இந்து மதத்தில் புதைந்துள்ள எவரும் அறியா அரிய ரகசியம்!
நமது முன்னோர்கள் இந்த அரிய ரகசியங்களைக்கண்டுபிடித்து அவற்றை யந்திரங்களாக மாற்றி வழிபட வழி வகுத்தனர். ஸ்ரீ சக்ர யந்திரம் என்பது பிரபஞ்ச தத்துவத்தையும் ரகசியத்தையும் சிறு யந்திரத்தில் அடக்கிக் காண்பிக் கப்பட்ட வழியே என்றும் அதிக ஆற்றலைக் கொண்ட இந்த யந்திரத்தை இப்போது ‘டீ- கோட்’ செய்ய விஞ்ஞானிகள் முயல்கின்றனர் என்பதும் சுவையான செய்தி அல்லவா! நான்காம் தலைமுறை கணினி கூட ஸ்ரீயந்திரத்தின் சிக்கலான அமைப்பைக் கண்டு பிடிக்க முடிய வில்லை இதுவரை!
பெயரில் உள்ள எழுத்துக்களுக்கும் எண்களுக்கும் உள்ள தொடர்பை முத லில் பிதகோரஸ் கூறினார் என நம்புகின்றனர். ஆனால் வடமொழியில் உள்ள ‘கடபயாதி சங்க்யா’ என்ற முறை எதையும் கணித சூத்திரத்தில் அடக்கிவிடும் ஒரு வழி முறையாகத் தொன்றுதொட்டு நம் நாட்டில் இரு ந்து வரு கிறது. பெயரில் உள்ள எழுத்துக்களுக்கும் எண்களுக்கும் உள்ள தொடர்பை -இந்த கடபயாதி வழிமுறை உள்ளிட்ட விஷயங்களை–பல சம்ஸ்கிருத நூல்கள் விளக்குகின்றன!
எடுத்துக்காட்டாக ஆதிசங்கரரின் பெயரிலேயே அவர் பிறப்பு பற்றிய அனைத்து விவரங்களும் அமைந்துள்ளன. சம்-க-ர என்பதற்கு உரிய எண்களாக 5-1-2 ஆகியவை அமை கின்றன. கடபயாதி முறைப்படி இந்த எண்களைத் தலைகீழாகத் திருப்பிப்போட்டு விவரங்களை அறிய வேண்டும். அதன்படி இந்தஎண்கள் 2-1-5 என்ற வரிசை யில் மாற்றி அமைத்துப்பார்த்தால் 2 என்பது அவர் பிறந்த மாதமான வைகாசி மாதத்தையும் ஒன்று முதல் பக்ஷமான வளர்பிறையையும் ஐந்து என்பது அவர் பிறந்த திதியான பஞ்சமியையும் குறிக்கும். வைகாசி மாதம் சுக்ல பட்சம் பஞ்சமியில் சங்கரர் அவதரித்தார் என இதன்மூலம் அறிய முடிகிறது.
மஹாபாரதத்தின் உண்மைப் பெயரான ஜய என்பதை 8-1 என்ற எண்கள் குறிக்கின்றன. இதை கடபயாதி முறைப்படி திருப்பிப் போ ட்டால் வருவது 18. ஆகவே பதினெட்டுப் பர்வங்களைக் கொண்ட இந்நூலில் 18 என்ற எண் முக்கியத்துவத்தைக் கொண்ட தாக அமைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகி றது. இவை எளிய உதாரணங்கள். ஆனால் சிக்கலான பல மர்மங்களை இந்த முறைப்படி சம்ஸ்கிருத நூல்களில் மறைத்து வைத்துள்ளனர். இதை ஆராய்வோர் பிரமித்து மலைக்கின்றனர்.
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து மர்மங்களையும் ஆராய்ந்து பார்த்து விட்டு, “எல்லாமே எண்கள் தான்” என்ற பிரபலமான தத்துவத்தைச் சொன் னார் பேரறிஞர் பிதகோரஸ். ஆனால் இதையே தொலைக்காட்சி, ரயில், கார் போன்ற நவீன வசதிகள் இல்லாத தமிழக குக்கி ராமத்தைச் சேர்ந்த சாதாரண பாமரன் ஒருவன் “எல்லாம் ஒரு கணக்குத் தான்” என்று சர்வ சாதாரணமாகச் சொல்லும் போது பிரபஞ்சம் பற்றிய பேரறிவை அவனது அனுபவபூர்வமான வார்த் தைகளில் கண்டு பிரமிக்க வேண்டி இருக்கிறது! ஆராய்ந்து பார்த்தால் எல்லாமே எண்கள் தான்!!
No comments:
Post a Comment