Friday, August 5, 2016

புதிய சிந்தனை,புதிய முயற்சி, புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்

செய்ததயே திருப்தி திரும்பச் செய்து வேறு முடிவை எதிர்பார்ப்பது முட்டாள் தனம்
     
மாடுகளின் இரண்டு வகையுண்டு
       ஒன்று செக்கு மாடு
       மற்றது வண்டி மாடுyou

இந்த செக்கு மாட்டை மாற்றி வண்டியில் கட்டிவிட்டால் அது காலையில் நேராக நாடாமல் தனது வீட்டையே சுற்றிச் சுற்றிச் வரும் என்பார்கள்

மனித சோம்பலின் ம்னோபாவமும் அப்படித்தான் மாற்றிப் போகிறது
     
பெரும்பாலான மனிதர்களின் செயல்பாடுகளும்     இப்படித்தான் இருக்கின்றன.
   
இதைத்தான் பாரதி தேடித் தினம் சோறு தின்று உறங்கும்  இந்த வேடிக்கை மனிதரெனபாடினான்.
   
இதுவும் ஒரு சோம்பல் தான் அதனால் தான் அடிக்கடி “மாத்தி யோசி”என்றார்கள்
 
மனித செயல்களிலும் மாற்றும் பயிர் போல மாறுபட்ட முயற்சிகளும் வேண்டும்.
       
இதைதான் இந்த பாமர மக்களின் சோம்பலை avarage peoples Psychopathology என்கிறார்கள்

புதிய சிந்தனை,புதிய முயற்சி, புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்

தோல்வி உங்களைத் துரத்துகிறதா?

தோல்வி என்னும சொல்லே தேவையில்லை. தோல்வி என்பது வெற்றிக்கு வழிவகுக்கும் ஒரு நண்பனே! ஆனால் அதை விரோதி என்று தவறாக அடையாளம் காண்கிறீர்கள்.

முதலில் தோல்வி என்பது என்ன என்று சிந்தியுங்கள். இலக்கை நோக்கி நீங்கள் செய்யும் முயற்சியில் தடையோ, தாமதமோ ஏற்பட்டால் அதைத் தோல்வி என்கிறீர்கள்.

தோல்வி வந்தவுடன் இனி முடியாது என்று எதிர்மறையாகச் சிந்திப்பவர்களே முயற்சியை நிறுத்திவிடுகிறார்கள். அது தோல்வியாக மாறிவிடுகிறது.

தடையோ, தாமதமோ ஏற்படும்போது, மேலும் முயல்வேன் என்று முடிவு செய்து உழைப்பவர்கள் ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்கிறார்கள். வெற்றி பெறுகிறார்கள்.

தோல்வி என்பது வெற்றிக்கான பயிற்சியே என்று நீங்கள் உணர வேண்டும். பெரிய இலக்குகளுக்கு மட்டுமல்ல. சாதாரண செயல்களுக்கும் கூட பயிற்சிதான் முழுமையை அல்லது வெற்றியைத் தந்திருக்கிறது.

நீங்கள் பிறந்த பிறகு ஒரே நாளில் ஓடிப் பழகிவிடவில்லை. எழ முயன்றபோது விழுந்தீர்கள். எழுந்து நின்ற பிறகும் பல முறை விழுந்தீர்கள். பலமுற விழுந்தும், எழுந்தும் பயிற்சி செய்தமையால்தான் இன்று செம்மையாக நடக்கிறீர்கள்.

நீங்கள் உணவு உண்ணத் தொடங்கியதை மீண்டும் நினைவுகூர்ந்து பாருங்கள். உணவை விரல்களால் அள்ளியபோது சிதறியது. வாயில் போடுவதற்குள் சிந்தியது. மீண்டும மீண்டும் போடுவதற்குள் சிந்தியது. மீண்டும் மீண்டும் சிந்திச் சிதறி முயன்றதனால் இன்று உணவு உண்பதில் தேர்ந்தவராகி விட்டீர்கள்.

முதல் வகுப்பில் சேர்ந்த பிறகு பள்ளியில் எழுத்த்துங்கியநிகழ்ச்சியை நினைத்துப்பாருங்கள். விரலகளுக்கிடையே பென்சிலைப் பிடிக்க இயலவில்லை. பிடித்தாலம் எழுத இயலவில்லை. எழுதினாலும சரியாக வரவில்லை. ஆனால் இன்று உங்கள் எழுத்து முத்து முத்தாக கண்ணைக் கவர்கிறது.

ஆகவே, நடத்தல், உண்ணல், எழுதுதல் போன்ற செயல்களுக்கும் தடையும், தாமதமும் வரவே செய்தன. ஆனால் தடையைக் கண்டு அஞ்சாமல் மீண்டும் மீண்டும் முயன்றதனால்தான் இன்று உங்களால் நடக்கவும், உண்ணவும், எழுதவும் முடிந்திருக்கிறது.

தடையைத் தாண்டி உங்களால் எப்படி வெற்றிபெற முடிந்தது. மீண்டும் மீண்டும் செய்கிற செயல் பயிற்சியாகிறது. பயிற்சிதான் வெற்றியைத் தருகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

தோல்வி என்பது வெற்றியின் படிக்கட்டு என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். என்ன பொருளில் அப்படிச் சொல்லப்படுகிறது?

இளம்பெண் ஒருத்தி நீளந்தாண்டல் போட்டியில் இரண்டு மீட்டர் தாண்டி தங்கப்பதகம் பெற்றதாகப் பத்திரிகையில் படிக்கறீர்கள்.

தங்கப்பதக்கம் பெற வேண்டும் என்று விரும்பியன்றே அவள் இரண்டு மீட்டர் தாண்டிவிடவில்லை. உயர்நிலைப் பள்ளியில் ஒரு மீட்டர் தாண்டினாள். மேல்நிலை வகுப்பில் மேலும் அதிகம் தாண்டினாள். தேசியப் போட்டியில் ஒன்றரை மீட்டர் தாண்டினாள். பல தடவை தோற்ற பின்னும், தடைகளைக் கண்டு சோர்ந்து போகாமல் மீண்டும் மீண்டும் முயன்றதனால் ஒலிம்பிக்கில் இரண்டுமீட்டர் தாண்டவும், தங்கப்பதக்கம் பெறவும் முடிந்தது. பதக்கம் பெறும் வரை முயற்சியை நிறுத்தவில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

இராபர்ட் புரூஸ் கதையில் வரும் சிலந்திப்பூச்சி பன்னிரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றதாக படித்திருப்பீர்கள். பத்தாவது அல்லது பதினோராவது முயற்சியோடு அது பின் வாங்கியிருந்தால் வெற்றி பெற்றிருக்காது.

இந்தியாவின் மீது படையெடுக்க கஜினி முகமது பதினெட்டாவது தடவை வெற்றி பெற்றதாகப் படித்திருப்பீர்கள். பதினாறாவது அல்லது பதினேழாவது தடவைக்குப் பின் தன் முயற்சியை நிறுத்தியிருந்தால் அவனுக்கு வெற்றி கிடைத்திருக்காது.

மின்சார பல்பை உருவாக்கும் முயற்சியில் லேடக்ஸ் என்னும்பொருளைக் கண்டுபிடிக்க எடிசன் பதினாறாயிரம் தாவரங்களைப் பரிசீலித்து வெறி கண்ட செய்தி உங்களுக்குத் தெரியுமா? பதினைந்தாயிரத்து தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பதாவது முயற்சிக்குப்பிறகு சோர்ந்திருப்பாரானால் அவரால் மகத்தான வெற்றி பெற்றிருக்க முடியுமா?

ஆகவே, தோல்விக்கும், வெற்றிக்கும் உள்ள இடைத்தூரம் மேலும் ஒரு முயற்சி மட்டுமே.

நீங்கள் உயர்ந்த நிலைக்கு ஆசைப்படுகிறீர்கள். கனவு காண்கிறீர்கள். உற்சாகத்துடன் உழைக்கத் தொடங்குகிறீர்கள். தடையையும்,தோல்வியையும் கண்டு சோர்ந்து போகிறீர்கள் . முயற்சியை நிறுத்தி விடுகிறீர்கள்.

ஒரு முயற்சி நிறுத்தப்படும் போது தோல்வியாகிறது. தொடரப்படும்போது வெற்றியாகிறது. முடிந்தவரை முயற்சிபது வெற்றி தராது. முடிவு வரை முயற்சிப்பதே வெற்றியைத் தரும்.

நீங்கள் ஒரு தொழிலை அல்லது வணிகத்தை செய்கிறீர்கள். சில முயற்சிகளி வெற்றி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். எதிர்ப்பார்க்கிறீர்கள். தடை வரம்போது கைவிட்டுவிடலாமா என்று யோசிக்கிறீர்கள். இங்குதான் தோவி ஆரம்பம் ஆகிறது.

தடை தோல்வியின் அறிகுறி அல்ல. மேலும முயல வேண்டும் என்பதன் அறிகுறியே. தடை வரும்போதெல்லாம் மேலும் முயல்பவரிடம் தோல்வி மண்டியிடுகிறது.

ஆகவே, இத்தனை முறை முயன்று பார்த்துவிட்டு கைவிடலாம் என்று நினைத்தால் தோல்வியே கிடைக்கும். வெற்றி பெறும்வரை முயன்று கொண்டே இருந்தால் மகத்தான வெற்றி கிடைக்கும்.

இந்த வயதுவரை நீங்கள் பல தொழில்களில், வணிகத்தில் மாறி மாறி உழைத்திருப்பீர்கள். எல்லாவற்றிலும் தடைகள் வந்திருந்தால் நமக்கு எதுவுமே ராசியில்லை என்னும் தோல்வி மனப்பான்மை உங்களிடம் நிலை கொண்டுவிடும்.

புதிதாக வரும் வாய்ப்புகள் ஒருபுறம் உங்கள் ஆர்வத்தை மனப்பான்மை மறுபுறம் நின்று வேண்டாம். மாட்டிக்கொள்ளாதே என்று பயமுறுத்தும்.

நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்றால் அடுத்த முயற்சி. அடுத்த முயற்சி என்று துடிக்க வேண்டும். எத்தனை தடவை தான் முயற்சிப்பது! என்று எண்ணினால் வாழ்க்கையே தோல்வியில் முடியும்.

உங்களுக்குத் தெரிந்த வெற்றியாளர்களைக் கூர்ந்து கவனித்தால் அவர்களுடைய விடாமுயற்சிதான் அவர்களுக்கு வெற்றி தந்தது என்பதை நீங்கள் அறிய முடியும்.

விடாமுயற்சியும் தொடர் முயற்சியாக இருப்பன் உங்கள் வெற்றி உறுதிப்பட்டு விடும்.

நீங்கள் விடா முயற்சியையும் தொடர் முயற்சியையும் கைக்கொள்ள வேண்டும் என்றால் இயற்கைச் சட்டம் (Law of Natue) பற்றி அறிந்திருக்க வேண்டும்.

மனிதனாகப் பிறந்த எவருமே உயர வேண்டும். முன்னேற வேண்டும், வளர வேண்டும் என்பது இயற்கைச் சட்டம். இயற்கைச் சட்டத்தின்படி ஊக்கத்துடன் உழைக்கும் மனிதனின் கரம், இயற்கையின் கரத்துடன் இணைந்து விடுகிறது. இனையும் போது இயற்கையின் தரத்தில் இருக்கும். வெற்றி உங்கள் கைக்கு வந்துவிடுகிறது.

இயற்கையாகவே உங்கள் வெற்றித்தேர் முன்னோக்கி நகர்து கொண்டுள்ளது. இயலாது,முடியாது, கிடைக்காது. நடக்காது போன்ற எதிர் மறைத் தடைக்கட்டைகளை இட்டு நீங்கள்தான் அதன் ஓட்டத்தைத் தடை செய்துவிட்டீர்கள்.

முடியும், இயலும், நடக்கும், கிடைக்கும் என்று எப்போதும் எண்ணத்தொடங்கிவிட்டால் அடுத்த முயற்சி, அடுத்த தொழில் என்று தொடங்குவீர்கள், விடாமுயற்யும், தொடர் முயற்சியும் உங்கள் இயல்பாக மாறிவிடும்.

தோல்வி நிரந்தரமானதல்ல, அதைத்துரத்தி விட முடியும் என்னும் ஞானம் உங்களுக்கு வந்துவிடும்.

தோல்வி உங்களைத் துரத்தும் நிலை மாறி, நீங்கள் தோல்வியைத் துரத்தி அடித்து விடுவீர்கள்.

அதன்பின், உங்களுக்கு வெற்றிமேல் வெற்றி வந்து சேரும்

24 நிமிட நேர நிர்வாகமே வாழ்க்கை நிர்வாகம்.

வாழ்க்கை நிர்வாகம்:

நேர நிர்வாகமே, வாழ்க்கை நிர்வாகம்
Time management is Life management

தனி ஒரு மனிதனின் நேர நிர்வாகமே, அவனுடைய வாழ்க்கை நிர்வாகத்திற்கு அடிப்படையாக அமைகிறது.

ஒரு நாளை நான்கு நிலைகளில், ஒரு இளைஞன் முறையான நேர நிர்வாகத்தைக் கொண்டு செலவு செய்யலாம்.

ஒரு நாளை மகிழ்ச்சியாகவோ அல்லது சோகமாகவோ அல்லது அமைதியாகவோ அல்லது பேரானந்தமாகவோ ஒரு இளைஞன் செலவு செய்யலாம்.

நேர நிர்வாகம் என்பது ஒரு நாளை இன்ப, துன்ப்ங்களுக்கு செலவு செய்யாமல், அந்த நிலையை தாண்டி வாழ்க்கையை இனிமையாக, அமைத்துக் கொள்ள திட்டமிட்டு, செயல்படுத்துவது... பிறகு பேரின்ப நிலைக்கு திட்டமிடுவது.

எவ்வளவு நேரம் மகிழ்ச்சிக்கு ?
எவ்வளவு நேரம் சோகத்திற்கு ?
எவ்வளவு நேரம் அமைதிக்கு ?
எவ்வளவு நேரம் பேரான்ந்தத்திற்கு ?

என்ற அளவு விகிதம், தனிமனிதனின் நேர நிர்வாகத்தை கொண்டு அமைகிறது.

ஒரு இளைஞன், மகிழ்ச்சியான நிலை, சோகமான நிலை, அமைதியான நிலை, பேரான்ந்தமான நிலை என்ற நான்கு நிலைகளில் ஒரு நாளை செலவு செய்யலாம்.

இன்றைய நவ நாகரீகமனிதர்களில் நூற்றுக்கு 99 பேர், மகிழ்ச்சியாக அல்லது சோகமாக தான் ஒரு நாளை செலவு செய்கிறார்கள்.

பணம் என்ற மாய வலையில் சிக்கிய இன்றைய இளைஞனுக்கு அமைதி மற்றும் பேரான்ந்தத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லை.

அவ்வாறு தெரிந்து கொணட அல்லது விழிப்பு உணர்வு கொணட ஒரு சதவீத இளைஞனும், விளக்கத்தின் வழி பழக்கத்தை கொண்டு செல்ல முடியாமல் தடுமாறுகிறான்.

உலகப் புகழ் பெற்ற மூளை நிபுணர் பி. இராம மூர்த்தி சொன்னார் "இந்தியர்கள் முட்டாள்கள், யோகக் கலை என்ற தங்க சுரங்கத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு சிறிது தங்கத்திற்காக வாழ்நாள் முழுவதும் அலையும் முட்டாள்கள்.

இக்கணத தேவை இந்திய இளைஞர்கள் தன்னை உணர உள் நோக்கு பயணம் (தவம்) செய்து, தற்சோதனை செய்து இந்திய பாரம்பரிய சொத்தான அமைதி மற்றும் பேரின்பத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு அந்த நிலையில் வாழ்க்கையை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

"Indians are fools, sitting on the gold mine of yoga" - B. Ramamurthi, famous neuro surgeon

ஆனந்த வாழ்க்கை

தினசரி நேர நிர்வாகமே, மனித வாழ்க்கை நிர்வாகம்;

தினசரி மனித மன நிர்வாகமே, தினசரி நேர நிர்வாகம்;

தினசரி உணவு நிர்வாகமே, தினசரி மனித மன நிர்வாகம்;

தினசரி நாக்கு நிர்வாகமே, தினசரி மனித உணவு நிர்வாகம்;

தினசரி குடல் நிர்வாகமே, தினசரி மனித நாக்கு நிர்வாகம்;

தினசரி நிதானமாக முடிவு எடுக்கும் நிர்வாகமே,
தினசரி மனித குடல் நிர்வாகம்;

தினசரி சக்தி நிர்வாகமே, தினசரி மனிதனின் நிதானமாக முடிவு எடுக்கும் மனோபாவ நிர்வாகம்;

சக்தி நிர்வாகம்

தினசரி மனித உடல் சக்தி நிர்வாகமே, தினசரி திறம்பட செயல்கள் வேலை செய்யத் தேவையான சக்தி நிர்வாகம்;

தினசரி மன சக்தி நிர்வாகமே, தினசரி மனித உடல் சக்தி நிர்வாகம்;

தினசரி உணர்ச்சி நிர்வாகமே, தினசரி மனித மன சக்தி நிர்வாகம்;

தினசரி ஜீவகாந்த சக்தி நிர்வாகமே, தினசரி மனித உணர்ச்சி நிர்வாகம்;

தினசரி உயிர் சக்தி நிர்வாகமே, தினசரி மனித ஜீவகாந்த சக்தி நிர்வாகம்;

தினசரி ஆன்மீக சக்தி நிர்வாகமே, தினசரி மனித உயிர் சக்தி நிர்வாகம்;

சமச்சீர் வாழ்ககை நிர்வாகமே, தினசரி மனித ஆன்மீக சக்தி நிர்வாகம்;

ஆரோக்கிய வாழ்க்கை நிர்வாக்மே, மனித சமச்சீர் வாழ்க்கை நிர்வாகம்.

வெற்றி.... வெற்றி..... 

இளைஞனே ... வெற்றி வேண்டுமா?
வாழ்க்கையில் வெற்றி வேண்டுமா?
வெற்றி என்பது மாங்கு .... மாங்கு
என்று வேலை செய்வதில் மட்டும் இல்லை.....
வெற்றி என்பது சிந்தனை செய்து,
24 நிமிட நேரத்தை சரியாக திட்டமிட்டு,
சிந்தனை வழியில் மாங்கு .... மாங்கு
என்று வேலையைத் திறம்பட செய்து,
சாதனை படைப்பதில்தான் உள்ளது.
வெற்றி வேண்டுமா? 
போட்டுப் பாரடா எதி நீச்சல்...
24 நிமிட நேர நிர்வாகத்தோடு !

வெற்றி வேண்டுமா? 
போட்டுப் பாரடா எதி நீச்சல்...
24 நிமிட நேர நிர்வாகத்தோடு !!

மிகப் பெரிய வெற்றி ....

இளைஞனே ... மிகப பெரிய வெற்றி வேண்டுமா?
வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டுமா?
மிகப் பெரிய வெற்றி என்பது, 24 நிமிட நேரத்தில்
தெளிவாக மற்றும் துல்லியமாக திட்டமிட்டு,
சிந்தனை வழி, சரியான துல்லியமாக
திட்டத்தை செயல்படுத்தி உலக அளவில்
சாதனை படைப்பதில் தான் உள்ளது.

புத்துணர்ச்சி

முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்

முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் - ஐ பார்த்து ஒரு பத்திரிக்கை நிருபர் கேட்டார், எப்படி உங்கள் ஒய்வு நேரத்தை செலவிடுவீர்கள்?

அதற்கு, ரூஸ்வெல்ட் புத்தகங்களோடு தான் எனக்கு கிடைக்கும் ஒய்வு நேரத்தை செலவு செய்வேன் என்றார்.

பத்திரிக்கை நிரூபர் மேலும் கேட்டார், "உங்களுக்கு கிடைக்கும் மிக அரிதான காலத்தை ஏன் புத்தகங்களோடு செலவு செய்கிறீர்கள்? என்றார்.

மேலும், ரூஸ்வெல்ட் சொன்னார், புத்தகங்களைப் படிக்கும் போது எனக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

பத்திரிக்கை நிருபர், மீண்டும் ரூஸ்வெல்ட் - ஐ பார்த்து கேட்டார். அதாவது, "நீங்கள் எப்படி, படிப்பதற்கான புத்தகங்களைத் தேர்வு செய்வீர்கள்."

புத்தகங்களைப் படிக்கும் போது எனக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது. - ரூஸ்வெல்ட்

காலத்தால் அழியாத புத்தகங்கள்

முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்

ரூஸ்வெல்ட் தெளிவாக சொன்னார், "நூற்றாண்டின் சிறந்த புத்தகத்தை முதலில் தேர்ந்து எடுத்து படிப்பேன். வார, சஞ்சிகையையோ, மலிவான நாவல்களையோ படிக்க மாட்டேன். சில சமயம், நான்கு நூற்றாண்டு பாரம்பரிய, புத்தகங்களான 'பழமொழிகள்' (Proverb) அடங்கிய புத்தகத்தைத் தேர்ந்து எடுத்து முதலில் படிப்பேன்."

ரூஸ்வெல்ட் மேலும் சொன்னார்,

"காலமும் மற்றும் மனமும் இயற்கையின் மிகப் பெரிய பொக்கிஷ்ம், அதை மிக மிகக் கவனமாக ஒருவன் கையாள வேண்டும். ஆகையால், என்னுடைய ஒவ்வொரு கணத்தையும் வாழ்க்கையின் மிக மிக சிறந்தவைகளுக்காக செலவு செய்வேன்" என்றார்.

"காலமும் மற்றும் மனமும் இயற்கையின் மிகப் பெரிய பொக்கிஷ்ம்" - ரூஸ்வெல்ட்

காலத்தின் அருமை

முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்

ரூஸ்வெல்ட்டின் "என்னுடைய ஒவ்வொரு கணத்தையும் வாழ்க்கையின் மிக மிக சிறந்தவைகளுக்காக செலவு செய்வேன்" என்ற இந்த தெளிவான கூற்றைவிட காலத்தின் அருமையை ஒருவர் உணர வைக்க முடியாது.

இந்திய இளைஞனே காலத்தின் அருமையை முதலில் உணர். பிறகு உனது நேரத்திற்கு நீயே மதிப்பு கொடு !!

பிறகு உனது மனதின் அருமையை மற்றும் உள்ளத்தின் அருமையை உணர முயல். உனது திறமையை உணர்.

செயற்கரிய செயல்களை திட்டமிட்டு செய். உலகம் உன் காலடியில். கிடைத்தற்கு அரிய இந்த வாழ்க்கையை வாழ்வங்கு வாழ முற்படுவோம்.

"Time and mind are too precious to waste to spend on anything but the best" - Theodore Roosevelt, Former US president.

நீர்க்குமிழியாம் வாழ்க்கை

சராசரி இந்தியனின் வாழ்க்கை 65 ஆண்டுகள் கண்மூடி கண் திறப்பதற்குள் முடிகின்ற மிக குறுகிய கால வாழ்க்கை.

"LIFE IS SHORT, MAKE IT SWEET AND PURPOSEFUL"

ஆகையால் தான் சொல்கிறேன், நேர நிர்வாகம் என்பது வாழ்க்கை நிர்வாகம்.

"TIME MANAGEMENT IS LIFE MANAGEMENT"

நேரத்தைத் தொலைத்தவன் வாழ்க்கையைத தொலைக்கிறான்.

6 வயது முதல் 60 வயது வரை நேர நிர்வாகம் கட்டாயம் தேவை, அதுவே வாழ்க்கை நிர்வாகம் !

தோல்வி என்றால் என்ன?.... அது என்ன செய்யும்...

தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது. 

டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார். 

இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது.

தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது.

சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்த ஆபிரகாம் இலிங்கன் அனைத்துத் தோல்விகளையும் மதிப்பிட்டு கடைசியில் அனைவரும் அறிந்த அமெரிக்க அதிபரானார்.

தோல்வி வந்தவுடன் அதற்குள் வெற்றி என்பது ஏதோ பெரிய கனி போல இருப்பதாக எண்ணி விடாதீர்கள். வெற்றி விதை போலவே இருக்கும், அதை வளர்த்து மரமாக்கி கனி பறிக்க வேண்டியதே உங்கள் பொறுப்பு.

யார் மீண்டெழுந்து மறுபடியும் போரிடப் போகிறார்கள் என்பதை அறியவே இயற்கை நமக்கு தோல்வியைத் தருகிறது. மீண்டெழுந்தவர்களே மனித குலத்திற்கு தலைமை தாங்குகிறார்கள்.

உடல் ஊனமுற்றிருந்த மைலோசி என்பவர் தனக்கு ஒரு மனம் இருப்பதை கண்டறிந்தார். அதை பயன்படுத்தி வாழ்வில் உயர்வு பெறும் புதிய கண்டு பிடிப்பை கண்டு பிடித்தார். உங்களிடம் ஒன்றுமே இல்லை ஆனால் ஒரு மனம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி உயர்வடையுங்கள்.

நீங்கள் தோல்விகளை கையாளும் விதத்தைப் பார்த்தால் உங்களிடம் தலைவராகும் தகுதி இருக்கிறதா இல்லையா என்பது புரிந்துவிடும்.

ஒருவனது பலவீனங்களை அளவிடும் அளவு கோலாக தோல்வி இருக்கிறது. ஆனால் அதுவே அவற்றை சரி செய்யும் ஒரு வாய்ப்பையும் தருகிறது. இந்தவகையில் தோல்வி ஓர் ஆசீர்வாதம்தான்  

தோல்வி என்று கருதப்படுபவை தற்காலிக சரிவுகள்தான். அதை நேர் மறையான மனோபாவத்துடன் எடுத்துக் கொண்டால் விலை மதிப்பற்ற செல்வமாக மாற்றலாம்.

தோல்வியை ஏற்று தொடர்ந்து போராடுபவனை உலகம் மதிக்கிறது, ஆனால் பிரச்சனை தீவிரமாகும்போது கைவிடும் மனோபாவம் உடையவனை உலகம் மன்னிப்பதில்லை.

மனதை வலிமைப்படுத்துங்கள்

பெர்ஷியாவின் அரசர், ஜரதுஷ்டிரா என்ற ஒரு பெரும் ஞானியை சந்தித்தார். அவரிடம் ஞான வாக்குகளை கேட்டார் ஜரதுஷ்ரா, அரசரிடம் சில கோதுமை விதைகளைக் கொடுத்தார். அரசருக்கு அவமானமாக இருந்தது. செல்லும் வழியில் அதை தூக்கி எறிந்துவிட்டுச் சென்றார். பல காலம் சென்றது. மீண்டும் ஒரு நாள் ஞானி ஜரதுஷ்ராவுக்கு செய்தியனுப்பி தனக்கு ஞானவாக்குகளை வழங்கும்படி அரசர் கேட்டுக்கொண்டார். ஞானி திரும்பவும் அரசருக்கு கோதுமை விதைகளை கொடுத்தார்.

ஞானியின் வாக்குகளை புரிந்து கொள்ள தனக்கு ஞானம் போதாது என்று எண்ணிய அரசர், அந்த விதைகளை தன் பிரார்த்தனை கூடத்தில் வைத்தார். இதன்பின் அரசர் இந்தியாவைச் சேர்ந்த தத்துவஞானி ஒருவரை வரவழைத்து தனக்கு ஞானம் புகட்டி வழி நடத்தி செல்ல வேண்டினார்.

அந்த தத்துவ ஞானியோ, தான் அரசரின் அழைப்பை ஏற்று அங்கு வந்ததற்கு காரணமே, அங்குள்ள ஞானியான ஜரதுஷ்டிராவை காண வேண்டும் என்ற விருப்பத்தினால்தான் என்றார். அரசர் அவரை பிரார்த்தனைக் கூடத்திற்கு அழைத்துச் சென்று ஜரதுஷ்டிரா கொடுத்த கோதுமை விதைகளைக் காட்டினார். விதைகளைக் கண்ட தத்துவஞானி தன்னை மறந்து உரத்த குரலில் 'ஆஹா' என்ன அற்புதமான தத்துவம் என்று கூறினார். பிறகு தத்துவஞானி அரசரிடம் விளக்கமாக கூறினார். விதைகள் சிறியதாக இருந்தாலும் அதிலிருந்து செடிகள் வளரும் சாத்தியம் உண்டு. ஒரு விதை மரமாகும். மரம் மீண்டும் விதையாகும். இது தொடரும். இதுபோல்தான் நாமும் எல்லைக்குட்பட்டவர்கள் போல தோன்றினாலும், இந்த எல்லைகளைத் தாண்டி வளரும் ஆற்றல் கொண்டவர்கள். இரண்டாவதாக, விதை வளர அது தன்னுடைய விதைத்தன்மையை விடுவதற்கு தயாராக இருக்க வேண்டும். அதேபோல் நாமும் பழையவைகளை மறக்கவில்லையானானல், புதிய எதிர்க்காலத்தை காண்பது என்பது முடியாது. ஞானத்தோடு வாழும் கலை என்பதே இறக்கும் கலையாகும்.

கடைசியாக, ஒரு விதையை பூமியில் விதைக்கும் போது கண்ணுக்குத் தெரியாத சக்திகளான ஈரப்பசை, வெப்பம் மற்றும் காற்றும் இவையெல்லாம் விதை முளைக்க உதவுகிறது. இதற்கு தேவை நம்பிக்கை. அதுபோல வாழ்விலும் நல்லவைகளை நம்ப வேண்டும். அப்பொழுது கண்ணுக்குத் தெரியாத சக்திகள் ஒன்றிணைந்து நமக்கு வழிகாட்டும்.

கனவு காணுங்கள் - கலாமின் தன்னம்பிக்கை வரிகள்

முடியாது என்பது நோய்

"கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத்திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. சி.சுப்பிரமணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியில் வெற்றி அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியாது. முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது.  எனவே, நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்டு எந்த செயலையும் தொடங்குங்கள். "முடியும்' என்ற நம்பிக்கை முதலில் ஓவ்வொரு இந்தியனுக்கும் வேண்டும்"

மனித நாகரிகம் வளர காரணம் வீரம்

மனித நாகரிகம் வளர்ந்ததற்குக் காரணமாக நான் நினைப்பதே வீரத்தினால்தான். மனிதன் எடுத்து வைத்த ஒவ்வொரு காலடிக்கும் வீரம் தேவைப்பட்டது என்பதுதான் வரலாறு. தன்னுடைய பிரதேசத்தைக் காத்துக் கொள்ள வீரம் தேவைப்பட்டது. புதிய வாசல்களைத் திறக்க, புதிய இடங்களைத் தேடிச்செல்ல வீரம் தேவைப்பட்டது. பழமையை மீறவும் புதியவற்றைக் கண்டுபிடித்து புதுமைகள் செய்யவும் வீரம் தேவைப்பட்டது. சகமனிதனின் கண்ணீரைத் துடைத்து புரட்சிகளை உருவாக்க வீரம் தேவைப்பட்டது. மனிதநேயம் என்கிற பேனாவில் வீரம் என்னும் மையினால் எழுதப்பட்டது தான் நீண்ட நெடிய மனிதனின் வரலாறு என்பது என் எண்ணம்.

உறுதியும், நம்பிக்கையும்

உறுதியும், நம்பிக்கையும் தலைமைப்பண்பும் கொண்ட நம்முடைய இளம் ஆண்களும், பெண்களும் ராணுவப்படைகளில் ஆர்வமுடன் சேர முன்வர வேண்டும் என்பது என் ஆசை. இன்றைய வேகமான அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக ராணுவத்தின் எத்தனையோ சவாலான, சுவாரஸ்யமான வேலைகள் உருவாகி வருகின்றன. இளைஞர்களுக்கு அவை பெரும் சாகசங்களாகத் திகழும்.

சிந்தனை செய்

இந்தியாவுக்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்.

இந்தியாவை மேம்படுத்த வேண்டியவற்றைச் சிந்தனை செய்,

அமெரிக்கா, மற்ற மேலை நாடுகள் அடைந்துள்ள மேன்மைப்பாடுகளை நாமும் பெற வேண்டுமானால்!

“புலப்படாத எதிர்காலத்துக்கு மட்டும் ஒருவர் வாழ்ந்து வருவது ஆழமற்ற மேலொட்டிய செயலாகும்.”

ஆற்றல்களின் வேறுபாடுகளைத் தெளிவாக தெரிந்து கொள்

”என்னால் மாற்ற முடியாதவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன். வாழ்க்கையில் உன்னை வரவேற்கும் சக்திகளும், அறவே எதிர்க்கும் சக்திகளும் இருக்கத்தான் செய்யும். பலனளிக்கும் ஆற்றல்கள், பயனற்ற ஆற்றல்களின் வேறுபாடுகளைத் தெளிவாகத் தெரிந்து, அவற்றுக்கு இடைப்பட்ட முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.”

கனவு காண்

“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி.  ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.

ஒரே சிந்தனை

“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங்கனவு எங்களுக்கு அறவே இல்லை! ஆனால் சமூக மனிதப் பிரச்னைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்! தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”

மன உறுதி

இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடைவதாயினும் சரி, மேலே ஏறிச் செல்ல ஒருவருக்கு மிக்க மன உறுதி தேவைப்படுகிறது.

தொடர்ந்து முயற்சி செய், வெற்றி நிச்சயம்

மாணவப் பருவத்தில் பல்வேறு தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகள் எதிர்பார்த்தவாறு அமையாவிட்டால், அதற்காக மாணவர்கள் மனம் சோர்ந்துவிட வேண்டியதில்லை. தேர்வு முடிவுகள்தான் வாழ்க்கையில் இறுதியானது எனக் கருத வேண்டாம். கடவுள் நம்முடன் இருப்பாரானால், ஒருவரும் உங்களுக்கு எதிராகச் செயல்பட முடியாது. எனவே, தொடர்ந்து முயற்சி செய்தால், நிச்சயம் வெற்றி கிட்டும். தாற்காலிகமாக ஏற்படும் பின்னடைவுக்காக மனம் சோர்ந்து போய்விட வேண்டாம்.

துணிவுடன் எதிர்கொள்

வெற்றி எப்பொழுதுமே மகிழ்ச்சியைத் தரும். ஆனால், பல காரணங்களால் சில சமயம் தேர்வில் நாம் பின்னடைவைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதையும் நாம் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் நாம் சில எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் பிரச்னைகள் நம்மை மேலாதிக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது.​ நாம்தான் பிரச்னைகளை மேலாதிக்கம் செய்ய வேண்டும்.​ பிரச்னைகளை தோல்வியுறச் செய்து, வெற்றி காண வேண்டும்

நீ நட்சத்திரமாக ஜொலிக்க விரும்பினால்

நீ யார் என்பது முக்கியமல்ல;

உனது மனது எதை விரும்புகிறதோ,​​

அது நிச்சயம் உன்னை வந்து சேரும்.”

எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொண்டு அதில் வெற்றி பெறுவதுதான் இளைஞர்களின் தனித்தன்மையாகும்.

தோல்வியை கண்டு துவளாதீர்....

வாழ்க்கையில் உயர்வும், தாழ்வும் மாறி மாறி வருவது சகஜம். வாழ்வில் எல்லோரும் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பு. உயர்வு வரும் இடத்தில் தோல்விகளும் கூடவே வரும்.

உயர்வும் தாழ்வும் நாணயத்தின் இரு பக்கங்களாக கருத வேண்டும். தோல்வியை கண்டு துவளக் கூடாது. வாழ்வில் ஒரு முறையேனும் தோல்வி ஏற்பட்டால் தான் வெற்றியின் அருமை புரியும். சாதாரணமாக ஒருவன் வெற்றியடைந்தால் அவனுக்கு அது பெரிய விஷயமாக தெரியாது. பல முறை தோல்வி கண்டு, வெற்றியை தழுவும் ஒருவனால் தான் அதை உண்மையில் உணர முடியும். அவன் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. வெற்றியை கொண்டாடுவான்.

நமக்கு ஏற்பட்ட நிறைய தோல்விகளும் நம் வெற்றிக்கு காரணமாக அமையும். ஒருவர் பெற்ற வெற்றியை தாங்க முடியாதவர்கள், அவரை ஏதேனும் வகையில் தோற்கடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

நாம் வெற்றி பெற்றுக் கொண்டே போகும் போது மற்றவர்களை பற்றி அறிய முடியாது. ஆனால், தோல்வி ஏற்படும் போது தான், யார் நல்லவர் கெட்டவர் என்ற சுயரூபம் நமக்கு தெரியும். பொதுவாக வெற்றி பெறும் போது நமது நண்பர்கள் கூட எதிரிகளாக மாறுவார்கள். ஆனால், தோல்வி அடையும் போது சில நண்பர்களும் நமக்குக் கிடைப்பார்கள்.

இதெல்லாம் வாழ்க்கையில் சகஜமாக எடுத்துக் கொண்டு எல்லோரிடமும் நட்புடன் பழக வேண்டும். சில தோல்விகள் தான் வேகமாக வளர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். தோல்வி வரும் போது அதற்காக துவண்டு போய் சாப்பிடாமல், இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து யோசிப்பதை விட்டுவிட்டு, இதுவும் வெற்றிக்கான பாடமாக எடுத்துக் கொண்டு நேர்மறையாக நமது எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

தோல்வியின் முடிவே உயர்வின் ஆரம்பமாக இருக்கும்.