மிகப்பெரும் வெற்றிக்குப்பின் கர்வம் கொள்ளுவது தவறா?
சூரியன் மறைந்ததும் இரவில் தென்படுகிற மின்மினிப் பூச்சிகள் உலகத்திற்கு தாங்கள்தான் வெளிச்சம் தருவதாக நினைத்துக் கொள்கின்றன.
ஆனால் நட்சத்திரங்கள் பிரகாசிக்கும் போது மின்மினிப்பூச்சிகளின் கர்வம் அடங்கி விடுகிறது
ஆனால் முன்இரவில் சந்ரோதயம் ஆனதும் சந்திரன் ஒளியில் நட்சத்திரங்கள் மங்குகிறது அப்போது உலகம் முழுமைக்கும் வெளிச்சம் கொடுப்பது தான் தான் என்று சந்திரன் கர்வம் அடைகிறான்
சூரியன் உதயம் ஆகும் போது சந்திரன் மறைந்து மங்கிப் போகிறான் நமது செல்வம் குறித்தோ வேறு செல்வாக்குகள் குறித்தோ செல்வந்தர்கள் செருக்குற வேண்டாம்.
“நம்மைக்காட்டிலும் பெரியோர் இந்த உலகில் இருக்கின்றார்கள் என்று நினைக்க வேண்டும் என சொல்லித் தருகிறார் பகவான் இராம கிருஷ்ண பரமஹம்சர்” மித மிஞ்சிய தன்னம்பிக்கை தோன்றும் போது எனது கடந்த கால தொல்விகளை எண்ணுவேன் வரம்பில்லாது எதையும் அனுபவிக்கும் நிலையில் எனது கடந்த கால பசியை எண்ணிக் கொள்வேன்;
மெத்தனமாக இருப்பதை உணரும் போது எனது களத்திலுள்ள போட்டிகளை நினைவில் கொள்வேன்;
எனது பெருமைகளை எண்ணி மகிழும் போது நான் அவமான அடைந்த தருணங்களை நினைவிற்கு கொண்டு வருவேன்; நான் வல்லமை மிக்கவன் என்றஉணர்வு வரும் போது வீசுகின்றகாற்றை நிறுத்த முயல்வேன்; அதிகளவு செல்வம் சேரும் போது உணவு கிடைக்காத வாய் ஒன்றை எண்ணிக் கொள்வென்;
என்னைப்பற்றி கர்வப்படும் போது எனது பலவீனமான குணங்களை நினைவில் கொள்வேன்; எனது திறமைகள் இணையற்றவை என பெருமைப்படும் போது உயரத்திலுள்ள நட்சத்திரங்களை நோக்குவேன் என தன் அனுபவத்தைப் பதிவு செய்கிறார் ஓக் மாண்டினோ.
No comments:
Post a Comment