மன அழுத்தம்
ஸ்டிரெஸ், டென்ஷன் என்ற வார்த்தைகளை சொல்லாதவர்கள், கேட்காதவர்கள் யார்? இவை நம் கூடப்பிறந்தவை. அகராதியின் படி ஸ்டிரெஸ் என்றால் (மன) அமுக்கம், அழுத்தம் என்று அர்த்தம். கவலை, காயம், விபத்து, நோய் அல்லது சமூக, குடும்ப கஷ்டங்கள் இவைகளெல்லாம் மன அழுத்தத்தை உண்டாக்கும் மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
காரணங்கள்
இன்றைய உலகம் விரைவானது. போட்டிகளும், சவால்களும் நிறைந்தது. வாழ்க்கையில், சமூகத்தில், வெற்றி பெற, எப்படியாவது முன்னேற வேண்டும், அதன் வழிகள் எவ்வாறு இருந்தாலும் பரவாயில்லை என்பது இன்றய சமூக கொள்கை. ஓடும் உலகத்துடன் ஓட முடியாதவர்கள் மன அழுத்தம் அடைந்து, மனதளவில் நொண்டியாகின்றனர். மன பாதிப்புகள் உடலையும் கட்டாயம் பாதிக்கும்.
மன அழுத்தம் மறைய 10 எளிய வழிகள்
டென்ஷனுக்கும் கோபத்திற்கும் என்ன ஒற்றுமை என்ன வேற்றுமை?
டென்ஷன் என்பது மன அழுத்தத்தை மட்டுமே குறிக்கும் ஆனால் கோபம் என்பது பிறர் உள்ளத்தையும் புண்படுத்தக் கூடியது. கோபம், கோபமடைபவர்களின் உள்ளத்தையும் உடலையும் பாதிக்கக் கூடியது. தன்னையும் கெடுத்துக் கொண்டு பிறரையும் கெடுப்பது தான் கோபம். நிகழ்காலத்தில் துயரத்தை ஏற்படுத்தி பிற்காலத்தில் பகையை உண்டாக்குவது கோபம்.
டென்ஷனால் நம் மனது மட்டும் அழுத்தமும் இறுக்கமும் அடைகின்றது. ஆனால் அந்த டென்ஷனோ கோபத்திற்கு அடிப்படையாக அமைந்து விடுகின்றது. அதனால் மற்றவர்களின் மனத்தில் இறுக்கமும் அழுத்தமும் ஏற்பட்டு உடலும் பாதிக்கப்படும்.
எனவே டென்ஷனைக் குறைப்பது நல்லது. ஏனெனில் அதிக டென்ஷன் எனும் மன அழுத்தம் உடையவர்களுக்கே மாரடைப்பும். இருதய நோயும் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
மன அழுத்தம் உடையவர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்கிட இதோ சில எளிய யோசனைகள்:-
• மன அழுத்தமாக – டென்ஷனாக இருப்பதாக உணர்ந்தால் ஒரிடத்தில் அமைதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.
• அவ்வாறு அமைதியாக உட்கார்ந்து கொண்டு தியானம் செய்யத் தெரிந்தால் தியானம் செய்யுங்கள் இல்லையெனில் ஒன்று இரண்டு மூன்று என நூறு வரை எண்ணுங்கள். இதனால் மனச் சிந்தனை வேறு பக்கம் செலுத்தப்பட்டு மன அழுத்தம் குறையும்.
• அடிக்கடி மன அழுத்தம் அடைபவர்கள் தியானத்தைப் பழகிக் கொண்டு தினசரி தியானம் செய்தல் அவசியம் நாம் இருக்கும் இடத்திலோ நாம் பயணம் செய்யும் பொழுதோ தியானம் செய்யலாம்.
• மன அழுத்தம் உடையவர்கள் தினசரி உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.
• தியானம் செய்ய விருப்பமில்லாதவர்கள் அவர்கள் மத கடவுளை நினைத்து வழிபட்டு உட்கார்ந்திருக்கலாம்.
• அல்லது முன் நெற்றியில் இரு புருவங்களுக்கும் இடையே ஒரு ஒளி இருப்பதாக கற்பனை செய்து கொண்டு அதன் மீது கவனம் செலுத்தியவாறு உட்கார்ந்து இருக்கலாம்.
• டென்ஷன் குறைய ஆரோக்கியமான தூக்கம் அவசியம் நல்ல காற்றோட்டமுள்ள சூரியனைப் பார்த்த அறையில் தூங்குவது அவசியம்.
• முறையான மற்றும் சரியான நேரத்தில் தூங்கிப் பழக வேண்டும். உடல் உழைப்பு முறையான தூக்கத்தை உண்டாக்கும்.
• எந்த செயல் பாட்டிலும் வேகத்தைத் தவிர்த்து விவேகமாகச் செயல்பட்டால் டென்ஷனைத் தவிர்க்கலாம்.
• சிந்தித்து பொறுமையாக திட்டம் தீட்டி நேரம் ஒதுக்கி செயல்பாடுகளைச் செய்தால் மனம் அமைதி பெறும் டென்ஷன் ஏற்படாது.
மன அழுத்தம் மறைய 10 எளிய வழிகள் டென்ஷனுக்கும் கோபத்திற்கும் என்ன ஒற்றுமை என்ன வேற்றுமை? டென்ஷன் என்பது மன அழுத்தத்தை மட்டுமே குறிக்கும் ஆனால் கோபம் என்பது பிறர் உள்ளத்தையும் புண்படுத்தக் கூடியது. கோபம், கோபமடைபவர்களின் உள்ளத்தையும் உடலையும் பாதிக்கக் கூடியது. தன்னையும் கெடுத்துக் கொண்டு பிறரையும் கெடுப்பது தான் கோபம். நிகழ்காலத்தில் துயரத்தை ஏற்படுத்தி பிற்காலத்தில் பகையை உண்டாக்குவது கோபம். டென்ஷனால் நம் மனது மட்டும் அழுத்தமும் இறுக்கமும் அடைகின்றது. ஆனால் அந்த டென்ஷனோ கோபத்திற்கு அடிப்படையாக அமைந்து விடுகின்றது. அதனால் மற்றவர்களின் மனத்தில் இறுக்கமும் அழுத்தமும் ஏற்பட்டு உடலும் பாதிக்கப்படும். எனவே டென்ஷனைக் குறைப்பது நல்லது. ஏனெனில் அதிக டென்ஷன் எனும் மன அழுத்தம் உடையவர்களுக்கே மாரடைப்பும். இருதய நோயும் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. மன அழுத்தம் உடையவர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்கிட இதோ சில எளிய யோசனைகள்:-• மன அழுத்தமாக – டென்ஷனாக இருப்பதாக உணர்ந்தால் ஒரிடத்தில் அமைதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.• அவ்வாறு அமைதியாக உட்கார்ந்து கொண்டு தியானம் செய்யத் தெரிந்தால் தியானம் செய்யுங்கள் இல்லையெனில் ஒன்று இரண்டு மூன்று என நூறு வரை எண்ணுங்கள். இதனால் மனச் சிந்தனை வேறு பக்கம் செலுத்தப்பட்டு மன அழுத்தம் குறையும்.• அடிக்கடி மன அழுத்தம் அடைபவர்கள் தியானத்தைப் பழகிக் கொண்டு தினசரி தியானம் செய்தல் அவசியம் நாம் இருக்கும் இடத்திலோ நாம் பயணம் செய்யும் பொழுதோ தியானம் செய்யலாம்.• மன அழுத்தம் உடையவர்கள் தினசரி உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.• தியானம் செய்ய விருப்பமில்லாதவர்கள் அவர்கள் மத கடவுளை நினைத்து வழிபட்டு உட்கார்ந்திருக்கலாம்.• அல்லது முன் நெற்றியில் இரு புருவங்களுக்கும் இடையே ஒரு ஒளி இருப்பதாக கற்பனை செய்து கொண்டு அதன் மீது கவனம் செலுத்தியவாறு உட்கார்ந்து இருக்கலாம்.• டென்ஷன் குறைய ஆரோக்கியமான தூக்கம் அவசியம் நல்ல காற்றோட்டமுள்ள சூரியனைப் பார்த்த அறையில் தூங்குவது அவசியம்.• முறையான மற்றும் சரியான நேரத்தில் தூங்கிப் பழக வேண்டும். உடல் உழைப்பு முறையான தூக்கத்தை உண்டாக்கும்.• எந்த செயல் பாட்டிலும் வேகத்தைத் தவிர்த்து விவேகமாகச் செயல்பட்டால் டென்ஷனைத் தவிர்க்கலாம்.• சிந்தித்து பொறுமையாக திட்டம் தீட்டி நேரம் ஒதுக்கி செயல்பாடுகளைச் செய்தால் மனம் அமைதி பெறும் டென்ஷன் ஏற்படாது.
இவ்வகை நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்தில் சிறந்த மருத்துவம் இருக்கின்றன. ஆயுர்வேத, சித்த மருத்துவம், அவற்றிற்கு உரிய தனித்தன்மையில், நோயின் காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்குத் தகுந்தவாறு செயல்பட்டு நோயின் அடிப்படைக் காரணத்தை விலக்கி நோயிலிருந்து விடுதலை அளிக்கும்.
ஆயுர்வேத, சித்த மருந்துகள் இயற்கையான மூலப் பொருட்களிலிருந்து தயாரிக்கப் படுவதால் அவை எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் நோயிலிருந்து நூறு சதவிகிதம் விடுதலை அளிக்கின்றன. பயன்படுத்திப் பயன் பெறுங்கள்.
No comments:
Post a Comment