வணக்கம் நண்பர்களே.. முதலில் கைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. எண்ணத்தை மேம்படுத்தும் பாடல்கள் பல இருந்தாலும் சிலவற்றைத் தொகுத்துள்ளேன்.. இந்தப் பதிவு பல அன்பர்களின் வேண்டுகோள்..!
ஆமாம் நண்பர்களே...! இந்தப் பாடல்களை இன்றைய நிலவரப்படி அதிகம் பார்க்கப்பட்ட பதிவான எண்ணங்களை மேம்படுத்தும் தாரக மந்திரம் எது ? - இந்தப் பதிவு எழுதும் போது, மனதில் பாடல் வரிகள் தோன்றின. அவற்றை மிக்ஸ் செய்து வெளியிடலாம் என்று தோன்றிய போது தான் DD Mix (Dindigul Dhanabalan Mix) ஆரம்பமானது. இன்பமோ / துன்பமோ, வெற்றியோ / தோல்வியோ - நமக்கு வரும் போது நம் மனதில் சில பாடல் வரிகள் ஓடிக்கொண்டிருக்கும். அப்படி கீழே உள்ள பாடல்களில், எந்தப் பாடல் பிடித்துள்ளது என்பதை நீங்க தான் சொல்ல வேண்டும் ...!
இந்தப் பாடல்களை சில பேர் கேட்டு இருப்பீர்கள்.. சில நண்பர்கள், "கேட்கவில்லை, பிளேயர் தெரியவில்லை, லோட் ஆக நேரம் ஆகிறது, பாடலின் திரைப்படம் தெரியவில்லை, அதனால் பணத்தைப் பற்றி எழுதிய மாயா... மாயா... எல்லாம் சாயா... சாயா... பதிவைப் போல் வரிகளாக எழுதுங்கள்" என்று சொன்னதால் இதோ உங்களுக்காக..... (நீலக்கலரில்-அருமை வரிகள், சிவப்புக்கலரில்-என் கருத்துக்கள்..)
01. படம் : மன்னாதி மன்னன், முதல் வரி : அச்சம் என்பது மடமையடா..
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்..? மாபெரும் வீரர், மானம் காப்போர், சரித்திரம் தனிலே நிற்கின்றார்..!
"துணிந்தவனுக்கு ஒரு நாள் சாவு ! கோழைக்கு தினம் தினம் சாவு !"
________________________________________
02. படம் : ஆட்டோகிராப், முதல் வரி : ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..
உள்ளம் என்பது எப்போதும், உடைந்து போகக்கூடாது.. என்ன இந்த வாழ்க்கை என்ற, எண்ணம் தோன்றக்கூடாது.. எந்த மனிதன் நெஞ்சுக்குள், காயமில்லை சொல்லுங்கள்.. காலப் போக்கில் காயமெல்லாம், மறைந்து போகும் மாயங்கள்.. உளி தாங்கும் கற்கள் தானே, மண் மீது சிலையாகும்.. வலி தாங்கும் உள்ளம் தானே, நிலையான சுகம் காணும்.. யாருக்கில்லைப் போராட்டம்..? கண்ணில் என்ன நீரோட்டம்..? ஒரு கனவு கண்டால், அதை தினம் முயன்றால், ஒரு நாளில் நிஜமாகும்..! மனமே ஓ மனமே நீ மாறிவிடு.. மலையோ.. அது பனியோ.. நீ மோதிவிடு..!
"வாழ்க்கையே போர்க்களம்.. வாழ்ந்து தான் பார்க்கணும்.. போர்க்களம் மாறலாம்.. போர்கள் தான் மாறுமா..?"
________________________________________
03. படமும் முதல் வரியும் : தர்மம் தலை காக்கும்
அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம், ஆனந்த பூந்தோப்பு.. வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை - இது நான்குமறை தீர்ப்பு..
"தர்மம் - தக்க சமயத்தில் உயிர் காக்கும்.. கூட இருந்தே குழி பறிச்சாலும், கொடுத்தது காத்து நிற்கும் !"
________________________________________
04. படம் : மறுபடியும், முதல் வரி : நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்..
மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்.. மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்.. இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்.. எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்.. விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு.. நகங்களை நாமும் நறுக்குவதுண்டு.. இதிலென்ன பாவம்.. எதற்கிந்த சோகம்.. கிளியே..
"உலகத்தில் திருடர்கள் சரிபாதி.. ஊமைகள் குருடர்கள் அதில் பாதி.. கலகத்தில் பிறப்பது தான் நீதி-மனம் கலங்காதே மதி மயங்காதே..என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே.. இருட்டினில் நீதி மறையட்டுமே.. தன்னாலே வெளிவரும் தயங்காதே.. ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே.." (படம் : பணத் தோட்டம்)
________________________________________
05. படமும் முதல் வரியும் : மனித மனம் ஒரு குரங்கு
அடித்தாலும் அணைத்தாலும், வழிக்கு வராது.. அப்படியே விட்டு விட்டால், முடிவும் இராது.. நயத்தாலும் பயத்தாலும், அடங்கி விடாது.. நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது..
"அலை பாயும் மனதை எப்படிங்க அடக்குவது ..?"
________________________________________
06. படமும் முதல் வரியும் : கவலை இல்லாத மனிதன்
போவதை கண்டு கலங்காமல், வருவதை கண்டு மயங்காமல், மெய் தளராமல், கை நடுங்காமல், உண்மையும் பொய்யையும் உணர்ந்தவனே.. உலகத்தை அறிந்தவன், துணிந்தவன் அவனே - கவலை இல்லாத மனிதன்..!
"நேற்று என்பதும் கையில் இல்லை.. நாளை என்பதும் பையில் இல்லை.. இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு.. தோழா.." (படம் : உன்னாலே.. உன்னாலே..)
________________________________________
07. படம் : படித்தால் மட்டும் போதுமா ?, முதல் வரி : நல்லவன்.. எனக்கு நானே நல்லவன்.. சொல்லிலும் செயலிலும் நல்லவன்..!
சிட்டு போல வானில் துள்ளிச் செல்ல வேண்டும்.. மண்ணில் கீரிப்பிள்ளை போலே ஊர்ந்து செல்ல வேண்டும்.. தொல்லை என்ற பாம்பை கவ்விக் கொள்ள வேண்டும். தூய உள்ளம் வேண்டும்.. என்றும் சேவை செய்ய வேண்டும்..
"படத்தின் பெயரும், பாட்டின் முதல் வரியே போதுமே.."
________________________________________
08. படம் : நாடோடி, முதல் வரி : கடவுள் செய்த பாவம்
நடப்பது யாவும் விதிப்படி என்றால், வேதனை எப்படி தீரும்..? உடைப்பதை உடைத்து, வளர்ப்பதை வளர்த்தால் உலகம் உருப்படியாகும்..
"அப்படி சொல்லுங்க தலைவா ! இங்கு காணும் துன்பம் யாவும் என்ன மனமோ, என்ன குணமோ..? இந்த மனிதன் கொண்ட கோலம்.."
________________________________________
09. படம் : சாந்தி, முதல் வரி : வாழ்ந்து பார்க்க வேண்டும்.. அறிவில் மனிதனாக வேண்டும்.. வாசல் தேடி உலகம்.. உன்னை வாழ்த்திப் பாட வேண்டும்..!
நாடு காக்க வேண்டும்.. முடிந்தால் நன்மை செய்ய வேண்டும்.. கேடு செய்யும் மனதை கண்டால், கிள்ளி வீச வேண்டும்.. தமிழும் வாழ வேண்டும்.. மனிதன் தரமும் வாழ வேண்டும்.. அமைதி என்றும் வேண்டும்.. ஆசை அளவு காண வேண்டும்..
"ஆசை - அது தான் எந்த அளவு என்று தெரியலை.."
________________________________________
10. படம் : அழகிய தமிழ் மகன், முதல் வரி : முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா.. உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா..
நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே.. நீ இன்றை இழக்காதே நீ இன்றை இழக்காதே.. இன்றை விதைத்தால் நாளை முளைக்கும்.. அதை நீ மறக்காதே நீ அதை நீ மறக்காதே.. நீ அதை நீ மறக்காதே.. நேற்று நடந்த காயத்தை எண்ணி.. நியாயத்தை விடலாமா..? நியாயம் காயம் அவனே அறிவான்.. அவனிடம் அதனை விட்டுச் செல்.. ஹே தோழா.. முன்னால் வாடா.. உன்னால் முடியும்.. தல தளபதி தளபதி நீ தான் நீ தான்.. அன்புத் தலைவா.. வெற்றி நமக்கே.. அழகிய தமிழ் மகன் நீ தானே..!
"நல்லா கவனீங்க நண்பர்களே : 'தல'' யும் நீங்க தான், 'தளபதி' யும் நீங்க தான்.."
________________________________________
11. படம் : ஆண்டவன் கட்டளை, முதல் வரி : ஆறு மனமே ஆறு..
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால், உலகம் உன்னிடம் மயங்கும்-நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்.. உண்மை என்பது அன்பாகும்.. பெரும் பணிவு என்பது பண்பாகும்.. இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்..
"கொஞ்சம் உயர்ந்திட்டாலே 'நமக்கு எல்லாம் தெரியும்' என்கிற நினைப்பு வந்துடுதே.. என்ன காரணம்..? என்ன செய்வது..? அடுத்த பாடல் :"
________________________________________
12. படம் : சுமை தாங்கி, முதல் வரி : மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்.. வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்.. துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்.. குணம்.. குணம்-அது கோவிலாகலாம்..
"வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்.. வாழைப் போல தன்னை தந்து தியாகியாகலாம்.. உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்.."
________________________________________
13. படம் : பணம் பந்தியிலே, முதல் வரி : பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர் நிறைய பேர்கள் உண்டு-அவர்கள் உனது நிலை தாழ்ந்த பின்பு, ஒதுங்குவார்கள் கண்டு.. மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு, மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு-நாளும் முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு..
"இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே-பிழைக்கும் மனிதனில்லே.."
________________________________________
14. படம் : படிக்காதவன், முதல் வரி : ஒரு கூட்டுக் கிளியாக.. ஒரு தோப்புக் குயிலாக பாடு.. பண்பாடு.. இரை தேடப் பறந்தாலும், திசை மாறித் திரிந்தாலும் கூடு.. ஒரு கூடு..
செல்லும் வழியெங்கெங்கும் பள்ளம் வரலாம்.. உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்.. நேர்மை அது மாறாமல், தர்மம் அதை மீறாமல், நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்.. சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால்.. சத்தியம் உங்களைக் காத்திருக்கும்.. தாய் தந்த அன்புக்கும், நான் தந்த பண்புக்கும் பூமாலை காத்திருக்கும்..
"தோப்பா..? தனிக் குடித்தனம் போய் கஷ்டப்பட்டால் தான் கூட்டுக்குடும்பத்தின் அருமை தெரியும்...!"
________________________________________
15. படம் : சுமை தாங்கி, முதல் வரி : மயக்கமா..? கலக்கமா..?
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.. வாசல் தோறும் வேதனை இருக்கும்.. வந்த துன்பம் எது வந்தாலும்.. வாடி நின்றால் ஓடுவதில்லை.. வாடி நின்றால் ஓடுவதில்லை.. எதையும் தாங்கும் இதயம் இருந்தால்.. இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்..
"நாட்டுக்குள்ளே பாதி பேர்.. இல்லை... இல்லை.. முக்காவாசி பேர் வேற மயக்கத்திலே இருக்காங்க.. அதுவும் கலக்கம்(ல்) இல்லாம...! இதற்கு விடிவு : அடுத்த பாடல்கள்.."
________________________________________
16. படம் : ஆட்டோகிராப், முதல் வரி : ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானம் அளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம்..! இலட்சம் கனவு கண்ணோடு, இலட்சியங்கள் நெஞ்சோடு, உன்னை வெல்ல யாரும் இல்லை.. உறுதியோடு போராடு..! மனிதா! உன் மனதைக் கீறி, விதை போடு மரமாகும்.. அவமானம் படு தோல்வி, எல்லாமே உரமாகும்..! தோல்வியின்றி வரலாறா..? துக்கம் என்ன என் தோழா..? ஒரு முடிவிருந்தால்.. அதில் தெளிவிருந்தால்.. அந்த வானம் வசமாகும்..!
"தோல்வி நிலையென நினைத்தால்-மனிதன் வாழ்வை நினைக்கலாமா..? வாழ்வை சுமையென நினைத்து-தாயின் கனவை மிதிக்கலாமா..?" (படம் : ஊமை விழிகள்)
________________________________________
17. படம் : நீலமலைத் திருடன், முதல் வரி : சத்தியமே லட்சியமாய் கொள்ளடா.. செல்லடா..
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே- உன்னை இடர வைத்து தள்ளப் பார்க்கும் குழியிலே.. அத்தனையும் தாண்டி காலை முன்வையடா.. அத்தனையும் தாண்டி காலை முன்வையடா-நீ அஞ்சாமல் கடமையிலே கண்வையடா..
"வேட்டையாடு விளையாடு.. விருப்பம் போல உறவாடு.. வீரமாக நடையை போடு-நீ வெற்றி எனும் கடலில் ஆடு.." (படம் : அரச கட்டளை)
________________________________________
18. படம் : நிச்சயத் தாம்பூலம், முதல் வரி : ஆண்டவன் படைச்சான்..
நடந்ததை எண்ணி கவலைப்பட்டால்.. அவன் மடையன்.. ஆஹா.. நடப்பதை எண்ணி வருத்தப்பட்டால் அவன் மூடன்.. போடா வருவது வரட்டும் என்பவனே நல்ல ரசிகன்.. அவன் இவனே.. இவன் அவனே.. அட.. இன்றுமில்லை, நாளையில்லை, இரவில்லை, பகலில்லை.. இளமையும்.. முதுமையும் முடிவுமில்லை.. ஓஹோஹோ..
"ஆண்டவன் படைச்சான்.. எங்கிட்டே கொடுத்தான்.. அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்-என்னை மட்டுமல்ல.. உங்களையும் தான்.. அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்"
________________________________________
19. படம் : எதிர்நீச்சல், முதல் வரி : வெற்றி வேண்டுமா..?
வெற்றி வேண்டுமா..? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்.. சர்தான் போடா தலைவிதி என்பது.. வெறுங்கூச்சல்.. எண்ணித் துணிந்தால் இங்கு என்ன நடக்காதது.. கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது..?
"கிடைக்கிறது கிடைக்காம இருக்காது.. கிடைக்காம இருக்கிறது கிடைக்காது"
________________________________________
20. படமும் முதல் வரியும் : உன்னால் முடியும் தம்பி
உன்னால் முடியும் தம்பி தம்பி-அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி.. தோளை உயர்த்து.. தூங்கி விழும் நாட்டை எழுப்பு-உன் தோளை உயர்த்து.. தூங்கி விழும் நாட்டை எழுப்பு.. எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்..
"நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்.. நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்.. தூங்காதே தம்பி தூங்காதே.."
________________________________________
21. படம் : சிந்து பைரவி, முதல் வரி : மனதில் உறுதி வேண்டும்..
மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும்.. நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்படவேண்டும்.. கனவு மெய்ப்படவேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்.. தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும்.. கண் திறந்திட வேண்டும், காரியத்தில் உறுதி வேண்டும், பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்.. மண் பயனுற வேண்டும், வானமிங்கு தென்பட வேண்டும்.. உண்மை நின்றிட வேண்டும்.. ஓம் ஓம் ஓம் ஓம்
No comments:
Post a Comment