Monday, October 16, 2017

எண்ணங்கள் மாறினால் எல்லாம் மாறும்!

* கவலைப்படுவதால் எந்தக் கவலையும் சரியாகப்போவதில்லை. மாறாக, அது இன்றைய மகிழ்ச்சியைக் காணாமல்போகச் செய்துவிடும். எனவே, நாளையைப் பற்றிய கவலையை நாளை பார்த்துக் கொள்வதென முடிவெடுங்கள்.

* ‘இன்று மிக மோசமான நாள்’ என்று அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள். அந்த நாளின் மோசமான சில நிமிடங்கள், உங்களது மகிழ்ச்சியான நேரத்தை மறைத்துவிட்டதை உணருங்கள். உங்கள் வாழ்க்கையில் இன்னொரு மோசமான நாளே வராது.

* எப்போதும் பாசிட்டிவ் மனிதர்கள் பக்கத்தில் இருக்க முயற்சி செய்யுங்கள். அவர்களிடம் எல்லாப் பிரச்னைகளுக்கும் ஏதோ ஒரு தீர்வு இருக்கும். ஆனால், நெகட்டிவ் மனிதர்கள் எல்லா தீர்வுகளுக்கும் ஏதோ ஒரு பிரச்னையுடன் காத்திருப்பார்கள்.

* மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டே வழிகள்தாம்.சூழ்நிலையை மாற்றுங்கள்… அல்லது சூழ்நிலைக்கேற்ப நீங்கள் மாறிவிடுங்கள்.

* மற்றவர்களுக்கு நல்லவராக இருப்பது முக்கியம்தான். அதைவிட முக்கியம், உங்களுக்கு நீங்களே நல்லவராக இருப்பது.

* உங்களிடம் இல்லாதவற்றை நினைக்கிறபோதுதான் கவலை அதிகரிக்கிறது. இருப்பவற்றை மட்டும் நினைத்துப்பாருங்கள்; மட்டற்ற மகிழ்ச்சி கொள்வீர்கள்.

* ஒரு நல்ல செய்தி… ஒரு கெட்ட செய்தி தெரியுமா? கெட்ட செய்தி – இந்த உலகில் எதுவுமே நிரந்தரமில்லை. நல்ல செய்தியும் அதுவே.

* கடந்தவற்றைப் பற்றிக் கவலைப்படாதது, இருப்பதை நினைத்து நன்றியுணர்வு கொள்வது, நடக்கப்போவதை நினைத்து நம்பிக்கையோடிருப்பது – மகிழ்ச்சியான வாழ்க்கையின் மந்திரங்கள் இவை.

No comments:

Post a Comment