Thursday, February 5, 2015

மனிதனின் தவறுகள்/குற்றங்கள்- சிந்தனைகள்

மனிதனின் தவறுகள்/குற்றங்கள்- சிந்தனைகள்

நிச்சயமாகக் கூறமுடியும் தவறுகள் செய்யாதவர்கள் யாருமில்லை என்று ஏனெனில் மனிதன் குழந்தைப் பருவத்திலிருந்து முதுமை வரைக்கும் எத்தனையோ தவறுகளைச் செய்கிறான் இதனை வெளிப்படையாகவே அறியமுடிகிறது.

மனித தவறு குற்றம் தவறின் பிரதிபலிப்பு

ஏன் மனிதன் தவறுகள்/குற்றங்கள் செய்கிறான்?

ஒன்றைக் கவனிக்கவேண்டும் மனிதன் மாத்திரம் தவறுகளும் குற்றங்களும் செய்கிறான் மிருகங்கள் அல்ல !

ஏன் ?
எதனால்?

அதாவது மனிதனுக்கு மனம் என்றதொண்டு இருப்பதனாலும்  அவன் மனச்சாட்சியை அலட்சியம் செய்வதாலும் மனிதன் மேலும் மேலும் குற்றங்களும் தவறுகளும் இழைக்கிறான்.

அதைவிட மிகமுக்கியமான விடயம் என்னவெனில்,எந்தவொரு விடயத்தையும்  முழுமையாக அறியாமை.

தெளிவான விளக்கம் இன்மை .

முற்று முழுதாத சிந்திக்காமல் எடுக்கும் முடிவுகள்.

அதிக ஆசை நம்மை சுற்றியிருப்பவர்களின் குணங்களை நன்கு அறியாமை.

பகுத்தறிவை வளர்த்துக்கொள்ளாமை.

இவைகளே முக்கிய காரணமாக இருக்கிறது இவற்றை திருத்திக்கொண்டால் தவறுகள் குற்றங்கள் பெருமளவு குறையும்.

மன்னிக்க முடியாத தவறுகள்/குற்றங்கள் ஏற்படும் சந்தர்ப்பம் ,துறை

வைத்தியத் துறை (மருந்து ,சத்திரசிகிச்சை)
கல்விக் கூடங்கள் (சிறார்களை மதியாமை)
சாரதியின் அசமந்த போக்கினால் ஏற்படும் சாலை விபதுக்கள்.
பணத்திற்காக பாவம் புண்ணியம் பாராமை.
அதிகார துஸ்பிரயோகம் செய்தல்
மூடநம்பிக்கை நம்புதல்
சிறுவர்களை,முதியவர்களை மதியாமை
காவல் துறை (சம்பந்தமில்லாதவர்க்கு தண்டனை)
வியாபரிகள் (பழுதான பொருட்களை நல்லது என்று விற்றல், அதிக விலை )
மிருக வதை செய்பவர்கள்

திருவள்ளுவரின் கருத்து 

"தெரிந்து தெளிதல்" என்னும் அதிகாரத்தில் இவ்விரண்டு குறள்கள் மூலம் விளக்கங்களை விளங்கிக்கொள்ளலாம்

"குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு"

"குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்"

மனிதன் ஒழுங்காக இருக்கவேண்டுமெனில் அவரவர் தங்களுடை மனதினை பக்குவப்படுத்துவதன் மூலம் தவறுகள்/குற்றங்கள்  என்பன இல்லாமல் போய்விடும்

No comments:

Post a Comment