Wednesday, March 25, 2015

“நமக்கேன் இந்த வாழ்க்கை…’ என்று சலிக்காமல் மன தைரியத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்

“நமக்கேன் இந்த வாழ்க்கை…’ என்று சலிக்காமல் மன தைரியத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்

“நமக்கேன் இந்த வாழ்க்கை…’ என்று சலிக்காமல் மன தைரியத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கவே அனைவரும் விரும்புகிறோம். ஆனால், அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைவதில்லை. பலரும், “எனக்கு மட்டும் ஏன் இந்த கடன் தொல்லை? இந்த வியாதி…’ என்று நம் பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே போகிறோம். பல நேரங்களில் பிரச்னைகளை நினைத்து கடவுளை நொந்து கொள்கிறோம். ஆனால், நாம் எப்போதாவது, “கடவுளே எனக்கு ஏன் இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை? நான் ஏன் இதில் வெற்றி பெற்றேன்? என் தோழிக்கு வந்த அந்த நோய் எனக்கு ஏன் வரவில்லை?’ என்று நினைக்கிறோமா? ஒரு போதும் இல்லை. வாழ்க்கை என்பது இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான். இரண்டையும் சரிசமமாக எண்ண வேண்டும்.

துன்பம் வரும் போது அதை நினைத்து கண்ணீர் விடுவதால் எந்த பலனும் இல்லை. அதிலிருந்து வெளி வருவது எப்படி என் பதை யோசிக்க வேண்டும். அப்படி யோசித்தால் வெற்றி நிச்சயம். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

1. நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தாலும் முதலில் அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி எண்ணும் போது தான், பிரச்னையை நம்மால் எளிதாக கையாள முடியும்.

2. “இதை நான் எப்படி சமாளிக்க போகிறேன்?’ என்று பயப்படக் கூடாது. எதுவாக இருந்தாலும், நாம் தான், அதை எதிர்கொள்ள வேண்டும். எனவே, பயத்தை போக்குங்கள்.

3. என்னால் பிரச்னையை எதிர்கொள்ள முடியும் என்று நம்புங்கள். உங்கள் நம்பிக்கை மன தைரியத்தை கொடுக்கும். மன தைரியம் இருக்கும் போது, சிந்தனை தெளிவாக இருக்கும். எனவே,எடுக்கும் முடிவும் தெளிவாக இருக்கும். இது பிரச்னையில் இருந்து எளிதில் வெளிவர உதவும்.

4. தீர்வு காண முயலுங்கள். உங்கள் பிரச்னையை எடுத்து அதன் காரண, காரியங்களை அலசுங்கள். எவ்வாறு அதிலிருந்து வெளி வருவது என்பது பற்றி யோசியுங்கள்.

வாழ்க்கை என்பது என்ன?

வாழ்க்கை என்பது என்ன?

இந்த தலைப்பையே உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன?

– உயிரோடு இருப்பதா?

– மகிழ்ச்சியாக இருப்பதா?

– பணம், புகழைத் தேடி தலை தெறிக்க ஓடுவதா?

– தோல்விகளில் கற்றுக் கொள்வதா?

– வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா?

– தன்னலமற்ற அர்ப்பணிப்பா?

– தத்துவங்களின் அணிவகுப்பா?

…. இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது.

சிந்திக்கும் மனிதன் தெளிவடைந்தானா என்றால் அதுதான் இல்லை. மேலும், மேலும் குழம்பி முடிவில் தற்கொலையில் வாழ்வை பறிகொடுக்கிறான்.

இறைவனால் இவ்வுலகில் படைக்கப்பட்ட மற்ற ஜீவராசிகளுக்கு வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை. காரணம் அவைகளுக்கு முடிவை பற்றிய பயமில்லை. அந்த வகையில் அறியாமை ஒரு வரம்.

தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் ஜெயிக்க முடிவதில்லை. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன..? தன்னம்பிக்கை. மனோபலம் உள்ளவனுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்.

அப்படி ஒரு விஷயம் இருக்கிறதா…? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

வாழ்க்கையை பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மனோபலம் ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுப வங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங் களிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண் டும். அப்படி கற்றுக் கொண்டவன் ஜெயிக் கிறான். கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்.

ஒரு ஜெர்மனிய பழமொழி, “அனுபவம் என்ற பள்ளியில் மூடன் எதையும் கற்றுக் கொள்ளமாட் டான்” என்கிறது. அப்படி கற்றுக் கொள்ளாதவரை வாழ்க்கை அவனுக்கு வசப்படாது.

மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் பல விதத்தில் மாறுபடுகிறான். சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில், தன் தேவைகளை தானே தேடி பூர்த்தி செய்து கொள்வதில், நன்மை- தீமைகளை பகுத்தறியும் விதத்தில் பிறருக்கு வழிகாட்டியாக இருப்பதில்..! இத்தனை யும் பெற்று, சிந்தித்து செயல்படும் திறன் பெற்றிருக்கும் மனிதன், சில நேரங்களில் மிருகத்தை விட கீழ்நிலைக்கு வந்து விடுகிறான். போகும் திசை தெரியாமல் மயங்கி நிற்கிறான். அப்போது தான் வாழ்க்கையில் பயம் ஏற்படுகிறது.

துன்பம் துரத்தும் போது ஆன்மிகமும், அறிவியலும் அவனுக்கு துணை போவதில்லை. தோல்விக்கு பின்பு கிடைக்கும் வெற்றிக்காக காத்திருக்க அவனுக்கு பொறுமையில்லை. தோல்வியே வாழ்க்கை என்று முடிவுசெய்து, தனக்கு சோகமான முடிவைதேடிக் கொள்கிறான். தோல்விகள் நமக்கு நல்ல அனுபவங்களை தந்து, நம்மை பலசாலியாக்குகிறது.

நம்பிக்கை எனும் வானவில் நம்மிடம் எப்போதும் இருக்கவேண்டும். வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது. நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது. ஒவ்வொரு மனிதனின் கையிலும் அழகான வாழ்க்கை இருக்கிறது. அதை வளப்படுத்தும் நம்பிக்கை எனும் வானவில்தான் தோன்ற மறுக்கிறது. அப்போது வாழ்க்கை வெறுமையாகிறது. அந்த வெறுமையை நிரப்ப யாராலும் முடியாது.

இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை. அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள். சுகமும், துக்கமும் வருவதுமில்லை. போவதுமில்லை. நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள். பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை, பகலுக்காக மகிழ்வதுமில்லை. அது ஓர் கர்மயோகியைப் போல தன் பணியை செய்துக் கொண்டிருக்கிறது.

சூரியன் உயிர்களை வளர்க்கிறது. காக்கிறது. அது இல்லாத நேரத்திலும் உயிர்கள் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஆனால் இன்றைய அவசர மனிதனிடம் விடியலுக்காக காத்திருக்கும் பொறுமையில்லை. கல்வியறிவு அதிகமில்லாத காலத்தில் கூட இருந்திராத மனச்சுமை, டென்ஷன், தற்கொலைகள், இப்போது தான் அதிகமாகி வருகிறது. எந்த அறிவியல் வளர்ச்சியும் இவர்களை வாழவைப்பதில்லை. இந்த நவீனயுகத்தில் தற்கொலை தடுப்பு மையங்கள் ஆங்காங்கே உருவாகி வருவது வரமா? சாபமா?

உங்களுடைய வாழ்க்கையில் மற்றவர்களுக்கு தேவையான முன் உதாரணம் இருக்க வேண்டும். தோல்விகளை தாண்டி வெளிவந்தால் தான் அங்கே வெற்றி நம்மை வரவேற்க காத்திருக்கும். வெற்றிக்காக உழைக்கிறோம். தோல்வி நம் முன்வந்து நிற்கும் போது துவண்டு போகிறோம். தோல்வி தான் முதலில் வரும். அது உலக இயல்பு.

தோல்வியை கண்டு மிரண்டு போய் வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம். ஏன் இந்த அவசரம். தோல்விக்கு பின் வெற்றி என்ற வாக்கு பொய்யா, மெய்யா என்று பொறுத்திருந்து பார்க்கலாமே.

இன்று பல்வேறு சூழலால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள். எதிர்பார்த்த ஒன்று கிடைக்காவிட்டால் விரக்தியின் எல்லைக்கே போய்விடுகிறார்கள். நாம் நினைத்தால் எதுவும் நடக்கும் என்ற தத்துவம் அவர்களுக்கு புரிவதில்லை.

நாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அந்த பாசிடிவ் எண்ணங்கள் நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றி பாதையில் அழைத்துக் செல்லும். நம் எண்ணம் ஒருநாள் செயலாகும் போதுதான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக மாறிவிடுவோம்.

– நம்மைவிட உடலில் பலசாலி யானை

– நம்மைவிட வேகத்தில் சிறந்தது குதிரை

– நம்மைவிட உழைப்பில் சிறந்தது கழுதை.

இப்படி மிருகங்கள் நம்மைவிட பலமடங்கு பலசாலிகளாக இருந்தாலும், நாம்தான் இவைகளை அடக்கி ஆள்கிறோம். காரணம் மனிதன் மட்டுமே மனோபலம் கொண்டவன். நமக்கு ஏற்படுகிற பிரச்சினைகளும் அப்படித்தான். அதனை அடக்கியாளும் சக்தி நம்மிடம் உள்ளது.

பிரேக் இல்லாத வாகனமா நீங்கள்?

பிரேக் இல்லாத வாகனமா நீங்கள்?

நிறையப் பேருக்கு தெரியாத ஒரு உண்மையை சொல்லட்டுமா? கப்பலுக்கு, ‘பிரேக்’ கிடையாது. ஓர் இடத்தில், கப்பலைச் சரியாக நிறுத்த, ஒரு கப்பலோட்டி எவ்வளவு சிரமப்படுவார் தெரியுமா… கப்பல் ஓட்டுவது அவ்வளவு எளிதல்ல; கப்பல் மோதி, திமிங்கலங்கள் இறப்பதும்; சிறு படகுகள் சிதறுவதும் இதனால்தான்.  ஆனால், பிரேக் இல்லாத மனிதக் கப்பல்களோ, தங்களைத் தான் முதலில் சேதப்படுத்திக் கொள்கின்றன.  ‘அவன் யார் பேச்சும் கேட்க மாட்டான்; அவனுக்கு என்ன தோணுதோ, அதைத் தான் செய்வான். நாங்க எவ்வளவோ சொல்லி பாத்துட்டோம் திருந்துறதாத் தெரியல…’ என்று, தங்கள் குடும்ப உறுப்பினர் பற்றி, மற்றவர்கள் புலம்பும் வார்த்தைகள் உங்கள் காதுகளைக் கடந்து போயிருக்கும்.

இத்தகைய நபர்களுக்கு, தப்பித் தவறி, ஏதோ ஒரு சூழ்நிலையில், ஒரு துறைத் தலைமையோ, ஒரு நிறுவன உரிமையோ கிடைத்துவிடுமாயின், இவர்களுக்குக் கீழே பணி புரிபவர்கள் பாடு ரொம்பச் சிரமம்.  சொன்னதைக் கேளாதவர்களின் தன்மையைப் பார்க்க பார்க்க, மற்றவர்கள் மெல்ல இவர்களிடமிருந்து ஒதுங்க ஆரம்பிப்பர். சொல்லி என்ன பயன் என்பது மட்டுமல்ல; நம் மரியாதையைக் காப்பாற்றி கொண்டால், அதுவே போதுமானது என்பதும், ஒரு காரணம்.  ‘நான் இப்படிப்பட்ட ஆள் அல்ல…’ என்று, சிலர் மறுக்கலாம்; ஆனால், நமக்குள் இருக்கும், ‘பிரேக்’ இல்லா கப்பல், அவ்வப்போது நம்மை அறியாமல் பயணப்பட ஆரம்பித்து விடுகிறது.  இதனால், நாம் இப்போது பார்த்தவர்களைப் போல், சில நேரங்களில், சில விஷயங்களில், சில சந்தர்ப்பங்களில், நாம், ‘பிரேக்’ இல்லாக் கப்பல்களாகி போகிறோம். யார் என்ன சொன்னாலும், அந்த நேரத்தில் மட்டும் காதில் ஏறுவதில்லை. 

இவர்களுக்கு, சில கேள்விகள்… நீங்கள் எடுத்தது சுயமுடிவுதானா, நீங்கள் எடுக்கும் முடிவுகள் பிறர் தலையீடு செய்யாத சுயமுடிவு என்றால், உங்கள் முடிவு எத்தனை முறை சரிவர அரங்கேறியிருக்கிறது… உங்கள் முடிவின், வெற்றி சதவீதம் என்ன?  ‘சரியோ, தவறோ நான் எடுப்பதே முடிவு; விளைவுகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை…’ என்று வாதிடுபவரா நீங்கள்? அடடே…. நானும் உங்களிடமிருந்து ஒதுங்கிக் கொள்கிறேன்; சிதறும் படகாய் ஆக எனக்கு விருப்பமில்லை. பெரும்பகுதி சரியாகவே நடக்கும் என்கிறவரா நீங்கள்… சில நேரங்களில் மட்டும் தவறு நடக்கிறது என்கிறீர்களா… அப்படியானால் உங்களிடம் கொஞ்சம் பேசலாம். சில பிழைகளுக்கு விலை இல்லைதான்; ஆனால், சில பிழைகளுக்குக் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டி வருகிறதே! 

பிழையற்ற சரியான செயலா; அதெப்படி முடியும்? பிறர் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்கும் போது, அதில் அவர்கள் கூறும் சாதக, பாதகங்களை அலசும் போது, ஒரே கோணத்தில் பார்க்கக் கற்றுக் கொண்டவர்கள் தாம் அதிகம் தவறு செய்கின்றனர் என்பது தெரிய வருகிறது. ‘ஆளாளுக்கு அபிப்ராயம் கேட்டுக் கொண்டிருந்தால், அது கட்டுபடியாகிற விஷயமா… எல்லாருமா சேர்ந்து குழப்பி விடுவர்; அதெல்லாம் சரிப்பட்டு வராது…’ என்கிறீர்களா? 

பல்வேறு கோணங்களிலிருந்து பார்க்கும் போதுதான், ஒரு பொருளின் முழுப் பரிமாணமும் தெரியவருவது போல், ஒரு முடிவும் பல கோணங்களிலிருந்து பார்க்கப்படும்போது, பெரும்பாலும் பிழையற்ற முடிவு எடுப்பது சாத்தியமாகிறது. காரணம், அனைத்து ஓட்டைகளும் அடைக்கப்பட்டு விட்டனவே! ஒரே கோணத்தில் பார்த்து தன்னிச்சையாகவே எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு, இனி முடிவு கட்டிவிட்டு, ஒவ்வொன்றையும் அலசி எடுத்துப் புரட்டிப் புடம் போட்ட பின், முடிவுகளை எடுத்தால், அதுவே தங்கமான முடிவாக இருக்கும்!

சந்தோஷமாக வாழ என்ன வழி

சந்தோஷமாக வாழ என்ன வழி

‘அறிவாளிகள் பிரச்னைகளைத் தீர்க்கிறார்கள். மேதைகள் பிரச்னை களைத் தவிர்க்கிறார்கள்’ – இப்படியொரு ஆங்கிலப் பொன்மொழி உண்டு. நீங்கள் அறிவாளியா? மேதையா? பிரச்னை… பிரச்னை… பிரச்னை… எல்லாருக்கும் எப்போதும் ஏதோ ஒரு பிரச்னை. அதை எப்படித் தீர்ப்பது என்கிற தவிப்பு. அது தீர்வதற்குள் இன்னொரு பிரச்னை… பிறகு அதன் பின் ஓட்டம்… இப்படியே வாழ்நாள் முழுக்க பிரச்னை… பிரச்னை… பிரச்னைகளைத் தீர்க்கும் வழிகளைப் பற்றி யோசிப்பதற்குப் பதில், அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு, சந்தோஷமாக வாழ என்ன வழி என யோசித்துப்பாருங்களேன்… தீர்வுகளைத் தேடாமலேயே உங்கள் பிரச்னைகள் காணாமல் போகும்!பிரச்னை என்று வருகிற பலரும், ‘எங்களால இனியும் ஒண்ணா இருக்க முடியாது. பிரியறதுதான் தீர்வு’ என்கிற முடிவுக்குத் தயாராக இருக்கிறார்கள். ‘பஞ்சாயத்து பண்ணுகிறேன்’ என்கிற பெயரில், அவர்களுக்குச் சமரசம் பேச வருகிறவர்களும், இருவரிடமும் அவரவர் தரப்பில் என்ன பிரச்னை எனக் கேட்டு, அதைத் தீர்ப்பதற்குப் பதில், பெரிதாக்கவே செய்கிறார்கள். அதைத் தவிர்த்து, பிரச்னைகளை ஒரு பக்கம் அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு, உங்கள் உறவை நெருக்கமாக்குவதில் கவனம் செலுத்திப் பாருங்கள்.

கணவன் – மனைவி என்றில்லை… எந்த இரண்டு பேருக்குமான உறவு அல்லது நட்புக்கும் இந்த விதி பொருந்தும். பொதுவாக அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் தனித்தனி ஆளுமை கொண்டவர்கள். தனித்தனி மதிப்பீடுகள் கொண்டவர்கள். கலாசார ரீதியில் பார்த்தால், இந்த பேதங்கள் இன்னும் அதிகமாவதை உணரலாம். உதாரணத்துக்கு அமெரிக்காவில் முன்பின் அறிமுகமில்லாத நபர்கள்கூட ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து அன்பு செலுத்துவது சகஜம். அதுவே நம்மூரில் அது சகித்துக்கொள்ள முடியாத குற்றம். இப்படி அவரவர் வளர்ந்த, வாழ்ந்த கலாசாரங்களையும் அவர் களுக்குள் பதிந்து போன மதிப்பீடுகளையும் மாற்ற முனைந்தால், கடுகளவு பிரச்னைகூட மலையளவு பெரிதாகவே செய்யும். திருமண உறவுகளில் இந்த அணுகுமுறைதான் பெரும்பாலான தம்பதிகளுக்குள் பிரச்னைகள் வெடிக்கவும், விஸ்வரூபம் எடுத்து, பிரிவை நோக்கி அழைத்துச் செல்லவும் அடிப்படையாக அமைகிறது.நீங்கள் நீங்களா கவும், உங்கள் துணையை அவராகவும் இருக்க அனுமதித்துப் பாருங்கள். இருவருக்குள்ளும் பிரச்னை என்ற பேச்சுக்கே இடமிருக்காது! பிரச்னை என்று நாம் சொல்கிற பல விஷயங்களும் உண்மையில் பிரச்னையே இல்லை. வாழ்க்கையில் நடக்கக்கூடிய யதார்த்தமான விஷயங்களாகவே இருக்கும். அதை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதுதான் முக்கியமே. ஆங்கிலத்தில் ‘செரினிட்டி ப்ரேயர்’ என ஒன்று பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

‘கடவுளே…என் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க எனக்கு தைரியம் கொடு.தீர்க்கவே முடியாத பிரச்னைகளை ஏற்றுக்கொள்ள எனக்குப் பக்குவத்தைக் கொடு…’ – இந்த பிரார்த்தனை வரிகள், நம் வாழ்க்கைக்கும் ரொம்பவே பொருத்தம். பிரச்னை என்று பார்த்தால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு விஷயமும் பிரச்னைதான். குழந்தை வளர்ப்பாகட்டும், வேலைக்குச் செல்வதாகட்டும், வீட்டிலிருப்பதாகட்டும்… எல்லாமே பிரச்னைகள்தான். அதுதான் வாழ்க்கை எனப் பார்க்கப் பழகினால், அங்கே காணாமல் போவது பிரச்னைகள் மட்டுமின்றி, அவற்றால் ஏற்படுகிற அதிருப்தியும்தான்!வாழ்க்கையில் எவற்றையெல்லாம் நம்மால் மாற்ற முடியாது எனத் தெரிந்து கொண்டு, அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான், ஒரு மனிதராக நாம் பக்குவப்பட்டுக் கொண்டிருப்பதற்கும் அறிகுறி. இப்படியொரு அணுகுமுறையை வளர்த்துக் கொண்டுவிட்டால், நம்மையும் அறியாமல் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு தெளிவையும் வாழ்க்கையை எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கான சாத்தியங்களையும் பெற்றுக் கொண்டிருப்போம். ஏற்கனவே முந்தைய அத்தியாங்களில் சொன்ன அதே விஷயத்தை மீண்டுமொரு முறை இங்கே வலியுறுத்த விரும்புகிறேன். என்ன நடந்தாலும், அதில் யார் பக்கம் சரி, யார் பக்கம் தவறு என்கிற அலசலோ, ஆராய்ச்சியோ தேவையில்லை. அந்தஇடத்தில் சூழலை சகஜமாக்க நான் என்ன செய்ய வேண்டும் என யோசிக்கத் தொடங்கினாலே, பிரச்னையின் தீவிரம் குறைந்து விடும்.உங்களில் எத்தனை பேருக்கு தங்க மீன் பற்றித் தெரியும்? பல வீடுகளில் அழகுக்காகவும், அந்தஸ்துக்காகவும் தங்க மீன்கள் வளர்ப்பார்கள். மற்ற மீன்களுக்கும், இதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் ஒன்று உண்டு. பொதுவாக மீனுக்கு தேவைக்கதிகமாக இரை கொடுத்தால், அது சாப்பிட்டு, செத்துவிடும். அதுவே தங்க மீன்கள் மட்டும் எத்தனை கொடுத்தாலும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். சாப்பிட்டுச் சாப்பிட்டு வேகமாக வளரும். தம்பதியருக்கிடையிலான பிரச்னைகள் தங்க மீன்களைப் போன்றவை. அதை நீங்கள் கவனிக்க கவனிக்க வளரும். கூடவே புதிய பிரச்னைகளையும் சேர்த்துக் கொண்டு வளரும். பிரச்னைகள் கிளை பரப்பி, பரந்து விரிந்து, இருவரையும் சேர்ந்து வாழவே முடியாத ஒரு இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி விடும். சரி… பிரச்னைகள் வரும் போது என்ன செய்ய வேண்டும்? தம்பதிக்குள் பிரச்னை வரும் போது, ஒன்றுமில்லாததை ஊதிப் பெரிதாக்கி, ஒருவருக்கொருவர் வார்த்தைகளை உமிழ்ந்து, முகத்தைத் திருப்பிக் கொள்கிற அளவுக்குப் போவதுதான் சகஜமாக பலரும் செய்வது. ஒரு மாறுதலுக்கு இப்படிச் செய்து பாருங்களேன்… பிரச்னை வரும்போது, உங்கள் துணையின் மீது அதிக அன்பைக் காட்டிப் பாருங்கள். நெருக்கமாக இருந்து பாருங்கள். ஆதரவாக இருந்து பாருங்கள். அந்த மாற்றத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பிரச்னையைப் பற்றிப் பேசுவதைத் தள்ளி வைத்து விட்டு, உங்கள் துணைக்காக அவருக்கு மிகவும் பிடித்த அல்லது உங்கள் இருவரின் காதலையும் நினைவுப்படுத்தும் ஒரு ஸ்பெஷல் உணவைத் தயார் செய்து பரிமாறுங்கள். வழக்கத்தைவிட வித்தியாசமான முறையில் ‘ஐ லவ் யூ’ சொல்லிப் பாருங்கள். உங்கள் இருவருடைய பிரச்னை பற்றி, வேறு யாரிடமும் பேசாதீர்கள். அதை நீங்கள் மற்றவர்களிடம் பகிரப் பகிர, உங்கள் கோபமும் வெறுப்பும் இன்னும் அதிகமாகும். அதை வெளிப்படுத்தும் நோக்கத்தில், உங்கள் துணை வீட்டுக்கு வரும் நேரத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பீர்கள். மனது ரொம்பவும் நொந்து போயிருக்கிற தருணங்களில், மெல்ல மெல்ல அதை சந்தோஷத்தை நோக்கி நகர்த்த முயற்சி செய்யுங்கள். அந்த முயற்சிக்கு அசாத்திய மன உறுதி வேண்டும். பழகப் பழக அதுவும் கை வரும். ‘நான் எவ்வளவோ விட்டுக் கொடுத்துட்டேன். ஆனாலும் என் கணவர்/மனைவி என்னைத் துன்புறுத்திவிட்டார். மறுபடி மறுபடி நானே ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?’ என்கிற கோபம் பலருக்கும் இருக்கும். அப்படி விட்டுக் கொடுப்பது சிரமம்தான் என்றாலும், அந்த நினைப்பிலிருந்து வெளியே வருகிற கலை உங்களுக்கு பிரச்னைகளை வெல்ல வேறொரு அணுகுமுறையைக் கொடுக்கும். இன்று ஏதோ ஒரு விஷயத்துக்காக இருவரும் சண்டை போடுகிறீர்கள். 6 மாதமோ, ஒரு வருடமோ கழித்து அந்தச் சண்டையை யோசித்துப் பார்த்தால், அது எத்தனை அர்த்தமற்றது என்பது தெரியும். எனவே, சண்டையின் போதே அந்த யதார்த்தம் உணர்ந்து, உடனடியாக அதைப் பெரிதுபடுத்தாமல் வெளியே வந்து விடுங்கள். கடைசியாக ஒரே ஒரு அட்வைஸ்… நம்மில் பலரும் இன்னும் குழந்தைகளைப் போலத்தான் நடந்து கொண்டிருக்கிறோம். குழந்தை தனக்கு வேண்டியதைக் கேட்டு அடம் பிடிக்கும். அது கிடைத்தால் சந்தோஷப்படும். கிடைக்காவிட்டால் அழுது, புரண்டு அமர்க்களம் பண்ணும். கோபப்படும். பெரியவர்களாகிய நாமும் அப்படித்தானே இருக்கிறோம்? நமக்கு சாதகமான விஷயங்கள் நடந்தால் மகிழ்கிறோம். அப்படி நடக்காத போது கோபப்படுகிறோம். இந்தக் குழந்தை மனநிலையிலிருந்து வெளியே வரும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டாலே பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக

புரிந்துகொள்ளுங்கள் குழந்தைகள் சைக்காலஜி

புரிந்துகொள்ளுங்கள் குழந்தைகள் சைக்காலஜி

சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது.  மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்க என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா?  ஏன் அடிக்கிறீர்கள்  என்று கேட்டால் படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்? என்று கூறுவார்கள்.

குழந்தைகளை கையாள்வது எப்படி..

பொதுவாக குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் எது சரி எது தவறு என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.  சேட்டை என்றால் என்ன? நாம் சந்தோஷமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம்.  நாம் வேறு மனநிலையில் இருக்கும்போது குழந்தை சாதாரணமாக மண்ணைத் தொட்டால் கூட குழந்தையை அடித்து கண்படி திட்டுவார்கள். சேட்டை என்பது குழந்தையை மையப்படுத்தி அல்ல.  நம்மை மையப்படுத்தி இருக்கிறது.  முதலில் அதை உணர்வோம்.

அடுத்து குழந்தை தன்னையோ,  மற்றவர்களையோ பாதிக்காமல் விளையாட அனுமதிக்க வேண்டும்.  சேட்டை செய்தபிறகு அடிக்காமல் முன்பே விதிகளைச் சொல்லிவிட வேண்டும்.  விதிகளை குழந்தை மீறும்போது நிச்சயமாக கண்டிக்க வேண்டும்.

அடிக்காமல் வளர்ப்பது எப்படி?

குழந்தைகளை அடித்து சரிபடுத்த அவர்கள் மத்தளமல்ல. கண்டிப்பு என்பது, இந்தச் செயல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்துவது.  சில குழந்தைகள் நான் உன்கூட பேசமாட்டேன் என்று சொன்னாலே தங்களது தவறுகளை திருத்திக் கொள்ளும்.  இப்படி  ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான உளவியல் (சைக்காலஜி) உண்டு.  முதலில் பெற்றோர்கள் அவரவர் குழந்தைகளைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.  பொறுமை யின்மையின் காரணமாக, வேலைப்பளுவின் காரணமாக, நேரமின்மையின் காரணமாக, இப்படி ஒவ்வொரு பிரச்சனையின் ஊடே குழந்தைகள் பரிதவிக்கின்றன.  அடிப்பதும், மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.

குழந்தை உரிமை மீறல்

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.  இன்றைய குழந்தை நாளைய மனிதனல்லவா?  இப்படித்தான் நிறைய நபர்களுக்குச் சந்தேகம் உள்ளது.  உதாரணமாக

8 மாதக்  குழந்தையை அதன் தாய் இடுப்பில் வைத்து சோறு ஊட்டும்போது அந்தக் குழந்தை தனக்குத் தெரிந்த மழலையில் வேண்டாம் என்று சொன்னாலும் அந்தத் தாய் எப்படியாவது இன்னும் இரு கவளத்தை அந்தக் குழந்தைக்குத் திணித்துவிடுவார்.  அப்போதுதான் அந்தத் தாய்க்கு மனநிறைவு, மகிழ்ச்சி.  தன் குழந்தைக்கு வயிறு நிறைய சோறு ஊட்டி விட்டதாக திருப்தி.  ஆனால் அந்தக் குழந்தைக்கு வயிறு ஒத்துக்கொள்ளாமல் தான் சாப்பிட்டதை சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்துவிடும் சூழலில், பார் பிடிவாதத்தை, அது அப்பனைப் போலவே இருக்கு  என்று தன் கணவனையும் சேர்த்துத் திட்டி தன் குழந்தைக்கும் இரண்டு அடி வைப்பார் தாய்.

இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது.  ஒரு தாய் தன் அளவுக்கு மீறிய அன்பினால் செய்யக்கூடிய வன்முறையைக் காட்டுகிறது.  வாந்தி எடுத்தால் தன் குழந்தை எங்கே இளைத்துவிடப்போகிறதோ என்ற அதீத பயத்தினால், அக்கறையினால் அந்தக் குழந்தைக்கு இலவசமாக இரண்டு அடியும் கொடுக்கிறார்.  ஏற்கனவே வாந்தி பண்ணியதால் மூக்கிலும் வாயிலும் ஏற்படும் எரிச்சலோடு, சேர்ந்து அடியும் வாங்கியதால், அந்தக் குழந்தை மேலும் மேலும் வன்முறைக்குள்ளாகிறது.  இந்த செயல் அன்பினால் ஏற்பட்ட வன்முறை.

இதெல்லாம் வன்முறையா நாங்கள் என்ன நினைக்கின்றோம் என்றால், குழந்தையை ஒழுங்காகவும், நல்ல பிள்ளையாகவும் வளர்ப்பதற்கு அடித்து வளர்க்கிறோம் என்று நினைப்பார்கள்.

இதைப் பார்க்கும்போது, கலில் கிப்ரான் என்ற கவிஞர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல.  அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம்.  ஆனால், உங்கள் தயாரிப்புகள் அல்ல.  அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு.  உங்கள் எதிர் பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை, அவர்கள் மீது திணிக்காதீர்கள்.  அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளை திணிப்பது தவறு.  நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள்.  ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள்.  ஏனென்றால், ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை என்ற வரிகளுக் கேற்ப, குழந்தைகளை நாம் உருவாக்கின போதும், அவர்கள் நமது அடிமைகள் அல்ல.  நம் குழந்தையே ஆனாலும், நாம் அவர்களை வன்முறைக்குள்ளாகக் கூடாது.

அடிக்கிற கைதான் அணைக்கும் என்னும் பழமொழி எல்லாம் உதவவே உதவாது.  அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா?  பேசிப் புரியவைத்து அந்தக் குழந்தையை நல்ல குழந்தையாக வளர்க்கலாம்.  நட்பாகப் பழகுவதன் மூலம் நல்லொழுக்கங்களைக் கற்றுக்கொள்ளச் செய்தால், வளர்ந்த பிறகு நம்மை அணைப்பான்.

இல்லாவிட்டால், அவனும் அடிக்கிற கை அணைக்கும் என்று நம்மை அடிப்பான்.  நாம் என்ன சொல்லிக் கொடுக்கிறோமே அதைத்தானே குழந்தைகள் செய்வார்கள்.

ஒவ்வொரு காரியத்தையும் பார்த்துப் பார்த்துத் தான் செய்ய வேண்டும்.  நிலத்தில் விதையை தூவி விட்டால் மட்டும் போதாது.  தினசரி நம் கண்காணிப்பு தேவைப்படுகிறதல்லவா.

குழந்தைகள் விதைகளைவிட முக்கியமானவர்கள்.  நல்ல பலன்தரும் விதைகளாக, விருட்சங்களாக, வளர குழந்தையைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்க்க வேண்டும்.   பக்குவமாய் சொல்லிக்கொடுத்து பேசி வளர்க்க வேண்டும்.

உதாரணமாக ஒரு சிறுமியை அவள் தாய், நீ எதற்குத்தான் லாயக்கு.. நீ பொறந்ததே வேஸ்ட் என்று திட்டிக்கொண்டே இருந்தால்,  அந்தக் குழந்தைக்கு அந்த வார்த்தைகள் மனதுக் குள்ளேயே தங்கிவிடும்.  சிறுமிக்கும் தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்ற நினைவால் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே  அவளால் எந்த ஒரு காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகிவிடக் கூடும்.

பிறகு, அந்தப் பெண்ணின் தாழ்வு மனப் பான்மையை சரிசெய்வதே பெரும் பாடாகி விடும்.

எனவே, மனதளவில் பாதிப்பிற்குள்ளாக்கும் இம்மாதிரியான சொற்களை பெற்றோர்கள் பேசுவது குற்றமாகவே கருத வேண்டும் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.  இப்படிப் பாதிக்கப்பட்ட  குழந்தைகள் சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள்.

கண்டிப்பது என்பது வேறு, தண்டிப்பது என்பது வேறு.

கண்டிப்பது என்பது ஒரு செயலைச் செய்யும்போது நல்லது எது கெட்டது எது என்பதைப் புரிய வைப்பது.

தண்டிப்பது என்பது, குழந்தைகளுக்கு முன்பே புரிய வைக்காமல், அவர்கள் புரியாமல் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களை அடித்து துன்புறுத்தி வன்முறைக்குள்ளாக்குவது.

ஒரு குழந்தை ஒரு செயலை ஆர்வமாகச் செய்கிறது என்றால், அது நல்ல விஷயமாக இருந்தால் அதனை ஊக்கப்படுத்தி அந்த செயலை சரியாகச் செய்ய வழிகாட்டவேண்டும்.  மாறாக அதன் தலையில் தட்டி அதிகப் பிரசங்கி என்று மூலையில் உட்கார வைத்துவிடக்கூடாது.

குழந்தைகள் தவறு செய்தால், அன்பான கண்டிப்புடன் எளிய முறையில் குழந்தைகளுக்கு புரிய வைப்பதுதான் நல்லது.  தண்டிப்பது குழந்தையை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, பிற்காலத்தில் தவறான பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும்.

பெற்றோர்கள் குழந்தைகளை தண்டிப்பதால், அவர்கள் ஒருவித எதிர்மறையான எண்ணங்களை  குடும்ப உறுப்பினர் மீது ஏற்படுத்திக்கொண்டு, மறைமுகமான தீய பழக்கங்களுக்கு ஆட்கொண்டு விடுவார்கள்.  அன்போடும் ஆதரவோடும் புரியவைத்தால், எதிர்காலத்தில் குழந்தைகள் நல்ல மனிதர்களாக வலம் வருவார்கள்.

Tuesday, March 24, 2015

தோல்விக்கு விடைகொடுத்து வெற்றிக்கு வழிவிடும் ‘அந்த ஒரு நாள்’! – வாழ்வியல் விதைகள்

தோல்விக்கு விடைகொடுத்து வெற்றிக்கு வழிவிடும் ‘அந்த ஒரு நாள்’! – வாழ்வியல் விதைகள்

உங்களது ஒருநாள் எப்படி இருக்க வேண்டும்?
வேகமாக இயங்கும் இயந்திர உலகில் ஒருநாள் என் பது ஆரம்பித்ததுமே முடிந்துவிடுவது போல உள் ளது. இன்றைக்குஎன்னசெய் ய போகிறோம் என்பதை திட்டமிட்ட்டு செய்ய வேண் டும்என்பார்கள். இன்றுதிட்ட மிடவே பாதி நாட்கள் போய் விடுகிறது என்று கூறுப வர்களும் உள்ளனர்.

ஆனால், அதே நேரத்தில் ஒரு நாளை சிறப்பாக கையா ளும் ஆளுமை திறன்கொண்டு வெற்றி பெற்ற‍வர்களும் உள்ள னர். ஒரு நாளில் எந்த வேலை யை எப்போது செய்யவேண்டும் ? எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை அறிந்து செயல்படுபவர்களும் உள்ளனர். அவர்களது ஒருநாள் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.

தொழில் முனைவோராக இருப்பவரோ அல்லது அலு வலகத்தில் பணிபுரிபவராகவோ இ ருந்தால் அவர் காலை 6.00 மணிக்கு எழுந்திருப்பது சிறந்தது. அதிலிருந் து அவரது அன்றைய நாளை துவங் கலாம். காலை 6.15 முதல் 7 மணி வரை அன்றைய நாளை சிறப்பாக துவங்க புத்துணர்ச்சியாக வைத்திரு க்க உடற்பயிற்சி செய்யலாம். பின்பு 7 மணி முதல் 8 மணிவரை ஒருவர் குளியல் உள்ளிட்ட வேலைகளை முடித்து அலுவலகத்துக்கு கிளம்ப தயா ர் படுத்துக் கொ ள்ள பயன்படுத்தலாம். 8 மணிக்கு அவர் தனது அலுவ லகத்துக்கு பயணிக்க தொடங்கினால் 8:30 மணிக் குள் அலுவலகத்தை அடைந்துவிடலாம் என்று வைத்துகொள்வோம். அப்படி இ ருக்கும் போது 8:30 மணியிலி ருந்து 9:15 மணிக்குள் தனக்கு வந்திருக்கும் இ- மெயில்கள், கடிதங்கள் ஆகியவற்றை பார்த்து பதிலளிக்க பயன்படுத்தி கொள் ளலாம்.

இதன்பின்தான் அலுவலக வேலைகள் துவங்க உள்ள ன. 9:15 மணிக்கு துவங்கி 9:40மணிவரை இன்றைய நாளுக்கான திட்டங்கள், இன்றைய நாளில் செய்ய வேண்டிய வேலைகள் ஆகியவற்றை பற்றி அலு வலக குழுவுடன் சேர்ந்து விவாதிப்பது. அதில் எடுக்கப்படும் முடிவுகளை அமல் படுத்துவது குறித்து திட்டமிடுவது போன்ற செயல்க ளை செய்யலாம். 9:40 மணி முதல் 10 மணி வரை உங் களது சிறிய உணவு இடைவேளை எடுத்து கொள்வது வே லையை மீண்டும் புத்துணர்ச்சியாக் கும்.

10மணிக்கு மீண்டும் வேலையை துவ ங்கி முழுமையான இரண்டு மணி நேரம் உங்கள் வேலையை பார்க்கும் போது உங்கள் வேலை கிட்டத்தட்ட 60 சதவி கிதம் பூர்த்தியாகிவிடும். 12 மணி முதல் 12:30 வரை கான்ஃப்ரன்ஸ் கால்களை பேசுவதிலோ அல்லது வாடிக்கையாளர் அல்லது க்ளைண்ட்களுடன் பேசுவ தோ செலவிடலாம்.

12:30 மணி முதல் 1 மணி வ ரை உணவு இடைவேளைக் கு எடுத்து கொண்டு 1 மணி முதல் 3 மணிவரை மீண்டும் தனது வேலையை முழு மையாக கவனித்து 3 மணிக்கு மேல் 15 நிமிட இடை வேளைஎடுத்து கொள்ளலாம். அது அடுத்த 2 மணி நேர வே லைக்கான புத்துணர்ச்சியை அளிக்கும்.

5:30முதல் 6:30வரை அலுவலகத்தில் இருந்து உங்கள் வீட்டுக்கு வருவதற்கு நேரமாகிறது எனில் 6:30 மணி யிலிருந்து 8மணிவரை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் நண்பர்கள் ஆகியோரோடு செ லவழியுங்கள். 8மணி அல்லது அதற்கு முன்பு இரவு உணவை எடுத்து கொள்ளுங்கள்.

9 மணியிலிருந்து 10.15 மணி வரை உங்களது அறிவை வளர்த்து கொள்ளும் விஷயங்களில் நாட்டம் செலுத் துங்கள் 10:30 மணிக்கு தூங்க சென்றால் காலை 6 மணிக்கு எழ வேண்டும் என்றால் சராசரியாக ஏழ ரை மணி நேர உறக்கத் தை எடுத்து கொள்வது அ வரது உடலை ஆரோக்கியமாகவும், அடுத்த நாளை சுறுசுறு ப்பாக துவங்கவும் உதவும்.

இப்படி செயல்பட்டால் அவரால் சி றப்பாக ஒருநாளில் செயல்பட மு டியும். இதைதான் சிலர் சிறப்பாக கடைபிடித்துசரியாக தனது நாளை பயன்படுத்துகின்றனர். நீங்களும் இதனை கடைபிடிக்கலாமே?

உங்களது கவனிக்கும் திறனை (ஆற்றலை) மேம்படு த்துவது எப்படி? – பயனுள்ள‍ குறிப்புக்கள்

உங்களது கவனிக்கும் திறனை (ஆற்றலை) மேம்படு த்துவது எப்படி? – பயனுள்ள‍ குறிப்புக்கள்

இந்த உலகத்திலேயே கவனம் இல்லாதவர்கள் நம் தலைமுறையினரே. ஒன்றுக்குப் பின் ஒன்றாக, புதிய வேலைகள்.. புதிய கடமைகள்.. நம்முடைய பொழுது போக்கு நேரத்தைக் கூட நாம் மால்களிலும், சத்தம் நிறைந்த இடங்களிலும் கழிக்கின்றோ ம். எந்த வேலையோ, திட்ட மோ இல்லாதநேரத்திலும் நம்முடைய மூளையை ஆக்கிரமிக்க வந்துவிட்டன தொழில் நுட்பக் கருவிகள். ஒவ்வொரு முறையும் நான் ஒருசெயலில் கவனம் செலுத்த முயலும் போதும், அதி ல் தோற்றுப் போகின்றேன். ஒரு பொருளை எடுக்க ஒருஅறைக்குள் சென்றுவிட் டு, நான் ஏன் உள்ளே சென்றே ன் என்பதை மறந்து நின்ற நாட்கள் உண்டு. ஒவ்வொரு முறை நான் பிரார்த்தனை செ ய்யும்போதும், எண்ணங்கள், உள்மன சத்தங்கள் எனக் கஷ் டப்படுகின்றோம். இதிலிருந் து தப்பித்து, நமது கவனிக்கும் திறனை மேம்படுத்துவ து எப்படி.. மேலே படியுங்கள்.

நம் உலகம் முழுவதும் சத்த ம், இரைச்சல் என நிறைந்தி ருக்கின்றது. இப்பொழுதெல் லாம் சுற்றுப்புறம் அமைதி யாகி விட்டால், நம்மால் அ மைதியாக இருக்க முடிவதி ல்லை. ஆனால் உண்மை என்னவென்றால், நம் கவனிக்கும் திறனை அதிகரிக்க ஒரே தேவை மௌ னம் மட்டுமே. நம் மனதில் கேட்கும் குரல்களை நீக்க நாம் கற்றுக்கொள்ள வே ண்டும். இந்த இரைச்சலான உல கத்திலிருந்து நாம் வெளியேற வேண்டும்.

உங்களுடன் நீங்களே பேசிக் கொள்ளுங்கள்
உங்களுடைய கேள்விகளுக்கு பதில்களைக் கண்டு பிடிக்க நீங்கள் முதலில் கவனிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் கவனிக்க வேண்டிய முதல் நபர் “நீங்கள்”தான். உ ங்களுக்கு நீங்களே பேசிக்கொ ள்வது பைத்தியக் காரத்தனம் என்று சொல்பவர்களை கண்டு கொள்ளாதீர்கள். அண்மை ய ஆய்வுகளில் தனக்குத் தானே மனதிற்குள் பேசிக்கொள்பவர்கள், தங்களுடைய வாழ்வில் வெற்றிக ரமாக வாழ்வார்கள் என்று கண் டுபிடிக்கப்பட்டுள்ளது. இனி உங்க ளுக்கு நீங்களே பேசி க்கொள்ளத் தொடங்குங்கள். உங்களைப் பற்றி நீங்க ளே உணர்ந்து கொள்ளுங்கள்.

தனிமை
உங்கள் கவனிக்கும்திறன் அதிக ரிக்க, அன்றாடைய வேலைகளி ல் இருந்து உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்க ள். அலுவலகத்தில் வேலையின்நடுவே உங்களை நீங் களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் அலைபேசியை சில நிமிடங் கள் அணைத்து வையுங்கள். கணினியில் மூழ்கியிருப்ப தை நிறுத்தி விட்டு, உங்கள் மனதில் இருக்கும் எண்ண ங்களை எழுத சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த த் தனிமை உங்களுக்கு இயற்கையான அமைதியை அளிக்கின்றது.

மாற்றம்
ஒரே இடத்தில் இருந்து உங்களுக்கு பைத்தியம் பிடிப்பதுபோல இருக்கின் றதா? தினந்தினம் ஒரேவேலையைச் செய்து தலைவலி பிடிக்கின்றதா? அமைதியான ஒரு இடத்திற்கு சென்று வாருங்கள். உங்கள்மனதை அமைதி ப்படுத்திக்கொள்ளுங்கள். ஒரு சார் நடையாக இருக்கலாம். அ ல்லது கடற்கரைக்குச் செல்ல ஒரு நீண்ட பயணமாகவும் இரு க்கலாம். ஆனால் எங்கு சென் றாலும் அமைதியாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

குரல்களை முடக்குங்கள்
அமைதியான இடத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்களா ? சரி! உங்கள் மனதில் கே ட்கும் குரல்களை முடக்க வேண்டியநேரம் இது. இத்தேவையில்லாத குரல்களை முடக்க தியானமே சிறந்த வழி. இக்குரல்கள் சோகம், பயம் மற்றும் வருத்தத்தை பிரதிபலிக்கின்றன. ஒன்றை ப்புரிந்து கொள்ளுங்கள். நீங் கள் ஒருபோதும் கடந்த கால த்தை மாற்ற முடியாது. எதிர் காலமும் உங்கள் கையில் இல்லை. எனவே இன்றை ய தினத்தில் கவனம் செலுத்து ங்கள். இதைப்புரிந்துகொண்டா லே நீங்கள் அமைதியாக இருப் பீர்கள்.

கவனியுங்கள்
உங்கள் இதயத்தின் குரலை கவனிக்கத் தொடங்குங்க ள். நீங்கள் என்ன சாதிக்க விரும்புகின்றீர்கள்? நீங்க ள் எங்குசெல்லவேண்டும்? நல்ல ஒரு மாற்றத்தை ஏற் படுத்த நீங்கள் என்ன செய் ய முடியும்? இதை நீங்கள் புரிந்து கொண்டவுடன், உங் கள் இலக்குகள் தெளிவாகப் புரிந்து விடும்.
நீங்கள் செய்யவேண்டிய இலக்குகளை தெ ளிவாகப் புரிந்து கொண்டால், உங்கள் கவ னிக்கும் திறன் அதிக ரிக்கும். தொடங்கி விட் டீர்களா?