Thursday, October 2, 2014

வாழ்க்கையில் வெற்றி பெற 9 ரகசியங்கள்

வாழ்க்கையில் வெற்றி பெற 9 ரகசியங்கள்

வெற்றி பெற்றவர்கள்  பின்பற்றும் 9  ரகசியங்கள்

வேலை பார்க்காமல் வாழ்வு இல்லை. வேலையை பெறுவது முக்கியமல்ல, கிடைத்த வேலையை திறம்பட செய்து முடிப்பதே முக்கியம். அப்போது தான் மேலும் மேலும் வெற்றிகள் நம்மை வந்து சேரும். வெற்றியை அடைய கடின உழைப்பு மட்டுமா முக்கியம்? இல்லை அதனுடன் சேர்ந்து அதன் தரமும் மிகவும் முக்கியம். இது எல்லாம் இருந்தும் சிலர் வெற்றி ஏணியில் நம்மை முந்திக் கொண்டு ஓடுகிறார்களே, ஏன்? ஆக்கத்திறனால். ஆம், ஒருவனுடைய ஆக்கத்திறன் தான் அவனின் வெற்றிக்கு வழி வகுக்கும்.

ஒரு உண்மையை சொல்லுங்கள்...அதிகப்படியான ஆக்கத்திறன் கொண்டவர்களை காணும் போது அவர்களை கண்டு பொறாமையோ அல்லது அதிசயித்தோ போகிறோம் அல்லவா? சரி, ஒரு நிமிடம் எதனால் அவர்களுடைய ஆக்கத்திறன் அதிகமாக இருக்கிறது என்று எண்ணிப் பார்த்திருப்பீர்களா? அதிக நேரம் வேலை பார்ப்பதாலா அல்லது மேம்பட்ட மணி நிர்வாகத்தினாலா? வேலையை வார விடுமுறை நாட்களிலும் செய்வதாலா அல்லது வெள்ளிக்கிழமையோடு வேலையை முடித்து, சனி மற்றும் ஞாயிறுகளில் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதாலா? குழம்பாதீர்கள். நல்ல ஆக்கத்திறனை நீங்கள் உங்களுக்குள் வளர்க்க கீழ்கண்ட ஒன்பது பழக்கவழக்கங்களை படித்து தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.

அட்டவணைப்படி நடத்தல் 

பள்ளிக் காலங்களில் நமக்காக தயார் செய்த அட்டவணைக்கு ஒரு காரணம் உள்ளது. ஒரு நடைமுறையை உண்டாக்கி, வேலையை சரியான நேரத்தில், கொடுத்த கால நேரத்திற்குள் முடிக்கப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்யவே, இந்த அட்டவணை பயன்படுத்துகிறோம். ஒரு தினத்தை நல்ல முறையில் செலவளிப்பவர்கள், கண்டிப்பாக ஒரு அட்டவணையை தயார் செய்து, அதை முடிந்த வரையில் பின்பற்றியவர்களாகவே இருப்பர்.


இலக்குகளில் தெளிவாக இருத்தல் 

தமக்குண்டான இலக்கை தாமே அமைத்து விட்டு, எதனை செய்து முடிக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்க வேண்டும். அதிலும் அன்றைய நாள், வாரம் மற்றும் மாதத்திற்கான குறிக்கோள்கள் தெளிவாக இருக்குமாயின், அது செய்யும் வேளையிலும் அதன் வெளிப்பாட்டின் தரத்திலும் தெளிவாக பிரதிபலிக்கும்

தினத்தை நல்ல விதமாக ஆரம்பித்தல் 

வேலையானது தங்கு தடையின்றி நன்றாக செல்வதற்கு, அன்றைய நாளை சிறப்பாக ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஆரம்பித்தால் கொடுத்த காலக்கெடுவுக்குள் வேலையை முடிப்பதற்கு புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் செயல்பட முடியும்.

போதிய இடைவேளையை எடுத்தல் 

அதிக நேரம் அரட்டை அடிப்பதும் சரி, நேரத்தை விரையமாக்குவதும் சரி, பெரிய குற்றமே. இருப்பினும், மனதை புத்துணர்ச்சியுடன் வைக்க குட்டி இடைவேளை மிகவும் அவசியம். அதற்கு இடத்தை விட்டு எழுந்து ஒரு சிறு நடை செல்லலாம் அல்லது அலுவலகம் பக்கத்தில் இருக்கும் பூங்காவில் ஐந்து நிமிடம் அமரலாம் அல்லது அலுவலக கட்டிடத்தை சுற்றி ஒரு நடை போடலாம். இவ்வாறெல்லாம் செய்தால், மனம் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, ஆர்வத்துடனும் வேலையை செய்யலாம்.

சரியான இருக்கை நிலை 

ஆக்கத்திறனை அதிகரிக்க சரியான இருக்கை நிலையில் இருப்பது மிகவும் அவசியம். உட்காருவதற்கும், ஆக்கத்திறனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பது புரிகிறது. மடிக்கணினி முன் தவறான கோணத்தில் அமர்ந்தால், சிறிது காலத்தில் கழுத்து வலியும், முதுகு வலியும் வருவது உறுதி. மேலும் சோம்பல் தோரணையுடன் அமர்வது, திரையை விட மிக கீழே குனிந்து வேலை பார்த்தல் அல்லது முதுகை அதிகமாக வளைத்தல் ஆகியவை சோம்பல் மற்றும் உடல் வலிகளை ஏற்படுத்தும். ஆகவே இவைகள் கண்டிப்பாக ஆக்கத்திறனை குறைக்கும் அல்லவா?

சரியான சாப்பாட்டு அளவு

அதிக சுறுசுறுப்பான மனதும், உடலும் வேண்டுமென்றால் ஆரோக்கியமான சாப்பாடு மிகவும் அவசியம். அதனால் அதிக அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு ஊட்டச்சத்து நம்மிடம் உள்ளதோ அவ்வளவு ஆக்கத்திறன் ஒருவரிடம் அதிகரிக்கும்.

'வேண்டாம்' என்ற வார்த்தையை கூறிப் பழகுதல் 

கெட்டப் பழக்கவழக்கங்கள் இழுக்கிறதா- 'வேண்டாம்' என்று சொல்ல வேண்டும், அலுவலகத்தில் நேரத்தை விரயம் ஆக்கும் அழைப்புகள் வருகிறதா- 'வேண்டாம்' என்று சொல்லவும். முக்கியமாக அரட்டை அடிப்பதற்கும், அலுவலக அமைப்பை குறை சொல்லுவதற்கும் அதிக நேரம் செலவிடும் உடன் வேலை செய்பவர்களுக்கு பெரிதாக ஒரு 'வேண்டாம்' என்று சொல்லி விட வேண்டும். இதில் ஈடுபடுவதால் விரயமாக போவது நேரமும் ஆற்றலும் தான். பதிலாக நேரத்தை வேலையை வேகமாக முடிப்பதில் செலவு செய்தால், அது தம்மைப் பற்றி தமக்கே ஒரு உயர்ந்த எண்ணத்தை தரும்.

தேவையான அளவு உடற்பயிற்சி 

வாழ்க்கையின் அனைத்து நன்மைக்கும் மூல மந்திரமாக விளங்குவது உடற்பயிற்சி. ஆரோக்கியமான உடல், ஆரோக்கியமான மனதை பெறச் செய்யும். அதுவே வேலைகளில் கூடுதல் ஆக்கத்திறனை செயல்படுத்த உதவுகிறது.

மகிழ்ச்சியுடன் இருத்தல் 

உறுதியான மற்றும் நேர்மையான எண்ணங்களே ஒருவனுடைய வெற்றிக்கு துணையாக நிற்கிறது. இந்த வெற்றியை அடைய நேர்மறையான சிந்தனையுடனும், சந்தோஷமான மனநிலையுடனும், அன்றாட வாழ்க்கையில் இருக்க வேண்டும். அவ்வாறு மனதை எல்லா நேரமும் தன்னம்பிக்கையுடன் இருக்க பழகிக் கொண்டால், மனமானது சுத்தமாகவும் அதிக ஆக்கத்திறனுடனும் இருக்கும்.

No comments:

Post a Comment