தமிழில் சில சிந்தனை துளிகள்
உன்னைவிட உனக்கு உதவ யாராலும் முடியாது.
எல்லோரும் எல்லாம் தெரிந்து கொண்டு பிறப்பதில்லை. நமது அறிவைப் பயன்படுத்தி, நாம்தான் ஏன்(why), எதற்கு(which), எப்படி(How to) என்ற கேள்விகளால் பகுத்தறிந்து சிந்தித்துச் செயல்பட்டு வெற்றிகளைக் குவிக்க வேண்டும்.
மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!
வெற்றிக்கும் தோல்விக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை. கடமையை செய்தால் வெற்றி! கடமைக்கு செய்தால் தோல்வி!
நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை, யாரோ ஒருவர் எங்கோ ஓர் இடத்தில் அதை செய்து கொண்டுதான் இருக்கிறார்.
ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற வேண்டும் என்னு நினைக்கிறார்கள். ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை! – லியோ டால்ஸ்டாய்
எது உன்னை அச்சம் கொள்ளச் செய்கிறதோ அதை அஞ்சாமல் எதிர்த்து நில் – சுவாமி விவேகானந்தர்
வெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்கு… தோல்வி என்பது கற்றுக் கொள்வதற்கு – வைரமுத்து
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு வாழும் மனிதருக் கெல்லாம்; பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்.-முண்டாசுக் கவிஞன்
நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு நீயென்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு.
நாம் வேறு நபர் அல்லது வேறு சில நேரம் காத்திருந்தால் மாற்றம் வராது. நாம் தான் நம்முடைய மாற்றத்திற்கு காத்திருக்கிறோம். நாம் தான் நாம் தேடிக்க கொண்டிருக்கும் மாற்றம் - பராக் ஒபாமா
உங்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால், அதை மாற்றுங்கள். உங்களால் அதை மாற்ற முடியாது என்றால், உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். அதைவிடுத்து புகார் கூற வேண்டாம்." - மாயா அந்ஜிலாவ்
"ஏன் பிறந்தோம்?"
"எப்படி வாழ்கிறோம்?" என்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டியது தான் முக்கியம் .
உனக்கு மன அமைதி வேண்டுமானால் யாருடைய குறையையும் காணாதே விவேகானந்தர்
ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித உருவில் தெய்வம்-கண்ணதாசன்
பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலெ வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லம் துன்பம் - கண்ணதாசன்
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு தினம்
அச்சப்பட்டக் கோழைக்கு இல்லம் எதற்கு
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு நீ
கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு - கண்ணதாசன்
உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு
மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர்,
விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர். - திருக்குறள்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். -- திருக்குறள்
விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.
தமக்கு துன்பம் வரக்கூடாது என்று நினைபவர்கள் ,
யார்க்கும் தீவினைகளை செய்யக்கூடாது - தெய்வப்புலவர் வள்ளுவர்
நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள் - தெய்வப்புலவர் வள்ளுவர்
ஒவ்வொரு நிகழ்வையும் விழிப்பு உணர்வுடன் அணுகினால் வாழ்க்கையே வழிபாடுதான்! நூல் : வாழ்க்கையேஒரு வழிபாடுதான்! வெ. இறையன்பு
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. - தெய்வப்புலவர் வள்ளுவர்
மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே;
எங்கு அன்பு இருக்கிறதோ,அங்கு தான் பயனுள்ள வாழ்க்கை இருக்க முடியும்...படித்ததில் பிடித்தது
ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தைப் பாருங்கஅதுக்கு கத்துக் கொடுத்தது யாருங்க -கவிஞர் வாலி
உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான செல்வம் இங்கேயே உள்ளது ஆனால் ஒரு தனி மனிதனின் பேராசைக்கு முன்னால்தான் அது போதாது'' -காந்தி
துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம்! குணம்! அது கோவிலாகலாம்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
என்னைப் பொருத்த மட்டில ஓரே ஒரு ் ஒழுக்கம் தான் உள்ளது
அது நீங்கள் உங்களை அறிந்து கொள்வது . - ஓஷோ
உழைக்குற நோக்கம் உறுதியாயிட்டா, கெடுக்குற நோக்கம் வளராது
ஊக்கமது கைவிடேல், எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
பகுத்தறிவு பிறந்தததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே
உரிமைகளைப் பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதினாலே
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பல கல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.-முண்டாசுக் கவிஞன்
நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை.
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை. - கண்ணதாசன்
நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு
நீயென்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு
எந்த ஒருப் பொருளையும் இழக்கும் வரை அதன் அருமை நமக்கு தெரியாது" -ஆத்தங்கரையோரம் நாவலில் - திரு. வெ. இறையன்பு அவர்கள்
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே"
No comments:
Post a Comment