Tuesday, March 15, 2016

நீங்களே உங்கள் மனதை டியூன் அப் செய்யுங்கள்

சாதாரண இயந்திரமொன்றை சரிசெய்வதைப்போல் மனதினை டியூன் செய்வது இலகு என்றும் கூற முடியாது,அதுக்காக ஒரேயடியாக கடினம் என்றும் சொல்லிவிட முடியாது.

முயற்சி செய் முடியாவிட்டால் பயிற்சி செய் என்பதற்கிணங்க செயற்படுவோம்.நிச்சயம் வெற்றி பெறுவோம்.

முதலில் உங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு புரிதல் என்பது உங்களின் அகம் சார்ந்த அதாவது ஆழ்மனது பற்றிய உயர்வான ஓர் எண்ணத்தை கொண்டிருக்க வேண்டும்.

நிச்சயமாக ஆழ்மனதிடம் உள்ள அளப்பரிய சக்தியினால் நமக்கு வேண்டியதை நேர் வழியிலேயே அடைய முடியும் என்பதனை உறுதியாக நம்புவது அவசியம்.

இதுவரை காலத்தில் உங்களைப் பற்றிய பல விதமான அபிப்பிராயங்களை பலர் கூறக் கேட்டிருக்கலாம்.

அதில் பல நம்மை தாழ்த்தி கூறப்பட்டிருக்கலாம்.

இப்போது அவையனைத்தையும் தூக்கி வீசுங்கள் என்றும் உங்கள் பக்கம் வராதவாறு. (தயவு செய்து மனதின் ஒரு ஓரத்தில் மட்டும் வைத்து விடாதீர்கள், பின் மீண்டும் அது தொல்லை கொடுக்கும்.)

அது எப்படி தூக்கி எறிவது என்று முனுமுனுப்பது கேட்குதுப்பா..

நீங்க இப்ப உயிரோட இல்லைன்னு உங்களுக்கு ஒருத்தர் போன் பன்னா நீங்க என்ன பன்னுவிங்க.

முதல்ல சொன்னவன் லூசு என்றத கன்போர்ம் பன்னீருவிங்க. அப்புறம் அவன்கூட பழகுறத குறைச்சுருவீங்க.

ஏன் இப்பிடில்லாம் செய்ரீங்க.

ஏன்னா உங்களுக்கு தெரியும் நீங்க உயிரோட இருக்குறது, அப்புறமென்ன...

அது மாதிரித்தான் இதுவும் உங்களப்பத்தி அதிகமாக தெரிஞ்சது நீங்க மட்டும் தான். இது உண்மை தான்ங்க. நம்புங்க!

உங்க மனதின் சக்தி பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கன்.
அப்ப எவனோ ஒருத்தன் உங்கள பத்தி தாழ்வா சொன்னா அதநம்புவீங்களா?
நம்பாதீங்க ப்ளீஸ்.

(குசும்புக்காரன்: என்னடா நீ முதல்ல‌ நம்புங்கடா என்றா இப்ப நம்பாதிங்கடா என்றா , எங்கள பாத்தா உன்க்கு என்னா தோனுது???)

உங்களைப் பற்றிய தாழ்வான கருத்துக்களை கொண்டவர்களிடம் இருந்து வரும் அவதூறுகளை செவிமடுக்காமல் அவர்களிடம் இருந்து விலகி இருப்பதே உங்களை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.

உங்களைப் பற்றி தவறாக சொல்லுபவர்களிடம் தயவு செய்து கோபப்பட வேண்டாம்.அவர்கள் வளர்ந்த சூழல் அவர்களை அவ்வாறு பேசும் படி வைத்திருக்கலாம்.

தனக்கு தெரிந்த விடயத்தையே அனைவரும் செய்ய முயற்சிப்பார்கள்.
உண்மையில் அவர்கள் மேல் இறக்கம் காட்டி அங்கிருந்து நகருங்கள்.


நீங்க எந்த துரையில சாதிக்கனும் என்று நினைக்கிறீங்களோ அதில் உங்களால் சாதிக்க முடியும். ஏனெறால் அது உங்களால் உங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.உங்கள் நோக்கம் உங்களால் முடிவு செய்யப்பட்டது.

எந்த ஒரு முடிவையும் பதற்றத்திலோ, பயத்திலோ, அவசரத்திலோ எடுத்தல் ஆபத்தான விளைவுகளை தேடித்தரும்.

அதனால் ஏற்படப்போகும் நன்மை தீமைகளை அலசி ஆராய்வதில் கவனத்தை செலுத்துங்கள்.

இவ்வாறான சிந்தனைகள் ஒரு நொடியில் வரப்போவதில்லை. தொடர்ச்சியான பயிற்சிகளும் முயற்சிகளும் உங்களை அணுவணுவாக செதுக்கும்.

எப்போதும் உங்கள் இலக்குகளின் மேல் நம்பிக்கையுடன் இருங்கள். எவ்வளவு தோல்விகள் வருகின்றதென கவலைப்படாதீர்கள்.

அவற்றை தோல்விகள் என்று சொல்வதை நிறுத்துங்கள்.

உங்கள் இலக்கை அடைய இவ்வழி சரியானதல்ல என்பதை அவை உணர்த்துகின்றன. எவ்வாறெல்லாம் உங்கள் இலக்கை அடைய முடியாதென அவை உங்களுக்கு கற்றுத்தருகின்றன.

அது மீண்டும் அவ்வழியில் நீங்கள் சென்று சிக்கித்தவிப்பதை தவிர்க்கும்.

உங்கள் முயற்சிகள் வெற்றியளித்தால் அது பற்றி பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளாதீங்க.

அது உங்களை அவ் வெற்றியிலேயே முடக்கி விடலாம்.

ஒவ்வொரு வெற்றியும் உங்கள் வழி சரியானதென்பதை உணர்த்துகிறது என்பதை நினைத்துக்கொள்ளுங்கள்.

இலக்கை அடைய மட்டும் நீங்கள் எந்தவொரு பிரச்சனைகளுக்குள்ளும் உள்நுழையாதீங்க.பிரச்சனைகள் எப்போதும் உங்களை சுற்றி நிற்பதாக சொல்றீங்களா?

நிச்சயம் எப்போதும் பிரச்சனைகள் இருப்பது தானே வாழ்க்கை, அதிலென்ன மாற்றம். ?

பிரச்சனையில்லமல்,தடைகள் இல்லாமல் மாபெரும் சாதனைகள் எங்கயாவது நடந்திருக்கிறதா?

இங்கு பிரச்சனை , பிரச்சனை நம்மை சுற்றி இருப்பதில்ல.
(குசும்புக்காரன்: இப்ப உனக்கென்னடா பிரச்சனை)

அப் பிரச்சனையை நாம் எதிர் கொள்ளும் விதமும் அது பற்றிய எமது கண்ணோட்டமும் தான்.

புறா ஒன்று மழை வரும் போது மரக்கிளைகளுக்குள் சென்று ஒதுங்குகிறது. ஆனால் கழுகு முகில்களின் மேலாக பறந்து மழையில் இருந்து விலகிக் கொள்கிறது.

இங்கு மழை இரண்டிற்கும் பொதுவான பிரச்சனையாகத்தான் வந்தது.

ஆனால் இரண்டு பறவைகளும் அப்பிரச்சனையை எதிர்கொண்ட விதத்தை பார்த்தீங்களா?

புறாவுக்கு பிரச்சனையின் தாக்கம் குறைவாக இருக்கும்.கழுகுக்கு பிரச்சனையே இல்லை என்றாகிவிட்டது.

இது போலத்தான் நாமும் இருக்க வேண்டும்.

பிரச்சனை வருவது உங்களுக்கு தான் ஆனால் அதன் தாக்கம் உங்களின் ஆழ்மனதையோ ,இலக்கினையோ பாதிக்க கூடாது.

பிரச்சனை என்னை ஒன்றும் செய்து விடாது எனபதை முழுமையாக நம்புங்கள்.

அந்த முழு நம்பிக்கையே பிரச்சனையின் தாக்கம் உங்களை ஏதும் செய்து விடாது. வருவது வரட்டும் பார்க்கலாம் என்ற உறுதியான நம்பிக்கையுடன் எப்போதும் இருங்கள்.


உங்களால் உங்களுக்காக நிச்சயிக்கப்பட்ட இலக்கை உங்களால் அடைய முடியுமென 100% நம்புங்கள்.

நிச்சயம் உங்களால் உங்களால் உங்கள் இலக்கை அடைய முடியும்.

உங்களை நீங்களே தயார்ப்படுத்தும் நேரமிது. இனியும் தாமதிக்க வேண்டாம்.

No comments:

Post a Comment