தோல்வி என்னும சொல்லே தேவையில்லை. தோல்வி என்பது வெற்றிக்கு வழிவகுக்கும் ஒரு நண்பனே! ஆனால் அதை விரோதி என்று தவறாக அடையாளம் காண்கிறீர்கள்.
முதலில் தோல்வி என்பது என்ன என்று சிந்தியுங்கள். இலக்கை நோக்கி நீங்கள் செய்யும் முயற்சியில் தடையோ, தாமதமோ ஏற்பட்டால் அதைத் தோல்வி என்கிறீர்கள்.
தோல்வி வந்தவுடன் இனி முடியாது என்று எதிர்மறையாகச் சிந்திப்பவர்களே முயற்சியை நிறுத்திவிடுகிறார்கள். அது தோல்வியாக மாறிவிடுகிறது.
தடையோ, தாமதமோ ஏற்படும்போது, மேலும் முயல்வேன் என்று முடிவு செய்து உழைப்பவர்கள் ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்கிறார்கள். வெற்றி பெறுகிறார்கள்.
தோல்வி என்பது வெற்றிக்கான பயிற்சியே என்று நீங்கள் உணர வேண்டும். பெரிய இலக்குகளுக்கு மட்டுமல்ல. சாதாரண செயல்களுக்கும் கூட பயிற்சிதான் முழுமையை அல்லது வெற்றியைத் தந்திருக்கிறது.
நீங்கள் பிறந்த பிறகு ஒரே நாளில் ஓடிப் பழகிவிடவில்லை. எழ முயன்றபோது விழுந்தீர்கள். எழுந்து நின்ற பிறகும் பல முறை விழுந்தீர்கள். பலமுற விழுந்தும், எழுந்தும் பயிற்சி செய்தமையால்தான் இன்று செம்மையாக நடக்கிறீர்கள்.
நீங்கள் உணவு உண்ணத் தொடங்கியதை மீண்டும் நினைவுகூர்ந்து பாருங்கள். உணவை விரல்களால் அள்ளியபோது சிதறியது. வாயில் போடுவதற்குள் சிந்தியது. மீண்டும மீண்டும் போடுவதற்குள் சிந்தியது. மீண்டும் மீண்டும் சிந்திச் சிதறி முயன்றதனால் இன்று உணவு உண்பதில் தேர்ந்தவராகி விட்டீர்கள்.
முதல் வகுப்பில் சேர்ந்த பிறகு பள்ளியில் எழுத்த்துங்கியநிகழ்ச்சியை நினைத்துப்பாருங்கள். விரலகளுக்கிடையே பென்சிலைப் பிடிக்க இயலவில்லை. பிடித்தாலம் எழுத இயலவில்லை. எழுதினாலும சரியாக வரவில்லை. ஆனால் இன்று உங்கள் எழுத்து முத்து முத்தாக கண்ணைக் கவர்கிறது.
ஆகவே, நடத்தல், உண்ணல், எழுதுதல் போன்ற செயல்களுக்கும் தடையும், தாமதமும் வரவே செய்தன. ஆனால் தடையைக் கண்டு அஞ்சாமல் மீண்டும் மீண்டும் முயன்றதனால்தான் இன்று உங்களால் நடக்கவும், உண்ணவும், எழுதவும் முடிந்திருக்கிறது.
தடையைத் தாண்டி உங்களால் எப்படி வெற்றிபெற முடிந்தது. மீண்டும் மீண்டும் செய்கிற செயல் பயிற்சியாகிறது. பயிற்சிதான் வெற்றியைத் தருகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
தோல்வி என்பது வெற்றியின் படிக்கட்டு என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். என்ன பொருளில் அப்படிச் சொல்லப்படுகிறது?
இளம்பெண் ஒருத்தி நீளந்தாண்டல் போட்டியில் இரண்டு மீட்டர் தாண்டி தங்கப்பதகம் பெற்றதாகப் பத்திரிகையில் படிக்கறீர்கள்.
தங்கப்பதக்கம் பெற வேண்டும் என்று விரும்பியன்றே அவள் இரண்டு மீட்டர் தாண்டிவிடவில்லை. உயர்நிலைப் பள்ளியில் ஒரு மீட்டர் தாண்டினாள். மேல்நிலை வகுப்பில் மேலும் அதிகம் தாண்டினாள். தேசியப் போட்டியில் ஒன்றரை மீட்டர் தாண்டினாள். பல தடவை தோற்ற பின்னும், தடைகளைக் கண்டு சோர்ந்து போகாமல் மீண்டும் மீண்டும் முயன்றதனால் ஒலிம்பிக்கில் இரண்டுமீட்டர் தாண்டவும், தங்கப்பதக்கம் பெறவும் முடிந்தது. பதக்கம் பெறும் வரை முயற்சியை நிறுத்தவில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.
இராபர்ட் புரூஸ் கதையில் வரும் சிலந்திப்பூச்சி பன்னிரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றதாக படித்திருப்பீர்கள். பத்தாவது அல்லது பதினோராவது முயற்சியோடு அது பின் வாங்கியிருந்தால் வெற்றி பெற்றிருக்காது.
இந்தியாவின் மீது படையெடுக்க கஜினி முகமது பதினெட்டாவது தடவை வெற்றி பெற்றதாகப் படித்திருப்பீர்கள். பதினாறாவது அல்லது பதினேழாவது தடவைக்குப் பின் தன் முயற்சியை நிறுத்தியிருந்தால் அவனுக்கு வெற்றி கிடைத்திருக்காது.
மின்சார பல்பை உருவாக்கும் முயற்சியில் லேடக்ஸ் என்னும்பொருளைக் கண்டுபிடிக்க எடிசன் பதினாறாயிரம் தாவரங்களைப் பரிசீலித்து வெறி கண்ட செய்தி உங்களுக்குத் தெரியுமா? பதினைந்தாயிரத்து தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பதாவது முயற்சிக்குப்பிறகு சோர்ந்திருப்பாரானால் அவரால் மகத்தான வெற்றி பெற்றிருக்க முடியுமா?
ஆகவே, தோல்விக்கும், வெற்றிக்கும் உள்ள இடைத்தூரம் மேலும் ஒரு முயற்சி மட்டுமே.
நீங்கள் உயர்ந்த நிலைக்கு ஆசைப்படுகிறீர்கள். கனவு காண்கிறீர்கள். உற்சாகத்துடன் உழைக்கத் தொடங்குகிறீர்கள். தடையையும்,தோல்வியையும் கண்டு சோர்ந்து போகிறீர்கள் . முயற்சியை நிறுத்தி விடுகிறீர்கள்.
ஒரு முயற்சி நிறுத்தப்படும் போது தோல்வியாகிறது. தொடரப்படும்போது வெற்றியாகிறது. முடிந்தவரை முயற்சிபது வெற்றி தராது. முடிவு வரை முயற்சிப்பதே வெற்றியைத் தரும்.
நீங்கள் ஒரு தொழிலை அல்லது வணிகத்தை செய்கிறீர்கள். சில முயற்சிகளி வெற்றி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். எதிர்ப்பார்க்கிறீர்கள். தடை வரம்போது கைவிட்டுவிடலாமா என்று யோசிக்கிறீர்கள். இங்குதான் தோவி ஆரம்பம் ஆகிறது.
தடை தோல்வியின் அறிகுறி அல்ல. மேலும முயல வேண்டும் என்பதன் அறிகுறியே. தடை வரும்போதெல்லாம் மேலும் முயல்பவரிடம் தோல்வி மண்டியிடுகிறது.
ஆகவே, இத்தனை முறை முயன்று பார்த்துவிட்டு கைவிடலாம் என்று நினைத்தால் தோல்வியே கிடைக்கும். வெற்றி பெறும்வரை முயன்று கொண்டே இருந்தால் மகத்தான வெற்றி கிடைக்கும்.
இந்த வயதுவரை நீங்கள் பல தொழில்களில், வணிகத்தில் மாறி மாறி உழைத்திருப்பீர்கள். எல்லாவற்றிலும் தடைகள் வந்திருந்தால் நமக்கு எதுவுமே ராசியில்லை என்னும் தோல்வி மனப்பான்மை உங்களிடம் நிலை கொண்டுவிடும்.
புதிதாக வரும் வாய்ப்புகள் ஒருபுறம் உங்கள் ஆர்வத்தை மனப்பான்மை மறுபுறம் நின்று வேண்டாம். மாட்டிக்கொள்ளாதே என்று பயமுறுத்தும்.
நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்றால் அடுத்த முயற்சி. அடுத்த முயற்சி என்று துடிக்க வேண்டும். எத்தனை தடவை தான் முயற்சிப்பது! என்று எண்ணினால் வாழ்க்கையே தோல்வியில் முடியும்.
உங்களுக்குத் தெரிந்த வெற்றியாளர்களைக் கூர்ந்து கவனித்தால் அவர்களுடைய விடாமுயற்சிதான் அவர்களுக்கு வெற்றி தந்தது என்பதை நீங்கள் அறிய முடியும்.
விடாமுயற்சியும் தொடர் முயற்சியாக இருப்பன் உங்கள் வெற்றி உறுதிப்பட்டு விடும்.
நீங்கள் விடா முயற்சியையும் தொடர் முயற்சியையும் கைக்கொள்ள வேண்டும் என்றால் இயற்கைச் சட்டம் (Law of Natue) பற்றி அறிந்திருக்க வேண்டும்.
மனிதனாகப் பிறந்த எவருமே உயர வேண்டும். முன்னேற வேண்டும், வளர வேண்டும் என்பது இயற்கைச் சட்டம். இயற்கைச் சட்டத்தின்படி ஊக்கத்துடன் உழைக்கும் மனிதனின் கரம், இயற்கையின் கரத்துடன் இணைந்து விடுகிறது. இனையும் போது இயற்கையின் தரத்தில் இருக்கும். வெற்றி உங்கள் கைக்கு வந்துவிடுகிறது.
இயற்கையாகவே உங்கள் வெற்றித்தேர் முன்னோக்கி நகர்து கொண்டுள்ளது. இயலாது,முடியாது, கிடைக்காது. நடக்காது போன்ற எதிர் மறைத் தடைக்கட்டைகளை இட்டு நீங்கள்தான் அதன் ஓட்டத்தைத் தடை செய்துவிட்டீர்கள்.
முடியும், இயலும், நடக்கும், கிடைக்கும் என்று எப்போதும் எண்ணத்தொடங்கிவிட்டால் அடுத்த முயற்சி, அடுத்த தொழில் என்று தொடங்குவீர்கள், விடாமுயற்யும், தொடர் முயற்சியும் உங்கள் இயல்பாக மாறிவிடும்.
தோல்வி நிரந்தரமானதல்ல, அதைத்துரத்தி விட முடியும் என்னும் ஞானம் உங்களுக்கு வந்துவிடும்.
தோல்வி உங்களைத் துரத்தும் நிலை மாறி, நீங்கள் தோல்வியைத் துரத்தி அடித்து விடுவீர்கள்.
அதன்பின், உங்களுக்கு வெற்றிமேல் வெற்றி வந்து சேரும்
No comments:
Post a Comment