால் சிற்சில துன்பங்களும் உண்டாகும்.  
*    பத்தாம் இடத்தில் 3 கிரகங்கள் இருக்கப்பெற்ற ஜாதகன் உலகம் புகழும் சன்னியாசியாக விளங்குவான். இரண்டு கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகன் தபசியாகவும் ஞானியாகவும் யோகியாகவும் இருந்து மக்களுக்கு அருள் புரிவான்.  
*    4ம் வீட்டிற்கு அதிபதியும் சந்திரனுக்கு நான்கிற்குடையோனும் எந்த ராசியில் கூடி நின்றாலும் மேலும் சுக்கிரன் பலம் பெற அந்த ஜாதகன் தேவி பராசக்தியாகிய துர்கையின் மீது பற்று கொண்டு பூஜை செய்து தேவி அனுக்கிரகம் பெறுவான். கொடியவர்களில் சூழ்ச்சிகள் இவனிடம் பலிக்காமல் இவன் வெற்றி கொள்வான்.  
*    ஒரு ராசியில் சுபக்கிரகத்துடன் 4 கோள்கள் நிற்க அதற்கு 4லில் இன்னொருவன் இருக்க அந்த ஜாதகன் தீர்க்க ஆயுளுடன் சுகமாக வாழ்வான். குதிரை, யானை பெற்ற அரசனைப் போல அனேகர் புகழ பொன் பொருள் பெற்று சிறப்பான்.  
*    8க்குடையவன் 12க்குடையவன் செவ்வாய் ஆகிய மூவரும் எந்த இடத்தில் கூடி நின்றாலும் அந்த ஜாதகன் அன்னிய தேசம் செல்வான். அதே சமயத்தில் இவர்களை சந்திரன் பார்த்தால் சில காலம் வெளிநாட்டில் அதிக பணம் ஈட்டி பின்னர் சொந்த தேசத்திற்கு வந்து சுகமுடன் வாழ்வான்.  
*     சனி, செவ்வாய், ராகு இவர்கள் லக்னத்திற்கு இரண்டாம் இடத்தோனுடன் கூடி நின்றால் அந்த ஜாதகன் சிவ பூஜையில் பிரசித்தி பெற்றவனாவான். மேலும் ஐயனார், காளி, வீரபத்திரன் போன்ற தெய்வங்களை வணங்கி தேவதை அருள் பெற்று வசியம் செய்யும் வித்தையும் அறிந்தவனாவான்.  
*    குருவும் சனியும் ராகுவும் சரம் மற்றும் உபய ராசிகளில் நின்றால் அந்த ஜாதகன் சொந்த இருப்பிடத்தை விட்டு தேச சஞ்சாரம் செய்வான். அதே சமயத்தில் லக்னாதிபதி வலுப்பெற்று இருந்தால் சொந்த ஊரிலேயே பலகாலம் வசிப்பான்.  
*    சிம்ம ராசியில் அசுர குருவான சுக்கிரனும் செவ்வாயும் கூடியிருந்தால் அந்த ஜாதகன் வித்தைகளில் தேர்ச்சி பெற்று சிற்ப சாஸ்திரத்தில் வல்லமையும் புத்தக ஆராய்ச்சியில் ஈடுபடுபவனாகவும் இருந்து அதிக பொருள் சேர்ப்பான். அன்றியும் அவன் விதவைக்கு வாழ்வளிப்பவனாய் விளங்குவான்.  
*    குருவுடன் செவ்வாயும் சுக்கிரனும் சேர அந்த ஜாதகன் நிறைந்த தனங்கள் பெற்று அரசாங்க மரியாதையும் புகழும் அடைவான். செவ்வாயும் புதனும் இணைந்தால் அவன் செல்வச் செழிப்பு மிக்க பண்டிதனாக விளங்குவான். ஆனால் செவ்வாய் புதன் இவர்களுடன் சுக்கிரன் செர்ந்து எங்கு இருந்தாலும் அவனுக்கு அங்க குறைபாடு ஏற்படும்.  
*    குரு, சந்திரன், புதன் இவர்கள் சேர்ந்து எங்கு இருந்தாலும் நல்ல அழகும் ஆயுளும் பெற்று செல்வந்தனாகத் திகழ்வான். சுக்கிரன், சந்திரன், புதன் ஆகியோர் சேர துஷ்டனாகவும் காமியாகவும் விளங்குவான்.  
*    இரண்டாம் இடத்தில் விரய ஸ்தானதிபதி நின்றால் அந்த ஜாதகன் மாட மாளிகை ஆகிய வீடுகள் கட்டி சிறந்து விளங்குவான். மேலும் லக்னாதிபதியாக குரு, சந்திரன், புதன், சுக்கிரன் இவர்கள் சுபஸ்தானங்களில் நிற்க பொன், பொருள் சேரும். இவர்கள் தசா, புக்தியில் நற்பலன்கள் தருவார்கள்.  
*    சூரியனும் சந்திரனும் சேர்ந்து ஓரிடத்தில் நிற்க அவன் தனவானாகவும் மனைவியிடம் அன்பு கொண்டவனாகவும் இருப்பான். சூரியனும் குருவும் சேர அரசாங்க செல்வாக்கு பெற்று ஐஸ்வர்யத்துடன் வாழ்வான். சூரியனும் சுக்கிரனும் சேர நல்ல மனைவி அமையப்பெற்று தாம்பத்தியம் அனுபவிப்பதில் சிறந்து விளங்குவான். சனியுடன் சுக்கிரன் கூடினால் கணவன் பேச்சை கேட்காத மனைவி வாய்ப்பாள்.  
*    சந்திரன், செவ்வாய், புதன், சூரியன், குரு ஆகியோர் சேர்ந்து இருந்தால் தீய பலன்களே உண்டாகும். அவன் பிறரையும் கெடுப்பான். மேலும் சூரியன், செவ்வாய், சனி, சுக்கிரன் ஒரே வீட்டில் கூடினாலும் ஜாதகன் வறுமையில் உழன்று பிச்சை எடுத்து உண்ணும் கதிக்கு ஆளாவான்.  
*    புதன், குரு இவர்களுடன் சந்திரன், சுக்கிரன் இவர்கள் பலம் பெற்று சேர்ந்து நிற்க அதிக செல்வமும் பூமியும் பொன்னும் பொருளும் பெற்று சுகமுடன் வாழ்வான். மேற்கண்ட கிரகங்களுடன் சனி சேர அங்க குறைவு ஏற்படும்.  
*    குரு, சுக்கிரன், சூரியன், புதன் இவர்கள் இணைந்து நின்றவன் அதிக திரவியங்கள் பெற்று சுக போகங்களை அனுபவிப்பான். குரு, சுக்கிரன், சூரியன், செவ்வாய் இவர்கள் சேர அவனும் செல்வாக்கு படைத்த தலைவனாகவும் தீர்க்க தரிசியாகவும் செல்வம் மிகுந்து வாழ்வான்.  
*    செவ்வாய்க்கு 4, 7 ஆகிய இடங்களில் சுக்கிரன் நின்றாலோ அல்லது சுக்கிரனுக்கு 5,7,11 ஆகியவற்றில் செவ்வாய் நின்றாலோ அந்த ஜாதகன் பூமியில் சிறந்து விளங்குவான். மேலும் லக்னாதிபதி கேந்திர, கோணத்தில் இருக்க வாகன சேர்க்கையும் சொந்தத் தொழில் மூலம் அனைத்து பாக்கியங்கள் அடைதலும் உண்டாகும். விளை நிலங்களும் சேரும். இதனை இவர்களின் தசா, புக்தி காலங்களில் கொடுப்பார்கள்.  
*    குரு, சனி, செவ்வாய், புதன் சேர்ந்து நிற்க சந்திரன், சுக்கிரன் இவர்கள் இணையப்பெற்ற ஜாதகன் புவியியல் சாஸ்திரங்கள் அறிந்தவனாக விளங்குவான்.  
*    சந்திரன், சுக்கிரன் ஒன்றுசேர குரு, புதன், செவ்வாய் ஒரிடத்தில் நிற்க அந்த ஜாதகன் பாக்கியசாலி ஆவான். அனேக திரவியமும் செல்வாக்கும் அடைவான். பலரை ஆதரித்து எல்லோராலும் புகழப்படுவான்.  
*    குரு, புதன், சனி, செவ்வாய், சந்திரன் ஆகியோர் ஒரே இடத்தில் நிற்கப் பிறந்தவன் துன்பங்களை அனுபவித்து கஷ்ட ஜீவனம் செய்வான். 
குறிப்பிட்ட இடங்களில் கிரகங்கள் நிற்கப் பலன்கள் 
பாக்கிய ஸ்தானாதிபதி அந்த ஸ்தானத்திற்கு  திரிகோணங்களான 1, 5, 9 ல் இருக்க அமைந்த ஜாதகனுக்கு பொருள் சேர்க்கையும் நிலம், தோப்பு மற்றும் அரண்மனை போன்ற வீடு இவை அமைந்து மகிழ்வுடன் வாழ்வான். தான தருமம்மற்றும் கோயில் பணிகள் செய்து பேரும் புகழும் அடைவான். அதே சமயத்தில் லக்னாதிபதி 6, 8, 12 ல் மறைய தனவிரயமும் பூர்வீக சொத்துக்கள் நஷ்டமும் உண்டாகும். 5, 6 க்குடைய கிரகங்கள் 3 ல் நிற்க அவர்களைப் பாவர் நோக்க அந்த ஜாதகனுக்கு பிள்ளைகள் இருக்காது. ஆனால் குரு பகவான் பார்வை பெற குழந்தைகள் உண்டாகும். 
குரு, சந்திரன், சுக்கிரன் ஆகியோர் 5ல் நிற்க அமையப் பெற்ற ஜாதகன் இவ்வுலகில் சிறப்புடன் வாழ்வான். யோகங்கள் உண்டு. குரு 5ல் தனித்து நிற்க புத்திர பாக்கியம் குறைவு. சந்திரன் 5ல் தனித்திருக்க பெண் குழந்தைகள் உண்டு. மேற்சொன்ன மூவரும் 2, 11ம் இடங்களில் இருந்தால் அந்த ஜாதகன் உத்தமனாகவும் கீர்த்திமானாகவும் விளங்குவான். பல வாகனங்களும் சேரும். பல வித்தைகளில் சிறந்து விளங்குவான். புதையலும் தனமும் கிட்டும். சுக்கிரன் கேந்திர ஸ்தானமான 4ல் இருந்தால் யோகங்கள் அதிகம் உண்டாகும். வாகனங்கள் சேரும். பூமி லாபம் பெறுவான். சுக போகங்களை அனுபவிப்பான். அதே சமயத்தில் பாவக்கிரகமான சனி 10ம் இடத்தில் இருந்தால் அந்த ஜாதகனுக்கு பிரபல யோகம் உண்டாகும். 
சந்திரனுக்கு 6, 7, 8 ஆகிய இடங்களில் சுபக் கிரகங்கள் நிற்கப் பிறந்த ஜாதகன் சிறந்த பலன்களும் நலமான வாழ்வும் அடைவான். மந்திர சக்தியும் பெறுவான். அரசாங்க நன்மைகளும் உண்டாகும். இருப்பினும் லக்னாதிபதி வலுப்பெறாவிட்டால் மேற்கண்ட யோகங்கள் உண்டாகாது. சூரியன், சனி, பாக்கியாதிபதி இவர்கள் 6ம் இடத்தில் நிற்க அந்த ஜாதகனுக்கு திரவியம் அதிகம் உண்டு. மற்ற இடங்களில் இருந்தாலும் நகைச்சுவை, நடிப்பு போன்ற துறைகளில் சிறந்து விளங்குவான் என்பதாகும். குருவுடன் புதன் சேர நல்ல பாக்கியங்கள் அடைந்து உத்தமனாவான். சுக்கிரனுடன் புதன் சேர்ந்தால் பெரியோர்கள் நட்பு பெற்றவனாகவும், சிறந்த பாடகனாகவும் விளங்குவான். சனியோடு புதன் சேர பெரிய தனவானாவன். மேலும் எதிரி பயமோ விஷ பயமோ இல்லாமல் அதிக பொருள் சேர்ப்பான். இவர்கள் சேர்க்கை சுப ஸ்தானங்களில் இருக்க நன்மை பயக்கும்.
சனி, செவ்வாய், சந்திரன், புதன் இவர்கள் சேர ஜாதகனுக்கு நீண்ட ஆயுள் உண்டு. எனினும் சோம்பேறியாகவும்,வருமானம் இல்லாதவனாகவும் அலைச்சல் அடைவான். சொந்த வீடு இருக்காது. இவர்களை குரு பார்க்க மேற்கண்ட துயரங்கள் நீங்கி நற்பலன்கள் உண்டாகும். சூரியன், புதன் இவர்கள் சேர்ந்து 1,4,8 ஆகிய இடங்களில் நிற்க குருவும் 10ம் அதிபதியும் நோக்க அந்த ஜாதகன் பெரும் செல்வம் அடைந்து புகழடைவான். பூமி, வாகனம் அமைந்து ஏவலாட்கள் பணி செய்வர். 5, 6 க்குடைய கிரகங்கள் 3 ல் நிற்க அவர்களைப் பாவர் நோக்க அந்த ஜாதகனுக்கு பிள்ளைகள் இருக்காது. ஆனால் குரு பகவான் பார்வை பெற குழந்தைகள் உண்டாகும். சூரியன், சனி, பாக்கியாதிபதி இவர்கள் 6ம் இடத்தில் நிற்க அந்த ஜாதகனுக்கு திரவியம் அதிகம் உண்டு. மற்ற இடங்களில் இருந்தாலும் நகைச்சுவை, நடிப்பு போன்ற துறைகளில் சிறந்து விளங்குவான் என்பதாகும். 
குருவுடன் புதன் சேர நல்ல பாக்கியங்கள் அடைந்து உத்தமனாவான். சுக்கிரனுடன் புதன் சேர்ந்தால் பெரியோர்கள் நட்பு பெற்றவனாகவும், சிறந்த பாடகனாகவும் விளங்குவான். சனியோடு புதன் சேர பெரிய தனவானாவன். மேலும் எதிரி பயமோ விஷ பயமோ இல்லாமல் அதிக பொருள் சேர்ப்பான். இவர்கள் சேர்க்கை சுப ஸ்தானங்களில் இருக்க நன்மை பயக்கும். சனி, செவ்வாய், சந்திரன், புதன் இவர்கள் சேர ஜாதகனுக்கு நீண்ட ஆயுள் உண்டு. எனினும் சோம்பேறியாகவும்,வருமானம் இல்லாதவனாகவும் அலைச்சல் அடைவான். சொந்த வீடு இருக்காது. இவர்களை குரு பார்க்க மேற்கண்ட துயரங்கள் நீங்கி நற்பலன்கள் உண்டாகும். சூரியன், புதன் இவர்கள் சேர்ந்து 1,4,8 ஆகிய இடங்களில் நிற்க குருவும் 10ம் அதிபதியும் நோக்க அந்த ஜாதகன் பெரும் செல்வம் அடைந்து புகழடைவான். பூமி, வாகனம் அமைந்து ஏவலாட்கள் பணி செய்வர். 
கிரஹங்கள் அடுத்த ராசிகளின் பார்வை  
ஒரு ராசியில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்போது, அதை விட்டுப் போவதற்குமுன்பே அடுத்த ராசிகளைப் பார்ப்பார்கள். கிரஹங்கள், தாங்கள் இருக்கும் ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு மாறுமுன், அந்தந்த அடுத்த ராசியின் குண விசேஷங்களை முன்னதாகவே அடையப்பெற்று, அதற்குத் தகுந்தவாறு அடுத்த ராசியின் பலாபலன்களை ஜாதகருக்கு கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். 
அதாவது, 
சூரியன் - 5 நாள் 
புதன், சுக்ரன் - 7 நாள் 
செவ்வாய் - 8 நாள் 
குரு - 2 மாதம் 
ராகு, கேது - 3 மாதம் 
சனி - 6 மாதம் 
ராகு, கேது இவைகள் கிரஹங்கள் அல்ல. இவைகள் சாயா கிரஹங்கள். சூரியன், சந்திரன் வானத்தில் சஞ்சாரம் செய்யும் பாதைகள் குறிக்கிடும் இடங்கள் (Nodes). இப்புள்ளிகள் அப்பிரதட்சணமாகச் சுற்றும். வராஹமிஹிரன் தான் எழுதிய பிரஹத் ஜாதகம் என்ற ஆதிகால நூலில் ராகு கேதுகளை கிரஹங்களாகக் குறிப்பிடவில்லை. மற்ற ஏழு கிரஹங்களை வைத்துதான் ஜோதிட பலன்களைக் கூறியுள்ளார். அவருக்குப் பிறகு தோன்றிய ஜோதிட மேதைகள்தான் ராகு கேதுகளையும் சேர்த்து ஒன்பது கிரஹங்களாகக் கருதி பலன்களைச் சொல்லியுள்ளார்கள். ராகு கேது எப்பொழுதும் ஒன்றுக்கொன்று சமசப்தமத்தில் அதாவது 1800  பாகைகளில் இருக்கும். ராகு கேதுகளுக்கு சொந்த வீடும் கிடையாது; பார்வைகளும் இல்லை எனப் பலர் கருதுகிறார்கள். இக்கிரஹங்கள் எந்த ராசியில் உள்ளனவோ, எந்த கிரஹத்தோடு கூடி உள்ளனவோ அல்லது எந்த கிரஹங்களின் பார்வைகளைக் கொண்டு உள்ளனவோ அக்கிரஹங்களின் தத்துவங்களைக் கொண்டுதான் பலாபலன்களை அளிப்பார்கள். க்ஷீர சாகரம் என்னும் பாற்கடலைத் தேவர்களும் அரக்கர்களும் கடைந்து அமிர்தம் எடுத்தார்கள் எனப் புராணம் சொல்கிறது. அப்பொழுது ஓர் அரக்கன் தேவவுருவில் வந்து அமிர்தத்தை விஷ்ணுவிடம் பெற்றான். மாறுவேடத்தில் வந்த அரக்கனை சூரிய சந்திரர்கள் விஷ்ணுவிற்குக் காட்டிக் கொடுத்தார்கள். அதன் பேரில் திருமால் தன் சக்ராயுதத்தால் அரக்கன் சிரத்தைத் துண்டிக்க, சிரம் ராகுவாகவும், உடல் கேதுவாகவும் ஆயிற்றென பெரியோர் கூறுவர். சூரிய சந்திரர்கள் தன்னைக் காட்டிக் கொடுத்ததால் இவர்களுக்கு ராகு கேதுவினால் பலத்த பகைமை ஏற்படுகிறது. இந்த சாயா கிரஹங்களுடன் சேர்ந்த எந்த கிரஹமும் தோஷத்தை அடைகிறது. முக்கியமாக சூரியனுக்கு ராகுவும் சந்திரனுக்குக் கேதுவும் பலத்த தோஷம் உண்டாக்குகின்றன.
கிரஹங்களின் பார்வை 
எல்லா கிரஹங்களும், தான் இருக்கும் இடத்திலிருந்து 7-வது வீட்டைப் பார்ப்பார்கள். 
செவ்வாய், தான் இருக்கும் இடத்திலிருந்து 4, 7, 8 வீடுகளைப் பார்க்கும் தன்மை உண்டு. (4-ம், 8-ம் விசேஷப் பார்வை) 
குரு, தான் இருக்கும் இடத்திலிருந்து 5, 7, 9 வீடுகளைப் பார்ப்பார் (5-ம், 9-ம் விசேஷப் பார்வை) 
சனி, தான் இருக்கும் இடத்திலிருந்து 3, 7, 10 ஆகிய வீடுகளைப் பார்ப்பார். (3-ம், 10-ம் விசேஷப் பார்வை) 
கிரஹங்கள் ராசியில் சஞ்சரிக்கும் கால அளவுகள் 
சூரியன் ஒவ்வொரு ராசியிலும் 1 மாதம் சஞ்சரிப்பான். 
சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் 2 1/4 நாள் சஞ்சரிப்பான். 
செவ்வாய் ஒவ்வொரு ராசியிலும் 1 1/2 மாதங்கள் சஞ்சரிப்பான். 
புதன் ஒவ்வொரு ராசியிலும் 1 மாதம் சஞ்சரிப்பான். 
குரு ஒவ்வொரு ராசியிலும் 1 வருஷம் சஞ்சரிப்பான். 
சனி ஒவ்வொரு ராசியிலும் 2 1/2 வருஷங்கள் சஞ்சரிப்பான். 
ராகு ஒவ்வொரு ராசியிலும் 1 1/2 வருஷங்கள் சஞ்சரிப்பான். 
கேது ஒவ்வொரு ராசியிலும் 1 1/2 வருஷங்கள் சஞ்சரிப்பான். 
சுக்ரன் ஒவ்வொரு ராசியிலும் 1 மாதம் சஞ்சரிப்பான். 
(வக்ரம், அதிசாரம், ஸ்தம்பனம் காரணமாக ராசியில் சஞ்சார கால அளவுகள் மாறும்) கிரஹத் தன்மை (சர-ஸ்திர-உபயம்) 
கிரஹங்கள் பலன் தரும் காலங்கள் 
சூரியன், செவ்வாய், கிரஹங்கள் ஆரம்ப காலத்திலேயே பலன்களைக் கொடுப்பார்கள்.
சந்திரன், புதன் கிரஹங்கள் அவர்கள் காலம் முழுவதும் பலன்களைக் கொடுப்பார்கள்.
குருவும், சுக்ரனும் அவர்கள் காலத்தின் மத்தியில் பலன்களைக் கொடுப்பார்கள். 
சனி, ராகு, கேது (பிற்கூரிலே) பலனைக் கொடுப்பார்கள். 
கிரஹங்களின் மார்க்கம் 
சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சனி, புதன், சுக்ரன் ஆகிய 7 கிரஹங்களும் ராசியைப் பிரதக்ஷிணமாகச் சுற்றி வருவார்கள் (clockwise) ராகு, கேது கிரஹங்கள் எதிர்ப்புறமாகச் சஞ்சாரம் செய்வார்கள் (anti-clockwise).
கிரகங்களின் தத்துவம்.
Picture
                 கிரகங்களின் தத்துவம் 
ஆண் கிரஹங்கள் 
சூரியன், 
செவ்வாய், 
குரு 
பெண் கிரஹங்கள் 
சந்திரன், 
சுக்ரன், 
ராகு 
அலி கிரஹங்கள் 
புதன், 
சனி, 
கேது 
கிரஹங்களின் நாடி 
குரு, புதன், சனி - வாத நாடி 
சூரியன், செவ்வாய், - பித்த நாடி 
ராகு, கேது,சுக்ரன், சந்திரன் - சிலேஷ்ம நாடி 
கிரஹங்களின் நிறம் 
சந்திரன், சுக்ரன், – வெண்மை நிறம்
சூரியன், செவ்வாய், கேது – சிவப்பு நிறம் 
புதன் – பச்சை 
குரு – மஞ்சள் நிறம் – பெண் நிறம் 
ராகு – கருமை நிறம் 
கிரஹங்களின் ஜாதி 
குரு, சுக்ரன், – பிரமாண ஜாதி 
சூரியன், செவ்வாய் – சத்திரிய ஜாதி 
சந்திரன், புதன் – வைசிய ஜாதி 
சனி – சூத்திர ஜாதி 
ராகு, கேது – சங்கிரம ஜாதி 
கிரஹங்களின் ரத்தினங்கள் 
சூரியன் - மாணிக்கம் 
சந்திரன் - முத்து 
செவ்வாய் - பவளம் 
புதன் - பச்சை 
குரு - புஷ்பராகம் 
சுக்ரன் - வைரம் 
சனி - நீலம் 
ராகு - கோமேதகம் 
கேது - வைடூர்யம் 
கிரஹங்களின் வாகனங்கள் 
சூரியன் - மயில், தேர் 
சந்திரன் - முத்து விமானம் 
செவ்வாய் - (அன்னம்) செம்போத்து, சேவல் 
புதன் - குதிரை, நரி 
குரு - யானை 
சுக்ரன் - (கருடன்) குதிரை, மாடு, விமானம் 
சனி - காக்கை, எருமை 
ராகு - ஆடு 
கேது - சிம்மம் 
கிரஹத் தன்மை  
செவ்வாய், சந்திரன், ராகு, கேது – சரக் கிரஹங்கள் 
சூரியன், சுக்ரன் – ஸ்திரக் கிரஹங்கள் 
புதன், குரு, சனி – உபயக் கிரஹங்கள் 
கிரஹங்களின் குணம் 
சந்திரன், குரு – சாதிமீகம் 
சுக்ரன், செவ்வாய் – ராஜஸம் 
சனி, புதன், ராகு, கேது, சூரியன் – தாமஸம் 
கிரஹங்களின் நட்பு வீடுகள் 
சூரியன் – விருச்சிகம், தனுசு, கடகம், மீனம் 
சந்திரன் – மிதுனம், சிம்மம், கன்னி. 
செவ்வாவ் – சிம்மம், தனுசு, மீனம் 
புதன் - ரிஷபம், சிம்மம், துலாம். 
குரு - மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம். 
சுக்ரன் – மிதுனம், தனுசு, மகரம், கும்பம். 
சனி – ரிஷபம், மிதுனம். 
ராகு, கேது – மிதுனம், கன்னி,துலாம், தனுசு, மகரம், மீனம். 
கிரஹங்களின் பகை வீடுகள் 
சூரியன் - ரிஷபம், மகரம், கும்பம் 
செவ்வாய் - மிதுனம், கன்னி 
புதன் - கடகம், விருச்சிகம் 
குரு - ரிஷபம், மிதுனம், துலாம் 
சுக்ரன் - கடகம், சிம்மம், தனுசு 
சனி - கடகம், சிம்மம், விருச்சிகம் 
ராகு, கேது - கடகம், சிம்மம் 
சந்திரன் - எல்லா வீடுகளும் நட்பு (பகை கிடையாது) 
கிரஹங்களின் சமித்துக்கள் 
சூரியன் - எருக்கு 
சந்திரன் - முருக்கு 
செவ்வாய் - கருங்காலி 
புதன் - நாயுருவி 
குரு - அரசு 
சுக்ரன் - அத்தி 
சனி - வன்னி 
ராகு - அறுகு 
கேது - தர்ப்பை 
கிரஹங்களின் சுவைகள் 
சந்திரன் - உப்பு 
குரு - தித்திப்பு 
சுக்ரன் - புளிப்பு 
சூரியன் - கார்ப்பு 
செவ்வாய் - எரிப்பு, உறைப்பு 
புதன் - உவர்ப்பு 
சனி - கைப்பு 
ராகு - கைப்பு 
கேது - உறைப்பு 
கிரஹங்களின் பஞ்சபூத கிரஹங்கள் 
சந்திரன், சுக்ரன் - அப்புக் கிரஹம் 
செவ்வாய் - பிருதிவிக் கிரஹம் 
குரு, சூரியன் - தேயுக் கிரஹம் 
புதன் - வாயு கிரஹம் 
சனி, ராகு, கேது - ஆகாய கிரஹம் 
கிரஹங்களின் திக்குகள் 
சூரியன் - கிழக்கு 
சந்திரன் - வாயுமூலை (வடமேற்கு) 
செவ்வாய் - தெற்கு 
புதன் - வடக்கு 
சுக்ரன் - ஆக்னேயம் (தென்கிழக்கு) 
குரு - ஈசான்யம் (வடகிழக்கு) 
சனி - மேற்கு 
ராகு - தென்மேற்கு 
கேது - வடமேற்கு 
கிரஹங்களின் தெய்வங்கள் 
சூரியன் - சிவன் 
சந்திரன் - பார்வதி 
செவ்வாய் - சுப்ரமண்யர் 
புதன் - விஷ்ணு 
குரு - பிரம்மா, தக்ஷிணாமூர்த்தி 
சுக்ரன் - லக்ஷ்மி, (இந்திரன்), வருணன் 
சனி - யமன், சாஸ்தா 
ராகு - காளி, துர்கை, கருமாரியம்மன் 
கேது - விநாயகர், சண்டிகேச்வரர் 
கிரஹங்களின் ஆட்சி, உச்சம், நீசம், மூலதிரிகோணம் 
கிரஹம்                      ஆட்சி                                     உச்சம்              நீசம்              மூலதிரிகோணம் 
சூரியன்                       சிம்மம்                                  மேஷம்           துலாம்                  சிம்மம் 
சந்திரன்                      கடகம்                                    ரிஷபம்            விருச்சிகம்        ரிஷபம் 
செவ்வாய்                மேஷம்,விருச்சிகம்       மகரம்            கடகம்                     மேஷம் 
புதன்                            மிதுனம், கன்னி                 கன்னி             மீனம்                      கன்னி 
குரு                               தனுசு, மீனம்                       கடகம்            மகரம்                      தனுசு 
சுக்ரன்                          ரிஷபம், துலாம்                 மீனம்              கன்னி                     துலாம் 
சனி                               மகரம், கும்பம்                   துலாம்            மேஷம்                கும்பம்
ராகு                               கன்னி                                     ரிஷபம்           விருச்சிகம்         ரிஷபம் 
கேது                               மீனம்                                விருச்சிகம்         ரிஷபம்            விருச்சிகம் 
                              சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது –  லக்னத்துக்கு 8, 12-ல் இருந்தால் மறைவு. சந்திரன், புதன், குரு –  லக்னத்துக்கு 3,  6,  8,  12-ல் இருந்தால் மறைவு. சுக்ரன் லக்னத்துக்கு 3,  8-ல் மட்டும் இருந்தால் மறைவு. 6, 12-ல் இருந்தால் மறைவு இல்லை.
 சூரியன் :
Picture
                    1 . சூரியன் : ஒரு நெருப்பு கோளம் ஆகும். இதை நாம் கிரகம் என்று அழைக்கிறோம். ஆனால் சிலர் இதனை நட்சத்திரம் என்று அழைக்கின்றனர். ஆனால் ஜோதிடத்தில் நாம் கிரகம் என்றே அழைக்க வேண்டும். இந்த கிரகத்தை மையமாக வைத்தே அனைத்து கிரகங்களும் இயங்கி வருகிறது. சூரியன் வான்வெளியில் தன்னைத் தானே சுற்றி சந்திரன்வருகிறது. 
                      இது நமது பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு சுமாராக 9,20,30,000 KM ஆகும். சூரியன் தன்னைத்தானே ஒரு தடவை சுற்றி வர ஒரு மாதம் காலம் ஆகிறது. 12 ராசியையும் சுற்றி வர 365 நாள் 15 நாழிகை 32 விநாடிகள் ஆகிறது. இது தான் நாம் ஒரு வருடம் என்கிறோம். இவர் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் தங்கி இருப்பார். இவர் அடுத்த ராசிக்கு செல்லும் போது அடுத்த மாதம் பிறக்கும். சூரியன் ஆத்ம காரகன் என்று அழைக்கப்படுகிறார். இவரே உடம்புக்கு உயிர் தருபவர். சூரியனை வைத்தே லக்கினம் கணக்கிடப்படும். சூரியனை வைத்து தகப்பனார், உடல்பலம், ஆண்மை,பரிசுத்தம்,அரசியல் தொடர்பு தகப்பனார் உடன் பிறந்தவர்கள், புகழ் அனைத்தும் பார்க்க வேண்டும்.இவர் ஐந்தில் வந்து அமரும் போது புத்திர தோஷத்தை தருகிறார். ஏழில் வந்து அமரும் போது களத்திர தோஷத்தை தருகிறார். உலகில் அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் ஆகிய எல்லாவற்றுக்குமே ஆத்மாவாக விளங்குவது சூரியனே . சூரியனே நவக்கிரகங்களுள் முதன்மையாகும். ஒருவனாக எப்போதும் சஞ்சரிப்பவன் யார் என்று மகாபாரதத்தில் யட்ச பிரச்னத்தில்  கேள்வி எழுகிறது. அவன் சூரியனே என்றும் விடை கிடைக்கிறது.  ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின்  ஏழு சந்தங்களை  ஏழு குதிரைகளாகக் கொண்டு பூட்டி பவனி வருகிறான் சூரியன். 
                                          ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். சுய நிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கெளரவம், அந்தஸ்து, வீரம், பராக்ரமம், சரீர சுகம், நன்னடத்தை ஆகியவற்றிற்குக் காரகத்துவம் சூரியனுக்கே உண்டு. கண், ஒளி, உஷ்ணம், அரசு, ஆதரவு இவற்றின் அதிபதியும் சூரியனே! கிழக்குத் திசை சூரியனுக்கு உரியது. சூரியனின் அருளால் வடமொழி அறிவு ஏற்படும்.உஷா தேவி, சாயா தேவி ஆகிய இரு தேவிகளுடன் சூரியனார் கோவிலில் சூரியன் விளங்குகிறார். 
அக்னி இவருக்கு அதி தேவதை. 
ருத்ரன் இவருக்கு பிரத்யதி தேவதை. 
மாணிக்கம் உகந்த ரத்தினம். 
ஏழு குதிரைகள் பூட்டிய ரதமே சூரியனின் வாகனம்! 
சூரியன் ஆன்மாவை பிரதிபலிப்பவன் சூரியன். ஓருவருக்கு ஆத்மபலம் அமையவேண்டுமானால் சூரியபலம்  ஜாதகத்தில் அமையவேண்டும். சூரியனை வணங்கி ஆதித்திய ஷிருதய மந்திரத்தால் இராமன்  இராவனனை வெல்லும் ஆற்றல் பெற்றான். வேதங்களில் தலைசிறந்த மந்திரம் காயத்ரீ. காயத்ரீ  மந்திரத்துக்கு உரியவன் சூரியன். சூரியநமஸ்காரம் என்ற ஓரு விசேஷமான வழிபாடு முறை  உண்டு. இதை செய்வதில் ஆன்மீக பலமும் சரிர பலமும் அடையமுடியும் என்பது அனுபவம் கண்ட  உண்மை. சுயநிலை,சுய-உயர்வு, செல்வாக்கு கௌரவம், ஆற்றல், வீரம், பராகிரமம், சரிர  சுகம், நன்நடத்தை நேத்திரம், உஷ்ணம், ஓளி அரசாங்க ஆதரவு முதலியவற்றின் காரன்  சூரியன். 
சூரியன் அக்கினியை அதிதேவதையாக கொண்டவன். 
கதிரவன், ரவி, பகலவன் என பல பெயர்கள்  உண்டு. 
தகப்பனை குறிக்கும் கிரகம் சூரியன். 
உத்திரம், உத்திரட்டாதி, கார்திகை  நட்சத்திரக்கு உரியவன். 
சூரியனுக்கு சொந்த வீடு சிம்மம். 
உச்ச வீடு மேஷம், 
நீச்ச  வீடு சுக்கிரன். 
சூரியனார் கோவில் 
அருள்மிகு சிவசூரியநாராயணமூர்த்தி ஆலயம் 
நவக்கிரகங்களில் முதன்மையாகக் கருதப்படுவது சூரியன்.வாரத்தின் முதல் நாளான ஞாயிறு சூரியனின் பெயரைக் கொண்டே ஏற்பட்டுள்ளது.சூரியன் காசிப முனிவருக்கு அதிதி பால் பிறந்தவர் என்பதால் அவருக்கு ஆதித்தன் என்ற பெயர் உண்டாயிற்று. சூரியனார் கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரியின் வடகரையில் உள்ளது.ஆடுதுறைக்கு தெற்கில் இரண்டு கி.மி தூரத்தில் சூரியனார் கோவில் உள்ளது. 
இறைவன் : ஸ்ரீ சிவசூரியநாராயணமூர்த்தி 
இறைவி : சாயாதேவி,உஷாதேவி 
தீர்த்தம் : சூர்யப்புஷ்கரணி 
ஸ்தலவிருக்ஷ்ம் : வெள்ளெருக்கு 
நவக்கிரக கோவில்களில் ஒன்றான கோவிலே சூரியனார் கோவில் ஆகும். 
இந்தக் கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறை என்னும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. மற்ற நவக்கிரக கோவில்கள் அணைத்திலும் சிவபெருமானே மூலவராக இருக்க...இங்கு மட்டும் சூரிய பகவான் முக்கிய கடவுளாக காட்சியளிக்கிறார்.  
வரலாறு: இதுவரை கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் மூலம் இக்கோவில் குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் (கி.பி 1060 - கி.பி.1118) கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. முதலில் இக்கோவில் அர்காவனம் என்று அழைக்கப்பட்டு பின்னரே சூரியனார் கோவில் என்று மாறியது. 
கட்டிடக்கலை: இக்கோவிலின் இராஜகோபுரம் 50 அடி உயரம் கொண்டது. மொத்தம் மூன்று நிலைகளையும் ஐந்து கலச்ங்களையும் உடையது.  இக்கோவிலின் முன் புஷ்கரினி தீர்த்தமும் நவக்கிரக தீர்த்தமும் உள்ளன. 
சிற்பக்கலை: கோவில் கோபுரம் முழுவதும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கர்ப்பக்கிரகத்தில் சூரிய பகவானும் இடது புறம் உஷா தேவியும் வலது புறம் ப்ரத்யுஷா தேவியும் காட்சியளிக்கின்றனர்.  மேலும் மற்ற எட்டு கிரகங்களுக்கான கடவுள்களும் இங்கு தனித்தனி சந்நிதியில் காட்சியளிக்கின்றனர். 
வழிபடும் முறை:  கண் நோய்கள், இருதய நோய்கள் , மஞ்சள் காமாலை ஆகியநோய்களால் பாதிக்கப்பட்டோரும் ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி ஆகியன உள்ளோரும், நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் நன்மை பயக்கும். மேலும் இங்கு 12 ஞாயிற்றுக்கிழமைகள் தங்கி வழிபடுவது சிறப்பு. 
ஆதித்ய ஹ்ரதயப் பாடலை பாடி வழிபடுதலும் நன்று. 
தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு கிழக்கே கும்பகோணம்-பூம்புகார் சாலையில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. ஆடுதுறை இரயில் நிலையத்தில் இறங்கி அணைக்கரை செல்லும் பேருந்தில் ஏறி இக்கோவிலை அடையலாம். திருமங்கலக்குடி காளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சற்று தொலைவு நடந்து கோவிலை அடையலாம். நவநாயகர்களில் சூரியன் சுபக்கிரகம் ஆவார். இவரை வழிபட்டால் புகழ் கூடும். மங்களம் உண்டாகும். உடல் நலம் பெறும். சனிக்கிரகத்தால் பாதிப்படைந்தவர்கள் சூரியனார் கோவில் சென்று வழிபடுதல் வேண்டும். சிவப்பு மலர்களால் சூரியனாரை அர்ச்சித்து கோதுமையை நிவேதித்து ஞாயிற்றுக்கிழமை விரதம் மேற்கொள்வது நலம். சூரியனார் கோவில் ஸ்தலத்தில் சூரிய பகவான் ஆலயம் மேற்கு நோக்கிஅமைந்திருக்கிறது.இராஜகோபுரத்திற்கு வெளியே சூர்யப்புஷ்கரணி என்ற மூன்று நிலைகளோடு ஐந்து கலசம் தாங்கி உயர்ந்து நிற்கிறது.சிவசூரியநாராயணமூர்த்தி இடதுபுறத்தில் உஷாதேவியும் வலதுபுறத்தில் சாயாதேவியும் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்கள். நவக்கிரகங்களே தங்களது சாபம் நீங்க விநாயகர் பிரதிஷ்டை செய்து, வழிபட்டு அருள் பெற்ற தலம் சூரியனார்கோவில். தென்னகத்தில் சூரியனுக்கான தனிக்கோயில் இதுதான். இங்கு, உஷாதேவி- சாயாதேவியுடன் அருளும் சூரியனாரைத் தரிசிக்கும் அதே நேரம், குருபகவானின் அருட்பார்வையும் ஒருசேர பெறலாம். சூரிய பகவானைச் சுற்றி நவக்கிரக நாயகர்களும் தனிச் சந்நிதிகளில் அருள்வது விசேஷம். கும்பகோணத்திலிருந்து கிழக்கே சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத் தலம் '
சூரியன் தை மாதம் மகர ராசியில் சஞ்சரிப்பதையே மகர சங்கராந்தியாகக் கொண்டாடுகிறோம் அன்று சூரியன், தட்சிணாயனத்தில் இருந்து உத்தராயனத்துக்கு சஞ்சரிக்கும் காலத்தில்... சூரிய பகவானுக்கு கோதுமை சர்க்கரைப் பொங்கல், கரும்பு, வாழை, தேங்காய் கொண்டு நைவேத்தியம் செய்து சிவப்பு வஸ்திரம், செந்தாமரைப் பூக்கள் அணிவித்து வழிபடுவது சிறப்பு. இதனால் சத்ரு நாசம்... சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும். கண் கோளாறுகளும் நீங்கி அருள்பெற்றுச் செல்வது இந்தத் தலத்தின் சிறப்பு'' மேலும், இந்தத் தலத்தின் விருட்சமான வெள்ளெருக்கு மரத்தில் சிவப்புத் துணி சாற்றி, மஞ்சள் கட்டி... புதுமணத் தம்பதிகள் வழிபட்டால், சூரியகடாட்சம் நிறைந்த குழந்தைகள் பிறக்கும். தீராத தோல் நோயும் தீரும் என்பது நம்பிக்கை. 
இறைவன் :சூரியன் 
தல விருட்சம்;எருக்கு 
நிறம் : சிவப்பு 
வச்திரம்: சிவப்புத் துணி 
மலர்: தாமரை மற்றும் எருக்கு 
இரத்தினம்: ரூபி 
தானியம் - கோதுமை 
வாகனம்: ஏழு குதிரைகள் பூட்டிய தேர் 
உணவு: சர்க்கரைப் பொங்கல், ரவை மற்றும் கோதுமை 
தேசம் - கலிங்கம் 
நட்பு கிரகம் - சந்திரன்.வியாழன்.செவ்வாய் 
பகை கிரகம் - சுக்கிரன்.சனி.ராகு.கேது 
நட்சத்திரம் - கார்த்திகை,உத்திரம்,உத்திராடம் 
இனம் - ஆண் 
நீசம் - துலாம் 
உச்சம் - மேஷம் 
                                      ஒவ்வொரு வீட்டிலும் சூரியன் இருந்தால் என்ன பலன்  ஒரு கிரகம் ஒரு வீட்டில் இருக்கும் போது அந்த வீடு அந்த கிரகத்திற்க்கு அது உகந்த வீடா அல்லது அந்த வீடு பகை வீடா என்று பார்க்க வேண்டும். அந்த வீட்டிற்க்கு எந்த கிரகத்தின் பார்வை இருக்கிறது என்றும் பார்க்க வேண்டும் அப்பொழுது தான் பலன்கள் சரியாக இருக்கும். 
சூரியன் சொந்த வீட்டில் அல்லது உச்ச வீட்டில் இருந்தால் பணம் குவியும். செல்வாக்கு பெருகும் பலம் குறைந்து சூரியன் அமர்ந்தால் பணத்தை இழக்க நேரிடும் படிப்பு குறைவு ஏற்படும், முரட்டு தனமான பேச்சு ஏற்படும்.
இரண்டாம் வீட்டில் இருக்கும்சூரியனால் குடும்ப நலத்தை பெறுவது குறைவாகும். சூரியன் முதல் வீட்டில் இருந்தால் கண்ணில் நோய் இருக்க வாய்ப்பு உண்டு. சந்திரன் வீடான கடகம் லக்கனம் ஆக இருப்பவர்கள் கண்ணில் ஒரு கோடு இருக்க வாய்ப்பு உண்டு. முதல் வீட்டில் சூரியன் இருக்கும் போது அந்த நபர் மிக சிறந்த திறமையாளராகவும் இருப்பார். அந்த லக்கனம் மேஷமாகவும் அல்லது சிம்மமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் அந்த நபருக்கு பணம் நன்றாக வரும். நல்ல படிப்பையும் கொடுப்பார்.ஒரு சிலர் பித்த சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கும் தலையில் பாரமாக இருக்கிறது என்று சொல்வார்கள். திருமண வாழ்வு சந்தோஷமாக இருக்கும். கோபமும் பொறுமை இல்லாதவராகவும் இருப்பார்கள். முதல் வீடு லக்கனம் லக்கனத்தில் சூரியன் இருந்தால் தலை வழுக்கை தலையாக இருக்க வாய்ப்பு உண்டு அல்லது ஏறு நேற்றியாகவும் இருக்க வாய்ப்பு அதிகம். உங்கள் ஜாதகத்தை எடுத்து வைத்துக்கொண்டு எனக்கு முதல் வீட்டில் சூரியன் இருக்கிறது ஆனால் முடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இல்லை என்று கேட்க வேண்டாம். எல்லாம் பொது பலன்கள் மட்டும்தான். 
மூன்றாம் வீட்டில் இருக்கும் சூரியனால் நல்ல வீரனாக இருப்பார்கள். நல்ல செல்வவளம் இருக்கும். தாய் நலம் பாதிக்கப்படும். தாய்க்கும் மகனுக்கும் உறவுநிலை திருப்திகரமாக இருக்காது. 
நான்காம் வீட்டு சூரியன் நல்ல பலத்தோடு இருந்தால் அரசாங்கத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். சொத்துக்கள் சேரும். நல்ல நட்பு உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும். தாயார் நல்ல நலத்துடன் வாழ்வார்கள்.நான்காம் வீட்டு சூரியன் கெட்டு இருந்தால் தாயார் நலம் பாதிக்கப்படும். மகிழ்ச்சி உண்டாகாது. அரசாங்கத்தில் பணியாற்றி மிகவும் குறைவாக சம்பாதித்து தந்தையின் சொத்துகளை அழிப்பார். இதயநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 
சூரியன் 5 ஆம் வீட்டில் நல்ல நிலைமையில் இருந்தால் நல்ல அறிவாற்றலை தருவார் . மலை பிரதேசங்களில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். நல்ல பண வசதிகள் கிடைக்கும்.சூரியன் கெட்டு இருந்தால் கடுமையான புத்திர தோஷம் ஏற்படும். வயிற்றுக் கோளாறு ஏற்படும். இந்த இடத்தில் சூரியன் இருப்பது ஆயுள் குறைந்து இருக்கும். 
சூரியன் 6 ஆம் இடத்தில் நல்ல நிலையில் இருந்தால் பகைவர்கள் இருப்பார்கள். அவர்களை வெற்றிக்கொள்ளும் வாய்ப்பை தருவார். நல்ல பணிகளை செய்ய வைப்பர் .செல்வம் குவியவைப்பார். வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருக்கவைப்பார். நல்ல ஜரணசக்தி கிடைக்கும்.6- ஆம் இடத்து சூரியனால் சிற்றின்ப வேட்கையை அதிகமான தருவார். அரசாங்கத்தின் மூலம் பொருள் செலவு ஏற்படும். மனைவியின் உடல் நிலை சரியாக இருக்காது. 
சூரியன் 7 ல் இருந்தால் ஆண் ஜாதகராக இருந்தால் பெண்களால் மனசிக்கலை தருவார். உடம்பில் அடிபடும். உடம்பு சுகம் இருக்காது கவலைகள் வரும் 7 ஆம் இடத்து சூரியனால் அரசாங்கத்திற்க்கு எதிராக ஈடுபடவைக்கும். திருமணவாழ்வில் தடை உண்டாகும். தொழிலில் வருமானத்தை உண்டுபண்ணமாட்டார். வாழ்க்கை துணையின் நலத்தை கெடுப்பார். 
சூரியன் 8 ல் உள்ள சூரியனால் கண் பார்வையை மங்கசெய்வார். அதிக காலம் வாழ்வது கடினம் ஆயுளை குறைக்க செய்வார். செல்வத்தை இழக்க செய்வார். நண்பர்கள் மூலமும் பெண்கள் மூலமும் தீமைகள் உண்டாகும். உற்றார் உறவினர்களை விட்டு பிரிவார்கள். உடலில் மர்மபாகங்களில் உபத்திரம் உண்டாகும். மனதில் எப்பொழுதும் கவலை ஏற்பட்டுக்கொண்டு இருக்கும்.
சூரியன் 9 ல் உள்ள சூரியனால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆட்சியில் இருந்தால் தந்தையிடம் நன்றாக நடந்துகொள்வார் தந்தையாரின் பாசம் இவருக்கு கிடைக்கும்.பகைவீட்டில் இருந்தால் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு கெடுக்கும். அடிக்கடி பயணம் செய்ய வைக்கும் நல்ல அறிவு வெற்றி வாழ்க்கை வசதிகள் ஆகியவற்றை பெறவைக்கும். 
சூரியன் 10 ல் உள்ள சூரியனால் நல்ல கல்வி கிடைக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசாங்கத்தில் பணிபுரிய நேரிடும் வாகன வசதி கிடைக்கும். பெரிய தொழில்களை நிர்வகிக்க முடியும். 
சூரியன் 11 ல் உள்ள சூரியனால் செல்வம் குவிய செய்வார். வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வர் நல்ல உடம்பு பலம் உண்டாகும். பல்வேறு துறைகளில் வருவாய் வர செய்வார். வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி ஏற்படும் அரசாங்க வேலை கிடைக்கும். 
சூரியன் 12 ல் உள்ள சூரியனால் தொழில்களில் வீழ்ச்சியை உண்டாகும். அனைத்து முயற்சிகளிலும் தோல்வியை உண்டாக்குவார் செல்வ வளம் இருக்காது. புனித காரியங்களுக்காக செலவு செய்திடவைப்பார். புனித யாத்திரை செய்திடவைப்பார். 
ஆதித்யன் (சூரியன்) 
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே 
பாசஹஸ்தாய தீமஹி 
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத் 
ஓம் பாஸ்கராய வித்மஹே 
திவாகராய தீமஹி 
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத் 
ஓம் பாஸ்கராய வித்மஹே 
மஹா ஜ்யோதிஸ்சக்ராய தீமஹி 
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத் 
ஓம் பாஸ்கராய வித்மஹே 
மஹாத்யுதிகராய தீமஹி 
தன்னோ ஆதித்யஹ் ப்ரசோதயாத் 
ஓம் பாஸ்கராய வித்மஹே 
மஹாதேஜாய தீமஹி 
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத் 
ஓம் ஆதித்யாய வித்மஹே 
மார்தாண்டாய தீமஹி 
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத் 
ஓம் லீலாலாய வித்மஹே 
மஹா த்யுதிகராய தீமஹி 
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத் 
ஓம் பிரபாகராய வித்மஹே 
மஹா த்யுதிகராய தீமஹி 
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்
சந்திரன்.
Picture
                          2. சந்திரன் இது பூமியில் இருந்து 2738800 KM துரத்தில் சுற்றி வருகிறது . இது பூமிக்கு உபகிரகம். இது தன்னைத் தானே சுற்ற 27 நாட்கள் 8 மணி நேரம் ஆகிறது. இது பூமியை 29 நாட்கள் 12 மணி 44 விநாடிகளில் சுற்றி வருகிறது. சந்திரன் மனதுக்கு காரகம் ஆகிறார். தாயாருக்கும் காரகம் ஆகிறார்.சந்திரன் இரட்டை நிலை பண்பு கொண்டது. வளர்பிறை.தேய்பிறை என்ற இரண்டு நிலைப்பாடு உண்டு. அதற்கு ஏற்றதுப்போல் தான் பலன்கள் தரும். சந்திரனை கொண்டு ராசி கணக்கிடப்படுகிறது. சந்திரனுடன் கெட்ட கிரகங்கள் இணைவது நல்லது கிடையாது. முக அழகு, பெண் வழியில் லாபம், நீர் சம்பந்தமான பொருட்கள். சந்திரன் பார்வை 7ம் பார்வை மட்டும் உண்டு. அதைப்போல் சந்திரன் எட்டில் அமரும் போது வாழ்க்கை சோதனை ஆகிவிடும். ஏழில் தனித்து அமரும் போது காதல் மணம் தருகிறார். உயிர்களை இன்பத்தில் லயிக்கச் செய்து சுகம் காண வைப்பது சந்திரனின் இயல்பு. சந்திரனின் அதிகாரத் தலம் திங்களூர். வெண்மை வாய்ந்த அலரி மற்றும் அல்லி மலர்களால் இவரை அர்ச்சித்து பச்சரிசி நிவேதித்து நலம் பெறலாம். திங்களூரில் சந்திரனை வழிபடுவதால் நலம் பெறலாம். மனதிற்க்கும், உடலுக்கும் காரகன் சந்திரன். உலக வாழ்வுக்கு சரிர பலம் முக்கியம்.  சரிர பலத்திற்க்கு மனவளம் அடிப்படை. ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்றிருந்தால்  இரண்டையுமே அடைய முடியும். ரோகினி அஸ்தம் திருவோணம் இந்த மூன்று  நட்சத்திரங்களுக்கும் நாயகன் சந்திரன். தாய்க்கு காரகன் சந்திரன். கடகம் ஆட்சி  எனும் சொந்த வீடு, ரிஷபம் உச்ச வீடு, விருச்சிகம் நீச வீடு. திருமண பொருத்தங்கள்  சந்திரன் சஞ்சாரம் செய்யும் நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டே உறுதிபடுத்தபட்டு  வருகின்றன. சுபமுகர்தங்கள் நிச்சயிக்கபடுவதும் சந்திரனைக் கொண்டுதான். நாம்  பிறக்கும் போது சந்திரன் இருந்த வீட்டை வைத்துதான் கோச்சார பலன்கள்  நிர்ணயிக்கபடுகின்றது. சந்திரன் ஜாதகத்தில் அமைந்த வீடு தான் இராசி எனப்படுகிறது. 
                                      சூரியனோடு  கோச்சார ரீதியாக சேரும் பொழுது அமாவாசை ஆகின்றது. சூரியனும், சந்திரனும் ஓன்றுக்கொன்று பார்வையிடும் பொழுது அதாவது நேர்கோட்டில்  180 பாகையில் சந்திக்கும் பொழுது பௌர்ணமி ஆகின்றது. 'சந்த்ரமா மனஸோ ஜா' என்று புருஷ சூக்தம் போற்றும் சந்திரனே மனதிற்கு அதிபதி. இவனே உடலுக்கு காரகன். சரீர பலம், மனோ பலம் இரண்டுமே உலக வாழ்க்கையின் வெற்றிக்கு மூல பலம் ஆகும். ஜனன லக்னத்தின்படி நல்ல பலன்களை ஒரு ஜாதகத்தில் காண முடியவில்லை எனில், சந்திரனை லக்னமாகக் கொண்டு பலன்களைச் சொல்ல வேண்டும் என்று விதி இருக்கிறது. இதையே 'விதி கெட்டால் மதியைப் பாரு' ; விதியை மதியால் வெல்லலாம் என்ற பழமொழி உணர்த்துகிறுது! ஜோதிடப்படி மாத்ரு காரகன் சந்திரன். கடற்பயணம், ரசனை, அறிவு, ஆனந்தம், புகழ், அழகு, நடு நிலைமை, சுக போகம் இவற்றிற்கு காரகன் சந்திரனே! முகூர்த்தங்களை நிச்சயம் செய்வது, ஜாதக தசா இருப்பு, திருமணப் பொருத்தம் ஆகிய முக்கியமானவை அனைத்துமே சந்திரனை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன. தென் கிழக்குத் திசை சந்திரனுக்குரியது. உகந்த நிறம் வெள்ளை. சந்திரனுக்கு உரிய தலம் திங்களூர். 
                                                   விஷ்ணுவின் அம்சமான சந்திரனின் நற்பலன்களைப் பெற பெளர்ணமியன்று திருப்பதி சென்று தரிசனம் செய்து தங்கி வழிபடுவது நலம் பயக்கும். மூலிகைக்கு அதிபதி சந்திரன். செல்வத்தை தருபவன் என யஜுர் வேதம் சந்திரனைப் புகழ்கிறது. சந்திரன் நிற்கும் வீட்டை ராசி வீடாகக் கொண்டு இதன் முன் பின் வீடுகளை சனி கடக்கும் போது ஏற்படும் ஏழரை ஆண்டுகள் ‘ஏழரை நாட்டுச் சனி' என்று கூறப்படுகிறது. முத்து சந்திரனுக்கு உகந்த ரத்தினம். வெள்ளைக்குதிரை சந்திரனின் வாகனம்! 
திங்களூர் 
நவகிரகத் தலங்களுள் சந்திரன் தலம் திங்களூர் ஆகும். தமிழ் நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றில் இருந்து சுமார் 3 கி.மீ.தொலைவிலும் கும்பகோணத்தில் இருந்து சுமார் 33 கி.மீ.தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைப் பெற வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்தார்கள்.மந்திர மலையை மத்தாகவும் வாசுகி எனும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது,ஆலகால விஷம் வெளிப்பட்டது.அசுரர்கள் வாசுகியின் தலைப்பக்கத்திலும் தேவர்கள் வால் பக்கத்திலும் நின்றுகொண்டு இருந்தனர்.தேவர்களைக் காப்பாற்றுவதற்காக இறைவன் அந்த விஷத்தை தானே அருந்தினார்.ஆனாலும் நஞ்சின் தாக்கத்தினால் தேவர்கள் மயக்கம் அடைந்துவிட்டனர்.அப்போது அமிர்தத்துடன் எழுந்து வந்த சந்திரன், தேவர்களின் மயக்கத்தைத் தெளிவித்தான்.திங்களூரில் அப்பூதி அடிகள் என்ற சிவனடியார் வாழ்ந்து வந்தார். இவர் திருநாவுக்கரசரிடம் கொண்டிருந்த அன்பின் மிகுதியால், அவர் பெயரில் பல நற்பணிகளைச் செய்து வந்தார். ஒருமுறை திங்களூருக்கு எழுந்தருளிய திருநாவுக்கரசர், அப்பூதி அடிகளின் இல்லத்துக்கு வருகை புரிந்தார். திருநாவுக்கரசர் தமது இல்லத்தில் உணவருந்த வேண்டும் என்ற அப்பூதி அடிகளின் வேண்டுகோளை திருநாவுக்கரசர் ஏற்றுக் கொண்டார்.அதற்காக தோட்டத்தில் சென்று வாழை இலை பறித்து வருமாறு அப்பூதி அடிகள் சிறுவனான தமது மகனை அனுப்பி வைத்தார்.ஆனால் வாழைத்தோப்பில் பாம்பு கடித்து சிறுவன் இறந்து விட்டான். தமது துயரத்தை திருநாவுக்கரசரிடம் காட்ட விரும்பாத அப்பூதி, பிணத்தை துணியைல் மூடி வைத்துவிட்டு திருநாவுக்கரசருக்கு உணவு பரிமாறினார்.ஆனால் நிலைமையை உணர்ந்துகொண்ட திருநாவுக்கரசர் சிறுவனின் பிணத்தை கோவிலுக்கு எடுத்துச் சென்று இறைவன் முன் கிடத்தி இறைவனை மனமுருகப் பாடினார். சிறுவன் உயிர் பெற்று எழுந்தான். திருநாவுக்கரசர் பாடிய பாடகள் பத்தும் "திருப்பதிகம்" என்றழைக்கப் படுகின்றன. புரட்டாசி மற்றூம் பஙுகுனி மாதங்களில் சந்திரனின் கிரணங்கள் இறைவன் சிலை மீது விழுமாறு அமைக்கப்பட்டு இருப்பது இக்கோவிலின் சிறப்பம்சம். 
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் 
மூலவர்:கைலாசநாதர்
உற்சவர்:- 
அம்மன்/தாயார்: -
தல விருட்சம்: வில்வமரம் 
தீர்த்தம்:சந்திரபுஷ்கரிணி 
ஆகமம்/பூஜை :-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:-
ஊர்:திங்களூர் 
மாவட்டம்: தஞ்சாவூர் 
மாநிலம்: தமிழ்நாடு
மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குஉத்திரம், திருக்கார்த்திகை 
தமிழகத்தில் அன்னப்பிரசானத்துக்கு மிகச் சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும். 
காலை 6 மணிமுதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திங்களூர் - 613 204 தஞ்சாவூர் மாவட்டம். 
இறைவன்: கைலாசநாதர் 
இறைவி : பெரியநாயகி 
சந்திரன் தென்கிழக்கு திசை நோக்கி இருக்கிறார். 
சந்திரனின் நிறம் : வெண்மை 
வச்திரம்: வெள்ளைத்துணி 
தான்யம்; நெல் 
உணவு: தயிர் சாதம் 
மலர்: வெள்ளை அரளி 
நிறம் - வெண்மை 
இரத்தினம்- முத்து 
உலோகம்-ஈயம் 
ஆட்சி- கடகம் 
உச்சம்-ரிஷபம் 
நீசம்-விருச்சகம் 
இனம்-பெண் 
நட்பு-சூரியன் 
பகை-இராகு 
சமம்-செவ்வாய்,வியாழன்.சனி.சுக்கிரன் 
தானியம்-பச்சரிசி 
திசைகாலம்- 10 ஆண்டுகள் 
சந்திரன் அறிவியல் தகவல்: சந்திரன் பூமியிலிருந்து 4லட்சத்து 6ஆயிரம் கி.மீ., தூரத்தில் உள்ளது. இது பூமியை விட 81 மடங்கு எடை குறைவானது. ஒருநாள் தோன்றிய நேரத்தில் இருந்து 52 நிமிடங்கள் கழித்து மறுநாள் உதயமாகும். தன்னைத்தானே சுற்றவும், பூமியை ஒருமுறை சுற்றவும் 29 1/2 நாட்கள் ஆகும். 
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.  சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். குழந்தைக்கு முதல் சோறு கொடுப்பதை "அன்னப்பிரசானம்' என்பர். கிராம மக்கள் தங்கள் குல தெய்வக் கோயில்களில் இதைச் செய்வர். வசதி படைத்தவர்கள் பெரும்பாலும் குருவாயூர் குருவாயூரப்பன் சன்னதியில் இந்த சடங்கைச் செய்வது வழக்கம். தழிழகத்தில் அன்னப்பிரசானத்துக்கு மிகச் சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும். 
அசுவினி, மிருகசிரீஷம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி நட்சத்திர நாட்களிலும், சந்திரஹோரை வேளையிலும் சந்திரனையும், பசுவையும் குழந்தைக்கு காண்பித்து, வெள்ளிக் கிண்ணத்தில் பால், நெய், தேன் கலந்த சாதத்தை ஊட்ட வேண்டும். இவ்வாறு உண்ணும் குழந்தைகளுக்கு ஜலதேவதையின் அருளும், ஒளஷதி தேவதையின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஜலதேவதையின் அருளால், குழந்தைக்கு ஜலதோஷம், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அண்டாது என்றும், அப்படியே வந்தாலும் ஒளஷதி (மருந்து) தேவதையின் அருளால் அது உடனே நீங்கி விடும் என்பதும் இத்தலத்து விசேஷம். குழந்தைகளுக்கு அம்புலியை காட்டி சோறூட்டுவது ஏதோ விளையாட்டுக்காக மட்டுமல்ல. அதில் ஆன்மிகக்காரணமும் புதைந்து கிடக்கிறது என்பதால்தான். 
திருநாவுக்கரசர் தேவாரம் பாடிய பெரியவர். இவரை உலகமே அறியும். ஆனால், மூத்த திருநாவுக்கரசர், இளைய திருநாவுக்கரசர் பற்றி யாருக்காவது தெரியுமா? இவர்களை தரிசிக்க திங்களூர் கைலாசநாதர் கோயிலுக்கு செல்ல வேண்டும். 
அப்பூதியடிகள் என்ற சிவபக்தர் திங்களூரில் வசித்தார். இவரது மனைவி அருள்மொழி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். நீங்கள் ஒரு முருக பக்தராக இருந்து. உங்களுக்கு குழந்தை பிறந்தால் "முருகன், கந்தன், கார்த்திகேயன்' என ஏதோ ஒரு பெயர் வைப்பீர்கள். ஆனால், அப்பூதியடிகள் சிவபக்தராயினும் கூட, சிவனின் அடியவரான திருநாவுக்கரசரின் பெயரை தன் குழந்தைகளுக்கு வைத்தார். மூத்தவனுக்கு "மூத்த திருநாவுக்கரசு', இளையவனுக்கு "இளைய திருநாவுக்கரசு' என்று. தன்னை விட தன் அடியார்களுக்கு தொண்டு செய்வதையே தெய்வம் விரும்பும். "மக்கள் சேவையே மகேசன் சேவை' என்பதும் இறைவனுக்கு பிடித்த பொன்மொழி. அதைப் பின்பற்றி நாவுக்கரசரின் பெயரால் கல்விக்கூடம். அன்னசத்திரம், தண்ணீர் பந்தல் ஆகியவை அமைத்தார். மக்கள் சேவையை வலியுறுத்தும் இந்த குடும்பத்தினர் சிலை வடிவில் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் உள்ளனர். வேறு எந்தக் கோயிலிலும் மூத்த, இளைய திருநாவுக்கரசர்களைக் காண முடியாது. இதில் மூத்த திருநாவுக்கரசை பாம்பு தீண்டியது. திருநாவுக்கரசர் அக்குழந்தையைக் காப்பாற்றியதாக வரலாறு உள்ளது. 
சங்கடம் தீர்ப்பான் சந்திர பகவான்! சந்திரன், சாதாரண கண்களுக்கும் புலப்படும் கிரகம். பகலில், சூரிய கிரணத்தில் மறைந்திருப்பதால், பார்க்க இயலாது; இரவில் நன்றாகப் பார்க்கலாம். தேய்ந்தும் வளர்ந்துமாக மாறுபவன், சந்திரன். பரம்பொருளின் மனதிலிருந்து வெளிவந்தவன் என்கிறது வேதம் (சந்திரமா மனஸோஜாத:). பரம்பொருளானது பிரபஞ்சாகாரமாகத் தோற்றம் அளிக்கிறது. உடல் எடுத்த உலகின் மனமான சந்திரன், பருவங்களை உருவாக்கி, உலகை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான் என்கிறது வேதம் (சந்திரமா: ஷட்ஹோதா. ஸரிதூன்கல்பயாதி) ஏதும் அறியாத குழந்தையும் சந்திரனைப் பார்த்து மகிழும்; தொண்டு கிழமும் மகிழும். இளைஞர்களின் மனத்தை, விரும்பியவளுடன் சேர்த்து மகிழ வைப்பவன் சந்திரன். அதுமட்டுமின்றி, உயிரினங்களை வெப்பத்திலிருந்து பாதுகாப்ப வனும் இவனே! மனித மனத்தை இயக்குபவன் என்று சந்திரனைக் குறிப்பிடுகிறது ஜோதிடம் (மனஸ்துஹினகு…). தேய்ந்தும் வளர்ந்தும் மாறி மாறித் தென்படும் இயல்பு, மனித மனத்திலும் வெளிப்படும். செடி- கொடிகளின் மருத்துவ குணத்தை, சந்திரனின் கிரணங்கள் உருவாக்குகின்றன (ஸோமோவா ஓஷதீனாம் ராஜா…) பௌர்ணமியில், கடல் அலையை அதிகம் எழச் செய்பவன். இரவில் மலரும் பூக்கள், சந்திரனைக் கண்டதும் குதூலத்துடன் காட்சி தரும். அதுபோல், பிரபஞ்சப் பொருட்களில், சந்திரனின் தாக்கம் தென்பட்டு மாறுபாட்டைச் சந்திக்கும். வெகு தொலைவில், விண்வெளியில் வலம் வந்தாலும், சந்திரனது தாக்கம் பிரபஞ்சத்தை மட்டுமின்றி, மனிதர்களையும் பாதிக்கும். ஆகாயம் என்ற பூதம் ஒன்றுதான்; அது உலக அளவுக்குப் பரவியிருக்கிறது. ஆகாயம் என்றால் இடைவெளி என்று அர்த்தம். இடைவெளியில் வாழ்கிற நமக்கு, இடைவெளியின் தாக்கம் இருக்கும் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. உலகின் ஒரு கோடியில் நிகழும் சம்பவத்தை, மறு கோடியில் இருந்தபடி சின்னத்திரை வழியே பார்க்கிறோம். அதற்கு ஆகாசத்தின் பங்கு தவிர்க்க முடியாதது. 
                                            சூரியனிடம் இருந்து சூடான கிரணத்தைப் பெற்று, தன்னிடம் இருக்கிற தண்ணீருடன் இணைத்துக் குளிரச் செய்து, வெப்பத்தால் வாடும் உலகைக் குளிர்வித்து மகிழச் செய்கிறான் சந்திரன் (ஸலிலமயே சசினி…). தண்ணீருடன் தென்படுவதால், கடக ராசியான ஜல ராசி அவன் இருப்பிடம் என்கிறது ஜோதிடம். கடகம் என்றால் நண்டு. அது, ஈரப்பதமான இடத்தில் வாழும். ஆகவே, ஈரமான மனம், கருணையுள்ளம் கொண்டவன் என்பதற்குப் பொருத்தமானவன், சந்திரன்! அமாவாசையில், சூரியனில் மறைந்த சந்திரன், ஒவ்வொரு நாளும் சிறுகச் சிறுக கிரணத்தைப் பெற்று வளர்ந்து, 15-ஆம் நாளில் முழு நிலவெனக் காட்சி தருவான். அதனை பௌர்ணமி என்கிறது வேதம் (பஞ்சதச்யாமா பூர்யதெ…). பிரதமையில் இருந்து சூரியன், தனது கிரணத்தைத் திரும்பப் பெறும்போது, ஒவ்வொரு பகுதியாகத் தேய்ந்து தேய்ந்து, சூரியனில் ஒன்றிவிடுவதை அமாவாசை என்பார்கள் (பஞ்சதய்யாமபுஷீயதை). ஒவ்வொரு பிறையாக வளர்வதால்,  வளர்பிறை; ஒவ்வொரு பிறையாகத் தேய்வதால் தேய்பிறை என்றாகிவிட்டது. ஒவ்வொரு பிறையிலும் தடங்கலின்றி வளர்வதால், செயல்களும் வளர்ந்தோங்க வேண்டும் என்று, வளர்பிறையை ஏற்றனர். தேய்பிறையை தென்புலத்தார் பணிவிடைக்கு ஒதுக்கினர். சந்திர கிரகணத்தில் பிடிக்கும் வேளை வளர்பிறையானதால், தான- தருமங்களைச் செய்யச் சொன்னார்கள். விடும் வேளையில் பிரதமை என்பதால், தேய்பிறையைக் கொண்டு தர்ப்பணம் செய்யப் பரிந்துரைத்தனர். ஈசனின் சிரசில் சந்திரன் வீற்றிருப்பதால், சந்திரசூடன் என சிவனாருக்குத் திருநாமம் உண்டு. அதேபோல், அம்பாளின் சிரசிலும் ஸ்ரீவிநாயகரின் சிரசிலும்கூட சந்திரன் வீற்றிருக்கிறான் என்கிறது புராணம். 
                                           ஸ்ரீமந் நாராயணரின் கண்ணாகத் திகழ்கிறது எனச் சந்திரனைக் குறிப்பிடுவர். சந்திரனுடன் கூடிய சூரியனில், அதாவது அமாவாசை மற்றும் பௌர்ணமி, வேள்வி செய்ய வேண்டிய வேளை என்கிறது வேதம்! முழு நிலவில் இணைந்த நட்சத்திரங்களை, அதன் பெயரைக் கொண்டே மாதங்களின் பெயர்களாக ஏற்றனர். பௌர்ணமியில் சித்திரை நட்சத்திரம் இணைந்து வர… சித்திரை என அந்த மாதத்துக்குப் பெயர் வந்தது. மற்ற மாதங்களுக்கு, பௌர்ணமியைக் கொண்டே பெயர் வரும். அதாவது, காலத்தை அளக்கும் கருவியாகத் திகழ்பவன் சந்திரன்! அதனைச் சாந்திர மானம் என்பார் கள். விரதங்களையும் பூஜைகளையும் சாந்திர மானத்தைக் கொண்டே கணக்கிடுவார்கள். அமாவாசையில் சூரியனில் ஒடுங்கிவிடுவதால், பலமிழந்து விடுவான் சந்திரன். ஆகவே அந்த வேளையில், மனநோய்கள் வலுப்பெறும் என்கிறது ஜோதிடம். மனதுக்கும் சந்திரனுக்கும் தொடர்பு இருப்பதை, நோயின் ஏற்றத்தாழ்வு சுட்டிக்காட்டும். சாதாரண நோய்கள்கூட, அமாவாசை நெருங்கும் நாட்களில் வலுப்பெறும். உடல், புலன்கள், மனம், ஆன்மா ஆகியவற்றின் இணைப்பும் அதன் தொடர்ச்சியுமே வாழ்க்கை என்கிறது ஆயுர்வேதம். இதில் முக்கியமானது மனம்! ஆகவே, வாழ்வில் சந்திரனுக்கு நிரந்தரப் பங்கு இருக்கிறது. நல்ல காரியங்களைச் செயலாற்ற, சந்திர பலம் வேண்டும் என்கிறது சாஸ்திரம் (சந்திர பலம் ததேவ). சந்திர பலம் இருந்துவிட்டால், மனமானது ஈடுபாட்டுடன் செயலாற்றும்! ஆயிரம் பிறை கண்டவனை, சதாபிஷேகம் செய்வித்து மகிழ்விப்பவன், சந்திரன். 
                                            மாசி பௌர்ணமியின் இரவில் சந்திர பூஜை நிகழும். அப்போது, பால் பாயசம் நைவேத்தியம் செய்து, குழந்தைகளுக்கும் அனைவருக்கும் அளிக்கிற வழக்கம், கிராமங்களில் இன்றைக்கும் உண்டு! தென்புலத்தார், தேவர்கள், ரிஷிகள் ஆகியோரது பணிவிடைகளில் சந்திரனின் பங்கு இருப்பதால், வாழ்வு சிறக்க அவனருள் வேண்டும். விண்வெளியில் முதல் ஓடுபாதை, சந்திரனுடையது. ஆகவே, பூமிக்கு அருகில் இருப்பவன் அவன்! அவனுக்கு மேல், நான்காவது ஓடுபாதையில் இருக்கும் சூரியனிடம் இருந்து கிரணத்தைப் பெற்றுச் செயல்படுவான் சந்திரன். ராசிச் சக்கரத்தில், சந்திரனுக்கு அடுத்த ராசியில், அதாவது சிம்மத்தில் சூரிய னுக்கு இடமளித்திருக்கிறது ஜோதிடம். ஆன்மாவுடன் இணைந்து மனம் செயல்படுவது போல், சூரிய கிரணத் துடன் இணைந்து செயல்படுவான், சந்திரன்! ஆகவே, அடுத்தடுத்த வீடு பொருத்தமாக அமைந்துள்ளது. ஆன்மா ஒன்று; அதேபோல் மனமும் ஒன்று! ஆதலால், 12 வீடுகள் இருந்தும், இரண்டுபேருக்கும் ஒவ்வொரு வீடுதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சுகத்தை அதாவது மகிழ்ச்சியை மனம் அறியும். ஆகையால், ராசி புருஷனில் 4-ஆம் வீட்டில் சந்திர னுக்கு இடமளித்தனர். 
வளர்பிறையில் சந்திரன் நல்லவன்; சுப பலனையே அளிப்பான். 
தேய்பிறையில் பலம் குன்றியவன்; அசுபன் – விருப்பமில்லாத பலனையே திணிப்பான்! 
குருவுடன் இணைந்து பொரு ளாதாரத்தைச் செழிப்பாக்குபவன் சந்திரன். 
தன்னுடைய கேந்திரங்களில் குரு இருந்தாலும் அதாவது 4, 7, 10-ல் இருந்தாலும் பணத் தட்டுப்பாடின்றி காரியத்தை நிறைவேற்றி வைப்பான் சந்திரன். 5, 9-ல் குரு இருந்தால், ஆன்மிக வாழ்வில் ஆர்வத்தைத் தூண்டுவான்! பூமியும் விண்வெளியும் சேர்ந்தே இருந்தது. பிறகு, அது அகண்ட இடைவெளியுடன் தனித்தனியே காட்சி அளித்தது. பூமியின் மண், சந்திரனில் ஒட்டியுள்ளது. அதில் தென்படும் கறுப்புப் புள்ளி, மண் எனத் தெரிவிக்கிறது வேதம் (யதத: சந்திரமஸி கிருஷ்ணம் ஊஷான்னிவபன்…). இப்படியான விலகல், நமக்கு வாழ இடத்தை அளித்தது. முக அழகை, சந்திரனுடன் ஒப்பிடுவார்கள் புலவர் பெருமக்கள். பகலில், வெப்பத்தில் சூடேறிய நதிகள், தடாகங்கள் ஆகியவற்றின் நீரைக் குளிரச் செய்து, வெதுவெதுப்பாக மாற்றி, அதில் நீராடுவதற்கு நமக்கு உதவுபவன், சந்திரன். சந்திர கிரணத்தின் சேர்க்கையால், குளிர்ந்த காற்று கிடைக்கிறது. அதேபோல், சந்திரன் இணைந்தால்தான், வேள்வியானது நிறைவுபெறும் (ஸோமாயஸ்வாஹா…). அதேபோல், நாம் அணியும் ஆடையில், அவனுடைய சாந்நித்தியம் உண்டு. ஸோமஸ் என்றால் சந்திரன்; ஸோமஸ் என்றால் ஆடை என்றும் பொருள் உண்டு (ஸோமஸ்யதனூரஸி…). சதுர்த்தியில் சந்திரனைப் பார்க்க நேர்ந்தால், வீண் பழியேதும் வராமல் தடுக்க, ஆடையில் இருந்து ஒரு நூலை எடுத்து, சந்திரனுக்கு அளிக்கும் சம்பிரதாயம் கிராமங்களில் உண்டு. வெப்பமும் குளிர்ச்சியும்தான் பருவ மாற்றத்தின் மூலப் பொருள். அதில் குளிர்ச்சியான பங்கு, சந்திரனுடையது. சந்திரகாந்தக் கல், சந்திர கிரணம் பட்டு, உருகி ஓடும்; குளிர்ச்சியான சூழலை உருவாக்கும். 
                                                      ராவணன், குளியல் அறையில் சந்திரகாந்தக் கல் உமிழும் நீரில் நீராடுவான் என்கிறது சம்பூர்ண ராமாயணம் (ஏஷமிருங்கோபி…). கல்லைக் கரைக்கும் சந்திரன், கல் மனத்தையும் கரைப்பான். கோழிக்குக் கிடைத்த வைரக்கல், குரங்குக்கு கிடைத்த பூமாலை வீணாகிவிடுகிறது. அதுபோல், ஒப்பில்லாப் பொருள் (ஜோதிடம்) குப்பையில் சேருவது வேதனை அளிக்கிறது. அனுபவத்தில் உணரும் அறிவை, அடை யாளம் காணாமல் இருப்பது நமது துரதிர்ஷ்டம். சசிமங்கள யோகத்தில், சந்திரனுக்குப் பெரும்பங்கு உண்டு. சனியோடு இணைந்தால் ஒருவனுக்குச் சிந்தனை வளம் குன்றிவிடும். மானம், வெட்கம், சூடு, சொரணை ஆகிய அனைத்தும் அவனை விட்டு விலகிவிடும். விரும்பியதை அடைவதற்காக, தரம் தாழ்ந்த வழியைக் கூடப் பின்பற்றச் செய்வான் சந்திரன். சனியின் தாமஸ குண சேர்க்கையில்சோம்பல், அறியாமை, மோகம் ஆகியன மேலோங்கி, மனித இயல்பே அகன்றுவிடும். ‘எனக்குக் கிடைக்காதது எவருக்குமே கிடைக்கக்கூடாது’ எனும் எண்ணத்தில், பொருளையே அழிக்கும் குணத்தைத் தருவான், சந்திரன். அதேநேரம், புதனுடன் இணைந்தால், சங்கடத்தில் சிக்கியபோதும் அறநெறியில் செயல்பட வைப்பான், சந்திரன். எந்தச் சூழலிலும் ஒழுக்கம் தவறாமல் இருக்கும் குணத்தைத் தருவான்! சூரியனுடன் சந்திரன் இணைந் தால், சிந்தனை வளம் பெருகும். சூரியன்- ஆன்மா; சந்திரன்- மனம். ஆன்மாவின் இணைப்பில் உலக சுகத்தை மறந்து, தனிமையில் மகிழ்ச்சியை உணரச் செய்வான் சந்திரன். ஏனெனில், சூரியன் எனும் ஆன்மாவில் இருந்து, உருப்பெற்றவன் அவன். ஆனால், ஆன்மாவுடன் இணைந்த மனமானது, அதனை மறந்து, புலன் வழியே அலைந்து, சலிப்புற்று, செய்வதறியாது தவிக்கிறது. நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும், அது… வாலைக் குழைத் துக் கொண்டு, வெளியே சென்றுவிடும் என்பார்களே… அப்படித்தான் இருக்கிறது நம்முடைய மனம்! சந்திர வம்சத்தில் இருந்து வந்தவர்கள் மகாபாரத நாயகர்கள். மனதின் மாறுபட்ட சிந்தனைகளை அவர்களிடம் காணலாம். சூதும் வாதும், அறமும் ஆற்றலும், நெறியும் ஒழுக்கமும், பொறுமையும் போற்று தலும், உலகவியலும் ஆன்மிகமும் என சகலமும் அவர்களிடம் உண்டு! மனம் என்பது அணு அளவுதான்; ஆனால், அதன் கொள்ளளவு கடல் போல் விரிந்திருக்கும். தேய்ந்தும் வளர்ந்தும் நிலையின்றிச் செயல்படும் சந்திரனின் மறுபக்கம், ஒருவனைச் சீரழியச் செய்கிறது. 
                                                   ஸ்ரீராமன் என்று சொல்வதைவிட, ஸ்ரீராமச்சந்திரன் எனும்போது, நம்மையும் அறியாமல் ஒரு ஈர்ப்பு அவனுடன் இணையச் செய்யும். சூரிய வம்சத்தில் உதித்தவன் ஸ்ரீராமச் சந்திரன். ஆன்மாவுடன் அதாவது சூரியனுடன் சந்திரனாகிய மனமும் இணைந்திருக்க… சந்திரனுடைய மறு பக்கத்தின் இயல்பான ஆன்ம சுகத்தை ஈட்டித் தருகிறது. ஈடு இணையற்ற ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவதில், சந்திரனுக்கு பெரும் பங்கு உண்டு! ராகுவுடன் இணையும்போது, மனதுள் அசுர குணம் தலைதூக்கும். ராகு- அசுரன். அவனுடைய இயல்பு, மனதுள் ஆட்கொள்ளும். மிருகத்தனமே முன்னிற்கும். அப்போது, பாபமும் தெரியாது; புண்ணியமும் தெரியாது. ஆறாம் அறிவே முடங்கிவிடும்; மனிதத் தன்மை அகன்று, வாக்குச் சுத்தம் போயே போய்விடும். கேதுவுடன் இணைந்தால், சிந்தனை வளம் குன்றும்; மனம் போன போக்கில் செயல்படச் செய்வான் சந்திரன்! பணம் இருந்தும், உரிய தருணம் கிடைத்தும் பயன்படுத்தாதவர்கள் உண்டு. திறமை இருந்தும் வெளிக்காட்டாதவர்கள் இருக்கின்றனர். செயல் பாட்டில் விபரீதம் நிகழ்ந்ததும், பணமும் திறமையும் வெளியே வரும். புத்தகத்து அறிவும் பிறரிடம் உள்ள பணமும் சந்தர்ப்பத்துக்கு உதவாது. உச்சம், ஸ்வஷேத்ரம், வளர்பிறை, சுபயோகம், சுபதிருஷ்டி போன்ற அந்தஸ்தில் சந்திரன் வலுப்பெற்றிருந்தால், செவ்வாய், சனி, ராகு- கேது ஆகியோரின் தாக்கம் இருப் பினும், கடும் புயலிலும் அசையாத மரம் போல் சிறப்புறத் திகழக் காரணமாவான், சந்திரன். நீசம், தேய்பிறை, அசுப சேர்க்கை, அதன் யோகம் ஆகியவற்றைப் பெற்றிருந்தால், சிந்தனை தடுமாறும்; சங்கடங்களையே சந்திக்க நேரிடும். மனம் மகிழ்ச்சியை உணரும். ஆகவே அனைத்துக்கும் ஆதாரம், மனம்! உண்மையில், உடலில் மனம் என்கிற ஒன்றே இல்லை. 
                                                உறங்கிக் கிடக்கிற எண்ணக் குவியலையே மனம் என்கிறோம். எண்ணங்களை, நினைவுகளை மனனம் செய்வதால், அது மனம் என்றாயிற்று. எண்ணங்கள் அழிந்தால், மனனம் செய்யவோ நினைவுபடுத்திப் பார்க்கவோ ஏதும் இல்லாமலிருந்தால், மனமானது மறைந்துவிடும். அமாவாசையில் சந்திரன் மறைந்து, ஆன்மா மட்டுமே தெரிகிறது. ஆகவே, ஆன்மாவில் லயிப்பது மோட்சம்! துயரத்திலிருந்து விடுபடு வதும் மோட்சம்தான்! கட்டுப்பட்டிருப்பதற்கும் விடுபடுவதற்கும் மனமே காரணம் (மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பிந்தமோஷயோ:). உடலில் உறைந் திருக்கிற மனமே அத்தனை ஆர்ப்பாட்டங்களுக்கும் அமைதிக்கும் காரணம்! சுகாதாரம், ஆன்மிகம், ஆடம்பர வாழ்க்கை ஆகியவற்றுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டு. மனத்தைத் தெளிவுபடுத்த, மகான்கள் பலரும் பல வழிகளைப் பரிந்துரைத்துள்ளனர் காலத்துடன் இணைந்த சந்திரனின் பங்கினை அறியாதவனுக்கு வெற்றி கேள்விக்குறியாகிவிடும். குரங்கு, சும்மாவேனும் இருக்குமா, என்ன? சேட்டை பண்ணிக்கொண்டே இருக்கும். அதைத் தேள் கொட்டினால், சேட்டை திசை மாறும். மதுவை அருந்தி, பிசாசும் பிடித்துக்கொண்ட நிலையில், அதன் சேட்டை எப்படியிருக்கும்? மனம் என்பதும் இப்படித்தான்… சும்மா இருக்காது. காமம், குரோதம், மதம், மாச்சரியம் ஆகியவற்றின் தாக்கத்தால் திக்குமுக்காடிப் போகும். நிலைத்து நின்று, சிந்தித்துச் செயல்பட சந்திரனின் வலுவான இணைப்பு துணை நிற்கும்! ஆகவே உடல் சுத்தத்தை கவனிக்கிறோமோ இல்லையோ… மனத் தூய்மையில் அக்கறை செலுத்துவது அவசியம். அதற்கு, சந்திர வழிபாடு மிக மிக அவசியம். மனத்துடன் தொடர்பு இல்லாதவர்களைத் தேடி அலையாமல், மனதுக்குத் தொடர்பு உடைய சந்திரனை அணுகுவதே சாலச் சிறந்தது. 
                                                 திங்கட்கிழமை, சந்திரனுக்கு உரிய நாள். அன்றைய தினத்தில், ‘ஸம் ஸோமாயநம:’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களை நடைமுறைப்படுத்துங்கள். கைகள் புஷ்பத்தை அள்ள, மனம் அவன் பெயரை அசைபோட, அவனுடைய திருமேனியில், புஷ்பத்தைச் சமர்ப்பியுங்கள். சந்திரனை மனதார நினைக்க, சந்திரனின் சாந்நித்யம், மனதுள் வந்துவிடும். அவனுக்கே உண்டான மென்மை, மலர்களில் உண்டு. அதனை, அவனிடமே சமர்ப்பிப்பது, மனதுள் அவனது இயல்பை வரவழைக்கிற காரியம்!
சந்திரனை வேதங்கள் முழங்கி வழிபடுங்கள்; இல்லையெனில், அவனுடைய திருநாமத்தைச் சொல்லியே வழிபடலாம்! 
தசாச்வம் ச்வேதபத்மஸ்தம் 
விசின்த்யோமாதி தைவதம் 
ஜலப்ரத்ய திதைவம்ச 
ஸ¨ர்யாஸ்ய மாஹ்வயேத் ததா - எனும் ஸ்லோகத்தைச் சொல்லி, சந்திரனை வணங்குங்கள். 
வருங்காலத்துக்காக மனக்கோட்டை கட்டாமல், மனத்தை திடமாக்கிக் கொண்டால், சந்தர்ப்பம் வரும்போது, சரியான சிந்தனையைத் தந்து, வெற்றிக்கு வழி வகுப்பான், சந்திரன்! சந்திரன், வெளியே இல்லை; உள்ளுக்குள்ளேயே இருக்கிறான். 
ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் இருந்தால் என்ன பலன்  சந்திரன் 
முதல் வீட்டில் இருந்தால் லக்கினத்தில் இருப்பது நல்லது ஆனால் சந்திரனுக்கு அது சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருந்தால் நல்லது நட்பு வீடாக இருந்தாலும் நல்லது வாழ்க்கையில் உயர்வு பெறுவதற்க்கு நல்லது செய்வார். சிற்றின்ப சுகம் நன்றாக அமையும். பந்தயத்தில் வெற்றி பெறுவார் திடீர் பணவரவு இருக்கும். 
சந்திரன் 2-ல் சந்திரன் செல்வம் தருவார். நன்றாக பேச்சு வரும் அரசாங்கத்தில் நல்ல மதிப்பு இருக்கும் சொத்து சுகம் ஏற்படும். பெயரும் புகழும் உண்டாகக் காரணமாக இருப்பார். நல்ல கல்வி கிடைக்கும் சந்திரன் கெட்டால் செல்வத்தை இழக்க செய்யும். நல்ல பணவரவு இருக்காது. பொதுவாக வளர்பிறையில் நல்லது செய்வார். 
சந்திரன் 3-ல் சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் உடல் வலிமையையும் ஆற்றலையும் தருவார். சகோதர சகோதரிகளை ஆதரிப்பார் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். மூன்றாவது வீடாக இருப்பதால் அடிக்கடி குறுகிய பயண செய்ய வைப்பார். வாகனம் வசதி கிடைக்கும் சந்திரன் கெட்டால் அனைத்தும் எதிர்மறையாக இருக்கும். 
சந்திரன் 4-ல் இருந்தால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும் 4 ஆம் வீடு வீட்டை குறிப்பதால் ஆறு குளம் கடலோரத்தில் வீடு அமையும். நண்பர்களுக்கு உதவி செய்வார். தாய்வழிச்சொத்து கிடைக்கும் கொடை குணம் இருக்கும். 
சந்திரன் 5-ல் சந்திரன் பலம் பெற்று இருந்தால் பணம் வந்து கொண்டே இருக்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். நல்ல அறிவாற்றலை தருவார் வாழ்க்கையில் உயர்ந்த நிலைய அடையவைப்பார். குழந்தைபாக்கியம் அமையும் ஆனால் பெண் குழந்தைகளே பிறக்கும். சந்திரன் கெட்டால் அனைத்தும் எதிர்மறையாக இருக்கும். 
சந்திரன் 6-ல் சந்திரன் இருந்தால் சுகபோக வாழ்வு வாழ்பவர். விரோதிகளை உண்டு பண்னுவார். இளம் வயதில் மகிழ்ச்சி குறையும். சந்திரன் அசுபபலன் பெற்று இருந்தால் அடுத்தவருக்கு அடங்கி நடக்கக்கூடிய தன்மையை தருவார். 
சந்திரன் 7 ல் இருந்தால் ஆணாக இருந்தால் பெண்களிடம் பற்று இருக்கும். பெண்ணாக இருந்தால் ஆண்களிடம் பற்று இருக்கும். ஆண்/பெண் இருவரும் மூலம் பணவு இருக்கும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை இருக்கும். ஆண் /பெண் அழகாக இருப்பார்கள். சந்திரன் பலம் இழந்தால் ஆண் / பெண் உடல் பலன் குறையும். நோய் வரும். 
சந்திரன் 8- ல் இருந்தால் அறிவாற்றல் நல்ல இருக்கும். ஆனால் ஆயுளை குறைக்கும். சுக்கிலபட்சமாக இருந்தால் ஆயுள் நன்றாக இருக்கும். மனம் நிம்மதி இழந்து காணப்படும். சந்திரன் நன்றாக இருந்தால் நல்ல செல்வந்தராக இருப்பார்கள். பெரிய குடும்பத்தை உண்டுபண்னுவார். 
சந்திரன் 9-ல் உள்ள சந்திரன் இருந்தால் நல்ல பாக்கியசாலியாக இருப்பார். புத்திரபாக்கியம் இருக்கும். உறவினர்கள் நல்ல உதவி செய்வார்கள். செல்வம் குவியும். சங்கீதம் நாடகம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகமாகும். அம்மாவின் அரவணைப்பு இருக்கும். 
சந்திரன் 10-ல் உள்ள சந்திரன் தன் மதத்தின் மீது பற்று ஏற்பட்டு மதம் பிரசாரம் செய்வார். நல்ல செல்வ வளம் சந்திரன் தருவார். வாழ்க்கையில் உன்னதமான பல நல்ல காரியங்களை செய்வார். செய்தொழில்களில் பகைவர்களை வெற்றிக்கொள்ளும் தைரியத்தை தருவார்.வாழ்க்கையில் பற்றிய எண்ணத்தை இயற்கையாக உண்டுபண்னுவார். தாய்வழியில் நல்லது செய்வார். நண்பர்களிடத்தில் நல்ல நட்பு உண்டுபண்னுவார். தொழில் நுட்பத்துறையில் ஈடுபட வைக்கும். தொழில்நுட்பத்துறையில் நல்ல அறிவு வளர செய்வார். வாழ்க்கையில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும். சிலபேருக்கு அரசாங்கத்தில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும். 
சந்திரன் 11-ல் உள்ள சந்திரன் மூத்த சகோதர்களின் மூலம் லாபத்தை தருவார். எந்த வேலையை எடுத்தாலும் எளிதில் முடிக்க கூடிய திறமையை தருவார். நல்ல தீர்க்காயுள் ஏற்படும். வேலையாட்கள் மூலம் வருமானம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் மீது ஆர்வம் ஏற்படும். அரசாங்கத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும். நல்ல செல்வ வளம் சேரும். 
சந்திரன் 12-ல் உள்ள சந்திரன் பாதங்களில் வலி உண்டாக செய்வான். வாழ்க்கையில் மதிப்பு இழக்க செய்வான். கண் பார்வை மங்க செய்வான். அறிவாற்றல் குறையும். குறுகிய மனப்பான்மை இருக்கும். மனஉளைச்சல் இருக்கும். செலவு கூடும். 
சந்திரன் 
ஓம் பத்மத்வஜாய வித்மஹே 
ஹேமரூபாய தீமஹி 
தன்னோ சோமஹ் ப்ரசோதயாத் 
ஓம் க்ஷீரபுத்ராய வித்மஹே 
அமிர்தாய தீமஹி 
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத் 
ஓம் அமிர்தேசாய வித்மஹே 
ராத்ரிஞ்சராய தீமஹி 
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத் 
ஓம் சுதாகராய வித்மஹே 
மஹாஓஷதீஸாய தீமஹி 
தன்னோ சோமஹ் ப்ரசோதயாத் 
ஓம் ஆத்ரேயாய வித்மஹே 
தண்டஹஸ்தாய தீமஹி 
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத் 
ஓம் சங்கஹஸ்தாய வித்மஹே 
நிதீச்வராய தீமஹி 
தன்னோ ஹோமஹ் ப்ரசோதயாத் 
செவ்வாய்.
Picture

                             3. செவ்வாய் செவ்வாய் இது தன்னைத் தானே 24 மணி 37 நிமிடம் 23 விநாடிகளில் சுற்றி வரும். சூரியனை 687.9 நாட்களில் சுற்றி வருகிறது. செவ்வாய் சகோதரன் காரகன் ஆகிறார். மேஷத்தில் செவ்வாய் இருக்கும் போது வெறித்தனமாகவும். விருச்சகத்தில் உள்ள போது வேகம் குறைவாகவும் இருக்கிறார். திருடு,வெட்டுக்காயம்,தீ காயம்,எதிரிகள்,பேராசை,அதிக காமம், போலீஸ், துணிச்சல், அரசியல் தொடர்பு ஆகிய குணங்கள் ஆகும். செவ்வாய்க்கு 4,7,8 ஆகிய பார்வைகள் உள்ளன. 1,4,7 இருப்பது நல்லதல்ல. 2,4,7,8,12 ஆம் இடங்கள் இருப்பது நல்லதல்ல. இந்த இடங்களில் இருந்தால் தோஷம் ஆகும். அங்காரகன், குஜன்,மங்களன் என்ற பெயர்களும் உண்டு. முதல் வரிசையில் வைத்து  எண்ணப்படுகின்ற அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், நாட்டு தளபதிகள்,  நீதிபதிகள், பொரியியல் வல்லுனர்கள் முதலானோர்களின் ஜாதகங்களில் செவ்வாயின் பலம்  இருந்தே தீரும் என்பது உறுதி. பெருந்தன்மை அதே நேரத்தில் கண்டிப்பு, தொண்டு செய்தல், தலைமை வகித்தல்,  வைராக்கியம், பகைவரை வெல்லும் பராக்கிரம் இவற்றை வழங்குபவன் செவ்வாய் கிரகம்.  ரத்தத்திற்க்கும், சகோதரத்திற்க்கும் காரகன். மேஷம், விருச்சிகம் ஆட்சி வீடுகள்.  மகரம் உச்ச வீடு, கடகம் நீச வீடு. அவிட்டம், மிருக சீரிடம், சித்திரை நட்சத்திரங்கள் செவ்வாய்க்கு உரிய  நட்சத்திரங்கள். ஜாதகத்தில் செவ்வாய் தோஷமுடையவர்களுக்கு சீக்கிரம் திருமணம்  ஆவதில்லை. லக்னத்திற்கு 2,4,7,8,12 இவைகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம்  உண்டு. ஆனால் செவ்வாய் குருவோடு சேர்ந்தாலும், சனி, ராகு, கேதுவோடு சேர்ந்தாலும்  செவ்வாய் தோஷம் பரிகாரம் ஆகிவடும். செவ்வாய் குருவோடு சேர்ந்தால் குருமங்கள  யோகம் உண்டாகும். செவ்வாய் சந்திரனோடு சேர்ந்தால் சந்திரமங்கள யோகம் உண்டாகும். 
                                                  அங்காரகன், குஜன், மங்களன், பெளமன், உக்கிரன் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் செவ்வாய் நவக்கிரகங்களுள் மூன்றாவது இடத்தைப் பெறுபவன். சகோதர காரகன் இவனே. ரத்தத்திற்கு காரகன் செவ்வாய். உடல் உறுதி, மன உறுதி தருபவன் செவ்வாய். உஷ்ணம், கோபம், எரிபொருள் ஆகியவற்றிற்கு உரியவன் செவ்வாய். கண்டிப்பதும் இவனே, தண்டிப்பதும் இவனே. மாபெரும் போர் வீரர்களை வழி நடுத்துபவன். பெரும் விளையாட்டு வீரர்களுக்கு அருள்பாலிப்பவன். செந்நிறத்தோல் அழகன், கடும் பார்வை உடையவன், பொறுமை அற்றவன். தெற்கு திசை செவ்வாய்க்கு உரியது. வழிபடுவோரின் விருப்பத்தை பூர்த்தி செய்பவன் இவன். தேசத்தை வழி நடத்தும் தலைவர்கள், படை தளகர்த்தர்கள், தீ போல சுட்டெரித்து தூய்மையை விரும்புவோர் ஆகியோரின் நாயகன் செவ்வாய். பவளமே செவ்வாய்க்கு உகந்த ரத்தினம். ஆட்டுக்கிடா செவ்வாயின் வாகனம். வைத்தீஸ்வரன் கோவிலில் அங்காரகன் எனப்படும் செவ்வாயும் மூலவராகவும் உற்சவராகவும் எழுந்தருளியிருக்கிறார். ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் இவருக்கு சிறப்பு நாட்கள்தாம். நமதுமனை மங்களம் சிறக்க செவ்வாயின் அருள் வேண்டும். செவ்வாயின் அருள் வேண்டி வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வழிபடலாம். 
வைத்தீஸ்வரன் கோவில் 
"இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் 
சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம். 
இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் 
முதலானவையும் கூட அகலும் என்பர்." 
தென் நாட்டின் தலைசிறந்த பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றானது. புள்ளிருக்கு வேளூர் எனப்படும் பாடல் பெற்ற தலம். பலராலும் பொதுவாக வைத்தீஸ்வரன் கோயில் என்றே அழைக்கப்பெறுகின்றது. சோழ வளநாட்டில் தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் வடகரைத் தலங்களில் 16வது தலமான இத்திருத்தலம் இந்திய இருப்புப் பாதையில் வைத்தீஸ்வரன் கோயில் எனும் பெயருடன் புகை வண்டி நிலையமாகவும் அமைந்துள்ளது. தருமையாதீனத்திற்குச் சொந்தமான 27 கோயில்களுள் மிகவும் புராதனமான, பிரபலமான ஒன்றாகும் இங்குள்ள கோயில். 
பெயர்க் காரணம்: புள்(ஜடாயு). இருக்கு(ரிக்வேதம்), வேள்(முருகன்), ஊர்(சூரியன்) ஆகிய இந்நால்வரும் பூசித்ததால் புள்ளிருக்கு வேளூர் எனும் பெயர் கொண்டது. மற்றும் சடாயு புரி, கந்தபுரி,வேதபுரி என்றும் அங்காரகன் வழிபட்டமையால் அங்காரகபுரம் என்றும் , அம்பிகையைப் பூசித்தமையால் அம்பிகாபுரம் எனவும் அழைக்கப்பெறும். வினைதீர்த்தான் கோயில், தையல்நாயகி கோயில் மற்றும் வழக்கில் உள்ள வைத்தீஸ்வரன்கோயில் எனப் பல பெயர்களும் உண்டு. கோயில் அமைப்பு: நான்கு கோபுரங்களுடனும் உயர்ந்த மதில்களோடும் கூடிய கோயில். மேற்கு நோக்கிய இறைவன் சந்நிதி கொண்டது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. தெற்கில் கணேசன் திகழ் மேற்கில் பைரவரும். தொக்கவடக்கில் தொடர்காளிமிக்க கிழக்கு உள்ளிருக்கும் வீரனையும் உற்றுப் பணிந்துய்ந்தேன். புள்ளிருக்கு வேளூரிற்போய். எனும் பாடலின் மூலம் வைத்தியநாத ஸ்வாமி ஆலயத்தைத் தெற்கில் கணபதியும்,மேற்கில் பைரவரும், வடக்கில் காளியும், கிழக்கில் வீரபத்திரரும் காவல் புரிகின்றனர் என்று அறியலாம். 
தீர்த்தம்: கோயிலுக்குள் விளங்கும் சித்தாமிர்த்த தீர்த்தம் விசேஷமானது. நான்கு புரங்களிலும் மண்டபத்தோடும் படிக்கட்டுகளோடும் நடுவில் நீராழி மண்டபத்தோடும் விளங்குகின்றது. இங்கே கிருத யுகத்தில் காமதேனு இறைவனைத் தன் முலைப்பால் கொண்டு திருமஞ்சனம் ஆட்டிய சம்பவம் நிகழ்ந்தது. அதுவே புனித தீர்த்தமாக பெருகி இங்கு அமைந்ததென்பர். இதன் காரணமாக கோக்ஷர தீர்த்தம் என்று பெயர்ப் பெறலாயிற்று. சதானந்த முனிவர் இங்கு தவம் செய்து கொண்டிருந்தபோது பாம்பால் துரத்தப்பெற்று தவளை ஒன்று தண்ணீரில் குதித்து அவர் தவத்தை கலைத்தது. முனிவர் குளத்தில் பாம்பும் தவளையும் வாசஞ் செய்யக்கூடாது என்று சபித்ததால் இக்குளத்தில் தவளைகள் வசிப்பதில்லை என்பர். இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம். நோய்தீரக் குளத்தில் வெல்லம் கரைத்து விடுவதும் பிரகாரத்தில் உள்ள மரப்பெட்டியில் உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கொட்டுவதும் இன்றும் உள்ள ஒரு பிராத்தனை வழக்கம். சித்தாமிர்த்த தீர்த்தம் தவிர கோதண்ட தீர்த்தம், கௌதம தீர்த்தம், வில்வ தீர்த்தம், அங்கசந்தனத் தீர்த்தம், முனிவர் தீர்த்தம் என்று வேறு தீர்த்தங்களும் இங்கு உள. 
மூர்த்திகள்: சுவாமி பெயர் ஸ்ரீவைத்தியநாதன், வைத்தீஸ்வரன், அம்பாள் பெயர் ஸ்ரீதையல்நாயகி, முருகன் செல்வமுத்துக் குமரன் எனும் பெயரோடு விளங்குகின்றார். கோளிலித்தலம் என்று அழைக்கப்படும் வைத்தீஸ்வரன் கோயிலில் நவக்கிரகங்கள் வக்கிரமில்லாமல் வரிசையாக ஈஸ்வரன் சந்நிதிக்கு பின்புறம் நோய்கள் தீர வேண்டி பிரார்த்தித்திருக்கும் காட்சியைக் காணலாம். அங்காரகனின் செங்குஷ்டநோயைத் தீர்த்தபடியால் அங்காரகத் தலமாகின்றது. அங்காரகனுக்குத் தனிச் சந்நிதி உண்டு. மூல விக்கிரகத்தோடு உற்சவ விக்கிரகமான அங்காரகனும் உண்டு. இரண்டும் தனித்தனிச் சந்நிதிகளாக உள்ளன. அங்காரக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடுவதால் தோஷம் நீங்கப் பெறுவர். நவக்கிரகங்களுக்கு அடுத்தாற்போல் 63 நாயன்மார்கள், ஸப்த கன்னியர் ஆகியோரையும் மற்றும் ஆயுர்வேதத்தின் தலைவனான தன்வந்திரி சித்தர் விஷ்ணு ஸ்வரூபத்தில் அமர்ந்திருக்கும் வடிவத்தையும் காணலாம். துர்க்கை மற்றும் சஹஸ்ர லிங்கமும் விசேஷமானவை. 
தலப்பெருமை: முருகன் சூரபத்மனை வெல்ல வேல் வாங்கிய தலம் இது. இறைவன் 4448 நோய்களையும் அதோடு ஊழ்வினைகளையும் தீர்க்கவல்ல வைத்தியநாதராய் எழுந்தருளியுள்ளார். அவருக்கு உதவியாய் அம்பாள் கையில் தைல பாத்திரமும், அமிர்த சஞ்சீவியும், வில்வமரத்தடி மண்ணும் ஏந்தி வர, இருவரும் தீராத நோய்களையும், வினைகளையும் தீர்த்து வைக்கும் வேதியத் தம்பதிகளாகின்றனர். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும் என்பர்.
சடாயு குண்டம்: சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றபோது, அதனைத் தடுத்த ஜடாயுவின் சிறகுகளை இராவணன் வெட்டி வீழ்த்தினான். பின்னர் இராமன் அவ்வழியில் சீதையைத் தேடி வந்த நேரத்தில், நடந்தவற்றைச் சொல்லிய ஜடாயு இராமனது காலடியில் உயிர்ததுறந்தான். இராமபிரான் ஜடாயுவின் வேண்டுகோள்படி சிதையடுக்கி அவனது உடலைத் தகனம் செய்த இடம் ‘ஜடாயு குண்டம்’ என்று அழைக்கப் பெறுகின்றது. இன்றும் இக்குண்டத்தில் உள்ள திருநீற்றினை அணிந்தால் தீராத நோய்களும் தீரும் எனும் நம்பிக்கை உண்டு. ஜடாயு குண்டத்திற்கு அருகில் ஜடாயு மோட்சத்தைச் சிலை வடிவில் காணலாம். ஜடாயு உற்சவ மூர்த்தியாகவும் இருக்கின்றார். 
திருச்சாந்துருண்டை: இது வைத்தியநாதப் பெருமானின் பிரசாதமாக நோய் நீங்கும் பொருட்டு அளிக்கப்பெறுவது. ஆலயத்தில் விபூதி குண்டத்தில் (ஜடாயு குண்டத்தில்) உள்ள விபூதியையும் சித்தாமிர்த தீரத்த நீரையும் சேர்த்துக் குழைத்து, ஐந்தெழுத்து மந்திரமாகிய ‘நமசிவாய’ என்பதனை ஓதிக்கொண்டே முத்துக்குமார சுவாமி சந்நிதியில் உள்ள குழியம்மியில் அரைத்து உளுந்தளவில் உருட்டி, அம்பாள் திருவடியில் வைத்து அர்ச்சித்து எடுத்துச் சேகரித்து வைத்துக் கொண்டு வேண்டியவர்களுக்கு அந்த உருண்டை வழங்கப் பெறுகின்றது. இதனை உண்டோர் நோய் (தீவினை) நீங்கி வாழ்வாங்கு வாழ்ந்து, பின் முக்தி எய்துவர். இங்கு அர்த்த சாமப் பூஜை செல்வ முத்துக்குமார சுவாமிக்குச் செய்த பின்புதான் ஸ்வாமிக்குச் செய்யப் பெறுகின்றது. அர்த்தசாமப் பூஜையின்போது முத்துக்குமார சுவாமிக்கு அணிவிக்கப் பெறும் சந்தனமான ‘நேத்திரிப்படி’ சந்தனமும் வேண்டிய வரம் தரவல்ல மகிமையுடையது. இந்தச் சந்தனத்தை ‘புழுகாப்பு’ என்பர். 
தல விருட்சம்: கிழக்குக் கோபுர வாயிலில் உள்ள வேம்பு தல விருட்சமாகும். இதனை ‘வேம்படிமால்’ என்கின்றனர். ஆதிவைத்தியநாதபுரம் இதுதான் என்பர். 
திருவிழாக்கள் :  நாள்தோறும் 6 கால பூஜைகள் உண்டு. பங்குனியில் பிரம்மோற்சவம் நடைபெறும். அதில் ஐந்தாவது நாளன்று செல்வமுத்துக்குமரன் வைத்தியநாதரைப் பூசித்துச் செண்டு பெறும் காட்சி மிக அற்புதமான ஒன்று. உற்சவகாலத்தில் கயிலையில் சோமாஸ்கந்தர் எழுந்தருளியிருப்பது போல் சுவாமி ஒரு புறமும், அம்பாள் ஒரு புறமுமாக எழுந்தருள, செல்வமுத்துக்குமார சுவாமி நடுவில் எழுந்தருள்வார். மாதந்தோறும் வரும் கார்த்திகைவிழா இங்குச் சிறப்பானது. இந்நாளில் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசிக்க மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடுவர். அபிஷேகங்களில் சந்தன அபிஷேகம் மிகவும் சிறப்புடையது. தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் மாதந்தோறும் கார்த்திகையன்று எழுந்தருள, அவர்கள் திரு முன்னி லையில் இந்த அபிஷேகம் நடைபெறுவது கண்கொள்ளக் காட்சி. அங்காரக் க்ஷேத்திரமாதலால் செவ்வாயக் கிழமைகளில் அங்காரகர் பிரகாரத்தில் வலம் வருவார். கார்த்திகை மாத சோம வாரங்களில் ஈசுவரனுக்குச் சங்காபிஷேகமும் உண்டு. ஆண்டுதோறும் நகரத்தார்கள் சித்திரை மாதத்தில் வண்டிப் பயணமாக வேளூருக்கு வரும் வழக்கம் உண்டு. ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இப்பயணம் ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு சித்திரைத் திங்களில் நடைபெற்று வருகின்றன. இப்பயணம் கீரணிப்பட்டி முத்து மாரியம்மன் திருவிழா முடிந்து தொடர்ந்து வரும் புதன்கிழமை இரவு 12 மணிக்கு மேல் அதாவது வியாழக்கிழமை காலை தொடங்குகிறது. இப்பயணம் கீரணிப்பட்டித் திருவிழா முடிந்தபின் நடைபெறுவதற்குக் காரணம் நகரத்தார்கள் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து பாண்டிய நாடு வரும்போது கீரணி அம்மனையும் தங்களோடு கொண்டு வந்தார்கள் என்பது வரலாறு. இதனைக் கீழ்க்காணும் கும்மிப்பாடல் வழி அறியலாம். 
“காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்ததொரு 
காவலன் மாறனழைத்து வர பூவிரிப் 
புலன்மிகும் பாண்டிய நாட்டினிற் 
பொங்கத்துடன் வந்தமர்ந்தானே” 
பொங்கம் = பொலிவு அல்லது மகிழ்ச்சி. 
வண்டிப் பயணமாகத் துவங்கி நடைப்பயணத்தையும் இன்று ஈர்த்துப் பல்லாயிரக் கணக்கானோர் பங்கு பெறும் சிறப்புறு பயணமாகியுள்ளது. இது கீழச்சீவல்பட்டி, அழகாபுரி நகரத்தார்களோடு பள்ளத்தூர், குருவிக்கொண்டான்பட்டி, ஆத்தங்குடி, கோட்டையூர், சிறுகூடற்பட்டி ஆகிய ஊர்களிலிருந்தும் பக்தர்கள் இந்த வண்டிப் பயணத்தில் கலந்து கொள்கின்றனர். திருஞானசம்பந்தர் இத்தலத்தைப் பற்றிப் பதிகம் ஒன்று பாடியுள்ளார். திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்கள் பாடியுள்ளார். தருமையாதீனம் 10வது மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமி அருளிய செல்வமுத்துக்குமாரசாமி திருவருட்பாவும் குமரகுருபரர் அருளிய பிள்ளைத் தமிழும் இத்தலம் பற்றிய அழகு தமிழ்ப் பாடல்கள். “தையல்நாயகியைத் தொழுது எழுவார் தொங்கத் தொங்கத் தாலி அணிவார்”. வைத்தியநாதனைப் போற்றி எழுவாருக்கு அவனே மந்திரமும் மருந்துமாகித் தீராத நோய் தீர்த்து வைப்பான். பிறவிப் பெரும்பயனையும் தேடித்தருவான். 
நிறம்- சிகப்பு 
அணிகலன்-பவளம் 
வாகனம்-அன்னம் 
தானியம் -துவரை 
காரகம்- பூமி,சகோதரன்,வீடு 
கடவுள் - முருகன் 
சுவை-துவர்ப்பு 
உச்சம- மகரம் 
நீசம் - கடகம் 
திசைகாலம்- 7 ஆண்டுகள் 
நட்பு- சூரியன் 
பகை-புதன்,ராகு,கேது 
சமம்-சுக்கிரன்,சனி 
உபகிரகம்-துமன் 
கோவில்-வைத்தீ்ஸ்வரன் கோவில் 
ஒவ்வொரு வீட்டிலும் செவ்வாய் இருந்தால் என்ன பலன்  
செவ்வாய் 1 ல் இருந்தால் தலையில் அடிபடும். செவ்வாய் ஒன்றாம் வீட்டில் இருந்து 7 ம் பார்வையாக 7 ம் வீட்டை பார்ப்பதால் திருமண வாழ்வில் சங்கடங்கள் ஏற்படும். செவ்வாய் முதல் வீட்டில் இருப்பதால் மூர்க்கதனமாக கோபம் வரும். தாயாருக்கு தீங்கு விளைவிக்கும். கோபம் அதிகரிக்கும். இளம்தோற்றமாக காணப்படும். உடம்பில் உஷ்ணம் காரணமாக கட்டி ஏற்படும். நல்ல தைரியசாலிகளாக இருப்பார்கள். தலையில் அடிப்படும். ஏதாவது விதத்தில் தலையில் அடிப்படும். செவ்வாய் தசையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செவ்வாக்கு சொந்த வீடாக அல்லது உச்ச வீடாக இருந்தால் நல்லது நடக்கும். 
செவ்வாய் 2 ம் வீட்டில் இருந்தால் வாக்கில் கடுமை இருக்கும். பேச்சில் சண்டை வரும். செவ்வாய்க்கு சொந்த வீடாகவோ உச்சவீடாக இல்லாவிட்டால் அவர் சொல்லே அவருக்கு விரோதமாக ஆகும். கையில் காசு தங்காது. செவ்வாய் இரண்டில் இருப்பதால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள். கண்ணில் தொந்தரவு இருக்கும். செவ்வாய் பலம் பெற்று இருந்தால் நல்லது நடக்கும். செவ்வாய் இரண்டில் இருப்பதால் தோஷம் ஏற்படும். 
செவ்வாய் 3 ம் வீட்டில் இருந்தால் நல்ல தைரியசாலியாக இருப்பார். காதில் தொந்தரவு இருக்கும். செல்வம் நிறைய கிடைக்கும். நல்ல அறிவாற்றல் கிடைக்கும். உடம்பு நல்ல உறுதியாக இருக்கும். இளைய சகோதரருக்கு கெடுதல் செய்யும். சிலபேருக்கு இளைய சகோதர,சகோதரிகள் இருக்க மாட்டார்கள். 3 ஆம் வீட்டில் செவ்வாய் பலம் பெற்றால் நல்ல வாழ்க்கை அமையும். 3 ஆம் வீட்டு செவ்வாய் மூலம் தாய்நலம் கெடும். 
செவ்வாய் 4 ம் வீட்டில் இருந்தால் தாய்வீட்டின் சொத்து கிடைக்கும். தாயின் உடல்நிலை மோசமாக இருக்கும். கணவன் மனைவி சண்டை சச்சரவு இருக்கும். நல்ல சொத்துக்கள் சேரும். 4 ஆம் வீட்டு செவ்வாய் பலம் குறைந்தால் வாழ்க்கையில் வசதி வாய்ப்பு குறையும். மார்பில் வலி ஏற்படும். 
செவ்வாய் 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரதோஷம் ஏற்படும். புத்தி மங்கும். குழந்தைகளால் சண்டை சச்சரவுகள் ஏற்படும். வயிற்றுவலி ஏற்படும். எதிரிகளால் தொல்லை வரும். பணவரவு இருக்காது. 5 ஆம் வீடு செவ்வாய்க்கு சொந்த வீடாகவோ அல்லது உச்சவீடாகவோ இருந்தால் தடைகள் அனைத்தும் அகலும். 5ஆம் வீடு நாம் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்று காட்டும் இடம் ஆகையால் செவ்வாய் 5-ல் இருந்தால் சுப்பிரமணியரை வணங்க வேண்டும். 
செவ்வாய் 6 ஆம் வீட்டில் இருந்தால் எதிரிகளை வெற்றிகொள்ளும் தைரியும் இருக்கும். நல்ல சொத்துக்கள் சேரும். செவ்வாய் காமம் அதிகமாக இருக்கும். தாய்மாமனுக்கு தொல்லை தருவார். நல்ல செரிக்கும். இரத்தம் மாசுபடும் அதனால் உடலில் கட்டி ஏற்படும். நல்ல கற்றவர்களிடம் தொடர்பு ஏற்படும். புகழ் ஏற்படும். 6 ஆம் வீட்டு செவ்வாயினால் பெரும் பொருட்செலவு ஏற்படும். 
செவ்வாய் 7 ஆம் வீட்டில் இருந்தால் 7 ஆம் பார்வையாக லக்கினத்தை பார்ப்பதால் தலையில் அடிபடும். திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும். செவ்வாய்க்கு நட்பு வீடாக இருந்தாலும் சொந்த வீடாக அல்லது உச்ச வீட்டில் இருந்தால் பிரச்சினைகள் இருக்காது. பெண்களால் பிரச்சினை உண்டாகும். இவரிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் முன்கோபக்காரர்களாக இருக்ககூடும். 
செவ்வாய் 8 ஆம் இடத்தில் இருந்தால் கண் பார்வை கெடும். ஜெயிலுக்கு செல்ல நேரிடும். இரத்த சம்பந்தமாக பிரச்சினை ஏற்படும்.கடன் பளு ஏற்படும். ஆயுள் குறையும். கோபம் அதிகம் வரும். சகோதர்களின் நலம் கெடும். பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்படும். 
செவ்வாய் 9 ஆம் இடத்தில் இருந்தால் தந்தையாரின் நலம் கெடும். தந்தைக்கும் இவருக்கும் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். 9 ஆம் இடத்தில் உள்ள செவ்வாய்யால் தந்தையாரின் நலம் கெடும். தந்தைக்கும் இவருக்கும் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். நற்பணிகள் செய்யமாட்டார். கொடிய செயல்கள் செய்ய வைப்பார். 9 ஆம் வீட்டு செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் நல்ல நிலைக்கு உயர்த்துவார். 
செவ்வாய் 10 ஆம் இடத்தில் இருந்தால் கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் உயர்ந்த பதவியில் அமர வைப்பார். பதவியில் தலைமை இடம் தேடி வரும். நெருப்பு மூலமாகவும் வருமானம் பெருகும். பெரிய மனிதர்களிடம் இருந்து பெரிய பொறுப்புகள் தேடி வரும். 
செவ்வாய் 11 ஆம் இடத்தில் இருந்தால் பெரும் பணக்காராக மாற்றுவார். மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். பெரும் செலவு செய்து தொழிலில் முன்னேற்றம் காண வைப்பார். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மூத்த சகோதர சகோதரிகளிடம் சண்டை சச்சரவு ஏற்படும்.
செவ்வாய் 12 ஆம் வீட்டில் இருந்தால் கெடுதல் அதிகம் இருக்கும். சிறை செல்ல நேரிடும். பெண்கள் மூலம் பொருளாதார இழப்பு ஏற்படும். மர்ம விலங்கினால் ஆபத்து ஏற்படும். 
                                                   தென்னிந்திய மக்கள் செவ்வாய்கிழமையில் எந்த நல்ல காரியங்களும் தொடங்குவது இல்லை ஆனால் இந்தியாவின் வடமாநில மக்கள் இந்த கிழமைக்கு மங்களவார் என்று பெயர் வைத்து நல்ல காரியங்களை தொடங்குகிறார்கள் என்று தினமலர் நாளிதழில் படித்தேன். அதனால் தான் செவ்வாய்யைப் பற்றி எழுதலாம் என்று எண்ணினேன் அதனுடன் நமது பாடமும் செவ்வாய் பற்றி வந்துகொண்டுருப்பதால் எழுதுகிறேன். நமது வீட்டில் எல்லாம் திருமண காலங்களில் பெண் பார்க்கும் அல்லது மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் தவறாது அடிபடும் வார்த்தை செவ்வாய் தோஷம் இருக்கிறதா அல்லது இல்லையா என்றுதான். இந்த தோஷம் ஒவ்வொரு ஜோதிடரிடமும் வேறுபடும். ஒருவர் தோஷம் இருக்கும்பார் இன்னொருவர் தோஷம் இல்லை என்பார். செவ்வாய் உச்சவீட்டில் இருக்கிறது அதனால் தோஷம் கிடையாது என்பர் அல்லது செவ்வாய் நீசவீட்டில் இருக்கிறது அதனால் தோஷம் கிடையாது என்பார்கள். இதனைப்பற்றி ஆராய்வதற்கே பல வழிகள் இருக்கிறது. நான் சொல்ல வந்தது. ஒன்பது கிரகங்களில் நீங்கள் கேட்டவுடன் அள்ளி வழங்குபவர் செவ்வாய் மட்டும் தான். ஏனென்றால் செவ்வாய்கிரகம் ஒரு அக்னி கிரகம் அது மிகவும் வீரியத் தன்மை வாய்ந்த கிரகம் இருக்கும். நெருப்பு உடனே பற்றிக்கொள்ளும் தன்மையினால் செவ்வாய் மட்டும் உடனே தருபவர். வேறு எந்த கிரகத்திடம் கேட்டாலும் பலன் உடனே நடக்காது. ஆனால் செவ்வாயிடம் மட்டும் கேட்டால் உடனே நிறைவேறும். நீங்கள் இதனை ஒரு ஆய்வாகவே எடுத்துக்கொள்ளலாம். செவ்வாயின் கடவுளாகிய முருகனிடம் ஏதோ ஒரு வேண்டுதலுடன் கேளுங்கள் அந்த காரியம் நிச்சயம் நடந்தேறும். உங்கள் வேலை உடனே நடக்க வேண்டும் என்றால் செவ்வாய்கிழமை பயன்படுத்துங்கள். உங்களுக்கு செவ்வாய்தோஷம் இருந்தால் ஒன்பது வாரம் செவ்வாய்கிழமை விரதம் இருந்து பாருங்கள். விரதத்தின் தன்மை பொறுத்து தோஷம் நீங்கி நல்லது நடக்கும். செவ்வாய் கிழமை நாம் பயன்படுத்தலாம். முருகனை முழு மனதுடன் வழிபட்டு அனைத்தையும் பெறுவோம்.
அங்காரகன் (செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய) 
ஓம் வீரத்வஜாய வித்மஹே 
விக்ன ஹஸ்தாய தீமஹி 
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத் 
ஓம் அங்காரகாய வித்மஹே 
சக்திஹஸ்தாய தீமஹி 
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத் 
ஓம் அங்காரகாய வித்மஹே 
சக்திஹஸ்தாய தீமஹி 
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத் 
ஓம் லோஹிதாங்காய வித்மஹே 
பூமிபுத்ராய தீமஹி 
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
புதன்.
Picture
                        4. புதன் புதன் வித்யாகாரன் என்று அழைக்கப்படுகிறார். இது சூரியனை சுற்றி வருகிறது சூரியனுக்கு சுமார் 1,60,00,000 KM அப்பால் இருந்து சுற்றி வருகிறது. இது தன்னைத்தானே 24 மணி நேரத்தில் சுற்றி வருகிறது. 88 நாட்களில் சூரியனை சுற்றி வருகிறது. புதன் கல்வி,மாமன், அத்தை,மைத்துனர்களை பற்றி அறிந்து கொள்ள புதன் உதவி செய்பவர். 
புதன் ஒரு அலிக்கிரகம் எனப்படும்.      கல்வி,வித்தை,மாமன்,அத்தை,மைத்துனர்,நண்பர்கள்,கணிதம்,கபடம்,கதைகள், சிற்பம்,சித்திரம்,நுண்கலைகள்,நடிப்பு,சாஸ்திர ஞானம் ஆகியவற்றிக்கு காரணம் ஆகிறார். சுபகிரக வரிசையில் புதனும் சேரும். ஆனால் புதனோடு பாவகிரகங்கள் சேர்ந்தால் பாவி  ஆகிவிடும். புதன் அலிக்கிரகம். எந்த கிரகத்தோடு சேர்கிறதோ அந்த கிரகத்தின் தன்மை  பிரதிபல்க்கும். கேட்டை, ஆயில்யம், ரேவதி இந்த மூன்று நட்சத்திரங்களின் நாயகன்.  முதுன ராசிக்கும், கன்னி ராசிக்கும் அதிபதி புதனே. புதன் ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்று சூரியனோடு சேர்ந்தால் புதஆதித்ய யோகம்  உண்டாகும். இதனால் கல்வி மூலம் பெரிய அந்தஸ்த்தை ஏற்படுத்தும். புதன்  வித்யாகாரகன். கல்வி வித்தை, தொழில் இவைகளின் மூலம் சிறப்பை ஏற்படுத்துபவன். நாடகம் மற்றும் நடன அமைப்புகளுக்கு புதனுடைய பலமே காரணம். நகைச்சுவை ததும்பும் நயமான பேச்சு, பளிச்சென்ற உச்சரிப்பு, புத்தக வெளியீடு  இவைகளுக்கு புதபலமே காரணம். 
                                    புதன் வாக்குஸ்தானத்தில்- 2 ஆம் இடத்தில் ஆட்சி உச்சம்  பெற்றால் சிறந்த பேச்சுதன்மை இருக்கும். வித்யா காரகன் புதன். கணிதம், லாஜிக், வைத்தியம், ஜோதிடம் ஆகிய அனைத்திற்கும் நாயகன் புதனே. நாடகம், நடனம், புத்தக பிரசுரம் ஆகியவற்றிற்கு புதனின் பலமே வேண்டும். உடலில் நரம்பு இவன். நரம்பு மண்டலத்தின் ஆதாரமும் இவனே. வடகிழக்கு புதனுக்கு உரிய திசை. புதன் ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் ஜோதிடக்கலை சித்திக்கும். புதனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் காசியில் உள்ளது. திருவெண்காடு புதனுக்குரிய தலம். விஷ்ணு இவருக்கு அதி தேவதை. நாராயணன் பிரத்யதி தேவதை. மரகதம் புதனுக்கு உகந்த ரத்தினம். உடலில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் திருவெண்காடு சென்று புதனை வழிபட நிவர்த்தி பெறலாம். இங்கே இவருக்கும் பதினெழு தீபம் ஏற்றி, பதினேழு முறை வலம் வந்து புத பகவானை வழிபட்டால் திருமண தோஷம், புத்திர தோஷம் முதலியன நீங்கும். இவருக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து வெண்காந்தள் மலர் சூட்டி, பாசிப்பருப்பு பொடியில் காரம் சேர்த்து நிவேதனம் செய்யவேண்டும். 
அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் 
மூலவர்:சுவேதாரண்ய சுவாமி
உற்சவர்:
பிரமவித்யாநாயகி அம்மன்/தாயார்: -
தல விருட்சம்: வடவால், கொன்றை, வில்வம் 
தீர்த்தம்:முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்) 
ஆகமம்/பூஜை :-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:ஆதிசிதம்பரம், திருவெண்காடு
ஊர்:திருவெண்காடு 
மாவட்டம்: நாகப்பட்டினம் 
மாநிலம்: தமிழ்நாடு
பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர்  வாரப்பதிகம் 
கண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும் பெண்காட்டும் 
உருவானும் பிறைகாட்டும் சடையானும் பண்காட்டும் இசையானும் 
பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் 
கொடியானே. -திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 11வது தலம். 
திருவிழா:மாசி மாதம் - இந்திரப் பெருவிழா - 13 நாட்கள் திருவிழா - பிரம்மோற்சவம் - இந்திரனால் நடத்தப்படும் விழா என்ற ஐதீகம் பெற்ற சிறப்புடையது இந்த திருவிழா. காவிரிப்பூம்பட்டினத்தில்இந்திர விழா நடைபெற்றதைச் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
இத்தலத்தில் இத்திருவிழா மிகவும் சிறப்புற நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வர். சித்திரை திருவோணத்தில் நடராஜர் அபிசேகமும், வைகாசியில் வெள்ளை யானைக்கு சாப விமோசனம் அளித்தலும், ஆனி உத்திரத்தில் நடராஜருக்கு அபிசேகமும், ஆடியில் பட்டினத்தாருக்குச் சிவதீட்சை அளித்தலும், அம்பாளுக்கு ஆடிபூரம் பத்து நாள் உற்சமும், ஆவணியில் நடராஜருக்கு அபிசேகமும், கோகுலாஷ்டமி , விநாயகர் சதுர்த்தி விழாவும், புரட்டாசியில் தேவேந்திர பூஜையும், நவராத்தி விழாவும், ஐப்பசியில் கந்த சஷ்டி விழாவும், கார்த்திகையில் மூன்றாவது ஞாயிறு அன்று அகோர மூர்த்திக்கு மகாருத்ரா அபிசேகமும், கார்த்திகை தீப விழாவும், மார்கழி திருவாதிரையில் நடராஜர் தரிசனமும், தை மாதத்தில் சங்கராந்தி விழாவும் இத்தலத்தில் சிறப்புற நடைபெறுகின்றன. 
பங்குனி தோறும் அகோர மூர்த்திக்கு லட்சார்ச்சானை வைபவம் சிறக்க நடைபெறும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும். 
தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் நவகிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. இவர் திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என பெயரும் உண்டு. காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும். 
அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில், திருவெண்காடு - 609 114, நாகப்பட்டினம் மாவட்டம். 
ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. கிழக்கு வாயிலில் பக்கத்தில் தேவஸ்தானம் நடத்தும் மெய்கண்டார் பாடசாலையுள்ளது. உள் இடம் பரந்த இடப்பரப்பு. உள்நுழைந்ததும் இடப்பால் முக்குளத்துள் ஒன்றான அக்னி தீர்த்தம் உள்ளது. கரையில் விநாயகர், மெய்கண்டார் சந்நிதிகள் உள்ளன. பிராகாரத்தில் பக்கத்தில் அடுத்த திருக்குளமாகிய சூரியதீர்த்தமுள்ளது. கரையில் சூரியதீர்த்தலிங்க சந்நிதி உள்ளது. சுப்பிரமணியர் மண்டபம் ஆறுமுகர் சந்நிதி ஆகியவற்றை அடுத்து அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. இத்தல விநாயகர் பெரியவாரணர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். 
பிரார்த்தனை:இங்கு கல்வி, தொழிலுக்கு அதிபதியான புதனுக்கு தனி ஆலயம் உள்ளது. கல்வி மேன்மையடைய, தொழில் சிறக்க, பிணி நீங்க, பிள்ளைப்பேறு பெற புதனை வழிபட்டால் மேன்மையடைவது உறுதி. இத்தலத்தில் உள்ள வடவால் ஆல விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது.21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும். இதன் பெயர் ருத்ர கயா. காசியில் இருப்பது விஷ்ணு கயா. பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும்.குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது. மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்,கல்வி மேன்மை, நா வன்மை ஆகியவை கிடைக்கும்.பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கும். இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
நேர்த்திக்கடன்: நவகிரக தலங்களில் இது புதனுக்குரிய தலம் ஆகும். புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து வெண்காந்தள் மலர் சூட்டி,பாசிப்பருப்புப் பொடியில் காரம் சேர்த்து நிவேதனம் செய்ய வேண்டும். உடலில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் புதன் பகவானை வழிபட வேண்டும்.திருமண தோசம், புத்திர தோசம் உள்ளவர்கள் புதன் பகவானுக்கு பதினேழு தீபம் ஏற்றி பதினேழு முறை வலம் வந்து வழிபடுகிறார்கள். சுவாமிக்கு மா , மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி ,பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம். 
தலபெருமை:காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு. 
இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று. 
நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும். 
51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம். 
இவர் நவதாண்டவம் புரிந்தார். எனவே, இதை ஆதி சிதம்பரம் என்பார்கள். 
இங்கு நடராஜ சபையும் ரகசியமும் உண்டு. சிதம்பரத்தை போல நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உண்டு. 
இந்திரன், ஐராவதம், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். 
பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இங்குதான். 
சுவேதாரண்யர் (திருவெண்காடர்) :திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் ஆகிய பெயர்களும் இவருக்கு உண்டு. இவரே இத்தலத்தின் நாயகர். லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். 
நடராஜர் :  இங்குள்ள நடராஜரை ஆடவல்லான் என்று கல்வெட்டு கூறுகிறது. இத்தலம் ஆதிசிதம்பரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கும் தில்லை சிதம்பரம் போன்றே நடராஜர் சபை அமைந்து உள்ளது.ஸ்படிக லிங்கமும், ரகசியமும் இங்கும் உள்ளது. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது. 
அகோர மூர்த்தி : ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி. இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர். இவரது வீரக் கோலம் இங்கு சிறப்பாக இருக்கிறது. சிவபெருமான் தன் பக்தர்கள் பொருட்டு 64 வித உருவங்களில் காட்சியளித்து வருகிறார்.இது 43 வது உருவம் ஆகும்.இறைவனின் வீரச் செறிவை காட்டும் கோலம்.பெயரில் சற்று கடுமை இருந்தாலும் அருள் நிலையில் இந்த மூர்த்தி உள்ளார். மூலவரைப் போலவே உற்சவரும், நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் பெருமான் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு. அட்ட வீரட்டதலங்களில் இத்தலம் சேராவிட்டாலும் சிவபெருமானின் வீரச்செயல் நிகழ்ந்த தலம் இது.இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது. 
பிரம்ம வித்யாம்பாள் : இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவி இவள்.திருவெண்காடரின் சக்தி வடிவம் இவள். மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து தன் கணவனாக பெற்றார். பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகை யானாள். கல்வியில் சிறந்து விளங்க இவளை வழிபாடு செய்வது சிறப்பு. நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ(செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை(யோகம்) அணி செய்வதைக் காணலாம்.கீழ்க்கரம் அபய கரம்.இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும்.பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும்.பெருமை வாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று. 
காளிதேவி : சுவேத வனத்தில் எழுந்தருளிய மாசக்தியாதலால் சுவேதன காளி என்று அழைக்கப் படுகிறாள். எட்டு கரங்கள், பாசம், சக்கரம், வாள், உடுக்கை, கேடயம், கபாலம் ஆகிய படைக் கலன்களை தாங்கியுள்ளார். பாவத்தில் எடுப்பும் மிடுக்கும் கொப்பளிக்கிறது. உடலின் சாய்வுக்கு ஏற்ப வலக்காலைப் பீடத்தின் மீது உயர்த்தி வைத்துக் கொண்டு இடக்காலைத் தொங்க விட்டிருக்கிறார். பக்தியோடு கலையை ஆராதிப்பவர்களுக்கு இவள் அருள் புரிகிறாள். 
துர்க்கை தேவி : துர்க்கையின் உருவைக் கண்ட மாத்திரத்தில் மேற்கண்டு அடிவைக்க மனம் வராது. மகிஷனை அழித்த இந்த மாதேவி இப்படியும் கூட அழகினளாக இருப்பாளா என்ற ஆச்சர்யம் வரும். இவள் தன் எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு உடையவளாக காட்சி தருகிறாள். 
புதன் பகவான் : வித்தயாகரகன் எனப்படும் புதன் பகவான் அன்னை வித்யாம்பிகையின் அரசாட்சிக்குட்பட்டவர் போன்றும் தாயின் அரவணைப்போடும் கூடி வீற்றிருக்கும் சேய் போன்றும் அனையர் கோயிலுக்கு இடது பாகத்தில் தன் கோயிலை அமைத்துக் கொண்டு அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் திருவெண்காடரை புதன் தன் அலி தோசம் நீங்கி நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு.இவர் செய்த மாதவத்தின் பயனாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிபதி ஆனார்.திருவெண்காடு நவகிரக தலங்களில் மிகவும் புகழும் சிறப்பும் பெறக் காரணமாக அமைந்தவர். 
பிள்ளையிடுக்கி அம்மன்:திருஞான சம்பந்தர் இத்தலத்தின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் காலை வைக்க பயந்து "அம்மா' என்றழைத்தார். இவரது குரலைக்கேட்ட பெரியநாயகி இவரை தன் இடுப்பில் தூக்கி கொண்டு கோயிலுக்குள் வந்தார். சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் கோயிலின் பிரகாரத்தில் உள்ளது. புதனுக்கு தனி சன்னதி: நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர். இவருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது. ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது. அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும். இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம். இசைக்கு அதிபதியான புதனை இசைக்கலைஞர்களும், திரைப்படக்கலைஞர்களும் வழிபட்டு பயன் பெறுகின்றனர். நவகிரகங்களில் இது புதன் சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற தலம். மிகப்புகழ்பெற்ற பிரார்த்தனை தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலம் காசிக்கு இணையான ஆறு தலங்களில் முதன்மையானது.காசியில் உள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது. இத்தலத்தில் மூர்த்திகள்(திருவெண்காடர், அகோரமூர்த்தி, நடராஜர்), சக்தி(துர்க்கை, காளி, பிரம்மவித்யாம்பாள்),தீர்த்தம் (அக்னி தீர்த்தம்,சூர்ய தீர்த்தம்,சந்திர தீர்த்தம்) தலவிருட்சம்(வடவால், வில்வம், கொன்றை ) என்று மும்மூன்றாக அமையப்பெற்ற சிறப்பு உள்ளது. காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. அட்டவீரட்டத்தலம் போன்றே இங்கும் சிவபெருமான் மருத்துவாசுரனை சம்காரம் செய்து வீரச்செயல் புரிந்துள்ளார். ஆதி சிதம்பரம் என்ற பெயரும் பெருமையும் பெற்ற தலம் இது. சப்த விடத்தலங்களில் இத்தலமும் ஒன்று. வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.எனவே யுகம் பல கண்ட கோயில் இது. சிலப்பதிகாரத்திலும் இத்தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே சமண வைணவ காவியங்களில் கூறப்பட்டுள்ள சைவ சமயக் கோயில் இது என்ற பெருமை பெற்றது. பட்டினத்தார் இத்தலத்தில் வந்து திருவெண்காட்டு நாதரே அவருக்கு குருநாதராக இருந்து சிவதீட்சை தந்த தலம். இத்திருவிழா, இத்தலத்தில் இப்போதும் நடைபெறுகிறது. பட்டினத்தாருக்கு திருவெண்காடர் என்ற பெயர் பெற காரணமாக இருந்து கோயில் இது. 
தல வரலாறு:பிரம்மனிடம் பெற்ற வரத்தால் மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்தும் போர் செய்தான்.அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான்.ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார்.இந்த அகோர உருவை கண்ட மாத்திரத் திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும்காணலாம். தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது. 
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  
நிறம் - பச்சை 
வாகனம்- குதிரை 
தானியம்-பச்சைப் பயறு 
ஆட்சி- மிதுனம்.கன்னி 
உச்சம்-கன்னி 
நீசம்-மீனம் 
திசைகாலம்- 17 ஆண்டுகள் 
பகை-சந்திரன் 
புதனை பற்றிய பாடம் இவர் தான் சோதிட சாஸ்திரத்திற்க்கு காரகம் வகிப்பவர். இவர்தான் புத்திகாரகன் என்று அழைக்கப்படுகிறார். சோதிட சாஸ்திரத்திற்க்கு நினைவாற்றல் மிக முக்கியம் இல்லை என்றால் சோதிடம் படிக்க இயலாது. அனைத்தும் நினைவில் இருந்தால் தான் ஜாதகம் பார்க்கும் போது அனைத்து பலன்களும் வந்து அருவியாக கொட்டும். இல்லை என்றால் வாடிக்கையாளாரிடம் பல்பு வாங்கவேண்டியது தான். புதன் வேறு எதற்கு எல்லாம் காரகன் ஆகிறார் என்று பார்க்கலாம். நல்ல புத்தி கூர்மைக்கு அதிபதி இவர் தான். அதனால் தான் இவரை கல்விகாரகன் என்று அழைக்கிறோம். ஜாதகத்தில் நல்ல முறையில் இருந்தால் தான் படிக்க முடியும். சில பேருக்கு புதன் நல்ல அமையும் சிறந்த அறிவாளியாக இருப்பார்கள். வியாபாரத்திற்க்கும் இவர் தான் காரகம் வகிக்கிறார். சிறந்த முறையில் ஒருவர் வியாபாரம் செய்வதற்க்கு புதன் தான் காரணம். அனைத்து தொடர்புகள் இருந்தால் தான் ஒருவர் வியாபாரத்தில் கொடிகட்டி முடியும். புதன் நல்ல முறையில் இருக்கும் ஒருவர் அனைத்து தொடர்புகளும் கிடைக்கும். நல்ல பேச்சுக்கும் இவர் தான் காரகம் வகிப்பவர். புதன் நல்ல நிலையில் இருக்கும் போது பார்த்தால் திட்டமிடுதல் அனைத்து பேருக்கும் சிறந்த முறையில் நன்மை பயக்கும் விதத்தில் இருக்கும். நல்ல வழியில் திட்டமிடுதல் புதன் நல்ல நிலையில் இருக்கும் போது இந்த மாதிரி நடக்கும். உடலில் நல்ல தோல் நிலைக்கும் இவர் தான் காரகம் வகிக்கிறார். புதன் கெட்டால் என்ன நடக்கும். புத்தி கெட்டுவிடும் படிப்பது எதுவும் நினைவில் இருக்காது இரண்டாம் வீட்டில் கெட்டால் பேச்சு ஒழுங்காக வராது திக்கி திக்கி பேசுவார்கள் அல்லது பேச்சு சுத்தமாக வராது. அது புதன் உடன் சேரும் கிரகத்தைப் பொறுத்தது. புதன் கெட்டால் திட்டமிடுதல் அனைத்தும் வில்லங்கமாகதான் இருக்கும். புதனுடன் சேரும் கெட்ட கிரகங்களை பொருத்து வில்லங்கம் அமையும். ஞாபகம் மறதி ஏற்படும். தொழுநோய் தாக்கும் 
புதன் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன நடக்கும்  
புதன் 1 ஆம் வீட்டில்  இருந்தால் அதாவது லக்கினத்தில் இருந்தால் நல்ல புத்தி உடன் இருப்பார்கள் நல்ல பேச்சு இருக்கும் பேச்சில் இனிமை இருக்கும். நல்ல உலக விஷயங்களில் சிறந்த அறிவு இருக்கும். நல்ல சுறுசுறுப்பாகவும் நல்ல தோற்றப்பொழிவுடன் இருப்பார்கள். லக்கினத்தில் இருந்து ஏழாம் வீட்டைப் பார்ப்பதால் மனைவியுடன் பிடிப்புடன் இருப்பார்கள். 
புதன் 2 ஆம் வீட்டில் இருந்தால் பேச்சு நன்றாக இருக்கும் இவரின் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். தந்தையிடம் இவருக்கு மதிப்பு இருக்கும் குடும்பம் சிறந்து விளங்கும். செல்வ வளம் நன்றாக இருக்கும். 
புதன் 3 ஆம் வீட்டில் இருந்தால் இளைய சகோதர சகோதரிகள் நிறைய பேர் இருப்பார்கள். அவர்களில் இரட்டை பிறப்பு உள்ளவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு. நல்ல ஆயுள் இருக்கும். வியாபார நுட்பம் ஏற்படும். புதன் மிதுனம் ராசிக்கும் கன்னி ராசிக்கும் அதிபதி. புதன் ஒரு இரட்டை கிரகம் இந்த ராசியில் பிறந்தவர்களைப் பற்றி பார்த்தீர்கள் ஆனால் இவர்கள் உள் ஒன்று வைத்து வெளியில் ஒரு மாதிரி பேசுவார்கள். இரட்டை வேஷம் மிகுதியாக இருக்கும். நீங்கள் இவர்களிடம் போய் எதனை கேட்டாலும் உங்களிடம் ஒன்று பேசிவிட்டு உங்கள் நண்பர்களிடம் உங்களைப் பற்றி கேட்டு தெரிந்துக்கொள்வார்கள். புதனின் இயல்பு இது. மிதுனம் கன்னி ராசிகாரர்கள் காமத்தில் மிகுதியான ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். அதனால் இவர்களுக்கு குழந்தைகள் பிறப்பது தாமதமாகிறது. முறையற்ற தொடர்பு கர்மத்தை விலை கொடுத்து வாங்குவது போல் தான் இதனை இவர்கள் தவிர்க்க வேண்டும். நான் பார்த்த இந்த ராசிகாரர்களின் ஜாதகங்களில் மிகுதியான நபர்களின் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நடைபெறுவது தாமதமாகிறது. 
புதன் 4 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல கல்வியாற்றலைத் தருவார். தாய்வழி மாமன் வகையில் உதவி கிடைக்கும். வாகனம் வகையில் நல்ல வருமானம் வரும். ஒரு வாகனம் வாங்கினால் உடனே அடுத்த வாகனம் வாங்குவார். நான்காம் வீடு வீட்டை குறிப்பதால் வீடு வாங்கும் யோகம் புதனால் கிடைக்கும். ஒரு வீட்டை வாங்க ஏற்பாடு செய்தால் இரண்டு வீடு வாங்குவார்கள். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். 
புதன் 5 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல கவிதை எழுதுவார். நல்ல வேடிக்கையாக பேசுவார். அரசாங்கம் மூலம் நல்ல பதவிகள் வரும். பெரியவர்கள் மூலம் நல்ல பதவி, மரியாதை கிடைக்கும். நல்ல தந்திர வேலைகள் தெரியும். 
புதன் 6 ஆம் வீட்டில் இருந்தால் மாமன் வழியில் ஒருவர் மிகபிரபலமாக இருப்பர். மாமனின் உதவி கிடைக்கும். ஆறாம் வீடு சத்ரு ஸ்தானம் என்று அழைக்கப்படுவதால் விரோதிகள் வராமல் இருக்க வைப்பார். ஆனால் சச்சரவு இருக்கும். பேச்சு சில நேரங்களில் கலவரத்தை உண்டாக்குவது போல் இருக்கும். 
புதன் 7 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல அழகான மனைவி அமையும். அவர் மூலம் வருமானம் வரும். வியாபாரத்தில் நல்ல நட்பு கிடைக்கும். கலைகளில் ஆர்வம் இருக்கும். நல்ல ஆயுள் கிடைக்கும். மாமன் மகள் கூட மனைவியாக வர வாய்ப்பு இருக்கிறது. அல்லது திருமண விஷயங்களில் மாமன் உதவி கொண்டு திருமணம் வரும். மாமனே பெண் பார்க்கலாம். அந்த வரிசையில் புதன் குறிக்கும் சாதி வைசியர். என்னடா கிரகங்களிலும் சாதியா என்று கேட்கலாம். ஆமாம் கிரகங்களிலும் அந்த அந்த கிரகம் ஒவ்வொரு சாதியை குறிக்கிறது. இது எதனால் என்றால் பிரசன்ன சாதகம் பார்க்கும் போது இது பயன்படும். ஒரு பொருள் திருடு போகும் போது களவு போன பொருளை திருடியவன் இந்த சாதியை சேர்ந்தவன் என்று சொல்லுவதற்க்கு பயன்படும். 
புதன் 8 ஆம் வீட்டில் இருந்தால் கல்வியில் தடை ஏற்படும். மாமன் இருக்கமாட்டார் அப்படியே மாமன் இருந்தாலும் அவர் மூலம் எந்த பயனும் இருக்காது. புதன் நல்ல முறையில் இருந்தால் உயில் மூலம் சொத்து வரும். 
புதன் 9 ஆம் வீட்டில் உள்ள இருந்தால் செல்வம் நன்றாக இருக்கும். குழந்தை பாக்கியம் இருக்கும். நன்றாக கவர்ந்து இழுக்கும் பேச்சு திறன் இருக்கும். நன்றாக உயர்கல்வி படித்திருப்பார்கள். உயர்கல்வியில் சிறந்த விளங்க உதவி செய்வார். 
புதன் 10 ஆம் வீட்டில் இருந்தால் அரசாங்க வேலையில் இருப்பார்கள். சொத்துகள் சேரும் ஏஜென்சி தொழில் லாபம் தரும். ஆடம்பர பொருட்கள் வீடு தேடி வரும். தொழில்கள் நிறைய செய்யவைப்பார். மாமன் மூலம் தொழில் அமையும். அறிவுக்கு முக்கியம் கொடுத்து செய்யும் தொழிலில் செய்வார். 
புதன் 11 ஆம் வீட்டில் இருந்தால் பெரும் பணக்காரராக இருப்பார்கள் பெண்கள் மூலம் வசதி வாய்ப்பு வரும். மூத்த சகோரர் மூலம் வருமானம் வரும். நல்ல புத்திசாலி உள்ள நண்பர்கள் கிடைப்பார்கள். 
புதன் 12 ஆம் வீட்டில் இருந்தால் படிப்பறிவு இல்லாமல் போகும். வாழ்க்கையில் கஷ்டபடுவார்கள் தோல்வியாதி உள்ள பெண்ணிடம் தொடர்பு இருக்கும். பெண்கள் மூலம் விரையம் ஏற்படும். நல்ல துப்பறியும் திறன் இருக்கும். மேலை சொன்ன பலன்கள் பொதுவானவைதான். புதன் நல்ல முறையில் இருக்கும் போது இந்த பலன்கள் நடைபெறலாம். புதன் கெட்டால் இதற்க்கு நேரமாறான பலன்கள் நடைபெறும். 
புதன் (படிப்பும், அறிவும் பெற) 
ஓம் கஜத்வஜாய வித்மஹே 
சுகஹஸ்தாய தீமஹி 
தன்னோ புதஹ் ப்ரசோதயாத் 
ஓம் சோமபுத்ராய வித்மஹே 
மஹாப்ரஜ்ஞாய தீமஹி 
தன்னோ புதஹ் ப்ரசோதயாத் 
ஓம் சந்திரசுதாய வித்மஹே 
சௌம்யக்ரஹாய தீமஹி 
தன்னோ புதஹ் ப்ரசோதயாத் 
ஓம் ஆத்ரேயாய வித்மஹே 
சோமபுத்ராய தீமஹி 
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
குருபகவான்.
Picture
            5. குரு குரு இது சூரியனுக்கு சுமார் 48,00,00,030 KM தூரத்திற்க்கு அப்பால் இருந்த சூரியனை சுற்றி வருகிறது இது தன்னைத்தானே 9 மணி 55 நிமிடங்களில் சுற்றுகிறது. குரு புத்திரகாரன் என அழைக்கப்படுகிறது. மந்திரம், ஞாபகசக்தி, வேதமந்திர சாஸ்திர அறிவு,யானை,குதிரை போன்ற வாகன அந்தஸ்த்து,பணம்,பிராமண உபசாரம் இது அனைத்திற்க்கும் காரகன் ஆகிறார். குரு பார்வை கோடி புண்ணியம். இவரின் பார்வையால் அனைத்து தோஷமும் நீங்கும்.ஆனால் குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும். நவக்கிரகங்களின் குருவாக விளங்குபவர் வியாழபகவான். குரு தோஷங்கள் விலகிட ஆலங்குடி சென்று வழிபடலாம். 24 நெய் தீபங்கள் ஏற்றி 24 முறை மௌன வலம் வரவேண்டும். குரு பகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து மஞ்சள்நிற வஸ்திரம் வெண்முல்லை ஆகியவற்றால் அலங்காரம் செய்து எலுமிச்சம் பழம் அன்னம் நிவேதிக்க வேண்டும். குருவருள் திருவருள் என்பார்கள். குருபகவான் என்று சிறப்பித்து கூறப்படும்  குருபார்க்க கோடி நன்மை. குருபார்வை அதாவது வியாழ நோக்கம் வந்தால் திருமணம்  மற்றும் சுபகாரியங்கள் செய்யலாம் என்ற வழக்கம் உள்ளது. 
                                   சுபகிரக வரிசையில்  முதன்மையாக பேசபடும் குருபகவான் ஆட்சி வீடுகள் மீனம், தனுசு. உச்ச வீடு கடகம், நீச  வீடு மகரம். குருபகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று சூரியனோடு இனைந்நு 6,8,12 வது இடங்களில்  மறைவு பெறாமல் அமைந்தால் ராஜயோகம். கோடிஸ்வர யோகம் அமையும். மேதைகளையும்ழூ  ஞானிகளையும் உருவாக்குவது குருபகவான். பிரகஸ்பதி என்று குருகிரகத்தை அழைப்பார்கள்  இதன் பொருள் ஞானத்தலைவன் என்பதாகும். விவேகத்தையும், அந்தஸ்தையும், ஆற்றலையும், புத்திர பாக்கியத்தையும் வாரி  வழங்குவார். பஞ்ச பூதங்களில் ஆகாயம் குருபகவான். கன்னி லக்னமாக அமைந்து, குரு 3ல்  அமர்ந்து பாவகிரகங்கள் பார்த்தாலோ- சேர்ந்தாலோ இரண்டு மனைவிகள் அமையும். குருபகவான் ஜாதகங்களில் சிறப்பாக அமைந்தால் நல்ல குடும்பம், நல்ல கணவன்,மனைவி,  செல்வசெழிப்பு அனைத்தும் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறலாம். தெய்வ அருள்  கிடைக்கும். ஜோதிட ஞானத்தை குரு வழங்குவார். அறிவு வாயந்த குழந்தைகளை பெறுவதும்  குருபகவான் அருள்தான். பிரஹஸ்பதி, வியாழன், பீதாம்பர், பொன்னன் ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் வியாழன் தெய்வீக அறிவுக்கும், ஞானத்திற்கும் அதிபதி ஆவார். குரு பார்த்தால் கோடி நன்மை என்ற பழமொழி ஒன்றே குருவின் பெருமையை  விளக்கப் போதுமானது. தலைமை தாங்குவது குரு பலத்தால் ஏற்படும். அந்தணர், பசுக்களுக்கு அதிபதி. குரு மஞ்சள் நிறத்தோன். சாத்வீகன். உடலில் சதை இவர். புத்திர காரகன், தன காரகன் இவரே. திருமணம் ஒருவருக்கு செய்ய குரு பலம் , குரு பார்வை அவசியம். ஒருவர் நல்லவரா ? கெட்டவரா? என்று குருவின் நிலையை வைத்து கூறிட முடியும்.  வடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. பிரம்மன் இவருக்கு அதி தேவதை. இந்திரன் பிரத்யதி தேவதை. புஷ்பராகம் குருவிற்கு உகந்த ரத்தினம். 
கும்பகோணம் - நீடாமங்கலம் - மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. நவக்கிரக ஸ்தலங்களில் ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. இவ்வூரின் அமைவிடம் 10.37° N 78.98° E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 79 மீட்டர் (259 அடி) உயரத்தில் இருக்கின்றது. ஆலங்குடி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சட்ட மன்ற தொகுதியான பேரூராட்சி. இத்தொகுதியுடன் உள்ளடங்கிய முக்கியமான சிற்றூர்கள் (கிராமங்கள்) சிக்கப்பட்டி,மேலத்துர், கீலாத்துர், பள்ளதுவிடுதி, கல்லாலன்குடி, கொத்தமங்கலம் மாங்காடு வடகாடு ஆகும். 
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் 
மூலவர்:ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர்,
உற்சவர்:தெட்சிணாமூர்த்தி 
அம்மன்/தாயார்: ஏலவார்குழலிதல 
விருட்சம்: பூளை என்னும் செடி 
தீர்த்தம்:பிரமதீர்த்தம், அமிர்த புஷ்கரணி மற்றும் உள்ள தீர்த்தங்கள். 
ஆகமம்/பூஜை :-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:இரும்பூளை, திருவிரும்பூளை
உலோகம்-பொன் 
தானியம்-கொண்டை கடலை 
பால்-ஆண் 
திசை காலம்-16 வருடங்கள் 
கோசார காலம்- 1 வருடம் 
நட்பு-சூரியன்,சந்திரன்,செவ்வாய் 
பகை-புதன்,சுக்கிரன் 
சமம்- சனி,ராகு,கேது 
உபகிரகம்-எமகண்டன் 
நட்சத்திரம்-புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி
ஊர்:ஆலங்குடி 
மாவட்டம்: தஞ்சாவூர் 
மாநிலம்: தமிழ்நாடு
திருஞானசம்பந்தர் தேவாரபதிகம்  
நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர் 
கச்சிப் பொலி காமக்கொடி யுடன்கூடி 
இச்சித் திரும்பூளை யிடங் கொண்ட ஈசன் 
உச்சித் தலையில் பலி கொண்டு உழலூணே. -திருஞானசம்பந்தர் 
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 98வது தலம். 
தல சிறப்பு: இங்கு மூலவர் ஆபத்சகாயர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். (இத்தலத்தில் தெட்சிணாமூர்த்தி விசேஷம் - குருதக்ஷிணாமூர்த்தி, ஆதலின் இதைத் தெட்சிணாமூர்த்தித் தலம் என்பர்.) விசுவாமித்திரர், முசுகுந்தர், வீரபத்திரர் பூசித்த தலம். அம்பிகை இத்தலத்தில் தோன்றித் தவம் செய்து இறைவனைத் திருமணம் புரிந்து கொண்ட தலம். இப்போதும் இங்குள்ள சுந்தரர் சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம். 
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி அஞ்சல் - 612801. 
கும்பகோணம் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம். ஆலயம் ஊரின் நடுவே அழகாக, ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கின்றது. விசேட மூர்த்தி அருள்மிகு குருதட்சிணாமூர்த்தி உள்பிரகாரங்களில் கலங்காமல் காத்த விநாயகர், முருகன், லஷ்மி, நால்வர், சூரியேசர், சோமேசர், குருமோசேசுரர், சோமநாதர், சப்தரிஷிநாதர், விஷ்ணு நாதர், பிர்மேசர் ஆகிய சப்தலிங்கங்களோடு காசிவிசுவநாதர், விசாலாட்சி, அகத்தியர் முதலியவரும் உள்ளனர். ஆக்ஞாகணபதி, சோமாஸ்கந்தர், பெரிய வடிவோடுகூடிய விநாயகர், சுப்பிரமணியர், சண்டேஸ்வரர், கல்யாணசாஸ்தா, சப்த மாதாக்கள் முதலிய உற்சவமூர்த்தங்களும் உள்ளன. சபாநாதர் சந்நிதியில் திருமுறைக் கோயில் உள்ளது. உற்சவ தக்ஷிணாமூர்த்தி, சனகாதி நால்வருடன் காட்சிதருகின்றனர். சுவாமி மகாமண்டபத்தில் நந்தி பலிபீடம் செப்புத் திருமேனியுடன் உள்ளது. மகாமண்டப வாயிலில் துவகர பாலகர்களும் உளர். ஆபத்சகாயர் கிழக்கு நோக்கிய சந்நிதி. இத்தலத்துச் சிறப்புடைய குரு தக்ஷிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்திலுள்ளார். மேற்கில் இலிங்கோற்பவரும், வடக்கில் பிரம்மாவும், துர்க்கையும் உளர். "ஞான கூபம்' என்னும் தீர்த்தக் கிணறு உள்ளது. சுக்கிரவார அம்மன் சந்நிதி, சனீஸ்வரர் சந்நிதி, வசந்த மண்டபம், சப்தமாதா ஆலயமும் உள்ளன. இத்தலத்தின் கிழக்கே "பூளைவள ஆறு' பாய்கிறது. ஐப்பசியில் இதன் தீர்த்தத்தைக் கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்கிறார்கள். 
பிரார்த்தனை: நாகதோஷம் நீங்கவும், பயம், குழப்பம் நீங்க இங்குள்ள விநாயகரையும், திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்: பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
தலபெருமை: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத வியாழக்கிழமையில் மட்டுமே குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். ஒரு காலத்தில் பாசிபடியாத தாலிக்கயிறை கூட மாசியில் மாற்றி விடுவார்களாம் பெண்கள். குரு பலம் இருப்பவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீண்டகாலம் நிலைத்திருக்கும். அந்த குரு பகவானுக்கு மாசியில் அபிஷேகம் நடப்பது சிறப்பிலும் சிறப்பு. குரு பெயர்ச்சி நாளை விட இந்த நாள் விசேஷ சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இங்கு குருவின் நேரடி தரிசனம் கிடையாது. தெட்சிணாமூர்த்தியே இங்கு குருவாய் இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கிறார். இவரையே குருவாக கருதி வழிபடுகின்றனர் பக்தர்கள். விசுவாமித்திரர் வழிபட்ட தலம். ஆலகால விஷத்தை இறைவன் உண்டு தேவர்களைக்காத்தபிரான் உள்ள தலம். இதனால் ஆலங்குடி என்றாயிற்று என்பர். இதற்குச் சான்றாகச் சொல்லப்படும் காளமேகப் புலவர் பாடல் வருமாறு :- 
""ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை 
ஆலங் குடியான் என்று ஆர் சொன்னார் - ஆலம் 
குடியானேயாகில் குவலயத்தோரெல்லாம் 
மடியாரோ மண் மீதினில்''. 
இவ்வூரில் விஷத்தால் எவர்க்கும் எவ்விதத் தீங்கும் உண்டாவதில்லை என்று சொல்லப்படுகிறது. கருநிறமுள்ள பூளைச் செடியைத் தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் திருஇரும்பூளை என்றும், ஆலமரத்தின் கீழிருந்து அறமுரைத்த பெருமானுக்குரிய தலமாதலாலும் திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது தோன்றிய ஆலத்தை உண்டு அமரர்களைக் காத்தருளிய இறைவன் வீற்றிருப்பதாலும் ஆலங்குடி என்று பெயர். திருவிடைமருதூர் மகாலிங்கப் பெருமானுக்குரிய பரிவாரத் தலங்களில் இத்தலம் தட்சிணாமூர்த்தித் தலம். பஞ்ச ஆரண்யத் தலங்களில் இத்தலம் ஒன்றாகும். தட்சிணாமூர்த்தி இத்தலத்தின் சிறப்புக் கடவுளாக விளங்குகிறார். வியாழக்கிழமையில் இம்மூர்த்தியை வழிபடுவோர் எல்லா நலங்களும் பெறுவர். நாகதோஷ முடையவர்கள் இத்தலத்தை வழிபட்டு தோஷம் நீங்கப் பெறுகின்றன. தெட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான். 
தட்சன், சுந்தரர்: இக்கோயிலின் வெளியே தனிக்கோயிலில் பார்வதியின் தந்தையான தட்சன் சாபம் பெற்று ஆட்டுத்தலையுடன் காட்சியளிப்பதைக் காணலாம். இது மிகவும் சிறிய சிலை. தற்போது சற்று சேதமடைந்தது போல் தெளிவற்ற உருவத்துடன் உள்ளது. ஆனால், திருவாரூருக்கு ஒரு மன்னனால் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருக்க விரும்பாமல், ஒரு அர்ச்சகரின் உதவியோடு மீண்டும் ஆலங்குடிக்கே திரும்பிய சுந்தரர் சிலை அற்புதமாக கோயிலுக்குள் இருக்கிறது. தெட்சிணாமூர்த்தி சன்னதியை ஒட்டி, உற்சவர் சிலைகள் இருக்குமிடத்தில் இந்த சிலையும் இருக்கிறது. இந்த சிலையை திருவாரூரில் இருந்து ஒளித்து எடுத்து வந்த அர்ச்சகர், காவலர்களிடம் இருந்து தப்பிக்க, அம்மை கண்ட தன் குழந்தையை எடுத்துச் செல்வதாக கூறினார். ஆலங்குடி வந்து பார்த்த போது சிலைக்கே அம்மை போட்டிருந்தது. இப்போதும் அம்மைத் தழும்புகள் சிலையில் இருப்பதைக் காணலாம். 
சுக்ரவார அம்பிகை: "சுக்ரவாரம்' என்றால் வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை அம்மனுக்கு விசேஷம் என்பது அறிந்த உண்மை தான். அந்த வெள்ளியின் பெயரையே தாங்கி தனி சன்னதி ஒன்றில் அழகே வடிவாக அம்பிகை அருள்பாலிக்கிறாள். இவளது பெயரும் "சுக்ரவார அம்பிகை' என்பது குறிப்பிட்டத்தக்கது. 
மாதா, பிதா, குரு: இக்கோயிலின் அமைப்பு வித்தியாசமானது. உள்ளே நுழைந்ததும் கண்ணில் படுவது அம்மன் சன்னதி. அடுத்து சுவாமி சன்னதியைப் பார்க்கலாம். இதன் பிறகு குரு சன்னதி வரும். மாதா, பிதா, குரு என்ற அடிப்படையில் இக்கோயில் அமைந்திருப்பதாக கருதப்படுகிறது. 
தல வரலாறு: சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது வெட்டாற்று வெள்ளப் பெருக்கில் ஆபத்சகாயரே ஓடக்காரராக வந்து கரையேற்றிக் காட்சிதந்தார் என்பது வரலாறு. ஓடம் நிலைதடுமாறிப் பாறையில் மோதியபோது காத்தவிநாயகர் கலங்காமல் காத்த பிள்ளையார் என வழங்கப்படுகிறார். 
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.  
ஒவ்வொரு வீட்டிலும் குரு இருந்தால் என்ன பலன்  
குருவை பற்றி பார்க்கலாம் நவகிரங்களில் முழு சுபர் என்று அழைக்கப்படுபவர் குருபகவான் தான். 
இவர் ஒருவர் நல்ல நிலைமையில் இருந்தாலோ போதும் எவ்வளவு பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் நிலை கிடைக்கும். இவர் காரகம் வகிக்கும் செயல் குழந்தை பாக்கியம் திருமணம் நல்ல முறையில் பணவரவுகள் ஆகியவை ஆகும். இவரின் கருணை இருந்தால் தான் வீட்டில் மங்கல நிகழ்ச்சி நடைபெறும். குரு எப்பொழுதும் சொந்த மதத்தை குறிப்பவர். அவர் அவர்களின் மதங்களை பின்பற்றினாலே குரு நல்லது செய்கிறது. ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதற்க்கு காரகம் வகிப்பவர் குரு பகவான். ஒழுங்கான திருமணம் நடைபெற வேண்டும் என்றால் குரு பகவான் நல்ல நிலையில் இருந்தால் மட்டும் தான் நடைபெறும். 
குரு 1 ஆம் வீட்டில்  இருந்தால் நல்ல தோற்றம் இருக்கும். நல்ல ஆயுளுடன் இருப்பார்கள். சிறந்த மனைவி அமையும். இவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் நல்ல ஆன்மிகவாதிகளாக இருப்பார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வ புண்ணிய பாக்கியம் கிடைக்கும். இவர்களின் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கையில் இவர் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தந்தை இவருக்கு உதவி புரிவார். 
குரு 2 ஆம் வீட்டில்  இருந்தால் நல்ல பேசுவார்கள் இவர்களின் வாக்குக்கு சமுதாயத்தில் மதிப்பு இருக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கையிருப்பு பணம் எந்த நேரமும் வந்து கொண்டே இருக்கும். வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். இவருடன் சேரும் வியாபார நண்பர்களும் நல்ல முறையில் இருப்பார்கள். 
குரு 3 ஆம் வீட்டில்  இருந்தால் பக்தியில் ஈடுபாடு இருக்கும் இளைய சகோதரர் நல்ல முன்னேற்றம் இருக்கும் அவர் மூலம் இவருக்கு நன்மை கிடைக்கும். எதிர்பாலினரிடம் மோகம் இருக்கும். அளவோடுதான் மகிழ்ச்சி இருக்கும். 
குரு 4 ஆம் வீட்டில்  இருந்தால் தாய் நல்ல நலத்துடன் இருப்பார். குழந்தை பாக்கியம் தாமதமாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்காது. பகைவர்கள் உண்டாகுவார்கள். விவசாய சம்பந்தபட்ட குடும்பமாக இருந்தால் விவசாயம் மூலம் நல்ல வருமானம் இருக்கும். 
குரு 5 ஆம் வீட்டில்  இருந்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும். புத்திரக்களால் நல்ல நிலைக்கு வரலாம். நுண்ணிய அறிவு இருக்கும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். திடீர் பணவரவுகள் இருக்கும். 
குரு 6 ஆம் வீட்டில்  இருந்தால் பகைவரை வெற்றி கொள்ளலாம். சமுதாயத்தில் மதிப்பு இருக்காது. குழந்தை பாக்கியம் தடை ஏற்படுத்துவார். மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடைபெற தாமதம் ஆகும். உடம்பு பலம் இழந்து காணப்படும். 
குரு 7 ஆம் வீட்டில்  இருந்தால் நல்ல மனைவி அமையும். குரு லக்கினத்தை பார்ப்பதால் உடல் நிலை நன்றாக இருக்கும். சமுதாயத்தில் நல்ல புகழ் கிடைக்க வழி செய்வார். மனைவியாக வருபவர் ஆன்மிக சம்பந்தப்பட்ட குடும்பமாக இருக்கும். மனைவியும் ஆன்மிக விஷயங்களில் நாட்டம் உள்ளவராக இருப்பார். இவர்களிடம் தொடர்பு வைத்துருப்பவர்கள் நல்ல மதகுருமார்களாக இருக்க வாய்ப்பு உண்டு. 
குரு 8 ஆம் வீட்டில்  இருந்தால் மனைவி அமைவது கஷ்டமாக இருக்கும். திருமணம் முடிந்தால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படும். செல்வ நிலை இருக்கும். சோதிடத்துறையில் நல்ல அறிவு ஏற்படும். மரண வீட்டை குறிப்பதால் உயிர் வாதை இல்லாமல் உடனே போகும். 
குரு 9 ஆம் வீட்டில்  இருந்தால் நல்ல பாக்கியம் கிடைக்கும். மிக உயர்ந்த பதவியில் இருப்பார். ஆன்மிகத்தில் சிறந்து விளங்குவார். மிகப்பெரிய மடாதிபதிகளின் தொடர்பு ஏற்படும். மிக உயர்ந்த படிப்புகள் எல்லாம் படிப்பார்கள். வெளிநாடுகள் செல்ல வைப்பார். வெளிநாட்டு தொடர்பு மூலம் பணவரவுகள் இருக்கும். குலதெய்வ அருள் இருக்கும். மந்திர வித்தை நன்றாக இருக்கும். 
குரு 10 ஆம் வீட்டில்  இருந்தால் நல்ல தொழில் அமையும். செல்வ நிலை உயரும். அரசாங்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அவரை சுற்றிய வட்டாரங்களில் மதிப்பு இருக்கும். வருமானத்தை பெருக்குவார். கோவில் சம்பந்தப்பட்ட இடங்களில் வேலைக்கு அமர்த்துவார்.
குரு 11 ஆம் வீட்டில்  இருந்தால் தொழிலில் நல்ல வருமானம் இருக்கும். மூத்த சகோதர சகோதரிகள் மூலம் நன்மை நடக்கும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். வாகன வசதிகள் ஏற்படும். எந்த வேலையை எடுத்தாலும் வருமானத்திற்க்கு குறைவு இருக்காது. குழந்தை பாக்கியம் இருக்கும்.
குரு 12 ஆம் வீட்டில்  இருந்தால் ஒழுகத்தை கடைபிடிக்க மாட்டார். புண்ணிய இடங்களுக்கு அடிக்கடி செல்ல வைப்பார். குழந்தை பாக்கியத்தில் குறை இருக்கும். சில பேர் பக்திமான்கள் போல் நடிப்பார்கள். கோவில் கட்டுதல் ஆறு குளம் வெட்டுதல் போன்றவற்றில் ஈடுபட வைப்பார். பணவிரையம் ஏற்படும். 
குரு (நல்ல மனைவி அமைய) 
ஓம் குருதேவாய வித்மஹே 
பரப்ரஹ்மாய தீமஹி 
தன்னோ குருஹ் ப்ரசோதயாத் 
ஓம் சுராசார்யாய வித்மஹே
தேவபூஜ்யாய தீமஹி 
தன்னோ குருஹ் ப்ரசோதயாத் 
ஓம் குருதேவாய வித்மஹே 
பரம் குருப்யோம் தீமஹி 
தன்னோ குருஹ் ப்ரசோதயாத் 
ஓம் சுராசார்யாய வித்மஹே 
மஹாவித்யாய தீமஹி 
தன்னோ கருஹ் ப்ரசோதயாத் 
ஓம் அங்கிரஸாய வித்மஹே 
சுராசார்யாய தீமஹி 
தன்னோ ஜீவஹ் ப்ரசோதயாத்
சுக்கிரன்.
Picture

                               6. சுக்கிரன் சுக்கிரன் இது சூரியனுக்கு 6,70,00,000 அப்பால் சுற்றி வருகிறது. இது சூரியனை 225 நாட்களில் சுற்றி வருகிறது. இது 23 1/2 மணி நேரத்தில் தன்னைத்தானே சுற்றி வருகிறது. இவர் களத்திர காரகன் என அழைக்கப்படுகிறார். அசுர குரு சுக்கிரன் ஆவார். உலக இன்பங்களுக்கும் ஆடம்பரமான வாழ்விற்க்கும், அமோகமான வாழ்விற்க்கும் சுக்கிரன் தான் காரணமாகிறார். காமஇச்சை,வாகனம்,ஆடைகள் ஆபரணங்கள், அலங்காரம், வாசனை திரவியங்கள், சங்கீதம், அழகு,வியாபாரம், நடனம்,நடிப்பு ஆகியவற்றுக்கு காரணம் ஆகிறார். இவருக்கு 7 ஆம் பார்வை மட்டுமே உண்டு. அறுபத்தி நான்கு கலைகளுக்கும் அதிபதி சுக்ரன். காதல், சுக போகம் இவற்றிற்கு அதிபதி சுக்ரனே. ஜோதிடப்படி களத்திரகாரகள் சுக்கிரன். இவனே வாகனங்களுக்கும் அதிபதி. ஜனன உறுப்புகளைக் காப்பவன் இவனே. சிற்றின்பத்தை நுகர வைப்பவனும் இவனே. உடலில் வீர்யம் இவன். அணிமணி, ஆபரணம் சுக்கிரன் அருள் இருந்தாலே சேரும். கிழக்குத் திசை சுக்ரனுக்கு உரிய திசை. இந்திராணி இவருக்கு அதி தேவதை. இந்திர மருத்துவன் பிரத்யதி தேவதை. வைரம் சுக்ரனுக்கு உகந்த ரத்தினம். 
                                             கருடனே சுக்கிரனின் வாகனம். கலைக்கு காரகன் சுக்கிரன். பரணி, பூரம், பூராடம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும்  நாயகன். ரிஷபம், துலாம் ஆட்சி வீடுகள், மீனம் உச்ச வீடு, கன்னி நீச வீடு.சுக்கிரன்  சந்திரனுடன் கூடி பலமுடன் 10ல் இருந்தால் நடிப்புகலையில் தேர்ச்சிபெற்று,  குறிப்பிட்ட ஜாதகர் அல்லது ஜாதகி நட்சத்திர ஸ்தானம் பெற்று அவ்வகையில்  அதிர்ஷ்டசாலியாக திகழ முடியும். லக்னம் எதுவானாலும் சரி சுக்கிரன் 10வது வீட்டில் தனித்திருப்பாரானல் நிச்சயமாக  கலைத்துறை ஓன்றில் பாண்டித்யம் பெற்று அதனால் மற்றோரை பரவசபடுத்துகின்ற ஆற்றல்  அமைந்து அவ்வகையில் அதிர்ஷ்டம் பெற முடியும். பொருட்களை வாங்குவதும், விற்பதும் இன்றைய வாழ்வியலில் முக்கியமான தொழில் ஆகும்.  இந்த தொழில் வளமையை ஏற்படுத்துவார் சுக்கிரன். சுக்கிரன் பலம் பெற்று இருந்தால்  காதலில் வெற்றிகிடைக்கும். ஓருவரது ஜாதகத்தில் சுக்கிரன் தசாகாலம் நடக்கும் போது  நல்லமுறையில் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய சிற்றின்ப, பேறின்பங்களுக்கு  வழிவகுப்பார். குறிப்பிட்ட ஓரு நபரை பார்த்து இவர் ஜென்டில்மேன் என்று சொன்னால் அவர் ஜாதகத்தில்  சுக்கிரன் சிறப்பாக அமைந்துள்ளார் என்று அர்த்தம். லக்னத்திற்க்கு 4ல் ஆட்சி,  உச்சம், நட்புப்பெற்று அமர்ந்தால் வண்டி, வாகனம், செல்வாக்கு, அந்தஸ்து ஆகியவை  அற்புதமாக அமையும இது சுக்கிரனின் அதிகார தலமாகும். கஞ்சனூர் சென்று நீல ஆடை அணிந்து வெண்தாமரை மலர்களால் சுக்கிர பகவானையும் பிரார்த்திக்க வேண்டும். இதனால் தொல்லைகள் நீங்கி நலன்கள் கிட்டும். சுக்கிர தோசம் நீங்க அனைவரும் வழிபட வேண்டிய தலம். 
திருக்கஞ்சனூர் 
இறைவர் திருப்பெயர்              : அக்னீஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்           : கற்பகாம்பிகை 
தல மரம்                 : பலாச மரம் (புரசு)
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம், பராசர தீர்த்தம். 
வழிபட்டோர்  : பராசர முனிவர், பிரம்மா, அக்கினி, கம்சன்,  சந்திரன், விருத்தகாளகண்டன்,  சித்திரசேனன், மார்க்கண்டேயர், சுரைக்கா முனிவர் முதலியோர்.
தேவாரப் பாடல்கள்                : அப்பர் - மூவிலைவேற் சூலம்
தல வரலாறு கம்சன் வழிபட்டதால் இத்தலம் மருவி கஞ்சனூர் என்றாயிற்று. முன்பொரு காலத்தில் கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு சுதர்சனர் என்ற குழந்தை பிறந்தது. வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. திருநீறு, உருத்திராக்கதாரியாகத் திகழ்ந்த அக்குழந்தை, தந்தை எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. அவ்வூர் மக்கள் சொல்லியவாறே பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலிமீதமர்ந்து "சிவமே பரம்பொருள்" என்று அக்குழந்தை மும்முறை கூறியதைக் கண்டவர்கள் வியந்தனர். (இக்காட்சியைச் சித்தரிக்கும் உருவம் இவ்வூர் பெருமாள் கோயிலிலும், அக்னீஸ்வரர் கோயில் நடராசர் சந்நிதியிலும் உள்ளது.) இறைவன் தட்சிணாமூர்த்தியாக வந்து சுதர்சனரை ஆட்கொண்டு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தார். மேலும், இங்கு ஒரு செல்வந்தர் தினந்தோறும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் படைத்து வந்தார். அன்றாடம் அவர் கனவில் இறைவன் தோன்றி தான் அவ்வுணவை உண்ணும் காட்சியைத் தருவார். ஒரு நாள் அக்கனவு தோன்றவில்லை; காரணம் புரியாது அவர் விழித்தார். விசாரித்ததில் அன்று அக்னீஸ்வரர், ஹரதத்தரிடம் ஏழை அந்தணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கியுண்டதாகவும் அதனால் வயிறு நிரம்பிவிட செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார். இதன்மூலம் ஹரதத்தரின் பெருமையைறிந்து அச்செல்வர் அவரை நாடிச் சென்று வணங்கியதாக வரலாறு சொல்லப்படுகிறது.இவ்வூரில் பக்தர் ஒருவர் சுரைக்காய் விற்றுப் பிழைத்து வந்தார். இவரிடம் ஒரே ஒரு சுரைக்காய்தான் எஞ்சியிருந்தது. அதை விதைக்கு ஆகும் என்று அப்படியே வைத்துவிட்டார். அந்நிலையில் இறைவன் அவரிடம் விருந்தினராக வந்து உணவிடுமாறு கேட்க, அப்பக்தர் செய்வதறியாது திகைத்தார். அதிதிகட்குச் சுரைக்காய் கறிக்கு ஆகாது என்றெண்ணிக் கலங்கினார். அப்போது இறைவன் அசரீரியாக "ஒரு பாதி விதைக்கு, ஒரு பாதி கறிக்கு " என்றருளிச் செய்து ஏற்று, அவருக்கு அருள்புரிந்தார் என்றொரு வரலாறு சொல்லப்படுகிறது. இதன் தொடர்பாகவே இவர் பெயர் சுரைக்காய் பக்தர் என்றாயிற்று. இங்குள்ள 
நந்தி புல் உண்ட வரலாறு - அந்தணர் ஒருவர் புல்லுக்கட்டொன்றைத் தெரியாமல் போட்டுவிட்டதால் பசுக் கன்று ஒன்று இறந்துவிட்டது. இதனால் பசுத்தோஷம் அவருக்கு நேர்ந்தது என்று பிராமணர்கள் அந்த ஏழை அந்தணரை விலக்கி வைத்துவிட்டனர். அவர் செய்வதறியாது ஹரதத்தரிடம் சென்று முறையிட்டார் - அவ்வாறு முறையிடும்போது பஞ்சாட்சரத்தைச் சொல்லியவாறே சென்றார். அதைக்கேட்ட ஹரதத்தர் சிவபஞ்சாட்சரத்தைச் சொல்லியதால் அப்பாதகம் நீங்கிவிட்டதாகச் சொன்னார். பிராமணர்கள் அதை ஏற்காமல் தங்கட்கு நேரடிச் சான்று தந்து நிரூபிக்குமாறு கூறினர். ஹரதத்தர் உடனே அவ்வந்தணரை அழைத்து, காவிரியில் நீராடி ஒரு கைப்புல் எடுத்து வந்து அந்தக் கல் நந்தியிடம் தருமாறு பணித்தார். அவ்வந்தணரும் அவ்வாறே செய்து, "கல் நந்தி புல் சாப்பிடுமானால் பஞ்சாட்சரத்தால் தோஷம் நிங்கும் " என்று சொல்லிப் புல்லைத்தர, அந்த நந்தியும் உண்டதாக வரலாறு சொல்லப்படுகிறது. (இந்நந்தி புல் உண்டதால் நாக்கு வெளியில் நீட்டிக் கொண்டிருக்கவில்லை). 
சிறப்புக்கள் 
பலாசவனம், பராசரபுரம், பிரமபுரி, அக்கினிபுரம், கம்சபுரம், முத்திபுரி என்பன இத்தலத்திற்குள்ள வேறு பெயர்கள். பராசரருக்குச் சித்தப்பிரமை நீங்கியதும்; பிரம்மனுக்குத் திருமணக் காட்சி தந்ததும்; அக்கினிக்கு உண்டானசோகை நோயைத் தீர்த்ததும்; சந்திரனின் சாபம் நீங்கியதும்; கம்சன் என்னும் மன்னனின் உடற்பிணி (மூத்திரதிருச்சிர நோய்) நீங்கியதும்; மாண்டவ்ய புத்திரர்களுக்கு மாத்ருகத்தி தோஷம் நீங்கியதும்; விருத்த காளகண்டன், சித்திரசேனன், மார்க்கண்டேயர், சுரைக்காய் முனிவர் ஆகியோர் அருள் பெற்றதும்; கலிக்காமருக்குத் திருமணம் நடந்ததும்; மானக் கஞ்சாற நாயனார் அவதரித்து வழிபட்ட சிறப்பினதும் ஆகிய பல்வகைப் பெருமைகளையும் உடையது இத்தலம். இவற்றுக்கும் மேலாக பஞ்சாட்சர மகிமையை வெளிபடுத்திய ஹரதத்த சிவாசாரியார் அவதரித்த தலம். இவருக்கு இறைவன் அருள் செய்த வரலாறு தனிப்பெருமையுடையது. 
ஹரதத்தர் சிவபூசை செய்வதுபோல உள்ள ஹரதத்தர் தனிக்கோயிலும் இத்தலத்தில் உள்ளது. மானக்கஞ்சாறர், கலிக்காமர் திருவுருவங்களை அடுத்து, பக்கத்தில் சுரைக்காய்ப் பக்தர் என்ற அடியார் மனைவியுடன் காட்சித் தருகின்றார். 
நடராச சபையில் நடராசர் மூலத்திருமேனியில் சிவகாமியுடன் (சிலாரூபமாக) இருப்பது தனிச் சிறப்பு; இம்மூர்த்தியே பராசரருக்கு தாண்டவக் காட்சித் தந்தவர். இத்தாண்டவம் முத்தித் தாண்டவம் எனப்படுகிறது. 
மூலவர் சுயம்பு மூர்த்தி - உயர்ந்த பாணத்துடன் காட்சித் தருகிறார். அம்பாள் திருமணக் கோலக் காட்சி தருகிறார். 
நாடொறும் ஆறு கால வழிபாடுகள். 
சோழர், விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்களில் இத்தலம் 'விருதராச பயங்கர வளநாட்டு நல்லாற்றூர் நாட்டுக் கஞ்சனூர் ' என்றும்; இறைவன் பெயர் 'அக்னீஸ்வரம் உடையார் ' என்றும் குறிக்கப்பட்டுள்ளன. 
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதியுள்ளது. திருவாவடுதுறைக்கு அருகில் உள்ள தலம். 
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் 
மூலவர்:அக்னீஸ்வரர்
உற்சவர்:- 
அம்மன்/தாயார்: கற்பகாம்பாள்
தல விருட்சம்: பலா 
தீர்த்தம்:அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம் 
ஆகமம்/பூஜை :-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:கஞ்சனூர்(பலாசவனம், பராசபுரம்,பிரமபுரி, அக்கினிபுரம், கம்சபுரம், முத்திரிபுரி என்ற வேறு பெயர்களும் உண்டு)
ஊர்:கஞ்சனூர் 
மாவட்டம்: தஞ்சாவூர் 
மாநிலம்: தமிழ்நாடு
திருநாவுக்கரசர்
தேவாரப்பதிகம் 
வானவனை வலிவலமும் மறைக் காடானை மதிசூடும் பெருமானை 
மறையோன் தன்னை ஏனவனை இமவான்தன் பேதை யோடும் இனிதிருந்த 
பெருமானை ஏத்து வார்க்குத் தேனவனைத் தித்திக்கும் பெருமான் தன்னைத் 
தீதிலா மறையோனைத் தேவர் போற்றும் கானவனைக் கஞ்சனூர் ஆண்ட 
கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்த் தேனே. -திருநாவுக்கரசர் 
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 36வது தலம். 
திருவிழா:மாசி மகம், தைத்திங்களில் ஹரதத்தர் காட்சி, ஆடிப்பூரம், திருவாதிரை, நவராத்திரி, சிவராத்திரி 
தல சிறப்பு:நவகிரகத்தலங்களில் இத்தலம் சுக்கிரனுக்குரிய தலமாகும். சுக்கிரன் வழிபாடு செய்த தலங்களுள் இதுவும் ஒன்று. சுக்கிரனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சிவன் உயர்ந்த பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜர் மூலத்திருமேனியில் சிவகாமியுடன் (சிலா ரூபமாக) இருப்பது தனிசிறப்பு வாய்ந்தது. இத்தலத்தில் ஈசன் பிரம்மனுக்கு தன் திருமணக்கோலத்தை காட்டியருளினார். எனவே தான் இங்கு அம்மனை தன் வலப்பாகத்தில் சிவன் கொண்டருள்கிறார். 
பராசர முனிவருக்கு சிவன் இங்கு தாண்டவ கோலம் காட்டி முக்தி அருளினார். எனவே இங்குள்ள நடராஜர் "முக்தி தாண்டவ மூர்த்தி' என அழைக்கப்படுகிறார். 
காலை 7.30 முதல் மதியம் 12 வரை. மாலை 4.30 முதல் இரவு 9 மணிவரை நடை திறந்திருக்கும் 
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர், -609 804 
(வழி) துகிலி, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். 
கோயில் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. பழமையான கோயில். தெற்கு வாயில் வழியாக உள்வந்தால் உள்மண்டபம் உள்ளது. பிரகாரமாக வலம் வந்து மண்டபத்தையடைந்தால் இடப்பால் விநாயகர் தரிசனம், வலப்பால் விசுவநாதர் சந்நிதி. அடுத்து அம்பாள் சந்நிதி. உள்வாயிலைத் தாண்டி சுவாமி சந்நிதிக்குச் செல்லும்போது இடப்பால் (வெளவால் நெத்தி மண்டபத்தில்) விநாயகர், மயூரசுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. 
தலமரம் - புரசு (பலாசு) உள்ளது. இதன்கீழ் அக்னீஸ்வரர் லிங்கம் தரிசனம் அடுத்து மானக்கஞ்சாறர், கலிக்காமர் திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் சுரைக்காய்ப் பக்தர் என்ற அடியார் மனைவியுடன் காட்சி தருகிறார். 
மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான், சந்திரன், நவக்கிரக சந்நிதி, நால்வர் சந்நிதிகள் உள்ளன. 
உடல்பிணி, சோகை நோய், சித்தபிரமை நீங்கவும், செல்வம் செழிக்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் வழிபாடு செய்கின்றனர். 
தலபெருமை:பராசரருக்கு சித்தபிரமை நீங்கியது. பிரம்மனுக்கு திருமண காட்சி தந்தது. அக்னிக்கு உண்டான சோகை நோயை தீர்த்தது, சந்திரனின் சாபம் நீங்கியது, கம்சன் என்னும மன்னனின் உடற்பிணி நீங்கியது, கலிக்காமருக்கு திருமணம் நடந்தது, மானக்கஞ்சாரர் அவதரித்து வழிபட்டது ஆகிய சிறப்புகளை உடையது இத்தலம். மேலும் பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்த சிவாச்சாரியார் அவதார தலம். 
மகாபலியைக் காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார். எந்தக் கஷ்டம் வந்தாலும் தன்னை நம்பி வந்தவரைக் காப்பாற்ற வேண்டுமென்ற குணம் கொண்டவர். இவரது அருள் பெற, நவக்கிரக தலங்களில் தஞ்சாவூர் மாவட்டம் கஞ்சனூர் செல்ல வேண்டும்.
நவக்கிரகங்களில் சுக்கிரன் ஆறாவது கிரகம் ஆவார். இவர் பிரம்ம தேவரின் மானஸ புத்திரராகிய பிருகு முனிவருக்கும், பிலோமிசைக்கும் மகன். எனவே தான் இவருக்கு பார்க்கவன் என்ற பெயர் உண்டு. இவருக்கு "கவி' என்ற மற்றொரு பெயரும் உண்டு.
சுக்கிரன் மிகச்சிறந்த சிவ பக்தர், சிவபெருமான் அருளால் இறந்தவர்களை உயிர்பிழைக்க செய்யும் "அமிர்த சஞ்சீவி' மந்திரத்தை கற்றவர். இவர் வெள்ளை நிறம் கொண்டவர். வெண்தாமரையுடன் கருட வாகனத்தில் வீற்றிருப்பார். முதலை வாகனமும் உண்டு. இவர் அசுரர்களுக்கு குரு. சுக்கிராச்சாரியார் என அழைக்கப்பட்டார். ரிஷப, துலா ராசிக்கு அதிபதியான இவர் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்திற்கு உரியவர். சுக்கிர திசை 20 ஆண்டுகள் நடக்கும். ஒரு ராசியில் சஞ்சரிக்க இவருக்கு ஒரு மாத காலம் ஆகும். சுக்கிரனுக்கு நண்பர்கள் புதனும் சனியும். எதிரி சூரியனும் சந்திரனும். சமமானவர்கள் செவ்வாயும் குருவும். மகாபலியைக் காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார். எந்தக் கஷ்டம் வந்தாலும் தன்னை நம்பி வந்தவரைக் காப்பாற்ற வேண்டுமென்ற குணம் கொண்டவர். ஒரு முறை சுக்கிராச்சாரியாரால் விஷ்ணுவுக்கு சுக்ர தோஷம் ஏற்பட்டது. இத்தோஷத்தை நீக்க விஷ்ணு ஹரதத்தர் என்ற திருநாமத்துடன் இங்குள்ள சிவனை வழிபட்டு தோஷம் நீங்க பெற்றார் என்கிறது புராணம். சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் சுக்கிரனுக்கு அருகில் உள்ள ஐம்பொன்னால் ஆன சிவனை வழிபாடு செய்வது சிறப்பு. 
தல வரலாறு:முன்பு கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு பிறந்த குழந்தையின் பெயர் சுதர்சனர். வைணவக்குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. திருநீறு, உருத்திராக்கதாரியாக திகழ்ந்த அக்குழந்தை எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அவ்வூர் மக்கள் சொல்லியவாறே பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீதுஅமர்ந்து "சிவமே பரம்பொருள்' என்று அக்குழந்தை மும்முறை கூறியதைக்கண்டு வியந்தனர். இக்காட்சியை சித்தரிக்கும் உருவம் இவ்வூர் பெருமாள் கோயிலிலும், அக்னீஸ்வரர் கோயில் நடராஜர்சன்னதியிலும் உள்ளது. பெருமாள் கோயிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர். ஹரதத்தருக்கு உபதேசித்து அருள்செய்த தெட்சிணாமூர்த்தி உருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு ஹரதத்தர் என்ற பெயர் அளித்து சிவநாம தீட்சை செய்தவர். 
ஒரு செல்வந்தர் தினமும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் படைத்துவந்தார். அன்றாடம் அவர் கனவில் இறைவன் தோன்றி அவ்வுணவை உண்பதுபோல காட்சி தருவார். ஒருநாள் அக்கனவு தோன்றவில்லை. காரணம் புரியாது அவர் விழித்தார். விசாரித்ததில் அன்று அக்னீஸ்வரர் ஹரதத்தரிடம் ஏழை பிராமணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கி உண்டதாகவும் அதனால் வயிறு நிரம்பிவிட செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார். இதன்மூலம் ஹரதத்தரின் பெருமையை அறிந்து அச்செல்வர் அவரை நாடிச்சென்று வணங்கியதாக வரலாறு சொல்லப்படுகிறது. ஆலயத்தில் ஹரதத்தரின் குடும்பமும், ஏழை அந்தணராக வந்த இறைவனின் திருவுருவமும் உள்ளன. ஊருக்குள் வரும்போது அரசமரத்தின் எதிரில் கிழக்குநோக்கி ஹரதத்தர் சிவபூஜை செய்வதுபோல உள்ள ஹரதத்தர் தனிக்கோயிலும் இத்தலத்தில் உள்ளது. சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் சுரைக்காய் பக்தர் என்ற அடியவர் மனைவியுடன் காட்சிதருகிறார். இவ்வூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுரைக்காய் விற்று பிழைத்துவந்தார். இதனால் இவர் பெயர் சுரைக்காய் பக்தர் என்றாயிற்று. இவரிடம் ஒரே ஒரு சுரைக்காய்தான் எஞ்சியிருந்தது. அதை விதைக்கு ஆகும் என்று அப்படியே வைத்துவிட்டார். அந்நிலையில் இறைவன் அவரிடம் விருந்தினராக வந்து உணவிடுமாறு கேட்க, அவர் செய்வதறியாது திகைத்தார். அதிதிகளுக்கு சுரைக்காய் ஆகாது என்று எண்ணி கலங்கினார். அப்போது இறைவன் அசரீரியாக "ஒரு பாதி விதைக்கு, ஒரு பாதி கறிக்கு' என்று அருளிச்செய்து ஏற்று, அவருக்கு அருள்புரிந்தார் என்று ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. 
கல்நந்தி: பிராமணர் ஒருவர் புல் கட்டை தெரியாமல் போட்டுவிட்டதால் பசுக்கன்று ஒன்று இறந்தது. இதனால் அவருக்கு பசுதோஷம் நேர்ந்தது என்று பிராமணர்கள் அவரை தங்களிடமிருந்து விலக்கி வைத்துவிட்டனர். அவர் செய்வதறியாமல்ஹரதத்தரிடம் முறையிட்டார். அவ்வாறு முறையிடும்போது பஞ்சாட்சரத்தைச் சொல்லியவாறே சென்றார். அதைக்கேட்ட ஹரதத்தர் சிவபஞ்சாட்சரத்தை சொல்லியதால் அப்பாதகம் நீங்கிவிட்டதாக கூறினார். பிராமணர்கள் அதை ஏற்காமல் தங்களக்கு நேரடிச்சான்று தந்து நிரூபிக்குமாறு கூறினர். ஹரதத்தர் உடனே அந்த பிராமணரை அழைத்து, காவிரியில் நீராடி ஒரு கைப்புல் எடுத்துவந்து அந்த கல்நந்தியிடம் தருமாறு பணித்தார். அப்பிராமணரும் அவ்வாறே செய்து, ""கல்நந்தி புல் சாப்பிடுமானால் பஞ்சாட்சரத்தால் தோஷம் நீங்கும்'' என்று சொல்லி புல்லைத்தர அந்நந்தியும் உண்டதாக வரலாறு. 
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் உயர்ந்த பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  
நிறம்- வெண்மை 
வாகனம்-கருடன் 
உலோகம்-வெள்ளி 
தானியம்-மொச்சை 
பால்-பெண் 
திசைகாலம்-20 வருடங்கள் 
கோசர காலம்-1 மாதம் 
நட்பு-புதன்,சனி,ராகு,கேது 
பகை-சூரியன்,சந்திரன் 
சமம்-செவ்வாய்,குரு 
நட்சத்திரம்-பரணி,பூரம்,பூராடம் 
ஒவ்வொரு வீட்டிலும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்  
சுக்கிரன் 1 ஆம் வீட்டில்  இருந்தால் நல்ல தோற்றப்பொழிவை தரும். அனைவரும் கவர்ந்து இழுக்கும் தோற்றம் இருக்கும். ஆண்களாக இருந்தால் பெண்களாலும் பெண்களாக இருந்தால் ஆண்களாகவும் ஈர்க்கப்படுவார்கள். எதிர்பாலினரிடம் நல்ல நட்பு இருக்கும். துணைவியார் அழகாக அமைவார். 
சுக்கிரன் 2 ஆம் வீட்டில்  இருந்தால் நல்ல பேச்சு திறமை இருக்கும். தனவரவுகள் நன்றாக இருக்கும். நல்ல அதிர்ஷ்டசாலியாக இருப்பார். குடும்பத்தில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். செல்வ வளம் நன்றாக இருக்கும். 
சுக்கிரன் 3 ஆம் வீட்டில்  இருந்தால் சிறிய தொலைவு பயணம் அடிக்கடி நடைபெறும் கடித போக்குவரத்து பெண்களிடத்தில் இருந்து வரும். இளைய சகோதரிகள் அதிகம் பேர் இருப்பார்கள். சிற்றின்ப சுகத்தில் மனது அலைபாயும். 
சுக்கிரன் 4 ஆம் வீட்டில்  இருந்தால் நல்ல ஆடம்பரமான வீடு அமையும். நல்ல தோற்றம் அமையும். சுகமான வாழ்க்கை அமையும். வாகனம் அமையும். வாகனத்துறையில் பணிபுரியலாம் அல்லது டிராவல்ஸ் தொழில் நடத்தலாம். உற்றார் உறவினர் மூலம் நல்ல உறவு ஏற்படும். கற்பனை வளம் இருக்கும். 
சுக்கிரன் 5 ஆம் வீட்டில்  இருந்தால் கலைகளில் ஈடுபட்டு வாழ்க்கை வசதிகளை பெறவைப்பார். நல்ல கல்வி ,கற்பனை வளம் இருக்கும். பெண் குழந்தைகள் அதிகமாக இருக்கும். அரசாங்கத்தில் பணிபுரிய வைப்பார். திடீர் வருமானத்திற்க்கு வாய்ப்பு உண்டு. குலதெய்வம் ஏதாவது ஒரு அம்மனாக இருக்கும். லட்சுமியை வழிபடலாம். 
சுக்கிரன் 6 ஆம் வீட்டில்  இருந்தால் செல்வ வளம் குன்றும். எதிரிகள் தொந்தரவு இருக்கும். பெண்களால் பிரச்சினைகள் இருக்கும். மர்ம பாகங்களில் நோய் வரும். பெண்களால் ஏமாற்றப்படுவார். சண்டை என்று வந்தால் முதலில் பெண்கள் வழியில் தான் ஆரம்பம் ஆகும். 
சுக்கிரன் 7 ஆம் வீட்டில்  இருந்தால் அழகான தோற்றத்தை உருவாக்குவார். அழகான மனைவி அமையும். காமத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். நல்ல பணக்காரராக இருக்கவைப்பார். பல பெண்களிடத்தில் தொடர்பு ஏற்படும். சுக்கிரன் ஏழில் கெட்டால் சுக்கிர தோஷத்தை ஏற்படுத்துவார். இவரிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பெண்களாக இருக்கும். 
சுக்கிரன் 8 ஆம் வீட்டில்  இருந்தால் நீண்ட ஆயுள் இருக்கும் எட்டாம் வீட்டில் இருந்து இரண்டாம் வீட்டை சுக்கிரன் பார்ப்பதால் தன வரவு நன்றாக இருக்கும் ஆனால் திருமணத்திற்க்கு தோஷத்தை ஏற்படுத்துவார். 
சுக்கிரன் 9 ஆம் வீட்டில்  இருந்தால் தெய்வ பக்தியில் ஈடுபாடு அதிகமாக இருக்கும். உயர்கல்வியில் சிறந்து விளங்குவார். பணவரவுகள் நன்றாக இருக்கும். தந்தைக்கும் இவருக்கும் உள்ள தொடர்பு நல்லவிதத்தில் இருக்கும். மனைவி மூலம் நல்லது நடக்கும். மொத்தத்தில் வசதியான வாழ்க்கை வாழ சுக்கிரன் துணைபுரிவார். 
சுக்கிரன் 10 ஆம் வீட்டில்  இருந்தால் கலைதுறையில் ஈடுபாடு அதிகமாக இருக்கும். கலைதுறையில் தொழில் தொடங்கலாம். பெண்களால் வருமானம் இருக்கும். கலைதுறையில் போட்டிகளில் சமாளித்து முன்னேறி வர சுக்கிரன் துணைபுரிவார். நண்பர்களால் லாபம் உண்டு. 
சுக்கிரன் 11 ஆம் வீட்டில்  இருந்தால் நல்ல லாபம் ஏற்படும் மூத்த சகோதரிகளால் நன்மை ஏற்படும். லாபம் பன்மடங்காக உயரும். பெண்களால் லாபம் ஏற்படும் பல பெண்களிடத்தில் தொடர்பு ஏற்படும். நண்பர்கள் உதவி செய்வார்கள். கலைதுறை மூலம் வருமானம் பெருகும். 
சுக்கிரன் 12 ஆம் வீட்டில்  இருந்தால் பெண்கள் மூலம் பொருள் இழுப்பு ஏற்படும். தொழிலில் முன்னேறுவது கடினம். பணவரவுகள் இருக்கும் ஆனால் பணத்தை போகத்திற்க்கு அதிக செலவு செய்வார்கள். மனைவி சொல்லே மந்திரம் என்று மனைவி பேச்சை கேட்பார்கள். 
சுக்கிரன் (தடைபட்ட திருமணம் நடக்க) 
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே 
தனு ஹஸ்தாய தீமஹி 
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத் 
ஓம் தைத்யாசார்யாய வித்மஹே 
ஸ்வேதவர்ணாய தீமஹி 
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத் 
ஓம் பார்கவாய வித்மஹே 
தைத்யாசார்யாய தீமஹி 
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத் 
ஓம் தைத்யபூஜ்யாய வித்மஹே 
ப்ருகுப் புத்ராய தீமஹி 
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
சனிபகவான்.
Picture
                   7. சனி   சனி கிரகம் சூரியனுக்கு சுமார் 88,66,000 மைல்கள் அப்பால் இருந்து சூரியனை சுற்றி வருகிறது. ஒரு தடவை சுரியனை சுற்றி வர 29 வருடகாலம் ஆகிறது. சனி ஆயுள்காரகன் என அழைக்கப்படுகிறார். அளவற்ற துன்பங்களுக்கு இவரை காரணம் ஆகிறார். சனி பகவான் நிறைய துன்பங்கள் கொடுத்தாலும் இவர் சிறந்த நீதிமான் ஆவார். அளவற்ற துன்பத்தை அளிப்பது போலவே அளவற்ற நன்மையும் செய்வார். சனி கொடுத்த செல்வத்தை அவராலே கூட பிடுங்க முடியாது அந்த அளவுக்கு நன்மையை தருவார். சனிபகவானுக்கு 3,7,10 என்ற பார்வை உண்டு. இரவில் வலிமை,எருமை,யானை,அடிமை வாழ்வு,எண்ணெய்,வீண்கலகம்,கள்ளத்தனம்,கருநிறமுள்ள தானியம்,இரும்பு,கல்,மண்,சுடுகாடு, மதுகுடித்தல்,கஷ்டகாலம்,சிறைவாழ்வு ஆகியவற்றுக்கு காரணம் ஆகிறார். சனிபகவான் மகர ராசிக்கும், கும்ப ராசிக்கும் அதிபதி. அனுஷம், பூசம், உத்திரட்டாதி  நட்சந்திரங்களுக்கு நாயாகன். துலாம், சனிபகவானுக்கு உச்ச வீடு. மேஷம் நீசம், நீசம்  பெற்ற சனிபகவான் நன்மை தரமாட்டார். உச்சம் பெற்ற சனிபகவான் நன்மைகளை வாரி  வழங்குவார். சனிபகவான் பார்வை கொடியது. சனிபகவானுக்கு சுபகிரகங்கள் பார்வை நன்மை செய்யும்  இடமான 3,6,10,15,9 அகிய இடங்களில் இருந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை. நீண்ட கால வாழ்வுக்கும், மரணத்திற்க்கும் காரகன் சனிபகவான். வாகனம் காகம்.  கலி,காரி,முடவன் என்ற பல பெயர்கள் உண்டு. ஓருவர் ஜாதகத்தில் சனி நீசம் பெற்று வக்கிரம் பெறாமல் பலம் இழந்த நிலையில்  இருந்தால் வாத நோயை ஏற்படுத்தும். சனிபகவான் பலம் பெற்ற ஜாதகர் சர்வ சக்திகளையும்  பெறவாய்ப்பு உண்டு. ஜாதகத்தில் நல்ல நிலையில் சனி இருந்தால், அந்த ஜாதகர் ஓரு நாட்டுக்கே தலைவராகவும்  வாய்ப்பு உண்டு. வறுமை, நோய், கலகம், அவமரியாதை, இரும்பு, எண்னை, கருமைநிறம்,  பெரிய இயந்திர தொழிற்சாலை, தொழிலாளர் வர்க்கம் இவைகளுக்கு காரகன். சனிபகவான் பலம்  பெற்று அமைந்தால் ஜாதகருக்கு அவர் சம்மந்தபட்ட இனங்களில் பொன்னையும், பொருளையும்  வாரி வழங்குவார். 
                                                    சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரிய குமரனே சனி. யமனின் தமயன் இவன். நீண்ட ஆயுளுக்கும், மரணத்திற்கும் அதிபதி சனியே. சனி ஜாதகத்தில் அசுபனாக இருந்தால் ஒருவன் எல்லாவித துன்பங்களையும் அனுபவிக்க நேரிடும். சனி நல்ல பலம் பெற்றிருந்தால் சர்வ நலன்களையும் அடைய வாய்ப்பு உண்டு. ஏழரை நாட்டு சனி என்றழைக்கப்படும் எழரை ஆண்டுகளில் இவனைத் துதித்து வழிபட்டால் நலம் பெறலாம். எண்ணெய், கறுப்பு தானியங்களுக்கு சனியே அதிபதி. கருமை இவனுக்கு உகந்த நிறம். இயந்திரம் சம்பந்தபட்ட அனைத்திற்கும் ஆதிபத்யம் சனிக்கே உண்டு. உடலில் நரம்பு இவன். தாமச குணத்தோன். ஒற்றைக் கால் சற்று குட்டையாக இருப்பதால் மந்த நடையை உடையவன். ஆகவே மந்தன் என்றும் அழைக்கப்படுவான். மேற்குத்திசை சனிக்கு உரியது. திருநள்ளாறு சனிக்கு உரிய தலம். சனிக்கு அதி தேவதை யமன். பிரத்யதி தேவதை பிரஜாபதி. நீலம் இவருக்கு உகந்த ரத்தினம். காகமே சனியின் வாகனம். சனி பகவான் படைக்கலன்கள் ஏதுமின்றி பரமானந்த சொரூபமாக விளங்குகிறார். சனித்தொல்லையால் வாடும் எவரும் திருநள்ளாறை அடைந்து நளதீர்த்தத்தில் மூழ்கி சனி பகவானின், பாதம் பணியலாம். சனீஸ்வர பகவானுக்கு கருங்குவளை மாலை அணிவித்து நல்லெண்ணை தீபம் ஏற்றி வந்தால் வறுமைகள், துன்பங்கள் நீங்கி தொழில் சிறப்புரும் 
திருநள்ளாறு 
இறைவர் திருப்பெயர்      : தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீசர் 
இறைவியார் திருப்பெயர்   : போகமார்த்த பூண்முலையாள், பிராணாம்பிகை 
தல மரம்         : தர்ப்பை
தீர்த்தம்                       : நளதீர்த்தம், சிவகங்கை 
வழிபட்டோர்              : திருமால், பிரமன், இந்திரன், அகத்தியர், புலஸ்தியர்,  அர்ச்சுனர், நளச் சக்கரவர்த்தி, திக்குப் பாலகர்கள்,  வசுக்கள், போஜன், முசுகுந்தச் சக்கரவர்த்தி 
தேவாரப் பாடல்கள் : 
1. சம்பந்தர் - 
1. பாடக மெல்லடிப் பாவை,  
2. போகமார்த்த பூண்முலையாள்,  
3. ஏடுமலி கொன்றையர,
 4. தளிரிள வளரொளி.
2. அப்பர்   -
1. உள்ளாறாததோர் புண்டரிகத் திரள், 
2. ஆதிகண்ணான் முகத்திலொன்று.
3. சுந்தரர்  -          செம்பொன் மேனிவெண் ணீறணி.
தல வரலாறு இது, நளன் பூஜித்தக் காரணத்தால், நள்ளாறு எனப்படுகிறது. இறைவனருளால், நளன் சனியின் இடர் நீங்கப்பெற்றான். திருஞானசம்பந்தர், திருஆலவாயில் (மதுரை) சமணரோடு நடத்திய அனல் வாதத்தின்போது, இத்தலப் பதிகமான போகமார்த்த பூண்முலையாள் என்ற பதிகத்தை அனலில் இட, அது தீப்பற்றாமல், பச்சைப் பதிகமாய் நின்று, சைவத்தை நிலைநாட்டியது. 
சிறப்புக்கள் இது, முசுகுந்தச் சக்கரவர்த்தி எழுந்தருளுவித்த சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று (தியாகராஜர்-நகவிடங்கர்;நடனம்-உன்மத்த நடனம்). இது, சனி தோஷம் நீங்கும் சிறப்புடைய தலம். இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்ட பின்னரே சனிபகவான் சன்னிதிக்குச் செல்ல வேண்டும். இத்தலத்தின் போகமார்த்த பூண்முலையாள் என்ற மேலே குறிக்கப்பட்டுள்ள பதிகத்தைப் பாடி சிவபெருமானை வழிபட சனி தோஷம் விலகும்.. இது,தருமை ஆதீனக் கோவிலாகும். சோழர்காலக் கல்வெட்டுகள் இரண்டு உள்ளன. 
அமைவிடம்: மாநிலம் : தமிழ் நாடு 
இது, பேரளம் - காரைக்கால் இரயில் பாதையில் உள்ள நிலையமாகும். இரயில் நிலையத்திற்கு அருகிலேயே கோவில் உள்ளது. காரைக்கால், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. 
அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் 
மூலவர்:தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர் 
உற்சவர் 
அம்மன்/தாயார்:பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள் 
தல விருட்சம்:தர்ப்பை 
தீர்த்தம்:நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம். இது தவிர அன்னதீர்த்தம், கங்கா தீர்த்தம் (நள தீர்த்தக்கரையிலுள்ள நளவிநாயகர் கோயிலில் உள்ள கிணறு), அஷ்டதிக்பாலகர் தீர்த்தங்கள் எனப்படும் எட்டு தீர்த்தங்கள் இருந்தன. 
ஆகமம்/பூஜை 
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன் 
புராண பெயர்:திருநள்ளாறு 
ஊர்:திருநள்ளாறு 
மாவட்டம்:காரைக்கால் 
மாநிலம்:புதுசேரி 
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் 
தேவாரபதிகம் 
போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம் 
பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி, 
ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின்மேல் 
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே. -திருஞானசம்பந்தர் 
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 52வது தலம்.  
திருவிழா: மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம். 
தல சிறப்பு:இங்கு தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 
(மூலவர் தர்ப்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தி) சிவலிங்கத்தின்மீது முளைத்த தழும்பு உள்ளது.இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கியிருப்பதைக் காணலாம். 
காலை 5 மணி முதல் 12மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, காரைக்கால் மாவட்டம். புதுச்சேரி-609 606. 
இது சிவத்தலமாயினும் சனிபகவான் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தல விநாயகர் சொர்ணவிநாயகர் என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். திருமால், பிரமன், இந்திரன், திசைப்பாலர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன்,நளன் முதலியோர் வழிபட்டு பேறுபெற்ற தலம். கோயிலின் தென்புறம் இடையனார் கோயில் உள்ளது. இங்கு இடையன், அவன் மனைவி, கணக்கன் ஆகியோர் உருவங்கள் உள்ளன. சனித்தொல்லை நீங்க நள தீர்த்தத்திலும், முந்தைய சாபங்கள் ஒழிய பிரம்ம தீர்த்தத்திலும், கவி பாடும் திறன் பெற வாணி தீர்த்தம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்திலும் நீராடி பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
தலபெருமை:சோமாஸ்கந்தமூர்த்தி வடிவத்தின் பிறப்பிடம்: திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரும், அம்பிகை பிராணேஸ்வரியும் குழந்தை இல்லாத தம்பதியருக்கு அருள் புரிவர். திருமாலுக்கு குழந்தையில்லாமல் இருந்த வேளையில் அவர் தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி மன்மதனை மகனாகப் பெற்றார். அதற்கு பரிசாக முருகப்பெருமானை சுவாமி, அம்பாள் இடையே அமர்த்தி சோமாஸ்கந்தமூர்த்தி என்ற புதிய வடிவை உருவாக்கினார். இந்த வடிவத்தை தேவலோகத்துக்கு எடுத்துச் சென்று வழிபட்ட இந்திரன், ஜெயந்தன், ஜெயந்தி என்ற குழந்தைகளைப் பெற்றான். ஒரு கட்டத்தில் வாலாசுரன் என்பவன் தேவேந்திரனுடன் போருக்கு வந்த போது, முசுகுந்தன் சோழ மன்னன் உதவியுடன் அவனை வென்றான் இந்திரன். இதற்கு பரிசாக அந்த சோமாஸ்கந்த மூர்த்தியைப் பெற்று வந்தான். அதை திருவாரூரில் பிரதிஷ்டை செய்தான். அதே போல மேலும் ஆறு மூர்த்திகளைப் படைத்தான். அதில் ஒன்றை திருநள்ளாறில் வைத்தான். அதுவே தற்போது "தியாகவிடங்கர்' என வழங்கப்படுகிறது. தியாகவிடங்கருக்கு இங்கே தனி சன்னதி இருக்கிறது. தியாகவிடங்கரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
வாசல்படிக்கு மரியாதை கொடுங்கள் : திருநள்ளாறு செல்பவர்கள் ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்ததும், முதல் படியை தொட்டு வணங்க வேண்டும். ஏனெனில், இந்த வாசல்படி மாடத்தில் சனீஸ்வரன் தங்கியிருப்பதாக ஒரு நம்பிக்கை. நளன் தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குள் நுழைந்ததுமே, நியாயத்துக்கு புறம்பாக செயல்பட்டதற்காக இறைவனிடம் தண்டனை அடைய வேண்டி வருமோ என்று பயந்த சனீஸ்வரன் வாசல்படியோடு நின்று, அவனை விட்டு நீங்கி விட்டதாக சொல்வர். ஆனால், இறைவன் சனீஸ்வரனின் நிலையைப் பாராட்டி ஈஸ்வரப் பட்டம் வழங்கி, தன் கோயில் முகப்பிலேயே வைத்துக் கொண்டார். 
தீர்த்தங்கள் : திருநள்ளாறு என்றாலே தீர்த்த ஸ்தலம் என்பதே நிஜம். தற்போது கோயிலைச் சுற்றி நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இதில் நள தீர்த்தத்தில் குளித்தால் சனித்தொல்லை நீங்கும். பிரம்ம தீர்த்தத்தில் குளித்தால் முந்தைய சாபங்கள் ஒழியும். வாணி தீர்ததம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் மூடன் கூட கவி பாடுவான் என்று நம்பிக்கை. இது தவிர அன்னதீர்த்தம், கங்கா தீர்த்தம் (நள தீர்த்தக்கரையிலுள்ள நளவிநாயகர் கோயிலில் உள்ள கிணறு), அஷ்டதிக்பாலகர் தீர்த்தங்கள் எனப்படும் எட்டு தீர்த்தங்கள் இருந்தன. ஒரு காலத்தில் உலகிற்கு ஏதேனும் கேடு நேர இருக்குமானால் கங்கா, பிரம்ம மற்றும் நள தீர்த்தங்களின் நீர் சிவப்பாக மாறிவிடுமாம். இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு தகுந்த பரிகார பூஜைகள் செய்து மக்கள் தப்பித்திருக்கிறார்கள் என்கின்றனர்.
சனீஸ்வரனை வணங்கும் முறை : காலை 5 மணிக்கு நள தீர்த்தத்தில் நீராடி, கரையிலுள்ள நளவிநாயகர் மற்றும் பைரவரை வணங்க வேண்டும். கோயிலுக்குள் உள்ள கிணறான கங்காதீர்த்தத்தை தரிசித்து, கோபுர வாசலுக்கு வந்து ராஜகோபுர தரிசனம் முடித்து, உள்ளே நுழையும் போது முதல் படிக்கட்டை வணங்கி முதல் பிரகாரத்திற்கு செல்ல வேண்டும். இந்த சுவரில் வரையப்பட்டுள்ள நள சரிதத்தை பக்திப்பூர்வமாக பார்த்த பிறகு, காளத்திநாதரை வணங்க வேண்டும். பின்னர் சுவாமி சன்னதிக்குள் சென்று மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, தியாகவிடங்கர் சன்னதிக்கு செல்ல வேண்டும். இங்குள்ள மரகதலிங்கத்தை வணங்கிய பிறகு, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, சண்டிகேஸ்வரரை வணங்கிய பின் வெளிப்பிரகாரம் செல்ல வேண்டும். அங்குள்ள தெய்வங்களை தரிசித்து கட்டைக் கோபுர வாசல் சென்று அம்பிகை பிராணேஸ்வரியை வழிபட வேண்டும். பிறகு தான் சனீஸ்வரர் சன்னதிக்கு செல்ல வேண்டும். சிலர் முதலிலேயே சனீஸ்வரனை தரிசிக்க சென்று விடுகின்றனர். இது சரியான வழிபாட்டு முறையல்ல. இங்குள்ள இறைவனை பார்த்த பிறகு சனீஸ்வரனைக் கண்டால் தான் சனிதோஷ விமோசனம் கிடைக்கும். 
தங்கக்கவசம் :சனிப்பெயர்ச்சி மற்றும் முக்கிய காலங்களில் சனீஸ்வரன் தங்க காக வாகனத்தில் தங்கக்கவசம் அணிந்து பவனி வருவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். சனீஸ்வரனைக் கண்டால் எல்லாருமே ஓட்டம் பிடிக்கும் நிலைமையில், இங்கே தங்கக்கவச சனீஸ்வரனைத் தரிசிக்க கூட்டம் அலை மோதும். தமிழகத்தை தவிர கன்னட மக்களுக்கு சனீஸ்வரன் மீது நம்பிக்கை அதிகம். எனவே, தமிழ் மக்களுக்கு ஈடாக கர்நாடக மாநில மக்களும் இங்கு அதிக அளவில் வருகிறார்கள். 
சனீஸ்வரன் வரலாறு : சூரியனுக்குரிய மனைவியரில் ஒருத்தி உஷா. இவள் சூரியனின் வெப்பம் தாளாததால் தன் நிழலையே ஒரு பெண்ணாக்கி சாயாதேவி என்ற பெயரில் தங்கியிருந்தாள். சாயாதேவிக்கு சனீஸ்வரன் பிறந்தார். பின்னர் உண்மை தெரிந்தது. சூரியன் தன்னை ஏமாற்றிய மனைவியைக் கடிந்து கொண்டார். அவளுக்கு பிறந்த சனீஸ்வரனை வெறுத்து ஒதுக்கி விட்டார். சனி காசிக்கு சென்று விஸ்வநாதரை வணங்கி நவக்கிரக மண்டலத்தில் இடம் பெற்றார். 
சனி-அறிவியல் தகவல் : இந்த கிரகத்தை இத்தாலி விஞ்ஞானி கலிலியோ வானமண்டலத்தில் இருந்ததை முதன் முதலாக பார்த்தார். பூமியில் இருந்து 128 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. சில சமயத்தில் பூமியிலிருந்து விலகிப் போனால் 164 கோடி கி.மீ., தூரம் இருக்கும். பூமியை விட 750 மடங்கு பெரியது. சூரியனை சுற்றும் கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன். அதற்கடுத்த இடத்தை சனி பெறுகிறது. 
சனீஸ்வரனுக்கு உரியவை 
ராசி-மகரம், கும்பம் 
திசை-மேற்கு அ
திதேவதை-எமன் 
நிறம்-கருப்பு 
வாகனம்-காகம் 
தானியம்-எள் 
பால்-அலி 
நட்பு-புதன்,சுக்கிரன்,இராகு.கேது. 
பகை- சூரியன்,சந்திரன்.செவ்வாய் 
சமம்-குரு 
திசைகாலம்-19 வருடங்கள் 
மலர்-கருங்குவளை 
நட்சத்திரங்கள்- பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி. 
மலர்-கருங்குவளை 
வஸ்திரம்-கருப்பு ஆடை 
ரத்தினம்-நீலமணி 
நிவேதனம்-எள்ளுப்பொடி சாதம் 
சமித்து-வன்னி 
உலோகம்-இரும்பு. 
தல வரலாறு:நிடதநாட்டு மன்னன் நளன் சேதி நாட்டு இளவரசி தமயந்தியை திருமணம் செய்தான். இப்பெண்ணை தேவர்கள் மணக்க விரும்பினர். ஆனால், நளனை அவள் திருமணம் செய்ததால் பொறாமை கொண்டு, சனீஸ்வரனை நாடினர். சனீஸ்வரன் நளனின் தூய்மையான மனநிலையை அவர்களுக்கு உணர்த்த, அவனை ஏழரை ஆண்டுகள் பிடித்து துன்பப்படுத்தினார். மனைவி, மக்களையும், உடுத்தும் துணியைக் கூட இழந்து அவஸ்தைப்பட்ட மன்னன் நளன் எதற்கும் கலங்கவில்லை. ஒரு கட்டத்தில் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை நளன் வணங்கினான். அப்போது சனி அவனை விட்டு நீங்கியது. அவனது வேண்டுகோளின் படி இதே தலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து ஈஸ்வர பட்டத்துடன் "சனீஸ்வரன்' என்ற பெயர் தாங்கி அருள்பாலித்தார். கிழக்கு நோக்கிய சனீஸ்வரன் என்பதாலும், சிவனருள் பெற்றவர் என்பதாலும், இவரை வழிபட்டு, சனியினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கப் பெறலாம். நளசரிதம் படித்தவர்களும் சனித்தொல்லை நீங்கப் பெற்று, வாழ்வில் தன்னம்பிக்கை பெறுவர். 
ஒதுங்கிய நந்தி : இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கியிருப்பதைக் காணலாம். இடையன் ஒருவன் அரசன் ஆணைப்படி கோயிலுக்குப் பால் அளந்து கொடுத்துவந்தான். கணக்கன் அப்பாலைத் தன்வீட்டுக்கு அனுப்பிப் பொய்க்கணக்கு எழுதி, இடையனையும் அச்சுறுத்தி வந்தான். செய்தியறிந்த மன்னன் கோபம் கொண்டான். அப்போது இறைவன், இடையனைக் காக்கவும், கணக்கனைத் தண்டிக்கவும் எண்ணி தம் சூலத்தை ஏவினார். அந்த சூலத்திற்கு வழிவிடவே இக்கோயிலில் பலிபீடம் சற்று விலகியுள்ளது. சூலம் கணக்கன் தலையைக் கொய்தது. இடையனுக்கு இறைவன் காட்சி தந்து அருள்புரிந்தார். 
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். (மூலவர் தர்ப்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தி. சிவலிங்கத்தின்மீது முளைத்த தழும்பு உள்ளது)  
சனி பகவான்  -  ஒரு சிறந்த பரிகாரம்:
ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம். எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது - அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் - சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி - கொடுமையாக தண்டிக்கிறார்.  ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம். பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும். வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் , அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும். அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு இழந்துபோய்விடும்.இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும். ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள்.  இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி - சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும்.  உடல், ஊனமுற்றவர்களுக்கு - காலணிகள், அன்ன தானம் - அளிப்பது , மிக நல்லது. 
ஒவ்வொரு வீட்டிலும் சனி இருந்தால் என்ன பலன்  
சனி 1 ஆம் வீட்டில்  இருந்தால் மந்த புத்தி இருக்கும். வறுமை இருக்கும். துணைவர் மூலம் பிரச்சினை உருவாகும். நண்பர்களிடத்தில் சண்டை சச்சரவு இருக்கும். இளைய சகோதர சகோதரிகளிடத்தில் சுமுக உறவு இருக்காது. வாழ்வின் பின்பகுதி நன்றாக இருக்கும். இளம் வயதில் மூத்த வயதுபோல் தோற்றம் இருக்கும். சில நபருக்கு திருமண வாழ்வில் பிரச்சினைகள் 1 ஆம் வீட்டில் சனியால் வருகிறது. 
சனி 2 ஆம் வீட்டில்  இருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. குடும்பத்தில் சண்டை சச்சரவு இருக்கும் தாயாரின் உடல் நலம் கெடும். குழந்தை பாக்கியம் இருக்காது. ஆயுள் நன்றாக இருக்கும். தார தோஷத்தை ஏற்படுத்துவார்.வீட்டில் எப்போதும் ஒரு வெறுப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். திருமணம் ஆனாலும் தொழில் விசயமாக துணையை விட்டு பிரிந்து சென்று வெளியில் தங்கிவிடுவார். வீட்டின் தொடர்பு மிக குறைவாகதான் இருக்கும்.
சனி 3 ஆம் வீட்டில்  இருந்தால நல்ல தைரியம் இருக்கும். சகோதர்கள் இருக்கமாட்டார்கள். அப்படியே இருந்தாலும் பகையாக இருப்பார். இந்த வீட்டில் சனி இருப்பது நல்லது தான் ஆனால் குழந்தை பாக்கியம் தள்ளி போகும். அண்டை அயலார் வீட்டுடன் சண்டை சச்சரவு இருக்கும். இசையின் மேல் அவ்வளவு ஆர்வம் இருக்காது. கடித போக்குவரத்தால் வில்லங்கம் தான் வரும். பயணம் செல்லும்போது அடிபடும். 
சனி 4 ஆம் வீட்டில்  இருந்தால் தாயாரின் உடல்நிலை கெடும். சொத்துக்கள் நாசம் ஆகும். வயிற்று வலி ஏற்படும். உடலில் முதுமை தெரியும். பழைய வாகனங்கள் வாங்கினால் யோகம் உண்டு. சிலபேர் பழைய வாகனங்கள் வாங்கி விற்க்கும் தொழில் செய்யலாம். சிலபேர் வீட்டை இடித்து தரும் தொழில்கள் செய்வார்கள். நான்காம் வீடு தங்கி இருக்கும் வீட்டை குறிப்பதால் பழைமையான வீட்டில் தங்கி இருப்பார்கள். 
சனி 5 ஆம் வீட்டில்  இருந்தால் கடுமையான புத்திர தோஷம் ஏற்படும்.வருமான குறைவு ஏற்படும். மனதில் நிம்மதி இருக்காது. ஐந்தில் சனி இருப்பவர்கள் வில்லங்க பார்ட்டியாக இருப்பார்கள. உணர்ச்சி வசப்படகூடியவர்கள். ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானத்தை குறிப்பதால் புத்திர தோஷம் ஏற்படும். திருமணத்திற்க்கு முன்பும் பின்பும் ராமேஸ்வரம் செல்ல வேண்டும். அப்பொழுது தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை பிறந்தவுடன் வருடம் ஒருமுறையாவது ராமேஸ்வரம் செல்ல வேண்டும். சில நபர்களை நீங்கள் பார்த்து இருக்கலாம். தங்கள் பிள்ளைகளுக்கு கொள்ளி போடுவார்கள் அவர்களின் ஜாதகங்களில் எல்லாம் ஐந்தாம் வீட்டுடன் சனி சம்பந்தப்பட்டு இருப்பார். இதற்கு தகுந்த பரிகாரம் ராமேஸ்வரம் தான். ஐந்தாம் வீடு குலதெய்வத்தை குறிப்பதால் கிராம தேவதையை வணங்கலாம்.
சனி 6 ஆம் வீட்டில்  இருந்தால் பகைவர்கள் இருக்கமாட்டார்கள். நல்ல வேலை ஆட்கள் கிடைப்பார்கள். வேலை ஆட்களால் பிரச்சினை ஏற்படாது. மாமன் வீட்டுடன் சுமூகமான உறவு இருக்காது. கணவன் மனைவியுடன் சிறிய தகராறு வந்து செல்லும். பிறர் பாராட்டும் படியான காரியங்களில் இறங்கி வெற்றி அடைவார்கள். பணவரவு நன்றாக இருக்கும்.காலில் அடிபட வாய்ப்பு உள்ளது. 
சனி 7 ஆம் வீட்டில்  இருந்தால் முதுமை தோற்றம் தெரியும். மர்ம பாகங்களில் முடி அதிகமாக தோன்றும்.திருமணம் தள்ளி போகும். துணைவருடன் எப்பொழும் சண்டை சச்சரவு இருக்கும். இளம்வயதில் திருமணம் நடந்தால் துணைவர் இரண்டு அமைவர்.உடம்பில் ஊனம் ஏற்படும். வறுமை இருக்கும். முகத்தில் கவலை தோன்றும். பிறரை ஏமாற்றி பிழைப்பு நடத்துவார்கள். இவர்களுடன கூட்டு சேருபவர்கள் குள்ளமானவராக இருப்பார்கள். தாயாரின் உடல் நிலை கெடும்.
சனி 8 ஆம் வீட்டில்  இருந்தால் அடிமை வேலை செய்ய வேண்டி இருக்கும். நிரம்தரமாக உடலில் நோய் இருக்கும். அதிக வாழ்நாள் இருப்பார். இறக்கும் போது மிகவும் கஷ்டபட்டு நோய்வாய் பட்டு இறப்பார். லக்கினாதிபதி ஆக இருந்து எட்டாம் வீட்டில் இருந்தால் உடல் அடிக்கடி முழு சக்தியையும் இழக்கும். அனைத்துக்கும் கஷ்டபட வேண்டி இருக்கும். சில பேர் இறப்பு சம்பந்தபட்ட தொழில்களில் இருப்பார்கள்.குழந்தை பாக்கியம் ஏற்படாது சில பேருக்கு குழந்தை பாக்கியம் தள்ளி போகும். 
சனி 9 ஆம் வீட்டில்  இருந்தால் பணவரவு நன்றாக இருக்கும். தந்தையுடன் சண்டை சச்சரவு இருந்துகொண்டே இருக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். சிலபேருக்கு காதல் திருமணம் நடைபெறும். மூத்த சகோர சகோதரிகளிடம் கருத்து வேற்றுமை ஏற்படும். நண்பர்களால் சண்டை வரும் வாய்ப்பு உள்ளது. 
சனி 10 ஆம் வீட்டில்  இருந்தால் தொழில் கொடி கட்டி பறப்பார். பெரும் பணக்காரராக்குவார். சமூகத்தில் பிறர் போற்றும் படி வாழ்வார். மிக பெரும் நிறுவனத்தில் தலைமைபொறுப்பு தேடி வரும். வருமானம் போல செலவும் அதிகமாக இருக்கும். புண்ணிய இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். சமயம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு இருக்கும். பழைமையை விரும்புவார்கள். மனைவியிடம் சண்டை சச்சரவு இருந்து வரும். 
சனி 11 ஆம் வீட்டில்  இருந்தால் வருமானம் நிரந்தரமாக இருக்கும். தொழிலில் சிறந்து விளங்குவார். வியாபார சம்பந்தபட்ட விஷயங்களில் ஈடுபட்டு பெரும் பொருள் ஈட்டவைப்பார். இளம்வயதில் நரை தோன்றும். நல்ல ஆயுள் இருக்கும். வருமானம் அதிகமாக வந்தாலும் மனதில் கவலை தோன்ற செய்யும். சிலபேருக்கு உயில் இன்ஸ்சுரன்ஸ் மூலம் வருமானம் வரும். 
சனி 12 ஆம் வீட்டில்  இருந்தால் வியாபாரத்தில் வீழ்ச்சி வரும். செலவு அதிகமாக இருக்கும். மருத்துவ செலவு அதிகம் ஏற்படும். இளைய சகோதர சகோதரிகளிடம் சண்டை ஏற்படும். தந்தையாரின் உடல் நிலை கெடும். தந்தையின் உறவு நன்றாக இருக்காது. மூத்தவர்களின் சாபத்திற்க்கு ஆளாகலாம். சனி நல்ல நிலையில் இருந்தால் தீமை குறைந்து நல்லது நடக்கலாம். விரைய ஸ்தானமாக இருப்பதால் சுபசெலவுகளும் செய்ய வேண்டிவரும். 
சனி பகவான் (வீடு, மனை வாங்க) 
ஓம் காகத்வஜாய வித்மஹே 
கட்கஹஸ்தாய தீமஹி 
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத் 
ஓம் ரவிசுதாய வித்மஹே 
மந்தக்ரஹாய தீமஹி 
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத் 
ஓம் காகத்வஜாய வித்மஹே 
கட்கஹஸ்தாய தீமஹி 
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத் 
ஓம் வைவஸ்வதாய வித்மஹே 
பங்குபாதாய தீமஹி 
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத் 
ஓம் சனீஸ்வராய வித்மஹே 
சாயாபுத்ராய தீமஹி 
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத் 
ஓம் சதுர்புஜாய வித்மஹே 
தண்டஹஸ்தாய தீமஹி 
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்
இராகு.
Picture

                          8. ராகு    இராகு சூரியனை ஒரு முறை சுற்றிவர  18 1/2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். இராகுக்கு என்று சொந்த வீடு கிடையாது. தான் அமர்ந்த வீட்டையே சொந்த வீடாக எடுத்துக்கொள்ளும். பாட்டன்,பைத்தியம்,பேய்,விஷம்,குடல் சம்பந்தமான நோய்,பித்தம்,பிறரை கெடுத்தல்,விதவையை சேர்தல்,குஷ்டம்,மாந்தீரிகம்,அன்னிய பாஷை அறிதல்,மறைந்து வாழ்தல்,விஷ பூச்சிகள்,புத்திர தோஷம் ஆகியவற்றிருக்கு இராகு காரணம் வகிக்கிறார்.இராகு தான் அமர்ந்த இடங்களையே சொந்தமாக கொள்வதால் அந்த வீட்டின் அதிபதிகளின் தன்மைக்கு ஏற்றவாரே பலன் தரும். இராகு,கேதுவிற்க்கு இடையில் லக்கினம் முதல் அனைத்து கிரகங்களும் அகப்பட்டுக்கொண்டால் அதற்கு கால சர்ப்ப தோஷம் என அழைக்கப்படும். அகப்பட்ட கிரகம் வலுவிழந்துவிடும். சதயம், சுவாதி, திருவாதிரை இம்மூனறு நட்சத்திரங்களும் இராகு பகவானுக்கு உரியது.  இவருக்கு சொந்த வீடுகள் கிடையாது. உச்ச வீடு விருச்சிகம், நீச வீடு ரிஷபம். எந்த  நட்ச்த்திரத்தில் அல்லது வீட்டில் அமர்கிறாரோ அந்த அந்த பலன்களை வழங்குவார்.  
                                        இராகுவை போல கொடுப்பவன் இல்லை என்பது ஜோதிட பலமொழி. சனியை போல ராகுவும் பலன்களை தருவார். வெளிநாடு. வெளிபாஷை, வெளிமனிதர்கள், வேறு  மதம் சார்ந்தவர்களோடு நட்பு-அதன் மூலம் நன்மை இவைகளை வழங்குவார் இராகு. 7-வது,  8-வது வீட்டில்,இராகு இருந்தால் சங்கடங்களை கொடுப்பார். இராகு சர்ப தோஷம், கால சர்ப தோஷம் முதலியன ஏற்படும். இராகு பலம் பெற்று ஓருவர்  ஜாதகத்தில் இருந்தால்- ஸ்பெகுலேஷன்-லாட்டரி, பந்தயம் மூலமாக ஓரு மனிதரை கோடிஸ்வரர்  ஆக்குவார். பலமிழந்த இராகு- ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், கள்ள வழியில் நடத்தல் ஆகியவைகளுக்கு  காரணங்களாக அமையும். அரசாங்கத்தில் பதவி-புகழ் பெறுவதற்கு, எதிரிகள் அஞ்சி  நடப்பதற்க்கு இராகு பலமே காரணம். இராகு லக்ன கேந்திரம் அல்லது திரிகோண ஸ்தானமான 5,9 ல் இருந்தால் சிறப்பு பலன்கள்  தருவார். 6,12 ல் இருந்தாலும் வெற்றி கிடைக்கும். 
                                        சாயா கிரகம் என்று அழைக்கப்படும் ராகு, பாற்கடல் கடையப்பட்டு அமுதம் எடுத்து அமரர்களுக்கு படைக்கப்பட்ட போது தேவனாக உருமாறி சூரியனுக்கும் மதியவனுக்கும் இடையே அமர்ந்து அமுதம் உண்ண ஆரம்பித்தான். மோகினி உருவில் அமுதம் பரிமாறி வந்த திருமாலிடம் சூரியனும் மதியவனும் ராகுவைக் காட்டிக் கொடுக்கவே தன் சக்கரம் கொண்டு ராகுவின் தலையை சீவினார் திருமால். அமுதம் உண்டதால் சாகாத் தன்மையைப் பெற்ற ராகு உடல் வேறு தலை வேறாகி விழுந்தான். பாம்பின் உடலைப் பெற்று விஷ்ணுவின் அருள் வேண்டி தவம் இயற்றி கிரக நிலையை அடைந்தான். அரசாங்கத்தில் பதவி, புகழ் இவற்றைப் பெற ராகுவின் அருள் வேண்டும். ஜாதகத்தில் ராகு பலம் பொருந்தி இருந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஸ்பெகுலேஷன், சூதாட்டம் என்ற இவற்றிற்கெல்லாம் அதிபதி ராகுவே. மிலேச்சருக்கு அதிபதி. கலப்பு இனத்திற்கு வழி வகுப்பவன். வெளிநாட்டுக் கலப்புக்கு அதிபதி. தென்மேற்கு திசைக்கு அதிபதி ராகு. திருநாகேஸ்வரம் ராகுவிற்கு உரிய தலம். பசு ராகுவின் அதி தேவதை, பாம்பு பிரத்யதி தேவதை. கோமேதகம் ராகுவிற்கு உரிய ரத்தினம். ராகு பகவானை வழிபட ஏற்ற தலம் திருநாகேஸ்வரம். இங்கு சென்று மந்தார மலர் மாலையிட்டு, கருப்பு ஆடைதானம் செய்து உளுந்தினால் செய்த பலகாரத்தை ராகு பகவானுக்கு நிவேதிக்க வேண்டும். இதனால் ராகுதோஷம் நீங்கும். 
திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் 
 சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் அமைந்துள்ளது. கோயிலின் சிறப்பு சேக்கிழார் திருப்பணி செய்த தலம்.திருநாகேஸ்வரம் நவக்கிரகத் தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேட தலம் என்ற பெருமையும் உடையதாகும். பாதாள லோகத்திலிருந்து நாகராஜன் வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால் இக் கோயிலின் மூலவர் நாகநாதசுவாமி என்றழைக்கப்படுகின்றார். சிறந்த சிவபக்த கிரகமாகிய இராகு சில இடங்களில் மேனமை பெற்று விளங்கிய போதிலும் நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென் மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இவருக்கு உகந்த மலர் மந்தாரை. 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்க் அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. அதை எடுத்து பத்திரப் படுத்திக் கண்ணாடிப் பேழைக்குள் வைத்திருக்கின்றனர். இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக வைக்கப் பட்டிருக்கின்றது. ராகுவின் பிறப்பு வரலாறும் கிரகச்சிறப்பும் சுவை நிரம்பியவை. ராஜவம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுரகுலப் பெண்ணொருத்திக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். உண்மை அறிந்த மகாவிட்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க தலை வேறு உடல் வேறாகி விழுந்தான். ஆனாலும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க. இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார். 
அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் 
மூலவர்.நாகேஸ்வரர், நாகநாதர் 
உற்சவர் 
அம்மன்/தாயார்:பிறையணி வானுதலாள் (கிரிகுஜாம்பிகை தனி சன்னதி) 
தல விருட்சம்:செண்பகம் 
தீர்த்தம்:சூரியதீர்த்தம் 
ஆகமம்/பூஜை 
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன் 
புராண பெயர்:திருநாகேச்சுரம் 
ஊர்:திருநாகேஸ்வரம் 
மாவட்டம்:தஞ்சாவூர் 
மாநிலம்:தமிழ்நாடு 
பாடியவர்கள்: சுந்தரர்  
தேவாரப்பதிகம் 
அரைவிரி கோவணத்தோடு அரவார்த்தொரு நான்மறைநூல் உரைபெரு 
கவ்வுரைத்தன்று உகந்தருள் செய்ததென்னே வரைதரு மாமணியும் 
வரைச்சந்த கிலோடும் உந்தித் திரைபொரு தண்பழனத் திருநாகேச் சரத்தானே. -சுந்தரர்
                        தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 29 வது தலம்.  மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனிஉத்திரம், திருக்கார்த்திகை. கார்த்திகையில் பிரம்மோற்ஸவம், ராகு பெயர்ச்சி. ஞாயிறு தோறும் மாலை 4.30-6 மணி ராகு காலத்தில் ராகு பகவானுக்கு சிறப்பு பூஜை, பாலபிஷேகம் நடக்கும். இது தவிர பக்தர்கள் வேண்டுதல் பூஜைகளும் நடக்கிறது. 
இங்கு மூலவர் நாகேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும்போது , பால் நீல நிறத்தில் மாறுகிறது. இக்கோயிலில் ஒரே சன்னதியில் கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் காட்சி தருகின்றனர். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். காலை 6 மணி முதல் 12.45 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் , திருநாகேஸ்வரம் - 612 204. தஞ்சாவூர் மாவட்டம். 
பிரதான வாயில் கிழக்கு கோபுரம் - ஐந்து நிலைகளையுடையது. நிருத்த கணபதி, நந்தி, சூரியதீர்த்தம் உள்ளன. நூற்றுக்கால் மண்டபம் சூரியதீர்த்த்தின் கரையில் மழுப்பொறுத்த விநாயகர் சந்நிதி, இரண்டாம் பிரகாரத்தில் நாகராஜா உருவமுள்ளது. சேக்கிழார் திருப்பணி செய்த மண்டபமுள்ளது. சேக்கிழார் அவர் தாயார், தம்பி உருவங்கள் உள்ளன. இத்தலத்திற்கு மிகு அருகில் ஒப்பிலியப்பன் திருக்கோயில் உள்ளது. 
ராகு குட்டித்தகவல்: அதிதேவதை - பசு பிரத்யதி தேவதை - நாகம் நிறம் - கருமை வாகனம் - சிம்மம் தானியம் - உளுந்து மலர் - மந்தாரை ரத்தினம் - கோமேதகம் வஸ்திரம் - நீலம் நைவேத்யம் - உளுந்துப்பொடி சாதம் நட்புவீடு - மிதுனம், கன்னி, துலாம் பகைவீடு - கடகம், சிம்மம் ராசியில் தங்கும் காலம் - 1 1/2 வருடம் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். இத்தலம் ராகு தோஷ பரிகார தலமாக இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது. சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
முத்தேவியர் தரிசனம்: அம்பாள் பிறையணியம்பாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் தவிர, இக்கோயிலில் ஒரே சன்னதியில் கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் காட்சி தருகின்றனர். பிருங்கி முனிவருக்காக இங்கு முத்தேவியரும் காட்சி தந்தனர். இதன் அடிப்படையில் இச்சன்னதியில் முத்தேவியரும் காட்சி தருகின்றனர். மார்கழியில் இந்த மூன்று அம்பிகைக்கும் புனுகு சாத்துகின்றனர். அப்போது 45 நாட்கள் இந்த அம்பிகையரை தரிசிக்க முடியாது. இந்நாட்களில் அம்பிகையின் சன்னதி முன்புள்ள திரைச்சீலைக்கே பூஜை நடக்கிறது. தை கடைசி வெள்ளியன்று இவரது சன்னதி முன்மண்டபத்தில் அன்னம், காய்கறி, பழங்கள் போன்றவற்றை படைக்கின்றனர். இவளது சன்னதியில் பாலசாஸ்தா, சங்கநிதி மற்றும் பதுமநிதியும் இருக்கின்றனர். இங்கு முத்தேவியரை வணங்கி, இவர்களை வழிபட குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை. 
ராகு வரலாறு: ராகு பகவான், சுசீல முனிவரால் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டார். எனவே இத்தலத்து இறைவன் "நாகநாதர்' எனப் பெயர் பெற்றார். அன்று முதல் இது ராகு தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. சிறந்த சிவபக்த கிரகமாகிய ராகு, ராமேஸ்வரம் மற்றும் காளஹஸ்தி ஆகிய இடங்களில் மேன்மை பெற்று விளங்குகிறது. இருந்த போதிலும் இத்தலத்தில் ராகுபகவான் தனது மனைவிகளான சிம்ஹி, சித்ரலேகாவுடன் மங்கள ராகுவாக தம்மை வழிபடுவோருக்கு பல நலன்களையும் அருளும் தருவது சிறப்பு.  நாகத்திற்கு சிவன் அருள் செய்த தலமென்பதால், நவக்கிரகங்களில் ஒருவரான ராகு, இத்தலத்தில் சிவனை வழிபட தேவியருடன் வந்தார். தினமும் சிவதரிசனம் பெற வேண்டி இங்கேயே மனைவியருடன் தங்கி விட்டார். பிற்காலத்தில், ராகுவுக்கு இங்கு தனிச்சன்னதி எழுப்பப்பட்டது. இவருடன் நாகவல்லி, நாககன்னி என்ற மனைவியரையும் சேர்த்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் அனுக்கிரஹம் புரியும் "மங்கள ராகு'வாக அருளுவது விசேஷம். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். ராகுவை, இந்த கோலத்தில் காண்பது அபூர்வம். கிரகங்களில் ராகு பகவான் யோககாரகனாவார். இவரை வணங்கிட யோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், கடன், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை அருள்வார். 
தோஷ பரிகாரம்: இத்தலம் ராகு தோஷ பரிகார தலமாக இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது. பாலபிஷேகத்தின்போது, பால் நீல நிறத்தில் மாறுவது கலியுகத்திலும் நாம் காணும் அதிசயம். தினமும் காலை 9.30, 11.30, மாலை 5.30 மணி மற்றும் ராகு காலங்களில் இவருக்கு பாலபிஷேகம் செய்யப்படுகிறது. ராகு பகவான், இத்தலத்தில் சிவராத்திரியின் போது சிவனை வழிபட்டு அருள்பெற்றாராம். இதன் அடிப்படையில் தற்போதும் சிவராத்திரியின் போது, இரண்டு கால பூஜையை ராகுவே செய்வதாக ஐதீகம். சிவராத்திரி மற்றும் ராகு பெயர்ச்சியின்போது மட்டும் ராகு பகவான் உற்சவர் வீதியுலா செல்கிறார். 
ராகு பெயர்ச்சி விசேஷ பூஜை: ராகுபெயர்ச்சியின் போது  பரிகார பூஜை செய்து கொள்ளலாம். 
சிறப்பம்சம்: கிரிகுஜாம்பிகை சன்னதியில் விநாயகரும், அருகில் ராகுபகவான், "யோகராகு' என்ற பெயரிலும் இருக்கின்றனர். எனவே, இவர் இப்பெயரில் அழைக்கப்படுகிறார். கேதுவிற்கு அதிபதி விநாயகர். இந்த விநாயகரையும், யோக ராகுவையும் வணங்கினால் ராகு,கேது தோஷம் நிவர்த்தியாவதாக நம்பிக்கை. 
தல வரலாறு:சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்தார் பிருங்கி முனிவர். இதனால் கோபம் கொண்ட பார்வதி சிவனிடம் அர்த்தநாரீஸ்வர வடிவம் வேண்டி கடும் தவம் புரிந்தாள். பார்வதியின் தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், அவளுக்கு தன் உடலில் பாதி கொடுத்து உமையொருவரானார். அர்த்தநாரீஸ்வர வடிவம் உலகின் பல பகுதிகளில் அமைய வேண்டும் என வேண்டினாள். அதன்படி இத்தலத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவில் சிவ பார்வதி காட்சியளிக்கின்றனர். மூலவர் நாகேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்மன் பிறையணி வானுதலாள். சுசீலர் என்ற முனிவரின் மகன் சுகர்மன். ஒருசமயம் அவன் வனத்தின் வழியே சென்று கொண்டிருந்தபோது, நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு தீண்டியது. இதையறிந்த முனிவர் கோபம் கொண்டார். தன் மகனை தீண்டிய தக்ககன் மானிடனாக பிறக்கும்படி சபித்துவிட்டார். சாபவிமோசனம் பெற, தக்ககன் காசிப முனிவரிடம் ஆலோசனை கேட்டான். "பூலோகத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவபூஜை செய்து வழிபட்டால் சாபம் நீங்கும்' என்றார் அவர். அதன்படி பூமிக்கு வந்த தக்ககன், சிவலிங்க பூஜை செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். இவரே இத்தலத்தில் அருளுகிறார். நாகமாகிய தக்ககனுக்கு அருளியதால் இவர், "நாகநாதர்' என பெயர் பெற்றார். 
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும்போது , பால் நீல நிறத்தில் மாறுகிறது.  
நிறம்-கருப்பு 
மலர்-மந்தாரை 
வாகனம்-ஆடு 
ஆட்சி-இல்லை 
உச்சம்-விருச்சகம் 
நீசம்-ரிஷபம் 
நட்சத்திரங்கள்-திருவாதிரை,சுவாதி,சதயம் 
பால்-பெண் 
கோசார காலம்-1 1/2 வருடம் 
நட்பு-சனி,சுக்கிரன் 
பகை-சூரியன்,சந்திரன்,செவ்வாய் 
சமம்-புதன்,குரு 
உலோகம்-கருங்கல் 
ராகு 1 ஆம் வீட்டில்  இருந்தால் உடல் நிலை நன்றாக இருக்காது. காம உணர்வு அதிகமாக இருக்கும். கீழ்தரமான எண்ணங்கள் இருக்கும். துணைவி மூலம் பிரச்சினை இருக்கும். துணைவியார் உடல்நிலை பாதிக்கப்படும். முகம் ஒழுங்காக இருக்காது. பற்கள் இடைவெளி விட்டு இருக்கும். மனநோய் தாக்கி அவதிப்படலாம். 
ராகு 2 ஆம் வீட்டில்  இருந்தால் பொய் பேச்சு பேசுவார். தனபாக்கியம் குறையும். புத்திர தோஷத்தை ஏற்படுத்துவார். குடும்ப உறுப்பினர்களில் பெண்கள் அதிகமாக இருக்கலாம். குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருக்கும். உணவு பழக்க விஷயத்தில் முறையான வகையில் பின்பற்ற வேண்டும் இல்லையென்றால் உணவு விஷமாகும். விவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். 
ராகு 3 ஆம் வீட்டில்  இருந்தால் சிறந்த தைரியசாலியாக இருப்பார்கள். இளைய சகோதர சகோதரிகள் இருக்கமாட்டார்கள். அப்படியே இருந்தால் சண்டை சச்சரவு இருக்கும். நல்ல தீர்க ஆயுள் இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டு வெற்றி பெறுவார். வெளிதொடர்புகள் நன்றாக இருக்கும். 
ராகு 4 ஆம் வீட்டில்  இருந்தால் தாய் நலம் கெடும். வீட்டிற்க்குள் அடிக்கடி பாம்பு வரும். வீட்டில் அமைதி இருக்காது. குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. தாய்வழி உறவினர்கள் பகை இருக்கும். குடும்ப தேவைக்கான செலவு அதிகரிக்கும். வாகன விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். 
ராகு 5 ஆம் வீட்டில்  இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். பெண்களாக இருந்தால் கர்ப்பப் பையில் கிருமி இருக்கும். புத்தி கூர்மை குறைவாக இருக்கும். குழந்தை பாக்கியம் இருந்தாலும் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் நல்ல உறவு இருக்காது.ஐந்தாம் வீடு லெட்சுமி காரமான வீடு சில நேரங்களில் திடீர் பணவரவுகள் வரும். தன்னலம் கருதாமல் இருப்பார்கள். 
ராகு 6 ஆம் வீட்டில்  இருந்தால் எதிரிகளை வெல்வார் தந்திர வழிகளில் வெற்றிக்கொள்வார். இளம் வயதில் வறுமையில் வாடுவார். கடன் வாங்குவார். நோய் தரும் இடமாக இருப்பதால் உடம்பில் புண் ஏற்படும். உடம்பு வலி ஏற்படும். தாய்வழி உறவினர் பகை ஏற்படும். தொழில் வளர்ச்சியில் புதிய யுக்தி பயன்படுத்தி முன்னேற்றமும் தாராள பணவரவும் இருக்கும். 
ராகு 7 ஆம் வீட்டில்  இருந்தால் களத்திரதோஷத்தை ஏற்படுத்தும். பல பெண்கள் தொடர்பு ஏற்படும் சிற்றின்பத்தில் ஈடுபாடு அதிகம் ஏற்படும் துணைவரின் நலம் கெடும். துணைவர்களால் திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்படும். இவர்களிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் இவரை ஏமாற்றுவார்கள். திருமணம் நடைபெறாதவர்களாக இருந்தால் திருமணத்தடை ஏற்படுத்தும் திருமணம் நடைபெற்றவர்களுக்கு வீண் குழப்பங்களை ஏற்படுத்துவார். அதனால் பிரிவினை ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் இல்லையென்றால் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவார்கள். 
ராகு 8 ஆம் வீட்டில்  இருந்தால் உடம்பில் நோய் ஏற்படுத்துவார். நண்பர்களிடம் தேவையற்ற விவாதம் தவிர்கவும். செல்வ நிலை ஒரே மாதிரியாக இருக்காது. துணைவரிடம் சண்டை சச்சரவு ஏற்படும். விபத்து ஏற்படும். தகுதிக்கு மீறிய பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் வாக்குறுதி தருவது கூடாது. பணவசதி அவ்வளவு சிறப்பாக இருக்காது. இறக்கும் தறுவாயில் படுத்த படுக்கையாக இறக்க நேரிடும். உடலில் புண் ஏற்படும். பாதுகாப்பு குறைவான இடத்தில் தங்காதீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. 
ராகு 9 ஆம் வீட்டில்  இருந்தால் கடுமையான பித்ரு தோஷம் ஏற்படும். எடுத்த அனைத்து காரியங்களும் தடை ஏற்படும். பெரியவர்களின் சாபங்கள் இருக்கும். தந்தை நலம் பாதிக்கப்படும். உயர்கல்வி படிக்க இயலாது. ஆன்மீக ரீதியில் புண்ணிய காரியங்கள் செய்வார்கள். சொத்துக்கள் வாங்கும் போது கவனம் தேவை. 
ராகு 10 ஆம் வீட்டில்  இருந்தால் நல்ல தொழில் வாய்ப்பு அமையும். வருமானம் நன்றாக இருக்கும். அன்னியர் மூலம் தொழில் அமையும். ஆன்மீக விஷயத்தில் நாட்டம் அதிகமாகும். தொழில் சார்ந்த வகையில் சந்திக்கும் குறுக்கீடுகளைச் சரி செய்ய கடின முயற்சி தேவைப்படும். கலைதுறையில் நுழைந்து சாதிக்கலாம். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். 
ராகு 11 ஆம் வீட்டில்  இருந்தால் நல்ல செல்வ வளம் வரும். வருமானத்தில் குறைவு இருக்காது. மூத்த சகோதர சகோதரிகளிடம் பகை இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். ஆன்மீக பயணம் செல்ல நேரிடலாம். பொருளாதாரத்தில் நல்ல உயர்வைத் தருவார். புதிய புதிய தொழில்கள் ஆரம்பித்துக்கொண்டே இருப்பார்கள். 
ராகு 12 ஆம் வீட்டில்  இருந்தால் செலவு அதிகமாக இருக்கும். கடுமையாக உழைத்தாலும் வருமானம் அதிகமாக இருக்காது. முழுமையான நித்திரை சுகம் இருக்காது. புத்திர தோஷத்தை ஏற்படுத்துவார். பிள்ளைகளால் செலவு ஏற்படும். பாதங்களில் பிரச்சினை ஏற்படும். எதிர்பாராத செலவுகள் வரலாம். வெளி நாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். 
ராகு (நாகதோஷத்திலிருந்து நிவிர்த்தி அடைய) 
ஓம் சிரரூபாய வித்மஹே 
அமிருதேசாய தீமஹி 
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத் 
ஓம் நகத்வஜாய வித்மஹே 
பத்மஹஸ்தாய தீமஹி 
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத் 
ஓம் நீலவர்ணாய வித்மஹே 
சிம்ஹிகேசாய தீமஹி 
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத் 
ஓம் பைடினசாய வித்மஹே 
சர்மதராய தீமஹி 
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
கேது.
Picture
                             9. கேது      கேது சூரியனை ஒரு முறை சுற்றிவர 18 1/2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்.இராகுக்கு போல் கேதுவுக்கும் சொந்த வீடு கிடையாது. தான் அமர்ந்த வீட்டையே சொந்த வீடாக எடுத்துக்கொள்ளும். ராகு உள்ள பண்புகள் அனைத்தும் கேதுவுக்கும் பொருந்தும். பாட்டியார்,மாந்தரீகம்,ஞானம்,மோட்சம்.,விநாயகர் வழிபாடு,விரக்தியடைதல்,விபசாரம் செய்தல்,தற்கொலை செய்யும் எண்ணம்,புண்ணிய ஸ்தல யாத்திரை.சிறைப்படல்,ஞானிகள் தரிசனம் ஆகியவற்றிக்கு கேது காரணம் ஆகிறார். இவருக்கு ஞானகாரகன் என்று பெயர். வேதாந்த அறிவு நுட்பங்களுக்கும்,  மோட்சத்திற்க்கும், எந்த ஓரு பிரச்சனையிலிருந்து விமோச்சனம் பெறுவதற்க்கும்  காரகத்துவம் உள்ளது கேது. எளிமை, கடுமை இரண்டுக்கும் உடையதும், உலக பந்தங்களில் இருந்து விடுபட வைப்பதும்  கேதுவே. வியாதியில் இருந்து நிவாரணம் தருவதும், பகைவரை முறியடிக்க செய்வதும் கேது.  கோபத்தில் நடைபெறும் தவறுகளுக்கும் கேதுவே காரணம். 
                                          கேதுவைப்போல கெடுப்பவன் இல்லை  என்பது ஜோதிட பழமொழி. விபத்துகளையும். தாகாத சகவாசத்தையும் வழங்குவதும் கேதுவே.ரிஷபத்தில் நீசம்,  விருச்சிகத்தில் உச்சம். பஞ்ச பூதங்களில் ஜலம். கேது ஞானமாரக்கத்தில் ஆன்மீகத்தை  வழங்குபவர். ஞான காரகன் என்ற புகழைப் பெறுபவன் கேது. மோட்ச காரகனும் இவனே. மோகினியால் துண்டிக்கப்பட்ட ராகுவின் உடம்பே கேது. விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்ததால் பாம்பு உடலைப் பெற்றான். விஞ்ஞானம், மெய்ஞானம் ஆகிய அனைத்துத் துறைகளையும் தன் வசத்தில் வைத்திருப்பவன். நீச பாஷைகளில் தேர்ச்சியைத் தருவான். தாய் வழிப் பாட்டனுக்கு காரகன். கீழ்ப்பெரும்பள்ளம் கேதுவிற்கு உரிய தலம். கேது தோஷமுள்ளவர்கள் கீழ்ப்பெரும்பள்ளம் சென்று கேது பகவானை வழிபடலாம். செவ்வரளி மாலை அணிவித்து கொள்ளில் செய்த கொழுக்கட்டை மோதகம் நிவேதனம் செய்ய வேண்டும். கேது பகவானுக்குரிய தோத்திரம் பாடி வழிபட்டு வர எல்லா நலன்களும் பெறலாம். 
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் 
மூலவர்:நாகநாதர்
உற்சவர்:சோமாஸ்கந்தர் 
அம்மன்/தாயார்:சவுந்தர்யநாயகி 
தல விருட்சம்:மூங்கில் 
தீர்த்தம்:நாகதீர்த்தம் 
ஆகமம்/பூஜை:காமிகம் 
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன் 
புராண பெயர் ஊர்:கீழப்பெரும்பள்ளம் 
மாவட்டம்:நாகப்பட்டினம் 
மாநிலம்:தமிழ்நாடு 
பாடியவர்கள்: 
                                           சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், பங்குனியில் வாசுகி உற்சவம். நவக்கிரகங்களில் இத்தலம் கேதுவுக்கு உரியது. காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், (கேது தலம்), கீழ்ப்பெரும்பள்ளம் - 609 105. தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். இத்தலவிநாயகர் அனுக்கிரக விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் கேதுபகவான் தனிசன்னதியில் மேற்கு நோக்கி இருக்கிறார். பாம்பு தலையுடனும், மனித உடலுடனும் உள்ள இவர், சிம்ம பீடத்தில் இரு கை கூப்பி சிவசன்னதியை நோக்கி வணங்கிய கோலத்தில் இருக்கிறார். ஞானகாரகனான இவர் இங்கு அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தருகிறார். இவரைக் கண்டு பயப்படத் தேவையில்லை. தன்னால் பாதிக்கப்படும் ராசியினருக்கு இவர் நன்மையே செய்வார். படிப்பில் முன்னேற, குடும்பவிருத்தி பெற இவரிடம் வேண்டிக்கொள்ளலாம். ஜாதக ரீதியாக நாகதோஷம் உள்ளவர்கள் முதலில் நாகநாதரையும், பின் கேதுவையும் வழிபட வேண்டும். கேதுவிற்குரிய செவ்வரளி மலர் வைத்து, கொள்ளு சாத நைவேத்யம் படைத்து, ஏழு தீபம் ஏற்றி வணங்குவது விசேஷம். நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனை மற்றும் பயம் நீங்க, தொழில், வியாபாரம் சிறக்க, தம்பதியர் ஒற்றுமையுடன் இருக்க, ஆயுள் அதிகரிக்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க, தலைமுறை சிறக்க நாகநாதரையும், கேதுபகவானையும் வழிபடலாம். ஜாதகத்தில் கேது தசாபுத்தி நடப்பவர்கள், ஜென்மநட்சத்திரத்தில் பாலபிஷேகம் செய்து வழிபடலாம். கேது பகவானுக்கு கொள்ளு சாத நைவேத்யம் படைத்து, பலவர்ண வஸ்திரம் சாத்தி வழிபடுகிறார்கள்.  
தலபெருமை: எமகண்டகால வழிபாடு: இக்கோயிலில் கேது பகவானுக்கு ராகுகாலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கிறது. அப்போது, 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும், கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யமாக படைத்தும், பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபடுகிறார்கள். கொள்ளு சாத பிரசாதத்தை இங்கேயே விநியோகித்துவிட வேண்டும். வீட்டிற்கு எடுத்துச்செல்லக்கூடாது. இதை கோயிலிலேயே செய்து தருகிறார்கள். இதற்கு ரூ.75 கட்டணம். சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் இவரை வழிபடுவது விசேஷம். அபிஷேகத்திற்கு ரூ.450, தனிப்பட்ட முறையில் ஹோமம் நடத்துவதற்கு ரூ.3,500 கட்டணமாக வசூலிக்கின்றனர். தொழில், வியாபாரம் சிறக்கவும், வழக்கு, தம்பதியர் பிரச்னை, விபத்து, மரணபயம், நரம்பு, வாயு தொடர்பான பிரச்னைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக்கொள்ளலாம். பங்குனியில் வாசுகி உற்சவம் நடக்கிறது. விழாவின் மூன்றாம் நாளில் கேதுவிற்கு, சிவன் காட்சி தந்த நிகழ்ச்சி நடக்கும். வருடத்தில் இவ்விழாவின்போதும், கேது பெயர்ச்சியின்போது மட்டுமே, கேது வீதியுலா செல்வார். 
விசேஷ ஹோமம்: ராகு கேது பெயர்ச்சியன்று விசேஷ ஹோமம் நடக்கிறது. அர்ச்சகர்களே இதை நடத்த உள்ளனர். இதில் பங்கேற்க கட்டணம் கிடையாது. கேதுவிற்கு உரிய எண் 7. எனவே, 16 வித பூஜை செய்து, 7 லட்சம் ஜபமந்திரம் சொல்லி, பின்பு கொள்ளு தானியம், கொள்ளினால் செய்யப்பட்ட பாயசம், சூர்ணம், வடை, சாதம், பொங்கல் மற்றும் கொள் உருண்டை என 7 விதமான நைவேத்யங்களை ஹோமத்தில் இடுகின்றனர். பக்தர்கள் 16 விதமான தானங்களை அந்தணர்களுக்கு செய்வதன் மூலம் பலனடையலாம். அன்று 7 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானமும் நடக்கிறது. இதற்குரிய பொருட்களையும் பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் முன்னதாகவே கொடுக்கலாம். 
இரட்டை சூரியன்: கேது இங்கு பிரதான மூர்த்தி என்பதால் நவக்கிரக சன்னதி இல்லை. கேது சன்னதிக்கு அருகில் இரண்டு சூரியன் சிலைகளும், சனீஸ்வரர் சிலையும் உள்ளன. உத்ராயண புண்ணிய காலத்தில் (தை- ஆனி) ஒரு சூரியனுக்கும், தெட்சிணாயண புண்ணிய காலத்தில் (ஆடி- மார்கழி) மற்றொரு சூரியனுக்கும் விசேஷ பூஜை நடக்கிறது.   
தல வரலாறு: தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற பாற்கடலை கடைந்தபோது வாசுகி என்ற நாகத்தை கயிறாக பயன்படுத்தினர். தொடர்ந்து பாற்கடலை கடைந்ததால் வாசுகி பலவீனமடைந்தது. ஒருகட்டத்தில் களைப்பால் விஷத்தை உமிழ்ந்தது. பயந்து போன தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவர் விஷத்தை விழுங்கி, தேவர்களை காப்பாற்றினார். தனது விஷத்தை, சிவன் விழுங்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக வாசுகி வருந்தியது. சிவஅபச்சாரம் செய்ததற்கு பிராயச்சித்தமாக தவமிருந்தது. வாசுகிக்கு காட்சி தந்த சிவன், பாவ விமோசனம் கொடுத்ததோடு, அதன் தியாக உணர்வை பாராட்டினார். அப்போது வாசுகி, தனக்கு அருள் செய்த கோலத்தில், தனக்கு காட்சி கொடுத்த இடத்தில் எழுந்தருள வேண்டும் என்று வேண்டியது. அதன் வேண்டுதலை ஏற்ற சிவன், நாகத்தின் பெயரைத் தாங்கி, "நாகநாதர்' என்ற பெயருடன் இத்தலத்தில் அமர்ந்தார். 
நிறம்-சிவப்பு மலர்-செவ்வல்லி 
தானியம்-கொள் 
திசை-வடமேற்கு 
காரகம்-ஞானம்,மோட்சம் 
உச்சம்-விருச்சகம் 
நட்சத்திரங்கள்-அசுவனி,மகம்,முலம் 
பால்-அலி 
நட்பு-சனி,சுக்கிரன் 
பகை-சூரியன்,சந்திரன்,செவ்வாய் 
சமம்-புதன்,குரு 
திசைகாலம்-7 ஆண்டுகள் 
கோசரகாலம்-1 1/2 வருடம் 
 சித்திரகுப்தன் இவருக்கு அதி தேவதை, 
பிரம்மன் பிரத்யதி தேவதை. 
வடமேற்கு கேதுவிற்கு உரிய திசை. 
வைடூர்யம் கேதுவிற்கு உகந்த ரத்தினம். 
கேது 1 ஆம் வீட்டில்  இருந்தால் எதிரிகளால் பிரச்சினை உண்டாகும். தொழில் திறமை இருக்கும் உடம்பில் பிரச்சினை உருவாகும். சனியின் வீடுகளான மகரம் கும்பம் வீடுகளில் கேது தங்கியிருந்தால் இந்த நாட்டையை ஆளலாம். செவ்வாய் வீடான விருச்சகத்தில் தங்கி இருந்தாலும் அந்த யோகம் கிடைக்கும் பிற வீடுகளில் இருந்தால் அந்தளவுக்கு இருக்காது கஷ்டத்தில் தான் வாழ்க்கை வாழவேண்டிருக்கும். நான் பார்த்த வரையில் சனியின் வீடுகளில் அல்லது சனியுடன் கேது இருந்தால் அந்த ஜாதகன் பணக்காரகனாகத்தான் இருப்பார். 
கேது 2 ஆம் வீட்டில்  இருந்தால் தன பிரச்சினை உண்டாகும். குடும்பத்தில் பிரச்சினை உண்டாகும். படிப்பில் அந்தளவுக்கு விருப்பம் இருக்காது. குடும்பத்தில் செய்வினை கோளாறுகள் இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறைந்து இருக்கும். திருமணம் தள்ளிக்கொண்டே போகும். திருமணம் முடிந்தவுடன் குழந்தை பேறும் தடை ஏற்படும். 
கேது 3 ஆம் வீட்டில்  இருந்தால் தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருக்கமாட்டார்கள் இவர்களால் பிரச்சினை உருவாகிக்கொண்டே இருக்கும். இளைய சகோதர சகோதரிகள் இருக்கமாட்டார்கள். அப்படி இருந்தாலும் பிரச்சினை தான். கல்வியில் விருப்பம் இருக்காது. காமத்தின் மீது தீவிர ஈடுபாடு இருக்கும். நல்ல துணிவுடன் இருப்பார் எந்த காரியத்திலும் தடைகள் இருந்து கொண்டே இருக்கும். பரிகாரம் ராமேஸ்வரம் தான். 
கேது 4 ஆம் வீட்டில்  இருந்தால் தாய் நலம் கிடைக்கும். தாயாரின் வழியில் பிரச்சினை தான். தாயாரின் உடன் பிறந்தவர்களில் யாராவது ஒருவர் திருமண வாழ்வில் பிரச்சினையில் இருப்பார்கள். தீய எண்ணங்களில் மனது செல்லும். பிறரின் ஆலோசனைகளை ஏற்க மாட்டார்கள். வாகனங்கள் வாங்குவதற்க்கு தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வானங்களால் பிரச்சினை உருவாகிக்கொண்டே இருக்கும். வீடு கோவிலுக்கு அருகில் இருக்கும் அதுவும் பிள்ளையார் கோவிலாக இருக்குகூடும். 
கேது 5 ஆம் வீட்டில்  இருந்தால் கெட்ட குணம் இருக்கும். புத்தி கூர்மை இருக்காது. வயிற்று வலி ஏற்படும். மனதில் கவலை இருந்துக்கொண்டே இருக்கும். கடுமையான புத்திர தோஷத்தை ஏற்படுத்தும். அப்படியே குழந்தைகள் இருந்தாலும் அந்த குழந்தைகளால் இவர்களுக்கு ஒன்றும் நன்மை நடைபெறாது. விநாயகரை வழிபாட்டு மூலம் இன்பம் காணலாம். 
கேது 6 ஆம் வீட்டில்  இருந்தால் பகைவர்கள் இருக்கமாட்டார்கள். இளமை காலத்தில் பிரச்சினை இருக்கும். உறவினர் மூலம் நல்ல மரியாதை இருக்கும். நல்ல சுகபோகமான வாழ்க்கை வாழலாம் கடக ராசியாக இருந்தால் மதுபானம் மீது கடுமையான ஈடுபாடு இருக்கும். ஜலதோஷம் அடிக்கடி ஏற்படும். தண்ணீரில் கண்டம் ஏற்படலாம் எச்சரிகை தேவை. 
கேது 7 ஆம் வீட்டில்  இருந்தால் களத்திரதோஷம் ஏற்படும். திருமணத்தில் சண்டை சச்சரவு இருக்கும். இளமை கால வாழ்க்கை நன்றாக இருக்காது. மனைவி அல்லாத பெண்களுடன் தொடர்பு ஏற்படும். திருமண வாழ்க்கையை நினைத்து மனக்கவலை அடையும். உடம்பில் நோய் ஏற்படும். 
கேது 8 ஆம் வீட்டில்  இருந்தால் திருமண வாழ்வில் பிரச்சினை. ஆயுள் பலம் குறையும். உடம்பில் நோய் தோன்றி புண் வரும். முறை தவறி நடக்ககூடும். தற்கொலை எண்ணம் தோன்றும். பொதுவாக கேது இந்த வீட்டில் இருந்தால் நோய்களை தருவார். 
கேது 9 ஆம் வீட்டில்  இருந்தால் பித்ரு தோஷம் வாழ்க்கையில் அனைத்து விஷயங்களிலும் தடைகள் ஏற்படும். தந்தையுடன் எல்லா நேரங்களிலும் சண்டை தான் போடுவார். தெய்வ பக்தி இருக்காது. நண்பர்கள் உதவி செய்வார்கள். மனநிலை ஒரே மாதிரியாக இருக்காது. பிற மதத்தவர் உதவி செய்வார்கள். 
கேது 10 ஆம் வீட்டில்  இருந்தால் கலைகளில் ஈடுபாட்டுடன் இருந்து கலைஞராக இருப்பார். பிறர் மனதை நோகடிக்கமாட்டார். இரக்கமனம் இருக்கும். நல்ல தன்னம்பிக்கையுடன் தொழில் செய்து வெற்றிக்கொள்வார். மதங்களில் ஈடுபாட்டுடன் இருப்பார். தந்தை நலமுடன் இருக்கமுடியாது . தந்தை பணத்திற்க்காக கஷ்டபடுவார். 
கேது 11 ஆம் வீட்டில்  இருந்தால் சொத்துக்கள் சேரும் செல்வநிலையில் நன்றாக வாழ்வார் நண்பர்களின் உதவி இருக்கும். சுகபோகங்களுக்கு குறை இருக்காது. நல்ல பணவரவு இருக்கும். சமுதாயத்தில் நல்ல மதிப்புடனும் பெயருடனும் இருப்பார்கள். மூத்த சகோதர சகோதரிகளிடம் சண்டை இருக்கும். 
கேது 12 ஆம் வீட்டில்  இருந்தால் இதுதான் ஜாதகரின் கடைசி பிறவியாக இருக்ககூடும். புண்ணிய தலங்களுக்க அடிக்கடி செல்வார். பணசேமிப்பு இருக்காது அனைத்தும் புண்ணிய காரியங்களுக்கு செலவாகும். இல்லற சுகபோகங்களில் ஈடுபாடு இருக்காது. பாதங்களில் நோய் ஏற்படக்கூடும். நல்ல திறமையாக வாதங்களில் ஈடுபட்டு வெற்றிக்கொள்வார்.
கேது (துஷ்ட சக்திகளை விரட்டிட) 
ஓம் அம்வத்வஜாய வித்மஹே 
சூலஹஸ்தாய தீமஹி 
தன்னோ கேது ப்ரசோதயாத் 
ஓம் கேதுக்ரஹாய வித்மஹே 
மஹாவக்த்ராய தீமஹி 
தன்னோ கேது ப்ரசோதயாத் 
ஓம் விக்ருத்தானநாய வித்மஹே 
ஜேமிநிஜாய தீமஹி 
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத் 
ஓம் தமோக்ரஹாய வித்மஹே 
த்வஜஸ்திதாய தீமஹி 
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத் 
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே 
சூலஹஸ்தாய தீமஹி 
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்

No comments:

Post a Comment