Monday, May 19, 2014

பொன்மொழிகள்

பொன்மொழிகள்

வற்றி போனால்தான், கிணற்றின் அருமை தெரியும். —பிராங்க்ளின்.

தொழில் இல்லாத கல்வி, நீரின்றி வாடும் தாவரத்தைப் போன்றது. —போவீ. 

வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதேபோல வாழ்வில், உயர்வும் ஒரே நாளில் கிட்டி விடாது. —அரிஸ்டாட்டில். 

நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்! தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!- நெப்பொலியன் ஹில் 

தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.- கன்ஃப்யூஷியன்

மாபெரும் செயல்களைச் செயல் வகையில் செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால், உங்களுக்கு இன்றியமையாத முதல் மூலப் பொருளான, வெற்றிக்குத் தேவையான முதல் கூறான தன்னம்பிக்கை நெஞ்சில் பொங்கி வழிய வேண்டும். தடைகளையும், அவமதிப்புகளையும், தன்னம்பிக்கைதான் சமாளித்து அடித்துத் துரத்தி பொன்னாக நம்மை உருவாக்கும். நேர் வழி பாதுக்காப்பானது என்பதை உணர்த்தும். தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள் அனைத்தையும் துணிச்சல்தான் சாதிக்கும்.- டாக்டர்ஜான்சன் 

உடைமையில் உரிமை கோருவது அல்ல அன்பு. உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு கொள்வதன் பொருளாகும்- ஸ்ரீ அன்னை. 

கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!- சுபாஷ் சந்திரபோஸ்.

நீ என்ன நினைக்கிறாயோ அது உன்னால் இயலாமல் போகும்போது உன் ரத்தத்தில் ஜனித்த ஜீவன் அதைச் சாதித்துக் காட்டிவிடும்- கிரந்தம்.

பிறர் பாரத்தை தாங்க கை கொடுத்தால் நம் பாரத்தின் கனம் தானே குறைந்துவிடும் -அவ்பரி. 

கவலை நம் சவப்பெட்டிக்கு ஓர் ஆணி சேர்க்கிறது. கலகலவெனும் சிரிப்பு ஓர் ஆணியை கழற்றுகிறது -பீட்டர். 

பொன்மொழிகள் 

வாழ்வில் உன் தோல்வியைக் கண்டு மகிழும் ஒருவரையேனும் நீ பெற்றிருப்பின், உன் வாழ்வின் பெரிய முதல் தோல்வி அதுவாகவே இருக்கும். 

உன் விதியை நீயே நிர்ணயம் செய் இல்லையென்றால் மற்றவர்கள் நிர்ணயித்து விடுவார்கள்.

மரியாதை பெறும் ஒரே வழி அதனை முதலில் கொடுப்பதாகும். 

திருப்தியும் பேரின்பமும் எம்முள் இருப்பின் நாம் மற்றவர்களால் விரும்பப்படுவோம். 

எல்லா சந்தர்ப்பத்திலும் சமநிலையுடன் இருப்பதுதான் மகிழ்ச்சி.

நிரந்தரமற்றதின் மீது அன்பு செலுத்துவது உன் தோல்வியின் முதல்படியாக அமையும். 

பிடிவாதமும் கோபமும் உன் இயலாமையின் வெளிப்பாடாகும். 

நிஸப்தத்தை நாடுபவன் வாழ்வின் உண்மை நிலையை உணர்ந்துள்ளான். 

வாழ்வின் அறநெறியை தேடுபவன் தன் வாழ்வின் அன்பு நெறியை உணர்ந்திருத்தல் அவசியம். 

பொறுமையால் பெற்றவரும் உண்டு வாழ்வை இழந்தவரும் உண்டு.

அன்பை விலைக்கு வாங்குவது சுயநலமொன்றே, ஆகவே எச்சரிக்கையாய் இரு உன் அன்பர்களிடம்.

நீ உன் உரிமையை இழப்பின் உன் உணர்வையும் இழப்பாய். 

தொடங்கிய இடத்தை தெரிந்துகொள் அப்போதுதான் முடிக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம். 

அன்பு என்றும் உன் உள்ளத்திலிருந்தால் அறிவு என்றும் உன்னை விட்டகலாது. 

உன் சோம்பேறித்தனம் உன் வாழ்வின் தடைக்கல்லாய் அமையலாம்.

உன் அவசரப் பேச்சு உன்னை அனாதரவாக்காமல் பார்த்துக்கொள். 

ஒரு தவறை திரும்பத் திரும்பச் செய்வது மடமை, மடமையை திரும்பத் திரும்பச் செய்பவன் எப்படி முழு மனிதனாக முடியும்? .

பிறர் முன் பேசும் வார்த்தையிலும் செய்யும் செயலிலும் எச்சரிக்கையாய் இரு,உன்னை பிறர் எடை போட்டுக் கூறுபவை அவையே !

எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம். 

சிந்திப்பதும் அதை வெளிப்படுத்துவதும் நாமெல்லாம் மனிதர்கள் என்பதன் அடையாளம். சிந்திப்பதை வெளிப்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டால் சிறிது காலத்தில் சிந்திப்பதே மறந்து விடும். 

அநியாத்திற்கு ஆயிரம் வக்கீல்கள் தேவை ஆனால், நியாயத்திற்கு கடவுளின் கருணை மட்டும் போதும். 

கடவுளை அடைய ஒரேயொரு வழிதான் உண்டு. அது அவர் செய்வதை நாமும் செய்வது படைப்பது.

வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி அழகான பசி ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

No comments:

Post a Comment