எல்லோருக்கும் வணக்கம்,
இவ்வளவு நாளா எங்கப்பா போய்ட்டா என்று கேட்கிறது புரியுது.
எக்கச்சக்கமான பிரச்சனைகளின் புயலிற்குள் சிக்கி சின்னா பின்னமாகி வெளியே வர தாமதமாகிற்று.
காத்திருந்த அனைவருக்கும் நெஞ்ஞார்ந்த நன்றிகள்.
இப்போதெல்லாம் உங்கள் வாழ்க்கையின் நோக்கம் என்னவென்று கேட்டால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பதிலே பெரும்பாலானோர்களிடமிருந்து வருகின்றது.
இது நான் கண்ட அனுபவ உண்மை.
நிம்மதியான சந்தோசமான வாழ்க்கை இருந்தால் போதுமே என்று கேட்டதிற்கு பணம் இருந்தால் தானே இந்த சந்தோசம், நிம்மதி எல்லாம் கிடைகிறது என்று சொல்லும் நிலை வந்து விட்டது.
இது கேலிக்குறிய விசயம் இல்ல. கவலைக்குரிய விசயம்.
வாழ்க்கைக்கு பணம் இன்றியமையாதது என்பது உண்மை தான்.
பணம் மட்டுமே வாழ்க்கை இல்லையே.
கோடிக்கணக்கில் பணம் புரளும் பிஸ்னஸ் ஜாம்பவான்கள் கூட நிம்மதி தேடி கிராமங்கள்,காடுகள்,மலைகள் என்று வெக்கேசன் போவது பற்றி ஒன்லைன் செய்தித் தளங்கள் அடிக்கடி செய்தி வெளியிடுவது அனைவரும் அறிந்ததே.
அவர்களிடம் இருக்கும் பணம் ஏன் அவர்களுக்கு நிம்மதியைத் தரவில்லை என்று கொஞ்சம் யோசியுங்கள்.
நிம்மதியையும் சந்தோசத்தையும் தருவது பணம் அல்ல.மனம் தான்.
பணம் இருந்தால் சந்தோசம் வரும் என்று உங்கள் மனதை நினைக்க வைத்திருக்கின்றீர்கள்.
மனம் நினைப்பதை அடைந்தால் தான் நிம்மதி அடையும். அந்த நினைப்பை மாற்றுவது அவ்வளவு எளிதும் அல்ல, நீங்கள் நினைக்கும் அளவிற்கு கடினமும் அல்ல. பழைய பதிவுகள் மனம் பற்றிய விடயங்களையும் அதன் செயற்பாடுகளையும் கூறும்.
சிலருக்கு இந்த எண்ணம் வேறுபடுகிறது. சிலர் ஒர் குறிக்கோளுடன் செயற்படுவார்கள். மனதை எண்ணங்கள் இல்லாமல் வைத்திருத்தல் மிகவும் கடினமான செயல். மகான்களுக்கும் யோகிகளுக்கும் இது கைகூடும்.
மனிதர்களால் எண்ணங்கள் இல்லாமல் செயற்பட முடியாது, அதற்காக பயனற்ற எண்ணங்களோடு பணியாற்றுவது வீண் செயல்.
பயனுள்ள எண்ணங்கள் வாழ்க்கையை உயர்விற்கு கொண்டு செல்லும்.
பணம் எப்போதும் மனித வாழ்விற்கு தேவையான ஒன்று.
"நாம் செய்யும் செயல்கள் எமக்கு பணத்தை பெற்று தரலாமே தவிர பணத்திற்காக செயல்களை நாம் செய்யக்கூடாது."
அப்படிச் செய்யும் செயல்களால் நாம் உயரத்திற்கு ஒரு போதும் போக முடியாது. அதன் வளர்ச்சி மறைப் பெறுமானத்திலே தான் போகும்.
உங்கள் எண்ணங்கள் எப்போதும் உயர்ந்த ஒன்றாக இருக்க வேண்டும்.
அத்தகைய எண்ணங்கள் உங்களை சிறந்த மனிதனாக்கும்.
உயர்ந்த குறிக்கோள் ஒன்றை எண்ணி அதற்காக உழைக்கும் போது சந்தோசம், நிம்மதி அனைத்தும் உங்களுடன் பயணிக்கும்.
No comments:
Post a Comment