Sunday, February 1, 2015

தோல்வி என்றால் உண்மையில் என்ன?

தோல்வி என்றால் உண்மையில் என்ன? 

1. தோல்வி என்றால் நீங்கள் தோற்றபின் என்று பொருள் அல்ல!! நீங்கள் இன்னும் வெற்றியடையவில்லை என்று தான் பொருள் படும்!!

2. தோல்வி என்றால் நீங்கள் எதையும் சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல!!! சில பாடங்கள் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று தான் பொருள்!!

3. தோல்வி என்றால் நீங்கள் அவமானப்பட்டு விட்டதாகப் பொருள் அல்ல!1 முயன்று பார்க்கும் துணிவு உங்களிடம் இருக்கிறது என்பது பொருள்!1

4. தோல்வி என்றால் உங்களிடம் அறிவு இல்லை என்று பொருள் அல்ல!! வேறு உத்திகளைக் கையாள வேண்டிய அவசியத்தினை உணர்ந்துவிட்டீர்கள் என்பது தான் பொருள்!!

5. தோல்வி என்றால் வாழ்க்கை வீணாகி விட்டதாகப் பொருள் அல்ல!! மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்புக்கிடைத்துள்ளது என்பது தான் பொருள்!1

6. தோல்வி என்றால் விட்டு விட்டு ஓட வேண்டும் என்பது பொருள் அல்ல!! இனிமேல் தான் உண்மையாக உழைக்கத்தொடங்க வேண்டும் என்பது தான் பொருள்!!

7. தோல்வி என்றால் உங்களால் பிரபல்யமாக மிகச் சிறந்த இடத்தினை அடையமுடியாது என்று பொருள் அல்ல!! அடையக் கொஞ்சம் தாமதமாகலாம் என்பது தான் பொருள்!1

8. தோல்வி என்றால் கடவுள் உங்களைக் கைவிட்டுவிட்டார் என்று பொருள் அல்ல!! உங்களுக்கு வேறு நல்ல எதிர்காலத்தினை நிர்ணயம் செய்து வைக்கிறார் என்பது தான் பொருள்.

உங்கள் வாழ்க்கை உங்களை தனிமையில் ஊங்சலாட வைக்கும் போது வாழ்க்கையினை வெறுத்து ஒதுங்காதீர்கள். வாழ்க்கையில் எந்நேரத்தில் எதுவும் நடக்கலாம். அது உன்னை எனி இல்லை என்ற இடத்துக்கும் கொண்டு போய்விட்டுவிடும் ஆகவே

1. வாழ்க்கையில் எந்தப் பிரச்சைனையாகிலும் வளைந்து கொடுங்கள். முறித்து விடாதீர்கள்.

2. உங்களின் திறமையினை தட்டி எழுப்பி அதனினை மேல் கொண்டு வரப்பாருங்கள். அயர்ந்து விடாதீர்கள்.

3. உங்களுக்கு என்று வாழ்க்கையில் ஒரு அடையவேண்டிய குறிகோளினை ஏற்படுத்தி அதற்கேற்ப துடுப்பினை களைக்காது சலிக்காது முயன்று வெற்றி அடையவேண்டும் என்ற குறிகோளினூடு கப்பலை பெரும் காற்றின் வழியே நகர்த்துங்கள்.

4. முயற்ச்சி உடையவர்களே இதிலே வெற்றிபெறுகிறார்கள். கடைமையை செய்யுங்கள் பலனை எதிர்பாராது செய்யவேண்டிய வேலையில் கண்ணும் கருத்தும்மாய் இருங்கள்.

5. இதற்காக ஒரு முன்னோரின் வாழ்க்கையினை ஒன்றிப்போகக்கூடியவாரு ஒருவரினை பின்பற்றுங்கள்.

6. தோல்விகள் வந்தால் மேற்சொன்னதற்கமைய மீண்டும் மீண்டும் ஆயிரம் தடைவையாயினும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உங்கள் படகினைச் செழுத்துங்கள். பின்னாலே திரும்பிப்பார்க்காதீர்கள். முடிந்தவை மீண்டும் வரப்போவதில்லை.

7. உமக்கொன்று ஒரு சிந்தனை, கொள்ளைகளினை, ஒழுக்கமான வாழ்க்கை முறைகளினை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அதனினை நாளாந்த வாழ்க்கையில் கடைப்பிடிக்கப் பாருங்கள்.

8.உங்களினை நீங்கள் உயர்வாக கருதி உங்களினை நீங்களே மதியுங்கள். பெருமையாக உங்கள் செய்கைகளினை கருதுங்கள்.

9. முயற்ச்சி செய்தும் வெற்றி கிடைக்கவில்லை என்றால் இன்னும் சிறிது கூட ஆழமாக தோண்டுங்கள்.

10. வெற்றியைத்தேடி நீங்கள் கதவினைத்தட்டித்தட்டி ஏறி இறங்குங்கள். வெற்றி உங்களினை தேடி வராமல்.

11. பிழைகள் விடுவது எல்லாம் பிழைகள் எப்படி நடக்கின்றன என்று அறிவதற்கே. ஆகவே ஏன் இப்படியாக நடக்கிறது என சிந்தித்து உங்கள் பாதையினை சரியான பாதையில் செலுத்துங்கள்.

12. பொஸிடீவாக இருந்து உங்கள் செயல்களால் வருவன நல்லவையோ, கஸ்டமோ சந்தோசமாக அவையினை ஏற்றுக்கொண்டு பாடம் படித்து எனி சரியான வழியினை தேர்ந்தெடுங்கள்.

13. இந்த உலகத்தில் கஸ்டப்பட்டு பின்பு அடைவது தான் காலம் காலமாக் உங்களுடன் நிற்கும். ஆகவே ஒரு பொருளும் ஈசியாக வருவதேயில்லை. அப்படி வருவது உங்களிற்கு பெருமதியாக இராது.நீங்களே அதை மதிக்க மாட்டீயள்.

14. பிரச்சைகள் வருகிறது என்றால் நீங்கள் போகும் மார்க்கத்தில் ஏதோ தவறுகள் இருக்கின்றன. ஆகவே எங்கே தப்பு நடக்கின்றது என்று பார்த்து திருந்திக்கொள்ளுங்கள். ஏன் இப்படி நடக்கிறது என்று தெளிவாக பிழையான வழிகளினை கண்டு பிடியுங்கள்.

15. உங்களினையே பார்த்து கேளுங்கள். நீங்கள் எங்கே என்னும் ஒரு அடுத்த பத்து ஆண்டுகளின் பிற்பாடு எப்படி இருக்கப்போகிறீர்கள் அதற்கு இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று யோசியுங்கள். பத்து வருடங்களின் பின்பு உங்கள் உடல் பலம், மனோ பலம் மாறிவிடாலாமில்லையா?

16. உங்களின் கடந்தகால அனுபவங்கள் தான் உங்கள் வழிகாட்டிகள். தேவையானவற்றை எதிர்காலதிற்கு தேவைப்படும் போது அனுபவத்தினூடே ஆராய்ந்து புத்திசாலித்தனமாக, விவேகமாக முன்னேறுங்கள். வாழ்க்கை உங்கள் நண்பன். வரலாறு உங்கள் வழிகாட்டி.

17. உங்களுகென்று வகுத்துவிட்ட கொள்கைகளில் எப்பவும் உறுதியாக இருங்கள்.

18. உங்கள் வாழ்க்கை வட்டத்தின் வெளியே வந்து நின்று உங்களினை ஆராயுங்கள். உங்கள் குறுகிய சிந்தனையை விட்டு வெளியில் வந்து ஆராயுங்கள்.

19. எப்ப, எங்க, என்ன கதைக்கவேண்டும், எதைச்செய்யவேண்டும், எப்படிச்செய்யவேண்டும் என்று தெளிவாய் இருங்கள். 

20. கஸ்டப்பட்டு வேலை செய்யாது திறமையாய் விரைவாய் சரியாக செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

21. எல்லா வழிகளினையும் பயன் படுத்துங்கள்.

22. நீங்கள் நினைத்தால் நினைத்ததை நடத்தி முடிக்க முடியும்.

23. தேவையான போது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். 

No comments:

Post a Comment