Thursday, February 5, 2015

அறிந்ததும் அறியாததும்! பொது அறிவுத் தகவல்கள்!

அறியாத சில விசயங்களை அறிந்ததும் அறியாததும்! பொது அறிவுத் தகவல்கள்!

1.        எவரெஸ்ட் சிகரத்தின் பழைய பெயர் சோமோலெங்மா. 1863 முதல் எவரெஸ்ட் என்ற பெயர் வந்தது. 

2.        பிரபஞ்சம் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. 

3.        சூரியன் 5 ஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்குமுன் தோன்றியது. 

4.        இந்தியாவில் 7092 இரயில் நிலையங்கள் உள்ளன. 

5.        இந்தியாவிலேயே கல்கத்தாவில்மட்டும் சுரங்க ரயில் இயக்கப் படுகிறது. 

6.        சென்னை நகரின் பரப்பளவு 231 ச.கி.மீ. 

7.        ஆசியாக் கண்டத்தின் மிகப்பழமையான  பத்திரிக்கை மும்பை சமாச்சார். 

8.        இந்தியாவில் முதல் நினைவு நாணயம் நேருஜிக்கு 1964ல் வெளியிடப்பட்டது.

9.        டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை இளவயதில் எடுத்தவர் டெண்டுல்கர். 

10.        ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற கதாப்பாத்திரம் தோன்றி121 ஆண்டுகள் 
      ஆகின்றன. 

11.        155 மில்லிமீட்டர் நீளமுள்ள அதி நவீன பீரங்கியை இந்தியா தயாரித்துள்ளது. 
      இதன் பெயர் பீம் இடம் சென்னை ஆண்டு 1996. 

12.        உலகின் முதல் கருத்தடை மாத்திரையின் பெயர் ஈனோவிட். 

13.        உலகிலேயே மிக அதிகமாக சைக்கிள் ஓட்டுபவர்கள் சீனர்கள். 

14.        உலகிலேயே மிகச்சிறிய குரங்கு இனத்தின் பெயர் ‘அலொசிபஸ்டிரிகொடிஸ்’ 
             எண்பது கிராம் எடையுள்ள இந்த குரங்கினம் மடகாஸ்கர் பகுதியில் 
             காணப்படுகிறது.

15.        உலகில் மின்னல் தாக்கி அதிகம் இறக்கும் மக்கள் அமெரிக்கர்கள். 

16.        இறக்கையில்லாத பூச்சிகளுக்கு ஆப்டாஸ் பூச்சிகள் என்று பெயர். 

17.        தமிழ் தேசிய மொழியாக உள்ள நாடுகள் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர். 

18.        உலகின் பெரிய கடல் ஏரி காஸ்பியன் கடல். 

19.        ஐ.நா சபையின் முதல் செயலர் டிபிக்யூலி. 


20.        இந்து பல்கலைக்கழகத்தை அமைத்தவர் மாண்டவ் சிங் மாளவியா. 

சராசரி மனிதனின் தகவல்கள்.... 

சராசரி மனிதனின் குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
சராசரி மனிதன் ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட் 
மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
மனித உடலில் மிகவும் குளிரான பகுதி - மூக்கு 
மனித உடலில் வியர்க்காத உறுப்பு - உதடு 
மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள் 
இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள் 
மனித நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம் 
மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000

ரோலர் கோஸ்டர் எனப்படும் மிகபெரிய ராட்டினத்தில் பயணம் செய்தால், மூளையில் ரத்தம் கட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.

சாதாரணமாக கண்களில் காணப்படும் வெண்மை நிறத்திற்கு பதில், நீல நிறத்தை கொண்டிருக்கும் மனிதனின் கண்களுக்கு இருட்டில் காணும் சக்தி அதிகம்.

எல்லாரும் நினைத்து கொண்டிருப்பதை போல, பணத்தாள்(ருபாய் நோட்டு) காகிதத்தால் செய்யப்பட்டது இல்லை. அது, ஒரு வகை "காட்டன் (cotton) " துணியால் செய்யப்பட்டது.

ஒரு சிறிது துளி சாராயம் அல்லது மதுபானத்தை ஒரு தேளின் மேல் தெளித்தால், அதனால் தாங்க இயலாது. அந்த தேள் தன்னைத்தானே கொட்டிக்கொண்டு இறக்கும்.

வெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வருகிறதா? ஒரு சூயிங்கம் (Chewing gum) மென்றுகொண்டே, வெங்காயம் வெட்டினால் கண்ணீர் வருவது மற்றும் கண்கள் எரிச்சல் பெருமளவு குறையும்.

உலகின் மிக நீளமான நதி...எகிப்தில் உள்ள நைல் நதி என்பது உங்களுக்கு தெரியும்தானே. ஆனால், அந்த நைல் நதிக்கு அடிப்பரப்பில் இன்னொரு நதி ஒன்று ஓடுகிறது. அதன் தண்ணீரின் அளவு, மேற்பகுதில் ஓடும் நைல் நதியின் தண்ணீரின் அளவை விட ஆறு மடங்கு அதிகம்.

ஒரு மணிநேரம் தொடர்ந்து நீங்கள் ஹெட்போனை(headpohne) தொடர்ந்து பயன்படுத்தினால், அது உங்கள் காதுகளில் உள்ள கிருமிகளை 700 மடங்கு அதிகரிக்கும்.

உலகின் அதிக அளவு மனித உயிர்கள் பலியாக காரணமாக இருக்கும் ஒரே உயிரினம்....கொசு.

ஒரு ஆய்வின்படி, வலது கை பழக்கமுடைய மனிதர்கள், இடது கை பழக்கமுடைய மனிதர்களை விட, சுமார் ஒன்பது வருடங்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.

நமது மூளை, ஒரு சிறந்த கணிப்போறியைவிட நுட்பமானது. அதில், சுமார் 100 மில்லியன் நரம்பு செல்கள் உள்ளன.

ஒரு மனிதன் மரணமடையும்போது, முதலில் செயல் இழக்கும் உறுப்பு..அவனது காதுகள்.

ஒரு மனிதனின் விழித்திரைகள் 45 சதவிதம் அதிகமாக விரிவடைகின்றன...அவன் தனக்கு பிரியமானவற்றை காணும்பொழுது. 

தேன், மிக எளிதாக ஜீரணமடையும் ஒரு உணவுப்பொருள். ஏன் தெரியுமா? அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டுவிட்டது.

டைட்டானிக் கப்பலை கட்ட ஆன மொத்த செலவு சுமார் 7 மில்லியன் டாலர்கள். ஆனால், அதை பற்றி ஜேம்ஸ் கேமரூன் படமாக எடுக்க ஆன செலவு சுமார் 200 மில்லியன் டாலர்கள்.

நீங்கள் உங்கள் கைவிரல்களை 'நெட்டி' முறிக்கும்போது ஏற்ப்படும் சத்தத்திற்கு காரணம்...நம் உடம்பில் நைட்ரஜன் வாயுவில் உள்ள குமிழ்கள் உடைவதே.

ரத்த ஓட்டம் இல்லாத மனித உடலில் உள்ள ஒரே பாகம்...கண்விழித்திரை. அது நேரடியாக காற்றில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது.

அறிவுக்கு ஆரோக்கியம் : 

நாம் ஒவ்வொரு முறை மனம்விட்டு சிரிக்கும்போதெல்லாம், சுமார் 30 தசைகளுக்கு சிறந்த பயிற்சி அளிக்கபடுகிறது. 

ஆகவே  நண்பர்களே....மனம் விட்டு சிரியுங்கள். 

அறிவுக்கு அதிர்வு :
இந்த உலகின் மொத்த பெட்ரோல் உற்பத்தியில் 29 சதமும்,உலகின் மொத்த மின் உற்பத்தில் 33 சதமும் ஒரேயடியாக பயன்படுத்திக்கொள்ளும் நாடு.. அமெரிக்கா.

கருவிகளும் பயன்களும் 

1.     ஏரோமீட்டர் (Aerometer)-  காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி. 

2.     அம்மீட்டர் (Ammeter)-  மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது. 

3.     ஆடியோமீட்டர் (Audiometer)-  மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி. 

4.     போலோமீட்டர் (Bolometer)-  வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி. 

5.     கிரையோமீட்டர் (Cryometer)-  குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி. 

6.     எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)-  மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி. 

7.     மேனோமீட்டர் (Manometer)-  வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது. 

8.     டோனோமீட்டர் (Tonometer)- ஒலியின் அளவை அளவிடும் கருவி. 

9.    வெர்னியர் (Vernier)-  சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி. 

10.  பைரோமீட்டர் (Pyrometer) -  அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி. 

11.   பாத்தோமீட்டர் (Fathometer)-  ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி. 

12.   டைனமோ (Dynamo)-  எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி. 

13.   வேவ்மீட்டர் (Wavemeter)-  ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி. 

14.   பிளானிமீட்டர் (Planimeter)-  பரப்பை அளவிடும் கருவி. 

15.    ரெக்டிஃபையர் (Rectifier)-  ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி. 

16.    டென்சிமீட்டர் (Tensimeter)-  ஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி. 

எதைப்பற்றியது? 

1. பேடாலஜி (Pedology)-  மண் அறிவியல் குறித்த படிப்பு. 

2. பெட்ராலஜி (Petrology)-  பூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு. 

3. சூஜியோகிராபி (Zoogerogrphy)-  பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு. 

4. சிஸ்மோலஜி (Seismology)-  பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு. 

5. ஹைட்ராலஜி (Hydrology)-  பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு. 

6.   கிளைமட்டாலஜி (Climatology)-  சுற்றுப்புறத்தில் நிலவும் பருவநிலை மாறுபாடு குறித்து படிக்கும் படிப்பு. 

7. பயோ ஜியோகிராபி (Biogeography)-  பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு. 

எங்கேஅதிக உற்பத்தி? 

1.   ஆப்பிள் -  இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர். 

2. வாழைப்பழம் -  குஜராத், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, கேரளம். 

3. இஞ்சி -  கேரளம், மேகாலயா. 

4.   கோகோ -  கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு. 

5. திராட்சை -  மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம். 

6. மாம்பழம் -  உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு. 

7. ஆரஞ்சு -  மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு, மேகலாயா. 

8. மிளகு -  கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு 

9. அன்னாசி பழம் -  அஸ்ஸாம், மேகாலயா, மேற்கு வங்கம், திரிபுரா. 

10 .ஏலக்காய் - கர்நாடகம், சிக்கிம்,கேரளம், தமிழ்நாடு. 
  
11. முந்திரி -  கேரளம், ஆந்திரம். 

எந்தத் தொழிற்சாலை எங்கே? 

1.    ஹிந்துஸ்தான் கேபிள்ஸ் -  ருப்னாராய்பூர் (மேற்கு வங்கம்). 

2.    ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் –  பெங்களூரு, ஹைதராபாத், லக்னோ. 

3.    பாரத் அலுமினியம் நிறுவனம் -  சட்டீஸ்கர், மேற்கு வங்கம். 

4.    ஹிந்துஸ்தான் அலுமினியம் – ரேனுகோட் (உத்தரப் பிரதேசம்). 

5.    இந்தியன் டெலிபோன் இன்டஸ்ட்ரீஸ் –   பெங்களூரு. 

6.    எச்.எம்.டி. வாட்ச் –  பெங்களூரு. 

7.    நேஷனல் நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர் மில்ஸ் –  நேபாநகர். 

8.    நேஷனல் பெர்ட்டிலைசர்  லிமிட்டெட் –  நங்கால், பட்டின்டா, பானிப்பட், விஜய்பூர். 

9.    ஹிந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் லிமிட்டெட் -  மகாராஷ்டிரம் மற்றும் கொச்சி.

10.    ஃபெர்ட்டிலைசர் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியா -  சிந்திரி, கோரக்பூர், ராமகுண்டம். 

அணைகளும் மாநிலங்களும் 

1.    நாகர்ஜூன சாகர் நீர்த்தேக்கம் (ஆந்திர மாநிலம் )  - 
கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, விவசாயம் மற்றும் நீர்மின்சக்திக்காக இந்த நீர்த்தேக்கத் திட்டம் பயன்படுகிறது. 

2.  கக்கார்பாரா நீர்த்தேக்கம் (ஆந்திர மாநிலம்)- 
தபதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. விவசாயத்திற்காக கட்டப்பட்டுள்ளது. 

3.    கோஷி நீர்த்தேக்கம் (பீகார் மாநிலம்)- 
கோஷி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் அபாயகரமான வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கும், நீர்மின்சக்தித்  திட்டத்துக்கும்   இந்த நீர்த்தேக்கம் பயன்படுகிறது. 

4.    சபரிகிரி நீர்த்தேக்கம் (கேரள மாநிலம்)- 
பம்பா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.  நீர்மின்சக்தித் திட்டத்துக்காக பயன்படுகிறது. 

5.    சாராவதி நீர்த்தேக்கம் (கர்நாடக மாநிலம்)- 
ஜோக் நீர்வீழ்ச்சியை ஒட்டியுள்ள சாராவதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. நீர்மின்சக்தி உற்பத்திக்காக இத்திட்டம் பயன்படுகிறது. 

6.     மகாநதி டெல்டா நீர்த்தேக்கம் (ஒரிசா மாநிலம்)- 
மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.விவசாய பயன்பாட்டிற்காக படுகிறது 

7.   பக்ராநங்கல் நீர்த்தேக்கம் (ஹிமாச்சலப் பிரதேசம்)- 
சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் சந்திப்பு எல்லையில் கட்டப்பட்டுள்ளது, விவசாயம், நீர்மின்சக்தி உற்பத்திக்காக இது பயன்படுகிறது. 

8.      தாமோதர் பள்ளத்தாக்கு நீர்த்தேக்கம் – 
தாமோதர் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, ஜார்க்கண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டிருந்தாலும், இந்த அணையின் நீரை மேற்கு வங்களாமும் பகிர்ந்துகொள்கிறது. வெள்ள நீரை தடுப்பதற்காகவும்,விவசாயத்திற்கும் இந்த அணை பயன்படுகிறது.

9.   சர்தார் சரோவர் நீர்த்தேக்கம் –
நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது,  குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் இந்த நீர்த்தேக்கம் மூலம் பயன்பெறுகின்றன. விவசாயம் மற்றும்  நீர்மின்சக்திக்காக இது பயன்படுகிறது. 

10.     மேட்டூர் (தமிழ்நாடு)- 
காவேரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.  நீர்மின்சக்தி மற்றும் விவசாயத்திற்காக பயன்படுகிறது. 

No comments:

Post a Comment