Sunday, December 7, 2014

விடாமுயற்சியுடன் செயலாற்றினால் தான், தடைகளைத் தாண்டி உயர முடியும்

விடாமுயற்சியுடன் செயலாற்றினால் தான், தடைகளைத் தாண்டி உயர முடியும்

ஒரு குரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். சீடன் விளையாட்டாக மரத்தில் ஏறிக் கொண்டிருந்தான்.

அங்கே பட்டாம்பூச்சியின் வலைப்பின்னலைக் கண்டான்.

அந்த பூச்சி பின்னலை விட்டு வெளியே வர திணறிக் கொண்டிருந்தது.

குழப்பத்துடன் சீடன், ""ரொம்ப சிரமப்படுதே! அதற்கு உதவி செய்தாகணும்!'' என்ற எண்ணத்துடன் அதை நெருங்கினான்.

கண் விழித்த குரு சீடனைக் கண்டார்.

""சும்மாயிரு! அதன் போக்கிலேயே விட்டு விடு!'' என்று சொல்லிவிட்டு மீண்டும் உறங்கினார்.

சீடனுக்கு மனம் கேட்கவில்லை. 

குருவுக்கு தெரியாமல், தடுமாறும் அந்த பூச்சியை பின்னல் கூட்டில் இருந்து விடுவித்தான்.

ஆனால், அந்த பூச்சி பறக்க முடியாமல் தரையில் விழுந்தது.
கண் விழித்த குரு சீடனை நோக்கி,

""சொல்லியும் கேட்கவில்லையே! அதன் சிறகை சேதப்படுத்தி விட்டாயே! பட்டாம்பூச்சி பறக்க வேண்டுமானால், அது தானாகவே கூட்டை விட்டு வெளியே வந்திருக்க வேண்டும்'' என்று கடிந்து கொண்டார்.

பட்டாம்பூச்சி மட்டுமல்ல! மனிதனுக்கும் இது பொருந்தும். வாழ்வில் குறுக்கிடும் கஷ்ட நஷ்டங்களுக்காக பிறரது உதவியை நாடக்கூடாது. அவனாகவே சமாளிக்கும் ஆற்றலைப் பெற வேண்டும். விடாமுயற்சியுடன் செயலாற்றினால் தான், தடைகளைத் தாண்டி உயர முடியும்.

ஹோம மந்திரங்களும், அவற்றின் பலன்களும்

ஹோம மந்திரங்களும், அவற்றின் பலன்களும் 

1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.
2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.
3. சிவ அஷ்டாக்ஷரீ - ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.
4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.
5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.
6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.
7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.
8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.
9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.
10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.
11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.
12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.
13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.
14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.
15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.
16. சிவ நவாக்ஷரீ - கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.
17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.
18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.
19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.
20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.
21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.
22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.
23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.
24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.
25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.
26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.
27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.
28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.
29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.
30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.
31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.
32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.
33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.
34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.
35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.
36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.
37. மஹா கருட மந்த்ரம் - அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.
38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.
39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.
40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.
41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.
42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.
43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.
44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.
45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.
46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.
47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.

மன உறுதி இருப்பவரால்தான் தீய எண்ணங்களை எழும் போதே அவற்றை அழிக்க முடியும்

மன உறுதி இருப்பவரால்தான் தீய எண்ணங்களை எழும் போதே அவற்றை அழிக்க முடியும்

அந்தத் தென்னை மரத்தில் ஒரு பருந்து ஆழ்ந்த சிந்தனையோடு அமர்ந்திருக்கிறது. அது மிகப் பெரிய உண்மையை தன் அனுபவத்தின் மூலம் பெற்று விட்டது. அப்படி என்ன மிகப் பெரிய உண்மையை உணர்ந்தது ? என்தான் நடந்திருக்கும் ? சொல்கிறேன்.

அதோ தெரிகின்ற அந்த குளத்தின் கரையில் மீனவர் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டாருந்தார். இதை வானத்தில் இருந்து பார்த்த பருந்து, அந்த மனிதன் அசந்த நேரத்தில், ஒரு பெரிய மீனைக் கொத்தியபடி வானத்தில் விர்ரென்றுப் பறந்தது. அதற்கு ஒரே சந்தோஷம். தனக்கு ஒரு பெரிய மீன் கிடைத்தது என்று. ஆனால், பாவம் அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. அது மீனைக் கவ்விக் கொண்டு பறப்பதைக் கண்ட காகங்கள் பருந்தை விடாமல் நாலாபக்கமிருந்தும் துரத்தின. அதுவும் பிடி கொடுக்காமல் மேலும், கீழும், முன்னும், பின்னுமாக லாவகமாகப் பறந்து சென்றது. காகங்களோ விடுவதாக இல்லை. ஒரு கட்டத்தில் கொத்த வேறு ஆரம்பித்தன. பருந்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனென்றால், அதன் அலகில் மீனைக் கவ்வியிருந்தது. பருந்துக்கும் கோபம் வந்தது. அதுவும் கோபத்தில் ஒரு காகத்தைக் கொத்த முனைந்தது. அவ்வளவுதான் கவ்வியிருந்த மீன் கீழே விழுந்தது. அதை ஒரு காகம் லாவகமாகப் பிடித்தபடி பறக்க ஆரம்பித்தது. இப்போது மற்ற காகங்களும் பருந்தை விட்டு அந்த காகத்தின் பின்னால் துரத்த ஆரம்பித்தன.

சோர்வடைந்த பருந்தும் வந்து இந்தத் தென்னை மரத்தின் கிளையில் அமர்ந்தது. இப்போது அது என்ன நினைக்கிறது தெரியுமா ? நாம் இந்த மீன் மீது ஆசைப்பட்டதினால் அல்லவா நமக்கு இந்தத் துன்பம் வந்தது. நல்ல வேளை மீனைக் கீழே போட்டதும் தொந்தரவுகள் நீங்கின என்று ஆசுவாசப்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதர்களாகிய நம் நிலையும் இதுதான். பணம், பதவி, நிலம், பெண், பொன் என்று நம் ஆசைகளுக்கு ஓர் அளவே இல்லை. அவைகளை அடைந்தாலும் ஏற்படும் துன்பங்களுக்கும் குறைவில்லை. மீனை விட்ட பருந்து போல யாரொருவர் தன் ஆசைகளை விட்டு விடுகிறாரோ அவரே நிலையான ஆனந்தத்தை அடைய முடியும். இப்படி நம்மால் மறுக்கப்படும் ஒவ்வொரு ஆசையும் நமக்கு மன உறுதியைத் தருகிறது. மன உறுதிதான் வலிமையான ஆன்மிக சக்தியாகும். மன உறுதிப் பெருகப் பெருக ஞாபக சக்தி, கிரகிக்கும் அறிவு, பகுத்தறியும் ஆற்றல், பிரித்தறியும் ஆற்றல், யூகம், தெளிந்த சிந்தனை போன்ற எண்ணற்ற மன ஆற்றல்கள் வளர்கின்றன. இத்தகைய மன ஆற்றல்களுக்கெல்லாம் அரசன் மன உறுதிதான். 

மன உறுதி இருப்பவரால்தான் தீய எண்ணங்களை எழும் போதே அவற்றை அழிக்க முடியும். எனவே நம் வாழ்வில் துன்ங்களுக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்து தெளிவதே சிறப்பு. இதை வள்ளுவர்... 
''பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும் 
செம்பொருள் காண்பது அறிவு.'' என்கிறார்.

இந்த பிறப் பென்னும் துன்பத்திற்குக் காரணம் என்ன என்று ஆராயும் போதுதான் அறியாமை நீங்கும். அறியாமை நீங்கியவன் மனமே உறுதியைப் பெறுகிறது. இதுவே ஆத்மபலம் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது மன உறுதி அல்லது ஆத்மபலமற்ற மனம் புலன்களின் இழுப்புக்கு ஆட்பட்டு மயங்கி ஆசை வயப்படுகிறது. இதையே பற்று என்கிறோம். பற்றினால் பாவங்களும், துன்பங்களும் தொடர்கின்றன. மனம் பற்றறுத்தால் பிறவித் துன்பமும் அற்றுப் போகும். மனிதன் பிறக்கும் போது வினைத் தொகுதிகளின் நிமித்தம் இரண்டு விதமான இயல்புகளுடன் பிறக்கிறான். ஒன்று வித்தியா மற்றொன்று அவித்தியா எனப்படும். இதை வித்தியா குணம், அவித்தியா குணம் என்றும் சொல்வார்கள். வித்தியா குணம் மேலோங்கும் போது ஆன்ம நாட்டம் அதிகரிக்கும். எனவே அதற்கான முயற்சிகளில் ஈடுபடத் தூண்டும். அவித்தியா குணமானது உலகப் பற்றுகளில் ஆழ்த்தி வினைகளைப் பெருக்கும். பிறக்கும் போது இரண்டும் சமநிலையில் இருக்கும். வளரும் சூழலுக்குத் தக்கவாறு ஒன்று மேலோங்கவும், மற்றது தாழவும் செய்கிறது. ஒன்று வினைகளை வேரறுக்கும். மற்றது வினைகளைப் பெருக்கி, பற்றுகளை வளர்த்து துன்ப சாஹரத்தில் அழுத்தும். இதை உணர்ந்து கொண்ட நம் முன்னோர்கள் நம் வாழ்க்கை முறையை வித்தியா குணத்தை தூண்டும் விதமாக அமைத்து நடைமுறைப்படுத்தினார்கள்.

ஒருவன் வளர்ந்து வரும் போதே இறைவுணர்வை தூண்டும் விதமாகவே அவன் வாழ்க்கை முறை அமைவதால் அவன் மனவுறுதி எத்தைகய சூழலிலும் குறைவுபடாமல் விளங்கும். உலகப் பற்றுகளில் ஆழ்ந்த ஒருவன் ஈஸ்வரனை அடைவது என்பது கடும் போராட்டமாக இருக்கும். ஆனால், ஈஸ்வர பக்தியில் திளைத்த ஒருவன் உலக வாழ்க்கையில் பிரவேசிக்கும் போது அவனுடைய மனமானது சஞ்சலமடைவதே இல்லை. இதை அனுசரித்தே குருகுலம், கிரஹஸ்தம் போன்ற ஆசிரமங்கள் அமைந்திருந்தன. எனவே குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று அடிப்படையிலேயே நாம் தீர்மானித்துக் கொள்வது அவர்களின் பிற்கால நல்வாழ்வுக்கு வழி வகுக்கும். என்னிடம் ஒருவர் ஒரு கேள்வியை முன் வைத்தார். பரமாத்தா வார்த்தைகளுக்கு அடங்காதவர், அவரைக் கண்டவருமில்லை, விண்டவருமில்லை என்கிறீர்கள், பிறகு எதற்காக வேலை மெனக்கெட்டு அவரைத் தேடிக் கொண்டிருக்க வேண்டும் ? என்று கேட்டார். ஐயா, நம் பிறவியின் நோக்கமே இந்தப் பிறவிப் பெருங்கடலைக் கடப்பதுதான். அதற்காகத்தான் உண்மையை உணரும் விதமாக நமக்கு மனமும், அறிவும் அமைந்திருக்கிறது. எனவே உண்மையைத் தேடும்போது நாம் மெல்ல மெல்ல அந்த உண்மையாகவே ஆகி விடுவோம். ரமண மகரிஷி சொல்வது போல சுடுகாட்டில் பிணத்தை எரிக்கும் போது குத்திக் கிளறப் பயன்படும் குச்சியும் எரிந்து போய் விடுவதைப் போன்றது இந்நிலை. பரமாத்மா என்பவர் கடல், நாமோ உப்புப் பொம்மை. நம்மால் ஆழத்தைக் காண முடியாமல் போய் விடலாம். ஆனால், ஆழத்தை அடைவதற்கு முன்பாகவே கடலிலே கரைந்து போய் விடுவோம் என்பதை உணருங்கள். இந்த மனிதப் படைப்பு என்பதே உப்பளம் தான். கடல் நீரை எடுத்து பாத்திகட்டி உப்பு தயாரிப்பது போன்றது. பிறகு அதை கடலில் சேர்க்கும் போது அது கடலில் கலந்து கரைந்து போய் விடும்.

நல்லவர்களோடு பழகினால்..

நல்லவர்களோடு பழகினால்..

எவருடைய மனமும், வாக்கும் நீதி நெறிமுறைகளிலிருந்து வழுவாமல் இருக்கிறதோ, அவரே நல்லவர் என்று அடையாளப்படுத்தப்படுகிறார்...' என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

அத்தகைய நல்லோரின் சேர்க்கை, நம் மனதை மட்டும் அல்ல, வாழ்க்கை யையும் செம்மைப்படுத்தும். அதனால் தான், 'நல்லோரை காண்பதும் நன்று; அவரோடு இணங்கி இருப்பது அதனினும் நன்று...' என்கிறார் அவ்வையார்.

ஒரு சமயம், விஸ்வாமித்திரர் காட்டில் யாகம் செய்தார். அப்போது தன்னிடம் இருந்த அனைத்தையும் தானம் செய்தார். நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் முனிவர்கள் வந்து தானம் பெற்றுச் சென்றனர்; வசிஷ்டரும் தானம் பெற்றார். சிறிது காலத்திற்கு பின், வசிஷ்டர் தானம் செய்த போது, அத்தகவல் அறிந்த விஸ்வாமித்திரர் தானம் வாங்க வந்தார்.

அவர் வருவதற்குள், தன்னிடம் இருந்த அனைத்து பொருட்களையும் தானம் கொடுத்து விட்டார் வசிஷ்டர். ஆனாலும், விஸ்வாமித்திரரை வெறுங்கையோடு அனுப்ப மனம் இல்லாமல், 'என்னிடம், ஒரு நாழிகை (24 நிமிடங்கள்) நேரத்திற்குரிய, சத்சங்க சாவகாசப் பலன் இருக்கிறது; அதில் கால் பங்கை, உங்களுக்கு தருகிறேன்...' என்றார். அதைக் கேட்டதும் கோபத்தில், 'நீர் என்னை அவமானப்படுத்தி விட்டீர்...' என்றார் விஸ்வாமித்திரர்.

அவரை அமைதிப்படுத்திய வசிஷ்டர், 'கோபப்படாதீர்கள்... நான் கூப்பிட்டதாகச் சொல்லி, ஆதிசேஷனையும், சூரியனையும் அழைத்து வாருங்கள்...' என்றார்.

'ஏதோ விஷயம் இருக்கும் போலிருக்கிறது; என்ன தான் நடக்கிறது பார்க்கலாம்...' என நினைத்து, சூரியனையும், ஆதிசேஷனையும் அழைத்தார் விஸ்வாமித்திரர்.

'நான் உங்களுடன் வந்து விட்டால், எனக்குப் பதிலாக யார் ஒளி வீசுவது?' என சூரியனும், 'பூமியைத் தாங்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன்; நான் வந்து விட்டால், என் வேலையை யார் செய்வது?' என, ஆதிசேஷனும் கேட்டனர்.

விஸ்வாமித்திரர் இதை, வசிஷ்டரிடம் கூறினார். அப்போது வசிஷ்டர், 'சரி... என்னிடம் உள்ள சத்சங்க சாவகாசப் பலனில், கால்பங்கை சூரியனுக்கும், கால்பங்கை, ஆதிசேஷனுக்கும் அளிப்பதாக கூறுங்கள்...' என்றார்.

அவர் அளித்த சத்சங்க சாவகாசப்பலன்கள், சூரியனின் வேலையையும், ஆதிசேஷனின் வேலையையும் செய்தது. அதனால், விஸ்வாமித்திரர் கூப்பிட்டதும் சூரியனும், ஆதிசேஷனும் வந்து விட்டனர்.

விஸ்வாமித்திரருக்கு, சத்சங்க சாவகாசப் பலனின் பெருமை புரிந்தது. மிகுந்த பணிவோடு, வசிஷ்டரிடம் இருந்து, கால் பங்கு சத்சங்க சாவகாசப் பலனைப் பெற்றுத் திரும்பினார்.

அவர் தன் ஆசிரமத்தை நெருங்கும் போது, தெய்வீக புருஷன் ஒருவன் தோன்றி, 'முனிவரே... வைகுண்ட வாசன், ராமராக அவதரிக்கப் போகிறார். அவருக்கும், அவர் சகோதரர்களுக்கும் திருமணம் செய்து வைக்கும் பாக்கியம், உங்களுக்கு கிடைக்கவிருக்கிறது...' என்று கூறினார்.

'நல்லவரான வசிஷ்டரின் தொடர்பால் கிடைத்த சத்சங்க பலனால் தான், இந்த பாக்கியம் நமக்கு கிடைக்கப் போகிறது...' என, உணர்ந்தார் விஸ்வாமித்திரர்.
நல்லவர்களின் நட்பையே வேண்டுவோம்; நல்லவைகள் நம்மைத்தேடி வரும்!

விதுர நீதி!: 

தான் செய்த தவறுகளை, மற்றவர்கள் அறிந்திராத போதிலும், எவன் அவற்றை நினைத்து வெட்கமடைகிறானோ, அவன், உலகிற்கே வழிகாட்டும் சத்குருவாக கருதப்படுவான். எவன், அளவற்ற ஆற்றல், பரிசுத்தமான இதயம் மற்றும் ஆழ் மனதில் அமைதியை பெற்றிருக்கிறானோ அவன், சூரியனைப் போல், புகழுடன் பிரகாசிப்பான்

தானமும் - பலன்களும்

தானமும் - பலன்களும்'

1), வஸ்த்ரதானம் - ஆயுள் விருத்தி;
2), பூமி தானம் - ப்ரம்ம லோக பதவி.
3), தேன் - புத்ர பாக்கியம். (வெண்கல பாத்திரத்தில்)
4), கோதானம் - ரிஷிக்கடன்,தேவக்கடன்
பித்ருக்கடன்,மூன்றையும்
போக்கும்.
5), நெல்லிக்காய்தானம் - ஞானத்தை கொடுக்கும்
6), கோவிலில் தீப தானம் - சக்கரவத்தி பதவி
கிட்டும்.
7), தீப தானம் - கண்பார்வை விருத்தி.
8), விதை தானம் - தீர்க்க - ஆயுள்,
தீர்க்க -ஆயுள் - சந்ததி கிட்டும்
9), அரிசி - சகல பாவமும் போகும்.
10), தாம்பூலம் , பழம் - ஸ்வர்க்க பதவி கிட்டும்.
11), கம்பளி தானம் - வாயுரோகம் தீரும்.
12), பருத்தி - குஷ்டம் அகலும்.
13), பூணூல் - பிராம்மண ஜென்மா
கிடைக்கும்.
14), புஷ்பம்,துளசி, - ஸ்வர்க்கத்தை ஸமித்து,கறிகாய் தானம அளிக்கும்.
15), நெய் - ரோக நிவர்த்தி.
16), சர்க்கரை - ஆயுள் விருத்தி.
17), பால் - துக்கம் அகலும்.
18), எள் - எமபயம் அகலும்.
19), கடலை - சந்தான விருத்தி.
20), ஸ்வர்ணம் - பாபம்,ஏழ்மை அகலும்.
21), குடை,பாதுகை - யமலோகத்தில் சுகம்
தரும்.
22), கன்யா தானம் - ப்ரம்ம லோக பதவி
தரும்.
23), ஜப மாலை, ஆசனம் - நல்ல ஜன்மாவை
விபூதி,கோபி,சந்தனம் அளிக்கும்.
24), அன்னதானம் - ஸ்வர்க்க பதவி.

Friday, December 5, 2014

கர்ணனை கொடையாளி என்பது சரியா ??

கர்ணனை கொடையாளி என்பது சரியா ??

ஒருநாள் துரியோதனன் கிருஷ்ணனிடம் எல்லோரும் கர்ணனையே கொடையாளி என்கிறார்களே! அப்படி அவன் பிரமாதமாக என்ன கொடுத்து விட்டான்? அப்படி ஏதாவது கொடுத்திருந்தாலும் அது என்னுடைய பொருள்தானே ? என்று கேட்டான்.

உண்மைதான் உன்னைவிடக் கர்ணனைப் புகழ்வது முட்டாள்தனம்தான் என்ற கிருஷ்ணன் துரியோதனா ஆறு மாதத்திற்குப் பிறகு நான் ஒரு யாகம் செய்யப் போகிறேன். அதற்கு வேண்டிய பொருள்கள் எல்லாம் சேர்ந்துவிட்டேன். விறகு ஒன்றுதான் பாக்கி அதை யாக காலத்தில் நீ தரமுடியுமா? என்று கேட்டார்.
இவன் இடையன்தானே! அந்த புத்தி எங்கே போகும். ஆறு மாதத்திற்கு முன் கேவலம் விறகுக்காக என்னிடம் சொல்ல வேண்டுமாக்கும் என்று நினைத்த துரியோதனன் இது என்ன பிரமாதம். அந்த சமயம் ஒரு சீட்டு கொடுத்து அனுப்பு. அனுப்பிவைக்கிறேன் என்றான்.

மழைக்காலம். வானமே பொத்துக்கொண்டு விட்டாற்போன்ற மழையில் கிருஷ்ணன் இருபது வண்டிகளோடு துரியோதனனுக்கு சீட்டு கொடுத்து அனுப்பினார்.
அதைப் பார்த்த துரியோதனன் சமயம் தெரியாமல் விறகு கேட்கிறானே. இடையன் புத்தி அவனை விடுமா? என்று திட்டினான் இப்போது சௌகரியப்படாது என்று கூறி வண்டிகளைத் திருப்பி அனுப்பி விட்டான். திரும்பி போகும் வண்டிகளைப் பார்த்து விசாரித்தான் கர்ணன். தன நாட்டில் உள்ள பழைய வீடுகளை இடித்து அதில் உள்ள மரங்களை அந்த இருபது வண்டிகளிலும் ஏற்றினான். அதோடு தன வண்டிகளிலும் இரண்டைக் கட்டி அனுப்பினான். இடிந்த வீடுகளுக்கு பதிலாக மக்களுக்குப் புதிய வீடுகளைக் கட்டிக் கொடுத்தான்.
நான்கு மாதங்களுக்குப் பிறகு துரியோதனனைக் கிருஷ்ணன் சந்தித்தார். கண்ணா யாகத்தை எப்போது செய்யப் போகிறீர்கள் என்று கேட்டான். கர்ணன் உதவியால் குறித்த காலத்தில் யாகம் பூர்த்தியடைந்து விட்டதே “ என்றார் கிருஷ்ணன்.
துரியோதனனுக்கு ஒன்றம் புரியவில்லை.
விஷயத்தை விளக்கிய கிருஷ்ணன்
துரியோதனா, கர்ணன் உன்னைவிட உயர்ந்தவன் என்பது இப்பொழுது தெரிகிறதா. பிறரால் வேண்டப்பட்டு மகிழ்ச்சியடைவான். கேட்டதை விட அதிகமாகக் கொடுப்பான். கொடுத்தான் பின்தொடர்ந்து வந்து இப்பொழுது இவ்வளவு தான் என்னால் முடிந்தது. மற்றொரு சமயம் அவசியம் வரவேண்டும் என்ற நல்ல வார்த்தைகள் சொல்லுவான். கொடைக்குக் கர்ணனிடம்தான் பாடம் கேட்க வேண்டும். அதிலும் அவன் கொடையாளியாகவே திகழ்வான் என்றார் !!

உங்கள் கைரேகை என்ன சொல்கிறது?

உங்கள் கைரேகை என்ன சொல்கிறது? 

குழந்தை பாக்கியம் யாருக்கு எவ்வாறு அமையும் என்பதை கைரேகை கொண்டும் கணிக்கலாம். மேலே படத்தில் உள்ளது போன்று, சதைப்பற்றுடன் திகழும் செவ்வாய் மேடு சந்திரமேடு நோக்கி விரிவடைய... செவ்வாய் மேட்டில் ஆழமான வெட்டு ரேகை அமைந்து, திருமண ரேகை மிகவும் மெலிந்து, அதில் குழந்தை ரேகைகள் இல்லையெனில், அந்தப் பெண்ணுக்கு தைராய்டு சுரப்பி கோளாறு காரணமாக குழந்தைப் பிறப்பு தள்ளிப்போகும்.

* ராகு பகுதியில் அநேக குறுக்குக் கோடுகள் மற்றும் தொங்கு ரேகைகள் காணப்பட்டு, சந்திர மேடு கங்கண ரேகையை நோக்கி விரிந்து வீங்கியதுபோல் திகழ... திருமண ரேகை பலவீனமாகவும், ஆயுள் ரேகையிலும் தொங்கு ரேகை காணப்பட்டால், கடுமையான வயிற்று வலி இருக்கும். அதீத உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுவலி கருச் சிதைவுக்கும் காரணமாகிவிடும்.

இவர்கள் திருமண ரேகை வலுவாக உள்ள காலத்தை அறிந்து, உரிய சிகிச்சை பெறுவதுடன், ராகு-கேது பரிகார ஸதலங்களுக்குச் சென்று வழிபாடு செய்யலாம். அத்துடன், கருப்பை ஆரோக்கியத்துக்கு உளுந்து, கொள்ளு ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால், குழந்தை பாக்கியம் பெற இயலும்.

உயிரணு எண்ணிக்கைக் குறைவினாலும் குழந்தை பாக்கியம் தடைப்படும். இந்த நிலையைச் சுட்டிக்காட்டும் கைரேகை அமைப்பை அறிவோம்.

* குரு மேடு தட்டையாகவும் சுருங்கியும் திகழ, அந்த மேட்டில் குறுக்குக் கோடுகள் காணப்படும்.

* சுக்கிரமேடும் சந்திர மேடும் ஒடுங்கி, கங்கண ரேகை பாகத்தை நெருக்கி உப்பியதைப்போன்று காணப்படும்.

* இருதய ரேகை சனி மேட்டினை அடைந்து, திருமண ரேகை பலவீனமாகக் காணப்படும். இப்படியான ரேகை அமைப்புடைய ஆண்களுக்கு உயிரணு உற்பத்தியில் பாதிப்புகள் ஏற்படும். போதிய எண்ணிக்கையில் உயிரணுக்கள் இருக்காது. மேலும் உயிரணுக்கள் ஆரோக்கியக் குறைவுடனும் இருக்க வாய்ப்பு உண்டு.

இவர்கள், அனுதினமும் குரு காயத்ரீ மந்திரம் சொல்லி பிரார்த்திப்பதுடன், குரு பரிகார திருத்தலத்துக்குச் சென்று குருபகவானை வழிபடலாம். உயிரணுக்களின் உற்பத்தி எண்ணிக்கை அதிகரிப்பதற்குத் தேவையான இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

உணவால் உடலையும், வழிபாடுகளால் உள்ளத்தையும் ஆரோக்கியமாக்கிக் கொள்ள, பலமான திருமண ரேகை அமையும் வயதில் குழந்தை பாக்கியம் வாய்க்கும்.