வாழ்க்கை பற்றிய பொன்மொழிகள்
1. வாழ்க்கை என்பது ஒரு சுமை, அதைத் தாங்கிக் கொள்; அது ஒரு முள் கிரீடம் அதை அணிந்து கொள்.- அப்ராம் ரியான்
2. நம்பிக்கையே வாழ்க்கையின் சக்தி; கவலை வாழ்க்கையின் எதிரி.- ஷேக்ஸ்பியர்
3. முட்டாளின் முழு ஆயுள் வாழ்க்கை, அறிவாளியின் ஒரு நாள் வாழ்க்கைக்கு சமம். - கோல்டன்
4. வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவனுக்குத் தன்னம்பிக்கை வேண்டும்; வாழ்க்கை முழுமை பெறக் கடவுள் நம்பிக்கை வேண்டும்.- கீட்ஸ்
5. வாழ்க்கை என்பது போர்க்களம்; இதில் ரத்தமும் ரணங்களும் தவிர்க்க முடியாதவை; ஏனெனில் இவைதாம் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.- காண்டேகர்
6. எல்லோரையும் திருப்திப்படுத்த நினைப்பவன் வாழ்க்கையில் வெற்றி பெற மாட்டான். - லெனின்
7. உலகில் எப்படி வாழ்வது என்பதையாவது தெரிந்து கொள்ளும் அளவுக்கு உன்னை நீயே அறிந்து கொள்; அதுவே வாழ்க்கையில் நீ அடையத்தக்க பெரும் பேறு. - ஜேம்ஸ் டக்ஸில்
8. நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகளை முறையாகப் பெற்றிருக்க வேண்டும்.- வில்லியம் பிளேக்
9. வாழ்க்கை என்பது ஊஞ்சலில் உட்கார்ந்து ஊசலாடுவது அல்ல; புயலுக்கு நடுவே படகைச் செலுத்துவது போன்றது.- காண்டேகர்
10. வாழ்க்கையில் எப்போதும், சமாதானத்தையும் சகிப்புத்தன்மையையும் நமது லட்சியமாக கொள்ள வேண்டும். -பாரதியார்
No comments:
Post a Comment