மகா பெரியவா அனுபவங்கள்
உண்மையில், அன்று மணி அய்யருக்கு மிக அற்புதமான நாள்தான்.‘ஒருமுறை மகாபெரியவா சென்னை- மயிலாப்பூரில் முகாமிட்டிருந்தார். அவர் தங்கியிருந்த இடத்துக்கு அருகில்தான் மதுரை மணி அய்யர் வீடு. இதைத் தெரிந்துகொண்ட மகாபெரியவா என்ன செய்தார் தெரியுமா? ஒருநாள் காலையில், நேரே மணி அய்யர் வீட்டுக்குப் போய்விட்டார். மணி அய்யருக்கு இன்ப அதிர்ச்சி! திகைத்து நின்றவர், சட்டென்று சுதாரித்துகொண்டு பெரியவாளை வணங்கி வரவேற்று ஆசி பெற்றார். அந்தச் சின்ன அறையில் அவரும், மகா பெரியவாளும், நானும் மட்டும்தான்!
மணி அய்யரைப் பாடச்சொல்லிக் கேட்டது மட்டுமில்லாமல், அவருக்கு எதிரே உட்கார்ந்துகொண்டு, அவரது பாட்டுக்கு தாளம் போட்டு ரசித்தார் மகா பெரியவா. எவ்வளவு பெரிய கொடுப்பினை இது?உணர்ச்சிப் பெருக்குடன் விவரித்த நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள், இப்படி மகாபெரியவாளைப் பற்றிச் சொல்லணும்னா, இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கு! என்று நெஞ்சில் கைவைத்து உருகுகிறார்.
மஹா பெரியவா அருள்வாக்கு:‘விகடகவி, ‘குடகு முதலிய வார்த்தைகளைத் திருப்பிப் படித்தாலும், ‘விகடகவி, ‘குடகு என்றே இருக்கும். ‘மலையாளம் என்பதை இங்கிலீஷில் MalayalaM என்று எழுதினால் திருப்பிப் படித்தாலும் அதே ஸ்பெல்லிங் வரும். இப்படிப்பட்ட வார்த்தைகளை Palindrome என்கிறார்கள்.
காசியாத்திரை ஹிந்துவாகப் பிறந்தவர்களுக்கு முக்யமாக விதிக்கப் பட்டிருக்கிறது. அதோடு கயா ச்ராத்தம், த்ரிவேணி என்கிற ப்ரயாகையில் ஸ்நானம், பித்ரு கார்யம் எல்லாவற்றையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறது. இதையும் பாலின்ட்ரோமாகச் சொல்வதுண்டு. காசிக்கு காசிகா என்றும் பெயர். இது பின்னிருந்து முன்னாகவும் ‘காசிகா’தான். ‘கயா ப்ரயாக என்பதும் இப்படியே.
No comments:
Post a Comment