Monday, October 16, 2017

வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம் !

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன்  திடீரென இறந்து போனான்., 
.
அவன் அதை உணரும் போது, கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.. ]
.
#கடவுள் :
"வா மகனே.... நாம் கிளம்புவதற்கான  நேரம் வந்து விட்டது.."
.
#மனிதன் :
"இப்பவேவா?  இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"
.
#கடவுள் :
"மன்னித்துவிடு மகனே.... உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது.."
.
#மனிதன் :
"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
.
#கடவுள் :
"உன்னுடைய உடைமைகள்....."
.
#மனிதன் :
"என்னுடைய உடைமைகளா!!! என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.... எல்லாமே இதில் தான் இருக்கின்றனவா?"
.
#கடவுள் :
"நீ கூறியவை அனைத்தும் உன்னுடையது அல்ல.. அவைகள் பூமியில் நீ வாழ்வதற்கு தேவையானது.."
.
#மனிதன் :
அப்படியானால், "என்னுடைய நினைவுகளா?"
.
#கடவுள் :
"அவை காலத்தின் கோலம்...."
.
#மனிதன் :
"என்னுடைய திறமைகளா?"
.
#கடவுள் :
"அவை உன் சூழ்நிலைகளுடன்  சம்பந்தப்பட்டது...."
.
#மனிதன் :
"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?"
.
#கடவுள் :
"மன்னிக்கவும்....... குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழிகள்...."
.
#மனிதன் :

"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்களா?"
.
#கடவுள் :
"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானவர்கள் அல்ல, அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்...."
.
#மனிதன் :
"என் உடலா?"
.
#கடவுள் :
"அதுவும் உனக்கு சொந்தமானதல்ல.... உடலும் குப்பையும் ஒன்று...."
.
#மனிதன் :
"என் ஆன்மா?"
.
#கடவுள் :
"அதுவும் உன்னுடையது அல்ல..., அது என்னுடையது......."
.
●மிகுந்த பயத்துடன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன், காலி பெட்டியைக் கண்டு அதிர்ச்சியடைகிறான்..கண்ணில் நீர் வழிய கடவுளிடம், "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" 
எனக் கேட்க,
.
#கடவுள் சொல்கிறார்,
"அதுதான் உண்மை.. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது..வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்..
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ் எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே........"
.
-- ஒவ்வொரு நொடியும் வாழ்
.
-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்
.
-- மகிழ்ச்சியாக வாழ் அது மட்டுமே நிரந்தரம்..
.
-- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது
.
வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்.🙏

ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது. 

1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.

2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது. 

3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது

4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.

5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.

6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

8. சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.

9. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.

10. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை(நம்பிக்கை மட்டுமே). சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

விரும்பவில்லை ! விரும்புவதே இல்லை !

இறப்பு எல்லோருக்கும் வந்தே தீரும் ! ஆனால் யாரும் ~_இறக்க விரும்புவதில்லை_~!

உணவு எல்லோருக்கும் வேண்டும் ! ஆனால் யாரும் ~_பயிர் செய்ய விரும்புவதில்லை_~ !

தண்ணீர் எல்லோருக்கும் வேண்டும் ! ஆனால் யாரும் அதை ~_சேமிக்க விரும்புவதில்லை_~ !

பால் எல்லோருக்கும் வேண்டும்! ஆனால் யாரும் ~_பசுவை வளர்க்க விரும்புவதில்லை_~ !

நிழல் எல்லோருக்கும் வேண்டும் ! ஆனால் யாரும் ~_மரம் வளர்க்க விரும்புவதில்லை_~ !

மருமகள்  எல்லோருக்கும் வேண்டும் ! ஆனால் யாரும் மகளை பெற்றெடுக்க விரும்பவில்லை_~ !

நல்ல செய்தி படித்து ஆஹா வென, புகழ்பவர் அதை ~_மக்களிடம் கொண்டு செல்ல விரும்புவதே இல்லை_~ !

25 வருடங்களுக்கு முன் :( படியுங்கள்)


1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக் கொண்டோம்..!
.
2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள்..!
.
3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து உடுத்தி கொண்டோம்..!
.
4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்..!
.
5. எல்லா கல்யாணத்திலும் மதிய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்..!
.
6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும் எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்..!
.
7. பெரும்பாலும் பேருந்தில் தான் போனோம்..!
.
8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர்..!
.
9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்..!
.
10. பாடல்களின் வரிகள் புரிந்தன..!
.
11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்..!
.
12. ரஜினி கமல் 'பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ் கிடைத்தது..!
.
13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா பார்த்தோம்..!
.
14. காணும் பொங்கலுக்கு உறவுகளை பார்த்தோம்..!
.
15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது..!
.
16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா வந்தார்..!
.
17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு பயந்தோம்..!
.
18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர்..!
.
19. எல்லாவற்றையும் விட காலை பொழுதுகள் ரம்மியமாக இருந்தது,
சுவாசிக்கவும் யோசிக்கவும்.
.
முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம்..!

"நாகரீகப் போா்வை" போா்த்தி நாசமாய் போனோம்..!

அன்றைய வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருந்தன!

இன்று பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனது!

இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும்

தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது... 


படித்ததில் பிடித்தது. பிடித்திருந்தால் பகிருங்கள்

Monday, August 7, 2017

உங்க உயிர் நண்பனும் இப்படித்தானா? க்ராஸ் செக் பண்ணிக்கோங்க !!!

நாம ஆயிரம் பேர்கூட பழகினாலும், நமக்கு நெருக்கமான நண்பர்கள்னு சொல்லிக்க ஒண்ணு ரெண்டு பேர்தான் இருப்பாங்க. அவங்களும், அவங்களுக்கும் நமக்கும் இடையே உள்ள நட்பும் எப்படி இருக்கும்னு சொல்றேன். கேட்டு க்ராஸ் செக் பண்ணிக்கோங்க மை ப்ரெண்ட்ஸ்... 

நண்பர்கள்

'அவன் பழக்கவழக்கத்தை நிறுத்துற வரைக்கும் நீ உருப்பட மாட்ட' என உங்கள் அம்மாவோ, மனைவியோ கையில் சப்பாத்திக்கட்டையையும், துடைப்பக்கட்டையையும் வைத்துக்கொண்டு உங்கள் ஜிகிடி தோஸ்த்தின் பெயரைச் சொல்லித்தான் உங்களை மிரட்டி சத்தம் போடுவார்கள். 

நீங்க `காமெடி'னு பேப்பர்ல எழுதிக் கொடுத்தாலே, அதை படிச்சுட்டு அல்லையில் பிடிச்சுக்கிற அளவுக்கு விழுந்து விழுந்து சிரிப்பாங்க. கொஞ்ச நேரத்தில் ‘கொலை கேஸ்ல உள்ள போயிடுவோமோ?’ என, உங்களை நினைக்க வைத்து கிலி கிளப்புவார்கள். அவர்கள் ஏன் சிரிக்குறீங்க, எதுக்கு சிரிக்குறீங்கனு உங்களைச் சுற்றி உள்ள யாருக்குமே தெரியாது. ஏன், உங்களுக்கே சரியா தெரியாதுன்னா பார்த்துக்கோங்களேன்.

உங்களுக்கு போர் அடிக்கும்போதெல்லாம், அவரைத்தான் குனிய வெச்சு முதுகுல கும்மு கும்முனு கும்மி டைம்பாஸ் பண்ணலாம்னு தோணும். அவங்க தோளைப் பிடிச்சு இழுத்து, சங்கை கடிக்கிறது நமக்கு சந்தோஷத்தைத் தரும். மல்லாக்க படுக்கப்போட்டு வயித்துலேயே வங்கு வங்குனு மிதிக்கிறது ஒருவித மகிழ்ச்சியைத் தரும்.

நீங்கள் ஆஸ்பத்திரியில் முடியாமல் கிடக்கும்போது உங்களுக்கு ஒரே ஒரு எலுமிச்சைப்பழத்தை வாங்கிக் கொடுத்துவிட்டு, நீங்கள் வாங்கி வைத்திருக்கும் நாலைந்து சாத்துக்குடிகளை ஜூஸ் போட்டுக் குடித்துவிட்டு ‘வரேன்டா’ எனக் கிளம்புவார்கள். அந்த எலுமிச்சம்பழத்தையும் ஏதாவது கோயிலில் இருந்து ஆட்டையைப் போட்டிருப்பார்கள். தொட்டுப்பார்த்தால் டேபிள் டென்னிஸ் பந்து போல் அவ்வளவு கனமாக இருக்கும்.

அவர்கள் நன்றாக இருந்தால் உங்களுக்கு வயிறு கபகபனு எரிந்து வாய் வழியாக புகை வரும். அதே அவர்கள் கஷ்டப்படுறதைப் பார்க்கும்போது, நமது கண்கள் கலங்கி, நாடி நரம்பு தெறித்து, நாக்குபூச்சி வெளியே வரும். நட்புடா... நண்பேன்டா...

உங்கள் குடும்பத்தை அவரும், அவர் குடும்பத்தை நீங்களும் மாறி மாறி ஃப்ளோவில் ஏழெட்டு தலைமுறையை தோண்டி எடுத்து கிழி கிழி என கிழிப்பீர்கள். ஆனால், அவர்களை நேரில் பார்க்கும்போது ‘அங்கிள்... ஆன்ட்டி...’ என மரியாதையோடு மட்டையாய் மடங்குவீர்கள். அது நடிப்பு இல்ல, நிஜம். 

ஒருவருக்கு ஒருவர் என்ன நினைக்கிறீர்கள் என்பதை மூஞ்சியைப் பார்த்தே புரிந்துகொள்வீர்கள். அதிலும் நீங்கள் பேசுவது பல சமயங்களில் உங்களுக்கு மட்டுமே புரியும், மற்றவர்கள் தலையைப் பிய்த்துகொண்டு விட்டத்தைப் பார்த்து உட்கார்ந்துவிடுவார்கள். அடிக்கடி இருவர் மட்டும் கூட்டத்தில் இருந்து கழன்று போய் சொந்த கதை, சோகக் கதை எல்லாம் பேசி கண்ணீர் மல்க கதறிக் கொண்டிருப்பீர்கள்

நீங்கள் உங்கள் நண்பரையும், உங்கள் நண்பர் உங்களையும் வெறித்தனமாய் கலாய்த்து கதறவிடுவீர்கள். பெரும்பாலும், உங்களுக்கு உங்கள் நண்பர்தான் பட்டப்பெயர் வைத்திருப்பார். ஆனால், வேறு யாராவது உங்களை கலாய்த்தால், கலாய்ப்பவருக்கு கும்பாபிஷேகம் உறுதி. 

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

கண்ணன் - குசேலன் முதல் ரஜினி கமல் வரை நட்புக்கு இலக்கணமான ஐந்து ஜோடிகள்! #HappyFriendshipDay
நட்புக்கு இலக்கணமான பல்வேறு நபர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்டவர்கள் சதாப்தங்களாக நட்பை மனநிறைவுடன் போற்றி வருகிறார்கள். அவர்களுள் சிலர்... Friendship Day Special Article
நீங்க ஒண்ணுமண்ணா கட்டிப்பிடிச்சு பாசமழை பொழிவதைப் பார்த்து இந்தச் சமுதாயம் ‘அவிய்ங்களா நீங்க?, நீங்க தோஸ்தா இல்லை தோஸ்தானாவா?’ என எக்குத்தப்பாய் சந்தேகப்படும். இது வெறும் நட்புதான் என சூடம் அடித்து சத்தியம் செய்தாலும் சில பக்கிகள் நம்பாது. நம்புங்கய்யா... நட்புய்யா... நேத்தே நண்பர்கள் தினம் முடிஞ்சுட்டாலும் இன்னைக்கும் `நண்பர்கள் தினம் வாழ்த்துகள்' அனுப்புற குழந்தைய்யா அவங்க...

Wednesday, July 12, 2017

உடல் எடையை குறைக்க

இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சனை. அதனை கட்டுப்படுத்த பல கடுமையான டயட்டுக்களில் பலர் ஈடுபடுகின்றனர். ஏனெனில் கடுமையான டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் தான் காரணம்.

அவ்வாறு கடுமையான டயட்டை மேற்கொள்ளும் போது, பசியுடன் பல உணவுகளை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அதனால் என்ன பயன்? காலப்போக்கில் மெதுவாக உடல் எடை மறுபடியும் கூடி விடும். ஆகவே உடல் எடையை மெதுவாக குறைக்க முயல வேண்டும்.

மேலும் வல்லுனர்களும் கடுமையான டயட் முறையை கையாளாமல், எளிய முறைகளின் மூலம் உடல் எடையை குறைக்க முயலுமாறு கூறுகின்றனர். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது தான்.

சரி, இப்போது உடல் எடையை குறைக்க கடுமையான டயட்டை பின்பற்றுவதை விட, கீழ்கூறிய எளிய வலியில்லா வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

  தினமும் காலை உணவை உண்ணுங்கள்:-

காலை உணவை தவிர்த்தால் கலோரிகளை எரிக்கலாம் என்று பலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு தவிர்க்கும் போது ஏற்படும் பசியானது, மற்ற வேளைகளில் அதிகமாக உண்ணத் தூண்டும். காலை உணவை தவிர்ப்பவர்களை விட அதனை உண்ணுபவர்களுக்கே பி.எம்.ஐ குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. மேலும் பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ அவர்களால் தான் நன்றாக வேலை செய்ய முடியும். ஆகவே ஒரு கிண்ணம் நிறைய ஓட்ஸை நிறைத்து, அதில் பழங்கள் மற்றும் குறைவான கொழுப்பினை கொண்ட பால் பொருட்களை சேர்த்து காலையில் உண்டால் ஆரோக்கியமான நாள் தொடங்கும்.

உணவை நன்றாக மென்று உண்ணுங்கள்:-

சாப்பிடுவதற்கு 20 நிமிடம் என்று ஒரு நேரத்தை ஒதுக்கி மெதுவாக உண்ணுங்கள். இது டயட் மூலம் இல்லாமல் உடல் எடையை குறைக்க முதன்மையான வழியாகும். ஒவ்வொரு வாய் உணவையும் நிதானமாக மென்று உண்ணுங்கள்.

அதிகமாக தூங்கி எடையை குறையுங்கள்:-

தினமும் இரவு ஒரு மணிநேரம் கூடுதலாக தூங்கினால், ஒரு வருடத்தில் 7 கிலோ வரை உடல் எடை குறையும் என்று மிஷிகன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். இவரின் ஆராய்ச்சி படி, தூங்கும் போது உடல் எந்த வேளையில் ஈடுபடாமல் இருப்பதால், சுலபமாக 6 சதவீதம் வரை கலோரிகளை எரிக்கலாம்.

அதிக அளவில் காய்கறிகளை உண்ணுங்கள்:-

ஒவ்வொரு நாள் இரவும் ஒரே ஒரு காய்கறியை மட்டும் உண்ணுவதற்கு பதில் மூன்று காய்கறிகளை கலந்து உண்ணுங்கள். அதிக வகை இருந்தால் அதிகமாக உண்ணத் தூண்டும். அதனால் அதிகமான பழங்களையும், காய்கறிகளையும் உண்டு உடல் எடையை குறைக்கலாம்.

சூப் உள்ளே வரும் போது, உடல் எடை வெளியேறும்:-

ஒவ்வொரு உணவிற்கு முன்பும் சூப் குடியுங்கள். இது பசியை ஆற்றி குறைவாக உண்ண வைக்கும். கெட்டியான சூப்பை தவிர்க்கவும். ஏனெனில் அதில் அதிக கொழுப்பும், கலோரிகளும் அடங்கியிருக்கும்.

அளவு சிறியதாக உள்ள பழைய ஆடைகளின் மீது பார்வையை பதியுங்கள்:-

உங்களுக்கு பிடித்த சிறிய அளவை கொண்ட பழைய ஆடைகளை கண் பார்வையில் படும் படி மாட்டி வைத்து, அதனை தினமும் பாருங்கள். இவ்வாறு சிறிய அளவுள்ள ஆடையை மனதில் வைத்து பாடுபட்டால், அதை அணியும் அளவிற்கு எடையை குறைக்கலாம்.

பிட்சா உண்டாலும் ஆரோக்கியம் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்:-

பிட்சா சாப்பிடும் போது மாமிசத்திற்கு பதில் காய்கறிகளை தேர்வு செய்யுங்கள். இதனாலும் கூட 100 கலோரிகளை எரிக்க முடியும்.

சர்க்கரை பயன்பாட்டை குறைக்கவும்:-

சோடா போன்ற சர்க்கரை கலந்த பானங்களை பருகுவதற்கு பதிலாக, தண்ணீர் அல்லது கலோரிகளற்ற பழச்சாறுகளை பருகுங்கள். இதனால் ஒரு 10 டீஸ்பூன் அளவிலான சர்க்கரையை தவிர்க்கலாம்.

நீளமான மெல்லிய டம்ளரை பயன்படுத்துங்கள்:-

குட்டையான அகலமான டம்ளரை பயன்படுத்துவதற்கு பதிலாக, நீளமான மெல்லிய டம்ளரை பயன்படுத்துங்கள். இது டயட் இருக்காமல், உங்கள் கலோரிகளை குறைக்க துணை புரியும். இதனை பின்பற்றினால் ஜூஸ், சோடா, ஒயின் அல்லது மற்ற பானங்கள் பருகும் அளவை 25%-30% வரை குறைக்கலாம்.

மதுபானம் குடிப்பதை குறைக்கவும்:

மதுபானத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தை விட, கலோரிகள் தான் அதிகமாக உள்ளது. அது ஒருவரது சுய கட்டுப்பாட்டை இழக்க வைப்பதால் சிப்ஸ், நட்ஸ் மற்றும் இதர நொறுக்குத் தீனியை அதிக அளவில் உட்கொள்ள வைக்கும்.

க்ரீன் டீ பருகுங்கள்:-

தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ பருகுவதால் கூட உடல் எடை குறையும்.

யோகாவை தேர்ந்தெடுங்கள்:-

யோகா செய்யும் பெண்கள், மற்றவர்களை விட குறைந்த எடையுடன் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. உடல் எடை குறைவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லையா? சீரான முறையில் யோகா செய்பவர்களுக்கு சாப்பிடுவதில் ஒரு மன கட்டுப்பாடு ஏற்படும். உதாரணத்திற்கு, அதிக உணவு இருக்கும் ஒரு உணவகத்திற்கு சென்றாலும் கூட, அளவாக தான் உண்ணுவார்கள். ஏனெனில் யோகாவால் கிடைக்கும் அமைதி, உணவு உண்ணுவதில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும்.

வீட்டில் உண்ணுங்கள்:-

வாரம் ஐந்து முறையாவது வீட்டில் சமைத்து உண்ணுங்கள். நல்லபடியாக உடல் எடை குறைப்பவர்களின் இரகசியத்தில் இதுவும் ஒன்று என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதை பற்றி யோசிப்பதை விட சமைப்பதே சுலபம்.

உண்ணும் போது சிறிய இடைவேளை தேவை:-

சிலர் இயற்கையாகவே ஒரு வாய் உணவிற்கும் அடுத்த வாய் உணவிற்கும் சிறிய இடைவேளை விடாமல் சாப்பிடுவார்கள். இந்த இடைவேளையில் பொறுமையாக இருங்கள், வேகமாக அடுத்த வாய் உணவை திணிக்காதீர்கள். பேசி கொண்டே பொறுமையாக தட்டை காலி செய்யுங்கள். இது வயிற்றை அடைக்காமல் பசியை போக்கும். பலர் இதை தவறவிடுவார்கள்.

வீரியமிக்க புதினா சூயிங் கம்மை மெல்லுங்கள்:-

நொறுக்குத் தீனி உண்ண தூண்டும் போது, சர்க்கரை இல்லாத வீரியம் அதிகமுள்ள சூயிங் கம்மை மெல்லுங்கள். வேலை முடிந்த நேரம், பார்ட்டிக்கு செல்லும் நேரம், தொலைகாட்சி பார்க்கும் நேரம் அல்லது இணையதளத்தில் உலாவும் நேரம் போன்றவைகள் எல்லாம் கணக்கில்லாமல் நொறுக்குத் தீனியை உண்ணத் தூண்டும் நேரமாகும். அதிலும் பிடித்த சுவையுள்ள சூயிங் கம்மை உண்ணுவதால் மற்ற நொறுக்குத் தீனிகளை மறப்பீர்கள்.

உணவு தட்டின் அளவை குறைக்கவும்:-

உணவு தட்டை 12 இன்ச்-க்கு பதிலாக 10 இன்ச்சாக மாற்றுங்கள். தானாகவே குறைத்து உண்ண ஆரம்பித்து விடுவீர்கள். தட்டின் அளவு கூட கூட உண்ணும் உணவின் அளவும் அதிகரிக்கும் என்று கார்னெல் ப்ரையன் வான்சிக் கூறியுள்ளார்.

உண்ணும் அளவை சற்று குறைக்கவும்:-

வேறு ஒன்றுமே செய்ய தோன்றவில்லையா? பேசாமல் நீங்கள் உண்ணும் அளவை 10%-20% வரை குறையுங்கள், உடல் எடையும் குறையும். வீட்டிலும் சரி, உணவகத்திலும் சரி நம் தேவைக்கு அதிகமாகவே பரிமாறப்படுகிறது. ஆகவே உண்ணும் உணவின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க அளந்து உண்ணுங்கள்.

உணவை அதிகமாக சமைக்காதீர்கள்:-

உணவை நீண்ட நேரம் சமைத்தால், அதிலுள்ள ஊட்டச்சத்து அனைத்தும் வெளியேறிவிடும். போதுமான ஊட்டச்சத்து இல்லாத போது, உண்ட திருப்தி உங்களுக்கு ஏற்படாது. அதனால் மீண்டும் உண்ணத் தூண்டும். ஆகவே முடிந்த வரை பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்களை உண்ணுங்கள். அவித்த வேக வைத்த காய்கறிகள் மற்றும் மாமிசங்களை உட்கொள்ளுங்கள். குறிப்பாக மைக்ரோ ஓவனில் சமைப்பதை தவிர்க்கவும்.

உணவிற்கு முன் பழங்கள்:-

உணவை உண்ணுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு பழங்களை உண்ணுங்கள். இதனால் பழங்கள் வேகமாக செரிமானம் ஆகும். வெறும் வயிற்றில் பழங்களை உண்டால், உடலின் நச்சுத்தன்மை நீங்கி, அதிக ஆற்றல் கிடைத்து உடல் எடை குறையும்.

தக்காளி சாஸை பயன்படுத்துங்கள்:-

கொழுப்புச்சத்து உள்ள மற்ற சாஸ்களை விட, தக்காளி சாஸில் கலோரிகளின் அளவு குறைவாக உள்ளது. இருப்பினும் அதனை அளவாக பயன்படுத்துங்கள்.

மாமிசத்தை குறைக்கவும்:

அதிக அளவில் சைவ உணவை உட்கொண்டால், அது உடல் எடை குறைய உதவி புரியும். அசைவ உணவை உண்ணுபவர்களை விட, சைவ உணவை உண்ணுபவர்கள் தான் வேகமாக ஒல்லியாவார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பயறு வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு காரணம் அதில் அடங்கியுள்ள நார்ச்சத்து.

100 கலோரிகளை எரிக்கவும்:-

தினமும் 100 கலோரிகளை எரித்தால், எந்தவித டயட் முறையை பின்பற்றாமல் ஒரு வருடத்தில் 5 கிலோ வரை குறைக்கலாம். இந்த நடவடிக்கைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றுங்கள்: 20 நிமிடங்களுக்கு 1 மைல் தூர நடை, 20 நிமிடங்களுக்கு தோட்டத்தில் களை எடுத்தல் அல்லது செடிகள் நடுதல், 20 நிமிடங்களுக்கு புல் தரையை ஒழுங்குபடுத்துதல், 20 நிமிடங்களுக்கு வீட்டை சுத்தப்படுத்துதல் அல்லது 10 நிமிடங்களுக்கு ஓடுதல்.

இரவு 8 மணிக்கு மேல் உண்ணாதீர்கள்:-

இரவு உணவை 8 மணிக்கு முன்பே உண்ணுங்கள். அதனால் உணவு நேரத்திற்கு முன்பு நொறுக்குத் தீனியை நொறுக்கமாட்டீர்கள். இதனை பின்பற்ற கஷ்டமாக இருந்தால், இரவு உணவை முடித்ததும் மூலிகை தேநீர் பருகுங்கள் அல்லது பற்களை துலக்குங்கள். இது கண்டதை உண்ண தூண்டாது.

உணவு ஏடு தயார் செய்துக் கொள்ளுங்கள்:-

தினமும் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை நேர்மையாக எழுத ஆரம்பியுங்கள். இது தினமும் எவ்வளவு உண்ணுகிறீர்கள் என்பதை தெளிவாக எடுத்துரைக்கும். நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களில் இதுவும் ஒன்று. இதை பலர் செய்வதற்கு அலுத்து கொள்வதும் உண்டு. அதற்கு காரணம் இதனை அவர்கள் ஒரு கடினமான வேலையாக பார்ப்பதால் தான். ஆனால் இதற்கு சில நிமிடங்களே ஆகும்.

கொண்டாட்டம்:-

சோடா குடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டீர்களா? அதிகமாக உண்ணும் பழக்கத்தை கைவிட்டு விட்டீர்களா? உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். இதனால் உடல் எடையை குறைக்கும் பணியில் வெற்றிப் பெற போவது உறுதி.

புத்திசாலித்தனம்

ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தார்.அவரிடம் இருந்த ஒரு பெரிய கப்பல் பழுதாகி விட்டது.ஊரில் உள்ள பெரிய பெரிய மெக்கானிக் எல்லாம் வரவழைத்து கப்பலின் இஞ்சினை சரி செய்ய சொன்னார் ஆனால் யாராலும் இஞ்சினில் என்ன பழுது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு வயதான மெக்கானிக் தான் அதை பழுது பார்த்து தருவதாக சொன்னார்.சரி என்று அவரும் ஒப்புக் கொண்டார்.மெக்கானிக் பெரிய பையில் பழுது பார்க்கும் பொருட்கள் எல்லாம் வைத்து இருந்தார்.கப்பல் வியாபாரிக்கு இவர் மேல் நம்பிக்கை வந்து விட்டது.

அந்த வயதான மெக்கானிக் இஞ்சினை நன்றாக நாலா பக்கமும் சுற்றி வந்து பார்த்தார் .பிறகு தன் பையில் இருந்து சுத்தியை எடுத்து ஒரு இடத்தில் ஓங்கி அடித்தார்.இஞ்சினை ஸ்டார்ட் பண்ணி பார்த்தார் அதுவும் வேளை செய்ய ஆரம்பித்துவிட்டது.

கப்பல் வியாபரியிடம் அந்த மெக்கானிக் நாளை என் கடையில் வேலை செய்யும் பையனிடம் பில் கொடுத்து அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

அடுத்தநாள் ஒரு பையன் பில் எடுத்து வந்து நீட்டினான்.அதை பார்த்த கப்பல் வியாபாரி அதிர்ச்சி அடைந்தார்.அதில் 1 லட்சம் ரூபாய் என்று போட்டு இருந்தது, அவர் அந்த பையனிடம் தெளிவாக பில் போட்டு கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அடுத்த நாள் வேறு ஒரு பில்லுடன் வந்து இருந்தான்,அதில்

1-சுத்தியலால் அடித்ததற்கு 5 ரூபாய்.
2-எங்கு அடிக்க வேண்டும் என்று கண்டுபிடித்தற்கு 99,995 ரூபாய்

என்று எழுதி இருந்தது.

மண்டையில மூளை இருந்தா மட்டும் போதாதுங்க அதை எப்படி பயன்படுத்தனும்னு தெரிஞ்சிருக்கனும்…