Wednesday, May 6, 2015

மறப்போம் மன்னிப்போம்

மறப்போம் மன்னிப்போம்

‘மறந்து விட்டேன், மறந்து போனது, அச்சச்சோ! இப்படி மறந்து போகிறேனே’ என்று அங்கலாய்க்கிறோம். ஒரு விஷயத்தை நினைவில் நிறுத்தத்தான் முயல்கிறோம், முயல வேண்டும் என்றும் சொல்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு விஷயத்தை மறப்பதற்கு தான் உண்மையில் முயல வேண்டி இருக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களை மறக்க முடியாமல் தான் துன்பப்படுகிறோம்; துன்பப்படுத்துகிறோம்.

ஒரு நிகழ்வை சந்திக்கிறோம். அந்நிகழ்விற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை பொறுத்து தான் அதை சந்திக்கிறோமா, எதிர் கொள்கிறோமா என்பது முடிவாகிறது. அதை பொறுத்து, நமக்குள் ஏற்படும் அனுபவங்களுக்கு ஏற்ப, உணர்ச்சிகள் ஏற்படுகின்றன. அதை பொறுத்து இன்பம், துன்பம் தீர்மானிக்கப்படுகிறது. 

உணர்வின் வெளிப்பாட்டிற்கு ஏற்ப அந்த சம்பவம் முக்கியத்துவத்தை பெறுகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு உணர்ச்சி கொந்தளிப்பிற்கு காரணமாகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு, அது தீவிரமாக, நினைவில் நீங்காமல் நிற்கிறது. ஒன்றை மறக்க வேண்டுமானால், அதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, நிறுத்த தெரிய வேண்டும். 
முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்க முயற்ச்சி, பயிற்சி மற்றும் அனுபவம் தேவை. 

எனவே, ஒன்றை மறப்பதற்கும், மன்னிப்பதற்கும் அடிப்படை, சம்பவத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருக்க தெரிய வேண்டும். எனவே, முயற்சி செய்து மன்னித்து மறப்போமாக!

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்..!

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்..!

 1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மையை எளிதில் போக்கி விடலாம்.

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை தான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்..!

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை தான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்..!

பெண்கள் கர்ப்பமாகிவிட்டால், அவர்களுக்கு வயிற்றில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள ஆவலுடன் இருப்பார்கள். ஏனெனில் தெரிந்து கொண்டால், குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து முடிவெடுக்கலாம் என்று தான். ஆனால் இப்படி வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை இந்தியாவில் பார்க்க முடியாது. மாறாக மேற்கத்திய நாடுகளில் தங்கியிருந்தால் தெரிந்திருக்கலாம்.

ஏனெனில் இந்தியாவில் குழந்தை பெண்ணாக இருந்தால், கருவிலேயே சிலர் கலைத்துவிடுகின்றனர் என்பதால் தான். இருப்பினும் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நம் முன்னோர்களின் வாக்கு மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கர்ப்பிணிகளே! குழந்தை அழகா.. வெள்ளையா.. பிறக்கணுமா? அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க...

மேலும் அக்காலத்தில் எல்லாம் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஒருசில அறிகுறிகள் கொண்டு சொல்வார்கள். இது நிரூபிக்கப்படாவிட்டாலும், பலருக்கு சரியாக நடந்துள்ளதால், இதனை அனைவருமே கண்மூடித்தனமாக நம்பிவருகின்றோம்.
கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!

இங்கு வயிற்றில் வளரும் குழந்தை ஆண் தான் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்கலாம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.

வயிற்றின் நிலை
வயிற்றில் வளரும் குழந்தை ஆண் என்பதை கர்ப்பிணிகளின் வயிற்றின் நிலையைக் கொண்டே அறியலாம். எப்படியெனில், வயிற்றில் ஆண் குழந்தை என்றால், மேல் வயிறு பெரிதாகவும், கீழ் வயிறு சற்று சிறியதாகவும் இருக்குமாம்.

சிறுநீரின் நிறம்
நிறைய கர்ப்பிணிகள் சிறுநீர் கழிக்கும் போது, அதன் நிறத்தைப் பார்ப்பார்கள். ஏனெனில் சிறுநீரின் நிறமானது அடர் நிறமாக இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம். இதைக் கொண்டும் அக்காலத்தில் உள்ள மக்கள் வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்று அறிந்து கொண்டு வந்தார்கள்.

பிம்பிள்
கர்ப்ப காலத்தில் பிம்பிளால் அவஸ்தைப்பட்டால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று தெரிந்து கொள்ளலாம்.

சிறிய வயிறு
நிறைய பெண்கள் வயிறு சிறியதாக இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று சொல்வார்கள். இருப்பினும் இந்த கூற்றின் படி பல பெண்களுக்கு சரியாக நடந்துள்ளது என்றால் பாருங்களேன்.

மார்பகத்தின் அளவு
கர்ப்பத்தின் போது, மார்பகத்தின் அளவானது பெரிதாக ஆரம்பிக்கும். அதிலும் உண்மையாக இடது மார்பகம் வலது மார்பகத்தை விட பெரிதாக ஆரம்பிக்கும். ஆனால் வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால், இடது மார்பகத்தை விட வலது மார்பகத்தின் அளவு பெரிதாக இருக்குமாம்.

குளிர்ச்சியான பாதம்
கர்ப்ப காலத்தில் எப்போதும் பாதம் குளிர்ச்சியாக இருந்தால், அதுவும் ஆண் குழந்தை பிறக்கும் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

இதயத்தின் துடிப்பு
ஒவ்வொரு முறை மருத்துவரை சந்திக்கும் போதும், குழந்தையின் இதயத்தின் துடிப்பை கண்காணித்து வாருங்கள். ஏனெனில் குழந்தையின் இதயத்தின் துடிப்பானது 140-க்கு கீழே இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்.

கூந்தல் வளர்ச்சி
வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளில் ஒன்று தான் கூந்தலின் வளர்ச்சி. கர்ப்ப காலத்தில் கூந்தலின் வளர்ச்சியானது அளவுக்கு அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தை என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

ஆசை
கர்ப்பமாக இருக்கும் போது உணவுப் பொருட்களின் மீது ஆசை எழுவது சாதாரணம் தான். ஆனால் புளிப்பு மற்றும் உப்புள்ள உணவுப் பொருட்களின் மீது ஆசை அதிகமாக இருந்தால், அது வயிற்றில் ஆண் குழந்தை உள்ளது என்று அர்த்தம்.

தூங்கும் நிலை
கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அதிகப்படியான சோர்வு இருக்கும். இருப்பினும்., அப்படி சோர்வுடன் இருக்கும் போது, இடது பக்கத்தில் தூங்கும் பழக்கம் இருந்தால், அதுவும் ஆண் குழந்தைக்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

கைகள்
எவ்வளவு தான் க்ரீம்களை கைகளுக்கு தடவினாலும், கைகள் வறட்சியுடனும், வெடிப்புகள் ஏற்பட ஆரம்பித்தாலும், அதுவும் ஆண் குழந்தை தான் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

திருமண வாழ்க்கை இறுதி வரை சந்தோஷமாக அமைய 10 ஆலோசனைகள்...!

திருமண வாழ்க்கை இறுதி வரை சந்தோஷமாக அமைய 10 ஆலோசனைகள்...!

திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப்பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் தாம் தெளிவாக இருப்பதுபோல காட்டிக் கொள்வதற்காக ஆளாளுக்கு கண்டிஷன் போட்டு விடுகிறார்கள்.

ஆனால் விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பது இருவரில் ஒருவருக்காவது புரிந்தால்தான் வாழ்க்கை நிலைத்திருக்கும். மண வாழ்வை முறித்துக் கொள்வதற்கு எத்தனை காரணங்கள் வேண்டு மானாலும் கூறலாம். ஆனால் உறவு நீடிக்க எல்லையற்ற அன்பு காட்டுவது ஒன்றுதான் வழி.

இன்று பல தம்பதியர் குடும்ப வாழ்க்கையை ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களுக்காக சிரித்து வைக்கிறார்களேத் தவிர, உண்மையான – பரிசுத்தமான ஆனந்தத்தில் அவர்கள் புன்னகை பூக்கவில்லை.

பிரம்மச்சாரிகளைவிட குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களே அதிக ஆயுளுடன் வாழ்கிறார்கள் என்று ஒரு ஆராய்ச்சியே செய்து நிரூபித்து இருக்கிறார்கள் என்பதை எல்லா தம்பதியரும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த மனிதப் பிறவி ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதற்குத்தான். சொத்து, பணத்துக்காகவே வாழ்வதற்கும், எதற்கெடுத்தாலும் ‘ஈகோ’வால் கோபப்பட்டு ஆனந்தத்தை தொலைப்பதற்கும் யாரும் பிறவி எடுக்கவில்லை.

முடிந்தவரை எல்லோரும் ஆனந்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள். தாம்பத்திய வாழ்க்கையில் ஆனந்தமாக இருந்தால், மற்ற எல்லாவித ஆனந்தங்களும் வந்து சேரும். இதையும்கூட ஆய்வு செய்து நிரூபித்து இருக்கிறார்கள்.

திருமணத்திற்கு முன்பு கொஞ்சம் தனியாகப் பேசுவோம் என்னும்போதே இவர் இப்படித்தான் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள் பலர். எல்லோருக்குள்ளும் எதிர்பார்ப்பு, லட்சியம், ஆசை, கோபம் அனைத்தும் இருக்கும் என்பதை மறந்து விட்டு ”எனக்கு இவர் வேண்டாம்” என்று சொல்லி விடுகிறார்கள். கேள்வி கேட்பது, கண்டிஷன் போடுவது மட்டுமல்லாமல் சந்தித்து பேசும்போதே தங்களின் முக்கியமான எதிர்பார்ப்புகளையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்த வேண்டும். திருமணத்தை சுமையாக எண்ணாமல், புனிதமானதாக எண்ணுங்கள். இயல்பாக வாழ்வைத் தொடங்குங்கள்.

அப்பா அம்மா சொன்னார்கள் என்பதற்காக கழுத்தை நீட்டி விடக்கூடாது. வாழப்போகும் நீங்கள் வரப்போகிறவர் குணநலன்களோடு சமன்பட்டு வாழ முடியுமா? என்பதை புரிந்து கொண்டு முடிவை அறிவியுங்கள்.

திருமணம் செய்துவிட்டால் இருவருமே ஒருவருக்கொருவர் நம்பிக்கைக்குரியவராய் வாழ்தல் வேண்டும். இருவருமே ஆசையில் ஒன்று கூடுவதுபோல லட்சிய பயணத்தில் மற்றவர் பாதையில் தடையாக இல்லாமல் துணையாக இருப்பது அவசியம். அதுவே மகிழ்ச்சியான வாழ்வுக்கு அஸ்திவாரமாக அமையும்.

குறைகளை மறைத்து திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அது எப்போது வேண்டுமானாலும் பூதாகரமான பிரச்சினையை ஏற்படுத்தும். மணமக்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் திருமண பந்தத்திற்கு தயாராக வேண்டும். சின்னச்சின்ன விஷயங்களை பெரிது படுத்தாமல் சிக்கல்களை தீர்ப்பதில் மட்டுமே திறமையை காட்ட வேண்டும். சிக்கல்கள், சிரமங்கள், சவால்கள் போன்ற வாழ்வியல் யதார்த்தங்களை புரிந்து கொண்டால் அவற்றை எளிதாக எதிர்கொள்ளலாம். வாழ்வு முழுவதும் வசந்தமாகும் குடும்ப வாழ்க்கை.

நண்பர்களின் வேடிக்கைப் பேச்சும், திருமண ஜோக்குகளும் திருமணம் கஷ்டமான விஷயம் என்பது போல்தான் காட்டப்படுகிறது. ஆனால் யதார்த்தத்தில் அப்படி கிடையாது. ஜோக்கை நம்பி மனைவி தாயார் வீட்டிற்கு சென்றிருப்பது சுகமான தருணம் என்று எண்ணுவதும், பேசுவதும் கூடாது. கருத்து வேற்றுமையின் போது தவறுகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால் எல்லாம் பூதாகரமாகத் தோன்றும். தடுமாற வைத்துவிடும். இல்லறத்தில் காலம் முழுக்க இணைந்திருப்பேன் என்று உறுதி ஏற்று செயல்பட்டால் அன்பும், விட்டுக்கொடுத்தலும் இயல்பாக வந்து விடும்.

மணமக்கள் இருவரும் வெவ்வேறு சூழலில் வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள் என்பதை உணர்ந்தால் `அவர் எனக்காக மாற வேண்டும்` என்ற எண்ணம் யாருக்கும் எழாது. சில மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரும். மகிழ்ச்சி குடியேறும். திருமணம் முடிந்ததும் மனைவியின் கேரக்டரை ஆராயத் தொடங்கிவிடக்கூடாது. மாமியார்-மருமகள் பிரச்சினை தலைதூக்கும்போது நடுநிலையில் செயல்பட வேண்டியது கணவரின் பொறுப்பு. அவர் தான் இருவருக்கும் உறவுப்பாலத்தை உருவாக்க கடமைப்பட்டவர்.

கணவன் மனைவியின் சில அந்தரங்கங்களை எவ்வளவு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் நண்பர்கள் உள்பட யாரிடமும் வெளியிடக்கூடாது. உங்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு மட்டுமே நம்பிக்கைக்குரியவர்கள், பெரியோர் உதவியை நாட வேண்டும். பூசல்கள் மிகுந்தாலும் அயலாரை மூக்கை நுழைக்க விடக்கூடாது. தம்பதிகள் தங்கள் வளர்ச்சியை மற்றவர்களோடு ஒப்பிட்டுக் கொள்ளக்கூடாது. விரும்பிய மாற்றங்கள், வளர்ச்சி ஏற்படாததற்கு ஒருவர் மீது இன்னொருவர் குற்றம் சுமத்தாதீர்கள். தினமும் சிறிது நேரமாவது மனம் விட்டு பேசுங்கள்.

இன்றைய பெண் பணிக்குச் செல்லும் லட்சியப் பெண்ணாகவும், அன்பான தாயாகவும், கடமை மிக்க மருமகளாகவும் பல பொறுப்புகளில் தன்னை ஈடு படுத்திக் கொள்ளும் தலைமைப் பண்புடையவளாக செயல்படுகிறாள். அதை கணவன் புரிந்து கொண்டு பக்கபலமாக இருந்தாலே குடும்பம் குதூகலமாக இருக்கும். வேலைக்குச் செல்வதை எதிர்ப்பது, வீட்டு வேலைகளை அதிகம் சுமத்துவது, குறை கூறுவது பிரச்சினைகளை வளர்க்கும். சினிமாவில் சித்தரிக்கப்படும் வாழ்க்கையையும், சீரியல்களில் காட்டப்படும் குரூரங்களையும் நிஜவாழ்க்கையில் ஒப்பிடக்கூடாது.

வீட்டுப்பொறுப்புகளிலும் இருவரும் பங்கேற்க வேண்டும். கணவன் வேலையில் மனைவியும், மனைவி வேலையில் கணவனும் ஒத்தாசைகள் செய்தால் அன்யோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது பரிசளியுங்கள். கைச்செலவுக்கு கொஞ்சம் கூடுதலாக காசு கொடுங்கள்.

திருமணம் என்பது `நீயா நானா’ போட்டியல்ல. கணவன்-மனைவி ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு ஒருவரின் தேவையை நிறைவு செய்ய மற்றவர் துணைபுரிய வேண்டும். இருவர் இணைவதே சேர்க்கையால் கிடைக்கும் முழுமையை அனுபவிக்கத்தான்.

உடலுறவை இயந்திரத்தனமான விஷயமாக அணுகக்கூடாது. உங்கள் பலவித எதிர்பார்ப்புகளும் உடனே நிறை வேறும் என்று எண்ணக்கூடாது. அது சார்ந்த பிரச்சினை களுக்கு இன்டர்நெட்டிலும், தெரிந்தவர்களிடமும் ஆலோசனை கேட்பதை தவிர்த்திடுங்கள். மருத்துவரை அணுகுவது நல்ல பலன் தரும்.

தேவையை நிறைவேற்ற நிபந்தனை விதிக்காதீர்கள். நெருக்கம் இருக்கும் இடத்தில் உரிமை எடுத்துக்கொள்வதும் இருக்கும். எனவே கோபம் கொள்வதும், கூடிக்கொள்வதும் குடும்பத்தில் சகஜம் என்பதை மறந்து விடாதீர்கள்.

இஞ்சிப் பால்..!

இஞ்சிப் பால்..! 

இதை சாப்பிட்டால்….. கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க. ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி? ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும். அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும். அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்? 

1. நுரையீரல் சுத்தமாகும். 
2. சளியை ஒழுச்சு கட்டிடும். 
3. வாயுத் தொல்லை என்பதே வராது. 
4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும். 
5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம். 
6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும். 
7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம். 
8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு. 
9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும். 
10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே. 

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா? 3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம். ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும். மீதிப்பேர் சாப்பிடலாம். என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?

நமக்கு எப்போதும் கை கொடுக்கும் நம்பிக்கை

நமக்கு எப்போதும் கை கொடுக்கும் நம்பிக்கை

எதை வேண்டுமானாலும் அடைய ஆசைப்படுங்கள். ஆனால், அந்த ஆசை நியாயமானதாக இருக்க வேண்டும். அதைச் சாதிக்க திறமை வேண்டும். திட்டமிடல் வேண்டும், விடமுயற்சி வேண்டும், கடின உழைப்பு வேண்டும். இவைகளிருந்தால் எதையும் சாதிக்கலாம்.

செயல் என்பது உயிரின் இசை என்றொரு பழமொழி உண்டு. அதைச் செயல்படுத்துங்கள்.

இன்ப வாழ்க்கை வாழ மனிதனுக்குச் சிந்தனை எவ்வளவு அவசியமாகத் தேவையோ அந்த அளவுக்கு செயலாற்றலும் தேவை சொன்னவர் ஹாஸ்விட் அறிஞர்.

அறிவு தான் ஆற்றல் சொன்னவர் பேகன்.

நம்பிக்கையானது துணிச்சலைத் தட்டி எழுப்புகிறது. நம்பிக்கை மனித இதயத்தில் துணிச்சலை ஊட்டக்கூடியது சொன்னவர் லான்மெல் அறிஞர்.

து|ய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாததாகும். இவை அனைத்திற்கும் மேலாக அன்பு வேண்டும் என்று சொன்னவர் விவேகானந்தர்.

வயதைக் கூட்டுவதல்ல நம் வாழ்க்கையின் நோக்கம். வயதிற்கு உயிர் ஊட்டுவதுதான் நம் வாழ்க்iகியின் நோக்கம் சொன்னவர் அலெக்ஸிக்ச் கார்மல்.

எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற கொள்கையில் வாழ் நாளெல்லாம் ஒவ்வொரு நொடியையும் செலவிடுங்கள். 

இந்த இலட்சியத்தை தம்மானல் அடைய முடியும் என்று மனதார நம்புவதே தன்னம்பிக்கை. எதை இழந்தாலும் இழக்காலாம். ஆனால் இழக்கக்கூடாத ஒன்று தன்னம்பிக்கைதான். 

தேவைற்ற பொருள்களை வாங்காமல் இருப்பதே ஒருவகை வருமானம் தான். உங்களுக்கு அருகாமையில் உள்ள வீட்டு நண்பர்களோ அல்லது அலுவலக நண்பர்களோ அல்லது நீங்கள் இருக்கும் எந்த இடத்திலும் சுற்றியருப்பவர்களின் நட்பை ஒரு போதும் இழந்துவிடாதீர்கள். உங்கள் வார்த்தைகள் எப்போதும் மென்மையாகவும், இனிமை கலந்தாகவும் இருக்கட்டும். 
மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற அவர்களுக்கு நீங்கள் முதலில் உதவ வேண்டும். 

உங்களிடமுள்ள குறைகளைக் குறைத்து நிறைகளைப் பெற எப்போதும் முயலுங்கள்.

உங்களுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அது உங்கள் திறமைக்கு விடப்பட்ட சவால் என்று நினைத்து பிரச்சனைகளை அணுகுங்கள். 

படிக்கப் படிக்க மனம் விரிவடையும், திறந்த மனம் வெற்றியின் விளைநிலம். 

பள்ளம்தான் மேட்டினை நிர்ணயிக்கிறது.
குள்ளம் தான் உயர்வினை வடிவமைக்கிறது.
இல்லாதது தான் இருப்பதை காட்டுகிறது.

தவறு செய்வது தவறல்ல. திருத்திக் கொள்ள மறுப்பது தவறு. 

ஒரு பக்கம் நீங்கள் கை கொடுத்தால் இன்னொரு பக்கம் உங்களுக்கு கை கொடுக்கும்.

வெற்றி ஓர் அனுபவம் என்றால் தோல்வியும் ஓர் அனுபவமே. தோல்வி எனப்படுவது வெற்றிக் செலுத்தும் காணிக்கை அவ்வளவு தான். அதற்காக உற்சாகம் இழக்கத் தேவையில்லை.

உழைப்பதில் மகிழ்ச்சி வேண்டும். உழைக்கத் தயங்கிக் கொண்டேயிருந்தால் தோல்வியைத் தழுவ நேரும். முயற்சி, பயிற்சி, உழைப்பு, மகிழ்ச்சி, நம்பிக்கை, இவ்வைந்தும் வெற்றியின் ரகசியங்கள். எதில் ஈடுபட்டாலும் மனஉறுதியோடு ஈடுபட வேண்டும். விட்டுக் கொடுத்தால் மன நிம்மதியோடு விட்டுக் கொடுக்க வேண்டும்.

முயற்சி முயற்சி இவை கூடிக் கொண்டே இருக்க வேண்டும். இவை கூடக் கூடத்தான் அதன் பலனும் கூடிக்கொண்டேயிருக்கும். 

முடியும் என்றால் முடிகிறது. தயங்கினால் சரிகிறது. 

நமக்கு எப்போதும் கை கொடுப்பது நம்பிக்கையே.

எப்போதும் ஒருவருடைய இதயம் ஈரமாகவே இருக்கட்டும். அப்போது தான் குடும்ப இதயமே ஈரமாக இருக்கும். குடும்ப இதயயே ஈரமாக இருந்தால் சமுதாய இதயம் ஈரமாக இருக்கும். 

நம் உடலும் உயிரும் போல நம் எண்ணமும் செயலும் இருக்கட்டும். எப்படியாவது வாழ்ந்து விடுவோம் என்று எண்ணுவதல்ல வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழுவதே வாழ்க்கை. எப்போதும் புன்சிரிப்போடு இருப்பது நல்லது. 

உங்கள் வாழ்க்கையில் எது செய்தாலும் ஒருபோதும் மற்றவர்களைப் பின்பற்;றாதீர்கள். பிரதியெடுப்பது தவறு. புதுமையாக சிந்தனை செய்து வாழ்பவனுக்கு என்றும் எதிர்காலம் உண்டு. உல்லாசத்தை மட்டுமே தொழிலராகக் கொண்டு வாழ்ந்துவரும் ஒருவன் உண்மையான சந்தோஷக்காரான இருக்கு முடியாது.

அதிஷ்டம், துரதிஷ்டம், என்னால் முடியாது போன்ற வார்த்தைகளை தனது வாழ்க்iகியின் அடிமட்டத்திலேயே து|க்கி எறிய வேண்டும். அப்போதுதான் வெற்றி வரும். பொய்யான எதற்குள்ளும் நுழையக் கூடாது. எதிலும் நிஜம் இருக்கட்டும். அனாவசியமான ஆசைகளை ஒழித்துக் கொண்டு, அவசியமான ஆக வேண்டிய ஆசைகளை வளர்ந்துக் கொள்ளவேண்டும். உன் திறமையை து|ண்டி விட மற்றவர்களால் முடியும். உன்னை வளர்த்துக்கொள்ள உன்னால்தான் முடியும். உண்மைக்காக எதையும் இழக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையை இழந்துவிடக்கூடாது. பிறரிடம் காணும் குறையை, நம்மிடம் எப்;;போதும் அண்டவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களின் துயரங்களைப் பார்த்து இரக்கப்படு. உன் துயரங்களை உன்னோடு மட்டுமே வைத்துக்கொள். 

உயர்ந்த பண்;புக்கு அடிப்படை, சின்னச் சின்ன தியாகங்கள். நம்பிக்கை வைத்தவனை ஏமாற்றுவது சாமாத்தியம் அல்ல. அது துரோகமே. பொறுப்பில் இருக்கும் ஒவ்வொரும் வெற்றியும், தோல்வியும் தம்முடைய பணியில் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். ஒரு காரியத்தை சாதிக்க நினைத்து, தோல்வி அடையும் ஒவ்வொரு சமயத்திலும் வெற்றிப்படிகளில் அடியெடுத்து வைக்கிறோம் என்று எண்ணினால் நிச்சயம் வெற்றி பெறலாம். ஆற்றில் ஓடுகின்ற நீரானது தடைகளை கண்டு நின்றுவிடாமல் வளைந்து, ஒதுங்கி ஓடுவதுபோல, நாமும் வெற்றியை நோக்கி ஓட வேண்டும். வெற்றியை நோக்கி நம் பாதங்கள் நடக்க தயாரானால், அதற்கான வழிகள் நம் முன்னே பிரகாசமாக தெரியும்.

பயணப்படாத பாதை மறைந்துவிடுவது போல, பயணப்படாத திறமை அழிந்துவிடும். அழகு, பொருள்களில் இல்லை. அது பார்வையில் இருக்கிறது. நேர்மையான வழியில் வராத எதுவும் நிலைத்துவிடுவதில்லை. நிறைவைக் கொடுப்பதும் இல்லை. மனத்தை அடக்க நினைத்தால் அலையும். மனத்தை அறிய நினைத்தால் அடங்கும். எண்ணம், சொல், செயலால் எவர்க்கும் எப்போதும் நன்மையையே விளைவிக்க நாட்டமாயிரு. 

உணவில் எளிமை, உழைப்பில் கடுமை, ஒழுக்கத்து உயர்வு – உத்தமர் இயல்பு, உன்ளொன்று வைத்து புறமொன்று பேசினால் உள்ளொளி தீயாகி உடலைக் கெடுத்துவிடும். அவனில் அணு, அணுவில் அவன், உன்னில் எல்லாம். உன்னை அறி. உண்மையில் உனக்கு எதிரி உண்டு எனில் உள்ளத்திலெழும் ஒழுங்கற்ற எண்ணமே என்றார் மகரிஷி அவர்கள்.

தனக்குள் இருக்கும் மனக்குறைகளைப் புரிந்து கொண்டு அவற்றை அழுந்தப் புதைத்துவிட்டு தன்னிடமுள்ள திறமைகளைப் புரிந்துகொண்டு அவற்றை வெளிக்கொணரும் வகையில் ஒருவன் விழிப்பும், சுதாரிப்பும் அடைந்துவிட்டால் அவன் முன்னேறுவதை யாராலும் தடுக்கமுடியாது என்றார் அறிஞர் ஒருவர்.

ஒரு பிச்சனையிலேயிருந்து தப்பிக்கப் போறதுக்கு நமக்கு எவ்வளவு சக்தி தேவைப்படுகிறதோ அதே அளவு சக்திதான் பிரச்சனைகளைப் புரிஞ்சுக்கிட்டு அதை ஜெயிப்பதற்கும் தேவைப்படுகிறது என்கிறார் எம்.ஆர். காம்மேயர்.

வயதைக்கூட்டுவதல்ல நம் வாழ்க்கையின் நோக்கம். வயதிற்கு உயிர் ஊட்டுவதுதான் நம் வாழ்க்கையின் நோக்கம் என்றார் அலெக்ஸிக்ச் கார்மல்.

உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை யாரும் தேர்வு செய்வதில்லை. நீங்கள் இதுவரை என்ன செய்துள்ளீர்கள் என்பதைப் பார்த்துத்தான் உங்கள் தகுதியைத் தீர்மானிக்கிறார்கள்.

எதிர்ப்பு இல்லை என்றால் அங்கு முனNனெற்றம் இல்லை. கனவு காணுங்கள் வாழ்க்கையில் முன்னேற. அன்பு, அறிவு, கணிவு, துணிவு இந் நான்கும் இருந்தால் உனக்கு நல்வழி காட்டும். எவ்வளவு நேரம் வேலை செய்கிறொம் என்பதைவிட எப்படி வேலை செய்கிறோம் என்பதுதான் முக்கியம். திட்டம் இல்லாத வாழ்க்கை பிரேக் இல்லாத வண்டியைப் போன்றது.

முயற்சி என்பது வெறும் கானல் நீர் அன்று. அது நி;ச்சயம் ஆற்றங்கரைக்கு அழைத்தே செல்லும் என்ககிறார் கதே. 

கோபம் கொள்ளாதீர்கள், கோபம் வாயைத் திறக்கும். ஆனால், கண்களை மூடிவிடும் என்கிறார் கேட்டோ அறிஞர்.

மனிதனின் மனம் எதைச் சாதித்து, உறுதியாக நம்புகிறதோ அதை உறுதியாக அடைந்தே தீரும். தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுகிறவன் தோல்வியுறுவான். ஏனெனில் தன்னம்பிக்கை இழந்தவன் எல்லாமே இழந்துவிடுகிறான்.

மனக்குழப்பம் செயல் திறனைப் பாதிக்கும். ஆகவே வீண் சபலங்களுக்கு மனதினில் இடம் கொடுக்காமல், தெளிவான அடிப்படையில் திடமாக அடியெடுத்து வைத்தால் வெற்றி நிச்சயம். 

மன வலிமை உள்ளவர்கள் மரணத்தையும் வெல்ல முடியும். மரணத்தின் ஆக்கிரமிப்பை, தன்னம்பிக்கையினால் தள்ளிப்போட முடியும்.

முயற்;சி முயற்சி இவை கூடிக் கொண்டே இருக்க வேண்டும். இவை கூடக் கூடத்தான் அதன் பலனும் கூடிக்கொண்டேயிருக்கும். முடியும் என்றால் முடிகிறது. தயங்;;கினால் சரிகிறது. 

வாழ்க்;;கையில் வெற்றி தோல்விகளை எப்படி சந்திக்க வேண்டும் என்று அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். சிந்தனையை சீர்படுத்தக்கூடிய குரு அல்லது ஆசிரியர்களே இன்றைய மாணவர்களுக்குத் தேவை. சிந்திப்பதே மூலதனம் என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். வாழ்க்கையில் எத்தனை ஏற்ற தாழ்வுகள் வந்தாலும் சிந்தித்துக்கொண்டே இருப்பதுதான் எனது மூலதனம் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள்.

ஆகவே, உழைப்பதில் மகிழ்ச்சி வேண்டும். உழைக்கத் தயங்கிக் கொண்டேயிருந்தால் தோல்வியைத் தழுவ நேரும். முயற்சி, பயிற்சி, உழைப்பு, மகிழ்ச்சி, நம்பிக்கை, இவ்வைந்தும் வெற்றியின் ரகசியங்;கள். 

நமக்கு எப்போதும் கை கொடுப்பது நம்பிக்கையே. வெற்றியின் முதல் இரகசியம் தன்னம்பிக்கையே.

முயற்சிகள் பலவிதம்

முயற்சிகள் பலவிதம்

மதுரை கிருஷ்ணகுமாரும், தாராபுரம் பழனிச்சாமியும், தன்னம்பிக்கை மே மாத இதழில் முயற்சியே வளர்ச்சிக்கு வேர் என்ற எனது கட்டுரையைப் படித்துவிட்டு போன் செய்தார்கள்.

“அது என்ன சார், விதவிதமாக முயற்சிப்பது, வீரியமாக முயற்சிப்பது, வீரியமாக முயற்சிப்பது, வித்தியாசமாக முயற்சிப்பது. அவைகளைப் பற்றி சற்று விளக்கமாக எழுதக்கூடாதா?”

அவர்கள் எனது பல நூல்களின் வாசகர்கள். அவர்களுக்காகவும், அதே கேள்வியை மனதில் கொண்ட மற்ற வாசகர்களுக்காகவும் இந்தக் கட்டுரை.

1. விதவிதமாக முயற்சிப்பது:
குதிரையின் கண்களுக்கு சேனம் கட்டியது போல், ஒரே மாதிரியான முயற்சியையே எப்போதும் எடுத்துக் கொண்டிருப்பது வெற்றிக்கு அவ்வளவாக உத்திரவாதம் அளிக்கும் என்று சொல்ல முடியாது.

ஏன்?

நம்மைவிட நமது போட்டியாளர்கள் வெற்றி குறித்து மிகத்தீவிரமாக சிந்திக்கிறார்கள். மிகத்தீவிரமாக செயல்படுகிறார்கள்.

அப்படியென்றால், நாமும் அப்படியெல்லாம் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் அல்லவா இருக்கிறோம்.

ஆகவே, நமது முயற்சிகள் விதவிதமாக இருக்க வேண்டும். புரியவில்லையா? ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

பொதுத்தேர்வில், நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைக் குறிவைக்கும் மாணவர்கள் எப்படியெல்லாம் முயற்சி செய்கிறார்கள்?
அன்று நடந்த பாடங்களை அன்றே “படித்துப்” பார்க்கிறார்கள்.
படிக்கும் போதே வாய்விட்டுச் “சொல்லிப்” பார்க்கிறார்கள்.
சொல்வதோடு நில்லாமல், முக்கியமான கேள்விகளுக்கான பதில்களையும், முக்கியமான பகுதிகளையும் ஒரே கேஸட்டில் “பதிவு செய்து” கொள்கிறார்கள்.

வீட்டில் மற்ற வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் நேரங்களிலும், உறங்கப்போகும் சமயங்களிலும் அந்த கேஸட்டைப் போட்டு “கேட்டுக் கொண்டே” இருக்கிறார்கள். மனதில் நன்கு பதிய வைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு தடவை ரிக்கார்ட் பண்ணினா நூறு தடவை படிச்சதுக்குச் சன்ம்

படிப்பதோடு நின்றுவிடாமல், பாடத்தின் முக்கியமான பகுதிகளை “எழுதிப்” பார்க்கிறார்கள்.

கடினமான சொற்கள், சமன்பாடுகள், சூத்திரங்கள் ஆகியவற்றை வீட்டிலேயே ஒரு “போர்டில் எழுதி” வைத்துக்கொள்கிறார்கள். போகும் போதும் வரும் போதும் நின்று, பார்த்து மனதில் வாங்கிக் கொள்கிறார்கள்.

கற்றவை இன்னும் ஆழமாக மனதில் பதிவதற்காக, கற்ற பாடங்களை தங்கள் நண்பர்களுக்கு “கற்பிக்கிறார்கள்”.

முக்கியமான பகுதிகளையும், கேள்வி பகுதிகளையும், திரும்பத் திரும்பப் படிக்கிறார்கள் ( )

சென்ற வருடங்களின் கேள்வித்தாள்களை சேகரித்து வைத்துக் கொள்கிறார்கள். நண்பர்கள் சிலரோடு சேர்ந்து, வீட்டிலேயே நிஜப்பரீட்டை போன்ற உணர்வோடு எழுதிப்பார்க்கிறார்கள் ( ).
தாங்கள் எழுதியவற்றை மற்றவர்களிடம் கொடுத்து, திருத்தி, மதிப்பெண் போட்டுக் கொள்கிறார்கள். எங்கே தவறு? என்ன தவறு? என்று ஆய்ந்து பார்க்கிறார்கள்.
- போதுமா?

இதுதான் அதிக மார்க் வாங்க ஆசைப்படும் மாணவன் எடுக்கின்ற விதவிதமான முயற்சிகள்.

2. வீரியமாக முயற்சிப்பது:
உடல் ஆரோக்கியத்திற்காக நடைப்பயிற்சி செய்பவர்கள், பூமிக்கு வலிக்குமே என்று பொடிநடை போடக் கூடாது என்பார் வைரமுத்து. வியர்வை வரும் அளவுக்கு கைகளை வீசி நடக்க வேண்டுமாம். நடையில் வீரியம் வேண்டுமாம்.

ஒரு மரத்தையோ, மரத்தின் கிளையையோ வெட்டும்போது கோடலியால் மரத்துக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பீர்களா?

காய்ச்சிய இரும்பை, கொல்லன், சுத்தியலால் தட்டிக் கொடுப்பானா? சம்மட்டியால் ஓங்கி அடித்து நசுக்குவானா?

உங்கள் வீட்டுச் சுவற்றில் ஆணி அடிக்கிறீர்கள். ஒவ்வொரு அடியிலும் வேகமும் வீரியமும் இருக்குமா, இல்லையா?

டென்னிஸ், பாட்மிண்டன், வாலிபால் போன்ற விளையாட்டுகளில், ஆளில்லாத இடமாக பந்தைப் போடுவது ஒரு யுக்தி என்றால், அடிவயிறு கலங்குகிற மாதிரி, அம்பு போல் பந்தை வீரியமாய், வலிமையுடன் இறக்குவதும் வெற்றிக்கு உதவும் ஒரு யுக்தி தானே.

வெற்றிக்கான முயற்சிகளில் வீரியம் இல்லையென்றால், வெற்றி ஆடி அசைந்து தான் வரும். வராமலேயும் போகும்.

3. வித்தியாசமாக முயற்சிப்பது:
கடும் போட்டி நிலவும் போது, ஜெயிக்க விரும்புகின்ற ஒருவன், சற்றே வித்தியாசமாகவும் செயல்பட்டுத்தான் ஆக வேண்டும். தனது தனித்துவத்தை, ஸ்பெஷாலிட்டியை காட்டித்தான் ஆக வேண்டும்.

ஒரு மாம்பழத்துக்காக, பிள்ளையாருக்கும் முருகனுக்கும், சிவபெருமான் வைத்த போட்டியில் பிள்ளையார் எப்படி ஜெயித்தார்? சற்றே வித்தியாசமாய் முயற்சித்ததால் தானேÐ
ஒரு நேர்முகத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. ஒரே ஒரு இடம் தான் காலி. ஆனால் வந்திருந்ததோ இருபதுக்கும் மேற்பட்டவர்கள்.
அதில் ஒரு விசித்திரம்.

முதலில் வந்தவரை முதலில் கூப்பிடாமல், ஏ, பி, ஸி, டி வரிசையில் பெயர்களை அழைத்தார்கள்.

நம்ம ஆள் பெயர் வீரராகவன். கடைசி ஆள். இவனுக்கு பயங்கர சந்தேகம்.

தேர்வு செய்பவர்கள், பசியின் காரணமாகவோ, அலுப்பின் காரணமாகவோ, மற்ற வேலைச் சுமையின் காரணமாகவோ, நம்மைக் கூப்பிடுவதற்கு முன்பாகவே யாரையாவது தேர்வு செய்துவிட்டால்…? யோசித்தான். ஒரு துண்டுப் பேப்பரை எடுத்தான்.

“சார், என் பெயர் வீரராகவன். உங்கள் அழைப்பு வரிசைப்படி நான் கடைசி ஆள். இந்தப் பதவிக்கான எல்லாத் தகுதிகளும், திறமைகளும், அனுபவமும் உண்டு. என்னை அழைப்பதற்கு முன்பாக, தயவு செய்து யாரையும் செலக்ட் செய்து விடாதீர்கள்”.

இதை எழுதிப் பியூனிடம் கொடுத்து உள்ளே அனுப்பினான்.

அவர்கள் இதைப் படித்தார்கள். கண்களில் வியப்பு. இதழ்களில் புன்னகை.

பலே, பையன் கொஞ்சம் ஸ்மார்ட் தான். வரட்டும் பார்ப்போம்.

அவனும் அழைக்கப்பட்டான். கேள்விகளுக்கெல்லாம் மிகச்சரியான பதிலளித்தான். பாராட்டுப் பெற்றான். பதவியும் பெற்றான்.

சரியான பதில்களை பலரும் அளித்திருப்பார்கள். ஆனால்…

துண்டுபோட்டு பஸ்ஸில் சீட் பிடித்த அந்த வித்தியாசமான முயற்சியல்லவா வேலை கிடைக்க உதவியது.

உங்கள் முயற்சிகளும், விதவிதமாக, வீரியமாக, வித்தியாசமாக இருந்தால், வெற்றி நிச்சயம்.