Friday, November 9, 2018

மனித வாழ்க்கை எதற்கு?


நிச்சயமாக கேள்வி ஒன்றிருப்பின் விடை கட்டாயமாக இருக்கவேண்டும் ஆகவே பின்வரும் கேள்விக்கு உங்களால் விடை கூற முடியுமா என்று பாருங்கலேன்
மனித வாழ்வு எதற்காக?
ஏன் இந்தப் பிரபஞ்சம் இருக்கின்றது?
இவைகளுக்கான விடை உங்களுக்கு தெரியுமா? விடையானது
அறிவு பூர்வமாக இருக்கவேண்டும், அதாவது விஞ்ஞான முறையில் நிரூபிக்கபட்டதாக அமைந்திருக்க வேண்டும்.

மிக முக்கியமான விடையம் கவனத்தில் கொள்ளவேண்டியவை

ஒரு விடையத்தைப் பற்றிய தேடுதலுக்கான தேவை வந்து விட்டால் அல்லது தொடங்கிவிட்டால் அதற்கான விடை வெகுதூரத்தில் இல்லை மாறாக ஏதாவது ஒன்றை நம்பிவிட்டால் உங்களுக்குள் தேடுதல் அழிந்து விடும் நீங்கள் ஒரு முடிவிற்கு வந்து விடூவீர்கள்.ஏதாவதொன்றைப் பற்றி அறிவதற்கான அடிப்படை வேட்கை உங்களுக்குள் அழிந்துவிடும்.விடையை அறிய முன் சற்று சிந்திக்க ஓர் உதாரணமும் விளக்கமும்.

நமக்கு இரண்டு கைகள் உள்ளன என்பதை அனுபவப்பூர்வமாய் அறியலாலம். யாராவது இல்லை என்று சொன்னால், கன்னத்தில் ஓர் அறை விட்டால் கைகள் இருப்பதை அவர் அறிந்து கொள்வார்.

மேலே சொல்லப்பட்ட  உதாரணக் கதையில் கேள்விக்கு விடையை செயலின் மூலம் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. 

அடுத்ததாக,

உலகில் கடவுளை நம்புகிறவர்களும்,கடவுள் இல்லை என நம்புகிறவர்களும் உள்ளனர் சிலர் எனக்குத் தெரியாது எனக் கூறிக்கொண்டு கடவுள் உள்ளாரா? இல்லையா? எனத் தேடுதல் வேட்டையில் உள்ளவர்களும் உண்டு.


கேள்விக்கான விடை உதாரணக் கதையுடன் கூறப்பட்டுள்ளது 

கௌதம புத்தர் ஒரு அதிகாலலைப் பொழுதில் சூரிய உதயதற்திற்கு முன்பு தனது சீடர்களுடன் சத்சங்கத்தில் அமர்ந்திருக்கும் போது,அங்கே ஒரு மனிதர் வந்தார்.அவர் ஒரு ராம பக்தர்.அவர் வாழ்க்கை முழுவதும் "ராம் ராம் ராம் " தான். கிட்டத்தட்ட தனது வாழ் நாள் முழுவதையும் கோவிலில் தான் கழித்தார். வயதாக வயதாக சிறு சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது அது எதுவெனில்
எல்லோருக்கும் இரவும் பகலும் உள்ளது அவர்களும் எனைப்போல் சுவாசிக்கிறார்கள்,அவர்களுடை வாழ்விலும் பல சந்தோஷசமான நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
ஒரு வேளை கடவுள் இல்லையா?

கடவுள் இருக்கிறார் என்று தெரிந்தும் சிறு சந்தேகம்

இக்கேள்வியை கௌதம புத்தரிடம் கேட்டுவிட்டார்,புத்தர் அவரைப்பார்த்து 'தெளிவாகவும் அழுத்தமாகவும் இல்லை' என்று கூறினார் அவருடைய சந்தேகத்திற்கு விடைகிடைத்தாகி விட்டது. 

கடவுள் இல்லாமல் இருப்பதென்பது என்றால் எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி!
வாழ்வில் எது வேண்டுமானாலும் செய்யலாம்,கவனித்துக் கொண்டிருக்க யாருமில்லை, நரகத்தில் தள்ளி துன்புறுத்த யாருமில்லை,முழுமையான சுதந்திரம் இல்லையா? சீடர்கள் மத்தியில் நிறைவான சந்தோஷம்.

அதே நாள் மாலை வேளையில் கௌதம புத்தரை சந்தித்து அவருடைய சிறு சந்தேகத்திற்கு விடைகான வந்திருந்தார்.

அவர் ஒரு சார்வாகர்.

சார்வார்கள் பொருளீட்டுவதில் மட்டுமே நாட்டம் உள்ளவர்கள்,அவர்கள் பார்ப்பதை மாத்திரம் நம்புகிறவர்கள் வேறு எதையும் நம்புவதில்லை.இவர்கள் ஊர் ஊர்ராகச் சென்று கடவுள் இல்லை என நிருபித்து செல்வந்தராக வாழ்ந்தார் .வயதாக வயதாக சிறு சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது அது
எதுவெனில்

ஒரு வேளை கடவுள் இருந்தால்? 

அவர் எனக்கு என்ன தன்டனை தருவார் நரகம் இருப்பதாக மக்கள் சொல்கிறார்களே? 

கடவுள் இல்லை என்று தெரிந்தும் சிறு சந்தேகம் 

இக்கேள்வியை கௌதம புத்தரிடம் கேட்டுவிட்டார்,புத்தர் அவரைப்பார்த்து 'தெளிவாகவும் அழுத்தமாகவும் ஆம்' என்று கூறினார் அவருடைய சந்தேகத்திற்கு விடைகிடைத்தாகி விட்டது.

மீண்டும் சீடர்கள் மத்தியில் போராட்டம் காலையில் வந்தவரிடம் கடவுள் இல்லை என்றும் மாலையில் வந்தவரிடம் கடவுள் இருக்கிறார் என்று கூறுகிறார்,ஏன் இப்படி?

வளர்ச்சியடைவதற்கான தேவை உங்களுக்குள் ஆதாரமாக இருக்கும் போர்,இது உங்களுடைய நோக்கமாக இருக்கும் போது ,எது உங்களுடைய அனுபவத்தில் இருக்கின்றது?,எது இல்லை? என்பதை பற்றிய தெளிவு முதலில் உங்களுக்கு இருக்க வேண்டும். 

உங்கள் அனுபவத்தில் இருப்பது எது? இல்லாதது எது? என்பதைப்பற்றிய வரையறுத்துக் கொள்ளுங்கள். உங்கள் அனுபவத்தில் எது இருப்ப தென்பது தெரியும், எது இல்லையோ அதனை கூறத்தேவையில்லை.வெறுமனே 'எனக்குத் தெரியாது' என்று கூறுங்கள்.நீங்கள் தெரியாது என்று ஏற்றுக்கொண்டால்,பிறகு வளர்ச்சி ஏற்படும்.

தற்போது உங்களுக்கு எதுவெல்லாம் தெரியாதோ,அவற்றை நம்பத் தொடங்குகிறீர்கள்.உங்களுக்கு அனைத்துமே தெரிந்ததாக எண்ணுகிறீர்கள்
உதாரணமாக உங்களுக்கு கடவுளைத் தெரியும் எப்படி என்றால்
அவருடைய பெயர் உங்களுக்கு தெரியும்..
அவருடைய மனைவி யாரென்பது உங்களுக்கு தெரியும்.
அவருக்கு எத்தனை குழந்தைகள் என உங்களுக்கு தெரியும்.
அவருடைய பிறந்த நாள் உங்களுக்கு தெரியும்.
அவருடைய பிறந்த நாளுக்கு அவர் விரும்பும் இனிப்பு எது என்பதும் உங்களுக்கு தெரியும்.
ஆனால்
உங்களுக்கு என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியாது.
துற்போதைய முழுப் பிரச்சனையும் அதுதான் 
உங்களுக்கு சொர்க்கத்தின் முகவரி கூடத் தெரியும் ஆனால் இந்தக் கணத்தில் உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப்பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு இல்லை.
இப்பொழுது உங்களுக்குள் வளர்ச்சி நடைபெற வேண்டுமெனில் ,இப்போது உங்கள் அனுபவத்தில் என்ன இருக்கின்றது என்பதை பார்க்க வேண்டும் இப்போது உங்கள் அனுபவத்தில் என்ன இருக்கின்றது? உங்கள் உடலை ஓர்ளவிற்கு உணர்ந்திருக்கிறீர்கள். இந்த மனதை ஓரளவிற்கு உணர்ந்திருக்கிறீர்கள்.இந்த உடலையும்,மனதையும் இயக்குகின்ற சக்தியினை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஒரு சில கணங்கள் நீங்கள் உணர்ந்திருக்க முடியும்,இதைத் தாண்டி நீங்கள் எதையும் உணரவில்லை மற்றவை எல்லாமே கற்பனைதான். இந்தச் சமூகம் எந்த வழியில் கற்பித்ததோ,அதே வழியில்தான் உங்கள் கற்பனையும் உள்ளது .உங்கள் அனுபவத்தில் எது இருக்கின்றது? எது இல்லை என்று பாருங்கள்.உங்களது அனுபவத்தில் இல்லாததை எல்லாம் எனக்குத் தெரியாது என்று நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் .இது மிக மிக அவசியமானது இல்லாவிட்டால் உங்கள் வாழ்க்கை முழுவதும் பாசாங்காகிவிடும்.

No comments:

Post a Comment