Friday, November 9, 2018

பென்சில் வாழ்க்கை தத்துவம்


பென்சில் போல் வாழ்ந்தால் வெற்றிதான்,ஓர் கதை மூலம் விளக்கம்.........

ஒரு மனிதர் தன் வாழ்வில் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றி பெற்று வந்தார் வெற்றிக்குயார் வழிகாட்டி என்று நிருபர்கள் கேட்டார்கள். “இவர்தான்” என்று சுட்டிக் காட்டினார். 

அவர் காட்டிய திசையில், தங்க பிரேம்போட்டு ஒரு பென்சில் புகைப்படம்! 

நிருபர்கள் திகைத்தார்கள். அவர் சொன்னார், இந்தப் பென்சில் எனக்கு 5 விஷயங்களைக் கற்றுத் தந்தது.

பல விஷயங்களை எழுதுவதற்கும், வரைவதற்கும் தன்னை முழுமையாக நம் கைகளில் ஒப்படைக்கிறது.
அவ்வப்போது நாம் அதை சீவுகிறோம். சீவும் போதெல்லாம் கூர்மையடைகிறது.
தவறுகள் செய்தாலும், அவற்றை அழிப்பதற்கு இடம் கொடுக்கிறது.
வெளியே எப்படியிருந்தாலும் உள்ளே உடையாமல் ஒரு சீராய் இருக்கிறது.
சின்னஞ்சிறிய பென்சிலாகும் அளவு சீவப்பட்டாலும் எழுதிக் கொண்டிருக்கிறது. கடைசி வரை தன் சுவட்டினைக் காகிதத்தில் பதிக்கிறது.

 இதைப் பார்த்துதான் என் வாழ்க்கையை நான் சீரமைத்துக் கொண்டேன்.

பல அரிய விஷயங்களை நிகழ்த்த நான் ஒரு கருவி தான் என்கிற அடக்க உணர்வோடு என்னைக் கடவுளின் கைகளில் ஒப்படைத்திருக்கிறேன்.

சோதனைகள் வரும்போதெல்லாம், மேலும் மேலும் கூர்மையாகிக் கொள்கிறேன்.
தவறுகள் செய்திருப்பதாகத் தெரிந்தால் உடனே திருத்திக் கொள்கிறேன்.
வெளிச்சூழலில் புகழ் வந்தாலும் பழிச்சொல் வந்தாலும் உள்ளே உடையாமல் உறுதியாய் இருக்கிறேன்.
கடைசி வரையில் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
காலத்தில் நம் சுவட்டைப் பதித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.

கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, பெரிய பெரிய விஷயங்கள் பென்சிலில் இருப்பது புரிந்தது!

முயற்சி - தத்துவங்கள்


முயற்சியின் பாதைகள் கடினமானவை ஆனால் முடிவுகள் இனிமையானவை தொடர்ந்து முயலுங்கள் கனவுகள் நனவாகும் வரை.

யாரையும் குறைத்து எடை போட்டு விடாதீர்கள் ஒரு வேளை உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைத்து இருந்தால் உங்களை விட திறமைசாலியாக இருந்திருப்பார்கள்.

விட்டு கொடுக்க கற்று தந்தார்கள். ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள கற்று தந்தார்கள். சகித்து வாழக் கற்று தந்தார்கள். துன்பத்தில் தோல் கொடுக்க கற்று தந்தார்கள். இருப்பதைக் கொண்டு வாழக் கற்று  தந்தார்கள் நம் பெற்றோர்.

இந்த மண்ணில் பிறந்த மனிதன் தனக்கு எந்த தகுதியும் இல்லை என புலம்பக் கூடாது. ஏனென்றால் மனிதனாகப் பிறந்ததே ஒரு தகுதி.

எதையும் தவறாக புரிந்து கொள்வதிலேயே சிலரது வாழ்க்கை வீணாகிறது.

நாம் உதவியவர் நமக்கு நிச்சயம் உதவுவார் என்ற  எதிர்பார்ப்பு இல்லாதவரை நமக்கு மன அமைதி உண்டு

அதிர்ஷ்டம் - தத்துவம்


அதிர்ஷ்டம் என்று குறிப்பிடுவது - எண்ணங்களுக்கே அல்லது ஏதேனும் முயற்ச்சிக்கோ உரமிடும் வகையில் கிடைக்கும் சக்தியை (உதவிகள்,பணம்,புகழ் ......) அதிர்ஷ்டம் எனலாம் இது நேரடியாகவே மறைமுகமாகவே கிடைக்கும்.

அதிர்ஷ்டம் சம்பந்தமான கருத்துக்கள்
ஒருவருக்கு நல்லநேரம் பிறந்து விட்டால் அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும்.
சுக்கிரன் பார்த்து விட்டான்
இலட்சுமி கடாச்சம் உள்ளவர்
செல்வதேவதை பார்த்துவிட்டாள்.
இப்படியாக அதிர்ஷ்டத்தை பணம் மூலமாக கணக்கிடுகின்றனர்.

அதிர்ஷ்டத்தை அடையும் வழிமுறைகள்
01. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா ஊக்கம் உடையான் உழை'- திருக்குறள்
02.வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு - திருக்குறள்
03.'எதுவுமே சுலபமாவதற்கு முன் கடினமாக இருக்கிறது' - ஷிவ்கரோ
04.'பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்' என்பது பழமொழி
05.'வாழ்வு வருங்கால் வராது கண் தூக்கம்' என்பது பழமொழி
06.'முயலும் வரை முயல்வதல்ல முயற்சி முடியும் வரை இடைவிடாமல் முயல்வதே முயற்சி' - எங்கோ கேட்டது

.எங்கே இந்த விடா முயற்சி இருக்கிறதோ, அங்கே அதிர்ஷ்ட வாசல் திறந்து கொள்கிறது

எங்கே ஊக்கமும் அதன் பலனான விடாமுயற்சியும் இருக்கிறதோஇ அங்கே செல்வம்,அதிர்ஷ்டம் வழி கேட்டுக்கொண்டு வரும்.

மகிழ்ச்சியான மனநிலை வரும்போது அதிர்ஷ்டத்தின் கதவு திறந்துகொள்கிறது.

ஒளியை நோக்கிச் சென்றால் நிழல் நம் பின்னால் தானாக பின்தொடர்ந்து வரும்.

மனம் தளராமல் மீண்டும் முயற்சிக்கும்போது வெற்றிக்கனி அதாவது அதிர்ஷ்டத்தை நம் கைக்கு எட்டவைக்கலாம்.

தீய பழக்கங்களில் இருந்து வெளியே வரும்போது அதிர்ஷ்டத்தின் கதவு நமக்கு திறந்துகொள்கிறது.

ஆனால் ஒரு சிலருக்கு மாத்திரமே இவ் அதிர்ஷ்டமானது சொந்தமாகவுள்ளது .ஏன்? எப்படி? என்றுபார்போமானால் ,அவர்கள்
தாய் தந்தையரின் செல்வாக்கு,அரவணைப்பு.
 வாழும்மிடம் (வாஸ்து).
 ஜாதக அமைப்பு ("நந்தி வாக்கியம்" என்ற ஞானநூலின் செய்யுள் ).
உழைப்பும், தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும், இன்முகப் பேச்சும் இருத்தல்.
செல்வாக்கு.
அதிர்ஷ்டத்தை குறைக்கும் செயல்முறைகள்
சில தீய பழக்கங்கள்.
விழிப்புணர்வு இன்மை.
இக்கரைக்கு அக்கரை பச்சை.
ஒரு செயலைச் செய்யும் முன் நன்றாக திட்டமிடாமை.
செயல் இன்றி பலன் இல்லை என்பதை உணரவேண்டும்
மகிழ்ச்சியற்ற மனநிலை
வெற்றி மனப்பான்மையின்மை.
உள்ளத்தில் உயர்வு உள்ளல்லல்
பொறுத்திருக்க வேண்டும் என்ற உணர்வற்ற நிலை
தோல்வியைக் கண்டு பயந்து பின்வாங்குதல்

அதிர்ஷ்டம்! நம் இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா?
அது இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா?

மனித வாழ்க்கை எதற்கு?


நிச்சயமாக கேள்வி ஒன்றிருப்பின் விடை கட்டாயமாக இருக்கவேண்டும் ஆகவே பின்வரும் கேள்விக்கு உங்களால் விடை கூற முடியுமா என்று பாருங்கலேன்
மனித வாழ்வு எதற்காக?
ஏன் இந்தப் பிரபஞ்சம் இருக்கின்றது?
இவைகளுக்கான விடை உங்களுக்கு தெரியுமா? விடையானது
அறிவு பூர்வமாக இருக்கவேண்டும், அதாவது விஞ்ஞான முறையில் நிரூபிக்கபட்டதாக அமைந்திருக்க வேண்டும்.

மிக முக்கியமான விடையம் கவனத்தில் கொள்ளவேண்டியவை

ஒரு விடையத்தைப் பற்றிய தேடுதலுக்கான தேவை வந்து விட்டால் அல்லது தொடங்கிவிட்டால் அதற்கான விடை வெகுதூரத்தில் இல்லை மாறாக ஏதாவது ஒன்றை நம்பிவிட்டால் உங்களுக்குள் தேடுதல் அழிந்து விடும் நீங்கள் ஒரு முடிவிற்கு வந்து விடூவீர்கள்.ஏதாவதொன்றைப் பற்றி அறிவதற்கான அடிப்படை வேட்கை உங்களுக்குள் அழிந்துவிடும்.



விடையை அறிய முன் சற்று சிந்திக்க ஓர் உதாரணமும் விளக்கமும்.

நமக்கு இரண்டு கைகள் உள்ளன என்பதை அனுபவப்பூர்வமாய் அறியலாலம். யாராவது இல்லை என்று சொன்னால், கன்னத்தில் ஓர் அறை விட்டால் கைகள் இருப்பதை அவர் அறிந்து கொள்வார்.

மேலே சொல்லப்பட்ட  உதாரணக் கதையில் கேள்விக்கு விடையை செயலின் மூலம் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. 

அடுத்ததாக,

உலகில் கடவுளை நம்புகிறவர்களும்,கடவுள் இல்லை என நம்புகிறவர்களும் உள்ளனர் சிலர் எனக்குத் தெரியாது எனக் கூறிக்கொண்டு கடவுள் உள்ளாரா? இல்லையா? எனத் தேடுதல் வேட்டையில் உள்ளவர்களும் உண்டு.


கேள்விக்கான விடை உதாரணக் கதையுடன் கூறப்பட்டுள்ளது 

கௌதம புத்தர் ஒரு அதிகாலலைப் பொழுதில் சூரிய உதயதற்திற்கு முன்பு தனது சீடர்களுடன் சத்சங்கத்தில் அமர்ந்திருக்கும் போது,அங்கே ஒரு மனிதர் வந்தார்.அவர் ஒரு ராம பக்தர்.அவர் வாழ்க்கை முழுவதும் "ராம் ராம் ராம் " தான். கிட்டத்தட்ட தனது வாழ் நாள் முழுவதையும் கோவிலில் தான் கழித்தார். வயதாக வயதாக சிறு சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது அது எதுவெனில்
எல்லோருக்கும் இரவும் பகலும் உள்ளது அவர்களும் எனைப்போல் சுவாசிக்கிறார்கள்,அவர்களுடை வாழ்விலும் பல சந்தோஷசமான நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
ஒரு வேளை கடவுள் இல்லையா?

கடவுள் இருக்கிறார் என்று தெரிந்தும் சிறு சந்தேகம்

இக்கேள்வியை கௌதம புத்தரிடம் கேட்டுவிட்டார்,புத்தர் அவரைப்பார்த்து 'தெளிவாகவும் அழுத்தமாகவும் இல்லை' என்று கூறினார் அவருடைய சந்தேகத்திற்கு விடைகிடைத்தாகி விட்டது. 

கடவுள் இல்லாமல் இருப்பதென்பது என்றால் எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி!
வாழ்வில் எது வேண்டுமானாலும் செய்யலாம்,கவனித்துக் கொண்டிருக்க யாருமில்லை, நரகத்தில் தள்ளி துன்புறுத்த யாருமில்லை,முழுமையான சுதந்திரம் இல்லையா? சீடர்கள் மத்தியில் நிறைவான சந்தோஷம்.

அதே நாள் மாலை வேளையில் கௌதம புத்தரை சந்தித்து அவருடைய சிறு சந்தேகத்திற்கு விடைகான வந்திருந்தார்.

அவர் ஒரு சார்வாகர்.

சார்வார்கள் பொருளீட்டுவதில் மட்டுமே நாட்டம் உள்ளவர்கள்,அவர்கள் பார்ப்பதை மாத்திரம் நம்புகிறவர்கள் வேறு எதையும் நம்புவதில்லை.இவர்கள் ஊர் ஊர்ராகச் சென்று கடவுள் இல்லை என நிருபித்து செல்வந்தராக வாழ்ந்தார் .வயதாக வயதாக சிறு சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது அது
எதுவெனில்

ஒரு வேளை கடவுள் இருந்தால்? 

அவர் எனக்கு என்ன தன்டனை தருவார் நரகம் இருப்பதாக மக்கள் சொல்கிறார்களே? 

கடவுள் இல்லை என்று தெரிந்தும் சிறு சந்தேகம் 

இக்கேள்வியை கௌதம புத்தரிடம் கேட்டுவிட்டார்,புத்தர் அவரைப்பார்த்து 'தெளிவாகவும் அழுத்தமாகவும் ஆம்' என்று கூறினார் அவருடைய சந்தேகத்திற்கு விடைகிடைத்தாகி விட்டது.

மீண்டும் சீடர்கள் மத்தியில் போராட்டம் காலையில் வந்தவரிடம் கடவுள் இல்லை என்றும் மாலையில் வந்தவரிடம் கடவுள் இருக்கிறார் என்று கூறுகிறார்,ஏன் இப்படி?

வளர்ச்சியடைவதற்கான தேவை உங்களுக்குள் ஆதாரமாக இருக்கும் போர்,இது உங்களுடைய நோக்கமாக இருக்கும் போது ,எது உங்களுடைய அனுபவத்தில் இருக்கின்றது?,எது இல்லை? என்பதை பற்றிய தெளிவு முதலில் உங்களுக்கு இருக்க வேண்டும். 

உங்கள் அனுபவத்தில் இருப்பது எது? இல்லாதது எது? என்பதைப்பற்றிய வரையறுத்துக் கொள்ளுங்கள். உங்கள் அனுபவத்தில் எது இருப்ப தென்பது தெரியும், எது இல்லையோ அதனை கூறத்தேவையில்லை.வெறுமனே 'எனக்குத் தெரியாது' என்று கூறுங்கள்.நீங்கள் தெரியாது என்று ஏற்றுக்கொண்டால்,பிறகு வளர்ச்சி ஏற்படும்.

தற்போது உங்களுக்கு எதுவெல்லாம் தெரியாதோ,அவற்றை நம்பத் தொடங்குகிறீர்கள்.உங்களுக்கு அனைத்துமே தெரிந்ததாக எண்ணுகிறீர்கள்
உதாரணமாக உங்களுக்கு கடவுளைத் தெரியும் எப்படி என்றால்
அவருடைய பெயர் உங்களுக்கு தெரியும்..
அவருடைய மனைவி யாரென்பது உங்களுக்கு தெரியும்.
அவருக்கு எத்தனை குழந்தைகள் என உங்களுக்கு தெரியும்.
அவருடைய பிறந்த நாள் உங்களுக்கு தெரியும்.
அவருடைய பிறந்த நாளுக்கு அவர் விரும்பும் இனிப்பு எது என்பதும் உங்களுக்கு தெரியும்.
ஆனால்
உங்களுக்கு என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியாது.
துற்போதைய முழுப் பிரச்சனையும் அதுதான் 
உங்களுக்கு சொர்க்கத்தின் முகவரி கூடத் தெரியும் ஆனால் இந்தக் கணத்தில் உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப்பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு இல்லை.
இப்பொழுது உங்களுக்குள் வளர்ச்சி நடைபெற வேண்டுமெனில் ,இப்போது உங்கள் அனுபவத்தில் என்ன இருக்கின்றது என்பதை பார்க்க வேண்டும் இப்போது உங்கள் அனுபவத்தில் என்ன இருக்கின்றது? உங்கள் உடலை ஓர்ளவிற்கு உணர்ந்திருக்கிறீர்கள். இந்த மனதை ஓரளவிற்கு உணர்ந்திருக்கிறீர்கள்.இந்த உடலையும்,மனதையும் இயக்குகின்ற சக்தியினை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஒரு சில கணங்கள் நீங்கள் உணர்ந்திருக்க முடியும்,இதைத் தாண்டி நீங்கள் எதையும் உணரவில்லை மற்றவை எல்லாமே கற்பனைதான். இந்தச் சமூகம் எந்த வழியில் கற்பித்ததோ,அதே வழியில்தான் உங்கள் கற்பனையும் உள்ளது .உங்கள் அனுபவத்தில் எது இருக்கின்றது? எது இல்லை என்று பாருங்கள்.உங்களது அனுபவத்தில் இல்லாததை எல்லாம் எனக்குத் தெரியாது என்று நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் .இது மிக மிக அவசியமானது இல்லாவிட்டால் உங்கள் வாழ்க்கை முழுவதும் பாசாங்காகிவிடும்.

யார் கடவுள்? (God in Tamil)


இவ் நவீன விஞ்ஞான யுகத்தில் விஞ்ஞான முறைப்படி நிருபிக்கப்படுபவைகளே   மக்கள் பெரும்பாலும் விரும்புகிறார்கள். ஆகவே மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கிவிட்டது . ‌
பொதுவாக சொல்லப்போனால் ஒவ்வொரு மனித இனத்துக்கும் ஒவ்வொரு கடவுள் ,மதம். ஆகவே

கடவுள் யார்?

கடவுள் இறைவன்


மனிதரைத் தவிர மற்ற விலங்குகளும் இவ்வுலகில் வாழ்கின்றன அவற்றுக்கு கடவுள் யார்?

பொதுவான ஒரு கேள்வி?
கடவுளுக்கு உயிர் உள்ளதா? 
அவர் எங்‌கே வசிக்கிறார்? 
தனி ஓருவரா? குடும்பக்காரரா?
அவர் எப்படி எம்மை ஆளுகிரார்?
என்னென்ன அறிவுகளுடையார்?
கடவுள் யாரிடம் இருந்து சக்தியை பெறுகிறார்?
கடவுள் யார்? தெய்வம் யார்? இறைவன் யார்?
ஏன் கடவுளை சிலைகள் ,படங்கள் மூலமாகவும் வெளிப்படுத்துகிறார்கள் (இறந்தவர்களை ஞாபகப்படுத்தும் செயல் முறையை ஒத்தாகவுள்ளது )
கடவுள் எத்தனை வடிவங்களை எடுப்பார்?
விவேகானந்தரின் சரித்திரத்தில் அவர் கடவுளை பார்த்தார் என்கிறார்கள் ? ஏன் சாதாரணமான எம்மால் பார்க்க முடிவதில்லை ஆனால் கடவுள் எம்மை எப்பொழுதும் பார்கிறார் என்கிறார்கள் ?
குளிர்? சூடு ? தெரியுமா?
 இப்படியாக கேள்விக்கனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம் விடை நிச்சயமாக புத்தகங்களின் உள்ளவை,கேள்விப்பட்டவையாகவோ இருக்கும் அனுபவரீதியான விடை இருக்காது.

தமிழ் மொழியைப்பொறுத்த வரை கடவுள் என்பது கட+உள் ஆகும்.

தமிழ் இலக்கண வல்லுனர்களின் கூற்றுப்படி மனதை கடப்பதை  குறிப்பிடுகிறார்கள்.

மதங்களைப் பொருத்தவரை மதத்தலைவர்கள் கடவுளுக்கு அருகில் உள்ளவர்கள் என்ற பிரமை பெரும்பாலான மக்கள் மத்தியில் உள்ள நிலைப்பாடாகும் (அவர்களும் சாதாரண மனிதர்களே) இதனால் பலர் ஏமாற்றப்படுகிறார்கள்
மதம் உருவாக்கப்பட்டது மனித மனத்தை கட்டப்படத்தவும், செம்மைப்படுத்தவுதான் ஆனால் தற்காலத்தில் தலைகீழாக உள்ளது.
கடவுள் என்ற பெயரில் பல ஏமாற்று வித்தைகளை காண்பித்து பிழைக்கிறார்கள் ஆனால் யார் கடவுள் என்பது அவர்களுக்கும் தெரியாது என்பது உண்மை.

அறிஞர் அண்ணாத்துரை அவர்களின் கருத்துப்படி

"பக்திக்கு பலி கேட்பதா கடவுள்?
 பசிக்கு உணவு அளிப்பதா கடவுள்? "

யார் கடவுள் ?
என்ற கேள்விக்கு எனது விடை

மனம். 

தந்திரோபாயம் - தத்துவங்கள் (Tricks in Tamil)


தந்திரோபாயம்  என்பது ஏதோ ஒருவிதத்தில் இன்னெருவரை ஏமாற்றுதல்,நம்பிக்கை துரோகம்,பழிவாங்குதல் போன்ற செயல்களுக்கு தன்னில் எந்தவெரு குற்றமும் நேரடியாக தாக்காத வண்ணம் (கு‌ழந்தைத் தனமாக,மொக்குத் தனமாக ) இருக்கதக்கதாக செயல்படும் செயல் முறையாகும்.


வாழ்க்கையில் தந்திரோபாயம் இடம்பெறும் சந்தர்ப்பங்கள்
அரசியல்-நாம் கண்கூடாக ஒவ்வொரு நாளும் பார்த்து தேர்தல் காலத்தில் பலியிடல்
சினிமா-வியக்கவைக்கும் காட்சிகள்
வியாபாரம்-விளம்பரங்கள்,கண்ணைக்கவரும் விதத்தில் பொருட்களை உற்பத்தி செய்தல்
சமூக வலைத்தளங்கள்-நேரத்தை வீணடித்தல், வியாபார நோக்கம் (எமக்கில்லை வலைதளத்தின் சொந்தக்காரருக்கு)
மந்திர ஜாலம் , மாஜா ஜாலம் -குறுகிய நோரத்திற்குள் எம்மை ஏமாற்றுத் வித்தை
கணினி-சில மென்பொருட்களின் உதவியால் செய்யப்படுகிறது
கணிதம்-சில சிக்கலான வற்றை கணீத சமன்பாடுகள் மூலம் தீர்வுகாணல்
இயல்,இசை,நாடகம்-சில அசைவுகள் ,சத்தங்களை அடிப்படையாகக் கொண்டவை
விளையாட்டு-வெற்றியை தனதாக்கி கொள்ள செயல்படும் குறுக்கு வழிகள்
மருத்துவம்-மருந்துகள்,வேதியல் முறை மூலம் நோயை குணப்பபடுத்துதல்
புகைப்படத்துறை-சொல்லத்தேவையில்லை அன்றாடம் கேள்விப்படும் விடயம்
இராமாயனத்தில் தந்திரோபாயம்
இராமாயனப் போர் முடிவுற்று சில காலங்களின் பின் சீதை தனது கற்பை நிரூபிப்பதற்கு  தீ குளித்தால் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இதற்கு யாரின்  பழிவாங்கும் தந்திரோபாயமாக இருக்கலாம்.
உங்களுக்கு விடை தெரியுமா?

எனக்குத் தெரிந்த விடை என்னவெனில் 
இராமாயணப் போரில் இராவணன் வீர மரணம் அடைந்த பிற்பாடு இராவணனின் தங்கை சூர்ப்பனகை முடிவெடுத்தால் சீதையை எப்ப‌டியும் பழிவாங்க வேண்டும் மென்று.அவள் போட்ட நாடகத்தில் (தந்திரோபாயம்) சீதை பலியானால் எப்படி என்றால்?.

ஒரு நாள் அழகிய நங்கையாக உருமாற்றம் பெற்று சீதையின்  நட்பும் ,நம்பிக்கையும் நெடுநாட்களாக பெற்றுக்கொண்ட பிற்பாடு.

ஒரு மாறுவேடத்திலுள்ள சூர்ப்பனகை சீதையிடம் கேட்டால் எனக்கு இராவணணின் உருவத்தை வரைந்து தரும்ப‌‌டி (சீதை ஓவியம் வரைவதில் நிகரானவள்) சீதை அதை மறுத்தாள்  ,பின் சூர்ப்பனகை  தனது சுயரூபத்தை காண்பித்துக்கேட்டால் நான் கேட்பது எனது அண்ணணின் உருவத்தை ,இவ்வுலகில் இராவணன் தனது சுயரூபத்தை  உனக்கு மட்டுமே காண்பித்தான் அதைவிட நீ நல்ல ஓவியக்காரி எனக்கு தயவு செய்து அண்ணனின் உருவத்தை வரைந்து தரும்படியும் இல்லாவிடில் இவ்விடத்தில் தற்‌கொலை செய்வதாகவும் ‌சொன்னால்,பின் சீதை இராவணனின் உருவ‌த்தை வரையத் தொடங்கினாள்.

வரைந்து கொண்டிருக்கையில் இராமன் சீதையை கூப்பிட்டார் ,சீதை தான் வரைந்து கொண்டிருந்த இராவணனின் ஓவியத்தை தனது தலையணையின் கீழே வைத்து விட்டு இராமர் நோக்கிச் சென்றால். இதற்கிடையில் சூர்ப்பனகை போட்டுவாங்கிவிட்டல் .

இராமரின் கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காமல் தான் வரைந்து கொண்டிருந்த இராவணனின் ஓவியம் தனது தலையணையின் கீழ் உள்ளதை ஒப்புக்கொண்டாள்,

இராமன் தன் கற்பின் மீது சந்தேக்ப்பட்ட காரணத்தினால்
சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக தீ குளித்தால் என்றும் அவள் மீண்டும் தனது தாயுடன் அக்கியமானால் என்றும் ‌இராமாயணக்கதை ஒன்று உள்ளது.

இதில் இருந்து தனது தந்ரோபாயத்தினால் சீதையின் நட்புக்கு ,நம்பிக்கைக்கு சூர்ப்பனகை குற்றம் இ‌ழைத்தாள்

ஏன் பாரதக் கதையிலும் கூட பல தந்திரோபாயங்கள் இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது

கோச்சடையான் திரைப்படத்தில் கூட தந்திரோபாயத்தினால் தான் கோச்சடைன் ரணதீரன் இலட்சியத்தை நிறைவேற்றயதை அறியலாம்

வாழ்க்கையும் கணக்கும்


சில வித்தியாசமான கணக்குகள் வாழ்க்கையிலும் எப்படியும் இடம் பெறத்தான் செய்கின்றன. இதில் சிலர் கணக்குகள் போடாமலே வெண்று விடுகின்றனர் ஆனால் மறைமுகமாக அங்கே கணிதம் பிரயோகிக்கப்பட்டுள்ளது என்பது தெரியாத பகுதியாகும்.

கூட்டல்:

மனிதன்+தன்னம்பிக்கை = வெற்றி
மனிதன்+கவலை = கண்ணீர்
மனிதன்+ஆனந்தம் = புன்னகை
மனிதன்+இயலாமை = கோபம்
மனிதன்+அன்பு = காதல்
மனிதன்+ஆசை=காமம்

கழித்தல்:

மனிதன் - தன்னம்பிக்கை= தோல்வி
மனிதன் - கவலை = உற்சாகம்
மனிதன் - ஆனந்தம் = சோம்பல்
மனிதன் - இயலாமை = முயற்சி
மனிதன் - அன்பு = குரோதம்
மனிதன் - ஆசை = அமைதி

பெருக்கல்:

மனிதன் × தன்னம்பிக்கை = சாதனை
மனிதன் × கவலை = தற்கொலை
மனிதன் × ஆனந்தம் = ஆயுள் விருத்தி
மனிதன் × இயலாமை = அவதி
மனிதன் × அன்பு = மனிதாபிமானம்
மனிதன் × ஆசை = வக்கிரம்